1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் “சந்த்” எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.
View More காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்றுTag: ltte
ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 1
இலங்கை அதிபர் ராஜபக்ஸே அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று எவ்வளவுதான் உறுதி அளித்திருந்தாலும், அவர்களின் நிலைமையை நினைக்கும் போது நமது நெஞ்சம் துடித்துப் போகிறது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ள இரண்டு லட்சம் அப்பாவித் தமிழர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. முக்கியமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனையும், தப்பிச் செல்லும் மக்களைக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ள பொட்டு அம்மனையும் நினைத்துப் பார்க்கும் போது, அப்பாவித் தமிழர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்று நம் மனது அடித்துக் கொள்கிறது.
View More ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 1