சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

மூலம்: பேரா. ஆர்.வைத்தியநாதன்
தமிழில்: நிகரியவாதி

சீனாவில் இப்போதெல்லாம் மதத்தை இழிவாகப் பார்ப்பதில்லை. 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 17 ஆவது சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹூ ஜிண்டாவோ நிகழ்த்திய உரையில் ஒரு பத்தி, மதத்திற்காக முழுமையாக ஒதுக்கப்பட்டு இருந்தது. பேராயர்கள், மதகுருக்கள், துறவிகள், மத நம்பிக்கையாளர்கள் ஆகியோர் எல்லாம் சீனாவின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வ பங்கு வகிக்க முடியும் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். எனவே மதம் மக்களுக்கு அபின் போன்றது என்ற கடந்த கால கோட்பாடு காலாவதி ஆகிவிட்டது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனமான ‘சின் குவா’ மத சுதந்திரத்தை வலியுறுத்தி வருகிறது. நல்லிணக்கம் மிக்க சமூகத்தைக் கட்டமைப்பதில் மதம் முக்கியப் பங்காற்றி வருகிறது என்று ‘சின் குவா’ குறிப்பிட்டு வருகிறது. இதை முக்கியமான அம்சமாகக் கருதி இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். நார்மல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 சீனப் பேராசிரியர்கள் மத நம்பிக்கை தொடர்பாக விரிவான ஆரய்ச்சி நடத்தினார்கள். 2007 இல் இந்த ஆராய்ச்சி நடைபெற்ற்து. 4,500 பேரிடம் கருத்து கேட்டு விவரம் சேகரிக்கப்பட்டது.

மொத்த ஜனத்தொகையில் 31 சதவீதத்தினர் மத நம்பிக்கை உள்ளவர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 16 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களில் 60 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. 1990 களில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள் 8 சதவீதத்திற்கும் குறைவே. இது இப்போது 12 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் அதிகரிப்பு முக்கியமான விஷயமாகும்.

சீனாவில் பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயம் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்டு கட்சியில் முன்பு முக்கிய பொறுப்பாளராக இருந்த ஜாவோ ஜியாவோ என்பவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி பிரச்சாரம் செய்துவருகிறார். சீனாவில் 13 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி சீனாவில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம் மட்டும்தான். இதில் 1 கோடியே 10 லட்சம் புரோட்டஸ்டண்டுகள் ஆவர். 50 லட்சம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். ஜாவோ ஜியாவோ தெரிவித்துள்ள புள்ளிவிவரம் உண்மையெனில் சீன கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். சீன கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 கோடியே 40 லட்சம் மட்டுமே.

சீனாவில் மாபெரும் மற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வெறும் பொருளாதார மாற்றங்களை மட்டும் நாம் பார்க்கக்கூடாது.

பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன, வர்த்தக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒலிம்பிக் அரங்கங்கள் நிமாணிக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இதற்கு அப்பாலும் பல அபூர்வ நிகழ்வுகள் அங்கு நடைபெற்றுள்ளன. மேற்கத்திய பார்வை என்பது உலகியல் சார்ந்தது. உலகியல் சார்பற்றவற்றையும் கவனிப்பதுதான் கிழக்கத்திய பார்வையாகும்.

chinese_krishnaமத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நடைபெற்று வரும் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். முஸ்ஸிம்களின் செயல்பாடும், கிறிஸ்தவர்களின் செயல்பாடும் குறிப்பாக தரைக்கு அடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயமும் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. மத்திய தர வர்க்கத்தினரின் உணவுப் பழக்க வழக்கமும் மாறத் தொடங்கி உள்ளது. சீனர்கள் பாரம்பரியமாக அரிசி உணவை சாப்பிடுவது வழக்கம். இப்போது அரிசி உணவைச் சாப்பிடுவது குறைந்துள்ளது. நன்கு படிக்காத ஏழைகள் மட்டும்தான் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். புதிதாக கிறிஸ்தவத்திஅத் தழுவியவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளித்துள்ளன. வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் இது உதவுகிறது.

மேற்கு பகுதிகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. சீனாவில் கடந்த காலத்தைப் பற்றி அறியும் ஆவல் மேலோங்கி உள்ளது. சீனாவில் 1960 களில் கலாசார புரட்சி நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள மிங் வம்சத்தைச் சேர்ந்த ராஜ பரம்பரையினரின் சமாதிகள் வெண்பளிங்கில் பளிச்சிட்டு வந்தன. கலாசார புரட்சியின்போது அவற்றுக்கெல்லாம் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டது. இப்போது அவற்றை மீண்டும் வெள்ளை நிறத்திற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. சுற்றுலா வழிகாட்டிகள் இது குறித்துப் பேச தயங்குவது கிடையாது. பெய்ஜிங் நகர் அருகே உள்ள ஒரு புராதனமான இடத்தில் கிங் ராஜ வம்சத்தினரின் கோடைகால அரண்மனை உள்ளது. அதில் 10 கரங்களைக் கொண்ட புத்தரின் சிலை உள்ளது. இதற்கும் விஷ்ணுவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. இது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, வெளிநாடுகளில் பிரிட்டீஷ் கவுன்சிலை நிறுவி தனது கலாசாரத்தை பரப்பி வருவதைப்போல சீனா 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கன்பூஷ்யஸ் நிறுவனத்தை நிறுவி தொன்மையான சீன ஞானத்தைப் பரப்பி வருகிறது.

மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு சீனாவைப் பார்ப்பதை நாம் கைவிட வேண்டும். சீனாவில் பொருளாதார வளர்ச்சி அமோகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆழமான ஆன்மிக நாட்டம் வலுவாக உள்ளது என்று கூற முடியவில்லை. மார்க்சிஸம் சீனாவில் அர்த்தத்தை இழந்துவிட்டது. புதிய சீனா நமக்கு ஒரு மகத்தான சவாலாகும். இந்தியாவும், சீனாவும் பழங்காலம் முதலே அறிவு ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தன. சீனாவும் பல மதங்களைக் கொண்ட கலாசாரங்களைக் கொண்ட நாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா மீது சீனர்களுக்கு மிகுந்த நாட்டம் உள்ளது.

1938 முதல் 1942 வரை அமெரிக்காவில் சீனத் தூதராகச் செயல்பட்ட ஜூஷி, ’சீனாவை இந்தியா கலாசார ரீதியாக ஆக்ரமித்து 20 நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு போர் வீரர் கூட எல்லையைத் தாண்டி வராமல் இதை சாதிக்க முடிந்துள்ளது’ என்று கூறியுள்ளார். சீனாவை வெல்லவும், ஆதிக்கம் செலுத்தவும் நாம் மென்மையான அணுகுமுறையைக் கையாள வேண்டும். சீனாவில் 50க்கும் மேற்பட்ட பாரதிய வித்யா பவன் கிளைகளை நாம் நிறுவவேண்டும். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடித்து வினியோகிக்க வேண்டும். இதன்மூலம் நமது இளைய சகோதரனான சீனாவில் எஞ்சியுள்ள மிச்சம் மீதி கம்யூனிசத்தையும் துடைத்தெறிய முடியும். நாம் அமெரிக்காவில் ஆன்மிகத்தைப் பரப்புவதில் நாட்டம் செலுத்தி வருகிறோம். சீனாவை நோக்கியும் நமது ஆன்மிகப் பார்வை திரும்ப வேண்டும்.

இப்போதைய சீன நிலவரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நமது செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். சீனாவில் கம்யூனிசம் நலிந்து கொண்டே வருகிறது. சீன மக்கள் ஒரு மாற்று ஏற்பாட்டை விரும்புகிறார்கள். அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள். மதமும் கலாசாரமும் விலக்கி வைக்கப்பட்டிருந்த காலம் சீனாவில் முற்றிலுமாக காலாவதியாகிவிட்டது. இதைப்போல பல விஷயங்கள் உள்ளன.

பார்க்க:
பேராசியரின் மற்றொரு கட்டுரை (தமிழில்: ஜடாயு)
சீனாவின் தலைவலி, இந்தியாவின் நிவாரணி?

சீனா அதிகாரப்பூர்வமாக 5 மதங்களை அங்கீகரித்துள்ளது. அவற்றுக்கு அனுமதியும் அளித்துள்ளது. புத்தமதம், இஸ்லாம், தாவோயிஸம், புர்ர்ட்டஸ்டண்ட் கிறிஸ்தவம், கத்தோலிக்க கிறிஸ்தவம் ஆகியவைதான் அந்த 5 மதங்கள் ஆகும். நமது கலாசாரமும், மதமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாது. பக்தி இல்லை என்றால், கர்னாடக இசை எப்படி இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அது இசையாகவும் இருக்காது, கலையாகவும் இருக்காது. நமது இசை, நாடகம், கலை, யோகா, ஆயுர்வேதம், ஆன்மிக நூலகள் ஆகியவற்றால் சீனாவை குறிப்பாக சீனாவில் உள்ள நடுத்தர மக்களை கலாசார ரீதியாக முற்றுகையிட்டு அவர்களை வெல்ல வேண்டும். இது நமக்கு புதிதல்ல. ஏற்கனவே நாம் இதைச் செய்துள்ளோம்.

நமது மனோபாவம் மாறவேண்டும் என்பதும் முக்கியமான அம்சமாகும். சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.

கொள்கை வடிவமைப்பாளர்கள் 60 களிலும், 70 களிலும்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் 2009 க்கு வரவேயில்லை. சீனவில் மிகப்பெரிய சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு பொருளாதார வளம் செழிப்பாக இருக்கிறது. ஆனால் ஆன்மிக ரீதியாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இந்தியத் தூதராக செயல்பட்ட நிருபமா ராவ் இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவர் சீனாவுக்குத் தகுந்தவர்களை அனுப்பி வைக்க வேண்டும். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆன்மிக உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சீனத் தோழர் ஒருவர் கூறியது சற்று கசப்பானதுதான். அது துரதிர்ஷ்டமானதாகக் கூட தோன்றலாம். ஆனால் அதில் உண்மையின் கீற்று காணப்படுகிறது. ‘நமது இரண்டு நாடுகளும் வேரற்ற, திடமற்ற அன்னிய கல்வி பயின்றவர்களால் ஆளப்பட்டு வருவது விசித்திரமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு சொந்த தேசங்களின் கலாசார வேர்கள் குறித்தோ, பண்பாட்டுச் செழுமை குறித்தோ ஆழமான அறிவு எதுவும் கிடையாது’ என்பதுதான் அவர் கூறிய கருத்தாகும்.

ஆசியாவில் இந்தியாவும், சீனாவும் வல்லரசுகளாக நிமிரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத் தருணத்தில் சீனாவில் கம்யூனிஸத்தை முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு அங்கு நாம் ஆன்மிக முற்றுகையிட்டால் அது இருதரப்புக்கும் பரஸ்பர நன்மை அளிப்பதாக முடியும். இந்த ஆன்மிக முற்றுகையை மேற்கொள்ள நாம் ஆயத்தமாகத் தயாரா?

ஆர்.வைத்தியநாதன்.கட்டுரை ஆசிரியர் ஆர். வைத்தியநாதன் பெங்களூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM – Indian Institute of Management) நிதி நிர்வாகத் துறைப் பேராசிரியர்.

இங்கு குறிப்பிடப் பட்டவை அவரது சொந்தக் கருத்துக்கள், நிறுவனத்தினுடையவை அல்ல

நன்றி : விஜயபாரதம் (14-08-09 இதழ்)

5 Replies to “சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!”

  1. இந்துக்கள் இந்தியாவிலேயே பரிதாப நிலையில் தான் உள்ளனர். சந்திக்கு சந்தி மசூதிகளின் பெருக்கத்தினால் விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் கூட வீதிகளில் சுதந்திரமாக நடத்த முடியவில்லை

    https://www.maalaimalar.com/2009/09/01112326/CNI03010909.html

  2. உங்களுடைய கருத்து சரியானது. இன்றைய நாத்திக தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் கிறிஸ்தவ மத பிரச்சரர்-களாகவே செயல்படுகின்றன. அரசு தொலைக்காட்சிகளில் இரவு மத பிரச்சாரமே செயாபடுகிறது. உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய கேவலமான செயல் நடைபெறுவது இல்லை.

  3. ஊரெல்லாம் ஓடும் அரசு பஸ்களிலும் மற்றும் சாலை ஓரங்களில் காணப்படும் அரசு அறிவிப்பு பலகைகளிலும் , கருநாநிதி சொன்னதாக ஒரு பொன்மொழி [ என்ன எழவோ ] அடிக்கடி நம் கண்களில் படும். ” நீ நான் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது . நாம் என்று சொன்னால் தான் ஓட்டும் ”…என்னத்தை இதில் சொல்ல வருகிறார் என்று தலை முடியை பிய்த்து கொள்ள வேண்டியது தான் மிச்சம் . நாம் என்று அர்த்தம் தரும் நாங்கள் என்று சொன்னால் கூடத்தான் உதடுகள் ஒட்டாது. அப்புறம் எதை தான் சொல்ல வருகிறார். உச்சரிப்பு வகுப்பு நடத்துகிறாரா என்ன…அறிந்தவர்கள் சொல்லுங்கள்..

  4. //இந்துக்கள் இந்தியாவிலேயே பரிதாப நிலையில் தான் உள்ளனர். சந்திக்கு சந்தி மசூதிகளின் பெருக்கத்தினால் விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் கூட வீதிகளில் சுதந்திரமாக நடத்த முடியவில்லை//

    அபாரமான கற்பனை :). அப்படி ஒன்றும் நாம் இழிவு படுத்தப் படுவதில்லை. இது நம்முடைய நாடு. நாம் ஏன் அவ்வாறு நினைக்க வேண்டும்.?? தேவையில்லாமல் அச்சப் படாதீர்கள்?? 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *