என்ன, விளையாடறாங்களா?!

cwg-manjul

ஒலிம்பிக் போலவே இந்த காமன்வெல்த் கேம்ஸும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிற ரொடீன் திவசம்தான்.

xix-commonwealth-games-delhi-2010ஆனால், உலகம் தழுவிய போட்டிகள் இதில் கிடையாது. காலாவதியாகிவிட்ட பழைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தற்கால அடிவருடி கோஷ்டிகளுக்குள் மட்டுமே இந்த ‘காமன்வெல்த்’ போட்டிகள். மொத்தம் 54 மெம்பர்கள், 71 போட்டிகள்.

2006-இல் மெல்பர்ன், ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் கேம்ஸ் நடந்த இடங்களை இன்னமும் அழகாக, பளீரென்று வைத்திருக்கிறார்கள். நான் மெல்பர்ன் சென்றிருந்தபோது பார்த்த அருமையான இடங்களில் அதுவும் ஒன்று. தேவையானால், ஒரே மாதத்தில் அங்கே இன்னுமொரு உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்திக்காட்டி விடுவார்கள் போல, இன்றும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.

2003-ஆம் வருடமே அடுத்த காமன்வெல்த் கேம்ஸுக்கும் அடுத்த காமன்வெல்த் கேம்ஸ் 2010-இல் டெல்லியில் என்று முடிவாகி விட்டது.

ஏழு வருடங்களாக நாம் என்னதான் செய்து கொண்டிருக்கிறோம்?

cwg-c3அந்த கமிட்டியில் யாரைப் போடுவது, யாராருக்கு எவ்வளவு ‘கட்டிங்’, எந்த கோஷ்டிக்கு எந்த காண்டிராக்ட், எந்தெந்த சப்-காண்டிராக்ட் எந்தெந்த சப்-கோஷ்டிகளுக்கு என்றெல்லாம் யோசித்துச் செயல்படவேண்டாமா? அதற்கெல்லாம் நேரம் ஆகாதா? ஒரு மேல்மட்ட கமிட்டி போட்டு அதில் அடிதடியை சமாளித்து முடிக்கவே நமக்கு இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.

சரி. இருந்தாலும் அதையெல்லாம் உடனேயே ஆரம்பித்துவிட முடியுமா? நல்ல நாள், முகூர்த்தம், நேரம், காலம், சகுனம் பார்க்கவேண்டாமா? அதற்குச் சில வருடங்கள்!

ஆக, நாலு வருடங்கள் நாம் கும்பகர்ணனாய்த் தூங்கி எழுந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் உலகமே சிரிக்க ஆரம்பித்திருந்தது.

preparations-for-cwg-are-in-fullswingஅதற்குப் பின் கட்டிடங்கள், ஸ்டேடியங்கள் கட்ட ஆரம்பிக்க இன்னும் இரண்டு வருடங்கள். அதில் சரிபாதிக் கட்டிடங்கள், மாடிகள், பாலங்கள் சரிந்து விழுந்து நம் மானத்தை வாங்கின. அதையெல்லாம் அண்டக்கொடுத்து சரிசெய்யவே நேரம் ஓடிப்போனது.

சென்ற வருடமே ஒரு பகீர் ரிப்போர்ட், “இன்னும் ஒரே வருஷத்தில் நாம் தயாராக இருக்கவேண்டும். ஆனால் படிக்குப் பாதி கூட நாம் தயார் நிலையில் இல்லை,” என்றது.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. மாதம் மும்மாரிப் பெய்கிறது. சோளத்தில் கேழ்வரகென்ன, கஞ்சியே வடிகிறது. யாருக்கும் கவலை வேண்டாம்!” என்று அவ்வப்போது அரசு இயந்திரங்கள் சமாளிப்பு ரிப்போர்ட் கொடுத்துக்கொண்டே இருந்தன.

அக்டோபர் 3, 2010 மிகநெருங்கியே விட்டது!

இன்னும் இரண்டே வாரங்களில் கேம்ஸ் ஆரம்பித்தாக வேண்டும். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் குண்டும் குழியுமான சாலைகள், உடைந்து கிடக்கும் முடிவு பெறாத ஸ்டேடியங்கள், இன்னமும் முற்றுப்பெறாத சில்லுண்டிக் கட்டிடங்கள் என்று படம் காட்டி, பாகம் குறித்து, மானத்தை வாங்குகிறார்கள். கன்னாட் ப்ளேஸ் ‘கயாஸ் ப்ளேஸ்’ ஆகி விட்டது என்று பத்திரிகைகள் கிண்டல் செய்கின்றன.

development-vs-envirnomentபோதும் போதாததிற்கு நாடெங்கும் டெங்கு காய்ச்சல் வேறு. யமுனையின் வரலாறு காணாத வெள்ளத்தில் கொசு உற்பத்தி எக்கச்சக்கமாக எகிறி விட்டதாம்!

‘பாயும் புலி, எழுந்திருக்கும் களிறு, ஷைனிங் இந்தியா’ என்றெல்லாம் மீடியாவில் பீலா விடுவார்களே தவிர, நல்ல நாளிலேயே டெல்லியில் குடிநீர் பஞ்சம். இப்போது கேட்கவே வேண்டாம். ‘க்ளோபல் சிடி’ என்றெல்லாம் பிதற்றுகிறார்களே தவிர, உருப்படியான பாதாளச் சாக்கடைகள், மழைநீர் கால்வாய்கள் எதுவுமே கிடையாது. சாக்கடை, தரையடி மின்சாரம் எல்லாம் மறந்துபோய், புதிதாகப் போட்ட சாலைகளையே திரும்பவும் பெயர்த்தெடுத்து,…. வேண்டாம், என் ப்ளட் ப்ரஷர் எகிறுகிறது.

நானும்தான் தெரியாமல் கேட்கிறேன், ‘ஆசியாவின் மிகப்பெரும் வல்லரசுப் புலி’ என்றெல்லாம் பீற்றிக்கொள்கிறோமே, கேவலம் நம் தலைநகரில் மட்டுமாவது சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏன் கிடைப்பது இல்லை? இதைக்கூட நம்மால் செய்ய முடியாமல் 2015-இல் சந்திரனில் கால் வைப்போம் என்றெல்லாம் அலட்டுவது வெட்கமாக இல்லை?

corruptionwealth-games-2010ஊழலோ ஊழல்! லஞ்சமோ லஞ்சம்! சாம்பிளுக்குச் சில ஐட்டங்கள் பாருங்கள்!

டாய்லெட் பேப்பர் டிஸ்பென்சர்கள் $ 85
குப்பைக்கூடைகள் $ 135
ட்ரெட்மில்கள்
$ 19,500 (வாடகை மட்டும்)

கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் இதுவரை செலவாகி இருப்பதாகக் கணக்கு காட்டி இருக்கிறார்களாம்! ஆரம்பத்தில் போடப்பட்ட பட்ஜெட்டைவிட எட்டு, பத்து மடங்கு தாண்டி எகிறி விட்டன.

ஹாக்கி சேம்பியன் அஸ்லாம் ஷேர் கான், “இந்த மோசடி பாரீர்!!..” என்று அலறுகிறார். கேட்பார்தான் இல்லை. உள்துறை மந்திரியைக் கேட்டால், “என்ன பிரச்சினை? ஏன்? எங்கே?” என்கிறார்.

cwg-cartoon-by-manjulஆர்கனைசிங் கமிட்டி சேர்மன் சுரேஷ் கல்மாடி, விளையாட்டுத்துறை மந்திரி எம்.எஸ்.கில் எல்லோரும் எக்கச்சக்கமாக கமிஷன் அடிக்கிறார்கள் என்று நாடெங்கும் சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சோனியாவே காரணம்; கமிஷன்கள் போவதே அங்கேதான் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அரசிடமிருந்து கனத்த மௌனமே பதில்.

“எக்கச்சக்கமான லஞ்சம், ஊழல், வேலையே இன்னும் சரியாக நடக்கவில்லை. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?” என்று நேரடியாக வெளிநாட்டு நிருபர்கள் கேட்டால் பிரதமர் மன்மோகன் சிங் மென்று முழுங்குகிறார். “இன்னும் பத்து பேரை எக்ஸ்ட்ராவாகப் போட்டு இன்னுமொரு கமிட்டி வேண்டுமானால் போடுகிறேன்” என்கிறார். பாவம், ரப்பர் ஸ்டாம்ப் பிரதமருக்கு இதுவே அதிகபட்ச சாதனைதான்.

சோனியாவைக் கேட்டால், “எல்லாவற்றையும் தீர விசாரிப்போம்” என்கிறார். எப்போதாம்? எல்லாம் முடிந்து ஊழல் பெருச்சாளிகள் ஏப்பம் விட்ட பிறகாம்!

அது சரி! திருடனிடமே சாவி கொடுக்கும் புத்திசாலிகளாக நம் மக்கள் இருக்கும்வரை நாடு இப்படித்தான் நாறிக் கிடக்கும்.

“இவர்களால் எதுவுமே சரியாகச் செய்ய முடியாது,” என்று அமெரிக்கப் பத்திரிகைகளாலும் மீடியாவாலும் கரித்துக் கொட்டப்பட்ட சீனா, 2008 ஒலிம்பிக்ஸை அட்டகாசமாகச் செய்து முடித்து, அமெரிக்க மீடியாவின் முகத்தில் கரிபூசி, வாயை அடைத்தது. எதற்கெடுத்தாலும் சீனாவுடன் போட்டி போடும் நாம்தான் அசிங்கப்பட்டு நிற்கிறோம்.

xix-common-where-gone-the-wealth-games-2010

இந்த வருடப் போட்டியிலிருந்து நாம் எவ்வளவு சுருட்டமுடியும் என்பதில் மட்டுமே நம் இந்தியர்களின் சாதனை வெளிச்சத்திற்கு வரப்போகிறது. அதில் நாம்தான் “அகில உலக நம்பர் 1″ என்று இந்தியர்கள் மார்தட்டிக் கொள்ளலாம்.

மெடல் கிடக்கிறது மெடல், யாருக்கு வேண்டும் ஈயம், பித்தளையெல்லாம்? இந்த இரண்டு வாரக் கூத்தை கணக்குக் காட்டி ஸ்விஸ் வங்கிகளில் எத்தனை ஆயிரம் கோடிகள் கள்ளக் கணக்கில் பேலன்ஸ் அதிகப்படுத்த முடியும் என்பதல்லவா நமக்கு முக்கியம்?

பேசாமல் இந்த 2010 டெல்லி காமன்வெல்த் கேம்ஸுக்கு ‘காமன்லூட்டிங் கேம்ஸ்’ என்று பெயர் வைத்திருக்கலாம்!

26 Replies to “என்ன, விளையாடறாங்களா?!”

  1. LA Ram, Vairu eriyaruthu! What else one can say? But,did you really expect anything else? I hope CWG will be a total flop. I also hope this failure will sort of act as a trigger for people to wake up and do something postive against the ingrained corruption eating the very fabric of India.( like, massive backlash against UPA,getting rid of Maino gang, etc. I can only dream!)

  2. The visiting delgates have named it “Common Filth games”. I don’t want my India branded as such, but it is unfortunate that the public elected an irresponsible political party to lead the country.

  3. உண்மையே! இதனாலெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்து விடும் என்று நினைப்பதெல்லாம் பகல் கனவு தான்! எதிர்கட்சிகள் உறுதியாக இல்லை! அவர்களுக்கும் பங்கு போகிறதோ என்னவோ! வளரும் நாடு என்ற நிலைமையிலிருந்து வளரவே முடியாத நாடு என்ற பெயரை எடுத்து விட்டோம்!

  4. ஏனய்யா இப்படி ஆளுக்கு ஆளு அழுகிறீர்? இதுதான் Congress Wealth Games என்று எல்லோரும் அறிந்ததுதானே! மன்மோகன் சிங் ஒரு பெரிய ஞானி. எப்பொழுதும் த்யானதிலேயே இருப்பாரு. அவருக்கு இதெல்லாம் ஒரு மாயை என்று தெரியும். சோனியா அம்மையார் ஒரு பெரிய தியாகி. இந்த பணமெல்லாம் எதற்காக பதுக்கிகிறார்கள் என்று நினைக்கிறீர்? எல்லாம் நமக்காகத்தான். அது எப்படி? இப்பொழுது எங்கு பார்த்தாலும் recession recession என்கிறார்கள். நாளைக்கு இந்த பொல்லா போன MNC க்கள் நம்மை மொட்டை அடித்தால் அப்ப உங்களுக்கெல்லாம் காசு வேணும்னா எங்கே போவிங்க? அதுக்குதான் சாரே முன்யோசனையா இப்பயே பத்ரமா அம்மையாரு பாதுகாக்கிராறு. இப்போ புரிஞ்சுகிநீங்களா? சோனியா நமக்கெல்லாம் அம்மையார் அல்லவா? என்னிக்குமே அவங்க கொலந்தைங்களுக்கு துரோஹம் பண்ண மாட்டருங்கோ.

    நம்ம அண்ணன் ராசாவும் அதைத்தான் தமிழ் நாட்டுக்காக செய்யராருங்கோ. அண்ணன் பாலு செஞ்சதை ராசா continue பண்றாரு

  5. இன்னொன்னு சொல்லிகறேன்!

    அம்மையார் வீட்டுலே போதுமான இடம் இல்லாததால கட்சிகாரங்க வூட்டிலே கொஞ்சம் பதுக்க சொல்லி உத்தரவு போட்டிருக்காங்க. அதுக்கு சுரேஷ் கல்(ரூ)மாதி முந்திகினாறு. இத புரிஞ்சுக்காம ஏதேதோ சொல்றீங்க? நல்லதுக்கே காலம் இல்லீங்கோ!!

  6. Dear Rama,

    // also hope this failure will sort of act as a trigger for people to wake up and do something postive //

    I appreciate your optimistic approach. you are expecting INDIANS to WAKE UP…Come on…you are expecting a mouse to life a mountain 🙂
    Our corruptions has crossed all boundaries. India has been put on shame in front of the entire world. The CWG is sure to get cancelled as many countries are pulling out now.
    The media will talk about it for a week then will change subject. Our people will say this is attrocious and then will start looking for the next release of their favourite movie star and keep watchin the stupid idiot box in which they can see movies and movie songs 24X7…

    Regards,
    Satish

  7. //இந்த இரண்டு வாரக் கூத்தை கணக்குக் காட்டி ஸ்விஸ் வங்கிகளில் எத்தனை ஆயிரம் கோடிகள் கள்ளக் கணக்கில் பேலன்ஸ் அதிகப்படுத்த முடியும் என்பதல்லவா நமக்கு முக்கியம்?//
    Click on the following link to know about swiss bank accounts and UPA’s cold feet – “https://governancenow.com/news/regular-story/swiss-banks-dont-want-hide-so-we-dont-want-seek”

  8. Pingback: Indli.com
  9. // அது சரி! திருடனிடமே சாவி கொடுக்கும் புத்திசாலிகளாக நம் மக்கள் இருக்கும்வரை நாடு இப்படித்தான் நாறிக் கிடக்கும். //
    நெத்தி அடி – மானம் சூடு சொரணை இல்லாமல் சுயநினைவின்றி மயங்கி காசுக்கு ஒட்டு போடும் நம் மக்களுக்கு கடவுள்தான் நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்

    சோனியாவும் அவர்களது கூட்டாளிகளும் நாட்டை கொள்ளை அடிப்பதோடு நிறுத்தாமல் உலக அரங்கில் இந்தியாவை கேவலப்படத்தும் செயல்களை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பேயை நாட்டைவிட்டு துரத்தினால்தான் நாம் விடிவு பெருவோம். அது நிச்சயம் வெகுவிரைவில் நடக்கும்.

  10. டெல்லி காமன்வெல்த் போட்டி : உலக ஊடகங்கள் அச்சம்!
    https://www.sivajitv.com/news/global-media-write-fears-about-delhi-cwg-games.htm
    September 22, 2010 11:52:20
    டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டி குறித்து சர்வதேச ஊடகங்களும் அச்சம் தெரிவித்துள்ளன. காமன்வெல்த் போட்டிகள் குறித்த தங்கள் கட்டுரைகள் மற்றும் செய்திகளில் டெல்லி மற்றும் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் குறித்து அவை பதறியபடியே எழுதுகின்றன. செய்திகளின் தலைப்புகளே கூட அச்சத்தை அதிகரிக்கும் வண்ணம் உள்ளன.

    குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிகுண்டு விபத்தும், நேற்று ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த அசம்பாவித நிகழ்வும் பாதுகாப்பு குறித்த கேள்வியை சர்வதேச ஊடகங்கள் எழுப்ப காரணங்களாகி விட்டன.

    இதுகுறித்து,

    பிரிட்டன் பத்திரிகையான ‘தி கார்டியன்’ தன்னுடைய செய்திக்கான தலைப்பில் ‘பாலம் இடிந்து விழுந்த நிகழ்வு விளையாட்டை மறைமுகமாக மிரட்டுகிறது’ என்று கூறியிருக்கிறது.

    ‘தி டெய்லி டெலிகிராப்’ நாளிதழ் தன்னுடைய செய்தியில் ‘நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக’க் கூறியுள்ளது.

    ‘தி இண்டிபெண்டண்ட்’ நாளிதழில் ‘பாலம் இடிந்து விழுந்தது டெல்லி விளையாட்டுப் போட்டி குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது’ என்று கூறியுள்ளது.

    ஆஸ்திரேலியா செய்தித்தாளான ‘ஏபிசி நியூஸ்’ ‘பாலம் இடிந்து விழுந்தது டெல்லியின் கவலையை கூட்டியுள்ளதாக’க் கூறியுள்ளது.

    ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையோ ‘சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் டெல்லி போட்டி ஏற்பாடுகள்’ என்கிறது.

    ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ என்ற பத்திரிகை டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகள் குறித்த அச்சங்கள் அனைத்தையும் தொகுத்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘பாதுகாப்பு குறித்த அச்சங்களை தீர்ப்பதில் டெல்லிக்கே சந்தேகம் இருப்பதாக’ இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

    -சிவாஜி டிவி

  11. இன்னைக்கு நியுஸ்ல, விளையாட்டு அரங்கத்தின் மேல்தளம் உருக் குலைந்த்ததுன்னு சொல்றாங்க. விளையாட்டு ஆரம்பிக்கிற தேதியில அட்லீஸ்ட் மோகன்ஜோதரா, ஹாரப்பா மாதிரியாவது இருக்குமா? இல்ல புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், சல்லட போட்டு CWG சிட்டி எங்கன்னு தேடவேண்டி இருக்குமா??. கிணத்தக் காணோம்னு நடிகர் வடிவேலு சொல்ற ஒரு சீன்தான் எனக்கு இப்ப நினைவு வருது.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  12. Everyone have a perception that Manmohan singh is innocent and doesnt have any connection ( or share) in these corruption… But i strongly believe he is also taking a major share in these corruptions… Else why he is keeping quite. Not only the thief, also those who support the thieves are also equally punishable…

    Behind the innocent face of Manmohan, i could see all corruptions of the congress government. I feel he is more responsible ( or taking more share) than Sonia in these corruptions

  13. இந்த CWG ஊழல்களை எல்லாம மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லாததுபோல ஊடகங்களும் சில பத்திரிகைகளும் செய்தி வெளியிடுவதும், ‘் Kalmaadi misled India’ என்று ‘தமாஷாக’ தலைப்பு போடுவதும் வேதனை.

    தி எஸ் ஸ்ரீநிவாசன்

  14. ட்ரெட்மில் வாடகைக்கு எடுத்தாங்களா?

    ஆஹா….. தெரியாமப் போச்சே:(

    நான் நம்ம வீட்டுதை வாடகைக்கு விட்டு, திரும்பிப்போக டிக்கெட்டுக்கு அந்தக் காசை…………… ப்ச்…விடுங்க.

    இஸ் இட் டூ லேட் நௌ?

    நியூஸி விளையாட்டு வீரர்களை அனுப்பலாமா வேணாமான்னு அங்கே ஒரு poll.

    வேணாமுன்னுதான் நான் ஓட்டுப்போட்டேன். வேற வழி?

  15. என்ன கொடும சார் ! இன்னிக்கு உள்ள ஒரு கட்டடம் விழுந்துருசுன்னு நியூஸ்(23rd Thursday – THE ஹிந்து), தினமலர் எல்லாத்துலயும் வந்து இருக்கு. ச்சே ச்சே !! என்ன அசிங்கம் ஊழல் இண்டு,இடுக்கு சந்து பொந்து எல்லாத்துலயும் இருக்கு நம் தாய் திரு நாட்டில். எவ்வளவு பெரிய கேவலம்.

    இருந்தாலும் இந்தியா தாய் திரு நாட்டை காக்க !! இந்திய மீட்பர் அன்னை சோனியா வுக்கே உங்கள் பொன்னான வாக்கை அளித்துடுவீர்!!!

  16. Wake up?! we Indians never sleep. We are watching everything carefully and waiting for our shares, hooch and Rs 1 for pickle. what do we need more than this.

  17. Suresh Kalmadi survives suicide bid.

    Apparently, the ceiling from where he had tied the rope to hang himself collapsed. The rope, too, snapped.

    The suicide note he had written, read : “My body must be sent to Buckingham Place to await the funeral instructions of Her Britannic Majesty, whose faithful and obedient servant I have always been. For the last 7 years, I have been loyally trying to re-introduce the Raj in India through the Commonwealth Games and to ensure that Her Majesty comes back to her Delhi Durbar in all her glory. Pax Britannica, forever”

    Wait for further developments.

  18. Ram

    Politics is the biggest Game that we play. Your article must have been written a week ago, before the other shameful things that happened in the last few days. Yesterday’s report in CNN IBM would have made Indians a laughing stock. Reports of teams cancelling , postponing and talking about excrement in their apartments etc made one sick to the stomach. I think every Indian should boycott the Games.

    But i am sure this will be solved. Within weeks there will be a bigger scam or a national disaster or rioting or naxalite problem and we will all be discussing that.

    Jai Ho..

  19. காமன்வெல்த் போட்டியின் இலட்சணம்
    https://news.bbc.co.uk/sport2/hi/commonwealth_games/delhi_2010/9025907.stm

    ஒரு திரைப்படத்தில் வடிவேலுவும் அவரின் அல்லக்கைகளும் ஒரு வீட்டின்
    விருந்துக்கு சென்று பிறகு பல வீட்டு வேலைகளை செய்ய பணிக்கப்படுவர்.
    வடிவேலு குழுவின் தலைவராகையால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
    வேலையை பகிர்ந்து அளிப்பார். (ஒட்டடை அடிப்பது முதல் கழிவறையை
    சுத்தம் செய்வது வரை).

    நம் பிரதமருக்கும் ஆவேசம் வந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின்
    கூட்டம் ஒன்றை நடத்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை பகிர்ந்து அளித்தால்!!! என் கற்பனை.

    பிரதமர்: நாம இங்கே ஏன் கூட்டம் கூடியிருக்கோம்னா!
    மணி சங்கர்: அத விடுங்க பிரதமரே, இந்த விளையாட்டு போட்டி தோல்வி
    அடஞ்சுதுன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்னு சொன்னேன். என்ன
    ஆச்சுன்னு பாத்தீங்களா!
    பிரதமர்: நீ வாய் வெச்ச நேரம்தான் இந்த போட்டிக்கு சாவுமணி. இப்ப
    நீ மறுபடியும் ஏதாவது புதுசா ஆரம்பிக்காதே!
    மணி சங்கர்: புதுசா நான் ஒன்னும் ஆரம்பிக்கலே. ஆனா 60000 பிச்சை
    காரங்கள டில்லியிலிருந்து வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணிட்டீங்களே.
    இது சரியா.
    பிரதமர்: என்ன கேள்வி கேக்கறயா. அந்த பிச்சைக்காரங்கள்ளாம்
    மறுபடியும் விளையாட்டு போட்டி நடக்கற இடத்துக்கு பக்கத்துல
    வந்துரக்கூடாது. போய் செக்யூரிட்டி வேலைய பாறு.

    சுரேஷ் கல்மாடி: பாஸ், பெய்ஜிங்க் போட்டிக்கு கட்டின க்வார்ட்டர்ஸ
    விட டில்லி க்வார்ட்டர்ஸ்தான் ஸூப்பர்.
    பிரதமர். உனக்குதான் வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தேன். போய் கக்கூஸ
    க்ளீன் பண்ணு. இன்னும் 10 நாள்தான் இருக்கு. எல்லா கக்கூஸும்
    கண்ணாடி மாதிரி பளபளக்கணும்.

    லலித் பண்ணோட்: பாஸ், ஏன் சூடாகிறீங்க? வெள்ளக்காரன் க்ளீனுக்கும்
    இந்தியனோட க்ளீனுக்கும் வித்தியாசம் இருக்குது. அத சொன்னா
    எல்லாருக்கும் கோவமா வருது.
    பிரதமர். நீ சுத்தி சுத்தி எங்க வரேன்னு தெரியும். எல்லா கக்கூஸையும்
    கல்மாடி க்ளீன் பண்ணவுடனே, அது வெள்ளக்காரன் க்ளீன் பண்றா
    மாதிரி மாத்தி வுடு.

    டில்லி முதல்வர் ஷீலா: சர், பிரிட்ஜ் வுழுந்தத பெரிசு பண்ணிட்டாங்க,
    அத யூஸ் பண்ணப்போறது நம்ம மக்கள்தான், வீரர்கள் இல்ல.
    பிரதமர்: பிரிட்ஜ் உன் தலைல வுழுந்தான்தான் தெரியும். ராப்பகலா அந்த
    பிரிட்ஜ கட்டிட்டிருக்காங்க. கட்டினவுடனே, இந்த போட்டி முடியற
    வரைக்கும் அதுக்கு கீழயே நில்லு.
    டில்லி முதல்வர் ஷீலா: அந்த காண்டிராக்டர எனக்கு தெரியும். இன்னொரு
    வாட்டியும் வுழும்.
    பிரதமர். அதனாலதான் அதுக்கு கீழ உன்ன நிக்க சொன்னேன்.

    ஜெய்பால் ரெட்டி: பாஸ், சின்ன சின்ன விஷயத்த கூட பெரிசாக்கிறாங்க.
    சீலிங்க்லே இருந்து ரெண்டே ரெண்டு டைல்ஸ் வுழுந்தத என்னவோ
    பில்டிங்கே வுழுந்ததா எழுதறாங்க.
    பிரதமர்: அந்த டைல்ஸ கையிலேயே புடிச்சுட்டு நில்லு. அப்பதான் உனக்கு
    புத்தி வரும்.
    ஜெய்பால் ரெட்டி: எனக்கு அதில பிரச்சினை ஒன்னும் இல்ல. ஆனா
    இதுதான் ஸ்டார்ட்டிங்க், இன்னும் பல டைல்ஸும் உழுமே. அப்ப என்ன
    செய்ய.
    பிரதமர்: இதுல ஒன் லைனர் வேறயா. உன் மினிஸ்டிரில இருக்கற மத்த
    அதிகாரிங்கல கூப்ட்டுக்கோ. எல்லா டைல்ஸையும் புடிச்சுக்குட்டு
    நிக்க சொல்லு. நான் ரெய்டுக்கு வருவேன். யாராவது டைல்ஸை
    புடிக்கறதே நிப்பாட்டினா டிஸ்மிஸ்தான்.

    கல்மாடி: பாஸ், கட்டின ஸ்டேடியத்தில எந்த ஸ்டேடியம் ஸூப்பர்னு
    கேட்டாங்க. என்னாலே சொல்ல முடியாதுன்னுட்டேன். ஒன்ன விட
    ஒன்னு ஸூப்பர்.
    பிரதமர்: நீ இன்னும் போலியா. வீரர்கள் தங்கற க்வார்ட்டர்ஸ்லே
    நாய் அசிங்கம் பண்ணுது, கட்டில்லே ஜாலியா டேன்ஸ் ஆடுது. வேலை
    செய்றவங்க எல்லா இடத்துலேயும் துப்பி துப்பி வெச்சுறுக்காங்க. நீ
    கக்கூஸ மட்டும் க்ளீன் பண்ணா போதாது. எல்லா நாய்ங்களயும் புடி.
    துப்பறவனெயெல்லாம் அடி. தண்ணி தேங்குனா கொசு மருந்து அடி.

    பிரதமர் கடைசியா: உங்களயெல்லாம் வச்சுகிட்டு நான் படற பாடு
    போதும். இனிமே எதாவது விழுந்துன்னா என் தலதான் உருளும்.
    எல்லாரும் போய்த்தொலைங்க!!!

  20. அப்புறம் திடீர்னு மன்மோகனின் மனைவியின் அதிரும் குரல்

    என்ன எட்டு மணியாச்சி இன்னும் தூங்கிகிட்டு இருக்கீங்க சீக்கிரம் எழுந்திருங்க அந்தம்மா கால் பண்ண போறாங்க

    மன்மோகன் சிந்தனை செய்கிறார் – நல்ல வேலை இது கனவு தான் – நான் போய் எல்லாரையும் உண்மையாவே மெரட்டி வேல வாங்கினா சோனியா கோச்சிகிட்டு இருப்பாங்க

  21. பாலாஜியின் கற்பனைக்குச் சாரங் கொடுத்துள்ள முத்தாய்ப்பு அற்புதம்.

  22. When a load of shit hit the fan,
    bring in our turban-man.
    He covers himself well,
    and is not afraid of smell,
    he knows who to blame,
    It is the fan, it is the fan, it is the fan.

  23. 72 நாட்களுக்கு லஞ்சம் கொடுத்த இந்தியா
    https://thatstamil.oneindia.in/news/2010/09/24/commonwealth-games-india-bribe.html

    டெல்லி: காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு ஒப்புதல் பெறுவற்காக 72 நாடுகளுக்கு இந்தியா லஞ்சம் கொடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 1 லட்சம் டாலர் லஞ்சம் தரப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. மொத்தமாக ரூ. 35 கோடி வரை லஞ்சம் போயுள்ளதாம். இதன் மூலம் 19வது காமன்வெல்த் போட்டியை டெல்லியில் நடத்த ஆதரவு திரட்டப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.

    இந்த செய்தியை டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. அதில், ஜமைக்காவில் நடந்த அடுத்த காமன்வெல்த் போட்டியை நடத்தும் நகரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் ஹாமில்டன் நகருக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்பை டெல்லி தட்டிப் பறித்தது. ஆனால் இதற்காக 72 நாடுகளுக்கு இந்தியா சார்பில் லஞ்சம் கை மாறியுள்ளது.

    இதில் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் 1.25 லட்சம் டாலர் கைமாறியுள்ளது. இந்தப் பணத்தை வீரர்களுக்கான பயிற்சிக்கு என்று கூறி கொடுத்துள்ளது இந்தியா.

    காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கும் லஞ்சம் அளித்துள்ளது இந்தியா. இதில் ஆஸ்திரேலியாதான் முதல் நபராக இந்தியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. எனவேதான் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் கூடுதல் லஞ்சம் தரப்பட்டுள்ளது.

    அதேசமயம் ஹாமில்டன் நகரும் கூட லஞ்சம் கொடுத்தது. ஆனால் அது ஒரு நாட்டுக்கு 70 ஆயிரம் டாலர் மட்டுமே கொடுத்தது. அதை விட கூடுதலாக டெல்லி கொடுத்ததால், அதற்கு வாய்ப்பு போய் விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜமைக்காவில் நடந்த வாக்கெடுப்பில் 46-22 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று போட்டியை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.

  24. And…….

    https://newsclick.in/kalmadi-attempts-suicide

    took this seriously!!!

    https://chowk.com/ilogs/80692/43474

    New Delhi, Sept 23.

    Head of the Commonwealth Games Organising Committee (OC) Suresh Kalmadi (56) attempted suicide by hanging in a toilet in the Games Village today. However, the ceiling collapsed, taking with it a part of the wall. The incident happened at 1.23 p.m.

    The suicide attempt came to light when an unnamed Games official, who was answering the call of nature on the other side of the wall, unexpectedly found himself spraying the inside of a toilet rather than the outside.Mr Kalmadi, it is reported, suffered a few minor scratches and has been discharged after first aid.

    Chief Minister Sheila Dikshit dismissed the matter as a ‘minor glitch’ and said that it would have no effect on the success of the Games. She pointed out that while the said toilet was inside the Games village, it was not meant for athletes. The Urban Development Minister, Mr Jaipal Reddy, refused to react to media reports, saying only that such incidents are ‘part and parcel’ of any big sporting event. The Sports Minister, MS Gill, refused to take responsibility, saying that the PWD department was in charge of the construction of the Games village and that his ministry has nothing to do with false ceilings.

    Mani Shankar Aiyar, MP, a long-time critic of the Games, held the rain gods responsible for the collapse of the ceiling. However, he was at pains to empahsise that he had not prayed to the said god. Commonwealth Games Federation chief Michael Fennell said this would not have happened if his warnings of nine months ago had been heeded. When asked if he held Mr Kalmadi responsible for the lapse, he refused to comment. A foreign official, on condition of anonymity, wondered in a lighter vein why Kalmadi sought to hang himself in a toilet. ‘They’re filthy’, he said.

    The Cabinet Secretary, KM Chandrasekhar, said that it is everybody’s national duty to see that such mishaps do not happen in the future. ‘We must all work together to see that India is not put to embarrassment.’ He said that a number of steps had been taken to improve the condition and that authorities are ‘on top of the situation’. Principal Secretary to the PM, TAK Nair, who is also part of the high-powered committee mandated to oversee the smooth functioning of the Games, said that the government will take action and any wrongdoing, if detected, will not go unpunished.

    Congress Party Spokesperson Manish Tiwari refused to comment, saying that Mr Kalmadi was there in his personal capacity, and not as a Congress MP. Leader of the Opposition Sushma Swaraj said that this is a matter of national shame and would never have happened under the NDA regime. Chief Minister of Gujarat Narendra Modi congratulated Kalmadi on his narrow escape and wished for his speedy recovery.

    Mr Kalmadi was unavailable for comments. His close aide, and spokesperson for the OC, Lalit Bhanot, took over the job to defend the OC and reiterated that these Games would be better than the Beijing Olympics. Unconfirmed media reports have it that Mr Kalmadi has submitted a dry cleaning bill to get his somewhat wet and stained white kurta-pyjama spotless clean and dry in time for the opening. While the amount is a subject of media speculation, it is rumoured that the bill runs into six figures.

  25. Ba Ba Kalmadi

    Ba Ba Kalmadi, Ba Ba Kalmadi, have you any shame?

    No Sir, No Sir, we are playing the “Common-loot game”!

    Crores for my partners, crores for the dame;

    Crores for me too, for putting India to shame!

    Kalmadi and God

    Suresh Kalmadi is remorseful about botching-up the

    Commonwealth Games, he decides to end his life.

    Goes to the top floor room of the Asian Games Village to jump …

    The windows won’t open. They are jammed.

    Tries to electrocute himself by holding a live wire ….

    There is no power supply.

    Tries to hang himself …

    The ceiling falls,

    Tries to break his head against the wall …

    The wall breaks.

    Tries to pierce himself with a javelin …

    It is too blunt to pierce his thick hide

    Tries to shoot himself with the security guard’s gun …

    There are no bullets in the gun

    Jumps into the pool to drown himself

    The water is so highly saline that instead of drowning he floats

    Kalmadi gives up. He can’t fight destiny.

    He is convinced that God does not want him to die …

    But the truth is ….

    God doesn’t want him up there!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *