வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

கழக அரசுகளை திரும்பத் திரும்பத் தன் தலையில் தானே போட்டுக் கொள்ளும் தமிழக மக்கள் போல, தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் வேதாளம் உறைந்த சவத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கீழிறங்கினான். வேதாளம் பேசத் துவங்கிற்று.

vikramandvetal

“வீரம் மிகுந்த அரசனே! இது வரை பல கதைகள் சொல்லி விட்டேன். கதை முடிவில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீயும் சரியாகப்  பதில் சொல்லிக் கொண்டே வருகிறாய். இம்முறை உனக்கு தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறேன் கேள். “ என்று ஆரம்பித்தது.
anna_paintஅண்ணாதுரை என்று தலைவர் ஒருவர் தமிழ் நாட்டில் இருந்தார். ஆரம்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் படித்து முடித்து 1935ல் ஜஸ்டிஸ் பார்ட்டி என்கிற கட்சியில் சேர்ந்தார். தனது பேச்சாற்றலால் தமக்கென அக்கட்சியில் ஆதரவாளர்களை உருவாக்கினார். கட்சியும் வளர்ந்து திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அக்கட்சித் தலைவர் ஈவேராவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுக் கட்சி துவங்கினார்.  எதையும் தாங்கும் இதயம் கொண்ட மனிதராக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பலகாலம் நடத்தி இந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தார். தென்னாட்டை தனி திராவிட நாடாக பிரிக்க வேண்டும் என்று மேடை தோறும் கொள்கை முழக்கம் செய்தார்.

தொடர்ந்து பெரும் பேச்சாளராக வலம் வந்த அவர், தமிழக முதல்வரும் ஆனார். அதுவரை மதராஸ் பிரசிடென்சி என்று இருந்ததை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.  அவர் மிகுந்த புத்திசாலியாக இருந்ததால் பேரறிஞர் அண்ணா என்றே நினைவு கூறப் படுகிறார். மேலும் அவர் பல வகையான நாவல்கள், நாடகங்கள், இலக்கிய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய பல கதைகள் படங்களாக வந்திருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகம் கூட அவரது அறிவை மெச்சி பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” ஆகிய நெறிகளை தன் வாழ்க்கையில் மேற்கொண்டு, தன் தொண்டர்களையும் அக்கொள்கைகளின் படி நடக்கச் செய்தார்.

தென்னாட்டு பெர்நாட்ஷா, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி தந்த கரிபால்டி என்றெல்லாம் புகழப்பட்ட அவர் வாழ்ந்த போதும், மறைந்த பின்னும் தமிழ்நாட்டு அரசியலில் இன்றியமையாத சக்தியாக நிலை பெற்றிருக்கிறார். அண்ணா இறந்த பொது உலகில் அதுவரை நிகழாத வகையில் உலக சாதனையாக பெறும் மக்கள் கூட்டம் கூடி அஞ்சலி செலுத்தியது.

இப்போது சொல்.

தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல்  எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?

இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.”
என்று நிறுத்தியது வேதாளம்.

வேதாளம் பேச்சை நிறுத்திய கணமே, சவத்தைக் கீழே போட்டுவிட்டு சிரி சிரி என்று விழுந்து விழுந்து சிரித்தான் விக்ரமன்.

anna“அட முட்டாள் வேதாளமே…  ஒரு நாட்டையே முட்டாளாக்கிய ஒரு மனிதரைப் பற்றி ரொம்ப சீரியஸாக ஆராய்ச்சி செய்துகொண்டு அந்த முட்டாள் கும்பலில் ஒருவனாக ஆகிவிட்டாயே… உன்னையும் நீ கேட்கும் கேள்விகளையும் நினைத்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீ சொல்வதெல்லாம் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பள்ளி பாட புத்தகத்திலும் பொது ஊடகங்களிலும் செய்து வரும் பிரச்சாரம். உண்மைக்கும் நீ அடுக்கிய செய்திகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை.” என்றான்.

ஆரம்பம் முதல் அண்ணாதுரைக்கு சுயநலக் கொள்கை ஒன்றுதான் இருந்தது. மற்ற கொள்கைகளை எல்லாம் வசதிக்கு தகுந்தது போல ஏற்றுக் கொண்டார்.  எம்.ஏ படித்த இளைஞராக ஈ.வே.ராவின் கட்சியில் அண்ணா சேரும் போது (1935) அக்கட்சிதான் மதராஸ் ராஜதானியில் ஆட்சியில் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து நடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றது. பின்னர் சில வருடங்களில் (1944) ஈவேரா ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவிப்பது அண்ணாவையும் அவர் கோஷ்டியையும் வெறுப்பேற்றியது.

evrandmaniyammaiஇதேதடா… உருப்படாத கட்சியாக இருக்கிறதே என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் அடுத்த சில வருடங்களில் (1948), ஈவேரா மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை ஒரு சாக்காக வைத்து வெளியேறினர். ஈவேராவின் வாரிசு எனக் கருதப் பட்டு வந்த ஈ.வி.கே சம்பத்தும் அண்ணாதுரையும் சேர்ந்து புதுக் கட்சி துவங்கினர்.  அப்படி ஆரம்பித்ததுதான் திமுக.

அன்றைய கால கட்டத்தில் மக்கள் இன்றைய நாளை விட பல மடங்கு படிப்பறிவு குறைந்தவர்கள். அப்போதுதான் வெள்ளையர் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்த நேரம். நாடெங்கும் வறுமையே நிறைந்திருந்தது. இன்றைக்கு உள்ளது போல் தொலைக் காட்சி ஊடங்கங்கள் எல்லாம் அப்போது இல்லை. தனிமனித துதி தழைத்தோங்கிய காலம்.

மக்கள் தலைவர்களை பெரிதும் நம்பினார்கள். நாட்டின் பிரச்சனைகளுக்கு தம்மாலே தீர்வு காண முடியும் என்று இளைஞர்கள் நினைத்தார்கள். எளிதில் உணர்ச்சி வசப் பட்டார்கள். வேலைவாய்ப்பு மிகக் குறைந்த காலம் அது. தனியார் துறை நிறுவனங்கள் வளராத வளரமுடியாத காலம் அது. அரசியல் கூட்டங்களுக்கு மிக எளிதாகவே கும்பல் கூடியது. மக்கள் கொள்கை முழக்கங்களில் மயங்கினார்கள். அப்போது கவிந்தது தான் திராவிட கழக இருட்டு. அன்றைய நிலையைப் சரியாக பயன்படுத்திக் கொண்டது அண்ணாதுரையின் அரசியல் தந்திரம். அடிப்படையில் அவருடையது ஒரு வெறுப்பரசியல். மக்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டி விட்டு அரசியலை மலினப் படுத்துவதே அந்த அரசியலின் வழி.

தன் அரசியலின் ஆரம்ப கட்டத்தில் அண்ணாவின் பொன்மொழிகள் சிலவற்றை கேட்டால் ஆடிப்போவாய்.

anti_jew_prop1“ஜெர்மன் அதிகாரியான ஹெர் ஹிட்லர் ஜெர்மனி தேசத்திலே யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததைத் தமது சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனராதிக்கம் இருந்து வருவதினால் விளையும் சமூகக்கேட்டை நன்கு உணர்வர்,” என்று ஹிட்லரின் வெறுப்பியலை ஆதரித்து மேலும் கூறுகிறார்:

“பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வ கலாசாலைகளில் யூதர்களே. கலா மண்டபங்கள் அவர்கள் கரங்களிலே. புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது. செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மனியரிடம் – ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும், என ஹிட்லர் சுயசரிதையில் எழுதினார். எழுதியபடி செய்தும் முடித்தார்” என்று அறுபது லட்சம் யூத மக்களை கொன்றதை ஆதரிப்பது போல தம் தொண்டர்களுக்கு குறிப்புணர்த்தினார்.

ஏனோ அவர் நினைத்த அளவு தமிழகத்தில் இனவெறுப்பு ஈடேறவில்லை.

மகாத்மா காந்தியின் புகழைப் பொறுக்காமல் “காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி” என்று பொருமினார்.

பேரறிஞர் என்று புகழப் படுகிற அண்ணாவின் தீர்க்க தரிசனத்துக்கு ஒரு உதாரணம் அவர் “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மா காந்தியைக் குறித்து சொன்னது:

“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.

is_woஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாவின் பங்கு குறித்து சொன்னாய். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா.. திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பொது சொத்துக்கள் தீக்கிரையாகின. அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.

ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணா அறிவித்து விட்டார்.

சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர். “இந்தி திணிக்கப் படமாட்டாது” என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும்  வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பாவம், இவர்களை நம்பி தீக்குளித்தவர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்.

அடுத்து திராவிட நாடு கோரிக்கையும் இப்படியே முடிந்தது. உண்மையில் பார்த்தால் திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அண்ணாவுக்கே திராவிடம் என்பதின் பொருள் தெரியவில்லை. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவை உள்ளடங்கிய மதராஸ் ராஜதானியையே இவர் தனி நாடாக்க கேட்டுக் கொண்டிருந்தார். இவர் கேட்டது தமிழ் நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது.

hypeஇவர் திராவிட நாடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படத் துவங்கின. 1965ல் சீனப் போர் துவங்கிய போது, எங்கே தனி நாடு கேட்கும் தம் கட்சியை தடை செய்து தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வருவதில் மண்ணைப் போட்டு விடுவார்களோ என்று தனி திராவிட நாட்டுக் கொள்கையை குப்பையில் கிடத்தினார்.

ஈவேராவின் திராவிடர் கழகத்திலிருந்து கொள்கைக்காக வெளிவந்த பின்னால் தாய்க் கழகத்தின் கொள்கைகள் ஒவ்வொன்றையும் கழற்றி விட்டுக் கொண்டே இருந்தார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” போன்ற அண்ணாவின் இறைக் கொள்கை விளக்கத்தில் தி.கவின் கடவுள் மறுப்பு கழன்றது.

கற்பு என்ற ஒன்றே கிடையாது என்ற ஈவேராவின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, கண்ணகி என்கிற கற்புக்கரசி கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கத் துவங்கினார் அண்ணாதுரை. 1962 தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்தபோது பார்ப்பனர் எதிர்ப்பும் கழன்றது. அதே தேர்தலில் ஓட்டுக்காக தன் பெயரை வாக்காளர் பட்டியலில் “அண்ணாதுரை முதலியார்” என்று பதிவு செய்ய முயன்றதில் சாதி ஒழிப்பும் சந்தர்ப்பத்துக்கு கழற்றி விடப் பட்டது. இப்படி எந்த கொள்கையிலுமே அண்ணா உறுதியாக இருந்ததில்லை.

அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டாய். அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள். சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல. அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது. இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான்.

annayaleயேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி. டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.

இது போல பல புரளிகளும் அண்ணாவின் காலகட்டத்தில் சுற்ற விடப் பட்டன. அவர் படிக்கிற காலத்தில் எழுதிய விடைத்தாள்களை படித்து அதன் ஆழத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு கல்லூரியில் எடுத்து தனியாக வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூட புரளிகள் உண்டு.

எழுத்தாளர் கல்கி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழ்ந்தது, ஒரு வஞ்சப் புகழ்ச்சியே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணாவின் குட்டை உடைத்திருக்கிறார். அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம். அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார். இதனால் சிறுமைப் படுவது கம்பன் அல்ல, அண்ணாதுரைதான்.

hopelessஅண்ணாதுரைக்கும் ஒரு நடிகைக்கும் கள்ளத் தொடர்பு என்று ஊருக்கெல்லாம் தெரிந்து சட்ட சபையிலேயே கேள்வி எழுப்பப் பட்டது. கடமை கண்ணியம் என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்த இந்த மகான் அதற்கு பதில் அளிக்கும் போது சொன்னது:

“[……] ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [………] என்பவள் ஒரு பேனா மைக்கூடு – அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”.

கண்ணியம் என்பது அறவே அண்ணாவிடம் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. அன்றைக்கு அண்ணாவின் கட்சியில் பேச்சாளராக இருந்த மூடர்கள் சற்றும் தயங்காமல் அண்ணாவின் இந்த வசனத்தை மேடை தோறும் மறு ஒலிபரப்பு செய்து மகிழ்ந்தார்கள்.

பல தந்திரங்கள் செய்து ஆட்சியைப் பிடித்தபின் என்ன ஆனது என்றால், அண்ணாவின் ஆட்சியில் தான் கீழ்வெண்மணி என்கிற ஊரில் சாதி வெறியால் நாற்பது விவசாயக் குடும்பங்களை உயிருடன் தீயிட்டு கொளுத்தப் பட்டார்கள். இவர்களின் சாதி ஒழிப்பு கொள்கைகளும், ஆட்சியில் சட்டம் ஒழுங்கும் சிறந்து விளங்கிய லட்சணம் அது.
இவ்வாறு பிழைப்பு நடத்தினாலும் அக்காலத்தில் தமிழகத்தில் அண்ணாவுக்கு மயங்காதவர் குறைவே. இன்றைக்கு கருணாநிதியை  எதிர்த்து பேச யாரும் துணியாதது போலவே அண்ணாவையும் யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. நாடு முழுவதையும் முட்டாளாக்கி விட்டு அண்ணா போய் சேர்ந்தார்.

திராவிட நாடு, தமிழ் மொழி என்றெல்லாம் அரசியல் செய்து மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு எத்தனையோ பேர் தீக்குளிக்கவும், சிறை செல்லவும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரவும் காரணமாக இருந்தது அன்றைய அண்ணா அரசு.

family_businessஅண்ணாவின் கூச்சல்களை நம்பி இந்தி மொழி கற்காமல் போனதால் நட்டம் தமிழர்களுக்கே. ஆனால், கழகத்தினார் தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை இந்தி படிக்க வைத்திருக்கிறார்கள்.

தன் பிள்ளைகளுக்கு பதவி என்றால் துள்ளி எழுந்து தில்லி சென்று மத்திய அரசை மிரட்ட முடிகிறது. ஆனால் இலங்கையில் தமிழன் இனமே அழிந்து கொண்டு இருக்க, அந்த மக்களை பற்றி சற்றும் கவலையின்றி, ஒப்புக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கொடநாட்டிலும், கோவாவிலும் ஓய்வேடுப்பதுமாக அரசியல் வளர்ந்திருக்கிறது.

அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் “விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” என்று பிரச்சாரம் செய்து விற்றது. உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது. ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது. அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது. பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது.

tamilcastefightsகழக அரசியலை புரிந்து கொண்டு முற்றாக இவற்றை ஒதுக்கும் வரை தமிழக மக்களுக்கு விடிவு காலம் இல்லை. நாட்டைக் கடனில் ஆழ்த்தி, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே கழகங்கள் வீசும் இலவச எலும்புத் துண்டுகளுக்கும், வாய்ஜாலங்களுக்கும் மயங்கி சுரண்டலுக்கு ஆட்பட்டு, சுயமரியாதை இழந்து, கழகங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான்.

இவ்வாறு விக்ரமன் பதிலுரைக்க, மூடர்கள் கையில் சிக்கி சீரழிந்து போய்க்கொண்டிருக்கிற தமிழ்நாட்டுக்கு சுடுகாடு மேல் என்று வேதாளம் பறந்தது.

70 Replies to “வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை”

 1. Pingback: Indli.com
 2. அண்ணாவை போட்டு கிழிச்சிட்டீங்க ! அப்போ எல்லாம் ஜிங்-சக் பத்திரிக்கைகள் எடுத்து விட்ட கட்டு கதைகளினால் அண்ணா என்ற மாபெரும் பிம்பம் ஊதி வளர்க்க பட்டிருக்கிறது. பாராட்டுகள். உங்கள் தேச பனி தொடர வேண்டும்.

 3. வெறுப்பியல் அரசியலை வளர்த்த நபரை பற்றி இந்த தலைமுறைக்கு தெரிய வைக்கும் ஒரு நல்ல கட்டுரை. பலரை பற்றி இது போல மாய பிம்பம்தான் இருக்கிறது.எல்லாவிதமான ஊடகங்களையும் தங்கள் கையில் வைத்து கொண்டு மக்களிடம் இது போன்ற பிம்பங்களை உலவ விடுகின்றனர்.தற்போதுள்ள தலைவரின் மூளையை எந்த வெளி நாட்டு பல்கலை கழகத்தின் ஆராய்ச்சிக்கூடம் கேட்க்க போகிறதோ தெரியவில்லை.

 4. அண்ணாவைப் பற்றி அதிகம் தெரியாத விஷயங்களைப் பற்றியும், ஊதிப்பெரிதாக்கப்பட்ட பிம்பத்தில் ஒரு சிறு ஓட்டையை இட்டிருக்கிறீர்கள். நடிகையைப் பற்றி சட்டமண்ரத்திலே பகிரங்கமாக சொல்லிய பின்னும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என பிதற்றுவதற்கு கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா?

 5. அண்ணா அவருடைய சாயம் வெளுக்குமுன் போய்ச் சேர்ந்துவிட்டார். அதனால் எல்லா தீராவிடர்களும் அண்ணாவின் நாமத்துக்குத் துதிபாடிக் கொண்டிருக்கிறார்கள். வேதாளத்துக்கு விக்கிரமன் சொன்ன பதில் மிக அற்புதம்…

 6. Siru vayathil kelvi pattathai ellam puttu puttu veyuthu vitterkal…. Asiriyar kulu pathukappaka irukavum..

 7. Wish you happy engineers day

  இன்று பாரத ரத்னா உயர் திரு மோக்ஷ குந்தம் விஸ்வேஸ்வரையா
  (1860 -1962 ) இந்தியாவின் முதல் பொறியாளர் அவர்களின் பிறந்த நாள்.

  https://www.karnataka.com/personalities/visvesvaraya

 8. அண்ணா எழுதிய அனைத்தும் ஆபாசக் களஞ்சியம். அவரை அறிஞர் என்றும் பேரறிஞர் என்றும் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர். வெறும் டப்பா அவர். எம்ஜிஆர் மட்டும் தனியாக கட்சி ஆரம்பிக்காமல் இருந்தால் இந்நேரம் அண்ணாதுரையின் பெயரே இங்கு இருந்திருக்காது. புதிய கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு தலைவர் தேவைப்பட்டது. பெரியார் பெயரை முன்வைத்தால் ஒட்டு கிடைக்காது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த அவர் அண்ணாவின் பெயரை முன்வைத்தார். குறுகிய காலமே ஆட்சியில் இருந்ததால் அவரது ஆட்சியைப் பற்றி பெரிய விமர்சனம் எதுவும் இல்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அண்ணா செய்த தில்லு முல்லுகளை நெல்லை ஜெபமணி அவர்கள் எழுதிய கண்டு கொள்வோம் கழகங்களை, மார்க்சிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி எழுதிய (பெயர் சரியாகத் தெரியவில்லை) சுதந்திரப் போராட்டத்தில் திராவிட இயக்கங்கள் என்கிற நூல் மற்றும் கண்ணதாசன் எழுதிய வனவாசம் போன்றவைகளைப் படித்து தெரிந்துகொள்ளலாம். அண்ணாத்துரை ஒரு வெற்று வேட்டு அவரைப்போய் பேரறிஞர் என்று அழைப்பது நகைப்பிற்குரியதாகும்.

 9. sema comedy sir neenga… ur thinking that watever we write here will be accepted. dont ever think that todays youths are fouls to belief ur claims. some might be true in the above, but not all….

 10. அருமையான,மிகவும் அவசியமான கட்டுரை.
  ஒவ்வொரு தமிழனுக்கும் அனுப்பப் பட வேண்டிய கட்டுரை.
  ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ் உரைநடையில் இதை அவசியம் சேர்க்க வேண்டும்..அப்போதாவது தமிழர்களுக்கு விழிப்புணர்வு வருமா?

 11. today’s youth crazy idiot,

  can you show us which ones are true and which ones aren’t.

  We are keenly awaiting to get enlightened

 12. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நேருவின் வாக்குறுதியோடு சாஸ்திரியின் முயற்சியோடு Official Languages (Amendment) Act of ௧௯௬௭ மூலம் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது. அண்ணாதுரை இதில் பின் வாங்கியதாகத் தெரியவில்லை. மற்ற விஷயங்கள் எப்படியோ இது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே நன்மை பயக்கிறது. இந்தியர்கள் ஹிந்தியை துறந்து ஆங்கிலம் கற்றதின் விளைவே இன்றைய இந்திய மென்பொருள் வளர்ச்சி. இதன் துவக்கப் புள்ளி அண்ணாவின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

 13. No ramki, nehru’s promise and end of so called end of hindi porattam are but proverbial ‘kakkai utkara pazham vizhunda kadai’. The crux of the matter is ‘annavin namamum anna periarku potta namam’ and these anti tamil hindus “tamizhanukku potta namamum’. its endless and continuing.Many a times tamil nadu cm abuses tamils as idiots. really. the family and kith and kin of cm learnt hindi and to whomever cm reserved whatever, he saw to it that delhi is reserved for himself and his family by secretly learning hindi (the same way they secretly worship hindu gods in their homes). its latest news that because of ignoring hindi India is ahead in software! its crazier than crazy. next may be you would say that because of ‘semmozhi mahanadu”India was able to successfully test “Agni missile”. I can digest that stuff only by eating ‘idli’ cooked of ‘parisudha aavi’

 14. சூப்பர்.

  ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.

  இதற்கு இந்த மாதிரியான ஆட்களின் வாழ்க்கை வரலாற்றை தோண்டிப் பார்த்தால் விடை கிடைக்கும் போல!

  இதையெல்லாம் விட காமெடி இதற்கு பதில் அளிக்கிறேன் பேர்வழி என்று ஒருவர் இன்றைக்கு தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியைப்பிடிக்க வேண்டுமென்றால் ராமசாமி நாயக்கனின் பெயரைச் சொல்லியே ஆக வேண்டும் என்று உளறிக் கொட்டியிருப்பது தான்! ஹையோ ஹையோ.. அந்தாளை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே?!

 15. ஆணித்தரமான ஆதாரங்களுடன் வந்துள்ள அற்புதமான கட்டுரை. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்குத்தான் அவர் வளர்த்த பிள்ளைகள் – வளர்ப்பு தோஷத்தால் பாவம் – பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. தம்பிகள் சொல்ல வேண்டிய காலமும் வரும். எல்லாம் சொன்னீர்கள் – “ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, கொடுக்கவில்லையேல் முச்சந்தியில் எனக்கு சாட்டையடி” என்று சொன்னதை விட்டு விட்டீர்களா? அல்லது தங்கள் கட்டுரை மூலம் இப்போது கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?

 16. கிருஷ்ணகுமார்
  நான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். ௧௯௬௫ உடன் முடிவடைய இருந்த ஆங்கில மொழி பயன்பாடு தமிழக எதிர்ப்பினால் மட்டுமே நீட்டிக்கப்பட்டது. இந்த திருத்தம் மக்களவையில் மிகுந்த எதிர்ப்பைப் பெற்றது. அதனாலேயே நேருவில் துவங்கி ௧௯௬௭ வரை நீண்டது. சிறு அளவிலான ஆந்திர எதிர்ப்பைத் தவிர மற்ற அண்டை மாநிலங்களில் இப்போராட்டம் வலுப்பெறவில்லை. .இன்றளவும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கும் அவலம் மற்ற மாநிலங்களில் தொடர்கிறது.

 17. ராம்கி அவர்களே….
  சாப்ட்வேர் பணியில் தமிழர்களைவிட தெலுங்கர்களே மேல் ஓங்கி நிற்கிறார்கள்…அவர்கள் என்ன ஹிந்தியை படிக்கவில்லையா?
  அண்ணாதுரை ஒரு பெரிய புரட்டன்…வாசகர்கள் சுப்பு எழுதிய போக போக தெரியும் தொடரை படித்து பார்க்கலாம்..

 18. மது, விவரங்களை கோர்வையாகத் தொகுத்து சுவாரஸ்யமாக பஞ்ச்களுடன் எழுதியிருக்கிறீர்கள். அருமை..போலிகள் பகுமானம் பெற்று உண்மை அறிஞர்களும், சான்றோர்களும் ஒதுக்கப் படும் சமூகம் பாதாளத்தை நோக்கித் தான் செல்லும்..

  தமிழகத்தில் தெருக்கள், ஊர்கள், பஸ் ஸ்டாண்டுகள், கழிப்பறைகள், பள்ளிகள், பல்கலைக் கழகம், விமான நிலையம் என்று எல்லா இடங்களிலும் பெயர் கொண்டிருக்கும் ஒரு பெருமகன், ஒரு மகா ஆளுமை வெறும் காற்றடைத்த பஞ்சுப் பொதி என்று இந்தத் தலைமுறையாவது உணர வேண்டும். அப்போது தமிழகத்தின் ஒவ்வொரு நகர நாற்சந்தியிலும் கரும்பூதமாக நிற்கும் வெத்துவேட்டுகளும் வீழ்ந்தே தீரும்..

  போன வருடம் அண்ணா நூற்றாண்டு விழா என்று அவருடைய எல்லா புத்தகங்களையும் தமிழக அரசு மீள்பதிப்பு செய்து வெளியிட்டது.. அதை சீந்துவாரில்லை (1960ல் சுவாமிஜி நூற்றாண்டு விழா, 69ல் காந்திஜி நூற்றாண்டு, 82ல் பாரதி நூற்றாண்டு, 1997ல் நேதாஜி நூற்றாண்டு விழாவின் போது அவர்கள் படைப்புகள் பெருவாரியாக மக்களிடம் சென்று சேர்ந்து படிக்கப் பட்டன என்பதை இதனுடன் ஒப்பிடுங்கள்).

  நேரடியாக நான் அறிய வந்த சம்பவம். போன தலைமுறை தீவிர திமுக காரர் ஒருவர் இந்த தொகுப்பை வாங்கி இப்போது 30களில் இருக்கும் தன் மகனுக்குப் படிக்கத் தந்திருக்கிறார். மகன் கொஞ்சம் நல்ல தமிழ் இலக்கியம் படிக்க ஆரம்பித்திருப்பவர். அண்ணாவின் புத்தகக் கூவத்தில் ஒரு சில குவளைகளை அள்ளிய பின், குமட்டல் எடுத்த மகன் நொந்து போய், “அப்பா இந்தக் குப்பையையா அந்தக் காலத்தில விழுந்து விழுந்து படிச்சீங்க.. இந்த ஆளைப் பாக்கறதுக்கா மணிக்கணக்கா கால்கடுக்க நின்னீங்க” என்று கேட்டாராம்.. பெரியவர் வெட்கிப் போய்விட்டாரம்.

  தக்கார் தவவிலர் என்பது அவரவர்
  எச்சத்தாற் காணப் படும்

  என்ற குறள் நீதி அங்கே உண்மையாய் விட்டது.. (இங்கே “எச்சம்” என்பதற்கு “விட்டுச் சென்றவை, எஞ்சியிருய்ப்பவை” என்று பொருள் கொள்கிறேன்).

 19. இன்னொரு விஷயமும் கேள்விப் பட்டேன்..

  மீள்பதிப்பு செய்யும்போது அதி-குமட்டல் எடுக்கும் விஷயங்களை சென்சார் செய்து, sanitized version தான் வெளியிட்டார்களாம்.

 20. ஹிந்தி படிக்காமல் வெளியில் வந்து கஷ்டப்பட்டு பின் ஹிந்தி கற்றவருக்குதான் அதன் அருமை தெரியும். இந்தியாவுக்குள் மட்டும் அல்ல, அரபு நாடுகளிலும் தான். ஒரு வட இந்தியரும் தமிழரும் ஆங்கிலத்தில் பேசினால் அதை மற்றவர்கள் நீங்கள் ஒரே நாட்டை சேர்ந்தவர்தானா? என்று கிண்டலடிப்பார். பிலிப்பைன்ஸ் ல் நம் நாட்டை விட அதிகமாக மொழிகள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சந்திக்கும் போது எல்லோருக்கும் பொதுவான ஒரு மொழியில் (தக்கலு) பேசிக்கொள்வார்கள். இங்கே இந்தியர் அனைவரையும் அரபிகள் ஹிந்தி என்றே அழைப்பார்கள்.
  ஹிந்தி இவர்களுக்கு அந்நிய மொழியாம் படிக்க மாட்டார்களாம். ஆனால் ஆங்கிலம் மட்டும் படிப்பார்களாம். அண்ணாவே ஆங்கிலம் படித்தவர்.
  இப்போது பொறியியலில் ஆங்கிலத்தையும் தூக்கிவிட்டு தமிழ் வழிக்கு முயற்சிக்கிறார்கள். மொழிப் பற்றை இப்படி எல்லாம் காண்பிக்க
  வேண்டியதில்லை.தமிழில் மட்டும் படித்தவன் ஆங்கிலத்தில் தொழில் நுட்பத்தை பயன்படுத்த தெரியாதவன் வெளிநாட்டில் மின் பொறியாளராக வேலை பார்க்க முடியாது,மீன் பொறியாளராக வேண்டுமானால் வேலை பார்க்கலாம். உலகளாவிய ஸ்டாண்டர்ட்ஸ் எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து வேலை பார்க்க முடியாது.
  பல மொழி கற்பது பாவம் என்பதும் ஒரு திராவிட மாயை.
  வாழ்க அண்ணா நாமம்,வளர்க அவர் புகழ், ஒழிவோம் தமிழர்களாகிய நாம் மட்டும்.

 21. கண்டுகொள்வோம் கழகங்களை – நெல்லை ஜெபமணி – புத்தகத்திலிருந்து சில செய்திகள்

  அண்ணா பட்டம் பதவி பெறுவது ”குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணையை தின்பதற்க்கு சமம் ” என்றார். ஆனால் 1967ல் எம்.பி. யாக தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றம் செல்லாமல் குறுக்கு வழியில் மேல் சபை ழூலம் தமிழக முதல் மந்திரியானார். இவ்வாறுதான் மேல் சபை ழூலம் ராஜாஜி 1952ல் தமிழக முதல் மந்திரியானார். ஆனால் அன்று அதை கிண்டல் செய்த அண்ணா அவரை ஆச்சாரியாருக்கு ஜனநாயகமுறையில் மக்களை சந்திக்க தைரியம் இல்லை கொல்லைபுற வழியாக உள்ளே நுழைந்துவிட்டார் என்று வசை பாடினார்.

  அண்ணாவின் பொன்மொழிகளிலேயே மிகவும் உன்னதமானது ”கடமை கண்ணியம் கட்டுபாடு” ஒவ்வொரு தனிமணிதனும் இதைபின்பற்றினால் உலகம் அமைதி பூங்காவாக திகழும். ஆனால் கழகங்கள் கொள்கைபடி நடக்காமல் இருப்பதையே ஒருகொள்கையாக கொண்டு வளர்ந்த கூட்டம். அடுக்குமொழியில் பேசியே ஜாதி மொழி மத இன பேதங்களை வளர்து ஒரு முழு இளைய தலைமுறையினரை ழூளைசலவை செய்து குட்டிசுவர்களாக மாற்றிய பெருமை கழகங்களையே சாறும். இதி்ல் அண்ணாவிற்க்கும் பெரும் பங்கு உண்டு.

  ஆரியமாயை கம்பரசம் நீதி தேவன் மயக்கம் கடவுள் எங்கே இன்னம் இது போன்று பல கீழ்தரமான நூல்களை எழுதி இலக்கியத்திற்க்கு பெருமை சேர்த்தவர் இந்த மாகானுபாவர்

  1959ல் மாநகராட்சி தேர்தலில் அண்ணா கிருஷ்னா-பெண்ணாற்று திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்த 1967ல் அதை நிறைவேற்றாமல் காவிரி தண்ணீரை சென்னைக்கு கொண்டுவருவோம் என்று கூறி காவிரி சிலையை சைதையில் நிறுவி ஒரு பெரும் பகட்டுவிழா நடத்தினார்கள். அன்று சிலையில் கொட்டிய ஒருவாளி தண்ணீர் தவிற இன்று வரை ஒருசொட்டு தண்ணீரும் வரவில்லை இன்று அந்த சிலையும் அங்கு இல்லை.

 22. அடுக்குமொழியில் பேசி படிப்பறிவில்லாத பாமறமக்ளை திசை திருப்புவதில் கழகத்தவர்கள் கைதேர்ந்தவர்கள். அதற்க்கு முன்னோடி அண்ணாவே. அவருடைய சில அடுக்கு மொழி பேச்சுக்கள்.

  ”அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு”
  “ பெற்றால் வெற்றிமாலை இல்லையேல் சாவு மாலை”
  ”மொழிவழி பிரிந்து இனவழி கூடிவாழ்வோம்”
  ”ஸ்ரீரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கிவைத்து பிளப்போம்”
  ”அடியே மீனாஷி உனக்கேன் ழூக்குத்தி கழற்றடி கள்ளி”

  “ ரூபாய்க்கு ழூன்று படி அரிசி இல்லையேல் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடி” (ஆட்சிக்கு வந்ததும் சென்னை கொயம்பத்தூர் மட்டும் ரூபாய்க்கு 1 படிபோட்டு அதுவும் 2 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது) ”

  ”தம்பி வடக்கு வளர்கிறது தெற்க்கு தேய்கிறது – வடக்கே பக்ராநங்கல் தெற்கே சக்கரை பொங்கல் வடக்கே சிந்தரி தெற்கே முந்திரி வடக்கே ரெயில் இஞ்சின் தெற்கே வெரும் ரெயில் பெட்டி இந்தநிலைமாற திராவிடம் பெற்றாகவேண்டும்”

  ”தம்பி சென்ஸார்போர்டு அனுமதித்தால் நான் நான்கு தமிழ் படம் எடுத்து திராவிடநாட்டை பெற்று தருவேன் – மாஸ்கோவிற்க்கு செல்வேன் மாலாங்கோவை சந்திப்பேன் அவரிடம் திராவிடநாடு பற்றி பேசுவேன் அமெரிக்கா செல்வேன் ஐசிநோவருடன் திராவிடம் பற்றி பேசுவேன் ஐக்கியநாடுகளுக்கு சென்று அங்கேயும் திராவிடம் பற்றி பேசுவேன்”

  ”வெள்ளையன் போய்விட்டால் வின்ஞானம் போய்விடும் நமக்கு குண்டூசிகூட செய்யதெரியாது”

  ”பனியாக்கள் கையில் அதிகாரம் மாட்டியுள்ளது – வடவரின் வேட்கை காடாக உள்ளது திராவிடம் – வடவர்கள் நம்மவர் அல்ல – நல்லவர் அல்ல – உடையாலும் உணவாலும் வேறுபட்டவர்கள்.”
  ”நாம் தின்பது அரிசி அவன் தின்பது கோதுமை”
  ”நாம் தின்பது தோசை அவன் தின்பது சப்பாத்தி”
  ”நாம் தின்பது இட்டலி அவன் தின்பது பூரி”
  என்றெல்லாம் சிறுபிள்ளை தனமாக பேசி வடநாடு தென்நாடு பேதத்தை ஊக்குவித்தார். அண்ணாவை நமக்கு இன்று சினிமாவி்ன் ழூலம் நினைவு படுத்துபவர் உண்மையிலேயே டீ..ராஜேந்திரன் தான்.

 23. காமெடி பீஸ்ய் ஐ தான் பேரறிஞர் என்று கொண்டாடினார்களா?
  வேதம் கோபால் ஐயா எழுதியவற்றை படித்தால் ஒரே சிரிப்பாக இருக்கிறது. அந்த கால வடிவேலு தான் அண்ணாவா?
  //திராவிடம் – வடவர்கள் நம்மவர் அல்ல – நல்லவர் அல்ல – உடையாலும் உணவாலும் வேறுபட்டவர்கள்.”
  ”நாம் தின்பது அரிசி அவன் தின்பது கோதுமை”
  ”நாம் தின்பது தோசை அவன் தின்பது சப்பாத்தி”
  ”நாம் தின்பது இட்டலி அவன் தின்பது பூரி”//
  வயிறு குலுங்க சிரிக்கும் அளவு செம காமெடி. அந்த காலத்தில் எல்லாரும் நன்றாக என்ஜாய் பண்ணி உள்ளார்கள்.

 24. A very classic article. Anna ensured that none of the tamils learn hindi,improve their employment oppurtunity. Am a tamilian who settled in north in my young ages and suffred a lot in the very beginning.

  THIS ARTICLE SHOULD BE READ BY EVERY TAMILIANS

 25. Mr.Jayakanthan wrote about his opinion on Mr.C.N.Annadurai which is as follows.

  “Only fools would call him as learned man”.

 26. வேலை தேடி எங்கும் போகாதீர்
  https://economictimes.indiatimes.com/news/news-by-industry/jobs/Delhi-Mumbai-Chennai-top-employment-generators/articleshow/6560376.cms

  படித்த பின் பிழைக்க வழியை இந்தி கூட்டும் என்ற கூற்றை பல அயல் நாடுகளில் நாளும் குடியமரும் இன்றைய காலத்தில் கூட அச்சு மாறாமல் சொல்வீர்களா? எங்கு செல்வேன் என்று அறியாத நிலையில் எத்தனை மொழிகளைப் பயில்வது? பெரும்பான்மை மொழி என்பதைத் தவிர என்ன தகுதி இந்திக்கு?

 27. Very nice article… I am aware that C.N.Annadurai is only good in speech but doesnt know anything on administration and his personal life is very bad like Karunanidhi.. You have given much details…

  I would request you to provide more details on his one year rule – failures and irresponsible public money spent in extravaganzas.. so that everyone will know about it…

  Thanks for your great work.

 28. //யேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி. டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.// புதிய தகவலாக இருக்கிறது. தந்தமைக்கு நன்றி!

 29. அண்ணாதுரைக்கு யேல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதாக தமிழ் ஊடகங்களில் ஒரு மாய்மாலத் தோற்றம் செய்யப்பட்டது உண்மையே! ஒரு பொய்யை ஆயிரக்கணக்கான முறை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மை போலாகும் என்பது தெரிந்ததே!

  யேல் பல்கலைக்கழகத்தை நான் சற்றுநேரமுன்பு லாஸ் ஏஞ்சல்சிலிருந்து தொடர்புகொண்டு ஜார்ஜ் ஜோசஃப் என்பவரிடம் ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் பேசினேன். இதைப் பற்றி நான் மேல்விபரம் கேட்குமுன்னரே சிரிக்க ஆரம்பித்த அவர், “அண்ணாதுரை ஒரு முறை இங்கே வந்து பேசினார். அவ்வளவே. அவருக்கு நாங்கள் டாக்டர் பட்டம் எதுவும் கொடுக்கவில்லை. எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது” என்றார்!

  (George Joseph has responsibility within the Office of International Affairs for Asia with the exception of China. He served in the Office of International Education and Fellowships Programs in Yale College and on the South Asian Studies Council in the Yale Center for International and Area Studies before joining the Office of International Affairs in October 2004. Prior to these positions involving the University’s international initiatives, George was a doctoral student at Yale. He holds undergraduate and graduate degrees from Washington University in Saint Louis and graduate degrees from Yale.)

  ”எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, நம் நாட்டிலே, தமிழ்நாட்டிலே?!” என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகிறது!

 30. ‘வேலைதேடி எங்கும் போகாதீர்’ என்று ராம்கி அவர்கள் கொடுத்திருப்பது இப்போதைய செய்தித்தாளின் ஒரு தலைப்பு.

  ஆனால் 70கள், 80களிலெல்லாம், ஏன் இப்போது கூட ஹிந்தி தெரியாமல் வட மாநிலங்களில் காலம் தள்ளமுடியாது. பெரும்பான்மை மொழி என்பதே ஹிந்திக்கு ஒரு பெரிய தகுதிதானே!

  நிறைய மொழிகளை, அந்நிய கலாசாரங்களையும் கற்கவேண்டும், அவற்றையெல்லாம் வெறுத்து வீட்டில் முடங்கிக் கிடக்கக்கூடாது என்பதே இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது. அப்படி முடங்கிக் கிடப்பவர்களுக்குத் தாழ்மை உணர்வும், கழகங்களின் பொய் பிரசாரங்களுமே மிஞ்சும் என்பது தலைவிதி.

  வாழ்க்கையே போனபிறகு இலவச டீவியும், கிழிந்த வேட்டி, சட்டையும் எதற்கு?! ஒரு தலைமுறையே மண்டூகமாகிப் போனது பெரிய சோகம்.

 31. அருமையான கட்டுரை. ஒன்றும் தெரியாமல் திராவிட மாயையில் சிக்கி இருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை. முதலில் அண்ணாவின் பிறந்த நாளன்று வந்துள்ளது. அவரின் குணாதிசயங்களைப் போற்றும் கட்டுரையாகத் தான் இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன். நானும் அண்ணா அவர்களை மிகவும் நேசிப்பவன். அவர் பேச்சுகளைக் கேட்டு தமிழ் மொழிபால் ஈர்க்கப்பட்டு மொழி ரசிகன் ஆனேன். ஆனால் கட்டுரையைப் படித்த பிறகு தான் வேதாளம் போல் நானும் திகைத்தேன். எந்த ஒரு நாணயத்திற்கும் இரு புறம் இருப்பது போல அண்ணாவின் மறுபுறத்தையும் அறிய வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

 32. தமிழ்நாட்டில் பலருக்கு அறிஞர் என்றும் பெரியார் என்றும் கலைஞர் என்றும் பல பல பட்டங்கள் கொடுப்பதும் டாக்டர் என்பதும் சிலைகள் எடுப்பதும் மக்களை ஏமாற்றும் வேலையே!

 33. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது கேள்விபட்டிருக்கிறேன், அனால் அதனை பின்பற்றுபவர்கள் அண்ணாவின் வழி வந்தவர்கள் தானோ என்றும்,இந்த பழமொழியே அவர்களால் உருவாகி இருக்குமோ என்றும் இப்போது நினைக்க தோன்றுகிறது.
  நம் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் ஒன்னும் புரியாததால்தான் எதுவும் பேசாமல் உறங்கிவிட்டு வருகிறார்கள்.ஆனால் கலைஞ்சரோ பேரனுக்கு ஹிந்தி தெரியும் அதனால் பதவி கொடுத்தோம் என்று கூறினார்,ஹிந்தி தெரிந்த ஒரு தகுதிக்காக தான் மந்திரி பதவி கொடுத்தேன் என்று கூறினார். இந்தியை ஒரு தகுதியாக தானை தலைவரே ஏற்றுக்கொண்ட பிறகு தொண்டர்களுக்கு மட்டும் ஏன் அது புரியவில்லை.
  mafoi மூலம் ஒருவருக்கு வேலை கிடைக்க ஆங்கிலம் மட்டுமே முதல் தகுதியாக இருக்கமுடியும்,மற்றவை அந்த வேலை சார்ந்த அவசிய தகுதிகளாக இருக்கும்.
  அங்கிலத்தை மட்டும் ஏற்று கொள்ளும் போது ஹிந்தி மட்டும் என்ன?அந்நிய மொழி என்றால் ஆங்கிலம் மட்டுமே அந்நியமொழி குறைந்தது ஒரு 4000 கிலோ மீட்டர் தூரம் அந்நிய மொழி.ஹிந்தி நம் நாட்டிலேயே மற்ற மாநிலங்களில் பெரும்பாலான இந்திய சகோதரர்கள் பயன்படுத்தும் மொழி. பின் யார் நமக்கு நெருக்கமானவர்கள்.அந்த ஆங்கிலத்தை ஏற்கும் போது ஹிந்தியை மட்டும் ஏன் வெறுக்க வேண்டும். அரசியல் லாபம் அன்றி வேறு என்ன இருக்கிறது இந்த எதிர்ப்பில்.
  தமிழில் பொறியியல் படித்தவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமையால் நிச்சயம் இந்த mafoi மூலம் வேலை கிடைக்காது. நாம் ஹிந்தி கற்று வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை செய்யவும் கூடாது,ஆனால் மற்ற மாநிலத்தவர் இங்கு வந்து இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வர்,
  மேலும் இது போன்ற வேலை கிடைக்க கல்வி தகுதி என்ன என்று உங்களுக்கே தெரியும். படிக்காதவர்களுக்கு என்ன செய்வது.

 34. இந்தி பற்றி என் விவாதத்தைத் தொடருமுன், இந்தி எதிர்ப்புத் தவிர அண்ணாவின் பிற விஷயங்களில் எனக்கு உடன்பாடு ஏதுமில்லை. ஆனால் இந்தி போராட்டத்தை முற்றும் ஆதரிக்கிறேன். தவிர மொழி பற்றி குறிப்பாகத் தமிழ் இந்தி விவாதம் வணிக அரசியல் இழுபறிக்கிடையில் சற்றுக் கடினமானது.
  இந்தி பேசும் இந்திய மாநிலங்களை விட இந்தி பேசாத மாநிலங்களின் வளர்ச்சி மிக அதிகம். 2009 விவரப்படி இந்தியாவில் புழங்கும் பணவிடைகளில் (money orders) புலம் பெயரும் விவரம் தெரியவருவாதாகச் செய்திகள் உள்ளன.

  https://www.expressindia.com/latest-news/money-orders-tell-migrant-story-50-from-noida-goes-to-bihar/264255/

  இந்தி பயிலத்தேவை இல்லை என்பது தமிழில் பொறியியல் படியுங்கள் என்றா பொருள் கொள்ளும்?
  மேலும், உ பி அரசு தான் இந்தியில் பொறியியில் பட்டயப் படிப்பை வசங்க 80 களின் ஆரம்பித்தது. அவர்கட்கு ஆங்கிலத்தில் மேற்படிப்பைத் தொடர ஆலோசனை அளிக்கப்பட்டதா?
  இந்தி ஒரு பள்ளிச்சுமை. மூன்றாம் (தென்னிந்திய மொழி) மொழி பயிற்றுவிப்பதாக ஒரு மோசடி. இதை வடமொழித் தெரிவோடு முடித்துக்கொள்வர். இந்தியர் அனைவருக்கும் சிந்தனைக்கான தாய்மொழியும் பிழைப்புக்கான ஆங்கிலமும் போதும். ஆங்கிலத்தை ஒரு போதும் தூக்கி எறிய இயலாது. இந்திய மாணவர்களின் மொழிச்சுமை இறக்கப்பட்டால் அவர்கள் இன்னும் ஒளிர்வார்கள்.

 35. ஆங்கிலம் வேண்டாம் என்பது என்வாதம் அல்ல .ஆங்கிலம் மட்டும் தெரிந்து நல்ல சம்பளத்துடன் பம்பாயில் வேலை கிடைத்தவன் என்ன செய்ய முடியும்? வேலை வேண்டாம் என உதறிவிடமுடியுமா? அங்கு எல்லாம் official meeting ல் கூட டக்கென்று இங்கிலிஷை விட்டு ஹிந்திக்கு தாவி விடுவார்கள். ஹிந்தி படிக்கமுடியாது என்ற உறுதிக்காக பாம்பே, டில்லி போன்ற இடங்களில் கிடைக்கும் நல்ல வேலைகளை உதறிவிட்டு விடுவோமா? மொழி அறிவை வளர்த்து கொள்வது மிக அவசியம். தொழில் நிமித்தமாக.
  தமிழும் ஆங்கிலமும் மட்டும் படிக்கும் மொழி சுமை குறைவான மாணவர்களை விட.தமிழ் ஹிந்தி ஆங்கிலம் அல்லது வேறு எதாவது ஒரு மூன்றாவது மொழி படிக்கும் மாணவர்கள் எந்த விதத்தில் திறமையில் குறைந்து விட்டார்கள்.இன்னும் சொல்ல போனால் அவர்கள் தான் அதிக அளவில் இந்த corparate கம்பனிகலில் எல்லாம் வேலை பார்கிறார்கள்.அதிக மதிப்பெண் எடுப்பவனும் IIT ல் அட்மிசன் பெற்றவனும் இந்த மூன்று மொழி பயின்றவன்தான் அதிகம் இருப்பான். மொழி சுமையால் அவன் ஒன்றும் தோற்று விட வில்லை. மொழி சுமை இல்லாத நம்ம ஆட்கள் இங்கே எல்லாம் செல்லும் அளவு அவர்களை விட மிக குறைவு.
  தமிழில் பொறியியல் பற்றி எழுதியது இன்றைய தமிழக நிலையையும் அண்ணாவின் வாரிசுகள் செய்யும் மடத்தனத்தையும் குறித்து.

  முக அழகிரி கூட ஹிந்தி மற்றும்,இங்கிலீஷ் டியூஷன் வைத்து கற்று கொண்டார் டில்லி செல்வதற்காக என்று செய்திகள் பத்திரிக்கைகளில் வந்தன.

  ஹிந்தியை ஒரு தகுதியாக அண்ணாவின் தம்பியே ஒப்புக்கொண்டுள்ளார்.
  தமிழ் அல்லாத மொழி எல்லாம் எதிர்க்கப்பட வேண்டும் என்றால் முதலில் எதிர்க்கப்பட வேண்டியது இங்கிலீஷ். அதனை செய்யவில்லை செய்யவும் முடியாது ஆனால் இந்திய மொழி இந்தியை மட்டும் எதற்கு எதிர்க்க வேண்டும். அண்ணாவின் வாரிசின் வாரிசுகள் (இந்தி எதிர்ப்பை இன்னும் வைத்து அரசியல் பண்ணுபவர்கள் ) எத்தனை பேருக்கு தமிழ் படிக்க,தடையின்றி பேச தெரியும்.
  வட இந்தியர்களுக்கு ஆங்கில அறிவு குறைவே பெரும்பாலனவர்கள் உள்நாட்டிலே ஹிந்தி தெரிந்த மாநிலங்களிலே குப்பை கொட்டுகிறார்கள், யார் அவர்களை சிறந்தவர்கள் என்று சொன்னது பெரும்பான்மை இடங்களில் ஹிந்தி போதும் ஆகையால் அவர்கள் குப்பை கொட்டுகிறார்கள்.
  ஆங்கிலத்தில் நல்ல பயிற்சி உள்ள ஒரு சிலர் மட்டுமே பிற இடங்களில் கால் ஊன்றுகிறார்கள்.
  தமிழனுக்கு மட்டும்தான் ஹிந்தி தெரியாது ஆனால் தெலுகு காரனுக்கும்,மலையாளிக்கும்,கனடிகாவுக்கும் ஹிந்தி நன்கு தெரியும்.
  நம் மொழிமேல் பற்று அவசியம் ஆனால் ஹிந்தியை மட்டும் எதிர்ப்பது கழக வெறுப்பு பிரசாரத்தில் ஊறியவர்களுக்கு மட்டுமே வரும்.
  எதிர்ப்பவர்கள் எல்லாவற்றையும் எதிருங்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இருங்கள்.
  மொழி ஒரு பரிமாற்ற கருவியே நம் மொழி நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காக பிறவற்றை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டாம். இங்கிலீஷ் எப்படி அவசியமோ அது போல் ஹிந்தி நாடு முழுமைக்கும் அவசியம்.
  மலையாளமோ கனடமோ, தெலுகோ,மரத்தையோ, குஜராத்தியோ,பெங்காலியோ ——————…………………………………………… கற்க வேண்டியதில்லை. ஹிந்தி ஒரு பொதுவான கருவியாக இவர்களுக்குள் உள்ளது. நாமும் கற்றால் இந்த எல்லா மொழியினருடனும் கருத்தை பரிமாற்ற முடியும்.
  தேசப் பணியாற்ற ராணுவத்திற்கு சென்றால் தமிழும் செல்லாது, ஆங்கிலமும் செல்லாது.
  இவ்வளவு ஏன் அந்த காலத்தில் ஸ்கூல் ஐ கட் அடித்து ஹிந்தி எதிர்பிற்காக ரயில் கொளுத்த சென்றதற்காக என் தந்தையும் அவர் நண்பர்களும் அந்த நிகழ்விற்காக வருத்தப்பட்டதுண்டு.

 36. //இந்தி பேசும் இந்திய மாநிலங்களை விட இந்தி பேசாத மாநிலங்களின் வளர்ச்சி மிக அதிகம்.
  2009 விவரப்படி இந்தியாவில் புழங்கும் பணவிடைகளில் (money orders) புலம் பெயரும் விவரம் தெரியவருவாதாகச் செய்திகள் உள்ளன. //

  வளர்ச்சி உள்ள இடத்திலிருந்து சம்பாதித்து தன் சொந்த ஊருக்கு தான் பணம் அனுப்புவார்கள்.வருமானம் உள்ள இடத்தில் எதற்கு MO அங்கே சொந்த ஊரில் வேலை வாய்ப்பு இல்லாமையால் வெளியே சென்று வளர்ச்சி அடைந்த இடத்தில் சம்பாரித்து சொந்த ஊருக்கு அனுப்புவார்கள்.

 37. ஸ்ரீ ராம்கி நீங்கள் சொல்வது தமாஷாக இருக்கு. தமிழில் பொறியியல் படித்தால் என்ன நஷ்டம்? அது தனி மனிதர் விருப்பம். ஹிந்தி ஏன் பள்ளிசுமை? ஆங்கிலமே தெரியாத சீனா ஜப்பான் போன்ற நாடுகள் பிழைக்கவில்லையா? ஓரளவு படித்த எந்த இந்தியனும் தன தாய்மொழியை தவிர மற்ற இந்திய மொழி தெரிந்தவரே. தாய்மொழிக்கு அடுத்து மிகவும் சுலபமாக படிக்க முடிந்த மொழி ஹிந்தி. இதை நான் படித்து விட்டு சொல்கிறேன். ஆங்கிலம் படிக்காதே என்பது எவ்வளவு முட்டாள் தனமோ அதை விட பன்மடங்கு அடி முட்டாள் தனம் ஹிந்தி படிக்காதே என்பது. நீங்கள் ஹிந்தியை வெறுத்து ஒதுக்கி அங்கிலத்துக்கு வால் பிடிப்பது வியப்பாக இருக்கு. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில். ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவேண்டாம். ஆனால் தயவு செய்து ஹிந்தி வேண்டாம் என்று சொல்லாதிர்.

 38. துவங்கிய புள்ளியிலிருந்து தொலை தூரம் வந்துவிட்டோம். ஆங்கிலப் பயன்பாட்டை நிறுத்துவதை எதிர்த்தப் போராட்டம் தொல்வியுற்றிக்குமானால் அறுபத்தியைந்திலேயே ஆங்கிலத்தைத் தொலைத்திருந்தால் இன்றைய வளர்ச்சி சாத்தியமாகியிருக்காது. ஆங்கிலத்தை வளச்சி வேட்கையே கட்டாயமாக்குகிறது. ஷாங்காயில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மூர் மைய அரசு நிறுவங்கள் போன்று (ஆனால் அதைவிடச் சற்றுச் சிறப்பாக) ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை நானே கண்டிருக்கிறேன். அதனால் இதன் மீதான விவாதம் பயனற்றது.

  இந்தி விவாதத்தைத் தொடருமுன் ஒரு வார்த்தை. தனி நபர் கல்வித் திறமைகளை ஆய்வு செய்வது என் நோக்கமல்ல. தொடருவோம்.

  மைக்கேல் பாரடேயின் மின்னுந்து விளக்கத்தைப் பார்வையிட வந்த அமைச்சர் சற்றுப் புரியாமல் தடுமாறினார். ஒரு நாள் நீங்கள் இதற்கு வரி விதிப்பீர்கள் என்று கூறி விளக்கத்தை முடித்தனர். watthour க்கு ஒரு நாள் வரி விதிக்கப்பட்டது. அது போல் பெரும்பாலான அரசுகள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதில்லை. அதனால் முன்னேற்றத்திற்கான சில அளவிகள் சுட்டும்போது கழக அரசை கட்டி இழுப்பது வெட்டிவேலை.

  இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் புலம் பெயரும்போது கூட அம்மாநில மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெங்களூருவில் வீட்டு வேலை செய்வோர், காய்கறி விற்போர், சலவை செய்வோர் போன்ற பலர் இந்தி பேசுவதைக் காண்கின்றேன். பிழைப்பு தேடும் புலம் பெயர்வு இவர்களை ஏன் மாற்றுவதில்லை? பெரும்பான்மை பலத்தை மட்டும் கொண்டு இந்தியைத் திணிப்பது பெருமபான்மை பலத்தைக் கொண்டு மதம் மாற்றுவது இரண்டும் ஒன்றே.

 39. காந்தியை வைத்து எப்படி நேருவும் அவர்கள் குடும்பமும் ஆட்சியைக் கைப்பற்றினரோ அதே போல் அண்ணாவை வைத்து கருணாநிதியும் அவர் குடும்பமும் ஆட்சியைக் கைப்பற்றியது.

 40. அண்ணா பெரிய அறிவாளி என்பது போல் ஒரு மாயையை திமுகவினர் ஏற்படுத்தினர்
  அதனால் அவரை பேரறிஞர்,பெர்னாட்ஷா என்றெல்லாம் வர்ணித்தனர்.

 41. நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தை சீர் குலைத்துக் கொண்டிருக்கும் இந்த நாசகார இயக்கத்தை தோலுரித்துக் காட்டி விட்டீர்கள்
  இனிமேலாவது மக்கள் மாறுகிறார்களா பார்ப்போம்.

 42. பல கோடி தமிழ் மக்கள் பல வருடங்களாக அறியாத உண்மைகளை,கட்டுரை மூலம் தெரியப் படுத்தியதற்கு நன்றி.

  அட சீ….. , , கர்மவீரர் காமராஜர் போன்ற உண்மையான நாட்டுப் பற்றுள்ள, தலைவர்களை விட்டு, இது போல பொறம்போக்குகள நம்பி ஆட்சிய கொடுத்த நம்மை என்ன சொல்வது?

  kathiravan

 43. //பெரும்பான்மை பலத்தை மட்டும் கொண்டு இந்தியைத் திணிப்பது பெருமபான்மை பலத்தைக் கொண்டு மதம் மாற்றுவது இரண்டும் ஒன்றே.//
  ஓகோ நீங்க அப்படி வரீங்களா? இது முழுக்க முழுக்க இந்தி மொழி தேவையா இல்லையா என்ற விவாதமாக நினைத்துதான் நான் கருத்து கூறிக்கொண்டு உள்ளேன்.
  நண்பரே இங்கே பெரும்பான்மை மக்கள் தங்கள் பலத்தை கொண்டோ வேறு எதனையும் கொண்டோ ஒரு காலத்திலும் ஒருநாளும் பிறரை மதம் மற்ற முயற்சி செய்தது இல்லை,செய்யவும் மாட்டார்கள்.

  அவ்வளவு ஏன் ஒரு அரசாங்கத்தையோ, ஒரு தலைவரையோ கூட தன் பெரும்பான்மையை கொண்டு நிறுவியது இல்லை.
  ஹிந்தி ஒன்றும் இந்துக்கள் மட்டும் பேசவேண்டும் அல்லது ஹிந்தி பேசுபவர் எல்லாம் ஹிந்துவாக மதம் மாற வேண்டும என்று பட்டேர்ன் செய்யப்பட்ட மொழியும் அல்ல.பயம் கொள்ளல் வேண்டாம் நண்பரே

  அது ஒரு கருத்து பரிமாற்ற கருவி அவ்வளவே. அதன் தேவையின் அவசியமும், தேவையில்லாமல் அதனை எதிர்த்து நம்மை முன்னேற விடாமல் செய்த ஒரு தலைவரின் செயலும் மட்டுமே இங்கு விவாத பொருள். அவருடைய மற்ற விசயங்களை பற்றி விவாதித்தாலும் மதத்தை பற்றிய விவாத இந்த விவாதத்தில் எண்ணம் இல்லவே இல்லை. .

 44. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் முன்னணியில் இருந்த ஒரு திரைப்பட இயக்குனரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு செய்தி என்னை அதிர வைத்தது. அது என்னவென்றால் அவர் திமுக நடத்திய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சென்னையில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாராம்.அப்போது திமுகவினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட வைத்தனர்.அவர்களை கல்லூரி புறக்கணிப்பு,கோஷமிடுதல்,ஆர்ப்பாட்டம்,ஊர்வலம்,கல்லெறிதல்,ஹிந்தி எழுக்களின் மீது தார் பூசுதல் இப்படியெல்லாம் செய்யவைத்து அவர்கள் படிப்பை குட்டிச் சுவராக்கினறாம்.அப்போது பல சமயங்களில் பாண்டு சட்டைகளுடன் அவரரது கல்லூரிக்குள் சுற்றிக் கொண்டிருந்த பலரைப் பார்த்தால் அவர்கள் கல்லூரி மாணவர்கள் போலவே தோன்றவில்லையாம். அப்புறம் தான் தெரிந்ததாம் அவர்கள் எல்லோரும் திமுகவினரால் ஏவப்பட்ட ரௌடிகள்.கல்லூரி மாணவர்கள் போல் கல்லூரிக்குள் வலம் வந்து கொண்டிருந்தனராம்.

 45. முன்னரே வைத்த கேள்வி மீண்டும் வைக்கிறேன்.
  //பெரும்பான்மை மொழி என்பதைத் தவிர என்ன தகுதி இந்திக்கு?//

 46. பெரும்பான்மை பலத்தைக் கொண்டு மதம் மாற்றுவது என்பது- பாகிஸ்தான்,பங்களாதேஷ்,மலேசியா,சவுதி அரேபியா போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில்உள்ளது
  ஆனால் அதே அளவுகோல் நம் நாட்டில் இல்லை அதற்கு நேர் எதிராக- மிக சிறு தொகையில் உள்ள கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் ஹிந்துக்களை மதம் மாற்றுகிறார்கள்.
  முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அரசையும் ,அரசியல் கட்சிகளையும் ஒட்டு, பணம் இவை மூலம் விலைக்கு வாங்கி தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருக்கிறார்கள்
  ஐந்து வேளை மசூதிகளிலிருந்து ஒலி பெருக்கி மூலம் ஹிந்து பெரும்பான்மை பகுதிகளில் கூட தொழுகைக்கு கூப்பிடலாம் .ஆனால் ஹிந்துக்கள்
  ஒரே ஒரு நாள் தீபாவளி அன்ற இரவு பத்து மணி முதல் அடுத்த நாள் காலை ஆறு மணி வரை பட்டாசு வெடித்தால் ஒலி மாசு ஏற்பட்டு விடுமாம்!
  அது எதோ பெரிய கொலைக் குற்றம் போல் பல நாட்களுக்கு முன்பிருந்தே காவல் துறை எச்சரிக்கை விடுவது, கண்காணிப்பது ,நீதி மன்றங்களே அதற்கு தடை விதிப்பது . எவ்வளவு பெரிய மோசடி இது? எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு ஹிந்துக்களை இழிவு படுத்துகின்றனர். துன்பப் படுத்துகின்றனர்.ஒரு தலைப் பட்சமாகநடத்துகின்றனர்.
  உலகில் வேறு எங்கும் ஒரு பெரும்பான்மை மக்கள் தங்கள் அரசாலேயே இவ்வவளவு இழிவும், துன்பமும் சந்திப்பதில்லை.

 47. //#
  Ramki
  19 September 2010 at 9:03 pm

  முன்னரே வைத்த கேள்வி மீண்டும் வைக்கிறேன்.
  //பெரும்பான்மை மொழி என்பதைத் தவிர என்ன தகுதி இந்திக்கு?////

  முன்னரே சொன்ன பதில்கள்

  பெரும்பான்மை என்பதும் ஒரு தகுதி. அதனை எதிர்த்த ஒரு தலைவராலேயே ஒப்புகொள்ளப்பட்ட ஒரு தகுதி.

 48. similar article almost same wordings are published in vinavu not sure if author is same or copied from here to there or there to here..

 49. ஆங்கிலம் என்ன இந்தியாவில் பெரும்பான்மையால் பேசப்படுகிறதா?
  அந்நியன் மொழி இனிக்கிறது
  திமுகவின் எண்ணம் என்னவென்றால் எல்லோரும் ஹிந்தி கற்றுக் கொண்டால் தேச ஒற்றுமை வந்து விடும் .அப்புறம் தாங்கள் வடக்கு தெற்கு என்று சொல்லி மக்களை பிளவு படுத்த முடியாது என்பதுதான்.
  அவர்களுக்கு ஆட்சியைக் கொடுத்தால் ஹிந்தி பேசி டில்லியில் மந்திரி ஆவார்கள்
  இல்லை என்றால் ஹிந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி
  – நல்ல தகிடுதத்தம் !

 50. திராவிடம் என்று பேசும் இவர்கள் தெலுங்கையோ,கன்னடத்தையோ ,மலையாளத்தையோ கற்கவோ ,கற்பிக்கவோ வேண்டியதுதானே?

 51. ஆமாமாம். அதனால்தான் இப்போது சிறுபான்மைக் கட்சியாக இருந்தாலும் ஆட்சி செய்கிறார்கள்.நாங்கள் சிறுபான்மையினருக்காகத்தான் என்று கொக்கரிக்கிறார்கள்!

 52. அறிவிலிகள் மத்தியில் எம். எ. படித்த ஒரே ஒருவன் அண்ணாதுரை.
  அறிவிலிகள் அவரை அறிஞர் என்றும், மேதை என்றும் போற்றினார்கள்.
  அக்காலத்தில் மற்று சாதியினரில், எம். எ; பி.எ ( ஹோனர்ஸ் ); ஐ. சி. எஸ்;
  பார் அட் லா; துவங்கிய பட்டங்கள் பெற்றோர்கள், ஏராளமான பேர்கர் இருந்தனர்
  என்று அறிவிலி கூட்டத்திற்கு தெரியவில்லை. டாகோர் போன்ற கவிகளையும்,
  சி. வி. ராமன், ராமானுஜம் போன்ற மக மேதைகளை அவர்கள் அறிய வாய்ப்பு
  இருக்கவில்லை. பெரிய ஆந்தை பகலின் சூரியன் இல்லை
  என்று கூறியவுடன்,ஆமாம் போடும் சிறு ஆந்தைகள் போல்,
  தமிழ் நாட்டு மக்கள், ஆகி விட்டார்கள். போய் வாக்குகள் கேட்டு
  வோட்டு போடும் கருவிகள் ஆகிவிட்டனர். இவர்களுக்கு விடிவு காலம் வருமா ?

 53. Can some one list like tamil for Tamil nadu what is the mother tounge for every state.. ppl will realize later how hindi has monopolized and killed other state and regional languages…. especially in northern part…. non one has stopped you learning hindi externally thro Prathamic and mathyama exams..

 54. சில நல்ல கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை பதிலிருக்கிறேன்.
  திரிபுரா, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களோடு புதுவையும் ஆங்கிலத்தைத் தம் ஆட்சி மொழியாகப் பட்டியலிட்டுள்ளன. இந்தியின் இந்திய வளர்ச்சி பற்றி அரசு நிலை விவரம் என்னிடம் இல்லை. பிரிட்டிஷ் கவுன்சிலின் ஒரு ஆய்வு 16.5% இந்தியர்கள் ஆங்கிலத்தை எழுதவும் 35 % படிக்கவும் இயலுமென மதிப்பிட்டிருக்கிறது. english next india 2010 பார்க்கவும்.
  மேலும் அதே ஆய்வு இந்தி தென் மாநிலங்களில் 10 விழுக்காட்டிற்கு கீழேயே அறியப்படுகிறதென்று தெரிவிக்கிறது.

  வேறு சில புள்ளி விவரங்கள் கூகுள் இந்திய இணைய மொழிப் பயன்பாட்டில் இந்தியும் தமிழும் முதலிடத்தில் உள்ளன. இந்தி ௦.3 விழுக்காட்டில் முதலிடம் பெறுகிறது. இணையத்தமிழை ஊக்குவிக்க முயற்சிப்பதாகக் கூறுகிறது. வாழ்க கூகுள். வாழ்க தமிழ்ஹிந்து! ஹிந்திக்கு வால் பிடித்தால் தமிழ் சேதமாகுமென்பதில் ஐயமில்லை.

  ஆங்கிலம் அந்நிய மொழி. ஆயினும் அதில்லையேல் வளர்ச்சி இல்லை. இந்தியை விருப்பமுள்ளோர் பிரசார் சபா வாயிலாக பயிலட்டும். என் போன்றோர் தமிழ்ச் சிறுபான்மையாய்த் தனித்து இயங்குகிறோம்.

 55. ஸ்ரீ ராம்கி, நீங்கள் பிரச்சினையின் வேறை தொட்டு இருக்கிறிர்கள். ஆனால் பிரச்சினையை தொடவில்லை. திரிபுர, மேகாலய, நாகாலாந்து இத்யாதி மாகாணங்களில் தமிழ் நாட்டை போன்று பாரதத்துடன் ஒட்டு உறவு விரும்பாத பிரிவினை போக்கு உடையவர்கள் எடுக்கும் நிலை ஆங்கிலத்துக்கு வால் பிடிப்பது மற்றும் ஹிந்தியை வெறுத்து ஒதுக்குவது. இன்றைக்கு சீனா ஜப்பான் நாட்டில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் உண்மை. இது வளர்ந்த பின்னர். ஆங்கிலம் இல்லாமலேயே அவர்கள் வளர்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆங்கிலத்திற்கும் வளர்ச்சிக்கும் முடிச்சு போடுவது திராவிட மாயை சாக்கடையில் முங்கி எழுந்து அண்ணா நாமத்தை ஓதி அவர் பெரியாருக்கு போட்ட நாமத்தை நினைத்து பாரதத்திற்கு துரோகம் பண்ண நினைப்பவர் எடுக்கும் நிலை. இந்த ஆங்கில மாயையிலிருந்து வெளிய வாருங்கள். விசாலமான பாரதத்தில் நம்மை இணைக்கும் நம் சஹோதர மொழி ஹிந்தி. ஆங்கிலம் உலக வியாபாரத்திற்கு அவசியம் என்றாலும் நம்மை நம் எண்ணங்களை அடிமை படுத்திய பரங்கியன் மொழி என்பதை மறவாதீர்

 56. நன்றி கிருஷ்ணகுமார். முன்னேறிய பல நாடுகளை ஜப்பான் போன்று நாம் அப்படியே நாம் கைக்கொள்ள இயலாது. call centre ல் பிழைப்பு ஓடுகிறது நமக்கு. மென்பொருளில் சீனர்களை விட நமது ஆங்கில அறிவு பலராலும், ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உட்பட, விரும்பப்படுகிறது. விருப்பு, வெறுப்புகளை விடுத்து ஆங்கிலத்தைத் தொடருவது இன்றியமையாதது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

  அதனூடே இந்தியை இணைப்பது சுமை. குறிப்பாக இது முன்னணி மாணவர்கள் மீது சுமையை உண்டாக்குகிறது.

  மேலும் வடகிழக்கு மாநில கிறித்தவ தாக்கத்தை நான் அறிவேன். இந்தி திணிப்பது மேலும் எதிர்மறை விளைவையே உண்டாக்கும் என அஞ்சுகிறேன்.

  இவ்வளவு நீள் விவாதத்தை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. இந்திய ஒருமைப்பாடு என்பது இந்து மதம் சார்ந்தது. அதற்கு இந்தி போன்று ஊடுவலிமை reinforcement தர நினைப்பது அறியாமை. இணைப்பு மொழி வேறுபாடுகளை உருவாக்கும்போது மாயக் கற்பனையாகிவிடுகிறது.

  மொழி பற்றி நான் தேடித் தெரிந்துகொண்டவைகளின் சாரத்தை வைத்துவிட்டேன். என் வரையில் இந்த வாதம் போதும் என்றே எண்ணுகிறேன். மாற்றுக்கருத்திற்கு இவ்விணையதளம் தரும் இடம் அரிதானது. அதற்குத் தலைவணங்குகிறேன்.

 57. பரத நாட்டியத்தை இகழ்ந்து, கொச்சையான ரெகார்ட் டான்சை புகழ்ந்து, விசிலடிச்சான் குஞ்சுகளை வளர்த்து, இன்றைக்கு தமிழர்களை தலையாட்டு பொம்மைகளாக ஆக்கிய பெருமை அண்ணாவிற்கும் அவர்தம் தம்பிகளுக்குமே சாரும். இதனால் பலனடைந்தவர்கள் யார் என்று தமிழர்கள் புரிந்துகொள்ளாதது தான் தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்.

 58. I don’t know much about Anna… but his article has cleared everything……. This DRAVIDAR rule must come to an end… B.J.P has to come… Let’s give them a chance to serve…

 59. அண்ணா ஆரம்பித்துவைத்த தனிநபர் துதி இன்றும் கழகங்களை விடவில்லை.

 60. “தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.

  மேற்சொன்ன கருத்து தமிழருக்குத்தான், தமிழ் இந்துக்களுக்கு அல்ல. இந்த உண்மை, இந்த இடுகையை இட்டவர்க்கு தெரிந்ததுதான் என்பது பொய் அல்ல. உண்மை தான்!

 61. திராவிடம் இதர தென் மாநிலங்களில் எடுபடாமல் போன ஒரே காரணத்தாலேயே தமிழர்கள் ஏமாளிகள் என்பது நிரூபணமாகின்றதே போதாதா?https://rssairam.blogspot.com/2011/11/blog-post_13.html தி.மு.க./அ.திமுக தெரியும் திராவிடப் பல்கலைக் கழகம் தெரியுமா? சற்றுப் பாருங்கள். இணைந்தால்தான் மத்தியிலிருந்து மொழியின் பெயரால் நிதி வாங்கிட முடியும் என்பற்காக எல்லாத் தென் மாவட்டங்களும் ஐக்கியமாகியுள்ள கதை புரியும். அதிலும் மேலாண்மையில் ஆந்திரமே முன்னணியில் உள்ளது. திராவிடத் தமிழர்களின் பார்வையில் திராவிடப் பல்கலைப் பழகம் பார்வையில் படவில்லை என்றே கருதுகின்றேன். புதுவை மட்டும் சேர்ந்ததாகத் தெரியவில்லை. எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. இன்றைய நிலைமை மாறவேண்டும் என்று ஆசைப்படுபவன். 65ஐத் தாண்டியதால் அவசரப்படுபவன். என்காலத்திலேயே நிகழ வேண்டும் என்று எண்ணுபவன்..

 62. புலிகேசி வசனம்தான் ஞாபகம் வருகிறது:

  “நூறு வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு,
  நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது”

  🙂

 63. மது அவர்களுக்கு மிக்க நன்றி. நமது வலைத்தளத்தில் வந்த தொடர்களில் சுப்பு அவர்களின் தொடர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மதுவின் இந்த தொடர் மறக்கமுடியாதது. வந்த மறுமொழிகளும் பல அற்புதமான விஷயங்களை தொட்டன.

  உண்மை என்னவெனில் , உலகில் எந்த நாடாகிலும் சரி, மனிதன் தன் தாய் மொழியை மட்டும் படித்து, பேசி , இன்று குறுகிய வட்டத்தில் வாழ முடியாது. இலங்கை தமிழ் சகோதரர்கள் மட்டுமல்ல, இந்திய தமிழர்களும் கோடிக்கணக்கில் அயல்நாடுகளில் வேலை, மற்றும் தொழில் புரிந்து வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எந்த வியாபாரியும் , மிக அதிகமான வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. அப்போதுதான் அவர் தன்னுடைய தொழிலை சிறப்பாக செய்ய முடியும்.

  அதிகம் பேருடன் தொடர்பு கொள்ளவும், வணிகவாய்ப்புக்களை பெறவும் , அதிகம் மக்கள் பேசும் மொழிகளான சீனம் 140 கோடி ( மந்தாரின், காண்டநீசு), இந்தி ( 80 கோடி ), ஸ்பானிஷ்( 60 கோடி ) ஆங்கிலம் (27 கோடி ) ஆகிய மொழிகளில் அன்றாடம் உபயோகிக்கப்படும் சுமார் 200 வாக்கியங்களை ( sentences) மட்டுமாவது அறிந்து கொள்வது மிக உபயோகமாக இருப்பது உண்மை.

  இந்த தளத்தில் கடிதம் எழுதும் சில அன்பர்கள், சீனம், ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி ஆகிய மொழிகளை படித்த எல்லோருக்கும் வேலை கிடைத்து விட்டதா? என்று கருத்து எழுதியுள்ளனர். பிற மொழிகளை படித்த, குறைந்தது பேசவாவது கற்ற தமிழன் உலகில் எங்கு சென்றாலும் பிழைக்க 40 சதவீதம் வாய்ப்பு உள்ளது. தாய்மொழி தவிர பிற மொழி அறியாதோனுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போகிறது. இந்தி படிக்காததால் தமிழனுக்கு பெரிய இழப்பு மட்டுமே. இல்லையெனில், தமிழன் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகிவிடும்.

 64. க.சுப்பு அவர்கள் எழுதிய ‘திராவிட மாயை ‘ என்ற புத்தகத்தைப் படிக்க விழைந்தேன்.அதை நமது கட்டுரை ஆசிரியர் சுருக்கமாக தந்து விட்டார்.
  இன்றைய தமிழக முதல்வர் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலக் கல்வியும் கொண்டுவரப்படும் என்று சொல்லியுள்ளார்.அதே போல ஹிந்தியையும் ஒவ்வொரு பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டும்.இந்த தமிழகத்தையே இந்தி எதிர்ப்பு,பார்ப்பன ஒழிப்பு என்று கூறி கெடுத்து குட்டிச்சுவராக்கியுள்ள இந்தத் தமிழகத் துரோகிகளின் கூச்சலுக்கெல்லாம் அரசு செவி சாய்க்காமல் ஹிந்தி , ஆங்கிலம் இவற்றை மக்கள் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டி இதற்கான வேலைகளை உடனே துவக்க வேண்டும். வைக்கோவும் கருணாநிதியும் மற்ற தமிழ் ஆ………ஆர்வலர்களும் முதலில் தங்களது வீட்டுக் குழந்தைகள் ஹிந்தி ஆங்கிலம் கற்பதை விட்டு விட்டு தமிழை மட்டுமே கற்றுக்கொள்ளட்டும் அதன் பின் மற்றவர்கள் பக்கம் வரட்டும்.
  ஈஸ்வரன்,பழனி.

 65. எனக்கு ஹிந்தி, சமஸ்கிருதம், ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆகிய எந்த மொழிகளும் தெரியாது. தமிழும், ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும். இந்தியை யாரும் இப்போது திணிக்கவில்லை. தட்சிண பாரத இந்தி பிரச்சார சபை மூலமாக வசதி உள்ளவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தி படிக்கிறார்கள். ஆனால் நமது நோக்கம் என்னவென்றால், ஏழை மக்கள் எல்லாம் இந்திபடிக்க காசு கொடுத்து படிக்க வைக்க முடியாது என்பதுதான். எனவே, தமிழக அரசு மாணவர்கள் விரும்பும் ஏதாவது இரண்டு மொழிகளை அரசின் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை , விருப்பப்பாடமாக கற்பிப்பது அவசியம். மேலும் அவற்றில் தேர்வு வைத்து ரிசல்ட் போட வேண்டாம். குறைந்தது அன்றாடம் பயன்படுத்தும் 200- வாக்கியங்களை பேச எழுத கர்பித்தாலே போதும். கலைஞரின் குடும்ப பேரன்பேத்திகளும், கொள்ளுப்பேரன் பேத்திகளும் இந்தி, ஸ்பானிஷ், ஜெர்மன், கொரியன், மந்தாரின் , காண்டனீஸ் ஆகிய மொழிகளை தங்கள் சொந்த செலவில் கற்று , பல வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டினருடன் தொடர்பு கொண்டு, அவர்களின் குடும்ப வியாபாரத்தை பெருக்கி கொள்கிறார்கள். நாம் எல்லோரும் சொந்த காசை செலவழித்து , அப்படி படிக்க நமக்கு வசதி போதாது. எனவே, திரு ராம்கி அவர்கள் இந்தி எதிர்ப்பை பற்றி தெரிவித்திருக்கும் கருத்து சரியல்ல. தெலுங்கனும், கன்னடனும்,. மலையாளியும், தங்கள் மாநிலங்களில் பள்ளிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக வைத்துள்ளனர். ஆனால் நம் மாநிலத்தில் விருப்பப்பாடமாக கூட இல்லாமல் , வெளியூர் செல்லும் தமிழன் தடுமாறுகிறான். இந்தி படிக்கும் தெலுங்கனும், கன்னடனும்,. மலையாளியும், தமிழனைவிட பின் தங்கிவிட்டானா ? யாரை ஏமாற்றுகிறீர்கள் ? இவ்வளவு தீவிரமாக தமிழ் வாதம் பேசிய திராவிட இயக்கத்தினர், திரு சி சுப்பிரமணியத்தினால் கொண்டுவரப்பட்ட தமிழ் வழிக்கல்வியை தரைமட்டமாக்கி விட்டனர். இன்று உண்மை நிலை என்னவெனில், உலகம் முழுவதும் ஒரு கிராமம் போல ஆகி விட்டது. பிறருடன் தொடர்பு கொள்ளாமல் , குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது. இந்தி, மந்தாரின், காண்டநீசு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் சுமார் 200- வாக்கியம் கற்பது நல்லது. கற்காதவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 66. உஷ்…. அப்பா கண்ணை கட்டுதே……. முடியல வேணாம்….. அழுதிடுவேன்….. தம்பி இன்னும் டீ வரல…….
  இந்த கட்டுரையை படித்து முடித்தபோது வடிவேலு இல்லாத குறையை தீர்த்து வைத்தது…. 3 ஆமைகள் தான் கண்ணுக்கு தெரிந்தது: “பொறாமை இயலாமை அறியாமை”
  பேரறிஞர் அண்ணாவை கிண்டல் செய்வது அவமானப் படுத்துவதாக கட்டுரை எழுதிய இணைய தளம் மாடு படம் ஒன்றைப் போட்டு அதன் பின்பக்கம் பணமூட்டைகள் கொட்டுவதாகப் போட்டு படம் இருக்கிறார்கள். அந்தப்படத்தைப் பார்த்தால் மாட்டுச் சாணத்தை திருநீராக்கி பசுமாடுகளின் பின்பக்கத்தை பணம் காய்க்கும் மரமாக்கியவர்கள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். பிறரைப் பற்றி சொல்வதெல்லாம் தன்னையும் சுட்டும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை உணராதவர்கள் போலும் இவர்கள். ஒருவேளை இது தான் ஆரிய மாயை என்பதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *