சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்

திரு. மைக்கேல் விட்செல் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியர். ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேலாக பண்டைய இந்திய வரலாறு, வேதகால நாகரீகம், சம்ஸ்கிருத மொழி ஆகியவற்றில் பல ஆய்வுகளைச் செய்து வருபவர். 1972 முதல் சம்ஸ்கிருத மொழியைத் தொடர்ந்து மாணவர்களுக்குக் கற்பித்தும் வருகிறார். இந்தியாவுக்குள் ஆரியர் படையெடுத்து வந்தனரா? ஆரிய இனவாதக் கோட்பாடு உண்மையா? ஆகியவை குறித்தான ஆய்வுகளில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியிருக்கிறார். இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டின் வேர்களைக் குறித்து பலகாலம் ஆய்வு செய்து வந்தாலும் அடிப்படையில் இவர் இந்து தர்மம் மற்றும் இந்தியா குறித்த எள்ளல் பார்வையே கொண்டிருக்கிறார் என்றும் ஒரு சாராரால் விமர்சிக்கப் படுபவர். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணப் பாடப் புத்தகங்களில் இந்து தர்மம் மற்றும் இந்து சமூக வரலாறு தவறாகச் சித்தரிக்கப் பட்டிருப்பதாகக் கூறி அப்பகுதி இந்துப் பெற்றோர்கள் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் பாடத் திட்டக் குழு செய்தது சரிதான் என்ற கட்சிக்கு ஆதரவாக இவரது செயல்பாடுகள் இருந்தன என்றும் கருதப் படுகிறது. 2005-ல் “நான் இந்து துரோகி அல்ல” என்று ரிடீஃப். காம் தளத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் விட்சல் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இன்று (ஜூலை 8, 2009) மாலை சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் திரு. விட்சல் இந்திய மொழிகளின் மூலம் மற்றும் ரிக்வேத கால வரலாறு குறித்து பேசுகிறார்.

பண்டைய பாரதம் பற்றிய ஆய்வுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்துவரும் புகழ்பெற்ற அறிஞரை தமிழ்ஹிந்து.காம் சென்னை நகருக்கு வரவேற்கிறது.

அதே நேரத்தில் திரு. விட்சல் அவர்களிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகளும் உள்ளன. எமது வ்ரலாற்று ஆர்வலர் குழு தொகுத்திருக்கும் இந்தக் கேள்விகளை இந்தத் தருணத்தில் அவரிடம் எழுப்ப விரும்புகிறோம், பேராசிரியர் கண்டிப்பாக அவற்றுக்கு விடையளிப்பார் என்ற நம்பிக்கையுடன்.

விரிவான கேள்விகள், ஆங்கிலத்தில் கீழே.

சுருக்கமாக,

1. பல மேற்கத்திய சிந்தனையாளர்கள், இந்திய கலாசாரத்தின் உயர்வுகள் குறித்து பேசியுள்ளனர். ஆனால் தாங்கள் இந்திய கலாசாரம் காட்டுமிராண்டித் தனமானது, முதிர்ச்சியடையாதது என்று பல பொதுத் தளங்களில் கூறிவருகிறீர்கள். இந்த தேசத்தில் தங்கி, உண்மையிலேயே அது எப்படிப் பட்டது என்று கண்டுணரும் எண்ணம் உங்களுக்கு உண்டா?

2. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணப் பாடப் புத்தகங்களில் இந்து தர்மம், வரலாறு மற்றும் இந்து சமூகம் தவறாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது என்று அங்கிருந்த இந்துப் பெற்றோர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களது ஆதாரபூர்வமான வாதங்களைக் கூட ”இந்துத்துவ வெறிக்கூச்சல்” என்று தாங்கள் கூறினீர்கள்.. ஆனால் அதே வாதங்களை (ஆரியப் படையெடுப்பு உண்மையல்ல இத்யாதி..) பல மதிப்பிற்குரிய அமெரிக்க வரலாற்றாசியர்களே கூறியுள்ளனரே – அவர்களது கருத்துக்களும் வெறிக் கூச்சல்கள் தான் என்று கூறுகிறீர்களா?

3. காலனிய ஆட்சிக் காலத்தில் மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்க்கப் பட்டது தான் ஆரிய திராவிட இனவாதக் கொள்கை என்பது அனேகமாக இப்போது முழுதாக நிரூபிக்கப் பட்டு விட்டது. ஆயினும் தவறான வரலாறு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப் படுவது சரிதானா? இதன் நோக்கம் தான் என்ன?

4. ஒரு கட்டத்தில் ”துளித்துளியாக நாடோடிகளாக” வந்து தங்கி விட்ட ஆரியர்களின் ஒரு சிறிய குழு தான் வேதங்கள் உட்பட இந்திய கலாசாரம் முழுவதையும் உருவாக்கியிருக்கலாம் என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறீர்கள். இன்னொரு இடத்தில் ஆரியப் படையெடுப்பு தென்னமெரிக்காவில் ஸ்பானிஷ்காரர்களின் படையெடுப்பு போன்ற பயங்கர நிகழ்வு என்றும் சொல்கிறீர்கள். இந்த முரண்பாட்டிற்கு, குழப்பத்திற்குக் காரணம்?

5. பௌதாயன ஸ்ரௌத சூத்திரம் என்ற நூலின் ஒரு பாடலுக்கு நீங்கள் அளித்த மொழிபெயர்ப்பு (ஆரியப் படையெடுப்புக்கு ஆதாரமாக சுட்டப் பட்டது) தவறு என்று அறிஞர்களால் நிரூபிக்கப் பட்டு விட்டது. தங்கள் தவறான மொழிபெயர்ப்பு இன்று எல்லா வரலாற்று ஆய்வாளர்களாலும் எடுத்தாளப் படுகிறது என்பதைத் தாஙக்ள் அறிந்திருக்கலாம். அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி நீங்கள் ஒரு அறிக்கை விடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். செய்வீர்களா?

இப்போது விரிவான கேள்விகள், ஆங்கிலத்தில்.

Question 1: You will agree that no culture or civilization is perfect, and we Indians are quite aware of the imperfections of our society. At the same time, most of us are proud of belonging to this land. Many Western thinkers and Indologists have also expressed great admiration for Indian culture and for India’s intellectual heritage in particular. You must have seen testimonies by people like Emerson, Thoreau, Durant, Toynbee, Renou, Filliozat or Kramrish. How is it that, by contrast, you do not seem to find anything good to say about Indian culture, and have often hinted, especially on Internet lists, that it is something barbaric or primitive? Would you not like to spend some time travelling through India, since you are now among us, so as to judge this culture firsthand and decide?

Question 2: In the recent noisy controversy over history textbooks prepared by the California State Board of Education, and in Internet debates, it is often made out that those opposing the teaching of the theory of an Aryan invasion of, or migration into, India are a bunch of dangerous “Hindutva” fanatics. This completely eclipses the fact that the strongest opponents of this theory have been Western scholars: U.S. archaeologists George Dales, Jim Shaffer, U.S. anthropologist K.A.R. Kennedy, British archaeologist Colin Renfrew, French archaeologists Jean-Paul Demoule, Jean-François Jarrige, Henri-Paul Francfort, Estonian biologist Toomas Kivisild, and many more. Why is this never openly acknowledged and debated in a fair and civilized manner?

Question 3: Why is, instead, the Aryan invasion or migration theory pushed down the throats of Indian schoolchildren (and now U.S. ones!), even as everyone knows fully well that this colonial theory was used to divide Indian society, leaving wounds that have remained unhealed to this day? What do learned scholars like yourself gain by perpetuating the colonial game of division and demonizing those who oppose this theory as “Hindutva” propagandists?

Question 4: In a 1995 paper, you wrote: “The first appearance of [the invading Aryans’] thundering chariots must have stricken the local population with a terror similar to that experienced by the Aztecs and Incas upon the arrival of the iron-clad, horse-riding Spaniards.” [*1] That is exactly the colonial paradigm of the invasion theory in all its military splendour. Yet in 2001, you wrote, “Why, then, should all immigration, or even mere transhumance trickling in, be excluded in the single case of the Indo-Aryans … ? Just one ‘Afghan’ Indo-Aryan tribe that did not return to the highlands but stayed in their Panjab winter quarters in spring was needed to set off a wave of acculturation in the plains, by transmitting its ‘status kit’ … to its neighbors.” [*2] It is the complete absence of archaeological, anthropological and genetic evidence for the “hard” version of the Aryan invasion which forced you to dilute it to a mere “trickling in”? And is it conceivable that a single overstaying Afghan tribe could have set off a process of radical linguistic and cultural change over the whole of North India?

[*1] – Michael Witzel, “Early Indian history: Linguistic and textual parametres,” in The Indo-Aryans of Ancient South Asia: Language, Material Culture and Ethnicity, ed. George Erdosy (Berlin & New York: Walter de Gruyter, 1995), p. 114.

[*2] – Michael Witzel, “Autochthonous Aryans ? The Evidence from Old Indian and Iranian Texts”, Electronic Journal of Vedic Studies, Vol. 7 (2001), issue 3 (May 25).

Question 5: In a 1995 paper,[*3] in an attempt to find evidence for the Aryan migration theory in Sanskrit literature, you quoted an excerpt of the Baudhâyana Shrauta Sûtra in your own translation. This translation was proved wrong (by Koenraad Elst in 1999, more recently by Prof. B.B. Lal), and the mistranslation was no accident, since it figured in an earlier paper of yours.[*4] We all know, of course, that the best scholars are not immune from error, and this is true of all disciplines. Yet you did not have the grace to acknowledge your error and retract the mistranslation. Instead, we have since seen historians (for instance Romila Thapar,[*5] R.S. Sharma [*6]) quote this mistranslation in support of the Aryan migration theory. Would you kindly issue a statement to stop such misuse of your mistranslation?

[*3] – Michael Witzel, “Rgvedic history: poets, chieftains and polities,” in The Indo-Aryans of Ancient South Asia: Language, Material Culture and Ethnicity, ed. George Erdosy (Berlin & New York: Walter de Gruyter, 1995), pp. 320-321.

[*4] – Michael Witzel, “Tracing the Vedic Dialects”. In Dialectes dans les littératures indo-aryennes, Publications de l’Institut de civilisation indienne, Série in-8, Fascicule 55, ed. by C. Caillat (Diffusion de Boccard: Paris 1989).

[*5] – Romila Thapar’s lecture titled “The Aryan Question Revisited”, available online at https://members.tripod.com/ascjnu/aryan.html

[*6] – R.S. Sharma, Advent of the Aryans in India (Manohar: New Delhi, 1999), pp. 87-89.

24 Replies to “சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்”

 1. Really wonderful Questions. I sincerely hope and wish that he will respond properly to these questions, and will NOT brush them aside as nonsense.

  However, it is a very good initiative done by tamilhindu and I appreciate that..

  Jeyakumar

 2. இதை இங்கே கேட்டு என்ன சாதிக்கமுடியும் எனத் தெரியவில்லை! 🙂

 3. “California Text Book” case is a very important discussion and approach to the presentation of history through the America judiciary. Honorable Mr. Witzel had been on the forefront to make sure that the history is presented satisfactorily to the church.

  No church will invite the hindu leaders who stand against Mr. Witzel to speak in their churches or in their institutes. Because their theology shapes their actions and reactions.

  But, we, the hindus, invite a person to give a speech to his victims, we invite he who has been doing everything he can to destroy hinduism. Because, our philosophy shapes our actions and responses.

  Being respected, will Mr. Witzel respond a similar courtesy to our invitation? Will he participate in the dialogue that we, the hindus, want to have with him (unlike his conglomeration)?

  Will he give answers instead of statements to these questions? Will he be open to a dialogue like the hindus?

  Dear Tamil Hindu, we are very eager, so much eagerly, to know his reactions to our response.

  Please tell us.

  We await crossing our fingers awaiting a report on the reactions of those who are crossed against us and have crossed across continents for the sake of that cross.

 4. It feels great to see that we have a think tank to match witzel’s biased scholarship and expose him. I hope, inspite of al the police bandobast and restricts, witzel is given these questions and made to respond to them.

 5. திரு. விட்செல் வரலாற்று அறிஞர் அல்ல; சம்ஸ்கிருத அறிஞர் மட்டுமே என்று சுட்டிக் காட்டிய நண்பருக்கு நன்றி. அதற்கேற்ப இந்தக் கட்டுரையின் தலைப்பு திருத்தம் செய்யப் பெற்றுள்ளது.

 6. விட்செல் போன்றவர்களை அமெரிக்கக் கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகளே உதவித் தொகை வழங்கி சமஸ்கிருதம், இந்திய வரலாறு, இந்தியத் தத்துவம் போன்றவற்றைப் படிக்கவைத்து முனைவர் பட்டம் பெற வைக்கின்றன. பின்னர், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பணிபுரியத் தொடங்கும் இத்தகையவர்கள் ஹிந்து மதம், இந்திய வரலாறு போன்றவற்றில் தாங்களே விற்பன்னர்கள் என்பது போலப் பேசி தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர்.

  இவர்களிடம் தொடர்ந்து 2, 3 கேள்வி கேளுங்கள். உடனேயே உங்களுடைய கல்வித் தகுதி பற்றிக் கேள்வி எழுப்பி, அவர்களுடன் விவாதிக்கும் அளவுக்கு உங்களுக்குத் தகுதி கிடையாது என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

  போதாக்குறைக்கு, டெல்லி JNU போன்ற இடங்களிலிருந்து பல இடதுசாரி மாணவர்கள் வேறு கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் உதவியோடு இப்போது அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மாணவர்களாக நுழைந்து விட்டனர். விட்செல் போன்றவர்களின் கருத்துக்களை அப்படியே எதிரொலிப்பவர்களாக அவர்கள் மாறத் தொடங்கிவிட்டனர்.

 7. திரு. விட்செல் அவர்கள் பல விஷயங்களில் நடந்து கொள்ளும் விதம், அவரது இந்திய வெறுப்பு ஆகியவை நமக்கு நிச்சயமாக அதிர்ச்சி தருகின்றன. அவரது செயல்பாடுகள் இந்திய விரோத சக்திகளுக்கு துணை போகும் படியாக அமைந்துள்ளன என்பதிலும் ஐயமில்லை தான். இதனால் இந்தியர்கள் அவரிடம் அடைந்துள்ள கோபத்தை காட்டும்படியான சில வார்த்தைகள் மேலே உள்ள மறுமொழிகளில் வெளிப்பட்டுள்ளன. வாசகர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளும்படியாக கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

  ”அதிதி தேவோ பவ” என்பது நம் பண்பாடு. அதே நேரத்தில் அதிதி ஆக்கிரமிப்பாளராக மாறினால் அறிவுபலம் கொண்டும், அறத்தின் பலம் கொண்டும் ஆக்கிரமிப்பாளரை வெல்வோம். விட்ஸல் மனம் மாறி பாரதப் பண்பாட்டின் உபாசகராக மாறிட இந்த பூமி அன்னை அருள் செய்யட்டும்.

 8. அங்கு நிகழ்ந்தன குறித்த விரிவான கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  -வாசன்

 9. J.Thyagarajan
  Mr Witzel was not ignorant when he was subscribing to the idea that you have referred to. He is persuing an agenda given to him & is successfully carrying it out. So no purpose will be served by your exercise. Americans are very good marketing people & he has marketed his idea well. So there will be enough supporters ( so called pseudo secularist ) from the audiance who may boo you down if you persist with the questions

 10. //”அதிதி தேவோ பவ” என்பது நம் பண்பாடு. //

  சரிதான். எஸ். குருமூர்த்தியையோ, இராம. கோபாலனையோ, வி.ஹெச்.பி. வேதாந்தத்தையோ அல்லது குறைந்தபட்சம் இல. கணேசனையோ வைத்து விட்சலுக்குப் ’பூரண கும்ப’ மரியாதை செய்துவிட வேண்டியதுதான்.

 11. //சரிதான். எஸ். குருமூர்த்தியையோ, இராம. கோபாலனையோ, வி.ஹெச்.பி. வேதாந்தத்தையோ அல்லது குறைந்தபட்சம் இல. கணேசனையோ வைத்து விட்சலுக்குப் ’பூரண கும்ப’ மரியாதை செய்துவிட வேண்டியதுதான்.//

  :))

 12. Mr. V Sundaram writes in – An Aryan invader from America – I – that
  Professor Dr.Michael Witzel, a racist scholar wedded to the cause of Evangelization of India and the world (if that is feasible) and total distortion of Indian History, divorced from all known principles of classical historiography is now in Chennai city delivering lectures on the languages and cultures revealed by the Rigveda. Read on at https://newstodaynet.com/printer.php?id=18010.

 13. விட்செல் போன்றவர்களை அமெரிக்கக் கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகளே உதவித் தொகை வழங்கி சமஸ்கிருதம், இந்திய வரலாறு, இந்தியத் தத்துவம் போன்றவற்றைப் படிக்கவைத்து முனைவர் பட்டம் பெற வைக்கின்றன. பின்னர், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பணிபுரியத் தொடங்கும் இத்தகையவர்கள் ஹிந்து மதம், இந்திய வரலாறு போன்றவற்றில் தாங்களே விற்பன்னர்கள் என்பது போலப் பேசி தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர்.

  இவர்களிடம் தொடர்ந்து 2, 3 கேள்வி கேளுங்கள். உடனேயே உங்களுடைய கல்வித் தகுதி பற்றிக் கேள்வி எழுப்பி, அவர்களுடன் விவாதிக்கும் அளவுக்கு உங்களுக்குத் தகுதி கிடையாது என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

  போதாக்குறைக்கு, டெல்லி JNU போன்ற இடங்களிலிருந்து பல இடதுசாரி மாணவர்கள் வேறு கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் உதவியோடு இப்போது அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மாணவர்களாக நுழைந்து விட்டனர்.

 14. I am at a loss to know that without the malicious designs and ulterior motives of the fundamentalist sections of the society , these pseudo intellectuals would not dare to challenge our heritage and scriptures. We should go all out to expose them and their supporters.

 15. //I am at a loss to know that without the malicious designs and ulterior motives of the fundamentalist sections of the society , these pseudo intellectuals would not dare to challenge our heritage and scriptures. We should go all out to expose them and their supporters.//

  True. We should expose them. Intelligently.

 16. //”அதிதி தேவோ பவ” என்பது நம் பண்பாடு. அதே நேரத்தில் அதிதி ஆக்கிரமிப்பாளராக மாறினால் அறிவுபலம் கொண்டும், அறத்தின் பலம் கொண்டும் ஆக்கிரமிப்பாளரை வெல்வோம். //

  சபாஷ்!….பலே! [(:-)))))

  //விட்ஸல் மனம் மாறி பாரதப் பண்பாட்டின் உபாசகராக மாறிட இந்த பூமி அன்னை அருள் செய்யட்டும்.//

  ஆஹா….புல்லரிக்குது! [(:-)))

 17. திரு விட்சல் அவர்களின் சம்ஸ்க்ருத அறிவு பற்றி தெரிந்துகொள்ள https://www.irffanclub.blogspot.com/ என்ற உரலை அணுகவும். மிகுந்த நகைக்சுவையோடு எழுதப்பட்டுள்ளது !

 18. Mr Vedaprakash has already published two detailed articles about the “two conferences” of Michael Witzel at Chennai on Monday and Wednesday.

  K. V. Ramakrishna Rao has asked questioned at both the places and he could not answer.

  For more details read:

  The “The First conference of Michael Witzel Professor of Hasrvard University” and “The Second Conference of Witzel at Madras University”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *