இத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா?

viswanathan-anand-the-world-chess-championபாரதத்தின் சதுரங்க (Chess) உலகின் முடிசூடா மன்னன் விஸ்வநாதன் ஆனந்திற்கு அண்மையில் ஏற்பட்ட அவமதிப்பு, தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியர் மனதிலும் ஆறாத வடுவை உருவாக்கி இருக்கிறது. அவரது குடியுரிமை தொடர்பான சர்ச்சையும், மத்திய அரசு அந்த விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும், மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியச் சதுரங்க விளையாட்டுலகில் புது ரத்தம் பாய்ச்சியவர் ஆனந்த். சதுரங்கம் பாரதத்தின் தொன்மையான விளையாட்டாக இருந்தபோதும், ஆனந்த் வெற்றிவீரராக வலம் வரத் துவங்கிய பிறகே, இந்தியாவில் சதுரங்க விளையாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. நாட்டின் சதுரங்க விளையாட்டில் பெரும் புரட்சி ஏற்படுத்திய தனியொரு சாதனையாளராக ஆனந்த் கருதப்படுகிறார்.

viswanathan_anand_as_young_boyநடுத்தரக் குடும்பத்தில், ரயில்வே அதிகாரியின் மகனாகப் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த், உலகின் செஸ் மன்னராக வீற்றிருக்க, அவரது அயராத முயற்சிகளே அடிப்படை என்றால் மிகையாகாது. தமிழகத்தின் மயிலாடுதுறையில் 1969, டிச.11-ஆம் தேதி பிறந்தார் ஆனந்த். ஆறு வயதில் அம்மா சுசீலா மூலமாக சதுரங்க விளையாட்டின் அறிமுகம் ஆனந்திற்குக் கிடைத்தது. பள்ளிகளிலும், உள்ளூர் அளவிலும் அனாயசமாகச் சதுரங்கம் ஆடிய ஆனந்தின் திறமை மெல்ல பரவத் துவங்கியது.

தனது 14-ஆவது வயதில் (1983), தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார். 1984-இல் தேசிய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றார். அதிவேகமான நகர்த்தல்களால் எதிராளியைத் திணறச் செய்வது ஆனந்தின் பாணி. இதன் காரணமாக, ‘மின்னல் பையன்’ என்ற பட்டப்பெயரையும் பெற்றார். பெற்றோரின் வழிகாட்டுதல்களால், அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது. 1987-இல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார். இந்நிலையை அடைந்த முதல் இந்தியர் ஆனந்த் தான். இதுவே இந்தியச் சதுரங்க அரங்கில் பெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. அடுத்த ஆண்டே நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

ஆனந்தின் சாதனையைப் பாராட்டி, அர்ஜுனா விருது (1985), பத்மஸ்ரீ விருது (1987), ராஜீவ்காந்தி கேள்ரத்னா விருது (1991) ஆகிய கௌரவங்கள் நாடி வந்தன. உலக அளவில் ஆனந்தின் பயணம் துவங்கியது. ஆனால், சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் கார்போவ், காஸ்பரோவ், விளாடிமிர் கிராம்னிக் உள்ளிட்டோரை வெல்ல ஆனந்த் போராட வேண்டி இருந்தது. அடுத்த பத்தாண்டுகள் ஆனந்திற்குப் போராட்டக் காலம்; ஆனந்த் அனுபவத்தை விரிவுபடுத்தி வந்தார்.

anand-palying-simultaneous-chess2000-இல் பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வென்றார். 2003-இல் பிடே அதிவேகச் சதுரங்கப் போட்டியிலும் வென்றார். 2007-இல் மீண்டும் உலக சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து 2008, 2010-ஆம் ஆண்டுகளிலும் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இன்றைய சதுரங்க உலகின் மிக வேகமான வீரராகவும், தொடர் சாதனையாளராகவும் ஆனந்த் விளங்கி வருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வசதியாக, ஸ்பெயின் நாட்டின் கொலாடோ மேடியானோ நகரில், மனைவி அருணாவுடன் ஆனந்த் வசித்து வருகிறார். எனினும் சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரராகவே பங்கேற்று வருகிறார்.

பிடே மதிப்பீட்டின்படி தற்போது ஆனந்த் 2,789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலகச் சதுரங்க வரலாற்றில் பிடே தரப்பட்டியலில் 2,800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப். 2006, ஏப். 2008). ஆனந்தின் வெற்றிகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக, பத்மபூஷன் (2000), பத்மவிபூஷன் (2007), செஸ் ஆஸ்கார்- (1997, 1998, 2003, 2004, 2007, 2008) பட்டங்களும் விருதுகளும் நாடி வந்தன.

இவர் 1994-லிருந்து முன்னணி வகிக்கும் செஸ் மூவரில் ஒருவராக விளங்குகிறார். இவ்வாறு சதுரங்க விளையாட்டின் மூலமாக நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துவரும் ஆனந்திற்கு, இதுவரை சந்தித்திராத அவமானத்தை அண்மையில் மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது.
 

குடியுரிமை விவகாரம்

ஐதராபாத் பல்கலைக்கழகம் அண்மையில் (ஆக.24) சர்வதேச கணிதவியலாளர் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் கௌரவ டாக்டர் பட்டத்தை ஆனந்திற்கு வழங்க ஓராண்டுக்கு முன்னரே முடிவெடுத்து, அதற்கு அனுமதி கோரி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பல்கலைக்கழகம் அனுப்பியது. இது ஒரு வழக்கமான நடைமுறை. ஆனால், அந்தக் கோப்பு நகரவே இல்லை. மாநாடு நடக்கும் நாள் நெருங்கியும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆனந்திற்கு பட்டமளிக்க ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக, ஆனந்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ஐதராபாத் பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

அப்போதுதான், ஆனந்தின் குடியுரிமையை விவகாரமாக்கி, பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்காமல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இழுத்தடித்தது தெரிய வந்தது. ஆனந்த் தற்போது ஸ்பெயின் நாட்டில் தங்கி இருப்பதால், அவர் இந்தியக் குடிமகனா என்று அமைச்சகம் உறுதிப்படுத்த விரும்பியுள்ளது. அதற்கான ஆதாரமாக, தனது இந்திய பாஸ்போர்ட் நகலை ஆனந்த் சமர்ப்பித்தும் இருக்கிறார். அதை அமைச்கரகத்திலுள்ள எந்த மேதாவியோ ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடியாமல் போய்விட்டது என்பது வெளிப்பட்டது

kapil-sibal apologisesநடந்த நிகழ்வுகள் ஆனந்திற்கு வருத்தம் அளித்தன. ”ஸ்பெயினில் வசித்தாலும் நான் இந்தியக் குடிமகனே. எனது இந்திய பாஸ்போர்ட் போதாதா எனது குடியுரிமைக்கு?” என்று கேட்டார் ஆனந்த். நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், ஆனந்தை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

கோப்புகளைக் கையாளும் முறையில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாக சப்பைக்கட்டு கட்டிய அவர், ஆனந்த் விரும்பும் இன்னொரு நாளில், கௌரவ டாக்டர் பட்டத்தை ஐதராபாத் பல்கலைக்கழகம் வழங்கும் என்று தெரிவித்தார். ஆனால் அதை ஆனந்த் ஏற்கவில்லை.

கௌரவ டாக்டர் பட்டத்தை ஏற்கப் போவதில்லை என்று ஆனந்த் அறிவித்து விட்டார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பா.ஜ.க.வின் ஷாநவாஸ் உசேன் தலைமையில், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆனந்திடம் இந்திய அரசு நடந்துகொண்ட முறையைக் கண்டித்து குரல் எழுப்பினர்.

vishy-with-young-chess-players-in-a-matunga-school-mumbaiஇதுபற்றிக் கருத்துத் தெரிவித்த ஆனந்தின் மனைவி அருணா, ”கௌரவ டாக்டர் பட்டம் பெறாதது ஏமாற்றம் அளிக்கவில்லை; உண்மையில் எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருமுறை சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போதும் ஆனந்தின் அருகில் இந்திய தேசியக் கொடியைக் காணலாம். இதைவிட வேறு என்ன அத்தாட்சி தேவை? வேறு எப்படி ஆனந்தின் இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பது?” என்று கேட்டார். இதற்கு மத்திய அரசிடம் எந்தப் பதிலும் இல்லை.

நடந்துவிட்ட விரும்பத் தகாத சம்பவத்தால் ஆனந்த் சற்றும் மனம் கலங்கவில்லை. ஐதராபாத் பல்கலையில் மறுநாள் நடந்த கணிதவியலாளர் மாநாட்டில் 39 சதுரங்கப் புலிகளுடன் ஒரே நேரத்தில் விளையாடி, தனது நாகரிகத்தை அவர் நிரூபித்தார். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 39 சதுரங்க வீரர்களுடன் அவர் ஆடிய மின்னல்வேகச் சதுரங்கத்திலும் அவரே வென்றார்.
 

விவகாரக் குடியுரிமை

நடந்தது நடந்துவிட்டது என்று இதை விட்டுவிட முடியவில்லை. ஏனெனில், இந்திய அரசியலில் குடியுரிமை விவகாரத்திற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. இதில் முதல் ஆளாய் வருபவர் நமது சோனியா அம்மையார் தான்.

** sonia_con01_cartoonஇத்தாலியில் பிறந்த அந்தோனியோ மைனோ, இந்தியாவின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தியை காதல் திருமணம் செய்தது 1968-ஆம் ஆண்டு. சோனியா என்ற நாமகரணத்துடன் இந்தியா வந்தது அதற்கு அடுத்த ஆண்டு. ஐந்து ஆண்டுகள் கழித்து கணவரின் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், 1983 வரை அவர் இந்தியக் குடியுரிமை பெறவில்லை. இந்தியாவின் பிரதான அரசியல் குடும்பத்தில் மருமகளாக இருந்தபோதும் அவர் இந்தியக் குடியுரிமையை பெறவே இல்லை. ஆனால் பல தேர்தல்களில் (16 ஆண்டுகள்) வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டார்.

1984-இல் ராஜீவ் பிரதமராக வாய்ப்பு பிரகாசம் அடைந்ததைத் தொடர்ந்தே அவர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, முறைப்படி பெற்றார். ஆக, இந்தியாவில் இருந்துகொண்டே இத்தாலி நாட்டின் குடிமக்களாகத் தொடர்ந்தவர் தான் சோனியா அம்மையார். (1992 வரை, இத்தாலியைச் சேர்ந்தவர் வேறு நாட்டில் குடியுரிமை பெற்றிருக்க கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது இத்தாலி குடிமகன்கள் வேறு நாட்டில் இரட்டைக் குடியுரிமை வைத்துக் கொள்ளலாம் என்று சட்டத்தைத் திருத்திவிட்டனர்). அதே சோனியா தான் தற்போதைய மத்திய அரசின் மூலவிசையாகச் செயல்படுகிறார்.

 

m-f-hussain1** இந்துத் தெய்வங்களை ஆபாசமாக வரைந்ததற்காக சிவசேனையின் மிரட்டலுக்கு ஆளானவர் ஓவியர் எம்.எப்.ஹுசைன். இவர் 2006-லிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி- இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி- கத்தார் நாட்டில் வசிக்கிறார்.

அந்நாடு அவருக்கு இந்த ஆண்டு கத்தார் குடியுரிமை வழங்கிவிட்டது. அவர் அங்கு இருக்க வேண்டாம்; மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும் என்று அரசுத் தரப்பிலும், மதச்சார்பின்மையைக் குத்தகைக்கு எடுத்துள்ளவர்களும் தொடர்ந்து அவரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

attack-on-taslima-nasrin** வங்கதேசத்தில் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த காரணத்தால் மதவெறியர்களால் வேட்டையாடப்பட்டு, தப்பிப் பிழைத்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1994-லிருந்து அந்நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளில் பத்து ஆண்டுகள் தஞ்சம் புகுந்தார். மொழி அடிப்படையில் வங்காளி என்பதால் இந்தியாவில் வசிக்க அவர் விரும்பினார்.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட சிறை வாழ்க்கை போல 2004 முதல் 2007 வரை இந்தியாவின் கொல்கத்தா நகரில் வாழ்ந்த அவர் மீண்டும் ஸ்வீடன் சென்றுவிட்டார். அவருக்கு இந்தியாவில் வசிக்க நிரந்தரக் குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுத்துவிட்டது.

இவ்வாறாக, இந்தியாவே வேண்டாம் என்று சென்ற எம்.எப்.ஹுசைனை (கத்தார்) வலிய அழைத்துக் கொண்டுள்ளது நமது அரசு. இந்தியாவில் வசிக்க விரும்பியும் தஸ்லிமாவுக்கு (வங்கதேசம்) அதே அரசு அனுமதி அளிக்காமல் தவிர்க்கிறது. இந்தியாவில் 16 ஆண்டுகள் வசித்தபோதும் இந்தியக் குடியுரிமை பெறாத சோனியா (இத்தாலி) மத்திய அரசின் சூத்திரதாரியாக, அதே அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் போற்றப்படுகிறார்.

அதே அரசுதான், இந்தியாவுக்கு மாபெரும் பெருமைகளைச் சதுரங்க விளையாட்டின் மூலம் பெற்றுத் தந்த தமிழகத்தின் தவப் புதல்வன் விஸ்வநாதன் ஆனந்தை ஸ்பெயின் நாட்டில் வசிப்பதற்காகச் சோதித்திருக்கிறது.

vishy-and-modiஒருவேளை விஸ்வநாதன் ஆனந்த் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்திருந்தால் இந்நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. அல்லது அவரும் சோனியா பிறந்த அதே இத்தாலியில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைக்கூட செய்யாதது தான் ஆனந்த் செய்த மகத்தான தவறு என்று கருத வேண்டி இருக்கிறது. ஆனந்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது, தாமதம் வாயிலாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நமது மனசாட்சி தட்டி எழுப்பப்பட்டுள்ளது.

44 Replies to “இத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா?”

 1. இந்திய அரசின் NRI சட்டப் படி இந்தியர் ஒருவர் இரட்டைக் குடியுரிமை பெற முடியாது. அதாவது 2 passport வைத்துக் கொள்ள முடியாது.

  வேறு நாட்டில் சென்று வேலை செய்யலாம், Residance permit, Green card என எல்லாம் பெற்று அந்த நாட்டிலேயே தொடர்ந்து வாழலாம். ஆனால் வேறு நாட்டின் குடியுரிமை பெற்றால் இந்தியக் குடியுரிமை தானாக ரத்து ஆகி விடும்.

  நீங்கள் பின்னர் விருந்தாளியாகதான் இந்திய வர இயலும். இவ்வளவு தான் விஷயம். வட இந்தியாவில் உள்ள மனித வள மேம்பாடு துறையில் உள்ள எதோ ஒரு அலுவலக ஊழியருக்கு வி.ஆனந்த், தமிழர்- இந்தியர் என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் தன் கடமைப் படி, சட்டப் படி இந்த கேள்வியை எழுப்பி இருப்பார். அதை ஊடகங்கள் ஊதித் தள்ளிவிட்டன. நாமும் புரிந்து கொள்ளாமல் பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

  If indin Passport holder aquires nationalty of another country, he should surrender his indian passport to the nearest Indian Mission abroad. Unauthorized possession of this document shall constitute an offence punishable under Indian Passport act 1967″ என “Indian nationality law” குறிப்பிடுகிறது. Ref: wikipedia/Indian_nationality_law#Automatic_Termination_of_Indian_citizenship

  முறைப்படிப் பார்த்தால் ஸ்பெயின் குடியுரிமை பெற்ற வி.ஆனந்த் நேர்மையும் பொறுப்பும் உள்ளவரானால், தன் இந்திய பாஸ்போர்ட்டை பல நாட்களுக்கு முன்பே அரசிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் அவர் செய்யத் தவறியிருப்பது ஏன்? இந்தத் தவறை பெரிது படுத்தாமல் பொறுப்பை தாம் ஏற்று , மன்னிப்பும் கோரி அனுமதியும் அளித்த அமைச்சரை பாராட்டவே தோன்றுகிறது.

  பணமும் புகழும் உள்ளவர் என்றால் சலுகையா.. இதே போல் ஒரு சாதாரண குடிமகன் 2 பாஸ்போர்ட் வைத்து இருந்தால் விட்டு விடுவார்களா? இங்கு சட்டம் மீறப்படவில்லையா?

  சற்றே உணர்ச்சி வசப் படாமல் பார்த்தோமேயானால் விஷயம் புலப்படும்.

 2. This article is a bulls eye on todays congress india.

  // ஒவ்வொருமுறை சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போதும் ஆனந்தின் அருகில் இந்திய தேசியக் கொடியைக் காணலாம். இதைவிட வேறு என்ன அத்தாட்சி தேவை? //

  This is so embarrassing.
  Shameful Government !! 🙁

 3. திரு. An NRI அவர்களே!
  அமெரிக்காவில் குடியுரிமை பெற்று green card உடன் வசிப்பவர்கள் எல்லாம் தங்களது passport களை இந்தியா அரசிடம் கொடுத்து விட்டவர்களா?
  இந்திய பல்கலைக்கழகங்கள் பல அந்நிய நாட்டவர்களுக்கு டாக்டர் பட்டங்கள் எப்படி வழங்கின?

 4. //முறைப்படிப் பார்த்தால் ஸ்பெயின் குடியுரிமை பெற்ற வி.ஆனந்த் நேர்மையும் பொறுப்பும் உள்ளவரானால்//

  Is this true? Nowhere I come across that he got Spain citizenship. If not, why sowing seeds of doubt?

 5. அன்புள்ள Giri அவர்களே,

  நாம் பல வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு டாக்டர் பட்டமும் “பத்ம” விருதுகளும் கொடுத்திருக்கிறோம். உண்மை தான்.

  //அமெரிக்காவில் குடியுரிமை பெற்று green card உடன் வசிப்பவர்கள் எல்லாம் தங்களது passport களை இந்தியா அரசிடம் கொடுத்து விட்டவர்களா?
  இந்திய பல்கலைக்கழகங்கள் பல அந்நிய நாட்டவர்களுக்கு டாக்டர் பட்டங்கள் எப்படி வழங்கின?//
  பதில்: சட்டப்படி அவர்கள் தங்கள் பாஸ் போட்டை திருப்பிக் கொடுக்க வேண்டும், செய்யாத பட்சத்தில் அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
  —————————————————————————————————–
  விவரங்களுக்கு இணைப்பை சுட்டவும்.

  No Dual citizenship for Indian citizens

  https://en.wikipedia.org/wiki/Indian_nationality_law#Automatic_Termination_of_Indian_citizenship
  —————————————————————————————————
  Anand is a Spanish citizen too:

  Ref : IBN – LIVE – https://ibnlive.in.com/news/life–lifestyle-of-vishwanathan-anand/50917-5.html
  ——————————————————————————————————

  உதாரணத்துக்கு நோபல் பரிசு மற்றும் பத்மவிபூஷன் பெற்ற விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன்.

  இவருக்கு பரிசு கொடுத்த நோபெல் நிறுவனமும் இந்திய அரசும் இவரை ” Venkatraman Ramakrishnan, “US Citizen”. Born in 1952 in Chidambaram, Tamil Nadu, India ” என்று தான் கூறி பரிசு வழங்கின. அவரும் அதைதான் சொன்னார் எனபது அனைவரும் அறிந்ததே.

  இங்கு ஆனந்த் திறைமைசாலி என்பதிலோ அவருக்கு இந்த பட்டம் கொடுக்கலாமா வேண்டாமா என்பதிலோ இரு வேறு கருத்துக்களுக்கு இடமே இல்லை. வெங்கி போலவே தன்னை உலக அளவில் நிருபித்துவிட்ட ஒருவர். அவர் நிச்சயம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். அவர் சட்டப்படி இந்தியரா என்பதுதான் கேள்வி? அதுதான் பிரச்சனை.

  From my sources, I learnt that there are different procedures for awarding a doctoral honor to an Indian and a foreign candidate. So that makes the difference.

  Its an usual govt procedure to Cross Check the candidacy before before giving a reward! If a government staff in Delhi (who has some idea or No idea about V.Anand) finds that the candidate has another countries citizenship according to his official rules ofcourse he should rise this nationality question. Thats what his Duty is! and for that
  Is this how we react?

  இதற்காக நான் வி.ஆனந்தை குற்றம் சாட்டவில்லை. இது வி, ஆனந்தின் கவனக் குறைவாகக் கூட இருக்கலாம் அல்லது அவருக்கு இந்த சட்டம் குறித்து தெரியாமலே கூட இருக்கலாம். (ignorant)

  இதில் நான் தவறாகப் பார்ப்பது இந்த டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக் கழகமும், இதை சரி பார்க்கும் மனித வள அமைச்சகமும் இந்த சந்தேகத்தை பல நாட்கள் முன்னமே சரி பார்த்து சந்தேகங்களை களைந்திருக்கலாம் .

  இத்தனை நாள் விட்டு விட்டு சிறப்பு விருந்தினர் வந்திறங்கிய பின் தலையை சொறிந்தபடி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாம். பின்னர் விஷயம் பத்திரிக்கைக்குப் போய் அவப் பெயரும் வாங்கியிருக்க வேண்டாம்.

  I appreciate HRD minister who took the responsibility on his shoulder at the critical moment Meanwhile I regret the dishonor to Mr.Anand.

  ஊடகங்களுக்கு பரபரப்பாக எழுத எப்போதும் எதோ ஒன்று தேவை, ஆகையால் அவை வி.ஆ பிரச்சனையை ஊதிப் பெரிதாகிவிட்டன.

  இந்த இடத்தில் பிழை என்பது அரசு மீது மட்டும் இல்லை, மக்கள் வரிந்து கட்டிக்கொண்டு அரசை மட்டுமே குற்றம் சாட்டுவது தவறு. Both party has equal responsibility என்பதே என் வாதம்.

  நாமும் புரிந்து கொள்ளாமல் பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்பதே என் தாழ்மையான கருத்து.

 6. என் ஆர் ஐ

  1. முதலில் ஆனந்த் ஸ்பானிஷ் குடியுரிமை வாங்கி விட்டார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரம் உண்டா? அப்படியே அவர் ஸ்பானிஸ் குடியுரிமை வைத்திருந்தாலும் கூட அதனால் அவர் தகுதி இழந்து விடுகிறாரா? இந்தியப் பல்கலைக் கழகங்கள் வெளிநாட்டுக்காரர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதே கிடையாதா? அப்ப்டி கொடுக்கக் கூடாது என்று ஏதேனும் சட்டம் உள்ளதா? உங்களைப் போன்றோரின் அகராதிப் படிதான் அவர் தமிழரே கிடையாதே, இந்தியாவில் அவர் என்றுமே இரண்டாம் தரக் குடிமகன் தானே? சோனியா, மன்மோகன், கருணாநிதி போன்ற கேவலமான பிறவிகள் வாழும் ஒரு நாட்டில் இருப்பது அவருக்குத்தான் அவமானம்.

  2. எம் ஜி ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கானு என்ற ஜப்பானிய அமெரிக்கருக்கு தமிழ் நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கவுரவ டாக்டர் பட்டத்தைப் போட்டி போட்டுக் கொண்டு அளித்தன. அவருக்கு எந்த அடிப்படையில் அந்தப் பட்டத்தை வழங்கினார்கள்?

  3. காமென் சென்ஸ் என்று ஒன்று இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் ஒருவருக்கு டாக்டர் பட்டம் அளிக்க சிபாரிசு செய்திருக்கிறது என்றால் அவர் யார் என்ன என்பதை சம்பந்தப் பட்டத் துறை சூப்பர்வைசர் அறிந்தே வைத்திருக்க வேண்டும். அவர் மோடியுடன் செஸ் விளையாடினார் என்ற ஒரே காரணத்தினால் மத்திய அரசால் திட்டமிட்டுச் செய்யப் பட்ட அவமானமே இது. இந்தியப் பல்கலைக் கழகங்களில் வழங்கப் படும் கவுரவ டாக்டர் பட்டங்கள் எல்லாம் எச்சில் இலைக்குச் சமானமானவையே. என்றைக்கு கேடு கெட்ட ஒரு கருணாநிதிக்கு உதயகுமார் என்ற ஒரு மாணவனின் பிணத்தின் மீது இந்த டாக்டர் பட்டத்தை வழங்கி அதன் மதிப்பைச் சீரழித்தார்களோ அன்றே இந்த கவுரவ டாக்டர் பட்டம் என்பது ஒரு கேலிக்கூத்தாகி விட்டது. கருணாநிதியின் மொழியிலேயே சொல்வதானால் இந்திய பல்கலை வழங்கும் கவுரவ டாக்டர் பட்டம் என்பது கக்கூசில் கிடக்கும் அல்வாத் துண்டு, துடைத்துக் கொள்ளும் பேப்பருக்குச் சமானமானது. அதை வாங்கிக் கொள்ள முன்வந்ததன் மூலம் ஆனந்த் பெருத்த தவறைச் செய்து விட்டார். கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும், எம் ஜி ஆருக்கும், லாலுவுக்கும், முலயமுக்கும் வழங்கப் பட்ட டாக்டர் பட்டத்தை ஆனந்த் மாதிரியான ஒரு மேதை முதலிலேயே மறுத்திருக்க வேண்டும். ஏதோ மரியாதை கருதி ஏற்றுக் கொண்டிருக்கிறார் போலும் இனிமேல் இது போன்ற கேவலமான சமாச்சாரங்களுக்கு எல்லாம் ஆசைப் பட மாட்டார். இதைப் போலவே கேவலப் படுத்தப் பட்டு விட்ட மற்றுமொரு விருது பாரதரத்னா என்பது. இன்று இந்தியாவில் எந்தவொரு சிவில் விருதுக்கும் மரியாதை இல்லாமல் போய் விட்டது.

 7. Pingback: Indli.com
 8. அன்புள்ள நண்பர் திருமலை,

  1 . உங்கள் கேள்விகளில் உள்ள தார்மீகமான நியாயமும் கோபமும் எனக்குப் புரிகிறது. எனக்கு ஆனந்த் மீதோ அவர் சார்ந்த சமுதாயம் மீதோ எந்த கோபமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது.

  2. என்னை ஏன் “உங்களைப் போன்றோரின் அகராதிப் படிதான் ” என்ற வார்த்தைகளால் அன்னியப் படுத்துகிறீர்கள். நானும் உங்களில் ஒருவன் தான்.

  3 . ஆனந்த் இந்தியரா என்ற கேள்வியை அலுவலகங்களில் இருந்து ஏனைய ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் முதலில் கொண்டுவந்த பெருமை “CNN-IBN” என்ற செய்தி நிறுவனத்தையே சேரும். அவர்கள் வெளியிட்ட செய்தியையும் அதில் ஆனந்தின் பேட்டியையும் நான் ஏற்கனவே இதற்கு முந்தைய மறு மொழியில் இணைப்புடன் வெளியுட்டுள்ளேன்.

  4 . நீங்கள் கேட்டுள்ள மற்றைய அனைத்து அரசியல் சட்ட கேள்விகளுக்கும் என் பதில்களையும் வருத்தங்களையும் இதற்கு முந்தைய மறு மொழியிலேயே கூறிவிட்டேன் .

  5 . அதைக் நீங்கள் கவனிக்காவிட்டால் நான் பொறுப்பல்ல.
  படித்தும் நீங்கள் இந்தக் கேள்விகளை என்னிடம் எழுப்பினால் , நீங்கள்
  உணர்ச்சி வசப் பட்டே பேசுகிறீர்கள் என்றே நான் பொருள் கொள்வேன்.

  6 . இப்படி ஒரு விசித்திரமான “ஒரே குடியுரிமைச் சட்டம்” இந்தியாவில் இருப்பது ஆனந்துக்கு தெரியாதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. ஏனென்றால் நான் கடந்த வருடம் சிங்கபூர் சென்றபோது அங்கு சந்தித்த ஒரு தமிழ் நாட்டு டாக்ஸி டிரைவர் கூறித்தான் எனக்கே இந்த விஷயம் தெரியும். பின்னர் நான் அதை ஆதாரபூர்வமாக உறுதி செய்து கொண்டேன்.

  7 . ஆனால் பல்லாயிரம் மக்களுக்கு செய்தியை கொண்டு செல்லும் ஊடகங்கள் இது குறித்து ஆராயாமல் செய்தி வெளியிட்டது தான் கண்டிக்கத் தக்கது.

  8 . நீங்கள் கேட்டுள்ள தமிழக /திராவிட அரசியல் கேள்விகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாதால் அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை.

  9 . ஒரு வேளை வி. ஆனந்த் ஸ்பெயின் குடியுரிமை பெறாதவர் என்று நீருபிக்கபட்டால் என் தவறான புரிதலுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

  என் தரப்பு பதில்களை நான் முழுவதும் கூறிவிட்டதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்,
  NRI மற்றும் உங்கள் உணர்வுகளை மதிக்கும் சக தமிழன்.

 9. நண்பர் திருமலை போன்ற சிலர் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விளக்கங்களையும் முற்றாக ஒரு முறை கூடப் படிப்பதில்லை எனத் தோன்றுகிறது. அவர் குற்றம் எனக் கருதும் விஷயங்களுக்கு மாற்றாக யாரேனும் கருத்துத் தெரிவித்து விட்டால் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

  அவர் ,Giri மற்றும் Srikanth கேட்டுள்ள பெரும்பாலான கேள்விகளுக்கு நான் என்னுடைய இரண்டாவது மறு மொழியில் விளக்கமாக பதில் அளித்துள்ளேன்.

  என்ன சொல்ல வருகின்றோம் என்றே கவனிக்காமல் கிடந்து குதிப்பவர்களைப் பார்க்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது.

  இதே இடத்தில வி.ஆனந்தாக இல்லாமல் நானோ நண்பர் திருமலையோ இரண்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டியது வரும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

  இதைத் தவிர்த்து வி.ஆனந்துக்கு சலுகை வழங்கப்படிருக்கிறது என்பதே மரியாதைக்குரிய விஷயம் தானே.

 10. ” இத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா? ”

  நிச்சயமாக அல்ல..

  ஆனால் வேறு நாட்டுக் குடியுரிமை பெற்ற உடன் தன் இந்தியக் குடியுரிமை ரத்து ஆகிவிடும் எனபது தெரியாமல் தன்னை இன்று வரை இந்தியர் என்று அப்பாவித்தனமாக எண்ணி வாழ்ந்து/இந்தியக் கொடியுடன் விளையாடி வந்ததுதான் அவர் செய்த பிழை.

  இதை ஆராயாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள் தான் குற்றவாளி.

  இது தெரியாத அப்பாவி மக்கள் தான் பாவம்.

  “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற தமிழ் மரபில் பிறந்தவன் என்பதால், நான் உண்மை என நம்புவதை அது அறியாதவர்களுக்கு உணர்த்துவதன் அவசியத்திற்காகவே என் கருத்துச் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு எழுதுகிறேன்.

  யார் மனதையும் புண் படுத்துவதற்காக அல்ல.

  பிழை இருப்பின் மன்னிக்க..

  அன்புடன்
  NRI

 11. முதலில் ஆனந்த் ஸ்பானிஷ் குடியுரிமை வாங்கி விட்டார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரம் உண்டா?

  இந்த கேள்விக்கு ஏற்கனவே நான் பதில் அளித்திருந்த போதும் மேலும் ஒரு செய்தியில் கிடைத்த தகவலைப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

  https://ibnlive.in.com/news/sibal-intervenes-but-anand-refuses-doctorate/129481-5.html?from=search மேலே உள்ள இணைப்பிலும் ஆனந்த் ஸ்பெயின் குடியுரிமை கொண்டவர் என்பது கூறப்பட்டுள்ளது.

  டாக்டர் கானு என்ற ஜப்பானிய அமெரிக்கருக்கு பட்டமளிப்பதில் சிக்கல் ஏன் இல்லை ஏன் என்றால் அவர் அமெரிக்க பாஸ்போர்ட் மட்டுமே வைத்து இருந்தார் . வேறு நாட்டுப் பாஸ்போர்ட்டுடன் இந்திய பாஸ் போர்ட்டையும் வைத்து இருக்கவில்லை.

  இதே நிலை தான் அமெரிக்க குடிமக்களான Dr.வெங்கி ராமகிருஷ்ணன் முதல் Late.Dr.கல்பனா சாவ்லா வரை..

  ஆனந்தும் இந்திய பச்ச்போர்டை திருப்பிக் கொடுத்துவிட்டு ஸ்பெயின் பாஸ் போர்ட்டை மட்டும் வைத்து இருந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.

  according to Indian Nationality Law: Indian Passport act 1967 under Section 9(1) of the act provides that any citizen of India who by naturalisation or registration acquires the citizenship of another country shall cease to be a citizen of India என்னும் சட்டப்படி ஆனந்த தற்போது இந்திய குடிமகன் கிடையாது.

  ஆகவே நாம் இந்த பிரச்சனையை முதலிலேயே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்திற்காக மட்டுமே அரசைக் குற்றம் சொல்லலாமே தவிர அவர் இந்தியரா என்ற கேள்வியை எழுப்பியதற்காக அல்ல.

  விஷயத்தை முழுக்க ஆராயாமல் மனம் போன போக்கில் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் விதம் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதும் பத்திரிக்கைகளின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.

 12. 1. தமிழக முதல்வர் கருணாநிதியின் அகராதிப்படி – ஆனந்த் ஒரு தமிழரே அல்லர், மயிலாடுதுறையில் பிறந்திருந்தாலும், அவரது தாய் மொழி தமிழே ஆனாலும், ஆனந்த் ஒரு தமிழரே அல்லர்.

  2. இந்திய அரசின் உள்துறை/ மனிதவளத் துறையின் அகராதிப்படி, ஆனந்த் ஒரு இந்தியரே அல்லர்.

  3. இங்கே NRI அன்பர் கூறுவதுபோல ஆனந்த் ஸ்பெயின் குடியுரிமை வாங்கினதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கா விட்டாலும் கூட அதை அப்படியே வைத்துக் கொண்டாலும் கூட, ஆனந்த் தனது இந்திய கடவுச் சீட்டைத்திருப்பிதாராத காரணத்தால் இந்திய அரசு இந்த குளறுபடியைச் செய்யவில்லை. சொன்ன காரணம் அவர் இந்தியர் அல்லர் என்பதே. யோசிக்காமல் உளறினார்கள் என்பதே வெளிப்படையான உண்மை. ஆனால் பின்னணியில் வேறு ஒரு கணித வல்லுனருக்கும் அதே நாளில் முனைவர் பட்டம் கொடுக்க இருந்ததும் அவர் ஒரு வெளி நாட்டவர் என்பதும் செய்திகளின் பின்னணியில் மறைந்துவிட்டன. அவருடைய முனைவர் பட்டத்தை இன்னமும் கொடுக்கவில்லை என்பதும் சரிவர வெளிவரவில்லை. அவருக்கு என்ன காரணமாகத் தரவில்லை? அவர் இங்கே வரவே வந்துவிட்டார்!

  4. இதெல்லாம் இப்படியிருக்க, ஆனந்த் தனது இந்தியக் கடவுச்சீட்டைத் திருப்பித்தராதது தவறென்றால், இந்திய அரசு நேர்மைத்திறமிருந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கட்டுமே?

  5. 2007 இல் இந்திய அரசுக்கு பத்மவிபூஷன் பட்டம் கொடுத்தபோது இந்த விவரம் தெரியும்தானே? எப்படிக் கொடுத்தார்கள்? அல்லது ஏன் அப்போதே இந்தியக் கடவுச்சீட்டைத்திருப்பிதா என்று கேட்டு வாங்கவில்லை? அதை வாங்க அவர் இந்தியா வந்தபோது அவர் வந்தது ஸ்பானிஷ் கடவுச்சீட்டு என்றால் அது தெரியாமலா போயிருக்கும், அதுவும் அவர் அரசின் சிறப்பு விருந்தினராக வந்த போது?

  6. 2000 இல் இந்திய அரசுக்கு பத்மபூஷன் பட்டம் கொடுத்தபோது இந்த விவரம் தெரியும்தானே? எப்படிக் கொடுத்தார்கள்? அல்லது ஏன் அப்போதே இந்தியக் கடவுச்சீட்டைத்திருப்பித்தா என்று கேட்டு வாங்கவில்லை. அதை வாங்க அவர் இந்தியா வந்தபோது அவர் வந்தது ஸ்பானிஷ் கடவுச்சீட்டு என்றால் அது தெரியாமலா போயிருக்கும், அதுவும் அவர் அரசின் சிறப்பு விருந்தினராக வந்த போது?

  7. https://pib.nic.in/release/release.asp?relid=44296
  30 அக்டோபர் 2008 அன்று பிரதமர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி இது.
  The Prime Minister, Dr. Manmohan Singh, has congratulated Shri Viswanathan Anand on winning the World Chess Championship.
  In his message, the Prime Minister has said that Viswanathan Anand has done the country proud with his exemplary performance at the highest level in his discipline. He has set a stellar example with his dedication and consistency to all sportspersons in the country.

  இந்த வாழ்த்தை வெளியிட்டபோது பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் ஆனந்தின் குடியுரிமை என்னவென்று தெரியுமா, தெரியாதா?

  8 மொத்தத்தில், இந்த ஹைதராபாத் பல்கலைக் கழக முனைவர் பட்ட விவகாரத்தில் ஆனந்தின் மீது எந்தத் தவறும் இல்லை. இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது என்பது சரியல்ல. இந்தக் கருத்தை அரசே சொல்லவில்லையே? அதுதானே உண்மை. எதோ ஆனந்தின் மீது தவறு கண்டுபிடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கண்டுபிடித்ததுதானே இது. இந்த விஷயம் உண்மை ஆனால், அரசு தெளிவாக தைரியமாக இதுதான் காரணம் என்று கூறியிருக்க வேண்டுமே? ஏன் கூறவில்லை? கூறமுடியாது என்பதால்தான். பாரத உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பிரகாசித்த மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபலே கண்டுபிடித்துச் சொல்லாத குற்றச்சாட்டுதானே இது? இதில் ஏதாவது முகாந்திரமோ சாரமோ இருந்திடுந்தால் அவரே சொல்லியிருக்க மாட்டாரா?

  9 . மத்திய அரசின் தவறு இது . அவ்வளவுதான். இதை சப்பைக்கட்டுக் கட்டி சமாளிக்க முடியாது என்பதால்தான் கபில் சிபல் மன்னிப்புக் கேட்டார்.

 13. என் ஆர் ஐ

  உங்களது முதல் பின்னூட்டத்தைப் பார்த்து மட்டுமே நான் பதில் போட்டிருந்தேன்,. நீங்கள் பதில் போட்டதையெல்லாம் இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஆகவே உங்கள் பதில்களைப் படிக்காமல் நான் எழுதவில்லை. நீங்கள் பதில் போடும் முன்பே எழுதியது என் பதில். உங்கள் முதல் போஸ்டைப் பார்த்த பொழுது வழக்கமாக ஆனந்த் ஒரு பிராமணர் என்பதினால் மட்டுமே அவரை இகழ்ந்து இங்கு வந்து கும்மி அடிக்கும் வேறு ஒரு நபர் என்று உங்களை எண்ணியதாலேயே சற்று கடுமையாகப் பேசி விட்டேன். நான் அது போன்ற ஆட்களிடம் சற்று கடுமையாகவே என் பதிலை சற்று உரத்த குரலிலேயே பேசுவது உண்டு எனது பத்தாண்டு கால இணைய வாழ்க்கையில் பெற்று விட்ட ஒரு கெட்ட குணமாகிப் போய் விட்டது. போகட்டும்.

  க்ரீன் கார்ட் வேறு சிட்டிசன்ஷிப் வேறு. க்ரீன்கார்ட் என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக விசா இல்லாமல் வேலை செய்யும் உரிமையை வழங்கும் ஒரு அனுமதி அவ்வளவுதான். க்ரீன்கார்ட் பெற்ற இந்தியர் அனைவரும் இந்திய பாஸ்போர்ட் வைத்துக் கொண்டிருக்கும் இந்தியக் குடிமக்களே. அவர்களுக்கு ஒரே ஒரு பாஸ்போர்ட் மட்டுமே அது இந்திய பாஸ்போர்ட். அதை அவர்களால் திருப்பித் தர முடியாது கூடாது. ஆகவே க்ரீன்கார்ட், வொர்க் பெர்மிட் போன்ற வார்த்தைகள் குடியுரிமையைச் சுட்டாது. ஆனந்த் அது போல ஒர்க் பெர்மிட் வாங்கிக் கொண்டு ஸ்பெயினில் வசிக்கும் ஒரு இந்தியக் குடிமகன் மட்டுமே. அவருக்கு வொர்க் பெர்மிட் சார்பாக ஏதேனும் பாஸ்போர்ட் போன்ற அனுமதிகள் கிட்டியிருக்கலாம் எனக்கு ஸ்பெயின் நாட்டு வழக்கம் தெரியாது அடிக்கடி போய் வரும் நண்பர் அருணகிரியிடம் கேட்டுச் சொல்கிறேன்.

  2. ஒரு இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்ற பிறகு தனது இந்திய பாஸ்போர்ட்டை இந்திய கன்சுலேட்டுக்கு அனுப்பி அதில் கான்சல்டு என்றொரு ஸ்டாம்ப் வாங்கி வைத்துக் கொள்ள் வேண்டும். அதற்குப் பெயர் தான் குடியுரிமை சரண்டர். கான்சல்டு என்று போட்ட பாஸ்போர்ட்டை அவர்கள் தங்களிடமே வைத்துக் கொள்ளலாம் அதை வைத்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது. ஒரு நினைவு அவ்வளவுதான். ஒரு சிலர் கான்சல்டு ஸ்டாம்ப் வாங்காமல் இன்னும் இருக்கிறார்கள் ஆனாலும் அதை வைத்துக் கொண்டு அவர்களால் பயணிக்க இயலாது. ஆனால் அவர்களுக்கு இந்திய ஓட்டுரிமை, விவசாய சொத்து வாங்கும் உரிமை தவிர அனைத்து விதமான இந்திய உரிமைகளும் உண்டு. ஆக அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தாலுமே அவர்கள் இரு நாட்டின் குடி மக்களாகவே டெக்னிக்கலாக கருதப் படுகிறார்கள். ஓட்டுரிமையும் கொடுத்து விட்டால் முழுமையாக இரு தேசத்து குடிமக்களாகவே கருதப் படுவார்கள். ஆகவே ஒரு வேளை ஸ்பெயின் குடியுரிமை பெற்றிருந்து இந்திய ஓ சி ஐ காட்ர் வைத்திருக்கும் பட்சத்தில் அவர் ஒரு இந்தியரே. அந்த அடிப்படையிலும் கூட ஆனந்தை விசாரித்தது தவறே.

  இன்னும் ஒரு சில தேசங்களில் இரண்டு பாஸ்போர்ட்டுக்களையும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள் ஆனால் இந்தியா அவ்வாறு வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. ஆகவே ஆனந்த் இரண்டு பாஸ்போர்ட்டுக்கள் வைத்துக் கொண்டிருக்க வழியேயில்லை. அவரிடம் இந்திய பாஸ்போர்ட்டும் ஸ்பானிய அனுமதி அட்டையும் மட்டுமே இருக்கும் அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அவரை இவ்வளவு தூரம் தொல்லைப் படுத்தியது தேவையில்லாத ஒரு அவமானமே. ந்மது ஊரில் அரசியல்வாதிகளுக்கும், சினிமாக்காரர்களுக்கும், கிரிக்கெட் ஆட்களுக்குமே மதிப்பு மற்றவர்கள் எல்லாம் மனிதர்களே அல்லர். மேலும் வட இந்தியர்களுக்கு தென்னிந்தியர்கள் பற்றிய பொது அறிவு மிகவும் குறைவு. அவர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் யார் என்றே தெரிந்திருக்காது. ஹைதராபாத் செண்ட்ரல் யுனிவர்சிடி இந்த பட்டத்தை வழங்குவதால் மத்திய அமைச்சகத்துக்கு இந்த ஃபைல் போயிருக்கிறது தமிழ் நாட்டில் உள்ள மண்ணாப் போன அண்ணா பல்கலை என்றால் கவர்னர் ஆபீசுடன் இந்தக் கண்றாவி கூத்துக்கள் எல்லாம் முடிந்து போயிருக்கும்.

  மற்றபடி ஆள் தெரியாமல் நான் காட்டிய கடுமைக்கு மன்னிக்கவும். நான் அமெரிக்க நாட்டு பச்சை அட்டை, குடியுரிமை, இந்திய ஓ ஐ சி கார்டு , இந்திய மற்றும் அமெரிக்க பல்கலைகளில் பணி அனுபவத்திலும் இதைச் சொல்கிறேன். கானுவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஒரு புண்ணாக்கு அனுமதியையும் யாரும் பெறவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை சிண்டிகேட் எடுக்கும் அந்த தீர்மானம் கவர்னர் ஆபீசுக்கு அனுப்பப் பட்டு அவருக்கு பட்டமும் கொடுத்தார்கள். எம் ஜி ஆருக்கு உதவி செய்த நர்ஸ், கம்பவுண்டர், வார்ட் பாய் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க அப்பொழுது இருந்த அனைத்து பல்கலைகளும் ஆசைப் பட்டன ஏனோ அதற்குள் எம் ஜி ஆர் போய் சேர்ந்து விட்டார். நமது பல்கலைக் கழகங்கள் எல்லாம் உயர் கல்விக் கூடங்கள் அல்ல. அரசியல்வாதிகளின், ஜாதீயவாதிகளின் கொள்ளைக் கூடாரங்கள். அங்கு வெங்கட் போன்றவர்களுக்கோ வி. ஆனந்த் போன்றவர்களுக்கோ இடம் கிடையாது. 1 லட்சம் செலவழித்தால் எந்தத் துறையிலும் ஆய்வு செய்யாமலேயே பி எச் டி பட்டம் வாங்கி விடலாம். வைஸ் சான்சலர் என்பவர்கள் கருணாநிதிக்கு கால் கழுவி விடும் அல்லக்கைகள் மட்டுமே. பெயருக்கு ஏற்றாற் போலவே கெட்ட பழக்க வேந்தர்களாக செயல் படுகிறார்கள்.

  அன்புடன்
  ச.திருமலை

 14. (one more reference about the Dual Indian citizenship issue: Constitution of India dose not allow Duel citizenship – more at : https://www.immihelp.com/nri/dual.html) )

  This particular Nationality Law was brought to the law books so as to make sure a foreign national can not become a PM or CM or any other higher official post in the Indian Government.

  Otherwise potential persons like Ms.Sonia Gandhi can become a PM and also can continue to become a Italian citizen. Because of this law She had to renounce her Italian Citizenship before her application was accepted to contest in the MP election. “Thanks to this Law”. On the other hand it is not like Mr.Hussian threw his Indian Citizenship and took the Katar Citizenship. It should be read “when he took the Katar citizenship the Indian citizenship was automatically terminated”.

  இதைத்தான் நம்ம பத்திரிக்கையாளர்கள் “இந்தியக் குடியுரிமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்நிய குடியுரிமையை ஏற்றார்” என்று நம் உணர்ச்சியை தூண்டும் படி எழுதுவார்கள். இவர்களும் நம் கழலகக்காரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல.

  So, like Mr.Hussian, Mr.Anand’s Indian citizenship should have been terminated by now by law. Ofcourse Mr.Anand is an Indian but not a Indian Citizen anymore.

  “In otherwords we can say Mr.Anand is an Indian born Spanish Chess champion (Citizen)”

  I hope I explained everything that I have to explain in support of my argument. I also hope that the HRD would have explained everything to Mr.Anand by now.

  I am not done yet.

  So my questions for you now..

  As Mr.Anand and everyone is clear that he is not an Indian Citizen anymore SO…….

  1. Which country will he represent in his further Tournaments?

  2. Is it right to play with his mother land – India’s Flag anymore? (The country which terminated his Citizenship already)?

  3,Even if he didn’t give much thought about it and continues to play with Indian Flag is this leagally right?

  4. Even if the Chess tournament organisers law permits, Is this the way to show his gratitude to Spain? (for the only country he has citizenship as of now)

  5. If not will he apply for the Indian citizenship again and giveup the Spanish citizenship out of his Indian patriotism?

  6. In the worst case If Anand decides to forget all the bullshit by Indian Govt and decide to represent the Spain – where will you all who were shouting against me and the Indian Govt. hide your face?

  7. What is the punishment for all the media for giving a wrong news to people and confusing and arousing everyone (including Mr.Chekkilaan)?

  Who is gonna answer all this questions.
  I hope I will get my answer from Mr.Anand’s decision soon..

  Looking forward for more Fun 🙂 !!!

 15. Can anyone Answer?

  As its clear that according to the Indian Nationality law Mr.Anand is no longer an Indian Citizen. So some important questions arises at this point.

  1. Which country will Mr.Anand represent in his future Chess Tournaments?
  2. Can he represent India while his Indian passport is already ceased?
  3. Even if the international Chess committee permits him to represent India? Is this the way to show his gratitude to Spain? (to the only country he has Citizenship and a legally valid Passport)
  4. or else will he give up Spain citizenship and apply for an Indian Citizenship to play for India?
  5. or Will he decide to forget about the Indian laws and start representing the Spain (as a true citizen) here after?
  6. If so what about all the fights and arguments in the support of Mr.Anand?
  7.What is the penalty for Mr.Anand and his wife for possessing Indian passports for such a long time after he got another country’s citizenship?
  7.What is the penalty for all the media who gave false hype and confused and aroused the feelings of the public?(including Mr.Chekkilaan)

  I guess it is getting more complicated from now. I hope Anand has already decided about it, and we shall see the answers our self in his next match.

  I enjoyed the fun given by the media over the last week, and looking forward for more. :))

 16. Can anyone Answer?

  As its clear that according to the Indian Nationality law Mr.Anand is no longer an Indian Citizen. So some important questions arise to me at this point.

  1. Which country will Mr.Anand represent in his future Chess Tournaments?
  2. Can he represent India while his Indian passport is already ceased?
  3. Even if the international Chess committee permits him to represent India? Is this the way to show his gratitude to Spain? (to the only country he has Citizenship and a legally valid Passport)
  4. or else will he give up Spain citizenship and apply for an Indian Citizenship to play for India?
  5. or Will he decide to forget about the Indian laws and start representing the Spain (as a true citizen) here after?
  6. If so what about all the fights and arguments in the support of Mr.Anand?
  7.What is the penalty for Mr.Anand and his wife for possessing Indian passports for such a long time after he got another country’s citizenship?
  8.What is the penalty for all the media who gave false hype and confused and aroused the feelings of the public?

  I guess it is getting more complicated from now. I hope Anand has already decided about it, and we shall see the answers our self in his next match. Voila

 17. இந்த மாதிரி விஷயங்களில் கவனிக்க வேண்டியது வெறும் விதிமுறைகள் மட்டுமல்ல. சம்மந்தப் பட்டவர்களின் நோக்கமாகும்.
  ஆனந்த் விஷயத்தில் அது கெட்ட எண்ணம் மற்றும் காழ்ப்பு உணர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப் பட்ட நடவடிக்கை என்று ஒரு முட்டாளுக்குக் கூட தெரியும்.
  இதே போல்தான் முன்பு அமிதாப் பச்சன் குஜராத்தின் Brand ambassador
  ஆக ஒப்புக் கொண்ட போது காங்கிரஸ் அடிமைகள் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தன.
  இதே ஆனந்த் சோனியாவுடன் செஸ் விளையாடி இருந்தால் அவருக்கு நோபெல் பரிசுக்கே சிபாரிசு செய்திருப்பார்கள் .

 18. வெளி நாட்டு கிறிஸ்தவ மதம் மற்றியான கிரகாம் ஸ்டெயின்சுக்கு எந்த விதி முறையின் கீழ் பத்ம ஸ்ரீ கொடுத்தனர்?
  போப் மரணத்துக்கு எந்த விதி முறையில் விடுமுறை மற்றும் அரசு துக்கம்?
  தெரேசா நம் நாட்டுக்கு என்ன செய்து விட்டார் என்று அவருக்கு தபால் தலை மற்றும் நாணயம் ?
  ஆக ஆதாயம் அடைய இன்று ஒரே விதி- கிறிஸ்தவராக அல்லது முஸ்லிமாக அல்லது காங்கிரஸ் அடி வருடியாக இருக்க வேண்டும் .
  மற்றவர்களுக்கு அவர்கள் தலை விதி!

 19. இங்கு எல்லாவற்றையும் சட்டத்தின் அடிப்படையில் துல்லியமாக ஆய்ந்துதான் செய்கிறார்களா?
  அதுவும் இந்த காங்கிரஸ் ஆட்சியில்?
  முன்பு ஒரு குவைத் முஸ்லிம் பெண் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் .
  விஷயம் என்னவென்றால் அவர் குவைதில் வேலை பார்த்த ஒரு இந்திய முஸ்லிமை காதலித்தார்.
  ஆனால் அதற்கு அங்கு கடும் எதிர்ப்பு.
  ஆகவே அவர் ஒரு தந்திரம் செய்தார் .
  தன் வீட்டில் வேலை செய்த ஒரு அப்பாவி இந்தியப் பெண்ணின் பாஸ்போர்டைத் திருடி அந்தப் பெண் போல் தனது காதலனுடன் இந்திய வந்து விட்டார்.
  ஆனால் உடனே இங்கு ஒரு பெரிய அமர்க்களம் நடந்தது. அரசியல் வாதிகள்,பத்திரிக்கையாளர்கள்,அறிவு ஜீவி முத்திரை குத்திக் கொண்டவர்கள் எல்லோரும் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று குதித்தனர்.நம் தமிழினத் தலைவர் கூட அதற்கு வக்காலத்து வாங்கினர்! ‘காதலுக்காக’ அவளை மன்னித்து விட வேண்டுமாம்!
  அப்போது இந்த நாட்டின் சட்டம் என்ன சிலருக்கு மட்டும் வேர்க்கடலை கட்டும் காகிதமா?

 20. கடைசி செய்தி-அந்த குவைத் பெண்ணின் மீது நடவிடிக்கை கைவிடப் பட்டது.

 21. Some questions raised by the NRI and some answers:

  1. Which country will Mr.Anand represent in his future Chess Tournaments?

  இந்தக் கேள்விக்கு கேள்வி கேட்டவரiடம் விடை உள்ளதா? பின்னாளில் நடக்கப் போவதை யார் கூறவல்லார்? ஆனந்த் உள்பட யாராலும் இப்போது கூறமுடியாத கேள்வி அல்லவா இது?

  2. Can he represent India while his Indian passport is already ceased?

  செஸ் விளையாட்டு, குழு விளையாட்டு அல்ல. தனிநபர் ஆட்டம். பாரதத்தின் சார்பாக விளையாட பாரதம் எவரையும் நியமிக்கவில்லை. எந்த நாடும் அப்படி தத்தமக்காக விளையாட நியமிப்பதும் இல்லை. எல்லா போட்டிகளும் தனிநபர் போட்டிகளே. உலக சாம்பியன் உள்பட. ஆனந்த் ஒரு முன்னணி வீரர் என்பதால் எல்லா பன்னாட்டு போட்டிகளுக்கும் அவருக்கும விளையாட அழைப்பு அனுப்பப்படும் அவர் ஏற்றால் போட்டி நடத்துபவர்களுக்கு கவுரவம், போட்டி வெற்றிகரமாக, ஜனரஞ்சகமாக நடக்கும் என்பதே இன்றைய நிலை. எனவே அவர் ஆடுவதை பாரதத்தின் சார்பில் என்று எடுத்துக் கொள்வதற்கில்லை. பாரதத்தைச் சேர்ந்தவர் என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  3. Even if the international Chess committee permits him to represent India? Is this the way to show his gratitude to Spain? (to the only country he has Citizenship and a legally valid Passport)

  ஆசிய அளவில்லான தேசியக் குழு போட்டி, செஸ் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் செஸ் என்ற போட்டி தவிர எதிலும் தேசம்/ நாடு சார்ந்த போட்டிகள் இல்லை. செஸ் ஒலிம்பிக்ஸ் நடக்கும்போது இந்தக் கேள்விக்கு விடையை நமது பாரத அரசின் நடவடிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எனது அனுமானம், நமது அரசு அப்போதும் ஆனந்தை பாரதத்தின் சார்பாக ஆடக் கோரும். அவரும் ஆடுவார். இதில் அட்டி சொல்லத்தகுதி கொண்ட ஸ்பெயின் நாடும் எந்த அட்டியும் சொல்லாது என்பதே எனது அனுமானம்.

  4. or else will he give up Spain citizenship and apply for an Indian Citizenship to play for India?

  இந்தக் கேள்வி யூகங்களின் அடிப்படையிலானது. யாருக்கும் விடை தெரியாது, கேட்டவர் உள்பட. The question is based on hypothesis and surmise. Any answer can go wrong.

  5. or Will he decide to forget about the Indian laws and start representing the Spain (as a true citizen) here after?

  இந்தக் கேள்வி யூகங்களின் அடிப்படையிலானது. யாருக்கும் விடை தெரியாது, கேட்டவர் உள்பட. The question is based on hypothesis and surmise. Any answer can go wrong.

  6. If so what about all the fights and arguments in the support of Mr.Anand?

  ஆனந்துக்கு எதிரான வைக்கப் பட்ட வாதங்களுக்கு ஏற்படும் விளைவே, அவருக்கு ஆதரவான வாதங்களுக்கும் ஆகும். இதில் என்ன மாறுதல் வந்துவிடப் போகிறது? என்னதான் வரவேண்டும். பாரதம் ஒரு சுடியரசு. யாரும் அவரவர் கருத்தைச் சொல்லலாமே. கருத்தில் தவறிருந்தால் தானே அவரவர் உணர்ந்து மாற்றிக் கொள்ளப போகிறார்கள்.

  7.What is the penalty for Mr.Anand and his wife for possessing Indian passports for such a long time after he got another country’s citizenship?

  என்ன தண்டனை என்பது சட்டத்தில் இருக்கிறது. எந்த வழக்கும் அதனதன் உண்மைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படவேண்டும் என்பது பொது விதி. குற்ற நோக்கம் என்பது இருந்தால்தான் தண்டனை என்ற பேச்சே வரும் ஆனந்துக்கு என்ன குற்ற நோக்கம் இருந்தது என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது. எதுவும் இருந்துவிடப்போவதில்லை என்பது எல்லாருக்கும் (இந்த NRI ஐத் தவிர) நன்றாகத் தெரிகிறது. குற்ற நோக்கம் நிரூபிப்பது நீதிமன்றத்தில். வேண்டுமென்றால் இந்த NRI ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்து என்ன தண்டனை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

  8.What is the penalty for all the media who gave false hype and confused and aroused the feelings of the public?

  What is false hype and what is arousing the feelings of public are all subjective opinions. Can there be any penalty on the basis of subjective opinions? If there be any is that a civilised society? What difference would it make between Taliban and this thought?

 22. இந்தியாவின் சார்பில் பல போட்டிகளில் பங்கேற்று, உலக அரங்கில் இந்தியாவிற்கு பல பெருமைகளைப் பெற்றுத் தந்த ஒருவரை, இந்த நாட்டின் குழந்தைகள் கூட நன்கறிந்த ஒருவரை இந்நாட்டை ஆளும் அரசில் உள்ள அமைச்சருக்கும் அவர் சார்ந்த துறையினரும் அறிந்திருக்க வில்லை என்பது வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம். உலகப் புகழ் பெற்ற இந்தியர் ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாமானியனின் நிலை எப்படி இருக்கும்??.
  இதனை மூடி மறைக்க சொல்லப்படும் வாதங்கள் அனைத்தும், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொன்னான் என்பதையே நினைவு படுத்துகிறது.

  அன்புடன்,
  ஆரோக்யசாமி

 23. திரு NRI அவர்களே!
  ஆனந்த் தனது பாஸ்போர்ட்டை திருப்பிக்கொடுக்காதது தவறு என்றால் மத்திய அமைச்சர் எதற்காக மன்னிப்புக் கேட்டார்? பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று என் சொல்லவில்லை?
  இந்திய அரசு இரண்டு பாஸ்போர்ட் வைத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை என்ற விஷயம் பெரும்பாலான (படித்த) NRI களுக்குத் தெரியும். பல நாடுகளுக்கு சென்று வந்துள்ள ஆனந்துக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். பல tournament களுக்கு அவரை அனுப்பிய இந்திய செஸ் பெடேரஷனுக்கும் தெரிந்திருக்கும். மற்றும் இந்த செய்தியில் ஆனந்த் தனது பாஸ்போர்ட் நகலை அனுப்பியும் அவர்கள் அதைக் கிடப்பில் போட்டுவிட்டதால்தான் தாமதம் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. அப்போதே அவரைக் கேட்டிருக்கலாமே! இந்த விஷயத்தில் ஆனந்த் மேல் தவறென்றால் என் அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் மன்னிப்பு மட்டும் கோரினார்?

 24. அவர் ஒரு இந்தியராக பிறந்ததது முதல் குற்றம்.தமிழனாக பிறந்தது இரண்டாவது குற்றம். பார்பனராக பிறந்தது மூன்றாவது குற்றம். நரேந்திர மோடியுடன் செஸ் விளையாடியது மிக பெரிய நான்காவது குற்றம்.
  அவர் வேறு நாட்டில் இருப்பதோ அங்கு கடவுசீட்டு அல்லது குடியுரிமை வைத்திருந்தால் கூட மேலே உள்ள விசயங்களில் மட்டும் தப்பி இருந்தால் நிச்சயம் அவர் அங்கீகரிக்க பட்டிருப்பார்.அல்லது அவர் வாழும் நாட்டில் உள்ள மதத்திற்கு மாறியிருந்தால் மறுநாளே பெரிய விளம்பரத்துடன் கௌரவிக்கப்பட்டு இப்போது பரத ரத்னா விருதுக்கே சிபாரிசு செய்யபட்டிருப்பார். நோபெல் பரிசுக்கு கூட பரிசிலிக்கபட்டிருக்கும்.
  இந்த உண்மைகளை எல்லாம் எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு எல்லாம் புரியாது

 25. விதி என்று இன்ருந்தால் விதி விலக்கு என்று ஒன்று இருக்க வேண்டுமே. இந்தியாவின் கோடியை வைத்து விளையாடி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தன்னிகரற்ற ஒரு திறமைசாலியை இந்த மத்திய அரசு மாசுபடுத்தியது தவறு தான். மன்னிக்க முடியாத மாபெரும் தவறு. அதனால் தான் தொடர்புடைய அமைச்சரே வருத்தம் தெரிவித்து இருக்கிறார். தவறு என்றால் இந்திய குடியுரிமைச் சட்டத்தைக் கட்டி.நடவடிக்கை அல்லவா எடுத்திருக்க வேண்டும். எங்கோ ஓட்டை இருக்கிறது சட்டத்தில். இங்கே பேசியவர்கள் அனைவரும் ஆனந்த் அவர்களின் திறமையைக் குறித்துச் சிறப்பாகவே கூறினார்கள். எனவே, நாமாவது ஆனந்த் அவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அவர் குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது என் கருத்து

 26. அன்பு நண்பர்களுக்கு,

  ஆனந்த் பட்டம் பெறாததால் ஆனந்துக்கும் நஷ்டமில்லை; யாருடைய குடியும் முழுகிப் போய்விடவில்லை. ஆனால், அவருக்கு இப்போது ஏற்பட்ட நிலை எதிர்காலத்தில் சாமானியனுக்கும் வரலாம். அப்போது நமது குடியுரிமை முழுகிப் போய்விடும் நிலை வரலாம். ஆனந்த் போன்ற பிரபல மனிதருக்கே இந்த நிலை எனும்போது, வரும்காலத்தில் இதே காங்கிரஸ் கட்சியோ, இதைவிட மோசமான ”மதச்சார்பற்ற” அவியல் கூட்டணியோ ஆண்டால் நமது நிலை என்னாவது? அந்த வகையில், ஆனந்திற்கு தற்போது ஏற்பட்ட சோதனை- நமது அகவிழி திறக்க உதவியுள்ளது. ஆனந்தின் குடியுரிமையை சந்தேகித்த அந்த மேதாவி எங்கிருந்தாலும் வாழ்க!

  இந்தக் கட்டுரைக்கு எங்கிருந்தோ முகம் காட்டாமல் பின்னூட்டம் அளித்துவரும் திருவாளர் என்.ஆர்.ஐ. அவர்களுக்கு நன்றி. ஆனந்த் குறித்த மேலதிகத் தகவல்களை அறியச் செய்ய அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கும் நன்றி. அதே சமயம், ஒரு தீர்க்கமான முடிவுடனேயே அவர் (ஆனந்த் இந்தியப் பிரஜை அல்ல) தனது கருத்துகளை முன்வைக்கிறார். அநேகமாக, இக்கட்டுரையில் தொனிக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். வளைகுடா நாடுகளில் வாழும் பலரிடம் இந்தக் கருத்தோட்டத்தைக் கண்டுள்ளேன்.

  1 . இது விஷயமாக முடிவு கூறத் தகுதி உள்ளவர்கள் மூவர் மட்டுமே. ஒருவர் ஆனந்த். அவர், தான் இந்தியக் குடிமகன் என்பதற்கு பாஸ்போர்ட் காட்டி இருக்கிறார். இந்தியாவில் சதுரங்க விளையாட்டை வளர்க்க பல அறக்கட்டளைகளை அவர் வழிநடத்தியும் வருகிறார். தற்போதும் இந்தியக் கொடியுடன் தான் போட்டிகளில் பங்கேற்கிறார். அவர் இப்போது ஸ்பெயினில் குடியமர்ந்திருப்பது எனக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால், அவர் எங்கிருக்க வேண்டும் என்று கட்டளையிட நாம் செஞ்சீனாவில் வாழவில்லை. தற்போது ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க அவர் இந்தியாவிலேயே வசிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அதே சமயம், இசை அமைப்பதற்காகவே வெளிநாட்டில் வசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எந்த கேள்வியும் இல்லாமல் பத்ம விருது வழங்கிக் கொண்டே, ஆனந்தை துகிலுரிப்பதை சகிக்க முடியாது.

  2 . அடுத்து முடிவெடுக்க வேண்டியது இந்திய அரசு. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஓடோடி வந்து ஆனந்திடம் மன்னிப்பு கேட்டதும், அவரது பாஸ்போர்ட் இதுவரை பறிக்கப்படாததும் இந்திய அரசின் நிலையைத் தெளிவாக்குகின்றன. அரசு முடிவுகள் பெரும்பாலும் மக்களின் மனோநிலையை ஒட்டி எடுக்கப்படுபவை. தற்போதைய உணர்ச்சிகரமான சூழலில் நடந்துள்ள பெருந்தன்மையான நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் போகலாம். யூகத்தின் அடிப்படையில் அதை நாம் இப்போது விவாதிக்க முடியாது. ஆனால், ஆனந்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இதே போன்ற தர்மசங்கடமான நிலை, இதே போன்ற ஆட்சி இருந்தால் வரலாம். அப்போதும் மக்கள் கருத்தை உருவாக்குவது, என்.ஆர்.ஐ. உள்ளிட்ட நம் அனைவரது கடமை.

  3 . மூன்றாவதாக முடிவெடுக்க வேண்டியது ஸ்பெயின். அந்நாட்டில் ஆனந்த் கௌரவப் பிரஜையா? குடியுரிமை பெற்றவரா? என்பதை அந்த நாடு தான் தெளிவுபடுத்த வேண்டும். விளையாட்டுத் துறையில் இத்தகைய கௌரவ குடியுரிமை வழங்குவது பல நாடுகளில் இருக்கும் வழக்கமே. எதிர்காலத்தில், ஸ்பெயின் அவரை ‘போ’ என்று சொன்னால் அவர் திரும்ப நாடு இருக்கிறது. அந்த நாட்டை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் போன்ற யாரேனும் – யாருக்கேனும் விற்றுவிடக் கூடாது என்று, ஆனந்திற்காகவும் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

  இந்த விவாதத்தில் உறுதியாகவும், ஆவேசமாகவும் கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, திருவாளர்கள் ச.திருமலை, ந.உமாசங்கர், ஆர்.ஸ்ரீதரன் ஆகியோருக்கு நன்றி. நமது விவாதம், இதுவரை நாம் அறிந்திராத முகடுகளையும் எட்டட்டும். அப்போது தான், இனிவரும் காலத்தில், நாம் அறிந்திராத முகடுகளிலிருந்து வீசப்படும் ஏவுகணைகளையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.

  ஆனந்த் விஷயத்தில் தவறான தகவல்களைத் தந்து மக்களைக் குழப்புவதாக திருவாளர் என்.ஆர்.ஐ. அங்கலாய்த்திருக்கிறார். அது அவரது முன்முடிவு. அதற்காக கபில் சிபல் போல யாரும் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை; சசி தரூர் போல யாரும் தண்டிக்கப்படவும் வேண்டியதில்லை. அனுமானங்களின் மீது உறுதியான கருத்துக் கோட்டைகளை எழுப்ப இயலாது.

  இந்த விஷயத்தில் என்.ஆர்.ஐ.க்கும் சேக்கிழானுக்கும் ஒரே வேறுபாடு தான். அவர் ஆனந்த் ஸ்பெயின் குடிமகன் ஆக வேண்டும் என்று விழைகிறார். நான் ஆனந்த் இந்தியக் குடிமகனாகவே- இந்தியாவிலேயே- தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

  ஆண்டர்சன் தப்புவதற்காக, போபாலில் செத்த லட்சக் கணக்கானவர்களின் சடலங்கள் மீது அரசு விமானத்தை நிறுத்திய பூர்விகம் கொண்டவர்கள் தான் மன்மோகன் சிங்கும், ப.சி.க்களும் என்பதால், தற்போதைய காங்கிரஸ் அரசு, ஆனந்தை மறுபடியும் நோகடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

  நக்கீரர் சொன்னதை நண்பர் என்.ஆர்.ஐ குறிப்பிட்டார். அதைவிட அழகாகவும் ஆவேசமாகவும், ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ என்று சொன்ன திருநாவுக்கரசரின் வழிநடப்பவர்கள், பிறர் ஈவதற்காக குடியுரிமைக்கு கையேந்த மாட்டார்கள். நாட்டை உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு குடியுரிமை என்ற கழுத்தில் அணியும் அட்டையின் தேவையும் இல்லை; நாட்டையே அவர்கள் தான் கட்டி அமைக்கிறார்கள்.

  ஜெய்ஹிந்த்!

 27. இந்திய சட்டப்படி இரட்டை குடியுரிமை இங்கே செல்லுபடியாகாது. வைத்திருக்கவும் கூடாது. முதலில் சோனியாவும் அவரது வாரிசுகளும் இத்தாலிய குடியுரிமை வைத்துள்ளார்களா அப்படி வைத்திருந்தால் அது செல்லுபடியாகுமா வைத்திருப்பது குற்றமா என்பதை எல்லாம் முதலில் காங்கிரஸ் அரசு தெளிவுபடுத்தவேண்டும்.

  மேலும் ஆனந்தனுக்கு பட்டம் அளிக்க முடிவு செய்த விழாவில் அவரது குடியிருப்பு உரிமையை பற்றி சர்சை கிளப்பியவர்கள் அதேவிழாவில் அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைகழக பேராசிரியர் டாக்டர்.டேவிட் மம்போர்டு என்பவருக்கும் பட்டம் அளிக்கபோவதை பற்றி எந்த கேள்வியையும் கேட்கவில்லை

  மேலும் சில ஆண்டுகளுக்குமுன் நமது அரசாங்கம் இரட்டை குடியுரிமையை அனுமதிக்கும் நாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்த நாட்டின் குடியுரிமை வைத்திருந்தாலும் அவர்களுக்கு வேண்டும் என்றால் ஓவர்சீஸ் இந்திய குடியுரிமையை என்ற ஒன்றை (OCI) அளிக்கிறது. இது முறையான இந்திய குடியுரிமைக்கு சமமாகாது.

  இவர்களுக்கு 1) இந்திய பாஸ் போர்ட் கிடையாது 2) தேர்தலில் நிற்க்கவும் ஓட்டு போடவும் முடியாது 3) அரசாங்க பதவியிலும் வேலையிலும் அமரமுடியாது. 4) விவசாய விளைச்சல் நிலங்களை வாங்கமுடியாது. ஆனால் அவர்களுக்கு 1) மல்டிபிள் என்டிரி மல்டிபிள் விசா போன்ற வசதிகள் உண்டு 2) போலீஸ் நிலயங்களுக்கு சென்று இங்கு நீண்டநாள் தங்கிவிட்டால் அறிவிக்க தேவையில்லை 3) என்.ஆர்.ஐ போல் பைனாஸ் எகானமி எசுகேஷன் போன்ற துறைகளில் பங்கு பெறலாம் 4) வேண்டும் என்றால் மனு செய்து மீண்டும் முறையான குடியுரிமையையும் பெறலாம்.

 28. அன்பர் திரு சேக்கிழான் அவர்களுக்கு,

  ///தற்போதும் இந்தியக் கொடியுடன் தான் போட்டிகளில் பங்கேற்கிறார். அவர் இப்போது ஸ்பெயினில் குடியமர்ந்திருப்பது எனக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால், அவர் எங்கிருக்க வேண்டும் என்று கட்டளையிட நாம் செஞ்சீனாவில் வாழவில்லை. தற்போது ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க அவர் இந்தியாவிலேயே வசிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். ///

  ஆனந்த் பாரதத்தில் வசிக்க எல்லாருக்குக் ஆசைதான். ஆனால் அவரது தனிப்பட்ட வசதிகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

  சில பெரிய தொழிலதிபர்கள் வருமான வரிக்காரனங்களுக்காக NRI ஆக வேண்டி வருடத்தில் 183 நாட்களுக்குக் குறையாமல் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வரியிலும், வெளிச் செலாவணியிலும் சில சலுகைகளை அனுபவிக்கிறார்கள். (நான் நமது NRI அன்பரைச் சொல்லவில்லை, அது பற்றி எனக்குத்தெரியாது)

  ஆனந்த் ஸ்பெயினில் வசிப்பதன் நோக்கம் அது அல்ல. பெரும்பாலான rated செஸ் போட்டிகள் ஐரோப்பாவில்தான் நடக்கின்றன. இவற்றுக் கெல்லாம் பாரதத்திலிருந்து அடிக்கடி போய் வர பத்தாண்டுகளுக்கு முன்னர் அந்த அளவு வசதி இல்லை. மேலும் பல மணி நேரப் பயணத்துக்குப் பின் மூளையைக் கசக்கும் செஸ் போன்ற விளையாட்டை விளையாடினால் வெற்றி கடினம் என்பதால்தான், ஸ்பெயினில் தாங்கும் முடிவுக்கு ஆனந்த் வந்தார். இதைத்தவிர, பாரதம் அப்போதெல்லாம் கொடுத்துவந்த அந்நியச் செலாவணி வெகு குறைவே. ஆனால், போட்டியில் வென்ற எந்தப் பணத்தையும் பாரதத்துக்குக் கொண்டுவந்தாக வேண்டும். வரியும் உண்டு.

  பலதரப்பட்ட விமான நிறுவனங்களும் ஐரோப்பாவிலிருந்து பாரதத்துக்குச் சேவையைத் துவக்கி விட்ட இந்நாளிலும் கூட இந்த பயண அயர்ச்சி (ஜெட்லாக்) காரணமாகவே ஆனந்த் அங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

  பிறிதொரு காலத்தில் ஆனந்த் போட்டிகளில் பங்கேற்பதை விட்டபின்னர் பாரதம் வரும் நோக்கில்தான், இங்கே செஸ் அகாடெமியையும், பயிற்சி நிறுவனங்களையும் துவங்க வழிவகை செய்திருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது.

  அவரது குடியுரிமை குறித்த சந்தேகங்களை எழுப்புபவர்கள் அத்தகைய ஒரு நல்ல வாய்ப்பை (அதாவது ஆனந்த் போட்டிகளிலிருந்து விலகியபின்னர் பாரதம் திரும்பி இங்குள்ள அடுத்த தலைமுறையைத் தயார் செய்வதைத்) தடுத்துவிடுவார்கள் என்றால் அது மிகையல்ல.

 29. அன்புள்ள ஆசிரியர் மற்றும் சக அன்பர்களுக்கு..

  மீண்டும் என் கருத்துக்களை கூறும் முன், சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன். ஆனந்த் அவர்களுக்கு பட்டம் கொடுக்கபடாததால் அவருக்கு சிறிதும் இழப்பு அல்ல, அவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. அவர் திறமையையோ அவருக்கு பட்டம் கொடுப்பது சரியா தவறா என்றோ நான் வினவவே இல்லை.

  இந்திய பலகலைக் கழகங்கள் பட்டம் கொடுத்துதான் ஆனந்தின் திறமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவருக்கு மட்டும் அல்ல, அவர் பெயரை அறிந்த அனைவருக்கும் தெரியும், ஹைதராபாத் பல்கலைக் கழகம் பட்டம் வழங்குவது அது தன்னை பெருமைப்படுதிக்கொள்ளத்தான் என்பதும் ஊரறிந்தது .
  நான் ஏற்கனவே எனது பின்னோட்டத்தில் ஆனந்துக்கு செய்யப்பட்ட அவமரியாதைக்கு வருத்தம் தெரிவித்துள்ளேன்.

  ஆனந்தின் சாதனை குறித்து பெருமைப்படும் ஒவ்வொரு இந்தியனை விட, ஒவ்வொரு தமிழரை விட பல மடங்கு நான் பெருமை கொள்வேன் , ஏன் என்றால் அவர் என் ஊர்க்காரர். இல்லை நான் அவர் ஊர்க்காரன்.

  நான் எந்த மத இன கட்சி விருப்பு வெறுப்பின்றியே எனது கருத்துக்களை எழுதுகின்றேன், என்னை நீங்கள் காங்கிரஸ் அனுதாபி என்று எண்ணிக் கொண்டால் நான் பொறுப்பல்ல. நான் இது வரை எந்த தேர்தலிலும் காங்கிரசை ஆதரித்தவனும் அல்ல. (எனது சொந்த காரணங்களுக்காக)

  என் கேள்விகள் அனைத்தும் எனது ஐயங்கள் மற்றும் ஊகங்கள் மட்டுமே. மேலும் இங்கு நான் கருத்து தெரிவிப்பது விவாதத்திற்காக மட்டுமே அன்றி யாரையும் புண்படுத்த அல்ல எனவே பிழை இருப்பின் மன்னிக்க என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

  நிற்க.

  1 . ஆனந்த் ஸ்பெயின் குடியுரிமை பெற்றவர் என்பது ஆனந்த விகடன் முதல் IBN-LIVE வரை பெரும்பாலான ஊடகங்களில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்தோர் பலர். உதாரணத்திற்கு நான் ஏற்கனவே கொடுத்துள்ள இணைப்பில் உள்ள Life & lifestyle of Vishwanathan Anand – என்ற கட்டுரை IBNLIVE இல் 2007 ஆம்
  ஆண்டில் வெளியானது.

  2 . The University of Hyderabad decided to award Anand an honorary doctorate in 2009 and formally forwarded the proposal to the Human Resource Development Ministry recently.
  “Since all foreign awardees required approval from the Ministry of External Affairs, HRD Ministry raised the citizenship queries to the university as Anand lives with his wife in Spain “.

  It was informed that Anand, who lives in Spain with his wife Aruna, is a Spanish citizen after the HRD Ministry asked the university twice with these queries. But the university still did not inform the Ministry that it needed the approval urgently as the awards ceremony was to be held on Monday. – என்பது முதன் முதலில் ஊடகங்களில் வெளியான செய்தி.

  3 . இப்பொழுது எனது கருத்துக்களை வேறு விதமாக முன் வைக்கிறேன்?

  உதாரணத்திற்கு ஆசிரியர் சேக்கிழானோ அன்பர் உமா சங்கரோ, மத்திய HRD அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கோப்புகளை சரி பார்த்து அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ள ஒரு அதிகாரி எனக் கொள்வோம். உங்கள் பார்வைக்கு இந்த கோப்பு வருகிறது. அனுமதி கேட்கும் பல்கலைக் கழகம் தனது விண்ணப்பத்தில்
  Mr.X என்பவருக்கு பட்டம் அளிக்க அனுமதி வேண்டும், “He lives with his wife in Spain and he is a Spanish citizen” எனக் குறிபிட்டுள்ளது.

  இதை பார்த்த நீங்கள் உங்கள் அலுவலக விதிப்படி என்ன செய்வீர்கள்?

  1. வெளிநாட்டுக் குடியுரிமை உடைய ஒருவருக்கு அனுமதி அளிக்க உங்களுக்கு அதிகாரம் கிடையாது.
  2 . வெளிநாட்டுக் குடியுரிமை உடைய ஒருவருக்கு அனுமதி ” Ministry of External Affairs ஆல் வழங்கப்பட வேண்டும் , HRD Ministry யால் அல்ல.
  3 . தவறுதாலாக ஏதேனும் குரிப்பிடப்பட்டுலாத என அறிய பல்கலையை இரு முறை தொடர்பு கொள்கிறீர்கள் ஆனால் சரியான தகவல் இல்லை.
  கூடுதலாக Mr.X அவர்களின் பாஸ் போர்ட் உங்களிடம் வருகிறது. ஆனாலும் இன்னும் அவர் ஸ்பெயின் குடிமகன் அல்ல என்பது (இப்போது வரை) தெளிவு
  படுத்தப்படவில்லை.
  4 . உங்கள் அலுவலக சட்டப்படி வேற்று நாட்டுக் குடியுரிமை பெற்ற ஒருவர் தனது இந்திய பாஸ் போர்ட்டை ஒப்படைத்திருக்க வேண்டும்.
  5 . எல்லாம் முரணாக இருக்கிறது, என்ன செய்வீர்கள் ?

  (இங்கு “The university still did not inform the Ministry that it needed the approval urgently as the awards ceremony was to be held on Monday” மற்றும் நமது இந்திய அரசு இயந்திரம் பொதுவாக செயல்படும் வேகம் என்ன என்பதையும் தயவு செய்து கருத்தில் கொள்க)

  பல்கலைக்கழகம் தெளிவான விளக்கம் கொடுத்து அனுமதி பெறுவதை துரிதப்படுத்தாமல், ஒப்புதலுக்காக இன்னும் காத்துகொண்டிருகிறது , குறித்த நாளில் சிறப்பு விருந்தினரும் வந்துவிட்டார் . இன்னும் அனுமதி கிடைக்காததால் விழா முன்னறிவிப்பு இன்றி தள்ளிப் போடப்படுகிறது. விவரம் கேள்விப்பட்ட ஒரு பத்திரிக்கை உங்களைத் தொடர்பு கொண்டு என்ன விஷயம் என்று கேட்கிறது.

  நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? Honest Answer please.

  நீங்கள் கூறிய பதிலைக் கேட்ட பத்திரிக்கை தனக்கான இன்றைய தீனி கிடைத்த மகிழ்ச்சியில் அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதித் தள்ளுகிறது.
  விஷயம் அறிந்த மற்ற பத்திரிகைகளும் விஷயத்தை நாடெங்கும் கிழித்தெரிகின்றன. Mr.X அவர்களை நேசிக்கும் ஒவ்வொருவரும் கொதிப்படைகின்றனர்,
  விஷயம் பற்றி எரிகிறது. தாமதமாக விழிப்படையும் அரசு (அமைச்சர் ) உடனடியாக தாமே முன் வந்து எங்கோ நடந்த தவறு அனைத்துக்கும் தாமே முழுப் பொறுப்பேற்கிறார்.

  இதைப் பார்த்து நான் இங்கிருந்து அமைச்சரைப் பாராட்டுகிறேன், உமா சங்கரோ சேக்கிழானோ கேள்வி கேட்டது தப்பில்லை அது அவர்கள் கடமை என்கிறேன். அதை தாமதமாக செய்ததுதான் தவறு என்கிறேன்.

  என்னை அனைவரும் திட்டித் தீர்க்கிறீர்கள்.

  நன்று..

  இவ்வளவு தானே விஷயம்.. உணர்ச்சி வசப் படாமல் கொஞ்சம் மாற்றி யோசிக்க என்ன தயக்கம்.

  என்னை வசை பாடுபவர்கள் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஒருவர் கூட என் கேள்வியில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளவில்லை என்பதே என் வருத்தம்.

  Mr.X என்பவர் டாக்டர் பட்டம் பெரும் அளவு பெரிய சாதனையாளர் அல்லாமல் ஒரு ரேசன் கார்டுக்கோ / வேறு எதோ ஒன்றுக்கோ விண்ணப்பிக்கும் ஒரு சாதாரண குடிமகன் என்றால் என்ன நடவடிக்கை இருக்கும் என்பதே என் கேள்வி ? அந்த இடத்தில் நானோ நீங்களோ இருந்திருந்தால் ?

  மேற்குறிப்பிட்ட நிகழ்வில் Mr.X என்பவர் Mr.ஆனந்த் ஆகா இருந்ததால் அனைத்து முரண்களும் பெரிது படுத்தப்படாமல் தாமதமாகவேனும் சுமூகமாக கையாளப் படுகிறது (பட்டிருக்கலாம்) என்பது தானே உண்மை.

  இத்தனையும் ஆனந்தின் பெருமைகளைக் கருத்தில் கொண்டுதானே செய்யப்படுகிறது. அதை ஏன் நாம் ஒப்புகொள்ள மறுக்கிறோம்?

  1.இங்கு அரசைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது.
  2.சரியான தகவல்களையும் விளக்கங்களையும் கொடுக்காதது பலகலையின் தவறா? ஆனந்தின் தவறா ? அரசின் தவறா ?
  3.விண்ணப்பம் செய்த பல்கலை குறைந்த பட்சம் இது “Urgent Matter” என்று விளக்காதது யார் தவறு?
  4 . அலுவலகங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டிய விசயத்தை எதையும் முழுக்க விசாரிக்காமல் ஆராயாமல் மக்களுக்கு செய்தியாய் தெரிவித்து , ஆனந்த் உட்பட பலரது மனதை புண்படுத்தியது யார் குற்றம்.
  5 . போகிற போக்கில் தன் யூகங்களை எல்லாம் கோர்த்து விட்டு ஒருவேளை விஸ்வநாதன் ஆனந்த் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்திருந்தால் இந்நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. இதன் மூலமாக நமது மனசாட்சி தட்டி எழுப்பப்பட்டுள்ளது, என்றெல்லாம் ஒருவர் எழுதினால் இவர் என்ன சொல்ல வருகிறார் வாசகர்களிடம் என்ன எதிர் பார்கிறார் என்று யாரும் விளக்கவேண்டியதில்லை.

  இன்னமும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியவில்லை என்றால் மன்னிக்கவும் நண்பர்களே , தொடரட்டும் உங்கள் முழக்கம்,

  வாழ்க வளமுடன்,

  P.S.

  @ உமா ஷங்கர்: செஸ் தனி நபர் விளையாட்டு ஆகவே ஆனந்த் ஆடுவது பாரதத்தின் சார்பில் என்று எடுத்துக் கொள்வதற்கில்லை. பாரதத்தைச் சேர்ந்தவர் என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியாதா விஷயத்தை புரியும் படி விளக்கியதற்கு நன்றி. என் கேள்விகள் அனைத்தும் என் யூகங்களே என்ற அளவில் புரிந்து கொண்ட நீங்கள் இந்த கட்டுரையில் கூறப்படும் அனைத்துக் கருத்துக்களும் ஆசிரியரின் யூகங்களே என்றும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

  @ சேக்கிழான்: நீங்கள் மட்டும் அல்ல, நானும், ஆனந்தால் பெருமைப்படும் ஒவ்வொரு இந்தியரும் ஆனந்த இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று தான் விருப்பபடுகிறோம். அவர் ஸ்பெயினில் நிரந்தரமாக குடியேறினால் நஷ்டம் அவருக்கு அல்ல இந்தியாவிற்கே என்றும் நன்றாக அறிவோம்.

  ஆனந்த் மட்டும் அல்ல வெளி நாட்டிலிருந்து சாதனை புரியும் நம் மக்கள் பலரும் நாடு திரும்ப வேண்டும் என்றே நான் பேராசைப் படுகிறேன். நானும் என் படிப்பு முடிந்ததும் இந்தியாவில் தான் பணி புரிய திட்டமிட்டுள்ளேன்.

 30. குறிப்பிடத்தகுந்த மற்றொன்று இந்த விஷயத்தில் என்.ஆர்.ஐ.க்கும் சேக்கிழானுக்கும் ஒரே வேறுபாடு தான்.

  அது NRI எந்த பக்கமும் விட்டுக்கொடுக்காமல் தமிழ் ஹிந்துவை தொடர்ந்து வாசிக்கும் சமூக அக்கறை உள்ள ஒரு நடு நிலை வாசகனாக கருத்து தெரிவிக்கிறார்.

  சேக்கிழான் அவரது கட்டுரையின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட உள் நோக்கதிற்காக சும்மா இருப்பவர்களையும் ‘ஒரு வேளை அப்படித்தான் இருக்குமோ’ என எண்ணத் தூண்டும் விதத்தில், உசுப்பேற்றும் விதமாக எழுதுகிறார்.

  அது என்ன காரணம் என்று விவரம் அறிந்தவர் அனைவருக்கும் தெரியும்.


  ஆவேசத்தில் நான் பயன்படுத்திய “நேர்மையும் பொறுப்பும் உள்ளவரானால்” போன்ற சில வரிகளை தவிர்த்திருக்கலாம் என மனம் வருந்துகிறேன்.

 31. NRI அன்பரே

  ///ஒரு சாதாரண குடிமகன் என்றால் என்ன நடவடிக்கை இருக்கும் என்பதே என் கேள்வி ? அந்த இடத்தில் நானோ நீங்களோ இருந்திருந்தால் ? ///

  இதனால் மட்டும் பெரிய அளவில் தண்டனையோ தொந்தரவோ வருவதற்கில்லை. அதிக பட்சம் பாரத குடியுரிமை அலுவலகத்திலிருந்து கடவிச்சீட்டை இத்தனை நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும் என்ற அறிக்கை வரும். அப்படி ஒப்படைக்காவிட்டால் தக்க நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒப்படைத்தால், அதன் பின்னர் என் முன்னமே ஒப்படைக்கவில்லை, என் குற்ற நடவடிக்கை தொடரக்கூடாது என்று (show cause notice ) வரும். பதில் அனுப்பிய பின்னர் தக்க நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்ற நோக்கம் (mens rea ) இல்லை என்பதை வாதமாக வைத்து நிரூத்தால், தண்டனை இல்லை. இல்லாவிட்டால் சிறு அபராதம் (ரூபாய் 500 கூட இருக்காது) விதிக்கப்படும்.

  இது ஒன்றும் பெரிய அளவிலான குற்றம் இல்லை. தீவிரவாதிகள் செய்யும் பொது இருக்கும் நோக்கத்துக்கும் சாதாரணக் குடிமகன் செய்யும் பொது இருக்கும் நோக்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நீதிமன்றங்கள் எப்போதும் கணக்கில் கொள்கின்றன.

  அதனால்தான் நமது மனித வள அமைச்சர் கபில் சிபல் இதை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. மன்னிப்பும் கேட்டார். அமைச்சக அதிகாரிகள் (அரசு செயலர் உள்பட) இந்த விஷயத்தில் நிச்சயம் தவறு செய்தவர்கள்தான். எந்த விஷயத்தையும் வெறுமனே ஒரு இயந்திரம் போல அணுகுவதானால் எதற்கு மனிதர்களை வேலைக்கு வைப்பது? ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து, இந்த மனிதர் இப்படி ஒரு தவறு செய்ய உள்நோக்கம் இருக்குமா, இல்லாவிட்டால் நாம் ஏன் இதை வேறு விதமாக அணுகக் (lateral thinking ) கூடாது என்கின்ற எண்ணம் மனிதனுக்கு வரும், வரவேண்டும், அப்போதுதான் அவர் அரசின் உயர் பதவிக்குத் தகுதியானவர். இதைச் செயாததால்தான் பத்திரிகைகள் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டன. கபில் சிபலும் மன்னிப்புக் கேட்டார்.

  சிறு பிழைகளைப் பெரியதாக நினைத்துத் தாங்கள் வாதிப்பதுதான் விந்தை. நடை முறையில் இந்தக் குற்றம் வெறும் technical flaw. இப்படித்தான் நீதிமன்றம் இதைப் பார்க்கும். அரசு, சட்ட வல்லுனர்களும் அப்படித்தான் பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள். இதுவரை எவருமே இப்படி வேற்று நாட்டின் குடியுரிமை பெற்றபின் சொந்த நாட்டின் பழைய கடவிச்சீட்டைத் திருப்பித்தராமல் இருந்திருக்க மாட்டார்களா? எத்தனை பேரை இதுவரை தண்டித்திருக்கிரார்கள்? தேடிப்பார்த்தால் மிக மிக சிற்பமே இருக்கும் அதிலும் தண்டனை பெற்றவர்கள் மிகவும் சொற்பமாக இருக்கும். இது போன்ற “technical violations ” குற்றங்களாக” கருதப்படுவதில்லை. These are not dealt with as crimes. Therefore your concern in this respect is nothing but over reaction, without any idea / overview of the legal issues involved. That is all about it.

 32. அன்புள்ள உமா ஷங்கர்,

  உங்கள் பதிலுக்கு நன்றி. பாஸ் போர்ட்டை திருப்பி அளிக்காதது ஒரு பெரிய குற்றமே அல்ல. அதுவும் ஆனந்தைப் போன்ற நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒருவரை குற்றம் சாட்டக் யாரும் விரும்பக் கூட மாட்டார்கள். ஒரு வேளை அவர் உண்மையிலேயே ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற்றிருந்தால்(!) கூட அதற்கு முறைப் படி அலுவலக ரீதியாக என்ன வழிமுறையைக் கையாள வேண்டுமோ அதைதான் செய்வர்( செய்ய வேண்டும்).

  //ஒரு சாதாரண குடிமகன் என்றால் என்ன நடவடிக்கை இருக்கும் என்பதே என் கேள்வி ? அந்த இடத்தில் நானோ நீங்களோ இருந்திருந்தால் ? //

  1. நிச்சயம் என் பெயரும் உங்கள் பெயரும் இதே பிரச்சனைக்காக ஊடகங்களில் வந்திருக்காது.
  2 . அமைச்சரை விடுங்கள் ஒரு அரசு அலுவலக உதவியால் கூட என்ன என்று கேட்க மாட்டார்.
  3 . நாம் எதோ ஒரு அரசு அலுவலகத்தில் இப்பிரச்சனையைத் தீர்க்க நீங்கள் கூறியபடி அபராதப் பணம் கட்டவோ வேறு எதோ ஒன்றுக்காகவோ நடையாய் நடந்திருப்போம்.
  4 . நிச்சயம் ஒரு அமைச்சர் நம்மிடம் மன்னிப்புக் கேட்க மாட்டார்.

  என்னைப் பொறுத்தவரை இந்த இடத்தில அமைச்சர் செய்தது மிகச்சரி, அதற்காகத்தான் அவரை நான் பாராட்டினேன். ஆனந்துக்காக வருந்தினேன்.

  நான் கேள்வியாக கேட்டவை எல்லாம் ஆனந்த் மேல் வீண் பழி சுமத்தவோ குற்றம் சுமத்தவோ அல்ல. அவை எல்லாம் ஒரு வேளை அவர் வேறு நாட்டு குடிமகனாக இருந்தால் ? என்னும் “IF condition ” இல் மட்டுமே எழுதினேன். இவை யாவும் எனது ஐயங்களே..

  நான் ஏற்கனவே எழுதிய பின்னூடங்களிலும் ஆனந்த் செய்தது பிழையே என்றும் குறிப்பிட்டுள்ளேன். ஆனந்த் ஒரு வேளை ஸ்பெயின் குடியுரிமையும் பெற்று இந்திய பாஸ் போர்ட்டை இன்னும் வைத்திருந்தால் கூட இதை நிச்சயம் ஒரு பெரிய குற்றமாக நானோ யாருமோ கருதப் போவது இல்லை.

  ///எந்த விஷயத்தையும் வெறுமனே ஒரு இயந்திரம் போல அணுகுவதானால் எதற்கு மனிதர்களை வேலைக்கு வைப்பது? ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து, இந்த மனிதர் இப்படி ஒரு தவறு செய்ய உள்நோக்கம் இருக்குமா, இல்லாவிட்டால் நாம் ஏன் இதை வேறு விதமாக அணுகக் (lateral thinking ) கூடாது என்கின்ற எண்ணம் மனிதனுக்கு வரும், வரவேண்டும்///

  நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நீங்கள் கூறிய படி இந்த மனிதர் இப்படி ஒரு தவறு செய்ய உள்நோக்கம் இருக்குமா? என்றும் அவர்களுக்கு புரிந்ததால் தான் அவர்களும் விண்ணப்பத்தை அனுப்பிய பல்கலையை விளக்கமும் கேட்டுள்ளார்கள். (ஊடகச்செய்தி)

  சரியான நேரத்தில் சரியான விளக்கம் அளித்து தாமதத்தை தவிர்க்காதது பல்கலையின் தவறா அரசின் தவறா?

  ஆனால் ஒரு விண்ணப்பத்தில் இத்தனை முரண்கள் இருந்தால் நிச்சயம் நமது எந்த அரசு அலுவலகத்திலும் ஒரு கோப்பு கிடப்பில் போடப்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பது நாம் அறிந்தது.

  இது இந்த இடத்தில ஆனந்தாக மட்டுமின்றி ஆண்டனி, அன்சாரி, ஆறுமுகம் என யார் இருந்தாலும் இதேதான் நடந்திருக்கும்.

  அதனால் தான் நன் முன்னரே குறிப்பிட்டேன். இங்கு நாம் ‘ஏன் தாமதம் என்று தான் அரசைக் கேட்கலாம்’ என்று.

  இந்தியரா எனக் கேட்டதில் தவறொன்றும் இல்லை, தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முரண்களின் அடிப்படையில் அரசு தன சந்தேகத்தை தான் கேட்கிறது. இதில் எந்த தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

  இதைத்தான் நான் புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

  //நடை முறையில் இந்தக் குற்றம் வெறும் technical flaw. இப்படித்தான் நீதிமன்றம் இதைப் பார்க்கும். அரசு, சட்ட வல்லுனர்களும் அப்படித்தான் பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள். //

  பிரச்சனை என்ன என்று மிகத் தெளிவாக புரிந்து கொண்டு கூறும் நீங்கள் அதே விஷயத்தை ஒருவர்

  “ஆனந்த் இத்தாலியில் பிறக்காதது பாவமா? சிறுபான்மையினராக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? ” என்றல்லாம் தன யூகங்களை மக்களிடம் அள்ளி வீசுகிறார் என்பதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் அவருக்கு ஆதரவளிப்பதுதான் மாபெரும் விந்தையாக இருக்கிறது.

  “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” – நம் மீதும் மற்றும் எல்லா தரப்பு தவறுகளையும் சரி பார்த்த பின்பு.

  ஆகவே நான் ஏற்கனவே கூறியது போல மீண்டும் ஊடங்களின் தவறை வலியுறுத்துகிறேன். கண்டனம் செய்கிறேன்.

  “உண்மைகள் செய்வோம் பல வண்மைகள் செய்வோம்” – பாரதி

  நன்றி.

 33. ஆனந்த் விஷயமாக நடக்கும் விவாதங்களைப் படித்தேன். தலை சுற்றுகிறது. என்.ஆர்.ஐ. என்பவர் சொல்லுவது சட்டப்பிரச்சினை. மற்றவர்கள் ஆனந்த் மீதும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியதும் ஆகும். மத்திய அரசு ஒரு கண்ணுக்கு வெண்ணை மறு கண்ணுக்கு சுண்ணாம்பு வைக்கும் ஆற்றல் படைத்தது தான். அதில் சந்தேகமில்லை. ஆனந்த் விஷயத்தில் என்ன நடந்திருந்தாலும் அது போல சோனியா போன்றவர்களுக்கு நடக்காது என்பதும் உண்மை. ஆனந்த் போன்றவர்கள் நம்மைப் போன்ற சாதாரண குடிமகன் அல்ல. அவர்கள் மேல்தட்டுக் காரர்கள். பிராமணர் என்பது அதன் பொருள் அல்ல. பணம் படைத்த பெரிய மனிதர். அவருக்கு இதெல்லாம் பெரிசு இல்லை. ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்திய குடியுரிமைச் சட்டம் என்.ஆர்.ஐ. சொல்வது போல இருந்தால் அது பலரை பாதிக்கும் என்பதுதான். அதற்கான விவாதம் தொடர்ந்தால் நல்லது. ஆனந்த் விஷயத்தை இத்தோடு விட்டு விடுங்கள்.

 34. Mr. NRI,

  I dont want to indulge in arguement with you. My simple question is, please ask sonia whether she still has the Italian passport or italian citizenship. she occupies the powerful post in India and controling Indian government. Whether Anand is Indian citizen or not – it will not create the problem in indian democratic/judicial system. it is emotional outburst. but in the case of sonia it is related to Indian security. If you do not have strength to ask this question to sonia then you cannot ask advise Anand. Anand is easy target or poor victim so you are asking and explaining , elaborating etc.. But in the case of sonia …what is your question. If you want to keep mum. then you are hypocrite what ever explaination you try to give after this message.. it is very simple Mr. Nameless NRI.

  even you do not have guts to come out in your original name, you are advising Anand to hand over the passport. Hence, first correct yourself. “be and Make” do not advise others!!!

 35. அன்புள்ள செந்தில் குமார்,

  இன்னும் நீங்கள் என் கருத்தை புரிந்து கொள்ள வில்லை என் நினைக்கிறேன்.
  நான் ஆனந்தை கேள்வி கேட்கவோ குற்றம் சுமத்தவோ கருத்துக்கூற வில்லை.

  ஆனந்த் வெளி நாட்டுக் குடியுரிமை வைத்து இருந்தால் இன்ன இன்ன பிரச்சனை இருக்கும் என்று தான் விளக்க முற்படுகிறேன்.

  இத்தனை முரண்களுடன் ஒரு விண்ணப்பம் இருக்கும் போது சம்பந்தப்பட்ட அலுவலகம் அவர் இந்தியக் குடியுரிமையை கேள்வி கேட்பது அவர்கள் கடமை. அவர்கள் எப்படி அப்படிக் கேட்கலாம் என்று நாம் கேட்பது தான் தவறு என்கிறேன். அவ்வாறான ஒரு விண்ணப்பத்தை கேள்வி கேட்க்காவிட்டால் தான் அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறுகிறார்கள்.

  மேலே அன்பர் உமா ஷங்கர் குறிப்பிட்டபடி இந்த பிரச்சனையின் அடிப்படை ஒரு ‘technical Flaw’. அவ்வளவே.. அதற்குக் காரணம் விண்ணப்பதாரரான பல்கலைக்கழகமே.

  பிரச்சனையின் அடிப்படை என்ன என்று அறிந்தால், இப்படி ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை தேவையா என்பது நிச்சயம் விவாதத்துக்கு உரியதே. அதைத்தான் நான் ஊடகங்களின் தவறு என்றும் குறிப்பிடுகிறேன்.

  நீங்கள் கேட்ட ‘சோனியா இத்தாலிய குடியுரிமை திருப்பிக் கொடுத்துவிட்டரா?’ என்ற கேள்விக்கு ‘கொடுத்துவிட்டார் என்று அவரது இணைய தளத்தில் பதில் கிடைத்தது. மேலும் விவரத்திற்கு https://en.wikipedia.org/wiki/Sonia_Gandhi மற்றும் https://soniagandhi.org/php/showNews.php?newsid=99&linkid=4 பார்க்க.

  100 கோடி பேர் கொண்ட ஒரு நாட்டை ஆள வேறு நாட்டிலிருந்து தான் ஆள் வர வேண்டும் என்றால் நிச்சயம் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மேலும் எனக்கு சோனியா காந்தி மீதோ காங்கிரெஸ் மீதோ எந்த ஆர்வமும் கிடையாது. அதை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

  எனக்கு பெரிதாக அரசியல் ஆர்வம் எல்லாம் கிடையாது. என் ஆன்மீக ஆர்வங்களுக்க்காகவே தமிழ்-ஹிந்து வாசிக்கிறேன்.

  நிற்க,

  நாம் இங்கு செய்வது கருத்து பரிமாற்றமே, தனி நபர் தாக்குதல்கள் அல்ல என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன். சோனியாவோ ஆனந்தோ வேறு எவருமோ, சபை என்று வரும் பொது செய்தியில் குறிப்பிடப்படும் நபர் விவாதப் பொருள் ஆகிறார், அவ்வளவே.

  தற்செயலாக ஆனந்த் பற்றிய செய்தியை இங்கு பார்த்ததால் அது குறித்த கருத்துக் கூற விழைந்தேன். சோனியா பற்றிய என் கருத்தை சோனியா குறித்த செய்தி வரும் போது தெரிவிப்பேன்.

  இது தான் என் பெயர் என்று நான் இப்போது கூறினால் மட்டும், எந்த அடிப்படியில் அதை உறுதி செய்து கொள்வீர்கள்? இங்கு கட்டுரை எழுதும் ஆசிரியர்கள் ஜடாயு, சேக்கிழான் என்பதெல்லாம் நிஜப் பெயர்களா புனைப் பெயர்களா என்பது கேள்விக்குரியது. செந்தில் குமார் என்பது உங்கள் நிஜப் பெயர் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்டு விவாதத்தின் மையத்தை விட்டு வெளியே செல்ல விரும்ப வில்லை.

  ஆகவே ‘கூற வரும் கருத்துதான் முக்கியமே தவிர என்ன பெயரில் என்பது அல்ல’ என்று புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  ஆனால் கருத்துக்கூற வரும் ஒருவருக்கு “if you have guts” “come with your real name”
  என்றெல்லாம் கேட்க உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உணர்ச்சி வசப் படாமல் ஒரு முறை யோசிக்குமாறு கேட்கிறேன்.

  நான் கூற வேண்டிய கருத்துகளை எல்லாம் கூறி விட்டேன், தேவையான அளவு நல்ல கருத்துள்ள எதிர் வினைகளையும் படித்து விட்டேன். திங்கள் கிழமை நடை பெரும் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் இத்துடன் இந்த விவாதத்திலிருந்து விடை பெறுகிறேன். தொடருபவர்கள் தொடரலாம்.

  இந்த விவாதத்தில் எனக்கு எதிராக கருத்துக் கூறிய, என் கருத்துக்களை படித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்
  NRI

 36. NRI,

  ஆனந்த் எசுபானியா சிட்டிசன் வாங்கியவர் என்பதற்கு உங்களிடன் எந்த அத்தாட்சியும் இல்லையே. அந்த ஐ.பி.என் லிங்கில் கூட யூகங்கள் தான் உள்ளது.

  ஐரோப்பாவில் அமேரிக்கா போல் கிரீன் கார்ட் இல்லை. ஆனால் ஐரோப்பாவில் 6 மாதத்திற்கு மேல் தங்கவேண்டும் என்றால் அதற்கு கிரீன் கார்டு பொன்ற ஒரு ஆவனம்/அட்டை வழங்கப்படும். அது ஆண்டுதோரும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும். அது இருப்பவர்கள் வாக்களிப்பதைத் தவிற அனைத்து சிட்டிசன்ஷிப் உரிமைகளுக்கும் தகுதியானவர்கள் தான். வீடு, அசையும்/அசையா சொத்து எல்லாமே வாங்கலாம், விற்கலாம். அதை சிட்டிசன்ஷிப் என்று நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

 37. இங்கு சிங்கப்பூரில் citizenship application approval ஆன உடன் நம் இந்திய தூதரகத்தில் சென்று இந்திய பாஸ்போர்ட் ஐ ஒப்படைத்து தூதரகரத்தின் கடிதத்தை கொண்டு கொடுத்தால் தான் சிங்கப்பூர் குடியுரிமையே தருவார்கள் மற்ற நாடுகளில் இந்த நடைமுறை இல்லையோ

 38. ஆனந்த் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. மேல்தட்டை சேர்ந்தவர் என்றுதான் சொல்லமுடியும். திரு. விஸ்வநாதன் ரயில்வேயில் பெரிய பதவியில் இருந்துதான் பணிஓய்வு பெற்றார்.

  1999 ல் ஆனந்துடன் பிரான்க்பார்டில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தேன். அந்த வருடம் தான் மணமுடித்து இருந்த செய்தியையும் பெயரையும் படித்து இருந்தேன்.

  கையில் இருந்த கேனான் 135N கேமராவை எடுத்து எத்தனை பில்ம்கள் மிச்சமிருக்கின்றன என்று பார்த்துக்கொண்டே அவரை அணுகினேன். அவரோ கன்வேயர் பெல்ட்டில் தன் பெட்டிகளுக்காக காத்திருந்தார். எனக்கு பெண்களுடன் பேசும்போது மட்டுமல்ல, புதிதாக யாருடன் பேசும்போதும் பயத்தில் நாக்கு உலர்ந்துவிடும். ‘ஆனந்த்…’ என்று நான் அழைத்தது என் காதுகளுக்கே கேட்கவில்லை. அவரை உலக செஸ் வட்டத்தில் ‘விஷி’ என்று அழைப்பார்கள் என்று தெரியும். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ‘ஹலோ விஷி வெல்கம் டு மதர்லேன்ட்’ , என்றேன். என்னை செஸ் ரசிகன் உணர்ந்துகொண்டு ‘தேங்க் யு’ எனப் புன்னகைத்தார். அவரின் கவனம் “உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை.. ஆனால் இது பாதுகாக்கப் பட்ட இடம்போல் தெரிகிறது’ என்றேன். ஆனந்தே அங்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த காவல்துறை உயரதிகாரியிடம் “இங்கே போட்டோ எடுக்கலாமா ?” என்று கேட்க அந்த அதிகாரி என்னிடம் இருந்து காமெராவைப் பறித்துக் கொண்டார். அவர் என்னை ஆனந்த் அருகில் நிற்கச்சொன்ன போதுதான் அவர் என்னிடமிருந்து காமெராவை பரிசோதிக்க வாங்கிக்கொள்ளவில்லை, போட்டோ எடுக்கத்தான் வாங்கிகொண்டார் என்பது புரிந்தது.

  வெளியே வந்து காரில் ஏறும்போதும் நான் விடவில்லை. ஆனந்திடம் “என் அன்னையார் மகிழ்ச்சி அடைவார், அவரும் உங்கள் விசிறியே.. கருணையுடன் அனுமதித்தால் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமே ? ” என்றேன். ஆனந்த் “சரி..ஆனால் ஒரு நிமிடம் மட்டுமே.” என்று சொல்லி என் அம்மாவுடன் நின்று போட்டோ எடுத்துகொண்டார்.

  உலக சாம்பியனுக்கு அன்று வரவேற்பளித்தது மொத்தம் நான்கே பேர். இதே தெண்டுல்கராக இருந்திருந்தால் சக்கர நாற்காலியில் இருந்துகொண்டாவது முதல்வர் வந்திடுவார். செஸ் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு. அதில் நம் ஆனந்த் சாம்பியன். என்றும் இந்தியாவுக்காக ஆடியவர். கிரிக்கெட் அந்நியர்களின் ஆட்டம். ஆனால் அதற்குத்தான் நாம் பைத்தியமாக உள்ளோம். என்று தணியும் இந்த அடிமையின் மோகம்?

 39. அன்புள்ள என்.ஆர்.ஐ,
  //சேக்கிழான் அவரது கட்டுரையின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட உள் நோக்கத்திற்காக சும்மா இருப்பவர்களையும் ‘ஒரு வேளை அப்படித்தான் இருக்குமோ’ என எண்ணத் தூண்டும் விதத்தில், உசுப்பேற்றும் விதமாக எழுதுகிறார். அது என்ன காரணம் என்று விவரம் அறிந்தவர் அனைவருக்கும் தெரியும்//

  உண்மை தான். எனக்கு ஒரு உள்நோக்கம் உள்ளது. ஆனந்த் விஷயத்தில் நிகழ்ந்துள்ள அரசின் பாரபட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்துவது தான் அந்த உள்நோக்கம். இது தமிழ் ஹிந்து வாசகர்களுக்கும் தெரியும். இத்தாலியில் பிறந்த சோனியாவையும், வெளிநாட்டில் வசித்தபடி இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமானையும் ஆனந்துடன் ஒப்பிட்டதற்கு அதுவே காரணம். இந்நாட்டின் முதன்மைக் குடும்பத்தில் மருமகளாக வந்த சோனியா குடியுரிமை பெற விரும்பாமல் 16 ஆண்டுகள் தவிர்த்தார். அவர் தான், இந்த நாட்டை ஆள தன்னிடம் மேஜிக் எண் (272 ) உள்ளது என்று கூசாமல் பொய் சொன்னவர். அவரைத் தான் காங்கிரசைக் காக்க வந்த அன்னை என்று நமது ஊடகங்கள் குறிப்பிட்டு மகிழ்கின்றன (திரு என்.ஆர்.ஐ. போலவே நானும் அதே ஊடகங்கள் மீதுதான் குற்றம் சாட்டுகிறேன்).

  ஒருவேளை இந்தியாவே வேண்டாம் என்று கூறி ஸ்பெயின் நாட்டுக் கொடியுடன் ஆனந்த் விளையாடி இருந்தாலும் கூட, அவர் இத்தாலியில் பிறந்திருந்தாலோ, அல்லது தற்போதைய ‘மதச் சார்பற்ற’ காங்கிரஸ் அரசுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு சிறுபான்மை மதத்தைச் சார்ந்திருந்தவராக இருந்திருந்தாலோ, அவருக்கு எந்தக் கேள்வியும் இன்றி பட்டம் வழங்க, நமது இந்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் என்பதே என் கருதுகோள். இதில் புலப்படும் உள்நோக்கம், மதத் துவேஷமல்ல; தினந்தோறும் வஞ்சிக்கப்படும் பெரும்பான்மை சமுதாயத்தின் ஒரு பிரஜை என்ற அடிப்படையிலான மனவெடிப்பு. இதை, சும்மா இருப்பவர்களையும் உசுப்பேற்றுவதாக திரு என்.ஆர்.ஐ கருதினால் எனக்கு கவலையில்லை. நாட்டின் நலத்திற்காக சில அவதூறுகளை சிலர் பெற்றுத் தான் ஆக வேண்டும்.

  ஆனந்த் விஷயத்தில் சட்ட நுணுக்கங்களையே மறுபடியும் மறுபடியும் முன்வைத்து, தனது வாதத்தைத் தொடரும் திரு என்.ஆர்.ஐ, நமது நாட்டில் எல்லாமே சட்டத்தின் பாற்பட்டுத் தான் நடக்கிறதா என்று மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும். இந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்களில் மிக அதிகபட்சமான இடத்தைப் (16 /40 ) பகிர்ந்துகொண்டு, மிகவும் நாசூக்காக வாதம் புரிந்துவரும் திருவாளர் என்.ஆர்.ஐ, கட்டுரையின் தலைப்பை ஏன் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை? ஆனந்தின் குடியுரிமை தான் அடிப்படை விஷயம் என்று கூறும் அவர், அதே நிலைப்பாடு மற்றவர்களிடம் ஏன் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்?

  நமது நாட்டின் குடிமகனே அல்லாத மணிகுமார் சுப்பா (நேபாளம்) நமது நாடாளுமன்ற உறுப்பினராக முடிகிறது. நீதிமன்றம் தலையிட்டும் கூட, அவரது லாட்டரி பலத்தின் முன்னால் செயலிழந்துபோகிறது. அதை கேள்வி கேட்க நாதியில்லை. மதபிரசாரத்திற்கு வந்த இடத்தில் சத்தமின்றி குடிபுகுந்து, வனவாசிகளை பிளவுபடுத்தியதால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் கொல்லப்பட்ட கிரகாம் ஸ்டெய்ன்சுக்கு பத்ம விருது வழங்கப்படுகிறது. நடிப்பு சுதேசிகளின் (இதுவும் காங்கிரஸ் பற்றி பாரதி கூறியது தான்) ‘மதச்சார்பற்ற’ மன்மோகன் சிங் ஆட்சியில், இன்னும் எத்தனை கேவலங்கள் அரங்கேறப் போகின்றனவோ தெரியவில்லை. இதை மக்களுக்கு வெளிப்படுத்த கிடைத்த நல்வாய்ப்பு ஆனந்த் விவகாரம். அதனால் தான் அவருக்கும் நான் நன்றி சொன்னேன்.

  கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது தமிழில் உள்ள அழகான பழமொழி. தான் இந்தியக் குடிமகன் அல்ல என்று ஆனந்தே மறுக்காதவரை, அவரது இந்தியக் குடியுரிமை பற்றிய கேள்வியே தேவையில்லை என்பதுதான் மறுபடியும் எனது கருத்து. இந்த விவாதம் நாடு முழுவதும் இன்னும் பரவலாக வேண்டும் என்பதுவே எனது உள்நோக்கம். அப்போது தான் நமது நாட்டை ஆள்பவர்களின் லட்சணம், சாமானியர்களுக்கும் தெரியும். இந்த விவாதத்தில் கொஞ்சம் கடுமை காட்டினாலும், திரு. என்.ஆர்.ஐ-யின் கருத்துக்களுக்கு எனது நன்றிகள் மீண்டும். தர்க்கமே ஞானத்தின் மூலம் என்பது தான் நமது பண்டைய கல்விமுறையின் சாரம்.

  இந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது நன்றி.

  -சேக்கிழான்.

 40. NRI
  உங்கள் வாதங்கள் ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. யதார்த்தம் என்பது சட்டங்களினாலோ அல்லது உங்கள் வெப் லிங்க்-களினாலோ பூரணமடைவது அன்று.

  செஸ் என்பது ஒருவர் சொந்தமாக விளையாடும் விளையாட்டு, தாய் நாட்டுக்காக விளையாடுவது அல்ல – என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

  உண்மையில் கிரிக்கெட் என்னும் விளையாட்டும் சொந்தமாக ஆடுவதுதான். கிரிக்கெட்டுக்கும் பாரதத்திருநாட்டின் மேல் பற்றுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணி என்று தவறாகப் புரிந்து கொண்டிருப்பது இதுதான் :

  கிரிக்கெட் வாரியம் என்பது பாரதநாட்டின் சொத்து அன்று. அது பாரத கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ற அரசாங்கம் சாரா அமைப்பால் நடத்தப்படுவது. ரிலையன்ஸ், டிவிஎஸ், இண்டியா சிமெண்ட்ஸ் போன்று பல ஆயிரம் கோடி சொத்துக்கள் கொண்டது. ரிலையன்ஸ், டிவிஎஸ், இண்டியா சிமெண்ட்ஸ் போன்று இலாப நோக்கில் நடத்தப்படுவது. ரிலையன்ஸ், டிவிஎஸ், இண்டியா சிமெண்ட்ஸ் போன்று யாரையும் வேலையில் இருந்து (கிரிக்கெட் அணியில் இருந்து) நீக்கவோ, சேர்க்கவோ முழு அதிகாரம் கொண்ட ஒரு ஆர்கனைசஷன். போர்டு மெம்பெர் மீட்டிங், வோட்டிங், தலைப் பொறுப்பாளிகளின் செலெக்ஷன் என்று எல்லாமே ரிலையன்ஸ், டிவிஎஸ், இண்டியா சிமெண்ட்ஸ் போன்றுதான். பல ஆயிரம் கோடிகள் வருமானம் சம்பாதித்து வரி செலுத்தும், தன்னிச்சையாக எதையும் செய்யும் நிறுவனத்தைத்தான் நாம் ‘இந்திய கிரிகெட் அணி’ என்று சொல்லி தலையில் மண்ணை வாரி இறைத்துக் கொள்கிறோம். டெண்டுல்கர் முதற்கொண்டு எல்லோரும் பணத்துக்காக ஒரு நிறுவனத்தில் விளையாடுபவர்கள் தான். இதில் செஸ் விளையாடும் ஆனந்த் மட்டும் இந்தியாவுக்காக ஆடவில்லை என்று சொல்வது பைத்தியக்காரத் தனமாக இல்லையா ?

 41. அன்புள்ள ஆசிரியருக்கு,

  தாமதமாக பதில் எழுதுவதற்கு வருத்தங்கள்.

  ஒருமுறை வெளிநாட்டில் சந்தித்த தமிழகத்தைச்சேர்ந்த ஒரு இளம் ஓட்டுனர் “இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு நீ வெளி நாட்டு குடியுரிமை பெறுவதும் எங்களைக் கை கழுவுவதும் ஒன்று தான் என கிராமத்தில் உள்ள தன பெற்றோர்கள் கூறியதால் இன்றளவும் பெர்மன்ட் வொர்க் பெர்மிட்டுடன் தொடர்வதாகக் வருத்ததுடன் கூறினார்.

  தன்னைப் போன்ற நிலையில் உள்ள மற்ற நாட்டினர் எல்லாம் இரட்டைக் குடியுரிமை அனுமதி உள்ளதால் தான் வாழும் நாட்டின் குடியுரிமை பெற்று பல சலுகைகளை அனுபவிக்கும் போது இந்திய அரசின் இந்த விசித்திர விதியால் தன இயலாமையை நினைத்து வருந்தினார்.

  இந்த விஷயம் ஆழமாக என் மனதில் பதிந்த ஒன்று.

  அதன் பின்னர், முழுத் தகுதியும் இருந்தும், பல வசதிகள் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் இந்தியக் குடியுரிமையை பறிகொடுத்துவிடக் கூடாது என்ற ஒரே எண்ணத்தில் குடியுரிமை வாங்காமல் விசா நீட்டிப்பு , வொர்க்/ ரெசிடன்ஸ் பெர்மிட் , கிரீன் கார்ட் போன்றவற்றுடன் தொடரும் பல இந்திய மக்கள்/நண்பர்களை வெளிநாடுகளில் அறிந்துள்ளேன்.

  இதை முன்னிறுத்தியே , சாதாரண குடிமகன்களுக்கு இல்லாத சலுகை வி ஐ பி களுக்கு மட்டும் ஏன் என விவாதங்களில் நான் கடுமை காட்டினேன்.

  மற்றபடி, என் புரிதலின் படி , முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல தனது அனுமதி விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரான பல்கலை ஆனந்தை ஸ்பெயின் குடியுரிமை கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளதுதான் பிரச்சனையின் மூல காரணம் என நான் கருதுகிறேன். அப்படியெனில் பத்திரிக்கைகள் பல்கலை மீது தானே முதலில் பாய்ந்திருக்க வேண்டும்?

  “தினந்தோறும் வஞ்சிக்கப்படும் பெரும்பான்மை சமுதாயத்தின் ஒரு பிரஜை” எனபது எனக்கும் பல விஷயங்களில் மாநில,மைய அரசுகளின் செயல்களைக் கண்டு எப்போதும் இருக்கும் தவிப்புதான். உடன் படுகிறேன்.

  ஆனால் ஆனந்த் போன்ற ஒருவரின் விஷயத்திலும் காரணம் அதுதான் என்பதை என்னால் ஏனோ ஏற்க முடியவில்லை. அதை நான் “technical flaw ” ஆகவே பார்கிறேன். இருப்பினும் எனது புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அரசியல் உள் நோக்கங்கள் , மோசடிகள் இந்தியாவில் சாத்தியம் என்பதும் மறுப்பதற்கில்லை.

  எப்படியாயினும் விளக்கங்களுடன் கூடிய உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

 42. அன்புள்ள கார்கில் ஜெய் அவர்களுக்கு,

  நான் என் எல்லாக் கருத்துகளையும் தெளிவாகவே எழுதி உள்ளேன்.

  // “செஸ் தனி நபர் விளையாட்டு ஆகவே ஆனந்த் ஆடுவது பாரதத்தின் சார்பில் என்று எடுத்துக் கொள்வதற்கில்லை. பாரதத்தைச் சேர்ந்தவர் என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று எனக்குத் தெரியாதா விஷயத்தை புரியும் படி விளக்கியதற்கு நன்றி. // என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.

  அனைத்து பின்னூட்டங்களையும் ஒருமுறை முழுமையாக “தெளிவாக” படித்துவிட்டு மேற்கண்ட கருத்தை கூறியவரிடம் உங்கள் விவாதங்களை முன் வைப்பீர்கள் என நம்புகிறேன்.

  நன்றி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *