சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை

சென்னையை அடுத்த  சோழவரம்  பகுதியில்,  இந்துமுன்னணி தலைவர் மூர்த்தி அப்பகுதியில் உள்ள தர்கா அருகில் பிப்ரவரி-27 அன்று மர்மமான முறையில் குரூரமாகப் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.

இது பற்றிய தினகரன் (பிப்ரவரி 28) செய்தி:

சோழவரம் அருகே கோஷ்டி தகராறு; இந்து முன்னணி பிரமுகர் கொலை.

சென்னை: கோஷ்டி தகராறில் இந்து முன்னணி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொல்லப் பட்டார். இது தொடர்பான விசாரணையின் போது ஒரு பெண்ணை மோப்பநாய் கவ்விப் பிடித்ததால் சோழவரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோழவரம் அடுத்த பூதூர் கிருதலபுரத்தில் அசின்ஷா பாபா தர்கா உள்ளது. இங்கு புகழ்பெற்ற பாபாவின் உடன் அடக்கம் செய்யப் பட்டு உள்ளதால் வழிபாட்டு தலமாக உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான இந்து, முஸ்லிம்கள் திரளாக வந்து வழிபாடு நடத்துவார்கள். இதனால் எந்த நேரமும் கூட்டம் இருக்கும் டிரஸ்ட் அமைத்து தர்கா வருமானத்தை பயன்படுத்தி வந்தனர்.

murthy_murder_photoஇந்து முன்னணியின் சார்பில் தர்காவின் அறக்கட்டளையில் தங்களுக்கு பங்கு தரவேண்டும் என்று கோரி வந்தனர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. சோழபுரம் போலீசில் இது தொடர்பாக வழக்கும் உள்ளது. எனினும் அசின்ஷா அறக்கட்டையின் ஒரு பிரிவினரும், சர்வேஸ்வரா சாமி அறக்கட்டளையின் ஒரு பிரிவினரும் தொடர்ந்து மோதி வந்தனர். சர்வேஸ்வரா சாமி கோயிலின் நிர்வாகியாகவும் கணக்கராகவும், சோழவரம் ஒன்றிய இந்து முன்னணி செயலாளராகவும் இருந்தவர் மூர்த்தி (48). பூதூர் கங்கையம்மன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பூதூர் பாபா தர்கா அருகில் இவர் நேற்றூ காலை 11 மணிக்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 10 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.

murthy_murder_photo-2தகவலறிந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சாரங்கன், பொன்னேரி டிஎஸ்பி ரங்கராஜன், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வந்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மோப்ப நாய் ரூபி வரவழைக்கப் பட்டது. அதே பகுதியில் உள்ள ஷேக் முகமது அலி என்பவரின் மனைவி சம்சாத் (35) என்பவரை மோப்ப நாய் கவ்விப் பிடித்தது. அவரை போலீசார் பிடித்துச் சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மூர்த்தியை யார் கொலை செய்தது, அவர்களுக்கும் சம்சாத்துக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடக்கிறது. அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை போலீசார் பிடித்து சென்று ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து இந்து முன்னணி பொறுப்பாளர் எல்லப்பன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து மூர்த்தியின் சடலத்தை பார்த்தார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இது பற்றிய தினமலர் செய்தி இங்கே.. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இங்கே.

hindu-munnani-leader-murthy-funeralபலகாலமாக அப்பகுதிக் கோயிலின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளைக் கவனித்து வந்தவர் மூர்த்தி. கோயில் சொத்துகளுக்காகவும், கிராம இந்துக்களின் உரிமைகளுக்காகவும், சமூக ஒருங்கிணைப்புக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் என்று ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். ஊர் மக்கள் அனைவரின் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவராக மூர்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சமீபகாலமாக இப்பகுதியில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்ற போர்வையில் உலவும் பயங்கரவாத இஸ்லாமிய மதவெறி இயக்கங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்றும் இக்க்கொலையைச் செய்ததில் அவர்களுக்கு பங்கு உள்ளது  என்றும் ஊர்மக்கள் உறுதியாகக் கருதுகின்றனர்.

hindu-munnani-leader-murthy-photoசர்வேஸ்வரா கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அங்கு மசூதி ஒன்றைக் கட்ட இந்த மதவெறி அமைப்புகள் முயன்றதாகவும் அதை எதிர்த்து  சோழவரம் முன்சீஃப் நீதிமன்றத்தில் மூர்த்தி அவர்கள் வழக்குத் தொடர்ந்தார் என்றும் ஊர்மக்கள் கூறுகின்றனர்.  இந்த வழக்கை ஏற்று கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு எதுவும் செய்யக் கூடாது என்று முன்சீப் நீதிமன்றம் பிப்ரவரி-26 வெள்ளி அன்று தீர்ப்பு வழங்கியது.  கோயில் நிலம் மீட்கப் பட்டது குறித்து ஊர்மக்கள் நிம்மதியடைந்தனர்.  அதற்கு அடுத்த நாளே மூர்த்தி படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.

இந்தப் படுகொலை பூதூர் மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. மூர்த்தி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அந்த சிறிய கிராமத்தினர் கனத்த நெஞ்சுடன் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோயில் பட்டியில் இதே போன்ற ஒரு சம்பவம் மிக அண்மையில் நடந்தது. இந்துக் கோயிலிலைக் காக்கவும், இந்து உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஆண்டி என்ற ஏழை விவசாயி அன்னிய மத வெறியர்களால் பட்டப் பகலில் குரூரமாகக் கொல்லப் பட்டார். இப்போது அதே போன்ற பயங்கரம் சோழவரத்திலும் அரங்கேறியிருக்கிறது. இந்த இந்து பூமியில், ஜனநாயக முறையில் தங்கள் உரிமைகளைக்கு குரல் கொடுக்கும் சாமானியர்களான இந்து ஜனங்களை அன்னிய மத வெறி சக்திகள் கொலைவெறி கொண்டு குறிவைத்துத் தாக்கி அழிக்கிறார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

hindu-munnani-leader-murthyஇதன் உண்மையான காரணங்கள் மாநில அளவிலும், தேசிய அளவில் தெரிந்து விடக் கூடாது என்ற நோக்கத்துடன் உள்ளூர் பிரசினை, நிலத் தகராறு, கோஷ்டி மோதல் என்ற பெயரில் இத்தகைய செய்திகள் சித்தரிக்கப் பட்டு முழுமையாக அமுக்கப் படுகின்றன. பாதிக்கப் படுபவர்கள் மிகவும் ஏழைகள், வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள் என்பதால், பாதிக்கப் பட்டவர்களின் பெரும் சோகங்களைக் கூட எடுத்துச் சொல்ல இங்கு ஆட்கள் இல்லை.

காவல்துறை இந்தப் படுகொலை பற்றிய அனைத்து உண்மைகளையும் தீர விசாரித்து வெளிக் கொணர வேண்டும். இந்தக் கொடும் செயலைச் செய்த கயவர்களைப் பிடித்து நீதிமன்றம் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும். இந்த மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை ஓயாமல் போராடும் மன உறுதியை இறைசக்தி இந்தக் கிராம மக்களுக்கு அளிக்கட்டும்.

இந்து உரிமைகளைக் காக்கத் தன் உயிரையே பலிதானமாகத் தந்த மூர்த்தி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊர்மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

18 Replies to “சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை”

 1. பலிதானம் தருபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. என்று முடியுமோ இது. இஸ்லாமியர்களின் அராஜகங்களை அரசும் ஓட்டு வங்கிக்காக கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இதற்குப் பெயரா மதசார்பற்ற அரசு?

 2. really a sad news to all but we have to get the result for is death.
  sure it will happen god is there. so hindu unity should be there to work for our society

 3. நாம் என்ன செய்ய முடியும் ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் கையில் உள்ளது .நம்மிடம் உள்ள சில உண்மையான ஹிந்துக்களையும் இது போல் இழக்க நேரிடுகிறது .உண்மையில் மனம் கனக்கிறது .ஆண்டவா இது என்ன சோதனை இந்த கொடுமைக்கு என்று தான் தீர்வு.

 4. இது மாதிரி செய்தி வரும் போது என்னை போன்ற ஹிந்துக்களுக்கு நெஞ்சில் இருந்தும் கண்ணில் இருந்தும் கண்ணீர் தன வருகிறது.
  இந்த மனகேட்ட அரசக்கதை நம்பி நம் மதத்தை கூட காப்பாற்ற முடியாது போல தெரியுது . இனியாவது ஹிந்துக்கள் ஒற்றுமையா இருக்க அந்த ஈசனை வேண்டுகிறேன்

 5. //திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோயில் பட்டியில் இதே போன்ற ஒரு சம்பவம் மிக அண்மையில் நடந்தது. இந்துக் கோயிலிலைக் காக்கவும், இந்து உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஆண்டி என்ற ஏழை விவசாயி அன்னிய மத வெறியர்களால் பட்டப் பகலில் குரூரமாகக் கொல்லப் பட்டார்.//

  நீங்களும் தி ஹிண்டு போல ஆகிவருகிறீர்கள் போலிருக்கிறது. அன்னிய மத வெறியர்கள் என்றால் என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கிறது. நேரடியாக அன்னிய கிறிஸ்துவ மதவெறியர்கள் என்று எழுதியிருக்கலாமே?

 6. தியாகி மூர்த்தி குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள்.

  இது மிகவும் கொடூரமான சம்பவம். அரசாங்கத்தின் மெத்தனமும், ஹிந்துக்களின் ‘நமக்கென்ன? அல்லது ச்சு ச்சு ..சரி அடுத்த செய்தியப் படிப்போம்’ என்ற போக்கும் ஒழிய வேண்டும்.

  இந்துக்கள் எக்காரணம் கொண்டும் இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ கடைகளில் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

 7. by talking about anniya mada veriyargal,you have injected your bit for the fight to create aliens.
  it might be an anniya religion but the people are indians and citizens.
  you have yourself revealed the beginnings of the tensions and the hatred.

  the thing that you are trying to suggest,that there is a design to grab the temple lands,reveals your insecurity.
  why do you feel insecure in a land where the so called hindus are supposedly a majority.
  is there a sub agenda somewhere.
  if the so called hindus are the majority,where is the reason or the necessity to feel paranoid.
  if you honestly and sincerely try to address the root of your insecurity,you will begin to understand that truth only triumphs and all insincere and inhuman and illegal attempts to browbeat others or even to eliminate others as it happened in this case,will ultimately lead to nought.

  (edited and published)

 8. kargil jay,
  you might be having the attitude of a so called hindu as you tell.
  why do you assume that everyone has the attitude.
  im asking you this because now i come inside the label of hindu.
  arasaangathin methanamum,can you get real at least some time or do you always exist in such states of paanoid delusion.
  some hindutva influence can be detected in your case.
  as the pioneers of hindutva have decided that the best way to forward their pet cause is to first turn every so called hindu into a moron who will have to believe inspite of being the majority,they have to fear the so called aliens.
  it is the so called alien who has the most to fear,which is what common sense suggests.
  so,common sense is inconvenient when one joins a hindutva brigade.
  maybe,the followers of hindutva are those who do not feel connected with the majority and their ways.
  then they might actually begin to realise what being a minority means.
  but alas,instead of realising the feelings of a minority,they leave no chance unused in their fight to arouse hatred against the minorities.
  a hafeez sayeed is labeled a criminal because he spreads hatred but a togadia or a singhal is a warrior for hindutva.
  if hindutva can have warriors,why cannot the extremists of islam.
  and that is how they shroud their fight for political supremacy,as fights for their god.

 9. அய்யா,சுவாமி நித்யாவை குறித்து வரும் செய்தி நம்பும்படி இல்லை. மத மாற்ற அந்நியசக்தி வேலையாக இருக்கலாம்.குமுதம்,குங்குமம் போட்டியாக
  இருக்கலாம்,விலைவாசி உயர்வு திசைதிருப்பும் நாடகமாகவும் இருக்கலாம்.அவதார் அனிமேஷன் வேலை யாகவுமிருக்கலாம்.

 10. hindu-muslim otrumai onguga.. tiruchendur special train vandiai niruthuga. Kolloor to Attukal bagavathi special train vandiai niruthuga… ennaia otrumai… aha pullarikkuthu Railway Minister E.Ahmed in madhachaarbatra thanmaium, hindukkalin porumai gunamum. ithe pol, pugazh petra vainava tirutalamam tiruvarangam, angu kollidam aatru padugaiyil thavaraasan padugai enru oru idam. angu vainavathin arum perum saandrorgalaana vaianava thuravigalai pallipaduthum idam. thiruvarangathil pallikondirukkum perumanin ullathai senthamizhaal kavarntha Manavaala maamunigal enra miga peria thuraviyin pugazh udal pallipaduthapatta idamum inge ullathu. ithan nilamai padu mosam inru. thaniyaar oruvarin kaiyil(kuthagaikaarar inru nilathin sonthakkaarar), ullathu. avar antha idathukku pogum vazhiyayium adaithu, kovilaium aakramithu vittar(avarum oru hindu thaaan). inru antha idathukku miga arugil, sezhumaiayana neernilaiku pakkamaaga peria muslim durgah katta dubaiyil irunthu 3 kodi dinaar(note not in INR, in DINAR) selavazhikkappattu, erpaadugal nadanthu kondirukkinrana. vaazhga nam senthamizh manaatu thalaivar, valarga avarin thondu matrum manja thundu.

 11. en sir.. ivlo pesarom, hindu matha otrumai,perumai,kalaachaaram nu. en sir innum madhuraila dalit-caste hindus apdinnu verupaadu, koil kulamnu thagaraaru, suvar ezhuparathum en intha akramam. Jaathigalai vaithu manitha verupaadu enbathu sagikka mudiaathathu. oruvarin nalla ullam, thooimaiyaana nadathai, unmayiana kadavul bakthi ivai konduthan angeegaram. dalit enra worde thappu. Gandhi avangala Harijan – SriHariyin kuzhanthaigal enre azhaithaar. ana inikku namma thalivarunga,mukyama arbutha,athisiya koottam, deenai nilainaatum kootam ellam sernthu dalit apdinne pechu nadai vazhakkula kondu vanthaachu. verum blog, sites, pathrikai ithula mattume pulambikkittu irukkarathula no use. manasaala ethuvum nenachu mudinjaathan otrumaikku idame.

 12. Sir,
  any small make-shift church is attacked by somebody,all the Media steps in.

  for the instances like the murder of a Hindu Munnaani Office-bearer,no one talks about this subject.
  the value for the blood of the Majority can be asswsswd from the incident.
  Will the Hindus will learn any lesson from this?

 13. Here is one bit of information copied and pasted about this incident from HK site.

  on 27.02.2010, when Sri Murthy (39 years), who was a member of the Sarveswar Baba Committee and a Hindu Munnani activist, came out of the Temple of Sarveswar Baba after worship and lighting a lamp, was burtally murdered by Muslim fundamentalists in broad daylight. The sister of Sri Murthy told that Sri Murthy had informed her a few days before the murder that he has been receiving death threats from Muslims and that they are hatching plans to kill him.

  The local people strongly suspect that such fundamentalist activities are encouraged and supported by Yasim Ali, an Adocate of Madras High Court, Sri J.M.Haroon, an M.P., of Tenkasi and Sri H.Haroon.

 14. தாங்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்றீர்களா.மூர்த்தி கொலை தனிப்பட்ட விரோதம் தானே தவிர மத மோதல் அல்ல.கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கோபி.இவனுக்கு மூர்த்தியுடன் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது.மூர்த்தியை பற்றி அங்குள்ள முஸ்லிம் மக்கள் கூட யாரும் தவறாக பேசவில்லை.எனவே இந்து முன்னணி நபர் கொலை என்றவுடன் அதை இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லும் போக்கை தயவு செய்து நிருதுதுங்கள்.அந்த ஊரில் எந்த முஸ்லிம் அமைப்பும் இதுவரை இல்லை.தேவை இல்லாமல் பதட்டத்தை உருவாக்காதிர்கள்.
  இப்படிக்கு நேரடியாக களத்திற்கு சென்று வந்த ஒரே பத்திரிக்கையாளன்.

 15. ஒரு நண்பர் நாம் என்ன செய்யமுடியும் என்று கேட்கறார். ராவணனுக்கு ,ஹிட்லருக்கும் ,சாதம் உஷைனுகும் , ஏறன்யகசிபுகும், முடிவு வந்ததுஅதுபோல அதிகம் ஆடுபவனுக்கும் நாசம்கண்டிபகஏற்படும் .
  சத்தியம ஜெயதே வந்தே மாதரம்

 16. Pingback: arugil
 17. ஹிந்தும் முஸ்லிமும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்திய உருப்படும்

  மனிதனுக்கு முக்கியம் நிம்மதி யான வாழ்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *