புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

குத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.

யார் அவர்?

புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதிதாசன் தான்.

திராவிட இயக்கத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த முதன்மைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் என்று சொன்னாலே அவர் ஒரு புரட்சிக்கவி; சாதி, மதம், இவற்றை எதிர்த்தவர்; பெண் விடுதலை, தமிழ்ப் பற்று இவற்றை ஆதரித்தவர் என்ற பிம்பம்தான் தோன்றுகிறது.

ஆனால் அவர் கடைபிடித்த கொள்கை அதற்கு எதிராகவே இருந்தது.

அவர் என்னென்ன தத்துவங்களை எழுதினாரோ பாடினாரோ அதைத் தம் வாழ்வில் கடைபிடிக்கவில்லை.

’….. கலப்பு மணம் ஒன்றே

நல்வழிக்குக் கைகாட்டி’

என்று பாடிய கவிஞர் தம் மக்களுக்குக் கலப்பு மணம் செய்விக்க முன்வரவில்லை.அதைக்கூட விட்டுவிடலாம்.

பாரதிதாசன் பகுத்தறிவுவாதி; சாதிக்குத் தீ என்றெல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. திராவிட இயக்க பகுத்தறிவுவாதிகளும் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுபவர்கள்தான்.

anna_and_bharatidasan28-7-1946ல் புதுச்சேரி மாகாணத்தின் திராவிடர் கழகத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணாத்துரையால் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியாக ரூ. 25,000 தரப்பட்டது. அந்தக்காலத்தில் இத்தொகை மிகப்பெரிய தொகை. எந்தக் கவிஞனுக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்த அளவு தொகை வழங்கப்படவில்லை.

பின்னாளில் அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் முரண்பாடு எழுந்தது. அந்த முரண்பாட்டின் காரணமாக பகுத்தறிவுவாதி பாரதிதாசன் அண்ணாத்துரையை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதினார், தான் நடத்திய ’குயில்’ வார இதழில். முரண்பாடு என்று வந்துவிட்டால் சாதி ஒழிப்பாவாது; கண்ணியமாவது – இவற்றை எல்லாம் பகுத்தறிவுவாதிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.

சரி அப்படி என்னதான் எழுதினார் பாரதிதாசன்?

1958ம் ஆண்டு தான் நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன் அண்ணாத்துரையை கேவலமாக விமர்சித்து எழுதினார்.

கட்டுரையின் தலைப்பு : அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?

இந்தத் தலைப்பில் 4 தொடர்கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரைகளை இப்போது பார்ப்போம்.

1. குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18

அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
…..
அறிவிப்பு உ. :-

இதற்குமுன் அதே முரசொலியில் அண்ணாத்துரை உங்கட்குக் கொடுத்த பொற்கிழிமேல் நீங்கள் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் பேசுகின்றது போல் படம் வந்திருந்தது. அண்ணாத்துரை தான் உங்களைப் பொதுமேடையில் ஏற்றினாராம்.

இதற்கும் அடுத்துவரும் அறிவிப்புக்கும் சேர்த்துப் பதில் எழுதுவேன்.

அடுத்த அறிவிப்பு வருமாறு :-

முன் ஒருமுறை, உங்கட்குப் பொற்கிழி தந்து பொன்னாடை போர்த்தினார் அண்ணாத்துரை என்பதாகக் காட்டியிருந்தார் தம் திராவிடனில் என்.வி.நடராசன் அவர்கள். அதுவுமின்றி அண்ணாத்துரையே புதுவையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவிஞர்க்குப் பொற்கிழி கொடுத்தேன், பொன்னாடை போர்த்தினேன்; அப்படியிருந்தும் என்னை கவிஞர் எதிர்க்கிறார் என்று கூறினார். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டாமா?

எனது பதில் :-

எனக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி கொடுப்பதற்கென்று அமைந்த குழுவினர் தம் செயலைத் தொடங்கிப் பணியாற்றி வருகையில் அண்ணாத்துரை நிலைமை எப்படி என்பது தெரிந்தால், அண்ணாத்துரை எனக்குப் பொற்கிழி பொன்னாடை தந்திருக்க முடியாது என்பது விளங்கும்.

அதைக் கேளுங்கள்.

அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில் செல்வாக்குள்ள புள்ளிகள்.

காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என் விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை அழைத்தார்கள்.

நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.

இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!

விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?

அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்.

(தொடரும்)

2. குயில் இதழ், குரல்– – 1, (7-10-58), இசை -19

விழா நாளைக்கு என்னும்போது நான் சென்னையில் தங்குவதெற்கென்றமைத்த வீட்டில் வந்து தங்கிவிட்டேன். அன்றைக்கே சிங்கப்பூர், திருச்சி, சேலம் முதலிய இடங்களினின்று பெருமக்கள் சென்னையில் வந்து நிறைந்துவிட்டார்கள்.

என்னைச் சிலர் நேரில் வந்து கண்டார்கள். அவர்களால் நான் பெற்ற முறையீடுகள் குறிப்பிடத்தக்கவை.

அண்ணாத்துரை வந்து சொன்னது : நான் விழாக்குழுவில் பொருட் காப்பாளனாக இருந்து வேலை செய்யாவிட்டால் இத்தனை சிறப்பாக இந்த விழா அமையாது.என் செலவில் இந்தப் பொன்னாடையை நெய்யச் செய்தேன்.

அண்ணாத்துரை போனபின் மற்றொரு செல்வந்தர் வருகின்றார் அவர் சொன்னது :என் செலவில் என் தறியில் என் ஆளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது, பொன்னாடை.

சேலத்தார் நால்வர் வருகின்றார்கள். அவர்கள் சொன்னது :சேலத்துப் பகுதியில் விழாவுக்கென்று தொகை பெற்றுக் கொண்டவர் இரசீது தருவதாய்ச் சொல்லியும் தரவேயில்லை.

சிங்கப்பூரார் ஒருவர் வருகின்றார் அவர் சொன்னது : பன்முறை பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கின்றோம் சிங்கப்பூரினின்று! தொகை பெற்றுக் கொண்டதற்கு இரசீது அனுப்புவதில் சுணக்கம் காட்டுகின்றார்கள் குழுவினர்.

டி.என்.இராமன் வருகின்றார். அவர் சொன்னது: குயில் செய்யுள் வார இதழ் வெளியிடுவதற்கான முற்செலவுக்காக இரண்டாயிரம் ரூபாய் தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுபோக மீதியைத்தான் உங்களுக்குப் பொற்கிழியாக அளிக்கப்படும்.

விழா நடந்தது. பொன்னாடை போர்த்தப்பட்டேன், பொற்கிழியை அண்ணாத்துரை கையால் அளிக்கப் பெற்றேன். அதை மிக விழிப்பாக அண்ணாத்துரை முயற்சியால் நிழற்படம் எடுக்கப்பெற்றேன்.

பொற்கிழி பையில் ஐயாயிரம் குறையக் காணப் பெற்றேன். கணக்குப் பின்னால் தருவதாகக் கேட்கப் பெற்றேன். பல விடங்களிலிருந்தும் இருபத்தையாயிரந்தான் சேர்ந்ததென்று கூறப்பெற்றேன். என் வீட்டுக்கு அனுப்பப் பெற்றேன்.

விழா நடந்த பின் அடுத்தவாரத்தில் அண்ணாத்துரை வெளியிடும் திராவிட நாட்டில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. பாரதிதாசன் பொன்னாடை போர்த்து விழாக்குழுவினர், விழா வரவு செலவுக் கணக்கையெல்லாம் பாரதிதாசன் அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள். இனிப் பாக்கித் தொகையை அனுப்ப வேண்டியவர்கள் நேரே பாரதிதாசன் அவர்கட்கே அனுப்பிவிடுக என்ற கருத்தமைந்திருந்தது.

அவ்வாறு எனக்குக் கணக்கு அனுப்பப்பட்டதா? இன்றுவரைக்கும் அனுப்பப்படவில்லை. அடுத்தடுத்து அப்போதே கேட்டும் அனுப்பவில்லை. கணக்கைக் கேட்டு வாங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால் கேட்டேன் கணக்குத்தரவில்லை. இன்றுவரைக்கும் (7-10-58) தரவில்லை. அண்ணாத்துரை தரவில்லை. கணக்குத் தரக்கூடாது என்பதற்காகத் தரவில்லை அண்ணாத்துரை!

அதன் தகவல் என்ன?

பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு குயில் கவிதை வார இதழ் வெளிவரும் என்ற மறைவான சுற்றறிக்கை பறந்தது, விற்பனையாளரை நோக்கி! ஆறாயிரம் ரூபாய் குயிலுக்கு முற்பணமாக அனுப்பியிருக்கிறார்கள் விற்பனையாளர்கள்.

என்னிடம் டி.என்.இராமன் வந்து குயிலில் வெளிவர வேண்டிய கவிதைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு, என் அச்சு நிலையத்தையும் சென்னையிலிருக்கட்டும் என்று தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்போது அவர் சொன்னது என்னவென்றால் குயில் பற்றி நீங்கள் சென்னைக்கு வர வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம் என்பது.

சில நாட்களின்பின், குயில் வெளிவருநாள் ஆயிற்றே, அது பிழையில்லாமல் வெளிவரவேண்டுமே என்று கருதிச் சென்னை சென்றேன்.

திருத்தம் பார்க்க முதற்குயில் எனக்கு அனுப்பப்படுகிறது. அதன் முதற்பக்கத்தில் குயிலுக்கு உடையவர்கள் டி.என்.இராமன் என்று காணப்படுகின்றது. அவர்களின் உள் எண்ணத்தை
அறிந்தேன். அவர்களே சொன்னார்கள்: குயில் உம்முடையது அன்று. அச்சகம் உம்முடையது அன்று. குயில் எழுதுவதற்குத் திங்கள் ஊதியமாக 200 ரூபாய் உமக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனோடு, நீர் எம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது.

நான் என்ன செய்தேன்?

நான், அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை,விற்பனையாளரிடம் வாங்கியுள்ள முற்பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன். இனி நான் என்வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவு தருக என்று நாளிதழ் ஒன்றில் அறிக்கை வெளியிட்டு, என் குயிலையும் வெளியிட இருக்கையில் அதன் மேல் இஞ்செக்ஷன் உத்தரவுகோரி ஐகோர்ட்டில் என்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நானும் வழக்கறிஞரை வைத்து எதிர் வழக்கிட்டேன்.

(தொடரும்)

3. குயில் இதழ், குரல்– – 1, (14-10-58), இசை -20

தீர்ப்பாளர், இந்தக் குயில் எந்தப் பணத்தினின்று தோற்றுவிக்கப்பட்டது?என்று கேட்டார்.

அதற்கு டி.என்.ராமன் சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் சொன்னார் : இராமன் பணத்தினின்று என்று!

kuyil_bharatidasan_1என்சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் அதை மறுத்து, பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்ட தொகையினின்று இந்தக் குயில் தோற்றுவிக்கப்பட்டது என்று பதில் கூறினார்.

தீர்ப்பாளர் : அப்படியானால் நிதி தண்டிய – செலவு செய்த கணக்குக் கொண்டு வாருங்கள் என்றார்.

உடனே அதற்கு டி.என்.ராமனுடைய வழக்கறிஞர் ஆம்!ஆம்! காட்டச் சொல்லுங்கள் கணக்கை என்றார். என் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்கிறேன் கணக்குக் காட்டுவேன் என்றார்.

அடுத்த ஆய்வுமன்றில் நான் கணக்கைக் காட்ட வேண்டும். அண்ணாத்துரைக்கு ஆள் அனுப்பினேன். இதோ அதோ என்றார். அஞ்சல் எழுதினேன். இதோ அதோ! தஞ்சையில்
நாடகத்தின்போது நேரிற்கேட்டேன். இதோ அதோ!

என் குயிலைப் பறிக்கவும் என் அச்சகத்தைப் பறிக்கவும் முன் எண்ணத்தோடு செய்யப்படும் இந்த வேலைகள் அனைத்தும் அண்ணாத்துரையுடையதே என்று தெரிந்தும் நான் விடாப்பிடியாக அண்ணாத்துரையைக் கேட்டுப் பார்த்தேன். ஏன் எனில், விழாக்குழுவில் உள்ளவர்களுக்கு அஞ்சி அண்ணாத்துரை கணக்குகளை என்னிடம் கொடுக்கத்தானே வேண்டும்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?விழாக்குழுவினரை அழைத்து- கணக்கைப் பாரதிதாசனிடம் கொடுப்போமானால் நாம் எல்லோரும் சிறைக்குப் போக வேண்டும் என்றார்.

குழுவினர் நம்பினார்கள்! ஏன் அவர்களுக்குப் புரிகின்றது. வரவு வந்த பெருந்தொகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது.

கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள்.

இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!

என் வழக்கு என்ன ஆயிற்று – கெடு தள்ளிக் கொண்டே போகிறது. டி.என்.ராமனின் நிலை கீழ்நோக்கிக் கொண்டே போகின்றது. வழக்கைக் கைவிட்டு விடுவதாக என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் வழக்கைக் கைவிட்டுவிட்டேன். அதன் பயனாகக் குயில் என்னிடமே வந்துவிட்டது. அது சென்னையிலேயே நடந்து கொண்டிருந்தது. அதன்பின் புதுவை வந்தது. அதன்பின் சென்னை அரசினர் அதற்குத் தடைபோட்டார்கள் நின்றது.

அந்தத் தடை நீங்கியது பின் இப்போது புதுவையில் தொடங்கப்பெற்று நடந்து வருகின்றது.

தோழர்கள் எனக்கு அனுப்பிய வினாக்களுக்கு ஒன்று தவிர – விடை சொல்லிவிட்டேன் என்று எண்ணுகின்றேன்.

இன்னும் ஒன்றுக்குத்தான் பதில் சொல்லியாக வேண்டும்.

அந்தக் கேள்வி என்ன?

கருணாநிதி முதலியவர்கள் – கூட்டத்தில் பேசும்போது பாரதிதாசன் பாட்டுக்களைப் பாடுகின்றார்கள். அவ்வாறு பாடியபின், இது மாஜி கவிஞர் பாரதிதாசன் பாட்டு என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன – என்பது.

இதற்கு அடுத்த குயிலில் பதில் தெரிவிக்கின்றேன்.

(தொடரும்)

kuyil_bharatidasan_24. குயில் இதழ், குரல்– – 1, (21-10-58), இசை -21

அண்ணாத்துரையா….. என்ற பகுதி கவிஞர் வெளியூர் செல்ல நேர்ந்ததன் காரணமாக இந்த இதழில் வரவில்லை. அடுத்த இதழில் வரும்.

5. குயில் இதழ், குரல்– – 1, (28-10-58), இசை -22

என் பாட்டைக் கூட்டத்தில் பாடி விடுவது! பாடிய பிறகு இது மாசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது என்று கூறுவது இதற்கு நான் பதில் கூறுகிறேன். இந்தக் கற்பனை அவர்கட்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊன்றி நோக்க வேண்டும்.

பொது மகளின் இல்லத்தில் இதுபோன்ற கருத்துக்கள் செயல்கள் கிடைக்கும்.

ஒரு தந்தை பணம் கொடுக்காத காரணத்தால் வருவதை நிறுத்திக் கொள்ளுகிறான்.அல்லது மறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் இறந்துவிட வேண்டும் என்பதில்லை.இன்னொரு தந்தை வந்துவிட்டபின் பையன் முன்னைய தந்தையை மாசித் தந்தை என்பான்.

என்னை மாசிக் கவிஞன் என்பவன் அத்தன்மையை மேற்கொண்டவனாயிருக்கலாம். அல்லது கலப்பில்லாத தே***ள் மகனாயிருக்கலாம். [#]

***********************

[#] – கண்ணியம் கருதி இந்த இணையதளத்தில்  *** பயன்படுத்தப் பட்டுள்ளது.  குயில் இதழில் அந்தச் சொல் அப்படியே அச்சில் வந்திருந்தது.

அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் அரசியல் ரீதியான முரண்பாடு எழுந்தபோது பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்.

அண்ணாத்துரை மீதும், பாரதிதாசனின் மீதும் மதிப்பும் மரியாதையையும் யாரேனும் கொண்டிருந்தால் அவர்கள் இதனைப் படித்து அதிர்ச்சியடையக் கூடும்.ஆனால் இவை தான் ‘பேரறிஞரின்’, ‘பாவேந்தரின்’ உண்மை முகங்கள்.

டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.

திராவிட இயக்க கொள்கைகளையாகட்டும், தலைவர்களாகட்டும், தொண்டர்களாகட்டும். அவர்களைப் பற்றிக் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிரசார பிம்பங்களை உண்மைத் தகவல்களின் ஒளியில், மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

சாதி எதிர்ப்பு பற்றிக் கச்சைக் கட்டிப் பாடிய புரட்சி கவிஞரா இப்படி? என்று அதிர்ச்சியைக் காட்ட வேண்டாம். ஏன் என்றால் உள்ளம் முழுக்க அவர்களுக்கு பொய்மையும், போலித்தனமும், கபடமும், வக்கிரமும் தான் இருந்திருக்கிறது. அதோடு உள்ளம் முழுக்க அவர்களுக்கு சாதி இருக்கிறது, அதுதான் இப்படி வெளிவருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

41 Replies to “புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்”

  1. மிகவும் அற்புதமான பதிவு! திராவிட இயக்க வரலாற்றில் நாம் அவசியம் நினைவிற்கொள்ள வேண்டிய இந்த முற்கால நிகழ்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமைக்கு பாராட்டுக்கள். வக்கிரமயமான சிந்தனைகள் கொண்ட அண்ணாத்துரையும் பாரதிதாசனும் மட்டுமல்லாமல் ஈ. வே. ரா. போன்ற தலைவர்களால் தவறான வழியில் செலுத்தப்பட்ட நமது திராவிட இயக்க ஆர்வலர்கள் இதுபோன்ற உண்மை நிகழ்வுகளை அறிந்தபின்பாவது தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.

  2. இத்தகைய அரிய கருத்துகளின் பெட்டகமாகத் திகழும் குயில் இதழ்களின் தொகுப்பு ஒன்றை மலிவு விலைப் பதிப்பாகக் கொண்டுவர தமிழ்ஹிந்து முயற்சி எடுக்க வேண்டும்.

  3. உண்மையை வெளியே கொண்டு வர அயராது உழைக்கும் மரியாதைக்குரிய ம. வெங்கடேசன் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் வாழ்க.

    அண்ணா துரை அவர்கள் கண்ணியமானவர் என்று சொல்லும் கட்டுரைகளைப் படித்து ஓரளவு நம்பிக்கை கொண்டிருந்த எனக்கு, அந்தக் கண்ணியமும் காகிதக் கண்ணியம் மட்டுமே என்பது அறியத் தந்ததற்கும் நன்றிகள்.

    என்னதான் உண்மை என்றாலும், பாரதிதாசன் போன்ற பெருந்தகைகள் பற்றிய இந்த விவரங்கள் வருத்தத்தை உண்டு செய்கின்றன.

    ஒருவரின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கிறதா என்று பாராமல் நம்பினால் இத்தகைய மனவேதனைகள் ஏற்படத்தான் செய்யும். விதி வலிது.

  4. EVR was dead against orgainising the function to felicitate bharathidasan. According to him, all poets were lazy fellows.

    To my knowledge, Annadurai belonged to the mudaliar community & not to isai vellalar community as mentioned.

    I have read an incident regarding bharathiyar & bharathidasan. Once they were chatting in the streets of pondy. Bharathi suggested that they have tea. They approached a tea shop. When bharathi ordered for tea, the tea shop owner suggested that they come inside the shop & have tea. He was hesitant to offer tea to them outside the shop. He feared that if somebody saw them having tea outside, he could be in trouble. Bharathidasan too felt the same & endorsed the suggestion.

    Reason? – The tea shop owner was a muslim.

    Bharathiyar replied ” Kannaka subbu ratnam (that was bharthidasan’s original name), nee summa iru. Ithai paartha aavaadhu indha madha dwesham,pagai ellam ozhiyattum”.

    That is the greatness of bharathiyar & the attitude of bharathidasan – the so called rationalist.

  5. It is a well known fact that leaders of the dravidian movement never went by principles. They spoke one & acted against it.

    When annadurai left the DK, EVR abused & criticised him in the most vulgar fashion possible. He even made a remark that annadurai tried to kill him.

    When anna went to court, EVR replied to the judge that he did not mean to say so. The case was closed.

    Karunanithi & anbazhagan openly criticised EVR when he did not attend the burial of pattukottai azhagiri, one of the torch bearers of the dravidian movement.

    When EVR came to know this, he was enraged & instructed his colleagues not to let these 2 guys speak anything similar in the future.

    When annadurai won the elections & went to meet EVR in tiruchi, EVR was redfaced & totally embarrased.

    When mu.ka became CM, EVR had to eat humble pie.

  6. அருமையான முகத்திரைக்கிழிப்பு.. படிக்கப் படிக்க வேதனைதான் மண்டுகிறது. இவர்களையெல்லாம்தான் நம் தலைவர்கள், வழிகாட்டிகள் எனக் கூறிக்கொண்டிருக்கின்றனர், சிறுமதியாளர்கள் என்ற இன்றைய அரசியல்வாதிகள் ( அவர்கள் பயன்படுத்தும் வாசகம்)

    திரு.வெங்கடேசனுக்கு தமிழர்கள் கடமைப்பட்டுள்ளார்கள். இப்படி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுத எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்?

  7. திராவிட கட்சிகளின் தலைவர்களின் தராதரங்களை காட்டியுள்ளார். தமிழ் மக்கள் வெறும் அடுக்கு மொழி பேச்சில் ஏமாந்தது நல்ல வேடிக்கை தான் ,,, இந்த தரங்கெட்ட மனிதர்களின் முகமூடிகளை கிழிக்கும் இந்த படைப்பை வெளி இட்ட தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  8. திராவிட இயக்கம், கடவுள் மறுப்பு கொள்கையுடைய இயக்கம், பகுத்திறிவுவாதிகளின் பாசறை என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பிர்கள். ஆனால், இவர்கள் மறுக்கும் கடவுள் இந்து மதக் கடவுளை மட்டும் தான். மேடையேறி ராமரை பற்றி விமர்சனம் செய்யும் இவர்களுக்கு இஸ்லாமிய பர்தா கொள்கை பற்றி பேச துணிவில்லாத கோழைகள் தான் திராவிட இயக்கத்தவர்கள். பாதிரிகளின் காம வேட்டையைப் பற்றி பேச இந்த கோழைகளுக்கு துணிவிருக்க? இஸ்லாத் பற்றி பேசினால் பட்வா வைத்துவிடுவார்கள், கிறுத்தவம் பற்றி பேசினால் அவர்களும் விடமாட்டார்கள், ஆனால், 80% இந்துக்கள் வாழும் பாரத தேசத்தில் இருந்து கொண்டு இந்து மதத்தை எதிர்த்து கீழ்தனமாக பேசுகின்றனர். ஏன் அவர்கள் பேச மாட்டார்கள்? தப்பு அவர்களிடம் மட்டுமல்ல, நம்மிடமும் உள்ளது. இந்துக்கள் ஒற்றுமை இல்லாமல், சாதிவாரியாக பிரிந்திருப்பதால் தான் இந்த கோழை இயக்கத்தவர்கள் நம் மதத்தை கேவலபடுத்துகின்றனர். இந்து மக்களே வீரத்துடன் அணிதிரண்டிடுவோம், நம் மதத்தை எதிர்க்கும் கோழைகள் விரட்டுவோம்.
    ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

  9. இதெல்லாம் உண்மையா???
    இவர்கள் பகுத்தறிவாளர்களா இல்லை பைத்தியகாரர்களா???
    இவரை சிறந்த மனிதர் என்றல்லவா நினைத்திருந்தேன்.
    இணையம் இல்லையென்றால் இவர்களின் உண்மை முகம் வெளிவந்து இருக்க்காது.
    ஆயிரம் நன்றிகள் மா. வெங்கடேசன்

  10. மா. வெங்கடேசன் அவர்களுக்கு நமஸ்காரங்கள். உண்மை சொல்லாவிட்டால் பொய்யாகவே மாறிவிடும் என்ற அபாயத்தை தவிர்த்து உண்மையை நிலைக்கச் செய்திருக்கிறார்.

    வாசந்தி தீராநதியில் இதை எழுதியுள்ளார் : பொதுவாகவே திராவிட பாரம்பரியம் உள்ளவர்கள் யாரையாவது பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர்களின் கற்பு ஒழுக்கத்தைப் பற்றி விமரிசிப்பார்கள்.. இதற்க்குக் காரணம் : திருடனுகுத்தான் திருட்டு வழி தெரியும்.

    (edited…)

  11. சபாஷ் ம.வெங்கடேசன் அவர்களே. ஒரு நண்பரிடம் நான் இதே அண்ணாத்துரை ஒரு பொறுக்கி சாக்கடைப் பேர்வழி என்றேன். அதற்கு என்னிடம் பெரிதாகச் சண்டை போட்டார். அவர் தனக்குத் தெய்வம் என்றார். இப்பேர்ப்பட்ட கழிசடைகளைத்தான் இன்றைக்கும் தமிழ் நாட்டில் பல கிறுக்கர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திருடனைத்தான் கண்ணியமானவன் என்கிறார்கள் அந்த ஜாதி வெறியனைப் போய் புரட்சிக் கவி என்கிறார்கள் கண்ணியத்துக்கும் புரட்சிக்கும் அர்த்தம் புரியாத தறுதலைகள். ஊருக்கு ஊர் ஒவ்வொரு சந்து முக்கிலும் அவசரமாக ஒன்றுக்கு வருகிறது அல்லது உன்னை உதைப்பேன் என்று ஒற்றை விரலை வானத்தில் துருத்திக் கொண்டு ஆபாசமான சிலைகளைக் காணலாம். தமிழ் நாட்டுக் கோவில்களில் உள்ள அற்புதமான கலைச் செல்வங்களையெல்லாம் மூழியாக்கி விட்டு இவரைப் போன்ற ஆபாசப் பிறவிகளில் சிலைகளை திருடர்களின் சிலைகளை நிறுவி தமிழ் நாடு முழுவதையுமே அசிங்கப் படுத்தியிருக்கிறார்கள். போததற்கு மதுரை அண்ணா, சென்னை அண்ணா, நெல்லை அண்ணா , சேலம் அண்ணா என்று பல்கலைக் கழகங்கள் வேறு. இந்தக் குடிகாரன் பாரதிதாசன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம். தொழில் பல்கலைக் கழகங்களுக்கு ஒரு விஞ்ஞானியின், தொழில்நுட்ப வல்லுனரின், கணித மேதையின் பெயரை வைப்பார்கள் ஆனால் தமிழ் நாட்டிலோ இவரைப் போன்ற ஆபாசப் பேர்வழிகளின் பெயர்களை வைத்தால் அந்தக் கல்வி நிலையங்கள் எப்படி உருப்படும்? அண்ணா, அண்ணா அவன் பெயரைச் சொல்லி மண்ணா, களி மண்ணாப் போனீர்களே என்பார் தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள். இந்த அண்ணாவின் சுயரூபத்தைத் துணிந்து கிழித்த ஜெயகாந்தனே இப்பொழுது அந்தக் கும்பலின் கால்களில் விழுந்து கிடக்கின்றார்.

    இந்தக் கட்டுரையைப் படித்த பின்னாலாவது சுப்புரத்தினத்தையும், அண்ணாத்துரையையும் பற்றிப் புரிந்து கொண்டு திருந்தட்டும், சுய அறிவின்றி இவர்கள் பின்னால் திரியும் ஆட்டு மந்தைக் கூட்டம் திருந்தட்டும். எவரும் இந்த ஆளை பாரதி தாசன் என்று அழைத்து தயவு செய்து பாரதியாரை அவமானப் படுத்த வேண்டாம்

    ச.திருமலை

  12. அண்ணா துரை மற்றும் பாரதிதாசன் இவ்வளவு மோசமான ஆசாமிகள் என்று இதுவரை எனக்கு தெரியாது. தெரிய வைத்ததற்கு நன்றிகள். பொதுவாக திராவிட கழகங்களை எனக்கு பிடிக்காது. இப்போது மிகவும் வெறுக்கிறேன். நம் மக்கள் எப்போது விழிக்க போகிறார்கள்.

  13. கூறப்பட்ட உண்மைகளிலிருந்து புலப்படுவது என்னவென்றால், தெலுங்கு-ஹிந்து , கன்னட ஹிந்து, மலையாள ஹிந்து, மராட்டி ஹிந்து போன்ற மொழியையும் ஹிந்து சமயத்தையும் பிணைக்க வேண்டிய அவசியம் அவற்றில் இல்லாததும், தமிழுக்கு மட்டுமே ஹிந்து சமயத்தைப் பிணைத்து, மக்களை விழிப்படையச் செய்யவேண்டுமென்ற கட்டாயத்தை, கட்டுரையில் சொல்லப்பட்ட கலவாணிப்பயல்கள் ஏற்படுத்தியுள்ளனர் என்பதே. மேலும் ஒன்றை அறுதியிட்டுக் கூறமுடியும்: அரசியல் பொதுவாழ்வில் ஈடுபடும் மனிதருக்கு, ஒழுக்கம், சொல்லாலும், செயலாலும் ஏற்படுவது, ஹிந்து சமயப் பற்று இருப்பதனால் மட்டுமே. ஹிந்து சமயத்தை எதிர்ப்போர் அனைவருமே, இப்படிப்பட்ட சாக்கடை புத்தியைத்தான் கொண்டுள்ளனர்.

  14. பகுத்தறிவு பொய் இயக்கத்தில் புகுந்து பார்த்தல் இப்படி கேடுகட்ட விசயங்கள் நிறைந்து இருப்பது தெரியும்? மிகப் பெரிய இயக்கமாக பழைய செய்திகளை ஆராய்ந்தால்தான் முழு விவரம் கிடைக்கும்.
    .

  15. ஒழுக்கக்குறைவின் ஊற்றுக்கண் கழகப் பாரம்பர்யம் என்றால் மிகையல்ல.
    ஆனால் கற்புடையவர் போல் வேடமிடுவதில் கில்லாடிகள். கருணாநிதியின் களவொழுக்கம் என்ன என்பது கவியரசு கண்ணதாசனின் அனுபவங்களின் தொகுப்பான வனவாசம் படித்தால் தெரியும். (பின்னாடி வருபவர் காசு கொடுப்பார்
    என்று கருணாநிதி சொன்னதாக கவியரசின் தகவல் ஒன்றுண்டு)

  16. This article clearly tell us what kind of 2g and 3g corruption were happening.

    God only saved us . God will save us in future. This Bharathi dasan writes in a poem ‘ Servant maid came; She sweeped the floor; i was watching ; Floor got cleaned ; My mind became dirty; [veedu suthamachu ;mansu azhukkachu] What great [?] human being this man is. Servants does all the jobs to get one square meal. But this guy had been doing peeping Tom job. Scoundrals is the correct word to describe these people.

  17. கழகங்கங்களின் லக்ஷணம் அப்போதே இப்படிதானா. அண்ணாதுரை பெரியாளா
    ஆனது இப்படிதானா .

  18. மிக அற்புதமாக எழுதப்ப ட்டிருக்கிறது இந்தக் கட்டுரை. அண்ணாவையும் , பாரதிதாசனையும் பற்றி என்னுடைய தந்தையார் சொல்லி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். எத்தனை போலி த்தனமான தலைவர்கள் என்று நினைக்கும்போது, தமிழ் நாட்டில் பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன். உங்களின் நேர்மைக்குத் தலை வணங்குகிறேன்.

  19. பாரதிதாசனுக்கும், அண்ணாவுக்கும் நிலவிய பிணக்குகள் வழியாக என்ன சொல்ல வருகிறீர்கள்? சாதி சரி என்றா? தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கத்தை ஒடுக்கியதில் மேற்கண்ட இருவரின் குறிப்பிடத்தக்க பங்கு பற்றிப்பேசாமல் அவர்களிடையே ஒருசமயம் ஏற்பட்ட சில்லறைச் சண்டையைப் பற்றிப் பேச முடியாது.

  20. டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.

    To my knowledge, annadurai belonged to the mudaliar community & not as mentioned.

  21. சஞ்சய்
    தேவதாசிகள் தமிழகத்தில் பெரும்பாலும் இசை வேளாளர் மற்றும் செங்குந்தர் சமூகங்களில் இருந்து தான் வந்தார்கள்.
    செங்குந்தர் சமூக தேவதாசிகளை கொடுத்த குடும்பங்கள்,அவர்களின் வாரிசுகள் பெரிய மோளம் என்றும் இசை வெள்ளாளர் வாரிசுகள் சின்ன மோளம் என்றும் வழங்கப்பட்டனர்.அண்ணாதுரையின் குடும்பம் பெரிய மேளம் வகையில் வந்ததால் அவரையும் அவர் குடும்பத்தையும் இழிவாக பேசுவது அன்று முதல் இன்று வரை உண்டு
    அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் , பாரதிதாசன்,முத்துராமலிங்க தேவர் முதல் சில நாள் முன் த்விட்டேரில் அண்ணாதுரை தமிழரா என்று ஒரு வட இந்தியர் கேட்டதற்கு சுப்ரமணிய சாமி பாதி ஐயர் என்று கூறியது வரை அவர் குடும்பத்தின் தேவரடியார் தொடர்புகளை வைத்து இழிவு படுத்தல் தொடர்கிறது.

  22. திராவிட இயக்கங்களை விரைவில் அழிக்கவில்லை என்றால் அது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் அழித்துவிடும்.

  23. பூவண்ணன்,

    (தற்கால) செங்குந்தர் வேறு பெரிய மேளம் என்பது வேறு. (தற்கால) இசை வேளாளர் என்பவர் 9ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை பிற்கால சோழர் படையில் பணியாற்றிய செங்குந்தர்கட்கும் (Soldiers) அறத்தளிப் பெண்டிருக்கும் பிறந்த மக்கள் வழித் தோன்றலாவர். இந்தச் செங்குந்தர் எனப்படுபவர் கோலிய பறையர், கைக்கோளர் மற்றும் சோழ வேளாளர் குலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட படைவீரர். தேவதாசிப் பெண்டிர் அக்கால சோழர் ஆலயங்களில் கலை மற்றும் இறைப்பணி செய்தனர். இக்காலத்தில் இசை வேளாளர் (உட்பிரிவுகள்: ின்ன மேளம் , பெரிய மேளம், நட்டுவனார் ) என்று தம் பெயர் மாற்றி கொண்டனர். இவர்கள் குலம் தாயின் வழியினது.

    அந்த வெளிவேடக் கவிஞர் கைக்கோளர் வழித்தோன்றல். முன்னாள் முதல்வரும் அண்ணாவும் அந்த கபட தாரி கவிஞரால் வர்ணிக்கப்பட மேள வழி தோன்றலாவர்

  24. நான் ஈரோடில் பிறந்து வளர்ந்தவன். முன்னர் துக்ளக்கில் திராவிட தலைவர்களை பற்றி படித்திருக்கிறேன். ஆனால், ஆணி வேரையே காட்டி கொடுத்துவிட்டீர்களே? ஈரோடில் பெரியாரின் கீழ் அண்ணா பத்திரிகை நடத்திய அலுவலகம் பார்த்திருக்கிறேன். சிறிது தூரத்தில்தான் உள்ளது “மோளக்கார சந்து”. அதில் போய வருபவர்களை வேறு மாதிரியாக பார்ப்பார்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். தெருவின் பெயர் கச்சேரி வீதி.

  25. பாரதியைப் பற்றி பொய் கதைகளைக் கட்டி உண்மைச் சம்பவம் போலவும், தாங்கள் நேரில் பார்த்தது போலவும் எழுதி அவரை உயர்த்திக் கூறியுள்ளனர் சிலர். உண்மையில் ரௌலட் சட்டத்தையும் ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் வன்மையாகக் கண்டித்தவர் விடுதலை வீரர் வ.உ.சி.யே.

    அன்னிபெசண்ட் அம்மையார் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்தார். அந்த அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம் இந்துத்துவத்திற்கு ஆதரவாக இருக்கவே திலகரும், பாரதியும் அன்னிபெசண்டை ஆதரித்தனர். ஆனால் வ.உ.சி. மட்டும் தான் அன்னிபெசண்ட் ஆங்கிலேயரின் கையாள் என்பதைப் புரிந்து கொண்டு அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார்.

  26. தமிழகத்தில் தேவரடியார்கள் மரபு வேரூன்றக் காரணம் என்ன? அது சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்ட போது உண்டான தடைகள் என்ன என்பது பற்றியும் எழுதுங்களேன்.

  27. சபாஷ் சரியான பதிவு…. பாராட்டுக்கள ம.வே.

    மேளங்கள் அப்ஸ்வரத்தில் வாசிக்கப்பட்டதால் ஆத்திரத்தில் சுப்புரத்தினம் அவரை வசைபாடினார். இங்கு அண்ணாதுரை செய்த தகிடுதத்தங்களை கண்டிக்காமல் சுப்புவின் சாதிய இழிவை மட்டும் குறைகூறுவதாக இருந்ததாக எனக்கு பட்டது.

  28. அண்ணாவை அறிஞர் என்றும் மற்றவரை புரட்சிக்கவி என்றும் இத்தனை காலம் நம்பிய நானே முட்டாள் என்பதைப் புரிய வைத்திருக்கிறது இந்த அரிய கட்டுரை.
    தொடர்ந்து பொய்யுரைத்தே நாட்டை ஏமாற்றி வந்திருக்கிறார்களே!

  29. ராமன் இசைவேளாளர் சாதியைச் சேர்ந்தவர். அண்ணாதுரை நெசவாளர் சாதியைச்சேர்ந்தவர். பிறகு எப்படி மேளம் மேளத்தோடு சேர்ந்தது என்பது உண்மையாகும். இதிலிருந்தே தெரிகிறது பாரதிதாசன் சுயநலத்திற்காக சாதிவெறிகொண்டு அண்ணாதுரை மீது சேற்றை வாரி இறைத்துள்ளார்
    இங்கே இதைப்பற்றி பேசுபவர்கள், கிசோர் சாமி பொன்னார் மற்றும் வானதி பற்றியும், இல கணேசனைப்பற்றியும் பதிவிட்டிருப்பதையும் பேசுங்கள்

  30. எனது பூர்வீகம் ஈரோடு. 1970,71 ல் நான் SSLC படிக்கும் போது மோளக்கார தெரு வழியாக சென்று கோர்ட் வீதிக்கு செல்வதைப் பார்த்து என் சித்தப்பா எங்களை கடுமையாக திட்டினார் அதன் பிறகு அப்படி செய்வதில்லை. கச்சேரி வீதியில் குடியரசு ஆபீஸுக்கு எதிர்புறம் பெரிய சித்தப்பா வீடு இருந்தது. ஈவெராவை அண்ணாதுரை யை பலதடவை பார்த்திருக்கிறேன். ஈ வெ ரா வின் சகோதரர் ஈவெகிருஷ்ணசாமி பத்மாவதி அவர்களால் தான் எங்கள் தாத்தா குடும்பம் பூர்வீக ஊரான ஆனைமலை யிலிருந்து ஈரோடு வந்ததாக சொல்லுவார். சிறுவயதில் ஈவெகிருஷ்ணசாமி வீட்டிற்கு நிறைய சென்று வந்துள்ளேன். ஈவிகேஎஸ்- சம்பத் அவர்களுக்குஎன்னை ரொம்ப பிடிக்கும்.எங்கள் தாத்தா விற்கு(எ.டி.வெங்கடாசல ஆச்சாரி யார்) ஈவெரா நல்ல பழக்கம். நான் பி. காம் டிகிரி சி. என் கல்லூரி யில் சேர கேபிடேசன் பீஸ் கொடுக்க முடியாது குடும்ப சூழல். தாத்தா வுடன் ஈவெரா வை பார்த்து என்னை பரிந்துரை செய்யச் சொல்லி கேட்டதற்கு ரூ ஆயிரம் கேட்டார். இது விபரம் பாட்டியிடம் சொன்னதற்கு அவர் புத்தி தெரிந்தும் ஏன் அங்கு சென்றீர்கள் என திட்டினார். சிக்கையநாயக்கரும் நன்கு தெரியும் அவரிடம் போகலாம் என நானும் தாத்தாவும் அதே நாளில் சிக்கைய நாயக்கரைப்பார்த்தும் வீட்டு முன்பு சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தவர் வெங்கடாசலம் வாப்பா என அழைத்து உட்கார வைத்து பல நினைவுகளை பேசினார். என்னை விசாரித்தார். கல்லுரி பி. காம் சீட்டுக்காகவந்ததை சொன்னதும் மிக்க மகிழ்ச்சி அடைந்து என் பெயர் அப்ளிகேஷன் எண் விபரத்தை வாங்கிக் கொண்டார். சீட்டு கிடைக்காது என்கிற நினைவாக இரண்டாவது நாள் கல்லூரி க்கு சென்ற போது பிரின்சிப் ஸ்ரீ அனந்த பத்மநாடாரின் பி யூன் என்னைப் பார்த்து ஒடோடி வந்து செல்வம் உன்னை எங்கெங்கு தேடுவது,, பிரின்சிபால் உடனடியாக வரச் சொல்கிறார் என அழைத்து அவருடைய அறைக்கு சென்றதும் ஏன் நேற்றே வரவில்லை பெரியவர் மூன்று தடவை போன் செய்து கேட்டு விட்டார் எனக்கூறி பி. காம் வகுப்பில் ஒரு பைசா செலவில்லாமல் சேர்ந்து படித்து, மேற்கொண்டு படித்து ஏஜிஸ் ஆபீஸில் சேர்ந்து பணியாற்றினேன்.. இதைசொல்வதின் அர்த்தம் புரியும்.

  31. எனது பூர்வீகம் ஈரோடு. 1970,71 ல் நான் SSLC படிக்கும் போது மோளக்கார தெரு வழியாக சென்று கோர்ட் வீதிக்கு செல்வதைப் பார்த்து என் சித்தப்பா எங்களை கடுமையாக திட்டினார் அதன் பிறகு அப்படி செய்வதில்லை. கச்சேரி வீதியில் குடியரசு ஆபீஸுக்கு எதிர்புறம் பெரிய சித்தப்பா வீடு இருந்தது. ஈவெராவை அண்ணாதுரை யை பலதடவை பார்த்திருக்கிறேன். ஈ வெ ரா வின் சகோதரர் ஈவெகிருஷ்ணசாமி பத்மாவதி அவர்களால் தான் எங்கள் தாத்தா குடும்பம் பூர்வீக ஊரான ஆனைமலை யிலிருந்து ஈரோடு வந்ததாக சொல்லுவார். சிறுவயதில் ஈவெகிருஷ்ணசாமி வீட்டிற்கு நிறைய சென்று வந்துள்ளேன். ஈவிகேஎஸ்- சம்பத் அவர்களுக்குஎன்னை ரொம்ப பிடிக்கும்.எங்கள் தாத்தா விற்கு(எ.டி.வெங்கடாசல ஆச்சாரி யார்) ஈவெரா நல்ல பழக்கம். நான் பி. காம் டிகிரி சி. என் கல்லூரி யில் சேர கேபிடேசன் பீஸ் கொடுக்க முடியாது குடும்ப சூழல். தாத்தா வுடன் ஈவெரா வை பார்த்து என்னை பரிந்துரை செய்யச் சொல்லி கேட்டதற்கு ரூ ஆயிரம் கேட்டார். இது விபரம் பாட்டியிடம் சொன்னதற்கு அவர் புத்தி தெரிந்தும் ஏன் அங்கு சென்றீர்கள் என திட்டினார். சிக்கையநாயக்கரும் நன்கு தெரியும் அவரிடம் போகலாம் என நானும் தாத்தாவும் அதே நாளில் சிக்கைய நாயக்கரைப்பார்த்தும் வீட்டு முன்பு சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தவர் வெங்கடாசலம் வாப்பா என அழைத்து உட்கார வைத்து பல நினைவுகளை பேசினார். என்னை விசாரித்தார். கல்லுரி பி. காம் சீட்டுக்காகவந்ததை சொன்னதும் மிக்க மகிழ்ச்சி அடைந்து என் பெயர் அப்ளிகேஷன் எண் விபரத்தை வாங்கிக் கொண்டார். சீட்டு கிடைக்காது என்கிற நினைவாக இரண்டாவது நாள் கல்லூரி க்கு சென்ற போது பிரின்சிப் ஸ்ரீ அனந்த பத்மநாடாரின் பி யூன் என்னைப் பார்த்து ஒடோடி வந்து செல்வம் உன்னை எங்கெங்கு தேடுவது,, பிரின்சிபால் உடனடியாக வரச் சொல்கிறார் என அழைத்து அவருடைய அறைக்கு சென்றதும் ஏன் நேற்றே வரவில்லை பெரியவர் மூன்று தடவை போன் செய்து கேட்டு விட்டார் எனக்கூறி பி. காம் வகுப்பில் ஒரு பைசா செலவில்லாமல் சேர்ந்து படித்து, மேற்கொண்டு படித்து ஏஜிஸ் ஆபீஸில் சேர்ந்து பணியாற்றினேன்.. இதைசொல்வதின் அர்த்தம் புரியும்.

  32. இந்தக் கட்டுரையில் பாரதிதாசன் தரம் மட்டுமே வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது். அவர் அண்ணாதுரையின் பிறப்பையும் சாதியையும் அவர் குடும்பத்தாரையும் எவ்வித ஆதாரமுமின்றி இழிவு செய்திருக்கிறார். இவருக்கு கொடுக்கப்பட்ட நிதியில் அண்ணாதுரை கையாடல் செய்துவிட்டது போலவும் குற்றம் சாட்டுகிறார். ஆனால் தனது திரைப்பட ஆசைகளுக்கு அண்ணாதுரை உதவ்வில்லை என்பதுதான் அவருடைய கோபத்திற்கு காரணம். கண்ணதாசனுக்கு அளித்த அங்கீகாரம் தனக்கு கழகத்தில் கிடைக்கவில்லை என்ற கோபம். அதனால்தான் கண்ணதாசன் கூட பாரதிதாசனை அந்த காலகட்டத்தில் கடுமையாக விமர்சித்து கவிதைகள் கட்டுரைகள் எழுதியிருக்கிறா். நாடோடி மன்னன் படத்திற்கு கண்ணதாசன் வசனம் எழுதியதால் அந்த படத்தையும் எம்.ஜி.ஆரையும் கடுமையாக தாக்கியவர் பாரதிதாசன். அண்ணாதுரையை மட்டுமல்ல கருணாநிதி ,நெடுஞ்செழியன் போன்றவர்களையும் இதே்போல வசை பாடியவர் பாரதிதாசன். அண்ணாதுரையின் பிறப்ப, சாதி, அவர் இளமையில் மேற்கொண்ட்தொழில் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாரதிதாசன் குறிப்பிட்டதுள்ளது போல் பணத்தை கையாடல் செய்பவராக இருந்திருந்தால் மற்ற அரசியல்வாதிகளைப் போல் செல்வந்தராக வாழ்ந்திருக்க மீட்டர்? இறக்கும்போது கூட பெரிய செல்வந்தராக அவர் இறக்கவில்லை என்பதை மட்டும் நான்றிவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *