சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

thanks-vikipedia1சம்ஸ்க்ருதம் பகுத்தறிவுக்கு விரோதமா?

’நான் கூறியது யாவையும் ஆராய்ந்து பிறகு உன் விருப்பப்படி செயல்படு’

என்கிறார் பகவான் கிருஷ்ணன். அர்ச்சுனன் மீது அவர் எதையும் திணிக்கவில்லை (பகவத் கீதை 19.63). சுயமரியாதை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாட வேண்டிய நூல் இது. அறிவைக் கொண்டு அனுபவத்தைச் சோதிக்கச் சொல்லும் பகுதிகள் சமஸ்க்ருதத்தில் ஏராளம்.

‘இந்திய மொழிகளிலேலே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்யாசென்.

‘பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் கூறினாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை. அறிவோடு பொருந்தும் வாசகங்களை பாமரர்கள் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்’ என்கிறது யோகவாசிட்டம் என்ற நூல் (11.18.2.3).

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம் தான் பிரமாணம் என்கிறார்’.

இதுதான் நேர்மையான பகுத்தறிவு. தமிழகத்து அரசியல்வாதிகளில் சிலர் ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு ஹிந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; ‘சேம்சைட் கோல்’.

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?

தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. வரதராசன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

‘வடமொழியில், இலக்கியச் செல்வத்தையும் சமயக் கருத்துகளையும் கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த தண்டி என்ற தமிழர்.

’அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் சங்கரர் தென்னிந்தியர். விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை’ (பக்கம் 13, தமிழ் இலக்கிய வரலாறு)

‘தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள். இவருடைய தனித்தமிழ் இயக்கத்தை நம்பி பொதுவுடைமையாளர் ஜீவா ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால் மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டிருந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப்பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா.

வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா; யோசித்தபடியே உள்ளே சென்றார்; மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

‘என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவுக்கு இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச்சொல்லா?’ என்று கேட்டுவிட்டார். ‘காரணம் என்பது எம்மொழிச்சொல் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார்.

மறைமலை அடிகளின் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜீவா ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறிவிட்டார்.

ஆனால் ஜீவாவுக்கு ஏற்பட்ட ஞானோதயம் இன்னும் சிலருக்கு ஏற்படவில்லை. தமிழன் எக்காலத்திலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கிறது. சமஸ்க்ருதத்திற்கு எதிராக இவர்கள் எழுதும் எழுத்திலும் பேச்சிலும் சூடு அதிகமாகவும் சுவை குறைவாகவும் இருக்கிறது.

தனித்தமிழ் முன்னோடி மறைமலை அடிகளோடு பொதுவுடைமையாளர் ஜீவாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்தோம்.

தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்கள் பற்றி பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம்.

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது ‘சங்க நூல்கள் எல்லாம் தனித்தமிழ் நூல்கள்; அவை வடசொல் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார்.

பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக ‘ சங்கநூல்களில் சிறந்ததும் கற்றறிந்தோர் போற்றுவதுமான கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய வடசொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார்.

அடிகளார் அடங்குவதாக இல்லை, தேவார, திருவாசகங்கள் தனித்தமிழில் ஆக்கப்பட்ட தென்று கூறினார்.

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் தேவாரத்தில் முதல் பதிகத்தில்

‘சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’

என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் வடசொல் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.

அடிகளாருக்குக் கோபம் வந்துவிட்டது; கோபமாக மேசையைக் குத்தினார்.

‘எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்; என்றார் பண்டிதமணி.

‘When you are strong in law, talk the law;
When you are strong in evidence, talk the evidence;
When you are weak in both, thump the desk ‘

என்ற வழக்கறிஞர்களுக்கான வாசகத்தை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது.

பண்டிதமணி பற்றிய சுவையான செய்திகளைத் தெரிந்துகொள்ள சோமலெ எழுதி இன்ப நிலையம் வெளியிட்டுள்ள புத்தகத்தைப் பார்க்கலாம்.

வால்மீகி முனிவர்
வால்மீகி முனிவர்

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழிஅல்ல என்பதைச் சொல்லி வருகிறேன். இதுவரை சொல்லப்பட்ட கருத்துகளால் சமாதானம் அடையாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து கீழே வரும் பட்டியலைப் பார்க்கவும்.

மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் ….

இவர்களெல்லாம் தமிழகத்தில் பரவலாக அறியப்படுபவர்கள். இவர்களுடைய பெயர்கள் எல்லாம் சமஸ்க்ருதத் தொடர்புடையவை.

அரசியல், திரைப்படம், இசை இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சமஸ்க்ருதப் பெயர் கொண்டவர் முன்னணியில் இருக்கிறார்.

நூற்றாண்டுகளாகத் தனித்தமிழ் இயக்கம் நடந்த பிறகும் இதுதான் நிலைமை.

தமிழகமெங்கும் விரவிக்கிடக்கும் ஊர்ப் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது. ஆனால் அவை சமஸ்க்ருத பெயர்கள் என்பதுதான் உணரப்படவில்லை. உங்கள் கவனத்திற்காக இதோ அந்தப் பட்டியல்;

முதல் அமைச்சர் கருணாநிதியின் இருப்பிடமான கோபாலபுரமும், ஜி.கே. வாசனின் ஊரான கபிஸ்தலமும் சமஸ்க்ருதப் பெயர்களே. தொடர்கின்ற மற்ற ஊர்களையும் பாருங்களேன்.

திரிசூலம், மகாபலிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், விருத்தாசலம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், ஜெயங்கொண்டான், கங்கை கொண்ட சோழபுரம், சுவாமிமலை, வேதாரண்யம், மகாதானபுரம், கோவிந்தபுரம், ஸ்ரீ ரங்கம், தர்மபுரி, மகேந்திரமங்கலம், அம்பாசமுத்திரம், ராமகிரி, கிருஷ்ணாபுரம், தென்காசி, சதுர்வேதமங்கலம், திரிபுவனம், ஸ்ரீ வைகுண்டம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, வாணசமுத்திரம், தனுஷ்கோடி, அனுமந்தபுரம், வாலிகண்டபுரம், ராஜபாளையாம், ஸ்ரீ வில்லிபுத்தூர், குலசேகரபட்டினம், உத்தமதானபுரம், சிவகாசி, பாபநாசம், ஸ்ரீ நிவாசநல்லூர், பசுமலை, பட்சிதீர்த்தம், சுந்தரபாண்டியபுரம், சுவேதகிரி, .. இதுமட்டுமா? முதன்மையான தமிழ் நாளிதழ்களின் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது.

தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவை முதன்மையான தமிழ் நாளிதழ்கள், தினம் என்பது சமஸ்க்ருதச் சொல்.

சமஸ்க்ருத வளர்ச்சி பா.ஜ.க வுக்கு உதவுமா?

இந்தியக் கலாச்சாரம், சமஸ்க்ருத வளர்ச்சி ஆகியவற்றில் பல்லாண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ‘பாரதிய வித்யா பவன்’ ஒரு காங்கிரஸ்காரரால் நிறுவப்பட்டது. அவர். கே. எம். முன்ஷி.

‘இந்தியாவின் செல்வங்களிலேயே அதிக சிறப்புடையது எது என்று என்னைக் கேட்டால் தயக்கமில்லாமல் நான் சம்ஸ்க்ருதம் தான் என்று சொல்லுவேன்’ என்றார் ஜவஹர்லால் நேரு.

மற்றபடி சமஸ்க்ருத வளர்ச்சி இந்தியாவின் எழுச்சிக்கு உதவும், இந்தியாவின் எழுச்சி பா.ஜ,க வுக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும், குடியரசுக் கட்சிக்கும் தி.மு.க. வுக்கும் கூட உதவும்.

பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்க்ருத மொழியை ஆதரிப்பதால் பயன் உண்டா?

வாழ்க்கை நமக்கு ஒரு வரப்ரசாதம் என்கிறார் காலை நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் யோகப்பியாசம் சொல்லித்தரும் பெண்மணி. இந்த வரமும் பிரசாதமும் தமிழா, சமஸ்க்ருதமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

சம்ஸ்க்ருதம் சரளமாக பேசப்பட்டு வருகிறது. அது தமிழிலும் மற்ற மொழிகளிலும் கலந்திருப்பதால் அது சமஸ்க்ருதப் புழக்கம் என்பது உணரப்படுவதில்லை.

கர்நாடக மாநிலத்தில் சிமோகா அருகில் உள்ள மதூர் என்ற கிராமத்தில் 3,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தம் வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் அங்காடிகளிலும், வயல்வெளிகளிலும் பேசும் மொழி சம்ஸ்க்ருதம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் 150 பேர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

‘சம்ஸ்க்ருத பாரதி’ என்ற இயக்கத்தின் முயற்சியால் லட்சக்கணக்கானவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடும் திறன் பெற்றுள்ளனர். இதற்கான வகுப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நடக்கின்றன.

சமஸ்க்ருதப் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக 250 முழு நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பகுதி நேரமாக 5,000 ஊழியர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். கடந்த 25 வருடங்களாக இந்தப்பணி நடைபெறுகிறது.

சமஸ்க்ருத மொழியில் நடத்தப்படும் இதழ்கள் இப்போது நூற்றுக்கும் மேற்பட்டவையாகும். இதில் குழந்தைகளுக்கான மாத இதழான ‘சந்தாமாமா’ வும் உண்டு.

டாக்டர். வே. ராகவன் என்ற அறிஞர் சமஸ்க்ருத நாடகங்களையும், சிறு கதைகளையும் எழுதியிருக்கிறார். தாய்லாந்துநாட்டு மொழியில் சமஸ்க்ருத அகராதியைத் தயாரித்திருக்கிறார் சத்ய விரத சாஸ்திரி என்ற அறிஞர். இந்தப் பணியைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜீ.வி. ஐயர் என்ற புகழ்பெற்ற இயக்குனர் எடுத்த சமஸ்க்ருத திரைப்படங்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

தொலைக்காட்சியில் சமஸ்க்ருதச் செய்தியும் ஒளிபரப்பாகிறது.

எம்.ஐ.டி. என்றழைக்கப்படும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் சமஸ்க்ருத வகுப்புகளை நடத்துகிறார். ஹார்வர்டு, யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ருதப் பாடத்திட்டம் உள்ளது. கலிபோர்னியா, பிட்ஸ்பர்க், நியூயார்க் மற்றும் டல்லச் ஆகிய நகரங்களில் சமஸ்க்ருதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்க்ருதப் பட்டப்படிப்பு உள்ளது.

ஆகவே, ‘சம்ஸ்க்ருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி’ என்பது தவறான தகவல். சம்ஸ்க்ருதம் தன்னுடைய உயிரோட்டத்தை இழந்து விட்டது’ என்று எந்த மொழியறிஞரும் கூறவில்லை.

ஆங்கிலேயர்களின் தேசிய கீதம் ‘god save the king’ இந்த மெட்டில் ஸந்ததம் பாஹிமாம் என்ற பாடலை எழுதினார் திருவாரூரில் வாழ்ந்த ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் சமஸ்க்ருதக் கீர்த்தனைகளை இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் ரசித்துக் கேட்கிறார்கள்.

சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த முக்கியப் புள்ளி தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர் கண்ணன். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில்

‘மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு சமஸ்க்ருதத்தின் பாலுள்ள அன்பை அறிந்துகொண்டு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக்கொண்டு’ மொழிபெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.

முதல் அமைச்சரே மொழி மாற்றத்தை விரும்புகிறார் என்றால் அந்த மொழி, புழக்கத்தில் உள்ளதா, இல்லையா என்பதை வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.

பரிசுப் பொருட்களை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நான் பரிசு பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை – ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

பாரதிய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதை நான் உணர்கிறேன். – காமராஜர்.

தமிழர் வாழ்வில் சம்ஸ்க்ருதத்தின் பங்கு என்ன?

தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் இசைவாக, இணையாக இறைமையாகக் கருதுவது வள்ளுவர் காலம் தொட்டுத் தொடர்ந்து வரும் தமிழ் மரபு.

இன்னும் தமிழ்நாட்டில் கவிஞர்களின் கற்பனைச் செழுமைக்கும் எழுத்தாளர்களின் உயர்ந்த சிந்தனைக்கும் வாக்கிய வனப்புக்கும் ஊற்றுக் கண்ணாயிருக்கிறது சமஸ்கிருதம்.

‘புதுக்கவிதையில் சமஸ்க்ருத கூறுகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம்.

சிற்பம், நாட்டியம் போன்ற கலைகளுக்கும்; காவ்ய தரிசனங்களுக்கும், தர்க்கம், மொழியியல், மானுடவியல், தாவரையல், அகராதியியல் என்ரு ஆழ்ந்து அறிவதற்கும், கணித நுண்மைக்கும், வரலாற்றுச் செய்திகளுக்கும், ஒவ்வாமை, பக்கவிளைவுகள் இல்லாத பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்திற்கும், சோதிடத் திறமைக்கும் சம்ஸ்க்ருதப் பலகணியைத் திறக்கவேண்டும்.

தென் குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்த கணபதி ஸ்தபதிக்கு கட்டிடக் கலை தொடர்பான சம்ஸ்க்ருத நூல்கள் பயன்பட்டன என்று அவரே சொல்லியிருக்கிறார்.

தமிழ்ப் பற்றாளர்களுக்கு உணர்ச்சி ஊட்டியவர் கவிஞர் பாரதிதாசன். அவருடைய கவிதை வரி ஒன்றைப் பார்ப்போமா!

‘’ஊரின நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே’

என்ற வரிகளில் ‘பத்திரிகை’ என்ற சம்ஸ்க்ருதச் சொல்லைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். இதழ், ஏடு, தாளிகை என்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

வற்றாக் கருணையோடு வந்து உதித்த அருட்பிரகாச வள்ளலார் தாம் நிறுவிய பாடசாலையில் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் பயிற்றுவித்தார்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் செய்யப்படும் சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தம் கூறுகிறார்.

‘உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒலியன்கள் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும்தான் நிறைந்து இருக்கின்றன. முள்ளை மலராக்கும் – கல்லைக் கனியாக்கும், காட்டை நந்தவனமாக்கும் வல்லமையை அந்த மொழி பெற்றிருப்பதால் தான் ஆண்டவனுக்கு அர்ச்சனை உரிய மொழியாக உயர்ந்து நிற்கிறது. செம்பில் சிறந்த தெய்வத்தைக் காட்டுகிறது. சீரிய காட்சியைக் காட்டிக் கண்ணீரில் நம்மை நாளும் நனைய வைக்கிறது.’’

தமிழ் என்னும் அமுதத்தால் இறைவனைக் குளிர்வித்தாலும் அது சிறப்புதான். கோயில்களிலிருந்து சம்ஸ்க்ருதம் அகற்றப்படவேண்டும் என்ற கூக்குரல் இப்போது கேட்கிறது அதற்காக சம்ஸ்க்ருத அர்ச்சனையைப் பற்றி சொல்லவேண்டியதாயிற்று.

தமிழர் வாழ்வில் தனியாகப் பிரித்தெடுக்க முடியாதபடி சம்ஸ்க்ருதத்தின் தாக்கம் இருக்கிறது.

சம்ஸ்க்ருதம் பிராமணர்களுக்கான மொழி என்று ஒரு கருத்து இருக்கிறதே?

அந்தக் கருத்து தர்ம விரோதமானது என்று ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் அவர்களே கூறியிருக்கிறார்கள்.

கர்நாடகத்தில் பிராமணரல்லாதார் நடத்தும் சம்ஸ்க்ருதப் பள்ளிகள் 30 உள்ளன.

தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு பிளஸ்2 தேர்வில்
சம்ஸ்க்ருத மொழிப் பிரிவில் செல்வி முஸிபிரா மைமூன் என்ற இஸ்லாமிய பெண் 200 க்கு 198 மதிப்பெண் பெற்றார்.

கௌரிசங்கர் என்ற தொழிலாளி சென்னைப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருத முனைவர் பட்டத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த லுப்னா மரியம் என்ற எழுத்தாளர் சம்ஸ்க்ருதம் படிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இவருடைய மார்க்கம் இஸ்லாம்.

’ஏசு காவியம்’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதிய பாதிரியார் ஒருவர் அதற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார்.

சென்ற வருடம் சென்னையில் நடந்த வால்மீகி ராமாயணம் வினாடி-வினா நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகள் முதல் பரிசு பெற்றனர்.

மின்னநூருதின் என்ற இஸ்லாமிய அறிஞர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தை தமிழ் செய்யுளாக எழுதியுள்ளார். அந்த நூலை ரமண பகவானுக்கு அவர் சமர்ப்பணம் செய்ததாக ரமணரின் வரலாற்றில் சொல்லப்படுகிறது.

உபநிடதங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் பிராமணரில்லை.

காளிதாசன்
காளிதாசன்

இதிகாச தலைவர்களான ராமனும், கிருஷ்ணனும் பிராமணர்கள் இல்லை. ராமன் க்ஷத்திரியன், கிருஷ்ணன் யாதவன்.

வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வியாசர் பிராமணர் அல்லர். தெய்வீக அருள் பெற்ற கவிஞர்களான வால்மீகியும் காளிதாசனும் பிராமணர்கள் அல்ல.

இத்தாலியைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் வால்மீகி ராமாயணப் பதிப்பிற்காக 30 வருடங்கள் உழைத்திருக்கிறார். ஜெர்மன் அறிஞர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சம்ஸ்க்ருதத்துறையில் அளித்த உழைப்பை மறக்க முடியாது. இவர்கள் யாவரும் பிராமணர்கள் அல்ல.

சீனாவின் ஷங்காய் நகரில் காளிதாசருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல.

பிராமணரல்லாத சம்ஸ்க்ருத அறிஞர் ஒருவரைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்; அவர் அம்பேத்கர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காகக் கூடிய அவையில் 10.09.1949 அன்று டாக்டர் அம்பேத்கர் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தார். டாக்டர் பி.வி. கேஸ்கர் மற்றும் நஸிமத்தீன் அஹ்மத் ஆகிய உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சம்ஸ்க்ருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அரசியல் காரணங்களுக்குகாக அம்பேத்கரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

சோஷலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவும் சம்ஸ்க்ருத ஆதரவாளர்தான். இவரும் பிராமணரல்ல.

‘உலகிலேயே புராண இதிகாசச் செழிப்புமிக்க நாடு இந்தியாதான். இந்தியாவின் மகத்தான இதிகாசங்களும் புராணங்களும் நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உள்ளங்களில் அறுபடாத பிடிப்பைக் கொண்டுள்ளன’ என்றார் டாக்டர் லோகியா.

மேற்கத்திய சாஸ்திரீய இசைமேதையான பீதோவன் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் சாராம்சத்தை தமது கைப்பட எழுதி தம் மேஜையின் மேல் வைத்திருந்தாரம். இவர் பிராமணரல்ல.

பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேலியைச் சுருட்டி வைத்து அந்த இடத்தில் வீதி உருவாகிவிட்டது.

பொதிகை தொலைக்காட்சியில் வேளுக்குடி கிருஷ்ணன் நடத்தும் கீதை சொற்பொழிவுக்கு எல்லாத் தரப்பிலும் நல்ல வரவேற்பிருக்கிறது.

மதுரை நகரில் சின்மயா மிஷன் நடத்தும் கீதைப் போட்டியில் எல்லா வகுப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள சம்ஸ்க்ருத பாரதி அமைப்பின் தலைவரே ஒரு கிறிஸ்தவர்தான் – டாக்டர். அலெக்ஸ்.

சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து வரும் என்று சொல்கிறார்களே?

தமிழுக்கு ஆபத்து சம்ஸ்க்ருதத்தால் வராது. அது வேறு திசையிலிருந்து வருகிறது. ஆபத்தின் பெயர் ஆங்கிலம். அதன் வாகனத்தின் பெயர் சன் தொலைக்காட்சி.

யோசித்துச் சொல்லுங்கள் நான் காத்திருக்கிறேன் என்று பேச வேண்டியவர்

‘திங்க் பண்ணிச் சொல்லுங்க, நான் வெயிட் பண்றேன்’ என்கிறார்.

நவத்துவாரங்கள் வழியாகவும் ஆங்கிலம் உள்ளே போய்க் கொண்டிருக்கிறது. தமிழைக் காக்க விரும்புவோர் முதலில் காயசுத்தி செய்துகொள்ள வேண்டும்.

உச்சரிக்கும் முறையினால் ஒரு சமுதாயத்தையே காயடித்துவிடக்கூடிய திறமை தொலைக்காட்சித் தொகுப்பாளர்களிடம் இருக்கிறது. அதற்கு எதிராக ஒர் இயக்கமே நடத்த வேண்டும்.

மற்றபடி சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து இல்லை. தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.

தமிழ் இலக்கிய மரபில் சம்ஸ்க்ருதத்திற்கு இடமில்லை என்கிறார்களே?

தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியர் ‘வடமொழி இலக்கணம் நிறைந்த தொல்காப்பியர்’ என்று அழைக்கப்படுகிறார். அவருடைய மாணவரான அதங்கோட்டாசிரியர் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்’ என்று அழைக்கப்படுகிறார்.

தமிழின் இலக்கண நூல்களிலே மிகத்தொன்மையானது தொல்காப்பியம்; தொல்காப்பியத்திலேயே சமஸ்க்ருதத் தொடர்பு சிறப்பாகப் பேசப்படுகிறது.

‘தம்பியோடு கானகம் சென்று இலங்கையை அழித்தவன் ஸ்ரீ ராமன். அவனுடைய மகிமையைக் கேளாதவர்களுக்குக் காது எதற்கு?’ என்று கேட்கிறார் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள். வால்மீகி ராமாயணத்தை அவர் அறிந்திருக்கிறார்.

மணிமேகலையில் மாதவி சம்ஸ்க்ருதத்தில் உரையாடியதாகச் சொல்லப்படுகிறது.

’ஊன்பொதி பசுங்குடையார்’ என்ற புறநானூற்றுப் புலவரின் பாடலில் கிஷ்கிந்தா காண்டத்தின் காட்சி சொல்லப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை ‘வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி’ என்று வாழ்த்துகிறார்.

’வடமொழியும் நமது நாட்டுமொழி தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து’ என்றார் திரு.வி.க.

‘சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்கிறார் கல்வியாளர் வா. செ. குழந்தைசாமி.

தமிழ்வளத்தையும் தமிழர் நலத்தையும் விரும்புகிறவர்கள் சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பதில்லை.

எப்படியாவது தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்று நோக்கமுடையவர்கள்தான் சம்ஸ்க்ருத எதிரிப்பாளர்கள். நல்லறிவுடையோர் இந்த மோதல் போக்கை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.

தமிழர் வாழ்விலும் வழக்கிலும் சம்ஸ்க்ருதம் அன்றும் இன்றும் அழகு சேர்க்கும் அணிகலனாகத் தொடர்கிறது.

மதச்சார்பில்லாத நாட்டில் சம்ஸ்க்ருதக் கல்வி தேவையா?

சம்ஸ்க்ருதத்தை தேர்வுப் பாடமாகக் கற்பிப்பது எந்த விதத்திலும் மதச்சார்பின்மை கொள்கைக்கு விரோதமாகாது’ என்கிறது 1994 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

சம்ஸ்க்ருத மொழி என்பது பிராமணர்களுக்கு மட்டும்தான் என்று யாரவது கூறினால் அதை நம்மால் ஒப்புக்கொள்ளவே முடியாது – ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் – ஜெயகாந்தன்

நன்றி: விஜயபாரதம் வார இதழ்.

75 Replies to “சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்”

 1. அருமையான கட்டுரை. இக்கட்டுரையை பிரதி எடுத்து நம்மால் முடிந்த அளவு நாம் பார்ப்பவர்களிடம் எல்லாம் கொடுக்க வேண்டும்.

  சுப்பு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

 2. கட்டுரை மிகத் தெளிவாக சமஸ்க்ருத மொழியின் மேலுள்ள வெறுப்பு எவ்வளவு தவறு என சுட்டிக் காட்டியுள்ளது. தொடர்க இப்பணி
  அன்புடன்
  ராஜகோபாலன்

 3. தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.

  அந் த தங்கக் குட தின் சிறப்புதான் thamizhl pirinthu kannatam ,telungu, malayalam aaka marriyatho !!!!!!!!!!!!! .

 4. சுப்பு அவர்களின் போகப் போகத் தெரியும் கட்டுரையின் ரசிகன் நான். எவ்வளவு அருமையாக வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைக்கிறார் சுப்பு அவர்கள்.

  எடுத்த எடுப்பிலேயே சிக்சர்..

  // நான் கூறியது யாவையும் ஆரய்ந்து
  பிறகு உன் விருப்பப்படி செயல்படு’
  என்கிறார் பகவான் கிருஷ்ணன். அர்ச்சுனன் மீது அவர் எதையும் திணிக்கவில்லை (பகவத் கீதை 19.63). சுயமரியாதை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாட வேண்டிய நூல் இது. //

  // அறிவைக் கொண்டு அனுபவத்தைச் சோதிக்கச் சொல்லும் பகுதிகள் சமஸ்க்ருதத்தில் ஏராளம்.//

  அப்படிச் செய்வதாய் இருந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் அவர்களுக்கு மரியாதை கிடைத்திருக்குமே.. எதற்கு அவர்கள் கிட்டத்தட்ட தொழுநோயாளிகளைப்போல நடத்தப்படுகிறார்கள். இறைவன் இல்லை என்பதை நான் உனர வேண்டும்.. பகுத்தறிவு வாதிகள் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் இந்த வேடதாரிகளையும், சுயநலமிகளையும் மக்கள் நன்கறிவர்.

  நமது செல்வங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன..

  மெக்காலே கல்வி முறையால் நமது குழந்தைகள் இயந்திரங்கள் போல ஆக்கப்பட்டுள்ளனர்.

  நமது சாஸ்திரங்களும், மறைகளும் அனைவருக்கும் பொது.. அதைப் படிக்க விடாமல் ஆரிய இனவாதம் பேசி நமது சொத்தை நமது கையினாலேயே அழிக்க வைக்கின்றனர்..
  அருமையான கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ள இந்த அருமையான கட்டுரையை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.. நண்பர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

  எழுதிய சுப்பு அவர்களுக்கும், வழங்கிய தமிழ் இந்துவுக்கும் நன்றி …..

 5. தமிழும் சமச்கிருதமும் எங்கள் இரு கண்கள் போன்றவை, ஒன்று தாழ்வானது என்பது ஒரு கண்ணை குத்திக்கொன்று வாழ்வதற்கு சமம்.

  கட்டுரை மிக அருமையாக உள்ளது. நீங்கள் சமச்கிருதம் என்று கூறியுள்ள சில சொற்கள் உண்மையில் தமிழே. உங்கள் பணி தொடர வேண்டும்!

  அன்புடன் உதயா

 6. //தமிழ் அமுதம் என்றால், சம்ஸ்க்ருதம் அதை ஏந்திவரும் தங்கக் குடம்.

  அந் த தங்கக் குட தின் சிறப்புதான் thamizhl pirinthu kannatam ,telungu, malayalam aaka marriyatho !!!!!!!!!!!!! .//

  🙂

  தமிழ் அமுதம் என்றால் சமிஸ்கிருதம் அமுதம் என்றே இருக்கட்டும். நெய்க்கு தொன்னை ஆதாரமா தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற சர்ச்சையெல்லாம் தேவையில்லை. சமிஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்ததா அல்லது தமிழே தனி மொழியா என்பது குறித்த சர்ச்சையும் விவாதமும் பல ஆண்டுகள் நிகழ்ந்துவருகின்றன. நமது முக்கிய எண்ணம், எந்த மொழியையும் வெறுக்காமல் இருப்பதே என்பதாக இருக்கவேண்டும். கன்னடம், மலையாளம் என எல்லாவற்றையும் சேர்ந்தே சொல்கிறேன்.

 7. //இதுதான் நேர்மையான பகுத்தறிவு. தமிழகத்து அரசியல்வாதிகளில் சிலர் ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு ஹிந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; ‘சேம்சைட் கோல்’.//

  A question I have been thinking for loooooong time…. how come these ‘leaders’ call themselves ‘secular’? Even god cannot answer.

  Wonderful article. Razor sharp pointers….people should really start thinking. One scholar, whom I met, said ‘Sanskrit was the official language of the court in earlier days, like English in todays world, and Tamil was a common language’. Very apt.

  Hope this artcile opens up the eyes of the people who are made fool by the vested interests.

 8. Sanskrit is a beautiful language and it is a pride and heritage of every Indian. The hatred towards Sanskrit in TN is baseless and is born out of chauvinistic propaganda in the past few decades. such hatred is not seen in any other part of India… and I can clearly see that it has robbed Tamils of their own cultural legacy.

  The nuggets of facts given in this article are very good and wide ranged.. where from the author gathered all this? it is amazing!

  I have been learning a lot of great wisdom from this site. Thank you again.

 9. இந்தியா சம்பந்தப்பட்ட புத்தகங்களை தேடிப்பாருங்கள். பல இந்திய இதிகாச புராணங்கள், வேதங்களை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருப்பது மேல்நாட்டினரே. மோனியர் வில்லியம்ஸ்மற்றும் பலர் சமஸ்கிருத அகராதியையே உருவாக்கியுள்ளனர். அந்நியர்களே இவ்வளவு அழகாக படித்திருக்கும் பொழுது நாம் ஏன் அதை படிக்க முடியாது. நாம் வேலைக்கு ஆதாரமாக ஆங்கிலத்தைப் படிக்கிறோம் அதே போல ஆன்மீக முன்னேறத்திற்கு ஆதாரமாக சமஸ்கிருதத்தையும், பழந்தமிழையும் கற்க வேண்டும். மொழிபெயர்புகளை படிப்பதை விட நாமே மூலத்தை படித்து அறிந்துக்கொள்வது மிகுந்த ஆனந்தத்தை தரக்கூடியது. தமிழும் சமஸ்கிருதமும் நம் இரு கண்கள் போல.

  நன்றி,
  ராம்குமரன்

 10. சுப்பு அவர்களின் கட்டுரை வடமொழியால் தமிழுக்குக் கேடில்லை. தமிழை அழித்துவிட முனைப்பாக உள்ளது சன் தொலைக்காட்சியே. முற்றிலும் உண்மை. வடமொழியை வெறுப்பவன் கலை, இலக்கியம், பண்பாட்டுத்துறைகளில் பலவற்றையும் இழப்பான். வடமொழியை அறியாதபோனாலும் வெறுக்காமல் இருந்தாலே இத்துறை இன்பங்கள் தாமே வந்து சேறும் என்பது என் அனுபவம். வடமொழி வெறுப்பும் பிராமண வெறுப்பும் கால்டுவெல் புதைத்து வைத்த ‘டைம் பாம்’. . கோ.ந.முத்துக்குமாரசுவாமி

 11. வடமொழியால் தமிழுக்குக் கேடில்லை. தமிழை அழித்துவிட முனைப்பாக உள்ளது சன் தொலைக்காட்சியே. முற்றிலும் உண்மை. வடமொழியை வெறுப்பவன் கலை, இலக்கியம், பண்பாட்டுத்துறைகளில் பலவற்றையும் இழப்பான். வடமொழியை அறியாதபோனாலும் வெறுக்காமல் இருந்தாலே இத்துறை இன்பங்கள் தாமே வந்து சேறும்

 12. It is wrong to call Samscrutam as Vada Mozhi. It did did nOT belong any particular region. It ocupied the whole space of the human society irespective of regional considerations. It was the lingua franca of schlalry from different regions to exchange notes, discuss and decide. That is why all treaties were return in Samcrutam by scholars who had diferent languages as their mother tongue. This is the reason why Samscrutam was NEVER a spoken language of the people Be reminded in Kavi Kalidasa’s works, lines referring talks by commoners no Samscrutam would be used . Initially, the word Samscrutam did NOT mean the language. It adopted that name later for its perfection. Many scholarly brains went into creating Samscrutam and that is why it is very strong in Grammar, and technically far advanced.
  MALARMANNAN

 13. I really don’t see why most people have the need to that Adhi Sankara was a south Indian instead of saying he was a Tamil. Because in 2BC or 7AD (which ever date one takes to be the time of Adhi Sankara) there was no seperate Malayalam language, and Tamil was the language spoken in Chera Nadu hence automatically Adhi Sankara becomes a Tamil.

  Not only that but Adhi Sankara himself says that he is a Dravida Sisu in his works, also the great Kanchi periyavar also says that Adhi Sankara was a Tamil in his Deivathin Kural books.

 14. ஆதி சங்கரர் தமிழராகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர் தம்முடைய நூல்களில் ஞானவழியில் நின்று இறையருள் ப்ற்றவர் ஒருவரையும் அன்புவழியாகிய பத்திநெறியில் நின்று திருவருள் பெற்றவர் ஒருவரையும் பற்றிப் பேசுகிறார். அவர்கள் இருவரும் புரான மாந்தரோ, வடநாட்டாரோ அல்லர்.இருவரும் தமிழரே. சவுந்தரியலகரியில் ‘திராவிடசிசு’ எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், சிவானந்தலகரியில் ‘பக்தி என்னதான் செய்யாது,
  “அச்சோவீது அதிசயம்அன்பு என்செய்ய மாட்டாதால்
  அரனார்க்கு அன்று

  வைச்சேகால் வழிந்டக்கும் செருப்புகூர்ச் சப்புல்லாய்
  வயங்கிற்றேவாய்
  உய்ச்சேகொப் புளிநீரும் அபிடேக மாயிற்றே
  உருசி பார்த்தே
  மெச்சூனும் அமுதாச்சே வேட்டுவன்மெய்
  அன்பரிலே மிக்கான் அன்றே.”

 15. என்று திருஞானசம்பந்தரும் கண்னப்ப நாயனாரையும் ஞானத்துக்கும் பத்திக்கும் எடுத்துக் காட்டாகக் கூறுவதால் ஆதிசங்கரர் தமிழ்ராகத்தான் இருந்திருக்க வேண்டும். மேலும் அவருடைய தந்தையார் சிவகுரு எனப் பெயரினர் எனக் கூரப்படுகிரது. இப்பெயர் தமிழ்ரிடையேதான் காணப்படும்

 16. // … என்று திருஞானசம்பந்தரும் கண்னப்ப நாயனாரையும் ஞானத்துக்கும் பத்திக்கும் எடுத்துக் காட்டாகக் கூறுவதால் ஆதிசங்கரர் தமிழ்ராகத்தான் இருந்திருக்க வேண்டும். //

  அன்புள்ள முத்துக்குமாரசாமி ஐயா, இது சரியான சான்றாதாரம் அல்ல. ஆதிசங்கரர் கேரளத்தில் பிறந்தமைக்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

  நாயன்மார்கள் தமிழகத்தில் தோன்றினர் தான், ஆனால் சிவானுபவச் செல்வர்களான அவர்களைத் தமிழர்கள் மட்டும்தான் போற்றியிருக்க வேண்டும் என்று இல்லையே.. அவர்கள் தமிழகத்துக்கு அப்பாலும் போற்றப் பட்டனர் என்று கொள்ளலாம் அல்லவா? ஆழ்வார்களும் இதே போல் தான்.

  குறிப்பாக கண்ணப்பரது சரிதம் தென்னகம் முழுவதும் பரவியிருந்தது, அதற்கு இலக்கிய, சிற்ப ஆதாரங்கள் உள்ளன. அவர் வாழ்ந்த காளத்தி மலை இன்றைய தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் இருப்பதும் காரணமாக இருக்கலாம். ”பேடர கண்ணப்பா” என்று கன்னடத்தில் சொல்வார்கள். கன்னட வீரசைவ மரபில் ”பூர்வாசார்யரு” என்றே 63 நாயன்மார்களைப் போற்றுகிறார்கள். பெங்களூர் சோமேஸ்வரர் கோயில், நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயில் இவற்றில் பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூர்த்தங்கள் உள்ளன – இரண்டும் கர்நாடகத்தின் புராதன கோயில்கள்.

  ஆழ்வார் தமிழ்ப் பாசுரங்களை (குறிப்பாக திருப்பாவை) தெலுங்கு லிபியில் எழுதிவைத்து ஆந்திரா முழுக்கப் படிக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ஆழ்வார்கள் பற்றி பல நூல்கள் உள்ளன, இவை வட இந்திய வைணவ சம்பிரதாயங்களில் கூடப் பிரபலம்.. அவர்கள் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதப் பட்டிருக்கும் – உதாரணமாக, திருப்பாணாழ்வார் “முனிவாஹனர்” ஆகி விடுவார் (அவரை முனிவர் தோளில் வைத்துத் தூக்கி வந்ததால்) ! கோதை “கோதா” (godha) ஆவார்.

  ஒப்பீட்டில் ஸ்ரீவைஷ்ணவத்தின் கருத்துக்கள் பாரதம் முழுதும் பரவி, எல்லா வைணவ பக்தி இயக்கங்களிலும் (கபீர்தாசர், ராமானந்தர், வல்லபாசாரியார் இத்யாதி.. ) தாக்கம் ஏற்படுத்தியது போல, தென்னக சைவ சித்தாந்தம் பரவவில்லை என்றே கூறவேண்டும். சோழப் பேரரசின் வீழ்ச்சி உட்பட இதற்குப் பல காரணங்கள் கூறலாம்..

 17. // சவுந்தரியலகரியில் ‘திராவிடசிசு’ எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், //

  “தேவி! உன் முலைப் பாலைப் பருகிய திராவிட சிசு … ” என்று தான் அந்தப் பாடலின் சொற்கள் இருக்கின்றன.. சம்பந்தருக்கு இவை அழகாகப் பொருந்துகின்றன, அவரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

  சங்கரர் தன்னையே இப்படிக் கூறிக் கொண்டிருக்கிறார் என்று கொள்ளவும் இடமிருக்கிறது என்றும் உரையாசிரியர்கள் கருதுகின்றனர். அவரும் திராவிடர் தானே ! :))

 18. நாயன்மார்கள் தமிழகத்துக்கு அப்பாலும் போற்றப்பட்டிருக்கலாம் அல்லவா என்றஜடாயு அவர்களின் கருத்து எனக்கு உடன்பாடே. சவுந்தரியலகரியைத் தமிழில் மொழிபெயர்த்த கவிராஜபண்டிதர் அவர்களின் கருத்து ‘திராவிடசிசு’ என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கும் என்பது.
  தருணமங்கலை உனது சிந்தை தழைந்த பாலமு தூறினால்
  அருண கொங்கையில் அதுபெருங்கவி அலைநெடுங் கடலாகுமே
  வருணம் நன்குறு கவுணியன் சிறுமதலையம் புயல்பருகியே
  பொருள்நயம்பெறு கவிதையென்றொரு புனிதமாரி பொழிந்ததே.
  காஞ்சிப் பெரியவர் கருத்தும் அதுவே என்று சொல்லக் கேட்டுள்ளேன். சரியான வரலாற்றுச் சான்று அல்லவாயினும் மரபுவழிச் சொல்லப்பட்டுவருவதை நினைவுகூர்ந்தேன். மேலும் சங்கரர் தாம் உமையின் முலைப்பால் உண்டதாகக் கூறிக் கொள்ள அவருடைய வரலாற்றில் இடமில்லையே. திராவிடம் என்ற வடமொழிச்சொல் தமிழைத் தானே குறிக்கின்றது.’ திராவிடசிசு’ எனச் சங்கரர் தம்மைத் தாமே சொல்லிக் கொண்டார் என்ற கருத்தும் உள்ளது. நன்றி ஜடாயு.

 19. ஆதி சங்கரர் கேரளத்தில் பிறந்தவர் தான். ஆனால் தமிழர் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெற்றோர் கும்பகோணம் அருகில் ஐந்து கிலோமீடர் தொலைவில் உள்ள சிவபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ஆதி சங்கரர் பிறப்பதற்கு முன்னர் அங்கிருந்து கேரளம் சென்றனர் என்று சிவபுரம் ஸ்தல வரலாறு கூறுகிறது.

  அடுத்த முறை கும்பகோணம் செல்கிறவர்கள் சிவபுரம் அவசியம் சென்று வாருங்கள் அழகிய அமைதியான சிறு கிராமம். அற்புதமான சிவன் கோவில். கால பைரவருக்குத் தனியாகச் சந்நிதி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் “வடக்கு” பார்த்து நின்று அருள்புரிவார். அவருக்குப் பின்னே இருக்கும் நாய் காதை நம் பக்கம் காண்பித்து தலைத் தூக்கி பைரவரை நோக்கி முகம் வைத்திருக்கும். அதாவது நம் வேண்டுதல்களை செவி சாய்த்து பைரவரிடம் நமக்காக சிபாரிசு செய்வதைப் போல். மிகவும் சக்தி கொண்டவர். பைரவர் ஸ்தலம் என்ற பெயருக்கு ஏற்றார் போல் நாம் கோவில் வாசலை நெருங்கும்போதே நாய்கள் வாலையாட்டியவாறு நம்மை நேரே பைரவர் சன்னதிக்குக் கூட்டிச்செல்வது விந்தை! தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷம். ஆனால் வெகு சிலருக்குத்தான் அப்படி ஒரு கோவில் இருப்பது தெரியும்.

  அந்த ஊர் முழுவதுமே ஒரு அடிக்கு ஒரு லிங்கம் இருந்த ஊராம். அந்த ஊரின் நிலம் முழுவதும் லிங்கங்கள் இருந்ததால் சிவபுரம் என்று பெயர்பெற்றதாம். திருநாவுக்கரசர் நடந்து சென்றால் காலால் லிங்கங்களை மிதிக்க வேண்டிவருமே என்று ஊர் எல்லையிலிருந்து (ஐய்யவாடி-பிரத்தியங்கரா கோவில் இருக்கும் ஊர்) அங்கப் பிரதக்ஷணம் செய்தே அந்த ஆலயத்திற்குச் சென்று பாடல் பாடி சிவபெருமானின் அருள் பெற்றாராம். இதுவும் ஸ்தல வரலாறு கூறும் செய்தி.

  திராவிட அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துரையின் கீழ் வருகிறது. ஆனால் துறை ஒரு பைசா கூடக் கொடுப்பது கிடையாது. பாலசக்தி குருக்கள் தான் சிரத்தையுடன் தனக்குத் தெரிந்தவர்கள் உதவியுடனும், மற்றும் சில நல்ல உள்ளங்களின் உதவியுடனும் ஆலயத்தை காத்து வருகிறார். தினமும் இரண்டு வேளை பூஜை மற்றும் நைவேத்தியம் செய்து வருகிறார். கும்பகோணம் போகின்றவர்கள் அவசியம் சென்று வாருங்கள். தாராளமாக முடிந்த அளவு நிதி அளித்து வாருங்கள்.

 20. The debate Sanskrit is northern language itself is success for the Hindu drohis. All tamils should understand the difference between script and language. see the following sentence.

  amma inge vaa
  அம்மா இங்கே வா
  अम्मा इंगे वा

  When you read this sentence, you will say it is tamil. Just because the script is in roman or devanagiri, will you say this language is english or hindi?

  Similarly tamils have lost the meaning of vocabulary, There is a difference between home and house.
  House is veedu in tamil.
  Home is agam.

  Karunanidhi, Vaiko will say thayagam, kuralagam, anbagam arivagam. They do not become brahmins. But ordinary tamils if they say aathukku poren, then that becomes brahmin language.

  Sanskrit is like rice (soru, saadam). You cannot eat only rice. You cannot eat without rice. So sanskrit is there in every language and not there in any language. Since you do not eat rice, but eat sambar rice, curd rice, rasam rice, pulao.

  These anti hindus by asking you to join the debate and you joining the debate itself is a victory for them. For your information, all vaishnavite naalayira divya prabandham, thiruppavai are available as printed books in the scripts of kannada, telugu, tamil and hindi. So, when you read these books written in those languages, it will sound tamil and you will understand.

 21. ஹரன் சார், சிவபுரம் திருத்தலம் பற்றிய செய்திகளுக்கு நன்றி.

  // ஆதி சங்கரர் கேரளத்தில் பிறந்தவர் தான். ஆனால் தமிழர் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெற்றோர் கும்பகோணம் அருகில் ஐந்து கிலோமீடர் தொலைவில் உள்ள சிவபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ஆதி சங்கரர் பிறப்பதற்கு முன்னர் அங்கிருந்து கேரளம் சென்றனர் என்று சிவபுரம் ஸ்தல வரலாறு கூறுகிறது. //

  “ஐயமில்லை” என்று சொல்லுமளவுக்கு இது ஒரு சான்றாகுமா?? பல கோவில் ஸ்தல் புராணங்களில் வியாசர், வசிஷ்டர், அத்ரி, கௌதமர் எல்லா முனிவர்களும் அந்த ஊருக்கு வந்ததாகக் கூட சொல்லப் படுகின்றன :)) சங்கரர் பிறந்ததே சிதம்பரம் அருகில் உள்ள சிற்றூரில் தான் என்றே ஒரு சங்கர விஜய நூல் எழுதப்பட்டுள்ளது! ஆனால், இவை பல்வேறு விதமான ஐதிகங்கள் மட்டுமே.

  Sankara Digvijaya: The Traditional LIfe of Sankaracharya – By Swami Tapasyananda (Sri Ramakrishna Math, Chennai) என்ற நூலில் ஆசிரியர் ஸ்வாமி தபஸ்யானந்தா மிக நீண்ட முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் இந்த ஐதிகங்கள் எல்லாவற்றையும் ஆய்ந்து, பின்னர் சங்கரது பிறப்பிடம் காலடியே, அவர் பெற்றோர்கள் நம்பூதிரி பிராமணர் வகுப்பினரே என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார்.

  அதற்கு உறுதியான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன… ஏராளமான உள்ளூர் ஐதிகங்களும் கூட உள்ளன (உதாரணமாக, சங்கரரின் தாயை தகனம் செய்ய காலடி ஊரின் பிராமணர்கள் இடமும், அக்னியும் தராததால், தன் கையைக் கடைந்து அக்னி உண்டாக்கி வீட்டிக்கு வெளியிலேயே தகனம் செய்தார் என்று சங்கர விஜயம் சொல்கிறது.. இது ஒரு சாபமாக ஆகி, இன்றுவரை அப்பகுதி நம்பூதிரிகள் மரணித்தவர்களை தங்கள் வீட்டு வாசலிலேயே தகனம் செய்யும் பழக்கம் உள்ளது)

 22. Dear Jataayu,

  1. It does not matter whether Sri Sankara was born in kalladi or not, the matter is that kalladi in 7/8 AD was a Tamil area that was part of the Chera Kingdom. The Malayala language had not evolve during this time and it would take another 3, 4 centuries for that to happen.

  2. In the book Deivaththin Kural, Kanchi Perivayar says that the Original Nambuthirs were Tamils from the Chola Kingdom and that only after some time did priests from Telungu & Kannada were brought to be settled down there. What remained of the original Tamil Nambuthirs later assimilated into the Telungu & Kannada priests according to Kanchi Perivayar.

 23. தமிழில் சமஸ்கிருத வார்தை இருப்பதால் மட்டும், தமிழுக்கும் சமஸ்கிருத்திற்க்கும் தொடர்பு இருப்பதால கூற முடியாது. அப்படி பார்த்தால் இன்னும் 300 வருடங்கள் கழித்து கார்,பஸ் போன்ற வார்த்தைகளை காண்பித்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு இருப்பதாலக கூட ஒரு கட்டுரை வரும். திராவிட மொழியகளை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம், நாம் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகளில் பிற மொழி கலப்பு இருக்காது. உதாரணம் , எண்கள், உடல் உறுப்புகள்(தலை, பல் பிற), நீ, நான், வா, போ- இது போல் சுமார் 210 வார்த்தைகளை வைத்து அந்த மொழி எந்த மொழி-குடும்பத்தை சார்ந்தது என்று கணிக்க முடியும்.

 24. திருவாளர் விஜய் அவர்களே! தமிழ் மட்டுமல்ல, நம் பாரதத்தின் மொழிகள் அனைத்திற்குமே ஸம்ஸ்க்ருதத்தின் தொடர்பு உண்டு. உண்மையில், ஸம்ஸ்க்ருதம் அனைத்து மொழிகளின் தாயாகப் போற்றப்படுகிறது.

  ”சுமார் 210 வார்த்தைகளை வைத்து ஒரு மொழி எந்த குடும்பத்தைச் சார்ந்தது என்று கணிக்க முடியும்” என்று நீங்கள் சொல்வது சுத்த அபத்தம்.

  உதாரணத்திற்கு நீங்கள் சொல்லியபடி ”திராவிட” மொழிகளையே எடுத்துக் கொள்ளுங்கள். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தமிழிலிருந்து வந்தவை தான் என்றோ, தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவை தான் என்றோ அம்மொழி அறிஞர்கள் யாராவது கூறியிருக்கிறார்களா? இல்லை நீங்கள் தான் அங்கே சென்று அவர்கள் மொழிகள் தமிழிலிருந்து வந்தவை என்று சொல்லிப் பாருங்களேன்! ()

  ஆனால் அவர்கள் அனைவரும் ஸம்ஸ்க்ருதத்தின் தொடர்பை மறுத்ததில்லை என்பதே உண்மை.

  ஐய்யா! கால்டுவெல்லின் கோட்பாடுகள் காற்றோடு போய் காலங்கள் பல ஆகிவிட்டன. திராவிட இன வெறியர்கள் கூப்பாடு போடுவதால் ஸம்ஸ்க்ருதத்தின் முக்கியத்துவமோ, அதற்கும் தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழிகளுக்கும் உள்ள தொடர்போ இல்லை என்று ஆகிவிடாது.

 25. ஸமஸ்கிருதம் ஒரு நிலையற்ற மொழி, இவை எப்பொழுதுமே தமிழக்கு இணைகொடுக்க இயலாது. தமிழ் மொழியின் இலக்கிய நடை எளிமை அவற்றில் இல்லை.

  //உண்மையில், ஸம்ஸ்க்ருதம் அனைத்து மொழிகளின் தாயாகப் போற்றப்படுகிறது. //

  இத்தாயாக போற்றப்படும் இம்மொழி இப்பொழுது எங்கே போனது. இவை மந்திரத்திற்கு மட்டுமே பயன்படும் மொழி அவ்வளவு தான்.

 26. மற்ற மொழிகளை விட தமிழ் தான் தொன்மையான மொழி என்பதற்கும் ஆதாரம் உண்டே!. மொழிகளையாவது உயர்வு, தாழ்வு பார்காமல் விட்டுவிடுங்கள். தாய் மொழியே ஒருவருக்கு சிறந்த மொழி. என் தாய் மொழி தமிழ் மொழி போன்று எம் மொழியும் இவ்வுலகில் கிடையாது ( என்னை பொறுத்த வரையில்).

 27. //இத்தாயாக போற்றப்படும் இம்மொழி இப்பொழுது எங்கே போனது. இவை மந்திரத்திற்கு மட்டுமே பயன்படும் மொழி அவ்வளவு தான்.//

  உம்முடைய அறியாமை நன்றாகத் தெரிகிறது. வளர முயற்சி செய்யுங்கள்.

  // மற்ற மொழிகளை விட தமிழ் தான் தொன்மையான மொழி என்பதற்கும் ஆதாரம் உண்டே!. மொழிகளையாவது உயர்வு, தாழ்வு பார்காமல் விட்டுவிடுங்கள். தாய் மொழியே ஒருவருக்கு சிறந்த மொழி. என் தாய் மொழி தமிழ் மொழி போன்று எம் மொழியும் இவ்வுலகில் கிடையாது ( என்னை பொறுத்த வரையில்).//

  உண்மையான இந்துக்கள் மொழிகளில் உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் இல்லை. நீங்கள் தமிழ் உங்களுடைய தாய் மொழி என்று பற்றுடன் நினைத்தீர்களானால், மசூதியில் ஏன் அரபு மொழியில் தொழுகை நடத்துகிறீர்கள்? தமிழ் தாய் மொழி என்கிற பட்சத்தில், தாய் மதத்திற்குத் திரும்பிவந்து பயன் பெறுங்கள். பாலைவனத்திலிருந்து சோலைவனத்திற்கு வாருங்கள். (:-))

 28. //உண்மையில், ஸம்ஸ்க்ருதம் அனைத்து மொழிகளின் தாயாகப் போற்றப்படுகிறது. //ம்ம்ம்…காலாவதியான கோட்பாடு இதுதான். மொழிகளின் பரிமாண வளர்ச்சி மிகவும் சிக்கலானது. ஒருவிஷயத்தை சொல்லலாம். சமஸ்கிருதம் எனும் மொழி உருவானது கிமு ஐந்தாம் நூற்றாண்டுகளில் இருக்கலாம். அதனுடம் பிராம்மி எழுத்துக்கள் இணைக்கப்பட்டது அதற்கும் பின்னால் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருக்கலாம். முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்களைக் காட்டிலும் முதல் தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தையவை. தமிழ் என்கிற மொழி உருவானதும் சமஸ்கிருதம் என்கிற மொழி உருவானதும் ஒரு சில நூற்றாண்டுகள் இடைவெளிகளில் இருக்கலாம். சமஸ்கிருதம் தமிழின் தாய்மொழியாக நான் அறிந்தவரை பாரத ஐதீகங்களில் இல்லை. இன்னும் சொன்னால் சிவனின் டமருவில் இருபுறங்களிலிருந்தும் தமிழும் சமஸ்கிருதமும் உருவானதாக அதனை பாணினி உணர்ந்து மொழி இலக்கணம் உருவாக்கியதாகவும் ஐதீகம் சொல்கிறது. இந்த ஐதீகத்தின் மையக்கருவில் ஒரு வரலாற்று உண்மை உள்ளது. பாரத பண்பாட்டுப்புலத்தில் இருந்த மொழிகளிலிருந்து உருவாக்கப்பட்ட பொதுமொழியே சமஸ்கிருதம். அதாவது பிராகிருத பைசாசிக மொழிகளையும் வேத சந்தஸையும் சமஸ்கிருதத்தின் உள்ளிருப்பாகக் கொள்ள வேண்டும். இதன் இலக்கண உருவாக்கமே மானுடத்தின் மொழியியல் அறிதலில் ஒரு மகத்தான தாவல். துரதிர்ஷ்டவசமாக காலத்தொன்மையை நிறுவி அதன் மூலம் மனம் களிக்கும் ஒரு நோய் நம் அனைவருக்கும் வெள்ளையர்களிடமிருந்து தொற்றிவிட்டது. வேத சந்த மொழியை எடுத்துக்கொண்டால் அதன் காலகட்டம் கிமு 4000 வரை செல்லலாம். அதே காலகட்டங்களில் பிராகிருத மொழிகளும் இருந்திருக்கின்றன என்பது வேதத்தில் இருக்கும் substratum பதங்களை கொண்டு அறியலாம். இன்று சமஸ்கிருதம் பாரதத்தில் அனைவருக்குமான பாரம்பரிய சொத்து. அதனை வெறுப்பது உண்மையில் பாரத பன்பாட்டையும் தேசியத்தையும் வெறுப்பதே அன்றி வேறில்லை.

 29. Sirs/ Madams (though I see no madams),

  It’s meaningless to say Tamil originated from Sanskrit or vice versa. We are ignorant when we say so. Any language can adopt any number of nouns from any other language, but it’s difficult to do so with verbs. Please look into the verbs of your own language and understand their origins.

  Vested interests (both Aryan and Dravidian) will always see Sanskrit to stand against Tamil. For that matter Tamil is not even a language which gave birth to those religions, which stand against Hinduism. Be wise to give credit to Tamil as a original language. If not, say it has Telugu or Kannada or Malayalam as its origin, but not Sanskrit for Tamil has not even a single verb from Sanskrit.

  I too love Sanskrit, but a wet nurse differs in a way from a mother.

  – Rajasundararajan

 30. தமிழ் இன்றைய பாரதத்தின் மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் வந்து சேர்ந்த ஐரோப்பிய/பாரசீக/அவஸ்தானியர்களின் மொழிக்கூறுகளை உள்வாங்கி தமிழர்களால் (திராவிடர்களால்) “உருவாக்கப்பட்ட” மொழி சமஸ்கிருதம்.

  ஆகவே தான் தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
  தெலுகு பேசும் மக்கள் தமிழை “அரைவை மொழி ” (அரை மொழி) என்று குறிப்பிடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு பிந்தையது என்றால் நாமும் ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுகு போல நான்கு “க” வைத்திருப்போம்.

  இது தமிழ் மூத்த மொழி என்ற என் கருத்துக்கான காரணம்.

  உருவாக்கப்பட்ட மொழி என்பதால் அதை அறியும் வாய்ப்பு குருகுலம் சென்று கற்றவர்க்கு மட்டுமே கிட்டி இருக்க வேண்டும்..

  பிற்காலத்தில் அவர்கள் (தமிழர்கள்/திராவிடர்கள்) செய்த கலை, அறிவியல், அரசியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருத்திலேயே கடத்தி இருக்க வேண்டும். (தற்போது ஆங்கிலம் எப்படி புழக்கத்தில் உள்ளதோ அது போல இந்த நிகழ்வை ஒப்பிடலாம். )

  சமூகத்தின் உயர்தட்டு மட்டுமே அறிந்ததால், சமஸ்கிருதம் பெருமை மிக்க மொழியாக மாறி இருக்கக்கூடும்.

  இறுதியாக ..

  ௧. சமஸ்கிருதம் உரு பெறுவதற்கு முன்பே தமிழ் இருந்தது.
  ௨. தமிழர்களே சமஸ்கிருத உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றினர்..

  தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்றோ, தாய்-மகள் என்றோ, அமுதம்-குடம் என்றோ உவமிப்பது அவரவர் விருப்பம். 🙂

 31. நினைத்தேன்… “தமிழ் ஹிந்து” என்று ஆரம்பித்துவிட்டு, மொழி பிரச்சினையில் இறங்கிவிட்டீர்களா? நீங்களே, உங்களுக்குள், வேறுபாடிர்க்கான விதையை விதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை?
  அஞ்சுனா சுதன் போன்று, தமிழுக்கு தாய் “சமஸ்க்ருதம்” என்றால், ஒன்று அவர்கள் மொழியில் அறிஞராய் நிறுவ வேண்டும். அல்லது வேறு குறுகிய நோக்கம் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.

  என்னை பொறுத்தவரை திரு. அரவிந்தன் நீலகண்டன் கருத்து சரி.

  வேண்டுகோள்:
  எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களை தவிருங்கள்..

  அன்புடன்
  பிராமணபிரியா..

 32. //நினைத்தேன்… “தமிழ் ஹிந்து” என்று ஆரம்பித்துவிட்டு, மொழி பிரச்சினையில் இறங்கிவிட்டீர்களா? நீங்களே, உங்களுக்குள், வேறுபாடிர்க்கான விதையை விதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை?//

  இங்கு யாரும் வேறுபாட்டிற்கான விதைகளை விதைக்கவில்லை. நேர்மையான முறையில் விவாதித்து வருகிறார்கள். விவாதத்தினால் படிக்கிறவர்களும் பயனடைகிறார்கள். நீங்கள் நினைதது தவறு.

  //அஞ்சுனா சுதன் போன்று, தமிழுக்கு தாய் “சமஸ்க்ருதம்” என்றால், ஒன்று அவர்கள் மொழியில் அறிஞராய் நிறுவ வேண்டும். அல்லது வேறு குறுகிய நோக்கம் இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்.//

  அஞ்ஜனாசுதன் தமிழுக்கு ஸம்ஸ்க்ருதம் தாய் என்று சாதிக்கவில்லை. ஸம்ஸ்க்ருதம் அனைத்து பாரத மொழிகளுடனும் தொடர்பு கொண்டுள்ள மொழியாக இருப்பதால் அது தாயைப் போல் போற்றப்படுகிறது என்று தான் சொல்லியிருக்கிறார்.

  அந்தந்த மாநில மொழி பேசுகிறவர்கள் ஸம்ஸ்க்ருதத்தின் பெருமையை உணர்ந்து கொண்டால் இந்த பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  ஆரம்பத்திலேயே ஸம்ஸ்க்ருதத்தை தேசிய மொழியாக அறிவித்திருந்தால் பல நன்மைகள் கிட்டியிருக்கும்.

 33. அய்யா, ‘சங்க இலக்கியங்கள்’ தமிழின் மிகப்பழயவை என்று போற்றப்படுகின்றன! ஆனால், “சங்கம்” என்ற வார்த்தையே சமஸ்க்ருதம் தானே! சத்சங்கம், சங்கா என்று சமஸ்க்ருத சொற்கள் எத்தனயோ உள்ளன! ஒரு சான்று.

  பகவத் கீதை அத்யாயம் 1 பதம் 2:- சஞ்சயன் திருதராஷ்ற்றரிடம் கூறுகிறான்:-

  || த்ருஷ்டுவாது பாண்டவானிகம் வ்யூதம் துர்யோதனச்ததா ஆசார்ய முப ‘சங்கமய’ ராஜ வசனம் அப்ரவீத் ||

  இதன் பொருள்:- மன்னர் துர்யோதனன் தன ஆசிரியரான த்ரோனரை ‘அணுகி’ பின்வருமாறு பேசினார்”.

  இங்கு சங்கம் என்ற வார்த்தைக்கு அணுகி என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது! அணுகி என்பது கலந்தாலோசித்து, மற்றும் ஆங்கில வார்த்தைகளான consultation, conference, meeting, gathering போன்ற பொருள்களை சொல்லலாம். எனவே, ஒரு இடத்தில்கூட சமஸ்க்ருதத்தை தமிழ் எதிர்க்கவில்லை.

  இராம்கோஒபாஆஅல் போன்ற “””””””போலியான மொழி வெறியர்கள்””””” எழுதிய மறுமொழிகளை பிரசுரிப்பது இந்த கட்டுரைக்கே அழகல்ல என்று கூறிக்கொள்கிறேன்…..

 34. இங்கு சமஸ்க்ருத்திற்கு எதிராக மறுமொழிகள் பிரசுரித்தவர்கள் எத்தனைபேர் கட்டுரையை முழுவதுமாக படித்திருப்பார்கள் என்று எனக்கு ஐயம் எழுகிறது. ஏனெனில், கட்டுரை இவ்வளவு தெளிவாக இருக்கையில், எப்படி இவர்கள் இம்மாதிரியான மறுமொழிகளை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. சற்று நேரம் கழிந்தாலும் போகட்டும், எனக்கு தெரிந்த சிலவற்றை இங்க எழுத விரும்புகிறேன்…

  //தமிழில் சமஸ்கிருத வார்தை இருப்பதால் மட்டும், தமிழுக்கும் சமஸ்கிருத்திற்க்கும் தொடர்பு இருப்பதால கூற முடியாது. அப்படி பார்த்தால் இன்னும் 300 வருடங்கள் கழித்து கார்,பஸ் போன்ற வார்த்தைகளை காண்பித்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு இருப்பதாலக கூட ஒரு கட்டுரை வரும். திராவிட மொழியகளை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம், நாம் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகளில் பிற மொழி கலப்பு இருக்காது. உதாரணம் , எண்கள், உடல் உறுப்புகள்(தலை, பல் பிற), நீ, நான், வா, போ- இது போல் சுமார் 210 வார்த்தைகளை வைத்து அந்த மொழி எந்த மொழி-குடும்பத்தை சார்ந்தது என்று கணிக்க முடியும்.//

  தோழர் விஜய் அவர்களே, உங்கள் மறுமொழியின் முதல் பகுதி உண்மையே! ஆனால், தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்களில்கூட சமஸ்க்ருதம் கலந்திருப்பதற்கு என்ன சொல்லமுடியும்? சிறிது ஆண்டுகள் கழித்து ஆங்கில வார்த்தைகள் கூட தமிழ் என்று அறியப்படும் என்று நீங்கள் கூறுவதிலிருந்தே இன்று தமிழுக்கு எதிரி ஆங்கிலம் தானே தவிர, சமஸ்க்ருதம் அல்ல என்பது தெளிவு. மேலும், “திராவிட மொழிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்” என்று கூறுகிறீர்கள். தமிழாவது ஓரளவிற்கு சமஸ்க்ருதத்திலிருந்து விடுபட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கு, கன்னடம் எல்லாவற்றிலும் சமஸ்க்ருதம் இரண்டறக் கலந்துவிட்டது. மலையாளத்தை இங்கு சேர்க்க முடியாது. ஏனெனில், மலையாளம் உருவானது ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆகும்…

  //ஸமஸ்கிருதம் ஒரு நிலையற்ற மொழி, இவை எப்பொழுதுமே தமிழக்கு இணைகொடுக்க இயலாது. தமிழ் மொழியின் இலக்கிய நடை எளிமை அவற்றில் இல்லை.//

  ராம்கோஓபாஆல் அவர்களே, இந்த வார்த்தைகளை வெளியில் சொல்லிவிடவேண்டாம், சொன்னால் தங்களை மனநிலை பாதித்தவர் என்று கூறிவிடுவார்கள். சமஸ்ருதக்தின் பெருமைகள் என்னென்ன என்று இந்து மதத்தை வேருப்பவர்களால் கூட மறுக்க முடியாது. நீங்கள் கருப்புச்சட்டைக்காரர் என்பதனால், இப்படி ஆதாரமற்ற மறுமொழிகளை எழுதுவதில் எனக்கொன்றும் வியப்பில்லை.

  //இத்தாயாக போற்றப்படும் இம்மொழி இப்பொழுது எங்கே போனது. இவை மந்திரத்திற்கு மட்டுமே பயன்படும் மொழி அவ்வளவு தான்.//

  தமிழ் தெரியுமா உங்களுக்கு? இந்த கட்டுரையை படித்தீர்களா? சும்மா சாமி ஆடுகிறீர்களே! கட்டுரையிலேயே, எப்படி அம்மொழி இன்னும் உயிருடன் விளங்குகிறது என்பதற்கு ஆசிரியர் எவ்வளவு சான்றுகளை அடுக்கியுள்ளார். சார், உங்களைப் பார்த்தால் “சிரிப்பு போலீஸ்” போல உள்ளது!!

  //மற்ற மொழிகளை விட தமிழ் தான் தொன்மையான மொழி என்பதற்கும் ஆதாரம் உண்டே!. மொழிகளையாவது உயர்வு, தாழ்வு பார்காமல் விட்டுவிடுங்கள்.//

  தயவுசெய்து, அது என்ன ஆதாரம் என்று சொல்கிறீர்களா?? நாங்கள் சமஸ்க்ருதம் உயர்ந்தது, தமிழ் தாழ்ந்தது என்று கனவில் கூட நினைப்பதில்லை!!

  //It’s meaningless to say Tamil originated from Sanskrit or vice versa. We are ignorant when we say so. Any language can adopt any number of nouns from any other language, but it’s difficult to do so with verbs. Please look into the verbs of your own language and understand their origins.//

  திரு.இராஜசுந்தரராஜன் அவர்களே, நீங்கள் சொல்வது சரியே, எப்படி சமஸ்க்ருதத்திலிருந்து தமிழ் தோன்றியது பொய்யோ, அதே போல தமிழ் சமஸ்க்ருத்தைவிட பழயது என்பதும் அப்பட்டமான பொய்…

  //Vested interests (both Aryan and Dravidian) will always see Sanskrit to stand against Tamil. For that matter Tamil is not even a language which gave birth to those religions, which stand against Hinduism.//

  என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழ் இந்து மதத்திற்கு புறம்பானது என்றா? அப்படி சொல்வீர்களாயின், அது உங்கள் அறியாமையே! இந்த தொடரின் மற்ற பகுதிகளை படித்தீர்களா?? படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள்!

  //Be wise to give credit to Tamil as a original language. If not, say it has Telugu or Kannada or Malayalam as its origin, but not Sanskrit for Tamil has not even a single verb from Sanskrit.//

  We give full credit to Tamil as a original language, it is people like you who say that Sanskrit was the language of some unknown nomadic tribes, whom you first said to have invaded, and then migrated, and what now, toured?? Sanskrit is equally great to Tamil! We are not bothered about verbs or nouns, but only of the usage of Sanskrit words in ancient Tamil literature…

  //I too love Sanskrit, but a wet nurse differs in a way from a mother.//

  ஆஹா, கருணாநிதியை மிஞ்சிவிட்டீர்களே, அங்கனமாயின், உங்கள் பெயரை “அழகரசன்” என்று மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே, இதற்க்கு மட்டும் mother தேவையில்லை, wet nurse வேண்டுமா??

  //தமிழ் இன்றைய பாரதத்தின் மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர் வந்து சேர்ந்த ஐரோப்பிய/பாரசீக/அவஸ்தானியர்களின் மொழிக்கூறுகளை உள்வாங்கி தமிழர்களால் (திராவிடர்களால்) “உருவாக்கப்பட்ட” மொழி சமஸ்கிருதம்.//

  அய்யகோ, கால்ட்வெல்லின் சீடர் ஒருவர் வந்திருக்கிறார்! என்ன ஒரு வரலாற்று பொய்… நீங்கள் பாதிரியார்தானே!!

  //ஆகவே தான் தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
  தெலுகு பேசும் மக்கள் தமிழை “அரைவை மொழி ” (அரை மொழி) என்று குறிப்பிடுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு பிந்தையது என்றால் நாமும் ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுகு போல நான்கு “க” வைத்திருப்போம்.//

  சரி சார், தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகள் சமஸ்க்ருதத்தில் உள்ளன என்பது உண்மைதான்! ஆனால், சமஸ்க்ருத்தைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் பேசுவதுபோல, தமிழைப்பற்றி தொன்மையான சமஸ்க்ருத இலக்கியங்கள் பேசவில்லையே, ஏன்? பிறகெப்படி தமிழ் சமஸ்க்ருத்தைவிட மூத்தது?

  தமிழின் மிகத் தொன்மையான இலக்கியங்கள் கீ.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகின்றன. மூன்றாம் சங்கப்புலவரான நக்கீரரின் இலக்கியங்களிருந்து அதற்குமுன் இரண்டு சங்கங்கள் இருந்ததை அறிகிறோம். முதல் சங்கம் 4440 ஆண்டுகள் இருந்ததாகவும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் நீடித்ததாகவும் நக்கீரர் குறிப்பிடுகிறார். மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்ததாகவும் நக்கீரரும், இதர சைவ நாயன்மார்களும் தங்கள் இலக்கியங்களில் கூறுகிறார்கள். ஆக, தமிழின் தொன்மைக்கு எடுத்துக்காட்டே இந்து மதம்தான்!!!!

  மூன்று சங்கங்களையும் சேர்த்தால் 9990 ஆண்டுகள் என்ற கணக்கு வருகிறது. இதனுடன் நாம் பார்த்த வரலாற்று 2000 ஆண்டுகளை சேர்த்தால்கூட தமிழ் 12000 ஆண்டுகள் நீடிக்கின்றன! சமஸ்க்ருதத்தின் தொன்மை எவ்வளவு என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. வேதங்கள் தொகுக்கப்பட்டதே ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்னால் என்று அறிகிறோம். ஆனால், இதற்க்கு முன்பே வேதங்கள் எழுதப்படாமல், ஒதியபடியே பின்பற்றப்பட்டன என்பது ஐரோப்பிய வல்லுனர்கள் முதல் ஒப்புக்கொண்டதாகும். ஒரு உதாரணம் தருகிறேன்:- இரண்யகசிபு தவம் செய்தது 36,000 ஆண்டுகள் என்றும், இராமன் அயோத்தியை ஆண்டது 11,000 ஆண்டுகள் என்றும் புராணங்கள் சொல்கின்றன.. இதற்க்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று உங்கள் “இந்துப்பகுத்தறிவு” (இந்துக்களை மட்டும் கேள்வி கேட்கும் பகுத்தறிவு) கேள்வி எழுப்பும். சங்கங்கள் நடந்ததாக சொல்வதும் நக்கீரர், பரணர் மற்றும் நாயன்மார்களின் இலக்கியங்களிலிருந்தே அறிகிறோம்.. எனவே, எப்படி பார்த்தாலும் சமஸ்க்ருதம் தமிழுக்குப் பிறகு வந்த மொழி இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவு!!

  மேலும், முதல் சங்கம் 4440 ஆண்டுகள், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் என்றும் மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள், அதாவது சங்ககளின் காலம் குறைந்துகொண்டே வருவதை கவனிக்கவும். இதே போல, சமஸ்க்ருத யுகங்களும் குறைந்துகொண்டே வருவது:-

  சத்ய யுகம்:- 17,28,000 ஆண்டுகள்.
  த்ரேதா யுகம்:- 12,96,000 ஆண்டுகள்
  த்வாபர யுகம்:- 8,64,000 ஆண்டுகள்.
  கலி யுகம்:- 4,32,000 ஆண்டுகள்.

  தமிழ் சமஸ்க்ருத “கால எண்ணிக்கையை” எதிர்க்கவில்லை என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரம்! மேலும், முதலாம் சங்கம் சிவன், முருகன், குபேரன் போன்ற தேவர்களையும் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இங்கு குபேரன் வருவதுதான் அரிது. குபேரனை பிரம்மதேவன் விஷ்றவன் என்ற முனிவரின் பிள்ளையாக படைத்து யட்சர்களின் அரசனாக்கி இலங்கையை ஆளும்படி பிறப்பித்தார் என்றும் புராணங்களும் இராமாயணமும் கூறுகின்றன. விஷ்ரவனுக்கும், கைகேசி என்ற அரக்கீக்கும் பிறந்த நான்கு பிள்ளைகள்:- இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மற்றும் மீனாட்சி (பின்னாளில் சூர்பனகை). இராவணன் குபேரனை துரத்திவிட்டு இலங்கையை ஆக்ரமைத்தாக கூறப்பட்டுள்ளது. எனவே, இலங்கை தமிழ் நகரம்தான், ஆனால் இராவணன் தமிழனும் இல்லை, திராவிடனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்….

  “Early literature from the pre-Pallava dynasty period does not contain any mention of the Sangam academies, although some early poems imply a connection between the city of Madurai, which later legends associate with the third Sangam, and Tamil literature and the cultivation of the language.[6] The earliest express references to the academies are found in the songs of Appar and Sampandar, Shaivite poets who lived in the 7th century.[7] The first full account of the legend is found in a commentary to the Iraiyanar Akapporul by Nakkīrar (c. seventh/eighth century CE).[8] Nakkīrar describes three “Sangams” (caṅkam) spanning thousands of years. The first Sangam (mutaṟcaṅkam) is described as having been held at “the Madurai which was submerged by the sea”, lasted a total of 4440 years, and had 549 members, which supposedly included some gods of the Hindu pantheon such as Siva, Kubera and Murugan. A total of 4449 poets are described as having composed songs for this Sangam.

  The second Sangam (iṭaicaṅkam) was convened in Kapatapuram. This Sangam lasted for 3700 years and had fifty-nine members, with 3700 poets participating. This city was also submerged in sea. The third Sangam (kaṭaicaṅkam) was purportedly located in the current city of Madurai and lasted for 1850 years under 49 kings. The academy had 49 members, and 449 poets are described as having participated in the Sangam.[9].
  Late legends say that the third Sangam was held on the banks of the sacred Pond of Golden Lotuses in Madurai

  There are a number of other isolated references to the legend of academies at Madurai scattered through Shaivite and Vaishnavite devotional literature throughout later literature.[10] The next substantive references to the legend of the academies, however, appear in two significantly later works, namely, the Thiruvilaiyadal Puranam of Perumpaṟṟapuliyūr Nambi, and the better-known work of the same title by Paranjothi Munivar.[11] These works describe a legend that deals mostly with the third Sangam at Madurai, and is so substantially different from that set out in Nakkirar’s commentary that some authors such as Zvelebil speculate that it may be based on a different, and somewhat independent, tradition.[12] In Nambi’s account, the 49 members of the third Sangam led by Kapilar, Paraṇar and Nakkīrar were great devotees of Shiva, numbered amongst the 63 nayanars.[13] Nakkirar himself is said to have later headed the Sangam, and to have debated Shiva. The Sangam is described as having been held on the banks of the Pond of Golden Lotuses in the Meenakshi-Sundaresvarar Temple in Madurai.”

  https://en.wikipedia.org/wiki/Sangam

  நக்கீரர் சிவபெருமானிடம் வாதிட்டு அவர் நெற்றிக்கண் தீயில் எரிந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பொற்றாமரைக் குளத்திளிர்ந்து இறைவன் எழச்தேய்த நிகழ்ச்சியை திருவிளையாடல் புராணம் நன்றே வலியுறுத்துகிறது…

  மேலும், அகத்திய முனிவர் குற்றாலத்தில் இருந்த திருமாலின் சிலையை சிவலிங்கமாக மாற்றி திருக்குற்றாலீஸ்வரர் என்ற கோவிலை உருவாக்கிய நிகழ்ச்சி, சைவம், வைணவம் இரண்டுமே தமிழர்களின் சொந்த மதங்கள் என்பதற்கு ஆதாரம்!!

  //உருவாக்கப்பட்ட மொழி என்பதால் அதை அறியும் வாய்ப்பு குருகுலம் சென்று கற்றவர்க்கு மட்டுமே கிட்டி இருக்க வேண்டும்..//

  இது ஒரு ஆதாரமே அல்ல, தமிழுக்கும் குருகுல முறை இருந்திருந்தால், அதுவும் இன்று அப்படித்தான் இருந்திருக்கும்!

  //பிற்காலத்தில் அவர்கள் (தமிழர்கள்/திராவிடர்கள்) செய்த கலை, அறிவியல், அரசியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருத்திலேயே கடத்தி இருக்க வேண்டும். (தற்போது ஆங்கிலம் எப்படி புழக்கத்தில் உள்ளதோ அது போல இந்த நிகழ்வை ஒப்பிடலாம். )//

  இது உங்கள் யூகம்தான் தவிர உண்மையல்லவே.. தமிழர்கள் சமஸ்க்ருதத்தை பயன்படுத்தினர் என்பது உண்மை, ஆனால் தமிழர்கள் மட்டுமே பயன்படுத்தினர் என்பது உண்மைக்குப் புறம்பானது!!

  //சமூகத்தின் உயர்தட்டு மட்டுமே அறிந்ததால், சமஸ்கிருதம் பெருமை மிக்க மொழியாக மாறி இருக்கக்கூடும். //

  இதுவும் பொய்.. எல்லா வர்க்கத்தினரும் சமஸ்க்ருதத்தை அறிந்திருந்தனர் என்பதற்கு தக்க சான்றுகள் கட்டுரையிலேயே கொடுக்கப் பட்டுள்ளன!!

  //௧. சமஸ்கிருதம் உரு பெறுவதற்கு முன்பே தமிழ் இருந்தது.
  ௨. தமிழர்களே சமஸ்கிருத உருவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றினர்..//

  இரண்டுமே உண்மைக்கு புறம்பானது.. சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுமே எப்படி உருவானது என்பதற்கு இதுநாள் வரையில், தக்க ஆதாரங்கள் இல்லை.. என் அபிப்பிராயம், தொலைந்துபோனதாக சொல்லபடுகின்ற மிகவும் பழமையான தமிழ் இலக்கியங்கள் கிடைத்தால், தமிழுக்கும் சமஸ்க்ருததுக்கும் என்ன தொடர்பு என்பது வெளிப்படும்.. எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது, ஒவ்வொரு உறுதியான தமிழ் இந்துவுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது.. இதைகண்டு அஞ்சவேன்டியவர்கள் கருப்புச்சட்டைக்காரர்களும் கிறித்தவ பாதிரிமார்களே!!

  இறுதியாக, அய்யா அரவிந்தன் நீலகண்டன் அவர்கட்கு,

  //முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்களைக் காட்டிலும் முதல் தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தையவை.//

  இது உண்மையாக இருக்கலாம்.. ஆனால், இன்னொரு வாய்ப்பும் உள்ளது, இன்னும் தொன்மையான சமஸ்க்ருத கல்வெட்டுகள் “இன்னும் கிடைக்கவில்லை” என்பதற்காக சமஸ்க்ருதம் புதிய மொழி எனக்கூரலாகாதே…

  //இன்னும் சொன்னால் சிவனின் டமருவில் இருபுறங்களிலிருந்தும் தமிழும் சமஸ்கிருதமும் உருவானதாக அதனை பாணினி உணர்ந்து மொழி இலக்கணம் உருவாக்கியதாகவும் ஐதீகம் சொல்கிறது.//

  அய்யா, இது வாடா ஐதீகம் மட்டுமில்லை. தமிழிலும் உள்ளது. அப்பர்பெருமான் “வானவருக்கும் மேலான் காண் வடமொழியும் தென்மொழியும் ஆனவன் காண் ” என்று இறைவனைப் பாடுகிறார். அதாவது, சமஸ்க்ருதம் தமிழ் இரண்டுமே ஒருசேர உருவானவை என்பதே பாரபட்சமில்லாத ஐதீகமாக உள்ளது…

  //அதாவது பிராகிருத பைசாசிக மொழிகளையும் வேத சந்தஸையும் சமஸ்கிருதத்தின் உள்ளிருப்பாகக் கொள்ள வேண்டும். இதன் இலக்கண உருவாக்கமே மானுடத்தின் மொழியியல் அறிதலில் ஒரு மகத்தான தாவல்.//

  ஆக, வேதங்களின் மொழி சமஸ்க்ருதம் இல்லை என்கிறீர்களா?? நான் தங்களைப்போல அறிஞர் இல்லை. ஆனால், நான் கேள்விப்பட்ட வரையில் சம்ஸ்க்ருதம் Vedic Sanskrit, Classical Sanskrit என்று இரண்டு வகை உண்டு. முதலில் சொல்லப்பட்ட மொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் காணப்பட்டவை என்றும், அடுத்தது, புராணங்கள், இராமாயணம், மகாபாரதம், பிரம்ம சூத்ரங்கள், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர் போன்றவர்கள் எழுதிய உரைகளில் இருப்பதாக சொல்வர்!

  //துரதிர்ஷ்டவசமாக காலத்தொன்மையை நிறுவி அதன் மூலம் மனம் களிக்கும் ஒரு நோய் நம் அனைவருக்கும் வெள்ளையர்களிடமிருந்து தொற்றிவிட்டது. வேத சந்த மொழியை எடுத்துக்கொண்டால் அதன் காலகட்டம் கிமு 4000 வரை செல்லலாம். அதே காலகட்டங்களில் பிராகிருத மொழிகளும் இருந்திருக்கின்றன என்பது வேதத்தில் இருக்கும் substratum பதங்களை கொண்டு அறியலாம். இன்று சமஸ்கிருதம் பாரதத்தில் அனைவருக்குமான பாரம்பரிய சொத்து. அதனை வெறுப்பது உண்மையில் பாரத பன்பாட்டையும் தேசியத்தையும் வெறுப்பதே அன்றி வேறில்லை.//

  எவராலும் மறுக்கமுடியாத உண்மை…

  எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது, நான் பிறப்பால் தமிழனும் இல்லை. ஆனால் எனக்கு இந்த இரு மொழிகளையும் ஒன்றுடன் ஒன்று போரிடவைத்து கிறித்தவ, முகமதீய போதகர்கள், மற்றும் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட கருப்புச்சட்டைக்காரர்களின் சதியே என்பது புலப்படுகிறது…

  நன்றி!

 35. அமுதம் போன்ற கட்டுரை. மிக்க நன்று . ஆனாலும் அமுதத்தில் ஒரு கல் கடிபடுகிறதே ஐயா . ஸ்ரீமத் பகவத் கீதையில் மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள் தான் உண்டு. 19;63 என்பதை 18;63 என்று வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்

 36. பார்ப்பன எதிர்ப்புதான் சம்ஸ்கிருத எதிர்ப்பாக தோற்றமளிக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது.

 37. My views
  1. Tamil & Sanskrit are like two eyes gifted by God
  2. Tamil is Shakti & Sanskrit is Sivam
  3. Tamil is Mother and Sanskrit is Father
  4. There is no Temple equivalent to Mother & There is no advise equivalent to father
  5. Both are inseparable
  v.gopal

 38. நண்பர் வள்ளுவரே…
  எல்லா மொழிகளையும் மதிக்கும் பக்குவம் எனக்கு இருக்கின்றது.. சமஸ்கிருதத்தை தாழ்த்தி பேசுவதாக கருத வேண்டாம்..

  சமஸ்கிருதம் தான் எல்லா இந்திய மொழிகளின் தாய் என்று ஒரு கருத்து அவ்வப்போது மொழியப்படுவதால் தான் இந்த விவாதம்..

  பிராகிருதம் என்று ஒரு (?) மொழி இருந்ததது அல்லவா..

  பொருள்:
  பிராகிருதம் – இயல்பான, அசலான, சாதாரண (natural , normal , ordinary ) வழக்கு
  சமஸ்கிருதம் – சமைக்கப்பட்ட, பண்படுத்தப்பட்ட (refined , constructed) வழக்கு

  பிராகிருதம், சமஸ்கிருதத்திற்கு முந்தைய ஒன்று என்று கூறப்படுவது பற்றி அறிவோம்..

  அந்த இயல்பான பிராகிருதம் ஒற்றை மொழி அன்று.. Sauraseni, Magadhi,Maharashtri , Pracya, Bahliki, Daksinatya, Sakari, Candali, Sabari, Abhiri, Dramili, Odri போன்ற பல பிராகிருத வழக்குகள் இருப்பதாகஇருந்ததாக சொல்லப்படுகிறது..

  எனது புரிதல் என்னவென்றால் அந்த பிராகிருதம் என்ற சமஸ்கிருத சொல்லாடல், சமஸ்கிருதம் உருப்பெறுவதற்கு (உருவாக்கப்படுவதற்கு) முன்னால் பாரதத்தில் இருந்த அணைத்து வட்டார வழக்குகளையும், மொழிகளையும் குறிக்கும் ஒரு குறிச்சொல்.

 39. தமிழில் சமஸ்கிரத சொற்கள் இர்ருப்பதால் தமிழ் சமஸ்கிர்ததை அடியோற்றியது எண்பது கேள்விகுரியது . சமஸ்கிர்ததில் பிறமொழி சொற்கள் இல்லையா ?சமஸ்கிர்த்ததில் கூறபடும் கிரகங்கள் குறித்த சொற்கள் , கிரேக்க சொற்கள் தானே . சமஸ்கிர்த்ததில் உள்ள தமிழ் சொற்கள் பற்றி கேள்வியே இல்லை . சமஸ்கிர்ததிர்க்கு இங்கு ஒரு நுற்றண்டுகளாக எதிர்ப்பு இர்ருபதாகவும் ,அப்படி எதிர்பவர்களை கேலி செய்வதும் நடந்தேறுகின்றன . இங்கு இப்போது மட்டும் அல்ல கடந்த 2 ஆயிரம் வருடங்கலாவே சமஸ்கிர்ததையும் , அதன் உள்ளீடுகளையும் எதிர்த்த நிலை இங்குண்டு .அதற்கு நிறைய ஆதாரங்களும் இங்குண்டு .
  அது சரி இங்குதான் சமஸ்கிர்ததிற்கு எதிர்ப்பு நிலை .தமிழகம் தவிர்த்து பறந்து விரிந்த இந்த நாட்டில் யார் சமஸ்கிர்ததை எதிர்த்து யுத்தம் செய்தனர்? ,.பின்னர் எப்படி வழக்கோழிந்தது? வழக்கொழியவில்லை எனில் சமஸ்கிரத பாரதி ஏன் ?எதோ ஒரு ஊரில் 3000 பேர் சமஸ்கிர்தம் பேசுகிறார்களாம். என்ன சொல்வது வாழ்க வளர்க .

 40. why somebody is trying to destroy Sanskrit.please don’t try to tease other languages.
  In fact without Sanskrit No TELUGU ,KANNADA and MALAYALAM. this no one can deny. Any one can say Kannada,and Telugu are inferior or lesser than our language.(reality these are younger than Tamil.) this is an open challenge to those declare them self as a savior for tamil (paguthu arivalargal). but no one knows the origin of Sanskrit and tamil. you people want reason to down Hinduism,most of the scriptures are in sanskrit,you feel making down the sanskrit will help to destroy hinduism. (never you can achieve)
  Go to other religion find which language they are using for their prayers and ask them to correct first (if you people are genuine and having backbone).
  No language is inferior, we love tamil as our mother tongue and love sanskrit as our vedic(one of the prayer language) language.But not insist any one to learn and use.Individuals to decide what they wants (for prayer this freedom you can find in hinduism but few others dont have ).
  proud to be an tamilan, try to speak and write without mixing other language words and same time never try to bring down other languages.

 41. கட்டுரையாளரின் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் இரு மொழிகளில் எது உயர்வானது என்னும் வாய்க்கலப்பு இப்போது தேவை இல்லை. இறைவன் இருக்கிறனா இல்லையா என்று பேசி சமீப காலத்தில் இலக்கிய வளர்ச்சியே தளர்ந்து விட்டது. தாய் மொழி உயர்வானது தான். அது போலத் தான் மற்றவருக்கும் அவரவர் மொழி சிறப்பானது தான். ஒரு மொழியை எப்போதும் தாழ்த்திப் பேசி நேரத்தை வீண் ஆக்குவதற்குப் பதிலாக இணையத்தில் கிடைக்கும் எண்ணற்ற தமிழ் இலக்கியத்தைப் படிக்க முன்வாருங்கள். முடிந்தால் இப்படி கட்டுரை எழுதுங்கள். மொழி தன்னால் வளரும். வீண் விவாதங்களைத் தவிர்த்து தமிழ் முன்னேற்றம் குறித்து பழைய இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதுங்கள். மொழி தானே முன்னேறும். மொழியையும் இறைவனையும் பற்றிப் பேசும்போது தரம் பிரிக்காதீர்கள். கட்டுரை மிக அருமையானது. இரசித்தேன். அம்பேத்கர் பற்றிய தகவல் மிக ஆச்சர்யமாக இருந்தது. பாராட்டுகள். வழக்கறிஞர் போல கருத்தை எடுத்து வைத்து இருக்கிறீர்கள். மறைமலை அடிகள் பற்றிய பல தகவல்களை இப்போது தான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

 42. It is a ridiculous fact that Most of the people who crticise samskrutham does not even know a few words from the language. To comment so loudly about something without even knowing an iota of the same is but the trait of these ‘thani thamizh’ / black shirters. This much about their knowledge of samskrutham. But the pity is that they do no even know much of tamizh. Just because of the fact that ‘marabu kavithai’ in tamizh is not popular today, can someone say that it is dead. It is dead for those who wish that it is dead or who do not care to know about it that it is dead. Not for one who love it. Same with samskrutham. It is dead for those who wish that it is dead or for those who do not care to know about the language.

 43. வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
  எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

  தொல்காப்பியம்

 44. தன்னுயிர் தானறப் பெற்றனை ஏனைய‌
  மன்னுயி ரெல்லம் தொழும்.

  சமஸ்கிருதத்தில் இருக்கும் கோடி வேதங்கள் ஈடகுமா இந்த் ஒரு திருக்குறளுக்கு… கேட்டால்(தமிழில் இருந்து மருவிய சொல்)இதிலிருப்பதும் சமஸ்கிருத சொல் என்று சொல்வார்கள்.

 45. தமிழ் எந்த மொழியிடமும் கடன்பட்ட மொழி இல்லை . ஆரியர்கள் வருகைக்கு பிறகு தான் தமிழில் சம்ஸ்க்ருத சொற்கள் பல கலந்தன. இதற்கு சங்க இலக்கிய பாடல்கள் முதற்கொண்டு 19 ஆம் நூற்றாண்டு இலக்கியம் வரை பார்த்தாலே தெரியும் . இறையியல்,ஆன்மதத்துவம், மருத்துவம் என்ற அனைத்துமே ஆரியர்கள் வருவதற்கு முன்பு தமிழகத்தில் செழித்து இருந்தது. மூல நூலில் இருந்து மொழி பெயர்த்து விட்டு அந்த மூல நூலை அழிப்பதில் வல்லவர்கள் ஆர்யர்கள். தமிழில் இருந்து பல சொற்கள் சம்ஸ்க்ருத மொழிக்கு சென்றது அவைகள் பல. எ.கா: சங்கம்,பாடம், பூஜை, ஆகமம்,பலம் (பழம்) ,ஜலம்(சல சல என்ற ஓசையுடன் ஓடுவதால் அது சலம் என்ற பெயர்பெற்றது. ‘ச’ என்பது ஜ என்று மாறி ஜலம் என்று ஆகி போனது). இப்படி பல எடுத்துகாட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம் . இந்த உலகில் தேவமொழி( தேவபாஷை) என்று ஏதும் இல்லை. பண்பட்ட மொழி என்று வேண்டுமானால் இருக்கலாம் . அப்படி உலகில் உள்ள பண்பட்ட மொழிகளில் முதன்மைஆனது தமிழ். உலகில் தேவபாஷை என்று இருக்குமானால் அது உறுதியாக மவுன மொழி தான் . ஏன்என்றால் மவுனத்திற்கு பொருள் (அர்த்தம்) கண்டுபிடிக்க முடியாது . மேலும் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தாது. மனிதனை இறைநிலைக்கு அழைத்து செல்லும் ஒரே மொழி மவுனம் தான். சம்ஸ்ருத மொழியில் சொல்லவேண்டும் என்றால் பதமஹாமவுனரூபம் என்று பொருள்.

 46. தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது!
  – முனைவர் க. நெடுஞ்செழியன்

  19-ஆம் நூற்றாண்டின் இறுதி யில் (கி.பி.1875) அறிஞர் பர்னல் இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்று, ‘தென்னிந்திய எழுத்தி யல் வரலாறு.’ மற்றொன்று ‘அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரி யர்கள்.’ இவ்விரு நூல்களுள், இந்திய எழுத்தியல் வரலாறு எனும் நூலில் ‘பிராமி முதலான இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தமிழே அடிப்படை’ என்பதை உறுதி செய்திருந்தார். ஆனால் எழுத்தியல் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவரின் கருத்தைக் கூடுமானவரை புறக்கணித்தனர். ‘அய்ந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள்’ (ஒய் ற்ட்ங் ஆய்ண்க்ழ்ஹ நcட்ர்ர்ப் ர்ச் நஹய்ள்cழ்ண்ற் ஏழ்ஹம்ம்ஹழ்ண்ஹய்ள்) என்ற நூலில், ‘அய்ந்திரம் என்பது ஒரு சிந்தனைப் பள்ளியே தவிர அது ஒரு தனிமனிதரால் செய்யப்பட்ட இலக்கண நூல் அன்று’ என்றார். மேலும் அய்ந் திரம் என்ற இலக்கண நூல் இந்திரன் என்ற கடவுளால் அல்லது தனிமனித ரால் இயற்றப்பட்டது என்பதற்கான எவ்விதச் சான்றும் கிடைக்கவில்லை என்றும் உறுதி செய்திருந்தார். ஆனால் இந்திய அறிஞர்கள், ஏ.சி. பர்னல் அவர் களின் கூற்றை ஒரு தலையாக ‘அய்ந் திரம் என்பதைப் பாணினிக்கும் காலத் தால் முற்பட்ட சமற்கிருத இலக்கண நூலாகவே’ கருதிவிட்டனர்.

  அய்ந்திரத்தைச் சமற்கிருத ‘மொழியிலமைந்த இலக்கணப் பள்ளி யாகப் பர்னல் குறிப்பிட்டாலும் கூட, அவர் தரக்கூடிய எடுத்துக்காட்டுகள் அக்கருத்தை வலியுறுத்தக்கூடிய வகை யில் அமையவில்லை. அவர் குறிப்பிடும் அவ் எடுத்துக்காட்டுகளுள் தலையா யவை இரண்டு. ஒன்று பெளத்த இலக்கியமாகிய ‘அவதான சாதகத்தில்’ புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் ‘அய்ந்திரம் கற்றான்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார், ‘அய்ந் திரம் என்பதற்கு உலகாய்தம் எனப் பொருளுரைத்தார் (அ. சக்கரவர்த்தி நயினார், நீலகேசி நூலுக்கான ஆங்கில முன்னுரை (ஆய் ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் சங்ங்ப்ஹந்ங்ள்ண்). சக்கரவர்த்தி நயினார், அய்ந்திரத்தை உலகாய்தம் எனக் குறிக்க அவரின் ஆங்கில முன்னுரையைத் தமிழ்ப்படுத் திய பேராசிரியர் நா. வானமாமலை, உல காய்தம் என்பதைப் பூதவாதம் எனக் குறித்தார்.

  உலகாய்தம், பூதவாதம் ஆகிய இரண்டும் ஒரு பொருள் குறிப்பன. அவை நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்ற அய்ந்து பூதங்களின் இயல்பை விளக்கிய அணுக்கோட்பாடுகளாகும். அறிவியலையும் தருக்கவியலையும் இணைத்த இக்கோட்பாடுகள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தன. தருக்க முறையினால் உண்மையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருந்ததால் இக் கொள்கையாளர்கள் பேச்சுக் கலைக்குச் சிறப்பிடம் தந்தனர். இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும்.

  காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும். இந்நூலில் ‘சமற்கிருத இலக் கண ஆசிரியராகிய பாணினி அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரரு சிகாத்தியாயனார் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும் ஏழுநாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும் தன் அருள்பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய அய்ந்திர நூல்களை எல்லாம் அழித்தான்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

  மேற்காட்டிய இரண்டு சான்று களுமே அய்ந்திரம் அணுக்கோட்பாடு என்பதையும், அவ் அய்ந்திரம் தருக்க முறையில் வாதமுறையை விளக்கிய பேச்சுக்கலையின் இலக்கணம் என்ப தையும் வற்புறுத்தக் காணலாம். எனவே பனம்பாரனார் ‘அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனக் குறிப்பது தொல் காப்பியர் பின்பற்றிய மெய்யியலின் அடிப்படை என்பதும், அம்மெய்யியல் தருக்க முறையினை உள்ளடக்கியது என்பதும் தெளிவு. இதனை,

  நிலம்நீர் தீவளி விசும்போ டைந்தும்

  கலந்த மயக்க முலக மாதலின்

  எனும் நூற்பா உறுதிசெய்யும். தொல் காப்பியர் பொருளதிகாரத்தின் இறுதியில் விளக்கும் பத்து அழகு, காட்சி, ஐயம், தெளிவு முதலான தருக்கவியல் இலக்கணங்கள், 32 தந்திர உத்திகள் ஆகிய செய்திகள் யாவும் அக்கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளாகும்.

  தொல்காப்பியம் இலக்கண நூலாதலால் அய்ந்திரத்தையும் இலக் கண நூலாகவே கருதிவிட்டனர் அறிஞர் கள். அப்படிக் கருதிய அறிஞர்கள்கூட அய்ந்திரத்தைச் சமற்கிருத நூலாகக் கருதவில்லை. பெளத்த வரலாற்றாசிரி யராகிய தாரநாதர், ”இந்நூல் மிகவும் பழ மையானது; தென்னகத்தில் வழங்கியது; கடவுள் உலகைச் சார்ந்தது; ஆரிய தேசத்தது அன்று” என உறுதி செய்வார்.

  தாரநாதரைப் போலவே இருக்கு வேதத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்த எம். சுந்தர்ராஜ், அய்ந் திரத்தைத் தமிழ் இலக்கண நூலாகக் கருதினாலும், அது இருக்கு வேதத்திற்கு முந்தையது என்று உறுதிசெய்கிறார் (ஓங்ம்ள் எழ்ர்ம் டழ்ங்லிஐண்ள்ற்ர்ழ்ண்c டஹள்ற்). எனவே அய்ந்திரம் என்பது இலக்கண நூலன்று. அது அணுவியலும் தருக்கவியலும் சார்ந்த அறிவுமரபுக்குரியது என்பது தெளிவாகும். ஒருவேளை அதை இலக் கண நூலாகக் கருதினாலும் கூட அது இருக்குவேதத்துக்கு முந்தைய தமிழ் மரபுக்குரியது என்பதே மாற்று உண்மை. இருக்குவேதம் எழுதாக்கிளவியாக வாய்மொழியாகவே வழங்கப்பட்டுள்ளது. சமற்கிருதத்திற்கு இன்றைய வரிவடிவம் அமைந்ததே மிகவும் பிற்காலத்தில்தான். எனவே எழுத்துமுறையே இல்லாத ஒரு மொழியில் எழுத்துகள் பற்றிய இலக் கணம் எப்படி இருந்திருக்க முடியும்?

  மேலும் பானம்பாரனார், தொல் காப்பியரை ‘முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப் புலம் தொகுத்தவராகப்’ புகழ்கின்றார். இங்கு சொல்லப்படும் ‘முந்துநூல்’ என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும். அதனால் அய்ந்திரம் என்பதை நாம் இலக்கண நூலாகக் கருதவேண்டியது இல்லை. அப்படிக் கருதினால் பனம்பார னார் ‘கூறியது கூறல்’ எனும் குற்றம் புரிந்தவராகிவிடுவார்.

  நான்மறை

  அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர். இந்நான்மறை என்பது நச் சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வு களால் மாற்றம் பெற்றுள்ளன. இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும். சாணக்கியரின் பொருள்நூல், வேதங்கள் மூன்று மட்டுமே என்ற பொரு ளில் ”திரையீ” எனக் குறிப்பிடுகின்றது. அதனால், நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் என்ற தொடர்கூட ஆய் வுக்குரியதாகிறது. மாகறல் கார்த்திகேய னார், ‘நான்மறை என்பதற்கு மூலமறை’ எனப் பொருள்கொள்வதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்.

  மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி

  பனம்பாரனாரின் பாயிரம் அரிய கருத்துப்புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், ‘மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்’ எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில்வல்ல அதங்கோட் டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? இக் கேள்விக்கான நுட்பத்தை அறிஞர் டி.டி. கோசாம்பி விளக்கக் காணலாம். அவர் தம் நூலில்,

  ‘கி.மு. 14ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியின்போது, தென்னிந்தி யாவில் இருக்குவேதப் பாசுரங் கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப் புரையும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் இருக்குவேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன் ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது…. ஆனால் பொதுவாக இது எழுத்து வடிவத் தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட வில்லை.’

  எனக் குறிக்கின்றார். இருக்குவேதம் கி.மு. 14ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது தென்னாட்டில்தான் எனும் டி.டி. கோசாம் பியின் கூற்றைப் பனம்பாரனாரின் மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியும்?

  வேதத்தை உச்சரிக்கும் முறை

  தமிழ் எழுத்துமுறையின் சிறப்பை அறியாத ஒருவருக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை, அவை பிறக்கும் இடம் ஆகியவற்றை விரிவாக விளக்கக்கூடிய வகையிலேயே தொல்காப்பியர் எழுத்த திகாரத்தின் பிறப்பியலை அமைத் துள்ளார். அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி, அப்படி உச்சரிக்கும் முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத் துள்ளார். அவை,

  எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து

  சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்

  பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்(து)

  அகத்தெழு வளியிசை யரில்தப நாடி

  அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே – நூற்பா – 102.

  அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்

  மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே

  – நூற்பா – 103.

  என்பனவாம். இந் நூற்பாக்கள் இரண்டும் சமற்கிருத ஒலிப்புமுறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன. ‘வேதத்தின் ஒலிப் புமுறை பற்றி நான் விளக்க வரவில்லை; மாறாகப் பொருண்மை தெரிகின்ற காற்றினால் ஆகிய தமிழ் எழுத்தின் (மாத்திரையின்) அளவினைக் கூறினேன்’ என உறுதி செய்கின்றார். தொல்காப்பியத்தின் அந்நூற்பாக்களுக்கு ‘வேதத்தின் ஒலிப்புமுறை பொருள்தெரியா நிலைமை ஆகலின் அவற்றிற்கு அளவு கூறமாட்டார்கள்’ என்று உரையாசிரியர் இளம்பூரணார் தரும் விளக்கமும் எண்ணத்தகும். இதனால், அதங்கோட்டாசான் காலத்தில் வேதம் எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்துமுறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகின்றது.

  தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும் வேதக் கடவுளரின் எண்ணிக்கையும்

  வேதக் கடவுள்களின் எண் ணிக்கை 33 என்பதை இருக்குவேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற் றின் வழியாகத் தோன்றிய பிராமணங் களும் உறுதிசெய்கின்றன. அவை,

  ஆதித்தியர்கள் 12

  வசுக்கள் 8

  உருத்திரர்கள் 11

  வசத்காரர் 1

  பிரஜாபதி 1

  என்பன. 33 என்ற எண்ணிக்கை வேதநூல்களில் வரையறுக்கப்பட்ட தற்கான காரணத்தை ஆராயும் சுந்தர்ராஜ் அம் முப்பத்து மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும்

  உயிரும் உடம்புமாம் முப்பது முதலே

  சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

  எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதைத் தம்நூலில் (தண்ஞ் யங்க்ண்c நற்ன்க்ண்ங்ள் ஆக்க்ங்ய்க்ஹம்) விரிவாக விளக்கியுள்ளார். ஆதித்தியர்கள் 12 என்பது தமிழின் 12 உயிர் எழுத் துக்களே என உறுதி செய்யும் அவர், வசுக்கள் பற்றியும் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துரைக்கிறார். ‘வழு’ என்னும் தமிழ்ச்சொல்லே ‘வசு’ என ஆகியதை அறிஞர்கள் எமனோ, பர்ரோ தொகுத்த ‘திராவிட வேர்ச்சொல் அகராதி’யிலிருந்து (உங்க்.4336) எடுத்துக்காட்டி நிறுவு வார். இந்த வசுக்கள் மொழிக்கு முத

  லில் வாரா தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பதும் இந்த எட்டும் தொல் காப்பியருக்குப் பிந்திய வழக்கு என்பதும் இங்கே எண்ணத்தகும்.

  ‘க’ எனும் மெய்யெழுத்து

  இருக்குவேதக் கடவுள்களில் ஒன் றாகக் குறிக்கப்படுவது ‘க’ என்பதாகும். இக்கடவுளைப் பற்றிய வரலாறு தெரி யாமல் அறிஞர்கள் குழம்பியுள்ளனர். (இராகுல சாங்கிருத்தியாயன், ரிக்வேத கால ஆரியர்கள்) பிரஜாபதியாகக் கருதப் படும் ‘க’ என்பது தமிழ் உயிர் மெய் எழுத்தான ‘க’ வேயாகும். சங்க காலத்தில் ‘க’ என்பது ற் என எழுதப்பட்டது. இவ் வடிவத்தையே மனித உருவிலிருக்கும் ‘க’ வே என இருக்குவேதம் போற்று வதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

  இந்திரனும் வருணனும்

  இருக்குவேதத்தில் இரட்டைக் கடவுளராகக் குறிக்கப்படுபவர்கள் இந்தி ரனும் வருணனும் ஆவர். இருவருள் ளும் இந்திரனே போர்க் கடவுளாகவும், மழைக்கடவுளாகவும் போற்றப்படு கின்றான். ஏறத்தாழத் தலைமைத் தெய்வ மாக வணங்கப்படும் இந்திரன் இருக்கு வேதத்தின் இடைப்பகுதியில் அறிமுக மாகித் திடீரெனக் காணாமல் போய் விடு கிறான். இவ்வாறு இந்திரன் புறக்கணிக் கப்படுவதற்கான காரணம் பெரும்புதிராக இருப்பதாக அறிஞர் அம்பேத்கர் (அம் பேத்கர் சிந்தனைகள்-8) குறிப்பிடுவார். திடீரென்று மறைந்துவிடுவது மட்டு மின்றி அகலிகை, இந்திரன் தொடர்பின் வாயிலாக இந்திரனுடைய ஒழுக்கமும் சிதைக்கப்படுகிறது. இந்திரனுடைய புகழ் சிதைக்கப்படும் அதே நேரத்தில், வைதிக எதிர்ப்பை அடிப்படையாகவும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட சிந்தனை மரபைச் சார்ந்தனவாகவும் கருதப்படும் ஆசீவக, சைன, பெளத்த சமயங்கள் இந்திரனை அறிவுமரபின் மூல வடிவமாகப் போற்றுகின்றன.

  தொல்காப்பியரும் இந்திரனை யும், வருணனையும் மருத, நெய்தல் திணைகளின் கடவுள்களாகப் போற்று வார். தொல்காப்பியர் குறிப்பிடும் அதே பொருளிலேயே அதாவது மழைத் தெய்வமாக இந்திரனும் கடல் தெய் வமாக வருணனும் குறிக்கப்படுவதைப் போலவே இருக்குவேதமும் அவர் களைப் பற்றிக் குறித்துள்ளது. இவை எல்லாவற்றையும்விட இருக்குவேதம் இந்திரனையும் வருணனையும் அசுரர் களாகவே (இருக்குவேதம்: முதல் மண்டலம் 174-1, 7-36:2) குறித்துள்ள தும் எண்ணத்தகும். இருக்குவேதத்தில் குறிக்கப்படும் அசுரர்கள் வைதிக எதிர்ப்பாளர்கள் என்பதை அறிஞர்கள் (தருமானந்த கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா) உறுதி செய் துள்ளனர். எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ் மக்களின் நிலத்தெய் வங்களான இந்திரனையும் வருண னையும் இருக்கு வேதம் அப்படியே தழுவி அதே பொருளில் அமைத்துக் கொண்டது என்பது உறுதியாகிறது. கடல் வழிப்பயணத்தை அறியாத இருக்குவேதப் புலவர்கள் வருணனைக் கடற்பயண வழிகாட்டியாகக் குறிப் பதைப் பாவாணர் சுட்டிக்காட்டி விளக்குவதும் இங்கே எண்ணத்தகும்.

  ஆறுபருவங்கள்

  தமிழ்மரபில் பன்னிரண்டு மாதங்கள் கொண்டது ஓராண்டாகும். இதனை இரண்டு இரண்டு மாதங்கள் கொண்ட ஆறு பருவங்களாக வகைப் படுத்துவார் தொல்காப்பியர். இருக்கு வேதத்தில் பதின்மூன்று மாதங்கள் கொண்டு ஆண்டுமுறை ஒன்றும் பன்னிரண்டு மாதங்கள்கொண்ட ஆண்டுமுறை ஒன்றுமாக இரண்டு வகையான ஆண்டுமுறைகள் குறிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பருவங்களையும் கொண்ட ஆண்டுமுறை தமிழர்களிட மிருந்து இருக்குவேதம் கடன் கொண்டது என்பதை இருக்குவேத ஆராய்ச்சியாளராகிய கிரிஃபித் (ஏண்ழ்ண்ச்ச்ண்ற்ட்) உறுதி செய்துள்ளார். இருக்குவேதத்தில் குறிக்கப்படும் விஷ்ணு, பூசன் ஆகிய புகழ்மிக்கக் கடவுள்களின் பெயர்கள் யாவும் தமிழ் வேர்ச்சொல்லின் அடி யாகப் பிறந்தவை என்பதைச் சொல்லியல் அறிஞர்கள் எமனோவும் பர்ரோ வும் விளக்கியுள்ளனர் (உஊஉ) இருக்கு. வேதத்தில் பொருள்தெரியாத பல சொற்களுக்கும் தமிழே மூலமாக இருப்பதை அக்கினிகோத்திரம் தாத்தாச்சாரியர் (ஒய்ற்ழ்ர்க்ன்cற்ண்ர்ய் ற்ர் தண்ஞ் யங்க்ண்c ள்ற்ன்க்ண்ங்ள்) தெளிவுபடுத்தியுள்ளார். இருக்கு வேதம் எனும் பெயரில் உள்ள முதல் எழுத்தான ‘ரி’ தமிழின் சிறப்பெழுத்துக் களில் ஒன்றான (ற) ‘றி’ எனும் எழுத் தின் திரிபே என்பார் எம். சுந்தர்ராஜ்.

  இவ்வாறு, பல்வேறு சான்று களைக் கொண்டு காணும்போது இருக்குவேதம் தமிழியற் சூழலிலேயே தொகுக்கப்பட்டது என்பது தெளி வாகும். இக்கருத்தினை,

  ‘தமிழுக்கும் இருக்குவேதத் திற்கும் இடையே காணப்படும் நெருக்கத்திற்கான காரணம் ஏதோ தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை என்று யாரும் கருதி விடக் கூடாது. தமிழ்ப் பண் பாட்டுக் கூறுகள்தாம் மாறு வேடம் அணிந்தோ, அல்லது முகமூடி போட்டுக் கொண்டோ இருக்குவேதத்தில் உள்ளன என்பதற்கு நாம் வெளிப்படை யான சான்றுகளைக் கொண் டுள்ளோம்…

  சமற்கிருத மொழியும் அதன் இலக் கிய மரபுகளும் தமிழியத்தையே அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக ஒரு கலப்பு மொழி (ஙண்ஷ்ங்க் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) தோற்றம் கொண்டது. அதைத்தான் நாம் இப்போது சமற்கிருதம் என்று அழைக்கின்றோம். இந்த மொழி யில் அமைந்த இலக்கியங்களுக்கு உரிய உள்ளடக்கத்தை வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் தமிழர் களே’, என வரையறை செய்வார் எம். சுந்தர்ராஜ்.

  இருக்கு வேதத்தில் தமிழியக் கூறுகள் மிகுதியாக இடம் பெற்றமைக் கான காரணம் அது தென்னாட்டில் தொகுக்கப்பட்டது மட்டுமல்ல; தொல் காப்பியர் விளக்கிக்காட்டிய தமிழ்எழுத்து முறையில் அது தொகுக்கப்பட்டதே ஆகும். ஓர் இனத்தின் எழுத்து முறை யைக் கடன்பெறும் இனம், எழுத்தை மட்டுமல்லாது அவ் எழுத்துமுறைக்குரிய பண்பாட்டுக் கூறுகளையும் கடன்பெறு வது இயல்பு. ஜப்பானியப் பண்பாட்டில் தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் மிகுதியாக இருப்பதற்கான காரணமும், ஜப்பானிய எழுத்துமுறை, தமிழ் எழுத்துமுறையைப் பின்பற்றி அமைந்ததால்தான் என்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்கக வேண்டும்.

  தொல்காப்பியத்தின் பழமை

  இருக்கு வேதம் முதன்முதலாகத் தென்னாட்டில் எழுத்து வடிவில் தொகுக் கப்பட்டு குறிப்புரைகளும் எழுதப்பட்டன எனவும், அக்காலம் கி.மு. 14 ஆம் நூற் றாண்டு எனவும் டி.டி. கோசாம்பி கூறுவ தாலும், இருக்குவேதம், தொல்காப்பியர் கூறும் தமிழ் எழுத்திலக்கணம் முதலான இலக்கணக் கூறுகளைத் தழுவி அமைந் துள்ளதாலும், இருக்குவேதம் தொகுக்கப் பட, அதாவது தொல்காப்பியர் விளக்கிய எழுத்துமுறையை வேதமொழிக்குரிய வகையில் வடிவமைத்து, அதனடிப்படை யில் வேதத்தை எழுத்துவடிவில் கொண்டுவரக் கொஞ்சம் கால இடை வெளி தேவைப்பட்டிருக்கும். எனவே, தொல்காப்பியம் இருக்கு வேதத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு.

  தொல்காப்பியர் குறிப்பிடும் வழி பாட்டு முறைகளான கொடிநிலை, கந்தழி, வள்ளி எனும் மூன்றும் தந்திர வழி பாட்டுக்குரியன என்பதையும், அவை முறையே சிந்துவெளி அகழாய்வில் கண்டெடுக்கப் பெற்ற லதாசாதனம் (லதா – கொடி, சாதனம் – நிலை) இலிங்கம், பகயாகம் எனும் சகம்பரி (ஆறு வகையான செல்வங்களை வழங்கும் வள்ளன்மை மிக்க தந்திரச் சடங்கு) எனவும் அடையாளம் காணப் பட்டுள்ளன. சிந்துவெளி எழுத்துமுறை பற்றி ஆராய்ந்த உருசிய நாட்டு அறிஞர்கள், அவ்எழுத்துமுறை தொல்காப்பியர் காட்டும் இலக்கண அமைதியோடு மட்டுமே பொருந்துகிறது என்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்தனர். (பட்ங் ஐண்ய்க்ன்

  15லி4லி80).

  கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பிரா மணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங் கள் முதலான வைதிக இலக்கியங்கள் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக ஓர் அறிவுப் புரட்சி தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடுமுழுவதும் கொண்டு சென்றது. அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டின் நிறுவனராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய அய்ந்திர மரபிலிருந்து கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ் எண்ணியம் கி.மு. ஆறாம் நூற்றாண் டில் ஆசீவகத்தோடு இணைந்தது. அதனால் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலோ, அல்லது அதற்குப் பின்போ தொல் காப்பியம் இயற்றப்பட்டிருக்குமானால் எண்ணியத்தின் தாக்கம் அல்லது ஆசீவகத்தின் தாக்கம் அதில் இருந்தாக வேண்டும். ஆனால், அப்படி ஒரு சுவடே தொல்காப்பியத்தில் இல்லை.

  எனவே மெய்யியல், பண்பாட்டி யல், தருக்கவியல், எழுத்தியல், தொல்லியல் முதலான அனைத்துத் துறைகளின் அடிப்படையில் ஆராய்கின்றபோது, இருக்குவேதத்திற்கு மட்டுமல்ல. உலகில் எழுதப்பெற்ற நூல்கள் அனைத்திற்கும் தொல்காப்பியமே முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

  (மேலும் கூடுதல் செய்திகளுக்கு கட்டுரையாசிரியரின் ‘தொல்காப்பியம் – திருக்குறள் காலமும் கருத்தும்’ எனும் நூலினைக் காண வேண்டுகிறோம்)

 47. மிக அற்புதமான கட்டுரை இது. இக்கட்டுரைக்கு எதிர்ப்புக் கடிதங்கள் தாம் வந்திருக்கின்றனவே தவிர மறுப்புக் கடிதங்கள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. கட்டுரையைப் படித்தறியும் பொறுமை கூட இல்லாத பலர் தங்கள் எதிர்ப்பு எண்ணங்களைப் பதிந்து இருக்கிறார்கள். யாது நேரினும் கவலை இன்றி உயரிய சேவையைச் செய்க.

 48. அற்புதமான இந்தக் கட்டுரையை எதிர்த்து வந்திருக்கும் எந்தக் கடிதத்திலும் உப்புச் சப்பே இல்லை. பணிகள் தொடரட்டும்.

 49. செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :

  1. தொன்மை
  2. தனித்தன்மை
  3. பொதுமைப் பண்பு
  4. நடுவு நிலைமை
  5. தாய்மைப் பண்பு
  6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
  7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
  8. இலக்கிய வளம்
  9. உயர் சிந்தனை
  10. கலை இலக்கியத் தனித்தன்மை
  11. மொழிக் கோட்பாடு

  1. தொன்மை

  செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

  2. தனித் தன்மை

  பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

  3. பொதுமைப் பண்பு

  உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

  4. நடு நிலைமை

  தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

  5. தாய்மைத் தன்மை

  தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

  6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

  தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

  7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

  உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

  8. இலக்கிய வளம்

  தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

  எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

  தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.

  தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது. இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

  தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

  9. உயர் சிந்தனை

  இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

  10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

  தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

  ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.”நாராய் நாராய் செங்கால் நாராய்பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னபவளக் கூர்வாய் செங்கால் நாராய்நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடிவட திசைக்கு ஏகு வீராயின்எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கிநனைசுவர்க் கூறைகளை குரற் பல்லிபாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டுஎங்கோன் மாறன் வழுதி கூடலில்ஆடையின்றி வாடையின் மெலிந்துகையது கொண்டு மெய்யது பொத்திக்காலது கொண்டு மேலே தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்ஏழையாளனைக் கண்டனும் எனுமே” என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

  தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

  ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

  11. மொழிக்கோட்பாடு

  உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

  மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

  ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன. எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

  அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

  இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.

  நன்றி: கணியத்தமிழ்

  இக்கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புவோர் கீழே சொடுக்கி வாசிக்கலாம்.

  https://www.tamilnation.org/literature/shanmugalingam.htm

 50. திரு மெய்யப்பன் அவர்களின் கட்டுரையைப் படித்ததனால், ஒரு தமிழ் மகன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆனால், இந்த மறுமொழியை எழுதுமளவு இதன் மூலக் கட்டுரை தமிழின்மீது எந்தக் காழ்ப்புணர்வையும் காட்டியதாகவோ அன்றி சமஸ்கிருதம் தமிழினும் மேலானது என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டதாகவோ இல்லை. மாறாக, அக்கட்டுரை சமஸ்கிருதம் அறிவுக்குப் புறம்பான விஷயங்களைப் பரப்பும் மொழி என்பது போன்ற பொய்ப் பிரச்சாரங்களுக்கே மறுதலிப்பைத் தந்துள்ளது. சமஸ்கிருதம் அல்லது ஹிந்து சமயம் பற்றிய எந்தச் செய்தி வந்தாலும் உடனே தமிழ் கொண்டு அந்த நன்மைகளை ஏன் மூட முயலவேண்டும்? 11 தகுதிப்பாடுகள் தமிழுக்குப் பொருந்துவதாகக் கூறுவதை ஏற்கும் நம்மால், சமஸ்கிருதத்துக்கு 7 தகுதிபபாடுகள்தான் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சமஸ்கிருத மொழியறிவும் தமிழ் மொழியறிவும் ஒருங்கே பெற்ற அறிஞர் இம்மறுமொழியைப் படிக்க நேர்ந்தால், விளக்கம் தரும்படி வேண்டுகிறேன். இறை அறிவு, இறை உணர்வு ஆகியவற்றை மொழி மோதல்களின் களமாக்க வேண்டாமே !

 51. சுப்பு அவர்களின் ஆய்வும் அதனை தொடர்ந்து அரவிந்தன் நீலகண்டன் மற்றும் வள்ளுவன் ஆகியோரின் கருத்து மடல்களும் மிக அருமை. கால ஆராய்ச்சியை விட கருத்துக்களே மிக முக்கியம். சுப்பு அவர்கள் எட்டு கேள்விகளை கேட்டு அவற்றுக்கு மிக அற்புதமாக விடை தந்துள்ளார்.

  1. சமஸ்கிருதம் பகுத்தறிவுக்கு விரோதமானதா ?
  2. அது வடநாட்டு மொழியா ?
  3. அது ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் உதவக்கூடியதா ?
  4. தமிழர் வாழ்வில் அதன் பங்கு என்ன ?
  5. அது ஒரு ஜாதியினரின் மொழியா ?
  6. அதனால் தமிழுக்கு ஆபத்தா ?
  7. தமிழ் இலக்கிய மரபில் சமஸ்கிருதத்திற்கு இடம் உண்டா ?
  8. சம்ஸ்கிருத கல்வி தேவையா ?

  இவ்வளவு கேள்விகளுக்கும் மிக அற்புதமாக விடை அளித்த சுப்புவுக்கு நன்றிகளும், அன்னாரது பணி மேலும் மேலும் தொடரட்டும் சிறக்கட்டும் அவரது பணியை மேலும் தொடர இறைஅருள் அனைத்து விதங்களிலும் அவருக்கு துணை நிற்கட்டும் என்று வேண்டி முருகப்பெருமானை வணங்குகிறேன்.

  வெள்ளையர்கள் தங்கள் வியாபார வளர்ச்சிக்காக பல நாடுகளையும் பிடிக்க திட்டமிட்டு அந்த அந்த நாடுகளின் மொழி கலாச்சாரம் இவற்றை அழித்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்டு தங்கள் மொழியை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதற்காக பல்வகையான புளுகுகளை சரித்திரத்தில் புகுத்தினார்கள். அவை ஒன்றொன்றாக இப்போது வெளுத்து வருகின்றன. இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய உதாரணங்களை தேடிப்பிடிக்க வேண்டிய தேவையே இல்லை. சமீபத்திய உதாரணங்களே போதும். நம் காலத்திலேயே 1990 ஆம் ஆண்டுகளின் பத்தாண்டு தொடக்கத்தில் சென்னையிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஐரோப்பாவில் முன்பு யுகோஸ்லாவியா என்று ஒரு நாடு இருந்தது. 1987 ஆம் aandu varudaththukku

 52. அன்புள்ள ராதாகிருஷ்ணன்,

  திரு சுப்பு அவர்களின் கட்டுரையும் அதன் மீதான அரவிந்தன் நீலகண்டன் மற்றும் வள்ளுவன் ஆகியோரின் கருத்துப்பகிர்வுகளும் மிக சுவையாக உள்ளன.அந்தக்காலத்தில் சமஸ்கிருத அறிவும் தமிழறிவும் ஒருங்கே அமையப்பெற்ற பல்துறை அறிஞர்கள் ஏராளம் இருந்தனர். ஆனால் அறுபதுகளில் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் இயக்கங்களின் தவறான புரிந்துகொள்ளல் மற்றும் மக்களை தவறாக வழிநடத்தி செல்லல் காரணமாக தமிழர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

  பகை மற்றும் விரோத உணர்வுடன் எந்த செயலை செய்தாலும் அது செய்தோருக்கே தீங்கை விளைவிக்கும். எனவே தான் தமிழ் ” தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்று பறை சாற்றுகிறது.சொல்லொன்றும் செயல் ஒன்றுமாக இருக்கும் இந்த திருக்கூட்டத்தார் இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அதனை ஒரு விருப்ப பாடமாக கூட யாரும் படிக்க முடியாதபடி செய்து விட்டனர். இதன் விளைவாக சுமார் அறுபது கோடி மக்களுடன் சுலபமாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை தமிழன் இந்த மற்றும் சென்ற நூற்றாண்டின் பகுதிக்காலங்களில் நி்ச்சயமாக இழந்து விட்டான்.

  இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய தாய் மொழியை தவிர பிற மொழிகளில் ஒரு ஐந்து மொழிகளிலாவது சிறிது பரிச்சயம் இருப்பது நன்று. இதற்காக நாம் எல்லா மொழிகளையும் கற்பது என்பது இயலாததும் தேவையற்றதும் ஆகும். நாம் செய்ய வேண்டியது யாதெனில் ஐந்து மொழிகளில் அன்றாட வாழ்வில் அடிக்கடி உபயோகிக்கப்படும் இருநூறு வாக்கியங்களை கற்றால் போதும். உலகில் பெரும்பகுதி மக்களால் பேசப்படும் மொழிகளை அம்மொழி பேசுவோரின் எண்ணிக்கை அடிப்படையில் இவ்வாறு இறங்கு வரிசைப்படுத்தலாம். கோடிகளில்

  மண்டாரின் ( மற்றும் அதன் கிளை மற்றும் தொடர்பு மொழியான காண்டநீஸ் உட்பட) 130
  இந்தி (மற்றும் அதன் கிளை மொழிகள் உட்பட) 70
  ஸ்பானிஷ் (மற்றும் அதன் கிளை மொழிகள் உட்பட) 60
  ஆங்கிலம் 27
  அரபி (மற்றும் அதன் கிளைகள் ) 20
  வங்காளம் ( பெங்காலி) 18

  இந்த ஆறு மொழிகளில் தினசரி அடிக்கடி பயன்படும் இருநூறு வாக்கியங்களை பேசமட்டுமாவது
  நம்முடைய எதிகால இளைஞர்களுக்கு நாம் பள்ளிக்கூடத்திலேயே கற்றுக்கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் நம் இனமே பிழைக்க வழியின்றி காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே இனிமேலாவது இந்த விஷயத்தில் நாம் உஷாராக இல்லாவிடில் பிறகு வருத்தப்பட்டு புண்ணியம் இல்லை.

  திரு சுப்பு அவர்கள் சமஸ்கிருதத்தைப்பற்றி அது பகுத்தறிவுக்கு விரோதமானதல்ல, வடநாட்டுக்கு மட்டும் உள்ள மொழியல்ல, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் உதவும் மொழியல்ல, தமிழர் வாழ்வில் பெரும் பங்கு வகித்த மொழி, ஒரு சாதிக்கு மட்டும் உரிய மொழியல்ல, தமிழுக்கு அதனால் மேலும் வளர்ச்சியே, ஆபத்து இல்லை, தமிழ் இலக்கிய மரபில் சமஸ்கிருதத்திற்கு ஏராளமான இடம் உண்டு, சமஸ்கிருத கல்வி பயன் தரக்கூடியது போன்ற எட்டு செய்திகளை மிக தெளிவாக
  விளக்கி உள்ளார்.
  வேத மொழி என்பது சமஸ்கிருதம் கிடையாது. அது சந்தஸ் எனப்படும். இதனை ஆதிகால சமஸ்கிருதம் என்பர். அதன் பின்னர் பிராகிருதம், பாலி என்று பல மொழிகள் இருந்தன. பிராகிருதம் செம்மைப்படுத்தப்பட்டு தற்போதய சமஸ்கிருதம் வகைப்படுத்தப்பட்டது. இதே போன்ற நிலை எல்லா மொழிகளிலும் உண்டு. எடுத்துக்காட்டாக நம் தமிழில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்திய கல்வெட்டுக்களில் உள்ள தமிழை நம்மால் படிக்க முடியாது. ஏனெனில் வரி வடிவம் என்பது ஒவ்வொரு மொழியிலும் காலம் தோறும் மாறுவதாகும். எனவே சமஸ்கிருதம் தமிழுக்கு பிந்தியது என்று சொல்லிக்கொள்வதால் தமிழுக்கு ஒரு புண்ணியமும் இல்லை. இதே நிலை தான் சமஸ்கிருதத்திற்கும் உள்ளது. திராவிட பகுதிகள் என்று நாம் சொல்லும் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளில் புழங்கும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளுமே சம்ஸ்கிருத இணைப்பு உள்ளவையே. அந்த மாநிலங்களில் தாய் மொழியுடன் ஆங்கிலம், மற்றும் இந்தியை கட்டாயமாக படித்தே தீரவேண்டும். நமக்கு அந்த நிலை வேண்டாம், அரசு பள்ளிகளில் விருப்ப பாடமாகவாவது ஒரு சில மாற்று மொழிகளை கற்க வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தி தந்தால் எதிர் காலத்திற்கு நல்லது. கால ஆராய்ச்சியினால் ஒரு பலனும் இல்லை. ஏனெனில் இதற்கு தேவையான ஆவணங்கள் பல போதிய பராமரிப்பின்றி அழிந்துவிட்டன. எனவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் எதிர்கால உலகம் ஒரு சிறு கிராமம் போல நெருங்கிவிடும். அப்போது நம் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவித்தான் வாழ இயலும். எனவே மனித இனத்தின் பிற மொழி பேசுவோருடன் தகவல் தொடர்பு நல்ல முறையில் கொள்ள நாம் மேலே சொல்லிய வகையில் செயல் படவேண்டும்.

 53. எனது முந்திய கடிதத்தில் பாதி டைப் செய்து கொண்டு இருக்கும் போது ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யும் கீ இரண்டும் சரிவர வேலை செய்யவில்லை, எனவே வேறு டாகுமென்ட் மூலம் டைப் செய்து இங்கு பேஸ்ட் செய்கிறேன்.

  தொடர்ச்சி:-

  1986 ஆம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் உள்ள ரஷ்ய நாட்டு அணு உலை கசிவினால் பல பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர் சோவியத் யூனியன் சின்னாபின்னமாக சிதறிப்போய் சுமார் பதினைந்து நாடுகளாக பிரிந்து போய்விட்டது. அதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் யுகோஸ்லாவியா என்று ஒரு கம்யுனிஸ்ட் நாடு இருந்தது. சோவியத் யூனியன் சிதறிய பிறகு, யுகோஸ்லாவிய நாடும் ஏழு அல்லது எட்டு துண்டுகளாக சிதறிப்போனது. மேலும் சிதற தயாராக உள்ளது. நமக்கு இதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் , ஒருங்கிணைந்த நாடாக இருந்தபோது அங்கு ஒரே சரித்திரப்புத்தகம் இருந்தது. இப்போது அதிலிருந்து பிரிந்த ஏழு அல்லது எட்டு நாடுகளும் முற்றிலும் மாறுபட்ட சரித்திரப்புத்தகங்களை தங்கள் மாணவர்களுக்காக வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டின் சரித்திரப்புத்தகமும் மற்ற ஏழு நாடுகளின் வரலாற்று புத்தகங்களுடன் ஏராளமான முரண்பாடுகளை கொண்டுள்ளன. இது பற்றிய செய்தி கட்டுரையை சென்னையிலிருந்து வெளிவரும் தி ஹிந்து தினசரி வெளியிட்டிருந்தது. எனவே சரித்திரம் என்பது அவ்வப்போது அந்த நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் ஒன்று என்பதே.

  எனவே சரித்திரத்தில் உண்மையும் சிறிது கலந்திருக்கலாம். ஆனால் சரித்திரம் என்பது முற்றிலும் உண்மை அல்ல. பகுதி உண்மை இருக்கலாம். ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் நாட்டில் பள்ளி பாட புத்தகங்களில் ஒரு கட்சி ஆளும் பொழுது அந்த கட்சி முதல்வரை பற்றி புகழ்ந்து ஒரு பாடம் இருக்கும் அதில் அந்த முதல் அமைச்சரால் தான் தமிழே இன்னும் உயிர் வாழ்வதாக எழுதியிருப்பார்கள். அந்த ஆட்சி மாறி வேறு ஒரு ஆட்சி வந்தவுடன் புதிய முதல் வரை பற்றி புதியதாக ஒரு பாடம் எழுதி சேர்த்துவிட்டு பழைய முதல்வரை பற்றிய பாடத்தை நீக்கி விடுவார்கள். புதிய முதல் வரை புகழ்ந்து எழுதும் பொழுது ஒரு படி மேலே போய் தமிழ் இவரால் தான் உருவாக்கப்பட்டது என்றுகூட எழுத தயங்க மாட்டார்கள். எனவே சரித்திரத்தின் லட்சணம் இவ்வளவுதான் என்பதை புரிந்துகொண்டு பொய் வரலாறுகளை குப்பை கூடையில் போடுவோமாக.

 54. உலகில் எல்லா மொழிகளும் மனித இனம் தன் எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக உருவானவையே ஆகும். எனவே பண்பட்ட மொழி என்று எதுவும் இல்லை. ஆரம்பத்தில் இலக்கணம், இலக்கியம், இசை, நாடகம், என்று எதுவும் கிடையாது. மனித இனத்தின் சிந்தனைத்திறன் கூட கூட பின்னரே வளர்ச்சி ஏற்பட்டது. எனவே என் மொழியே மற்ற மொழிகளை விட உயர்ந்தது என்று சொல்லாமல் என் மொழியும் உயர்ந்தது என்று சொல்வதே நமக்கு நல்லது. பிற மாநில மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த பிற மொழி பேசுபவர்களிடம் விவாதிக்கும் சமயம் நமக்கு சில உண்மைகள் தெரியவருகின்றன. ஒரு நண்பர் சமீபத்திய செம்மொழி அறிவிப்பை குறிப்பிட்டார். தமிழுக்கு செம்மொழி பட்டம் கொடுத்தவுடன் உடனேயே தெலுங்கு, கன்னடம் என்று செம்மொழி பட்டியல் தொடர ஆரம்பித்து விட்டது. இதில் என்ன கூத்து என்றால் சமஸ்கிருதம் செம்மொழி அந்தஸ்து பட்டியலில் இருப்பதாகவும் அதே போன்று தமிழுக்கும் செம்மொழி நிலை அளிக்கப்படவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூக்குரல் இட்டவுடன் மத்திய அரசு தமிழை செம்மொழி ஆக்கியது. அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னரே சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி நிலை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது ஒரு நகைச்சுவை அல்லவா?

  மொழியை பேசுகிற மக்கள் இல்லாமல் மொழிமட்டும் இருக்க முடியாது. என் மொழி மட்டும் உயர்ந்தது என்று சொன்னால் மற்ற மொழி பேசுகிறவர்கள் நம்மை வெறுக்க ஆரம்பிக்கின்றனர். நமக்கு எதிரிகள் தான் உருவாகுவர். என் மொழி உயர்ந்தது என்றோ அல்லது என்மொழியும் உயர்ந்தது என்றோ சொல்லுவதே நல்லது. பிறரை தாழ்த்தி பேசுவதன் மூலம் நமக்கு ஒரு லாபமும் இல்லை மாறாக நமக்கு தேவை இல்லாத சிரமங்கள் தான் ஏற்படும். இதை மனதில் கொண்டு நாம் செயல்படவேண்டும்.

 55. Let language and religion be not made instruments to divide the people. Let us realise that all these are creations of God (the various names by which He is referred to, are also His creations). Let us see the beauty of every creation of God. There is beauty in every language – be it one’s mothertongue or any other language. I congratulate Mr. S. Balachandran for his letters putting certain things in perspective.

 56. கட்டுரை சம்ஸ்கிருதம் மொழி வளர்ப்பதற்கு வழிகள் ஏதும் கூறவில்லை.
  தமிழ்நாட்டில் இன்று சம்ஸ்கிருதம் என்பது பரீட்சைகளில் மதிப்பெண்கள் வாங்கவும் ஸ்லோகங்கள் சொல்லவும் மட்டுமே (அர்த்தம் புரியாமல், சரியான உச்சரிப்பு இல்லாமல்) பயன்படுகின்றது.

  இன்றைய பெற்றோர்கள் (நான் உட்பட) தங்கள் குழந்தைகளை முழு நேர சமஸ்கிருதம் பயிலுவதற்கு அனுப்ப தயாராக இல்லை.

  சமஸ்கிருதம் மீது வெறுப்பு கூடாது என்பது ஒத்துக்கொள்ள வேண்டியது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில், இன்றைய சூழலில், இந்த மொழியை படிக்கவோ, வளர்க்கவோ வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 57. என்ன கொடும இது , இதே கட்டுரையை சமஸ்கிருதத்தில் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், அனைவர்க்கும் புரிந்திருக்கும் ,

 58. தமிழை கன்னடமாக்கியது
  தமிழை தெலுங்குவாக்கியது
  தமிழை மலையளமாக்கியது
  தமிழை துளுவாக்கியது
  தமிழை மநிபிரலவாம்க்கியது
  பிரகிருதம் அழிக்கப் பட்டது
  பாலி அழிக்கப் பட்டது
  இது தான் சமஸ்கிருதத்தின் சாதனை
  எஞ்சிய தமிழை அருள் கூர்ந்து வாழ விடுங்கள்

 59. தென்னாட்டினர் தான் சமஸ்கிருதம் வளர்த்தனர் என்பது உண்மை
  அவ்வளவும் தமிழ் நூல்களின் மொழிமாற்றம்

 60. Dear all,
  There has always been misconception about Tamil and Sanskrit.. I have been reading lot of links and blogs and books.. I could not come to any conclusions about the antiquity of these languages.. I hope the following links could throw a minute light .. I feel the illusion of Aryan and Dravidan should become an illusion.. Let us unite with the language which is alive now.. Why fight over the languages which cannot unite the country ever.. India has so many living languages.. Let us enrich them and let us learn our respective mother tongues and achieve all success through our respective languages.. Why give a preferential treatment to a language which is not known to us, but which said to be hiding in all indian languages.. Imposing another new language is a burden.. If anyone wants to learn lot of languages, let him learn.. To us English itself is a burden.. But we have adopted it as lingua franca of the world..

  https://www.mayyam.com/talk/showthread.php?1798-Tamil-roots-of-sanskrit-words

  https://groups.yahoo.com/group/akandabaratam/message/49927

  https://www.mayyam.com/talk/showthread.php?409-Is-tamil-derived-from-Sanskrit

 61. இவ்வளவு ஏன்? கம்பர் சமஸ்க்ருதம் அறிந்ததாலேயே வால்மீகி ராமாயணத்தைக் கம்ப ராமாயணமாகச் செய்தார்? இதில் எது சிறந்தது என்று அடித்துக் கொள்வதைப் போலிருக்கிறது சில பின்னூட்டங்கள்.

  இதில் சுரேஷ் அவர்கள் போல சிலர் காமெடிக்கும் குறைவில்லை (suresh on November 8, 2011 at 4:02 pm) 🙂

  தமிழை யாராலும் அழிக்க முடியாது, வேண்டுமானால் தமிழ் படுத்துகிறேன் என்று படுத்திக்கொண்டிருப்போரால் அது அடைந்திருக்கும் க்ஷீணத்தை ஆராயலாம். அவர்களைத் தவிர யாராலும் தமிழை எதுவும் செய்ய முடியாது. சமஸ்க்ருதமும் அவ்வாறே. யாரோ சொல்கிறார், சமஸ்க்ருதம் நன்றாக இருக்கிறதென்றால் சமஸ்க்ருத பாரதி எதற்கு என்று? தமிழும் நன்றாகத் தானே இருக்கிறது? சங்கங்களை, உலகத் தமிழ் மாநாட்டையெல்லாம் கலைத்து விடலாமா? ஊழலாவது மிஞ்சும். சமஸ்க்ருத பாரதி அம்மொழியைப் பரவச் செய்வதற்காகவே, எப்படி தக்ஷிண பாரத ஹிந்தி ப்ரசார சபா உண்டோ அப்படி.

 62. சமஸ்க்ருதத்தை ஆரிய மொழி என்றும், தமிழை திராவிட மொழி என்றும் ஒரு கருத்தை வைத்துக்கொண்டு இல்லாத ஆரிய, திராவிட இனங்களை போர் புரிய வைத்து தமிழுக்கும் சமஸ்க்ருதத்துக்கும் சண்டை மூட்டி விடுபவர்களிடம் எது சொன்னாலும் வேலைக்காகாது. சமஸ்க்ருதத்திலுள்ள பல வார்த்தைகள் தமிழிலிருந்து எடுக்கப்பட்டவை என்று சிலர் மார்தட்டியுள்ளனர். இதிலிருந்து அது எடுத்துக்கொண்டதா, அதிலிருது இது எடுத்துக்கொண்டத என்பது முடியாத ஒரு விவாதம். எப்படி தமிழிலிருந்து சமஸ்க்ருதம் “திருடிக்கொண்டது” என்று மேலே சில மொழிவெறியர்கள் கூரியிருக்கிரார்களோ, அதையே எதிர்வினையாக, அதாவது சமஸ்க்ருதத்திலிருந்து தமிழ் எடுத்துக்கொண்டது என்றும் வாதாடலாம். அப்படிச்சொன்னால் உடனே ‘ஆரியகுஞ்சு, சூரியகுஞ்சு’ என்று பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். அனால், அப்பேற்பட்ட வாதம் செய்ய எனக்கு விருப்பமில்லை:- காரணம் எனக்கு எந்த மொழி மீதும் காழ்புணர்ச்சி இல்லை. தமிழை உயர்த்த இன்னொரு பழமை வாய்ந்த ஒரு மொழியை எந்த அளவுக்கு தூற்றுகிறார்கள்:- அதுவும் நம்மை ஆள வெள்ளையன் கூறிய பொய்யை வைத்துக்கொண்டு!

  திருமூலர், மாணிக்கவாசகர், வள்ளலார் போன்ற தமிழ் துறவிகள் தங்களது பாடல்களில் இறைவனை ‘ஆரியன்’ என்று பாடியது இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ!

  ‘தனித்தமிழ்’ பேசி “தமிழர்களை காட்டுமிராண்டிகள், தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்று பேசியவர்கள் கூறியதே வேதவாக்கு என்று இருப்பவர்களிடம் என்ன சொல்லமுடியும்??

  //தென்னாட்டினர் தான் சமஸ்கிருதம் வளர்த்தனர் என்பது உண்மை
  அவ்வளவும் தமிழ் நூல்களின் மொழிமாற்றம்//

  அப்படியா? எதற்க்கெடுத்தாலும் “அதாரம் உண்டா?” என்று கேட்கிறீர்களே, இதற்க்கு உங்களால் ஆதாரம் தரமுடியுமா? எந்த சமஸ்க்ருத நூல் எந்தெந்த தமிழ் நூல்களிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது, எப்போது செய்யப்பட்டது, யார் செய்தனர் என்று கூற முடியுமா??? பீடா போட்டு வாயை மெல்வது போல, சகட்டுமேனிக்கு பொய்களை அவிழ்த்துவிட உங்களை போன்றவர்களை மிஞ்சமுடியாது! சரி, வெறும் மொழிமாற்றம் என்றால், நீங்கள் ஏன் அவற்றை வெறுக்கிறீர்கள்? சமஸ்க்ருதத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட எந்த ஒரு நூலையும் வட இந்தியர்கள் வெறுப்பதில்லையே? உங்கள் நாகரீகம் இவ்வளவுதானா???????

  //தமிழை கன்னடமாக்கியது
  தமிழை தெலுங்குவாக்கியது
  தமிழை மலையளமாக்கியது
  தமிழை துளுவாக்கியது
  தமிழை மநிபிரலவாம்க்கியது
  பிரகிருதம் அழிக்கப் பட்டது
  பாலி அழிக்கப் பட்டது
  இது தான் சமஸ்கிருதத்தின் சாதனை
  எஞ்சிய தமிழை அருள் கூர்ந்து வாழ விடுங்கள்//

  ஆகா, ஆகா, சாதி அழிய வேண்டும்:- அதற்க்கு ஒரே தீர்வு கலப்புத்திருமணம் என்கிறீர்கள். சாதிகளில் கலப்பு இருக்கலாம், மொழியில் இருக்கக்கூடாதா?
  சம்ஸ்க்ருதமும் அழிந்திருந்தால் உங்கள் வாதம் இதே போன்று இருந்திருக்குமா??

  முடிவாக, இந்து மதம் சாராத வாதங்களுக்கெல்லாம் “survival of the fittest” கோட்பாட்டை பயன்படுத்துகிறீர்கள். அன்று யாரோ சொன்னார்கள்:- முகலாயர்கள் செய்த அட்டூழியங்களை “வந்தார்கள் வென்றார்கள்” என்று மறக்கவேண்டுமாம். தெரியாமல் கேட்கிறேன்:- கண் எதிர்கே நடந்த அட்டூழியங்களை ‘அதுவே விதி’ என்று நினைத்து மறக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால், இல்லாத ஆரிய இனம் படையெடுத்ததாக சொல்லி, இல்லாத திராவிட இனம் அடிமைபடுத்தப் பட்டதாக 200 வருடங்களாக புருடா விட்டு மக்களை ஏமாற்றிவிட்டீர்கள். அது உண்மை எனும் பட்சத்தில்கூட அதே ‘வந்தார்கள் வென்றார்கள்’ என்ற கான்செப்ட் இதற்க்கு பயன்படாதா???

  இந்துக்களை சொந்த நாட்டிலேயே ஒழிக்கநினைக்கும் போது ‘நாமெல்லாம் இந்தியர்கள்’ என்று முழு பூசிநிக்காயை சோற்றில் மறைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மட்டும் “நாங்கள் திராவிடர்கள், தமிழர்கள்” என்று பிரிவினை பேசலாமா?
  உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒன்றா???

  மனசாட்சி உள்ளவர்கள் யோசிக்கவும்.

  சுதந்திர தினம் மற்றும் அரவிந்தர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

  அன்புடன்,
  பாலாஜி.

 63. அருமையான கட்டுரை. நன்றி.

  முதலில் ஸம்ஸ்க்ருதம் என்பது ஒரு மொழியே அல்ல. அதன் பொறுள்: வாழ்க்கை வழிமுறை, இன்றைய பேச்சு மொழியில் நாம் அதனை கலாச்சாரம் என்று கூறுகிறோம்.

  ஸம்ஸ்க்ருதத்தில் இலக்கியம் தோன்றிய பிறகு தான் இலக்கணம் தோன்றியது. வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்களின் அடிப்படையில் தான் ஸம்ஸ்க்ருத வ்யாகரணம் (இலக்கணம்) உருவாக்கப் பட்டது.

 64. Dear friends, I do not know why there is an aversion towards Sanskrit,that too mainly in our Tamilnadu. At the fag end of his life Amarar.Kannadhasan deplored and regreted very much that he could not learn Sanskrit because it contained a lot of literary treasure. There is a Tamil saying that ” Katrarai katrare kamuruvar”….” Only the learned will like the learned”( Sorry for my incapability to translate the exact meaning ) Every language has its own merits. Of course Tamil is the exceptionally one language that will take anyone to the ever lasting bliss and happiness..in a g iffy…Our Thirukkural, Thirumanthiram,Thiruvachagam etc. etc. have no equals nor parallels … The following letter in The Hindu today(22.07.2014) written by a person from Dublin will make some interesting introspection among the protesters..
  The observance of a ‘Sanskrit Week’ has become a little politicised unfortunately, and I’m surprised at the opposition to the move seen in Tamil Nadu. If those who oppose it reflected for a moment on the name of any language in the world including Tamil, they are sure to come to the conclusion that they all describe a particular region. This is wonderful and essential for the identity of its people. Tamil Nadu should be proud of having such a fine language as Tamil. But the only language that does not conform to this rule is ‘Sanskrit’ or ‘Samskritam.’ It does not indicate a region, because it is not a regional language; there is no ‘Sanskritland’ as in the case of Irish that indicates the national language for Ireland.

  I would humbly submit that this is because Sanskrit is the universal language. India may well be its custodian, but the whole world has a special place and a fascination for Sanskrit which no regional language can ever match.

  Rutger Kortenhorst, Dublin.

 65. ஸம்ஸ்க்ருததுக்கு ஆதரவு எதிர்ப்பு என விவாதம் சுவைபட உள்ளது ஆனால் இருதரப்பும் சம்ஸ்ருதம் , சமஸ்கிருதம் என்றெல்லாம் தவறுதலாக எழுதுவது நகைப்பை வரவழைக்கிறது, அவ்வாறு எழுதும் போது சமமான மொழி என பொருள் வரும். கிருதம் என்றால் மொழி ஸம்ஸ் என்றால் செம்மையான ஸம்ஸ்க்ருதம் என்றால் செம்மொழி எனப்பொருள் ஆதரவோ எதிர்போ செம்மொழியின் பெயரை சரியாக எழுதினால் நன்றாக இருக்கும்

 66. அன்புடையோரே
  தங்கள் குறிப்பிட்டுள்ள சலம்; தூபம் என்ற சொற்களெல்லாம் தமிழ் சொற்களே. இவற்றின் வேர் சொற்களெல்லாம் தமிழில்தான் உள்ளன. வழக்கொழிந்த வடமொழிக்கு வால்பிடிப்பவர்கள் பெரும்பாலானோர் தென்தமிழ் சொற்கள் பலவற்றை வடமொழி என்றே திரித்துரைப்பர். இன்னும் கேட்கப்போனால் ஆங்கிலத்திலேயே பெரும்பாலானவை தமிழ் சொற்களே. ஐயா சாத்தூர் சேகரன் எழுதிய நூல்களை கற்கவும்.

 67. தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒரே காலத்தில் தோன்றிய மொழியாக இருந்திருக்கவேண்டும். தமிழ் பேச்சு மொழியாகவும், சமஸ்க்ருதம் நூல்கள் அல்லது சூத்திரங்கள் எழுதவதற்கு இருந்திருக்கவேண்டும். தமிழின் முந்தைய பெயர் மதுர மொழியாக (மதுர பாஷை) இருந்திருக்கவேண்டும். மதுர மொழி வளர்த்த/வளர்ந்த ஊர் மதுரை. ராமாயணத்தில் வால்மீகி அவர்கள் பல இடங்களில் மதுர என்ற வார்த்தையை குறிக்கிறது. மதுரம் என்றால் தேன் என்று அர்த்தம். தேன் போன்று இனிமையான மொழி. அனுமன் அசோக வனத்தில் சீதையை முதன்முதலில் பார்க்கும்போது எந்த மொழியில் பேசுவது என்று யோசிக்கிறார். சமஸ்க்ருதத்தில் பேசினால் எப்படி ஒரு வானரம் சமஸ்க்ருதத்தில் பேசும், எனவே ராவணன் தான் குரங்கு வடிவம் எடுத்து வந்துள்ளான் என்று சீதை சந்தேகபட்டால் என்ன செய்வது என அனுமன் யோசிக்கிறார். பிறகு அனைவர்க்கும் தெரிந்த மனுஷ பாஷையில் பேசுவது என முடிவு செய்கிறார். அதை வால்மீகி அவர்கள் மதுர பாஷை என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து நமக்கு புரியும் விஷயங்கள் சீதைக்கு தமிழ் (மதுர பாஷை) தெரிந்து இருக்கிறது. சீதைக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக ராமனுக்கும் தெரிந்திருக்கும். மேலும் வால்மீகி மனுஷ பாஷை என்று குறிப்பிடுவதால் மக்கள் மத்தியில் தமிழே பேசப்பட்டு இருக்கவேண்டும். தமிழ் பேச்சு வழக்கத்திற்கு, சமஸ்க்ருதம் அறிவை வளர்த்து கொள்ள.

  தமிழ் மொழியில் இருந்து சமஸ்க்ருதம் வந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. எப்படி? தமிழில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள் மற்றும் 216 உயிர்மெய் எழுத்துக்கள், ஒரு ஆயுத எழுத்து ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் சமஸ்க்ருததிலோ அதிகம் உள்ளது. ஒரு மொழியில் இருந்து ஒரு புது மொழி உண்டானால் எழுத்துக்கள் குறைவாகவே இருக்கும் அல்லது சமமாக இருக்கும். (ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்களே உள்ளன). தமிழில் ka, sa, da, tha, pa என்ற சப்தத்தில் வரும் எழுத்துக்கள் மட்டுமே உள்ளது. ஆனால் சமஸ்க்ருதத்தில் ka, ga, cha, ja, da, dha, pa, bha என்று சப்தத்தில் எழுத்துக்கள் உள்ளது. தமிழில் இருந்து சமஸ்க்ருதம் தோன்றி இருந்தால் அவர்களும் இருக்கும் 247 எழுத்துக்களை கொண்டே தான் வாக்கியங்கள் அமைத்திருக்கவேண்டும். ஏன் அவர்கள் ga,ja,bha,dha, ஸ், ஷ் ஹ ஜ எழுத்துக்களை தேவை இல்லாமல் உருவாக்கவேண்டும். எல்லோரும் இருக்கும் existing system- த்தை சுருக்கதான் பார்ப்பார்கள்.

  ஆனால் நாம் தமிழில் சில வாக்கியங்களை உச்சரிக்கும்போது அழுத்தி சொல்கிறோம். gha, ja, dha ,bha என்ற சப்தத்தில் வரும்படி சொல்கிறோம். தமிழே முதலில் வந்த மொழி, இயற்கையான மொழி என்றால் gha ja dha, bha இவற்றிக்கு தனியாக ஒரு எழுத்து உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும். அல்லது சாதாரணமாகவே ka, sa, da, tha, pa உச்சரித்து இருக்கவேண்டும்.

  உதாரணமாக வேடன்(vedan), வேதம்(vedham) , வேஷ்டி இவைகள் தூய தமிழ் வார்த்தைகள் என்று ஒருவர் என்னிடம் சொன்னார். நான் எவ்வாறு சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு வே என்றால் மறை பொருள் என்று அர்த்தம். வே என்ற வேர் சொல்லிலிருந்து வந்தது என்றார். வேடன் மறைந்திருந்து தாக்குகிறான், பொருள்களை மறைத்து கூறுவதால் வேதம், உடலை மறைக்க அணிவதால் அது வேஷ்டி என்றார். அது எவ்வாறு சாத்தியம். ஒரு குறிப்பிட்ட எழுத்து இல்லாதபோது எவ்வாறு அந்த சப்தத்தில் உச்சரிக்க முடியும், அதுவும் இயற்கையாக தோன்றிய மொழியில்.

  வேதம் என்பதை நாம் வேதம்(vetham) என்றும், வேடன் என்பதை நாம் வேடன்(vetan) என்றும் அல்லவா உச்சரித்து இருக்கவேண்டும். இலக்கணம் என்றார். இலக்கணம் என்பது ஒரு விதி முறை( set of rules). இவ்வாறு உச்சரிக்க வேண்டும். இலக்கணம் எதற்காக எதோ ஒரு காரணத்திற்காக தானே. ஏற்கனவே சமஸ்க்ருதத்தில் வேத(vedham) என்று உள்ளது, வ்யாத்(வேடன்) உள்ளது. அதே சப்தத்தில் வர வேண்டும் என்பதற்காக தானே இலக்கணம் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் வேதம்(vetham), வேடன்(vetan) என்று சொல்லிவிட்டு போய் இருக்கலாமே. எதற்கு இதற்க்கு ஒரு இலக்கணம்.

  முதலில் தோன்றிய மொழியில் இருந்து தோன்றிய அடுத்தடுத்த மொழிகள் தானே முதல் மொழியில் ஒரு வாக்கியம் உள்ளது, அந்த வாக்கியத்தை இவ்வாறு உச்சரிக்க வேண்டும். நம் மொழியில் நம் மொழியில் எழுத்துக்கள் இருந்தால் பிரச்னை இல்லை, சரியான எழுத்துக்கள் இல்லை எண்ணும்போது அந்த வாக்கியத்தை சரியாக உச்சரிக்க வேண்டும் என்றால் அதற்க்கு ஒரு இலக்கணம் தேவை என்று ஒரு இலக்கணம் எழுதி இருக்கவேண்டும்.

  தமிழில் உள்ள அணைத்து எழுத்துக்களுமே சமஸ்க்ருதத்தில் உள்ளது. ழ தவிர. ல வித்தியாசம் சமஸ்க்ருதத்தில் இல்லை. எ, ஒ வித்தியாசம் இல்லை. இன்னொரு உதாரணம் உலகம், சமஸ்க்ருதத்தில் லோக அல்லது லோகம். ஏன் சமஸ்க்ருதத்தில் உ எழுத்து இல்லையா. தமிழில் இருந்து சமஸ்க்ருதம் சென்று இருந்தால் அவர்களும் உலகம் என்றோ அல்லது உலக என்றோ சொல்லி இருக்கலாமே. மாறாக தமிழில் தானே ல, ர, ய என்ற ஒரு வாக்கியம் தொடங்க கூடாது என்று இலக்கணம் எழுதி வைத்து இ, உ, எ நாம் சேர்க்கிறோம். (இராமன், உலகு, எந்திரம்).

  தமிழும், சம்ஸ்க்ருதமும் சம காலத்தே தோன்றிய மொழியாகத்தான் இருக்கவேண்டும். தமிழ் தாய் மொழி என்றால் சமஸ்க்ருதம் தந்தை மொழி. இரண்டுமே இரண்டு கண்கள் போன்றது. முதலில் சமஸ்க்ருதம் பண்படுத்தப்பட்டு இருக்கவேண்டும். பிறகு தமிழ் மொழியை முருகரும், அகத்தியரும் (இங்கு அகத்தியர் கூட அகஸ்தியர் என்ற சொல்லில் இருந்து தான் மாற்றப்பட்டு உள்ளது.) தமிழை சில எழுத்துக்கள் கூட்டி தனித்தன்மையை அடைய செய்து இருக்கவேண்டும். அதைதான் பிறகு தொல்காப்பியர் சிறிது மேம்படுத்தி இருக்கவேண்டும்.

 68. இங்கு யாரும் வடமொழியை மொழி என்பதற்காக எதிர்க்கவில்லை. வட மொழியை பயன்படுத்தி தமிழுக்கு செய்த தீங்குகள், மொழிக்கலப்பு, பொய் கூற்றுக்கள். இவையே அதை எதிர்க்கவேண்டிய சூழலை ஏற்ப்படுத்தி உள்ளது. சிலர் தமிழே வடமொழியில் இருந்துதான் தோன்றியது என்று பொய்யுரைக்கிறார்கள்.

 69. தமிழ் மொழி முத்த மொழி, தமிழ் முத்த என்பது முதல் மற்றும் முந்திய பொருள் தமிழ் காலத்தால் மற்ற மொழிகளை முந்திய மொழி முந்தும் மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *