‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?

mk2“கோவில்களுக்காகக் கருணையும் நிதியும் நிறைந்தவராக இருக்கிறார் தமிழக முதல்வர்” என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது தில்லியிலிருந்து வரும் ஆங்கில நாளிதழ் “பயனீர்”.

“தமிழக முதல்வர் ஆலய ஆதரவாளராக மாறிவிட்டார்” என்று கூறியது “டைம்ஸ் ஆஃப் இந்தியா”.

இரண்டு தினசரிகளும் கலைஞரின் கடவுள் எதிர்ப்பு கொள்கையையும், பிராம்மண துவேஷ நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால் அந்தச் செய்திகளில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கோவில் திருப்பணிகளுக்காக ஒதுக்கியுள்ள ரூபாய் 450 கோடியை ஏதோ ஒரு பெரிய விஷயமாக பறைசாற்றியது தான்!

தமிழ் இந்து பக்தர்கள் கோவில் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை மற்றும் அவர்கள் அளிக்கும் நன்கொடைகள் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த 450 கோடி ரூபாய் என்பது வெறும் வேர்க்கடலை சமாசாரம் என்பது தெளிவு. சொல்லப்போனால், கோவில்களுக்காக என்று தமிழ் இந்து பக்தர்கள் மனமுவந்து அளிக்கும் நிதியை ஆலயங்கள் மற்றும் இந்து மத ஆன்மீக சம்பந்தமான விஷயங்களுக்குச் செலவு செய்வது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

அவ்வாறு தமிழக அரசு இந்து மத விஷயங்களுக்காக மட்டும் செலவு செய்கிறதா; தமிழ் இந்து பக்தர்கள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ஆலய வருவாய் வேறு சமூக நலப் பணிகளுக்க்கும், சிறுபான்மையினர் நலப் பணிகளுக்கும் செலவழிக்கப் படுகிறதா; ஆலயங்கள் மற்றும் ஆலய சொத்துக்கள் மூலம் வரும் வருவாயும் அவற்றை வைத்துச் செய்யும் செலவுகளும் முறையாகத் தணிக்கை செய்யபடுகிறதா; போன்ற விவரங்களை வேறு ஒரு சமயம் பார்ப்போம். தற்போது, வெளிப்படையான இந்து விரோத மற்றும் நாத்திகக் கொள்கையுடைய முதலமைச்சர் ஏதோ தன் சொந்த நிதியையோ, தன் கட்சியின் நிதியையோ கோவில்களுக்குச் செலவு செய்வதைப்போன்று பத்திரிகைகள் செய்திகள் வெளியிடுவதால், அவரின் கொள்கைப் பிடிப்பை அலசி ஆராய்வோம்.

முதல்வர், கோவில் மற்றும் கடவுள்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளதாக சில பத்திரிகைகள் பேதைத்தனமாக ஊகித்தாலும், கழக அரசியலைத் தொடக்கத்திலிருந்து கவனித்து வருபவர்களுக்கு முதல்வர் போடும் இரட்டை வேடம் நன்றாகத் தெரியும். இந்த மாதிரியான விஷயங்களில் அவருடைய தனிப்பட்ட கொள்கை அரசியல் கொள்கைக்கு நேரெதிரானது என்பதும், அவர் இரட்டை வேடம் போடுபவர் என்பதும் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்குத் தெரியாதது துரதிர்ஷ்டமே.

நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், எப்படி நம் தேசத்தின் வரலாற்றைத் திரித்து அதன் மூலம் நம்முள் வேற்றுமை ஏற்படுத்தி நம்மை பிரித்து ஆட்சி செய்தார்களோ, அதே வழியில் தான் கலைஞரும் தன் அரசியல் தொழிலில் தன் சுயநலத்திற்காக அன்று முதல் இன்று வரை நடந்துகொண்டிருக்கிறார். தன்னுடைய அரசியல் வாழ்வில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும், இந்துமத தத்துவங்களையும், இந்து கலாசாரத்தையும் அவமரியாதை செய்தும், ச்மஸ்கிருத மற்றும் ஹிந்தி மொழிகளை அவதூறு செய்தும் வந்திருக்கிறார். அதே நேரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக அவர்கள் மதங்களையும், கடவுள்களையும், கலாசாரத்தையும் புகந்து பேசி வந்திருக்கிறார்.

trichy2006-ஆம் ஆண்டு கலைஞர் அரசு ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோவில் எதிரே நாத்திகவாதியும் தமிழ் மொழியையும் தமிழர்களையும் அவமானப் படுத்தியவருமான ஈ.வெ.ராவின் சிலையை வைத்ததை தமிழ் இந்துக்கள் கடுமையாக எதிர்த்தபோது, “கோவில் கோபுரங்களில் நிர்வாண உருவங்களும், கோவிலுக்குள்ளே நிர்வாண சிலைகளும் இருக்கும்போது, கோவில் எதிரே ஆடையணிந்த ஈ.வெ.ரா இருப்பதில் என்ன தவறு?” என்று கேட்டார் கலைஞர்.

2007-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது, “கணபதி வாதாபியில் பிறந்தவர். பல்லவர் காலத்தில்தான் அவரைத்தமிழகம் கொணர்ந்தனர். எனவே அவர் தமிழ் கடவுள் இல்லை” என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார் கலைஞர். அப்பேர்பட்ட அறிவுஜீவி, விநாயகர் சதுர்த்தி அன்றுதான் தன் கலைஞர் தொலைக்காட்சியை துவக்கினார் என்பது பிரமாதமான நகைமுரண்.

bridge02aசேது சமுத்திரத்திட்டத்தில் ராமர் பாலம் இடிபடுவதை எதிர்த்த இயக்கமானது உச்சக்கட்டத்தை அடைந்தபோது, “17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இருந்தாராம், அவர் பெயர் ராமராம். அவர் கட்டிய பாலத்தைத் தொடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வங்கினார்? அதற்கு ஆதாரமுண்டா?” என்று தன்னுடைய பகுத்தறிவு பட்டொளி வீசுமாறு கேட்டார் கலைஞர். பிறகு தனக்கு மிகவும் பிடித்தமான ஆரியர்-திராவிடர் கோட்பாட்டைக் கையில் எடுத்து, “ராமன் ஆரியக் கடவுள். ராவணன் திராவிட அரசன். சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக செயல்படும் மதவாத (இந்து) இயக்கங்கள் திராவிடத் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை எதிர்க்கும் ஆரியர்கள் ஆவர்” என்று கூறி ராமாயணம் பற்றிய தன் புலமையை வெளியுலகிற்குக் காட்டினார் கலைஞர்.

அதன் பிறகு NDTVயின் ‘Walk the Talk’ நிகழ்ச்சிக்காகத் தன் வீட்டில் அமர்ந்த படியே பேட்டி கொடுத்த கலைஞர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆசிரியர் சேகர் குப்தாவிடம், “துளசி தாஸர் சீதை ராமனின் சகோதரி என்றும் வால்மீகி ராமரைக் குடிகாரன் என்றும் எழுதியிருக்கிறார்கள்” என்று மேலும் தன் ராமாயண ‘அறிவை’ உலகிற்கு உணர்த்தினார்.

ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! நாள்தோறும் அலுவலுக்குக் கிளம்பும் முன் தன் வீட்டின் எதிரே உள்ள கிருஷ்ணர் கோவிலில் ரகசியமாக கிருஷ்ணரை வணங்குவதாகச் சொலப்படுவதுகூட காரணமாக இருக்கலாம்.

ஒரு முதல்வர் என்கிற முறையில், முஸ்லிம் மற்றும் கிறுத்துவ சமுதாயத்தினருக்கு அவர்களின் அனைத்துப் பண்டிகைக்களுக்கும் திருநாட்களுக்கும் வாழ்த்துச் சொல்லும் கலைஞர் தமிழ் இந்துக்களுக்கு மட்டும் எந்தப் பண்டிகைக்கும் திருநாளுக்கும் வாழ்த்துச் சொல்வதில்லை. நாடு முழுவதும், தமிழகம் உட்பட, கொண்டாடப்படும் சங்கராந்தி பண்டிகைக்கு மட்டும், அது ‘பொங்கல்’ எனப்படும் தமிழர் திருநாள் என்று வினோதமான ஒரு காரணத்தைக்கூறி வாழ்த்து தெரிவித்து வருகிறார் கலைஞர்.

அவருக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஞாபக மறதி உண்டு. அதாவது ஈ.வெ.ரா ஒரு கன்னடக்காரர் என்பதும் அவருடைய தாய்மொழி கன்னடம் என்பதும், தன்னுடைய பூர்வீகம் தெலுங்கு என்பதும், தன்னுடைய பாட்டனார் காலத்தில் தெலுங்கு தேசத்திலிருந்து வந்து தமிழகத்தில் குடியேறியவர்கள் என்பதும் அவருக்கு மறந்துவிடும்.
மேலும், பகுத்தறிவுப் பாசறையில் உழலும் இந்த நாத்திகர் ”மஞ்சள் துண்டு” போடும் ஒரு தெய்வீகப் பழக்கத்தைக் கொண்டுள்ளவர். அதற்காகப் பல பகுத்தறிவுக் காரணங்களைக் கூறி மக்களைத் திறமையாகக் குழப்பியவர். உண்மை என்னவென்றால், இவருடைய இயற்பெயர் ‘தக்ஷிணாமூர்த்தி’ என்பதால், தக்ஷிணாமூர்த்தி பகவானுக்கு உகந்த மஞ்சள் நிறத்தை அணியச்சொல்லி இவருக்கு வேண்டிய சோதிடர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

“நான் பார்ப்பனர்களுக்கு எதிரானவன் இல்லை. பார்ப்பனீயத்திற்குத்தான் எதிரானவன். எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனியத்தைப் பழகுபவர்களாக இருந்தால் அவர்களை நனும் என் கட்சியும் எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார் கலைஞர். இதுவும்கூட இரட்டைவேடம் தான். தன்னைச் சுற்றி முக்கியமான பதவிகளில் பிராம்மணர்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வதில் இவர் என்றுமே தயங்கியதில்லை. தனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள்கூட பிராம்மணர்களாக வைத்துக்கொண்டவர். இவருடைய யோகா பயிற்சியாளர்கூட ஒரு பிராம்மணரே. ஆனால் பிராம்மணர்களைக் கிண்டல் செய்தும் அவமதித்தும் பலமுறைப் பேசியுள்ளார் கலைஞர்.

கடந்த சிலநாட்களாக இவருடைய “முரசொலி” நாளிதழ் “கல்கி”, “விகடன்” மற்றும் “தினமணி” ஆகிய பத்திரிகைகளின் மீது “பார்ப்பன இதழ்கள்” என்றும் அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை “பூணல் போட்ட பார்ப்பனர்கள்” என்றும், ”அய்யர்”, “அவாள்”, “இவாள்” என்றும் “செம்மொழியில்” அவதூறு செய்து வருகிறது.
ஆகவே, இந்த இரட்டைவேடக் கலைஞரின் நாத்திக மற்றும் பகுத்தறிவுக் கொள்கையையும், பிராம்மண துவேஷத்தையும், தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் பின்னணியில் அலசிப் பார்ப்பது பொருத்தமானது.

tanjore-temple2007-ஆம் அண்டு பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்பிரமணியம் அவர்கள் பரதக் கலையைத் தோற்றுவித்த பரத முனிவருக்கு ஒரு கோவில் கட்டுவதற்காக அடித்தளம் அமைக்க விழா எடுத்தார். அழைப்பிதழ் அனுப்பியும் வாழ்த்து தெரிவிக்க விரும்பாத கலைஞர், “பரதக் கலையின் அழகையும் நுணுக்கங்களையும் சிலப்பதிகாரத்தில் அருமையாக விளக்கி எழுதியவர் இளங்கோ அடிகள். அவர் அளவிற்குப் பரத முனிவர் ஒன்றும் செய்யவில்லை. மேலும், பரத முனிவருக்கு நினைவுக் கோவில் எழுப்புவதென்பது திராவிடர் மீதான ஆரிய ஆக்கிரமிப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதாகும்” என்று தான் வாழ்த்துத் தெரிவிக்காததற்கு சிறிய பகுத்தறிவு விளக்கமும் அளித்தார்.

இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் பரத நாட்டியக் கலையைப் பற்றி அருமையாக எழுதியிருப்பது உண்மைதான். அதில் யாருக்கும் எந்த மாற்றுக் க்ருத்தும் இல்லை. ஆனால் தெய்வீகமான பரதக் கலையைத் தோற்றுவித்தவர் பரத முனிவர் என்பதிலும் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மாற்றுக் கருத்து இருப்பவர்கள் பரதக் கலையின் வரலாற்றை அறியாதவர்களாகத்தான் இருக்க முடியும். மேலும், இளங்கோ அடிகள் ஏற்கெனவே பழக்கத்திலும், பயிற்சியிலும் இருந்த பரதக் கலையின் நுணுக்கங்களைப் பற்றித்தான் எழுதியிருந்தாரே ஒழிய பரதக் கலையைத் தோற்றுவித்தவர் கிடையாது.

padmaஅப்போது கலைஞர் வாழ்த்துச்செய்தி அனுப்பாததற்கு உண்மையான கரணமாக வேறு ஒன்று சொல்லப்பட்டது. பத்மா சுப்பிரமணியம் பரத முனிக்கு கோவில் கட்ட ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு என்பதாலும், இருவரும் நெருக்கமான தோழிகள் என்பதாலும், மேலும் இருவரும் பிராம்மண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும்தான் கலைஞர் வாழ்த்துச் செய்தி அனுப்பவில்லை என்ற விளக்கம் அரசியல் களத்தில் சொல்லப்பட்டது.

அவருக்கே உரிய சுயநல குணத்தின்படி, சமீபத்தில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்ற பெயரில் நடந்து முடிந்த தி.மு.க. மாநாட்டின்போது, பத்மா சுப்பிரமணியம் குழுவினரின் “பூவிதழும் போர்வாளும்” என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்றி மகிழ்ந்தார் கலைஞர். தற்போதுகூட, தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பத்மா சுப்பிரமணியம் தலமையில்தான் 1000 பரத நாட்டியக் கலைஞர்கள் சேர்ந்து வழங்கும் மாபெரும் நட்டிய நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், தனக்கு வேண்டும் என்று வரும்போது பிராம்மணர்களின் சேவைகளைப் பெறுவதில் கலைஞர் தயங்குவது கிடையாது என்பதும், தனக்கு வேண்டாத போது அவர்களை அவமதித்து தூற்றுவது உண்டு என்பதும் தான். ஆகவே, நான் பிராம்மணர்களுக்கு எதிரி கிடையாது, பிராம்மணியத்திற்குத்தான் எதிரி, என்பதெல்லம் பொய்யன்றி வேறில்லை.

தஞ்சைப் பெரிய கோவில் ஒரு சாபம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது அக்கோவிலுக்கு “கேரளந்தான்” என்று சொல்லப்படும் அதன் பிரதான வயில் வழியே சென்று வரும் முக்கியப் பிரமுகர்களின் பதவிக்கோ, ஆயுளுக்கோ, உடல்நலத்திற்கோ கேடு விளைந்து விடுவதாக நம்பப்படுகிறது. அதற்கு சாட்சியாக 1984-ல் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு வந்து சென்ற பின்னர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட்தும், எம்.ஜி.ஆர் தீவிரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதும் சொல்லப்படுகிறது.

இந்தச் சாபம் சம்பந்தமக ஒரு முக்கியமான விஷயமும் நடந்தது. 1997-ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலின் கும்பாபிஷேகச் சமயத்தில் யாகசாலையில் தீ விபத்து ஏற்பட்டபோது 45 பேர்கள் இறந்ததும் 200 பேருக்கும் மேலானவர்கள் காயப்பட்டதுமான ஒரு துன்ப நிகழ்ச்சி நடந்தது. அப்போது விபத்து நடந்த யாக சாலையைக் காண்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும் தஞ்சை வந்த பல முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பிரதான வாயில் வழியைத் தவிர்த்தனர். அவர்களில் அப்போது முதல்வராக இருந்த கலைஞரும் ஒருவராவார். அவர்கள் அனைவரும் பிரதான வாயில் வழியே செல்லாமல் பக்கவாட்டில் உள்ள “சிவகங்கைப் பூங்கா” வாயில் வழியாகச் சென்றனர்.

தற்போது, கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா நிகழ்சிகளுக்காகவும் பக்கவாட்டில் உள்ள அதே சிவகங்கைப் பூங்கா வாயிலே ஏற்பாடு செய்யப் படுகிறது. அந்த வாயிலை ஒட்டியிருக்கும் சுவர் இடிக்கப்பட்டுப் பூங்காவில் உள்ள செடிகள் அகற்றப்பட்டு முக்கியப் பிரமுகர்கள் செல்லப் பாதை அமைக்கப் படுகிறது. இவையெல்லம் திராவிட நாத்திகத்திற்கும் கழகப் பகுத்தறிவிற்கும் அத்தாட்சி!

இந்தப் பகுத்தறிவுவாதிக்கு ராமரும் விநாயகரும் நம்பகத்தன்மை இல்லாத கட்டுக் கதைகளில் வரும் கற்பனைப் பாத்திரங்கள். ராமர் பாலமும் கற்பனை. ராமாயணமும் கற்பனை தான். ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் தொடர்பான சாபம் மட்டும் கற்பனையல்ல, உண்மையென நம்பத்தகுந்தது!

கலைஞர் ஈ.வெ.ராவின் உண்மையான சீடனாக இருந்தால் பிரதான வாயில் வழியே கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

கலைஞர் அண்ணாதுரையைப் பின்பற்றும் உண்மையான தம்பியாக இருந்தால் கோவிலுக்குப் பிரதான வாயில் வழியே செல்ல வேண்டும்.

கலைஞர் பிரதான வயில் வழியே ஆலயத்தில் நுழைந்து, தான் ஒரு உண்மையான நேர்மையான பகுத்தறிவுவாதி என்றும், ஈ.வெ.ராவின் சீடர் என்றும், அண்ணாதுரையின் மாணவன் என்றும், தன் கட்சித் தொண்டர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகச் சொல்லிக்கொள்ளும் கலைஞர் ஆலயத்தின் பிரதான வாயிலை உபயோகித்துத் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

தஞ்சைப் பெரிய கோவிலுக்குள் பிரதான வயில் வழியே நுழைந்து சென்றால் தான், கலைஞர் “வீரத் தமிழர்” என்று மதிக்கப் படுவார்.

மூடநம்பிக்கையை முறியடிக்க முன்வாயிலில் நுழைவாரா முதல்வர்?

50 Replies to “‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?”

 1. // “17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இருந்தாராம், அவர் பெயர் ராமராம். அவர் கட்டிய பாலத்தைத் தொடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வங்கினார்? அதற்கு ஆதாரமுண்டா?” என்று தன்னுடைய பகுத்தறிவு பட்டொளி வீசுமாறு கேட்டார் கலைஞர். பிறகு தனக்கு மிகவும் பிடித்தமான ஆரியர்-திராவிடர் கோட்பாட்டைக் கையில் எடுத்து, “ராமன் ஆரியக் கடவுள். ராவணன் திராவிட அரசன். சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக செயல்படும் மதவாத (இந்து) இயக்கங்கள் திராவிடத் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை எதிர்க்கும் ஆரியர்கள் ஆவர்” என்று கூறி ராமாயணம் பற்றிய தன் புலமையை வெளியுலகிற்குக் காட்டினார் கலைஞர். //
  ஆனால் இவர் வள்ளுவர் கோட்டம் கட்டியதாகவும், வள்ளுவருக்கு சிலை எழுப்பியதாகவும் சொல்லிக் கொள்வார். எந்த காலேஜுக்கு போனாராம்?
  ராவணன் பிராமணன் என்பதை யாராவது நினைவுபடுத்துன்கப்பா!

 2. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போலருக்கு.. ஆனால் கலைஞர் மசியமாட்டாரே… மஞ்ச துண்டையே எவ்வளவோ விமர்சனம் வந்தாலும் எடுக்காத பகுத்தறிவு வாதி.. இதுக்கா அசந்துருவார்?

 3. அவர் பகுத்தறிவாளரும் அல்லர் கலைஞரும் அல்லர். பதவி நிதி தேடி அலையும் மனிதர். அவர் சந்ததியும் அதே போன்றோர். இவர்களை நம்பும் தமிழர் நிலையும் இந்நாடும் அதோ கதிதான்

 4. ஆசிரியர் அவர்களுக்கு,
  நல்ல அலசல்.

  மிக முக்கிய நிகழ்வாக நான் காண்பது “தமிழக இந்து அறநிலையதுறை”யின்
  நடவடிக்களைத்தான். கீழ்வரும் இந்து கோயில்கள் சீர்திருத்தங்களை
  இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த புதிய
  சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை நடைமுறைபடுத்துவோம் என்று
  கூற பா.ஜ.க நிர்பந்திக்கப்பட வேண்டும்.

  (1)தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறை போன்றவற்றின் அதிகாரம்
  வெகுவாக குறைக்கப்பட வேண்டும்.
  (2)அனைத்து இந்து கோயில்களும் இந்து ஆன்மீகவாதிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  (3)ஒவ்வொரு மாநில அரசும் இந்து கோயில்களின் வருமானம் எப்படி
  செலவு செய்யப்படுகிறது என்ற தணிக்கை செய்யும் அதிகாரத்தை (மட்டுமே)
  பெற்றிருக்க வேண்டும்.
  (4)இந்து கோயில்களில் பூஜைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் போன்ற
  அன்றாட நடைமுறைகளில் எந்த அரசும் தலையிட அனுமதி கொடுக்கப்
  பட கூடாது. நாத்திகர்களும் மற்ற மதத்தவரும் நம் மதத்தை இகழும்
  நிலையில் நடந்த சிதம்பரம் கோயில் நிகழ்வுகள் இனி நடக்காமல்
  இருக்க இந்த சட்டம் உதவும்.
  (5)இந்து கோயில்களின் வருமானம் இந்து மதத்தை பிரச்சாரம் செய்வதற்கும்
  இந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் (மட்டுமே) செலவு
  செய்யப்பட வேண்டும். செலவு செய்யும் உரிமை கோயில்
  அறங்காவலர்களிடம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
  (6)நூலகங்களை கோயில்களுக்குள் திறக்கிறோம் என்னும் பெயரில்
  நாத்திகவாதிகளின் வரலாறு கோயில்களுக்கு வரும் இந்துக்களின் மீது
  திணிக்கப்பட கூடாது. நூலகங்கள் கோல்களுக்கு உள்ளே இருக்கும்
  பட்சத்தில் இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும் புத்தகங்கள் மட்டுமே
  இருக்க வேண்டும்.

  கடைசியாக “சிவன் சொத்து குலநாசம்” என்ற பழமொழி பழங்காலத்திலும்
  கோயில் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டதை நினைவு படுத்தும்.ஆகவே
  கொள்ளையில்லாத எந்த பணம் நிறைந்த அமைப்பும் சமூகத்தில் இருக்க
  முடியாது. இந்த யதார்த்தத்தை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

  ஆனால் தவறு நடக்கும்போது தவறிழைத்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்
  படுவதன் மூலம் பிற்கால தவறுகள் நடைபெற தடையாக இருக்கும்.

  மேற்கூறிய சட்டம் இயற்றப்பட்டால் 90% கோயில் வருமானம் சரியாகவும்
  10% தவறாகவும் போகும்.
  ஆனால் இன்றோ அரசே முற்பட்டு 90% வருமானத்தை கொள்ளை போக
  விட்டு வெறும் 10% ஒழுங்காக செலவு செய்யப்படுகிறது.

 5. //கலைஞர் ஈ.வெ.ராவின் உண்மையான சீடனாக இருந்தால் பிரதான வாயில் வழியே கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

  கலைஞர் அண்ணாதுரையைப் பின்பற்றும் உண்மையான தம்பியாக இருந்தால் கோவிலுக்குப் பிரதான வாயில் வழியே செல்ல வேண்டும்.

  கலைஞர் பிரதான வயில் வழியே ஆலயத்தில் நுழைந்து, தான் ஒரு உண்மையான நேர்மையான பகுத்தறிவுவாதி என்றும், ஈ.வெ.ராவின் சீடர் என்றும், அண்ணாதுரையின் மாணவன் என்றும், தன் கட்சித் தொண்டர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.

  சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகச் சொல்லிக்கொள்ளும் கலைஞர் ஆலயத்தின் பிரதான வாயிலை உபயோகித்துத் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்// வழிமொழிகிறேன். சுயமரியாதை இருந்தால் செய்வார்கள் என்று நம்பலாம்

 6. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ‘the leopard never changes its spots’
  அது போல்தான் இவர்கள் மாறுவார்கள் என்பதும்
  ஹிந்துக்கலை எவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியும் என்பதற்கும்,ஊடகங்கள் அதை செய்யும் கருவியாக உள்ளன என்பதற்கும் இது ஒரு உதாரணம்
  எவ்வளவு ஆயிரம் ஏக்கர்கள் நிலங்களும் மற்ற கோயில் சொத்துக்களும் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன?அதற்கெல்லாம் என்ன நடவடிக்கை?
  திமுக விளம்பரத்துக்காக பலவற்றை அறிவித்து விட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதில் கைதேர்ந்தது .
  அன்றியும் இது ஒன்றை வைத்தே அவர்கள் ஹிந்து விரோதத்தை விட்டு விட்டனர் என்று சொல்ல முடியாது
  இந்த ஈரம் காய்ந்த கையோடு எதாவது சொல்லி ஹிந்து சமயத்தை இழிவு படுத்துவர்.
  இதையெல்லாம் பல முறை பார்த்தாகி விட்டது
  கோயில்களின் வருமானம் எவ்வளவோ மடங்கு அதிகம்
  பல கோயில்கள் சிதிலம் அடைந்தும்,பராமரிக்க வருமானம் இல்லாமலும் உள்ளன
  ஹிந்துக்களுக்குத் தேவை அரசியல் சக்தி
  அது கிடைக்காத வரை யாரும் அவர்களை சட்டை செய்ய மாட்டார்கள்
  அவர்களுக்கு உரிமை மறுப்பார்கள்
  அவர்களை கேலியும், கிண்டலும் செய்வார்கள்
  உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் அவர்களுக்கு இன்னல் நேர்ந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள்
  ம ற்ற மதங்களை சேர்ந்தவர்களை தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவார்கள்
  மற்ற எதுவும் இப்போது முக்கியம் இல்லை

  இப்போது தேவை:
  கோவில்களிலிருந்து அரசும் கட்சிக் காரர்களும் வெளியேற வேண்டும்.
  கோயில் சொத்துக்களை கொள்ளை அடித்தவர்களை கண்டு பிடித்து சொத்துக்களை மீட்க வேண்டும்
  ஸ்ரீரங்கம் கோயில் எதிரே உள்ள ஹிந்துக்களை இழிவு படுத்தும் வாசகங்கள் தாங்கிய ஈவேரா சிலையை எடுக்க வேண்டும்.
  ஹிந்துக்களின் ஊர்வலங்களை அநீதியான முறையில் தடை மற்றும் கட்டுப்பாடு செய்வதை நிறுத்த வேண்டும்.
  திண்டுக்கல் பத்மகிரியில் அம்மன் பிரதிஷ்டையை அனுமதிக்க வேண்டும்
  ராமர் சேதுவை தகர்த்து சேது கால்வாய் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்
  முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது
  ஹிந்துக்களை மதம் மாற்றுவதை தடுக்க மத மாற்ற சட்டம் கொண்டு வர வேண்டும்
  பசுவதை சட்டம் கொண்டு வர வேண்டும்
  இதையெல்லாம் செய்வார்களா?
  இல்லை என்றால் இதெல்லாம் தேர்தல் தேர்தல் வரும் பொது ஹிந்துக்களை ஏமாற்றும் வேலை என்றுதான் கொள்ள வேண்டும்
  விரைவில் தேர்தல் வருவதை நாம் மனதில் கொள்ள வேண்டும்

 7. இந்த பதிவை ஒரு சவாலாக ஏற்று கலைஞர் அவர்கள், பெரிய கோவிலின் பிரதான வாயில் வழியாக கோவிலுக்குள் நுழைந்து புதிய வரலாற்றை படைக்க வேண்டும். அவரால் முடிய வில்லை என்றால் வருங்கால முதல்வராவது இந்த சவாலை ஏற்று கொள்ள வேண்டும். பிரதான வாயில் மூலம் பெரிய கோவிலில் நுழைந்து பல்லாண்டு நல்லாட்சி தர வேண்டும். இல்லாத கடவுளுக்கு மதிப்பு கொடுக்க கூடாது.
  கலைஞர் : இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னை கவுக்க பாக்குறீங்களா. நான் என்னைக்குமே யாருக்கும் எதிரி கெடயாது. ஆமாம் சொல்லி புட்டேன்.

 8. Pingback: Indli.com
 9. //ஆனால் இன்றோ அரசே முற்பட்டு 90% வருமானத்தை கொள்ளை போக
  விட்டு வெறும் 10% ஒழுங்காக செலவு செய்யப்படுகிறது
  //

  பாலாஜி அவர்களே – இது மிக தவறான ஒரு தகவல் – இதை உங்களுக்கு யார் சொன்னார் – 99.9 % கொள்ளை போகிறது – கோவில்களில் தினப்படி கூட பக்தர்கள் தரும் பணத்தில் தான் ஓடுகிறது – அரசினால் கொள்ளை அடிக்க முடியாத ஒரே பணம் தீட்சிதர்களுக்கு கொடுக்கப்படும் மாதாந்திர சம்பளம் – அது ரூபாய் 500 முதல் ரூபாய் 3000 வரை இடத்துக்கு தகுந்தார் போல் வேறுபடுகிறது – தீக தடியர்கள் கோவில் நிலங்களை கொள்ளை அடித்து அதில் வரும் நெல்லை கோவில் உள்ளேயே அடுக்கி வைத்து விற்கிறார்கள்

  தட்டில் காசு போடாதீர்கள் உண்டியலில் போடுங்கள் என்று அரசே எழுதி வைக்கிறது – பெரும்பாலும் தீக காரன் தான் அறநிலையத்துறை அலுவலராக கோவிலில் இருக்கிறான்

  சமீபத்தில் மன்னாகுடியில் நடந்த சம்ப்ரோக்ஷனத்தை தாங்களே நடத்தி வைத்ததாக பூரா ஊர் cut out வைத்து முழங்கியது பகுத்தறிவின் புகலகம் கழகம் – அதில் தளபதியாரும் தாத்தாவும் ராஜகோபலான் அருகில் photo pose வேறு – உண்மை என்ன என்றால் அதை பக்தர்களிடமிருந்து சிரமப்பட்டு திரட்டிய முப்பது லட்சம் பணத்தில் தீட்சிதர்களே நடத்தினர்

  இதில் வேடிக்கை என்ன என்றால் கழகம் பகுத்தறிவை எல்லாம் பறக்கவிட்டு விட்டு இப்படி விளம்பரத்தில் இறங்கியிருக்கும் காரியம் அவர்களின் பயத்தையே காட்டுகிறது

 10. இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், வெறுமனே பார்ப்பனர்களின் சதி என்று சொல்லி தப்பித்துக் கொள்வார். இல்லன்னா, இப்படி ஒரு கேள்வியே எழவில்லை என்பதுபோல எந்த கருத்தும் சொல்லமாட்டார்.
  கருணாநிதிக்கு இதெல்லாம் சகஜம்ப்பா….
  காலை டிபனுக்கு பிறகும் மதிய உணவுக்கு முன்பும் சில மணி நேரங்கள் உண்ணாவிரதம் இருந்தவர்தானே அவர்.
  அவர் பகுத்தறி வேஷம் எப்போதே கலைந்துவிட்டது. அவரிடம் இருந்து பதில் வரும் என்று கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். ‘வலிக்காத மாதிரியே’ இருந்துடுவார்.
  ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
  *ஏகலைவன்*

 11. //தமிழ் இந்து பக்தர்கள் கோவில் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை மற்றும் அவர்கள் அளிக்கும் நன்கொடைகள் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த 450 கோடி ரூபாய் என்பது வெறும் வேர்க்கடலை சமாசாரம் //
  வேர்க்கடலை சமாசாரம் என்பது சரிதான். அது என்ன தமிழ் ஹிந்துக்கள் மட்டும் தான் உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனரா?
  சரி விடுங்க..
  //ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! நாள்தோறும் அலுவலுக்குக் கிளம்பும் முன் தன் வீட்டின் எதிரே உள்ள கிருஷ்ணர் கோவிலில் ரகசியமாக கிருஷ்ணரை வணங்குவதாகச் சொலப்படுவதுகூட காரணமாக இருக்கலாம்.//
  எந்த தெய்வத்தை இவர் வேண்டுனா நமக்கு என்ன சார்? மேலும் கிருஷ்ணரை தொழுதுவிட்டு இராமனை தூற்றினால் எல்லாம் ஆன கடவுள் என்ன சிரித்து கொண்டே ஆகா தமிழகத்தின் முதல்வர் எவ்வளவு நல்லவர் என விட்டு விடுவாரா இல்லை வாழ்த்துவாரா? கிடைக்கும் தண்டனை கிடைத்து கொண்டுதான் இருக்கும் அல்லது கிடைக்கும். !!!
  //ஒரு முதல்வர் என்கிற முறையில், முஸ்லிம் மற்றும் கிறுத்துவ சமுதாயத்தினருக்கு அவர்களின் அனைத்துப் பண்டிகைக்களுக்கும் திருநாட்களுக்கும் வாழ்த்துச் சொல்லும் கலைஞர் தமிழ் இந்துக்களுக்கு மட்டும் எந்தப் பண்டிகைக்கும் திருநாளுக்கும் வாழ்த்துச் சொல்வதில்லை. நாடு முழுவதும், தமிழகம் உட்பட, கொண்டாடப்படும் சங்கராந்தி பண்டிகைக்கு மட்டும், அது ‘பொங்கல்’ எனப்படும் தமிழர் திருநாள் என்று வினோதமான ஒரு காரணத்தைக்கூறி வாழ்த்து தெரிவித்து வருகிறார் கலைஞர்.//
  திரும்ப //தமிழ் இந்துக்களுக்கு// சரி விடுங்க !!
  இவரு வாழ்த்து சொல்லலேன்னு இங்க யாருக்கும் கவலையும் இல்ல, அத்தால் ஒரு பயனும் இல்லை, மேலும் வாழ்த்து சொல்லும் தகுதியும், ஞானமும்,தராதரமும் இல்லாத ஒரு ஆள்.
  //2007-ஆம் அண்டு பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்பிரமணியம் அவர்கள் பரதக் கலையைத் தோற்றுவித்த பரத முனிவருக்கு ஒரு கோவில் கட்டுவதற்காக அடித்தளம் அமைக்க விழா எடுத்தார். அழைப்பிதழ் அனுப்பியும் வாழ்த்து தெரிவிக்க விரும்பாத கலைஞர்,//
  மேன்மைமிக்க பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு அறிவு எங்கே போனது ??? ஒரு சிலருக்கு பத்திரிக்கை வைப்பதே அவர்கள் வர வேண்டாம் என நினைத்து தான். இதில் வாழ்த்து பைத்தியம் பிடித்து அலைவானேன்??

  ஆன இவங்க பகுத்தறிவு சிரிப்பா சிரிக்குது !!!

 12. //அவருக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஞாபக மறதி உண்டு. அதாவது ஈ.வெ.ரா ஒரு கன்னடக்காரர் என்பதும் அவருடைய தாய்மொழி கன்னடம் என்பதும், தன்னுடைய பூர்வீகம் தெலுங்கு என்பதும், தன்னுடைய பாட்டனார் காலத்தில் தெலுங்கு தேசத்திலிருந்து வந்து தமிழகத்தில் குடியேறியவர்கள் என்பதும் அவருக்கு மறந்துவிடும்.//

  ஈ வெ ராமசாமி நாய்டு (நாயுடுகள் தாய்மொழி தெலுங்கு அல்லவா)

  கலைஞ்சர் இசை வேளாளர் மரபினை சேர்ந்த தமிழர் என்பது தான் கேள்விபட்டிருக்கிறேன்.
  இசை வேளாளர் பிரிவினை மிகவும் பிற்படுத்த பட்ட வகுப்பில் சேர்த்த போது இதனை தான் சொன்னார்கள்.
  நான் மேலுள்ளவாறு தான் நம்பிகொண்டுள்ளேன்.

  தயவு செய்து யாரவது விளக்க முடியுமா?

 13. விநாயக சதுர்த்தி நிகழ்சிகளை ‘விடுமுறை நாள் நிகழ்சிகள்’ என்று கலைஞர் டி வீயில் சொல்கின்றனர்
  ஆனால் ஹிந்துக்களின் ஒட்டு மட்டும் இனிக்கிறதோ?
  தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டார்
  ஆனால் ரம்ஜான்,கிறிஸ்தமஸ் வாழ்த்து சொல்வார்
  ஹிந்துக்கள் எவ்வளவு நாள்தான் இப்படி ஏமாளிகளாக இருப்பது?
  இழிவுகளைத் தாங்குவது?
  அவர்கள் செய்த பாவம் என்ன?

 14. babu pls read about periyaar and his cheap politics and thoughts / principles here itself in tamilhindu.com. you can find many valuable treasures on him.

 15. //ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! நாள்தோறும் அலுவலுக்குக் கிளம்பும் முன் தன் வீட்டின் எதிரே உள்ள கிருஷ்ணர் கோவிலில் ரகசியமாக கிருஷ்ணரை வணங்குவதாகச் சொலப்படுவதுகூட காரணமாக இருக்கலாம்.//

  நம்பும் படி இல்லை.

  //அவர்களில் அப்போது முதல்வராக இருந்த கலைஞரும் ஒருவராவார். அவர்கள் அனைவரும் பிரதான வாயில் வழியே செல்லாமல் பக்கவாட்டில் உள்ள “சிவகங்கைப் பூங்கா” வாயில் வழியாகச் சென்றனர்.//

  இது உண்மை.

 16. ஹிந்துக்கள் கருணாநிதியைப் புரிந்து கொள்ளவே இல்லை
  அதிலும் குறிப்பாக இந்த விஷயத்தில் படித்த ஹிந்துக்களைப் போன்ற அப்பாவிகளை உலகிலேயே பார்க்க முடியாது
  படிக்காத பாமரன் கூட ஒரே வரியில் கருணாநிதியைப் பற்றி நறுக்கு தெரித்தாற் போல் சொல்லி விடுவான்.
  ஹிந்துக்கள் மனோபாவம் எப்படி என்றால் ஒருவன் ஆயிரம் கொலைகளைச் செய்து விட்டு ஒரு நாய்க்கு ஒரு பிஸ்கோத்து போட்டு விட்டால் ‘ஆஹா, எவ்வளவு நல்லவன்’ என்பார்கள்.

 17. @ சீனு

  ~~~~~//ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! நாள்தோறும் அலுவலுக்குக் கிளம்பும் முன் தன் வீட்டின் எதிரே உள்ள கிருஷ்ணர் கோவிலில் ரகசியமாக கிருஷ்ணரை வணங்குவதாகச் சொலப்படுவதுகூட காரணமாக இருக்கலாம்.//

  நம்பும் படி இல்லை. ~~~~

  நான் கேள்விப்பட்ட தகவல் கீழே:

  சமீபத்தில் விஜயகாந்த் திண்டிவனத்தில் பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பதை 5/9/10 தேதியிட்ட ஜூவியில் படித்தேன்:

  *”தினமும் முதல்வர் காலையில் வீட்டைவிட்டு வெளியே வரும்போது அவர் வீட்டுக்கு எதிரில் இருக்கும் கிருஷ்ணர் கோயிலின் அருகில் நின்றபடி ஒருவர் கும்பிடுவார்.
  முதல்வரும் அவருக்கு பதில் வணக்கம் செலுத்துவதுபோல கிருஷ்ணரைப் பார்த்துக் கும்பிடுவார். ஒருமுறை நானே நேரில் பார்த்தேன். வீட்டின் கதவு திறந்தவுடன் ஒரு போலிஸ்காரர் ஓடிவந்து எலுமிச்சம் பழம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு கிருஷ்ணரைப் பார்த்துக் கும்பிட்டார். அப்போதுதான் எனக்கே தெரிந்தது அவரின் மறுபக்கம்.”*
  **

  அப்புறம் இன்னொரு கிசுகிசு:

  திராவிட மாயை புத்தகத்தின் இரண்டாம் பாகம் வரப்போகிறதாம். அதில் இதைவிட சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் உண்டாம்.

 18. கருணாநிதியோ அல்லது லாலு பிரசாத் யாதவோ முலயாம் சிங் யாதவோ தனிப்பட்ட முறையில் கிருஷ்ணன் மீது பக்தி உள்ளவர்களாக இருக்கலாம். அது அவர்களது சொந்த விஷயம்.

  ஆனால், அவர்கள் கிருஷ்ணனை நம்புபவர்களது உரிமைகள் மீது ஏறி மிதிக்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத இந்துக்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். தீய சக்திகளை வளர்த்துவிடுகிறார்கள். அதுதான் பிரச்னை. ராவணன் தனிப்பட்ட முறையில் சிவன் மீது பெரும்பக்தி உடையவன். ஆனால் அவன் கெட்ட செயல் செய்தான். அதர்மத்தை வளர்த்தான். அவனது பக்திக்கு ஏற்ப அவன் நல்லவனாக வாழவில்லை. அவனது அதர்ம காரியம் நிறுத்தப்பட வேண்டும். அதுதான் இங்கே முக்கியம்.

  ஆகவே, கருணாநிதி கிருஷ்ண பக்தர் என்று கிசுகிசு பாணியில் இந்துக்களை ஏமாற்றுவதற்கு அனுமதிக்காதீர்கள். இறை நம்பிக்கை இருந்தாலும், இந்துக்களை அவமதிக்காத ஜெயலலிதாவும் இதே போல அதர்ம காரியங்களுக்கு துணை போனால், அவரையும் எதிர்த்துத்தான் ஆகவேண்டும்.

 19. “கணபதி வாதாபியில் பிறந்தவர். பல்லவர் காலத்தில்தான் அவரைத்தமிழகம் கொணர்ந்தனர். எனவே அவர் தமிழ் கடவுள் இல்லை” என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார் கலைஞர்.
  அனைத்து ஹிந்துக்களும் வணங்கும் பிள்ளையாரை தமிழ் கடவுள் இல்லை கண்டுபிடித்த கலைஞருக்கு அவர் பாராட்டும் ஏசு கிரிஸ்துவும் அல்லாவும் தமிழ் கடவுளர்களா? கடவுள் நம்பிக்கை இல்லை என்பது அவரவர்களின் பிரத்தியேக உரிமை, அதை ஏதோ அரசு சட்டம் போல் மக்கள் மீது திணிப்பது என்பது அராஜகம். பார்ப்பனர்கள் என்றாலே அவருக்கு என்றும் ஒரு இளக்காரம், ஏளனம் தான். தமிழ் நாட்டு பிராமணர்களின் தாய் மொழி என்றாலும் அவர்கள் தமிழர்களாக அங்கீகரிக்கப்படாத அவலம் தமிழ் நாட்டில் மட்டும் தான். பார்ப்பனர்களையும் அவர்கள் தமிழ் பேசும் விதத்தையும் கேலி செய்து அவமானப்படுத்துவது என்பது தமிழ் சினிமாவில் மட்டும் தான். இதற்க்கு இந்திய அரசாங்க சென்சார் போர்டு அனுமதியும் வழங்குகிறது. தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் வீட்டிலும், இன்னும் இதர சாதியிலும், ஏன் வட்டாரங்களிலும் மொழி பேசுவது வேறுபடத்தான் செய்யும். சன் டிவி போன்ற தமிழ்த் தொலைக்காட்சி அனைத்திலும் தமிழ் உச்சரிப்பு கொலை செய்யப்படுகிறது. அதை செம்மொழி காப்பாளர் திருத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் கூரை ஏரி கொக்கரிக்கிறார், தான் மட்டுமே தமிழர்களின் கடவுள் போன்று. ஏமாறுகிறவர்கள் எதிர்க்காமல் இருக்கிறவரையில் ஏமாற்று வித்தைக்காரர்கள் ஏமாற்றி அவர்களும் தங்கள் குடும்பங்களும் மட்டும் முன்னேற திட்டங்கள் தீட்டி செயல்படுவார்கள். இத்தகையவர்களையும், கடவுள் நம்பிக்கையில் குறுக்கிடுபவர்களையும் எதிர்க்கும் புரட்சி சக்தி ஒன்று உருவாகி அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டும் காலம் வார பிரார்த்தனை செய்கிறேன்.

 20. இந்தப் பெரிய கோயிலுக்கு, ‘தான்’ என்ற அகந்தையுடன் வரும் எந்த ஆட்சியாளரும் அதிகாரத்தை இழப்பார் என்று எழுதி வைத்திருக்கிறார் ராஜராஜன். அதனால் தான் இங்கு செல்லும் ஆட்சியாளர்களின் மகுடம் பறிபோகிறது என்பது கர்ண பரம்பரை நம்பிக்கை.

  இதை முறியடிக்க, கருணாநிதி ஒன்றும் தான் என்ற அகந்தை இல்லாதவர் அல்ல. கருணாநிதி அந்த நுழைவாயில் வழியே வந்து ராஜராஜன் நிகழ்த்திய உலக சாதனையை கேவலப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

 21. I find some of the Hindu friends have expressed in the opinion box so many things. I can summerise and give you the recap.

  1. Temples should come under one administration which is not govenmental but under the control of relegious heads forum
  2. Conversion only from Hindus should be banned. Others can have their choice.
  3. The amounts diverted from the Hindu temples from 1947 Aug1st should be given back with interest to the temple administraion authorities. If the amount have gone to the other relegious institutions, should be collected back from them and credited back to Temple administration authoriies with a token fine from the govt. atleast 30%. This 30% also can be collected from the party who rules the government and misappropriated the temple fund. ====vishwa dharma vicharan====

 22. தலைப்பே சரியில்லை
  கருணாநிதி பகுத்தறிவுவாதி என்று யார் சொன்னது ?
  முதலில் பகுத்தறிவது என்றால் என்ன?
  நாம் வெறுமனே அந்த வார்த்தையை பிடித்துக் கொள்கிறோம்
  நல்லது எது தீயது எது என்று பிரித்து உணர்வது தான் பகுத்தறிவு
  அதைச் செய்த பின் தீயதைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது சொல்லாமல் விளங்கும்

  தீயவை தீய பயத்தலால் தீயவை தீயவை தீயினும் அஞ்சப்படும் என்கிறது குறள்
  ஆனால் அவர் இதை உணர்ந்தாரா?

 23. கருணாநிதி தனக்குச் சாதகமான எதையும் “எடுத்துக்கொள்ளும்” ஒரு சராசரி, சாதாரண மனிதன். கொடுவார்த்தை கூறுதல் கொடும்செயல் புரிதல் என்பனவற்றில், சராசரிக்கும் குறைவான மனிதனாகச் செயல்படுபவர். எவ்வளவோ ஆன்மீகத் தகவல்களை எவ்வளவோ வழிகளில் அறிந்து, புரிந்து, தெரிந்து நடக்க, எவ்வளவோ மக்களுக்கு, வாய்ப்புக்கள் இருந்து, அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு நல்வழிப்படும் பாரதத் திருநாட்டில், கருணாநிதி போன்ற ஒரு சிலருக்கு அமைய வில்லை என்றால், அது அவர்கள் செய்த பாபத்தினால் ஆகும். ஆனால் கருணாநிதிக்கு பிடிக்கவில்லைஎன்றோ , பிடிக்கும் என்றோ, இந்து சமய தெய்வாங்களோ, முறைகளோ,சமுதாயமோ,உன்னதம் குறைந்த நிலையில் இல்லை. கருணாநிதியின் முப்பாட்டன்களும் பிறப்பதற்கு முன்பிலிருந்தே, இந்து சமுதாயம் இருக்கின்றது. இது தெரிந்தும், பேச்சில் அறியாமை இருப்பது, முட்டாள்தனத்திற்கு அடையாளமாகுமே அன்றி, கலைஞர், அறிஞர் என்ற அடைமொழிகளுக்குப் பொருந்துவதாக ஆகமுடியாது. மற்றும், ராமர் ஒரேஒரு மனைவியை மட்டுமே அடைந்தவர் என்பதும், தன்னைப்போல் இல்லாமல் இருப்பதும், ராமர் மேல் கோபத்தை உண்டுபண்ணுகிறது. அநாதி பிரம்மச்சாரி கிருஷ்ணர், பலரை மணம்புரிந்ததாக வருவதால், தானும் அவ்வாறிருக்கும் நிலை உள்ளதால், கிருஷ்ணரைப் பங்குக்கு கொள்ள நினைக்கிறார். “ஸ்ரீவாரி வைன்ஸ்” என்று சிலர் வெங்கடாசலபதியை பங்குக்கு அழைப்பதுபோலத்தான் கிருஷ்ணர் பிடிப்பும். .

 24. // தலைப்பே சரியில்லை
  கருணாநிதி பகுத்தறிவுவாதி என்று யார் சொன்னது ?
  முதலில் பகுத்தறிவது என்றால் என்ன?
  நாம் வெறுமனே அந்த வார்த்தையை பிடித்துக் கொள்கிறோம்
  நல்லது எது தீயது எது என்று பிரித்து உணர்வது தான் பகுத்தறிவு
  அதைச் செய்த பின் தீயதைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது சொல்லாமல் விளங்கும்//

  அலோ வாத்யாரே! இன்னா நீ பேஜார் பண்ற? திராவிட அரசு… திராவிட தலைவன்… அப்டீன்னு தான் ஸொல்றோம்! அத்தொட்டு அது உண்மையா, இன்னா?

  அதாவது வாத்யாரே! திராவிடன் அப்டீன்னா ஒரிஜினல் மீனிங்கே வேற… இன்னா புர்தா?

  ஆனாலும், நாம இன்னா ஸொல்றோம்? இந்த தி.க, தி.மு.க., அ.தி.மு.க, தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., அப்டீன்னு இருக்கற கட்சியெல்லாம் தான் திராவிட கட்சின்னும், அவங்க தலைவனுங்கல்லாம் திராவிடச் தலைவனுங்கன்னும் ஸொல்றோம்.

  அதே போல தான் வாத்யாரே! பகுத்தறிவு அப்டீன்ற வார்த்தையும்.
  அத்த புரிஞ்சுக்காம, நீ பாட்னு இன்னாவோ டைலாக் வுட்டுனு கீற, அ ஆங்?
  அட போவியா…

  இன்னா வர்டா?

  மன்னாரு.

 25. போஜ ராஜன், ராஜராஜன் என்ற புகழ் மிக்க அரசர்களை நமக்குத் தெரியும். ஆனால், கூஜாராஜனைப்பற்றித் தெரியுமா? கருணாநிதிதான் அது. சோனியா காந்தியின் கூஜாராஜன், ராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோவிலுள், இந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டு, பக்தன் போல, முறையான நுழைவு வாயிலில் செல்ல முடியாமல், கயவர் கும்பல் தலைவன் போல், தன கூட்டத்துடன், வேறு வழியில் போவாராம். அவரவர் விதி வழி அடைய நின்றனரே என்பது இதுதான். வெட்கம், மானம் குறைவாக இருப்பதுதான் கலியுகத் தன்மானம். கேவலப்படுத்திவிட்டு, அதே வீட்டிற்குள் நுழைபவர்களை, என்ன சொல்லி அழைப்போம்? இந்து மதத்தை, திராவிடம் ஆரியம் என்றெல்லாம் கூறி, பிரிக்க முடியாமல் இவர்களைத் திண்டாட வைப்பது, பிடிக்காமல் போனாலும், கோவிலுக்குள் தாங்களே நுழைவதைத் தடுத்துக் கொள்ள முடியாமல் இருப்பது, ஆகியன, சிவபிரான் திருவிளையாடல்களே.

 26. நன்று

  ராமன் வாழ்ந்ததற்கான வரலாற்று குறிப்புகள் ஏதேனும் உள்ளதா? தயவு செய்து சும்மா வாய்சவடால் அடிப்பதை நிறுத்தி விட்டு, உண்மைய அறிய முற்படுவோம்! நமக்கு இன்னும் ஆழ்ந்து சிந்திக்கின்ற மனபக்குவம் வேண்டும். உதாரனத்திருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கற்சிலைகளுக்கு இவள்ளவு முக்கியத்துவம் கொடுக்கும் சிந்தனையை உருவாக்கியது நாம்தான், இது மனிதனின் அறிவிற்கு சவால் விடும் மூட நம்பிக்கை அன்றி வேறொன்றும் இல்லை. தமிழ்ஹிந்து ஆர்வலர்கள் இதை கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்

 27. அய்யா ஹிந்து நண்பர்களே .
  யாரை யாரோடு ஒப்பிட வேண்டுமென்று தெரியாதா உங்களுக்கு ? ஹிந்து என்னும் மாபெரும் சமயத்தை ஒரு நாத்திக வாதியுடன் ஒப்பிடுகிறீர்களே . அது மட்டுமில்லாமல் ஹிந்து மதம் ஒவ்ரங்கஷீப் , பாபர் போன்ற கொடியவர்களை கடந்தும் அழியாமல் இருக்கிறது . அவர்களோடு ஒப்பிடும் போது, கலைஞர் போன்ற நாத்திக வாதிகள் சிறு புல்லுக்கு சமம் . கூடிய விரைவில் தேர்தல் வர போவதால் அவர் நடத்தும் கேலி கூத்து இது . ராஜராஜன் ஆன்மா இதே ஒரு போதும் ஏற்று கொள்ளாது . மாபெரும் அக்கோவிலை கட்டி தன பெயரை கூட பொறித்து வைக்காத அந்த மாமன்னன் எங்கே ? போது சொத்தில் தனக்கு தானே பாராட்டு விழா எடுக்கும் இவர்கள் எங்கே ? சரியான நேரத்தில் முகமூடியை கிழித்து காட்டி விட்டீர்கள் ஆசிரியர் அவர்களே , நன்றிகள் பல

 28. //ராமன் வாழ்ந்ததற்கான வரலாற்று குறிப்புகள் ஏதேனும் உள்ளதா? தயவு செய்து சும்மா வாய்சவடால் அடிப்பதை நிறுத்தி விட்டு, உண்மைய அறிய முற்படுவோம்!//

  சின்ன புள்ள தனமா இருக்கு, எங்கே இருந்து வரிங்க வேறு எதாவது ஒரு கண்டத்திலே இருந்தா? உங்க தலிவரே ஒத்துகொண்டார். அவன் ஆரியன் அவன் இங்க வந்து ஒரு திராவிடனை கொன்னுபுட்டான்னு.
  தானை தலிவரும் கூட ஒத்துகினாறு ஆனா லைட்டா ஒரு டவுட்டு ராமன் சீதைக்கு சித்தப்பனா? இல்ல அன்னநானு.

  அவரே ராமர் பாலம் கட்டி அப்பால போர் முடிஞ்ச உடன் அதனை இடிக்க சொல்லிட்டருன்னு ஆதாரத்தோட ஒத்துகினாறு. பகுத்தறிவு சிங்கமும், தன்மான தலையும் ஒத்துகிட்ட ஒருவரை நீங்க ஒத்துக்காட்டி உங்க தலிவருங்க பொழப்பு ஓட்ட முடியாது நைனா.

  அயோக்யனா(யார் எப்டி எதிர்பாக்ரன்களோ அப்டி) , திருடனா (நம்மை போலதான் நம் கடவுளை நினைப்போம் இல்ல அதனால), ஆரியனா (நமக்கு பொழப்பு ஒடுனுமுள்ள அதுக்காவ),குடிகாரனா( நம்மை கெட்ட ஆசையை எல்லாம் கடவுலாண்ட போடனுமுள்ள அதுனால) ஒரு ராமன் இருப்பதை தான தலிவரே ஒத்துகினாறு, பகுத்த அறிவாம்ல அதுலா கண்டு பிடிசிகிராறு தலிவா. இன்ன தலிவா பகுத்த அறிவு உள்ளமாரி பேச மாற்ற?

 29. https://download854.mediafire.com/6bnb71a0n8rg/o0nvqidahhj/Scientific+And+Historic+Facts+About+Adam%27s+Bridge+Ramar+Sethu.wmv

  தலிவா ஆதாரம் கேட்டியே அறிவியல்,வரலாறு, புவ்யல் பட்ச ஒர்தார் சொல்லிகிறாரு பாத்துக்கோ.
  அப்பால இந்த அகழ்வாராச்சி பண்ணிகிரங்கோ அந்த ராமர் பொறந்த இடத்திலே அத்தோட விளக்கத்தையும் நம்ம தமிழ் ஹிந்து ஒரு கட்டுரை போட்டுகிது அதையும் பட்ச்சு பாரு தலிவா.

  பகுத்த அரவும் ஒத்துகிச்சு, அறிவியல்,வரலாறு, புவ்யல் அறிவும் ஒத்துகிச்சு உனக்கு இன்ன டவுட்டு நைனா?

 30. //உதாரனத்திருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கற்சிலைகளுக்கு இவள்ளவு முக்கியத்துவம் கொடுக்கும் சிந்தனையை உருவாக்கியது நாம்தான், இது மனிதனின் அறிவிற்கு சவால் விடும் மூட நம்பிக்கை அன்றி வேறொன்றும் இல்லை. தமிழ்ஹிந்து ஆர்வலர்கள் இதை கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்//

  சரியாக சொல்கிறீர்கள், மனிதராக பிறந்த தலைவருக்கு சிலையும் (உருவம்தான்)
  அதனை தலைவராகவே உருவகபடுத்தி,மரியாதையுடன் மாலை போட்டு ,(பக்தி )
  அதற்கு வருடா வருடம் ஜெயந்தி விழா (அதான் பிறந்த நாள் விழா) மற்றும் வழிபாடு (அதான் அவர் வாழ்க,அவர் புகழ் வளர்க, கொள்கை வளர்க, தொண்டர்கள் எல்லாம் வாழ்க என்று கோஷம் போடுவோமே)
  பக்தர்களுக்கு (தொண்டர்கள்) பிரசாதம் கொடுத்து (குவர்டரும்,கோழி பிரியாணியும் கொடுப்போமே) .
  ப்ரோகிதருக்கு தட்சணை (அதான் கச்சி தலைவருக்கு,கூடத்தில் பேச வருபவருக்கு காசு கொடுப்போமே)
  உபன்யாசம் எல்லாம் வச்சு (தலைவர் புகழை ????பற்றி எல்லாம் பேசி)

  அப்புறம் பத்தாதற்கு பெரிய கொலைகாரன் கொள்ளைக்காரன் எல்லாரையும் அந்த புனித (????) நாளை முன்னிட்டு சிறையில் இருந்து வெளியே விடுவோமே (இதை கடவுள் வழிபாட்டினர் செய்வதில்லை)

  இது நிச்சயம் மனிதனின் அறிவிற்கு சவால் விடும் மூட நம்பிக்கை அன்றி வேறொன்றும் இல்லை.

  கற்சிலைகளுக்கு இவள்ளவு முக்கியத்துவம் கொடுக்கும் சிந்தனையை உருவாக்கியது நாம்தான்.

  பகுத்த அறிவு ஆர்வலர்கள் இதை கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.

 31. வணக்கம்

  /////சரியாக சொல்கிறீர்கள், மனிதராக பிறந்த தலைவருக்கு சிலையும் (உருவம்தான்)
  அதனை தலைவராகவே உருவகபடுத்தி,மரியாதையுடன் மாலை போட்டு ,(பக்தி )
  அதற்கு வருடா வருடம் ஜெயந்தி விழா (அதான் பிறந்த நாள் விழா) மற்றும் வழிபாடு (அதான் அவர் வாழ்க,அவர் புகழ் வளர்க, கொள்கை வளர்க, தொண்டர்கள் எல்லாம் வாழ்க என்று கோஷம் போடுவோமே)……………………கற்சிலைகளுக்கு இவள்ளவு முக்கியத்துவம் கொடுக்கும் சிந்தனையை உருவாக்கியது நாம்தான்///

  சகோதரர் பாபு அவர்களே என்ன இப்படி திடீரென்று அமர்களப் படுத்தி விட்டீர்கள். நல்ல விளக்கம், இப்படி நான் நேற்றுதான் எண்ணினேன், எப்படியோ எதை அவர்கள் மூடப் பழக்கம் என்கிறார்களோ அதை அவர்களே செய்வதை நினைத்தால், அவர்களை அல்ல அவர்களை நம்பி ஏமாறும் மக்களை நினைத்தால்தான் மன்னாரு பாஷையில் ”ரொம்ப தமாஷாகீதுப்பா”.

  நாம் கடவுள் சிலைகளின் மீது பக்தி செலுத்துகிறோம், அவர்களோ அதயே மரியாதை செலுத்துவதாக பீற்றிக் கொள்கிறார்கள்.

  ஆனாலும் இரண்டுக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. நாம் ஆண்டவன் மீதுள்ள பக்தியால் அதைசெய்கிறோம். ஆனால் அவர்களோ நம்மை ஆள்வதற்காக செய்கிறார்கள்.( இல்லைஎனில் தன தலைவனையே மதிக்கதெரியாதவன் என்று எதிர்கட்சிக் காரன் கூவுவானே?)

 32. நன்றி சகோதரர் பாஸ்கர் அவர்களே.
  இது நம் ஒவ்வொருவருக்கும் தோன்றும் உண்மையான கருத்துக்கள் என்றே நினைக்கிறேன், ஆனால் அவர்களோ (மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள் என்று தங்களை கூறிகொள்பவர்கள்) தங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்து கொண்டு நமக்கு உபதேசம் செய்ய வருகிறார்கள்.
  இது அவர்களின் அயோக்ய தனம் அல்லவா? சிறுவர்கள் இவர்களின் சுய ரூபம் தெரியாமல் இவர்களிடம் ஏமாந்து விடுவார்கள். வருங்கால சிறுவர்களுக்கு நாம் இவர்களின் செயலை விளக்கியாக வேண்டும். இவர்களின் கொள்கைகள் (அவர்கள் சொல்லி கொள்வதுதான்) எல்லாமே ஓட்டை விழுந்தவை தான். எதிலுமே உண்மையோ, உயர்ந்த தத்துவமோ, லாஜிக்கோ இருக்கவே இருக்காது.

 33. இராமன் என்ற பெயரில் எழுதும் நண்பரே,

  1)கற்சிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் என்ன தப்பு? ஆழ்ந்து சிந்திக்கிற மனப் பக்குவம் இருப்பவன் கற்சிலையை வணங்குவதை குறை சொல்ல மாட்டான், புரிந்து கொண்டு ஆதரிப்பான். உங்களின் அப்பா, அம்மா போட்டவை பார்க்கும் போது உங்கள மனதில் அன்பு உணர்ச்சி, நெகிழ்ச்சி உருவாகவில்லையா? போட்டவில் இருக்கும் அப்பாவும், அம்மாவும் போட்டோவில் இருந்து இறங்கி வந்து உங்களுடன் பேசி உரையாடப் போகிறார்களா? ஆனாலும் அந்தப் போட்டோ, உங்கள மனதில் நெகில்ச்ச்யை உருவாக்குகிறதே அது எப்படி? அதைப் போல்தான் சிலை வணக்கமும். அது கற்சிலையாக இருந்தாலும் சரி, வெண்கல சிலையாக இருந்தாலும் சரி.

  2). வரலாறு என்பதே அந்ததந்த கால கட்டத்தில் எழுதப் பட்ட நூல்களைக் கொண்டும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களின் அடிப்படையிலும் தான்.

  வரலாறு என்பதை நூற்றுக்கு நூறு திட்ட வட்டமாக உறுதி செய்ய இயலாது. எந்த அளவுக்கு சமீப கால நிகழ்வோ, அந்த அளவுக்கு உறுதியாக சொல்லலாம். இண்டிகா எனும் நூல் சந்திர குப்தா மவுரியரின் ஆட்சியை விளக்குகிறது. கலிங்கத்துப் பரணி, சோழ வெற்றிக்கு சான்றாக இருக்கிறது.

  இராமருக்கான வரலாற்று சான்று, நூல் சான்றாக இராமாயணமும், பொருள் சான்றாக (Physical evidence) இந்தப் பாலமும் உள்ளது. இந்தப் பாலத்தை அகழ்வாராய்ச்சி செய்யுமாறு நீதி மன்றங்களே வலி யுறுத்தியும் அரசாங்கம் இந்தப் பாலத்தின் நீல அகல ஆழ விவரங்களை எடுக்காமலும், கான்டூர் சார்ட் (contour chart) எடுக்காமலும் உள்ளது.

 34. “kalaignar” got cold feet afterall and avoided the ‘keralanthagan’ gate altogether and used the newly opened way instead. See todays New Indian Express.

  So much for his much touted ‘bahuththarivu’

 35. கற்சிலை என்று கூறும் அறிவாளிகள் அவர்களது அப்பா அல்லது அம்மா படத்தின் மீது ஒருவர் உமிழ்ந்தால் படம் தானே என்று சும்மா இருப்பாரா?
  ராமன் இருந்ததற்கான ஆதாரமா-உங்கள் பெயர் எங்கிருந்து வந்தது?

 36. Raman
  26 September.2010 at 12.54 p.m.
  அவர்களே!
  நன்றன்று.
  தங்களின் சில பல கீழான கருத்துக்களை மேலும் கூறினால், உண்மை அறிவைக்கொண்டு, ஆராய்ச்சி செய்து, தாங்கள் யார் என்பதை அறியமுடியும். தமிழ் இந்து ஆர்வலல்ர்களில் ஒருவரான நான் கண்டிப்பாக சிந்தித்தேன்.

 37. சொல்லாமலே விளங்கும்:

  பதிவு செய்தவர்: சைடு கேட்
  பதிவு செய்தது: 26 Sep 2010 11:35 pm
  நம்ம சவத்துக்கு முதல் பட்சி சிக்கிருச்சு

  பதிவு செய்தவர்: மெயின் கேட்
  பதிவு செய்தது: 26 Sep 2010 11:34 pm
  hahaha இந்த வருஷத்துல இருந்து ennoda சவம் சைடு கேடுக்கு மாரிருசுனு இந்த கலைனருக்கு தெரியாம pochae பாவம்
  https://thatstamil.oneindia.in/news/2010/09/26/tanjavur-big-temple-karunanidhi-main-gage.html

 38. மன்னாரு அண்த்த, தவறால் பண்டம்பா நானு. ‘பகுத்தறிவுவாதி’ ன்றத மேல ரெண்டு கமா போட்டு எய்திகிறாங்க .
  புர்து, புர்து. அதாவது சொம்மாங்காட்டியும் பகுதறிவுவாதினு தானே சொலிகினு , அப்பால ஜால்ராங்கள வெச்சி சொல்ல வெக்கறது இதெல்லாம் செஞ்சா அவன் பகுத்தறிவுவாதி ஆய்டுவானா நு கேக்ராங்கோ .
  கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு, தமிழ் பண்பாடு ,உசுரு தமிழுக்கு ஒடம்பு மண்ணுக்கு அப்டி இப்டிநு சொல்ற மாரித்தான் இதுலாம்.

 39. இவ்வளவு பயந்தான்கொள்ளி, உயிர் ,பதவி என்றால் இந்த வயதில் கூட வெல்லக் கட்டி -இவர்கள் எப்படியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்று தெரிகிறது.
  நாட்டுக்காக உயிர்,குடும்பம்,செல்வம்,சொத்து இவை எல்லாவற்றையும் துச்சமாக மதித்து செக்கிழுத்து, சிறையில் வாடி, தடியடி பட்டு, நோய்வாய்ப் பட்டு ,குடும்பங்களைப் பிரிந்து,உடலாலும் ,உள்ளத்தாலும் நைந்து நூலாகிய வ வு சி,வீர சவர்க்கர்,பகத் சிங், வாஞ்சிநாதன்,திருப்பூர் குமரன் இவர்களெல்லாம் எங்கே? இவர் எங்கே?

 40. இந்து மத துரோகி கலைஞர் . கஞ்சி குடிக்க மசூதி போவாரு
  அப்போம் திங்க சர்ச்க்கு போவாரு.. கோவிலுக்கு மட்டும் போகவே மாட்டாரு .. இப்போ என்ன வந்துச்சு திடீர்னு பக்தி..

  போறதுதான் போற.. முன்பக்கம் போயா

 41. நேரா சொர்கத்துக்கு போயிருவோம்னு .. பயமா இருக்கா

 42. பக்தி இல்லை
  ஒரு அருங்காட்சியகதுக்குப் போனேன் என்று சொல்வார்
  தேர்தல் வேறு வருகிறதே
  என்ன செய்வது- பதவி,பணம் என்றால் சும்மாவா
  எதோ ஹிந்துக்கள் என்பதால் சுலபமாக உள்ளது
  நம் நல்ல காலம் என்று நினைப்பார்.

 43. இந்தக் கட்டுரையின் அடிநாதம் நன்றாக இருந்தாலும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. வீணாக குழப்பத்தைத் தான் தருகிறது.
  குழப்பம்:
  கிருஷ்ணரையும் ராமரையும் பிரிப்பது,பிராமணர்களையும் மற்றவர்களையும் பிரிப்பது, கடைசியாக கலைஞரை ஒரு போலி பகுத்தறிவாளர் என்பதற்குப் பதில் போலி ஆன்மீகவாதியாக கட்டுகிறது.

 44. கருணாநிதியைப் பற்றி நினைக்கும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது

  தவ,யோக வலிமையினால் அஷ்டமா சித்திகள் கைவரப் பெற்றிருந்த ஒரு முனிவர் ஒரு சுடுகாட்டின் அருகில் அமர்ந்திருந்தார்

  அப்போது அங்கு ஒரு பிணம் தூக்கி வரப்பட்டு தரையில் இறக்கி வைக்கப் பட்டது.
  அப்போது அதிலிருந்து ஒரு ஆவி வெளிக் கிளம்பியது.அது அந்தப் பிணத்தின் முன்னே விழுந்து வணங்கியது. மகிழ்ச்சியுடன் கூத்தாடியது.அதன் முன்னே விழுந்து வணங்கியது.அது அந்த சாதுவின் கண்களுத் தெரிந்தது.

  சிறிது நேரம் கழித்து இன்னொரு பிணம் கொண்டு வரப்பட்டது.அதே போல் அதிலிருந்தும் ஒரு ஆவி வெளிப்பட்டது.அந்த ஆவி அந்தப் பிணத்தைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு ஓலமிட்டது. அதைக் காலால் உதைத்து. காரி உமிழ்ந்தது.

  சாது அந்த இரு ஆவிகளையும் அழைத்தார்.

  அவைகளிடம் அவைகளின் செய்கைகளுக்கு காரணம் கேட்டார்

  முதல் ஆவி கூறியது’ இந்த மனிதன் மிகவும் நல்லவன்.பரோபகாரி.தர்ம சிந்தனை உள்ளவன்.மறந்தும் தீய செயல்களை செய்ய மாட்டன். சான்றோரை மதிப்பான். பல குடும்பங்களை வாழ வைத்தான். வாழும் வரை வாழ்வாங்கு வாழ்ந்து சமூகத்தால் போற்றப் பட்டான் .
  அவனுக்குள்ளே நான் வாசம் செய்த போது நான் மிகவும் மகிழ்வுடன் இருந்தேன்.அதனாலேயே அவனை நான் கொண்டாடினேன்’ என்றது.

  இரண்டாவது ஆவி கூறியது’ இந்த மனிதன் கெட்ட குணங்களே உருவானவன். துணிந்து எந்த அக்கிரமத்தையும் செய்வான்.இவன் பல குடும்பங் களைக் கெடுத்திருக்கிறான். கொலை,அடுத்துக் கெடுத்தல்,சான்றோரைக் கொடுமைப் படுத்துதல் , நல்லவர் மனம் நோக நடத்தல் இதெல்லாம் இவனுக்கு வாடிக்கை. அதர்மமான வழிகளில் பொருள் சேர்த்தான்.

  இவனுக்குள்ளே நான் இருந்த போது பெரும் துன்பம் அனுபவித்தேன் .இந்தப் பாவியிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று துடித்துக் கொண்டிருந்தேன்’ என்றது.

 45. நாம் அனைவரும் தேர்தல் சமயத்தில் “எங்கள் நம்பிக்கையை எங்கள் சமயத்தை இழிவு படுத்தும் எந்த கட்சிக்கும், வாக்காளருக்கும் ஓட்டளிக்க மாட்டேன் என நம் வெட்டு முகப்பில் எழுதி வைக்க வேண்டும்

 46. the DMK institutionalised corruption.
  There is hardly any state government office where one can get his work done without a bribe being paid
  most sickeningly even the government staff have to pay bribe to their own staff to get pay bills,PF,leave sanction ect passed
  This is the gift of the DMK to the Tamil society. It is said by the government employees themselves that the ministers have to be bribed heavily for getting transfers,postings etc.
  But they merrily carry on by cheating the vast population which is deliberately kept ignorant and uneducated and which is also bribed with cheap cycles,gas stoves,TVs etc
  The government servants are showered with heavy salary hikes.
  there is suspicion whether it is linked to the fact that they will be doing election work.

 47. ஹிந்து இல்லாத வேற்று மதத்தினர் வெளிநாடுகளில் இருந்து பணம் வரவழைத்து சர்ச்ச மற்றும் பள்ளிவாசல்கள் கட்டுகிறார்கள் ,ஹிந்து மக்களை தங்கள் மதங்களுக்கு
  மதம் மாற்றுகிறார்கள்,அனால் ஹிந்து மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட கோயில்களை பராமரிக்க பணம் இல்லை,ஹிந்து மக்கள் எப்போதுதான் இதைப்பற்றி தெரிந்துகொள்வார்கள்.எப்பொழுது மதம் மாற்றத்தை எதிர்ப்பார்கள்.எப்பொழுது ஹிந்து மதத்தை காப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *