ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை.
நண்பர் ஒருவர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். காபி, டிபன் முடிந்து பல விஷயங்களையும் பேசிக் கொண்டு நண்பர் வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு அறையில் சின்னதாக தனித்தனியாக லேமினேட் செய்யப் பட்டு மூன்று குழந்தைகளின் போட்டோக்கள் ஒரு மேசையில் இருந்தன. 9-10 வயதுள்ள குழந்தைகள். அவற்றின் முகச்சாயல், உடைகளைப் பார்த்தால் நண்பர் குடும்பம், உறவினர் குழந்தைகள் போன்று தெரியவில்லை. கொஞ்சம் புதிராக அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன பார்க்கறீங்க? என்று ஒரு போட்டோவை எடுத்துக் கையில் தந்தார் நண்பர். போட்டோவின் பின்புறம் “எனது வாழ்க்கைக்கு உதவி வருவதற்கு உங்களுக்கு மிக்க நன்றி – லஷ்மி” என்று இருந்தது. அதற்குக் கீழே “லக்ஷ்மி வேர்ல்டுவிஷன் அமைப்பால் ஆதரிக்கப் படும் ஒரு சிறுமி” என்ற வாசகமும், அந்த அமைப்பின் முத்திரையும் இருந்தன.
நிமிர்ந்தேன்; நண்பரின் முகத்தில் ஒரு பெருமிதம். பாருங்க என்று மற்ற இரண்டு போட்டோக்களையும் எடுத்துக் காண்பித்தார். ‘கடந்த 5-6 வருஷமாக இந்தக் குழந்தைகளுக்கு உதவி வருகிறேன்’ என்றார்.
‘பெரிய நிறுவனம் – எத்தனையோ ஆதரவில்லாத குழந்தைகளை எடுத்து வளர்க்கிறாங்க. ஏதோ நம்மால ஆன ஒரு சிறு உதவி’.
‘அது கிறிஸ்தவ நிறுவனம் என்று தெரியும் இல்லையா?’
‘ஆமாம். அதுனால என்ன? அவங்க முழுக்க முழுக்க சமூகசேவை தானே செய்யறாங்க. இதில எல்லாம் மதத்தைப் பார்த்தா நாம என்ன சார் மனுஷங்க?’
‘சார், சமூகசேவைங்கறது வெறும் முகமூடி தான். பெரிய அளவில அதிகார பலம், பணபலம் அவங்களுக்கு இருக்கு. வெறித்தனமாக செயல்படுறவங்க. அவர்கள் நோக்கங்களுக்கு எதிரா இருக்கறவங்களைக் கொல்லக் கூடத் தயங்காத ஒரு மதமாற்ற மாஃபியா நிறுவனம் சார் அது. ஒரிஸ்ஸால லஷ்மணானந்த சரஸ்வதிங்கற சுவாமிஜியோட கோரமான கொலை பத்தி கேள்விப் பட்டிருப்பீங்க. அதில இந்த அமைப்பு…’
போற எல்லா இடத்திலயும் ஏதாவது ஒரு சண்டை, வாக்குவாதம், ஹும்.. என்ற பொருள் தொனிக்க, கண்களை உயர்த்தி கவலைக் குறியுடன் என் அருமை மனைவி என்னைப் பார்த்தாள். அன்றைய நாள் தொடங்கி அவள் காணும் மூன்றாவது ’உரையாடல்’ இது. அவளைக் கண்களால் ஆசுவாசப் படுத்திவிட்டு, நண்பரிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.
‘ஏதேதோ சொல்லிக் குழப்பாதீங்க சார். அந்த ஆதரவற்ற குழந்தைகளைப் பாருங்க. அவங்கள யார் காப்பாத்துவாங்க? அவங்க வாழ்க்கைல விளக்கு ஏத்தி வெக்கற…’
‘விளக்கு இல்ல மெழுகுவர்த்தி !’ – போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனாள் என் மனைவி.
நான் பெருமூச்சு விட்டேன். நண்பர் ஒரு திறமை வாய்ந்த புரஃபஷனல். வாழ்க்கையில் கஷ்டப் பட்டு முன்னுக்கு வந்தவர். பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவர். நல்ல பரோபகார சிந்தை உடையவர். அவ்வப்போது கோயில், குளங்களுக்குச் செல்வார். தெய்வ நம்பிக்கையுள்ளவர். அன்பான குடும்பம், ஒரே மகள். என்னைவிடக் கொஞ்சம் பெரியவர், என்னை சார் என்று தான் அழைப்பார்.
சார்! என்று கொஞ்சம் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தேன். ‘உங்களுடைய சேவை மனப்பானமையையும், சமூக அக்கறையும் பாராட்டுகிறேன். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை நல்ல விஷயத்துக்காகக் கொடுக்கிறீர்கள். ஆனால், அப்படிச் செய்யும்போதும், தீர விசாரித்து செய்ய வேண்டும் சார். இல்லையென்றால் நீங்க நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கும் விஷயம் ஒட்டுமொத்தமாக உலகத்துக்குத் தீமை விளைவிப்பதாக ஆகி விடும். நன்றாற்றலுள்ளும் தவறுண்டு; அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை – அப்படின்னு வள்ளுவர் சொல்லியிருக்கார் இல்லையா?’
‘புரியல, என்ன சொல்ல வரீங்க?’
ப்ராஜெக்ட் ஜோஷுவா போன்ற பகாசுரத் தனமான உலகளாவிய மதமாற்றத் திட்டங்கள் பற்றி அவருக்கு சுருக்கமாக சொன்னேன். 2008ம் ஆண்டு இந்திய அரசு சாரா நிறுவனங்களுக்கு வந்த நிதித் தொகை பற்றி அரசு தகவல் வெளியிட்ட போது அதில் முன்னணியில் இருந்தது வேர்ல்டு விஷன் தான். 2002-2003 நிதி ஆண்டிலேயே வேர்ல்டு விஷனுக்கு வரவு 95 கோடி ரூபாய்; இதில் 87 கோடி வெளிநாட்டில் இருந்து வந்தது. 25 மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட சமூக நலத் திட்டங்களை நடத்துகிறோம் என்று பொத்தாம்பொதுவாக சொல்வதோடு சரி. மற்றபடி இவ்வளவு பெரிய நிதியைக் கையாளும் இந்த நிறுவனம் தன் செலவினங்கள் பற்றிய எந்த விவரங்களையும் தாக்கல் செய்வது கிடையாது. இந்த விவரங்களை எல்லாம் சொன்னேன். சிரத்தையுடன் கேட்டுக் கொண்டார்.
அந்த அமைப்பின் வலைத்தளத்தைப் பார்த்திருக்கீங்களா என்று நண்பரிடம் கேட்டேன். ‘இல்லையே’ என்றார். ’அஞ்சல் மூலம் வேர்ல்ட்விஷன் செய்யும் பணிகள் பற்றிய வண்ணமயமான brochure வந்தது. அதைப் பார்த்து பணம் அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு வருடாவருடம் அவர்களிடம் இருந்து வாழ்த்து அட்டைகள், குழந்தைகளின் போட்டோக்கள் எல்லாம் வந்தன’ என்றார்.
பன்னாட்டு நிறுவனமான வேர்ல்டு விஷன் ஒவ்வொரு நாட்டிலும் வலைவிரித்திருந்தது இணையத்தில் தெரிய வந்தது. இந்தியாவில் அவர்கள் செய்யும் பணிகள் பற்றி தேடியதில் சில விவரங்கள் கிடைத்தன.
உதாரணமாக, ஒரிஸ்ஸாவில் கஜபதி மாகாணத்தில் செய்யும் “சேவை“.
கஜபதியில் உங்களது சமூகம் (YOUR COMMUNITY IN GAJAPATI) என்ற அந்தப் பக்கம் இப்படி ஆரம்பிக்கிறது.
கஜபதி பிரதேச வளர்ச்சி திட்டம் 231 கிராமங்களில் பணியாற்றுகிறது. ஒரிஸ்ஸா மானிலத்தில் கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் 60 வீடுகள் உள்ளன. சௌரா பழங்குடியினர் இங்கு வாழும் முக்கிய மக்கள் குழு. மக்கள்தொகையில் 18 சதவீதம் மக்கள் மற்ற கீழ்சாதிகளை சேர்ந்தவர்கள்.
கொஞ்சம் கீழே வந்தால்,
கனடா நாட்டு மிஷநரிகள் இந்தப் பகுதியில் 50 வருடம் பணியாற்றியிருக்கிறார்கள். இப்போது இந்த சமூகத்தில் 85 சதவீதம் கிறிஸ்தவர்கள். திட்டப் பணியாளர்கள் இந்த சர்ச் தலைவர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
என்று முத்தாய்ப்பாக முடிகிறது.
மேற்கு மும்பையில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தோம்.
The majority of the ADP’s population – 72 per cent – is Hindu. There are also Muslims, Buddhists, Christians, Sikhs and people of no religion. ADP staff work with social organisations, community leaders and churches to nurture moral values.
இப்படியே பல பக்கங்கள். பைபிள் வகுப்புகள். சர்ச் எண்ணிக்கை புள்ளி விவரங்கள்.
நண்பரின் முகத்தில் சந்தேக ரேகைகள் படர ஆரம்பித்தன. இன்னொரு பக்கத்தில் தெளிவாக தனது நோக்கங்களை வேர்ல்டு விஷன் அறிவித்திருந்தது.
கிறிஸ்தவ சாட்சியம் என்பது வேர்ல்டு விஷனின் பணித்திட்டத்தின் முக்கியமான, பிரிக்க முடியாத அங்கமாகும். கிறிஸ்தவ சாட்சியத்திற்காக அழுத்தம் தருவதோ, ஊக்குவிப்புகள் வழங்குவதோ கூடாது. அதே சமயத்தில், வேர்ல்டு விஷனின் அனைத்து பணிகளுக்கும் அடிப்படை நோக்கமாக உள்ளது கிறிஸ்தவ போதனையே என்பதை மறைப்பதும் தவறானது; நெறிகளுக்குப் புறம்பானது.
’கார்ப்பரேட் ஃபிலாஸஃபியைத் தெளிவாக, நேர்மையாக சொல்லியிருக்காங்க. பைதிவே, வேர்ல்ட் விஷன்ல இருந்து உங்களுக்கு யாராவது கிறிஸ்தவ சாட்சியம் பற்றி சொன்னார்களா? உங்களுக்கு வந்த கடிதங்களில் அது பற்றி இருந்ததா?’ என்று கேட்டேன். ’அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார். இது முழுக்க ஒரு சமூகசேவை நிறுவனம் என்று தான் இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார் நண்பர். இப்போது பேயறைந்தவர் போல ஆகியிருந்தார்.
டாக்டர் திருமதி ஹில்டா ராஜா எழுதுகிறார் –
இந்தப் பூனைக்கு யார் மணிகட்டுவது?
எனக்கு வேர்ல்டு விஷன் பற்றி நேரடியாகவே தெரியும். எனது பல மாணவர்கள் அந்த அமைப்பில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப் பட்டு வேலைக்குச் சேர்ந்தார்கள். வேலைக்கான நேர்காணலின் போது அவர்கள் எல்லாரிடமும் முக்கியமாக மதப்பிரசாரம் (evangelisation) பற்றிக் கேள்விகள் கேட்கப் பட்டன. விளம்பரத்தைப் பார்த்து எனது நண்பர் ஒருவர் சார்டட் அக்கவுண்டண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிருந்தார். அவரிடமும் தொழில்முறை அறிவு, திறன்கள் சார்ந்த கேள்விகள் எதுவும் கேட்கப் படவில்லையாம்; மதப்பிரசாரம் பற்றியே கேட்டார்களாம். பிறகு அவர் என்னிடம் வந்து இதைப் பகிர்ந்து கொண்டு, வேர்ல்டுவிஷன் உண்மையிலேயே ஒரு சமூக வளர்ச்சி நிறுவனம் தானா அல்லது மதப்பிரசார நிறுவனமா என்று வெள்ளந்தியாகக் கேட்டார். பாவம், சமூக வளர்ச்சி என்பது மதப்பிரசாரத்திற்கான ஒரு வெறும் முகமூடி என்று இவ்வளவு படித்த அவருக்கே கூடப் புரியவில்லை.
முன்பு சென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நான் இது பற்றிக் கேள்வி எழுப்பினேன். அப்போது அமைச்சர் மணிசங்கர ஐயர் தனக்குத் தெரிந்து எந்த கிறிஸ்தவ சமூக வளர்ச்சி நிறுவனமும் மதப் பிரசாரத்தில் ஈடுபடுவதே இல்லை என்று அறிவித்தார். நான் உடனடியாக அதை மறுத்து வேர்ல்டு விஷன் பற்றிய விவரங்களை அடுக்கினேன். மற்ற பல அமைப்புகளும் கூட இப்படித் தான் என்று சொன்னேன்.
இந்த விவரங்கள் செய்தி ஊடகங்களிலேயே வெளிவந்திருக்கின்றன. என்னால் பல உதாரணங்கள் தர முடியும். எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் வேர்ல்டுவிஷன் கிறிஸ்தவர்-அல்லாத ஒருவரைப் பணிக்கு தேர்ந்தெடுக்காது. அவர்கள் கத்தோலிக்கர்களைக் கூட வேலைக்கு எடுக்க மாட்டார்கள்; ஏனென்றால் கத்தோலிக்கர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது.
எனது கத்தோலிக்க மாணவி ஒருத்திக்கு அவர்கள் பணி நியமனம் தரத் தயாராக இருப்பதாக சொன்னார்கள்; ஆனால் அவள் கத்தோலிக்க சர்ச்சைத் துறந்து புரோடஸ்டண்ட் சர்ச்சில் சேரவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். அவளுக்கு அப்போது வேலை மிக அவசியத் தேவையாக இருந்தது; பொருளாதார நெருக்கடி. அதனால் அவள் மாறிவிட்டாள். வேர்ல்டுவிஷன் திட்டமிட்டு இரண்டு பிராமணர்களை தேர்ந்தெடுத்து, மூளைச்சலவை செய்து, புரோடஸ்டண்ட் சர்ச்சில் மதம்மாற்றி அவர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்தியது. மதம்மாறிய (அல்லது மதம் மாறுவதற்கு) பிராமணர்கள் கிடைப்பார்களா என்று வேர்ல்டுவிஷன் வலைவீசித் தேடிவருகிறது. அவர்களைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது தான் நோக்கம். மிக அதிக சம்பளத்துடன் கூடிய டிபார்மெண்ட் தலைவர் போன்ற உயர்பதவிகள் இவர்களுக்குக் கொடுக்கப் படுகின்றன. இதெல்லாம் எனது சிறிய அளவிலான வட்டங்களில் இருந்து எனக்கு நேரடியாகத் தெரியவந்த செய்திகள். அகில இந்திய அளவில் தேடிப் பார்த்தால் இன்னும் என்னவெல்லாம் கிடைக்குமோ?
வேர்ல்டு விஷனின் (”உலகக் கண்ணோட்டம்”) உலகைப் பற்றிய உண்மையான கண்ணோட்டம் மிகக் குறுகியதும், குறைபட்டதும் ஆகும். அவர்களது முதலும் முடிவுமான செயல்திட்டம் மதப்பிரசாரம், மதமாற்றம் மட்டுமே. இந்திய அரசுக்கும் இது கட்டாயம் தெரிந்தே இருக்கவேண்டும். வேர்ல்டுவிஷன் போன்ற அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதைத் தடைசெய்ய வேண்டும் என்று நான் எப்போதும் சொல்லிவருகிறேன். சீனாவும், பிரான்சும் வேறு பல நாடுகளும் இதைக் கண்டிப்பாகச் சகித்துக் கொள்ளாது. இந்தியா இந்த அவலத்தை சகித்துக் கொள்வது மட்டுமல்ல, இதற்குத் துணைபுரியவும் செய்கிறது. ”சமூக வளர்ச்சி” என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து இந்த அமைப்புகளுக்கு வரும் நிதியைக் கண்காணித்து தடைசெய்யாவிட்டால், பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அர்த்தமே இல்லாமல் போகும்.
(டாக்டர் திருமதி ஹில்டா ராஜா, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூகவியல் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்திய தேசியம், கலாசாரம் பற்றிய பெருமித உணர்வு கொண்டவர். கிறிஸ்தவ மதமாற்றப் பிரசாரங்களையும், சூழ்ச்சிகளையும் கண்டனம் செய்து தொடர்ந்து எழுதி வருபவர். மதர் தெரசாவின் மகளுக்கு.. என்ற இவரது கட்டுரை ஒன்றையும் முன்பு நான் மொழியாக்கம் செய்துள்ளேன்).
’இந்திய தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான CII இந்த அப்பட்டமான மதப்பிரசார நிறுவனத்திற்கு சான்று பகர்கிறது. இந்தியாவின் சில மாநில அரசுகளே தங்கள் கிராம வளர்ச்சித் திட்டங்களில் இந்த நிறுவனத்தை பங்குதாரராகச் சேர்த்துக் கொள்கின்றன என்றால் நம்புவீர்களா?’ என்று கேட்டேன்.
’என்ன கொடுமை சார் இது? சே.. இத்தனை வருஷம் இப்படி ஏமாத்தி இருக்காங்களே? நானும் ஏமாந்திருக்கேனே’ என்று நொந்து கொண்டார் நண்பர். ’இப்பவாவது உங்க மூலமா இந்த விஷயம் தெரிஞ்சுதே, இனிமே வேர்ல்டு விஷனுக்கும், அப்படி எந்த அமைப்புக்கும் நான் உதவ மாட்டேன். ரொம்ப நன்றி சார்’ என்றார்.
’நல்லது சார். பட், அதுக்காக உங்க மனிதநேயத்தையும், சமூகசேவை உணர்வையும் பூட்டி வெச்சிடாதீங்க. இப்படி உள்நோக்கங்கள் எதுவும் இல்லாத இந்து சேவை அமைப்புகள் ஏராளம் இருக்கு. உள்ளூரிலேயே அப்படி சேவை அமைப்புக்கள் இருக்கும். அவைகளுக்கு நீங்கள் உதவலாம்’ என்றேன் நான்.
இருட்டத் தொடங்கியிருந்தது. ‘ஓ! சாயங்காலம் நேரம் ஆச்சே, வாடி இங்க..’ என்று தன் மகளைக் கூப்பிட்டுக் கொண்டே வந்தார் நண்பரின் மனைவி. அறையின் மூலையில் சுவாமி படங்கள் இருந்த அலமாரியைத் திறந்தார். எண்ணெய் ஊற்றி, திரியை நிமிண்டி, விளக்கேற்றினார். கைகூப்பி, சர்வ மங்கல மாங்கல்யே.. என்று அம்மாவும் பெண்ணும் சேர்ந்து சுலோகம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
விளக்கு சுடர்விட்டு எரிந்தது.
அருமை.. நானும் பலருக்கு சொல்லி வருகிறேன் இதை
திரு.ஜடாயு அவர்களுக்கு,
நன்றி.
உங்கள் நண்பரைப்போல கணக்கற்றவர்கள் ஏமாந்து கொண்டிருப்பார்கள்.
சுனாமிக்கு பிறகு பல சமூக சேவை நிறுவனங்கள் டொனேஷன் கேட்டு
கொண்டிருந்தன. ஏமாற்றுபவர்கள் (மதம் மாற்றம் மற்றும் பண மோசடி)
நிறைய இருப்பதால் நான் உஷாரகத்தான் இருந்தேன். நண்பர்கள் சிலர்
சேர்ந்து ஒரு பெரிய தொகையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்
கட்டும் பணிக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்தோம். கலெக்ஷன்
ஆகிவிட்டது. கேரளத்திலிருந்து வரும் ஒரு வாரப்பத்திரிகை இது போன்ற
செயல்களை திறம்பட செய்கிறது என்று கேள்விப்பட்டிருந்தேன். முடிவும்
செய்து விட்டோம். நல்ல வேளையாக ஒருவர் அந்த பத்திரிகையின்
நிர்வாகத்தைப்பற்றி கூறினார். மதமாற்றம் செய்பவர்கள் என்று அந்த
பத்திரிகையை படித்தால் தெரியவே தெரியாது. அவ்வளவு உஷாராக
வேஷம் போடுவார்கள். உடனே வேறு ஒரு சேவை அமைப்புக்கு அந்த
பணத்தை அளித்தோம்.
இந்துக்கள் “பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும்” என்பதை
தெளிவாக விளக்கிய கட்டுரை. மீண்டும் நன்றி.
இந்துக்களிடம் இந்து சிறுமிகளை காட்டி பிச்சை எடுத்து, இந்துக்களையே கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் “சேவை” செய்யும் இப்படிப்பட்ட வெள்ளைக்காரர்களை பாராட்ட வேண்டாமா?
திரு ஜடாயு அவர்களின் மற்றுமொரு சிறப்பான அவசியமுள்ள (உடனடித்தேவையுள்ள) படைப்பு.வாழ்த்துக்கள்.
என் நண்பர்களுக்கு படிக்க சொல்லி நான் தெரிவித்து விட்டேன்.
திரு ஜடாயு, நன்றி. கிறிஸ்தவ மலை முழுங்கிகளைப் பற்றி தங்களது எழுத்துக்கள் மூலமாகவே நிறைய தெரிந்து கொண்டேன். உண்மையில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த எனக்கு பலவிஷயங்களைப் புரிந்து கொள்ள இருட்டை விளக்கிய ஒளிபோல உதவியது உங்கள் கட்டுரைகள். இது போல துரோகிகளைத் தோலிருந்துக்கட்டும் கட்டுரைகள் வலைதளங்களில் பொதுவாக காணமுடியாது. தமிழ் ஹிந்துவுக்கும் ஜடாயுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. ஜடாயு, இன்னும் மதமாற்றக்கிருமினல்களைப் பற்றி என்னவெல்லாம் இருக்கிறதோ எல்லாவற்றையும் அறியத்தாருங்கள். நன்றி!
Dear Sir,
I have been thinking about this for a while. I wanted to write about this to The Hindu. I have worked in several companies in the past and I have came across these WorldVision and their alike on several occasions. They have a influential lobby everywhere and professional PRs helping them.
These people target not just individuals but big corporates too. Basically their modus operandi is to show poor children, kids photos and induce kindness, pity. After we open our purse, we feel satisfied. However behind the scenes they use our own money to proselytize. We are indirectly helping these vultures to rob our age-old culture.
There are scores of Hindu charity organizations out there every nook and corner but they never get the popularity these christian charity org. fellows are enjoying, thanks to their PR machine which is well-oiled from outside the country.
I would like to tell anyone reading this, if you would like to do some charitable act, do it by yourself or give it to people who don’t have ulterior motives.
This site is doing wonderful job. God bless those who are behind this website. It is as important to do dharma as it is to fight adharma.
Yours truly
Rajasekar
///மதர் தெரசா நிறுவிய மிஷனரீஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் பெரும் தலைவராக (சுபீரியர் ஜெனரல்) புதிதாக பொறுப்பேற்றுள்ள சகோதரி பிரேமா (இவர் பிறப்பால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்) இரண்டு விஷயங்களை பிரகடனம் செய்துள்ளார் – ”மதமாற்றம் என்பது கடவுளின் பணி” என்று ஒன்று. ”எனக்கு தேவ ஆணை கிடைத்தால் நான் கந்தமால் (ஒரிஸ்ஸா) செல்வேன்” என்று இன்னொன்று.
மதமாற்றம் செய்வதிலேயே ஊறித்திளைப்பவர்கள் அதனைக் கடவுளின் பணி என்று வர்ணிப்பது வழக்கமான ஜல்லி தான். இஸ்லாத்திற்கு ஜிகாத் எப்படியோ, அப்படி கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம். ///
//: ஒரிஸ்ஸா கந்தமால் பகுதியில் சுவாமி லட்சுமணான்ந்தா படுகொலை தொடர்பாக, வேர்ல்டுவிஷன் என்ற உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பின் பணியாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்//
//கிறிஸ்தவம், மதமாற்றம் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதே உண்மை. கிறிஸ்தவம் சென்ற இடங்கள் அனைத்திலும் ரத்த ஆறு தானே ஓடியது? அழிவு, அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் மறைமுகத் திட்டம், செல்வக் குவிப்பு, அதிகாரத்திற்குட்பட்ட குடிகளை ஓட்டாண்டியாக்குதல் இதைத் தவிர வேறு என்ன நிகழ்ந்த்து? கென்ய விடுதலை வீரர் எவ்வளவு நிதர்சனமாகச் சொன்னார் – “மிஷநரிகள் இங்கே வரும்போது அவர்கள் கையில் பைபிள் இருந்தது, எங்கள் கையில் பூமி. வந்திறங்கியதும், “கண்களை மூடிப் பிரார்த்தனை செய்வோம்” என்றார்கள். செய்தோம். நாங்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, எங்கள் பூமி முழுவதும் அவர்களிடம், எங்கள் கைகளில் வெறும் பைபிள் மட்டும்”.//
//அமெரிக்காவில் ஒரு ஏசுசபை குழுமம் தான் திவாலாகி விட்ட்தாக அறிவித்திருக்கிறது – அதன் பாதிரிகளின் பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் அளவுக்கு போதிய பணம் இல்லை என்பதால்.//
//சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அரசு ஊதியம் பெறுகிறார்கள், வருமான வரியும் செலுத்துகிறார்கள். ஆனால் அதே நிறுவனங்களில் பணியாற்றி, அதே ஊதியம் பெறும் பாதிரியார்களுக்கும், கன்யாஸ்திரீகளுக்கும் வருமான வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் படுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இவர்களுக்கு ஊதியம், பென்ஷன் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் மற்ற இந்தியமக்கள் செலுத்தும் வரியை மட்டும் இவர்கள் செலுத்தமாட்டார்கள்! இது எந்த வகை நியாயம்? //
விழிப்புணர்வை உண்டாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி திரு.ஜடாயு!
இந்த லட்சணத்தில் இவர்கள் பாரத நாட்டவர்க்கு கொடை உணர்வு மிகவும் குறைவு என்றும், பில் கேட்ஸ் போன்ற வெளிநாட்டவர் கொடை வள்ளல்கள் என்றும் கூறி வருகின்றனர்.
ஹிந்து மதம் இலவசமாக ஒருவனுக்கு ஒரு பொருளை தருவதை விட அவனிடம் இருந்து தொழிலை பெற்றுக்கொண்டு அவனுக்கு ஊதியம் வழங்க வழி செய்கிறது. விநாயக சதுர்த்தி என்ற ஒரே ஒரு பண்டிகையில் மட்டும், லட்சகணக்கான மக்கள் வாழ்வு பெறுகின்றனர். பூச்செடி நாட்டவர்கள், அதை வியாபாரத்திற்கு எடுத்து வருபவர், தெருவோரம் அதை விற்கும் எண்ணற்ற பாமரர், அருகம் புல் பறிப்பவர்கள், ஊமத்தை இலை, பூ கொய்து அதை வியாபாரம் செய்பவர், பழம், காய் விற்பவர்கள், ஊதுபத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் கணக்கில்லாத மனிதர், களிமண் கொண்டு பிள்ளையார் செய்பவர், காகிதத்தில் குடை செய்து விற்பவர் என்ற லட்சோப லட்சம் பேர் இந்த நாடு முழுவதிலும் வாழ்வு பெறுகின்றனர். இவர்களுக்கு இலவசமாக எதையும் தந்து அவர்கள் தரத்தை தாழ்வு செய்வதில்லை, மாறாக அவர்களுக்கு கவுரவமாக சில நாட்களுக்கு வாழ்வு கிடைக்கிறது.
அருமையான கட்டுரை. ஜடாயு அவர்களின் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஓகை நடராஜன்.
முக்கியமா இப்ப எல்லா கம்பெனியிலும் HR ஆளுங்க முழுக்க இவங்கதான்
படித்து பட்டங்கள் வாங்கி வீட்டிற்குள்ளும் கூட தாய் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்திலேயே பேசி எழுதி பழகி வருகின்ற ஹிந்துக்கள், தன்னைச்சுற்றி என்ன நடந்தாலும் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் நடைப் பிணங்களாக இருந்து கொண்டிருக்கின்ற ஹிந்துக்கள், தேவைக்கு அதிகமாக பொருள் ஈட்டியும் சமுதாய நலனிற்காக சிறிதளவும் தந்து உதவிடாமல் தானே தனது குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்து வருகின்ற ஹிந்துக்கள் இருக்கும் வரை கிறிஸ்துவ மிஷினரிகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். பக்கம் பக்கமாக கிறிஸ்துவத்தைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் கட்டுரை எழுதி என்ன பயன்? ஹிந்து சமுதாயத்திற்காக வாழ்ந்திட, உதவிட, மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றிட முன்வந்தால் மட்டுமே இம்மாதிரி அவலங்களை காலப் போக்கில் குறைத்திட முடியும். பல குறைகள் இருந்தாலும் ஆர்எஸ்எஸ் போன்ற பரிவார் இயக்கங்கள் மட்டும்தான் தேசிய உணர்வுடன் சமுதாய உணர்வுடன் மக்களை தட்டி எழுப்பி வருகிறது.
ஜடாயு
இந்த கிறிஸ்துவ இயக்கத்தின் முக்கிய நிர்வாகி சர்தீப் சர்தேசாய் என்ற டி வி பிரபலம். அதைப் பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லையே. இப்படி ஒரு மதமாற்ற நிறுவனத்தின் பின்னால் இருந்து கொண்டு நடுநிலையாளர் போல வேடம் போட்டுக் கொண்டு இந்து இயக்கங்கள் தலைவர்கள் குறித்தும் மோடி குறித்தும் தன் தொலைக்காட்சி மூலமாக அவதூறுப் பிரச்சாரம் செய்து வரும் ஒரு நச்சுப் பிராணி இந்த சர்தேசாய் போன்றவர்கள்.
இந்த வோர்ல்ட் விஷன் நிறுவனம் போலவே ஆஷா, எய்ட் என்று இன்னும் இரண்டு அமைப்புகள் உள்ளன, இரண்டின் நிறுவனர்களும் மாவோயிஸ்த் தீவீரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பவர்கள் மேலும் பாராளுமன்றத்தைத் தாக்கிய ஜிஹாதிகளுக்காக வழக்கு நடத்தியவர்கள். அது தெரியாமல் நமது இந்து கேனையர்கள் அனைவரும் ஆஷாவுக்காக மராத்தான் ஓடுகிறேன் எய்டுக்காக டொனேஷன் தருகிறேன் என்று பயங்கரவாத இயக்கங்களுக்கு தாங்கள் அறியாமலேயே காசு கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரு இயக்கங்களும் தீவீரமான இந்து வெறுப்பாளர்களால் நடத்தப் படும் இயக்கங்களாகும்,. தயவு செய்து ஆஷா, AIDஆகிய பயங்கரவாத ஆதரவு இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்காதீர்கள். ஒரு பைசாவை எந்தவொரு நிறுவனத்திற்கு அளிப்பதாக இருந்தாலும் தயவு செய்து சில நிமிடம் செலவழித்து கூகுளில் அவர்களது பின்புலம் குறித்து ஆராய்ந்த பிறகு உதவி செய்யவும் அப்படியும் சந்தேகம் இருப்பின் தமிழ் ஹிந்துவில் ஒரு கேள்வி கேட்டு விட்டுச் செய்யுங்கள் கஷ்டப் பட்டு சம்பாதித்த உங்கள் பணம் பாவ காரியங்களுக்குச் சென்று சேர்ந்து விடக் கூடாது ஜாக்கிரதையாக இருங்கள். எச்சரிக்கையுடன் நிதியுதவியோ உடல் உதவியோ செய்யுங்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இணைய தளத்தில் இந்திய
மக்கள் தொகை 102 கோடி எனவும், ஹிந்துக்கள் 82 கோடி, முஸ்லீம்கள் 13.8 கோடி, கிறிஸ்தவர்கள் 2.4 கோடி எனவும் கூறப்பட்டிருக்கிறது.
(2001 நிலவரப்படி)
https://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx
நம் நாடு முழுவதும், எங்கு பார்த்தாலும் சர்ச்சுகள், பள்ளிகள், கல்லூரிகள்,
சேவை(!!!) அமைப்புகள் என்று கிறிஸ்தவர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
ஆனால் அவர்களின் மக்கள்தொகையோ வெறும் 2%தான் என்று அரசின்
அறிவிப்பு கூறுகிறது.
சிலர் பிறப்பால் ஹிந்துவாக, தலித்தாக பிறந்தாலும், மதமாற்றம் அடைந்த
பிறகும் இடஒதுக்கீட்டிற்காக தங்களை இந்துக்களாகவே பதிந்து
கொள்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். வேலைவாய்ப்பு கிடைத்தவுடன் கிறிஸ்தவர்களாக முறைப்படி பதிந்து கொள்கிறார்கள்
என்றும் கேள்விப்படுகிறோம். ஒரு எம்.எல்.ஏ, ஒரு கலெக்டர் என்று இதற்கு உதாரணங்கள் தற்காலத்திலும் கிடைக்கின்றன.இதை பொத்தாம்பொதுவாக கூற முடியாது என்று நினைக்கிறேன்.
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு வரும்போது மதமாற்றம் செய்து கொண்ட கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே ஹிந்து என்று பதிந்து கொள்ள வேண்டும்.
(Conspiracy Theory)
(அல்லது)
மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தவறான புள்ளிவிவரம்
அளிக்க வேண்டும்.(இதை என்னால் நம்ப முடியவில்லை).
(அல்லது)
நாம் கிறிஸ்தவர்களின் செயல்களுக்கு Overreact செய்கிறோம்.
எதார்த்தத்தில் கிறிஸ்தவத்திற்கு மாறுபவர்கள் மிகவும் சொல்பம்தான்.
கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு மேலாக அவர்களின் கொட்டங்களால்
மதம் மாற்றப்பட்டவர்கள் மிகவும் சொல்பம்தான்.
(நடக்கும் செயல்களை கண்டால் இதையும் நம்ப முடியவில்லை)
இவற்றில் எது சரி?
விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.
உண்மையை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
‘ஜோஷுவா ப்ராஜெக்ட் -இரண்டு’ என்பது கிட்டத்தட்ட ஒரு போர் புரிவதற்கான ஆயத்தம் போல் இருக்கும்
மிக மிக பயங்கரமான ,ஒரு நாட்டையே அடியோடு மாற்றும் திட்டம் இது .
ஒன்றுமறியா ஹிந்துக்களை மதம் மாற்றி அவர்களின் இணையற்ற ,அழகிய கலாச்சாரத்தை அழித்து முகமற்றவர்களாக ஆக்கி மேலை நாடுகளின் அடிமைகளாக மாறும் திட்டம் இது.
எதிர் காலத்தில் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் செய்தது போல் இந்தியாவிலும் உள் நாட்டுப் போருக்கு விதை ஊன்றும் திட்டம் இது
அப்பாவி ஹிந்துக்கள் ‘சமூக சேவை’ என்ற ஒரு சொல்லைக் கேட்டாலே போதும் .மகுடிக்கு கட்டுப் படும் நாகம் போல் மாறி விடுவார்கள்
நம் பணத்தை வைத்து நம் சமுதாயம்,நம் நாடு இவற்றை சீரழிக்கும் ‘பஸ்மாசுர’ திட்டம்தான் இவை
பெரும்பாலான் ஹிந்துக்கள், முக்கியமாக ஆங்கிலக் கல்வி பெற்ற ஹிந்துக்கள் கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டு ‘சோசியல் சர்வீஸ்’ செய்கிறோம் என்றால் அப்படியே நம்பி விடுகின்றனர்.
ஆபீஸ், கம்பியுட்டர்,வண்ணமய கையேடுகள் அதில் ‘இவள்தான் லஷ்மி, இவளது அப்பா குடிகாரர் ,இவள் தான் அருந்ததி இவளது அப்பா சிறையில் இருக்கிறார் . இவர்களுக்கு உதவுவது நம் கடமை இல்லையா?’ என்று வண்ண எழுத்துக்கள் அவர்களது தாழ்வு மனப்பன்மையை தட்டி எழுப்பும் போது ஏமாந்து விடுகின்றனர்.
ராமகிருஷ்ணா மிஷன் , இஸ்க்கான், சேவா பாரதி, ஆர்ர் எஸ் எஸ் , சத்ய சாய் சேவை தளம், மாதா அம்ருதானந்தமயி பீடம், ஆதி பராசக்தி பீடம், வனவாசி கல்யாண் கேந்திரம், விஷ்வ ஹிந்து பரிஷத், இவைகளிலிருந்து வேஷ்டி கட்டிக் கொண்டு யாரவது வந்து சொன்னால் நம்ப மாட்டார்கள்
அப்பாவி ஹிந்துக்கள் தவிர இந்த கிறிஸ்தவ இயக்கங்கள் பன்னாட்டு கம்பநிகளிலிருந்தும் பெரும் பணம் பெறுகின்றன.
அவைகளுக்கு இடையே ஒரு ‘பாசப் பிணைப்பு’உள்ளது.
அகவே ஹிந்துக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்
நன்கொடை கேட்டால் உடனேயே கொடுக்கக் கூடாது
தீர விசாரிக்க வேண்டும்
ஹிந்து இயக்கங்களுக்கு மட்டுமே நன்கொடை வழங்க வேண்டும்
ஹிந்து வேர்களை ரகசியமாக அறுக்கும் இயக்கங்களுக்கு நம் பொருள் செல்லக் கூடாது .
ராஜ்தீப் சர் தேசாய்
இவர் ஆங்கில டி வீ சானல் மூலமாக ஹிந்து இயக்கங்கள், ஊழியர்கள் மீது வெறுப்பைக் கக்கும் கிறிஸ்தவர் .
வேர்ல்ட் விச்ன் கையேடுகளில் இவர் புகைப் படம் ,செய்தி இருக்கும்
இந்த ஹிந்து விரோத இயக்கங்கள் அமெரிக்கா போன்ற நாடுளிலும் விஷயம் தெரியாத ஹிந்துக்களை ஏமாற்றி பெரும்பணம் சேர்க்கின்றனர். மேலும் அரசியல் ரீதியாகவும் செயல் பட்டு தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவது,ஹிந்து இயக்கங்களுக்கு எதிராக அங்கு பொதுக் கருத்தை உருவாக்குவது என்ற குள்ள நரி வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்
குஜராத் முதல் மந்திரி மோடி அவர்களுக்கு அமெரிக்கா செல்ல அந்நாடு விசா கொடுக்கக் கூடாது என்று பிரசாரம் செய்து வெற்றியும் பெற்றுள்ளனர்.
இவர்களது முகத்திரையை கிழிக்க வேண்டும்
உண்மை உலகத்திற்கு பளிச்சென்று துலங்க வேண்டும்.
முக்கியமாக் ஹிந்துக்களுக்குப் புரிய வேண்டும்
திரு ராமகிருஷ்ணன் அவர்களது கூற்று மிக உண்மை.
ஹிந்து சமுதாயம் செய்யும் ஒவ்வொரு செயலும் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரத்தை உருவாக்கும் செயலே
ஒரு கோயிலை எடுத்துக் கொள்ளுங்கள்
– பூ விற்கும் பெண்மணியிலிருந்து எவ்வளவு பேர் பிழைக்கின்றனர்?
இவையெல்லாம் இல்லை என்றால்- நினைக்கவே பயமாக உள்ளது..
அமெரிக்கா,இஸ்லாமிய நாடுகள் போல் பாலைவனமாக இருக்கும்
கிறிஸ்தவர்களின் ஜனத் தொகை இரண்டு சதம்தான் என்று நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம்
வெளிப்படையாக கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் எண்ணிக்கை அதுவாக இருக்கலாம். அதுவே தவறான எண்ணிக்கையாக இருக்கும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் கிரிப்டோ கிறிஸ்தவர்களாக உள்ளனர்.
அதாவது பெயர்,நடத்தை,முதலிய எதைப் பார்த்தாலும் ஹிந்து போல் இருந்து கொண்டு ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாக அதற்கு உழைப்பவர்களாக,ஹிந்து விரோதிகளாக் இருப்பார்கள்
உதாரணம்- காங்கிரஸ் அமைச்சர் அம்பிகா சோனி, முன்னாள் ஆந்திர முதல் அமைச்சர்- ( சாமுவேல்) ராஜசேகர ரெட்டி
திடீரென்று ஒரு நாள் எல்லாரும் வெளிக் கிளம்புவர்
அக்னி உண்டாக்க கட்டைகளை கடையும் பொது முதலில் ஒன்றும் இருக்காது.
பிறகு கொஞ்சம் சூடாகும்.பிறகு லேசாக புகை வரும்
ஒரு கட்டத்தில் குப்பென்று தீ மேலே கிளம்பும்
அது போல்தான் இவர்களது திட்டங்கள்
எல்லாம் ரகசியமாகவே இருக்கும்
முகமூடி அணிந்தே எதையும் செய்வார்கள்
மற்றொரு பாலைவன மதம் எதையும் வெளிப்படையாகவே செய்யும். ஆனால் விளைவு ஒன்றுதான் .
வணக்கம்,
இதுவரையில் நான் எந்த ஒரு கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் நன்கொடை அளித்தது இல்லை.
/////சிலர் பிறப்பால் ஹிந்துவாக, தலித்தாக பிறந்தாலும், மதமாற்றம் அடைந்த பிறகும் இடஒதுக்கீட்டிற்காக தங்களை இந்துக்களாகவே பதிந்து கொள்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.//// 90% இதுதான் உண்மையுங்கூட.
எனது நண்பரின் தந்தையார் கூட இதைதான் செய்துள்ளார். அதுமட்டுமில்லாது பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருக்கும் ஆனால் அவர்களின் உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ அழைக்கும் பொழுதுதான் அவர்களின் முழுப் பெயர் தெரிய வரும் ஜான் செல்வராஜ், பிரின்ஸ் மதன்குமார், இப்படி ஆனால் நம்மை பொறுத்தவரை அவர்கள் செல்வா என்றோ மதன் என்றோ அழைக்கப் படுவார்கள். சில சமயம் ஞாயிறன்று அவர்களின் முக மூடி கிழியும்.
நாங்கள் கிறிஸ்துவர்கள் எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று கூற மட்டும் மனம் வராது. இவர்களுக்கு வக்காலத்து வாங்க மட்டும் ஒருகூட்டம் காத்துக் கிடக்கிறது. ஏசுவை நம்பி மதம் மாறி விட்டபின்னர் ஏசுவை நம்பாமல் ஏன் இடஒதுக்கீட்டை நம்பவேண்டும்?.
வணக்கம்,
/////ஆபீஸ், கம்பியுட்டர்,வண்ணமய கையேடுகள் அதில் ‘இவள்தான் லஷ்மி, இவளது அப்பா குடிகாரர் ,இவள் தான் அருந்ததி இவளது அப்பா சிறையில் இருக்கிறார் . இவர்களுக்கு உதவுவது நம் கடமை இல்லையா?’ என்று வண்ண எழுத்துக்கள் அவர்களது தாழ்வு மனப்பன்மையை தட்டி எழுப்பும் போது ஏமாந்து விடுகின்றனர்./////
மேலும் இவள்தான் லட்சுமி என்று போட்டோவில் காணப் பட்ட பெண் மட்டும் பத்து வருஷம் கழித்தும் அதே வறுமை நிலையில்தான் இருப்பாள். ஆனால் லட்சுமியின் பெயரால் கிறிஸ்துவம் வளர்ந்து இருக்கும்.
வணக்கம்,
சகோதரர்களே அதுமட்டுமில்லாது வியாபாரங்கள் கூட நான் மாற்று மதத்தவரோடு அதிகமாக செய்வது இல்லை. மிக மிக தேர்ந்து எடுத்த மாற்று மத நண்பர்களோடுதான் வியாபாரம் செய்கிறேன்.
எனது வீட்டில் இரண்டு மின் அடுப்பு உள்ளது. கேஸ் சமையல் அதிகம் இருக்காது. கேசை மிச்சம் செய்வதில் நாட்டுக்கும் நன்மை. அதைவிட என்னைப் பொறுத்த மட்டில் ஒரு சிலிண்டரின் வியாபாரம் ஒரு அரபுக்கு குறைகிறது, குறைந்த பட்சம் ஒரு சிலிண்டர் தீர மூன்று அல்லது நான்கு மாதங்களாகும்.
பெரும்பாலும் பேருந்திலேயே சென்று விடுவேன். என்னால் அரபிக்கு பெட்ரோல் வியாபாரமும் வெறும் 10% தான். இதுவே என்கனக்கின் படி அதிக மதிப்பீடுதான். மிக அவசியம் எனில்தான் இரு சக்கர வாகனத்தில் செல்வேன்.
//உதாரணம்- காங்கிரஸ் அமைச்சர் அம்பிகா சோனி, முன்னாள் ஆந்திர முதல் அமைச்சர்- ( சாமுவேல்) ராஜசேகர ரெட்டி//
now Umashankar, IAS!
//முக்கியமா இப்ப எல்லா கம்பெனியிலும் HR ஆளுங்க முழுக்க இவங்கதான்
// உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
adengappa. sir sir. more and more are there about christianity and christianity only. they are keeping different domains in different countries and cheating India and Indians. I uploaded some details in their Careers site. Let me watch and reply here soon.
IF ANY ONE SHOWS INTEREST IN CONVERTING TO CHRISTINITY, YOU ASK THE PERSON TO GO TO ANY CHURCH DURING NOON TIME WHEN NORMALLY MOURNING PRAYERS ARE CONDUCTED WITH COFFIN OF DEAD BODIES PLACED BEFORE JESUS. XTIANS NEVER ALLOW SUCH MOUNRING DURING MORNING OR EVENING HOURS FEARING THAT NEW COMERS WILL GET FEARED AND AVERSION ON SEEING SUCH FUNERAL PROCESSION STARTING FROM CHURCH. NORMALLY XTIANS CHURCHES ALLOW BIRTH DAY PARTIES AND MARRIAGE FUNCTIONS DURING MORNING AND EVENING HOURS BUT DURING NOON TIME WHEN NONE WILL COME TO CHURCH, THEY PERMIT FUNERAL SERVICES. SO BEST THING IS TO ADVISE THOSE PEOPLE INTERESTING IN CONVERSION TO VISIT CHURCH DURING NOON TIME, THEN THEY WILL NEVER GO TO CHURCH IN FUTURE AND WILL NOT CONVERT IN TO CHIRINITY. MANY IGNORANT PEOPLE ARE TRAPPED WITHOUT KNOWING THAT XTIANITY IS EXPENSIVE RELIGION FROM BIRTH TO DEATH – WHEN ONE HAS TO PAY FOR HIGH EXPENSIVE COFFIN, BUYING A LAND FOR BURIAL, BUILDING A GRANIT TOME ON TOP OF IT. SO LET HINDUS KNOW ABOUT THIS RELIGION BEFORE CONVERTING TO PRAY LORD WHO IS BLEEDING IN BLOOD IN DYING CONDITION AT CHURCH.. THAT IS WHY MANY NEW CONVERTS FACES LOOK AS IF THEY ARE POSSESSED WITH SOME EVIL SPIRIT. FOR ANY HINDUS, THEIR FACE WILL BE OF SATHVIK GUNA AND VERY SOFT AND PLEASENT WHILE NEW CONVERTS FACE WILL LOOK WITHOUT ANY BRIGHTNESS OR SOFTNESS. HINDU RELIGION IS FULL OF SCIENCE WHILE CHRISTIANITY STILL BELIEVE THAT EARTH IS FLAT, SUN IS REVOLVING AROUND THE EARTH. SO BEWARE OF THIS FALSE RELIGION AND DO NOT BE CALLED LATER AS ”SINNER ”.
சுனாமிக்காக வீடு கட்டுகிறோம் என்று கிறஸ்தவ நிறுவனங்கள் அடித்த கொள்ளை பல கோடிகளைத் தாண்டும். கட்டிய வீடுகள் எல்லாம் தரம் குறைந்தவை . ராமகிருஷ்ண மடமும் மாதா அமிர்தானந்த மயி மடமும் தரமான குடியிருப்புகளை கட்டியுள்ளனர் . ஆனால் நமது மதச் சார்பற்ற பத்திரிக்கை நிறுவனங்கள் இதையெல்லாம் துணுக்குச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை
பெற்ற நன்கொடைகள் ஏராளம். ஏப்பம் விட்டவர்கள் பாதிரிகளும் சகோதரிகளும். காற்றடித்தால் காரை உதிரும்படியாக கட்டப்பட்ட வீடுகள் மிஷி’நரி”களின் கைவரிசை. ஒருவேளை வீடுகள் இடிந்து விழுந்தால் பரலோக சாம்ராஜ்யம் எளிதாகக் கிட்டலாம். ஜடாயுவின் கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இந்து அமைப்புகளுக்கு மட்டுமே நன்கொடை என்று உறுதி கொள்ளவேண்டும்.
நன்றி! தமிழ் தெரிந்த ஹிந்துக்கள் அனைவராலும் தமிழ் ஹிந்து படிக்கப் பட வேண்டும்! நாம் ஒன்று பட வேண்டும்! அப்போது தான் இறையருள் கிடைக்கும்! நாம் முயற்சி செய்யாமலே இறைவனை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது! ஒன்று படுவோம்! உயர்வடைவோம்!
சகோதரர் பாஸ்கர் அவர்களே , உங்களைப் போல் எல்லா ஹிந்துக்களும் நினைக்க வேண்டும்.
எண்ணை விலையில் கொள்ளை லாபம் அடித்து தாங்கள் குபேர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, தங்கள் நாட்டு மக்களை மதத்தை காட்டி ஏமாற்றி, பாரதம் போன்ற நாடுகளில் தீவிரவாதத்தை தூண்டிவிடும் சுல்தான்களின் கொட்டத்தை இப்படிதான் அடக்க வேண்டும்.
Once some Christians came to my house and told me that, ” they want my permission to allow them to prey to jesus to pardon my sins”.
Then I asked ,” Who are you to prey for my family ? Are You Related to me ? ”
They Replied ,” We are well wishers for your family ”
” What Sin I did ? ” I asked .
They blabbered some thing.
I invited them to my office and requested them to wait until my friend who is expected to arrive in few miniuts.
I made phone to Police.
They tried to escape.I locked the doors and said , ” I am The Dist Vice President of BJP in Madurai.You knocked the Wrong Address ” .
The requested to pardon their SINS and cried for Escape.
I realeased them on Condition that they must not Knock the Doors of Any Hindus in our Area.
வணக்கம்,
//சகோதரர் பாஸ்கர் அவர்களே , உங்களைப் போல் எல்லா ஹிந்துக்களும் நினைக்க வேண்டும்.////
நன்றி சகோதரரே, அதைத்தான் நானும் விரும்புகிறேன், என் நண்பர்களிடம் வலியுறுத்துகிறேன். இத்தளத்தின் அனைத்து சகோதரர்களும் அதையே செய்யவும் வேண்டுகிறேன். குப்பையிலும் தங்கம் இருக்கலாம் அது போல் மாற்று மத சகோதரர்களிலும் நற்கருத்து உடையோரிடம் (மட்டும்) நமது நேசம் தொடரட்டும்.
பொருளாதாரத்தடை என்பது கூட அவர்களை கொஞ்சம் தாமதப் படுத்தும் என்பதுவே எனது கருத்து.
Dear all,
I again take this opportunity to point out to the virtueless white church paid money minded anti national print and visual media which is exclaimed as secular. The point all of us miss is the lies and blatant lies of sardesais reach millions and what we share in tamilhindu or vijayvaani reach a thousand?
It is high time Hindu diaspora make their presence felt in print and visual media.
If we simply mourn and curse the designs of sardesais and go on sharing the evil designs of anti national secular viruses, within no time the motherland would be consumed by cruel abrahamic faiths and virtue less money minded anti national secularists.
May bhagwan bless the Hindu Diaspora to have strength enough to take on the cruel white church sponsored media.
Dear Sir,
Hinduism is the first religion of the World. But now it is on its way to destruction. Why?
Try to appreciate how the Muslim community is united, and their religion insist on prayers five times a day and to punish those who speak against their religion.. Christian Missionaries too insist on the Christians that they should visit the Churches on every sundays. There is Unity in their religion. Among the Hindus there is no unity. Temples are built all over the world to make money and not to promote the hindu religion. No one can deny this fact. India ,so called religious country with so many millions of Hindus , should take the initiative and , form one Supreme body,get donations from those who could afford and have faith in Hinduism, and specially from the earnings of the Temples for eg Thiruppathi Thevasthanam, few famous temples of Srilanka,etc . I am sure Sriman Narayanan or Lord Shiva will get angry for making use of the funds generated from the temples to promote Hinduism all over the world.Christian missionaries are very successful in running Orphanages in Srilanka(I am mentioning about SL because I am a Srilankan Tamil) becuse they provide the Refugees with money, clothing, food and shelter in a prestigious way and honor the refugees. Funds from Missionaries. But in Orphanages and Hindu Sunday schools(for eg in Mannar district Madhu area) conducted by the Hindus are orientated in making money for themselves (most of them and not all of them). Hindu Priests are not all bothered about spreading Hinduism but quite good in criticism. What about the main Indian Film industry? How the actors apply the sacred Holy Ash and Sandal and behave in a deplorable way. Even they ridicule the sacred Thevarams and Hymns by including few stanzas of them in the film songs. Some actors apply the Holy ash and indulge in consuming alcohol ,smoking, and take part in rape scenes. First of all this should be stopped immediately. Lets appeal to the Prime Minister of India, Chief Ministers of all the states in India to implement strict rules prohibiting actions where the hindu religion is ridiculed. Let that be the fist step. It is not worth writing religious articles, talking about religion, condemning other religions etc when the main fault ,mistake is in our hands the so called Hindus. At times the Hindus living in Srilanka and the Western world feel shy or scared to apply holy ash /sandal/kunkum on their forehead and travel about in public places or to their work places. Why?
Hope the readers will appreciate what I have mentioned and I appeal to those who are in power should take the necessary steps to promote our ancient respectable religion-HINDUISM world over.
Srideva.
மேலும் சில கிரிப்டோ கிறிஸ்தவர்கள்:
மாவோயிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்கும் ஆங்கிலத்தில் ‘கதைக்கும்’ அருந்ததி ராய் , சத்தீஸ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல் அமைச்சர் அஜீத் ஜோகி
//சகோதரர் பாஸ்கர் அவர்களே , உங்களைப் போல் எல்லா ஹிந்துக்களும் நினைக்க வேண்டும்.//
நானும் பெரும்பாலும் பொது – அரசு வாகனங்களிலேயே பயணம் செய்கிறேன். நான் சிறிது காலம் வளைகுடா பகுதியில் இருந்ததால் அரபியர்களின் ஆணவமான போக்கு என்னை பாதித்து உள்ளது. என்னால் இயன்ற வகையில், பெட்ரோல் டீஸல் செலவுகளை குறைத்து கொள்வேன். ஒவ்வொருவரும் இதை தங்கள் கொள்கைகளில் ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு ஆள் பயணிப்பதற்கு ஒரு போதும் மகிழுந்தை (pleasure car) பயன் படுத்த கூடாது.
கஷ்டப்பட்டு இந்தியா சம்பாதிக்கும் அந்நிய செலாவணியை பெப்சி, கோக், போன்ற பானங்கள் வாங்குவதன் மூலம் வெளிநாட்டுக்கு செலவிடுவதை தவிர்த்து, முழுதும் இந்தியரால் செய்ய படும் பானங்களை பருகலாம்.
சகோதரர்கள் பாஸ்கர்,ராம், ஸ்ரீதர்,
உங்கள் கருத்துகளுடன் நானும் உடனே இணைகிறேன்.
இக்கருத்துகளின் முன்னோடி பாஸ்கருக்கு பாராட்டுகள்.
//நான் ” வோர்ல்ட் விஷன் ” மூலம் ஆதரிக்கப்பட்ட ஒரு அனாதை; எனது பயனர் எண்: 237 //
இது இங்கே தொடர்ந்து இந்துமதத்தை கேவலமாக எழுதிவரும் கிறிஸ்துவரின் வாக்குமூலம்.
இந்துக்களிடமிருந்து காசு வாங்கி இந்துவுக்கே கொடுத்து அவரை கிறிஸ்துவராக்கி அவரை இந்து மதத்தை திட்ட வைக்கும் இந்த கிறிஸ்துவர்களை பாராட்டாமல் எனன செய்வது?
அவருக்கு சிந்திக்கும் திறன் இருந்திருந்தால், தனக்கு உண்மையில் உதவியை செய்தவர்கள் இந்துக்கள்தான். அதற்கு நடுவில் இடைத்தரகர்கள் போல லாபம் சம்பாதித்த வியாபாரிகள்தான் கிறிஸ்துவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்.
இதனை இந்துக்களுக்கே உணர்த்தியிருக்கும் இந்த கட்டுரை, வோர்ல்ட் விஷன் போல ஒரு உலகளாவிய அமைப்பை இந்துக்களே உருவாக்க துணை புரியட்டும்.
ந்ம் ஏழை சிறார்களுக்கு இந்துக்களே உதவும் இந்து அமைப்புகளுக்கு இந்துக்கள் உதவ இந்த கட்டுரை தூண்டியிருக்கிறது.
சரியாகச் சொன்னீர்கள் தங்கமணி. இதில் தன்னலம் கருதாது, தனக்கென எந்த பெருமையும் வேண்டாது, பதிலுக்கு இந்து மதம் மாறவேண்டும் என்று உதவி பெறுபவரை வற்புறுத்தாமல் பரந்த மனதோடு உதவியவர்கள் இந்துக்கள்தான். இன்னும் உதவி வருபவர்கள் இந்துக்கள்தான்.
ஆனால் இப்படிப்பட்ட பரந்த மனதுடைய இந்துக்களையும் இந்து மதத்தையும்தான் இவர்கள் திட்டுகிறார்கள். இவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், அந்த மனசாட்சி என்றாவது ஒருநாள் இவர்களை கேள்வி கேட்கும்.
எங்கோ பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு மத வேறுபாடு எல்லாம் பார்க்காமல் இந்துக்கள் உதவுகிறார்கள். ஆனால், சுனாமிக்கு உதவி மூலமாக மதம் மாற்றுவோம் என்று உலகெங்கும் கூவி காசு வாங்கி சுருட்டிகொண்டவர்கள்தான் கிறிஸ்துவர்கள். சுனாமியின்போது கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மாதா அமிர்தானமயி அமைப்பும், ராமகிருஷ்ண மிஷனும் இன்னும் ஆர்.எஸ்.எஸ் இந்து இயக்கங்களும் தன்னலம் கருதாது, கிறிஸ்துவர்களைப் போல மதம் மாறினால்தான் உதவி என்றெல்லாம் அசிங்கமாக பேசாமல் உதவினார்கள்.
நான் ஐய்யாயிரம் ரூபாய் தருவேன் நீ உன் கடவுளை மாற்றிகொண்டு, உன் தமிழ் பெயரை ஆங்கில பெயராக மாற்றிகொண்டு, உன் தாயையும் மூதாதையர்களையும் உன் நாட்டையும் கலாச்சாரத்தையும் கேவலமாக பேச வேண்டும் என்று கோருவது என்ன மாதிரியான வியாபாரம்?
அந்த ஐய்யாயிரம் கூட ஒரு இந்துவிடம் கேட்டு வாங்கியது!
வேர்ல்ட் விஷன் ஒரு பெரிய பிராடு.
சம்பந்தப்பட்ட இணையதளங்கள்.
எத்தியோப்பியாவில் ஒரு சிறுமிக்கு உதவுவதாக நினைத்து ஏமாந்தவரது கதை
https://boboy.net/2008/11/world-vision-a-huge-big-fraud/
லைபீரியாவில் ஒரு மில்லியன் டாலருக்கு வேர்ல்ட் விஷன் ஏமாற்றுவேலை. ஊழல்.. ராய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்தின் செய்தி
https://www.alertnet.org/db/an_art/58388/2009/05/10-194457-1.htm
கிறிஸ்துவ மோசடிகள் பற்றிய கார்டியன் செய்தி
https://www.guardian.co.uk/money/2008/apr/05/scamsandfraud
வேர்ல்ட் விஷன் மோசடி பற்றிய இன்னொரு விவாத பக்கம்
https://www.bigfooty.com/forum/showthread.php?t=520550
லைபீரியாவில் மோசடி, ஊழல் பிராடு செய்ததற்கு வேர்ல்ட்விஷனின் ஒப்புதல் வாக்குமூலம்
https://www.everydaychristian.com/features/story/2833/
மேலும் வரும்
ஒருவர் சொல்லுகிறார். தன்னுடைய வீட்டில் அடுப்பு எரிவதற்கு வேர்ல்ட் விஷன் தான் காரணமாம். வேர்ல்ட் விஷனா காரணம்? இந்துக்களிடம் வாங்கிய பணம்தானே காரணம்? முகம் ஊர் பேர் தெரியாமல் உதவிய இந்துக்களிடம்தானே உங்களுடைய நன்றிக்கடன் இருக்கவேண்டும். இந்த கையில் வாங்கி,கொஞ்சம் சுருட்டிக்கொண்டு தானே கொடுப்பது போல கொடுக்கும் பிராடுகளிடமா நன்றிக்கடன்?
இன்றைக்கு அடுப்பு எரியும்
நாளைக்கு குடும்பமே எரியும்,ஊர் எரியும், நாடே எரியும்
அதுதானே அவர்களின் குறிக்கோள்
உணவில்லாமல் இருக்கலாம்
ஆனால் தேச துரோகிகளுடன் சேரக் கூடாது.
கோடானு கோடி ஏழைகள் பிழைக்கின்றனர்.
அவர்கள் வேர்ல்ட் விஷனை நம்பியா வாழ்கின்றனர்?
Another confusing judgment by the Indian judiciary.
It is agreed that Ayodhya is the birth place of Lord Ram and the idols of Lord Shri Ram should not be removed. It’s a known fact that Lord Shri Ram’s era dated back to Mughals formation and the Mughals are invaders into Indian soil. The Mosque was not constructed during Ba(r)ber era (1528) and it was constructed after demolishing a non-Islamic structure (certainly a Hindu temple; that too Lord Ram’s). There cannot be another temple of faith then since British invasion took place after Mughal’s only. When it is accepted that it was the birth place of Lord Ram, why there be a Mosque? Any encroachment cannot be legalized; but, be removed.
மிக்க நன்றி… கண்கள் திறந்தன…
நாமும் உலகெங்கும் நமது தர்மத்தை பரப்புவோம்.
வன்முறையை தூண்டும் இஸ்லாத்தையும், எளியவர்களை மதப் போர்வையில் ஏமாற்ற்றும் கிறித்துவத்தையும் பரலோகத்துக்கு அனுப்புவோம்..
A very good article.
Thanks
ஐய, திரு குமார் அவர்ஹல் கூரியிருப்பது தான் சரி. சும்மா சும்மா ஏனையை மதங்களை பற்றி குறை கஊறிக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. ,
இந்து மதத்தை எப்படி, என்ன மாதிரி பரப்பலாம் என்பதை தான் எல்லா இந்து மதத்தவர்ஹளும் சிந்திக்க வேண்டும் .அதற்கேற்ற மாதிரி நடைமுரைஹளை உரியவர்ஹளிடம் எடுதுக்குறி அவனவற்றை செய்யவேண்டும். வேர்ல்ட் விசியன் போன்றவற்றை பற்றி குறை கஊருவதில் அர்த்தமில்லை. நேரமும் காளமும் தான் வீண்.
ஸ்ரீதேவ
என்னுடைய கடிதங்களுக்கு ஏன் மறுமொழி இன்னும் ஒருவரிடமும் இருந்து இல்லை.
ஸ்ரீதேவ
அம்மா ஸ்ரீதேவி, மற்ற மதங்களைப்ப்ற்றி பேசுவது என்பது அவர்களின் எண்ண்ங்களைப் பற்றி தெரிவிக்கவே. அதனை மக்களிடம் எடுத்துக்கூறி, மக்களை உணரவைக்க வேண்டும். இந்த பதில் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?.
இந்து மதத்தை எப்படி எல்லா மக்களிடேயே பரப்புவது என்பதை எடுத்துரைக்க வேண்டும்..இந்து மக்கள் மதம் மாறாமல் இருக்க எப்படி , என்ன செய்ய வேண்டும் . அது தான் முக்கிய நோக்கம் .
ஸ்ரீதேவ
//இந்து மதத்தை எப்படி எல்லா மக்களிடேயே பரப்புவது என்பதை எடுத்துரைக்க வேண்டும்..இந்து மக்கள் மதம் மாறாமல் இருக்க எப்படி , என்ன செய்ய வேண்டும் .//
பிள்ளைகளை ஆன்மீக வகுப்புகளுக்கு அனுப்புவதிலிருந்து துவக்கலாம். வீட்டில் சற்றே திருவாசகத் தேவாரப் பதிகங்களோ, பிரபந்தப் பாடல்களோ பாடிப் பழகலாம். கோவில் திருவிழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றின் தொன்மை, பெருமைகள் பற்றியும், இந்து தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்கள் குறித்துக் குழந்தைகளுக்கும் புரியும் படி சொல்லித்தரலாம். வீட்டு விசேஷங்களில் நம் பண்பாடு குறித்த நல்ல பல செய்திகளையும் விளக்கங்களையும் நல்ல பேச்சாளர்களைக் கொண்டு சொல்லித்தரலாம். அவர் பேசியதன் சுருக்கத்தை அச்சடித்து விருந்தினர்க்குத் தரலாம்.
சற்று உட்கார்ந்து யோசித்தால் இன்னும் பல ideaக்கள் வரலாம்.
Not only charity, spirituality too starts at home.
வணக்கம்,
/////இந்து மதத்தை எப்படி எல்லா மக்களிடேயே பரப்புவது என்பதை எடுத்துரைக்க வேண்டும்..இந்து மக்கள் மதம் மாறாமல் இருக்க எப்படி , என்ன செய்ய வேண்டும் . அது தான் முக்கிய நோக்கம் .///
ஸ்ரீதேவ
ஸ்ரீ தேவ , சகோதரா இலங்கை பெயர் போல உள்ளது, நல்லது,
(இன்று இந்து மதம் என்று அழைக்கப் படும்) சனாதன தர்மம் யாராலும் பரப்பப் பட்டதுமில்லை, அதன் தேவையும் அதற்க்கு இல்லை,
மனிதன் தான் எப்படி வாழ வேண்டும் என்று தர்மத்துடன் நினைக்கிறானோ அவ்வாறே நெறியுடன் தானாகவே மனிதனிடம் விளைந்ததுதான் சனாதன தர்மம். உண்மையில் எந்த மனித உயிரும் எந்த மதம் சார்ந்தும் பிறப்பது இல்லை.
முதலில் சனாதன தர்மத்தினை முழுக்க இல்லாவிடினும் அதன் அடிப்படைதனை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தனது பிள்ளைகளுக்கு பக்குவமாக எடுத்து உரைக்க வேண்டும்.
மனித வாழ்வினைப் பற்றி நமது முன்னோர்கள் என்னென்ன சொல்லி வகுத்துள்ளார்கள் என்றும், அதனை அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் பொருத்திப் பார்த்து இப்போது அந்த வழிமுறைகளை எவ்வாறு உபயோகப் படுத்தலாம் என்று அதை நடைமுறைப் படுத்தலாம்.
நமது ஆத்தி சூடியை விடவும் யாரும் வாழ்க்கையை ரொம்பவும் எளிமையாய் சொல்லி விடவில்லை. இதை நண்பர்களுக்கு எடுத்துக் கூறுவதோடு இல்லாமல் நாமும் வாழ்ந்து காட்டுவது மிக முக்கியம். (இப்போது நண்பர்கள் நாங்கள் ஒரு சிறு புத்தகமாக அவ்வையின் மூதுரைகளை அச்சிலேற்றி அனைவருக்கும் கிடைக்கும் படியாக செய்துள்ளோம், இப்போது அச்சில் உள்ளது)
இங்கே இல்லாதது வேறெங்கும் இல்லை என்ற தெளிவு கண்டு, மற்றவர்களையும் தெளிவு செய்யலாம்.
இதற்கு முன்னர் கடவுள் என்பவர் வானத்தில் எங்கோ இருந்து நம்மை ஆட்டுவிக்கிறார் என்று அவரை remote ஆக்காதீர்கள்.
108 தேங்காய் உடைத்து காரியம் செய்து தர சொல்லி அவரை அரசியல் வாதி ஆக்காதீர்கள்.
இன்பத்தின் போது சந்தோஷமாய் இருந்துவிட்டு துன்பத்தின் போது எல்லாம் இறைவா ஏன் என்னை சோதிக்கிறாய் என்று அவரின் மீது பழி போடாதீர்கள்.
நமக்கு தேவையானதை இறைவன் நம்மோடு வைத்துள்ளான், அதை புத்திசாலித்தனமாக பிரயோகிப்பது நம் கையில் உள்ளது.
இதில் தெளிவடைந்து நம்மை சார்ந்தவர்களையும் தெளிவடைய வையுங்கள்.
ஹிந்து மதம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த பாரத நாட்டில் உயிர்ப்புடன் பிழைத்திருக்க வேண்டுமானால் நம் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து மத உணர்வையும் ,இறை பக்தியையும் ஊட்ட வேண்டும் .இளம் பிராயத்தில் மனதில் பதியும் எந்த ஒரு விசயமும் ஆயுள் முழுதும் அழியாது .கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் …கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு என்ன செய்ய முடியும் ‘-என்று .இதை உணர்ந்து நாமும் ஹிந்து உணர்வோடும் ,ஒற்றுமையாகவும் இருந்தால் எந்த தீய சக்திகளும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது அல்லவா ?
இன்று இந்த அமைப்பிடமிருந்தி இரு முறை எனக்கு கால் வந்தது.
நம்பர் எப்படி அவர்களக்கு கிடைத்தது என்று தெரியவில்லை.தமிழ்ஹிந்து
வில் இந்த கட்டுரை படித்த நினைவிருந்ததால் அந்த அமைப்பின் பேரை கேட்டவுடனே பேச்சை தவிர்த்துவிட்டேன்.
திரு.ஜடாயு அவர்களுக்கு,
நன்றி.