நவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை!

‘ஹம் இஷ்க் கே பந்தே ஹைன், மஸப்ஸே நஹீன்; வாகிஃப்
கர் காபா ஹுவாதோ க்யா, பக்த்கானா ஹுவாதோ க்யா.’

(‘நாங்கள் அன்பால் கட்டுண்டவர்கள், மதத்தால் அல்ல.
அது காபாவாக இருந்தால் என்ன, ஆலயமாக இருந்தால் என்ன
அந்த வித்தியாசம் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை.’)

இந்த உருது கவிதை வரிகளை இயற்றியவர், வாஜித் அலி ஷா . அவத் (ஒளத்) சமஸ்தானத்தின் கடைசி நவாப்.

வரலாற்றில் பல பக்கங்கள் நமது கவனத்திற்கு வராமலேயே போய்விடுகின்றன.

wajidalishah2 அயோத்தியை முன்னிறுத்தி, ஒளத் என்ற பெயரில் தோற்று விக்கப்பட்ட சமஸ்தானம் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் முகலாய ஆட்சி பலவீனமடையலானதும் சுயேச்சையாக இயங்கத் தொடங்கியது. அதுவரை நவாப் வஜீர் என்ற பட்டத்துடன் ஒளத்தின் ஆளுநராக நிர்வாகம் செய்தவர்கள் நவாபாகவே அரசாளத் தொடங்கினார்கள்.

இந்த ஒளத் சமஸ்தான நவாப்களின் பூர்விகம் பாரசீகம் (இன்றைய .ஈரான்). இவர்கள் முகமதியரேயானாலும் கலாசார வழியில் பாரசீகர்கள். குறிப்பாக ஷியாக்கள். பாரசீகம் அராபியரின் மூர்க்கத்தனமான ஆக்ரமிப்புக்கு இரையாகி வலுக்கட்டாயமாக முகமதியம் திணிக்கப்பட்ட பிரதேசம். அராபிய ஆக்ரமிப்பிலிருந்து தங்கள் கலாசாரத்தையும் சமய நம்பிக்கையினையும் தற்காத்துக் கொள்ளத் தப்பி வந்து ஹிந்துஸ்தானத்தின் குஜராத்தில் கரை ஒதுங்கிய பாரசீகர்களுக்கு நமது பாரம்பரியப் பண்பிற்கு இணங்க அடைக்கலம் கொடுத்து அரவணைத்தோம். அவர்கள் மறு வாழ்வு பெற உதவியதோடு தங்கள் சமய நம்பிக்கையினையும் சமூக நெறியினையும் தங்கு த்டையின்றிக் கடைப்பிடிக்கவும் அனுமதி அளித்தோம். அவர்களே இன்று பார்ஸிகள் என்ற பெயரில் தமது தனித்துவத்தை இழந்துவிடாமல் நீடித்து வருகிறார்கள். ஆக, தொன்மையான பாரசீகக் கலாசாரமும் தீயை வழிபடும் ஜோராஷ்ட்ரிய சமய நம்பிக்கையும் இன்றளவும் உலகில் நீடித்திருக்க முடிந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் ஹிந்துஸ்தானத்தின் பரிவுணர்வும், பெருந்தன்மையும்தாம்.

முகமதியராக மதம் மாற்றப்பட்ட பாரசீகர்களும், தாய் நாட்டிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாய் உரிமைகள் இன்றி வாழ்ந்து சலித்து நிர்பந்தம் காரணமாகத் தாமாகவே முகமதியராக மதம் மாறிய பாரசீகர்களும் தொடக்கத்தில் தமது கலாசாரப் பண்பிற்கு ஏற்ப சகிப்புத் தன்மையும் மாற்றுச் சமயத்தினரிடம் நட்பு பாராட்டும் இயல்பும் உள்ளவர்களாகவே இருந்தனர். படிப்படியாகத்தான் .அவர்களும் தாம் சார்ந்த மதத்தின் நடைமுறைகளுடன் முற்றிலும் ஒன்றிப்போனார்கள். எனினும் ஒருசிலர் தங்களுடைய பாரசீகப் பாரம்பரிய வாசனையை ஓரளவுக்கெனும் நிலை நிறுத்தி வந்துள்ளனர். அத்தகைய ஒரு சிலரில் நவாப் வாஜித் அலி ஷாவும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.

1847-ல் அரியணை ஏறிய வாஜித் அலி ஷா 1856 வரை ஒளத் சமஸ்தானத்தின் நவாபாக ஒரு சில அதிகாரங்களுடன் பெயரளவிலேனும் அரசராக நீடித்தார். அதன் பிறகு அவர் அரசாளத் தகுதியற்றவர் என்று கிழக்கிந்தியக் கம்பெனியாரால் முத்திரை குத்தப்பட்டு அரிணையிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டார். ஆண்டுக்கு இருபது லட்சம் ரூபா அரச மானியம் தருவதாகக் கூறி கம்பனியார் அவரை லட்சுமணபுரியிலிருந்தே வெளியேற்றி கொல்கத்தாவில் குடியேறச் செய்தனர்.

வாஜித் அலி ஷா என்கிற ஷியா பிரிவு முகமதிய அரசரைப்பற்றி இவ்வளவு விரிவாகக் கூறக் காரணம் அவர் சிற்றின்பப் பிரியராக இருந்த போதிலும் கலைஞர்களையும் கைவினைத் திறனாளி களையும் ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதோடு ஹிந்து கலாசாரத்தைக் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். தீபாவளியையும் ஹோலி பண்டிகையையும் கொண்டாடுவதில் வாஜித் அலிக்கு விருப்பம் அதிகம். நவாபே ஹிந்துக்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதால் சமஸ் தானத்தில் உள்ள முகமதியரில் பெரும்பாலானோரும் அவ்வாறே கொண்டாடினர். ஹிந்துக்களும் பதிலுக்கு மொஹரம் பண்டிகை யின்போது பஞசாவை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

ராதையையும் க்ருஷ்ணரையும் கதாபாத்திரங்களாக வைத்து இசை நாடகங்கள் நடத்துவது, தானே கவிதை எழுதுவது, கதக் நாட்டியம் கற்பது என வாஜித் அலி ஹிந்து கலாசாரத்துடன் மிகவும் இணக்கமாக இருந்தார்.

அயோத்தியில் ஹனுமான் கர்ஹி (க்ரஹி எனபதுதான் பேச்சு வழக்கில் கர்ஹி என்றானது, பேச்சு வழக்கில் மதுரை மருதையாவது போல!) என்ற இடத்தில் பல ஆலயங்கள் இருந்து வருகின்றன. வாஜித் அலி காலத்தில் அந்த இடத்தை ஆக்ரமித்துக்கொள்ளத் திட்டமிட்ட சில முகமதியர்கள், அங்கு ஒரு மசூதி இருந்ததாகவும் அதை ஹிந்துக்கள் இடித்து விட்டதாகவும் புரளி கிளப்பிக் கலவரத்திலும் ஈடுபட்டனர். ஹிந்துக்கள் மிகுதியாக உள்ள ஹனுமான் கர்ஹிக்குப் பெரும் படை திரட்டிக்கொண்டு சென்ற முகமதியரை ஹிந்துக்கள் விரட்டியடித்தனர். கைகலப்பில் பன்னிரண்டு ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். முகமதியர் தரப்பில் உயிர்ச் சேதம் அதிகம். சாவு எண்ணிக்கை எழுபது. முகமதியர் கலவரத்தைக் கைவிட்டு நவாப் தர்பாரில் முறையிட்டனர்.

புகாரை விசாரித்த நவாப் வாஜித் அலி ஷா, ஹனுமான் கர்ஹியில் ஒரு மசூதி இருந்ததா, அது அங்குள்ள ஹிந்துக்களால் இடிக்கப்பட்டதா என்று விசாரிக்க மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்தார். முகமதியர் சார்பில் பைசாபாத் நஜீம் ஆகாஅலிகான், இந்துக்கள் சார்பில் ராஜா மான்சிங், கிழக்கிந்தியக் கம்பெனியின் மேற்பார்வையில் சமஸ்தானம் இயங்கி வந்ததால் அதன் சார்பில் கேப்டன் ஓர் என்ற ஆங்கிலேயர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமனம் பெற்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தீர விசாரித்ததில் ஹனுமான் கர்ஹியில் மசூதி எதுவும் இருக்கவில்லை, அது இடிக்கப்படவுமில்லை எனத் தெரிய வந்தது. விசாரணைக் குழுவினர் தாம் கண்டறிந்த உண்மையின் அடிப்படையில் ஹிந்து-முகமதியர் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து ஹனுமான் கர்ஹியில் மசூதி எதுவும் இருக்கவில்லை அது இடிக்கப்படவுமில்லை என எழுதி இரு தரப்பாரின் பிரதிநிதிகளூம் அதில் கையொப்பமிடச் செய்தனர்..

ஹனுமான் கர்ஹி அயோத்யா

அத்துடன் பிரச்சினை தீர்ந்தது என்று நவாப் வாஜித் அலி கருதியிருக்கையில் மவுல்வி அமீர் அலி என்ற மத வெறியன் ஹனுமான் கர்ஹி ஹிந்துக்கள் மீது ஜிஹாத் நடத்தி அங்கு ஒரு மசூதியைக் கட்டப்போவதாகச் சூளுரைத்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு அயோத்திக்குப் புறப்பட்டான். வாஜித் அலி இதைக் கேள்விப்பட்டதும் தலைமை மத குருமார்களையும் முகமதிய மார்க்க அறிஞர்களையும் கலந்தாலோசித்தார். ஹிந்துக்களின் ஆலயங்களுக்கு நடுவே வீம்புக்காக மசூதி கட்டத் தேவை யில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். அதையே ஒரு பத்வாவாக அறிவிக்கச் செய்து சிப்பாய்களை அனுப்பி மவுல்வி அமீர் அலியையும் அவன் திரட்டிச் சென்ற ஆட்களையும் தடுத்து நிறுத்தச் செய்தார். அமீரும் அவனது ஆட்களும் நவாபின் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்து சிப்பாய்களுடன் மோதினர். அதில் அமீர் அலி கொல்லப்பட்டான். அவன் ஆட்களும் சிதறி ஓடினர். பிரச்சினை அத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது.

இவ்வாறாக அயோத்தியில் ஒரு நவாப் காலத்தில் நியாயம் ஹிந்துக்கள் பக்கம் இருந்ததால் அவர்களுக்குச் சாதகமான முடிவு உடனுக்குடன் எடுக்கப்பட்டது. ஆனால் அதே அயோத்தியில் 1947-க்குப் பிறகு சுதந்திர பாரதத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களோ, ஸ்ரீ ராம ஜன்மஸ்தானத்தில் இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ராமபிரான் கோயிலை இடித்துக் கட்டப்பட்ட பாப்ரி மண்டபம் அகற்றப்பட்டு, அங்கு மீண்டும் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்ற ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை! சிவில் கோர்ட்டில் தீர்க்கப்பட வேண்டியது போன்ற பங்காளிகளிடையிலான வரப்புத் தகராறு மாதிரிதான் அவர்களின் பார்வைக்கு இந்த மானப் பிரச்சினை தென்பட்டது!

மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்துவிட்டிருந்த அத்தருணத்தில், ஹிந்துஸ்தானத்தில் தங்கிவிட்ட முமதியரிடமிருந்து எவ்வித எதிர்ப்புமின்றி வெகு எளிதாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்ர்வு கண்டிருக்க முடியும். ஆனால் முளையிலேயே கிள்ளி எறியக் கூடியதை பெரும் மரமாக வளரச் செய்து அனாவசியமாகப் பெரும் சேதங்களும், மனஸ்தாபங்களும் இடம் பெறச் செய்ததுதான் மதச் சார்பின்மை என்ற முகமூடி தரித்து, சுதந்திர பாரதத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களின் சாதனை!

35 Replies to “நவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை!”

 1. வாஜித் அலி ஷா பற்றி நல்ல பதிவு. சரித்திரத்திலிருந்தும் வழிபாட்டுத் தளங்கள் பற்றி ஒரு தகராறு/பிரச்சினை, அரசு+அன்றைய நீதித்துறையிடம் முறையீடு, due process மூலம் தீர்வு, அந்த தீர்வை வன்முறை மூலம் மீற முயன்ற ஒரு தரப்பு, அதை ஒடுக்கும் அரசு என்று ஒரு சித்திரத்தை காட்டி இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பிற மறுமொழிகளை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு இந்த due process, நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலை இதெல்லாம் இருக்கிறதா என்று கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது. நேரடியாக கேட்கிறேன், நான் நினக்கும்விதமாக தீர்ப்பு வரவில்லை என்றால் தீர்ப்பை மீறுவேன் என்று இந்த கேசில் மவுல்வி அமீர் அலி எப்படி நினைத்தாரோ அப்படித்தான் நீங்களும் நான் நினைத்த தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றமாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வீர்களோ?

 2. நவாபுக்கு முஸ்லிம் ஓட்டுக்கள் தேவையில்லை. நம்மாட்களுக்கு முஸ்லிம் ஓட்டுக்கள் அத்தியாவசியத் தேவையாயிற்றே! ஓட்டு போய்விடுமே என்பதற்காகத்தான் இந்த செக்யூலர் கோட்பாடுகளைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். முஸ்லிம்களுக்கு ஓட்டு இல்லையென்று அறிவித்துப் பாருங்கள்! “ராமரு எம்பூட்டு பெரிய கடவுளு! அவருக்குக் கோவில் கட்டாம யாருக்குக் கட்டப் போறோம்? அட! முஸ்லிம்கள கோவிலுக்கு அர மைலுக்கு அங்கிட்டால ஒரு ஓரமா தொழுதுகிறச் சொல்லுங்கப்பா, சரியாப் போயிரும்!” என்று எல்லா அரசியல்வாதிகளும் ஒருமித்த குரலில் பேசியிருப்பார்கள். ஓட்டுக்களை கணக்குப்போட்டு மட்டுமே நடத்தப்படுகிற அரசியல் தந்திரங்கள் செக்யூலரிசப் போர்வையில் வரும் இந்தக் கேவலங்கள். இத்தகைய இந்து எதிர்ப்புகள் மாட்சிமை பொருந்திய மக்களாட்சியின் மகிமை.

 3. //… நான் நினக்கும்விதமாக தீர்ப்பு வரவில்லை என்றால் தீர்ப்பை மீறுவேன் என்று இந்த கேசில் மவுல்வி அமீர் அலி எப்படி நினைத்தாரோ அப்படித்தான் நீங்களும் நான் நினைத்த தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றமாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வீர்களோ?…//

  @ RV

  நீங்கள் கட்டுரை ஆசிரியரிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இதற்கு நான் பதில் தருவது சரியாக இருக்காது. அதனால், உங்களிடம் ஒரு கேள்வி.

  மதிப்பிற்குரிய கட்டுரை ஆசிரியர் ஆசைப்பட்ட தீர்ப்பு இப்போது வந்த தீர்ப்பாக இருக்க வாய்ப்புக் குறைவு என்றே அனுமானிக்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட பூமி முழுவதும் ராமனுக்குத் திருப்பித் தரப்படவேண்டும் என்பதுதான் கட்டுரை ஆசிரியரின் விருப்பமாக இருக்கக்கூடும் என்பது அவரது படைப்புகளின் ரசிகனான எனது புரிதல்.

  ஆனால், இப்போது வந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுபோலத்தான் அவர் இப்போது கட்டுரைகள் எழுதுகிறார். இது முழுவதும் பிடிக்காவிட்டாலும், அமைதிக்காக விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்ளும் குணமாகத்தான் எனக்குத் தெரிகிறது. விட்டுக்கொடுத்தது மட்டுமல்லாமல், இந்துக்களை எதிரிகளாகக் கருதும் முஸ்லீம்களுடன் சமரசம் தொடர என்ன செய்யவேண்டும் என்ற யோசனையையும் சொல்லுகிறார்.

  கோவிலும் மசூதியும் ஒற்றுமையாக நட்புடன் செயல்படவேண்டுமானால் இந்துக்களின்மீது சுன்னிகள் அளவு வெறுப்புக் காட்டாத ஷியாக்களின் வசம் முஸ்லீம்களுக்கான நிலம் தரப்படவேண்டும் என்று எழுதுகிறார். ஒருவகையில் வந்திருக்கும் தீர்ப்பு நல்லபடியாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கம்தான் எனக்குப் படுகிறது. இது இந்துத்தன்மை நிறைந்த செயல்.

  கட்டுரையாளரின் போக்கு இப்படி இருக்கும்போது, உங்களுக்கு இப்படி ஒரு கேள்வி கேட்க ஏன் தோன்றியது என்பது எனக்குப் புரியவில்லை. எந்த அடிப்படையில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள்?

 4. thiruttai visarikka vantha neethipathi, thirudanukkum panku koduthuvittar. Thirudu koduththavanum ponal pokirathu, manitha kulathin amaithi mukkiyam endru eattruk kolkiran. Anal thirudan mael Muraiyeedu seyyap pokiranam.

  Ottup porukkikal Neethimandrathaiye mirattukirarkale. he Ram.

 5. அன்புள்ள ஸ்ரீ ஆர்.வி.,

  என் கட்டுரையை ஓர் அவசரத்தில் படித்துவிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். முகமதியர்கள் துராக்கிரமாக ஹிந்துக்களின் இடத்தை ஆகிரமித்துக்கொள்ள முற்பட்டு, துணிவு மிக்க ஹிந்துக்களால் அடித்து விரட்டப்பட்டனர். எப்படியும் இடத்தை அபகரித்தே தீர வேண்டும் என்ற பேராசையில் முகமதியர் நவாபிடம் வேண்டுகோள் வைத்தனர். நவாப் விசாரணைக் குழு அமைத்து முடிவு எடுத்தார். மற்றபடி பங்காளி வழக்கு ஏதும் நடைபெறவில்லை!

  அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்ம பூமி விவகாரத்தில் எனது தனிப்பட்ட கருத்து அது நீதி மன்றம் முடிவு செய்ய வேண்டிய விஷயமே அல்ல என்பதுதான். அது சொத்து தகராறு அல்ல. நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம், அதன் காரணமாகவே நமது நம்பிக்கையை எள்ளி நகையாடுவதுபோல உருவான விவகாரம். குஜராத்தில் அரசு ஆணையின் வாயிலாக நிலம் கையகப் படுத்தப்பட்டு ஸ்ரீ சோமநாதர் ஆலயம் எழுப்பப்பட்டதுபோல் அயோத்தியிலும் அரசு ஆணை மூலம் பாப்ரி கட்டிடம் இருந்த நிலம் முழுவதும் கையகப்படுத்தப்பட்டு அங்கு ஸ்ரீ ராம் லல்லாவுக்கு ஆலயம் அமைக்க ஹிந்துக்களுக்கு அந்த நிலம் வழங்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

  தனது பெயராலேயே என்னைக் களிகொள்ளச் செய்யும் ஸ்ரீ களிமிகு கணபதி,
  என் சார்பில் என்னைவிடவும் சிறப்பாகப் பதில் அளிக்கும் திறமையும், அவ்வாறு பதில் அளிக்கும் உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் இந்த சுன்னி-ஷியா விவகாரம் பற்றிக் கேட்டால் எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கண்டு சொல்ல வேண்டிய சமாசாரம்தான். ஸ்ரீ ராம ஜன்ம பூமியில் மூன்றில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தெளிவாகவே முன்பு குறிப்பிட்டுள்ளேன். உயர் நீதிமன்றம் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது என்றும் எழுதியுள்ளேன் (பார்க்க: அயோத்தி அபத்தத் தீர்ப்பு 3ஆம் பகுதி கட்டுரையின் கீழ் எனது மறுமொழிகள்). ஆகையால் மத நல்லிணக்கம், இரு தரப்பினரிடையே சுமுக உறவு என்றெல்லாம் சாக்கிட்டு ஸ்ரீ ராம ஜன்ம பூமியினை பின்னப்படுத்தலாகாது என்பதே என் உறுதியான கருத்து. குறிப்பாக ஹிந்துக்களின் ஏழு மகா புண்ணியத் தலங்களில் ஊர் எல்லைக்குட்பட்டு மாற்றுச் சமய வழிபாட்டுத்தலம் எதுவும் இருக்கலாகாது என்பதை இடைவிடாது எழுதியும் பேசியும் வருகிறேன் என்பதை அறிய மாட்டீர்களா?
  -மலர்மன்னன்

 6. நல்ல புத்தி, “நேர்”ருவிர்க்கு, ஜவஹர்லால் நேஹ்ருவிர்க்கு இருந்ததில்லை. டிடிகே+இந்து பத்திகை மூதாதையர் குடும்பத்தினர் ஒருவர், அரசியல் கலப்பால், ராம்லாலாவை ஜன்மஸ்தானத்தில் வைக்கப்போக, முத்ரா விவகாரம் என்ற பெயரில், ஜவஹர்லால் நேரு, டிடிகேயைப் பழி வாங்கினார். காந்தியின் பெயரால் அபகரிக்கப்பட்ட காங்கிரசும், களவாணி ஜவஹர்லால் நேஹ்ருவும் தான், சுதந்திர இந்தியாவில் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டதற்க்குக் காரணம். தங்கள் குடும்பத்தில் ஒருவர் ராமபிரானை ஜன்மஸ்தானத்தில் வைத்ததற்கு, பிராயச்சித்தமாகத்தான், ராம் என்ற அதே பெயரில், பசுத்தோல் போர்த்திய புலியாய், இன்று “தி இந்து” ,”பிரண்ட்லைன்” போன்றன இந்து மதத்திற்கு எதிராய் நடமாடுகின்றன.

 7. அன்புள்ள மலர்மன்னனுக்கு,
  சரியான நேரத்தில் அறிய வேண்டிய அரிய தகவலைக் குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி.
  -சேக்கிழான்

 8. Sunnis and shias might kill each other but when it comes to clash with non-muslims they all unite under one banner including Ahmadias.

 9. இன்றும் எத்தனியோ நல்ல முஸ்லிம் மக்கள் நம்மிடையே நட்புடனும் நல்ல ஆதரவுடனும் தான் பழகி வருகின்றனர். ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த இனிய நட்பும் புரிதலும் விலகி கொண்டு வர காரணம் ஜிஹாத் என்பதின் தவறான புரிதலும், ஒரு வகைப்பட்ட வெறியர்களின் தூண்டுதலும் துர்போதனைகளுமே காரணம் ??? யாரை சொல்லி என்ன பயன். மைனோ, சிங்கு ரெண்டு பேருமே நவராத்திரி முடிவுல ராம,லக்ஷ்மண வேடம் தரித்த இரு சிறுவர்களுக்கு திலகம் வைத்து, ஆரத்தி எடுக்கின்றனர். யாரை ஏமாற்ற இந்த செகுலர் நரி வேஷம்???

 10. ஹிந்துக்களின் நிலைப்பாட்டை மிக சரியாக எழுதி உள்ளீர்கள் திரு மலர்மன்னன் அவர்களே. இங்கே தோல் உரிக்க பட வேண்டியவர்கள் செகுலர் வாதிகளும் தேச விரோத செகுலர் மீடியாவும் தான். எந்த ஹிந்து ஆதரவாளர் செகுலர் மீடியாவை எதிர் கொண்டாலும் அவர்கள் ஹிந்துக்களிடம் கேட்ட கேள்வி நீங்கள் நீதி மன்ற தீர்ப்பை ஏற்ப்பிர்களா? இன்று நிதி மன்ற தீர்ப்பு வந்த பின் நேர் பல்டி அடிக்கிறார்கள். இந்த தேச விரோத செகுலர் மீடியா வெள்ளை சர்ச் பணத்தில் கொழுத்து உள்ளதால் நாளை ஒரு வேலை உயர் நீதி மன்றம் ஹிந்துக்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு கொடுத்தாலும் அதை எதிர்ப்பார் என்றே எதிர் பார்க்கலாம்.வெள்ளை சர்ச் பணத்திலும் நேர்மை நாணயம் இவற்றை துறந்து உழல் பணத்தில் உலா வரும் தேச விரோத மீடியா சக்திகளிடம் இதற்கு மேல் ஏதும் எதிர் பார்க்க முடியாது.

 11. // நேரடியாகக் கேட்கிறேன், நான் நினக்கும்விதமாத் தீர்ப்பு வரவில்லை என்றால் தீர்ப்பை மீறுவேன் என்று இந்த கேசில் மவுல்வி அமீர் அலி எப்படி நினைத்தாரோ அப்படித்தான் நீங்களும் நான் நினைத்த தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றமாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வீர்களோ?-
  ஸ்ரீ ஆர்.வி.//

  அன்பார்ந்த ஸ்ரீ ஆர்.வி.,
  மவுல்வி அமீர் அலி தீர்ப்பு தனக்குச் சாதகமாக வரவில்லை என்றால் தீர்ப்பை மீறுவேன் என்று நினைத்ததாக நீங்களாகவே ஏன் நினைத்துக் கொள்கிறீர்கள்? ஹனுமான் கர்ஹி சம்பந்தமாக வழக்கு ஏதும் நடக்க வில்லையே, நவாபு தீர்ப்புச் சொல்வதற்கு! விசாரணைக் குழுவினர் நேரடி ஆய்வு செய்து தாம் கண்ட உண்மையை ஒப்புக்கொள்ளுமாறு ஒப்பம் பெற்றனர், அவ்வளவுதானே? இது ஒரு சம்பவம். இன்னொரு சம்பவம், ஹனுமான் கர்ஹி ஹிந்துக்கள் மீது ஜிஹாது செய்து ஆலயங்களை இடித்துவிட்டு மசூதி கட்டப் போவதாக அமீர் அறிவித்து, ஆட்களைத் திரட்டிக்கொண்டு ஸ்தலட்க்ஹ்திற்குச் செல்ல முற்பட்டான். நாவாபு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தன் சிப்பாய்களை அனுப்பினான். அமீர் அலி அடங்க மறுத்து சிப்பாய்களுடன் மோதினான். மோதலில் சிப்பாய்களால் கொல்லப் பட்டான். விஷயம் அத்துடன் முடிந்தது! இதில் என்னை ஏன் அநாவசியமாக இழுக்கிறீர்கள்?
  -மலர்மன்னன்

 12. அன்புள்ள மலர்மன்னன்,

  // ஒரு தகராறு/பிரச்சினை, அரசு+அன்றைய நீதித்துறையிடம் முறையீடு, // என்ற வார்த்தை பிரயோகம் இது பங்காளிகளுக்குள் ஒரு சிவில் வழக்கு என்று தோன்ற வைக்கிறதுதான். ஓவராக சுருக்கிவிட்டதற்கு வருந்துகிறேன். ஆனால் பிரச்சினை (பிரச்சினை வெறும் சொத்து வழக்கா இல்லை ஒரு தரப்பின் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்படுதல்) பிறகு (ஆக்கிரமிப்பாளரே) முறையீடு, அரசு தீர்ப்பு, தீர்ப்பை ஏற்காமல் எதிர்த்தவரை அடக்குதல் என்றுதானே நீங்கள் அளித்த சித்திரம் இருக்கிறது என்றே கருதுகிறேன். தவறு இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

  // எனது தனிப்பட்ட கருத்து அது நீதி மன்றம் முடிவு செய்ய வேண்டிய விஷயமே அல்ல என்பதுதான். // உங்கள் கருத்தை மதிக்கிறேன். கையகப்படுத்த அரசுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பதை ஏற்கிறேன். உங்கள் கருத்து அதுவாக இருந்தாலும் இன்றைய நிதர்சனம் கோர்ட் கேஸ் என்றாகிவிட்டது. நாளை ஹிந்துக்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தால் அந்த தீர்ப்பை ஏற்கவேண்டியதில்லை என்று சொல்வீர்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எப்போது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வு இல்லையோ அப்போது யாரோ ஒருவர், ஏதோ ஒரு அமைப்பு தீர்ப்பு வழங்க வேண்டி இருக்கிறது. அந்தத் தீர்ப்பு ஒரு தரப்புக்கு பிடிக்காமல் போகலாம்; இரண்டு தரப்புக்குக்கே அது அநியாயமாகத் தோன்றலாம். ஆனால் தீர்ப்பு பிடிக்கவில்லை என்று ஏற்க மறுத்தால் நாட்டில் எந்த பிரச்சினையும் தீராது, அப்படி ஏற்க மறுப்பது ஒரு மோசமான முன்மாதிரி என்று நான் உறுதியாக கருதுகிறேன். (எனக்கு பிடித்த தீர்ப்பு வர வேண்டும் என்றால் ஒரே வழி சட்டத்தை திருத்துவதே) உங்கள் கருத்து என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

  இதை எழுதிய பிறகே உங்களின் அடுத்த மறுமொழியைப் படித்தேன். // மவுல்வி அமீர் அலி தீர்ப்பு தனக்குச் சாதகமாக வரவில்லை என்றால் தீர்ப்பை மீறுவேன் என்று நினைத்ததாக நீங்களாகவே ஏன் நினைத்துக் கொள்கிறீர்கள்? // அமீர் அலியின் ஜிஹாதுக்கும் வாஜித் அலி ஷாவின் தீர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? // விசாரணைக் குழுவினர் நேரடி ஆய்வு செய்து தாம் கண்ட உண்மையை ஒப்புக்கொள்ளுமாறு ஒப்பம் பெற்றன // இதற்கும் தீர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா என்ன? கோர்ட்களும் தாங்கள் கண்ட உண்மையைத்தானே தீர்ப்பாக சொல்கின்றன! நீங்கள் சொல்ல வருவது எனக்கு சரியாக புரியவில்லை.

  ரியாலிட்டி, கொஞ்சமாவது லாஜிக்கோடு பேசுங்கள். விக்ரகங்கள் வைக்கப்படது 47-இல். டிடிகே அமைச்சரானது 56-இல். பழி வாங்க நினைத்த நேரு இவரை எப்படி அமைச்சராக்கினார்? அப்போது டிடிகே விக்ரகம் வைக்க துணை போனது தெரியாதா? 56-இல் அமைச்சராக்கிவிட்டு 58-59-இல் முந்த்ரா விவகாரத்தை வைத்து பழி வாங்குகிறாரா? சரி அப்படி பழி வாங்கப்பட்ட டிடிகேவை மீண்டும் 62 -இல் எதற்கு நேரு அமைச்சராக்கினார்? மறந்திருப்பாரோ? ஏன் இப்படி உளறுகிறீர்கள்?

 13. //ஆனால் பிரச்சினை (பிரச்சினை வெறும் சொத்து வழக்கா இல்லை ஒரு தரப்பின் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்படுதல்) பிறகு (ஆக்கிரமிப்பாளரே) முறையீடு, அரசு தீர்ப்பு, தீர்ப்பை ஏற்காமல் எதிர்த்தவரை அடக்குதல் என்றுதானே நீங்கள் அளித்த சித்திரம் இருக்கிறது என்றே கருதுகிறேன். தவறு இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.- ஆர்.வி.//
  மிக்க நன்றி, அன்பார்ந்த ஸ்ரீ ஆர்.வி. ஹனுமான் க்ரஹி விவகாரத்தில் இரு தரப்பாரிடையே நவாபின் தர்பாரில் வழக்கு ஏதும் நடைபெறவில்லை. முகமதியர்கள் அவர்களாக அதிக்ரமமாக ஹனுமான் க்ரஹியை ஆக்ரமித்துக்கொள்ள முற்பட்டனர். துணிவு மிக்க ஹிந்துக்களால் அடித்து விரட்டப்பட்டனர். தங்கள் முயற்சி பலிக்காததால் அரசின் ஆணை மூலம் காரியத்தை சாதித்துக்கொள்ளலாம் என்று பார்த்தனர். ஹிந்துக்கள் நவாபிடம் போய் நிற்கவில்லை. நவாப் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து அவர்களை வழக்காடச் செய்யவில்லை. மாறாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கச் செய்தான். எனவே அதை இரு தரப்பாருக் கிடையிலான வழக்கு எனக் கொள்ள இயலாது. விசாரணைக் குழு முகமதியர் கூற்றில் உண்மை இல்லை என்பதைக் கண்டறிந்து ஹனுமான் க்ரஹியில் தமக்கு பாத்தியதை எதுவும் இல்லை என்று முகமதியரிடம் கையொப்பம் வாங்கியது. குழுவின் முடிவு இன்னது என்று ஹனுமான் க்ரஹி ஹிந்துக்கள் அதிகாரப் பூர்வமாக அறிய வேண்டும் என்பதற்காக அவர்களிடமும் குழுவின் முடிவைத் தெரிவித்து ஒப்பம் பெற்றது. விஷயம் அத்துடன் முடிந்தது. அதன் பிறகு ஒரு மவுல்வி ஜிஹாதுக்குப் புறப்பட்ட பொழுது அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஆகிறது.

  முகமதியரிடம் ஒரு பழக்கம், பக்கத்து வீட்டுக்காரனிடம் ஒரு சொந்தத் தகராறு என்றாலும் அந்தப் பக்கத்து வீட்டுக்காரன் மாற்று சமயத்தான் என்றால் தங்கள் சச்சரவை ஜிஹாது என்று வர்ணிப்பார்கள்! தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதில் கிறிஸ்தவ மீனவரோடு வரும் தகராறை உடன் வசிக்கும் முகமதியர் ஜிஹாது என்றே வர்ணிப்பார்கள்! படிப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கும்! இப்படித்தான் மவுல்வி அமீர் அலி ஜிஹாத் என்று சொல்லிப் புறப்பட்டதால் நவாபுக்கு மார்க்க அறிஞர்களைக் கலந்தாலோசிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் ஆலயங்களுக்கு நடுவே மசூதி ஏதும் கட்டத் தேவையில்லை என்று அறிவித்தனர். அதையே ஒரு பத்வாவாக அறிவிக்கச் செய்தும் அமீர் அலி தொடர்ந்து தாக்குதல் நடத்தச் சென்றதால் நவாப் தனது சிப்பாய்களை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினான். அமீர் அலி சிப்பாய்களுடன் மோதியதால் கொல்லப்பட்டான். இவ்வளவுதான் விஷயம். இவ்விரு சம்பவங்களையும் இரு வேறு சம்பவங்களாக, தனித் த்னியானவையாகத்தான் பார்க்க வேண்டும். விசாரணைக் குழு அமைக்கப்படாமல் போயிருந்தாலும் சரி, அது முடிவு ஏதும் எடுக்கவிடினும் சரியே, அமீர் அலி ஹனுமான் க்ரஹியில் ஆக்ரமிப்புச் செய்ய முற்பட்ட முகமதியர் ஹிந்துக்களால் அடித்து விரட்டப்பட்ட்டனர் என்ற சேதி கேட்டுத் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டுதான் போயிருப்பான். விசாரணைக் குழு நியமனம் அதன் முடிவு என்பவற்றுக்கெல்லாம் அவன் காத்திருப்பன் என்று தோன்றவில்லை!
  என் அன்பார்ந்த ஸ்ரீ ஆர்.வி., தற்சமயம் நடைமுறையில் உள்ள அரசியல் சாசனம் முற்றிலுமாகத் தூக்கி எறியப்பட்டு, இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்பப் புதிய சாசனம் எழுதப்பட வேண்டும் என்பதே என் தனிப்பட்ட கருத்து. தற்பொழுதுள்ள சாச்னம் ஒரு பரபரப்பான சூழலில் உருவாக்கப்பட்டது. எனவே சுதந்திர ஹிந்துஸ்தானத்தில் பத்திரமாகவும் உரிமையுடனும் வாழ முடியும் என்ற நம்பிக்கையைச் சிறுபான்மையினருக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற பிரக்ஞையுடன் அது இயற்றப்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது. இப்போது சிறுபான்மையினருக்கு உள்ள சலுகை பெரும்பான்மையினருக்கு இல்லை. இதனாலேயே சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் மனஸ்தாபம் கொள்ளும் சூழல் அனாவசியமாக உருவாகிறது. நமது தற்போததைய அரசியல் சாசனம் எதனால் காலாவதி யாகிவிட்டது என்றும் முற்றிலும் புதிய சாசனம் ஏன் அவசியம் என்றும் விவரித்துத் தனியாக ஒரு கட்டுரை எழுத விரும்புகிறேன். பார்க்கலாம்!

  //இன்றைய நிதர்சனம் கோர்ட் கேஸ் என்றாகிவிட்டது. நாளை ஹிந்துக்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தால் அந்த தீர்ப்பை ஏற்கவேண்டியதில்லை என்று சொல்வீர்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். -ஸ்ரீ ஆர்.வி.//
  சொல்லமாட்டேன். ஏனெனில் ஒரு நடைமுறை நடப்பில் உள்ளவரை அதனை அனுசரிப்பதே நாகரிகம். ஆனால் உச்ச நீதி மன்றம் தீர்ப்பை மாற்றி அளிக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் உயர் நீதி மன்றம் சுன்னி வக்பு வாரியத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைக் “கண்டறிந்து” அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதி மன்றத்தில் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பில் கண்டுள்ள முடிவுகளைப் பற்றித் தான் விவாதங்கள் நடைபெறலாமேயன்றி அங்கு வழக்கு ஆதியோடந்தமாக விசாரிக்கப்பட மாட்டாது. மேல்முறையீடு சம்பிரதாயம் இதுவே (‘Written Arguments’ என்றுதான் மேல்முறையீடு மனுவையே தாக்கல் செய்ய முடியும். எடுத்த எடுப்பிலேயே இரு விவாதமும் அதன்பின் தீர்ப்பும்தாம்!) . ஆகவே உச்ச நீதி மன்றம் நியாயமாக அடிமனை மீது உரிமை ஏதும் இல்லாத வக்பு வாரியத்துக்கு, அதில் பங்களித்தது செல்லாது என்றுதான் தீர்ப்புச் சொல்ல வேண்டியிருக்கும். ஒருவேளை உச்ச நீதி மன்றம் நீங்கள் விரும்புகிற மாதிரி உயர் நீதி மன்றத் தீர்ப்பிற்கு மாறாகத் தீர்ப்பளித்தால் ரிவிஷன் பெட்டிஷன் போடலாம். அதிலும் தீர்ப்பு உயர் நீதி மன்றத் தீர்ப்பிற்கு மாறாக இருந்தால் தீர்ப்பை எதிர்த்து அல்ல, ஹிந்துக்களின் உரிமைக்காக அயோத்தியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க நானும் இன்னும் பலரும் ஆயத்தமாக உள்ளோம்.
  -மலர்மன்னன்

 14. aiyaa malarmannan,

  RV ketta kelvigal edharkum ungalaal sariyaana badhil thara iyalavilai. thavarai oppu kollungal.ilaai naanum maulavi ameer ali pola thaan enru oppu kollukangal.

 15. திரு ஆர்.வீ. அவர்களே! எந்தக் கோர்ட்டும் வழக்குகளை விசாரிக்கும்போது சம்பந்தப்பட்ட வாதி,பிரதிவாதிகளின் வக்கீல்களின் வாதங்களையும் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களையும் ஆராய்ந்து சட்டத்தின் வழியாக தங்களுடைய நோக்கில் படுவதைத் தீர்பாகத் தருகிறார்கள். இதை முதலில் ஒப்புக்கொள்வதும் மறுப்பதும் சம்பந்தப்பட்ட வாதி பிரதிவாதிகளுக்கு மட்டும்தான். மற்றவர்கள் சொல்வதெல்லாம் வெறும் கருத்து மட்டும்தான். சுப்ரீம் கோர்ட் முடிவாக சொல்வதை மலர்மன்னன் ஏற்றுக்கொண்டால் அல்லது மறுப்புத் தெரிவித்தால் அதனால் தீர்ப்பு மாறுமா? திரு. மலர்மன்னன் அவர்கள்தான் எந்த வழக்கும் போடவில்லையே! உங்கள் கேள்வியில் பொருளே இல்லை. எந்த தீர்ப்புக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியும் அல்லவா?

 16. //அரசு தீர்ப்பு, தீர்ப்பை ஏற்காமல் எதிர்த்தவரை அடக்குதல் என்றுதானே நீங்கள் அளித்த சித்திரம் இருக்கிறது என்றே கருதுகிறேன்.- ஸ்ரீ ஆர்.வி.//

  இல்லையே, ஸ்ரீ ஆர்.வி. நான் தெளிவாகவே எழுதியுள்ளேன்.அதனால்தான் நீங்கள் ஓர் அவசரத்தில் படித்துவிட்டு மறுமொழி எழுதியதாக முன்பே குறிப்பிட்டேன். நீங்கள் சிரமம் பார்க்காமல் மீண்டும் ஒருமுறை கட்டுரையைப் படித்தால் நான் இப்போது சொல்வதை சரியென ஒப்புக்கொள்வீர்கள்.
  -மலர்மன்னன்

 17. Dear Shri. RV!

  விக்கிரகங்கள் ஸ்தலத்தில் வைக்கப்பட்டது 1949ல், 1947ல் அல்ல.

  இது நீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையல்ல என்று கூறும் தாங்கள் தீர்ப்பை ஒப்புக்கொள்வது பற்றி இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்? தீர்ப்பை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமல்ல. தீர்ப்பை ஒப்புக் கொள்ள இயலாதவர்களுக்காகத் தான் மேல் முறையீடு என்ற விஷயமே இருக்கிறது.

  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியின்பாற்பட்டதாக இல்லை என்றால் (not sure whether we can ask for constitutional bench to hear the case), பாராளுமன்றத்தில் பேசி சட்டத்தை மாற்றலாம். We have precedence for that. Law was suitably amended to nullify the Supreme Court’s verdict to articulate the feelings the muslim citizenry. Why cannot the law be amended to articulate the Hindu sentiments? We’re not going on war with anybody. We’re jaw-jawing, it better than war-warring!

  The basic tenet of democracy is “rules are for people, but people are not for rules”. So, respectfully submitting that a judgment is unacceptable is not unruly. We may do it with all due respect for the judiciary, as this is not an abstract legal issue.

  அதெல்லாம் கிடக்கட்டும் ஆர்வீ…… அமீர் அலி ஜிகாத் நடத்தியதற்கும், மலர்மன்னன் Supreme Court தீர்ப்பை ஏற்பதற்கும் என்ன சம்பந்தம்? நவாபு முஸ்லிமானாலும் நியாயத்தைச் சொன்னார், ஆனால் இங்கே இந்துக்களே இந்துக்களுக்கு நியாயம் கிடைப்பதை எதிர்க்கிறார்களே என்ற ஆதங்கம் கட்டுரையின் அடிநாதம். விஷயத்தை விட்டுவிட்டு ‘மலர்மன்னா! சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்பாயா மாட்டாயா சொல்’ என்று அவர் மீது நீங்கள் பாய்வது ஏன்?

 18. அன்புள்ள மலர்மன்னன், // ஒரு நடைமுறை நடப்பில் உள்ளவரை அதனை அனுசரிப்பதே நாகரிகம்… // தெளிவாக சொல்லிவிட்டீர்கள். இந்த தெளிவு, விவேகம், இங்கே பலருக்கு இல்லை என்றே கருதுகிறேன். // உச்ச நீதி மன்றம் நீங்கள் விரும்புகிற மாதிரி… // என் விருப்பம் என்ன என்று எப்படி தெரிந்துகொண்டீர்கள்? 🙂 நான் சொல்லவே இல்லையே! 🙂 For the record, சட்டம் சரியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு விருப்பம் எதுவும் இல்லை. எனக்கு இருக்கும் குறைவான சட்ட ஞானத்தை வைத்து இந்த கேஸ் முஸ்லிம்கள் பக்கமே தீர்ப்பாகும் என்றே நினைத்தேன். நீதிபதிகளுக்கு என்னை விட அதிகமாக சட்டம் தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, அவர்கள் தீர்ப்பை முழு மனதோடு ஏற்பதில் பிரச்சினையும் இல்லை. இதே போல இடிப்பு கேசில் இடித்தவர்கள் ஜெயிலுக்குப் போவதே நியாயம் என்று நினைக்கிறேன். அதில் என்ன நுணுக்கங்கள், சட்ட ஓட்டைகள் இருக்குமோ, என்ன தீர்ப்பு வருமோ தெரியாது.

  நீங்கள் சொன்னதால் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். எனக்கு இந்த விவகாரத்துக்கும் கோர்ட்/கேசுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. என் புரிந்துகொள்ளும் திறமை அவ்வளவுதான் என்று விட்டுவிடுகிறேன்.

  பல பதிவுகளுக்கு தாவி தாவி எழுதுவது கஷ்டமாக இருப்பதால் இங்கேயே எழுதுகிறேன்.

  வேறு ஒரு பதிவில் என்னை இப்படி கேட்டிருந்தீர்கள் – // ஹிந்துஸ்தானத்தில் இன்றைய ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படுகின்றன என்று கருதுகிறீர்களா? // நான் இந்திய ஊடகங்களை ஆழ்ந்து படிப்பவன் இல்லை. ஏதோ ஹெட்லைன்ஸ் பார்ப்பதோடு சரி. என் eNNangaL தவறாக இருக்க சாத்தியம் உள்ளது. இன்றைய ஊடகங்கள் எதுவும் – தமிழ் ஹிந்து தளம் உட்பட – ஒரு அஜெண்டாவை முன் வைத்து செயல்படுகின்றன என்றே கருதுகிறேன். நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒரு காலத்தில் நடுநிலையாளர் என்று நான் கருதி இருந்த சோ ராமசாமி கூட இதற்கு விதிவிலக்கல்ல. டைம்ஸ் ஆஃப் இந்தியா பற்றி சொல்லவே வேண்டாம். ஹிந்துவின் சீன சார்பு நிலை 20 வருஷங்களுக்கு முன்பே பிரசித்தம். Mohammad the Idiot என்ற புனைகதையை பிரசுரித்ததற்காக 20 வருஷத்துக்கு முன் ஒரு பெங்களூர் செய்தித்தாள் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டது இன்னமும் நினைவிருக்கிறது. அந்த பத்திரிகைக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று அப்போது நிறைய பேசிக்கொண்டிருப்போம். இணைய தளங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். வினவு தளம் என்று ஒன்றைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டு கட்டுரைகள் ஏறக்குறைய ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. ஒரு கட்டுரையில் ஸ்ரீரங்கன்த்து பரகால ஜீயர் மடத்தில் வேலை செய்யும் ஒருவர் மீது பாலியல் புகார். புகார் என்ற நிலையில் இருக்கும்போதே அவரைப் பற்றி “கொழுப்பெடுத்த அய்யங்கார் பார்ப்பான்” என்று எழுதினார்கள். அடுத்த கட்டுரை கேரளத்தில் ஒரு கன்னியாஸ்திரீ பாதிரியார்கள் மீது சாட்டிய பாலியல் குற்றச்சாட்டுகளைப் பற்றி. அது புத்தகமாக வந்ததாம். அந்த கிருஸ்துவ அமைப்பின் உயர்நிலை பாதிரி ஒருவரே கூட இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டாராம். ஆனால் இவர்கள் மிகவும் இதமாக பதமாக அப்படி சொல்லப்படுகிறது, இப்படி இருக்கலாம் என்றெல்லாம்தான் எழுதினார்கள். புகார் என்ற நிலையிலேயே அய்யங்கார் பார்ப்பானுக்கு கொழுப்பு, உயர்நிலை பாதிரி ஆமாம் என்று சொன்ன பிறகும் அடக்கி வாசிப்பு. இந்த இரட்டை நிலையை எதிர்த்து நான் எழுதியபோது ஆரம்பித்த கசப்பு பெரிதாக வளர்ந்தது. இன்று நான் எந்த இந்திய ஊடகத்திலும் நடுநிலையை, consistent application of a value system என்பதை எதிர்பார்ப்பதில்லை. எதைப் படித்தாலும் இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று அடிமனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், நான் இந்திய ஊடகங்களை நுனிப்புல் மாதிரி மேய்பவன், என் எண்ணங்கள் தவறாக இருக்கலாம்.

  // அவை அவ்வாறு நடுநிலையுடன் செயல்படாமைக்குக் காரணம் என்னவாக இருக்கமுடியும் // இன்றைய ஊடகங்கள் பெரிதும் பிசினஸ் மட்டுமே. சென்சேஷன் விற்கிறது. நித்யானந்த பற்றி வீடியோ போட்டால் சண் டிவியை எல்லாரும் பார்க்கிறார்கள். பாதிரியார் வீடியோ போட்டாலும் பார்ப்பார்கள், ஆனால் பிரச்சினைகள் வரலாம். அதனால் சிறுபான்மையினர் விஷயத்தில் அடக்கி வாசிக்கிராரகுள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் இந்திய ஊடகங்களை நுனிப்புல் மேய்பவன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

  // வெறும் வயதை மட்டுமே தகுதியாகக் கொண்டு ஆசி வழங்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை! // வயது மட்டுமே உங்கள் தகுதி என்று யார் சொல்வார்கள்? நிச்சயமாகா நான் சொல்லமாட்டேன்.

  // உங்கள் மனதில் என்னவிதமான பதிலை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்… // அதைத்தான் // // ஒரு நடைமுறை நடப்பில் உள்ளவரை அதனை அனுசரிப்பதே நாகரிகம்… // என்று சொல்லிவிட்டீர்களே! நானும் // எனக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டுக்கு கேஸ் போனால் என்ன தீர்ப்பு வரும் என்பதை விட, இன்றைக்கு என்ன தீர்ப்பு வந்திருக்கிறது என்பதை விட, தீர்ப்பை எல்லோரும் ஏற்று நடக்க வேண்டும் என்பதே முக்கியமாகத் தெரிகிறது // என்று சொல்லி இருந்தேன்.

  // உயர் நீதி ம்ன்றத் தீர்ப்பை ஏற்கப்போவதிலை என்று நம்மில் யார் சொல்லி விட்டார்கள் என்று இவ்வளவு வாதம் செய்கிறீர்கள் // நீங்கள் இந்த வாதத்தின் ரிஷிமூலத்தை பார்த்தீர்களா என்று தெரியவில்லை. சேக்கிழான் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதே சரியான அணுகுமுறை என்று எழுதி இருந்தார். அவர் சொல்வது சரி, ஆனால் தீர்ப்பு வருவதற்கு ஓரிரு நாள் முன்பு கூட சாதகமான தீர்ப்பு வராவிட்டால் தீர்ப்பை நிராகரிப்போம் என்று இங்கு பலர் பொங்கினார்கள் என்று நான் குறிப்பிடிருந்தேன். அங்கிருந்து வளர்ந்ததுதான் இந்த வாதம் எல்லாம். இப்போது யார் சொன்னது என்று நீங்களே கேட்கிறீர்கள். 🙂

  ரிஷி, // எந்த தீர்ப்புக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியும் அல்லவா? // சரியே. ஆனால் மாற்றுக் கருத்து என்பது வேறு, தீர்ப்பை ஏற்க வேண்டியதில்லை, தீர்ப்புக்கு அடங்கமாட்டோம் என்பது வேறு. இங்கே எழுதும் பலரும் தீர்ப்பு வருவதற்கு முன் சாதகமான தீர்ப்பு வராவிட்டால் அது நீதிபதிகளின் தவறான முடிவு என்று மட்டும் எழுதவில்லை, அப்படி வரும் தீர்ப்பை ஏற்க வேண்டியதில்லை என்று பொருள்படும்படி எழுதினார்கள். இந்த வாதத்துக்கு மூலமே அதுதான்.

  அருண் பிரபு, // இது நீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையல்ல என்று கூறும் தாங்கள் தீர்ப்பை ஒப்புக்கொள்வது பற்றி இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்? தீர்ப்பை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமல்ல. // மன்னிக்கவும் அருண் பிரபு, தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இது நீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றே நான் கருதுகிறேன். பெரியவர் மலர்மன்னந்தான் அப்படி கருதவில்லை. நீதிமன்றத்தால் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை என்றால் தீர்ப்பை ஒப்புக் கொள்வது முக்கியம் இல்லையா? Due process படி மேல் முறையீடு, சட்ட திருத்தம் என்று போகும் அணுகுமுறையே சரியானது, கடப்பாரை எடுத்துப் போய் இடிப்பது மிகவும் தவறான அணுகுமுறை, மோசமான முன்னுதாரணம் என்பது என் உறுதியான கருத்து.

 19. ஆர்வீ ! நீதிமன்றத்தீர்ப்பு பற்றிய தங்கள் கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். நிற்க. கட்டுரையில் எங்குமே கடப்பாரை கொண்டு போய் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று மலர்மன்னன் சொல்லவில்லையே! இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டாஆதங்கத்துக்கும் தங்களின் கருத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்றால், பதிவுக்குப் பதிவு தாவி பதிலளிக்கக் கஷ்டமாக இருக்கிறது என்கிறீர்கள். பேசப்பட்ட விஷயத்துக்கு தக்கதான பதில் சொல்வது மட்டுமே முறையாக் இருக்க முடியும்.

  துவக்கியாயிற்று, தொடர்வோம்…..
  ஊடகங்களின் நடுவுநிலை பற்றிய உங்கள் கவலை நியாயமானது. இந்திய ஊடகங்களை மட்டுமல்ல அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கப் புற்களையும் பல அங்குலங்கள் ஆழமாக மேய்ந்தவன் என்ற முறையில் இந்திய ஊடகங்களுக்கு முதுகெலும்பில் வலுவில்லை என்பது என் துணிபு.

  ஓபாமா சவூதி மன்னர் காலில் விழுந்தாரா என்று அமெரிக்க ஊடகங்கள் அலசியதில் இருந்த துணிவு, இளவரசர் சார்லஸ் தன் தொண்டு நிறுவனப் பணிகளுக்கு சவூதி அரச குடும்பத்திடம் பெற்ற நன்கொடை பற்றி இங்கிலாந்து பத்திரிக்கைகள் நடத்திய விவாதம், இசுலாமை சிலாகித்து அவர் பேசியதற்கு எழுப்பப்பட்ட கண்டனங்கள், இந்தியாவில் கற்பனையில் மட்டுமே காணக் கிடைக்கும்.

  //நித்யானந்த பற்றி வீடியோ போட்டால் சண் டிவியை எல்லாரும் பார்க்கிறார்கள். பாதிரியார் வீடியோ போட்டாலும் பார்ப்பார்கள், ஆனால் பிரச்சினைகள் வரலாம். அதனால் சிறுபான்மையினர் விஷயத்தில் அடக்கி வாசிக்கிராரகுள் என்று நினைக்கிறேன்.// நுனிப்புல் மேய்ந்தாலும் பிரச்சினை பற்றிய சரியான புரிதல் இது. ஆனால் பிரச்சினைக்கு என்ன தீர்வு? சொல்லவில்லையே தாங்கள்! (யாருக்கு எந்த மொழி புரியுமோ அதில் பேசுவது புத்திசாலித்தனம் என்பது என் கருத்து.)

  //For the record, சட்டம் சரியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு விருப்பம் எதுவும் இல்லை.// சட்டம் ஒரு சாரார் எதுசெய்தாலும் சரி என்று சொல்லவைக்கப் படுகிறதே? அப்படி இருக்கும் போது அந்தச் சட்டத்தைச் சரியாக அமல்படுத்துவது எப்படி நியாயமாகும்? சொந்த நாட்டிலேயே அகதியாகத் திரியும் 5 லட்சம் காஷ்மீர பண்டிட்டுகளின் நிலைக்கு சரியாக அமல்படுத்தப்பட வேண்டிய மாட்சிமை பொருந்திய அந்தச் சட்டம் விட்டத்தைப் பார்க்க உட்கார்ந்து கொண்டு முதுகு சொறிகிறதே? அடிப்படை சரியில்லாத சட்டத்தை வைத்துக் கொண்டு அதன் மாட்சிமை காக்கப்பட வேண்டும் என்பது என்னய்யா லாஜிக்?

  RV! Impartiality is not steering away from taking sides, but it is taking the correct side (the word right could be misconstrued). I understand from your replies that you’re a deadly blend of Marxist obedience and religious ethos. That should be the reason for your anxiety to uphold the letter of law and to lament about it’s spirit being left to oblivion, which pastes a picture that you’re frustrated.

  Now is not too late RV! Get yourself good knowledge of proper Hindu way of life and the prevailing law of the land. Then only you could take properly informed decisions, till then yours would be ill-informed conclusions supported by self demeaning declarations that you’ve little knowledge of law and you just read headlines and comment on issues.

 20. // உச்ச நீதி மன்றம் நீங்கள் (ஸ்ரீ ஆர்.வி.) விரும்புகிற மாதிரி… //

  ஸ்ரீ ஆர்.வி., வேண்டுமென்றேதான் அவ்வாறு எழுதினேன்! நீங்கள் பலதையும் நீங்களாகத் தீர்மானித்துக்கொண்டு எழுதுவதால் அவற்றைப் படிக்கும் பிறருக்கு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அனுபவித்துப் பார்க்க வேண்டும் அல்லவா?

  ஸ்ரீ ஆர்.வி., உங்களுக்குத் தெரியுமா, 1857 புரட்ச்டசியின்போது அதை ஒடுக்க நீல் என்கிற ஆங்கிலேய தளகர்த்தன் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டான். அவன் மக்கள் அஞ்சி நடுங்கி அடங்கிக் கிடக்க வேண்டும் எனபதற்காக எவ்வித விசாரணையுமின்றிக் கண்ணில் தென்படுகிற இளைஞர்களை சாலையோர மரங்களில் தூக்கிலிட்டும், வழியில் எதிர்ப்படும் கிராமங்களையெல்லாம் தீக்கிரையாக்கிக் கொண்டும் முன்னேறிச் சென்றான். புரட்சி ஒடுக்கப்பட்டபின் அவனைச் சிறந்த சாதனையாளன் என்று கிழக்கிந்திய கம்பனி மட்டுமின்றி அதன் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் கொண்டாடியது. அவனுக்கு மரியாதை செலுத்த சென்னையில் ஸ்பென்ஸர் சதுக்கத்தில் அவனது சிலை நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட நாள் முதல் அதனை அகற்றும் போராட்டத்தை சொரணையுள்ள தேச பக்தர்கள் பலவாறாக நடத்தி வந்தனர். அரசு அதைப் பொருட்படுத்தாததால் சிலையை உடைத்தெறியும் முயற்சிகளும் நடந்தன. சில சமயம் சிலையைச் சேதப்படுத்த மட்டுமே முடிந்தது. பின்னர் 1937-ல் ஸ்ரீ ராஜாஜி அவர்கள் சென்னை ராஜதானியின் பிரதமராகப் பொறுப்பேற்றபின் அச்சிலை அகற்றப்பட்டு, சென்னையில் உள்ள பொருட் காட்சிசாலையில் (மியூசியம்) கிடத்தப்படது. இன்றும் அது அங்கு கிடப்பதைக் காணலாம். இச் சம்பவத்துடன் பாப்ரி கட்டிட இடிப்பை ஒப்பிட வேண்டுகிறேன். ஸ்ரீ ராஜாஜி மக்கள் உணர்வைப் புரிந்துகொண்டு நீல் சிலையை அகற்றியதுபோல் தேச விடுதலை, மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிவினை என்றெல்லாம் நிகழ்ந்து, ஆண்டுகள் பலவாகியும், ஹிந்துக்கள் நியாயத்தை நல்லமுறையில் இடைவிடாது எடுத்துக் கூறியும் அதனை ஏதோ பங்காளி சொத்து தகராறுபோலக் கருதி அரசு வாளா விருந்ததால்தான் இறுதியில் மயிலே மயிலே இறகு போடு என்று கேட்டால் போடாது என உணர்ந்து கடப்பாறைகளை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது அல்லவா? சட்டப்படி இது குற்றம் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் சமப்ந்தப்பட்டவர்கள் பெருமிதத்துடன் சிறை செல்லத் தயாராகவே உள்ளனர்.
  //சேக்கிழான் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதே சரியான அணுகுமுறை என்று எழுதி இருந்தார். அவர் சொல்வது சரி, ஆனால் தீர்ப்பு வருவதற்கு ஓரிரு நாள் முன்பு கூட சாதகமான தீர்ப்பு வராவிட்டால் தீர்ப்பை நிராகரிப்போம் என்று இங்கு பலர் பொங்கினார்கள் என்று நான் குறிப்பிடிருந்தேன்.-ஸ்ரீ ஆர்.வி.//

  இதென்ன பேச்சு ஸ்ரீ ஆர்.வி.? தீர்ப்பை நிராகரிப்போம் என்று ”பொங்கினால்’ ( பொங்கினார்கள் என்பது நீங்களாகவே அனுமானிப்பது!) சட்டப்படி மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதுவதாக அதை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக என்ன சொல்கிறார்களோ அதைத்தானே நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்? சம்பந்தப்பட்டவர்கள் “பொங்கி” யிருந்தால் தானே நீங்களும் பொங்கியிருக்க வேண்டும்?

  இங்கு ஒரு தகவலைத் தருகிறேன்:
  அக்டோபர் 17 ஆம் தேதி அகில பாரத ஹிந்து மஹா சபையின் தலைவர் ஸ்ரீ சக்கரபாணிஜி சென்னை வந்தார். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர ஸரஸ்வதி அவர்களைச் சந்தித்து அயோத்தி தீர்ப்பை அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கச் சென்றார். அப்போது என்னையும் உடன் வர்ருமாறு கூறினார். ஆனால் விஜய தசமியான அன்று எனக்கு சென்னையில் பல நிகழ்ச்சிகள் இருந்ததால் என்னால் அவருடன் செல்ல இயலவில்லை. மறுநாள் அக்டோபர் 18 அன்று சென்னை சேத்துப்பட்டு சங்கராலயத்தில் ஸ்ரீ சக்கரபாணிஜி ஊடக செய்தியாளர்களைச் சந்தித்தார். ஹிந்து மஹா சபையும் ஏற்கனவே வழக்கில் சம்பந்தப் பட்டுள்ளதால் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமானால் த்ன்னையும் வழக்காடலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனுவை (கேவட் என்று இதைக் குறிப்பிடுவார்கள்) அளித்திருப்பதுபற்றித் தெரிவித்தார். மேலும், வருகிற 28 ஆம் தேதி தில்லியில் காஞ்சி காமகோடி பீடாதிபதியவர்கள் முன்னிலையில் வழக்கில் சமபந்தப்பட்டவர்கள் அனைவரும் (முகமதியர் தரப்பையும் சேர்த்துத்தான்) கூடிப்பேசி சமரச முடிவு எடுக்க முயற்சிசெய்யவிருக்கிறார்கள் என்ற தகவலையும் சக்ரபாணிஜி அறிவித்தார்.
  ஆக, எல்லாம் முறைப்படியே நடந்து வருகின்றன. நம் தரப்பில் வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் எவரும் பொங்கிவிடவில்லை. பொறுமையாகவே உள்ளனர் (உண்மையிலேயே ஹிந்துக்கள் பொங்கினால் எவரும் தாக்குப் பிடிக்க முடியாது! அந்த நிலைக்கு ஹிந்துக்கள் தள்ளப்பட மாட்டார்கள் என்றே நம்புவோம்!).

  //இன்றைய ஊடகங்கள் எதுவும் – தமிழ் ஹிந்து தளம் உட்பட – ஒரு அஜெண்டாவை முன் வைத்து செயல்படுகின்றன என்றே கருதுகிறேன். நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றுதான் தோன்றுகிறது – ஸ்ரீ ஆர்.வி.//

  ஹிந்துக்கள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பதற்கு நாதியில்லை என்றாகிவிட்டதால்தான் தமிழ் ஹிந்து தளம் உருவாக வேண்டிய கட்டாயமே ஏற்பட்டது. ஆகவே ஹிந்துக்கள் தரப்பு நிலைப்பாட்டைப் பேசுவதே அதன் நிலைப்பாடாக இருக்கமுடியும், இருக்கவும் வேண்டும்!
  நமது ஊடகங்கள் சிறுபான்மையினர் குறைபாடுகளைஅடக்கி வாசிப்பதும், செளகரியமாகப் பேசாமலே விடுவதும் அவை தம்மீது வன்முறைத் தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்யும், முன்கூட்டியே அதைச் சமாளிக்க அரசின் பாதுகாப்பும் கிடைக்காது என்பதால்தான். இந்த விஷயத்தில் நீங்கள் சொலவது சரியே. முக்கியமாக இன்று ஊடகம் ஒரு தொழில். அதற்குத் தடங்கல் ஏற்படத் தாமே காரணமாக இருக்க அவை விரும்புமா? ஆனால் இன்று ஊடகங்கள் பலவற்றின் முதலீட்டில் கிறிஸ்தவ, முகமதிய அமைப்புகளின் பங்கு அதிகரித்துள்ளது. ஹிந்துக்கள் கரங்களில் முழுமையாக உள்ள ஒரு சில ஊடகங்களிலோ தமது மதச் சார்பின்மையை நிரூபிக்க வேண்டும் என்கிற கவலை! மேலும், ஹிந்து விரோத இடது சாரிகளின் கையிலும் ஊடகம் உள்ளது.

  //நான் இந்திய ஊடகங்களை நுனிப்புல் மாதிரி மேய்பவன், என் எண்ணங்கள் தவறாக இருக்கலாம்.- ஸ்ரீ ஆர்.வி.//

  ஸ்ரீ ஆர்.வி., நீங்களே ஒப்புக்கொண்டுள்ளதால் கேட்கிறேன்: எதைப்பற்றியும் வெறுமே நுனிப்புல் மேய்ந்துவிட்டு விவாதிப்பது சரியா? சந்தேகம் வேண்டுமானால் தக்கவர்களிடம் கேட்டுத்தெளிந்து அதன்பின் விவாதிக்க லாமேயன்றி ஒரு விஷயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் விடாப் பிடியாக அது பற்றி விவாதித்துக்கொண்டிருக்கலாமா?

  //எனக்கு இருக்கும் குறைவான சட்ட ஞானத்தை வைத்து இந்த கேஸ் முஸ்லிம்கள் பக்கமே தீர்ப்பாகும் என்றே நினைத்தேன். நீதிபதிகளுக்கு என்னை விட அதிகமாக சட்டம் தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, அவர்கள் தீர்ப்பை முழு மனதோடு ஏற்பதில் பிரச்சினையும் இல்லை- ஸ்ரீ ஆர்.வி.//

  வாக்குமூலம் அளித்துவிட்டமைக்கு நன்றி. நீங்கள் அயோத்தி ஸ்ரீ ராம ஜன்ம பூமி விவகாரத்தை வெறும் பங்காளிச் சண்டை, வரப்புத் தகராறு என்கிற அளவில்தான் மதிக்கிறீர்கள் என்பதும் பிரத்தியட்ச நிலவரத்தில் உடைமை எவரிடம் உள்ளதோ அவருக்குத்தான் அது சொந்தம் என்கிற முடிவில் இருந்திருக்கிறீர்கள் எனபதும் நிரூபணமாகிவிட்டது.

  அயோத்தியானது மர்யாதா ப்ருஷோத்தம் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பிறப்பதற்கு முன்பிருந்தே ஹிந்துக்க்களுக்கு முகவும் புனிதமான புண்ணியத்தலம் என்பதை உணர்வீர்களாக. ஹிந்துஸ்தானத்திற்கு வெளியிலிருந்து பலாத்காரமாக நுழைந்த மாற்றுச் சமயத்தினரின் சின்னம் ஒன்று அவர்களின் கரம் ஓங்கியிருந்த ஒரே காரணத்தால்தான் அங்கு இடம்பெற முடிந்தது என்பதையும் உணர்வீர்களாக. அன்று ஹிந்துக்கள் வேறு வழியின்றி சகித்துக் கொண்டதால் காலகாலத்திற்கும் நிரந்தரமாக அதைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனிதாபி மானமற்ற போக்கு என்பதையும் அறிவீர்களாக!
  -மலர்மன்னன்

 21. //நான் இந்திய ஊடகங்களை ஆழ்ந்து படிப்பவன் இல்லை. ஏதோ ஹெட்லைன்ஸ் பார்ப்பதோடு சரி. என் eNNangaL தவறாக இருக்க சாத்தியம் உள்ளது – ஸ்ரீ ஆர்.வி.//

  ”என் எண்ணங்கள் தவறாக இருக்க சாத்தியம் உள்ளது” என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்.

  என்னதான் தற்போது நீங்கள் அமெரிக்கவாசியாகிவிட்டாலும் உங்கள் தாயகமான ஹிந்துஸ்தானத்தில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

  நீங்கள் அமெரிக்கச் சூழலில் மிகவும் வசதியாக வாழ்ந்து பழகியிருப்பீர்கள். நான் குறைந்தபட்ச செளகரியங்களுடன் ஒரு சிறு இடத்தில் மிகவும் எளிய முறையில் தேவைகளை மிக மிகக் குறைவாகச் சுருக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். இருப்பினும் உங்களை அன்போடு அழைக்கிறேன்: உங்கள் தாயகயத்திற்கு ஒருமுறை வந்து என்னுடன் தங்குங்கள். உங்களைப் பல்வேறு இடங்களுக்கும் நான் அழைத்துச் செல்கிறேன். நடப்பனவற்றையெல்லாம் நேரில் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அதன்பின் அமெரிக்காவுக்குத் திரும்பி அங்குள்ள உங்கள் நணபர், உறவினர் வட்டங்களில் நீங்கள் நேரில் கண்ட விஷயங்களை எடுத்துக் கூறுங்கள். இது எனது வேண்டுகோள்.
  -மலர்மன்னன்

 22. திரு. மலர்மன்னன் அவர்களுக்கு,
  நிதானமான உங்கள் கட்டுரை.மேலும் தர்க்க ரீதியான மறுமொழிகள்.

  அயோத்தி தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டு விட்டது
  என்று கொக்கரிக்கும் ஊடகவாதிகளுக்கு பதிலடியாக இந்த வாரம் தெஹல்காவில் ஒரு கட்டுரை வந்துள்ளது.
  https://www.tehelka.com/story_main47.asp?filename=Op301010Courts_can.asp

 23. Shri RV has consumed too much of American water that a litigants view (which is how the natives look at things) is quite evident. their TV shows, magazines and people’s mind is full of what does the law say, what is the legal recourse, what does the contract say.

  Let me give a real life example to drive the point shri malarmannan is putting forth.
  4 brothers (in india) are litigating for some 20 years over 16 acres of land in a vilage
  One of them is very rich and lives abroad
  the youngest who is almost 67 is completely blind
  the eldest is rich too but very greedy
  the second eldest is dharmic but obsessive about correctness – the eldest and the second eldest are dire enemies

  the eldest wants 50% of the share as he does not want the second eldest to get it. the second eldest thinks all the parts should be equally divided –

  the legal system is working perfectly – it is listening to all parties and based on evidences it trying to solve – So shri RV should be very happy

  what has happened in the due course is the blind brother who has no other source of
  income is made to suffer – he is 67 now of what use the land is even if he gets a share now

  Will the legal system look in to such nuances – it will go by the books. Had this land been in madurai or farther belt,the brothers would have killed each other and died – law will do its duty here too- it will close the case.

  now this case is somewhat (only somewhat) similar to the ayodya case

  Ram bhaktas are like the blind brother
  muslims are like the yeldest brother
  the litigant hindus are like the second elder brother
  who is the unaffected rich brother ? well we all know 🙂

 24. திரு ஆர். வீ சார்,

  இதை இப்படிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்:

  First the facts…

  பாபர் மசூதி என்பது இந்துக்களால் வழிபட்டுப் பேணிப் பாதுகாத்துவரப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, மதவெறியர்களின் வெற்றிச் சின்னமாக, அடிமைச் சின்னமாக, இந்துக்களுக்கொரு அவமானச் சின்னமாக கட்டப்பட்ட ஒன்று என்று நம்புகிறீர்கள் என்று நினைக்கிறென். இல்லையானால், இதற்கு மேல் இம்மறுமொழியைப் படிக்கவேண்டாம். This observation is very much relevant to the discussion.

  Now, let us go to the inferences:

  எனக்கு இந்த பாபர் கட்டிய மசூதிக்கும் பெர்லின் சுவற்றுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டுமே அந்தந்த நாட்டின் வரலாற்றின் அடிமைச் சின்னங்களே என்பது தெளிவாகத் தான் இருக்கிறது. ஜெர்மானிய சுவற்றை இடிக்க அங்குள்ள யாரோ ஒரு கமியூநிஸ ஆதரவாளர் குழு எதிர்த்திருக்கலாம். அவர்கள் மைநாரிட்டியாக இருந்திருக்கலாம். அதற்காக, சுவற்றை இடித்ததை கமியூனிச-எதிர்ப்பாளர்கள் கோர்ட் கேஸ் போட்டு தீர்ப்பு வரும் வரை காத்திருந்து செய்யவில்லை.

  (லாஜிக்கை விளக்குவதற்கே இதை எழுதினேன். தயவு செய்து நான் சராசரி முஸ்லீம்களை கமியூனிஸ அடக்குமுறை ஆதரவாளர்களுடன் ஒப்பிடுவதாக நினைக்கவேண்டாம்.)

  இப்பொழுது பின்வருவதற்கு வாருங்கள்:

  (1) பாபர் வேறு ஒரு இடத்தில், புதிதாக மதம் மாற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு ஒரு மசூதி அமைத்திருந்தான் என்று எடுத்துக் கொள்வோம். அல்லது,

  (2) பாபரால் மதம் மாற்றப்பட்ட முஸ்லீம்கள் தமக்குப் பிடித்த இடத்தில் யாரையும் வெளியேற்றாமல் ஒரு மஸூதி கட்டிக் கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

  மேற்கண்ட இரண்டையும் எந்த அறிவுள்ள இந்துவும் எதிர்க்க மாட்டான். மாறாக… மதவெறி காரணமாக, கொலை கொள்ளை சூறையாடலைக் கொண்டாடுவதற்காக பாபர் கட்டியதை (commemorating the rape and plunder of the land), அதுவும் இந்துக்களால் “மோக்ஷபுரி” என்று காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் இடத்தில் எழுப்பப்பட்டதையே கர சேவகர்கள் வீழ்த்தினார்கள். நமது அரசாங்கத்தில் உள்ள போலி மதச்சார்பின்மைவாதிகள் இதை ஒரு மதவெறிச் செயலாகச் சித்திரம் தீட்டுகின்றனர். ஓட்டு வாங்குவதற்காகக் கோயில் நிர்மாணம் என்ற கோரிக்கையை அசிங்கப் படுத்துகிறார்கள். இதனால் ராம பக்தர்கள் “கொதித்து எழுவது” (அதாவது, விழிப்புணர்ச்சி கொண்டு பிரச்சாரம் செய்வது) எந்த விதத்திலும் தவறல்ல, மதவெறியுமல்ல.

  இது தவறானால், நம் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய அடக்குமுறையைக் கோர்ட் தீர்ப்பையும் மீறிப் போராடியதும் தவறாகிவிடும்.

 25. அருண் பிரபு, // கட்டுரையில் எங்குமே கடப்பாரை கொண்டு போய் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று மலர்மன்னன் சொல்லவில்லையே… // நீங்கள் இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பித்தால் இதற்கு ஒரு முடிவே இல்லை. உதாரணமாக உங்கள் முந்தைய மறுமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மேல் முறையீடு செய்யக் கூடாது என்று நான் சொன்னேனா? நான் சொல்லாத விஷயத்தை எல்லாம் நீங்கள் ஏன் இழுக்கிறீர்கள் என்று நானும் கேட்கலாமா? இவை எல்லாம் தொடர்புடையவை…

  // //நித்யானந்த பற்றி வீடியோ போட்டால் சண் டிவியை எல்லாரும் பார்க்கிறார்கள். பாதிரியார் வீடியோ போட்டாலும் பார்ப்பார்கள், ஆனால் பிரச்சினைகள் வரலாம். அதனால் சிறுபான்மையினர் விஷயத்தில் அடக்கி வாசிக்கிராரகுள் என்று நினைக்கிறேன்.// நுனிப்புல் மேய்ந்தாலும் பிரச்சினை பற்றிய சரியான புரிதல் இது. ஆனால் பிரச்சினைக்கு என்ன தீர்வு? // மன்னிக்கவும், நான் என்ன கடவுளா? எனக்கும் தெரியவில்லை.

  // //For the record, சட்டம் சரியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு விருப்பம் எதுவும் இல்லை.// சட்டம் ஒரு சாரார் எதுசெய்தாலும் சரி என்று சொல்லவைக்கப் படுகிறதே… // அது யார் தவறு? குழந்தை எனக்கு மருந்து வேண்டாம் மிட்டாய்தான் வேண்டும் என்று அழுதால் மிட்டாய் கொடுப்பது குழந்தையின் தவறா பெற்றோரின் தவறா? ஷா பானோ தீர்ப்பை முதல் naal அரிஃப் முகமது கானை வீராவேசமாக ஆதரிக்க வைத்துவிட்டு அடுத்த நாள் சட்ட திருத்தம் கொண்டு வந்தது ராஜீவ் காந்தியா இல்லை ஜும்மா மசூதி இமாமா? ஆட்சியில் இருந்தபோது இந்த சட்டங்களை மாற்ற ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பா.ஜ.க.வைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கவனிக்கவும், முயற்சி செய்து தோல்வி அடைந்திருந்தால் அது avarkaL கொள்கைப் பிடிப்புக்கு ஆதரவு இல்லை என்று வைத்துக் கொள்ளலாம். முயற்சியே செய்யவில்லையே!

  இது நம் நாடு. இங்கே சட்ட திருத்தம் என்று ஒரு process இருக்கிறது. அதை தவறாக செயல்படுத்திய இடங்கள் என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். நானும் ஆமோதிக்கிறேன். இந்த தீர்ப்பு வருவதற்கு முன் அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து நிலத்தை கையகப்படுத்தி இருந்தால் அப்படி செய்ய அரசுக்கு உரிமை உண்டு, ஆனால் அதுவும் துஷ்பிரயோகம் என்றே நினைத்திருப்பேன். (என்னை விட சட்டம் தெரிந்தவர்கள் நீதிபதிகள் என்று நான் கருதுவதால் இன்று அப்படி நிச்சயமாக சொல்வதற்கில்லை.) அதற்காக அரசு அமைப்பு, சட்டம் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட முடியுமா?

  // for your anxiety to uphold the letter of law and to lament about it’s spirit being left to oblivion, which pastes a picture that you’re frustrated. // மன்னிக்க வேண்டும் அருண் பிரபு, என் மனநிலையைப் பற்றி எல்லாம் என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கிறது?

  அன்புள்ள மலர்மன்னன்,

  // // உச்ச நீதி மன்றம் நீங்கள் (ஸ்ரீ ஆர்.வி.) விரும்புகிற மாதிரி… // ஸ்ரீ ஆர்.வி., வேண்டுமென்றேதான் அவ்வாறு எழுதினேன்! நீங்கள் பலதையும் நீங்களாகத் தீர்மானித்துக்கொண்டு எழுதுவதால் // உங்களை மறுத்துப் பேச வேண்டி இருக்கிறது. இது வரை நான் எழுதப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு மட்டுமே பதில் அளித்திருக்கிறேன். மற்றபடி நீங்கள் கேலி செய்வது, குசும்பாக பேசுவது என்றால் நானும் புன்னகைக்கிறேன். 🙂 என்னை கேலி செய்ய எல்லாருக்கும் உரிமை உண்டு, உங்களைப் போன்ற பெரியவருக்கு எல்லாவித உரிமையும் உண்டு.

  நீல் சிலை பற்றி எழுதி இருந்தீர்கள். நீல் சிலை அகற்றம் என்ன, சோம்நாத் கோவில் புனரமைப்பு கூட சட்டப்படி நடந்தவை. ராஜாஜி ஆட்சிக்கு முன் நடந்த போராட்டங்களில் பலர் (கடலூர் அஞ்சலை அம்மாள் பெயர் நினைவு வருகிறது) சட்ட மீறலை ஒத்துக்கொண்டு ஜெயிலுக்குப் போனதாக ஞாபகம்.

  // தீர்ப்பை நிராகரிப்போம் என்று ”பொங்கினால்’ ( பொங்கினார்கள் என்பது நீங்களாகவே அனுமானிப்பது!) சட்டப்படி மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதுவதாக அதை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக என்ன சொல்கிறார்களோ அதைத்தானே நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்? சம்பந்தப்பட்டவர்கள் “பொங்கி” யிருந்தால் தானே நீங்களும் பொங்கியிருக்க வேண்டும் // மன்னிக்கவும், அப்போது வந்த பல மறுமொழிகளை நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பொங்கினால் மட்டுமே விவாதிக்கலாம் என்றால் பார்க்கா தத்தும் என்டிடிவியும் என் ஷியா முஸ்லிம்களுக்கும் சேக்கிழான் அறிவுரை கூறும் “எல்லா” முஸ்லிம்களுக்கும் வழக்குக்கும் கூட சம்பந்தம் இல்லையே! சேக்கிழான் வக் ஃ ப் போர்டுக்கே சம்பந்தம் இல்லை என்கிறார்!

  // ஆக, எல்லாம் முறைப்படியே நடந்து வருகின்றன. நம் தரப்பில் வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் எவரும் பொங்கிவிடவில்லை. பொறுமையாகவே உள்ளனர் (உண்மையிலேயே ஹிந்துக்கள் பொங்கினால் எவரும் தாக்குப் பிடிக்க முடியாது! அந்த நிலைக்கு ஹிந்துக்கள் தள்ளப்பட மாட்டார்கள் என்றே நம்புவோம்!). // நல்ல விஷயமே. என்னைக் கேட்டால் கேஸ் இத்துடன் முடிவதே நல்லது. ஆனால் எனக்கும் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. 🙂 ஹிந்துக்கள் பொங்கும்படி தீர்ப்பு வரவில்லை என்றே நான் கருதுகிறேன். இங்கே உள்ள மறுமொழிகளைப் பார்த்தாலே பொதுவாக மகிழ்ச்சி நிலவுகிறது என்று தெரியும்.

  // //நான் இந்திய ஊடகங்களை நுனிப்புல் மாதிரி மேய்பவன், என் எண்ணங்கள் தவறாக இருக்கலாம்.- ஸ்ரீ ஆர்.வி.//

  ஸ்ரீ ஆர்.வி., நீங்களே ஒப்புக்கொண்டுள்ளதால் கேட்கிறேன்: எதைப்பற்றியும் வெறுமே நுனிப்புல் மேய்ந்துவிட்டு விவாதிப்பது சரியா? சந்தேகம் வேண்டுமானால் தக்கவர்களிடம் கேட்டுத்தெளிந்து அதன்பின் விவாதிக்க லாமேயன்றி ஒரு விஷயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் விடாப் பிடியாக அது பற்றி விவாதித்துக்கொண்டிருக்கலாமா? // என்ன சார், நானா ஊடகங்களைப் பற்றி கருத்து சொல்கிறேன் என்று கிளம்பினேன்? neengaL என்னை குறிப்பாக கேட்டதால் பதில் சொன்னேன். இப்போது neengaL கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதே தவறு என்கிறீர்களே?

  // உங்களை அன்போடு அழைக்கிறேன்: உங்கள் தாயகயத்திற்கு ஒருமுறை… // ungaL அன்பு என்னை நெகிழ வைக்கிறது. அடுத்த முறை வரும்போது உங்களை கண்டிப்பாக வந்து சந்திக்கிறேன்.

  சாரங், // Shri RV has consumed too much of American water … // கருத்துகளைப் வாதிப்போம், தனி நபர்கள் வேண்டாமே! நான் என்ன தண்ணீர் குடித்தால் என்ன குடிமுழுகிவிட்டது?

  சரி நானும் ஒரு உதாரணம் தருகிறேன். ஏழு தலைமுறைகளுக்கு முன்னால் என் முப்பாட்டன் வீட்டையும் நிலத்தையும் ஏமாற்றி அபகரித்துவிட்டார்கள் ஒரு மார்வாடி குடும்பத்தார். அந்த வீடும் நிலமும் வெறும் சொத்து இல்லை, அவை என் பாரம்பரியத்தின், கலாசாரத்தின், ஆன்மீகத்தின் அடையாளங்கள். ஆவணனகள், உபயோகம் எல்லாம் சிக்கலாக இருக்கிறது. கேஸ் இழுக்கிறது. நான் போய் மார்வாடி வீட்டு பெட்ரூமை இடிக்கலாமா? என்னை சட்டம் காப்பாற்றுமா?

 26. Shri. RV,
  Your replies are amazing and to the point. Particularly

  “சாரங், // Shri RV has consumed too much of American water … // கருத்துகளைப் வாதிப்போம், தனி நபர்கள் வேண்டாமே! நான் என்ன தண்ணீர் குடித்தால் என்ன குடிமுழுகிவிட்டது?” – SUPER

 27. RV சார்,

  //ஏழு தலைமுறைகளுக்கு முன்னால் என் முப்பாட்டன் வீட்டையும் நிலத்தையும் ஏமாற்றி அபகரித்துவிட்டார்கள் ஒரு மார்வாடி குடும்பத்தார். அந்த வீடும் நிலமும் வெறும் சொத்து இல்லை, அவை என் பாரம்பரியத்தின், கலாசாரத்தின், ஆன்மீகத்தின் அடையாளங்கள். ஆவணனகள், உபயோகம் எல்லாம் சிக்கலாக இருக்கிறது. கேஸ் இழுக்கிறது. நான் போய் மார்வாடி வீட்டு பெட்ரூமை இடிக்கலாமா? என்னை சட்டம் காப்பாற்றுமா?//

  இந்த சட்டங்கள் அதிகபட்சமா உங்களை ஒரு 15 நாள் உள்ளே வச்சுட்டு ஜாமீன்ல வெளியே விட்டுடுனுன்னு தான் நெனைக்கிறேன். இல்லன்னா நல்ல வக்கீலும்,பணமும் இருந்த ஒரு நாளில் அல்லது ரெண்டு நாளில் வெளியே வந்து விடலாம். எனக்கு சட்டங்களை பற்றி ஒரு ம..ம் தெரியாது. ஆனா நடைமுறையை பார்கிறேன்.அதனால தான் இப்படி எழுதுறேன். நீங்க உண்மையிலேயே உங்க சொத்து தான் என்று தெரிந்தால் நீங்கள் செய்தது என்னை பொறுத்த வரை நியாயம் தான்!!பாய் கூட அப்படி தான் சொல்லுவார்.ஆனா மார்வாடி சொல்லமாட்டார் உங்க கண்டிஷன்ல!! சட்டம் மாறிட்டே இருக்கும் என்பதாலும் மார்வாடி பெரிய குடும்பியாகவும் ,அவன் சொந்தக்காரன் எல்லாம் வெளிநாட்டில் பணக்காரனாவும் முரடனாகவும் அதிகம் இருக்கிறான் என்பதற்காக சட்டம் டிமிக்கி கொடுத்தா,என்னா பண்றது சார் !!

 28. //ஸ்ரீ ஆர்.வி., நீங்களே ஒப்புக்கொண்டுள்ளதால் கேட்கிறேன்: எதைப்பற்றியும் வெறுமே நுனிப்புல் மேய்ந்துவிட்டு விவாதிப்பது சரியா? சந்தேகம் வேண்டுமானால் தக்கவர்களிடம் கேட்டுத்தெளிந்து அதன்பின் விவாதிக்க லாமேயன்றி ஒரு விஷயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் விடாப் பிடியாக அது பற்றி விவாதித்துக்கொண்டிருக்கலாமா? // என்ன சார், நானா ஊடகங்களைப் பற்றி கருத்து சொல்கிறேன் என்று கிளம்பினேன்? neengaL என்னை குறிப்பாக கேட்டதால் பதில் சொன்னேன். இப்போது neengaL கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதே தவறு என்கிறீர்களே?-ஸ்ரீ ஆர்.வி.//

  அயோத்தி ராம ஜன்ம பூமி வழக்கு தொடர்பான விவரங்கள் உங்ங்களுக்குத் தெரிய வந்தது எப்படி? அவற்றில் வந்த/வரும் தகவல்களின் அடிப்படையில் தானே நீங்கள் விவாதிக்கிறீர்கள்? அந்தத் தகவல்களில் உள்ள சாதக-பாதக அம்சங்களை நீங்கள் ஆராய்ந்து விவாதிப்பதுதானே சரியாக இருக்க முடியும்? அப்படியிருக்க வெறுமே நுனிப்புல் மேய்ந்துவிட்டு விவாதிப்பது சரியா என்றுதானே கேட்டேன்? ஊடகங்கள் இந்த விஷயத்தை நடுநிலையான கோணத்தில் முழுமையான விவரங்களுடன் அளிக்கின்றனவா என்பது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயமும் வெறுமே நுனிப்புல் மேய்பவருக்குப் புலப்படாமல் போய்விடுமல்லவா? ஒரு விஷ்யம்பற்றி போதுமான் விவரங்கள், போதுமான கோணங்களில் கிடைக்காமல் உள்ள நிலையில் அதுபற்றி விவாதிப்பது முறையல்ல என்றுதானே சொல்கிறேன். ஸ்ரீ ராம ஜன்ம பூமி விவகாரம் பற்றி எந்த அளவுக்கு அறிந்திருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளும் பொருட்டே அவ்வாறு கேட்டேன். நீங்களும் பதில் சொல்லிவிட்ட்டீர்கள். ஊடகங்களைப் பற்றி உங்களிடம் கருத்துக் கேட்டால்தானே நீங்கள் எந்த அளவுக்கு அவற்றில் இடம் பெறும் விவரங்களில் பரிச்சயம் உள்ளவராக இருக்கிறீர்கள் எனப்து தெரியவரும்?

  //நான் நினக்கும்விதமாக தீர்ப்பு வரவில்லை என்றால் தீர்ப்பை மீறுவேன் என்று இந்த கேசில் மவுல்வி அமீர் அலி எப்படி நினைத்தாரோ அப்படித்தான் நீங்களும் நான் நினைத்த தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றமாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வீர்களோ?- ஸ்ரீ ஆர்.வி.//

  இது மவுல்வி அமீர் அலி பற்றி நீங்களாகவே அனுமானித்துக்கொண்டு என்னிடம் நானும் ஏறத்தாழ அவ்வாறான ஒரு ப்ரகிருதிதான் என்கிற அனுமானம் தொனிக்கக் கேட்ட கேள்வியே அல்லவா? எனவேதான்
  நீங்கள் பலதையும் நீங்களாகத் தீர்மானித்துக்கொண்டு எழுதுவதாகக் குறிப்பிட்டேன். ஆகவே ‘ உங்களை மறுத்துப் பேச வேண்டி இருக்கிறது’ என்றும் ’இதுவரை நான் எழுதப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு மட்டுமே பதில் அளித்திருக்கிறேன்.’ என்றும் நீங்கள் சொல்வது பொருத்தமாக இல்லை.
  .//இப்போது neengaL கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதே தவறு என்கிறீர்களே?- ஸ்ரீ ஆர்.வி.//
  இதுவேகூட நீங்களாக அனுமானிப்பதுதானே? ஊடகம் சம்பந்தமான எனது கேள்வியை மதித்து எனக்கு நீங்கள் பதில் அளித்தமைக்கு நான் சந்தோஷமாக அல்லவா உணர்கிறேன்? உங்கள் பதில் எனக்கு மிகவும் சாதகமாயிருக்கையில் அதைத் தவறு என்று எப்படிச் சொல்வேன்?

  //பலர் (கடலூர் அஞ்சலை அம்மாள் பெயர் நினைவு வருகிறது) சட்ட மீறலை ஒத்துக்கொண்டு ஜெயிலுக்குப் போனதாக ஞாபகம். –ஸ்ரீ ஆர்.வி.//
  நீல் சிலையைத் தகர்க்கும் விவகாரத்தில் பலர் சிறை சென்றதுபோல் பாப்ரி கட்டிடத் தகர்ப்பு வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வந்தால் சிறை செல்ல அனைவரும் தயாராகவே உள்ளனர். நீல் சம்பவத்தின்போது அந்நிய ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்தோம். இப்போதோ சுயராச்சிய ஆட்சி அமைந்தும் பயனில்லாத நிலையில் மட்டுமல்ல, பாதகமான நிலையிலும் வாழ்கிறோம். இதுதான் வித்தியாசம்.

  மத்தியில் பா,ஜ,க, தலைமையில் அனைவருக்கும் பொதுவான குறைந்த பட்ச செயல்திட்டத்தின்கீழ நிர்வாகம் செய்வதாக ஒப்புக்கொண்ட கூட்டணி ஆட்சிதான் நடந்தது. எனவே . செயல்திட்டத்தில் இடம்பெறாதவைகளை பா.ஜ.கவால் மேற்கொள்ள இயலவில்லை. ஆகவே பா.ஜ.கவைக் கேள்வி கேட்டுப் பயனில்லை. எனினும் நிறையக் காரியங்களை எளிதாகச் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அந்த வாய்ப்பை அது தவறவிட்டது என்பதே எனது கருத்தும் ( இதைச் சொன்னதால் பல பா.ஜ.க.வினருக்கு நான் தீண்டத் தகாதவனாகிவிட்டேன்!).

  மார்வாடி வீட்டுப் படுக்கை அறையை இடிக்கிற கதையை அன்பர் ஸ்ரீ சாரங்கிடம் கேட்டிருக்கிறீகள். என்னைக் காட்டிலும் சிறந்த முறையில் விடை அளிக்கும் திறமை வாய்ந்தவரான அவரே இதற்குச் சரியாக விடை தருவார் என்றாலும், என் வேத்னையை இங்கு பதிவு செய்யக் கடமைப் பட்டிருக்கிறேன்.
  இந்த விஷயத்தை நீங்கள் இன்னமும் இரு தரப்பாருக்கிடையிலான ஒரு சொத்து தகராறு என்பதாகவே பாவித்து வருவதால்தான் பதிலுக்கு மார்வாடி பெட்ரோம் கதை சொல்கிறீர்கள். உங்களுடய இந்த உதாரணம் ஸ்ரீ ராம பக்தர்களின் மனதை எந்த அளவுக்கு ரணம் செய்யும் என்று நீங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சராசரி ஹிந்துக்களின் மனப் போக்கு எப்படியிருப்பினும் விழிப்புணர்வுள்ள ஏராளமான ஹிந்துக்களின் மனம் வேதனைப்படுமாறுதான் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் உள்ள்ளன. அயோத்திக்கு ஹிந்துக்களிடையே உள்ள புனிதத்தை நீங்கள் பொருட் படுத்துவதாகவே தெரியவில்லையே! அயோத்தி முகமதியருக்கு எவ்வித விசேஷ முக்கியத்துவமும் இல்லாத இடம் என்பதையும் நீங்கள் எண்ணிப் பார்ப்பதாக இல்லையே!
  -மலர்மன்னன்

 29. அன்புள்ள மலர்மன்னன், என்னங்க இது அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே போகிறது? 🙂 சரி இருக்கட்டும்.

  // அயோத்தி ராம ஜன்ம பூமி வழக்கு தொடர்பான விவரங்கள் உங்ங்களுக்குத் தெரிய வந்தது எப்படி? அவற்றில் வந்த/வரும் தகவல்களின் அடிப்படையில் தானே … // உண்மையே. ஆனால்…

  1 . நுனிப்புல் மேய்வது ஒரு தரப்பினை சார்ந்த ஊடகங்களை மட்டுமல்ல.

  2. ஆழ்ந்து படித்தாலும் சார்பு நிலை உள்ள ஊடகங்களை – தமிழ் ஹிந்து உட்பட – அப்படியே தேவ வாக்காக ஏற்றுக்கொண்டால் என்னாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.

  3. நீதிபதிகளின் தீர்ப்பு by defintion , நடுநிலையானது என்பதையாவது ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

  4 . நுனிப்புல் கமென்ட் ஊடகங்களின் நடுநிலை பற்றி பொதவாக சொன்னது. ஹெட்லைன்ஸ் மட்டும்தான் சாதாரணமாக படிப்பது என்றால் அதை நீங்கள் எந்த செய்தியாக இருந்தாலும் ஹெட்லைன்ஸ் மட்டுமே படிப்பேன், எப்போதும் ஹெட்லைன்ஸ் தாண்டிப் போகமாட்டேன் என்று பொருள் கொள்வது அர்த்தமற்றது. நுனிப்புல் கமெண்டை தவறான context-இல் பொருத்திப் பார்க்கிறீர்கள்.

  // இது மவுல்வி அமீர் அலி பற்றி நீங்களாகவே அனுமானித்துக்கொண்டு என்னிடம் நானும் ஏறத்தாழ அவ்வாறான ஒரு ப்ரகிருதிதான் என்கிற அனுமானம் தொனிக்கக் கேட்ட கேள்வியே அல்லவா? // என்ன சார் ஐயத்துக்கும் அனுமானத்துக்கும் வித்தியாசம் என்ன என்று நானா உங்களுக்கு சொல்வது? நீ இந்த மாதிரி தீர்ப்பு வரவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்பதற்கும், நீ இந்த மாதிரி தீர்ப்பு வரவேண்டும் என்று விரும்புகிறாய் என்று எழுதுவதற்கும் வித்தியாசம் இல்லையா?

  // பாப்ரி கட்டிடத் தகர்ப்பு வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வந்தால் சிறை செல்ல அனைவரும் தயாராகவே உள்ளனர். // இது உங்கள் அனுமானம் என்றே நினைக்கிறேன். 🙂 இருபது வருஷமாக கேஸ் நடக்கிறது. விஷயம் தெரிந்த நீங்கள் நுனிப்புல் மேயும் எனக்கு சொல்லுங்கள் – யாராவது இது வரை ஆமாம் இடித்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிரார்களா? ஆமாம் என்றால் இன்னும் ஏன் கேஸ் நடக்கிறது? இல்லை என்றால் ஏன் இல்லை?

  // இந்த விஷயத்தை நீங்கள் இன்னமும் இரு தரப்பாருக்கிடையிலான ஒரு சொத்து தகராறு … //

  1 . உதாரணத்திலும் இதை சொத்தை மீறிய விஷயம் என்பதை எழுதி இருக்கிறேன். சொத்து என்பதை மீறிய “புனித இடம்” அது என்று பொருள்படும்படி எழுதி இருந்தேன். நீங்கள் அதை கவனிக்கவில்லை போலிருக்கிறது.

  2. நம்மிருவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான். இங்கே இரண்டு தரப்பு இருக்கிறது, இரண்டு தரப்புக்கும் தன பக்கம் நியாயம் இருக்கிறது என்ற வலுவான அபிப்ராயம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அப்படி வலுவான மாற்று கருத்துகள் இருக்கும்போது தீர்வு காண ஏதோ ஒரு அமைப்பு – கோர்ட், அரசு, கட்டை பஞ்சாயத்து – என்று ஒன்று வேண்டும் என்றும் அது முறைப்படி, due process படி நடக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நீங்கள் ஒரே தரப்புதான், “இரண்டாவது தரப்பு” என்று சொல்லப்படுவது ஒரு வரலாற்று அநியாயத்தை நிலை நிறுத்த போராடுகிறது, அதனால் அதற்கு எந்த உரிமையும் இல்லை, process-um தேவை இல்லை என்று கருதுகிறீர்கள். என் கண்ணோட்டத்தில் நீங்கள் வாதியின் நிலையில் இருந்து பேசுகிறீர்கள். உங்கள் பக்கம் வலுவான வாதங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். தீர்ப்பு வரும் வரை சட்டப்படி அந்த வாதங்கள் செல்லாது, நியாய தர்மப்படியான வாதங்கள் அவை என்றே நான் நினைத்திருந்தேன். (சட்டத்துக்கும் தர்மத்துக்கும் கொஞ்சம் இடைவெளி உண்டல்லவா?) ஆனால் இன்னொரு தரப்பும் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.

 30. //நீ இந்த மாதிரி தீர்ப்பு வரவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்பதற்கும், நீ இந்த மாதிரி தீர்ப்பு வரவேண்டும் என்று விரும்புகிறாய் என்று எழுதுவதற்கும் வித்தியாசம் இல்லையா?- ஸ்ரீ ஆர்.வி.//

  நீ எந்த மாதிரி தீர்ப்பு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் என்று கேட்டால்தான் ஐயப்பாட்டுடன் கேட்பதாக ஆகும் என்பதை நான் சொல்லித்தானா உங்களுக்குத் தெரியவேண்டும்? நீ இந்த மாதிரி தீர்ப்பு வர வேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்கிறபோதே கேட்பவரின் நோக்கம் என்னவாக உள்ளது என்பது வெளிப்பட்டுவிடவில்லையா? நீ இந்த மாதிரி தீர்ப்பு வரவேண்டும் என்று விரும்புகிறாய் என்று நீங்கள் பச்சையாக வேறு சொல்லவேண்டுமா என்ன!

  நான் எனது சொந்த அனுபவத்தைக் கூறுகிறேன்:
  பாப்ரி கட்டிட தகர்ப்பின்போது உத்தரப் பிரதேச ஆளுநருக்குத்தான் பகிரங்கமாகவே செயல்பட்டுள்ளதாக உறுதிசெய்யத் தகவல் தெரிவித்தேன். அதை ஒரு குற்றம் என்று கருதியிருந்தால் மாநிலக் காவல் துறைத் தலைமை அதிகாரி (டி.ஜி.பி)க்குத் தெரிவித்திருப்பேன்.
  குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் அதைக் குற்றமாகக் கருதவில்லை. நீதிமன்றம் இன்றைக்கு உள்ள சட்டம் அதைத் தவறு என்று கருதுவதாகக் கூறி தண்டித்தால் அதை ஏற்கத் தயாராக உள்ளனர். தேசிய அவமானச் சின்னத்தை அகற்றுவது தேசியக் கடமை என்ற நிலைப்பாடு காரண மாகத்தான் எவரும் தாம் குற்றமிழைத்ததாக வாக்குமூலம் அளிக்க வில்லை. பாப்ரி கட்டிடத் தகர்ப்பு குற்றம் அல்ல என்பதை நாட்டு மக்கள் உணரச் செய்ய இறுதிவரை உறுதியாக இருப்பதால்தான் வழக்கு நீடிக்கிறது. இது குற்றச் செயல் அல்ல என்பதை நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துக் கூறி அதன் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டி அதன் பிறகு இறுதித் தீர்ப்ப்பு எதுவோ அதை ஏற்கத் தயாராகவே உள்ளனர். இது வேறு வழக்கு.

  ஸ்ரீ ராமஜன்ம பூமி அடிமனை விவகாரம் நீதிமன்றத்திற்குப் போய்டவிட்ட பிறகு ஆக்கிரமித்தவர், ஆக்கிரமிப்புக்குள்ளானவர் என்ற இரு தரப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். நீங்கள் பங்காளிச் சண்டை என வாதி-பிரதிவாதி வழக்காகப் பார்க்கிறீர்கள். நான் பொருளைப் பறிகொடுத்தவர், பொருளை அபகரித்தவர் என்ற இரு தரப்பு இருப்பதாகக் கருதுகிறேன். நீங்கள் இன்றுள்ள நீதிமன்ற நிலவரத்தை அப்படியே ஏற்று சொத்து தகராறு என்ற அடிப்படையிலேயே விவாதிக்கிறீர்கள் நான் அவ்வாறு விவாதிக்கத் தயாராக இல்லை. தர்மத்தின் பிரகாரம் நானும் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரம் நீங்களுமாக விவாதிப்பதால்தான் இங்கு ஒரு முடிவுக்கு வர இயலாமல் உள்ளது.
  -மலர்மன்னன்

 31. அன்புள்ள மலர்மன்னன்,

  // நீ இந்த மாதிரி தீர்ப்பு வர வேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்கிறபோதே கேட்பவரின் நோக்கம் என்னவாக உள்ளது என்பது வெளிப்பட்டுவிடவில்லையா? // விரும்புகிறாயா என்பதற்கும் விரும்புகிறாய் என்பதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. உங்களைப் பொறுத்தவரை இல்லை என்பதை இனி மேல் நினைவு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

  // தேசிய அவமானச் சின்னத்தை அகற்றுவது தேசியக் கடமை என்ற நிலைப்பாடு காரண மாகத்தான் எவரும் தாம் குற்றமிழைத்ததாக வாக்குமூலம் அளிக்க வில்லை. // வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள். குற்றம் இழைத்ததாக ஒத்துக்கொண்டார்களா என்று கேட்கவில்லை, இடித்ததாக கோர்ட்டில், போலீசிடம் வாக்குமூலம் அளித்தார்களா என்றுதான் கேட்டிருந்தேன். அப்படி இடித்ததாக வாக்குமூலம் அளித்தால் கேஸ் கிட்டத்தட்ட 20 வருஷமாக ஏன் நடக்கிறது? அப்படி வாக்குமூலம் அளிக்கவில்லை என்றால் ஏன் இல்லை? நீல் சிலையை அகற்ற போராடியவர்கள், பல்வேறு சத்யாகிரகங்களில் பங்கு கொண்டு அன்றைய சட்டங்களை மீறியவர்கள் யாரும் போலீசிடமும் கோர்ட்டிலும் ஒத்துக்கொள்ளாமல் இருந்ததில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்.

  // ஸ்ரீ ராமஜன்ம பூமி அடிமனை விவகாரம் நீதிமன்றத்திற்குப் போய்டவிட்ட பிறகு ஆக்கிரமித்தவர், ஆக்கிரமிப்புக்குள்ளானவர் என்ற இரு தரப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். நீங்கள் பங்காளிச் சண்டை என வாதி-பிரதிவாதி வழக்காகப் பார்க்கிறீர்கள். // தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை வாதம் பிரதிவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. “மாற்றுக்கருத்து” எதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே அல்ல. ஏற்றுக்கொள்வதை விடுங்கள், பரிசீலிக்கக்கூடியதே கூட, acknowledge செய்யக்கூடியதே கூட அல்ல.

  //சொத்து தகராறு என்ற அடிப்படையிலேயே // சிறு திருத்தம். இது சொத்து தகராறு என்றல்ல, தகராறு, இரண்டு தரப்புகளுக்கு உணர்ச்சிபூர்வமான, strong opinions உள்ள தகராறாக பார்க்கிறேன்.

 32. My dear Sri R V, I think we have to agree to disagree and retire so that editors can heave a sigh! This will enable me to attend to my regular reading and writing. Presently I am committed to write three books and publishers are anxious as they plan for January 2011 Book Fair that is nearing.
  Affly.,
  Malarmannan

 33. அன்புள்ள மலர்மன்னன், பொறுமையாக பதில் எழுதியதற்கு நன்றி!

 34. இஸ்லாமியர்களுடன் இணக்கமாக மனிதர்கள் வாழ்வதற்கு உலகத்திலே வழி இருக்கிறதா? சும்மா தியரி எல்லாம் சொல்லாதீர்கள். உலக வரலாற்றிலே எங்காவது எப்போதாவது அமைதியோடு ஒரு இஸ்லாமிய தேசம் இருந்திருக்கிறதா? இணைவைத்தல் முதலிய கொடிய பாவங்களை செய்யாது (ரேப் பண்ணலாம், வழிப்பறி செய்யலாம், பங்கு போட்டுக்கலாம் – என்ன விகிதத்தில் பிரிச்சுக்கணும்னு அந்த ஏக இறைவன் தான் சொல்வான்) பரிசுத்த வம்சாவழியிலே வந்த பண்பாளர்கள் கொஞ்சம் தெரிய படுத்தினால் பரவாயிலை. இணைவைக்கும் மன்னிப்பே இல்லாத பாவத்தை செய்யும் காபிர்கள் தெரிந்துக்கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *