இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பரதனின் மேன்மையை விளக்க இராமாயணத்திலிருந்து ஒரு கதை கூறப்படும். இராமன் வனவாசத்திற்கு சென்ற பிறகு பரதன் அயோத்திக்கு வெளியே ஒரு குடிலை அமைத்து கொண்டு ஆட்சி நடத்துகிறான். தினமும் குளிக்க நதிக்கரைக்கு சென்றாக வேண்டும். ஆனால் பொது மக்கள் தன்னை பார்த்து, இராமனை காட்டிற்கு துரத்தி விட்டு ஆட்சியை கைப்பற்றி கொண்டவன் என்று அவதூறு சொல்வார்கள் என்று அஞ்சி பொழுது புலர்வதற்கு முன்பே நீராடிவிட்டு வந்து விடுவானாம். வால்மீகி இராமாயணத்தில் இந்த கதை உள்ளதா என்பது தெரியவில்லை.

இதிலிருந்து எந்த காலத்திலும் பொது ஜனம் என்பவன் முழுமையான ஆதாரத்தின் அடிப்படையில் அல்லாமல் கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயே முடிவுக்கு வருபவன் என்பது தெரிகிறது.

சரி,ஆனால் அந்த காலத்திலேயே பரதன் நேர்மையானவன் என்று நம்பிய ஒரு சிறு கூட்டமாவது இருந்தே இருக்கும். அவர்களால் பெரும்பான்மையான பொது ஜனத்தின் முன் அனுமானங்களை மாற்ற முடிந்திருக்காது. இந்த கட்டுரையில் நானும் பரதனை நம்பிய ஒருவனை போன்றே பெரும்பான்மையினரின் கருத்திலிருந்து முரண்படுகிறேன். பெரும்பான்மையான பொதுஜனத்தின் முன் அனுமானங்களை மாற்ற முடியாது என்பதை அறிந்தும் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.

தூணிலும் அமேரிக்க எதிர்ப்பு-துரும்பிலும் அமேரிக்க எதிர்ப்பு:

antiamerica உலகில் கம்யூனிஸ்டுகளின் அட்டூழியங்களை “கண்டும் காணாமல்” இருந்த இந்திய அறிவு ஜீவிகள் எதற்கெடுத்தாலும் “அமேரிக்க ஏகாதிபத்தியம்”, “ஐரோப்பியர்களின் காலனித்துவ மனநிலை” என்று மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருந்தார்கள். இன்றும் சிலர் முழங்கி கொண்டிருக்கிறார்கள்.

1990களின் ஆரம்பத்தில் சென்னையில் கன்னிமரா நூலகத்திற்கு முதன்முதலில் ஒருவரால் அழைத்து செல்லப்பட்டேன். சோவியத் யூனியனையும், கம்யூனிஸத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பதாகவோ உள்ள புத்தகங்கள்தான் கண்ணில் படும். Perestroica, Glasnost புராணங்கள் இல்லாத அரசியல் புத்தகங்கள் இருக்காது. அக்காலகட்டத்தில் முழுவதும் புரிய வில்லையெனினும், அந்த சீர்திருத்தங்கள் தேவைப்பட்டதே கம்யூனிஸத்தின் கோரங்களால்தான் என்பது பின்னர் புரிந்தது. அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளில் அமேரிக்க எதிர்ப்பு ஒரு மையப்புள்ளியாகவே இருக்கும்.

சமூகத்திலும் அரசியல்வாதிகளின் பேச்சுகளிலும் “அமேரிக்க ஏகாதிபத்தியம்”, சுவரொட்டிகளிலும் “அமேரிக்க ஏகாதிபத்தியம்” என்று அன்றைய அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் இந்த கோஷத்தை வைத்தே நடந்தன.

பலவிதமான புளுகுமூட்டைகளும் சமூகத்தில் அக்காலகட்டத்தில் இருந்தன.

உதாரணமாக சோவியத் யூனியனில் ஒவ்வொரு குழந்தைக்கும் 3 வயது ஆனவுடனே அது எந்த துறையில் சோபிக்க விரும்புகிறதோ அதற்கேற்ற பயிற்சி வழங்கப்படுகிறது. விதவிதமான வேலைகளை செய்தாலும் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டே சம்பளம் வழங்கப்படும். இன்னும் எத்தனை எத்தனையோ!!!

மின்சார பற்றாக்குறை ஏற்பட்டால் அமேரிக்காதான் காரணமென்று கூறியிருக்க மாட்டார்களே தவிர, நம் நாட்டின் அத்தனை பிரச்சினைகளுக்கும், நம் குறைகளுக்கும் அமேரிக்காதான் காரணம் என்று கூற யாரும் யோசித்ததில்லை.

சுய விமர்சனத்தின் தேவை:

சுய விமர்சனம் (Self Criticism) என்பது ஒரு சமூகத்தின் தார்மீக நெறிமுறைகளை மீளாய்வு செய்யவும், சீர்திருத்தங்களை காலத்திற்கேற்ப மேற்கொள்ளவும் தேவையானது என்று விவரமறிந்தவர்கள் கூறுவார்கள்.

ஆனால் கம்யூனிஸ்டுகள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாமல், விமர்சனம் செய்பவர்களையே சிறையில் அடைத்தோ அல்லது கொன்றோ போடுவது பழைய சோவியத் யூனியனிலும், பெயரளவிற்கு கம்யூனிஸ்டுகள் என்று ஆகாசப்புளுகை அவிழ்த்து விடும் இன்றைய சீனாவிலும் சர்வ சாதாரணமானவை.

சுதந்திர இந்தியாவும் பெயரளவில் “அணி சேரா கொள்கை” என்று உதார் விட்டுக் கொண்டிருந்தாலும் சோவியத் யூனியனுக்கு சலாம் அடித்து கொண்டுதான் இருந்தது.

அமேரிக்காவும் அதன் கூட்டாளிகளும் 20ம் நூற்றாண்டில் புரிந்த தவறுகளை முன்னிலை படுத்தும் நம் அறிவுஜீவிகள், அதே தவறுகளை 21ம் நூற்றாண்டில் இந்தியா செய்ய துவங்கியுள்ளதை மறைக்க முயல்கின்றனர். அவற்றை வெளிச்சம் போட்டு காண்பிப்பதும் இந்த கட்டுரையின் நோக்கம்.

தவறுகளை சரிசெய்வதற்கான முதல்படி தவறு செய்கிறோம் என்று ஒப்புக் கொள்வதுதான்.

பகுதி-I அமேரிக்கா எவ்வழி-இந்தியா அவ்வழி

கடந்த 100 வருடங்களாக நடந்த உலக நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து அமேரிக்காவின் மேல் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. முக்கியமாக,

 1. அமேரிக்கா உலகத்தின் போலிஸ்மேனாக நடந்து கொள்கிறது.
 2. அமேரிக்கா ஜனநாயகத்தை ஆதரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு உலகின் பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது.
 3. அமேரிக்கா சில நேரங்களில் தன் வசதிக்காக உலகின் பல சர்வாதிகாரிகளை ஆதரிக்கிறது.

மேற்கூறிய குற்ற்ச்சாட்டுகளில் “அமேரிக்கா” என்ற இடத்தில் “இந்தியா” என்றும் “உலகின்” என்ற இடத்தில் “தெற்காசியா” என்றும் சொற்களை மாற்றி படித்து பாருங்கள். நம்ப முடியவில்லையா?

சுதந்திர இந்தியா தனது தெற்காசியா மற்றும் சில அண்டை நாடுகளின் நிகழ்வுகளில் தலையிட்டதை விவரமாக பார்க்கலாம்.

மியன்மார் (பர்மா):-

myanmar-status11960களிலிருந்தே இந்நாடு இராணுவ சர்வாதிகாரிகளின் பிடியில்தான் இருந்து வருகிறது. ஆனால் 1990ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற ஜனநாயக கட்சிக்கு ஆட்சியை விட்டுக்கொடுக்காமல் இராணுவம் தன் சர்வாதிகார ஆட்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட நாட்டின் இன்றைய சர்வாதிகாரிக்கு சில மாதங்களுக்கு முன், சிவப்பு கம்பள வரவேற்பை இந்தியா அளித்தது.

மனித உரிமை என்பதையே ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்த இராணுவ ஆட்சியுடன் இந்தியா ராஜ்ஜீய உறவுகளை பலபடுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்த முஷரப்ஃபை அமேரிக்கா ஆதரித்தது தவறு என்று கூறும் நாம், மியன்மாரின் சர்வாதிகாரியை இந்தியா ஆதரிப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

இந்தியா மியன்மாரை ஆதரிப்பதற்கு காரணங்களை தேட வேண்டியதில்லை. எரிவாயுவும் , எண்ணெய் வளமும் மியன்மாரின் பல பகுதிகளில் கண்டறியப்படுகின்றன. இவற்றை தங்களின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள சீனா ஒருபுறமும், இந்தியா மறுபுறமும் மியன்மாரில் முயன்று வருகின்றன. அமேரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் மியன்மாரின் மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் இந்தியா மற்றும் சீனாவால் செல்லாததாக்க பட்டுள்ளன.

மாலத்தீவுகள்:-

இந்நாட்டின் முன்னாள் அதிபர் கயூமின் மீது சர்வாதிகாரி என்ற குற்றச்சாட்டு இருந்தது.1988ல் உள்நாட்டு கலக காரர்களுடன் சேர்ந்து இலங்கையின் தீவிரவாத குழுவான PLOTE, அதிபர் கயூமை பதவியில் இருந்து வெளியேற்ற (Military Coup) முயற்சி செய்தது. இந்திய இராணுவம் தலையிட்டு அதிபர் கயூமுக்கு உதவி செய்து மீண்டும் அவரின் ஆட்சி தொடர வழி செய்தது.

மாலத்தீவின் அதிபர்தான் இந்திய இராணுவ உதவியை நாடினார் என்பது உண்மைதான். ஆனால் இதே அளவுகோலில் தெற்கு வியட்நாமும், தென் கொரியாவும் அமேரிக்க உதவியை நாடின. அதனாலேயே அமேரிக்கா அந்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டது என்று கூற முடியும்.

இலங்கை:-

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாத நாளே இல்லை. சில நிகழ்வுகளை மட்டும் நோக்கலாம்.

1982-மே மாதம் 19ம் தேதி சென்னை மாம்பலத்தில் விடுதலை புலிகளுக்கும், PLOTEன் யுதகுழுவுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு PLOTE தீவிரவாதி கொல்லப்பட்டார். பிரபாகரன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை அரசு விடுதலை புலிகளின் பிரபாகரன் மற்றும் சிவகுமார் ஆகியோர் தலைக்கு 5 இலட்சம் பரிசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்தியா இலங்கையால் தேடப்பட்டு வந்த பிரபாகரனை இலங்கை அரசிடம் கையளிக்காமல் ஜாமீனில் வெளிவர அனுமதித்தது. பின்னர் நடந்தவை நமக்கு தெரியும்.

இந்திரா காந்தி மற்றும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில், விடுதலை புலிகளுக்கு வெளிப்படையாக தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

1980களில் இந்திய துருப்புகள் கிட்டத்தட்ட 1,50,000 இராணுவத்தினர் இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் பல போராளிக் குழுக்களுடன் போரிட்டனர்.

2010ல் சில மாதங்களுக்கு முன் தேர்தலில் போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா அடுத்த நாளே இந்தியாவிற்கு வருகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கிறார். பொன்சேகாவை விடுதலை செய்யவைக்க இலங்கையுடன் பேச வேண்டும் என்று இந்தியாவை கேட்டு கொள்கிறார். இலங்கை நீதிமன்றத்தை நாடாத எதிர் கட்சி தலைவர், அந்நாட்டின் நடவடிக்கைகளில் இந்தியாவால் தலையிட முடியும் என்ற நம்பிக்கையில்தானே இந்தியாவில் முறைப்பாடு செய்கிறார்?

திபெத்:-

dalai-lama-with-nehru

1956ல் தலாய் லாமா இந்தியாவிற்கு விஜயம் செய்யும்போது அன்றைய பிரதமர் நேருவை சந்தித்தார். நம் பிரதமரிடம் தனக்கு அரசியல் புகலிடம் இந்தியாவில் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு நம் பிரதமர் தன் நாடும் சீனாவும் அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்திருப்பதால் அவ்வாறு செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார். ஆனால் அமேரிக்காதான் சீன அட்டூழியங்களுக்கு எதிராக திபெத்திற்கு உதவியது. மேலும் அமேரிக்க முயற்சியால்தான் இந்தியா தலாய் லாமாவுக்கும், ஆயிரக்கணக்கான அவரின் சீடர்களுக்கும் புகலிடம் அளித்தது. தார்மீக நெறிமுறைகளின்படி நம் நாடு திபெத்தியர்களுக்கு உதவ முன்வர வில்லை. அமேரிக்க தலையீட்டிற்கு பின்தான் இந்தியா உதவியது என்பதை குறித்து கொள்வோம்.

பங்களாதேஷ்:-

1971ல் இந்தியா பங்களாதேஷுக்கு விடுதலை பெற்று தந்தது இந்த கட்டுரைக்கு விஷயமல்ல. அன்றைய கிழக்கு பாகிஸ்தானின் வங்காளி படைவீரர்கள் கொரில்லா முறையில் போரிட்டுதான் பாகிஸ்தானின் இராணுவத்தினரை நாட்டை விட்டு துரத்தினர். அந்த வங்காளி கொரில்லா வீரர்களுக்கு இந்திய இராணுவம் உதவி செய்தது. வெளிப்படையாக கூறுவதென்றால் மற்றொரு நாட்டின் ஆயுத குழுவிற்கு உதவி அந்நாட்டின் ஒரு பகுதி சுதந்திர நாடாக மாற இந்தியா உதவியது.

நேபாளம்:-

நேபாளத்துடன் இந்திய உறவு புதியதாக ஏற்பட்டது அல்ல. பழைய வரலாற்றை விட்டு 1996க்கு பிறகு அந்நாட்டின் நிகழ்வுகளை நோக்குவோம். முடியாட்சியை ஒழிக்க முனைந்த மாவோயிஸ்ட் கொரில்லாக்களை ஒழிக்க இந்தியா நேபாளத்திற்கு பல உதவிகளை செய்தது. 2008ல் நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கொரில்லாக்கள் அதிக தொகுதிகளை கைப்பற்றினார்கள். ஆனால் பெரும்பான்மை பெறவில்லை. இந்நிலையில் மாவோயிஸ்ட் கொரில்லாக்களின் முக்கிய நிபந்தனையான, தங்கள் போராளிகள் நேபாள இராணுவத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை பிற கட்சிகளால் தள்ளிப்போட பட்டு வந்தது. இவ்விஷயத்தில் நேபாள இராணுவ ஜெனரலுக்கு இந்தியா மறைமுக உதவி செய்தது என்பது ஊரறிந்த ரகசியம். மாவோயிஸ்டுகள் நேபாள இராணுவத்தில் சேர்ந்து விட்டால் சீன தலையீடு அதிகரிக்கும் என்ற இந்திய கவலையை நாம் அவதானிக்கலாம்.

ஆப்கானிஸ்தான்:-

2001ன் இறுதியில் தாலிபான்களின் ஆட்சி அமேரிக்காவால் தூக்கி எறியப்பட்டவுடன் இந்தியா, இராணுவம் அல்லாத மற்ற கட்டமைப்பு வசதிகளை செய்து தர முனைந்தது. இது சுயநலத்திற்குத்தான் என்பது குழந்தைக்கும் தெரியும். பாகிஸ்தானின் தலையீட்டை மட்டுபடுத்த இந்தியா ஆப்கானிஸ்தானை உபயோக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் இரண்டு முறை தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தானின் அரசு, அத்தாக்குதல்களுக்கு பாகிஸ்தானே காரணம் என்று அறிவித்ததை நாம் நோக்கலாம்.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளிலெல்லாம் இந்தியா செய்தது தவறு என்று நான் கூறவேயில்லை. இவையெல்லாம் ராஜதந்திரம்தான். இந்தியாவின் இறையாண்மை, இந்தியர்களின் முன்னேற்றம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்குத்தான் நாம் ஒரு அரசை பதவியில் அமர்த்துகிறோமே தவிற, மற்ற நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவும் நம் நாட்டின் தேவைகளை மறப்பதற்காகவும் அல்ல.

என் முறைப்பாடெல்லாம், இவற்றைப்போன்ற நடவடிக்கைகளை அமேரிக்கா பெரிய அளவில் உலகின் பல நாடுகளில் நிகழ்த்தியுள்ளது. அவற்றை தவறுகள் என்று குற்றம் கூறும் நாம், அதே போன்ற தவறுகளை இந்தியா சிறிய அளவில், தன் அண்டை நாடுகளில் நிகழ்த்தும்போது அவற்றை ஏன் மறைக்க முயல வேண்டும். நம் நாட்டின் செயல்களை நியாயப்படுத்த நாம் உபயோகப்படுத்தும் அதே காரணங்கள் அமேரிக்காவாலும் உபயோகப்படுத்த பட முடியும் என்பதை நாம் ஏன் மறக்க வேண்டும்? எதற்கெடுத்தாலும் அமேரிக்காவை ஏன் எதிர்க்க வேண்டும்?

பகுதி-II அமேரிக்கா தவறுகள் புரிய காரணம்

அமேரிக்கா ஏன் தவறுகள் புரிந்தது என்ற கேள்விக்கு விடைகாண அந்த காலகட்டத்தின் பனிப்போர் நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும். அமேரிக்காவிற்கு வேறு வழியே இருக்க வில்லை என்பதே என் கருத்து.

பனிப்போர் காலகட்டத்தில் உலகில் (பொய்) பிரச்சாரம் என்பதை ஒரு வழிமுறையாக அனைத்து கம்யூனிஸ்ட், சோஷியலிஸ்டு நாடுகளும் கடைபிடித்தன.

1990களின் ஆரம்பம் வரை இந்தியாவில் எந்த திரைப்படத்திற்கு சென்றாலும் ஒரு குறும்படத்தை (Films Division, Documentary) காண்பிப்பார்கள். ஒவ்வொரு திரையரங்கும் இதை காண்பிக்க வேண்டும் என்ற சட்டமும் இருந்தது.

எனக்கு நினைவுக்கு வரும் ஒரு ஆவணப்படத்தில் ஒரே ஒரு கிராமத்தில் ஒரே ஒரு விவசாயி இருப்பார். இவர் மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட விவசாய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மிக அதிக மகசூலை பெறுவதாகவும், தனக்கு பெரிய அளவில் இலாபம் கிடைத்ததாகவும் அளப்பார். இந்த குறும்படத்தை காணும் மக்கள் குறிப்பாக நகரவாசிகள் புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள். இந்தியா விவசாயிகளை கண்ணுக்கு கண்ணாக பாதுகாக்கிறது, நாட்டில் சுபிட்சம் நிலவுகிறது என்று புல்லரித்து போயிருக்கலாம். ஆனால் சோஷலிசத்தில் நடந்தது என்ன என்று நமக்கு தெரியும்.

ஆனால் 1989க்கு பின் உலகில் நடைபெற்ற மாற்றங்களுக்கு பின், குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி, அதை தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கம்யூனிஸத்திலிருந்து விலகியது போன்றவை பழங்கதைகளை அறிவுபூர்வமாக நம்மை யோசிக்க வைக்கின்றன.

லெனின், ஸ்டாலின் போன்ற கொடுங்கோலர்கள் சோவியத் யூனியனில் அடித்த கொட்டங்கள் அவர்களின் கைப்பட எழுதிய ஆவணங்களின் மூலம் இன்று கிடைத்திருக்கின்றன. இந்த கொடுங்கோலர்களைப்பற்றி ஏற்கெனவே பலர் எழுதியிருப்பதால் இக்கட்டுரையில் எழுத வேண்டிய தேவை இல்லை.

ஆனால் கிழக்கு ஐரோப்பிய நாடான ரோமானியாவில் நடந்த அட்டூழியங்களை பற்றி நான் அறிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

ரோமானியா:
இது வேறு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளை போலல்லாமல் சோவியத் யூனியனின் நேரடி ஆட்சியில் 1960 வரை இருந்தது. 1989 வரை சோவியத் யூனியனுக்கு ஜால்ரா அடித்து கொண்டிருந்தது. ஜால்ரா அடித்தது குற்றமில்லை. இந்நாட்டில் நடந்த அட்டூழியங்கள் சிலவற்றை பார்ப்போம். 1989ல் தாங்கள் வீழ்ந்து விடுவோம் என்பது தெரிந்தவுடன் சில உயர்நிலை கம்யூனிஸ்ட் இராணுவ அதிகாரிகள் லாரி லாரியாக ஆவணங்களை எரித்திருக்கிறார்கள். டன் டன்னாக காகிதங்கள் இருந்ததால் என்னதான் எரித்தும் தீரவில்லை. பாதி எரிந்து பாதி எரியாத நிலையில் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டார்கள்.

அப்படி என்னதான் இருந்தது அந்த ஆவணங்களில்?-2.2 கோடி ஜனத்தொகை இருந்த ரோமானியாவில் 20 இலட்சம் பேர் வேவு பார்க்க பட்டார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோப்பு. அந்த 20 இலட்சம் பேரின் கோப்புகளில் முக்கியமானவர்களின் கோப்புகளை எரிப்பதைத்தான் மேலே பார்த்தோம். வேவு பார்த்தவர்களில் வெறும் 10 வயது சிறுவர் கூட அடங்குவர்.

யார் யாரெல்லாம் வேவு பார்க்க பட்டனர்.? வேற்று நாட்டினருடன் பேசினால், வெளிநாட்டினருடன் தொலைபேசியில் பேசினால், உள்ளூர் பிரச்சினைகளால் ஆட்சிக்கு எதிராக பேசினால்… என்று இந்த காரணங்கள் நீளும். 20 இலட்சம் பொது ஜனத்தின் தொலைபேசி உரையாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்து, பின் அந்த உரையாடல்களை காகிதத்தில் பதிவுசெய்து (Transcript) வைத்துள்ளனர். இதற்கு அந்த கிறுக்கர்கள் எவ்வளவு பேரை வேலையில் அமர்த்தி இருப்பார்கள்? எவ்வளவு பெரிய அறைகளை கட்டியிருப்பார்கள் என்று நினைத்தாலே ஒரு பக்கம் பிரமிப்பாகவும் ஒரு பக்கம் அருவருப்பாகவும் இருக்கிறது. தங்கள் நாட்டின் 10 சதவிகித மக்களை ஒற்றர்கள் என்று சந்தேக கண் கொண்டு பார்த்தவர்கள் வேறு என்னதான் செய்திருக்க மாட்டார்கள்? (Source-BBC-The past secrets of Communists)

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அமேரிக்கா மீது வைக்க முடியுமா? யோசிக்க வேண்டும். அமேரிக்கா, கம்யூனிஸ்ட் நாடுகளின் மீது குறிப்பாக சோவியத் யூனியன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் பெருமளவில் உண்மைதான் என்பது தெளிவாகி இருக்கிறது. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் நாடுகள் மேற்கத்திய நாடுகளின் மீது வைத்த குற்றச்சாட்டுகள் புளுகு மூட்டைகள் என்றும் தெளிவாகி இருக்கிறது. இவற்றை தெளிவு படுத்தியவை கம்யூனிஸ்ட் நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்கள்.

மேற்கூறிய விவரங்களின் மூலம் , அமேரிக்கா ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் குழுக்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியது என்றாலும், அமேரிக்கா சோவியத் யூனியனுக்கு ஒரு எதிர்வினையாக இருந்தால் மட்டுமே தான் வாழ முடியும் என்ற நிலையிலிருந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

time_gorbachevஇன்னொரு உதாரணமாக க்யூபாவில் பயிராகும் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்கிய சோவியத் யூனியன், 3ல் 1 பங்கு விலைக்கு எரிசக்திக்கான எண்ணெயை பல சகாப்தங்களுக்கு மானிய விலையில்
வழங்கியதையும் நாம் கவனித்தில் வைக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் அதிரடியாக 5,00,000 பேரை வேலையிலிருந்து க்யூபா அரசாங்கம் நீக்கியதை நினைவு படுத்தி கொள்வோம். “குந்தி தின்றால் குன்றும் அழியும்” என்னும் முதுமொழிக்கேற்ப வரவு இல்லாமல் செலவை (அரசு ஊழியர்களின் சம்பளத்தை) செய்ய முடியாது என்பதை கடைசியாக க்யூபா அரசு ஒப்பு கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கடந்தகால சூழ்நிலைகளில் அமேரிக்கா “தார்மீக உயர்நிலை”யை கடைபிடித்திருந்தால் அது அழிந்து அதன் வேரில் கம்யூனிஸ ஆஸிட் ஊற்றப்பட்டிருக்கும்.

அமேரிக்கா பல வரலாற்று தவறுகளை செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கம்யூனிஸ்டுகள் அட்டூழியங்களை மட்டுமே செய்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

தவறுகளையும், அட்டூழியங்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதை இந்தியர்கள் கைவிட வேண்டும் என்பதே என் கருத்து.

(தொடரும்)

23 Replies to “இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1”

 1. பாலாஜி அவர்களே!
  //தவறுகளையும், அட்டூழியங்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதை இந்தியர்கள் கைவிட வேண்டும் என்பதே என் கருத்து. //
  இதற்கு பதில்:
  //பொது ஜனம் என்பவன் முழுமையான ஆதாரத்தின் அடிப்படையில் அல்லாமல் கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயே முடிவுக்கு வருபவன்.//

  1991 வரையில் எந்தப் பத்திரிக்கையைப் புரட்டினாலும் சோஷலிச சித்தாந்தத் துதிபாடல்கள் நீக்கமற எங்குமிருக்கும். சோவியத் உருசியா (ரஷ்யா) உன்னதமான நாடு, இந்தியா அதனனோடு தோழமை கொண்டதால் சிறந்தது, நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்ற கீதமே ஒலித்தது. எங்கு காணினும் சோஷலிசமடா என்று பாடிப் பரவினால் திருவாளர் பொதுஜனம் என்ன செய்வார்? “இது தான் சரி போல” என்று நம்பிவிடுவார்.

  இந்தியர்கள் மாற்றுக்கருத்துக்களை அறிய ஆரம்பித்திருப்பது IT துறை வளரத் துவங்கிய கடந்த இரு பத்தாண்டுகளில் தான். சிந்தித்துப் பார்த்து கொள்கையை மாற்றுவது சற்றுத் தாமதமாகத்தான் நடக்கும். அதுவரை திருச்சிற்றம்பலத் தேவனின் துணையோடு நன்மைக்கு வாழ்த்துப்பா பாடுவதே நலம்.

 2. பாலாஜி

  கட்டுரை சரியான திசையில் ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவின் மீது ஆயிரம் குறைகள் உண்டு. இன்று அவர்கள் பாக்கிஸ்தானை கண்மூடித்தனமாக ஆதரிப்பது வரை கடுமையான தவறுகளைச் செய்து வருகிறது உண்மைதான் ஆனால் அவற்றையெல்லாம் நாம் சோவியத், சீன கம்னியுச பயங்கரங்களுடன் ஒப்பிடும் பொழுது ஒன்றுமேயில்லாதவையாகி விடுகின்றன. மேலும் கம்னியுச அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த இன்று அமெரிக்காவை விட்டால் வேறு போக்கிடம் கிடையாது. அமெரிக்காவைக் குறை கூற இந்தியாவுக்குத் தகுதி கிடையாது என்பது முற்றிலும் உண்மையே

  அன்புடன்
  ச.திருமலை

 3. Pingback: Indli.com
 4. Where do I start? Do I go back to the history of the mighty USA where they wiped out close to 90 million native Indians? (Refer to book ” A little matter of genocide from 1495 ” by Ward Churchil) Or do I go back to the history of DELIBRATE ATOMIC BOMBING of Hiroshima and a few days later, of Nagasaki ( with the full blessings of the Christian priests!) where millions of innocent civilians including women and children died? Where the USA carried out the atomic bombings IN SPITE OF THE WILLINGNESS on the part of Japan to surrender honourably? Do I go to their shameful history where the USA carried out these attacks just to bolster their position in the negotion table in post-war Europe to get a biigger slice of war spoils and to find out how EFFECTIVE their new found atomic bombs will be? Or do I go to the history of USA where carpet bombings,indiscriminate use of Agent Orange in a large scale in civilan area, causing death and destruction to millions during Vietnam war? Or attrocities in Cambodia? Or President Nixon’s REAL threat of using atomic bomb against India during the Bangladesh war? Or their continued support for a non-democratic Pakistan to keep India in check? How many lives we have lost because of this? Or to their recent adventure into Iraq which had resulted in few million CIVILIAN DEATHS? I can go on forever.
  Or do I just give up and say ” America,as a state, is the most ruthless scoundrel known to mankind and there is no redemption for it”. As someone said” America has no friends,it has only interests”
  Reg the Indian context, sometime adhramic activities need to be incorporated to protect Dharma, as was done in Bangladesh war and in the Nepal episode.
  I am sorry Mr Balaji,but to pass critical judgement on India’s comparatively benign roles with USA’s genocidal activities, is, to put it mildy, naive.

 5. பாலாஜி
  தேவையான சுய பரிசோதனை ! தொடருங்கள் !!
  ஒரு சிறு கேள்வி
  இந்தியா தற்க்காப்பிற்க்காக செய்வதற்கும் அமெரிக்கா துஷ்ப்ரயோகம் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா?
  இந்தியாவிற்கு எந்த ஒரு சூழலிலும் மற்ற நாட்டின் வளங்களை சுரண்டும் எண்ணம் இருந்தது இல்லை ? மறுக்க முடியுமா? (வரலாற்று காலத்துக்கு போகவேண்டாம் என்று நினைக்கிறேன்.

  நன்றி

  சஹ்ரிதயன்

 6. 1) The title of the article is not very apt. How does criticism of America become invalid if India is doing similar things (even if that is true)?

  2) The most offensive thing I find about the neo-con movement in the US (whom the author unfortunately seems to side with, at least in foreign policy matters) is that just because the US (claims to/really) helps people fight against dictatorships and oppression, we are not supposed to show any criticism, but endorse EVERYTHING that they do. A mere criticism such as “I am not happy with the conduct of the war in Iraq” is seen as un-patriotic. Not even is one supposed to suggest that the US army should change its ways so that there will be fewer civilian casualties. Other things…

  3) They say that their country was founded on “biblical values”, and that “the bible is the only book in the ancient world that ever postulated ethics”. [They even justify the genocidal passages in bible by saying “the ancient world was so corrupt and so beyond repair at that time that certain things had to be done in certain ways. This is the reason why first-born Egyptian children had to be killed, and that Amelakite innocents (not just warriors, but women, infant and suckling, ox and sheep etc) had to be killed en masse to establish the “new order” of the biblical Yahweh.]

  4) They constantly portray in conservative media such trash as “American indigenous people were killing each other, now they are peaceful, prosperous, and have a lot of opportunity thanks to European colonization”, “thanks to western civilization, Hindus do not burn widows any more”, “the Hindu temple prostitution is justified by their own Gods… Krishna had many wives, and what not. The bible is the only book in the history of civilization that insists on sexual restraint”. This is one way in which they tend to establish their illusion of cultural supremacy.

  5) They say that US consumerism is giving jobs to poor people in third-world countries, and hence US consumerism is a morally good thing. What brainwashing!

  Agreed that liberals in the US are no good either. The solution for us is neither US-style liberalism nor US-style conservatism. Both are based on deha-AtmA abhimAnam which leads to disaster. The solution for future India should be based on karma yoga, vairAgyam (not just for sannyasis, for everyone in the society), svadharma, bhakti, discipline, diligence, and other ways shown by our rishis.

 7. I don’t agree with the author when he says the American faults are only mistakes and that of communists’ as blunders. The culture of flirting with Russian style communism/socialism was the brain child of mama Nehru. Who promoted talibanism to counter USSR? Is it just a mistake? Who is giving trillions of aid to Pakis in spite of their obsession with promoting terrorism in India? Today Obama and his cohorts are bent upon resolving the Kashmir issue in favor of Pakis. I’m sure this will be the top agenda of Obama’s India visit.

  On the religious front, America is the front leader in promoting evangelism in India. Read this article ( https://vivekajyoti.blogspot.com/2010/10/this-whopping-50-million-gift-from-tata.html ) which talks about how American universities are using Indian billionaires to promote their evangelical cause.

 8. In 1980, 1.5 laks indian troops were involved in Eelam war, i think it is not true. Please clarify this.

 9. அமெரிக்கா – கம்யூனிஸ நாடுகள் – இந்தியா இவை மற்ற நாடுகளில் தலையிடுவதை ஒரே மட்டத்தில் வைத்து ஒப்பிடுவது எந்தவிதத்திலும் சரியாக இருக்காது.

  அமெரிக்கா – கம்யூனச நாடுகள் ஒப்பீடு சரியாக இருக்கலாம். ஏனென்றால் ஒன்று மனிதனை மதிக்காத நாசகார சிந்தாந்தம்; சரியாகச் சொல்லவேண்டுமானால் ஃபாசிஸத்திற்கு திட்டவட்டமான – சமுதாயம், பொருளாதாரம் இவற்றை உள்ளடக்கிய சிந்தாந்த வடிவம் கொடுத்தால் அது கம்யூனஸமாகிவிடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து. எனவெ அத்தகைய சிந்தாந்தை எதிர்த்து தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் காத்துக்கொள்ளவேண்டிய நிலையில் அமெரிக்காவின் தலையீடுகள் நியாயமாகலாம்.

  இந்தியா தன்னைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான தலையீடுகளையே சரியாகச் செய்வதில்லை என்பதே குறைபாடு;

  மேலும் உலக தாதாவாக(ஆனால் சீனாவிடம் மட்டும் வாலை காலிடுக்கில் விட்டுக்கொண்டு பம்மும்)இன்று இந்தியாவிற்கெதிரான அமெரிக்காவின் தலையீடுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

 10. கட்டுரையாசிரியர் திரு ஆர். பாலாஜிக்கு ஒரு கேள்வி:

  Carpet bombing, Agent orange, Hiroshima – இவை “தவறுகள்”-ஆ அல்லது அட்டூழியங்களா?

 11. மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி.
  இக்கட்டுரைக்கு பலமான எதிர்ப்பு இருக்கும் என்று நினைத்தேன். நான்
  நினைத்ததை விட சிலர் ஆதரவு அளித்துள்ளார்கள்.

  திரு.சஹ்ரிதயன்.

  “இந்தியா தற்க்காப்பிற்க்காக செய்வதற்கும் அமெரிக்கா துஷ்ப்ரயோகம் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா?”

  அமேரிக்கா செய்த தவறுகள் எல்லாம் துஷ்பிரயோகம் என்று கருத இயல
  வில்லை. குறிப்பாக சோவியத் யூனியனின் முன்னெடுப்புகளை சமநிலை
  படுத்தவும் பல தவறுகளை அமேரிக்கா செய்ய வேண்டி இருந்தது என்பது
  என் கருத்து.

  “இந்தியாவிற்கு எந்த ஒரு சூழலிலும் மற்ற நாட்டின் வளங்களை சுரண்டும் எண்ணம் இருந்தது இல்லை ? மறுக்க முடியுமா? (வரலாற்று காலத்துக்கு போகவேண்டாம் என்று நினைக்கிறேன்.”

  உங்கள் கேள்விக்கு விடையை இக்கட்டுரையின் 2ம் பகுதியில் எழுதுகிறேன்.

 12. this article is a good joke. if you support america’s activities you are indirectly supporting pakistan’s actions against india and the erstwhile foster child of america – taliban.

 13. அமெரிக்க சமுதாயத்திலிருந்து பல நல்ல விழுமியங்களை நாம் கற்கலாம் – குடிமைப் பண்பு (civic sense), செயல்திறனும் பொறுப்புணர்வும் கொண்ட ஜனநாயகம், The American dream, spirit of innovation இத்யாதி.. ஆனால் அதற்காக அமெரிக்க அரசும் அதன் அதிகார பீடங்களும் தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதையே ஒரே குறியாகக் கொண்டு வல்லடியாகச் செய்யும் ஆக்கிரமிப்புகளை நாம் புகழ்வதோ நியாயப் படுத்துவதோ கூடவே கூடாது..

  ஆக்கிரமிப்பு மதங்களால் தங்கள் சொந்த பூமியிலிருந்து துரத்தப் பட்ட பார்சிகளுக்கும், யூதர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்களை அரவணைத்த கலாசாரம் நம்முடையது. நமது geopolitical நடவடிக்கைகளும் அந்த அடித்தளத்தின் மீது தான் கட்டமைக்கப் படவேண்டும். தற்காப்புக்காக அண்டை நாடுகளின் அதீத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதைக் கூட தற்போதைய இந்திய அரசு ஒழுங்காக செய்வதில்லை – அது தான் பிரசினையே..

  மற்ற நாட்டின் வளங்களை முழுக்கச் சுரண்டி இந்தியா கொழுக்க வேண்டும் என்று இந்திய ஜன சமூகமே விரும்பாது..

 14. Capitalist america and communist Russia / China are but two sides of the same coin. Its the choice between devil and deep sea. If you want to brush away the slave trade and mass liquidation of natives and bombing of hiroshima and nagasaki by America ( as mentioned by sh.rama which is matter of fact) that would be gross injustice. Both of them are axis of evil and mass murderers. In history the likes of Hitler and Pol Pot, Slobodon milosevic were tried in so called courts of law. No one even made an effort to try the leaders of of America, Russia and China and in this list the left over (great!) Britain and Japan. Do not ever compare their misdeeds with that of India.

 15. ஸ்டாலின் 2 கோடி பொது ஜனங்களை கொன்றவன், சரித்திரத்தில் இவனை விட கொடியவன் கிடையாது ரஷ்ய வில் எந்த சம்பவங்கள் நடந்தாலும் வெளில் தெரியாமல் பார்த்து கொள்வார்கள்.
  அதே நேரத்தில் vietnam போரை அமெரிக்க வின் அட்டூழியம் என்றுதான் சொல்ல வேண்டும்,
  ஈராக் போரும் அப்படிதான்

  (edited and published)

 16. ஆர். பாலாஜி,

  அருமையான கட்டுரைகள் எழுதுகிறீர்கள். அருமையாகவும் எழுதுகிறீர்கள்.

  அமேரிக்கா பற்றிய ஒரு நேர்மறைப் பார்வையை இதுவரை யாரும் தகவல்/செய்தி ஊடகங்களில் வைத்ததே இல்லை. அமேரிக்கா பற்றிக் குறைகள் சொல்லப்படுமானால், அதை மறுத்துப் பேசும் போக்கு இந்தியாவில் இருந்ததே இல்லை. இப்போதும் கூட.

  நரசிம்மராவ் உருவாக்கிய சுதந்திரப் பொருளாதாரத்திற்குப் பின்பும் அமேரிக்கா பற்றிய ஒரு நல்ல சித்திரத்தை தகவல்/செய்தி ஊடகங்கள் முன்வைக்காமல் இருப்பது தொடர்கிறது. (அந்தப் பணியைக் கேளிக்கை ஊடகங்கள் மட்டுமே செய்கின்றன.)

  ( இந்த ஒருவழிப் போக்கு அமேரிக்காவில் கிடையாது. )

  அந்த வகையில், ஒரு மாற்றுப்பார்வையை முதன்முதலில் தரும் உங்களது இந்தத் தொடர் முக்கியமானது.

  அமெரிக்காவின் ஆபிரகாமிய சட்டகத்தை மீறிப் பல நல்ல விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றிற்கும் இந்துத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. உதாரணமாக, அறிவியல் மனப்போக்கு, கருத்து-பேச்சு-மத சுதந்திரம், தனிமனித சுதந்திரம், இயற்கை பாதுகாப்பு, கல்வி முறை (இது இந்தியாவில் இருந்து அமேரிக்காவிற்குப் போன விஷயம்.), ஓரளவு சிறந்த ஜனநாயகம், …….etc.

  அமேரிக்க அரசின் செயல்பாடுகள் மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், அந்த நாட்டின் சமூக அமைப்புக்கள் வலிமையானவை என்பது தெரியாது. அது சொல்லப்படுவதில்லை.

  அமெரிக்கா மேல் இருக்கும் அதீத வெறுப்புணர்வு சரியானதா என்று ஆராய உங்கள் கட்டுரைத் தொடர் உதவக்கூடும்.

 17. திரு ஜடாயு அவர்கள் சொல்வது பொருத்தமாகவே உள்ளது. முழுக்க உடன்பட வேண்டிய ஒன்றே. நம் எதிர்ப்பும் சராசரி அமெரிக்கக் குடிமக்களைக் குறித்ததல்ல; அமெரிக்க அரசியல் குறித்ததே. சொல்லப்போனால், “அமெரிக்க எதிர்ப்பு” எல்லாம் இல்லை, “அமெரிக்க விமர்சனம்” என்பதே பொருத்தமானது. (எனக்குத் தெரிந்த வரையில் “அமெரிக்க எதிர்ப்பு” செய்து வருவது ஜிஹாதிக்களும் நம் நாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் தான்).

  விமர்சனம் என்பது வேறு; (ஜிஹாதிகள் சொல்வதைப் போல) “இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்திருக்க வேண்டியது தான். அமெரிக்காவுக்கு அது தேவை தான்” என்றெல்லாம் கூறுவது வேறு.

  // மற்ற நாட்டின் வளங்களை முழுக்கச் சுரண்டி இந்தியா கொழுக்க வேண்டும் என்று இந்திய ஜன சமூகமே விரும்பாது.. //

  இதற்கு முதலில் நம் மக்களைத் தயார் படுத்தவேண்டும். புரட்சிகரமாக எதுவும் சொல்லவில்லை. We have to gradually shift from global consumption towards encouraging sustainable local farm-based economies, local consumption, simpler lifestyle, and supporting indigenous small-scale businesses. அமெரிக்காவைப் போன்ற அசுரத்தனமான consumerism-இல் நம் மக்கள் ஈடுபட்டால் . Of course, we need to keep up with the finest technology with regard to our defense system, surveillence, border security etc and also for improving civic amenities for villages. But fewer mobile phones, BMWs, plasma TVs etc. would go a long way in supporting our swelling population with a decent standard of living plus a good foreign policy.

  // நமது geopolitical நடவடிக்கைகளும் அந்த அடித்தளத்தின் மீது தான் கட்டமைக்கப் படவேண்டும். தற்காப்புக்காக அண்டை நாடுகளின் அதீத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதைக் கூட தற்போதைய இந்திய அரசு ஒழுங்காக செய்வதில்லை – அது தான் பிரசினையே. //

  இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு, இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பையும், சாத்வீகமான ராஜதந்திரத்தையும் உணர்ந்து, அதில் பரிபூரணமான நம்பிக்கை உள்ளவர்கள் பதவியில் தேவை. வரலாற்றுச் சிறப்புகளைத் தெரிந்துக்கொள்ளாமல், இங்கிலாந்திற்குச் சென்று oxford பல்கலைக்கழகத்தில் பல்லை இளித்துக் கொண்டு “ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவிற்கு ஏறத்தாழ நன்மையையே தந்தது” என்று பொருள்படும்படி, “perceived negative consequences of British imperial rule” என்று கூறுபவர்களை பிரதமர் பதவியில் மீண்டும் மீண்டும் ஏற்றிக் கொண்டு இருந்தால் இப்படிப்பட்ட அரசு தான் நமக்குக் கிடைக்கும்.

 18. // அமெரிக்காவைப் போன்ற அசுரத்தனமான consumerism-இல் நம் மக்கள் ஈடுபட்டால் //

  “அமெரிக்காவைப் போன்ற அசுரத்தனமான consumerism-இல் நம் மக்கள் ஈடுபடக்கூடாது” என்று திருத்திக் கொள்ளவும்.

 19. It is not fair to compare US with Russia on the same scale. The concept of american political leaders from the days of Nixon till now, is to exploit every other nation for their nations growth. In fact the americans are the succesors of british, who had the idea to colonise the entire world. We cannot forget the mass killings of the native Indians of america. Today, it is proved beyond doubt that, americans are more intersted in the Gulf Oil than any other issue. They are indeed completely draining our country’s intellectual potential to their country and making them work for the benifit of their nation, whether it is software or science or Engineering. But it is Russia, who gave us the crucial military technologies, at the time of need. Still US is supporting PAK , for the sales of arms and amunitions. They need Indian brians, technologists and workers and Pak, where they can sell their military products. Who Knows, even our Indian’s knowledge would have been made use for those military products.

 20. திரு.மாதவன்,
  They are indeed completely draining our country’s intellectual potential to their country and making them work for the benifit of their nation, whether it is software or science or Engineering.

  என்பது ரொம்பவும் Jingoisticஆக உள்ளது. அமேரிக்க ஏஜெண்டுகள்
  இந்தியா முழுவதும் ரோந்து சுற்றி புத்திசாலிகளை வளைத்து பிடித்து
  அமேரிக்காவிற்கு கொண்டு செல்வதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த
  பல காலமாக முயற்சிகள் நடக்கின்றன. அவற்றில் உண்மை ஒரு துளியும்
  இல்லை.

  (1)NASAவில் இருக்காக! Microsoftல் இருக்காக! என்றேல்லாம்
  குழந்தைகளுக்கு கூறட்டும்.நாம் ஏமாற வேண்டியதில்லை.

  (2)அமேரிக்கர்கள் இந்தியர்களை வா! வா! என்று அழைக்க வில்லை.
  இந்தியர்கள் செல்லவில்லை என்றால் மற்ற நாடுகளில் இருந்து
  புத்திசாலிகள் அமேரிக்காவிற்கு செல்வார்கள். இந்தியர்கள் மட்டுமே
  புத்திசாலிகள் என்பது ஒரு பழமைவாதம்.

  (3)இந்தியர்கள் தங்களின் சுயமுன்னேற்றத்திற்காக மட்டுமே முழுமையான
  சுவாதீனத்துடன் செல்கிறார்கள். பணத்திற்காகவோ, ஆராய்ச்சி
  வசதிக்காகவோ என்று ஏதோ ஒரு காரணத்தை கூறுவார்கள். அது அவர்கள்
  உரிமை. அமேரிக்க குடியுரிமை பெற்றவர்களை இந்தியர்கள் என்று
  அழைப்பது சரியில்லை. அமேரிக்கர்களாக ஆனவுடன் முழுமையான
  அமேரிக்கர்களாக வாழட்டும்.

  (4) 2004ல் சுனாமியின் பேரலையால் இந்தியாவில் 10000 பேர் இறந்தனர்.
  இந்நிகழ்வில் 2 விவரங்களை தர விரும்புகிறேன்.
  (அ)கீழ்வரும் செய்தியை படியுங்கள்
  The December 26, 2004 Asian Tsunami left both the people and government of India in a state of heightened alert. On December 30, 2004, four days after the tsunami, the Portland, Oregon -based company Terra Research notified the India government that its sensors indicated there was a possibility of 7.9 to 8.1 magnitude tectonic shift in the next 12 hours between Sumatra and New Zealand In response, the India Home Affairs minister announced that a fresh onslaught of deadly tidal waves were likely along the India southern coast and Andaman and Nicobar Islands , even as there was no sign of turbulences in the region. The announcement generated panic in the Indian Ocean region and caused thousands to flee their homes, which resulted in jammed roads. The announcement was a false alarm and the Home Affairs minister withdrew their announcement. On further investigation, the India government learned that the consulting company Terra Research was run from the home of a self-described earthquake forecaster who had no telephone listing and maintained a website where he sold copies of his detection system. Three days after the announcement,Indian National Congress president Sonia Gandhi called Science & Technology minister Kapil Sibal to express her concern about Sibal’s December 30 public warning being hogwash
  நான் சோனியா காந்தியையோ, மத்திய அமைச்சரையோ குறை கூற
  மாட்டேன். அவர்களுக்கு அறிவுரை கூறும்(!!!) அறிவியலாளர்கள்தான்
  இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பூகம்பத்தை முன்னதாகவே தெரிந்து
  கொள்ளும் அறிவியல் இதுவரை மனிதர்களால் கண்டுபிடிக்க பட
  வில்லை. இதில் வரும் கம்பெனி அமேரிக்காவில் உள்ளதால் அமேரிக்கர்களை குறை கூற முடியுமா? கொஞ்சம் கூட புத்தியை
  உபயோகப்படுத்தாமல் வேலை செய்யும் “சமோசா டீ” இந்திய
  ஆராய்ச்சியாளர்கள்தான் இதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும்

  (ஆ) பூகம்பத்தை நம்மால் முங்கூட்டியே அறிய முடியாதே தவிர அதை
  தொடர்ந்து ஏற்படும் சுனாமிக்கு நம்மை தயார் படுத்தி கொள்ள முடியும்.
  குறிப்பாக இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்டால் கடல் அலைகள்
  இந்தியாவிற்கு வர ஒன்றரை முதல் இரண்டு மணிநேரம் ஆகும்.
  இந்த 2 மணிநேரம் மனிதனின் வாழ்வா? சாவா என்பதை தீர்மானிக்க
  உதவும். 2004 சுனாமிக்கு பிறகு இந்திய அரசு (NIOT) கடற்கரையிலிருந்து
  800 முதல் 1000 கிலோமீட்டர் தூரத்தில் நடுக்கடலில் Sensorகளை
  வைத்துள்ளது. இதன் மூலம் அடுத்த முறை சுனாமி வருவதற்கு 1 அல்லது 2 மணிநேரத்திற்கு முன்னதாகவே நம்மால் மக்களுக்கு முன் அறிவிப்பு
  தர முடியும். சரி இது ஒரு இந்தியாவின் சாதனைதானே! மன்னிக்கவும்
  இது இந்தியாவின் கேவலத்தை காண்பிக்கிறது. 10000த்திற்கு அதிகமான
  மக்கள் இறந்தபின் வெறும் 200 கோடி செலவில் உருவாக்கப்பட்ட
  இந்த முறை 2004ற்கு முன்னால் ஏன் அமைக்கப்பட வில்லை. இதுவும்
  அமேரிக்காவின் சதியோ? 11 இலட்சம் ரூபாய்கள் வரவு-செலவு திட்டம்
  போடும் இந்திய அரசுக்கு 200 கோடி ரூபாய்கள் பெரிய விஷயமா?
  மீண்டும் நான் இந்திய அரசையோ அரசியல்வாதிகளையோ குறை
  கூற மாட்டேன்.

  1993ல் உருவாக்கப்பட்ட NIOT (National Institute of Ocean
  Technology) எவ்வளவு முறை இந்திய அரசுக்கு இந்த முன்னெச்சரிக்கை
  முறைகளை அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.?
  சிபாரிசு செய்து இந்திய அரசு செயல்படுத்த வில்லையென்றால் நாம்
  இந்திய அரசை குறை கூறலாம். சிபாரிசு செய்திருந்தால் இந்நேரம்
  பலர் இந்திய அரசை குறை கூறியிருப்பார்களே! உண்மை என்னவெனில்
  இவர்களில் பெரும்பாலானோர் “சமோசா-டீ” அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்தான். தங்களுக்கு கிடைக்கும் சம்பளம், கிடைக்கப்போகும் ஓய்வூதியம் என்பதற்கு மேல் தங்கள் கடமைகளை
  செய்ய இவர்களில் பலர் முயல்வதில்லை.

  அமேரிக்கர்களை குறை கூறாமல் நம் வேலையை நாம் செய்வோம்.
  செய்ய மறுப்பவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  இந்திய விஞ்ஞானிகளை அமேரிக்க சதிகாரர்கள் பிடித்து இந்தியாவை
  வளர விடாமல் செய்கிறார்கள் என்பது விஜயகாந்தின் சினிமாவில்
  சாத்தியப்படலாம். ஆனால் நடைமுறையில் நம் வளர்ச்சியை முடிவெடுப்பது
  நாம்தான். அடுத்தவர்களை குறைகூறுவதை முதலில் விட்டு விட வேண்டும்.

 21. நான் ஒரு அமெரிக்கனான முந்நாள் இந்தியன். இந்த இணைய தளம் சிறப்பான சேவையை செவ்வனே செய்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் தகுதியான வேலை கிடைத்து இருந்தால், மாநிலத்தையோ, நாட்டையோ துறக்கும் எண்ணம் இருந்திருக்காது. (மேல்) ஜாதியின் பெயரால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் ஒருவன். வட இந்தியாவில் இருப்பதும் அமெரிக்காவில் இருப்பதும் ஒன்றுதான். நான் உலக நாடுகள் பலவற்றை பார்த்தவன். எந்த நாட்டிலும், இந்தியா உட்பட, புலம் பெயர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் தரப்படும் தகுதி வாய்ப்புக்கள் இல்லை. இதற்கு தலையாய காரணம், அமெரிக்கா, புலம் பெயர்ந்தவர்களால், ஒரு 300-400 வருடங்களுக்குள் உருவான நாடு. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், மக்களாட்சி போன்றவற்றில் இந்தியாவைப் போன்றது. ஆனால், தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதற்கு அமெரிக்காவில் வசதி வாய்ப்புக்கள் அதிகம். இன்றும் கூட, இந்தியாவில், ஜாதிப்பிரிவினை, பிராந்திய மனப்பான்மை போன்ற விஷயங்கள் உள்ளன – “நாமே நமக்கு எதிரி” என்பது போல! ஆனால், நான் அமெரிக்கா செய்யும் எல்லா பிரச்னைகளும் நல்லது என்று வக்காலத்து வாங்கப் போவதில்லை. அமெரிக்காவிடம் இருக்கும் நல்லதை எடுத்துக்கொண்டு நாம் முன்னேறலாமே!

  இங்கே கருத்துப்பதிவு செய்யும் அன்பர்கள், உலக வரலாற்றை இன்னும் சரியாக அறிந்து கொள்ள முயலலாம். பெட்ரோலிய கனிம வளம் எப்படி உலகத்தை மாற்றியது என்பது பற்றி, டேனியல் யெர்ஜின் எழுதிய “The Prize” என்ற புத்தகம் படிக்கத் தகுந்தது.

  அன்புடன்,
  சங்கர் வைத்யநாதன், ஹூஸ்டன், அமெரிக்கா.

 22. பாரதம் ஒருபோதும் பிறிதொரு நாட்டில் அமேரிக்கா செய்தது போன்ற மனித உரிமை மீறல்களைச் செய்தது இல்லை. (பாரதத்திலேயே கூட அரசு சார்ந்த மனித உரிமை மீறல்கள் இருந்தாலும், அவை கட்டுக்குள்ளேயே இருப்பதுடன் காட்டுமிராண்டித்தனமானவை ஆக இல்லை.)

  இந்த சுட்டிகள் கூறுவதை பாருங்கள்.

  லத்தின் அமெரிக்க மகளிர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட செய்தி.
  https://www.aztlan.net/latinas_us_military_raped.htm

  இராக்கிய மகளிர் அமெரிக்க ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி.
  https://www.aztlan.net/iraqi_women_raped.htm

  அமெரிக்கர்கள் இராக்கில் sodomy மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்த செய்தி.
  https://www.aztlan.net/rape_of_iraq.htm

  பாக்தாத்தில் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்த செய்தி.
  https://www.aztlan.net/nineyearoldrapevictim.htm

  மெக்சிகர்களுக்கு எதிரான வன்முறைகள்
  https://www.aztlan.net/grunts.htm

  இவை மட்டுமல்ல இன்னும் ஏராளமான மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

  தற்போதைய செய்தி: ஈராக் போர்க் கைதிகளைக் கண்ணில் தீயினால் சுட்டு சித்தரவதை செய்திருக்கிறார்கள்

  https://www.dinamalar.com/News_Detail.asp?Id=112315

  BBC இன்று வெளியிட்டுள்ள செய்தியில் ஈராக் போர்க் குற்றங்கள் பற்றி விக்கிலீக்ஸ் பல தகவல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளது.

  அமேரிக்கா பற்றிய பாரதத்தின் பாரதீயர்களின் நிலைப்படும், எண்ணமும் முழு அளவில் சரியானதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *