முடிந்தவரையில் எப்போதும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படாத உணவுகளை சாப்பிடுவதே உடலுக்கு நலமானது. ஆயினும், நேரம் கிடைக்காதபோது அவசரத்துக்கு பாக்கெட்டுகளில் விற்கும் உணவுகளை சாப்பிடவேண்டிய நிலைக்கு வருகிறோம். உதாரணமாக, இரண்டு நிமிட நூடூல்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், சோடா, பழரச பானங்கள், சாக்கலேட் போன்று தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உண்பதற்கு தயாராக விற்பனை செய்யப்படும் உணவுவகைகளை கூறலாம்.
அதிகரித்து வரும் தொழில்மயத்தில் இவ்வாறு உணவுவகைகளும் தொழில்மயப்பட்டு நமது ஒவ்வொரு வேளை உணவிலும் இப்படிப்பட்ட தயார் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது என்பது சிரமமாகவே ஆகிவருகிறது. இப்படி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இப்படிப்பட்ட உணவு வகைகளில் சில பயங்கரமானவை, அதி ஆபத்தானவை. இப்படிப் பட்ட ஆபத்தான உணவுகளை குறைப்பது அல்ல, முற்றிலுமாகவே தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்த தொழிற்சாலை உணவுகளில் என்ன இருக்கிறது எனப்தும், அவற்றில் என்ன சேர்த்தாலும் அவற்றை பிரசுரிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு முழுக்க முழுக்க அனைத்து பொருட்களையும் அட்டையில் போடுவதில்லை என்பதே உண்மை.
இதில் சேர்த்திருக்கப்படும் பொருட்களை உங்களது பாட்டி அடையாளம் கண்டுகொள்வாரா என்று கேட்டுப்பாருங்கள். அப்படி உங்களது பாட்டியால் அடையாளம் காணமுடியவில்லை என்றால், அது ஒரு செயற்கையான உணவு, அல்லது மனிதன் உருவாக்கிய வேதிப்பொருள் என்று கண்டுகொள்ளலாம். அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் கண்டுகொள்ள உங்களுக்கு ஒரு பிஹெச்டி படிப்பு
வேண்டுமெனில், அந்த பொருளைத் தவிர்ப்பதே சிறந்த வழி.
கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பொருட்கள் பல்வேறு ரெடி உணவு வகைகளில் சேர்க்கப் படுகின்றன. அவை கெட்டுப் போகாமலிருப்பதற்காகவும், அவற்றிற்கு கவர்ச்சிகரமான வண்ணம் கொடுக்கவும், அவற்றிற்கு சுவையை அதிகரிக்கவும், அவற்றிற்கு மணம் கொடுக்கவும் சேர்க்கப்படும் இப்படிப்பட்ட செயற்கைப் பொருட்கள் உடலுக்கு தீங்கிழைக்கின்றன.
கீழே இருக்கும் பொருட்கள் முற்று முடிவானவை அல்ல. அவை ஒரு சாம்பிள் மட்டுமே.
சேர்க்கப்படும் பொருள்: செயற்கை வண்ணங்கள், இவை நிலக்கரி கழிவிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
எதற்காக சேர்க்கப்படுகிறது: உணவுப்பொருட்களுக்கு ஆழ்ந்த கவர்ச்சிகரமான வண்ணம் கொடுப்பதற்காக உபயோகப் படுத்தப் படுகின்றன.
ஏன் தீமை?: இவை மனித உடலில் பல ஒவ்வாமை (allergy)களை தோற்றுவிக்கின்றன. ஆஸ்த்மா, களைப்பு, தோல் வியாதிகள், தலைவலி, hyperactivity என்னும் அமைதியற்ற தன்மை.
மேலதிக தகவல்கள்: yellow#2, red#1 என்றுதான் இந்த வண்ணங்கள் அழைக்கபப்டும். இவற்றில் என்ன இருக்கிறது என்பதை உணவு தொழிற்சாலைகளில் உழைப்பவர்கள் கூட அறியமாட்டார்கள். இவைகள் என்னனென்ன, அவற்றின் மூலம் வரும் தீங்குகள் என்ன என்பதை பற்றிய கோப்பு இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: செயற்கை மணங்கள்
எதற்காக சேர்க்கப்படுகிறது: உணவுப்பொருட்களுக்கு மூக்கை துளைக்கும் சாப்பாட்டு மணத்தை கொடுக்க
ஏன் தீமை?: இவையும் மனித உடலில் பல ஒவ்வாமைகளை (அலர்ஜி) தோற்றுவிக்கின்றன. தோல்சொறி, எக்ஸீமா, hyperactivity என்னும் அமைதியற்ற தன்மை உருவாகிறது. இவை உடலில் இருக்கும் என்சைம்களையும் ஆர்.என்.ஏ(RNA), தைராய்டு சுரப்பி ஆகியவற்றையும் பாதிக்கின்றன
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: செயற்கை இனிப்பு, அதாவது செயற்கை சர்க்கரை (Acesulfame-K, Aspartame, Equal®, NutraSweet®, Saccharin, Sweet’n Low®, Sucralose, Splenda® & Sorbitol), இவை செயற்கையாக உருவாக்கப்பட்ட, கலோரி தராத இனிப்புகள்.
எதற்காக சேர்க்கப்படுகிறது: டயட் (diet) உணவு வகைகளில் இனிப்பும் குறையக்கூடாது, அதே நேரம் கலோரியும் குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக இவை சேர்க்கப்படுகின்றன.
ஏன் தீமை?: இவற்றில் பல செயற்கை சர்க்கரைகள், புற்றுநோய், தலைசுற்றல், மனப்பிராந்தி, தலைவலி கொடுப்பதாக ஆராய்ச்சிகளில் தெரியவருகிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: பென்சோயேட் தடுப்பான்கள் – Benzoate Preservatives (BHT, BHA, TBHQ)
எதற்காக சேர்க்கப்படுகிறது: கொழுப்புகள், எண்ணெய்கள், ஆகியவை கெட்டுப்போகாமல் இருக்க (அல்லது பழைய எண்ணெய் வாடை வீசாமல் இருக்க) இவை சேர்க்கப்படுகின்றன.
ஏன் தீமை?: ஆஸ்த்மா, rhinitis, dermatitis, கட்டிகள்,urticaria ஆகியவை தோன்றலாம். இதுவும் ஹைப்பர் ஆக்டிவிடி என்னும் அமைதியற்ற தன்மையை உருவாக்குகிறது. இது மனித உடலில் உள்ள எஸ்ட்ரோஜன் சமன்பாட்டை குலைக்கிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: புரோமினேட்டட் தாவர எண்ணெய் – Brominated Vegetable Oil – BVO.
எதற்காக சேர்க்கப்படுகிறது: ஆரஞ்சுச் சாறு, சோடா, குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது அவற்றின் ருசியை அதிகரிக்கிறது.
ஏன் தீமை?: இது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகள், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது ஈரல், விதைப்பைகள், தைராய்டு சுரப்பி, இதயம், கிட்னி ஆகியவற்றை பாதிக்கிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் – High Fructose Corn Syrup
எதற்காக சேர்க்கப்படுகிறது: கரும்பு சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப் படுகிறது. இது எளிதில்
குளிர்பானங்களுடன் கலந்து இனிப்பு சுவையை அதிகரிக்கிறது.
ஏன் தீமை?: இது உடலில் உள்ள ப்ரக்டோஸ் fructose கொழுப்பாக ஆவதை அதிகரிக்கிறது. இது நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் அதிகரிக்க காரணமாகிறது. இது எளிதில் ஈரலால் செரிக்கப் படுவதில்லை.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: அஜினோமோடோ – Monosodium Glutamate எனப்படும் MSG
எதற்காக சேர்க்கப்படுகிறது: உருளைக்கிழங்கு சிப்ஸ், ரெஸ்டாரண்ட் சாப்பாடு, சூப்கள் மற்றும் ஏராளமான உணவுகளில் இது ருசியை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது
ஏன் தீமை?: பசியை அதிகரிக்கிறது. தலைவலி, நெஞ்செரிச்சல், தலைசுற்று, பலவீனம், மூச்சு வாங்குதல், வீக்கம், இதயத்துடிப்பில் மாற்றம், மூச்சுவிட கஷ்டம் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: ஓலெஸ்ட்ரா – Olestra. இது செரிக்கமுடியாத செயற்கை கொழுப்பு.
எதற்காக சேர்க்கப்படுகிறது: இது உருளைக்கிழங்கு சிப்ஸ், போன்றவற்றை வறுக்கவும், கொழுப்புக்கு பதிலாக பேக்கிங்கில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் கொழுப்பு சத்தே இல்லை என்பதால், கொழுப்பு சத்து குறைவாக உள்ளதாக உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை விளம்பரம் செய்யமுடிகிறது
ஏன் தீமை?: இது பல உணவுச்சத்துக்களை நம்மால் செரிக்க முடியாமல் ஆக்குகிறது. இது
வயிற்றுக்குழாய் வியாதிகள், வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, ரத்தம் போகுதல் ஆகியவற்றை கொடுப்பதாக அறியப்படுகிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: டால்டா, மார்கரைன்
எதற்காக சேர்க்கப்படுகிறது: வெண்ணெய்க்கு பதிலாக இது விலைகுறைந்த மாற்றாக உபயோகப் படுத்தப் படுகிறது.இது தொழிற்சாலைகளில் தாவர எண்ணெய்களை மிக அதிகமான வெப்பத்தில் நீராவியோடு கலந்து வேதிவினையின் பின்னர் உருவாக்கப்படுகிறது.
ஏன் தீமை?:இவை transfat என்று அழைக்கப்படுகின்றன.இவை மனித உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும், இதய நோய் அதிகரிப்பதற்கும், மாரடைப்புக்கும் முக்கியமான ஒரு காரணியாக சொல்லப்படுகிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
நீங்கள் சாப்பிடும் பொருட்களை பரிசோதித்து பாருங்கள். அவற்றில் மேற்கண்ட பொருட்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
Hi, thanks for contributing in spreading this awareness around the globe regarding artificial chemical dengerouse food additives being mixed into ready made foods we eat, or could possibly start eating. And also, thanks for linking to the pdf file so people can easier pin point those bad food aditives and avoid them in their everyday diet!
Dear Sir
This article by Sri R Gopal is very interesting. no doubt as the Sanskrit slogan goes ” Annam Pranam” ( Food is divine!). Do we give so much importance to what we eat or just ape the West and hog whatever is churned out by the factories ?
However a few facts need to be considered before agreeing to this article fully. Coal Tar derivative dyes and colours are banned totally. Therefore they can not and will not be used by manufacturers of repute. Similarly some of the anti-oxidants like BHA are also banned in India. One should not blame all the ready to eat foods as bad. Some of them are good and serving a purpose, especially when one is travelling, recouping from sickness and need a snack etc. A bar of chocolate, malted / chocolate beverage or a pack of biscuits serve that purpose.
Therefore one has to make a judicious choice of eating what is right. At the same time it is undisputable fact that fresh fruits, vegetables and traditional snacks made at home by our mothers and grand mothers are the best. Whatever we eat and enjoy due to peer pressure as well as repeated advertisement and associated marketing gimmicks are certainly doing irrepairable damage to the young and old alike be it a bottle of aerated drink, packs of noodles, plates of pizza.
It is also very important to note that many of the artificial ingredients that are used by the manufactures are also not listed. Even if listed they are too complicated and in too fine print for the end consumer to decipher.
In the end it is buyer and consumer who has to be beware . He should not be carried away by fancy packaging as well as related USPs as promoted by the manufactures !
எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம் உண்டு. கோககோலா போன்ற பானங்களுக்கு அவற்றின் ‘ingredients’ பாட்டில்கள் மேல் அச்சடிக்கப்பட வேண்டியதில்லை என்று அனுமதி உள்ளதா? மற்றும் இந்த பாட்டில்களில் ஏன் ‘M.R.P.’ அச்சிடப்படுவதில்லை?
திரு ஆர். கோபால் அவர்களே!
அற்புதம்.
நான் வெகு வெகு வெகு நாட்களுக்கு பின் நவீன உணவை பற்றின
சரியான தொனியுடன் கூடிய கட்டுரையை படித்தேன்.
சாதாரணமாக இது போன்ற கட்டுரைகள் மக்களை பயமுறுத்தும். ரெடி
உணவை சாப்பிட்டால் சாக வேண்டும் என்ற ரீதியில்தான் இருக்கும்.
நீங்கள் “Consumer Awareness”ஐ முக்கியபடுத்தி எழுதியுள்ளீர்கள்.நன்றி.
(1)முதலில் இந்த உணவைப்பற்றின ஒரு அடிப்படை. இன்று நவீன உலகில்
வாழும் மனிதனுக்கு இந்த விஷயங்கள் கண்டிப்பாக தெரிந்துள்ளன.
செயற்கையான வேதியியல் பொருட்களை பற்றின அறிவு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். யாரோ ஏமாற்றி இவன் தலையில் கட்டுவதில்லை.
(2)நான் எடுக்கும் முடிவுக்கு நானே காரணம். பசி எடுக்காமல் சாப்பிட்டாலோ, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதோ தவறு என்பது
உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தெரியும். மீறி நாக்கை அடக்க
முடியாமல் சாப்பிட்டால் அனுபவிக்கட்டும்.
(3)அடுத்து இந்த அலர்ஜி சமாச்சாரம். வெகு சிலருக்குத்தான் அலர்ஜியால்
ஆபத்து ஏற்படுமே தவிர எல்லாருக்கும் அல்ல. மாதம் ஒருமுறையோ,
எப்பொழுதோ ஒருமுறையோ செயற்கை உணவையே சாப்பிட்டாலும்
நம் உடல் தாங்கிவிடும்.
(4)ஆண், பெண் என்று இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய நிலையில்
ரெடி உணவை கண்டிப்பாக விலக்க முடியாது. ஆனால் நீங்கள் கூறும்
அறிவுரையின்படி கொஞ்சம் நேரம் செலவிட்டு, படித்து, பின் உணவை
உண்ணலாம்.
(5)அமேரிக்காவில் சிலர் ஒவ்வொரு நாளும் 4 அல்லது 5 கோகோ கோலாவை குடிக்கிறார்கள். 20 வருடங்கள் கழித்தும் அவர்கள் நல்ல ஆராக்கியத்துடனேயே வாழ்கிறார்கள்.
(6)அமேரிக்காவில் 3ல் ஒரு குழந்தை அதிக எடையுடன் உள்ளது. இதற்கு
முக்கிய காரணம் அம்மாக்கள்தான். தன் குழந்தை என்ன கேட்டாலும்
வாங்கி கொடுத்தால் அந்த குழந்தை தன் வயதில் 10 முதல் 15 வருடங்களை
இழக்கிறது. இது செயற்கை உணவினால் அல்ல. குழந்தையை ஒழுங்காக
வளர்க்காததுதான்.
(7)எல்லா செயற்கை வேதியியல் பொருட்களும் உடலை கெடுக்காது. சில
பொருட்கள் மட்டுமே, அதுவும் அளவிற்கு அதிகமாக ஆகும்போதுதான்.
ஜுரம், பேதி போன்ற வியாதிகளுக்கு நாம் சாப்பிடும் மருந்துகளிலும்
செயற்கை வேதியியல் பொருட்கள் உள்ளன. மருத்துவர் கூறும் அளவில்
சாப்பிடும்போது நமக்கு ஒரு தொந்தரவும் இல்லை.
செயற்கை வேதியியல் பொருட்கள் இல்லாத உலகம் இனி ஏற்பட
வழியிருப்பதுபோல் தெரியவில்லை. பசுமை புரட்சி 1960களில் ஏற்பட்ட
காலத்திலிருந்து நம் பெற்றோர்கள், நாம் எல்லோரும் உரம் போட்ட
அரிசியை சாப்பிட்டு நன்றாகத்தானே உள்ளோம்.!
கடையில் எத்தனையோ பொருட்கள் இருக்கும். விற்பவன் என்ன
வேண்டுமானாலும் விளம்பரம் செய்யட்டும். எனக்கும் கடவுள் கொஞ்சம்
சரக்கை கொடுத்திருக்கிறானே!
நான் ஒரு தவறை செய்து விட்டு, பணக்கார கம்பெனிகளை குறை கூற
மாட்டேன். நான் ஆரோக்கியமாக வாழ ஆசைப்பட்டால் எந்த பணக்காரனும் என்னை தொந்தரவு செய்வதில்லை.என் தலையில் எந்த பொருளையும் கட்டுவதில்லை. ஆரோக்கியமான உணவை மட்டுமே
நான் தேர்ந்தெடுக்க முடியும்.
முடிவு என்னுடையது… விளைவும் என்னுடைய முடிவினால் ஏற்படுவதே!!!
நண்பர் பாலாஜி அவர்களே
நல்ல சிந்தனை –
இந்த பணக்காரனிடம் ஒரு சின்ன பிரச்சனையை உண்டு – கோல காரன் market share பிடிக்க செய்த சூழ்ச்சியை நீங்கள் அறிவிஈர்கள் என நம்புகிறேன் – gold spot, limca இத்யாதியும் நல்லவை இல்லை என்றாலும் கோல போல இல்லை – கோலா காரன் limca kaaranai மிரட்ட – ஒரே வாரத்தில் ஊரில் உள்ள மொத்த காலி bottle அத்த்தனய்ம் விலைக்கு ஆங்கி விட்டான் – lima காரர் வேறு வழி இன்ற மிரட்டலுக்கு பயந்து தனது நிறுவனத்தை விற்றார்.
காசு இருக்கும் நிறுவனங்கள் தங்களது மோசமான பொருள்களை திணிக்கின்றன – retail stores களுக்கு அதிக margin கொடுத்து shelf space வாங்குகின்றன (e.g. mangaldeep agarbaththi by ITC – they have taken more shelf space than genuinely good brands) – இன்றைக்கு கோலாவுக்கும், bingo வுக்கும் இருக்கும் shelf space – இளநீருக்கும், கடலை மிட்டாய்க்கும் உண்டா ? இது பூரணமாக consumer problem கிடையாது – பணம் இருப்போர் பற்பல யுக்திகளை பயன் படுத்தி பல படி பணம் பண்ணுகின்றனர் – tasmac வைப்பவன் நல்லவன் – குடிப்பவன் தான் kettavan என்று சொல்லிவிட முடியாதே
அருமையான விழிப்புணர்வு ,சமையல் எண்ணைகளை பற்றியும் ,அதில் உள்ள கொழுப்பு நீக்கும் முறைகளின் கெடுதல்கள் பற்றியும் ,மரபணு மாற்றிய என்னை விதைகள் நாம் உபயோகிப்பதை பற்றியும் ,அதில் வரும் கெடுதல்கள் பற்றியும் ,நம் பாரம்பரிய இயற்கையை கெடுக்காத சமையல் எண்ணெய் பற்றியும் ஒரு கட்டுரை தருமாறு திரு.கோபால் தர வேண்டும் ..
அன்புடன்
ராஜேஷ்
Top Ramen Noodles தயாரிக்கும் Nissin Products க்கும் என் மகனுக்கும் இடையேயான மின்னஞ்சல் இந்த சுட்டியில் https://kidzmagzine.com/?tag=top-ramen ( Does Top Ramen noodles has wax in it?) சில விஷயங்களை தெளிவாக்கும்
மேலும் Pizza பற்றிய ஒரு தகவல் https://kidzmagzine.com/?p=85#comment-115 (Like to have some Hair pizaa???)