சீனா – விலகும் திரை

china_vilagum_thirai_book_coverசீனாவைப் பற்றி ஒரு பார்வையாளனின் எண்ணங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். சீனாவை ஒரு சட்டகத்திற்குள் அடைக்கும் முயற்சியோ, அல்லது சீனாதான் டாப்பு அல்லது வேஸ்ட்டு என்றோ குறிப்பிடாமல் ஒரு இந்தியன் சீனாவில் வாழ்ந்த காலங்களில் தான் கண்டு, கேட்டதை தனது இந்தியக் கண்ணாடி கொண்டு பார்த்திருக்கிறார். அங்கிருக்கும் நல்லது கெட்டதுகளையும், அது இந்தியாவில் இருந்தால் எப்படி நமக்கு நன்மை பயக்கிறது என்பதையோ, அல்லது அது நமக்கு எப்படி பாதகமாக இருக்கிறது என்பதையோ தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார் பல்லவி அய்யர்.

சீனா என்ற பிரம்மாண்டத்தை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக தெரிந்து கொள்வதற்காகவே பயணம் செய்திருக்கிறார். அவரது வேலையும் பத்திரிக்கையாளர் என்பதால் இது எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. மனதில் பட்டதை அழகாக எழுத்தாக்கியிருக்கிறார்.

சீனா என்பது ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது என்கிறார். குறைந்தபட்ச தேவைகளான உணவு, உடை உறையுள் எல்லோருக்கும் கிடைப்பதை சாத்தியப்படுத்தியிருக்கிறது அரசு. ஒரு மக்கள் நலன்சார் அரசு இதைவிட வேறு என்ன மக்களுக்குச் செய்துவிட முடியும்?

இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு வாக்கு என்ற ஒரு ஆயுதமாவது இருக்கிறது. ஆனால் சீனா மக்களுக்கு வாக்கு என்ற ஒன்றிருப்பதே தெரியுமா எனத் தெரியவில்லை என்கிறார். மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத சர்வாதிகார ஆட்சியைப் போன்ற ஒரு ஆட்சியில் இருப்பதை விளக்குகிறார்.

பொதுமக்களுக்கு எதிரான அரசின் குற்றங்கள் எல்லாம் பத்திரிக்கைகளாலும், மனித உரிமைகள் அமைப்பாலும் மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். மீண்டும் அரசு மக்கள் விரோத வேலைகளை செய்யாது. ஆனால் சீனாவிலோ மனித உரிமைகள் எல்லாம் முழுதாய் மீறப்படும். மக்களுக்கு எதும் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். ஊடகங்களிலோ, புத்தகங்களிலோ அவை இல்லாமல் செய்யப்பட்டு அடுத்த தலைமுறைக்கு நடந்த அநியாயங்கள் எதும் தெரியாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டு, தியான்மென் சதுக்கப் படுகொலைகள். சுருங்கச் சொன்னால் எது வரலாறு என்பதைக்கூட அரசாங்கமே தீர்மானிக்கும். உண்மைக்கும் அதற்கும் காததூரம் இருக்கும்.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சியினால் எதிரிகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை என்ற நிலையில் அரசு நினைப்பதை உடனே செயலாக்க முடிகிறது என்பதையும், அதையே இந்தியாவில் செய்வதாயிருந்தால் சந்திக்க வேண்டிய சவால்களையும் குறிப்பிட்டு, இந்தியாவில் குறைந்தபட்சம் தனது கருத்துக்களைச் சொல்லவாவது வாய்ப்பளிக்கப் படுகிறது என்பதையும், ஆனால் சீனாவில் இந்த உரிமைகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்பதையும் சொல்கிறார்.

நமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல… எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.சீனாவில் மருத்துவம் படிக்கச் செல்லும் நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்கிறது என்பதையும் சொல்கிறார். கிட்டத்தட்ட நம்மூர் மாட்டுக்கொட்டகை பொறியியல் கல்லூரிகளை விட மோசமான கல்வி வழங்கப்படுகிறது என்கிறார்.

சீனாவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

பொதுமக்களுக்கு தீமை விளையும் எந்தத் திட்டத்தையும் தடுத்து நிறுத்தவும் அல்லது குறைந்தபட்சம் உரிய நஷ்டஈடு பெறவாவது முடியும். ஆனால் சீனாவில் அரசு, ”இடத்தைக் காலிசெய்” என்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் இடம்பெயர வேண்டும். மறுத்தால் ஜெயில்வாசமும், கொடுமைகளும்.

இந்தியாவில் நமது இஷ்டம் மற்றும் வசதிக்கேற்ப நாம் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சீனாவிலோ நினைத்தபடி குழந்தை பெற்றுக்கொள்ள நீங்கள் சிறுபான்மையினராக இருந்தால்தான் முடியும். இல்லையெனில் ஒரு குழந்தைதான் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் சாமி கும்பிடலாமா, எந்த சாமியைக் கும்பிடுவது அல்லது கோவில் கட்டிக்கொள்ளலாமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் இந்தியாவில், சீனாவில் அரசாங்கம் முடிவு செய்யும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு கடவுள். முன்பு சேர்மன் மாவோ, தற்போது புத்தர். முதலில் கோவில்களையும், புத்த விகாரங்களையும் இடித்தனர் இந்த கம்யூனிஸ கும்பல்கள். தற்போது பொறுமை இழந்துகொண்டிருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஒரே வழி கோவில்களை புதிதாய் கட்டுவதுதான் என கோவில்களை அரசே கட்டிக்கொண்டிருக்கிறது. ஆக, கொள்கைகளைவிட தான் பதவியில் இருப்பதும், நாட்டை இரும்புப் பிடியில் வைக்கவும் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். புத்த மதத்தையும் அரசாங்கத்தின் பிடியில் வைத்துக்கொள்ளவும், அரசுக்கு எதிரான எதிர்ப்புக்குரல்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடவும் தலாய்லாமாவை நாட்டைப் பிரிப்பவர் என்றாக்கி விட்டார்கள். அடுத்த லாமாவையும் அரசே நிர்ணயம் செய்து மத சுதந்திரம் என்ற ஒன்றில்லாமல் செய்துவிட்டனர்.

சீனாவின் இஸ்லாமிய சமூகம் இதுவரை அரேபியாவுடன் தொடர்பில்லாமல் இருந்தது. அதனால் சீனர்களுடன் சுமூகமாக வாழ்ந்துவந்தனர். ஆனால் சமீபத்திய அரேபியத் தொடர்புகள், அவர்களை சீன சமூகத்திலிருந்து விலகி இருக்க வைத்துவிட்டது என்கிறார். தற்போதைய அமைதியின்மை அரேபியாவுடன் சீன முஸ்லிம்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவுடன் வந்தது என்கிறார்.

நமது கேரளக் காம்ரேடுகள் அன்றாடம் செய்யும் போராட்டம், வேலை நிறுத்தம் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். தொழிலாளர்களின் சொர்க்கபுரியான கம்யூனிச சீனாவில் இவையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்படும்.

இந்தியாவில் உங்கள் எண்ணங்கள் உங்களுடையவை, சீனாவில் அரசாங்கம் நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதுடன் , அரசாங்கம் செய்வது மட்டுமே சரி என்றும் உங்களை நம்பவைக்கும்.

உலகமே சார்ஸ் என்ற வியாதியால் அமளி துமளிப் பட்டுக்கொண்டிருக்க, அது சீனாவிலிருந்துதான் வருகிறது எனச் சொன்ன பிறகும் அரசாங்கமே மூடி மறைத்து பல ஆயிரக்கணக்கான மக்கள் அழியக் காரனமாய் இருந்தது. நிலமை கைமீறிய பின்னர் உண்மையை ஒத்துக்கொண்டது. இந்தியாவில் ஒரு ஆளுக்கு சார்ஸ் என்றாலும் இந்தியா முழுக்க அதுபற்றி பேசப்படும், குறைந்த பட்ச பாதுகாப்பு நடவடிக்கையாவது எடுக்கப்படும். சீனாவில் நாட்டின் கௌரவம் என்ற பெயரில் விஷயத்தை வெளியே சொல்லாமல் மக்களை சாகவிட்டது சீன அரசு.

நமது தோழர்கள் காட்டும், அல்லது கம்யூனிச நாடுகளில் தேனும் பாலும் ஓடுவதுபோல சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் மட்டுமே என்பதை நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உணரலாம்.
இந்தப் புத்தகத்தின் பலமே கிட்டதட்ட எந்தவிதச் சார்பும் அற்று ஒரு சமகால பத்திரிக்கையாளரின் பார்வையில் சீனாவைப் பற்றி சொல்லப்படுவதுபோல எழுதப்படிருப்பது. ஆனால் முடிந்தவரை உண்மையாய் எழுதப் பார்த்திருக்கிறார்.

china-labor-dispute

புத்தகத்தில் சிலகுறைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக, இந்தப் புத்தகம் சீனாவின் பெரும்பான்மைப் பகுதியான கிராமப்புற சீனாவைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. சீனாவின் கலாச்சாரப் புரட்சி எப்படி பண்டைய வரலாற்றை அழித்தது, அந்த வெற்றிடத்தை எப்படி சாதுர்யமாக கிறிஸ்தவம் நிரப்பி அதனை மேற்கிற்கான ஆயுதமாக மாற்றுகிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை.சீனாவால் ஆதரிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் நமது பழங்குடி கலாச்சாரத்தை அழிப்பதுடன் நின்றுவிட்டு, அந்த வெற்றிடத்தை கிறிஸ்தவம் மூலம் நிரப்பி இன்றைக்கு வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட கிறிஸ்தவமயமாகி இந்திய இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அதைப்பற்றியும் சொல்லியிருக்கலாம். சீனாவில் மாவோவினால் உருவாக்கப்பட்ட பஞ்சங்களைப் பற்றியும், அதனால அழிந்த லட்சக்கணக்கான மக்களைப் பற்றியும் சிறுகுறிப்புகூட இல்லை.

இவற்றை பல்லவி அய்யர் அணுகாதது எதிர்பார்க்க கூடியதே. ஆனால் இந்த விஷயங்களை அவர் அணுகாமைக்கான காரணங்கள் வெளிப்படை. அவர் வேலை செய்தது சென்னை மவுண்ட் ரோடிலிருந்து வெளிவரும் ஒரு சீன ஆதரவுப் பத்திரிக்கையில் என்பதை கருத்தில் கொண்டால், இவ்வளவுதூரம் சீனாவைப் பற்றி எழுதியதற்கே பாராட்டலாம். புத்தக ஆசிரியரின் இந்தியாவுடனான ஒப்பீடு நமக்கு சீனாவைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ராமன்ராஜா. சொல்வனம் இதழில் நிறைய அறிவியல் கட்டுரைகளை நகைச்சுவையுடன் கலந்து எளிமையாக எழுதுபவர். இவரது சொல்வனம் கட்டுரைகள் இவரது எழுத்தைப் பற்றிய ஒரு சிறப்பான அறிமுகம் கொடுக்கும். புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பின் மூலம் நாம் மூலப்புத்தகத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வேற்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே புன்னகைக்க வைக்கிறார். பல்லவி ஐயரும் நகைச்சுவை உனர்ச்சியுடன் எழுதியிருப்பார்போல..  தமிழில் ஒரு காலத்தில் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் என்றாலே வறட்டுத்தனமாக, ஜீவனின்றி மொழிபெயர்த்தல் என்ற நிலையிருந்தது. இன்றைக்கு ராமன்ராஜா, ஜெ.ராம்கி போன்றோர் தமிழ் மொழிபெயர்ப்பில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கின்றனர்.

சீனாவைப் பற்றி கிட்டத்தட்ட காய்ப்பு, உவத்தலின்றி எழுதப்பட்ட அருமையான புத்தகம்.

சீனா – விலகும் திரை
பல்லவி அய்யர் (தமிழில்: ராமன் ராஜா)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 360, விலை: ரூ 200.
ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.

19 Replies to “சீனா – விலகும் திரை”

 1. பல்லவி ஐயர் வேலை பார்த்தது அண்ணா சாலையிலிருந்து வெளிவரும் தேசவிரோத மற்றும் சீன அடிவருடி பத்திரிகை என்பது சரியே. அதனுடன் இன்னும் ஒரு சொல்லை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஜனநாயக விரோதம் என்பதையும் சேர்க்கவேண்டும். அவசரநிலை ( emergency) காலக்கட்டத்தில் இந்திரா காந்திக்கு அந்த மவுன்ட் ரோடு பத்திரிகை அடித்த ஜால்ரா கணக்கில் அடங்காது. ஒரு கட்டத்தில் ஜனநாயகம்,பேச்சுரிமை, என்பதே பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையான சமாச்சாரம் என்று எழுதுமளவிற்கு சென்றது.மேலும் இந்தியர்கள் ஜனநாயகத்திற்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் மறைமுகமாக எழுதி இந்தியர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கேவலப்படுத்தியது.

  மாவோ சீனாவில் கம்யூனிஸ்ட் புரட்சி மற்றும் கலாச்சாரப்புரட்சி என்ற பெயர்களில் பல கோடி சீன மக்களை கொன்றவர்.அந்த நாட்டில் பத்திரிகை சுதந்திரம் இல்லாததால் அங்கு எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது கொலைகள் நடந்ததை நேரடியாக பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அங்கு ஸ்டிரைக்கு, பந்து, வாக்கவுட்டு, கதவடைப்பு என்றால் உடனே சீன அரசு நாய்களை சுடுவதைப்போல சுட்டுவிடுகிறது. எனவே நம் நாட்டில் இருக்கும் இடது கம்யூனிஸ்ட் நண்பர்களை சீனாவிற்கு அழைத்துச்சென்று காட்டவேண்டும். அப்போதாவது இவர்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை .

 2. உலகில் எங்கெங்கெல்லாம் அழிவும் பணமும் சேர்ந்து புழங்குகிறதோ அங்கெல்லாம் அமெரிக்கா மற்றும் ரசியா நாடுகளின் பங்களிப்பு இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த அசுர சக்திகளில் ஒரு புது உதயம் சீனா. தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தனது ராக்ஷச பலத்தை நிலை நிறுத்த முனைப்போடு திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறது இந்த தேசம்.

  ஹிந்துஸ்தானத்திற்கு சீனாவால் இருக்கும் தலைவலிகள்

  ௧. baqi sthan க்கு உபஹாரம் செய்கிறேன் பேர்வழி என்று அதன் ரௌடி தனத்திற்கு இடையறாது கொம்பு சீவி விடுதல்
  ௨. baqi sthan ஹிந்துஸ்தானத்தில் இருந்து முறை கேடாக ஆக்கிரமித்த காஷ்மீரத்து அக்சாய் சின் பகுதியை தன் வசம் எடுத்து கொண்டது.
  ௨. ஹிந்துஸ்தானத்தில் முறையாக இணைந்த சிக்கிம் மாகாணம் தன்னுடையது என்று பிரச்சினை கிளப்பி உள்ளது
  ௩. அருணாச்சல பிரதேசம் தன்னுடையது என்று பிரச்சினை கிளப்பி உள்ளது
  ௪. ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்று ஹிந்துக்களை காங்கிரஸ் ஏமாற்றியது போல் ஹிந்தி சீனி பாய் பாய் என்று என்று காங்கிரஸ் பாட்டு பாடி கொண்டிருக்கும் போதே 1962 இல் காங்கிரசுக்கும் ஹிந்துஸ்தானத்திற்கும் பட்டை நாமம் போட்டு கைலாஷ் மானசரோவர் பகுதிகளை தனது ஆதிக்கத்தில் கபளீகரம் செய்தது
  ௫. பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே பெரும் ஜலாசயம் நிர்மாணம் செய்து ஹிந்துஸ்தானத்தில் இந்த நதியின் நீர் வரத்தை ஒடுக்குவது சீனாவின் தற்போதய குசும்பு
  ௬. திபத் பற்றி சீனாவுக்கு ஆதரவான நிலையை ஹிந்துஸ்தானம் எடுத்துள்ள போதும் காஷ்மிர பிரச்சினையில் baqi sthan க்கு ஆதரவாகவும் ஹிந்துஸ்தானத்திற்கு விரோதமாகவும் நிலை எடுப்பது.
  ௭. ஐக்ய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் ஹிந்துஸ்தானம் பங்கேற்பதை முழு மூச்சோடு எதிர்ப்பது

  சரி பாரத கமுநிஸ்ட்கள் எப்படி?

  ௧. சரியானது காபிடலா அல்லது தாஸ் காபிடலா என்று குழம்பி தவிப்பது
  ௨. கழக கண்மணிகளின் சான்றிதழ் படி தகரம் கண்டு பிடிக்காத காலம் முன்பிருந்தே உண்டியல் கண்டுபிடித்த கட்சி
  ௩. தேச துரோகிகளான சயத் அலி ஷா கீலானி அப்சல் குரு போன்றோரை வெளிப்படையாக ஆதரிப்பது மற்றும் தேசபக்த சக்திகளை முனைந்து எதிர்ப்பது
  ௪. தங்களால் உருவாக்கப்பட்டு ஆனால் இன்று தங்கள் தலையிலேயே கை வைக்கும் மாவோயிஸ்ட்களை என்ன செய்வது என்று தலை சொரிந்து கொண்டு இருப்பது

 3. ஒரு காலத்தில் மாஸ்கோவைப் பார்! பீஜிங்கைப் பார் என்றார்கள். மாஸ்கோவா வது ஒரு சமயம் சீனா நம் மீது படையெடுத்த பொது நமக்கு உதவி புரிய ஒடி வந்தது. ஆனால் இந்த செஞ்சீனா நேருவை நம்பிக்கைத் துரோகம் செய்த நாடு. பஞ்ச சீலத்தை போர்க்களத்தில் புதைத்த நாடு. பாரம்பரிய பண்பாட்டுக் கல்வியை வேண்டிய சீன மாணவர்களைத் தின்னமன் சதுக்கத்தில் கொன்று குவித்த நாடு. இன்றும் நம் எல்லைப் பகுதியில் பாய காத்திருக்கும் வல்லூறு. இவர்களை நம் ஊர் தோழர்கள் மட்டுமல்ல, அண்ணா சாலை பத்திரிக்கை சொல்கிறீர்களே, மாடி வீட்டு சீமான் பத்திரிக்கை, கோடீஸ்வர கம்யூனிஸ்டுகள் இவர்களும் ஓஹோ என்று பாராட்டுவதைத்தான் சகிக்க முடிவதில்லை.

 4. மிக சுருக்கமான, அதே சமயம் தெளிவான விமர்சனம். இதைப் போன்ற அருமையான விமர்சனங்களைப் படித்து ரொம்ப நாளாகிறது.

  கிராமப் புறத்தில் நிலங்களைச் சமமானதாகப் பங்கு போட்டுக் கொடுத்தாலும், சீனா ஏழ்மையை ஒழிக்கவில்லை. ஆனால், கம்யூனிசப் பொருளாதாரக் கொள்கையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு 1978ம் ஆண்டு சுதந்திரப் பொருளாதாரத்திற்கு வந்தபின்னர் சீனாவின் வறுமை பிரம்மிக்கத்தக்க அளவில் குறைந்தது.

  சுதந்திரப் பொருளாதாரம் அடைந்த இந்தியாவால் ஏன் இன்னமும் அந்த சாதனையை எட்ட முடியவில்லை?

  ஏனென்றால், சீனாவில் இருக்கும் தலைவர்கள் சீன-தேசியவாதிகள். இந்தியாவில் இருக்கும் தலைவர்கள் சிலர் சீன-தேசியவாதிகள், இசுலாமிய தேசியவாதிகள், கிறுத்துவ தேசியவாதிகள். மற்றவர்கள் எல்லாம் பிரிட்டானிய ஆட்சி முறையின் தொடர்ச்சியை நிலைநிறுத்தும் நவீன-ஜமீந்தார்கள்.

  அதனால்தான் இந்தியாவில் ஏழ்மை அப்படியே இருக்கிறது.

  சீனத்துத் தலைவர்கள் நாட்டுப் பற்று மிக்கவர்கள். அதனால் ஏழ்மையை ஒழிக்க சீனா கல்வி, ஆராய்ச்சி, கட்டமைப்புக்கள் போன்றவற்றில் போட்ட பணத்தை யாரும் சுரண்டவில்லை.

  இந்தியாவை ஏளனமாகக் கருதுபவர்கள் இந்தியத் தலைவர்கள். மெக்காலே கல்வி கற்ற அவர்களால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் ஏற்படாது.

  இந்திய தேசியவாதம் பேசுகிறவர்கள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே இந்தியாவில் வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்பதைக் கவனிக்கவும். (உம்: நரேந்திர மோடி)

 5. அன்புள்ள நண்பர்களே,

  டியானன்மன் சதுக்கத்தில் நடந்த படுகொலைகளை பற்றி திரு கோபாலன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.சுமார் மூவாயிரம் அல்லது நாலாயிரம் மக்களை கொலைசெய்வது என்பது கம்யூனிஸ்ட் சீன அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் இன்னும் ஒரு ஐம்பது அல்லது அறுபது கோடி மக்களை கொலை செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். ஏனெனில் அந்த சமுதாயத்தில் மனிதர்கள் மண்ணிலும் கேவலமாகவே மதிக்கப்படுகிறார்கள்.மனிதனை உயிரற்ற ஜடப் பொருள் களைப்போலவே கருதுவது அவர்களது கொள்கை. தனிமனித சுதந்திரம், ஜனநாயகம், பேச்சுரிமை, சமத்துவம், கடவுள் நம்பிக்கை எதுவுமே இல்லாத அந்த நாட்டில், எதிர்காலம் நம் நாட்டை விடவும் மிக கேவலமாகவே இருக்கும்.

 6. If you count the number of billionaires in the world, the 3rd position will held by China. If we count the millionairs, the third position is held by china.

  While the first two being US and Japan, the BIG DIFFERENCE is the workers in US and Japan are earning 10 to 30 times more salary than China. Why there are too many rich people, but wages are too low too ? shows clearly that The chinese companies sucks blood from workers and pay them nothing.

  The entire world should stop buying chinese items, pointing un proportional , un fair salaries to workers as reasons.

 7. இந்தியாவுக்கு பாகிஸ்தானைக் காட்டிலும் மோசமான எதிரி இந்த சீனாதான் .பாகிஸ்தானுக்கு யாராவது கொடுத்தால்தான் வாங்கிக்கொண்டு நமக்குத் தொல்லை கொடுக்கமுடியும்.அங்கு ஒன்னும் கிடையாது அது ஒரு ஓட்டாண்டி நாடு.ஆனால் சீனாவோ எல்லா வசதிகளும் உள்ள காட்டுமிராண்டி நாடு பலி கொடுப்பதற்கு ஏராளமான ஆள் பலமுள்ள நாடு.அந்த நாட்டை ஆதரிப்பதற்கு இங்கேயே தேச விரோத கட்சிகள் அதாவது சக்திகள் உள்ளன.இங்கு உள்ள சீன ஆதரவு கட்சிக்காரர்களை அங்கு கொண்டுசென்று சீனாவில் செயல்படும் மேற்க்கத்திய நாட்டு தொழில் சாலைகளின் முன் நின்று கோசம் போடச் சொல்லிவிட்டால் போதும் நம் நாட்டைப் பிடித்த தொல்லைகளில் பாதி தொலைந்தது.நடந்தால் நல்லதுதான்.நினைப்பது எல்லாம் எங்கே நடக்குது நம்ம நாட்டோட தலை எழுத்து எல்லா காலங்களிலும் அன்று முதல் இன்று வரை தீய சக்திகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதுதான்.
  ……………………ஈஸ்வரன்,ப்கழனி.

 8. \\\\\\The entire world should stop buying chinese items, pointing un proportional , un fair salaries to workers as reasons.\\\\\\\\\Hindustanis even deploe the possibility of repairing a fuse bulb. and chinese products. there is every possibility that right on its first use, the product fails, be it an electronic product or whatever.
  All chinese products are highly hazardous. In US of A every now and then they reject or block chinese products on one or other pretext. often cited cause is the ingredients are toxic.
  The spineless govts in HIndusthan never speak truth about how much of HIndusthani land is occupied by chinese.

 9. மொதல்ல சீனப் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் பல சமயம் என்னால் முடிவதில்லை. தேவை என்று நான் USல் இருந்து வரவழைக்கும் innovative items கூட Made in China:-( அட அதை விடுங்கள், பிள்ளையார், சிவலிங்கம் என்று நம் கடவுள்களின் சிலைகளைக் கொண்டு fountains தயாரிக்கக் கூட சீனா தேவயா?

 10. I think we could have easily tamed china with our cultural relations. Currently whatever china is doing on India is entirely due to our foreign policy. Instead of leveraging our millennium old cultural tie-ups, we are dealing it in the same way that we do with pakistan. We need to remember that a country which is known for its strict religious curbs had invited HH Jayendra Saraswati to its soil. China is going to be a dominating Asia if not the entire world. It is only to our benefit to have solid relationship with it. This will make other western and Arab nations jittery which can be used to our advantage

 11. “China is going to be a dominating Asia” —> “China is going to be the economically and politically dominating country in Asia”

 12. \\\\\\\\\\China is going to be the economically and politically dominating country in Asia”\\\\\\\\\\\Sri. kumudan, china is already economically and politically dominating country in Asia. Its giving trouble to Japan which once colonised China. The korean problem exists because of chinese support to North Korea. Burmese Junta gets its Oxgen from China. Polpot in Combodia who killed millions like that of Hitler and Stalin was a creation of China.

  China is the biggest hegemony in the region grabbing land by hook or crook. Its claiming lsland under dispute and equally claimed by philipines, Japan and Burma. The Baqi sthan is a buffer for china against India.

  Yes China is a big power. Big, ruthless,horrendous, hazardous, unethical and unhuman. In the present day world, to survive, a country need to keep working relationship with every sort of country. To have solid relationship, china would require India to surrender Arunachal Pradesh, Sikkim and why not a large tract of land around Badrinath.

  one can not have a cordial relationship with a country like China which is ruthless and bullish and supporting equally unhuman and unethical Islamic neighbours. India need to be extradinarlly cautious and careful with the evil dragon lest we loose lands accounted in 1962 war and unaccounted and undeclared lands being lost currently around Leh, Laddah and Arunachal Pradesh.

 13. Sriman Krishnakumar,

  It’s true that China is a hegemonic country. This is due to cultural vacuum created by communism and quickly being filled largely by Xians. Archbishop of Canterburry, Rowan Williams predicts that China is going to be the home to the largest Xian population in the globe. But our stupid leaders, instead of leveraging our cultural relationships through Hinduism and Buddhism started looking at it as communist guru. We know abrahamic faiths are only interested in expanding their territory and hence the reason for attacking our border areas. Already North East is very ripe for secession-ism. Nehru boasted that we don’t need army but only police force. This is indirectly telling China “Ah Bail Mujhe Mar”. Xianity only respects powerfuls. See how much they crawl in front of the religion of peace (piece?).

  //இந்த கம்யூனிஸ கும்பல்கள். தற்போது பொறுமை இழந்துகொண்டிருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஒரே வழி கோவில்களை புதிதாய் கட்டுவதுதான் என கோவில்களை அரசே கட்டிக்கொண்டிருக்கிறது.// This goes to prove that still Chinese are looking for a way to fill their spiritual quest. If we fail to use this opportunity who else to blame?

 14. சீனாவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு பல்லவி ஐயர் தேவையில்லை ..நம் நாட்டை சுற்றி சீனா பின்னும் சதி வலை அப்பட்டமாக தெரிகிறது .பாகிஸ்தானையும் ,சிறிலங்காவையும் தளமாகக் கொண்டு நம்மை முடக்க அது செய்யும் ஆயத்தங்கள்ஒன்றும் தெரியாமல் இல்லை .நாட்டு மக்களுக்கே தெரியும் இந்த சீன கைங்கரியம் அரசுக்கு தெரியாமல் இருக்காது .என்ன செய்வது ?அண்டையில் இருக்கும் சுண்டைக்காய் நாடுகளை கூட கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ளாத ,இன்னும் சொல்லப் போனால் ,உள்நாட்டில் ஆட்டம் போடும் தேச விரோத சக்திகளையும் ,தமது சொந்த மற்றும் கூட்டணி கட்சியினரின் ஊழல் நடவடிக்கைகளையும் கூட அடக்கி வைக்க முடியாத ,கையாலாகாத ஆட்சியில் நாம் ஆதங்கப் பட்டு என்ன நடக்கப் போகிறது ?

 15. சமீபத்தில் வந்த சீன வென், சத்தியத்தைப் பற்றிய உபநிஷத் வாக்கியம் ஒன்றைக் கூறினாராம். பாவம் அவருக்கு நினைவில்லை, ராமபிரானையே இல்லையென்று கூறியவர்களிடம்,
  உபநிஷத்தைக்கூ றுகின்றோம் என்று. அதேபோல் தான், இந்தியாவைப்பற்றியே முழுதும் அறியாமல், சீன தேசத்தைப் பற்றி எழுதுவதும் விமர்சிப்பதும்.

 16. Sri kumudan,

  If a litre of chilli sauce is mixed in an ounce of honey, do you think that it would still remain sweet? Thats what has happened to China. The cultural revolution and xianist designs have alotgether erased any and every thing that could be chinese from the land of china, lock stock and barrel. A huge population on earth leading their life just like machines with a difference that machines do not have life.

  Even the xians in China – they can not be strictly xians. Like chinese have their own cheap and sold-on-platform version of everything down to CFL lamps, what is predominantly prevalnet in China as xianism is sort of CFL lamp of chinese version. This sort of xianism whereby the original Holy spirit is contaminated by spurious Chinese spirit may be clear only to the Holy father in Heaven and Mao. This spurious version is sort of pond compared to the original version which is sea. So the Holy Se(a)e with all its might is trying to fill up the pond in such a way that the pond totally disappears and what remains is Holy see. An underground fight is going on between the dragon and the christian jackal. At the end of the day, the world at large knows that it would be the day of the Jackal.

  Thats the same story in Hongkong the miniature China in British version. The people are neither english nor mandarin. Its literal thrishanku (svarga? naraka?). The people are largely irreligious. Like christianity has outlived its theological values and is surviving on carnival values in Europe, whatever is christian sesham in Hongkong is not theological christianity but filmi version of carnival christianity.

  To bring real life into such a vast ocean of people who are leading life a little better than machines, one need a strong divine intervention. A person of the order of Adishankara, Ramanuja, Madhva, Vidyaranya or Vivekananda. We have very genuine and pious and tall religious leaders but i still doubt whether they can match the leading lights. But yes, i agree, endevour always triumps.

  on expected lines pallavi iyer was awarded by china. Dr.Karan Singh, had the guts to refuse to accept the chinese award. People of the like of Sitaram Yechuri who cried foul during Uncle Sam’s visit, accepted the award with all glee. After cunningly completing the tunnel from Tibet to the border of Arunachal Pradesh, the chini premier entered Hindusthan.

  But everything is not lost. This time around the Hindustani Tiger rose to the occassion and to some extent faced the Chinese Dragon. Atleast in the joint statement Hindusthan refused to budge to the One China chinese tune comprising of China,Taiwan and Hongkong categorically reminding them to sing the One Hindusthan tune which includes Kashmir.

  The immoral English once boasted that the sun never set in the British empire. Today the fact is sun never rises for days together in the current British Empire. It has shrinked so much. The communist utopia called soviet blown to pieces. The two evils drastically downsized. The remaining evil forces – the US of A and the ruthless chinese dragon would also vanish. After all even Hiranyakashipu who ruled not for years but for 74 chaturyugas had an end.

  \\\\\\\See how much they crawl in front of the religion of peace (piece?).\\\\\\\\ religion of peace! thats a crude joke. Compared to the overt and covert atrocities committed by the so called religion of peace from the days of inquistion down to tacit support of vatican to third reich for annihilation and liquidation of jews and rob -peter- pay -paul type of social service sanctioned by holy see to theresa whereby she collected money from druglords to invest it for religious harvesting, even the current day Islamic Jihadists can not be a match.

 17. Sri kumudan, sorry for the wrong reference above. You referred that christianity crawls in front of religion of peace and i took religion of peace to be christianity. although these two are chips of same block.
  today china claimed that it shares a border of about 2000 kms only with HIndusthan and not 3500 kms since China considers J&K as disputed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *