குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!

சில நாட்களுக்கு முன்பு வந்த ஒரு தினமலர் செய்தி:

மதமாற்ற முயற்சி: 5 பேர் சிறைபிடிப்பு
மார்ச் 21,2010,00:00 IST

பல்லடம்: பல்லடம் அருகே வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற ஐந்து பாதிரியார்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ளது குள்ளம்பாளையம் கிராமம். இங்கு, நேற்று காலை நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் கண்ணையன், பிரைட், மத்தியாஸ், பால்ராஜ், வின்சென்ட் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு, வீடு வீடாகச் சென்று அங்குள்ள பொதுமக்களை, ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங் கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்.

கட்டாய மதமாற்றத்தை வலியுறுத்திய பாதிரியார்களை குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறை பிடித்தனர். காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிரியார்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டேஷனில், ”இனி இது போல் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது,” என, எச்சரித்து பாதிரியார்களை அனுப்பி வைத்தனர். பல்லடம் பகுதியில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு கிறிஸ்தவர்கள் பைபிள் வழங்கியுள்ளனர். இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

நாம் விசாரித்ததில் உண்மையில் குள்ளம்பாளையம் என்ற இந்த ஊரில் எந்த இந்து அமைப்புகளுக்கும் கிளைகளும், தொண்டர்களும் இல்லை எனத் தெரியவந்தது.   கிறிஸ்தவ மதமாற்றிகளின் செயல்பாடுகளைக் கண்டு  எரிச்சலைடந்த  மக்கள் தாமாகவே  இயல்பாக ஒன்று சேர்ந்து  இந்த நல்லகாரியத்தைச் செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு நடந்து பத்து நாட்கள் கழித்து அப்பகுதிக்கு இந்து அமைப்பினரும்,  சமய குருமார்களும் சென்று  வீடு வீடாக மக்களைச் சந்தித்துள்ளனர்.  அந்தக் குழுவுடன் சென்ற  அன்பர் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் அந்த சந்திப்பு பற்றி நமக்கு செய்தியும் சில படங்களும் அனுப்பியுள்ளார்.  சச்சிதானந்தன் சிறந்த தமிழன்பர்;  சைவ நெறியாளர்.  சென்னையில் காந்தளகம் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.  பன்னிரு திருமுறைகளையும்  இணையத்தில் சீரிய வடிவில் கிடைக்கச் செய்யும் தேவாரம்  வலைத்தளத்தை உருவாக்கி, நடத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.

அவர் அனுப்பிய செய்தியை அவரது சொற்களிலேயே வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

********************

பங்‌குனி 17, 2041 புதன்கிழமை, பிற்பகம் 2.30 மணி.

கோயம்புத்துரில் இருந்து தெற்கே ஒரு மணி நேரம். பேருந்தில் பயணம். பல்லடம் சென்றேன். இந்து மக்கள் கட்சியின் பல்லடத் தலைவர் அண்ணாதுரை. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ச்சுன் சம்பத்து. இராம சேனையின் தமிழ் மாநிலத் தலைவர். துறவிகள் வையாபுரி அடிகள், நாகசத்திபீடத்து அடிகள், கிருட்டினமூர்த்தி அடிகள் ஆகியோர் மூவர். உடுமலை, பழநிப் பகுதிகளின் இந்து மக்கள் கட்சி அமைப்பாளர்கள்.இவர்களுடன் பல்லடத்திலிருந்து உடுமலை செல்லும் சாலையில் 10 கிமீ. சென்றோம். மூன்று வண்டிகளில் பயணம்.

kullampalayam_swami_walking_to_huts

மாலை 4 மணி. வண்டிகள் நின்ற இடம் குள்ளம்பாளையம். முதலில் தெரிந்தது பிள்ளையார் கோயில். முன்னே திறந்தவெளி. தொலைவில் அரச மரம். மரத்தைச் சுற்றிச் சீமெந்துத் திண்ணை. அங்‌கே நீர்வழங்‌கு உயர் தொட்டி. அருகில் பால் சேகரிப்பு நிலையம். இரண்டொரு பெட்டிக் கடைகள்.

300 வீடுகள். அனைத்தும் மிகவும் சுத்தமான சூழலில். கழிப்பறைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி. சுவர்களில் பளிச்சிடும் வெண்மை. குழாயில் நீர்.

அண்ணாதுரை ஏற்பாட்டில் ஒலிபெருக்கியில் பத்திப் பாடல்கள். பிள்ளையார் கோயிலுக்கு வழிபடச் சென்றோம். மிகவும் சுத்தமான பராமரிப்பு. வில்வ மரம். கால் கழுவக் குழாய் நீர். வலம் வரும் வீதி முழுவதும் சீமந்துத் தரை.துறவிகள் தமிழில் பாடினர், வில்வம் சொரிந்தனர். வண்டியில் போனவர்கள் மட்டும் இருந்தோம். ஒலிவாங்‌கியைக் கொடுக்க பாடல்கள் உரத்துக் கேட்டன.

ஊரவர் ஒருவர் வந்தார், தண்ணி மறித்துக் கட்டிக் கொண்டிருந்தேன். குளித்துவிட்டு வருகிறேன், என்றார். சென்றார். நீறணிந்த முதிய பெண்கள் இருவர் வந்தனர். வழிபட்டனர்.மாணவர் வந்தனர். பெரியவர்கள் வந்தனர். சிறிய கூட்டம் கூடியது. வழிபாடு முடிந்தது.

வந்தவர் அனைவரின் நெற்றியில் திருநீறு. வந்திருந்த பெரியவர் ஒருவரிடம் திருமுறைத் திரட்டு நூலும் திருவாசகமும் முறையாகத் தட்டில் வைத்துக் கொடுத்தோம். கோவிலுக்கு வெளியே வந்தோம். வீடுகளை நோக்கி நடந்தோம். தேவார திருவாசகங்‌களை ஓதினோம். ஒவ்வொரு வீடாகச் சென்றோம். வாயிலில் நின்றோம். வந்தவருக்கு அடிகளின் திருக்கரங்‌கள் நீறிட்டன. திருவாசகம் நூலின் படி கொடுத்தோம். சிறார்களுக்கு இனிப்புகள் வழங்‌கினோம். அடிகளின் திருவடிகளில் வீட்டார் வீழ்ந்து வழிபட்டனர்.

தெருவில் போவோர் வருவோர் யாவருக்கும் அடிகளார் நெற்றியில் நீறிட்டனர். பள்ளி மாணவர், பால் கொணர்வோர், கட்டடப் பணியாளர், வேளாண் நிலத்திலிருந்து திரும்புவோர், கடைக்குச் செல்வோர், வேடிக்கை பார்த்தோர் யாவரின் நெற்றியிலும் நீறு.

பத்து நாள்களுக்கு முன்பு அங்‌கு ஒரு கோயிலில் குடமுழுக்கு. ஊரே திரண்டிருந்தது. அந்த நேரம் அரச மரத்தடியில் சிறு கூட்டம். நாகர்கோவிலைச் சேர்ந்த 5 கிறித்தவப் பாதிரிகள். குள்ளம்பாளையம் வந்தனர். வீடுகளுக்குச் சென்று விவலிய நூல் கொடுத்தவரை வழிமறித்து அழைத்துவந்து அமர வைத்திருந்தனர் ஊரவர் சிலர். இச் செய்தி குடமுழுக்கு விழா அடியவர்களுக்கு எட்டியது. அரசமரத்தடியில் பெரும் கூட்டம் கூடியது. காவல்துறைக்கும் ஊடகங்‌களுக்கும் தெரிவித்தனர் சிலர்.

புறப்படத் தயாரான பாதிரிகளை மக்கள் விடவில்லை. பாதிரிகளோ கெஞ்சுகின்றனர், மன்றாடுகின்றனர். மக்களோ ஒப்பவில்லை. மக்களின் தடுப்புக் காவலில் பாதிரிகல். காவலரும் ஊடகத்தாரும் வந்தனர். ஊரவருள் ஒருவரான விசுவநாதன் பாதிரிகள் மீது முறைப்பாடு எழுதிக் காவல்துறையிடம் கொடுத்தார். யாவரும் காவல்நிலையம் சென்றனர். முதல் தகவல் அறிக்கை எழுதக் காவல்துறையினர் மறுத்தனர். பாதிரிகள் மீண்டும் குள்ளம்பளையம் வரமாட்டோம், மதமாற்றப் பணிகளில் ஈடுபடோம் எனக் கடிதம் எழுதிக் காவல்துறையில் கொடுத்தனர். பாதிரிகளை மக்களும் காவல்துறையினரும் விடுவித்தனர். இச்செய்திகளை விசுவநாதனும் மக்களும் எம்மிடம் கூறினர்.

kullampalayam-children-wearing-vibhuti

பிள்ளையார் கோயிலுக்கு முன்னுள்ள வெளியில் கூட்டம். இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ச்சுன் சம்பத்து, குள்ளம்பாளைய மக்களைப் பாராட்டினார். நானும் பேசினேன் பாராட்டினேன். “யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை” என்ற திருமந்திரப் பாடலை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ச்சுன் சம்பத்துச் சொல்லக் கூட்டத்தினர் முழுவதும் சேர்ந்து பாடினர்.

kullampa2

கூட்டம் நிறைவுற்றது. மூன்று வண்டிகளில் துறவிகளும் மற்றவர்களும் ஏறினோம், பல்லடம் வந்தோம்.
இரவு 0730 மணி. அவரவர் தத்தம் இடம் திரும்பினோம்.

********************

குள்ளம்பாளையம் இந்துக்களின் முனைப்பையும்,  விழிப்புணர்வையும், ஒற்றுமை உணர்வையும் பாராட்டுகிறோம்.  ஒவ்வொரு கிராமத்திலும்  இதே போன்ற இந்து விழிப்புணர்வு தோன்றிட வேண்டும். இந்தச் செய்தியைக் கேள்வியுற்று உடனடியாக அங்கு சென்று மக்களைச் சந்தித்த  சமய ஆசாரியார்கள் மற்றும் இந்து அமைப்பினரின் செயலும் பாராட்டுக்குரியது. இந்த இரண்டு நிகழ்வுகளுமே சிறந்த முன்னுதாரணங்கள்.  இது மேன்மேலும் பெருகவேண்டும்.

மேலும், இந்து அமைப்புகள் நிகழ்த்திய  கூட்டம் ஒரு symbolic அளவில் நின்று விடாமல் தொடர்ந்து அவர்கள்  அப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கும் செல்ல வேண்டும்.  அங்கு இறையுணர்வைப் பரப்புவதோடு மட்டுமின்றி  மக்களின் கல்வி, மருத்துவ, சமூகத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, அரசு நிர்வாகம் மூலமும் சேவை அமைப்புகள் மூலமும் சீரிய முறையில் அத்தேவைகள் பூர்த்தி செய்யப் பட அவர்கள் உதவ வேண்டும்.

தமிழகத்தின் சில கிராமங்களில்  தாழ்த்தப் பட்ட மக்கள், தலித்துகள்  கோயிலுக்குள் நுழைய  முடியாத நிலைமை இன்றும் நீடிக்கிறது. தாங்கள் செல்லும் கிராமங்களில் இத்தகைய நிலை இருப்பது தெரியவந்தால்  உடனடியாக ஊர்மக்களுடன் கலந்து பேசி தலித் மக்களக்கு ஆலய நுழைவு உரிமையைப் பெற்றுத் தரவும்  இந்து அமைப்புகள் பாடுபட வேண்டும்.

கிறிஸ்தவ மதமாற்றத்தைக் காந்திஜி ப்லமுறை கடுமையாக சாடியுள்ளார் –

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்” – ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

மேலும், ”கிறிஸ்தவ மதமாற்றம் என்பது ஒரு அபாயகரமான கொடு விஷம்” (the idea of Conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth) என்று ஒரு கிறிஸ்தவ பேராசிரியருடனான தனது உரையாடலில் காந்திஜி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில்  குள்ளம் பாளையம்  மக்களின் செயல்  ஜனநாயக ரீதியிலான, காந்திய வழிமுறை. ஆனால், அவர்கள் சிறைப்பிடித்த  சமூகவிரோதிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் வெறும் எச்சரிக்கையுடன்  காவல் துறையினர் அனுப்பியது பெரும் தவறு.

வீட்டைக் களவாட வரும் திருடர்கள் மீதே கடுமையான நடவடிக்கை எடுக்கப் படுகிறது. நாட்டின் பண்பாட்டை அழிக்கத் திட்டமிட்டு வேலை செய்யும் புல்லுருவிகளுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் தானா??

51 Replies to “குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!”

 1. //னால், அவர்கள் சிறைப்பிடித்த சமூகவிரோதிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் வெறும் எச்சரிக்கையுடன் காவல் துறையினர் அனுப்பியது பெரும் தவறு.//
  ஆட்சியாளர்களின் விரோதத்தை சம்பாதிக்காமல் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும், ஆளும் கட்சியினர் தயவில் வேலை கிடைத்ததற்க்கு செய்யும் கைமாறும் தெரிகிறது.

 2. ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங் கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்.
  is there any bit notice to prove this… without evidence dont publish such a words.they cud have said to believe in Jesus not to believe in money r house still lot of christians live without their own house so we prior to provide good for them.. we dont want christians who come for money we need christian who shows Jesus by his way life

 3. Thanks “Tamilhindu” for bringing this news to the web. The Hindus need definitely one popular TV channel.

 4. அசிங்கமான அருவருப்பான செயலைக் கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.

  இவர்கள் நாட்டுக்கு, சமுதாயத்துக்கு கேடு விளைவிப்பவர்கள்.

  தங்களுடைய மதத்தை தவிர பிற மதங்களை வெறுக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்கிற வெறியில் வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை மக்களிடத்தில் திணிக்கிறார்கள். கையூட்டு கொடுப்பதாக கூறி ஆசை காட்டிவது அசிங்கமான அவமானம்.

  நாகரீகமும் இல்லை, மனிதப் பண்பும் இல்லை, நேர்மையும் இல்லை.
  அருவருப்பு, அசிங்கம், காட்டுமிராண்டித்தனம், வெறுப்புக் கருத்துக்கள் இவையே இவர்களிடம் உள்ளன.

  கிறிஸ்தவத்தை தழுவிய மேலை நாடுகள், அப்பட்டமான விபச்சாரக் கலாச்சாரத்தில் திளைக்கின்றன.

  ஐரோப்பையும் , அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் கெடுத்து விட்டு இப்போது இந்திய சமுதாயத்தைக் கெடுக்க முழு மூச்சில் ஈடுபடுகின்றனர்.

  நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், உங்களால் முடியுமானால் நீங்கள் எங்கிருந்து இந்த மதத்தை இறக்குமதி செய்தீர்களோ, அந்த ஐரோப்பாவிற்கு சென்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சாகும் வரை அந்தப் பெண்ணை விட்டு பிரியாமல் வாழச் செய்ய முடியுமா, என்று நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.

  அப்படி முடியாவிட்டால் இங்கே இந்து மதத்தால் உருவாக்கப் பட்ட நேர்மையான குடும்ப வாழ்க்கை காலச்சாரத்தை சீரழிக்க முயலும் விஷச் செயலை செய்வது ஏன்?

  பதில் சொல்!

  நல்ல நேர்மையான குடும்ப வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பது இந்திய இனம். எங்களுக்கு கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம். கையூட்டு கொடுக்க முயல்வது மாமா தனமே.

 5. தமிழ்ஹிந்துவின் பணி சிறக்க வாழ்த்துக்கள். இத்தகைய எளிய ஆனால் ஞானம் உள்ளார்ந்து நிற்கும் மக்களாலேயே ஹிந்து தர்மமும் இந்த தேசமும் வாழ்கிறது. விலைக்குப் போன ஊடக கீழ்த்தரங்களால் அல்ல.

 6. எட்வின்

  நீங்கள் நியூயார்க் நகரில் இருக்கும் தமிழ் கிறிஸ்துவ மதப் பிரச்சாரகர்களில் ஒருவரா? ஆதாரம் இருக்கிறது நண்பரே. ஒவ்வொரு ஊரிலும் இவர்கள் மூளைச் சலவை செய்வதையும், பணம் வேலை கொடுப்பதாக ஆசை காட்டியும் இவர்கள் செய்யும் அட்டூழியங்களை வீடியோ ஆதாரமாகவே எடுத்துத் தரத் தயார். அப்படி ஆதாரம் கொடுத்தால் என்ன செய்ய உத்தேசம்? உடனே கிறிஸ்துவ மதத்தைத் தலை முழுகி விட்டு இந்துவாகி விடுவீர்களா? சொல்லுங்கள் ஒன்றல்ல நூறாயிரம் ஆதாரங்களைத் தரத் தயாராக இருக்கிறேன். அந்த கிராமத்து இந்து மக்கள் அப்பாவிகள் ஏழைகள் அவர்களுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. என்னிடம் நேரடியாகவே வந்து என்னை விலைபேசியிருக்கிறார்கள் சில பாதிரிகள். சும்மா எதுவும் நடவாதது போல நடிக்காதீர்கள்.

  விஸ்வா

 7. குள்ளம்பாளையம் மக்கள் விலை போகாதது நல்ல விஷயம். இது போன்ற விஷயங்களை பதிப்பது வரவேற்புக்குரியது.

  ஆனால் கட்டாய மத மாற்றம் என்கிறீர்களே, என்ன கட்டாயம்? ஆசை காட்டுவது எப்படி கட்டாயம்? தவறான வார்த்தைப் பிரயோகம்.

 8. ச‌கோத‌ர‌ர் எட்வின் அவ‌ர்க‌ளே,

  நீங்க‌ள் எந்த‌ உல‌க‌த்தில் இருக்கிறீர்க‌ள்? I mean which part of world?

  //கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்…is there any bit notice to prove this… without evidence dont publish such a words.//

  கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள். உங்களுக்கு இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ எனக் கூறி & துண்டு பிரசுரம் வழங்கி வற்புறுத்தியுள்ளனர்.

  இலவச வீடு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, பணம் கிடைக்கும்’ – Verbal Commitment தான் கொடுபபார்க‌ள்.

  ப‌ல‌ இட‌ங்க‌லில் இருந்தும் ப‌ண‌ம் பெற்று, அதில் சிறு தொகையை ம‌ட்டும் ம‌க்க‌ளிட‌ம் கொடுத்து, மீதித் தொகைக்கு ப‌ங்களா க‌ட்டி – இதைப் ப‌ல‌ர் தொழிலாக‌வே செய்கின்ற‌ன‌ர். இது நீங்க‌ள் அறியாத‌தா?

  //we need christian who shows Jesus by his way life//

  கிறிஸ்து எந்த‌க் க‌ருத்துக்களை போத‌னை செய்தாரோ, அதே க‌ருத்துக்க‌ளின் ப‌டி தானே இந்திய‌ர்க‌ள் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ வாழ்ந்து வ‌ருகிறோம்?

  “ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்யாதெ, விபச்சார‌ம் செய்யாதே, அடுத்த‌வ‌ருக்கு உத‌வி செய்வ‌து க‌ட‌வுளுக்கு உத‌வி செய்வ‌து போல‌‍” – இதே க‌ருத்துக்க‌ள் இந்தியாவில் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ம‌க்க‌ள் பின்ப‌ற்றி வ‌ருகிர‌, வாழ்ந்து வ‌ருகிற‌ க‌ருத்துக்க‌ள் தானே?

  இப்போது புதிய‌தாக‌ சொல்ல‌ என்ன‌ இருக்கிர‌து என்று சொல்லுங்க‌ள்!

  இயேசு கிறிஸ்துவை இந்திய‌ர்க‌ள் இக‌ழ்வ‌தில்லையே. இப்போது இங்கெ வ‌ந்து ம‌க்களைக் கெடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன?

  ”நீங்க‌ள் புற‌ ஜாதியின‌ரிட‌த்தே போகாம‌ல் இஸ்ர‌வேல் புத்திர‌ரிட‌ம் போங்க‌ள்” என்று இயேசு கிறிஸ்துவே சொல்லி இருக்கிறாரே. இஸ்ரேலுக்கு போய் பிர‌ச்சார‌ம் ப‌ண்ணாம‌ல் இங்கே வ‌ந்து ஏற்கென‌வே ஒழுங்காக‌ இருப்ப‌வ‌ர்களைக் கெடுப்ப‌து ஏன்?

 9. ச‌கோத‌ர‌ர் எட்வின் அவ‌ர்க‌ளே,

  //still lot of christians live without their own house so we prior to provide good for them….//

  கிறிஸ்துவ‌ர்க‌ளுக்கு இன்னும் வீடு இல்லை. அவ‌ர்க‌ளுக்கு வீடு வ‌ழ‌ங்க‌வே முனைப்பு காட்டுகிறோம்.

  இதுதான் நீங‌கள் கிறிஸ்துவை பின்ப‌ற்றும் முறையா?

  த‌ன்னைப் போல‌ பிற‌னையும் நேசிக்க‌ வேண்டும் என்றார் இயெசு கிறிச்து. பிற‌ன் யார் என்ற‌த‌ற்க்கு ஒரு யூத‌ன் அடி ப‌ட்டுக் கிட‌ந்த‌ போது அவ்வ‌ழியே போன‌ யூத‌ குருமார் உத‌வ‌வில்லை. ஒரு ச‌மாரிய‌ன் உத‌வி செய்தான். அந்த‌ ச‌மாரிய‌னுக்கு யூத‌ன் யார் என‌க் கேட்டார். அதாவ‌து த‌ன‌க்கு ச‌ம‌ப‌ந்த‌மே இல்லாத‌, த‌ன் உற‌வின‌ர், ந‌ட்பு, மொழி, ம‌த‌, வ‌ர்க்க பேத‌ங்க‌ளைத் தாண்டி உத‌வி செய்வ‌துதான் பிற‌ருக்கு உத‌வுவ‌து.

  என‌வே நீங்க‌ள் உண்மையான‌ கிறிஸ்துவ‌ராக‌ இருந்தால் , கிறிஸ்து சொன்ன‌ ப‌டி, பிற‌னுக்கு, ஒரு இந்துவுக்கோ, முஸ்லீமுக்கோ வீடு வ‌ழ‌ங்க‌வே, உத‌வ‌ முனைப்பு காட்ட‌ வேண்டும்.

  இத‌னால் தான் நீங்க‌ள் த‌வறான‌ வழியை கிறிஸ்த‌வ‌ம் என்ற‌ பெய‌ரிலே ப‌ர‌ப்பி, உல‌கிலே இர‌த்த‌ ஆறு ஓட‌ விட்டு விட்டீர்க‌ள் என்று அறிங்க‌ர்க‌ள் சொல்கின்ர‌ன‌ர்.

  உண்மையான‌ கிறிஸ்த‌வ‌ம் என்ன‌ என்று நீங்க‌ள் தெரிந்து கொள்ள‌ விரும்பினால் என்னைத் தொட‌ர்பு கொள்ள‌வும். என் த‌ளத்திற்க்கு வ‌ந்து பார்வை இடுங்க‌ள்.

 10. குள்ளம்பாளையம் மக்களை நினைக்க எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள துறவிகள் போன்ற தொண்டர்கள் நம்முள் பலர் உருவாக வேண்டும். உண்மையில் இத்தகையோரே நம் இந்து தர்மத்தின் . காவலர்கள். அர்ஜுன் சம்பத் அரும் பணி செய்கிறார். அவர் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெற இறைவன் அருள்வாராக!

 11. ed win

  you will lose if you ask for proof – i will bring humans not just notices as proof. there are several families where brother is a christian (converted through enticement) and sister is hindu(who did not budge to the enticement) or the otherwise – i will bring these sisters and brothers as proof – (s)he will say how much money one gets, i can take you to villages where a bible speaker is given money on a per hour basis to speak at different gateherings on weekends (this is just like how a BPO business is run)
  In villages these guys are paid Rs 200 per hour and given pertrol allowance, a bike is ofcourse given for free – are you ready to come with me to see this for yourself….

  typical plot is to occupy lands of hindus and let the Speaker scream to the core. do some mesmirising stuff

  and what they distribute freebees to children and people – these guys o everything to attract people -this is no different that what the DMks do to attract crowd for their gatherings. Don’t you think these guys have targets – they work very muck like Airtlel consumer subscription – we have read 1 million mark, 1.3 million mark etc….

 12. RV,

  By your same argument giving Cash for Votes, Cash for talking in Parliment, CASH for SEX are all not wrong. May be I am missing something. I have seen some of your writings in Jeyamohan.in. It is very good , points well made. But whenever I see your arguments in tamilhindu your arguments are bit vague.

  Regards
  S Baskar

 13. for edwin if u r correct means then why r u compelling and keeping person to convert them so leave that work and see ur work if they belive they come join ur christians. why u r wasting the funds for that pastors and sister better u give the money to the government brother.

 14. இது போல் நம் ஹிந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது .அதே போல் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்யவேண்டும் குறிப்பாக கல்லூரிக்கு பணம் செலுத்துவது …

 15. RV

  கட்டாய மதமாற்றமென்றால். காசு கொடுத்தால் எப்படி கட்டாயம் காசு கொடுத்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டுமோ அது போல காசு கொடுத்தால் கட்டாயம் மதம் மாற வேண்டும்.

 16. ///is there any bit notice to prove this… without evidence dont publish such a words///

  யப்பா எட்வின்.. இல்லாட்டி உங்க ஆளுங்க எல்லாம் மதம் பரப்பரதே இல்லை பாருங்க. சின்ன வயசில இருந்து நான் பாத்திருக்கேன். கை நிறைய பிட்டு நோட்டிஸ் வச்சிக்கிட்டு போறவர்ரவங்களுக்கு குடுக்கறதை வேலையாவே வெச்சிருக்காங்க இந்த மத வியாபாரிங்க. இப்போ வீடு வீடா போய் மார்கெட் பண்றாங்க. இதில ப்ரூப் வேணுமாக்கும். ஏன் நீங்க என்ன ப்ரூஃப் ரீடரா. படிச்சுப் பாத்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்தப் போறீங்களா என்ன?

 17. //ஆனால் கட்டாய மத மாற்றம் என்கிறீர்களே, என்ன கட்டாயம்? ஆசை காட்டுவது எப்படி கட்டாயம்? தவறான வார்த்தைப் பிரயோகம்.//

  திரு ஆர் வி அவர்களே!

  உங்கள் வீட்டுப் பெண்ணிடம் ஒருவர் பணத்தாசை காட்டி என்னோடு வா! என்று அழைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை உங்கள் வீட்டுப் பெண் மறுக்கிறார். அதனால் அழைத்தவர் உனக்கு சொந்தமாக வீடும் காரும் வாங்கித்தரேன். வா! என்று மீண்டும் ஆசைகாட்டி வற்புறுத்துகிறார். இப்படி வர மறுப்பவரை மேலும் மேலும் ஆசை காட்டி அழைக்கும் போது அது கட்டாயம் தானே! அப்படி உங்கள் வீட்டு வாசலில் ஒருவர் அழைக்கும் போது நீங்கள் கண்டிப்பீர்களா அல்லது “ஆசைகாட்டுவது எப்படி கட்டாயம்” என்று அறிவு ஜீவியாக வசனம் பேசுவீர்களா?

 18. First Edwin neenkal padikum BIBLEle thappanatu.. thirutha padatha unmiyana bible kandu pidithi padiyunkal..appolothu therium its just copy of hindu sacred scriptures enru..

 19. gurubhyo namah
  BEWARE -the three samaya gurumarkal who visited this village will have to be cautious.it is likely that they will be caught in some scandal or other by the media (both electronic&print)Beware

 20. மாற்றம் என்பது மாறாத ஒன்று. உலகத்தில் யாரேனும் ஒருவர் ஒரு மதத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாறி கொண்டு தான் இருக்கின்றார்கள். பல அமெரிக்கர்கள் இந்துவாக மாறியது உண்டு. ஆனால் எல்லா மாற்றத்திற்கும் பின் தனி மனித ஆதாயம் உண்டு. பணம் இல்லாதவன், பணத்திற்காகவும், ஆன்மீக செறிவு இல்லாதவன், ஆன்மீக திற்காகவும் மாறுகின்றார்கள். தேவை நிறைவேறுவது, மனித மனதிற்கு மிக முக்கியம். இதில் பணத்திற்காக மாறுபவனால், அந்த மதத்திற்கு எந்தவிதமான லாபமும் இல்லை, வீண் செலவுதான். அவனால் தாய் மதத்திற்கும் பிரையோஜினம் இல்லை. கட்டாய திருமணம் எத்தனை நாள் நிலைக்கும், அதே போல்தான் கட்டாய மதமாற்றமும்! இறுதியில் தனி மனித விருப்புதான் வெல்லும்!!

 21. இவர்கள் குள்ளம்பாளையத்தினர் அல்ல என் நெஞ்சில் நின்ற ‘நெடிய’பாளையத்தினர்! வாழ்க! வாழ்கவே!

 22. என்னங்க இது? ஆசை காட்டுவது = கட்டாயம் என்றால் நீங்கள் எல்லாம் கொஞ்சம் தமிழ் படிக்க வேண்டும்!

  கரன் காசு வாங்கினால் “கட்டாயம்” வோட்டு போட வேண்டுமே என்கிறார். காசு வாங்க வேண்டும் என்பது என்ன கட்டாயம் என்று அவருக்கு புரிந்தால் சரி. ஆசை காட்டி மதம் மாற்றுவதை கட்டாய மத மாற்றம் என்று அழைப்பது தவறான வார்த்தை பிரயோகம் என்றால் பாஸ்கர் ஆசை காட்டி மதமாற்றம் செய்வது தவறில்லை என்று வேறு பொருள் கொள்கிறார். ராமும் ஆசை காட்டினால் கண்டிப்பேனா இல்லை ஆசை காட்டுவது எப்படி கட்டாயம் என்று கேட்பேனா என்று கேட்கிறார். அது இரண்டும் எப்படி mutually exclusive என்று தெரியவில்லை. இதற்கு மேல் இதற்கு பதில் வேறு எழுத வேண்டுமா? அட போங்கப்பா!

 23. They should be stopped from distributing these bit notices at least to save trees! These notices affect nature and culture at the same time.

 24. RV,

  உங்களுடைய கேள்வி சரியானது.

  சரியான வார்த்தை இல்லாததால்தான் அந்த “கட்டாயம்” எனும் வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார்கள்.

  எனினும், தற்போதைய நிலையை விளக்க இந்த வார்த்தைதான் உபயோகத்தில் இருக்கிறது.

  இந்த மதமாற்ற விஷயத்தில், நாங்கள் சொல்லுவதைக் கேட்காவிட்டால், நாங்கள் சொன்ன உதவி கிடைக்காது என்ற பயமுறுத்தல், ஒரு வியாபார ”நிர்ப்பந்தம்” இருக்கிறது.

  நிர்ப்பந்தம் எனும் வார்த்தை நடைமுறையில் சரியான புரிதலைத் தருகிறது. ”கட்டாயம்” என்பதை விடச் சரியான வார்த்தைதான்.

  ஆனால், தார் பெயிண்ட் தடியர்களுக்கு வேலை கொடுக்கத்தான் வேண்டுமா ?

  ____________________________________________________________

  RV,

  நீங்கள் கேட்க நினைத்த கேள்வியாக நான் புரிந்துகொள்வது இது:

  “இல்லாதவனுக்கு சாப்பாடும், மானமும் மதம் மாறுவதால் கிடைத்தால் அதில் என்ன தப்பு?”

  என்பதுதான் நீங்கள் கேட்க நினைத்த கேள்வியாக எனக்குப் படுகிறது.

  என் பதில்: உடனடிப் பலனைப் பார்த்து வருங்காலத்தில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளுவதுதான் மத மாற்றம். தன்னுடைய வாழ்க்கையை மட்டுமல்ல தன் சமுதாயத்தின், நாட்டின் நன்மையை வேரோடு அழிப்பதுதான் மதம் மாறும் ஒருவனால் விளைகிறது. மதம் மாறிய நாடுகளைக் கவனியுங்கள். ஒன்று அவை ஆக்கிரமிப்பு நாடுகளாகவோ, அல்லது அடிமை நாடுகளாகவோ மட்டுமே இருக்கின்றன. அனைத்தும் போர்களை நடத்தித்தான் பிழைக்கின்றன.

  இந்தியாவில் நடக்கும் மத மாற்றம்கூட வருங்கால எதேச்சதிகாரத்திற்குப் போடப்படும் சிவப்புக் கம்பளம்தான்.

  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இதுகுறித்துச் சொல்லி இருப்பதைப் படியுங்கள்: மனிதாபிமான வணிகம்

 25. RV
  உங்களுக்கு எளியவர்களின் கஷ்ட்டம் புரியவில்லை. சுனாமியில் வீடு இழந்தவர்களிடம் கட்டாயம் வீடு கட்டி கொடுக்கிறேன் மதம் மாறு என்று மத்ம் மாற்றினார்கள் . இப்படி ஆசை காட்டி மதம் மாற்றினால் அது கட்டாய மதமாற்றமில்லாமல் வேறென்ன.

  கரண்

 26. ஆட்களை விலைக்கு வாங்கி, கிறித்துவக் கல்லறைகளை அதிகரித்து, ஆன்மாக்களை அறுவடை செய்துவிட்டதாக எண்ணிக்கொள்ளும் வழக்கம் கிட்டத் தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கிறது. கிறித்துவ மதத்தின் வழி வழி வந்த வழக்கத்தைக் கடந்து நமது மதம் மட்டும்தான் இன்றளவும் தாக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் நமது மதம் மட்டும்தான் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனே என்று உணர்த்தும் உன்னதமான‌ ஆன்மபலம் பொருந்தியது. ஆபிரஹாமிய மதங்க‌ள் எல்லாம் உதட்டளவில் நீயும் நானும் சகோதரன் என்பன. உள்ளத்தில் வியாபார, அதிகார, ஆக்கிரமிப்பு, எண்ணிக்கை நோக்குடையன.

  தமிழன்பர் மறவன்புலவு திரு சச்சிதானந்தன் அவர்கள் அருந்தமிழ் வார்த்தைகள் ஊரவர், முறைப்பாடு, வேளாண் முதலியனவற்றைப் பிரயோகம் செய்திருக்கும் பாங்கைப் பாராட்டவேண்டும். தமிழின் இனிமை சொரியும் அவரது நடை சிறப்பானது. அவர் எங்கும் கட்டாய மதமாற்றம் என்ற சொற்பிரயோகம் செய்யவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

  திரு ஆர்.வி. அவர்கள் சொல்வது சரியே. ஆசை காட்டுவது, கையூட்டுக்கு வேண்டுமானால் ஒப்பிடலாமே அல்லாது கட்டாயத்துக்கு அல்ல. சிலநேரங்களில் நமது பக்க நியாயத்தை வலியுறுத்த சிலவிதமான மிகைச் சொற்களைப் பயன் படுத்துவது தவிர்க்கவியலாதது ஆகிவிடுகிறது. கட்டுரையில் கட்டாய மதமாற்றம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டதும் இவ்வகையிலேயே அமையும். இவையெல்லாம் இந்தக் கலிகாலத்தில் தேவையாகிவிட்டன. அஸ்வத்தாமா இறந்து விட்டதாக கூறப்படவில்லையா? இதுவும் இவ்வகையதே.

  கட்டாய மதமாற்றச் சட்டம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. காவல் துறை இந்தக் குற்றச் சாட்டில் பதியாதது சட்டத்தின் பாற்பட்டதே. ஆனால் துண்டுப்பிரசுரங்களில் உள்ள செய்திகள் வாக்கியங்கள் நமது மதத்தை மறைமுகமாகக் கூட சாடுவதாக இருந்தால், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக முறைப்பாடு செய்தால், வழக்குப் பதியத்தான் வேண்டும். இதுபோலவே மத அடிப்படையில் பொது அமைதியைக் குலைத்ததாக முறைப்பாடு கொடுத்தால், அதற்கான வழக்கும் பதியவேண்டும். நம் மக்களுக்கு இது குறித்த சட்ட ரீதியான வழிமுறைகளைத் தக்க முறையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

 27. எட்வின் அவர்களே
  திருடன் ஆதாரத்துடன் திருட வருவானா?
  கிருத்துவத்தை பரப்ப நடந்த கொடுமைகள் வரலாற்றில் ஆதாரத்துடன் நிறையவே வுள்ளது….

 28. vanakkam… na kulampalayam sarnthavan. ipothu tirupuril irukken. yanga ur makkalai ninaikkum pothu perumaiyaga irukku.

 29. “சிலநேரங்களில் நமது பக்க நியாயத்தை வலியுறுத்த சிலவிதமான மிகைச் சொற்களைப் பயன் படுத்துவது தவிர்க்கவியலாதது ஆகிவிடுகிறது. கட்டுரையில் கட்டாய மதமாற்றம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டதும் இவ்வகையிலேயே அமையும்” i mean this type of title shd be avoided D

 30. சிலநேரங்களில் நமது பக்க நியாயத்தை வலியுறுத்த சிலவிதமான மிகைச் சொற்களைப் பயன் படுத்துவது தவிர்க்கவியலாதது ஆகிவிடுகிறது. கட்டுரையில் கட்டாய மதமாற்றம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டதும் இவ்வகையிலேயே அமையும் still christians r 3% in India we cant force the majority people also பல அமெரிக்கர்கள் இந்துவாக மாறியது உண்டு. ஆனால் எல்லா மாற்றத்திற்கும் பின் தனி மனித ஆதாயம் உண்டு. பணம் இல்லாதவன், பணத்திற்காகவும், ஆன்மீக செறிவு இல்லாதவன், ஆன்மீக திற்காகவும் மாறுகின்றார்கள். தேவை நிறைவேறுவது, மனித மனதிற்கு மிக முக்கியம். இதில் பணத்திற்காக மாறுபவனால், அந்த மதத்திற்கு எந்தவிதமான லாபமும் இல்லை, வீண் செலவுதான் i can show many people who healed from their sickness and became christians Again i say there is no use to convert other religious people for money r by force if we do that we will go to hell oly as i said we need to live holy life as like Jesus that is christianity Mr trichy says to help other religious people that we do till we die cos “love ur enemy pray and bless them “that is the msg we got from Jesus we do that But when we do to other religious people extremist group ll try to create problems ..any religion can preach about their religion openly in India cos we r in blessed country with freedom of speech like US We are not UNDER DICTATORSHIP .IF ANYONE FORCE TO CONVERT ITS WRONG MR RAM preaching about our religion is not business just to guide people to live holy life as Jesus Preached not to hurt others

 31. Recently in a convocation meet one central minister said why to wear Pope like dress while awarding the degree. For this some Christian demanded open apology from the minister for insulting the Pope. Why to say apology? Wearing such type of dresses the church priest’s are engaged in child abuse, and nun rape activities. This is the true sole harvesting business within the closed doors. The ugly face of church is being exposed throughout the world and every day abuse cases are appearing in alarming numbers. There is no use of giving compensation or apology by Vatican shamelessly. It is a criminal offence to hide those cases for several years untold. The human right commission should file a law suit against the Pope first and ensure punishment for the entire culprit.

  It is an open truth that ever since the Vatican is established enmity among nations widened and it is the basic route cause for world wars and genocide murdering cores and cores of people. History provides voluminous records hence it is the need of the hour to demolish the Vatican once for all for peaceful harmonious existence of human race. Nothing wrong in punishing the pope putting him in the cross once again like the Christ to erase the sins committed by Christianity

 32. இந்த கிராம மக்களோட மன திடம், ஏன் என்னமாதிரி நெறையபேர்கிட்ட இல்லாம போச்சு?????. எனக்கு என் மேலேயே அவமானமா இருக்கு!!!!!.

  காந்திஜியால கெடச்ச நாட்டு சுதந்திரம், இன்னைக்கு அவர் மாதிரி தலைவர் இல்லாததால கேடுகெட்டு போகுது.

  ஆரோக்யசாமி

 33. Hindu organizations should form a network to monitor these forces. In each district there should be one contact point which can swing into action. It is also necessary to educate Hindus about the law. The right to convert is not a fundamental right,according to Supreme Court. So it should be treated as an act of enticement and complaints should be given.Complaints under sections that punish disruption to communal harmony, hurting the relegious sentiments should be given and it should be insisted that FIRS are filed.A handbook on dealing with these forces should be published and distributed widely.

 34. Dear Mr Edwin

  ///..any religion can preach about their religion openly in India cos we r in blessed country with freedom of speech like US We are not UNDER DICTATORSHIP .///

  We are not allowed to preach any other religion including protestent-sect-Christianity in Vatican. Therefore according to you Vatican is not a blessed country. Pope is the Head of Vatican Govenrment. How come the Christians call him the Holy See. All should stop calling him the Holy See. He is not Holy as long as he does not allow Hindus to build a Hindu temple in Vatican and allow us to practise Hinduism there and allow us to preach Hinduism there.
  Same holds good for Saudi Arabia ans uch other Muslim and Christian countries which do not allow other religions to preach and practise.

 35. Edwin, have you talked to your Church about the evils of converting people with money and threats? Have you told your Church leaders that it is cultural genocide to do so? Have you written to Vatican about it? If not, why not?
  The Pope recently gave an undertaking to the chief Rabi in Israe lthat they will not convert jews to Christianity anymore. But,the Church refused to give such undertaking to Hindus in India regarding conversion of Hindus to Christianity. Now, what are you plans on this? Why don’y you go on to ” fast unto death” to force the church to change it’s evil ways? Just a suggestion.
  By the way, your Jesus said” Kill them all, God will sort them all out”.Great man, our Jesus. Of course he led the life full of love as you say!

 36. Good. Proud about the village.

  Also, in the event of April 14, anyone noticed that Sun TV’s special program is due to the 17th B’Day of Sun TV. But they do not want to show the programs because of Chiththirai Thirunaal. Why do they hate this Chiththirai Thirunaal day?

  Is this due to Kalanithi Maran married to the daughter of Christian converted (‘Hindu’)Ram?

  Only God knows.

 37. Wahegurjee ka khalsa
  Wahegurjee ki fateh

  Enna… Why I, a Hindu, wrote a Sikh greeting… appudeenu yosikkiringala…? I never see differences among Dharmic or Indian religions like Hinduism,Sikhism, Jainism, Buddhism and Aiyavazhi. To me all are one. Brave people indeed.

  Jai Hind

  Jai Shree Ram

  Om mani padme ham.

 38. தமிழன்பர் மறவன்புலவு திரு சச்சிதானந்தன் அவர்கள் அருந்தமிழ் வார்த்தைகள் ஊரவர், முறைப்பாடு, வேளாண் முதலியனவற்றைப் பிரயோகம் செய்திருக்கும் பாங்கைப் பாராட்டவேண்டும். தமிழின் இனிமை சொரியும் அவரது நடை சிறப்பானது. அவர் எங்கும் கட்டாய மதமாற்றம் என்ற சொற்பிரயோகம் செய்யவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

  என்று நண்ர் .ந.உமாசங்கர் பதிவு செய்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஏனெனில் மறவன்புலவு சச்சிதானந்தன் யாழ்ப்பாணது மறவன்புலவு என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் பாவித்திருப்பது யாழ்ப்பாணத்துதாத்தமிழ். அவர் இங்கிருந்து உங்கு வந்தும் யாழ்ப்பாணத்தாரின் உயிரோடு ஒட்டிப்பிறந்த இந்துத்தமிழை காப்பாற்றப் பாடுபடுவது மகிழ்ச்சிக்குதரியது.

  ஆனால் இங்கு யாழ்ப்பாணத்தில் மிஷனரிமாரின் தொல்லைகள் வரவ வரக் கூடிக் கொண்டே செல்கின்றன. என்பதும் வருந்தத்தக்க செய்தி.
  தி.மயூரகிரிசர்மா
  யாழ்ப்பாணம்

 39. if your government provide enough support for the poor people the those people wont convert to christianity…ur governtment is so corrupted…your government buy votes for money..you people vote for color t.V….so many people are dieing in india because of poverty,but you people creating garnet made up money for stupid politicians….your governtment or hindu organaizations wont help poor indian people..thats why they go behind missonaries…movements like sivesena or ramasena are good at protesting and induce violence but they never help or really care about hindu people..its all politics..until hindus help hindus u can never stop conversions….

 40. அய்யா michel

  //
  if your government provide enough support for the poor people the those people wont convert to christianity…
  //

  this is a baseless inference
  do you mean to say people are living happily in pakistan,bangaladesh,china, russia, ethiopia, tanzania, nigeria, zimbabwe et al – is poverty driving people to convert in these countries too?

  New York citi in the U.S is flooded with utterly poor people who engage in deadly crime for daily living – are they converting to other religion too ?

  do you need more examples?

  correct inference is – diabolic Christian missionaires are using every opportunity to convert people and attain sadistic satisfaction through that…

 41. கட்டாய மத மாற்றம் , ஏமாற்றி மத மாற்றம், ஆசை காட்டி மத மாற்றம், சரக்கு கொடுத்து மத மாற்றம், வேலை கொடுத்து மத மாற்றம்,பணம் கொடுத்து மத மாற்றம் – எப்படி வேண்டுமானாலும்சொல்லுங்கள்
  இதெல்லாம் எதற்கு என்பதுதான் கேள்வி
  இதே வேலையாக கோடிக்கணக்கான டாலர்கள் பட்ஜெட்டில் ஒரு பெரிய கும்பல் அலைவது ஏன்?
  டிவி யில் நாள் பூராவும் கூப்பாடு போடுவது ஏன் ?
  பெண்களை ஏமாற்றி காதல் என்ற பெயரில் சிக்க வைத்து மதம் மாற்றுவது ஏன்?

  வார்த்தை ஜாலம் புரியும் கிறித்தவ நண்பர்களுக்கு ஒரு சான்று கூறுகிறேன்
  சுனாமியின் போது நாகப்பட்டினத்தில் ஒரு இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிஷனரிகள் பாய், பக்கெட் ,பாத்திரம் ,பிளாஸ்டிக் குடம், இவைகளை வழங்கினர்.
  மறு நாள் திடீரென்று அவர்களது குடிசைகளில் கேட்காமலே நுழைந்து ‘உங்களுக்காக தோத்திரம் செய்கிறோம்’ என்று கிறித்தவ வழிபாட்டை செய்தனர்.
  அப்போது அந்த ஏழை மக்கள் வெறுத்துப்போய் ‘நாங்கள் ஹிந்துக்கள் அதனால் இதெல்லாம் வேண்டாம்’ என்று தடுத்தனர்
  அதற்கு மிஷனரிகள் ‘அப்படியானால் நாங்கள் கொடுத்த பொருள்களை திரும்பக் கொடுங்கள் ‘என்று வெட்கம் இல்லாமல் கேட்டனர்
  அந்த மானம் மிக்க ஏழை ஹிந்துக்கள் ‘எங்களுக்கு எங்கள் சாமிதான் முக்கியம். இந்த பொருள்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று திருப்பிக் கொடுத்தனர்.
  இப்போது சொல்லுங்கள் . இந்த மாதிரி மதம் மாற்றுவது எதில் சேர்த்தி?
  இதை எந்தப் பெயர் வைத்துச் சொன்னால் என்ன?

  இரா.ஸ்ரீதரன்

 42. The reason for our politicians behaving like this is that they have been purchased by the church and saudi money.
  That is why we are fighting the rootcause
  If the cause is destroyed then the body politic will become healthy.

  R.Sridharan

 43. குள்ளம் பாளையம் கோவில்களுக்குள் இன்று வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்பது தெரியுமா?

  தீண்டாமை இருந்தால் மதம் மாறத்தான் செய்வான் இதை உங்களைப் போன்ற கூட்டங்களால் தடுக்க முடியாது

 44. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஹிந்து அமைப்பு வேண்டும். அப்பொழுது தான் மதமாற்ற அநியாயங்களை நாம் தட்டிக்கேட்க முடியும். முன்னொரு சமயம் அர்ஜுன் சம்பத் அவர்களின் உரையை நான் சென்னையில் கேட்டுள்ளேன். ஹிந்து சமயத்தின் பால் அவர் கொண்டுள்ள அக்கறை மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. அவர் கரங்கள் வலுப்படவேண்டும். அவர் மதமாற்ற சக்திகளை வெற்றி கொள்ள வேண்டும் என்று நான் இறைவனை பிரார்திக்கிறேன். இந்த தளத்தின் வாயிலாக அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். குள்ளம்பாளைய மக்களின் உறுதியும், மனத்திண்மையும் எல்லோருக்கும் வேண்டும்.

 45. சமீபத்திய செய்தி……,

  என் கைக்கு கிடைத்த ஒரு தமிழ் துண்டு பிரசூரம்,

  ஆண்டவர பத்தி ஏதேதோ எழுதி இருந்த அந்த பிரசூரத்தில கடைசியா ஒரு போடு போட்டனகளே பாருங்க,”நீ பாவி என ஏற்று கொள்,இயேசு நாதர் உனக்காக தன ரத்தத்தை சிந்தினார் என ஏற்று கொள்,,,அத்துடன் இப்பிரசூரத்தை நிரப்பி கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பினால் நீ கிறித்துவனாக அடையாளம் காணபடுவாய்”
  நண்பர்களே,சைவ உணவு உட்கொள்ளும் நான் ஒரு கோழியோ,ஆட்டையோ கூட கொன்னது இல்ல,அடுத்தவன் பொருளுக்கு ஆசை பட்டு கள்ளத்தனம் பண்ணது இல்ல,,எந்த வகைல இவங்க என்ன பாவி நு சொல்ல முடியும்..???பார்த்திங்களா எப்டி எல்லாம் மத மாற்றம் நடக்குது நு ???
  @ எட்வின்
  i can also people who are not cured by the christian churches,for example one of my friend is die due to blood cancer,on his last days some christian preachers came and prayed for him,and they removed ருத்திராட்சை,which is hanged on his neck.but they told that in Christianity that can considered to be a devil… போடாங்க,நீங்களும் உங்க ஹீலிங்கும் ….என் நண்பன் அதுக்கு அப்புறம் தான் நிலைமை ரொம்ப முற்றி இறந்து போனான்.

  இன்னுமொரு உதாரணம்.,
  அடுத்த நாள் இதய அறுவை சிகிச்சை செய்ய இருந்த ஒருத்தர ஒரு கிறித்துவ நண்பர்,நீங்க ஆபரேஷன் செய்ய தேவ இல்ல .”இந்தியன் பாஸ்டர்” ஒருத்தர் வந்து இருக்காரு,அங்க போவோம் வாங்கனு கூட்டிட்டு போனாரு…ஆனா பிரார்திக்கிற நேரமே அவர் உயிர் போய்ட்டு.இத்தனைக்கும் அவரு விடல…இவரு தற்காலிகமா இறந்து இருக்காரு,நான் மறுபடியும் உயிர்ப்பிப்பேன் நு 3 நாள் உடலை அப்படியே வச்சு இருந்தாரு….நாளிதழ் பெயர் தாங்கி வரும் அந்த பாதிரியார் இலங்கை வந்த போது நடந்த சம்பவம் இது

 46. அன்பார்ந்த ஹிந்து பிரியர்களுக்கு. தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இதே போல்ஹிந்து மதத்திலிருந்து முஸ்லிம் ,கிருஸ்துவ மதங்களுக்கு மதமாற்றம் செய்வதை கண்டிப்பாக தடை செய்ய வழி செய்வீர்,

 47. ஐயா வணக்கம்!,

  என்னுடைய பெயர் பாண்டியன், அப்பா பெயர் ரெங்கசாமி. நான் ஹிந்து மதத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் பதினைந்து ஆண்டுகாலமாக துபாயில் வேலை செய்துகொண்டுவருகிறேன். ஒரு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, யாரென்றே தெரியாத கிருஸ்தவ மலையாளிகள் நான்கு பேரு என்னுடைய ரூமிற்கு வந்து, ஏசுவைப்பற்றி சொல்லி, அவர்கள் போன் நம்பரை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடைய போன் நம்பரை வாங்கிகொண்டு போனார்கள். பிறகு எல்லாரும் எனக்கு அடிக்கடி போன் பண்ணுவார்கள். அடிக்கடி என்னை அவர்கள் ரூமிற்கு அழைத்துபோவார்கள். வெளியில் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துப்போவார்கள். இப்படி அவர்கள் என்னிடம் பேசும்பொழுதும் பழகும்போழுதும் ஏசுவைப்பற்றி புகழ்ந்து சொல்லியதால் நானும் மனது மாறி, தெரியாமல் அவர்களால் ஞானஸ்தானம் (water baptism ) பெற்றுவிட்டேன். இப்பொழுது எனக்கு மனது அது தப்பு என்று வருத்தபடுகிறது. இனி நான் என்ன செய்வது? இந்த விஷயம் என்னுடைய குடும்பத்திற்கு தெரியாது. இனி நான் மீண்டும் பழையபடி ஹிந்துமதத்திர்க்கு வரமுடியும்மா?? மனதளவில் மாறிவிட்டேன். ஆனால், நானும் அவர்கள் ஞானஸ்தானம் செய்ததுப்போல, நானும் முறைப்படி சாஸ்திரப்படி ஹிந்துமதத்திர்க்கு மாறனும். அதற்க்கு என்ன வழி என்று தயவுசெய்து எனக்கு உடனே தெரியப்படுத்தவும்.
  நன்றி
  பாண்டியன்
  trpandiyan1 @gmail .com

 48. சம்பவம்:-
  பத்து நாள்களுக்கு முன்பு அங்‌கு ஒரு கோயிலில் குடமுழுக்கு. ஊரே திரண்டிருந்தது. அந்த நேரம் அரச மரத்தடியில் சிறு கூட்டம். நாகர்கோவிலைச் சேர்ந்த 5 கிறித்தவப் பாதிரிகள். குள்ளம்பாளையம் வந்தனர். வீடுகளுக்குச் சென்று விவலிய நூல் கொடுத்தவரை வழிமறித்து அழைத்துவந்து அமர வைத்திருந்தனர் ஊரவர் சிலர்.
  பதில் மற்றும் கேள்வி :-
  அந்த கிறிஸ்தவர்கள் வீடு வீடாக சென்று டுகளுக்குச் சென்று விவலிய நூல் கொடுத்தார்கள் .அவர்கள் யாரையும் மதம் மாற்றவில்லை . தங்கள் பின்பற்றும் மதத்தை பற்றி பிரச்சாரம் செய்ய எல்லா மதத்தினருக்கும் உரிமை உள்ளது என்பது இந்திய சட்டம் .அதை தடுப்பது தான் சட்ட விரோதம் . ஊரே சேர்ந்து சட்ட விரோத செயலை செய்து விட்டு அதை பெருமையாக வேறு பீற்றிக்கொண்டு உள்ளீர்கள் . எல்லா மதங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள எல்லாரும் உரிமை உள்ளது , எந்த மதத்தில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்வது தனிப்பட்ட உரிமை . என் கிறிஸ்த்தவர்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்.

  யாரோ எந்த மதத்தையோ பின் பற்றினால் உங்களுக்கு என்ன ? ஒரு வேலை
  இதை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறீர்களோ என்னவோ ? அதினால் தான் பீதியாகி சட்ட விரோத செயல்களை செய்ய மக்களை ஊக்குவிக்கிறீர்கள்.

 49. @sridhardharma

  மதத்தை பரப்ப சுதந்திரம் கொடுத்த அதே அரசியல் சட்டம் தான், மதத்தை திணிப்பதும் தவறு என்று சொல்கிறது. உருவ வழிபாட்டை தீய நோக்கத்தோடு விமர்சனம் செய்வது தண்டனைக்கு உரிய குற்றம். இந்திய அரசியல் அமைப்பின் படி செயல்படும் ஊர் மக்கள் பனி பாராட்டுக்குரிய விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *