முந்தைய கட்டுரைகள்:
1. அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
2. வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
3. பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்
4. பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்
நான்முகப் பிரம்மன் நான்கு திசைகளிலும் பார்த்து படைப்பை ஆரம்பித்தார். இவற்றுள் இரண்டு திசைகள் நிச்சயமானவை. அவை வடக்கும், தெற்கும் ஆகும். பொதுவாகவே அண்ட வெளியில் நாம் இருக்கும் மண்டலத்துக்கு மேல் புறம் இருப்பது உத்தரம் என்னும் வடக்கு. அதற்கு நேர் எதிரே இருப்பது, அதாவது நாம் இருக்கும் மண்டலத்துக்குக் கீழே இருப்பது தக்ஷிணம் என்னும் தெற்கு. நான்முகப் பிரமன் தனக்கு மேலும், கீழும் பார்த்த திசைகள் வடக்கு, தெற்கு என்று ஆயின.
பிரம்மம் என்ற சொல்லுக்கு பெரிதானது, வளர்ந்து கொண்டே போவது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. தோன்றும் பிரபஞ்சத்தில் நுழைந்தவுடன், உப்பிக் கொண்டே போவதுபோல் படைப்பு வளரலாயிற்று. நான்முகப் பிரம்மனும் தானும் அப்படியே பயணிக்கிறார். மேல் எழும்ப எழும்ப அந்தத் திசை வடக்காயிற்று. அவர் கீழே விட்டுச் சென்ற பகுதி தெற்கு ஆயிற்று. இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், முதலில் தெற்கில் அண்டங்கள் தோன்றி, அழிந்து, மீண்டும் சிதறலிருந்து உருவாகிக் கொண்டிருக்கின்றன. வடக்கு நோக்கிப் போகப் போக புதிதாகப் படைப்பு எழுந்து கொண்டே இருக்கின்றது.
ஆனால் ஒரேயடியாக வடக்கு முகமாகவே செல்ல முடியாது. குயவனின் சக்கரத்தைப் போன்ற ஆதார சக்தியின் இழுப்பினால், எப்பொழுதுமே கிழக்கு அல்லது வலப் புறம் நோக்கியே திரும்பி சென்று கொண்டிருக்க வேண்டும். கிழக்கு என்பது அவரும், அவரது படைத்தலும் பயணிக்க வேண்டிய திசை. நடராஜரது உருவத்தில் அந்த திசை உடுக்கையில் கிளம்பி, அக்னியை நோக்கிச் செல்வது. இது நேர்ச் சுற்று அல்லது வலச் சுழி, அதாவது clockwise direction ஆகும். நான்முகப் பிரம்மன் முதலில் மேல் முகமாகப் பார்த்து, பின் தான் பயணிக்க வேண்டிய திக்கை நோக்கி, அதற்குப் பின் கீழ் முகமாக நோக்கும் போதும் வலச் சுற்று வருகிறது. இப்படி இந்த சுற்று வடக்கிலிருந்து தெற்கை நோக்கிச் செல்வதால் இதைப் பிரதட்சிணம் என்கிறோம்.
இந்தப் பிரபஞ்சமும், நடுவில் ஆதார அச்சாக இருக்கும் பரம் பொருளான இறைவனைப் பிரதட்சிணம் செய்து வருகிறது. விநாயகப் பெருமான் தன் தாய் தந்தையைச் சுற்றி வந்ததாலேயே உலகைச் சுற்றி வந்ததாக அறிவுறித்தியது, அந்தப் பரம்பொருளான இறைவனை ஆதாரமாக வைத்து உலகங்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்பதைக் காட்டவும், அது மட்டுமல்லாமல் அவரைச் சுற்றுவதால் அனைத்து உலகங்களும், அனைத்து பிரபஞ்சங்களும் செல்லும் மாபெரும் முழுச் சுற்றினையுமே செய்வதற்கு ஒப்பாகும் என்பதை உள் பொருளாக உணர்த்தவும் எழுந்தது என்றும் சொல்லலாம்.அண்ட சராசரங்களும் அவனைச் சுற்றுவது போல, அண்ட சராசங்களுக்கும் அதிபதியான பரம்பொருளை நாமும் கோயிலில் பிரதட்சிணம் செய்கிறோம்.
பிரபஞ்சம் செல்லும் பாதையே பிரதட்சிணமானது என்று நாம் சொல்வதை, நாம் கண்கூடாகப் பார்க்கும் வான்வெளி அண்டங்கள் மெய்ப்பிக்கின்றதா? வானில் காணும் நட்சத்திரங்களும், அவற்றின் கூட்டங்களும் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றன அல்லவா என்ற கேள்வி எழுகிறது. தோன்றிப் பல காலம் ஆகவே (10 to the power of 17 வருடங்கள் ஆகிவிட்டன; இன்னமும் அவ்வளவு வருடங்கள் செல்ல வேண்டும் என்பது பண்டைய ஜோதிட- வான இயல் நிபுணரான பாஸ்கராச்சரியார் கணிப்பு.) அண்டங்கள் மோதி, உருண்டு, பிறழ்ந்து தற்சமயம் வேறு வேறு திக்கில் போவது போல் தோற்றம் அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு கலக்சி கூட்டமும் இன்னொரு கலக்சி கூட்டத்தைச் சுற்றுகிறது. ஆகையால் அப்படி உருமாறி வந்துள்ள மூன்றாம் தலைமுறை நட்சத்திரமான நமது சூரியக் குடும்பத்தில் உள்ள நம் பூமி இப்பொழுது உள்ள நிலையில் எது வடக்கு, எது கிழக்கு என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி வருகிறது. மனித சமுதாயத்தின் நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ரிஷிகள் வேத விஞானத்திலிருந்து நமக்கு இந்த விவரங்களை எடுத்துக் கொடுத்துள்ளனர்.
அவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்துள்ள விவரம், நம் பூமி தன் சுழற்சிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள வட துருவப் பகுதியே பிரம்மன் பயணிக்கும் வடதிசை என்பதாகும். நம் சூரிய மண்டலத்திலேயே மற்ற கிரகங்கள் சுழலும் அச்சு வேறு வேறு திசையில் உள்ளன. ஆனால் பூமி சுழலும் அச்சு வடதிசையில் உள்ள பிரம்ம லோகத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. நான்முகப் பிரம்மன் நம்மை விடாமல் பற்றிக் கொண்டு, பிடித்து இழுத்துச் செல்வது போல் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் பயணிக்கிறோம்.
தென் திசை என்பது முடிந்து போன விஷயங்கள் கொண்டவை. Re-cycling ஆகிக் கொண்டிருக்கும் இடம். தெற்கிலிருந்து உயர வேண்டும் என்றால் நாம் இருக்கும் பூ மண்டலத்துக்கு வர வேண்டும். இங்கிருந்து உயர வேண்டும் என்றால் பிரம்மனை நோக்கிய பயணம்தான்.
அதனால் மறு பிறவிக்குக் காத்திருக்கும் இறந்தோர் செல்லும் இடம் தென் புலம் என்றாயிற்று. அது செல்லும் மார்க்கம் பித்ருயானம் எனப்பட்டது. மீண்டும் பிறப்பெடுக்க வேண்டாத நிலையில் தெய்வீக நிலையை அடைவோரும், முக்தர்களும் செல்லும் திசை வட திசை ஆனது. அது செல்லும் மார்க்கம் தேவயானம் எனப்பட்டது.
முற்காலத்தில் வடக்கிருத்தல் என்று வட திசை நோக்கி த்யானத்தில் அமர்ந்து உயிரை விட்டதும், இந்த தேவயானத்தைப் பிடித்து பிரம்ம லோகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே. பிதாமகர் பீஷ்மரும் அம்புப் படுக்கையில் படுத்து, சூரியனின் வடக்கு அயனத்திற்காகக் காத்திருந்தது இந்த தேவயான வழியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே. குறிப்பாக அந்த வழி எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
நாம் இருக்கும் பகுதிக்கு வடக்கு முகமாக – அதாவது – துருவ நட்சத்திரப் பகுதியை நோக்கி, மேலாக ஏழு உலகங்கள் இருக்கின்றன. Realms of Existence என்று சொல்லலாம். நற் கர்மங்களைச் செய்தவர் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு இந்த பகுதிகளில் சஞ்சரிப்பர், இதில் முடிவான கடைசி நிலை பிரம்ம லோகம். நான்முகப் பிரம்மனும், பிரம்ம ஞானிகளும், முக்தர்களும் நிலை பெற்ற இடம்.
நாம் இருக்கும் பகுதிக்குத் தென் முகமாக ஏழு உலகங்கள் அல்லது நிலைகள் உள்ளன. மீண்டும் உலகில் பிறந்து உழல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சஞ்சரிக்கும் இடங்கள் இவை.
இந்த அமைப்பை நோக்கினால் நாம் வாழும் பூமி பரிவாரங்களுடன் பயணம் செல்லும் ஒரு பயணியைப் போல உள்ளது. நமக்குக் கீழே (தென்புலம்) உள்ளவர்களுக்கு பூமியே கதி. அவர்கள் பூமியில் பிறந்து, உய்ந்து, மேல் முகப் பயணத்திற்கு மாற வேண்டும். மேல்முகப் பயணத்தில் இருப்பவர்கள் மேலும் மேலும் உயர்ந்து முடிவான பிரம்ம பதத்தை அடைய வேண்டும். இதில் நாம் வாழும் பூமி நடுவானது – விசேஷமானது. இதுதான் transit zone.
இங்கே ஒரு கேள்வி வரலாம்.
பூமியில் மட்டும்தான் உயிரினம் உள்ளதா? வேறு கிரகங்களில் இல்லையா?
வேத மதம் காட்டும் பிரபஞ்சவியலில், சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது.
ஆனால் நாம் இருக்கும் பூமியிலேயே, மேலும் கீழும் என்று ஏழும், ஏழுமான பதினான்கு உலகங்களைச் சொன்னோமே, அந்த உலக ஜீவர்கள் உலவலாம், அல்லது வந்து போகலாம். அவர்களும் நம்மைப் போன்ற ஜீவர்களே. நாமும் நம் நிலையிலிருந்து உயர்ந்தால் மேலுலக ஜீவர்களைப் போல ஆவோம். அவர்களை ஊனக் கண்ணால் காண இயலாது. நமது பௌதிக விதிகளுக்கு வேறுபட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில் உள்ளவர்கள் அவர்கள். தெய்வமாக, தேவதையாக, நல்லோராக, வழிகாட்டியாக, பித்ருவாக அவர்கள் வந்து போவதை சிலரால், சில நேரங்களில் உணர முடியும்.
பிரபஞ்சத்தின் வடக்கு – தெற்கைப் பார்த்தோம். இனி பூமி செல்லும் பிரபஞ்சப் பயணத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் நம் பூமியின் திசைகள் எவை, அவற்றின் மூலம் பிரபஞ்சம் செல்லும் திசை எது என்று அறிய முடியுமா என்று பார்ப்போம்.
பூமியின் திசைகள்
- பூமியின் அச்சு வட, தென் துருவங்களை இணைக்கிறது. இலங்கையும், உஜ்ஜயினி நகரும் இந்த அச்சுப்பாதையில் உள்ளன. வட துருவத்திற்கு நேர் தெற்கே இலங்கை இருக்கிறது. (விவரங்களை சூரிய சித்தாந்தம், சித்தாந்த சிரோமணி போன்ற நூல்களில் காணலாம்.) வட துருவப் பகுதியிலிருந்து வலச் சுற்றாகப் (clockwise) பார்க்கும் பொழுது இலங்கைக்கு 90 டிகிரி வலது புறம் கிழக்கு. 90 டிகிரி இடது புறம் மேற்கு. இந்த கல்பத்தின் முதல் நாள் சூரியன் மேஷ ராசி 0 டிகிரியில் இலங்கைக்கு 90 டிகிரி கிழக்கில் உதயமானது. உதயமான திசை பூமிக்குக் கிழக்கு என்றானது. அந்த திசை இன்று உலக வழக்கில் உள்ள கிழக்குத் திசையான ஜப்பான் உள்ள திசைதான். அங்கே யமகோடி என்னும் இடம் இருந்தது. தற்சமயம், இந்த இடம் பசிபிக் கடலுக்குள் உள்ளது.
இலங்கைக்கு இடது புறம் 90 டிகிரி தொலைவில் இருந்த இடம் மேற்கு திசையைக் காட்டுவது. இது ரோமக தேசம் எனப்பட்டது. (தற்போதுள்ள ரோம் அல்ல. 0 டிகிரி க்ரீன்விச்சுக்கு சிறிது மேற்கே அட்லாண்டிக் கடலில் இந்த இடம் இருக்கிறது.) இந்த ரோமக தேசத்தில் இருந்த மயன் என்னும் தானவன், சூரியனிடமிருந்து ‘சூரிய சித்தாந்தம்’ என்னும் வான இயல் சாஸ்திரத்தை உபதேசமாகப் பெற்றான்.
இலங்கைக்கு நேர் எதிர் புறம், 180 டிகிரி தொலைவில் இருந்த ஊர் ‘சித்தபுரம்’
வட துருவம் காட்டும் திசை வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிரே தென் துருவம் காட்டுவது தென் திசை. இரு துருவங்களையும் இணைக்கும் அச்சு இலங்கை, உஜ்ஜயனி வழியாகச் செல்கிறது. இந்த அச்சு மேரு எனப்பபட்டது. மேருவின் உச்சி வட துருவம்.
இப்படி பூமிக்குக் சொல்லப்பட்ட திசைகள் இன்றும் உலகெங்கும் பயனில் இருக்கவே, வேத மத வழக்கமே இதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
படைப்பு முன்னேறும் திசை
இனி பூமி செல்லும் திசை, அதாவது இந்தப் படைப்பு நகரும் திசை எது என்று பார்ப்போம். நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸியின் நடுவில் இருப்பது மார்கழி மாதம் சூரியன் உதிக்கும் தனுர் ராசி. இதை மையமாக வைத்து பால்வெளியும் (நமது கலாக்சியும்) , நமது சூரிய மண்டலமும் சுற்றி வருகின்றன. இந்த மையத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் முதியவை என்றும், நமது கலக்சியின் ஓரப் பகுதிகளில் இருப்பவை இளையவை என்றும் சொல்லலாம். ஓரப்பகுதியில் இன்னும் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மார்கழி மாத தனுர் ராசி (Sagittarius )மையம் என்றால், ஆனி மாத மிதுன ராசி (Gemini) ஓரம். இது நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் ஒரு பக்கம். இந்தப் பக்கத்தில், இந்தப் பாதையில் நாம் இருக்கும் சூரிய மண்டலம், இதன் மையப் பகுதியிலிருந்து முக்கால் பங்கு (3/4 ) தொலைவில் இருக்கிறது.
ஜாதகக் கட்டம் என்று நாம் சொல்வது உண்மையில் விண்வெளியின் அமைப்பைக் காட்டும் வரை படம். கீழுள்ள படத்தில் விண்வெளியின் திசைகள் காட்டப்பட்டுள்ளன. நாமிருக்கும் கலக்சீயையும் காணலாம்.
Sagittarius எனப்படும் தனுர் ராசி, நம் பால் வெளி கலக்சியின் மையப் பகுதி. சூரியன் இந்த ராசியில் மார்கழி மாதம் சஞ்சரிக்கும். வெளி ஓரம் Gemini என்னும் மிதுனம்.
மிதுனத்தில் உள்ள மிருகசீர்ஷம் என்னும் நட்சத்திரம் இருக்கும் பகுதியை நோக்கி நாமும், நம் பிரபஞ்சமும் முன்னேறிச் செல்லும் பாதை செல்கிறது. மார்கழி மாதத்தில் மிருக சீரிஷத்தில் பௌர்ணமி வரவே, அந்த மாதத்திற்கு மார்கழி என்னும் பெயரும், மார்கஷிர என்னும் பெயரும் வந்தது. பயணம் செல்லும் மார்க்கத்தைக் குறிப்பது என்பது இதன் பொருள்.
இந்தப் பயணம் செல்லும் திசை மார்கழி வடமேற்கு — ஆனி தென்கிழக்கு. அதாவது பிரபஞ்சப் பாதை வடமேற்கிலிருந்து தென் கிழக்கு நோக்கிச் செல்கிறது. அதர்வண வேதத்தின் உபவேதமான வாஸ்து சாஸ்திரத்தின்படி தென் கிழக்கு அக்னியையும், வட மேற்கு வாயுவையும் குறிப்பது. இதன் காரணம் பிரபஞ்சத்தின் பயணம் நடராஜர் கையிலிருக்கும் அக்னியை நோக்கிச் செல்கிறது. இந்தப் பயணம் ஆரம்பித்தது, வாயுவில் (பராவஹன்) தாங்கி, வாயுவால் செலுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்த அமைப்பில் வடகிழக்கு நோக்கி நமது துருவப் பகுதி அமைந்துள்ளது. அதாவது, பிரபஞ்சத்தின் வடக்கு திசையானது, பயணத்தில் திரும்பிச் செல்லும் போது வடகிழக்கைக் காட்டி அமைகிறது. இந்த விவரங்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் அடிப்படைகளையே கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.
இந்தப் படத்தில் வட மேற்கில் தனுர் ராசியில் சூரியன் வரும் போது மார்கழி மாதம்.
தென் கிழக்கில் மிதுன ராசியில் வரும் சூரியன் வரும்போது ஆனி மாதம்
இந்தப் பாதைக்குச் செங்குத்தான கோடு வட கிழக்கையும், தென் மேற்கையும் இணைக்கிறது. இதில் வட கிழக்கில் மீன ராசியில் சூரியன் வரும் போது பங்குனி மாதம். இந்தப் பாதையைத் தொடர்ந்து மேல் நோக்கிப் போவது தேவ யானம் என்னும் தெய்வ உலகுக்கான, பிரம்ம லோகத்துக்கான திசை.
இதன் எதிர் புறம் வரும் தென் மேற்கில் கன்னி ராசி உள்ளது. புரட்டாசி மாதம் சூரியன் இந்த திசையில் சஞ்சரிக்கும். இந்த வழி பித்ரு யானம் எனபப்டும். இன்று வரையில் அறிவியல் தெரிந்துகொண்டுள்ள விவரம், நாம் இருக்கும் பால் வெளி கலக்சி, மற்ற கலக்சீகளுடன் சேர்ந்து, கன்னி ராசி தென்படும் Virgo Super Cluster என்னும் பெரும் பகுதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது. இந்த விவரம் வேதம் கூறும் பிரபஞ்சஇயலுடன் ஒத்துப் போகிறது. பிரபஞ்சவியலின் படி நாம் தென்புறத்தவர். மீண்டும், மீண்டும் பிறந்திறந்து நாம் இன்னும் இங்கேதான் இருக்கிறோம். இங்கிருந்து மீளும்போது, வடதிசைப் பயணம் மேற்கொள்வோம்.
இந்த அமைப்பில் முக்கியப் பாதைகள் வருகின்றன.
1. பிரபஞ்சமும், படைப்பும் முன்னேறும் பாதை.
இது வ.மே – தெ.கி நோக்கிச் செல்வது.
வாயுவிலிருந்து அக்னி நோக்கிச் செல்லும் பாதை.
2. ஜீவர்கள் போய் வரும் பித்ருயான – தேவயானப் பாதை.
இது தெ. மே -வ. கி பாதை.
இந்தப் பாதை ஒரே நேர்க் கோட்டில் இருந்தாலும் எதிர் எதிரே செல்லும் தன்மை உடையவை.
இந்தப் பாதையில் நிகழும் போக்குவரத்து காந்த மண்டலக் கோடுகள் போல இருக்கும். தேவ யானத்தில் சென்றவர்கள் செயல்களில் குறைவு ஏற்பட்டால், பூமிக்கு வந்து நிவர்த்தி செய்து விட்டுப் போக வேண்டும். பீஷ்மர் முதலானோர் பூமியில் பிறந்து இப்படியே.
கீழ் புறம் உள்ள பித்ருயானத்தில் சென்றோர், பூமியை அடை வேண்டும். சிறந்த கர்மங்களைச் செய்தால், அவர்கள் பயணம் மேல்நோக்கி அமையும். மேலும் கீழுமானவை ஜீவர்கள் செல்லும் பாதை. குறுக்காகச் செல்வது பிரபஞ்சம் செல்லும் பாதை.
முக்கிய விரத நாட்களான வைகுண்ட எகாதசி , மகா சிவராத்திரி போன்றவை வரும் போது இருக்கும் விண்வெளி அமைப்பைப் பார்த்தால், நாம் சரியாகவே இந்தப் பாதையைக் கணித்துளோம் என்று அறியலாம். இந்த விரதங்களின் தாத்பரியத்தின் அடிப்டையை வைத்துப் பார்க்கும் போது, நாம் கண்டுள்ள பிரபஞ்சவியல் கூறும் பாதையும், அதில் நான்முகப் பிரம்மனின் செல்லும் பயணம் என்று நாம் கூறுவதும் சரியே என்று தெரிகிறது.
இந்தப் படத்தில் மார்கழி மாத அமைப்பு காட்டப்பட்டுள்ளது. மார்கழியில் சூரியன் தனுர் ராசியிலும், சந்திரன் மிதுனத்திலும் இருக்கும்போது பிரபஞ்சம் செல்லும் பாதையில் சூரியன், பூமி, சந்திரன் வருகின்றன. இது பிரபஞ்சப் பாதை. அதற்குச் செங்குத்தான பகுதியில் வருவது பங்குனி மாதம் வரும் மீன ராசி. இது மோக்ஷ ஸ்தானம் எனப்படும். இது தேவயான வழி. இதை ஈசான திசை என்றும் சொல்கிறோம். காரணம் என்னவென்று இப்பொழுது எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன். பிரம்ம லோகம் இந்தத் திசையில் இருக்கவே, இந்த திசை தெய்வீகத்தைக் குறிப்பது. இந்தத் திசை வழியே இந்தக் கர்மச் சக்கரத்தை விட்டு முக்தர்கள் செல்லவே, திரும்பி வராமல் நிலைத்து இருக்கும் பரமபதம் அடையவே, வைகுண்ட ஏகாதசி இந்த அமைப்பில் வருகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சந்திரன் தேவயானப் பகுதியைக் கடக்கிறான். அப்பொழுது பரமபத வாயில் திறந்து, நாம் பிறவா நிலையைத் தரும் பெரும் பதத்தை அடைகிறோம் என்கிறோம்.
அதே மார்கழி மாதம் பௌர்ணமியன்று சந்திரன் மிருக சீரிஷத்தில் இருக்கிறான். அப்பொழுது பிரபஞ்சம் செல்லும் வட மேற்கு- தென் கிழக்குப் பாதையில் சூரியனும், சந்திரனும், பூமியும் வருகின்றன. இங்கு மிருக சீரிஷத்திலும் சில சிறப்புக்கள் நம் வேத மதம் கூறுகிறது.
மிருகசீரிஷத்தின் நக்ஷத்திர தெய்வம் சோமன் என்னும் சந்திரன். சோம பானம் பற்றிப் பல இடங்களிலும், பல தத்துவங்களுடனும் சொல்லப்பட்டிருந்தாலும், இங்கே சோமன் என்பது சாவாமை தரும் அமிர்தம். இறவாமல் மேலும் மேலும் உற்பத்தி ஆகிக் கொண்டே போகும் வழி என்பதால் இந்தப் பகுதியில் தெரியும் இந்த நட்சத்திரம் சோமனது அருளால் உண்டான நட்சத்திரம் எனப்பட்டது. தலையைத் துருத்திக் கொண்டு துள்ளி ஓடும் மான் போன்று இது இருக்கிறது என்பதால் இந்தப் பெயர். மிருக சீரிஷம் என்றால், மானின் தலை என்று பொருள்.
நாம் மிருகசீரிஷம இருக்கும் திசையை, அல்லது பகுதியை நோக்கினால் அதுவே நமது பிரபஞ்சமும் முன்னேறும் பாதை என்று தெரிந்து கொள்ளலாம். இந்தப் பாதையைக் காட்டும் மார்கழி பௌர்ணமி தினத்தின் போது நம் தமிழ் முன்னோர் பாவை நோன்பை ஆரம்பித்தனர். இரண்டு நோக்கங்களுடன் பாவை நோன்பு செய்யப்படுகிறது. ஒன்று, மழை வேண்டி, மற்றொன்று, கொண்ட கணவனை இந்தப் பிறவி மட்டுமல்லாமல், வரப் போகும் பிறவியிலும் கணவனாகப் பெற வேண்டும் என்பதே.
இவை இரண்டும் எதிர் காலம் பற்றியவை. மழையின் சிறப்பு உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பது. உயிர்களை வளர்க்க ஏதுவாக இருப்பது. வளர்ந்து செல்லும் படைப்பை வழி நடத்திச் செல்லும் – சோமன் காட்டும் – இந்தப் பாதையைக் காட்டிலும் வேறெந்தப் பாதை இதற்குத் தகுதியாக இருக்கும்?
பாவை நோன்பு எதிர்காலத்தைப் பற்றி வேண்டப்படுவதாக உள்ளது. வீடு பேறு பெறுவதுதான் நம் மதத்தின் குறிக்கோள். ஆனால் அதைப் பெற வேண்டும் என்றால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று இயல்களிலும் நாம் நம் வாழ்க்கையைச் செம்மையாகக் கழிக்க வேண்டும். இவற்றை தனியாகச் செய்ய முடியாது. ஒருவருக்கொருவர் நிறை செய்வதாக, (complementary role) ஆண், பெண் இருவருமாக மனையறத்தில் இருந்தால்தான் முடியும். இதில் இந்த மூன்று இயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவற்றைச் செயலாற்றப் போகும் அங்கங்களான ஆணும், பெண்ணும் சிறந்த ஜோடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பிறவியில் அவர்கள் அன்னியோனியம், அது மட்டுமல்ல, பிறவி தோறும் தொடரும் அன்னியோன்னியம் தேவை என்று எங்கேயோ போய் விட்டார்கள் நம் முன்னோர்!
இந்தக் கருத்தை, செயலை ஆயிரம் வருடங்கள் முன் வரை கடை பிடித்து வந்தவர்கள், பாரத வரலாற்றிலேயே நம் தமிழ் மக்கள்தான். இந்த மண்ணிலேதான் குஷ்பூ-கொள்கைகளும் காலூன்றி வருகின்றன. நம் பாரம்பரியம் நினைத்தபோக்கில் உருவாக்கப்பட்டவை அல்ல. நாம் இதுவரை கூறிய பிரபஞ்சக் கொள்கை கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் பாரம்பரியத்தின் ஆழமும், இந்து மதத்தின் தொலை நோக்கமும் விளங்கும்.
மீண்டும் மிருகசீர்ச நட்சத்திரத்துக்கு வருவோம்.
இதன் முந்தின நட்சத்திரம் ரோஹிணி. ரோஹிணியின் தெய்வம் பிரஜாபதி என்னும் உயிர்களை உண்டு பண்ணும் பிரம்மன் ஆவார். இதன் பிந்தின நட்சத்திரம் ருத்திரனைத் தெய்வமாகக் கொண்ட திருவாதிரை ஆகும். ரோஹிணி, மிருக சீரிஷம், திருவாதிரை என்னும் மூன்று நட்சத்திரங்களும் பிறப்பு, நடப்பு, முடிவு என்பவற்றைக் குறிப்பவை. மிருகசீரிஷம் காட்டும் பாதை, முடிவில் ருத்திரனில் ஐக்கியமாகி விடுகிறது. தோன்றும் பிரபஞ்சம் முடியும் இடத்தில் ருத்திரன் காட்சி தருகிறார். அதை நினைவு படுத்தி மார்கழி மிருக சீரிஷம் முடிந்த அடுத்த நாள் ஆருத்ரா தரிசனம் வருகிறது. இவை அனைத்துக்கும் பல கதைகள் உள்ளன. ஆனால் பிரபஞ்சவியலில் இவை எல்லாம் சில முக்கிய அமைப்புகளைக் குறிப்பதைக் காணலாம். அதனால் மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது – ஏனோ தானோ என்று எழுந்ததல்ல இந்து மதம்.
மேல் சொன்ன விவரங்களின் தொடர்பாக மேலும் சில விவரங்கள்:
மார்கழி பௌர்ணமியின் போது நமது தென் துருவம் புரட்டாசி மாதம் காட்டும் கன்னி ராசியை நோக்கி உள்ளது. அது பித்ருயானம். புரட்டாசியில் சூரியன் கன்னி ராசிக்கு வரும்போது, சூரியன் இருக்கும் திசையை (ராசியை , மாதத்தை) முன்னிட்டு அந்த மாதம் பித்ருக்களுக்கு முக்கியமாகிறது. அப்பொழுது பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் அது.
இதைப் போன்ற ஒருங்கிணைப்பு வரும் மற்றொரு மாதம் பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் சூரியன் தேவ யானம் காட்டும் வட கிழக்கு திசையில் வருகிறது. இதனால் பங்குனி மாதம் எல்லாக் கோயில்களுக்கும் விசேஷமாகிறது. பங்குனியில் சேர்த்தியும், தெய்வங்களின் கல்யாணமும் நடப்பது, அந்த தெய்வத்துடன் ஒரு நாள் நாமும் இணைய வேண்டியதை நினைவு படுத்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. பாவை நோன்பின் பயனாக நோன்பு முடிந்து எண்ணம் கை கூடும் மாதமும் பங்குனி தான். பங்குனி உத்தரத்தில், பிரமம் லோகமும், நமது வட துருவமும், சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன.
மகாசிவராத்திரி வரும் நேரத்தில் இந்தப் பாதைகள் அமையும் விதத்தைப் படத்தில் காணலாம்.
தேவயான அமைப்புக்குச் சற்று முன்னதாகவே மாசி மாத தேய்பிறை சதுர்தசி வந்து விடுகிறது. சில டிகிரி வித்தியாசம் வருகிறது. (அதைக் கணக்கிட முடியும்) . அதே போல இந்த அமைப்புக்குச் செங்குத்தாக வரும் கோடு பிரபஞ்சப் பாதையில் அமைகிறது. அங்கும் அந்த அளவு டிகிரி வித்தியாசம் வரும். இந்த வித்தியாசம்தான் பிரபஞ்சம் வளையும் அளவாக (curvature) இருக்க முடியும்.
இப்படி அமைவதில் ஒரு சிறப்பைக் காணலாம். மகாப் பிரளயம் நடக்கும்போது, பிரம்ம லோகம், பிரபஞ்சப் பாதையில் இன்னும் முன்னேறி விட்டிருக்கும். பிரளயம் நடக்கும் நேரத்தில், பிரம்மனும் அவரது உலகை அடைந்த முக்தர்களும் பிரபஞ்சப் பாதையை விட்டு நீங்கி விட்டிருப்பார்கள். அவரோடு நீங்குபவர்களில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர் அருளாலும் மறு பிறவியைக் கடந்தவர்கள் அடங்குவர்.
சிவனுக்கு இன்னும் வேலை முடியவில்லை; வேலை என்றும் முடியாது. Conveyor belt -இல் வருகிறார்போல அண்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை தோற்றமில்லாப் பிரபஞ்சத்தில் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதும் தோன்றும் பிரபஞ்சத்தில் படைப்பு ஆரம்பித்துக் கொண்டே இருக்கும். உடுக்கையும், அக்னியும் தூக்கின இரண்டு கைகளுக்கும் ஓய்வே கிடையாது. தூக்கினது தூக்கினபடி இருந்தால்தான் அண்டங்கள் இயங்க முடியும்.
தோன்றும் பிரபஞ்சத்திலும், எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ, அங்கெல்லாம் சிவனது உடுக்கை ஒலி கேட்கும். இமயமலை வளர்ந்தபோது அப்படித்தான் ஓயாமல் உடுக்கை ஒலி கேட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. அப்பகுதியில் இருந்த கடலை முட்டி, அப்பால் இருந்த நிலப்பகுதியை மோதி, மேற்கொண்டு போக வழியில்லாமல் போகவே, மலையாக வளர்ந்தது இமய மலை என்று புவி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலை அழித்து, மலை வந்தது. அது உடுக்கை ஒலி காட்டும் படைப்பு. அதனால் அங்கு சிவன் அம்சம் இருக்கிறது. அவனை அடைய விரும்பும் சித்தர்களும் அங்கு தான் சித்தி பெறுகின்றனர். இமய மலையில் சித்தாஷ்ரமம் இருந்தது என்றும், அங்கு விஸ்வாமித்திரர் போன்ற ரிஷிகள் வசித்தனர் என்றும், வாமன அவதாரம் அங்கே தோன்றியது என்றும் வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
எங்கெல்லாம் அழிவிலிருந்து ஆக்கம் வருகிறதோ அது சித்தி பெரும் இடமாகிறது. அப்படிப்பட்ட மற்றொரு இடம் திருவண்ணாமலை. அந்த மலை அணைந்த எரிமலை என்று புவியியலார் கருதுகின்றனர். ஒருகாலத்தில் பிரளய கால அக்னியைப் போல விண்ணளவு உயரும் நெருப்பைக் கக்கிகொண்டிருந்த இடம் அது. அந்த அக்னி அழிக்கவில்லை. சித்தி பெரும் இடமாக ஆக்கி விட்டிருக்கிறது.
இன்றைக்கு நாம் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு இருக்கிறோம்?
இந்தக் கேள்விக்கு சிவபெருமானே காலக் கடிகாரமாக உதவுகிறார்.
நாம் இருக்கும் இந்தக் காலக்கட்டம் நான்முகப் பிரம்மனின் ஆயுளில் பாதி முடிந்து, அதாவது 50 வருடங்கள் முடிந்து, 51 ஆவது வருடத்தின் முதல் நாள் மதியம் உச்சிப்பொழுது தாண்டி இருக்கும் நேரம் (இந்த விவரங்களைப் பிறகு பார்ப்போம்). நடராஜர் தாண்டவக் கோலம் காட்டும் பிரபஞ்சப் பயணத்தில், அவர் முடி மேல் நம் இப்பொழுது இருக்கிறோம். அதை இவ்வாறு காட்டலாம்.பாதையைத் தெரிந்து கொண்டோம்.
இனி படைப்பு எப்படி நடந்தது, நடக்கிறது என்று இந்தப் பிரபஞ்சவியல் கூறுவதைப் பார்ப்போம்.
(தொடரும்)
மிக சிறந்த கட்டுரை. பல நுட்பமான செய்திகள் அடங்கி உள்ளன. கட்டுரை ஆசிரியருக்கு நன்றிகள் பல.
Small request: Kindly put the images little more clearly.
மகா சிவராத்திரி தொடர்பாக ஒரு சந்தேகம்:
இந்த வருடம் இருவிதமாக மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது.
பிப்ரவரி 12ம் தேதி வந்த சிவராத்திரி சரியா…
அல்லது மார்ச் 13ம் தேதி வந்த சிவராத்திரி சரியா…
ஏனெனில் தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள
அனைத்து சிவாலயங்களிலும் பிப்ரவரி 12ம் தேதி தான் மகா
சிவராத்திரி தினமாக சிறப்பு வழிபாடுகள் செய்தனர்…..
ii have been reading your articles.the you have a sound knowledge and deep understanding in universe and it s evolution.we are blessed to read such articles.may god give you good health.
@ சிவகுமார்
>>>>>>
மகா சிவராத்திரி தொடர்பாக ஒரு சந்தேகம்:
இந்த வருடம் இருவிதமாக மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது.
பிப்ரவரி 12ம் தேதி வந்த சிவராத்திரி சரியா…
அல்லது மார்ச் 13ம் தேதி வந்த சிவராத்திரி சரியா…
ஏனெனில் தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள
அனைத்து சிவாலயங்களிலும் பிப்ரவரி 12ம் தேதி தான் மகா
சிவராத்திரி தினமாக சிறப்பு வழிபாடுகள் செய்தனர்
<<<<<<<<
கேள்விக்கு நன்றி. இதைப் போல பல கேள்விகளுக்கு / சந்தேகங்களுக்கு இந்தக் கட்டுரையில் பதில் இருக்கிறது. கேளுங்கள். எங்கே பதில் என்று சுட்டிக் காண்பிக்கிறேன்.
இந்தக் கேள்விக்கு விடை சிவராத்திரிக்கான விளக்கம், படம் ஆகியவற்றில் இருக்கிறது.
பங்குனி மாதம் என்பது சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் நேரம். இங்கே நாம் காணும் விளக்கம் அந்த மாதம் தேவயானம் போகும் திசை எனபதே. எனவே அது ஆரம்பிப்பதற்கு முன் சிவ ராத்திரி வர வேண்டும் – வரும்.
சிவ ராத்திரி விரதம் இருப்பவர்கள், அது முடிந்தவுடன், பிரளயத்தில் மாட்டிக் கொள்ளாமல், பிறவா நிலை அடைவர். அதாவது சிவ ராத்திரியில் சம்ஹாரமும் நடக்கும். சிவனது அருள் பெற்றவர்கள் பெரும் பதம் அடைவர். பெரும் பதம் அடையும் திசை தேவயான திசையான மீன ராசி.
எனவே பங்குனியில் / மீன ராசியில் சூரியன் நிழைவதற்கு முன் வரும் தேய்பிறை சதுர்தசி சிவ ராத்திரி ஆகும். அப்பொழுது சூரியன் இன்னும் கும்ப ராசியில் அதாவது மாசி மாதத்தில் இருக்கும். இது இந்த வருடம் மார்ச் மாதம் வந்தது. சிதம்பரம் போன்ற புராதான கோவில்களில் அன்றுதான் அநுஷ்டித்தார்கள்.
அப்படி என்றால் பிப்ரவரி மாதமும் ஏன் வந்தது?
சதுர்தசி போன்ற திதிகள் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட சந்திர மாதக் கணக்கு ஆகும். அந்தக் கணக்கில் சந்திரமான மாசி மாதம் (மாகம் என்பர்), சூரியக் கணக்கில் தை மாதமே வந்து விட்டது. சூரியன் அப்பொழுது இன்னும் தையில் / மகர ராசியில்தான் இருந்தது. அப்பொழுது இன்னும் தேவயான வழியை சூரியன் எட்டவில்லை. அதனால் வான் மண்டல அமைப்பின்படி அப்பொழுது மகா சிவராத்திரி வரவில்லை. எனினும், சந்திர மாதக் கணக்கின் படி வரவே அநுஷ்டித்தார்கள்.
ஏன் இந்த கால் வேறுபாடு?
சூரியனும், சந்திரனும் மேஷ ராசியில் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டு, பிறகு மீண்டும் அதே இடத்தில் வருவதற்கு சூரியனுக்கு 365.25 நாட்கள் ஆகின்றன. சந்திரனுக்கு 354 நாட்கள் ஆகின்றன. அதாவது 11.25 நாட்கள் முன்னதாகவே, சந்திரன் அந்த இடத்தை அடைந்து விடுகிறது. இப்படியே இரண்டரை வருடங்களில் ஒரு சந்திர மாதம், அதாவது 28.15 நாட்கள் கூடி விடுகின்றன. இதை ‘அதிக மாசம்’ என்பர். இந்த அதிகப் படியான மாதம் இந்த வருடம் வருகிறது.
உதாரணமாக் சந்திர மாதக் கணக்கில் தை வந்த சில நாட்கள் பிறகு சூரியன் தை மாதத்தில் நிழையும். சந்திரன் செய்த over-taking காரணமாக இந்த வருடம் (விரோதி என்னும் சூரிய வருடம்) தை மாதம் முழுவதும், சந்திரனின் மாசி மாதம் வந்து விட்டது. அதன் அடிப்படையில் அப்பொழுதே, (பிப்ரவரியில்) மகா சிவராத்திரி வந்தது. இந்த over-taking தொடர்ந்து வந்து இப்பொழுது பங்குனியிலே சந்திர மாத சித்திரை முடிந்து விட்டது. அதன் தொடர்ச்சியை அப்படியே எடுத்துக் கொண்டு போனால் குழப்பம் வரும். நம் பண்டிகைகள் விரதங்கள் எல்லாம், சூரியன், சந்திரன் இரண்டையுமே அடிப்படையாகக் கொண்டவை. எனவே, அதிகப் படியான சந்திர மாதத்தை கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல் அதற்கடுத்த மாதத்திலிருந்து மாதக் கணக்கைத் தொடங்குவர்.
இந்த வருடம் சூரியமானப் பங்குனியிலும் ஒரு சந்திரமான சித்திரை வந்தது. சூரியமான சித்திரையிலும் ஒரு சந்திரமான சித்திரை வருகிறது. . இரண்டாவது சித்திரை அதிக மாதம். அதிக மாதத்தில் திதி சம்பந்தமான விரதங்கள் செய்வதில்லை. அதை ஒதுக்கி விடுவார்கள். இப்படி அட்ஜஸ்ட் செய்வதால் அடுத்த இரு வருடங்களில் விரத நாட்கள் வேறுபாடு வராது. இப்படியே அவ்வ பொழுது அட்ஜஸ்ட் செய்து வருகிறோம்.
இப்படி வேறுபாடு வருவதும் அதை சரி செய்வதும் மிக முக்கிய செய்தி. இதன் அடிப்படையில்தான் யுகம் என்னும் காலக் கணக்கே ஆரம்பிக்கிறது. இதைப் புரிந்து கொண்டால், ராமாயணம் , மகாபாரதம் போன்றவற்றின் யுகக் கணக்குகள் என்ன என்பது விளங்கும். அவற்றைப் பற்றி 7 – ஆவது கட்டுரையில் விவரங்கள் வருகின்றன.
வாசகர்களுக்கு,
என்ன கேள்வியானாலும் கேளுங்கள். கேட்பது தவறோ, பிழையோ, அபத்தமோ என்று என்ன வேண்டாம். நம் மதத்தில் எல்லா விஷயங்களும் மிகத் தெளிவாக, அறிவார்த்தமாக, பிரபஞ்சம் சார்ந்ததாக உள்ளது. எனக்குப் புரிந்த வரையில், தெரிந்தவரையில் விளக்குகிறேன்.
ஒரு விளக்கம்.
இங்கே சூர்யமானம், சந்திரமானம் என்று சொல்கிறோம்.
‘மானம்’ என்றால் என்ன?
மான என்னும் சம்ஸ்க்ருத சொல்லுக்கு அளவுகோல் அல்லது measurement என்பது பொருள். காலத்தை அளக்க சூரியன் மற்றும் சந்திரனைப் பயன் படுத்துகிறோம்
சூரியனை அளவுகோலாகக் கொண்டு வருவது சூரியமானம். சந்திரனை அளவுகோலாகக் கொண்டு வருவது சந்திரமானம்.
அதுபோல் தேவ, பித்ருயானத்தில் வரும் யானம். ‘யான’ என்றால் பயணம், செல்லுதல், ஊர்தி என்று பொருள்.
தெய்வங்கள் இருக்கும் இருப்பிடம் நோக்கிச் செல்வது தேவயானம், அதுபோல் பித்ருயானமும்.
கட்டுரை மிகவும் அருமை .தனபால்
உண்மை அறிவு, ஞானம் என்றும் அக்ஞானம் இருள் என்றும் கூறப்பட்டுள்ளதைப் பார்த்தால், எவ்வழியில் செல்வது என்பது ஆழ்வார் கூற்றுப்படி ‘அவரவர் விதி வழி அடைய நின்றனரே’ என்பதுதான் சத்தியமாகிறது. கட்டுரையாளரைப்போல் நம் சித்தாந்தங்களை வெளிக்கொணர, வெகு சிலராலேதான் முடியும்; அவ்வகையில், கட்டுரையாளரும் “தெய்வம் மானுஷ ரூபேண’ என்று தெய்வமே வடிவெடுப்பதைக் காண்பிக்கிறது.
ஜெயஸ்ரீ,
நீங்கள் எழுதுவது அறிவியலா இல்லை ஆன்மீகமா? அதாவது இங்கே நீங்கள் எழுதுவது உங்கள் நம்பிக்கையை – இல்லை முன்னோர்களின் நம்பிக்கையை விவரித்தா இல்லை (முன்னோர்கள் சொல்லும்) ஒரு தியரி, அதை நிரூபிக்க இன்னின்ன பரிசோதனை என்று செல்லும் விஞ்ஞானத்தை விவரித்தா? பிரம்மா மேலே பார்த்தார் கீழே பார்த்தார் என்கிறீர்கள். இதெல்லாம் அவரவர் நம்பிக்கை இல்லையா? வடக்கு(மேலே), தெற்கு(கீழே) இரண்டு திசைதான் நிச்சயம் என்கிறீர்கள், பிறகு கிழக்குப் பக்கம் நகர்கிறது என்கிறீர்கள். அண்ட வெளியில் மேலே கீழே வலது இடது எல்லாம் என்ன? Frame of reference ஒன்று வேண்டாமா? அப்படி ஒரு frame of reference இருந்தால் கிழக்கும் மேற்கும் மட்டும் என்ன பாவம் செய்தன? அவற்றையும் கூடத்தான் நிர்ணயித்துக் கொள்ளலாம்.
உங்கள் கட்டுரையை எப்படி படிப்பது என்று புரியவில்லை. உங்கள் ஆடியன்ஸ் யார்? Scientific method என்று சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்பவர்களிடம் வேதத்தில் cosmology பற்றி சொல்லி இருப்பதை அந்த method மூலம் விளக்க முயற்சிக்கிறீர்களா? இல்லை வேதம் ஒரு scientific text கூட என்று நினைப்பவர்களுக்கு வேதத்தில் cosomology பற்றி சொல்லி இருப்பதை விளக்க முயற்சிக்கிறீர்களா? இந்த இரண்டு குழுவினரும் mutually exclusive இல்லைதான், ஆனால் அவர்களின் தேவைகள் வேறு வேறு…
ஆஹா அனந்த மயமாக கட்டுரையுள்ளது.
இந்த வருடம் (விக்ருதி) சாந்திர மானப்படி வரும் அதிக மாதம் ‘அதிக வைசாக’ மாசம்.(ஏப்ரல் 15 முதல் மே 14 வரை ).
நமது பல பண்டிகை தினங்கள் சாந்திர மானப் படியே கொண்டாடப் படுகின்றன. சந்திரனின் மாற்றங்களையும் போக்கையும் தினமும் எளிதாகக் காண முடியும் என்பதுதான் இதற்க்குக் காரணம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஒரு பண்டிகையோ அல்லது முக்யமான விழாவோ வருவதைக் காணலாம்.
நன்றி அக்கா…
தாங்கள் கேள்வி கேட்க தூண்டி விட்டீர்கள்.
என்னுடைய புதிய கேள்வி
தேவயானம் – உத்திராயனம்
பித்ருயானம் – தக்ஷினாயனம் என்று கொள்ளலாமா
@ nature
9 April 2010 at 10:33 pm
உண்மை அறிவு, ஞானம் என்றும் அக்ஞானம் இருள் என்றும் கூறப்பட்டுள்ளதைப் பார்த்தால் <<<<<<<
இருள் நீங்கணும், அதனால் ஞானம் பிறக்கணும் – இந்தக் கட்டுரைகள் இதைச் செய்திருந்தால், மிக்க மகிழ்ச்சி.
ஆனால் தவறாக எண்ண வேண்டாம்.
உங்கள் மறுமொழியின் கடைசி வரி – “கட்டுரையாளரும் “தெய்வம் மானுஷ ரூபேண’…..” கொஞ்சம் ஓவர் என்று தோன்றுகிறது.
அதை இப்படிச் சொல்லலாம்.
நமக்குள் இருக்கும் தெய்வம் நம்மைப் பேச வைக்கிறது.
‘நிமித்த மாத்தரம் பவ’ என்று கிருஷ்ணன் சொன்னதைப் பரிபூரணமாக உணர்ந்து கடை பிடிக்கிறேன்.
என் வரையில் நான் தெய்வ ஆக்யை இல்லாமல் இந்த மாதிரி கட்டுரைகளைக் கூட எழுதுவதில்லை. இந்தக் கருத்துக்கள் தூக்கத்திலேயே, மனம் பேசுவது போல சொல்லிக்கொண்டிருக்கும். இதை எனக்கு இப்படி பொதுவில் சொல்ல விருப்பமில்லை. ஏனென்றால் இதைப் படிப்பவர்கள் வெவ்வேறு விதப் பக்குவ நிலையில் இருப்பவர்கள். அவர்கள் தங்கள் போக்கில் அர்த்தம் பண்ணிக் கொண்டு கேட்பதற்கு பதில் சொல்ல முடியாது – அவர்களும் நானும் ஒரே பக்குவத்தில் வரும் வரை.
இந்தத் தொடரின் பின்னூட்டம் ஒன்றில் சொல்லி இருப்பேன் – ததாமி புத்தி யோகம் என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னதை (10-10) .
At some point of time you find things falling in place – perfectly.
அந்த threshold point – இல் ‘ததாமி புத்தி யோகம்’ நிகழ்கிறது எனலாம். அங்கே இப்படி ஒவ்வொன்றும், மற்றொன்றில் இலகுவாக பிணைவதைப் பார்க்கலாம்.
RV
சப்ஜெக்ட் மேட்டரில் கேள்விகள் வரும் என்று நினைத்து கேளுங்கள் என்றேன்:)
நீங்கள் எழுதியுள்ள இரண்டு பத்திகளில் ஒரே ஒரு கேள்விதான் இந்தத் தொடரின் கருத்துக்கள் குறித்து வருகிறது. அது Frame of reference பற்றி. இதற்கு முந்தின கட்டுரையில் அந்த விளக்கம் காணலாம். அதற்கும் மூலமான கருத்து முதல் கட்டுரையில் தந்துள்ள நடராஜர் வடிவில் – கால் பங்கு தோன்றும் பிரபஞ்சம் என்னும் வேதக் கருத்தைக் காண முடியும் என்பது அது.
எல்லாக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாகவும், அவ்வவற்றின் பின்னூட்டங்களில் கொடுத்துள்ள விளக்கங்களையும் படிக்காமல் இந்தக் கட்டுரை புரியாது. ஆன்மிகம், நம்பிக்கை போன்ற இந்த வார்த்தைகள் எங்கே எப்படி பொருந்துகின்றன என்று இந்த ஒழுக்கில் தரப்பட்டுள்ளன.
“இந்தக் கட்டுரையை எப்படிப் படிப்பது என்று புரியவில்லை” >>>
இந்த உங்கள் கருத்தைப் படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வருவது, ‘மாய மான் வேட்டையில்’ இந்திரா பார்த்தசாரதி அவர்கள் சொன்ன ஒரு வரி. ‘ எது நல்ல கவிதை தெரியுமா? பாதி புரிந்தும், பாதி புரியாததுமாக இருப்பதுதான்.’ அப்பொழுதுதான் புரியாத பகுதியை, படிப்பவர் தம் அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப அவரவர் வழியில் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
நீங்களும் முயற்சி செய்யுங்கள். இந்த சப்ஜெக்ட் அப்படிப்பட்ட சப்ஜெக்ட்.
இந்த சப்ஜெக்ட் அறிவியலும் அல்ல ஆன்மீகமும் அல்ல. இது பிரம்மம் பற்றியது. அண்ட சராசரங்களையும், எண்ணிலடங்காப் பிரபஞ்சங்களையும் கொண்டது இது. அண்டத்திலிருந்து அணு (பரம அணு ) வரை இதில் அடக்கம். இன்றைக்கு நாம் பார்க்கும் பொருள்களிலிருந்து, இது இந்தத் துறையைச் சேர்ந்தது, அது அந்தத் துறையைச் சேர்ந்தது என்று சொல்லும் அனைத்துமே இந்த singularity -இல் ஆரம்பித்தது. ஆல மரம் ஒன்று விதையில் அடங்கி உள்ளது போல.
எல்லாமே அதிலிருந்து தோன்றவே, விதை போன்ற அந்த பிரம்மத்தில் அறிவியலும் இருக்கும். எல்லா branches of knowledge -ம் இருக்கும். என்னவெல்லாம் தெரிந்தும் தெரியாமலும், தோன்றியும், தோன்றாமலும் இருக்கிறதோ அவை அனைத்துமே இருக்கும். . இன்றைக்குப் பார்க்கும் உலகில், சம்பந்தமே இல்லாமல் இருக்கும் விஷயங்கள், ஆரம்பத்தில் ஒன்றுக்குள் ஒன்றாகவோ, அல்லது ஒன்றிலிருந்து ஒன்றாகவோ அந்த பிரம்ம விதையில் இருந்திருக்கிறது.
விதையை ஆராய்ந்தால், எப்படி அது வளர்ந்து மரமாகத் தழைத்திருக்கிறது என்று தெரியும். அந்த விதையில் ஆராயந்ததையும், இன்று மரமாக இருப்பதையும் இணைத்து எதற்கு, எது மூலம் என்று காண்கிறோம். என் கட்டுரையின் methodology அப்படிப்பட்டது.
இன்றைக்கு நாம் பிரபஞ்சத்தில் பார்ப்பதை, மூல விதை போன்ற பிரம்மத்தின் விவரணத்தில் இணைத்து அறிய முடியும். அவ்வளவு ஏன்?
பிரம்மத்தின் இயல்பு முழுவதும் நம் உடலில் காட்ட முடியும். Cranial nerves – ரூபத்தில் பிரம்மம் நம் உடலில் செயல் படுவதைச் சொல்ல முடியும். நம் உடலில் vaisvanaran யார், எங்கே என்று காட்ட முடியும். எல்லாவற்றிலும் பிரம்மத்துடன் ஒரு unitariness இருக்கிறது.
அதை இனம் கண்டு கொள்ள observation வேண்டும்.
awareness வேண்டும்.
கலீல் கிப்ரான் வார்த்தையில் :- ‘In truth, we gaze but do not see, and hearken but do not hear; we eat and drink but do not taste.
And there lies the difference between the Seer and ourselves…”
I attempt to ‘see’ where people merely ‘gaze’ and explore Brahman with a conviction in the pramana sastras.
இங்கு ஆடியன்ஸ் யார் .. ?
யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால அவர்கள் இந்த மூன்று வகைகளில்தான் இருப்பர்.
those who see or wish to see
those who gaze
and those who have the conviction in pramana sastras
Or those who have all these put together.
@ரிஷி
வட இந்திய பஞ்சாங்களில் வைசாக மாதம் அதிக மாசமாகக் கொடுத்துள்ளர்கள். Regional tradition படி இவை நிர்ணயிக்கப்படுகின்றன. விரோதி வருஷ தமிழ் திருக்கணித பஞ்சாங்கத்தில் கொடுத்ததை வைத்து நான் சொல்லியுள்ளேன். தீபாவளி முதற்கொண்டே, இந்த வேறுபாடு வந்துவிட்டது, இரண்டு தீபாவளி வந்தது.
ஒரு விசேஷத்தைக் கவனிக்கலாம். இந்த தமிழ் வருஷப் பிறப்பன்று, சூரியன் மேஷத்தில் நுழையும்போது கூடவே சந்திரனும் இருக்கிறான். சதுர் மகா யுகம் ஆரம்பித்தபோது இப்படி இருந்தது, (மற்ற கிரகங்களும் கூடவே இருந்தன.)
#
Sivakumar
10 April 2010 at 11:12 am
என்னுடைய புதிய கேள்வி
தேவயானம் – உத்திராயனம்
பித்ருயானம் – தக்ஷினாயனம் என்று கொள்ளலாமா
<<<<<<<<
கூடாது.
தேவயானம், பித்ருயானம் குறிப்பிட்ட திக்கைக் கொண்டவை. அந்தத் திக்கில் உள்ளவை பங்குனி, புரட்டாசி மாதங்கள். அந்த மாதங்களில் அந்தத் திக்கை / வானில் அந்தப் பகுதியை சூரியன் கடக்கிறான் (பூமியின் பயணத்தில் அப்படி தெரிகிறது) .
உத்திராயனம், தக்ஷினாயனம் ஒவ்வொன்றும் ஆறு மாதம் கொண்டவை. பூமியின் சுழற்சியால், சூரியன் ஆறு மாதங்கள் வடக்கு நோக்கியும், ஆறு மாதங்கள் தெற்கு நோக்கியும் செல்வது போல இருப்பதை இப்படி சொல்கிறோம்.
// நீங்கள் எழுதியுள்ள இரண்டு பத்திகளில் ஒரே ஒரு கேள்விதான் இந்தத் தொடரின் கருத்துக்கள் குறித்து வருகிறது. //
நான்முகன் மேலே பார்க்கிறார் கீழே பார்க்கிறார் என்று இங்கேதானே எழுதி இருக்கிறீர்கள்? நீங்கள் எழுதி இருப்பது உங்கள் கருத்து+நம்பிக்கையா, இல்லை வேதங்களில் cosmology பற்றி இப்படி சொல்லப்படுகிறது என்று சொல்ல வருகிறீர்களா, இல்லை scientific method படி எழுதப்பட்டதா – இந்த தியரி இந்த விவரங்களை விளக்குகிறது, இந்த பரிசோதனைகள் இந்த தியரியை நிருபிக்கும், நிரூபிக்காது என்று விளக்குவதா என்று கேட்பது இந்த தொடரின் கருத்துகளைப் பற்றி இல்லாமல் வேறு என்ன என்று நினைக்கிறீர்கள்? உதாரணமாக இந்த நான்முகன் மேலே கீழே பார்க்கிறார் என்பதையே எடுத்துக் கொள்வோம். இது உங்கள் கருத்தா? நம்பிக்கையா? எந்த வேதத்தில் இப்படி சொல்லப்படுகிறது? இப்படி மேலேயும் கீழேயும் பார்ப்பதை எப்படி பரிசோதித்து அறிந்துகொள்வது? நீங்கள் எந்த விதத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்லாவிட்டால் என்னத்தை கேட்பது? உங்கள் நம்பிக்கையைப் பற்றி எனக்கு கேட்க ஒன்றுமில்லை. இப்படி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் சரி. என்றாவது படித்தால் நீங்கள் சொல்வது சரிதானா என்று தெரிந்து கொள்ளலாம். இது scientific method படிஎழுதப்பட்டது என்று நீங்கள் சொன்னாலொழிய கேட்க ஒன்றுமே இல்லை! இப்போதைக்கு குர்ஆனில் எல்லாம் இருக்கிறது, பைபிளில் எல்லாம் இருக்கிறது, creationism சரி, evolution தவறு என்று சிலர் சொல்வது போலத்தான் நீங்கள் எழுதுவதும் இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும்.
இன்னும் ஒரு தியரி – ஸ்பாகெட்டி மான்ஸ்டர் மதத்தினரின் தியரி இங்கே காணலாம். https://en.wikipedia.org/wiki/Spaghetti_Monster
RV அவர்களே
எனக்கு தெரிந்து வேதம் சொல்வது evolution நும் அல்ல creation நும் ஆல் – அது ஒரு stable state – சாஸ்வதமாய் இருக்கிறது என்று கீதையில் கூட வருகிறது (2-20).
மேலே கீழே பார்ப்பது – இதற்க்கு நான் புரிந்து கொண்டால் பதில் முதல் கட்டுரையில் இருக்கிறது
முதலாவதாக முதல் பிள்ளை பிறந்து விட்டால் – இரண்டாவதாகத்தான் இரண்டாவது பிள்ளை பிறந்தாக வேண்டும் (இரட்டை குழந்தைகலானாலும் சரி)
நான் இன்றைக்கு மேற்குப்பக்கம் தலை வைத்துப் படுத்தால் கிழக்குபக்கம் தான் கால் இருக்கும்
கோவில் கிழக்கப் பார்த்து இருந்தால் அதே கோவில் மேற்கப்ப பார்த்து இருக்காது
டெல்லி எண்ணம் நமக்கு வடக்க இருக்கு சீனா காரணக்கோ அது தெற்க இருக்கு என்ன செய்யறது
அமெரிக்க மேற்க்க இருக்கு பூமிக்கு இந்தப்பக்கமா பார்த்தால் கிழக்க இருக்குன்னு கூட சொல்லலாம்
RV
# நான்முகன் பார்ப்பது – Refer ஸ்ரீமத் பாகவதம் – 3-2 பகுதி in the print edition translated by Swami Prabhavananda. இந்தப் பகுதியில் பிரபஞ்சப் படைப்பு
விளக்கப்பட்டுள்ளது.
Online translation from Bhaktivedana available in https://srimadbhagavatam.com/3/8/en
SB 3.8.16:
Brahmā, born out of the lotus flower, could not see the world, although he was situated in the whorl. He therefore circumambulated all of space, and while moving his eyes in all directions he achieved four heads in terms of the four directions.
தாமரையின் மீது மேலே போய்க் கொண்டிருக்கிறார் என்றும் வருகிறது. ஆரம்பத்தைத்தேடி கீழே தக்ஷினத்தில் தேடினார் என்றும் வருகிறது.
# திசைகள் – மேல், கீழ், முன், பின், இதெல்லாம் தலை (கிழக்கு) தக்ஷிணம் (வலது), உத்தரம் (இடது) நடு உடல் (பிரம்மா) புச்சம் (பின் புறம் அலல்து வால்) என்றுள்ளது என்பதை தைத்த்ரீயம் இரண்டாவது பகுதியில் காணலாம்.
# முன்னேறும் திசைகள், அந்தத் திசை காட்டும் விவரணைகள் (உ-ம தென் கிழக்கில் அக்னி etc) நடராஜர் உருவிலும், shathapada, chathussashti, Eka sheeti உள்ளிட்ட 11 மற்றும் 32 வித அமைப்புகளில், Mayamatha, Aparaajitha preecha, Shilpa Ratna Grantha போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. சாவித்திரி உபநிஷத்தும், நாரத சம்ஹிதையும்,
விஷவாமித்ரர் பலை, அதி பலை மந்திரங்களை ராம, லக்ஷ்மனர்களுக்கு உபதேசம் செய்ததிலும் இவை ஒத்துப் போகின்றன. வரப் போகும் கட்டுரைகளில் அந்த ஒற்றுமையைச் சொல்கிறேன்.
# நம் உடல், உலகம், நாம் அமரும் நாற்காலி, சோபா வில் கூட திசைகள் உள்ளன. அந்தத் திசைகள் முன் சொன்ன ரீதியில் நிர்ணயிக்கப்படுகின்றன.
Mayamatha போன்ற முன் சொன்ன நூல்களில் இதைப் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன. அவை உபநிஷதம் சார்ந்தவை. நான்கு மூலை திசைகளின் லக்ஷணத்தை (அக்னி) நம் மத வழக்கங்களிலும், பிரபஞ்ச அமைப்பிலும் இருப்பதை இந்தக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.
# பிரபஞ்சத்திலும் உள்ள இந்த திசைகளில், எந்தப் பகுதியில் vulnerability உள்ளது என்றும் சொல்ல முடியும். அதுதான் science!! That is stunning and awesome knowledge! இதை எல்லாம் படியுங்கள், connection புரியும்.
# வேதத்தில் இது இருக்கிறதா அதி இருக்கிறதா என்று கேட்டால்:- வேதத்தை சாதாரண மக்களாகிய நாம் புரிந்து கொள்ள முடியாது. அது interpret செய்ய வேண்டிய சப்ஜெக்ட்டும் அல்ல. ஏன் என்பதை இந்தத் தொடரின் மறுமொழி ஒன்றில் கூறியுள்ளேன். ஆனால் வேதம் கூறும் கருத்துக்கள் ரிஷிகள் வாயிலாக உபநிஷத்துக்களிலும், பிரமம் சூத்திரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படி வந்துள்ள படைப்பு, பிரபஞ்சம், திசைகள் பற்றிய கருத்துக்களை, தைத்த்ரீயம், சந்தோக்யம், ப்ரிஹத் ஆரண்யகம், ஐதரேயம், சூரியப் பிரச்னம், புருஷ சூக்தம், பிரம்ம சூக்தம், அதற்கு ஆச்சர்யர்களது விளக்கம், ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம் சாந்தி பர்வம், இவை தவிர, சூரிய சித்தாந்தம், சித்தாந்த சிரோமணி ஆகிய நூல்களில் உள்ளன. இவற்றின் சாரம்சத்தை, நாம் காணும் பிரபஞ்சத்திலும், நம் மத வழக்கங்களிலும் காணலாம் என்பது இந்தத் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ளது.
விளக்கத்துக்கு நன்றி, ஜெயஸ்ரீ! நம் புராண இதிகாசங்களில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று எழுதுகிறீர்கள் என்று புரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்!
RV
இந்த விஷயங்கள் புராண இதிகாசத்தை விட, உபநிஷத்துகளில் அதிகம் காணப்படுகிறது. நான் கொடுத்துள்ள லிஸ்டில் சூர்ய பிரச்னம் யஜுர் வேதத்தைச் சார்ந்தது. இதில் திசை, திக்கு, அதன் தேவதைகள், எப்படி / ஏன் ஏழு நாட்கள்?, கோத்ரம் போன்ற இவை வெளிப்படையாக உள்ளன. படித்தாலே புரிந்து கொள்ள முடியும். ஆயினும் உள்ளுரைப் பொருளாக நிறைய விஷயங்கள் இருக்கிறது. பின்னிப் பிணைந்த இவற்றறை மூலம் முதல் ஆராய்ந்து வந்தால் இன்றைக்கு காணும் பல நிலைகளுக்கும், வழக்கங்களுக்கும் விளக்கம் காணலாம். எங்கெல்லாம் தவறு செய்கிறோம் என்றும் சொல்லலாம். தவறுகளைத் தவிர்க்கலாம்.
உதாரணமாக, திசை விஷயத்தில் ஒரு தவறு தற்காலத்தில் ஆங்காங்கு நடக்கிறது. அது என்ன என்று சொல்கிறேன்.
கோவில்கள், சந்நிதிகள் பொதுவாக கிழக்கு நோக்கியே இருக்கும். வேறு திசையில் இருப்பதும் உண்டு. அதற்கு ஒரு ஐதீகமும், காரணமும் இருக்கும்.
முக்கிய திசைகள்
தலை / முன் புறம் = கிழக்கு,
பின் புறம் = மேற்கு
மேல்புறம் / இடது = வடக்கு
கீழ் புறம் / வலது = தெற்கு
வேறு திசையைப் பார்த்து இருக்கும் கோவில்களில், irrespective of the Natural east, கோவிலைத் தனி யூனிட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கான திசை நிர்ணயம் அந்தக் கோவிலின் முன்புறம் கிழக்கு என்றும், அதன் அடிப்படையில் மற்ற திசைகளும் கொள்ள வேண்டும். இது எந்த திசை நோக்கி சேவிப்பது என்று நிர்ணயிக்க உதவுகிறது.
எந்தக் கோவிலிலும் கொடி மரத்துக்கு முன் சேவிக்க வேண்டும். கோவிலின் வலச் சுற்றாக, அதன் வலப் பக்கம் வந்து சேவிக்க வேண்டும். கிழக்கு பார்த்த கோவிலில், அப்படி சேவிப்பது வடக்கை நோக்கி அமையும். மேற்கு பார்த்த கோவிலில் தெற்கை நோக்கி அமையும். கோவிலைப் பொறுத்த வரையில் அது வடக்கு. சில கோவில்களில் இது தவறு என்று சொல்லி, கொடி மரத்தின் மறு புறம் வந்து சேவிக்கச் சொல்கிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். ஐதீகம் என்று வழி வழியாக வந்திருந்தால் ஒழிய அது கூடாது. கோவிலின் முகப்பைப் பொருத்து திசை அமைகிறது என்று திசை நிர்ணயம் தெரிந்தால், இப்படி நிகழாது.
வடக்கு – தெற்கு என்பது என்பதும் மேல்- கீழ் என்பதும் ஒன்று. சாந்தோக்ய உபநிஷத் 7-25-2 -இல் இப்படி ஒரு விவரணை வருகிறது. பல இடங்களிலும் வருகிறது. நம் உலகையே எடுத்துக் கொண்டால், பூமத்திய ரேகைக்கு மேல் பகுதி வடக்கு, கீழ் பகுதி தெற்கு.
வடக்கும் தெற்கும், இடம் – வலம் என்றும் அமைகின்றன. விஷ்ணுவும் சிவனும் இடப்பாகத்தில் தங்கள் தேவியைக் கொண்டுள்ளனர். இடது பக்கம் வடக்கை குறிப்பது. இந்தக் கட்டுரையின் மூலம் வடக்கின் விசேஷம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மனிதனுக்கு இடது பக்கம் வடக்கு, வலது பக்கம் தெற்கு. இடது கையாளர்களுக்கு இது மாறும்.
தெய்வங்களுக்கும் சரி, மனிதர்களுக்கும் சரி மனைவி இருக்கும் பக்கம் மூளையின் வலது, இடது செயல்பாட்டைப் பொருத்தது.
இடது பக்கம் சிந்தனை, அனுபவம் – அதை வலது மூளை இயக்குகிறது.
வலது பக்கம் செயல் செய்வது – அதை இடது மூளை இயக்குகிறது.
இடது பக்கம் உள்ள தேவியின் கிருபையால், கடவுளின் வலது கரம் அபயம் தருகிறது.
கணவன், மனைவி இருவராக செய்யும் செயல்களில் வலது, இடது புறம் அப்படி, அப்படியே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதாவது செயல் என்னும் கருமங்களில் மனைவி வலது புறம் இருக்க வேண்டும். வைதீக காரியம், தானம் , தருமம் செய்தல், திருமணம், தெய்வ வழிபாடு போன்ற சமயங்களில் மனைவி வலது புறம் இருக்க வேண்டும்.
ஏகாந்தத்தில், தேரில் (இந்நாளில் கார்), பட்டாபிஷேகத்தில், அரச சபையில், பொழுது போக்கு போன்ற சமயங்களில் மனைவி இடது பக்கம் இருக்க வேண்டும் என்று தர்ம நூல்கள் கூறுகின்றன.
//உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது//
இதைத்தான் நாம் அடிப்படைவாதம் என்கிறோம். இப்படி வேதமதம் சொல்லுமானால் (அப்படி சொல்வதாக நான் கருதவில்லை.) ‘வேதமதம்’ தவறு செய்கிறது. விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது. எக்ஸோ-பயாலஜி அல்லது அஸ்ட்ரோ-பயாலஜி என ஒரு அறிவியல் துறையே இருக்கிறது. நமது பூமியின் வளிமண்டல உயரடுக்குகளிலேயே நம் புவி சாராத நுண்ணுயிரிகளை பாரத அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். டிரேக் சமன்பாடு என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் எத்தனை அறிவுசார்ந்த பண்பாடுகள் வேற்றுக்கிரகங்களில் இருக்க வேண்டும் என அவர்கள் கணிக்கிறார்கள். பொதுவாக வேதம் உபநிடதம் ஆன்மிகம் இவை நம் அகவெளிக்கான சாதனங்கள். இவற்றை புற பிரபஞ்சத்துக்கு apply செய்து நிரூபணங்கள் தேடும் போது இத்தகைய பிரச்சனைதான் ஏற்படும். எப்படி அஸிமாவின் ரோபாட்டிக்ஸ் விதிகளில் மனு ஸ்மிருதியை மிஞ்சும் மானுடத்துவம் இருக்கிறதோ அதே போல டிரேக் சமன்பாட்டிலும், இஸ்ரோ வளிமண்டல உயரடுக்குகளுக்கு அனுப்பும் பலூன்களிலும் வேத ரிஷிகள் கண்ட புற-பிரபஞ்ச அறிதலைக் காட்டிலும் அதிக உண்மை அறிவு இருக்கக் கூடும்.
Dear Mr Aravindan Neelakantan,
Please excuse me for saying this – “ஏமாற்றமாக இருக்கிறது, நீங்களா இப்படி எழுதுவது?”
ஏமாற்றம் – 1 :- எடுத்துக்கொண்ட வரிகள்>>>>>
//உயிரினம் என்பது எந்த ஒரு காலக் கட்டத்திலும், ஒரு இடத்தில் தான் இருக்க முடியும். நாம் இருக்கும் காலக் கட்டத்தில் நாம் இருக்கும் பூமியில் இப்பொழுது இருக்கவே, வேறு எங்கும் இருக்க முடியாது. விஞ்ஞானிகள் என்ன தேடினாலும் நம் அறிவுக்கு எட்டக்கூடிய உயிரினங்களை எங்கும் கண்டுபிடிக்க இயலாது//
>>>>>>>>>>
சாதாரணர்களைப் போல செலக்டிவாக, முதல் வரியைக் கட் பண்ணி விட்டு மீதியை எடுத்துள்ளீர்களே? நான் எழுதின முழு வரியும் என்ன?
“வேத மதம் காட்டும் பிரபஞ்சவியலில், சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள உயிரினம் என்பது… ” — இப்படி தொடரும் இந்த வரி இல்லாமல் எந்த உயிரினத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?
நான் சொன்னது “சரீரம் கொண்ட – அதாவது பௌதிகமான உருவில் உள்ள”. இன்று வரை எந்த விஞ்ஞானியும் இப்படி உயிர் இருக்கும் என்று நினைக்கவில்லை, நம்பவில்லை, அப்படி ஒரு நம்பிக்கை தரும் ஒரு சாத்தியம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி சொல்பவர்கள் சயின்ஸ் fiction writers.
Habitable zone என்று கணித்துளார்கள். அங்கும் எல்லா காரணிகளும் இல்லை. நம்மால் அறிந்து கொள்ளக் கூடிய உயிர் இருக்க வேண்டுமென்றால், பஞ்ச பூதங்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். நாம் அப்படிப்பட்ட ஒன்றை அறிவதற்கு மட்டுமே tuned ஆகி இருக்கிறோம். நமது உபகரணங்கள் கண்டு பிடிக்குமே என்றால், அந்தப் பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் வரக்கூடிய விஷயங்களைத் தான் அவை தேடிக் கொண்டிருக்கின்றன.
அறுபதுகளில் சில ரெகுலர் பீப்ஸ் கண்டார்கள். முதலில் அவை வேற்று கிரக வாசிகளிடமிருந்து வருபவை என்று நினைத்தார்கள். பிறகு அவை இறந்து கொண்டிருக்கும் நியுட்ரான் நட்சத்திரங்கள் தருபவை என்று தெரிந்து கொண்டார்கள். இங்கும் வேதம் கூறும் பிரபஞ்ச இயல் சொல்வது போலத் தான் ஆகியுள்ளது.
நமக்கு தக்ஷிணத்தில் முன்பே தோன்றிய அண்டங்கள் உள்ளன. அங்கே இருப்பவை நியுட்ரான் நட்சத்திரங்கள். பூமியின் தெற்குப் பகுதியிலிருந்து அந்த பீப்புகள் வருகின்றன. மாறாக பூமியின் வட பகுதியில் – அதுவும் துருவப் பகுதியில் திசையில் மிகவும் compact – ஆக
கலக்சீகள் சென்று கொண்டிருக்கின்றன. அங்கே நியுட்ரான் நட்சத்திரங்கள் காணப்படவில்லை. 2015 -இல் மேலும் நவீன கருவிகளைக் கொண்டு வட பகுதியை ஆராய இருக்கிறார்கள்.
ஏமாற்றம் – 2 :->>> // இதைத்தான் நாம் அடிப்படைவாதம் என்கிறோம்// <<>> // இப்படி வேதமதம் சொல்லுமானால் (அப்படி சொல்வதாக நான் கருதவில்லை.) ‘வேதமதம்’ தவறு செய்கிறது. .//<<>>//விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது.//<<<>>>// எக்ஸோ-பயாலஜி அல்லது அஸ்ட்ரோ-பயாலஜி என ஒரு அறிவியல் துறையே இருக்கிறது. நமது பூமியின் வளிமண்டல உயரடுக்குகளிலேயே நம் புவி சாராத நுண்ணுயிரிகளை பாரத அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். டிரேக் சமன்பாடு என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் எத்தனை அறிவுசார்ந்த பண்பாடுகள் வேற்றுக்கிரகங்களில் இருக்க வேண்டும் என அவர்கள் கணிக்கிறார்கள்.<<>>>///பொதுவாக வேதம் உபநிடதம் ஆன்மிகம் இவை நம் அகவெளிக்கான சாதனங்கள். இவற்றை புற பிரபஞ்சத்துக்கு apply செய்து நிரூபணங்கள் தேடும் போது இத்தகைய பிரச்சனைதான் ஏற்படும்.//<<<<<
அகம் -புறம் எப்படி இணைந்தது என்று மேலே சொல்லியுள்ளேன். விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருங்கிணைந்தது . விஞ்ஞானம் வர வர, மெய்ஞானம் வளர்கிறது. ஐன்ஸ்டீன் ஒரு எடுத்துக்காட்டு.
மெய்ஞானம் வளர வளர விஞ்ஞானம் தெரிகிறது.
அகமும் புறமும் இணைந்த்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
108 என்னும் எண் மெய்ஞான சாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரபஞ்சத்தில் இந்த எண் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
* பூமியின் குறுக்களவு (diameter) X 108 = சூரியனது குறுக்களவு.
*பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் =
சூரியனது குறுக்களவு X 108
* பூமிக்கும், சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் =
சந்திரனது குறுக்களவு X 108
இந்த ஒற்றுமை எதேச்சையானது என்கிறீர்களா?
உயிர் பிறப்பதே மோக்ஷம் அடைய என்கிறோம்.
அங்கே ஆத்ம காரகனான சூரியனும், மனோ காரகனான சந்திரனும் உதவிக்கு வருகிறார்கள்.
ஆத்மாவும், மனமும் உயர இவை தேவை. இவை எங்கே இருக்கிறதோ, அங்கே உயிர் இருக்கும்.
உயிர் என்றால் தாவர, சங்கம, மனுஷ்ய, தேவ. (இவற்றுள் நீங்கள் சொன்ன வளி மண்டல உயிர்களும் அடங்கும்.)
முதல் மூன்றும் இங்குதான்.
நான்காவது எங்கிலும் இருக்கலாம்.
தேவர்களை detect செய்ய சயின்சால் முடியுமா?
முந்தின மறு மொழியில் சரியாக பிரசுரமாகவில்லை.
ஏமாற்றம் 2 – enpathu முதல் அகம், புறம் என்பது வரை இப்படிப் படிக்கவும்.
ஏமாற்றம் – 2 :->>> // இதைத்தான் நாம் அடிப்படைவாதம் என்கிறோம்// <<<
அடிப்படையான வாதத்தை வேறு அர்த்தத்தில் சொல்லியுள்ளீர்கள்
(contd)
ஏமாற்றம் – 3 :->>> // இப்படி வேதமதம் சொல்லுமானால் (அப்படி சொல்வதாக நான் கருதவில்லை.) ‘வேதமதம்’ தவறு செய்கிறது. .//<<<
பௌதிக உடலோடு சுவர்க்கம் கூட போக முடியாது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அங்குள்ள உடல், விதி முறைகள் வேறு. அங்கெல்லாம் சூக்ஷும உடல்தான். அதை நம் ஊனக் கண்களால் பார்க்க முடியாது.
வேத மதமா தவறு செய்கிறது? வேத மதம் சொல்வதை இன்று பார்கிறோமே! இன்று பார்க்காததையும், வேத மதம் சொல்கிறதே!
சில உதாரணங்களைப் பார்ப்போம் .
இன்று சயின்ஸ் சொல்கிறது, நம் கலக்சி கூடவே ஒரு companion galaxy வருகிறது. அது இருப்பது இந்தக் கட்டுரையில் சொன்ன வட துருவப் பகுதி. இன்னும் சொல்லப்போனால் வேத மதம் சொல்லும் சப்த ரிஷி மண்டலத்தில்தான் (கீதையில் இதன் முக்கியத்துவம் காணலாம். வரும் கட்டுரைகளில் இது பற்றி குறிப்புகள் தரப்படும்) இந்த companion galaxy இருக்கிறது.
https://www.space.com/scienceastronomy/mystery_monday_041025.html
மற்ற்றொரு உதாரணம்:-
நான் எழுத நினைத்து, ஆனால் எழுதினால் அது ஓவர் டோசாகப் போகுமோ என்று விட்டுவிட்ட சேதி, நாமிருக்கும் கலாக்சீதான் இந்த அண்ட சராசரங்களுக்கும் மத்தியில் இருக்கிறது. இந்தக் கட்டுரையின் உள்ளுறை விஷயமாக அது உள்ளது. பிரபஞ்சவியல் விஞ்ஞானிகளும், அந்த எண்ணத்தை நோக்கியே செல்கின்றனர்.
அதற்கு ஆதாரம் Red shift. விளக்கங்களை இங்கு காணலாம்.
https://www.scribd.com/doc/24907596/Our-Galaxy-is-the-Centre-Center-of-the-Universe-by-Dr-Russell-Humphreys-Ph-D
இதை எப்படி சொல்வதாக இருந்தேன் என்றால். வட துருவத்தில் ஒருவர் நின்றால் எல்லாப் பக்கங்களிலும் நிலம் விரிந்து செல்வது போல இருக்கும். ஒரு மையப் பகுதியில் இருந்தால் இபப்டித் தெரியும். பிரபஞ்சத்திலும் எல்லா கலக்சீகளும் நம்மை விட்டு எல்லாப் பக்கங்களிலும் செல்வது போல இருக்கிறது. அந்த context – இல் Red Shift வருகிறது. இது Doppler Effect அல்ல. பாகவதம் சொல்கிறதே, ஒரு whorl போன்ற தாமரையின் மீது அமர்ந்து எல்லாப் பாக்கங்களிலும் பார்த்தால் இப்படித் தெரியும். இந்த கருத்து தற்சமயம் பிரபஞ்சவியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
These two information are just the tip of the iceberg. ஆங்காங்கே வருவதை, இந்தத் தொடரில் காட்டி வருகிறேன்.
(contd)
ஏமாற்றம் – 4 :->>>//விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது.//<<<>>>// எக்ஸோ-பயாலஜி அல்லது அஸ்ட்ரோ-பயாலஜி என ஒரு அறிவியல் துறையே இருக்கிறது. நமது பூமியின் வளிமண்டல உயரடுக்குகளிலேயே நம் புவி சாராத நுண்ணுயிரிகளை பாரத அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். டிரேக் சமன்பாடு என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் எத்தனை அறிவுசார்ந்த பண்பாடுகள் வேற்றுக்கிரகங்களில் இருக்க வேண்டும் என அவர்கள் கணிக்கிறார்கள்.<<<///
டிரேக் சமன்பாடு ஒரு hypothesis.
அதன் பயன்பாடு உலக அளவில் சரிவரக்கூடும். பிரபஞ்சத்தில் அதன் சாத்தியம் குறைவு. அது சாத்தியப்படும் போது அங்கே இருக்கப்போவது வேறு உலகம் – நான் சொன்னது போல அந்தக் காலக் கட்டத்தில் அந்த இடத்தில் பௌதிகமான நாம் புரிந்து கொள்ளும் உயிர் இருக்கும்,
அதுவும் எங்கே எப்படி என்பதை வேத மதம் காலக் கூறில் சொல்லி விட்டது. (இந்தத் தொடரில் வருகிறது)
இன்றைக்கு உயிர் உலகில் உள்ளதென்றால் அதற்கு, habitable zone மட்டும் காரணமல்ல, சூரிய மண்டலம் என்னும் சுற்றுப்புறமும் ஒரு தொகுதியாக வருகிறது. ஒரு சந்திரன் இருக்கவேதான் – நேற்று நடந்ததே சீனாவில் பூகம்பம் – அபப்டிப்பட்ட நிகழ்வுகள் நிகழும், உலகைப் புரட்டிப் போட அது தேவை.
உலகம் recycle ஆகிக் கொண்டே இருக்கிறது.
இது மிதமான recycle.
கரியவன் (சனி கோள்) புகைந்தால், வெள்ளி தென் திசை சென்றால் மழை இல்லை என்றும் சங்க இலக்கியங்களில் வருகிறதே, நம் பருவ நிலைக்கு உலகத்துக்கு வெளியிலிருந்தும் காரணிகள் இருக்கிறார்கள். (அவை என்னென்ன என்ற பட்டியல் தரலாம். படிப்பவர்களை ஒரு அளவுக்குத் தயார் படுத்தினால்தான் புரிபட வைக்கக் முடியும்.)
இப்படி ஒரு காம்பினேஷன் அமைவதின் சாத்தியக் கூற்றினை டிரேக் சமன்பாடு எடுத்துக் கொள்ளவில்லையே?
*******
எக்ஸோ-பயாலஜி அல்லது அஸ்ட்ரோ-பயாலஜி – இன்னும் பல branches of knowledge எல்லாம் ஒருங்கிணைந்தது என்றுதானே நான் சொல்லியுள்ளேன்.
நம் உடலில் அத்தனை சயின்சும் உள்ளது. அதுவே பிரபஞ்சத்திலும் உள்ளது, இதெல்லாம் விதையில் இருந்தது. இன்று பார்ப்பது ஆலமரம்.
முன்பு ஒரு மறுமொழியில் சொன்னது :-
//நிறைய சயின்சும் தெரிந்து கொள்ளுங்கள். தீவீர சயின்ஸில், ஆழ்ந்தீர்கள் என்றால், ஒரு ஆச்சர்யமான காம்பினேஷனில் எப்படி மாலிகுலர்கள் முதல் மெகா பிரபஞ்சம் வரை சாத்தியம் என்றும் , மாஸ்டர் ப்ரோக்ராம் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமாகாதே என்றும் புலப்படும்.//
மேல் சொன்னவற்றின் தொடர்ச்சியாக :-
///பொதுவாக வேதம் உபநிடதம் ஆன்மிகம் இவை நம் அகவெளிக்கான சாதனங்கள். இவற்றை புற பிரபஞ்சத்துக்கு apply செய்து நிரூபணங்கள் தேடும் போது இத்தகைய பிரச்சனைதான் ஏற்படும்.//<<<<<
அகம் -புறம் எப்படி இணைந்தது என்று மேலே சொல்லியுள்ளேன். விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருங்கிணைந்தது . விஞ்ஞானம் வர வர, மெய்ஞானம் வளர்கிறது. ஐன்ஸ்டீன் ஒரு எடுத்துக்காட்டு.
மெய்ஞானம் வளர வளர விஞ்ஞானம் தெரிகிறது.
அகமும் புறமும் இணைந்த்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
108 என்னும் எண் மெய்ஞான சாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரபஞ்சத்தில் இந்த எண் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
* பூமியின் குறுக்களவு (diameter) X 108 = சூரியனது குறுக்களவு.
*பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் =
சூரியனது குறுக்களவு X 108
* பூமிக்கும், சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் =
சந்திரனது குறுக்களவு X 108
இந்த ஒற்றுமை எதேச்சையானது என்கிறீர்களா?
உயிர் பிறப்பதே மோக்ஷம் அடைய என்கிறோம்.
அங்கே ஆத்ம காரகனான சூரியனும், மனோ காரகனான சந்திரனும் உதவிக்கு வருகிறார்கள்.
ஆத்மாவும், மனமும் உயர இவை தேவை. இவை எங்கே இருக்கிறதோ, அங்கே உயிர் இருக்கும்.
உயிர் என்றால் தாவர, சங்கம, மனுஷ்ய, தேவ. (இவற்றுள் நீங்கள் சொன்ன வளி மண்டல உயிர்களும் அடங்கும்.)
முதல் மூன்றும் இங்குதான்.
நான்காவது எங்கிலும் இருக்கலாம்.
தேவர்களை detect செய்ய சயின்சால் முடியுமா?
>>> ஏமாற்றம் – 4 :->>>//விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது.//<<>>// எக்ஸோ-பயாலஜி அல்லது….<<<>>//விஞ்ஞானத் தேடல்களுக்கு மதநம்பிக்கைகள் அஸ்திவாரம் ஆக முடியாது.//<<<<
வேதமதம், நம்பிக்கையின் பாற்பட்டதா? அது சொல்லும் விஞ்ஞானம் பற்றின முந்தின மறுமொழிகள் எதுவுமே நீங்கள் படிக்கவில்லையா??
வேத மதம் தெரிந்தா நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்?
வேதமதம் என்ன சொல்கிறது?
முதல் விஷயம் ஒன்று – அது இரண்டாகிறது.
அது பிரகிருதி, அதில் உறையும் புருஷன்.
இங்கும் அந்தப் பிரகிருதி, மூலப் பிரகிருதியிலிருந்து உருவாகிறது.(மூலப்பரக்ருதி அந்த ‘ஒன்றில்’ அடக்கம். இவற்றை சாமானிய விளக்கத்துடன், வரும் கட்டுரைகளில் சொல்ல இருக்கிறேன்.)
ஆரம்பம் என்னும் இந்த மூலப் பிரக்ருதியிலேயே material physics வந்து விடுகிறது.
Finer simplification – இல்
இரண்டு விஷயம் தான் இருப்பது.
ஒன்று subject மற்றொன்று object.
subject – நாம்
object.- காணும் பொருள் எல்லாம்.
அதைக் காண தேவையான விஷயங்கள் எல்லாம் உள்ளிலிருந்து வருகிறது. உள்நோக்கி போய் வந்தால், வெளியில் இருப்பதை ஏன், எப்படி என்று சொல்ல முடியும்.
இப்படி உள்ளிலிருந்து வெளியும்,
வெளியிலிருந்து உள்ளும் என்று இரண்டு projection -னுமே ஒன்றான Consciousness
உள்ளே பார்த்தவனால் வெளியில் இருப்பது என்ன என்று தெரியும். வெளியே இருப்பது அந்த மூல ‘ஒன்றின்’ projection என்றும் தெரியும். RV அவர்களுக்கு கொடுத்துள்ள மறுமொழியில் சொல்லப்பட்ட நூல்கள் எல்லாம் அபப்டி உள்-வெளி பார்த்தவர்களால் தரப்பட்ட – வெளியில் தெரியும் material பிரபஞ்சத்தைச் சொல்கின்றனவே?
கட்டுரை ஏதோ தமிழி்ல் புலமை பெற்றவர்களுக்கானது என்றே எண்ணத் தோன்றுகிறது. எளிய தமிழில் சாத்தியப்படுத்தினால் நன்மை!
– சகோதரன் ஜெகதீஸ்வரன்.
https://lordeswaran.wordpress.com
நமஸ்காரம்,
தங்கள் கட்டுரையை படித்தபோது ஒரு உண்மையான,முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளீர்கள்.ஆனால் ஏதோ புரியரமாதிரி இருக்கு,ஆனா புரியல, .இன்னும் கொஞ்சம் எளிமையா விளக்கமுடியுமா?
அதாவது காலக்கணக்கு பற்றிய விபரத்திற்கு முன் இடத்தின் கணக்கு தேவை,பாரத வர்ஷே,பரத கண்டே,மேரோஹோ தக்ஷிணே பார்ஸ்வே,தண்டகாரன்யே,என்றெல்லாம் சங்கல்பம் செய்கிறோம்,இதை பற்றி சற்று விளக்கமுடியுமா?
அருமையான விளக்கங்கள். சில விஷயங்களை எழுத்தில் கொண்டு வர முடியாது என்பது அடியவனின் எண்ணம். இருந்தும் பிரம்மாதமாக பிரம்மாண்டத்தை விளக்கியிருக்கின்றீர்கள்.
வெங்கடேச சிவம் அவர்கள் கேட்டிருப்பதற்கு பல விளக்கங்கள் இருக்கலாம். அண்டகோசண்ட லக்ஷணம் என்பதைப் பற்றி ஆன்றோர்கள் விளக்கியிருக்கின்றார்கள்.
அல்லது மிகச் சிறிய அளவில் காண அடியேனின் காலகணிதம் (https://natarajadeekshidhar.blogspot.com/2010/05/blog-post.html) பதிவைக் காணுங்கள்.
நன்றிகளுடன்
நி.த. நடராஜ தீக்ஷிதர்
https://natarajadeekshidhar.blogspot.com
vanasctram mor ditael sed me
please can you tell me how we decide a particular rasi/planet is in direct look to other planet/rasi?