ஆக்கம்: பல்பீர் புன்ஜ்
(நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 21/12/2010)
தமிழாக்கம்: எஸ். ராமன்
காங்கிரஸ் தலைவரான திக் விஜய் சிங்கின் தொடர் பிதற்றல்களிலும் ஒரு நோக்கம் இருக்கிறதோ? 26/11 அன்று நிகழ்ந்த மும்பை தாக்குதல்களில் மராட்டிய அரசின் பயங்கரவாதத் தடுப்புப் படையின் தலைவரான ஹேமந்த் கர்கரே பலியானார் அல்லவா. அவரது மரணத்தில் தனக்கு இருக்கும் வினோத ஐயங்களை பற்றிப் பிரலாப்பிப்பதில் இப்போது திக் விஜய் சிங் இறங்கியிருக்கிறார்.
மறைந்த கர்கரே தனக்கு நன்கு அறிமுகமானவர் என்றும், அவர் உயிருடன் இருந்தபோது “இந்துத் தீவிரவாதி”களிடமிருந்து பலமுறை அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாகத் தன்னிடம் தெரிவித்தார் என்றும் சிங் இப்போது திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.
இந்தக் கூற்றின் உட்பொருள் என்னவாக இருக்க முடியும்? கர்கரே அவர்கள் அன்று இந்த நாட்டின் துரோகிகளிடமிருந்து மும்பையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவர் சொல்லும் தீவிரவாதிகளினால் தாக்கப்பட்டதால் காலமானார் என்றுதானே சொல்ல வருகிறார்? சொல்லட்டும், சொல்லட்டும்; கேட்பவன் “கேனையன்” என்றால் கேழ்வரகிலும் நெய்தானே வடியும்?
இது மட்டுமல்ல, டெல்லியில் “பாட்லா ஹௌஸ்” என்ற இடத்தில் நடந்த ஒரு போலீசின் நேரடித் தாக்குதல் ஒன்றில் இறந்து போன டெல்லி போலீஸ் அதிகாரியின் மரணத்தைப் பற்றியும் இதே போன்று தனது சக அதிகாரிகளாலேயே கொல்லப்பட்டதாகவும் இவர் ஒரு மிக வினோத விளக்கம் ஒன்று சொல்லிக் கொண்டு அலைகிறார். இவைகளெல்லாம் இவர் ஏதோ ஒரு தனி மனிதர் போலச் சொல்வதாகத் தெரியவில்லை. இவர் பத்து வருடங்களாக ஒரு மாநில முதல்வராக இருந்தவர் என்று பார்க்கும் போது, காங்கிரஸ் எனும் ஒரு பானைச் சோற்றில் இவர் ஒரு பருக்கைச் சோறு போலத்தான் தெரிகிறார்.
அவர் சொல்வதை அவரது கட்சி மறுப்பதும் இல்லை; அவரை அது போன்று கூறக் கூடாது என்று தடுப்பதும் இல்லை என்றால் வேறு என்னதான் அர்த்தம் கொள்ளமுடியும்? இத்துடன் RSS முன்னாள் தலைவர் கே. எஸ். சுதர்சன் இதே போன்ற அவதூறு குற்றச்சாட்டு ஒன்றைக் கிளப்பியபோது BJP கட்சி செய்ததையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த இரண்டு கட்சிகளின் அணுகுமுறை வித்தியாசங்கள் தெளிவாய்த் தெரியும்.
இப்படியாக சிங் தொடுக்கும் அபாண்டமான தொடர் குற்றச்சாட்டுகளான, தீவிரவாதிகள் அல்லாத ஆட்களாலேயே காவல் துறையினர் கொல்லப்படுகிறார்கள் என்னும் இந்தக் கூற்றுக்களுக்கு அவரது கட்சியின் மௌனமே சாட்சியாக இருப்பதால், அவரது கட்சியின் எண்ணத்தைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார் என்றுதானே ஆகிறது? மேலும் அவரது மற்றச் செயல்களையும் பாருங்களேன்.
உத்திரப் பிரதேசத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆஜாம்கர் எனும் இடத்தில் இருந்து எப்போதெல்லாம் ஒரு பயங்கரவாதி பிடிபடுகிறானோ அப்போதெல்லாம் அவர் அங்கே உடனே ஆஜராகி விடுகிறார் என்றால் வேறு என்னதான் அர்த்தம்?
இப்படி ஆஜாம்கருக்கு அடிக்கடி செல்லும் இந்தத் தலைவர்கள், இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் குண்டு வைத்து அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் LeT போன்ற இயக்கங்களுக்கு முஸ்லீம் நபர்களை உறுப்பினர்களாகச் சேகரிக்கும் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவார்கள். அரசின் அங்கமான போலீசுக்கு எதிராகவும், முஸ்லீம் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள் என்ற ரீதியிலும் அவர்கள் பேசுவதுதான் அவர்களது வாடிக்கை.
தனது கணவரின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மறைந்த கர்கரேயின் மனைவி சொன்னது மட்டுமல்லாது, தன் கணவர் திக் விஜய் சிங்கிடம் பேசினார் என்பதையும் அவர் மறுத்த பின்பும், சிங் மறுபடியும் அவரது கூற்றை நியாயப்படுத்த முயல்கிறார் என்றால் அவர் வேறு ஏதோ எண்ணத்துடன்தான் செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமே.
காங்கிரஸ் கட்சியின் மேல் புழுதி வாரித் தூற்றும் அளவில் ஊழல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், இவரை ஒரு பகடைக் காயாகக் கொண்டு இவரை இப்படி இல்லாததையும் பொல்லாததையும் பேச வைத்து அந்தக் கட்சி மக்களின் கவனத்தை திசை திருப்பப் பார்க்கிறது என்பது எவருக்கும் கண்கூடு.
பா.ஜ.க. கட்சியை எதிர்க்கும் கட்சிகளும் பா.ஜ.க.வுடன் ஒருமித்து எல்லா எதிர்க் கட்சிகளும் ஒருசேர, 2G-அலைக்கற்று சம்பந்த ஊழலை விசாரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழு வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூக்குரல் கொடுக்கின்றனர். இந்த எதிர்க் கட்சியின் ஒற்றுமையைப் பார்த்து காங்கிரஸ் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் “ஹாம்லெட்” நாடகத்தில் இல்லாத பிசாசு ஒன்றைப் பார்த்து ஒரு கதாபாத்திரம் அலறுவது போல, காங்கிரசும் தனக்கு 1989-ம் வருடம் Bofors சம்பந்தப்பட்ட நிகழ்வை மனதில் கொண்டு, அதுபோன்ற இன்னும் ஒன்று இப்போதும் நேரிடுமோ என்று பயப்படுவது போல்தான் தெரிகிறது.
அந்த வருடம் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு மக்கள் அவையில் மூன்றில்-இரண்டு என்றளவுக்கு உறுப்பினர் பலம் இருந்தது. ஆனால் அத்தகைய பலம் கூட அந்த ஊழல் பற்றிய விசாரணையில் இருந்து அவர் தப்பிக்க எந்த வகையிலும் உதவவில்லை. ஒரு மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்பது போல ஒரு பக்கம் பா.ஜ.க. கட்சியும் இன்னொரு பக்கம் இடது சாரி கட்சிகளும் ஒருமுனைப்புடன் கொடுத்த இருமுனைத் தாக்குதலால் அவர் பதவி இழக்க நேரிட்டது.
அதுபோல இப்போதும் ஏதும் நேர்ந்து விடக் கூடாதே என்ற பயத்தில் காங்கிரஸ் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க மதம் சார்ந்த புரளிகளைக் கிளப்பிவிட்டு, தான் மாட்டிக்கொண்டிருக்கும் அரசியல் சக்கர வியூகத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கிறது. இன்னுமொரு ஷேக்ஸ்பியரின் நாடகமான “மேக்பத்”தில் வருவதுபோல, இல்லாத ஒரு சூழ்ச்சியை நடந்தது போலச் சொல்லவைக்க திக் விஜய் சிங்கைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் போல்தான் தெரிகிறது. அந்த நாடகத்தில் கொலை ஒன்றைச் செய்த கதாநாயகிக்குக் காட்டில் உள்ள மரங்களே பேய்கள் போல் தெரிவதாகச் சொல்லப்பட்டிருக்கும்.
தனியார் நிறுவனங்களின் அனுமான ஊகங்களும், சந்தேகங்களும், பேரங்களும் ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசிப் பேச்சுப் பதிவுகள் மூலம் ஊடகங்கள் அனைத்திற்கும் தெரியுமளவிற்கு, 2G-அலைக்கற்றை ஊழல் வெளிப்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சி எப்படி நண்பர்கள் இயக்கும் முதலாளித் தத்துவ முறையிலிருந்து பயன் அடைகிறார்கள் என்று அவை அனைத்திலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வழியில் செயல்படும் அமைப்பில், ஒரு சில தனியார்துறை முதலாளிகளின் லாப-நஷ்ட கணிப்பிற்கு ஏற்ப அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த அந்த இலாக்காக்களின் பொறுப்பை நிர்வகிப்பார்கள் போலும்!
இந்தக் காலக் கட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் “வைக்கி-லீக்ஸ்” தகவல் கசிவுகளும், ஆளும் கட்சியான காங்கிரஸ் எப்படி பயங்கரவாதத்தையும் இந்து மத ஈடுபாட்டையும் சம்பந்தப்படுத்தி அரசியல் குளிர் காயப் பார்க்கிறது என்று தெரிவிக்கின்றன. முஸ்லீம் மக்களைத் திருப்திப்படுத்தவே அன்றி காங்கிரசின் அந்தப் பார்வை உண்மைக்குப் புறம்பானது என்று அந்த ஆவணங்கள் மூலமும் நாம் அறிய வந்துள்ளோம்.
இவை எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் பார்க்கும் போது, திக் விஜய் சிங்கின் கூற்றுக்கள் அவருடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல என்றும், அவர் பொம்மலாட்டப் பொம்மை போல மற்றோர் இயக்கி அவர் கூறுவதாகத் தான் தெரிகிறது. அவர் கூறுவதன் தாக்கம் நமது பாராளுமன்றத்தோடு நிற்காது. ஏனென்றால் மும்பைத் தாக்குதலைப் பற்றி நம் அரசின் விளக்கங்களையே தகர்க்கும் விதமாகவும், ஏதடா சாக்கு எப்படியெல்லாம் இந்தத் தாக்குதலின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம் என்று கணக்கு போடும் பாகிஸ்தானிய அரசுக்கும் இவர் கூறுவது தீனி போடுவதுபோல அமைகிறது.
அது எப்படி என்றால், பாகிஸ்தானோ அந்த மும்பை தாக்குதல் இந்தியாவில் உள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் தனது நாட்டினர்களால் அல்ல என்றும் ஏற்கனவே கூறிக்கொண்டிருக்கிறது. இவர் மட்டுமல்லாது டீஸ்டா செடல்வாத் போன்றோரும் இதேபோல புளுகிக் கொண்டிருப்பதால் பாகிஸ்தான் இவர்களுக்குத் தலை வணங்கி மாலைகள் கூடப்போடும். அப்போது மும்பைக்கு வந்த தீவிரவாதிகள் நமது அரசு சொல்வது போல குண்டு மழை பொழிய வரவில்லை, இனிப்புப் பண்டங்கள்தான் கொடுக்க வந்தனர் என்று கூட மார் தட்டிச் சொல்லிக் கொள்ளும்.
பயங்கரவாதம்தான் உலக அமைதியையே கெடுக்கிறது என்று காங்கிரஸ் அரசு வெளி உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அதே அரசின் பாதுகாப்பு அங்கங்கள் பயங்கரவாதிகளைக் கையும் களவுமாகப் பிடிக்கும் போது, அவர்கள் ஒன்றும் அறியா அப்பாவிகள் என்றும், கலகத்திற்குக் காரணம் இங்குள்ள பெரும்பான்மை மக்களே என்றும் காங்கிரஸ் சொல்கிறது. இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் இவர்களை என்னவென்று சொல்வது?
“சில சமயம் சரித்திரம் திரும்புகிறது” என்றொரு வசனம் உண்டு. அமெரிக்காவின் மிக மட்ட ரகமான “வாட்டர் கேட்” ஊழல் நடந்த போது அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான நிக்சன் அதில் தான் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்றுதான் அறிவித்தார். அதன் பின் அதன் தொடர்பான அமெரிக்க ராணுவ ரகசியமான “பென்டகன் ஆவணங்கள்” வெளிப்பட்டது. அவைகள் அந்த ஊழலை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிய வரும்போது, தனது உப ஜனாதிபதியையே அந்த ஊழலில் வேண்டுமென்றே சிக்கவைக்க ஜனாதிபதி முயற்சித்தும் அவர் தனது முகத்திலேயே கரியைப் பூசிக்கொண்டதுதான் மிச்சம். எல்லோருக்கும் அவர் ஒரு புளுகு மூட்டை என நன்கு தெரிந்து போயிற்று. அதன் விளைவாக அவர்கள் சரித்திரத்திலேயே முதன் முறையாக ஒரு ஜனாதிபதி ஒரு அவப்பெயருடன் தனது பதவியிலிருந்து விலக வேண்டியதாயிற்று.
அதேபோன்று இப்போது இங்கும் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. 2G-அலைகற்றை ஊழல் பற்றிய இந்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியின் இடைக்கால அறிக்கை வந்ததும், நமது அரசும் முதலில் நடந்ததை மறுத்தது. அதன் பின் நீரா ராடியா பேரங்களின் பேச்சு ஒலி நாடாக்களும் வெளிவந்தன. அவைகளிலிருந்து அரசுக்கும் தனியார் துறை நிறுவனர்களுக்குமான மறைமுகத் தொடர்புகளும் ஓரளவு வெளிப்பட்டன. நமது நாட்டின் தலைமை நீதிமன்றமும் நடந்தவைகளின் அவலங்களைச் சுட்டிக்காட்டத் தொடங்கியது. “வாட்டர் கேட்” ஊழலின் பின்விளைவாக ஜனாதிபதி நிக்சனின் உதவியாளர்களின் ராஜினாமாவால் எப்படி மற்றைய தொடர் நிகழ்ச்சிகள் நிற்கவில்லையோ, அதே போன்று அமைச்சர் ராஜாவின் வெளியேற்றத்தால் ஊழலின் மற்றைய காரணிகளும் வெளிப்படாமல் நிற்கவில்லை.
தனியார் துறை நிறுவனர்களும் அடுத்து என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்ற அச்சத்துடன் இருக்கின்றனர். போதாக்குறைக்கு சில பத்திரிகை, தொலைக்காட்சி சம்பந்தப்பட்டோர்களும் தங்களது சொற்களினாலேயே சிறையான வண்ணம் இருக்கின்றனர். மேலும் திகிலூட்டும் காட்சிகள் அரங்கேற இருக்கிறது என்றே தெரிகிறது. நிக்சனுக்கு நடந்தது போல இங்குள்ளோருக்கும் வரும் புத்தாண்டில் ஏதேனும் நடக்க இருக்கிறதோ, என்னவோ? பார்ப்போம், இனிய புத்தாண்டு அனைவருக்கும் நன்றாகவே மலரட்டும்!
BSNL sources in Bhopal say that Karkare contacted Dig Vijay Singh – https://in.news.yahoo.com/digvijay-karkare-did-talk-mumbai-attack-20110103-063034-844.html
கர்கரே மெலகான் குண்டு வெடிப்பில் காங்கிரஸின் தூண்டுதலால் சாத்விக் சன்யாசினியை கைது செய்து அவர்மிது தவறான குற்றசாட்டுகளை சுமத்தி இந்துகள் மீது பழிபோட மறைமுகமாக பல போலியான குற்றசாட்டுகளை சுமத்த வற்புறுத்தப்பட்டார். பாதிவிசாரணையின் போதே இந்த நாடகத்தில் தான் பங்கு ஏற்கமுடியாது என்றும் தன்னை இந்த விசாரணையிலிருந்து விடிவிக்கும் படியும் மேலிடத்தை வற்புறத்தி வந்தார் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்தது. எனவே அவர் ஒன்று முஸ்லீம் தீவிரவாதியால் சுடப்பட்டிருக்கவேண்டும் அல்லது காங்கிரஸ் சொன்னபடி சாத்விக் விஷயத்தில் நடக்கவில்லை என்பதற்காக காங்கிரஸின் தூண்டுதலின் பேரில் போலிஸே இதை செய்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
Republic Of Scams
Total Scam Money (approx) since 1992:
Rs. 73000000000000 Cr. (73 Lakh Crore)
Hard to digest?
Just check the below given details
1992 -Harshad Mehta securities scam Rs 5,000 cr
1994 -Sugar import scam Rs 650 cr
1995 -Preferential allotment scam Rs 5,000 cr
Yugoslav Dinar scam Rs 400 cr
Meghalaya Forest scam Rs 300 cr
1996: -Fertiliser import scam Rs 1,300 cr
Urea scam Rs 133 cr
Bihar fodder scam Rs 950 cr
1997 -Sukh Ram telecom scam Rs 1,500 cr
SNC Lavalin power project scam Rs 374 cr
Bihar land scandal Rs 400 cr
C.R. Bhansali stock scam Rs 1,200 cr
1998 -Teak plantation swindle Rs 8,000 cr
2001 -UTI scam Rs 4,800 cr
Dinesh Dalmia stock scam Rs 595 cr
Ketan Parekh securities scam Rs 1,250 cr
2002 -Sanjay Agarwal Home Trade scam Rs 600 cr
2003 -Telgi stamp paper scam Rs 172 cr
2005 -IPO-Demat scam Rs 146 cr
Bihar flood relief scam Rs 17 cr
Scorpene submarine scam Rs 18,978 cr
2006 -Punjab’s City Centre project scam Rs 1,500 cr,
Taj Corridor scam Rs 175 cr
2008 -Pune billionaire Hassan Ali Khan tax default Rs 50,000 cr
The Satyam scam Rs 10,000 cr
Army ration pilferage scam Rs 5,000 cr
The 2-G spectrum swindle Rs 60,000 cr
State Bank of Saurashtra scam Rs 95 cr
Illegal monies in Swiss banks, as estimated in 2008 Rs 71,00,000 cr
2009: -The Jharkhand medical equipment scam Rs 130 cr
Rice export scam Rs 2,500 cr
Orissa mine scam Rs 7,000 cr
Madhu Koda mining scam Rs 4,000 cr”
Cheating Some People for so many times my be possible…
Cheating Many People for some time is also possible…. But..
Cheating all the people Always… Is not at all possible…
This proverb perfectly suits to Congress.
மோகன்தாஸ்,ஜவஹர்லால்,இந்திரா, ராஜீவ் போன்ற பிணங்களை வைத்து வெகுகாலம் பிச்சை எடுத்துவிட்டதால், அவற்றின் துர் நாற்றம் தாங்க முடியாமல், புதியதான, ஹேமந்த் என்பவற்றின் பிணத்தை வைத்துப பிச்சை எடுக்க கேடு கெட்ட காங்கிரஸ் தள்ளப்பட்ட நிலையையே இவ்விவகாரம் உணர்த்துகிறது. பிணங்களை வைத்து ஒட்டு வாங்குவது, காங்கிரசுக்கும் அதைச் சார்ந்த கமுநிச்டுகள் உட்பட்ட கட்சிகளுக்குப் பிடித்தமான தொழில். கசாப் என்ற தீவிரவாதியைக் கண்கலங்காமல் காக்க காங்கிரசும் அதன் தீவிரவாத ஆதரவுக் கட்சிகளும் சேர்ந்து அரங்கேற்றும் கேவலமான நாடகங்கள் தான் ivai அனைத்தும். இதையெல்லாம் karuththil கொள்ளாமல், மோகன்தாசின் பிள்ளை, பேரன், கருணா நிதிகளின் vaarisugal என்று இலவச இணைப்புகளில், மக்கள் திளைக்க ஆசைப்பட்டார்கள் என்றால், நாட்டை காங்கிரசைச் சார்ந்த தீவிரவாதிகளிடம் அடகு வைத்த பெருமை அம்மக்களையே சாரும். இந்தியத் திருநாட்டைக் காக்கும் எந்தவொரு பிறவியும், இந்திய நாட்டின் எதிரியாகக் கருதப்படலாகாது. காங்கிரசும் அதை சார்ந்த ஒட்டுண்ணி இயக்கங்களும், நாட்டைச் சூரையாடுபவர்களை, நண்பர்களாகவும், இந்திய நாட்டை அழிப்பவர்களைத் தலைவர்களாகவும் போற்றுவதை, ஜனநாயகத்தின் பேராலேயே முறியடித்து, விரட்ட வேண்டும். காங்கிரசையும் அதன் காம்ரேடுகள் உள்ளிட்ட, தேசத் துரோகக் கும்பல்களை, விரட்டி அடிக்க வேண்டும்.
vedamgopal
நீங்கள் சொல்வது போல் கர்கரே விலகிக் கொள்ள விரும்பினார் என்பதற்கு விவரணம் தர முடியுமா ? மேல்படி தகவலை வெளியிடுங்களேன்.