அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி

ஸமஸ்கிருதத்தில் அமைதிக்கான நீண்ட துதி ஒன்று உள்ளது. பற்பல நூற்றாண்டுகளுக்கு முன், அமைதியின் தேவையை முற்றிலும் உணர்ந்த ஒருவரால் இயற்றப்பட்டது. தவிர அவரது அன்றாட வாழ்க்கையும் அமைதியில் வேரூன்றியதாக இருந்திருக்க வேண்டும்.

இப்பொழுது நஞ்சு போல பரவும் தனிநாட்டுப்பற்று, செல்வத்தின் ஆதிக்கம் விளைவிக்கும் நேர்மையற்ற நிலை, தொழில் வளம் உண்டாக்கும் பொருளாசை, அதன் மீதுள்ள பிடிப்பு, இவை தலை தூக்குமுன் ஏற்பட்ட செய்யுள் அது. அழியா அமைதியைக் குறித்து செய்யப்பட்ட துதி:

வானுலகில் இருக்கும் தெய்வங்களிடையும், வானுலகிலும், விண்மீன்களிடையிலும் அமைதி நிலவுவதாக;

இம்மண்ணின் மீதும் மனிதரிடையிலும், கால்நடைகளிடமும் அமைதி நிலவுவதாக;

நாம் ஒருவரையொருவர் புண்படுத்தாமலிருப்போமாக;

நாம் பெருந்தன்மையோடிருப்போமாக;

நம்முடைய வாழ்வையும் செயல்களையும் கிளர்த்தெழுப்புகின்ற அச்சுடர்மிகு அறிவுடன் கூடியவராக இருப்போமாக;

நமது துதிகளிலும் உதடுகளிலும் அமைதி நிலவுவதாக.

இவ்வமைதி துதியில் தனிப்பட்ட எவரொருவரையும் குறிப்பிடவில்லை. அவ்வறு ஏற்பட்டது பின் காலத்தில் தான். நாம் மட்டுமே இருந்தோம். – நம் அமைதி, நம் அறிவுக் கூர்மை, நம் சேமித்த அறிவு நம் அறிவின் ஒளி இவையே.

ஜேகேவிற்கு பிடித்த துதி

ஸமஸ்கிருத சந்தங்களின் ஒலிக்கு ஒரு விந்தையான திறன் இருக்கிறது. கோவிலொன்றில் ஐம்பது பூசாரிகள் சமஸ்க்ருதத்தில் ஓதிக் கொண்டிருந்தனர். அச்சுவர்களும் அதனால் சிலிர்த்தன போலத் தோன்றியது.

‘கிருஷ்ணமூர்த்தியின் நாளேடுகள்’ என்னும் நூலிலிருந்து: வசந்த இதழ், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா, பிப்ருவரி-மே 2008. (பாகம் – 3 இதழ் – 1)

2 Replies to “அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி”

  1. அனுபவித்தால்தான் தெரியும் அமைதியின் அருமை! உங்கள் பதிவும் அருமை!

    அமைதியுடன் அன்புடன்
    ராஜூ

  2. ஐயா அரவிந்தன் நீலகண்டன் வணக்கம். ஜே கிருஷ்ணமூர்த்தி குறித்து உங்கள் கருத்து என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *