திராவிட இனம் – வரலாற்று உண்மையா?

அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா எழுதியுள்ள Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines என்ற நூலை முன்வைத்து சில அடிப்படையான கேள்விகளை விவாதிக்கும் முகமாக பல்துறை அறிஞர்களிடமும், ஆர்வலர்களிடமும் கருத்துக்கள் கேட்கப் பட்டன. இவை வீடியோக்களாக பதிவு செய்யப் பட்டுள்ளன.

திராவிட இனம் என்ற கொள்கைக்கு வரலாறு, அகழ்வாராய்ச்சி அடிப்படையில் ஆதாரங்கள் உள்ளனவா?

s_ramachandran_epigraphistஇந்தக் கேள்விக்கு கல்வெட்டு ஆய்வாளர், வரலாற்று அறிஞர் எஸ்.ராமச்சந்திரன் கீழ்க்காணும் வீடியோவில் (இரண்டாவது நிமிடம் தொடங்கி) தமிழில் விடையளிக்கிறார்.

எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழகக் கல்வெட்டுகளை ஆய்வு செய்வது குறித்து பல புதிய கோணங்களையும், பார்வைகளையும் அளித்து வருபவர். மறையும் மறையவர்கள் (ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு), தோள்சீலைக் கலகம் (அ.கணேசனுடன் இணைந்து எழுதியது) ஆகிய நூல்களின் ஆசிரியர். தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) என்ற ஆய்வு மையத்தை நடத்தி வருகிறார்.

வீடியோவின் முதல் இரண்டு நிமிடங்கள் ராஜீவ் மல்ஹோத்ரா ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆப்பிரிக்க கருப்பர்களும் தலித்துகளும் திராவிட இனத்தவர்கள் என்றும், மற்ற இந்தியர்கள் அனைவரும் வெள்ளையர்கள் என்றும் ஒரு அபத்தமான, பொய்யான இனவாதக் கொள்கையை எப்படி ஒரு அமெரிக்க அமைப்பு வளர்த்தெடுத்துப் பரப்பி வருகிறது என்று அவர் விளக்குகிறார்.

**********

திராவிடர்களுக்கு அவர்களது தனி அடையாளத்தை அளித்தவர் பிஷப் கால்டுவெல். அவரை ஏன் மோசமாக சித்தரிக்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு சமூக வரலாற்று ஆய்வாளர் அ.கணேசன் நாடார் அவர்கள் கீழ்க்காணும் வீடியோவில் விடையளிக்கிறார்.

மேலும் சில கேள்விகள், விவாதங்களின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம். வீடியோவின் கணிசமான பகுதிகள் தமிழிலும், சில பகுதிகள் ஆங்கிலத்திலும் உள்ளன. அரவிந்தன் நீலகண்டன், ராஜீவ் மல்ஹோத்ரா, எஸ்.ராமச்சந்திரன், அ.கணேசன் நாடார், டாக்டர் ஐசக் (கேரள வரலாறு அறிஞர்), ஜடாயு ஆகியோர் பங்குபெற்றுள்ளனர்.

6 Replies to “திராவிட இனம் – வரலாற்று உண்மையா?”

  1. Pingback: Indli.com
  2. அற்புதமான செயற்பாடு. இந்த நேர்காணல் முயற்சிகளை.. அவற்றைத் தொகுத்து இணையத்தில் பதிவேற்றியிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறோம்.. தொடர்ந்து இவைகளை ஆவணப்படங்களாக Documentary Film .. குறும் படங்கள் Short Filmளாக காட்சிப்படுத்தும் முற்சிகளிலும் இத்துறை சார் நல் உள்ளங்கள் ஈடுபடுவது இளம் சமூகத்திற்குச் செய்யும ;மாபெரும் உதவியாக அமையும்.. நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்..

  3. Breaking India புத்தகம் எப்பொழுது தமிழில் வெளிவர போகிறது. இந்த புத்தகத்தில் குற்றபரம்பரை சட்டம் அமுலில் இருந்ததைப்பற்றியும் அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட பின்விளைவுகள் பற்றியும் கூறியுள்ளார்களா. தீண்டாமை கொடுமை தீவிரம் அடைந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம் என்பது ஒரு மறைக்கப்பட்ட சரித்திர நிகழ்வா. இந்த சட்டத்தை காந்தி அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள் எதிர்தார்களா. இது பற்றி அரவிந்தனின் சுருக்கமாமன பதிலை எதிர்பார்கிறேன்.

  4. நான் திராவிடன் என்ற ஆணவத்துடன் எம்பிரான் சிவபெருமானையும் சிவலிங்கத்திருமேனியையும் சைவசமய முதன்மைத் தலைவர்களையும் சைவத்திருமுறைகளையும் சாத்திரங்களையும் நிந்திப்பவர்கள் ஊருக்கு உபதேசம் செய்பவர்களே .இவர்களின் பொய்யான புனைந்துரைகள் சைவர்கள் உலகில் எடுபடாது.

  5. திராவிடம் என்பது பீடபூமி ஆகும். அது இனத்தையோ, கலாசாரத்தையோ குறிப்பது அன்று. ஆரிய என்பது சிறந்த வீரன் என்பதை குறிக்கும். மணிவாசகப்பெருமான் திருவாசகத்தில் ” பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே ” (சிவபுராணம்) என்று சிவபெருமானை விளிக்கிறார். வீரனில் சிறந்தோன் ஆரியன் ஆவான். ஆரியன் என்பது இனம் அல்ல. எனவே, திராவிடம் என்பது கால்டுவெல் உருவாக்கிய முழுப்பொய். அதனை பொய்யர்களான திராவிடர் கழகம் போன்ற புரட்டர்கள் முழு டிரேடு மார்க் ஆக்கி வியாபாரம் செய்து வருகின்றனர்.

  6. Who is Arya Padai kadantha Nedunjezhiya Pandiyan Why he was called Arya Padai kadantha Nedunjezhiya Pandiyan ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *