தாண்டவம் [சிறுகதை]

bharatanatyam

ய் செல்வி, இன்னும் தயாராகலையா நீ?”

எங்கோ குரல் கேட்பது போலிருந்தது. அந்த அறைமுழுக்க ஆடைகள், ஒப்பனை சாதனங்கள் சூட்கேஸ் என இறைந்து கிடந்தன. நான் மீண்டும் ஒருமுறை என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்.

alapadmaஅந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. பட்சிகள் இன்னும் சப்தித்துக் கொண்டிருந்த காலைப் பொழுது. அப்போதுதான் குளித்து முடித்து, ஹாஸ்டல் வாசலுக்கு வந்திருந்தேன். மார்ச் மாத இளவெயில் அந்தப் பிராந்தியத்தையே மயங்கடித்துக் கொண்டிருந்தது. மருதாணியிட்ட கைகள் விரிந்து காட்டும் அலபத்ம முத்திரை போல, மகரந்தப் பொடி உதிர மஞ்சள் செம்பருத்திகள் இதழ் விரித்திருந்தன. மரத்திலிருந்து மண்ணில் வீழ்ந்திருந்த மஞ்சள் சரக்கொன்றைப் பூக்கள் பட்டுப் புடவையின் ஜரிகைப் பொட்டுகள் போன்று வரிசை காட்டின.சற்றே நாணிச்சிவந்த நாயகியின் முகம் போல பாதி மலர்ந்திருந்த செவ்வரளிப் பூக்களுக்குள் ஒளி சிதறிக் கொண்டிருந்தது. அவிழ்த்து வைத்த பாதச் சலங்கையாக மல்லிக் கொடியிலிருந்து உதிர்ந்த மலர்களின் குவியல் கிடந்தது.

அந்தக் காலைவேளையில் என் மனமும் பூத்திருந்தது. தொம் தொம் என்று சத்தமிடாமல், அமைதியாக வந்து கால்வருடிச் செல்லும் பெசண்ட் நகர் கடற்கரையின் அலைகள் போல சுகமான எண்ண அலைகள். கல்லூரியில் பட்டம் வாங்கியவுடனேயே முடிவுசெய்து விட்டிருந்தேன், இனிமேல் என் மேல்படிப்பு பரதத்தில்தான் என்று. அதுவும் கலாகேந்திராவில்தான். அங்கு கலையே வாழ்வாக மிளிரும் ஆசான்களை குருவாக வரித்து, அவர்கள் காலடியில் அமர்ந்து கற்க வேண்டும். அதுதான் எனது ஆசை, வாழ்க்கை லட்சியம் எல்லாம் என்று நெடுநாளாகவே என் மனதில் எழுதிவைத்திருந்தேன். கடவுள் என்னைக் கைவிடவில்லை, என் பெற்றோர்களும்தான். எண்ணம் போலவே இங்கு வந்து சேர்ந்து விட்டேன். அடவும் ஜதிஸ்வரமும் ஜாவளியும் கொன்னக்கோலும் குறவஞ்சியுமாக நாள்கள் நடனமிட்டுச் செல்கின்றன. ஆயிற்று, இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. என் கலைவாழ்க்கை தொடங்கிவிட்டது.

dancing-shiva

பிரம்மனின் இரவில் இயற்கை செயலற்று ஜடமாய்க் கிடக்கிறது.
அது சிவனுடைய சங்கல்பமின்றித் தனது ஆடலைத் தொடங்க முடியாது.
அவன் பேரானந்தத்தில் எழுகிறான்.
அதோ! அவன் ஆடல் தொடங்கிவிட்டது.
உயிரற்ற ஜடப்பொருள்களின் ஊடே விழித்தெழச் செய்யும் ஒலிப் பேரலைகள் திரள்கின்றன.
ஆ! இயற்கை உயிர்ப்புற்றுக் கிளர்ந்தெழுந்து
அவனைச் சுற்றிப் புகழிசைத்து
அதுவும் ஆடுகிறது.
இதுவே அவன் ஆடும் திருநடனம்
இது ஓர் உன்னதக் கவிதை…

டாக்டர் ஆனந்தகுமாரசுவாமியின் டான்ஸ் ஆஃப் ஷிவா. இந்த வாரம் முழுவதும் வகுப்பு அதைப் பற்றித்தான். அதிலும் சுப்பிரமணியன் சார் மிக அழகாக நடத்துகிறார்–

“..சிவதாண்டவத்தின் ஆழ்ந்த பொருள், நம்முள், நம் இதயத்தில் அந்த நடனம் நடைபெறுகிறது என்று உணரும்போதுதான் புலப்படும். அதுவே கலை நிகழும் கணம். அந்தக் கணத்தில் கலைஞன் அனைத்தையும் கடந்து சென்று விடுகிறான். அப்போது அவன் யாருக்கும் எதற்கும் எந்த விதிகளுக்கும் கட்டுப்பட்டவனல்ல. கலைஞன் தன் இதயத்தில் முழுவதும் உண்மையாக இருக்கவேண்டியது தனது கலைக்கு மட்டுமே, வேறு எந்த வெளிப்புற சக்திக்கும் அல்ல…”

இதோ இந்தக் காலை வேளையில் கூட அச்சொற்கள் என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

பாசிப் படலமிட்டிருந்த பாதை வழியாகப் போய் ஹாஸ்டல் முன்மண்டபத்தை அடைந்தேன். ஒருகணம் அப்படியே நின்று விட்டேன். கையிலிருந்த மலர்கள் சிதறிக் கீழே விழுந்தன. அங்கிருக்கும் பிள்ளையாரைக் காணவில்லை!

யாரோ பிள்ளையாரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்களோ? அதுவும் எங்கள் வளாகத்துக்குள் வந்து பிள்ளையாரை யார் திருடிக் கொண்டு போவார்கள்?

ganapathyஅந்த மண்டபத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார் கணபதி. இந்தக் கலைக்கூடம் உருவான நாளில் இருந்தே அவர் இங்கு இருப்பதாக சொல்லிக் கேட்டதுண்டு. காலை எழுந்தவுடன் மாணவிகள் நாங்களே மலர்களைப் பறித்து வந்து அவருக்கு சூட்டுவோம். ஒருத்தி பாடுவாள். சிலர் அங்கேயே அபிநயம் பிடித்து கணபதி கவுத்துவம் ஆட ஆரம்பித்து விடுவார்கள். எங்கள் ஒவ்வொரு நாளையும் ஆரம்பித்து வைப்பவர் அந்தப் பிள்ளையார் தான். இப்போது அவரையே காணவில்லை. என்ன ஆயிற்று?

ஓட்டமும் நடையுமாக எங்கள் குரு ராகினி அம்மாவின் அறைக்கு விரைந்தேன். அங்கு ஏற்கனவே சில மாணவிகள் கூடியிருந்தார்கள். எல்லாரும் அம்மாவிடம் ஏதோ முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். பதட்டமாக இருந்தார்கள்.

“அம்மா, ஆலமரத்தடியில இருக்கிற பிள்ளையாரைக் காணலை. யாரோ எடுத்திட்டுப் போயிருக்காங்க.”

“காலைல எழுந்து அப்படியே ஒரு வாக்கிங் போனேன். ரிசப்ஷன் ப்ளாக்ல இருக்குமே பெரிய நடராஜர் சிலை, அது காணாம போயிடுச்சி.”

“ஆடிட்டோரியம் வாசல்ல இருக்கற சரஸ்வதி?”

“அதையும் காணும்.”

“ஐயோ! ஹாஸ்டல் முன்மண்டபத்தில இருக்கிற பிள்ளையார்?”

“அவரையும் காணம்மா.”.

எல்லாரும் கலவரமடைந்திருந்தார்கள். திடீரென்று எங்கள் வளாகத்தில் இருந்த எல்லாத் தெய்வங்களும் மாயமாய் மறைந்து போய்விட்டார்களோ? இதனால் கல்லூரிக்கே ஏதேனும் கேடு வருமோ?

வாங்க உடனே போய் டைரக்டர் மேடத்தைப் பார்ப்போம்.

ராகினி அம்மாவைப் பின்தொடர்ந்து ஃபைன் ஆர்ட்ஸ் ப்ளாக் நோக்கி நடந்தோம். அங்குதான் வகுப்பறைகளும், அலுவலகமும், டைரக்டர் மேடம் அறையும் உள்ளன. எல்லார் முகத்திலும் கேள்விக் குறிகள்.

berundaஎங்கள் டைரக்டர் மேடம் நீலா ஜான்சன், ஓர் உலகப் புகழ்பெற்ற கலைப் பிரமுகர். இளம் வயதில் கலாகேந்திராவில் பல வருடம் பரத நாட்டியம் பயின்றவர். இந்தக் கலைக் கோயிலை நிறுவி எல்லார் நெஞ்சிலும் நிறைந்து நிற்கிற காலஞ்சென்ற சத்தியபாமா தேவியிடமே சீடராக இருக்கும் பாக்கியம் பெற்றவர். பிறகு தில்லி, மும்பை என்று நகரங்களும், அமெரிக்கா, ஐரோப்பா என்று கண்டங்களும் ப்ராமரி நடனம் ஆடுவது போல சுற்று சுற்று என்று சுற்றியிருக்கிறார். போன வருடம்தான், கலாகேந்திராவின் டைரக்டராக, தன் தாய்வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டார். பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்குமிடையே பாலமாக விளங்கிவரும் கலை மேதை என்று அவரைப் பற்றி ஓர் இதழில் படித்தேன். நீலா ஜான்சன் நாட்டிய வடிவங்களை வீசி விளையாடுபவர். மரபு மீறலுக்கும் மரபுச் சிதைத்தலுக்கும் இடையே உள்ள வித்தியாசம்கூட அவருக்குத் தெரியாது என்றும் அதே கலை இதழில் சில மாதங்கள் கழித்து விமர்சனமும் வந்தது. அவரது கலை ஆளுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், விரல்களை மடக்கிக் காட்டும் பேருண்டப் பட்சி முத்திரைதான் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும். எதிரெதிராக இருபுறமும் பார்க்கும் இரு தலைகளும் ஒரே உடலும் கொண்ட பேருண்டப் பட்சி!

டைரக்டர் மேடம் அறையில் சுப்பிரமணியன் சார் இருந்தார். எல்லா ஆசான்களும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ராகினி அம்மா மட்டும் உள்ளே சென்றார். நாங்கள் ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டோம்.

அன்று மதியம் நோட்டீஸ் போர்டில் ஓர் அறிவிப்பு தென்பட்டது. கல்லூரி வளாகத்தில் இருந்த சிலைகள் டைரக்டரின் உத்தரவுப் படியே அகற்றப் பட்டிருக்கின்றன. மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

bharatanatyam-vineeth-nairஉருவ வழிபாடு மூடநம்பிக்கை என்று மேடம் கருதுகிறாராம். எனவே கலாகேந்திராவில் உருவ வழிபாடு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப் படாது. கோயில்களில், மத திருவிழாக்களில் நடக்கும் நாட்டிய நிகழ்ச்சிகள் எதிலும் மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. மேடம் இந்தப் புதிய விதிமுறைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார். அந்தச் சிலைகள் நிறுவனர் சத்தியபாமா தேவியே அன்போடு பிரதிஷ்டை செய்தவை என்று பல ஆசான்கள் சொன்னபோதும் மேடம் மசியவில்லை. ரூபம் என்ற கோட்பாடு பரதத்தில் எவ்வளவு அடிப்படையானது, ஆங்கிகம் என்கிற உருவ உடல்மொழி பரதத்தில் எந்த அளவு முக்கியமானது, இதையெல்லாம் சுப்பிரமணியன் சார் விளக்க ஆரம்பித்தார். மேடம் உரையாடலைத் தொடராமல் பாதியிலேயே வெட்டி விட்டார்கள். மூத்த ஆசிரியர்கள் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆலமரத்தடிப் பிள்ளையார் மட்டும் மீண்டும் அவரது பழைய இடத்திலேயே உட்கார அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

இந்த விஷயங்களை எல்லாம் ராகினி அம்மாவின் வாயைப் பிடுங்கித் தெரிந்து கொண்டேன். ஏன் டைரக்டர் மேடம் இப்படி செய்கிறார்கள்? என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

“பரதமும் ஒடிசியும் மோகினியாட்டமும் எல்லாம் வளர்ந்ததே கோயில்களில்தான். நம் கண்முன்னே அந்த வரலாறு இருக்கிறதே,” பத்மா அம்மா சொன்னார்களாம்.

“நான் வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் மிஸ் பத்மா. பரதநாட்டியத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது. விரைவில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!” என்று தீர்க்கமாக மேடம் ஒரு பார்வை பார்த்ததில், கூட இருந்தவர்கள் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டார்களாம். பத்மா அம்மாவே இதை என்னிடம் சொன்னார்.

***

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கலாகேந்திராவின் சூழலே மாறிவிட்டது. எல்லாரும் சந்தேகம் தோய்ந்த முகங்களுடன் உலா வந்தார்கள். டைரக்டர் மேடம் உடன் பேசும்போது எல்லாருக்கும் ஓர் இறுக்கம் உண்டாயிற்று. பிள்ளையாரைக் காணாத என் காலைப் பொழுதுகள் வெறுமையாகின. ஒரு நெருக்கமான தோழனை இழந்தது போல் உணர்ந்தேன்.

சுப்பிரமணியன் சார், தன் வகுப்புகளில் வழக்கமான உற்சாகத்தைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“சார், பரதக் கலை தெய்வீகமானதுன்னு சொல்றீங்க. அதில் உள்ள தத்துவம், ஆன்மிகம் பத்தியெல்லாம் அடிக்கடி பேசுறீங்க. ஆனா…” செல்வா என் பேட்ச் தான். வகுப்பில் எப்போதும் நிறைய கேள்வி கேட்பான். அன்றும் இப்படி ஒரு விவாதத்தை ஆரம்பித்தான். “இது அடிப்படைல தேவதாசிகள் கிட்டேருந்து வந்த கலைதான சார்? அவங்க யாரு? மதரீதியா உருவாக்கப்பட்ட விலைமாதர்கள் தானே. இது ஒரு சீரழிந்த சமூகப் பழக்கத்தின் எச்சமாக வந்திருக்கிற கலைன்னு நினைக்கத் தோணுது. நிலப்பிரபுக்களுடைய கேளிக்கைக்காகத்தான் இந்தக் கலையே உண்டானது. காமக் களியாட்டத்துக்குன்னே ஏற்பட்ட ஒரு கலை. அதுக்கு ஒரு புனிதத் தன்மையை திணிக்க நீங்க முயற்சி செய்யறீங்க. இது பற்றி நாங்கள் மாணவர்களுக்குள்ளேயே கூட முன்பு விவாதித்திருக்கிறோம்.”

“அது அப்படி இல்லை செல்வா. ஒரு பரதக்கலை மாணவனா, உன் மனசில எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது?” சார் தொண்டையைச் செருமிக் கொண்டார். “பத்தொன்பதாம் நூற்றாண்டு கடைசில கூட, தஞ்சாவூர்ல, மதுரைல, ஸ்ரீரங்கத்துல, காஞ்சிபுரத்தில, பல நகரங்கள்ல தேவதாசிகள் ரொம்ப உயர்வா வாழ்ந்தாங்க. மரியாதையுடனும், செல்வாக்குடனும் வாழ்ந்தாங்க. ஆனா அப்போ ஏற்பட்ட சமூக, பொருளாதார நெருக்கடிகளால பல இடங்கள்ல அவங்களை போஷிக்கவும், கலையை வளர்க்கவும் செல்வந்தர்களும் ரசிகர்களும் இல்லாம போயிட்டாங்க. அந்தச் சூழ்நிலையிலதான் அவங்கள்ல மிகச் சிலபேர் மட்டும் விலைமாதர்களா ஆக வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதை நாம சரியா புரிஞ்சுக்கணும்.”

“ஆனா பிரிட்டிஷ் வரலாற்றாசிரியார்கள் யாரும் இந்த மாதிரி எழுதலையே சார். ரிச்சுவல் ப்ராஸ்டிட்யூட்ஸ், அப்படித்தான் குறிப்பிட்டு எழுதறாங்க.”

“யெஸ். அது இயல்பானதுதான். இந்த எண்ணம் அவங்களுக்கு உருவானதுக்குக் காரணம் இருக்கு. பிரிட்டிஷ்காரங்க வர்றதுக்கு முன்பே இங்கே கிறிஸ்தவ மிஷனரிகள் வந்துட்டாங்க இல்ல? அவங்களோட நோக்கம், எண்ணம் எல்லாம் மதமாற்றத்திலதான் இருந்தது. இங்க இருந்த மக்கள், கலை, மதம் எல்லாமே கீழானது; பண்பாடு இல்லாதது; காட்டுமிராண்டித்தனமானது அப்படிங்கற முன்முடிவு அவங்ககிட்ட இருந்தது…”

வகுப்பில் ஒருசில மாணவர்களது முகபாவம் மாறத் தொடங்கியது. அவர்கள் இதை அவ்வளவாக ரசிக்கவில்லை என்று தோன்றியது.

“..அதனால பரதக் கலையையும் அவங்க அப்படியேதான் மதிப்பிட்டாங்க. கோயில்கள்லயும், திருவிழால சுவாமி ஊர்வலம் வரும்போது, ஊர்வலம் முன்னாலயும் தேவதாசிகள் நடனம் ஆடுவாங்க. எப்படி தெய்வ வழிபாட்டுல இசை, பாடல்கள், நாதஸ்வரம் எல்லாம் இருந்ததோ அதே மாதிரி ஒரு முக்கியமான அங்கமா பரதமும் இருந்தது.”

“சார், பரதம் அப்படிங்கிற பேரே பின்னால வந்ததுன்னு நினைக்கிறேன். அப்போ அதுக்குப் பேரு சதிர், அதுல தெய்வீகம் எதுவும் கிடையாது. அதனாலதான் தேவதாசி முறையைத் தடை செஞ்சாங்க.” செல்வா விடுவதாகத் தெரியவில்லை.

bharatanatyam_mudra_by_madzindia“இல்ல. பரத முனிவரோட நாட்டிய சாஸ்திரம் நாம படிக்கறோமே, அதுல வர்ற சதுரம் அப்படிங்கற நாட்டிய வகையின் தமிழ்ப் பெயர்தான் சதிர். இருபத்தைந்து வகை சிவ நடனங்கள்ல ஒண்ணு அது.. ஆனா கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு இந்தப் புனிதத்துவம் எதுவும் தெரியலை. அவர்கள் சாத்தானின் தூண்டுதல்னே பார்த்தாங்க. இது ‘ஈவில்’, இந்தப் பழக்கமே அழித்து ஒழிக்கப் படவேண்டும் அப்படீங்கறது அவங்க கோரிக்கை. அதைப் பார்த்துதான் வெள்ளைக்காரங்க தங்களோட பதிவுகள் எல்லாத்துலயும் நடனக் கலையைப் பத்தியும், தேவதாசிகளைப் பத்தியும் மோசமா, எதிர்மறையாவே எழுதிவெச்சிருக்காங்க. சட்டம் கொண்டு வர பிரிட்டிஷ் அரசு முயற்சி செஞ்சபோது, தேவதாசிகளே அதை எதிர்த்து மனு போட்டாங்க. அவங்க கையெழுத்தில எழுதப்பட்ட மனு இன்னும் கூட ஒரு ஆவணமா இருக்கு, தெரியுமா?”

சார் நடந்து சென்று வகுப்பறையின் ஓரத்தில் இருந்த அலமாரியிலிருந்து ஒரு தடித்த புத்தகத்தை எடுத்து வந்தார்.

“பாருங்க.. இந்த மனுல, தேவதாசிகள், தங்களோட கலைக்கு சமூகத்தில எவ்வளவு உயர்வான இடம் இருக்குன்னு பெருமையா சொல்லியிருக்காங்க. சிவாகமங்களில் உள்ள சுலோகங்களை எல்லாம் மேற்கோள் காண்பிச்சிருக்காங்க. இந்த சுலோகத்தைப் பாருங்க – “எனது பூஜையின் முடிவில் சுத்த நிருத்தம் என்ற நடனம் செய்ய வேண்டும். கணிகையர் குலத்தினர் ஆட ஐந்து வாத்தியங்களை அதற்குரிய ஆசாரியார்கள் இசைக்க வேண்டும்” சிவபெருமானே தன் வாக்கா இப்படிச் சொல்லியிருக்கார்.”

சார் பக்கங்களைப் புரட்டி வாசித்தார்.

“இத்தகைய புனிதக் கலையை அழித்து விடவேண்டாம் என்று மன்றாடினார்கள். எங்களுக்கு கல்வி கொடுங்கள், பரதக் கலையை நாங்கள் கற்றுக் கொடுக்க வசதிகள் ஏற்படுத்தித் தாருங்கள். முன்பு போலவே ஞானத்தையும், பக்தியையும் நடனக் கலைமூலம் மக்களுக்கு நாங்கள் எடுத்துச் செல்வோம். அதுவே எங்களுக்கு மீட்சி என்றெல்லாம் முறையிட்டார்கள். ஆனால் அப்போது அதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள், கல்வியறிவு பெற்றவர்கள் இந்தக் கலையின் பெருமையை அறிந்திருந்தாலும், அந்தக் குடும்பத்துப் பெண்கள் ஆடுவதும், பாடுவதும் ஊக்குவிக்கப் படவில்லை. அவர்கள் கலையின் ரசிகர்களாகவும் புரவலர்களாகவும் மட்டுமே இருந்தார்கள். இந்திய சமூகச் சீர்திருத்தவாதிகளும் கூட நவீன சமுதாயத்தில் தேவதாசிகளுக்கு இடமில்லை என்றே கருதினார்கள். ஒரு மாபெரும் கலை இதனால் முற்றாக அழியும் என்பது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. எனவே தேவதாசி முறை சட்டபூர்வமாகத் தடுக்கப்பட்டது…”

அவரது பார்வை வகுப்பறையில் மாட்டியிருந்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் நிலைகொண்டது.

“..அப்போது அவள் ஒருத்தி தான் முதலில் முன்வந்தாள். சத்யபாமா தேவி.. இந்தக் கலையைக் காப்பாற்ற எழுந்து வந்தாள். மாயவரம் கௌரி அம்மா, திருவாரூர் கமலாம்மா போன்ற மேதைகளான தேவதாசிகளிடம் மாணவியாக அமர்ந்து இந்த தெய்வீகக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டாள். பரதக் கலையைக் காப்பாற்றினாள். கலாகேந்திரா என்ற உன்னத கலை மையத்தை நிறுவினாள்…”

சார் புத்தகத்தை மூடினார். அவர் கண்களில் நீர் திரண்டது. அவர் மிகவும் உணர்ச்சிவசப் படுவதாகத் தோன்றியது.

“இப்படியெல்லாம் தவிச்சு, செத்துப் பிழைச்சு மீண்டு வந்திருக்கு இந்தக் கலை. வேறென்ன சொல்ல? இதில ஈடுபட்டிருக்கிற நாமெல்லாம் போன ஜன்மத்தில நிறைய புண்ணியம் செஞ்சிருக்கோம். அபினவ குப்தர் என்ன சொல்றார் தெரியுமா?

யத்கிஞ்சித் லாஸ்யமேதேன தேவீ துஷ்யதி நித்யச:
ஒரு துளி லாஸ்யம் போதும். தேவி நித்ய திருப்தி அடைந்து விடுகிறாள்.
யத்கிஞ்சித் தாண்டவம் தேன சோம: ஸானுசர: சிவ:
ஒரு துளி தாண்டவத்தால், ஈசன் தன் கணங்களுடன் திருப்தியடைந்து விடுகிறான்.

ஒரு துளி தாண்டவம், அது போதும் அவனை மகிழ்விக்க! ஹௌ ஸிம்பிள், ஜஸ்ட் ஒரு துளி தாண்டவம்!”

சார் மீண்டும் உணர்ச்சியின் உச்சநிலைக்குப் போய்விட்டார்.

***

“டியர் ஸ்டூடண்ட்ஸ், மீட் ஜார்ஜ் மாஸ்டர். பிஜு எரேனியஸ் ஜார்ஜ். ஃபாதர் பிரான்சிஸ் மார்கோஸாவின் மாணவர். பரதம், ஒடிசி, குச்சிப்புடி எல்லா வடிவங்களையும் முறையாகப் பயின்றிருக்கிறார். திருச்சி கலைப்பண்ணை அமைப்பில் இருக்கிறார். சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களில் கலை மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறார். என்னுடைய நெடுநாள் நண்பர்..”

முகமெங்கும் மலர்ந்த புன்னகையுடன் டைரக்டர் மேடம் அறிமுகம் செய்தவுடன் ஜார்ஜ் மாஸ்டர் எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கம் சொன்னார். மஞ்சள் ஜிப்பாவில் ஒடிசலாக, ஆரோக்கியமாக இருந்தார். பொதுவாக பரதக் கலைஞர்களாக இருக்கும் ஆண்களின் முகத்தில் ஆண்மையின் கம்பீரம் கலந்த வசீகரமான பெண்தன்மை இருக்கும். அது ஒரு தனி அழகு. ஜார்ஜ் மாஸ்டரின் மீசை இல்லாத முகம் அசட்டுக் களையுடன் இருந்தது.

“அப்புறம், இவங்க மிஸஸ் டேவிட். திருமதி ராஜகுமாரி டேவிட் நியூயார்க்கில் ஒரு புகழ்பெற்ற நடனப் பள்ளி வச்சு நடத்துறாங்க. மூத்த குரு சண்முகசுந்தரம் பிள்ளை கிட்ட பரதம் கத்துக்கிட்டவங்க. அவரது மறைவுக்கு அப்புறம் அந்தப் பாணியின் கலை வாரிசு இவங்கதான் என்று கூட சொல்லலாம்.”

சிநேகமாகப் புன்னகைத்தார் மிஸஸ் டேவிட். எங்கள் கல்லூரியின் அம்மாக்கள் வயதிருக்கும் இவருக்கும். ஆனால் ஆரஞ்சு சுரிதாரில் கண்கள் படபடக்கப் பேசுவதைப் பார்த்தால் அக்கா என்றுதான் கூப்பிடத் தோன்றும். சொன்னபடி கேட்கும் தோழன் போல, படிய அழுத்தப்பட்டு தோளைத் தொட்டு நிற்கும் கூந்தல். செதுக்கிய புருவங்களிலும் கன்னங்களிலும் உதட்டிலும் மேக்கப் தூக்கலாக இருந்தது.

“இவங்க இரண்டு பேரையும் பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு. உங்ககூடதானே இன்னும் சில வாரங்கள் இருக்கப் போறாங்க, நீங்களே தெரிஞ்சுப்பீங்க.”

இவர்கள் இருவரின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் ஒரு புதிய கலைப்படைப்பைத்தான் இன்னும் சில வாரங்களில் நாங்கள் நிகழ்த்திக் காட்டப் போகிறோம். கலாகேந்திரா வழங்கும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி இதுவரை கேள்விப்பட்டிராத புதுமையான பாரம்பரிய நடன நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது. எல்லா மாணவிகளுக்கும் இந்தக் குழுவில் இருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ன? எனக்கும் மாலதிக்கும் கிடைத்து விட்டது. எங்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

***

மரக்கிளைகளின் ஊடாக மாலை நேர ஒளிக்கதிர்கள் ஊடுருவிக் கொண்டிருந்தன. வழக்கமாக அந்த நேரத்தில் விட்டுவிட்டு இசைக்கும் பறவைகளின் ஒலி, சதங்கைகளின் ஜல் ஜல்களுக்கு இடையில் கேட்டுக் கொண்டிருந்தது. மேலே குறுக்காக இழுத்துக்கட்டியிருந்த துப்பட்டாக்கள் சரசரக்க மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களது முகமயிர்க்கற்றைகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தது காற்று.

சோகத்தைப் பிழிந்தெடுப்பது போல வயலின் இசை அந்தக் காற்றில் மிதந்து வந்தது. இவ்வளவு நாள்களாக நாங்கள் யாருமே கேள்விப்பட்டிராத ஒரு ’தீம்’ இது என்பது ஒத்திகை ஆரம்பித்தவுடனேயே எங்களுக்குத் தெரிந்து விட்டது. இசை, பாடல்கள் எல்லாமே புதுவிதமாக இருக்கின்றன.

berunda-mudra

“ஒரு தேவஹஸ்தம் காட்டும்மா..”

மிஸஸ் டேவிட் கேட்க, மாலதி ஒயிலாக நின்று லட்சணமாக அபய ஹஸ்த முத்திரை காண்பிக்கிறாள்.

ம்ஹூம், இது சரிப்படாது.

மிஸஸ் டேவிட்டுக்குத் திருப்தி இல்லை. கடி ஹஸ்தம், வரத ஹஸ்தம். எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

“ஜார்ஜ், இந்த எல்லா ஹஸ்த முத்திரைகளும் குறைபாடு உள்ளதா இருக்கு பார்த்தீங்களா? நாம சொல்லவர்ற அந்த உணர்ச்சி, அந்த ஃபீலிங்..”

ஜார்ஜ் மாஸ்டர் தலையசைத்தார். “உண்மைதான். இது பத்தி நம்முடைய கலை முன்னோடிகள் ஏற்கனவே யோசிச்சு பாத்திருக்காங்க. குறிப்பா என்னோட குருநாதர் ஃபாதர் மார்கோஸா. இங்க பாருங்க..”

தன் பையிலிருந்து ஒரு தடித்த புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்டினார் ஜார்ஜ் மாஸ்டர். பரத நாட்டியப் புத்தகம்தான். ஆனால் நாங்கள் பார்த்திராத விநோத முத்திரைகளின் படங்கள் அதில் இருந்தன.

இரண்டு கைகளின் சுண்டுவிரல்களையும் மேலாகவும் குறுக்காகவும் வைத்து இருந்த ஒரு படத்தை மாஸ்டர் சுட்டிக் காட்டினார்.

இது தான். தி ஹோலி க்ராஸ் முத்ரா.

“அற்புதம்!” சிலாகித்தாள் மிஸஸ் டேவிட். எங்கள் ஆசான்களைத் திரும்பிப் பார்த்தோம். அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

அடுத்தடுத்து வந்த நாட்களில் தி ஸன் ஆஃப் காட் முத்ரா, தி ஹோலி ஸ்பிரிட் முத்ரா என்றெல்லாம் புத்தம்புதிய முத்திரைகளை நாங்கள் கற்றுக் கொண்டோம். ஃபாதர் மார்கோஸாவின் புத்தகம் ஒரு பொக்கிஷம். அதை அடுத்த வருடம் கட்டாயம் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று ஒரு நாள் ஒத்திகைக்கு வந்த டைரக்டர் மேடத்திடம் மிஸஸ் டேவிட் பரிந்துரை செய்தாள்.

“இதையெல்லாம் என்னால கண்ணாலயே பார்க்க சகிக்க முடியல. அபிநய தேவதைகளையும், அப்சரஸ்களையும் கட்டி வைச்சு யாரோ ராட்சசன் சித்ரவதை பண்றா மாதிரி இருக்கு. அதைப் பாத்து ஸ்வர தேவதைகள் எல்லாம் ஓன்னு கதறி அழறா மாதிரி இருக்கு. இதுக்கெல்லாம் அவசியம் என்ன வந்தது?” – ஒரு நாள் ராகினி அம்மா சாரிடம் சொல்லிக் கொண்டிருந்தது யதேச்சையாகக் காதில் விழுந்தது.

பொதுவாக எங்கள் ஆசிரியர்கள் கலையில் புதுமைகள் செய்வதை எப்போதுமே ஊக்குவிக்கும் கட்சி. ஆனால் ஏனோ ஜார்ஜ் மாஸ்டர் கூறும் நுட்பங்களை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று பட்டது. நாங்கள் மேலும் பல புதிய தேவ ஹஸ்த முத்திரைகளைக் கற்றுக் கொண்டிருந்தோம்.

நடனத்தின் சில காட்சிகள் வெளிப்படையாக கோரமாக இருந்தன. முள்கிரீடத்தை தலையில் வைக்கிறார்கள். ரத்தம் சொட்டுகிறது. இப்படி ஒரு காட்சி. அந்த மனிதரை சாட்டையால் அடித்துச் சித்திரவதை செய்து கொண்டே போகிறார்கள். அது இன்னொரு காட்சி. எந்தவோர் உணர்ச்சியையும், ரசத்தையும் நேரடியாக பிரதிபலிப்பது சரியான முறை அல்ல. கோபமும், பீபத்சமும், சிருங்காரமும் எல்லாம் ஒருவித கலாபூர்வமான அழகியல் வெளிப்பாடாக இருக்கவேண்டுமே தவிர அப்பட்டமாக இருக்கக் கூடாது என்பது நாங்கள் படித்து உள்வாங்கியிருந்த பரதக் கலை கோட்பாடு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அதை முழுதாகத் தளர்த்திக் கொள்ள வேண்டும் என்று ஜார்ஜ் மாஸ்டர் சொல்லி விட்டார்.

நிகழ்ச்சியின் உச்சமாக, சிகரமாக இருக்கப் போகும் ’பீஸ்’ பற்றி ஜார்ஜ் மாஸ்டரும் மிஸஸ் டேவிடும் பலமுறை பேசினார்கள்.

“அந்த விஷயத்தை நாம் ரொம்ப அழுத்தமாகச் சொல்லவேண்டும். அதற்கு குழு நடனத்தை விட தனி நடனம்தான் பொருத்தமாக இருக்கும்.”

மிஸஸ் டேவிட்டின் யோசனையை ஜார்ஜ் மாஸ்டர் ஏற்றுக் கொண்டார். ‘நடனமாடினார் ஈசன்’ என்ற அற்புதமான ஸ்வரஜதியை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். பல நுணுக்கமான பாவங்களுக்கும், மனோதர்மத்திற்கும் சாத்தியமுள்ள அபாரமான பீஸ் அது. சக்தியும் வீரியமும் ததும்பி வழியும் அசைவுகள் கொண்டது.

“ஆனால்..?” மிஸஸ் டேவிட் இழுத்தார்.

“அதில சாகித்யத்துல இடதுபதம் தூக்கி, கங்கைவார் சடையாட அப்படின்னெல்லாம் வருதே, அதை எப்படி வைக்கறது?” அவள் முகத்தில் புழுவை மிதித்துவிட்டது போல ஒருவித அருவருப்பு தோன்றியது. மோவாயைத் தடவிக் கொண்டே ஜார்ஜ் மாஸ்டர் யோசித்தார்.

“ம்.. ஸ்வரங்களை அப்படியே வைச்சுக்கலாம், பாட்டு வரிகள் எதுவும் வேண்டாம். அந்த இடத்தில அதே மாதிரி வாத்திய இசையைப் போட்டு நிரப்பிடலாம். என்ன சொல்றீங்க?”

“கிரேட் ஐடியா!”

உற்சாகத்துடன் தலையசைத்தார் மிஸஸ் டேவிட்.

“கங்கிராட்ஸ், யூ டிஸர்வ்ட் இட்!” என்று வந்து கட்டிக் கொண்டார்கள் தோழிகள். பூரித்தேன். ஆம், அந்தத் தனி நடனத்திற்கு என்னைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்!

ஆனால் வழக்கமாக அந்த ஸ்வரஜதிக்கு நாங்கள் ஆடும் அசைவுகளோ அபிநயங்களோ சுத்தமாகக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். ஃபாதர் மார்கோஸோ தேவ ஹஸ்தங்கள் போலவே புதிய அபிநயங்களையும் உருவாக்கியிருக்கிறார். கண்கள் நிலைகுத்தி நிற்க, கைகள் இரண்டையும் தூக்கிக் கொண்டு நிற்க வேண்டும் – தி க்ருசிஃபிக்‌ஷன் அபிநயா! பரதக் கலை வெளிப்பாட்டின் ஆன்மிக உச்சம் இந்த அபிநயம்தான் என்று திட்டவட்டமாக ஃபாதர் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறாராம்.

தி மடோன்னா முத்ரா… தி ரைஸன் கிரைஸ்ட் அபிநயா… தி சர்ச் முத்ரா… தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது ஒத்திகை.

***

அன்று காலை மப்பும் மந்தாரமுமாக விடிந்தது. நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு நாள்கள்தான் இருக்கின்றன. நிம்மதியாக உட்கார்ந்து படித்து கொஞ்ச நாளாயிற்று, இன்று படிக்கலாம் என்று தோன்றியது. நூலகத்துக்குள் நுழைந்தேன்.

சத்யபாமா தேவி எழுதிய கட்டுரைகள் – முழுத் தொகுப்பு. எனக்குப் பிடித்த அந்தப் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு மேஜைப் பக்கம் நகர்ந்தேன். எதேச்சையாக அங்கே யாரோ படித்துவிட்டுப் போயிருந்த ஒரு பழைய கலை இதழ் கண்ணில் பட்டது. 1996-ஆம் வருடத்தியது. அட்டையில் டைரக்டர் மேடம் புகைப்படம். கவர் ஸ்டோரியே அவரைப் பற்றிதான். ஆர்வத்துடன் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். மூத்த கலைஞர் சாரதா அம்மாவின் பேட்டியும் அதில் வந்திருந்தது.

நீலா ஜான்சன் அப்பொழுது ரொம்ப சின்னப் பெண். நாட்டியம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று கலாகேந்திராவுக்கு வந்தாள். அவளது குடும்பம் கிறிஸ்தவக் குடும்பம். எனவே அவளுக்கு இந்தியக் கலாசாரம், பாரம்பரியம் பற்றிய அறிமுகம் கூட இல்லை. அவளது கிறிஸ்தவப் பின்னணியை மனதில் கொண்டு சேர்த்துக் கொள்ள ரொம்பவே தயங்கினார் சத்யபாமா தேவி. பிற்கு அவளது துடிப்பையும் ஆர்வத்தையும் பார்த்து கற்றுக் கொடுக்க முன்வந்தார். அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துதான் பாருங்களேன் என்று நானும் சொன்னேன். தேர்வு செய்யும்போது கறாராக இருப்பாரே தவிர, அதன்பிறகு இம்மியளவு கூட மாணவர்களுடன் அவருக்கு மனத்தடை இருக்காது. பரதக் கலையின் புனிதத்தையும், தெய்வீகத்தையும், ஆன்மிகத்தையும் தன் மாணவர்கள் எல்லாரும் சரியாகப் பாதுகாப்பார்கள் என்று அம்மா முழுமையாக நம்பினார்.

அந்த இதழ் முழுவதையும் நிதானமாகப் படித்து முடித்தேன்.

நல்லதோர் வீணை செய்தே.. பக்கத்து வகுப்பறையிலிருந்து பாடல் ஒலி கசிந்து வந்தது. ஏதோ நிகழ்ச்சிக்காக பாரதியார் பாடல்களைத் தேர்ந்தெடுத்து நடனப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் ஜூனியர் மாணவிகள். பாட்டில் மெய்மறந்து தலையசைத்துக் கொண்டே கட்டுரைத் தொகுப்பைப் புரட்டினேன்.

குமாரசம்பவம் ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது? காரணம் அதிலுள்ள ஆழ்ந்த குறியீடுதான். கடைசியில் பார்வதி தன் தவத்தினால் காதலை மட்டும் வெல்லவில்லை. அவள் தன்னையே கரைத்துக் கொண்டாள். உமா தன் தவத்தால் சிவனை வென்றாள், சிவனோடு ஒன்றாகி விட்டாள்… சிவன் உயிர்ச் சக்தியை நிறைத்தான். ஊனாக இருந்ததை எல்லாம் எரித்து சாம்பலாக்கி விட்டான். அது போலதான் நடனமாடும் ஒவ்வொரு நர்த்தகியும் தன் வெளிப்பூச்சுகளையும், களிம்புகளையும் சாம்பலாக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே சுடரும் பொன் ஒளிரும்.

சத்யபாமா தேவியின் சொற்கள் அலைபாயும் என் மனதிற்கு அமைதியும் ஆறுதலும் அளிக்கும், எப்போதும்.

bharatnatyam-dancerநூலகத்தின் ஜன்னல் வழியாக தூசிப் படலம் லேசாக எழுவது தெரிந்தது. வேகமாக வீசிய காற்றில் மரங்கள் விர் விர்ரென்று அடித்துக் கொண்டன. மேகங்கள் பொங்கித் தளும்பிக் கொண்டிருந்த வானம் இருண்டு கொண்டே வந்தது. அட! இந்த மே மாதக் கோடையில் மழை வரும் போலிருக்கிறதே.

எழுந்து வெளியே வந்தேன். நிமிர்ந்தேன்.

மழையின் முதல் துளிகள் என் இமைகளில் பட்டுத் தெறித்தது. தவழ்ந்து இதழ்களை தொட்டது. என் முலைக் குவட்டில் சிதறியது. என் வயிற்று மடிப்புகளில் வழிந்தோடி, தொப்பூழில் சென்று என்றென்றைக்குமாக இணைந்தது.

என் உடல் கிளர்ந்தது. அகம் ஆயிரமாயிரம் நீர்த்தாரைகளின் ஸ்பரிசத்தால் நனைந்து குளிர்ந்து நெகிழ்ந்தது. நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது.

ஒற்றைக் காலில் நின்று உமா தவம் புரிகிறாள். மாதங்கள், வருடங்கள், பருவங்கள். மழையின் முதல் துளி அவளைத் தீண்டுகிறது. இப்படித்தான், இதே போலத் தான். குமாரசம்பவத்தில் காளிதாசனின் அழியாக் கவிதை!

அக்கணத்தில், அந்த மழைத் துளியில், உமையவளாக என்னை உணர்ந்தேன்.

*******

“ஏய் செல்வி, இன்னும் தயாராகலையா நீ?”

அரங்கத்தின் பின்புறம் இருக்கும் ஒப்பனை அறைக்குள் பரபரத்துக் கொண்டு வருகிறாள் மாலதி. மூச்சு வாங்குகிறது அவளுக்கு.

அலங்காரம் எல்லாம் சரியா இருக்கு. கண்ணுக்கு மைதீட்ட வேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆச்சு, இதோ ரெடி.

“கூப்பிட்ட எல்லா விவிஐபிக்களும் நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க. கல்சர் மினிஸ்டர் வருவாங்களோ மாட்டாங்களோன்னு சந்தேகம் இருந்தது, ஆனா சொன்னபடி வந்துட்டாங்க. ஆர்ச் பிஷப் வந்திருக்காரு. முதல் வரிசைல மிஸஸ் டேவிட் பக்கத்திலதான் உட்கார்ந்திருக்காரு. இந்த நிகழ்ச்சி சக்ஸஸ் இல்ல, சூப்பர் சக்ஸஸ் ஆகப் போகுது.”

படபடவென்று பொரிந்து தள்ளுகிறாள் மாலதி.

ஒப்பனை அறையிலிருந்து மேடையின் ஓரத்திற்கு வந்துவிட்டேன். சுழல் விளக்குகளின் பச்சையும் நீலமும் சிவப்பும் கலந்த ஒளி லேசாக, மென்மையாக வட்டமிட்டுச் சுழன்று சிறிது சிறிதாக மங்கி நிலைகொள்கிறது. வயலின் இசையின் சோக மீட்டலுக்கு நடுவே ஸ்வரஜதிக்கான ஆயத்தம் ஆரம்பமாகி விட்டது. நான் அரங்கின் மையத்திற்கு வந்து நிற்கிறேன்.

மிருதங்கம் மெலிதாக தாளகதியுடன் ஒலிக்க ஆரம்பித்தது. தா தக தம் ஜரி.. தை.

பார்வையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருளில் கரைவது போலிருந்தது. முதல் வரிசையில் மிஸஸ் டேவிட், டைரக்டர் மேடம், பிரபலங்கள். எல்லாரும் சிறுசிறு புள்ளிகளாகத் தெரிந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தார்கள். அந்த மேடை மறைந்தது. திரைச் சீலைகள் மறைந்தன. சுழல் விளக்குகள் மறைந்தன.
bharatanatyam2
தக திமி தா.. தரி கிட தீம்.
உடுக்கை ஒலித்தது. ஆதி நாதத்தின் சப்தம் மட்டுமே எங்கும் நிறைந்தது.
தாழ்சடை எண் திசையும் வீசிப் பறந்தது.
நிலவு தளும்பியது. வார்சடைக் கங்கை பொங்கினாள். கொன்றை மலர்கள் உதிர்ந்தன.
எட்டுத் தோள்களும் குலுங்கின. அரவ மாலைகள் அசைந்தாடின.
கை நின்ற செந்தீ கனன்றெழுந்தது.
முயலகன் காலின் கீழ் மிதிபட்டு நொறுங்கினான்.
தேவரும் முனிவரும் திசைதிசைதொறும் சிரமிசை கரம் குவித்தனர்.
பாகங் கொண்ட பாவை விலகிச் சென்று, முகத்தில் கைவைத்து வியந்து நின்றாள்.
ஆடிய காலும் அதிற்சிலம்போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம்..
இதோ இடது பாதம் எழுகிறது.

தாண்டவம்!
என்னுள் நிகழ்கிறது… என்வழியே தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

78 Replies to “தாண்டவம் [சிறுகதை]”

 1. என்னங்க அநியாயம் இது. இப்படியெல்லாமா நடக்கிறாது?

 2. Pingback: Indli.com
 3. நம்முடைய இந்துக்கள் உருவாக்கிய கலைக்கோவில்களில் எதோ சிலகாரணங்
  களுக்காகக் கிறித்துவர்களை நிருவாகப் பொறுப்பில் அமர்த்திவிடுகின்றனர். அந்த நிறுவனங்கள் பின்னர் புறத்தோற்றத்தில் இந்து நிறுவனங்கள் போலத் தோன்றினாலும் அங்கு கிறித்துவர்கள் ஆதிக்கம் நிலைபெற்றுவிடுகின்றது. கோவையில் ஒரு மகளிர் கல்லூரி அந்த இழி நிலையிலிருந்து மீண்டுவருகின்றது என நம்புகின்றேன். ஈரோட்டிலும் ஒரு சிறந்த மகளிர் பள்ளி கிறித்துவ் ஆதிக்கத்துக்குச் சென்றது. மீண்டுவிட்டதோ எனத் தெரியவில்லை.

  கலாக்ஷேத்திரத்திற்கு இந்த கதி வரலாமோ? மேடத்தின் கைக்கு இந்த அரிய நிறுவனம் சென்ற வரலாறு யாருக்காவது தெரியுமோ?

  ஜடாயூ வெறு கற்பனைக் கதையை எழுதவில்லை. ருக்மணி அம்மையார் கண்ட கலைக்கோவிலின் புனிதம் அன்னியர்காலில் மிதிபடுகின்றது. மைசூர் வாசுதேவாச்சாரியார், பாபநாசம் சிவன், எம்.டி. இராமநாதன், அவர் குரு டைகர் இன்னும் எத்தனையோ பெரியோர்களை ஆதரித்துப் போற்றி வளர்த்து தானும் வளர்ந்த நிறுவனம் இந்த இழிநிலை அடையலாமா? நல்லதோர் வீணை செய்தே நலங்கெட்ப் புழுதியில் எறிவதோ? ருக்மணி அம்மையாருக்கு இது திருவுளச் சம்மதமோ? சொல்லடி சிவசக்தி

 4. ITHU UNMAITHAN. Adyar KALAKSHETHRA christians kaiyil irukkirathu. Athu viraivil ippadithan aagum. Tiruchi KALAIKAAVIRI chiristians aal itharkagave thodangappattathu. Naam ithan seriousness ai eppoduthan unarappogiromo. Kavalaiyaga irukkirathu.

 5. Karthik ,

  இதை எல்லாம் ஏற்படாமல் தடுப்பதற்கு தான் நாம் இங்கு இருக்கிறோம். தொடர்ச்சியாக சில வெற்றி வாய்ப்புகளை நாம் இழந்து இருப்பதால், இந்த சலிப்பு ஏற்படத்தான் செய்யும். எது நடந்தாலும் எனக்கென்ன என்று இருந்தால், முகத்தில் மீசை இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகும். வெற்றி பெறவே நாம் பிறந்தோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

  வெல்க பாரதம் !! வெல்க தமிழ்

  சோழன்

 6. ஜடாயு அவர்களே,

  சபாஷ்! நாட்டியக்கலை உலகத்தைப் பற்றி அதிகம் பரிச்சயம் எனக்கு இல்லை. ஆனாலும், “சத்யபாமா தேவி” என்ற பெயரைப் படித்ததற்கு பிறகு பல விஷயங்களை (கூகிள் உதவியுடன்) ஊகிக்க முடிந்தது.

  “பாதர் முத்ரா, சன் முத்ரா, ஹோலி ஸ்பிரிட் முத்ரா”… இதெல்லாம் கட்டுக்கதை என்று முதலில் நினைத்தேன். தேடிப்பார்த்து உண்மையைக் கண்டதும் “சாத்வீகமான ஒரு கலையில் பிரேத வழிபாடா? இதென்னடா அலங்கோலம்?” என்று தோன்றியது.

  நன்றி.

 7. இக்கதை இப்படியும் முடியலாம்:

  விடுமுறைக் காலம். மாணவர்களும் ஆசிரியர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்பித் தங்கள் குடும்பத்தினருடன் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.

  தேவனின் பணி நிமித்தமாகத் திருமணம்கூட செய்துகொள்ளாத நீலா ஜான்சனும், அவருடைய கையாள்கள் சிலரும் மட்டும் கலாகேந்திராவில் தங்கியிருந்தனர். இந்தியாவின் நிழல் பிரதமராக விளங்கிய இத்தாலிய அம்மையார், இந்திய பண்பாட்டுத் துறையின் தலைமைப் பதவியை நீலா ஜான்சனுக்குக் கொடுக்க முடிவு செய்திருந்தார். அது சம்மந்தமாக அம்மையாரைச் சந்திக்க மறு நாள் காலை டெல்லி புறப்படத் தயாராக இருந்தார் நீலா.

  நள்ளிரவு நேரம். மின்சாரம் தடைபட்டது. கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த கலாகேந்திரா அந்த இருளில் சலனமற்று உறைந்திருந்தது. நிலம் லேசாக அதிர்ந்தது. அந்த அதிர்வில் லேசாகப் புரண்டு படுத்தார் நீலா ஜான்சன்.

  விடியற்காலை சுமார் 4 மணி. சற்றுத் தொலைவில் வங்கக் கடலில் ஓர் அலை எழுந்தது. அதன் உயரமும் வேகமும் சீராக அதிகரிக்கத் தொடங்கின. கரையை நெருங்க நெருங்க அது விராட புருஷனின் உருவம் கொண்டது.

  சரியாக மணி 4:10. கரையை எட்டிய பேரலை அப்படியே கவிழ்ந்தது. கலாகேந்திராவை மட்டும் துல்லியமாகப் போர்த்தியது.

  மீட்புக்குழு அந்த இடத்தை அடைந்தபோது, சுவாமி சிலைகள் மட்டும் எவ்வித பாதிப்புமின்றி தங்கள் யதாஸ்தானங்களில் புன்முறுவலுடன் அருள்பாலித்துக் கொண்டிருந்தன.

 8. \\விடியற்காலை சுமார் 4 மணி. சற்றுத் தொலைவில் வங்கக் கடலில் ஓர் அலை எழுந்தது. அதன் உயரமும் வேகமும் சீராக அதிகரிக்கத் தொடங்கின. கரையை நெருங்க நெருங்க அது விராட புருஷனின் உருவம் கொண்டது.

  சரியாக மணி 4:10. கரையை எட்டிய பேரலை அப்படியே கவிழ்ந்தது. கலாகேந்திராவை மட்டும் துல்லியமாகப் போர்த்தியது.

  மீட்புக்குழு அந்த இடத்தை அடைந்தபோது, சுவாமி சிலைகள் மட்டும் எவ்வித பாதிப்புமின்றி தங்கள் யதாஸ்தானங்களில் புன்முறுவலுடன் அருள்பாலித்துக் கொண்டிருந்தன.//

  பா. ரெங்கதுரை அவர்களே அருமை.

  உண்மையை உலகிற்கு வெளிக்காட்டிய ஜடாயு அவர்களுக்கு நன்றி

 9. நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது.
  நம்முடைய கலைகளை இப்படி திரித்து விட்டார்களே!
  இது போன்ற கயவர்களை கண்டாலே வெறுப்பாக உள்ளது.
  என்போன்றவர்களுக்கு உண்மையை தெரிவித்த ‘திரு ஜடாயு’ அவர்களுக்கு நன்றி.

 10. இயேசு வழிபாடு = பிரேதவழிபாடு. நன்றி கந்தர்வன்

 11. இந்தக் கதையில் குறிப்பிடப் பட்டுள்ள பாத்திரங்கள் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை தான். அந்த நபர்கள் பற்றிய விவரங்கள் Breaking India (By Rajiv Malhotra & Aravindan Neelakandan) புத்தகத்தில் எட்டாவது அத்தியாயத்தில் உள்ளது.

  பரதநாட்டியத்தை கிறிஸ்தவம் அழிக்கிறது, திரிக்கிறது, திருடவும் செய்கிறது. இந்த மைய செய்தியை ஒரு மாணவியின் உணர்வுகள், எண்ணங்கள் வாயிலாக சொன்னவிதம் தான் இதனை ஒரு “சிறுகதையாக” ஆக்குகிறது.

  நன்றி.

 12. மற்ற கலாசாரங்களில் புகுந்து சீரழிவை திட்டமிட்டு செய்வது கிருஸ்துவத்தின் அடிபடை கோட்பாடுகளில் ஒன்று என்பது உலகறிந்த விஷயம். ஆமை புகுந்த இடமும் அமினா புகுந்தஇடமும் கிருஸ்துவம் புகுந்த இடமும் உருப்படாது. பல உன்னத கலைஞர்களை உருவாக்கிய கலாஷேத்திரா கிருஸ்துவத்தின் பிடியில் சிக்கி மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இந்து தாய்மார்களே இனி உங்கள் குழந்தைகளை தயவு செய்து அங்கே நாட்டியம் பயில அனுப்பவேண்டாம்.

 13. Hope so muslims have not adopted mudras. Then we would have to see mudras and postures depicting Sunnat.

 14. அதே போல் நங்கநல்லூரில் சர்ச்சில் தேரிழுக்கவும், மார்கழி மாதத்தில் பஜனை செய்யவும் தொடங்கி விட்டார்கள் என்று என் நண்பன் கூறக்கேட்டேன்.

  -ஸ்ரீனி

 15. இது நிசமா? நினைக்கவே பயன்கரமஹா இருக்கிறது.? நிசமா?

 16. முனைவர் அவர்களே,

  // இயேசு வழிபாடு = பிரேதவழிபாடு. நன்றி கந்தர்வன் //

  இவர்களின் சித்தாந்தம் முழுக்க முழுக்க பிரேத சித்தாந்தம் தான். இறையியல் முழுவதும் இயேசுவைக் கொலை செய்து தொங்க விட்டது பற்றி.

  முதலில், இயேசு மாமிசமும் இரத்தமும் கொண்ட உடலை எடுத்திருந்தார் என்று இவர்கள் கூறுவர். (நம் இந்து மதத்திலோ இறைவனின் திருமேனி சுத்த சத்துவம், அது மாமிசமும் இரத்தமும் கிடையாது என்று கூறுகிறோம்).

  இரண்டாவதாக, இயேசு கொலை செய்யப்பட்டது உண்மை என்று நம்புவது கிறித்தவத்தின் முக்கியமான கொள்கை. (கிறித்தவ வரலாற்றில் சிலர் ‘அது வெறும் மாயை, நாடகம் நடத்தினார்’ என்று சிலர் கூறினர். அவர்களை “heretics” என்று சர்ச்சு கண்டித்தது.)

  சர்ச்சில் தரப்படும் ‘தெய்வ அப்பம்’ இயேசுவின் உடல். ஒயின் இயேசுவின் ரத்தம். இவற்றை உண்பது/பருகுவது கிறித்தவத்தின் முக்கியமான அங்கம்.

  இயேசுவின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது என்றும், அவ்வுடலுடன் அவர் ‘உயிர்த்து எழுந்தார்’ என்பதும், அது தெரியாத சிலர் அந்தக் கல்லறையைத் திறந்தபொழுது உடல் காணவில்லை என்பதும் கிறித்தவ நம்பிக்கையின் தலையாய அங்கங்கள். இரத்தமும் மாமிசமும் கொண்ட சடலம் உயிர்த்து எழுந்தால் அதைத் தான் ‘பிரேதம்’ என்று நாம் கூறுகிறோம். மிகுந்த பாவம் செய்த ஆன்மாக்கள் தான் இப்படி இறந்த நிலையிலும் உடலை விட்டுப் பிரிய முடியாமல் பிரேதமாக அலைவார்கள் என்பது நம் நாட்டில் வழங்கப்படும் ஒரு ஐதீகம்.

  ஆகையால் கிறித்தவத்தில் முழுக்க முழுக்க பிரேத வழிபாட்டின் அங்கங்களே உள்ளன. ஆங்கிலத்தில் சொன்னால் necromancy.

  இன்னொரு விஷயம் கவனித்தீர்கள் என்றால், கிறித்தவத்தில் உடலுக்கும் ஆத்மாவுக்கும் வித்தியாசமே கிடையாது.

  இந்த அமங்கலமான புராணத்தைப் பாட பரதக்கலை எதற்கு?

  பரதக் கலையில் “பாதர் முத்திரை”, “சன் முத்திரை”, “பரிசுத்த ஆவி முத்திரை”, “குரூசிபிக்ஷன் அபிநயம்” போன்றவை சர்க்கரைப் பொங்கலில் மாட்டு இறைச்சி கலப்பது போன்றது. பரதக் கலை, கர்நாடக சங்கீதம் முதலானவை முழுக்க முழுக்க இந்துக் கலை. “பரதம்” என்று சொன்னால் அதில் சம்பிரதாயிகமான தீம்கள் – பதங்கள், ஜாவளி, தில்லானா – மட்டும் தான் வர வேண்டும். இதை ஆதரிக்க மனமில்லாதவர்கள் தாம் என்ன வேண்டுமானாலும் ஆடிக் கொள்ளட்டும்… ஆனால் அதை “பாரத நாட்டியம்” என்று மார்க்கெடிங் செய்வது பித்தலாட்டம்.

 17. மிகவும் அதிர்ச்சி தருகிறது. கலாக்ஷேத்ரா இந்த மாதிரி ஒரு நிலையில் உள்ளது என்பது மிகத் தெளிவு. இதற்க்கு என்ன செய்யவேண்டும் என்பது விவாதிக்கப்பட்டு விரைவில் தீர்வு காண வேண்டும்.அந்த நடராஜனே வந்து வழிகாட்டுவார்.

  சகிப்புத்தன்மை இளிச்சவாய்த்தனம் என்று அர்த்தப்பட்டுவிடக் கூடாது.

 18. கலாக்ஷேத்ரா இப்படி ஆகி விட்டதா? என்ன அநியாயம்… இதை தோலுரித்துக் காட்டி ஜடாயுவிற்கு நன்றிகள்..

  உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆடவல்ல பெருமானின் ஆட்டத்தை ஆரறிவார்?

  இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வந்து பாருங்கள்… இங்கு ஆங்கிலேயர் காலத்தில் இற்றைக்கு 60 வருஷங்களுக்கு முன் இந்துக்களை மதம் மாற்ற கிறிஸ்துவ மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் படிப்பதற்கு கிறிஸ்தவர்கள் இல்லை.

  ஆக, பெயரளவில் கிறிஸ்தவ கல்லூரிகளாயும் றோ.க.த.க. (றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை) முதலியனவாயும் உள்ள பாடசாலைகள் எல்லாம் அரசால் சுவீகரிக்கப்பட்ட பின் , பெயரில் கிறிஸ்துவம் இருக்க காலைப் பிரார்த்தனையில் தேவாரம் மட்டுமே பாடப்படுகிறது.

  வெள்ளிக்கிழமையில் அரை மணி நேரம் சிவபுராண பாராயணம் வேறு…

  விரைவில் பெயர்களும் மாறும்..

  ‘கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே
  செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
  முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
  பற்றா நின்றாரைப் பற்றா பாவமே’

  இக்கட்டுரை சொல்லும் செய்தி அந்த நடராஜனுக்கே சமர்ப்பணம்… ஜடாயு அவர்களின் எழுத்துத் திறன் வியக்க வைக்கிறது. நன்றிகள்..

 19. தெரிஞ்ச விஷயம் தான் என்றாலும் அதன் தாக்கத்தை முழுமையாக உணரும்போது மனமும், உடலும் பதைக்கிறது. எப்போது விடிவு? ஆண்டவன் தான் காப்பாத்தணும். அந்த நடராஜப் பெருமான் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்? அவர் தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

 20. அதில சாகித்யத்துல இடதுபதம் தூக்கி, கங்கைவார் சடையாட அப்படின்னெல்லாம் வருதே, அதை எப்படி வைக்கறது?”

  நடராஜரின் நடனம் என்பது இந்த பிரபஞ்சத்தின் உயிரோட்டதிர்கான அடையாளம். ஒரு கையில் அர்த்த சந்திர முத்ரையாக கருவில் உள்ள குழந்தையை குறிப்பால் உணர்த்தி, அதன் மேல் உள்ள தீச்சட்டியில் முடிவை உணர்த்தி ஒவ்வொரு உயிரும் மாறுகின்ற கால மாற்றத்தில் சுழலில் சிக்குண்டு எண்ணற்ற பிறப்பு இறப்புக்களை கடக்கவேண்டும் என உணர்த்தி கால மாற்றத்தின் அடையாளமாய் கையில் ஒரு உடுக்கை கொண்டு பிறப்பு இறப்பு சுழலில் இருந்து தப்பிக தன கால்களை பற்றிக்கொள்ள கையால் தூக்கிய காலை காட்டும் அற்புதம். அர்த்தமற்ற கோட்பாடை உடையோர்களுக்கு இந்திய ஞானத்தின் உட்பொருள் விளங்க வாய்ப்பில்லை. இருப்பினும் நடக்கும் மர்ம நாடகத்தை மேடை ஏற்றிய ஜடாயுவிற்கு நன்றி.

 21. கலாக்ஷேட்ராவின் முன்னாள் மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்து அமைப்புகள் மற்றும் பிற இந்திய கலை அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன ?
  யாரும் எதிர்க்கத் துணியவில்லையா?

  ஜடாயுவின் உணமையை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கதை மிகச் சரியாக உணர்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. யாராவது இதை அந்த முன்னாள் மாணவர்களுக்கு கொண்டு செல்லுங்கள்

 22. நிச்சயமாக கலாக்ஷேத்ராவின் வெளி மதில் சுவர்களைக் கூட கண்டறியதவர் இந்த கதையை நம்பலாம். கடவுள் எனக்கு ஓராண்டு காலம் ரீச் பவுண்டேஷன் மூலமாக இந்த இடத்தில் பணி புரிய வைத்ததும் ஒரு லீலை போலும்! காணவில்லை, காணவில்லை என்று ஓலமிடும் சிலைகள் எல்லாம், மொத்தமாக மியூஸியத்தில் உள்ளன. அவற்றை எங்கே இனி வரும் நாட்களில் கணக்கில்லாமல் கிடாசியோ அல்லது விற்று விட வாய்ப்பு இருக்குமோ என பயந்து, எல்லாவற்றையும், சுத்தம் செய்து, எண்கள், வகை (கல், பளிங்கு, மரம். பஞ்சலொகம், தாமிரம்) பிரித்து, பட்டியல் இட்டு, அரசின் antiquity act ல் பட்டியலிட்டு, அவற்றை பதியச் செய்யும் மகத்தான பணியை லீலா சாம்ஸன் அவர்கள் எங்களிடம் பணித்து, அவற்றை முடித்து விட்டோம். ஆல மரத்துப் பிள்ளையாரும் அங்கேயே உள்ளார். நிஜத்தை சொன்னால், எத்தனை கடவுளர்களின் சிலைகள் உள்ளன எனும் பட்டியல் இந்த ஒரு முயற்சியின் பின்னர்தான் எல்லாருக்கும் தெரிய வந்துள்ளன. கதை என்றாலும், பெயர்கள் பல நிஜப் பெயர்களையும், ஒரு மாபெரும் கலாசாலையையும் வீதிக்கு இழுப்பதாக உள்ளது. ஜடாயு மேலும், தமிழ் இந்து நிறுவனர்கள் மேலும் எனக்கு நல்ல மரியாதையும் மதிப்பும் உண்டு. எனவே, தனி மடலில் மறுப்பு தெரிவித்துவிட்டு, கதையை நீக்கிவிடுமாறு எழுதி ஒரு நாள் பொறுத்திருந்தேன். இல்லையென்றானதும், உண்மையை எழுதும் நிலையில், இதைப் பதிகிறேன். என்னிடம் கணக்கற்ற சான்றுகள், கலாக்‌ஷேத்ரா கதையில் கூறப்பட்டதற்கு மாறாக நன்றாகவே இயங்குகின்றது என தெரிவிக்க ஏராளமாக உள்ளன. இந்து மதப் பற்று என்பது எல்லா இந்தியர்களின் மனதிலும் இருப்பது நல்லதே! ஆனால், மத வெறியாக மாறினால், நமக்கும் இன்ன பிற மதவாதிகளுக்கும் என்ன வேற்றுமை?

  உண்மைக்காக என்றும் போராடும்
  மரபூர் ஜெய. சந்திரசேகரன் எனும் ரீச் சந்திரா

 23. @Reach chanthiraa
  உங்கள் பதில் ஆறுதல் அளிக்கிறது. ஆனால் சிலைகளை அதனதன் இடத்தில இருந்து அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற ஒரு கேள்வியும் கூடவே எழுகிறது.
  இந்த சிலை அகற்றல்கள் சில வருடங்கள் முன்னரே நடந்திருக்க வேண்டும் என்று இணையத்தில் காணக் கிடைக்கும் தகவல்கள் சொல்கின்றன. ஏன் இன்னும் சுத்தப்படுத்தி திரும்ப வைக்கப் படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

 24. ரீச் மரபூர் சந்திரசேகர் அவர்களுக்கு

  உங்களது சேவை குறித்த பெரிய அபிமானமும் மரியாதையும் என்றும் உண்டு. நானும் இந்த கலாஷேத்திரத்திற்குள் சென்றவனில்லை. ஆகவே என் சந்தேகங்கள் சிலவற்றை நான் மதிக்கும் உங்களிடமே கேட்டு விடுகிறேன். தயவு செய்து பதில் அளிக்கவும்:

  1. கலாஷேத்ரத்தில் இருக்கும் தெய்வச் சிலைகளையெல்லாம் சுத்தப் படுத்தியது, கணக்கெடுத்தது பத்திரப் படுத்தியதெல்லாம் சரியே. அவற்றை ஏன் ம்யூசியத்தில் வைக்க வேண்டும்? நம் தேசத்தில் இருக்கும் எண்ணற்ற மதிப்பிடமுடியாத தெய்வீக விக்ரகங்களையெல்லாம் இப்படி நாம் பாதுகாப்பு காரணம் கூறி மியூசியத்தில் கொண்டு போய் வைத்து விடலாமா? அமெரிக்காவில் இப்படித்தான் செய்திருக்கிறார்கள். செவ்விந்தியர்களின் புனிதச் சின்னங்களையெல்லாம் அகற்றி சுத்தப் படுத்தி ஏ சி செய்யப் பட்ட கண்ணாடி அறைகளுக்குள் வைத்து விட்டார்கள். அதைத்தானே லீலா தாம்சனும் செய்திருக்கிறார்? ஒரு சின்ன உதாரணம் எடுத்துக் கொள்வோம், நீங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரிக்குள் ஒரு பிள்ளையார் விக்ரகம் ஒன்று அரசமரத்தடியில் இருக்கிறது. தினமும் மாணவர்களும், ஆசிரியர்களும், ஊழியர்களும் பிள்ளையாரை வணங்கி விட்டே தங்கள் தினத்தைத் துவங்குகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். கல்லூரிக்குப் புதிதாக ஒரு கிறிஸ்துவ பிரின்ஸ்பால் வருகிறார். அவருக்கு சாத்தானை கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் வணங்குவதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். அதை சுத்தப் படுத்தி, கணக்கு இண்வெண்ட்ரி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இனிமேல் இவர் அரசமரத்தடியில் இருந்தால் திருடர்கள் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள் ஆகவே கல்லூரியின் மியூசியத்துக்குள் வைத்துப் பூட்டி விட வேண்டும் என்று புதிதாகப் பதவியேற்ற கல்லூரியின் கிறிஸ்ட்டியன் பிரின்ஸ்பால் வந்து முடிவெடுத்தால் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?

  ஐயா வணங்குவதற்கு உரிய கடவுள் விக்ரகங்களை மியூசியத்தில் வைக்கும் உரிமையை இந்த அம்மாளுக்கு ருக்மணி அருண்டேல் கொடுத்து விட்டுப் போனார்களா என்ன?

  2. பரதக் கலை என்பது பழம் பெரும் கலை. அதை அதன் மரபு குலையாமல் புதிய பாடல்களுக்கு ஆடுவதில் தவறும் இல்லை. அதில் புதிய கிறிஸ்துவ முத்திரைகளை அறிமுகப் படுத்தும் உரிமையை அளித்தது யார்? கொஞ்சம் விசாரித்துச் சொல்ல முடியுமா?

  3. லீலா தாம்ஸன் அவர்கள் நம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் படித்திருக்கலாம் ஆனால் அவற்றை ஒருவர் எதற்காகப் படிக்கிறார் என்பது தெரிந்து கொள்ள வேண்டும். பிள்ளையார் சிலையைப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பது வேறு வழிபாட்டு இடத்தில் இருந்து நீக்குவது வேறு. இப்படியே மதுரை மீனாட்சி அம்மனையும், சிதம்பரம் நடராஜரையும், திருவெட்டாறு ஆதிகேசவனையும் பத்திரமாக அகற்றி மியூசியத்துக்குள் வைத்து விடலாமா?

  நாம் வெளுத்ததையெல்லாம் பால் என்று நம்புவதால்தான் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் என் கேள்விகளுக்கு லீலா தாம்சன் அவர்களிடம் கேட்டு பதில் சொல்லவும். வழிபாட்டுக்குரிய ஒரு விக்ரகத்தை அகற்றி அருங்காட்சியகத்தில் வைப்பதைக் கேள்வி கேட்ப்பதும் பாரம்பரியமிக்க நம் பண்பாட்டின் சின்னமான பரதக் கலையில் பிரேத முத்திரைகளைச் சேர்ப்பதைக் கேள்வி கேட்ப்பதும் எப்படி மத வெறியாக உங்கள் கண்களுக்குத் தெரிகிறது? புரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.

  நன்றியுடன்

  விஸ்வாமித்ரா

 25. அன்புள்ள ரீச் சந்திரா அவர்களுக்கு,

  இந்தக் கதை சில உண்மைத் தகவல்களையும் கோர்த்து எழுதப் பட்ட புனைவு என்பதை வாசகர்கள் சரியாகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  கிறிஸ்தவ முத்திரைகளை அபிநயங்களை உருவாக்கும் ஃபாதர்
  அதைப் பரப்பும் அவரது சீடர்கள்
  கிறிஸ்தவ தீம்களை மட்டுமே வைத்து பரத நிகழ்ச்சிகள் நடத்தும் நடனமணிகள்
  கலைப்பள்ளியில் உள்ள தெய்வ சிலைகளை சுத்திகரிக்கும், அந்தக் கலையின் இயல்பான பண்பாட்டுத் தொடர்ச்சியை அறுக்க நினைக்கும் இயக்குனர் ….
  இவர்கள் எல்லாம் உண்மையான ஆட்கள் தான்.

  நிஜத்தில் இந்த நபர்களும் சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலேயே கூட இருக்கலாம்.. ஆனால் புனைவுக்காக இவற்றை ஓரிடத்தில் கொண்டுவருவது புனைவெழுத்து சுதந்திரத்தின் படி தவறல்ல என்றே நினைக்கிறேன்…

  சிலைகளை அகற்றியது பற்றிய சர்ச்சை பல இதழ்களில்,புத்தகங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவை பல்லவர், சோழர் காலச் சிலைகள் அல்ல, அருங்காட்சியகத்திற்கு அனுப்புவதற்கு. அதிகபட்சம் 60-70 ஆண்டுகள் பழைய சிலைகளாக இருக்கலாம். இந்த சிலைகள் ஒரு private collection அல்ல. மாறாக, கலைப்பள்ளி சூழலில் மாணவர்கள் இவற்றை தினந்தோறும் வழிபடுவதும் அந்த படிமங்கள் மீது ஒரு கலாபூர்வமான், உணர்வுபூர்வமான புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும் கலைப் பயிற்சியின் ஒரு இன்றியமையாத அங்கம் என்ற நோக்கத்துடன் தான் அவை அங்கு நிறுவப் பட்டன என்பதற்கு ம்றுக்கமுடியாத ஆதாரம் உள்ளது.

  கலையுணர்வு இல்லாத சடங்குரீதியான வழிபாடு தட்டையானது, ஆழமற்றது – ஒத்துக் கொள்கிறேன்… ஆனால் வாழும் கலாசாரத்தின் வழிபடு தெய்வங்களை வெறும் அருங்காட்சியகக் ”கலைப் பொருட்களாக” மாற்றுவது அதைவிடவும் பெரிய குற்றம். மிகச் சாதுர்யமான கலாசார அழிப்பு நடவடிக்கை இது.. இதனையும் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  அன்புடன்,
  ஜடாயு

 26. வழிபட்டு வந்த கிருஷ்ண விக்ரஹம் தவறிப்போய் கீழே விழுந்து மூளி யாகிவிட்டது. ராணி ரஸமணி தேவி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் ஆலோசனை கேட்டாள்:
  “மூளியாகிப் போன விக்ரஹங்களை வழிபாட்டில் வைக்கக் கூடாது என்கிறார்களே இப்போது என்ன செய்வது? புதிதாக வேறு விக்ரஹம் செய்து வைக்கலாமா?”
  “மதுர்பாபுவுக்குக் கீழே விழுந்ததால் கை ஒடிந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். .அப்போது என்ன செய்யலாம்? அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை வைத்துக்கொள்வோமா” என்று திருப்பிக் கேட்டார், ராமகிருஷ்ணர்
  (மதுர் பாபு ராணி ரஸமணியின் புதல்வர்).
  அது ரஸமணிக்குப் பொட்டில் அறைந்த மாதிரி இருந்திருக்கும். தவறை உணர்ந்து உடைந்த விக்ரஹத்தையே சரிபண்ணி வழிபாட்டைத் தொடர்ந் தார்கள்.

  வெறும் மண் பொம்மையாகவே இருந்தாலும் தெய்வத் திரு உருவம் எனில் வழிபபாடு செய்வதற்கானது என்றே கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, வெறும் பொம்மை என்று அதைக் காணுகின்ற மனப் போக்கும் மாற வேண்டும். விசர்ஜனம் மட்டும் செய்யலாமா என்ற கேள்வி எழலாம். அவை கூறிப்பிட்ட சில நாட்கள் வைத்திருந்து பின்னர் விசர்ஜனம் செய்வதற்காகவே உருவாக்கப்படுபவை.
  ஜலத்தில் ஆவாஹனம் செய்வதுபோல, வழிபாடு ஆனதும் அதை விட்டுவிடுவதுபோல.
  ரஸமணிக்கு பூஜையில் வைத்திருந்த கிருஷ்ண விக்ரஹம் கிருஷ்ணராக அல்லாமல் வெறும் விக்ரஹமாகத்தான் மனசுக்குள் இருந்திருக்கிறது. அப்புறம் என்ன பூஜை, புனஸ்காரம் பக்தி என்றெல்லாம் அதற்கு வேண்டிக் கிடக்கிறது?

  வைணவத்தில் விக்ரஹத்தை அர்ச்சாவதாரம் என்றே அழைக்கும் சம்பிரதாயத்தின் பக்குவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பகவானின் எல்லா அவதாரங்களைக் காட்டிலும் அர்ச்சாவதாரமே மேல் என்ற கருத்தும் வைணவத்தில் உண்டு. இறைவனைத் தொட்டுச் சீராட்ட முடிவது அர்ச்சாவதாரத்தில்தான் அல்லவா? இந்த மனப் பான்மையை தெய்வ சொரூபங்கள் விஷயத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

  கல்லோ உலோகமோ மரமோ நமது தெய்வத் திருவடிவங்கள் எந்தப் பொருளால் ஆனாலும் எங்கு இருந்தாலும் வழிபாட்டுக்குரியவையே. அவை அழகாக இருப்பதால் அழகுப் பொருள்களாகக் கருதப்பட வேண்டியவை அல்ல. வீட்டின் முன் அறையில் நடராஜர் சிலையை வைக்கிற மனப் பான்மை மாற வேண்டும். அதேபோல் திரு உருவங்களை மியூசியத்தில் கொண்டு போய் வைக்கிற மனப் போக்கும் மாற வேண்டும்.
  சுத்தம் செய்து, இலக்கமிட்டு, என்ன பொருளால் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டு… என்றெல்லாம் வெறும் சடப் பொருள்களைப் பட்டியலிடுவது போல எழுதியிருப்பதைப் படித்ததுமே மனம் பதறிப்போனேன். மனதில் பக்தியிருந்தால் எந்த தெய்வத் திருவுருவைக் கண்டாலும் வெறும் சடப் பொருளாகக் கருதத் தோன்றாது.

  கிரேக்க, ரோமானியக் கடவுள் சிலைகளைப்போல் நமது தெய்வத் திரு வடிவங்களையும் கருதும் மனோபாவம் மாற வேண்டும். சந்தேகமோ அவ நம்பிக்கையோ சிறிதுமின்றி தெய்வத் திருவுருவங்களை தெய்வங்களாகவே காணக் கற்றுக்கொண்டால் அவை தெய்வங்களாகவே நமக்கு தரிசனம் தரும். நம்முடன் தொடர்பு கொள்ளும்.

  தெய்வ விக்கிரஹங்கள் வழிபாடு செய்வதற்காக அல்லாமல் வெறுமே வைத்திருப்பதே முதலில் தவறுதான்.
  -மலர்மன்னன்

 27. // வீட்டின் முன் அறையில் நடராஜர் சிலையை வைக்கிற மனப் பான்மை மாற வேண்டும். //

  முன் அறையில் வைத்து பாதத்தில் மலர் சூட்டி பக்கத்தில் ஒரு விளக்கும் வைத்து விட்டால் அதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

  வீட்டுக்கு வருபவர்களில் பெரும்பாலர் முன்னறைக்கு மேல் வரமாட்டார்கள். இதன் மூலம் வீட்டுக்கு வருபவர்களுக்கும் தெய்வ சிந்தனையும் தெய்வ சான்னித்தியமும் கிடைக்கிறது இல்லையா?

 28. //முன் அறையில் வைத்து பாதத்தில் மலர் சூட்டி பக்கத்தில் ஒரு விளக்கும் வைத்து விட்டால் அதில் தவறில்லை என்று நினைக்கிறேன். //

  தினமும் தவறாமல் அவ்வாறு வைத்து வர முடிந்தால் சரி. ஆனால் பெரும்பாலான வீடுகளில் அவ்வாறு செய்வதில்லை. சில வீடுகளில் பண்டிகைக்குப் போட்ட பூமாலை வாடிச் சருகாகிக் கொண்டிருப்பதும் உண்டு. ஒரு வீட்டில் இப்படி இருந்தபொழுது உன் தலையில் நேற்றுச் சூடிய பூவை இன்றும் தலையிலேயே வைத்துக்கொண்டிருப்பாயா என்று அந்த வீட்டுப் பெண்மணியைக் கேட்டேன். மட்டேன். என்றாள். அப்புறம் அம்பாளுக்கு மட்டும் ஏன் இப்படி என்று கேட்டேன்.
  என்றோ ஒருநாள் மாலை போட்டுவிட்டு அடுத்த பண்டிகை வரும் வரை அது காய்ந்து தொங்கிக் கோண்டிருப்பதைவிடப் போடாமலேயே இருந்துவிடுவது மேல்தான்.
  -மலர்மன்னன்

 29. அனைவருக்கும் வணக்கம் ………….

  திரு ஜடாயு.. அவர்களின் இந்த மிக சிறந்த முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று.. பரதம், கர்நாடக சங்கீதம் போன்ற தொன்மையான கலைகளில் அந்நிய ஆதிக்கம் (குறிப்பாக மேலை நாட்டு கிறிஸ்தவ முறைகள்) இடம் பெறுவது மிகவும் கண்டிக்க தக்க ஒன்றுதான்.. மேலும் வெறுத்தக்க செய்தியும் கூட… பரதத்திற்கு இலக்கணம் வகுத்த பரத முனிவரின் கோட்பாடுகளுக்கு இணங்க தான் அந்த கலை பின்பற்றப்பட வேண்டுமே தவிர இது போன்ற கிறித்துவ முறைகளை (holy cross mudra, son of god mudra,The holy spirit mudra) புகுத்துவது மிக மிக கண்டனத்திற்கு உரிய செய்தி .. இங்கு மறுமொழிகள் எழுதி இருபவர்களின் வரிகளை படிக்கும் பொழுது எந்த அளவிற்கு புராதன பரத கலையில் அதன் புனித தன்மையை, தனி தன்மையை சிதைக்கும் படி கிறித்துவ முறை புகுந்து இருப்பதை வெறுக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. கவலை வேண்டாம் ஆடல் வல்லானான நடராசா பெருமானை மீறி இந்த புரதான புனித கலையில் யாரும் அதன் தனி தன்மையை இழக்கும் அளவிற்கு எதுவும் செய்திட முடியாது … நன்று.

  இப்போது கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் நம் இந்து சகோதரர்களுக்கும் சில கேள்வி …..
  என்ன இவன் கட்டுரைக்கு தொடர்பு இல்லாமல் எழுதுகிறானே என்று நினைக்கவேண்டாம்.புராதன கலையாம் பரதத்தில் அந்நிய முறை புகுந்து விடகூடாது என்று அங்கலாய்த்து கொள்ளும் அன்பர்கள் பழமையான செம்மொழியான தமிழில் மட்டும் சமற்கிருத எழுத்துகளை உச்சரிப்புகளை புகுத்தலாமா.. யார் கொடுத்தது இந்த உரிமையை உங்களுக்கு.. விரிவாக்க பட்ட தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழுக்கு தொடர்பு இல்லாத கிரந்த எழுத்துகளை புகுத்தி அதன் தனித்தன்மையை அழிக்க யார் கொடுத்தார் உரிமையை .. கிரந்த எழுத்துகள் என்பது தமிழர்கள் சமற்கிருத மொழியை பயில உருவாக்க பட்ட ஒன்று. அதன் தேவை அத்தோடு முடிந்துவிட்டது … சர்வதேச ஒருங்குறியத்தில் தமிழ் எழுத்துகளோடு சேர்த்து கிரந்த எழுத்துகளையும் சேர்க்க வேண்டும் என்று வாதிடுவது என்ன நியாயம். அதிலும் குறிப்பாக ஜ, ஹ, ஷ, ஸ போன்ற தமிழ் மொழிக்கு தொடர்பு இல்லாத ஓசைகளை எழுத்துருக்களை சேர்க்க வேண்டும் என்னும் புல்லுருவி தனத்தை என்ன என்று சொல்வது.. இந்த கிரந்த எழுத்துக்கள் என்ன தமிழ் இலக்கண ஆசான் தொல்காப்பியர் வகுத்து கொடுத்ததா அவர் தான் தெளிவாக கூறி விட்டாரே…
  “வடசொற் கிளவி வடவெழுத்து ஓரிஇ
  எழுத்தோடு புணர்ந்த சொல்லாகுமே” என்று தூய தமிழ் சொற்களையே பயன்படுத்த வேண்டும் ஒரு வேலை சமற்கிருத சொல்லை பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கோவிலுக்கு வெளியே செருப்பை கழற்றிவிட்டு வருவது போல வடமொழி ஓசைகளை உச்சரிப்பை தூர எரிந்து விட்டு சொல்லை மட்டும் பயன்படுத்து என்கிறார்… சங்ககால புலவர்கள் முதல் ஆழ்வார்கள், நாயன்மார்கள் , சந்தான குரவர்கள், கம்பன் முதற் கொண்டு அனைவரும் கையை கட்டி கொண்டு தங்கள் ஆசான் தொல்காப்பியன் வகுத்த படி செல்லவில்லை. கம்ப ராமாயணம் பாடினானே கம்பன் அவன் பாட்டில் எங்காவது கிரந்த நஞ்சை பார்க்க முடியுமா. கம்பனை விடவா நாம் அறிவுள்ள இந்துக்கள்.. தமிழில் கிரந்த எழுத்துகளை சேர்க்கலாம் என்று ஆதரித்து கட்டுரையே தீட்டினீர்களே https://tamilhindu.com/2010/11/extended-tamil/. அதில் கட்டுரை ஆசிரியர் திரு. வினோத்ராசன் இப்படி சொல்கிறார் ..

  //ஏன், யூனிகோடின் தேவாநாகரி அடிப்படை அட்டவணையில் கூட சமஸ்கிருத ஒலிகளை மட்டும் அல்லாது, எ, ஒ, ற, ழ, ள, ன போன்ற திராவிட மொழி ஒலிகளுக்கான எழுத்துக்களும், சிந்தி, காஷ்மீரி மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்துப்படும் எழுத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த மாத்திரத்திலும் சமஸ்கிருதம் சீரழிந்து விடவில்லை. பாணினி எழுந்து வந்து, “நான் இலக்கணம் சமைத்த மொழியில் ஏன் திராவிட காஷ்மீரி புல்லுருவித்தனத்தை அனுமதித்தாய் ?” என்று யூனிகோடு நிறுவனத்திடம் சண்டையும் போடப்போவதில்லை. இதனால் சமஸ்கிருதம், ஹிந்தி முதலான வடமொழி கணினி முயற்சிகளோ, அல்லது மென்பொருள் செயல்பாடுகளோ செயலற்று போய்விடவில்லை. சமஸ்கிருதம் மற்றும் பிற வட மொழிகளை எழுதுவோர் அவ்வெழுத்துக்களை பயன்படுத்தப்போவதில்லை, அவ்வளவுதான்.//

  நான் ஒன்று கேட்கிறேன் பரதகலையில் ஏன் இந்த கிறித்துவ முத்திரைகளை பயன்படுத்த கூடாது. அந்த முத்திரைகளையும்(holy cross mudra, son of god mudra,The holy spirit mudra) சேர்த்து கொண்டு விரிவாக்க பட்ட பரத கலை என்று ஒன்றை உருவாக்கலாமே. அப்படி சேர்ப்பதால் என்ன பரத முனிவர் எழுந்து வந்து ” நான் சமைத்த கலையில் ஏன் கிறித்துவ புல்லுருவிதனத்தை அனுமதித்தாய் என்று கலாஷேத்ரா நிறுவனத்திடம் சண்டையும் போடபோவது இல்லை. மேலும் அதை பயன்படுத்துவோர் மட்டுமே அதை பயன்படுத்துவார்கள் பிடிக்காதவர்கள் அதை பயன்படுத்த போவது இல்லை அவ்வளவுதான்… கிரந்த எழுத்துகளை சேர்க்க வேண்டாம் என்று தமிழறிஞர்கள் போராடியபோது சில பேரறிவாளர்கள் சொன்னதும் மேல வினோத் ராசன் சொன்ன கருத்தைதான். தமிழறிஞர்கள் தனித்தமிழ் ஆர்வலர்களுக்கு மனதில் ஏற்பட்ட வலி தான் இன்று இங்கு மறுமொழி இட்டிருக்கும் அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வலி இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன் …ஆரியத்தில் எதுவும் கலந்துவிடகூடது அனால் ஆரியம் அனைத்திலும் கலக்கும் எதுவும் கேள்வி கேட்காமல் வாய் மூடி ஏற்று கொள்ள வேண்டும்.. உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா நல்லா இருக்கே நியாயம் .. நிறைவாக ஒன்று சொல்கிறேன்.. பரத கலையில் அயல் கிறித்துவ முறையை புகுத்தியது தப்பு என்றால் தமிழில் கிரந்த எழுத்துகளை புகுத்த நினைப்பதும் தப்பு தான்… இல்லை தமிழில் கிரந்த எழுத்துகளை புகுத்துவதில் தப்பு இல்லை மாறாக அது தமிழின் சொல்வளத்தை வளர்க்க உதவும் என்று நினைத்தால். பரதநாட்டியத்தில் அயல் நாட்டு கிறித்துவ மத குறியீடுகளையும் சேர்பதில் தப்பு இல்லை. பரதகலையின் வளத்தை மேலும் வளர்க்க அது உதவும். இதை படித்து விட்டு என்னை திட்டி தீர்ப்பவர்கள் மகிழ்ச்சியாக திட்டலாம் வசை மாறி பொழியலாம். அவர்களுக்கு நான் சொல்லிகொள்வது ஒன்றே ஒன்று தான்.. “போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பரந்தாமனுக்கே” நன்றி வணக்கம்….

 30. விஸ்வாமித்ரா கேட்டிருக்கும் கேள்விகளுக்கு ரீச் சந்திரா அவர்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
  -ஸ்ரீனி

 31. @ Thayumanavan

  இப்படி ஒரு முட்டாள் தனமான கேள்விகளை நீங்கள் தான் கேட்க இயலும். இங்கு பேசப்படுவது, மதத்தை பற்றியது. நீங்கள் எழுதிய பின்னூட்டத்திலேயே எத்தனை வடமொழி எழுத்துக்கள்.

  நீங்கள் சொன்ன இந்த வடமொழி எழுத்துக்கள் ஒன்றும் மிலேச்சர்களின் சொற்கள் அல்ல. இந்த பாரத நாட்டிற்க்கு சொந்தமானது. க்றிதுவதிர்க்கும் இந்த நாட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை.

  நீங்கள் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா? ஒரு குழந்தை அதன் தாயின் மார்பை தொடுவதும் ஒரு காமுகன் அந்த தாயின் மார்பை தொடுவதிர்க்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால். இரண்டுமே தொடுதல் தான். அதலால் இதில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போன்று உள்ளது.

 32. ஜடாயு அவர்களுக்கு,

  வணக்கம். தவறான செய்திகளை இட்ட பத்திர்கைகள் இன்றும் கோர்ட் கேச் என்று அலைவது உங்களுக்குத் தெரியுமா?

  முதலில் ஒன்றை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். Icons with antiquity value. Icons for worship. இவை இரண்டும் நம் நாட்டில் ஏராளம். இவற்றில் முதலில் கூறியவை பல மகாபலிபுரத்திலும், ஏனைய பல, தொல்லியல்துறையின் மியூசியங்களிலும் உள்ளன. உங்கள் கூற்றைப் பார்த்தால், அனைத்தையும் எடுத்து வெளியே தந்து விடவேண்டும், நித்திய வழிபாடு நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே? நிஜத்தில் நடக்குமா? கட்டாயம் சிலைக் கடத்தல்காரர்கள் உங்களைப் போலும், என்னைப் போலும் அவர்றை மதியாது, வெறும் பணம் காய்ச்சி சிலைகளாகவே பார்த்து, அவற்றை நல்ல விலைக்கு நாடு கடத்தி விடுவார்கள்.

  எனவே,பழங்கால சிலைகள், (பெறும்பாலும் பின்னமானவை, எனவே பூஜைக்கு உகந்தது அல்ல) பாதுகாக்கப் படவேண்டும். அதைத்தான் கலாக்‌ஷேத்ரா செய்ய முற்படுகிறது. அனால், வழிபாட்டிற்கு உரிய எந்த சிலைகளும் அகற்றப் படலில்லை, நீங்கள் சொல்வது போல் வேற்று மத முத்திரைகள் புகுத்தப் படவில்லை, கிறிஸ்தவ ஆசிரியர்கள் திணிக்கப்படவில்லை, மற்றும் தலைமை பூண்ட அம்மணியாரின் அறையில், நம் கடவுளர்களின் சிலைகள் நித்தம் அலங்கரிக்கப்பட்டு, நமஸ்கரிக்கப் படுகின்றன, என்பதையும் என்னால் எப்போதும் எங்கும் சொல்ல முடியும். தேவையில்லாமல், ஒரு பெரும் கலாசாலையையும் அதன் தலைமையையும், அபவாதம் கூறுவது இந்து தர்மத்துக்கே இழுக்கு என்பது என் வாதம். கதையை நீக்குவதன் மூலமே இந்த தவறை நாம் போக்கலாம். இதனால் எனக்கு தவறான முத்திரைகள் பதிந்தால் அதைப்பற்றி கவலைப் படுபவன் நான் அல்லன். ஏனெனில், என் மனசாட்சிக்குத் தெரியும், கண்ணால் காண்பதை மட்டுமே நம்புபவன் நான் என்பது.

  அன்புடன்
  மரபூர் ஜெய. சந்திரசேகரன் எனும் ரீச் சந்திரா

  [edited and published:
  சில தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தரவுகள், அவை பண்பாட்டுடனேயே சொல்லப்பட்டிருந்தபோதும் கூட, தேவையற்றவை என கருதுவதால் நீக்கப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழு]

 33. ஒன்று சொல்ல மறந்து விட்டேன். கோயில்களினால் தான் நம் உடலும், கோயுலும் ஒப்புமையாகும், கலையும் மனமும் ஒவ்வும் என்பதனால், பல அறிஞர்களை வைத்து, எல்லா ஆண்டு மாணவர்களையும் கோயில்களைக் காண heritage cuym education tour நடத்தி வருவது அம்மையார் வந்த பிறகுதான். அந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நான் கூட ஒரு வருடம் மாணவர்களை சிதம்பரம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்கள்க்கு அழைத்துச் சென்றுள்ளேன். வந்த பிறகு, கோயிலைப்பற்றியும், அதன் வரலாறு பற்றியும், அதன் தொன்மை மற்றும் ஐதீகங்கள் பற்றியும் பரீட்சை உண்டு! சும்ம யாரும் ஊர் சுற்றிவிட்டு திருப முடியாது.

  தலைமை ஆடல் அரங்கம் சீரமைத்துக் கட்டப்படுவதால் அதனைச் சுற்றி இருந்த நவீன கால சிலைகளும் அகற்றப்படு, அருங்காட்ட்சியகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. அரங்கம் சீரடைந்தபின் பழைய இடங்களுகே போய்விடும். இன்றும் கேம்பஸில் பல இடங்களில் வழிபாடு செய்வதற்கு தோதாக பல நமது இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன., நித்தியம் பூசை செய்யப்பட்ட பூக்கள் மற்றும் மாலைகளைச் சுமந்து!

  சந்திரசேகரன்

 34. சோழன்
  Hats off to you Sir. What a great reply. The last thing we Hindus need is sanctimonious advise from people like Mr Thayumanavan. He is still suffering from the “Missionary syndrome”called Dravidan/Aryan, Tamil/Sanskrit divide.
  I am also eagerly waiting to hear from Ms Reach Chandra reg questions raised by Mr Viswamithra.
  14 May 2011 at 11:00 pm

 35. //இப்படி ஒரு முட்டாள் தனமான கேள்விகளை நீங்கள் தான் கேட்க இயலும். இங்கு பேசப்படுவது, மதத்தை பற்றியது. நீங்கள் எழுதிய பின்னூட்டத்திலேயே எத்தனை வடமொழி எழுத்துக்கள்.//

  திரு. சோழன் அவர்களே…………..
  உங்களின் இந்த மறுமொழிக்கு நன்றி …… நான் அப்படி என்ன முட்டாள் தனமான கேள்வியை கேட்டேன் என்று தெரியவில்லை… நான் என் மறுமொழியில் எந்த இடத்திலும் இந்து மதத்திற்கு எதிராகவோ அல்லது பரத கலையின் தனி தன்மைக்கு எதிராகவோ ஒரு வார்த்தை பேசவில்லை. மேலும் ஒரு தொன்மையான கலையில் அதன் புனிதத்தன்மையை கெடுப்பதை கண்டித்து தான் மறுமொழியிட்டுள்ளேன். ஒரு இந்துவாக என் மதத்தில் பரங்கிய மதத்தின் ஆளுமை புகுவதை என்னால் ஒரு காலும் ஏற்று கொள்ள முடியாது. என் உயிர் உள்ளவரை அந்த முயற்சியை நான் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தெரிந்த ஒரு கிறித்துவ நண்பர் மற்றும் அவருடைய 4 ,5 கிறித்துவ நண்பர்களோடும் நான் எதேச்சையாக பேசி கொண்டு இருக்கும் போது. அவர்கள் என்னிடம் வந்து இந்து மதம் என்பதே கிறித்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளில் இருந்து தான் உருவானது என்று பைத்தியகாரதனமான வரலாற்றுக்கு தொடர்பு இல்லாத ஒரு வாதத்தை முன்வைத்தார்கள். அவருக்கு இந்துமதத்தின் தொன்மை அதன் தனித்தன்மை அதன் காலவரையறை என்று அனைத்தையும் தக்க சான்றுகளுடன் விளக்கி காட்டி அவருக்கும் அவருடன் வந்த அந்த நான்கு அய்ந்து கிறித்துவர்களின் முட்டாள் தனமான வாதத்திற்கும் குட்டு வைத்து அனுப்பினேன். ஆகவே ஒரு இந்துவாக நிச்சயம் கிறித்துவ புல்லுருவி தனத்தை ஒரு காலும் தெய்வீகமான என் மதத்தில் நுழைவதை நான் பார்த்து கொண்டு இருக்க மாட்டேன் . நான் ஒரு இந்து என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதை விட உண்மை நான் தமிழன் என்பது. ஒரு தமிழனாக கண்டிப்பாக தமிழுக்கு தொடர்பு இல்லாத வடமொழி எழுத்துகளையோ அல்லது உச்சரிப்புகளோ புகுவதை என்னால் ஒரு காலும் ஏற்று கொள்ள முடியாது. என் தாய் மதத்தையும் அதன் கலைகளின் தனி தன்மையையும் பாதுகாக்கும் அதே நேரத்தில் என் தாய்மொழியின் தனி தன்மையை பாதுகாக்கும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. தனித்தன்மை வாய்ந்த தமிழில் பிற மொழிகளின் ஆதிக்கத்தை உறுதியாக ஏற்க முடியாது. இதை முட்டாள் தனம் என்று சொல்கிற உங்கள் அதிமேதாவி தனத்தை நினைத்தால் எனக்கு விழுந்து விழுந்து சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை .

  //நீங்கள் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா? ஒரு குழந்தை அதன் தாயின் மார்பை தொடுவதும் ஒரு காமுகன் அந்த தாயின் மார்பை தொடுவதிர்க்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால். இரண்டுமே தொடுதல் தான். அதலால் இதில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போன்று உள்ளது.//

  உங்களது இந்த பண்பான நாகரிகமான எடுத்துகாட்டிற்கு மிக்க நன்றி… நான் சொல்லவேண்டும் என்று நினைத்ததை நீங்களே கூறியதற்கும் மிக்க நன்றி. நான் தமிழின் தனி தன்மையை பாதுகாக்க வேண்டும் என்று கூறினால் உடனே நான் வடமொழிக்கு எதிரானவன் என்று பொருள் இல்லை. உலகில் இருக்கும் 8 கோடி தமிழர்களும் வடமொழியை கற்றுகொள்ளட்டும் நன்றாக கற்றுகொள்ளட்டும் யாரும் வேண்டாம் என்று கூறவில்லை. அதற்காக அந்த மொழியின் சொற்களையோ உச்சரிப்புகளையோ தமிழில் கலப்பேன் என்று கூறுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. வடமொழி மட்டும் இல்லை தற்சமயம் தமிழில் கலந்து வழங்கி வரும் இந்தி, ஆங்கிலம்,உருது,பாரசீகம் போன்ற எந்த அயல் மொழிகளையும் தமிழில் ஏற்று கொள்ள முடியாது என்பது தான் என் பேச்சு.. மதத்தில் கலப்பு ஏற்பட்டு விடகூடாது என்று நினைக்கும் இந்த இடத்தில தான் மொழியிலும் கலப்பு ஏற்பட கூடாது என்னும் வாதத்தையும் என்னால் வைக்க இயலும். மேலும் உங்களின் எடுத்துகாட்டின் படியே சொல்லவேண்டும் என்றால். தமிழில் தொல்காப்பியர் வகுத்து கொடுத்த இலக்கணத்தின் படி தமிழ்அறிஞர்கள் மொழியில் எழுத்தில் மாற்றம் செய்வதற்கும் சீர்படுத்துவதற்கும். தமிழுக்கு சிறிதும் தொடர்பே இல்லாத வடமொழி எழுத்துகளை உச்சரிப்புகளை புகுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் சொன்ன குழந்தைக்கும் காமுகனுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணரலாம். நன்றி

 36. கொடுக்கப்பட்ட தலைப்பை திசை மாற்றி எடுத்து செல்வது போன்று உள்ளது.

  தமிழில் வடமொழி எழுத்துக்களை சேர்ப்பது என்பது தமிழ் மொழி வளர்ச்சிக்காக அல்ல. .இதை நாம் தமிழில் பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளை தமிழில் எழுத வேண்டும் என்றால் எவ்வாறு எழுதுவது.

  சரி, ஸ்ரீதர் என்ற ஒரு நபர் ஆந்திராவில் இருந்து தமிழ் நாட்டிற்கு வருகிறார். அவர் பெயரை எவ்வாறு தமிழில் எழுதுவிர்கள்? சிறிதர் என்று எழுதுவிர்களா?

  கலாவனைஷன் என்று ஒரு மருந்து இருக்கிறது என்றால் அதை அப்படி தமிழ்ல் எழுதுவிர்கள். அவ்வாறு எழுதப்பட்ட மருந்தை எவ்வாறு கர்நாடகாவில் உள்ள மருந்து கடையில் வாங்குவிர்கள்.

  என்னை பொறுத்தவரை அனைத்து இந்திய மொழிகளும் சாத்விக தன்மை மிக்கது. இவை அனைத்தும் புனிதமானவை. எனக்கு அதில் வேறு பாடு கிடையாது. ஏன் புத்தர் சிலை மற்றும் குருநானக் சிலை எடுத்து பெருமாள் கோயிலில் வைத்தாலும் நான் கண்டிப்பாக கோப பட மாட்டேன். இந்த இந்திய மத கோட்பாடுகளுக்காக நமது பரத நாட்டிய கலையில் சில விசயங்களை சேர்ப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

  ஆனால், தான் வணங்கும் கடவுள் மட்டுமே உண்மை, மற்றவை எல்லாம் சாத்தான் என்று சொல்லும் சாத்தான் கூடங்களின் வெறி பிடித்த கோட்பாடுகளை எங்கள் சொத்தான பரதத்தில் சேர்ப்பதை ஒருக்காலும் ஏற்று கொள்ள முடியாது.

  திருவள்ளுவரையே மத மாற்றம் செய்ய துணிந்த கயவர் கூட்டம், பரத கலையை உருவாகியது ஏசு தான் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

  தமிழில் பிற மொழி உச்சரிப்புக்காக சில எழுத்துக்களை நாம் சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை. இது பாயாசத்தில் பால் கலப்பது போன்றது. ஏன் எனில் சமஸ்க்ரிதம் பாரத மண்னுக்கு சொந்தமானது.

  ஆனால் கிறித்துவ மதத்திற்காக பரத நாட்டியத்தில் சில மாறுதல்கள் சேர்ப்பது பாலில் பாலிடாயிலை கலப்பது போன்றது.

  கீழே உள்ள லிங்க் நீங்கள் படிக்க வேண்டிய ஒன்று.

  https://www.thamizhan-thiravidana.blogspot.com/

 37. தமிழில் பிற மொழிச் சொற்கள் கலவாமை வேண்டும் என்ற கருத்து சரிதான். ஆனால் பிற மொழி எது என வரையறுப்பதில்தான் கருத்து வேறுபாடு வருகிறது.

  இன்று ஹிந்துஸ்தானம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளிலும் சமஸ்க்ருதம் ஐம்பது சதத்திற்கும் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது. நம் தமிழ் மொழியும் இதற்கு விலக்கு அல்ல. நாட்டுப்புறங்களில் ஏட்டுக் கல்வி பெறாதவர் பேசும் வழக்குத் தமிழில் கூட சர்வ சாதாரணமாக சமஸ்க்ருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். அவை எவ்ராலும் வலிந்து திணிக்கப்பட்டவை அல்ல. மிகவும் இயல்பாகக் கலந்துவிட்டவை. அவற்றை நீக்கிப் பேச முற்படும்போது பேச்சே மிகவும் செயற்கையாகிப் போகும். அதுதான் வலிந்து மேற்கொள்ளப்படுகிற திணிப்பாக இருக்கும்.
  மேலும் ஒரு குறிப்பிட்ட மொழியில் குறிப்பிட்ட சில ஒலிக் குறிப்புகளுக் கான, ஓசைகளுக்குப் பொருத்தமான எழுத்துகள் இல்லையேல் அவற்றைப் பிற (கிரந்தம் போல) எழுத்துகளிலிருந்து உருவாக்கிகொளவதில் தவறில்லை. ஏனெனில் கிரந்த எழுத்துகளும் நமது வசதிக்காக நாம் உருவாக்கிக்கொண்டவைதாம். மொழியின் வளர்ச்சியில் உண்மையான நாட்டம் உடையோர் தீண்டாமைக் கொள்கையைக் கடைப்பிடிக்கலாகாது. அது மொழிக்குத் இடையூறு செய்வதாகவே இருக்கும். காலந்தோறும் புதிய புதிய சொற்கள் உலகளாவிய முறையில் உருவாகிக்கொண்டேயிருக் கின்றன. அவற்றையெல்லாம் ஒன்று விடாமல் தனித்தமிழில் மொழி பெயர்த்துப் பயன்படுத்த முனைவதும் புத்திசாலித்தனம் அல்ல. பொருத்தமாகச் சிலவற்றை தனித் தமிழில் உருவாக்கிகொண்டால் போதும். கிராமவாசிகள் மிகவும் அழகாகவும் இயல்பாகவும் பழகு தமிழில் சில சொறகளை உருவாக்கிவிடுகிறார்கள். மாற்றுச் சொல் வேண்டும் என்பதற்காக ஒரு பிடிவாதத்துடன் அவ்வாறு செய்வதில்லை. பொருளை அடையாளப்படுத்த நொடிப் பொழுதில் ஒரு சொல்லை உண்டாக்கிவிடு கிறார்கள். எடுத்துக் காட்டாக வாழைத் தண்டு விளக்கு. ஆனால் பண்டிதர்கள் இதை ஏற்க மாட்டார்கள். மக்களுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. அதேபோல் சமூக வாழ்வில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட அயல் பொருள்களின் அயல் மொழிப்பெயர்களை ஏற்பதிலும் மக்களுக்குப் பிரச்சினை இல்லை. கார், பஸ், லாரி என ஒவ்வொன்றுக்கும் தனித்தமிழில் சொல் உருவாக்குவதில் என்ன பயன்? சரக்க்கு சுமந்து செல்வதிலேயே ட்ரக், டெம்போ, டிப்பர் ஜீப் எனப் பல வகைகள் உள்ளன. ரயில் என்ற சொல் எல்லாவகை ரயில்களுக்கும் பொருந்தும். இந்த அயல் மொழிச் சொற்களை யெல்லாம் நமது மொழிக்குச் சொந்தமாக்கிக் கொள்வதில் தவறு இல்லை. அது மொழியின் வளர்ச்சிக்கு உதவவே செய்யும். இப்போதெல்லாம் ஓசையை உணர்த்த ஃ என்ற எழுத்தை ப் க்கு முன்னால் போடும் வழக்கம் வந்துவிட்டிருக்கிறது. இதற்கு எந்த இலக்கணமும் அனுமதிக்கவில்லைதான். அதனாலென்ன, இலக்கணம் உருவாவதே மொழி உருவாவதற்குப் பிறகு தான். ஒரு மொழியில் எல்லா ஓசைகளையும் வெளிப்படுத்துவதற்கான எழுத்துகள் இருந்தால் அது அந்த மொழிக்குப் பெருமைதான். ஆகவே தமிழில் க்ரந்த எழுத்துகளின் அடிப்படையில் எழுத்துகளை உருவாக்கிக்கொளவதை மொழியின் வளர்ச்சி எனக் கொள்வதே அறிவுடைமை. குறிப்பாக சமஸ்க்ருதச் சொற்கள் தமிழில் இயல்பாகக் கலக்கும்போது அழகாகவே உள்ளது தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்ளாமலேயே பயன்படுத்திக் கொண்டாலுங் கூட.. பிடிவாதமாகத் தனித் தமிழ்ச் சொற்களைத்தேடிப் பிடித்துப் பயன்படுத்து வதும் கிடைக்காவிட்டால் தனித் தமிழில் புதிய சொல்லைத் தோற்று விப்பதும் கேட்பவர்களுக்கு இவர் என்ன கிண்டல் செய்கிறாரா என்கிற சந்தேகத்தைத்தான் தோற்றுவிக்கும். மொழியின் வளர்ச்சி அதன் தாராளப் போக்கில்தான் உள்ளது. பிடிவாதப் போக்கில் இல்லை. மேலும் சமஸ்க்ருதத்தை அயல் மொழியாகக் கருதுவதே நியாயமில்லை. எவரது கட்டாயப் படுத்தலும் இன்றி மக்கள் மொழியில் இயல்பாகக் கலந்து வளம் செய்யும் மொழி அது. நமக்குச் சொந்தமானதுதான். நம்முடையது அல்ல என்று புறக்கணிப்பதால் நஷ்டம் நமக்குத்தான். சமஸ்க்ருதத்துக்கு அல்ல.
  ஒருமுறை நான் அண்ணாவுடன் எழுத்து நடைபற்றிப் பேசிக்கொண்டிருக் கையில் காஞ்சி மணிமொழியார் வந்து குறுக்கிட்டு, அண்ணா, உங்கள் மேடைப் பேச்சிலும் எழுத்திலும் வடமொழிக் கலப்பு அதிகம் உள்ளது. இதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றார். அப்படியானால் அரை மணீநேரங்கூட என்னால் மேடையில் பேச முடியாது. பேசினால் யாருக்கும் புரியவும் புரியாது. எழுதுவது என்றால் ஒரு பாராவுக்குமேல் எழுதமுடியாது என்று அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னார்கள். இதுதான் புத்திசாலித்தனமான போக்கு. இயல்பாக அமைவதைப் புறந் தள்ளல் விவேகம் அல்ல. ,ஸ ஷ ஹ ஆகிய எழுத்துகள் இயல்பாக் வழக்கில் வந்துவிட்டவை. அவற்றை வழக்கில் கொள்வதே மொழிக்கு நன்மை செய்வதாக இருக்கும். மேலும் பல க்ரந்த எழுத்துகள் பயன்பாட்டில வருதலும் வரவேற்கத்தக்கதே. இப்போது நமக்கு சங்கரன் என்பதற்கு சரியான உச்சரிப்புக்குரிய எழுத்து இல்லை. இதேபோல் விசுவ என்பதற்கும் உரிய உச்சரிப்பு இல்லை. அதற்குரிய கிரந்த எழுத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல் மொழிக்கு நலம் சேர்ப்பதாகவே இருக்கும். இந்த விஷயத்தில் தேவையின்றி உணர்ச்சிவசப் படலாகாது.
  -மலர்மன்னன்

 38. திரு தாயுமானவன் ஏன் இப்படி? நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?

  சுடலின்- ஸ்டாலின் ,சனவரி-ஜனவரி, சூலை-july, சாங்கிரி- ஜாங்கிரி,
  சிவாசி-சிவாஜி,தமிழர்களின் உச்சரிப்பு இனி இப்படிதான் இருக்க வேண்டும் என்கிறீர்களா?
  தமிழ் பற்று எனக்கும் உண்டு. ஆனால் தோசை போன்ற சில பிற வார்த்தையை சொல்லாமல் தவிர்க்க முடியாது. சிவாசி என்று சொல்ல முடியாது பிற மொழி வார்த்தைகளும் ஒலி வடிவும் தவிர்க்க இயலாது. இது மொழி கலப்பு அல்ல, ஆனால் எவை எவை பிறமொழி எழுத்துக்கள், வார்த்தைகள் என்ற விழிப்புணர்வு, வேறுபாடு தெரிந்து இருந்தால் போதும். ஆனால் இதற்கும் பரதத்துக்கும் ஒப்பு வைக்காதீர்கள்.அங்கு புகுத்தப்படும் கிறித்தவ முத்திரைகள் அக்கலையை கபளீகரம் செய்வதற்காக உள்நோக்குடன் திணிக்கபடுபவை. நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளுங்கள். இப்போதே அவர்கள் இந்து மதமும் வேதங்களும் கிறித்துவத்தை அடிப்படையாக கொண்டது என்று கூறுகிறார்கள்.
  மாணிக்கவாசகரே தினமும் கர்த்தருக்கு ஸ்தோத்திர பலி செய்வதாய் எழுதி வைத்துள்ளார்கள்.

  இது இப்படியே போனால் வெகு விரைவில் பரதம் கிறித்தவ கலை என்று கூறிவிடுவர். அவர்கள் பிணம் போல படுத்து கொண்டு கூட புதிய பிரேத முத்திரை என்று ஒன்று கண்டு பிடிக்கட்டும் ஆனால் அவை இஸ்ரேலிதம் என்ற புது பெயருடன் தாராளமாக இருக்கட்டும். பரதத்துக்கு பிரேத முத்திரை ஆகாது.அனுமதிக்ககூடாது.

  திரு ரீச் அவர்களே திரு விச்வமித்ராவின் கேள்விகளுக்கு உரிய பதிலை தரவும்.

 39. இப்படித்தான் கால்டுவெல் பாதிரியார், ஒப்பிலக்கணம் எழுதினார் என்று தலையில் வைத்துக் கொண்டாடினர்… வீரமாமுனிவர், ராபர்ட் நொபிலி ஆகியோரும் இருந்தனர்… சந்நியாசி பொன்னியம்மா, சாது செல்லப்பா என்று இதைப் போல இன்னும் எத்தனயோ பேர்கள் சந்தேகப் படாமல் நம்பி வருகிற இந்துக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்… இதையெல்லாம் இத்தனை நாள் யாரும் துணிந்து எழுதி எக்ஸ்போஸ் செய்ய வில்லை. தமிழ் ஹிந்து மட்டுமே செய்யத் துணிந்திருக்கிறது.

 40. ramaa, srini, Viswamithran,

  The answers are already there in my earlier reply. The antiquities are revered but are broken or distorted, they were removed from temples once and discarded by the villagers, which have been meticulously collected by paying huge sums those days by Rukmini Devi herself and had been brought into Kalakshetra as collections. I told you there are 2 categories:

  Antiquities which are not under worship
  Icons those are under Puja.

  Like in ASI temple, for example the BIG temple, the temple is preserved as heritage, the Shiva Linga is still worshiped as regular puja deity.

  But all other fake stories of forcing other religious symbols into the curriculum is incorrect and a story made of pure imagination and fiction. I love Hinduism as equal or good as you all love. But I hate fanatism and hatred spread under the pretext of bringing out realities, which in reality are not existing.

  And we have some 4 temples project in hand for renovation before onslaught of monsoon. I would rather spend my time on renovating these, than replying to all people who ask imaginary questions.

  REACH Chandra

 41. அண்மைக்காலமாக தமிழ்ஹிந்து இணையதளம் சில சிறுகதைகளை வெளியிட்டு வருகிறது. இவை புனைவுகள். யதார்த்த சூழல்களை அடிபப்டையாகக் கொண்டவை. தாண்டவம் சிறுகதையும் அத்தகைய ஒரு புனைவு.இது சுட்டும் யதார்த்தத்தின் களம் கலாக்ஷேத்ரா என்பது உண்மையாக இருக்கலாம். இந்த புனைவு ஒரு முக்கியமான பிரச்சனையை பேசுகிறது. இதில் சொல்லப்பட்டுள்ளதாக கருதப்படும் யதார்த்த களத்திலிருந்து சில தரவுகள்:

  1. கலாக்ஷேத்ராவை உருவாக்கிய ருக்மணி அருண்டேல் ஹிந்து தெய்வ வடிவங்களை சத்திய வெளிப்பாடாகக் கண்டார். பரத நாட்டியத்தையும் அதன் அடிப்படையில் ஒரு ஆன்மிக சாதனையாக கண்டார். இதற்கு அவருடைய கட்டுரைகள் சொற்பொழிவுகள் (கலாக்ஷேத்ராவே வெளியிட்டது) தொகுப்பிலிருந்து பல எடுத்துக்காட்டுகளை தரலாம்.

  2. மாறாக லீலா சாம்ஸன் ஹிந்து தெய்வ வடிவங்களை இதிகாச புராண பாத்திரங்களை அமெரிக்க கார்ட்டூன் பாத்திரங்களுடன் ஒப்பிடுகிறார். இது அவரது வார்த்தைகளிலேயே இருக்கின்றது.

  இதன் அடிப்படையிலேயே கலாக்ஷேத்ராவில் இருந்த தெய்வ வடிவங்கள் அருங்காட்சியக சிற்பங்களாக மாற்றப்பட்ட சூழலை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. இந்த பார்வை முரண்பாட்டையே இக்கதையை நீக்கக் கோருவோர் விளக்க வேண்டும்.

  இந்த இணைய தளம் ரீச் பவுண்டேஷனை பெரும் மதிப்புடனும் மரியாதையுடனும் காண்கிறது. அந்த அமைப்பு நம் பண்பாட்டுக்கு நம் கோவில்களுக்கு செய்து வரும் தொண்டு மகத்தானது. எனவே அந்த அமைப்பைச் சார்ந்தோர் கூறும் கருத்துகளை மதிப்புடன் எதிர் கொள்கிறது. எதிர்க்கவில்லை. அதே நேரம் வெளியிட்ட புனைவை நீக்க ஆசிரியர் குழு எவ்வித அவசியத்தையும் காணவில்லை. மாறாக இக்கதையின் யதார்த்த களமாக கருதப்படும் அமைப்பினைக் குறித்த தரவுகள் தவறு என கருதுவோர் அதனை சுட்டிக்காட்டி ஒரு காத்திரமான கட்டுரையை எழுதினால் அதை கட்டாயம் த.ஹி. வெளியிடும்.

 42. இந்தக் கதை கலைத் துறையில் நாம் எதிர் நோக்கும் அபாயங்களை சித்தரித்துக் காட்டுகிறது.

  இந்திய சமூகத்தின் வரலாறு ஆழமானது. இங்கே கலை வளர்ந்தது போல வேறெங்கும் கலை வளர்ந்ததா என்பது சந்தேகமே. இந்தக் கலையும் ஆன்மீகத்தை ஒட்டியதே.

  இந்தியாவின் அமைதியான ஆன்மீகத்தின் வெளிபாடுகளுள் ஒன்றுதான் கர்நாடக இசையும், பரதமும்.

  இசையை , நாட்டியத்தை உணர்ச்சிகளை தூண்டவும் உபயோகப் படுத்தலாம் , மனதை அமைதிப் படுத்தி ஆன்மீக முன்னேற்றம் அடையவும் உபயோகப் படுத்தலாம். மங்கையர்க்கரசி என்ற படத்தில் காதல் கனி ரசமே என்ற பாடலை P.U.சின்னப்பா சிறப்பாகப் பாடி இருப்பார். ஆனால் அந்தப் பாடலை இப்போது யாருக்கும் தெரியாது- அதன் இடத்தை மம்மத ராசா…. மம்மத ராசா.. பாடல் பிடித்துக் கொண்டு விட்டது.

  அதே நேரம் தியாகராசர் கீர்த்தனைகள் இப்போதும் உள்ளன, எப்போதும் இருக்கும் – காரணம் அவை மனதை அமைதிக்கு , சிநேகத்துக்கு, அன்புக்கு இட்டு செல்லுகின்றன. அதுதான் இந்திய கலையின் சிறப்பு.

  இந்திய ஆன்மீகம் இல்லாமல் இந்திய கலைகள் மணம் இழந்த மலர் ஆகி விடும். மத வெறி கோட்பாட்டில் மணம் சிக்கி அதைப் பரப்பும் செயலில் ஈடுபடுபவர்கள் விரும்புவதும் அதுதான்.

  ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பது போல, இந்திய கலைகளையும் சிதைத்து, அவை இந்திய ஆன்மீகத்துக்கு அளித்து வந்த பங்களிப்பை யும் நிறுத்துவது அவர்களுக்கு உபயோகம் ஆகும். இப்படி செய்தாலன்றி அவர்களால் வெறுப்புணர்ச்சி கருத்துக்களை இந்தியாவில் பரப்ப முடியாது.

  சகிப்புத் தன்மை கூடாது என்பதுதான் அவர்கள் கோட்பாடு. பிற மதங்களின் வழிபாட்டு தலங்களை அழித்து சிலைகளை உடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் புனித நூலில் உள்ளது. பிற மத தெய்வங்களின் சிலைகளை பார்த்தால் அவர்களுக்கு குரோதமும், வெறுப்பும், கோவமும் வருகிறது. சிலைகளை அகற்றி விட்டுத் தான் வேறு வேலை பார்க்கிறார்கள்.

  ஆனால் இந்தியப் பண்பாட்டில் வந்த சரியான இந்தியனோ, பிற மதத்தினர் மதிப்பு கொடுப்பவற்றின் , வணங்க்குபவற்றின் சிலையை, படத்தை பார்த்தால் நாமும் மதிப்பு கொடுப்போம் என்று செயல் படுகிறான்.

  மத சகிப்பு தன்மையை இழந்து மத வெறியில் சிக்கியவரை மீட்டு, அவரை சகிப்புத் தன்மை உடைய நாகரிக மனிதராக்குவது இன்று இந்தியாவை எதிர் நோக்கியுள்ள முக்கிய சவால்களுள் ஒன்று.

 43. இந்து மதத்திற்கு சமஸ்கிருதத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் இந்து மதத்தின் ஆணி வேர் உண்மையே. இந்து மதம் எந்த ஒரு மொழியையும் நம்பி இடுக்கவில்லை. அதை உண்மையை ஆதாரமாக கொண்டு உள்ளது. இந்து மதத்தை பற்றி தமிழ் நாட்டில் தமிழர்களிடம் பிரச்சாரம் செய்யும் போது வட மொழிக் கலப்பு அவசியம் இல்லாதது.

  பட்டினத்தாரோ, அப்பரோ, சித்தர்களோ, நாயன்மார்களோ , ஆழ்வார்களோ சமஸ்கிரிததை தமிழுடன் கலந்து இந்து மதத்தை பிரச்சாரம் செய்தார்களா? 600 கோடிப் பொன்னை விட்டு விட்டு கட்டிய துண்டுடன் தெருவில் இறங்கிய பட்டினத்தார் அறியாத இந்து மத தத்துவம் இல்லை. அவர் எழுதிய தமிழ் பாடல்களை படித்து பாருங்கள். அதில் வட மொழிக் கலப்பு இருக்கிறதா, எந்த அளவு இருக்கிறது என்று பாருங்கள்

  தமிழ் நாட்டில் இருப்பவருக்கு சமஸ்கிருதம் தெரியாது. கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்று பிடிவாதம் செய்வது பின்னடைவையே உருவாக்கும்.

  இந்து மதம் சுதந்திரமான மதம். ஒவ்வொரு இந்துவும் சுதந்திரமாக சிந்திக்கவும், தான் கண்டறிந்தவ ற்றை சொல்லவும் முழு உரிமை குடுக்கும் மதமாகும். தமிழ் மொழியின் தலை மகனாம் அகத்தியனும், அவர் சீடன் தொல்காப்பியனும் இந்துக்கள் தான்.

  தமிழ் சமுதாயத்தில் கண்ணன் வழிபாடு, முருகன் வழிபாடு இருந்ததற்கு முதல் சான்று பகர்வது தொல்கப்பியாயமே. தொல்காப்பியாயத்திலே தமிழ் மொழி க்கு என்ன என்ன எழுத்துக்கள் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். இந்தியாவின் மிக தொன்மையான மொழி- language- (மொழி என்பது பேச்சு, எழுத்து இரண்டும் அமைந்த ஒன்று) தமிழ் மொழியே. சமஸ்கிருதம் மிக தொன்மையானது என்பதில் ஐயமில்லை, ஆனால் அது ஒரு dialect மட்டுமே.

  இந்தக் கட்டுரையின் முக்கிய பொருளை விட்டு விலகி விவாதிப்பது அவசியம் இல்லாதது. தமிழருக்கு மொழியே தெய்வம் போன்றது, அவர்கள் மொழியின் மேல் ஆதிக்கம் செய்ய இயலாது. சமஸ்கிருதமும் , தமிழும் நல்ல நண்பர்களாக இந்திய சமுதாயத்தை, இந்து மதத்தை வளர்த்து வந்துள்ளன. இப்போது தமிழ் மொழியில் சமஸ்கிரத எழுத்துக்களை கலப்படம் செய்து நட்பை கொச்சைப் படுத்த வேண்டியதில்லை.

 44. அற்புதமான புனைவு.
  ஜடாயுவுக்கு பாராட்டுக்கள்.

  புனைவில் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாடு குறையும்போது அது உண்மைக்கதை ஆகிறது. தாண்டவம் உண்மையை வெளிப்படச் சொல்கிறது; வெடிப்புறச் சொல்கிறது. கதையின் முடிவு உத்வேகம் அளிக்கிறது – ஜெயமோகனின் ‘அறம்’ கதை போல.

  நமது பாரம்பரியம் வளர்க்க துவக்கப்பட்ட பல அமைப்புகளின் நிலை இக்கதையில் புனைவாகக் காட்டப்பட்டுள்ளது. பரத நாட்டியம் குறித்த துல்லியமான தகவல்கள் கதையில் பாவிக் கிடக்கின்றன. ஜடாயுவின் எழுத்தாற்றலுக்கு அவை சான்றுகள்.

  சிவனின் நாட்டியம் அழிக்க முடியாதது. ஏனெனில் அதுவே ஊழித் தாண்டவம் தான். ஊழிக்கு ஏது ஊழி? நாட்டியத்தின் ஆழிக்கு யாராலும் வேலி போட்டுவிட முடியாது. எனினும் மக்களின் விழிப்புணர்வு, கலைகளை மதமாற்றம் செய்யாமல் தடுக்க அவசியம். அதற்கு இக்கதை அரிய உதவி செய்திருக்கிறது.

  ஜடாயுவுக்கு நன்றி.

  – சேக்கிழான்

 45. கலாட்சேத்ராவில் பார்வை படும் இடங்களில் வைக்கப்பட்டிருந்த இந்து தெய்வச் சிலைகள் ஒரு ம்யூசியத்துக்குள் கொண்டு போய் வைக்கப்பட்டுள்ளது எனின், அது கண்டனத்துக்குரியதே.

 46. இது ஒரு சிறுகதையே அல்ல. கலைகள் அபகரிக்கப்படும் ஒரு தேசியத்தின் இதயக் குமுறல். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

 47. Ms Reach Chandra, I am sorry to say that your answers are vague to questions posed by Mr Viswamithra. I went through your earlier response and I could not find answers to questions 2,3 and 4. (Or for the matter to the first one , sorry, your response is insipid)
  I know that you are a busy person. We all are. I have a surgery to run and treat the sick too.
  In spite of your busy schedule, I hope you will take time to respond, point by point, to the above questions posed by Mr Vishwamitra and others.You can answer simple questions, like, whether Christian muthras, are used in your institution or not?
  I request Mr சோழன், Mr திராவிடன் (தென்னாடுடையான்) or other eminent persons well versed in Tamil,Sanskrit( unlike me) answer to atrocious statements made by Mr Tiruchikaran ( eg: சமஸ்கிருதம் மிக தொன்மையானது என்பதில் ஐயமில்லை, ஆனால் அது ஒரு dialect மட்டுமே. இப்போது தமிழ் மொழியில் சமஸ்கிரத எழுத்துக்களை கலப்படம் செய்து நட்பை கொச்சைப் படுத்த வேண்டியதில்லை.) My surname is Krishnan. I like to be called Krishnan and not Kritinan. I am as much Tamilian and I just want to be called my name, thank you.
  With due respect, I presume, Mr Tiruchikaran, who ALSO worships Christ, had made note of the following statement ( #C.N.Muthukumarqaswamy இயேசு வழிபாடு = பிரேதவழிபாடு. நன்றி கந்தர்வன்)

 48. அன்பு நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு……..
  //பட்டினத்தாரோ, அப்பரோ, சித்தர்களோ, நாயன்மார்களோ , ஆழ்வார்களோ சமஸ்கிரிததை தமிழுடன் கலந்து இந்து மதத்தை பிரச்சாரம் செய்தார்களா? 600 கோடிப் பொன்னை விட்டு விட்டு கட்டிய துண்டுடன் தெருவில் இறங்கிய பட்டினத்தார் அறியாத இந்து மத தத்துவம் இல்லை. அவர் எழுதிய தமிழ் பாடல்களை படித்து பாருங்கள். அதில் வட மொழிக் கலப்பு இருக்கிறதா, எந்த அளவு இருக்கிறது என்று பாருங்கள்//

  நான் இந்த கருத்தை ஒத்து கொள்கிறேன் மேற்கண்டவர்களின் பாடல்களில் அவ்வளவாக வடமொழி சொற்கள் கிடையாது நூற்றுக்கு ஐந்து விழுக்காடு என்கிற அளவில் தான் சமற்கிருத மொழி கலப்பு இருக்கிறது . அனால் அவர்களின் பாடல்களில் எங்கவாது வடமொழி உச்சரிப்பை காண முடியுமா. தகுந்த இடங்களில் அவர்கள் வடமொழி சொல்லை கையாண்டு இருந்தாலும் தமிழின் உச்சரிப்பை கொண்டு தான் கையாண்டு இருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு மாறான ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ போன்ற உச்சரிப்புகளை எங்கும் பார்க்க முடியாது. என்னுடைய வாதம் இந்த ஐந்து எழுத்துகளும் இல்லாமல் தமிழ் வலம் வரவேண்டும் என்பது தான். நிச்சயம் நான் சமற்கிருத மொழி மீது உள்ள வெறுப்பால் பேசவில்லை .அழகான கலைநயமான ஒன்றை ஒருவன் வெறுக்கிறான் என்றால் அவனுக்கு அறிவில் ஏதோ கோளாறு என்று தான் அர்த்தம். அந்த வகையில் சமற்கிருத மொழி மிக அழகான கலைநயமான மொழி அதன் பெயருக்கு ஏற்ப அது நன்கு செய்யப்பட்ட மொழிதான் ஆகவே அதை யாரும் அவ்வளவு எளிதில் வெறுத்துவிட முடியாது. இப்போது இங்கு யாரும் சமற்கிருத மொழியை வெறுக்கவில்லை. தமிழின் மீது செய்யப்படும் சமற்கிருத திணிப்பை தான் நாம் வெறுப்பது. இந்து மதத்தின் ஒரு தனி தன்மை வாய்ந்த தொன்மையான் கலையில் செய்யப்படும் கிறித்துவ கலப்பட நஞ்சை கண்டிக்கும் இந்த இடத்தில் “தனித்து இயங்ககூடிய மொழியின் மீதும் கலப்படம் செய்ய வேண்டாமே என்கிற கருத்தை கூறினால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து தான் முன்வைத்தேன்”மற்றபடி யாரையும் புண்படுத்த அல்ல. மேலும் ,

  //இந்தக் கட்டுரையின் முக்கிய பொருளை விட்டு விலகி விவாதிப்பது அவசியம் இல்லாதது.//

  பலரும் இந்த கருத்தை கூறுவதால் இனிமேலும் இதை தொடர்வது நாகரிகமாக இருகாது என்று எண்ணுகிறேன். ஆகவே இந்த மொழி கலப்பு என்கிற வாதத்தை இத்தோடு முடிக்கிறேன். பொருத்தமான வேறு ஒரு இடத்தில் இந்த வாதத்தை பற்றி பேசலாம். இந்த கட்டுரைக்கு தொடர்பான செய்தியை பற்றி மட்டும் இனி விவாதிக்கலாம். இந்து மதத்திலும் மற்றும் அதன் கலையிலும் ஊடுருவ நினைக்கும் கிறித்துவ நஞ்சை எப்படி அடித்து துவம்சம் செய்து அதை கல்லறைக்கு அனுப்பலாம் என்பது பற்றி தொடரட்டும் நன்றி.

 49. இந்த சிறுகதை சில அடிப்படை கேள்விகளை எழுப்புவதை யாராலும் தவிர்த்து விடமுடியாது. ஆலந்தூர் மள்ளன் அதை தெளிவாக சொல்கிறார். இந்திய கலைகள் அபகரிக்கப்படுகின்றன.

  அபகரிக்கப்படுகின்றன என்று சொல்லும்போதே அது யாரால் என்ற கேள்வியும் வருகிறது. கிட்டத்தட்ட நமது அம்பது வருட பாரம்பர்யத்தை எடுத்துப்பார்த்தால் கிருத்துவர்கள் அதை முன்னின்று நடத்தியிருப்பது நன்றாகவே தெரியவரும். இந்தியாவில் கிருத்துவத்தை முழுவதுமாக ஊடுருவச்செய்யவேண்டும் என்றால், நமது கலாசார பழக்கவழக்கங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு அதை செய்யமுடியாது என்பதை நன்றாகவே உணர்ந்த திருச்சபைகள், இந்துக்கள் வழிபாட்டு முறைகளான தூபம் தீபம் நைவேத்யம் போன்ற முறைகளையும், பூவிட்டு வணங்குதலையும் சர்ச்சுகளில் அனுமதித்திருப்பதை காணமுடிகிறது.

  கிருத்துவ பாடல்கள் கூட ஏற்க்கனவே இருக்கும் இந்து பஜனை பாடல்கள் மெட்டில் பாடப்படுகிறது. அகண்டம் என்று சொல்லப்படும் நாம ஜபம் கூட இப்போது தஞ்சை மாவட்டத்தில் பெருவாரியாக நடந்துகொண்டிருக்கிறது. இது மக்களை கவர்ந்திழுக்கும் ஒரு உத்தியாக கிருத்துவ மத அமைப்புக்களால் தெளிவான உள்நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. நமது சாஸ்திரிய

  இசையில் கூட திடீர் என்று முளைத்த “ஆப்ரஹாம் பண்டிதர்” பிராபல்யம் சிலிர்க்க வைக்கிறது. அவர் எழுதிய புத்தகத்தை படித்தாலே நமக்கு தெளிவாக விளங்கும் அவர் ஒரு பைபிளின் வடிவத்தில் இசை ஆராய்ச்சி செய்ய முனைகிறார் என்று. இந்த புத்தகத்தின் ஆரம்ப பகுதிகள் படித்தாலே தலை கிர்ரென சுற்ற ஆரம்பித்துவிடும். நானே பத்து பக்கம் படித்ததும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் அல்லேலூயா என்று கத்தினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். (https://www.tamilvu.org/library/l9800/html/l9800bod.htm )

  நம் கலை நாம் வாழும் பூமியின், நமது காலாதீதமான கலாசார பரிணாமத்தின் வேர்களில் இருந்து கிளைத்து வருவது. அது குறித்து நாம் பெருமை கொள்ளவேண்டும். உலகிலேயே மிகப்பெரிய பாரம்பரியத்தை சார்ந்தவர்களாக நாம் இருக்கிறோம். எத்தனையோ நூற்றாண்டுகளின் பங்களிப்புகளில் நமது கலாசாரமும், பண்பாடும் மெருகேறி இருக்கின்றது.

  இன்று நம் போலி மதச்சார்பிமை வாதத்தாலும், போலி அறிவு ஜீவித்தனத்தலும், போலி முற்போக்கு வாதத்தாலும், நமது கலாசாரத்தை நாமே அழித்துக்கொள்ளும் ஒரு நிலைக்கு இறங்கி வந்திருப்பது வெட்கக்கேடான ஒரு நிலை. நெஞ்சை நிமிர்த்தி இது என் பூமி, இது என் கலாசாரம், இது என் கலை என்று சொல்லும் தைரியம் கூட நமக்கு இல்லை என்றால் அதை விட ஒரு துர்ப்பாக்கிய நிலை இருக்கமுடியாது.

  நான் சொல்கிறேன், இது என் கலை, என் கலாசாரம், என்னுடைய பூமி, இதை அவனிஷ்டத்திற்கு மாற்றி எழுத எவனுக்கும் உரிமை இல்லை. என் கலை திட்டமிட்டு அழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. பரதம் என்பது இந்தியாவின் பாரம்பரியமான கலை. இதில் இன்னொரு கேவலமான நிலை என்னவென்றால், இதை வெறும் விபச்சாரிகள் நடனம் போல சித்தரிக்கும் இந்துக்களை என்ன சொல்ல?

  கிட்டத்தட்ட சினிமா மூலமாக தமிழ் திரையிசை மேற்க்கத்திய இசை மட்டுமே என்ற நிலையிலேயே இருக்கிறது. நடனமும் பின்பக்கத்தில் மின்சாரம் வைத்ததுபோல விலுக் விலுக் என்று மேற்கத்திய பாணியில் ஆட்டுவதாகவே இருக்கிறது.

  சபாஷ் ஜடாயு, உங்களைப்போன்ற ஒருவர் இதை பலர் உரைக்க பேசுவது நம் நல்லூழ்.

  //தவறான செய்திகளை இட்ட பத்திர்கைகள் இன்றும் கோர்ட் கேச் என்று அலைவது உங்களுக்குத் தெரியுமா?

  மிரட்டல்.. இல்லையா? 🙂 🙂

  நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை செய்பவர்களின் கையில் வெறும் பாவைகளாக நிற்பது நம்முடைய பெருந்தன்மை அல்ல, இயலாமை. வெட்கம் !!

 50. Wonder why my comments are not published? I know comments on Tamil/Sanskrit is not the topic being discussed. Then, why we have few people indulging on this and have their views published? My take on Mr TK is frank and precise .
  .

 51. Dear Sri REACH Chandra,
  I am a layman and I do not understand the difference between devotion and duty. I am also very slow in undersanding intricate subjects. However, I am aware of your great job and I am one of your admirers. Atleast, I have that much of understanding.
  Malarmannan

 52. தமிழ்நாட்டில் இது தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது. சென்னையில் கலாச்சேத்ரா எப்படி செக்குலர் நிறுவனமாக முதலில் மாற்றப்பட்டு பிறகு கிறிஸ்துவ நிறுவனமாக ஆக்கப்படுகிறதோ அதை விட தீவிரமாக கிறிஸ்துவ நிறுவனமாகவே துவங்கப்பட்ட கலைக்காவிரி திருச்சியில் பாரம்பரிய கலைகளை கிறிஸ்துவ மயமாக்குவதில் இறங்கி வெற்றியும் பெற்றிருக்கிறது.

  இதன் விஷத்தன்மை புரியாமல் பல இந்துக்கள் இதனை ஆதரித்திருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை கலைக்காவிரிக்கு அனுப்பி நடனம் இசை படிக்க அனுப்புகிறார்கள்.

  கலைக்காவிரியை விட சிறப்பானதாகவும், கலாச்சேத்ராவை விட பெரியதாகவும் தமிழ் இந்துக்கள் ஒரு கலாச்சார நிறுவனம் துவங்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

  சென்னையில் ஏராளமான தேவை இருக்கிறது. தங்கள் குழந்தைகளை இசை நடனம் படிக்க அனுப்பு சிறப்பான இந்து கலை அமைப்புகள் இல்லை. அவற்றை துவங்குவது பெரிய வேலை இல்லை. இங்கே படிக்கும் எழுதும் இந்துக்கள் முனைப்புடன் துவங்கினால் பெரும் வெற்றி அடையும்.

  இதே போல இந்து கான்வெண்டுகளையும் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து நம் பிள்ளைகளை கான்வெண்டில் சேர்க்க அலைகிறோம். ஆனால் இப்படிப்பட்ட பத்து பேர் சேர்ந்தால் ஐம்பது லட்சமாகிவிடும். இந்த ஐம்பது லட்சத்தில் ஒரு காண்வெண்டையே உருவாக்கிவிடலாம். இருப்பினும் இந்துக்கள் ஐந்து லட்சம் கொடுத்து கிறீஸ்துவ காண்வெண்டில் இடம் பிடிக்க அலைகிறார்கள்.

  எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.

  எந்த இந்துவும் தன் குழ்நதைகளை கிறிஸ்துவ பள்ளீக்கூடங்களுக்கு அனுப்பக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துகொள்ளவேண்டும். வீட்டில் ஏசு படத்தையே வைக்கக்கூடாது என்னும்போது தினந்தோறும் அந்த படத்தை பார்க்கும்படியான கிறிஸ்துவ பள்ளிக்கூடத்துக்கு ஏன் குழந்தைகளை அனுப்பி மனதை கெடுக்க வேண்டும்.
  இந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

 53. What more evidence do we need?
  This is incultration at its worst. We know what will be the consequence.

  https://www.thehindu.com/arts/dance/article2034

  Steps of devotion
  Ambili Ramnath

  Reverend Dr. Saju George’s performance presented the nritta and the natya aspects of Bharatanatyam.

  The golden jubilee celebrations of the Kerala Jesuit Province at Loyala College in Thiruvananthapuram provided a platform for Reverend Saju George to perform and exhibit his abundant talent as a Bharatanatyam dancer, composer and choreographer. Dr. Saju is a Jesuit priest of Calcutta Province and has a Master’s in dance, and a doctorate in the Philosophy and Religion of Indian Classical Arts. Although his home State is Kerala, this is perhaps his first performance on ‘˜home ground.’

  The hour-long recital obviously could not contain the repertoire of a full length Bharatanatyam recital, but Dr. Saju had carefully selected the pieces to present both the nritta and the natya aspects of dance. The recital began with a traditional pushpanjali dedicated to Lord Ganesha, followed by alarippu. The next number was ‘Ananda natamidum padan’ in praise of Lord Nataraja of Chidambaram — a simple piece, neatly executed. However, it could have done with a little more exuberance, depicting as it were the ‘ananda natanam’ of the Lord and perhaps, embellished with some of the 108 karanas for which Chidambaram is noted. The fact that the artiste was male would have stood to the dancer’s advantage too.

  Biblical themes

  The latter half of the programme featured two pieces inspired by Biblical themes both composed and choreographed by Dr. Saju. The keenly awaited keerthanam ‘˜Kandu njan thirumeniye, mara kurissil thoongum thirudehi’ was an intense expression of devotion and takes inspiration from the works of St. Ignatius. To quote Dr. Saju: “It depicts the passion, death and resurrection of Christ and takes one through the core of the Christian mystical experience and ends in surrender to the Lord.

  ‘˜Kurissil pidanju pidanjen nathan’ was the line chosen for delineation and portrayed moving incidents such as that of Saint Veronica, who, overcome with pity as she encounters Jesus on the way to Calvary, offers him her veil and wipes the sweat off his forehead. Equally emotional in content was the depiction of Mother Mary holding the body of her son.

  The choreography brought to light Dr. Saju’s resourcefulness when he redefined mudras to incorporate them into the Bharathanatyam vocabulary and make it amenable to the Biblical themes.

  The music for this keerthanam composed by Fr. Paul Poovathinkal is in the form of a raga malika in six ragas and it is to his credit that the ragas chosen aptly reflected the pathos and the piety that were the prevailing moods of the piece.

  Dedicated to Mother Mary

  The whole project was supervised by Professor C.V. Chandrasekhar who is Dr. Saju’s guru. A vibrant and crisp thillana dedicated to Mother Mary of Velankanni ‘˜Velankanni vazhum amme, nal varam nalkum amme’ came as a fitting finale to this very unique and enjoyable performance by Dr. Saju..

  What is exceptionally commendable about Dr. Saju ‘s work is that it does not sacrifice tradition for innovativeness – a fact that speaks for the high calibre of the artiste as well as the adaptability that is possible within the strong foundation of the Indian classical art.

 54. அன்பர்களே,
  இங்கே வெறுமனே வெறுமனே வாய்ச்சவடால் விடும் வீரர்கள், உண்மையாக தொண்டு செய்யும் REACHChandra போன்றோரை மீண்டும் மீண்டும் வம்பிழுக்க வேண்டாம் என கேட்டுகொள்கிறேன். நமக்கு மலர்மன்னன் ஐயா போன்ற நிதானமே பலம். அனாவசியமாக உண்மை தொண்டர்களை புண்படுத்த வேண்டாம்.
  நன்றி,
  சிங்கமுத்து

 55. இக்கதையை திரு. சந்திரமௌலி அவர்கள் நண்பர் ஆனந்த கணேஷ் உதவியுடன் சிறப்பாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அவருக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மொழியாக்கம் இங்கே –
  https://jataayu.blogspot.com/2011/06/tandavam-short-story.html

 56. கதகளியையும் அபகரிக்கும் கிறிஸ்தவர்கள்:

  https://expressbuzz.com/states/kerala/now-kathakali-gets-a-catholic-expression/294921.html

  By Babu K Peter
  17 Jul 2011 02:26:40 AM IST

  Now, Kathakali gets a catholic expression

  KOCHI: Kathakali is no longer bound by Hindu mythologies or epics. It is set to make a foray into the heart of Christian religious beliefs. For the first time, the message and essence of Holy Eucharist (Qurbana) will be recreated through Kathakali. Jesus Christ will be presented in the costumes of a sage.

  The 90minute performance titled ‘Divya Karunya Charitam’ (Story of Holy Eucharist) is based on the poem ‘Ithu Ninakkai’ (This is for you) written by lyricist Fr Joy Chencheril.

  The first performance is scheduled to be held at the Pastoral Orientation Centre on July 21. Major Archbishop of SyroMalabar Church Mar George Alencherry will inaugurate the show.

  Apart from the concept, Fr Joy is giving consultation also. The script of the ‘Divya Karunya Charitham’ for the Kathalali form is written by Radha Madhavan and the choreography is by Kalamandalam Sajan. Eight dancers led by Sajan will give expression to the mystery of Holy Eucharist while Kottackal Madhu will sing the Kathakali songs.

  “Holy Eucharist is the sum and substance of Christian faith. We hope that Kathakali too will find a place on the Catholic Church premises where programmes such as cinematic dance, mimicry and music programmes dominate during festivals,” said Fr Joy.

  “The performance seeks to communicate the selfgiving message of Jesus. Holy Eucharist epitomises the sharing of love. Kathakali, because of its poise and rhythm, can well express this spirit of sharing the selfemptying love,” he said.

  Fr Joy and the team of artists led by Kalamandalam Sajan had begun their efforts for the innovative venture five months ago.

  A member of the Missionary Congregation of the Blessed Sacrament (MCBS), Fr Joy has penned a number of popular Christian devotional songs. He has also won many awards for the best and popular Christian devotional song for his contributions to the devotional songs genre. Fr Joy is now working on a collection of songs for Bible dance.

  “Art is important, not the religion,” said noted Kathakali artiste FACT Padmanabhan.

  “It’s good if the story presented through Kathakali is digestive for the viewers. Shakespearean plays have been presented in Kathakali form and the people have accepted it,” he said.

 57. ஜடாயு,

  // கதகளியையும் அபகரிக்கும் கிறிஸ்தவர்கள்: // “அபகரிப்பு” என்ற வார்த்தைப் பிரயோகம் சரிதானா?

 58. ஒரு கதையை நாட்டிய வடிவில் கூறுவதே கதகளியாகும். கிறிஸ்துவ கருத்துக்களை அந்த கலையின் மூலம் கூறுவது எப்படி அபகரிப்பாகும்?
  கிறிஸ்துவ கருத்துக்களை “மட்டும் தான்” கதகளியின் மூலம் கூறவேண்டும் என்று யாராவது சொன்னால் அது அபகரிப்பு என சொல்லலாம்.

 59. // RV
  ஜடாயு,

  // கதகளியையும் அபகரிக்கும் கிறிஸ்தவர்கள்: // “அபகரிப்பு” என்ற வார்த்தைப் பிரயோகம் சரிதானா?//

  ஆர்.வி, சரிதான் என்று நினைக்கிறேன்.

  கதகளி விஷயத்தில் மிகத் தெளிவாக பூஜை / வழிபாட்டின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக, கோயில் சார்ந்த அந்தக் கலை இருந்து வருகிறது. கதகளி கற்றுக் கொள்வதில் இருந்து நிகழ்த்துதல் வரையில் கலைஞர்கள் பல பூஜைகள், சடங்குகள், விரதங்களை மேற்கொள்கிறார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பாத்திரத்தை பரிபூரணமாக ஏற்கும் கலைஞரிடம் அந்த தெய்வம் பிரசன்னமாகி விடுகிறது என்பது போன்ற உணர்வுகளும் இந்தக் கலையின் இன்றியமையாத அம்சமாகும் (ஜெயமோகனின் ‘லங்கா தகனம்’ படித்திருப்பீர்களே?) . கதகளி ஆட்டத்தை பெண்கள் ஆடக் கூடாது என்ற அழகியல் மரபு கூட மீறப் படாமல் இன்றுவரை காப்பாற்றப் பட்டு வருகிறது.

  இப்படி ஒரு கலையில் கிறிஸ்தவம் எதற்காக மூக்கை நுழைக்கிறது? அதற்கு என்ன அவசியம்? கலை அபிமானத்தின் காரணமாக கிறிஸ்தவர்கள் தாராளமாக கதகளி கற்றுக் கொள்ளட்டும், அதற்கு தடையில்லை.. ஆனால், அந்தக் கலையின் வடிவத்தை திரித்து, அதனை வக்கிரமாக்கும் இந்த முயற்சி அருவருக்கத் தக்கது. ஒருவர் வீட்டுக்கு வந்து அங்கிருக்கும் அழகிய ஓவியத்தைத் திருடி அதில் தன்னுடைய படத்தையும் சேர்த்து வரைந்து கொள்ள முயல்வது போன்ற ஒரு கேவலமான செயல் இது.

  நான் 3 சீனியர் நடனக் கலைஞர்களிடம் இது பற்றிப் பேசினேன்.. அதில் ஒருவர் கூட இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தெய்வீகக் கலையை அசிங்கப் படுத்துவது என்று தான் சொல்கிறார்கள்.

 60. கதகளியை நீங்கள் கலையாகக் கருதவில்லையா? ஹிந்துயிசத்தின் கூறாகத்தான் கருதுகிறீர்களா? நாளை கதகளி மூலம் 1857 விடுதலைப் போரையோ, கட்டபொம்மன் கதையையோ சித்தரித்தால் அதையும் அபகரிப்பு, அசிங்கப்படுத்துவது என்றுதான் சொல்வீர்களா?

  கதகளியில் கிறிஸ்துவம் நுழையும் புரட்சிக்கும் மரபுக் கவிதையை உடைத்து புதுக்கவிதை வந்த புரட்சிக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்? எனக்கு நினைவு தெரிந்து கி.வா.ஜ. போன்றவர்கள் புதுக்கவிதை கவிதை மரபை அசிங்கப்படுத்துகின்றது என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்…

 61. அபகரிப்பு பிரயோகம் சரி தான்

  கிறிஸ்தவத்தை புகுத்தி கலையை மேம்படுத்தினால் பரவா இல்லை – முடிவில் என்ன நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே – கதைகளை என்பதே வாஸ்கோடகாமா கப்பலில் எல்லை ஆடிக்கொண்டே வந்து கொச்சியில் தரை இறக்கியது – கதக்களியில் ஹிந்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிராமணர்கள் தான் புகுத்தினார்கள், இதை அறுத்தெறிய வேண்டும் கதகளிக்கும் ஹிந்துக்களுக்கும் ஏன்டா சம்பண்டும் இல்லை இருக்கக் கூடாது என்று சட்டம் வர வேண்டும் என்பது போன்ற பிடர்ரல்களை நீங்கள் சீக்கிரம் கேட்பிர்கள் . ஏற்கனவே ஒரு பைத்தியக்கார கூட்டம் இந்திய கோடியில் இருக்கும் வெள்ளை நிறம் கிறிஸ்தவத்தை குறிக்கும் என்று உளறிக் கொண்டு இருக்கிறது – அங்கு தான் தர்ம சக்கரம் இருக்கிறதாம் கிறிஸ்தவம் தான் அதனால் ஒசத்தியாம்.

  எதையுமே சரி தவறு என்று சொல்வதற்கு முன் லக்ஷ்யத்தின் வாயிலாக பார்க்க பழகி கொண்டால் நல்லது – சட்டத்தின் வாயிலாக பார்த்தோமானால் கஷ்டம் தான். அது நமக்கு சரி பட்டு வராது.

 62. அன்புள்ள ஆர்.வி,

  கதகளியை கேரள இந்துப் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த ஒரு செவ்வியல் கலைவடிவமாகவே பார்க்கிறேன். அது நாட்டார் கூறுகள் கலந்த செவ்வியல் கலை என்பதால், பண்பாட்டில் இருந்து பிய்த்து எடுத்து இஷ்டத்துக்கு மாற்றுவது, அல்லது “பயன்படுத்துவது” என்பது, அந்தக் கலையையும் அதன் அடிப்படை அழகியலையுமே சிதைப்பதாகும் என்று நானும் மற்றும் பல நடனக் கலைஞர்களும் கருதுகிறோம்.

  // நாளை கதகளி மூலம் 1857 விடுதலைப் போரையோ, கட்டபொம்மன் கதையையோ சித்தரித்தால் அதையும் அபகரிப்பு, அசிங்கப்படுத்துவது என்றுதான் சொல்வீர்களா? //

  நான் சொல்ல மாட்டேன்.. .ஏனென்றால் இங்கு மோசமான உள்நோக்கமோ, பண்பாட்டு திரிப்பு/அழிப்பு முயற்சியோ இல்லை. ஆனால் கலை/அழகியல் நோக்கில் இது அவ்வளவு சிறந்த முயற்சியாக மதிப்பிடப் படாது என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். பிரசார இலக்கியம் எப்படி நல்ல இலக்கியம் ஆகாது என்று பலமுறை பல இடங்களில் எழுதியிருப்பவர் நீங்கள் :))

  ஆனால் இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இப்படியெல்லாம் செய்வதற்கு அவசியமே கூட ஏற்படவில்லை. இந்து இதிகாச, புராணங்களே சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதமாக கலையிலும், இலக்கியத்திலும், வெகுஜன கலாசாரத்திலும் சித்தரிக்கப் பட்டன, அவ்வாறே தேசிய பிரக்ஞையில் புரிந்து கொள்ளப் பட்டன. பாரதி பாஞ்சாலி சபதம் எழுதினார்… காந்தி ராமராஜ்யம் பற்றி பேசினார். திலகர் வினாயகர் விழா நடத்தினார். வள்ளி திருமண நாடகத்தின் நடுவில் தேசியப் பாடல்கள் வந்தன.. இந்து கலை, பண்பாட்டுக் கூறுகளுடன் மிக இயல்பாகவே இந்திய தேசிய பெருமிதமும் உணர்வும் ஒன்று கலந்து விட முடியும் என்பதற்கு இவை உதாரணங்களாகவே திகழ்ந்தன என்று சொல்லலாம்.

 63. // கதகளியில் கிறிஸ்துவம் நுழையும் புரட்சிக்கும் மரபுக் கவிதையை உடைத்து புதுக்கவிதை வந்த புரட்சிக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

  இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை.. இவை முற்றிலும் வேறு வேறானவை.

  புதுக் கவிதை என்பது நவீன காலகட்டம் உருவானபோது, கவிதை என்ற இலக்கிய வடிவம் அடைந்த பரிணாம வளர்ச்சி. எளிமை, மிகை உணர்ச்சி தவிர்த்தல், நேரடியாகப் பேசும் பாங்கு, சமகால பிரக்ஞை, மொழியின் அனாவசிய தளைகளை அறுத்தல் ஆகியவற்றால் உந்தப் பட்டு, அன்றைய இலக்கிய சூழலின் சிறந்த கவி மனங்கள் புதுக்கவிதையை வளர்த்தெடுத்தனர். இது ஒரு பெரிய பாய்ச்சல், வெறும் cosmetic ஒட்டுவேலை அல்ல.

  கிறிஸ்தவ மதப்பிரசார தீம்களை கதகளி என்ற பழைய கலை வடிவத்தில் கொண்டு போய் ஒட்டுவதை எப்படி மேற்சொன்னதுடன் ஒப்பிட முடியும்? புதுக்கவிதை கவிதையை முன்னெடுத்துச் சென்றது. ஆனால் இந்த சமாசாரம் கதகளியில் கலைரீதியாக என்ன புதுமையை, என்ன முன்னெடுத்தலை செய்கிறது?? ஒன்றும் கிடையாது, இது ஒரு மேம்போக்கான கலைத் திருட்டு மட்டுமே. கிறிஸ்தவம் தன்னையும் இந்தியாவின் ஒரு பாரம்பரிய மதமாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறது, கதகளி போன்ற கலைகளின் பண்பாட்டு மதிப்பையும், அவற்றிற்கு மக்கள் மனதில் இருக்கும் செல்வாக்கையும் கண்டு, அதனை ஒரு மதப்பிரசார உத்தியாக பயன்படுத்த விழைகிறது. அதில் விளைபவை தான் இந்த சமாசாரங்கள்.. இந்துத்துவர்கள் மட்டுமல்ல, செவ்வியல் கலை ரசிகர்கள் அனைவருமே இதை விமர்சிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்.

 64. தூங்குபவர்களை எழுப்பலாம்,தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப ஏன் நீங்கள் இவ்வளவு சிரமபடுகிரீர்கள் திரு ஜடாயு,
  கிரித்தவர்களைவிட கிறித்தவ ஜிங்சக் களின் தொல்லை ஓவர்,

 65. நமது நுண்கலைகள், அரங்கக் கலைகள் யாவும் சமயம் சார்ந்தவை. ஆனால் அவற்றுக்கு மத மாற்ற நோக்கம் இல்லை. அதற்கு அவசியமும் எழவில்லை. சைவ- சமண மத மாற்றங்களுக்குகூட வாதப் பிரதி வாதங்கள்தாம் தளமாக இருந்தனவேயன்றி கலைகள் பயன்படுத்தப் படவில்லை.
  நுண்கலைகளையும் அரங்கக் கலைகளையும் நாம் அழகியல் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறோம். இந்த மண்ணுக்கும் மனோபாவத்திற்கும் ஒட்டாத வெளியிடங்களிலிருந்து வந்த சமயங்கள் இங்குள்ள நுண்கலைகளையும் அரங்கக் கலைகளையும் ப்யன்ப்டுதிக்கொள்ள் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும் என்று யோசிக்க வேண்டும். தொடக்கத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப இங்கு வந்த வெளிநாட்டவர்களில் சிலர் நமது பாமர மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே காவி தரித்து கமண்டலம் ஏந்தி நெற்றியில் நீறும் பூசித் திரிந்தது நினைவிருக்க வேண்டும். அதேபோல் இங்குள்ள சமுதாய அமைப்பில் சாதி முறை இருப்பதைக் கண்டு மதப் பிரசாரத்தை முடுக்கிவிடத் தமக்குள் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு பிரிவு மற்ற்வர்களுக்கு ஒரு பிரிவு என்று பங்கு போட்டுக்கொண்டு மதப் பிரசாரம் செய்ததும் அவ்விரு பிரிவினரும் ஒருவரை மற்றவர் ஒதுக்கி வாழ்ந்ததும் எதற்கு? இங்குள்ள சமூக அமைப்பைப் போற்று முகமாகவா? இதேபோல் இந்த மண்ணுக்குரிய நுண்கலைகளையும் அரங்கக் கலைகளையும் வெளியிலிருந்து வந்த மாற்று சமயத்தினர் பயன்படுதுவது உள்நோக்கதுடன்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். மத மாற்ற நோக்கம்தான் நமது நுண்கலைகள், அரங்கக் கலைகள் மீதான ஆக்ரமிப்பும்.
  நிற்க, கவிதை மட்டுமே உண்டு. அடையாளப் படுத்துவத்ற்காகத்தான் மரபுக் கவிதை புதுக்கவிதை என்று பிரித்துப் பேசுகிறார்கள். இரண்டிலுமே குப்பைகள் உண்டு. சங்க காலக் கவிதைகள் கட்டமைப்பிலும் உள்ளடக் கத்திலும் புதுக்கவிதையையும் விஞ்சுபவை.
  மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் இரு கவிதை வடிவங்கள். கதக் களி என்ற அரங்கக் கலை வடிவத்தை அப்படியே கிறிஸ்தவ சமயச் சார்புள்ள கதைக்குப் பயன்படுதிக்கொள்வதற்கும் மரபுக் கவிதை-புதுக் கவிதை வடிவங்கள் தோற்றத்திற்கும் என்ன சம்பந்தம்? மேலும் புதுக் கவிதையின் பயன்பாட்டை ம்ரபுக் கவிதையை உடைத்து கொண்டு வந்த புரட்சி என்றெல்லாம் கருதத் தேவையில்லை. இரண்டும் இரு வடிவங்கள் அவ்வளவே. மேலும் புதுக் கவிதைகளையும் யாப்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு பா வகைக்குள் கொண்டு வந்து விட முடியும்.
  -மலர்மன்னன்

 66. ஜடாயு ஐயா,
  RV அவர்கள் சொல்வதே சரி என்று படுகிறது.
  கதகளி ஒரு நதி போல, அதில் இருந்து நீங்கள் பயபக்தியோடு நீர் மொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறீர்கள், அந்த கத்தோலிக்கர் மேரி மாதாவுக்கு செய்கிறார். நீங்கள் மிக பயபக்தியோடு அந்த நீரை பயன் படுத்துவதால், அந்த நதிநீர் அம்மன் அபிஷேகத்துக்கு தவிர எந்த ஒரு செயலுக்கும் உபயோக படுத்த கூடாது என்று சொல்லலாமா?

 67. //ஏற்கனவே ஒரு பைத்தியக்கார கூட்டம் இந்திய கோடியில் இருக்கும் வெள்ளை நிறம் கிறிஸ்தவத்தை குறிக்கும் என்று உளறிக் கொண்டு இருக்கிறது – அங்கு தான் தர்ம சக்கரம் இருக்கிறதாம் கிறிஸ்தவம் தான் அதனால் ஒசத்தியாம்.//
  அப்போ பச்சை நிறம் இஸ்லாமா? ஐயோ. ஐயோ. எனக்கும் இந்த வியாதி வந்திருச்சே…

 68. This article is shocking.

  I think satyabhama devi did a huge mistake, albeit inadevrtently by taking a christian as her chief disciple.

  If 1 christian enters an institution, he goes out of his way to promote his community.

  We see many companies as examples.

  It is in their blood, that is the pity. They are obsessed with numbers i.e conversion.

 69. ஜடாயு,

  // கிறிஸ்தவத்தை புகுத்தி கலையை மேம்படுத்தினால் பரவா இல்லை // கலையை மேம்படுத்துகிறதா இல்லையா போன்றவை தனிப்பட்டவரின் ரசனை சேர்ந்த விஷயங்கள் என்பது நீங்கள் அறியாததா? நாக்கமுக்கா பாட்டு இசையை தாழ்த்துகிறது என்று நீங்களும் ரமணி சந்திரனின் எழுத்துக்கள் இலக்கியத்தை கெடுக்கிறது என்று நானும் நினைக்கலாம். அதனால் ரமணி சந்திரன் எழுதக் கூடாது, அப்படி எழுதினால் அதை யாரும் படிக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? நீங்கள் உங்கள் ரசனையை அடிப்படையாக வைத்து இது கலையின் மோசமான வெளிப்பாடு என்று “தீர்ப்பு” சொல்வதும், கலையை “திருடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுவதும் வேறு வேறு.

  // பண்பாட்டில் இருந்து பிய்த்து எடுத்து இஷ்டத்துக்கு மாற்றுவது, அல்லது “பயன்படுத்துவது” என்பது, அந்தக் கலையையும் அதன் அடிப்படை அழகியலையுமே சிதைப்பதாகும் என்று நானும் மற்றும் பல நடனக் கலைஞர்களும் கருதுகிறோம். // இதே “வாதத்தை” நீங்கள் புதுக் கவிதைக்கும் பயன்படுத்தலாம் அல்லவா? பண்பாட்டில் இருந்து பிய்த்து எடுத்து புதுக்கவிதை இஷ்டத்துக்கு மாறவில்லையா? வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா என்ற பாரம்பரியத்தை, “அடிப்படை அழகியலை” சிதைக்கவில்லையா? கி.வா.ஜ. போன்ற அப்பழுக்கற்ற தமிழறிஞர்கள் அந்த எண்ணத்தை வெளிப்படுத்தவில்லையா? உங்களுக்கு அது ஏன் பிரச்சினையாக இல்லை?

  இது கலை சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்ததில்லை. பார்த்தவர்கள் ஏதாவது கருத்து சொல்லிக் கூட கேட்டதில்லை. அது கலையை மேம்படுத்துகிறதா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் கதகளிக்கு உங்கள் மனதில் இருக்கும் எல்லைகளை மீறுவது உங்களுக்கு எரிச்சல் தருகிறது. அது மதம் சார்ந்த எல்லை, கதகளி ஹிந்துயிசத்தின் கூறு என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் நம்பிக்கை, நான் அப்படி நினைக்கவில்லை என்பதைத் தவிர நமக்குப் பேச ஒன்றுமில்லை. கதகளி என்ற கலையில் பாரம்பரியமாக ஹிந்துயிசம் சார்ந்த தீம்களே வந்திருக்கிறது, ஆனால் கலையின் எல்லைகளை ஹிந்துயிசம் நிரனயிக்காது, அது கலை என்றே நீங்கள் நினைத்தால் ungaL எண்ணங்களை நீங்கள்தான் விளக்க வேண்டும்.

 70. மேதாவி என்பதும் வியில முடியுது சிலர் பெயர் வியில முடியறதால ரெண்டும் ஒண்ணுன்னு நெனச்சிகிட்டு ஏதோ ஏதோ பேசாரம்பிச்காச்சு – இதெல்லாம் அமெரிக்காவுக்கு மட்டுமே அதுவும் ரேடியோ டிவீல பேச தான் ஒத்துவரும். என்பது நமக்கு என்னைக்கு தான் விளங்கப் போகுதோ

  ஏதோ அது ஒரு கலை மட்டுமே – யார் என்ன செய்தா என்னான்னு கொஞ்சம் கூட பற்றில்லாமல் பேசுவது நியாயமே இல்லை. அந்த நடனக் கலையை கஷ்டப்பட்டு பயின்று அதுவே உயிர் என வாழும் ஒருவரின் உணர்ச்சிகளை நாம் அறிந்திருக்கவா போகிறோம். அது அவருக்கு கலை மட்டுமா, உயிரினும் மேலானது அல்லவா. ஜடாயு அவர்களின் இந்த சிறுகதை அந்த உணர்சிகளை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. அது சரி, கதக் கலியும் பரதமும், பாழா போன நமக்கென்ன – நாம சொக்க்யமா தானே இருக்கிறோம். நாம எதையாவது இப்படி நேசித்திருந்தால் தானே தெரியும். கலை மேல் உயிரினும் மேலாக மரியாதை வைத்திருந்தால் தானே தெரியும். நம்ம வீடா பத்தி எரியுது. – நெட்டுல நீதி சொல்லுவோம். யாரும் எடுத்து கூறினாலும் நம்ம பாய்ன்டயே ரிபீட் பண்ணுவோம். நமக்கு வேண்டியதெல்லாம் நாம் ஒரு மேதாவி என்று நிரூபித்தே ஆக வேண்டும் என்பதே. இதுக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா.

  தமிழ் ஹிண்டுல எழுதறதே வேஸ்டுன்னு சொல்லுவோம் – ஆனா ஒவ்வொரு எழுத்தா உன்னிப்பா படிச்சிட்டு இழ்டம் போல எழுதுவோம். இவர்களின் எழுத்தை படிக்கறது தான் வேஸ்டுன்னு நான் சொல்லுவேன்

  இதே போக்கில் போனால். நம்ம நாடு என்று ஏதாவது உண்டா. எல்லாம் நிலம் தான். வெள்ளை காரன் வந்து நம்ம ஆட்சி செஞ்சா ஏன்னா. சுதந்திர போராட்டம் எல்லாம் சுத்த வேஸ்டு. அது சிலருடைய view point அவ்வளவு தான். நாட்டு பற்று எல்லாம் தனி மனித ரசனை – வெளி ஆள் நம்ம நாட்ட திருடுறான் என்று தீர்ப்பு சொல்வெதெல்லாம் தவறு. இந்தியா நாம நாடு, நமது பண்பாடு இந்த நாட்டின் கூறு என்று நினைத்தால் அது நினைப்பவரின் தவறு என்றெல்லாம் பேசிகிட்டே போகலாம் .

  ஒரு கணமேனும் உணர்ச்சியுடன் வாழ்ந்து பாருங்கள்

  ஹே பாரத மாத எங்களுக்கு சம்ஸ்கிருதியை தா

  வருத்தத்துடன்

 71. ஆர் வீ,

  உங்களுடைய வாதம் பெரிய டுபாக்கூராக இருக்கிறது.

  “கலையை மேம்படுத்த கிறிஸ்தவத்தைப் புகுத்தலாம்” என்று திரு. ஜடாயு சொன்னாரே தவிர, “நான் சொல்வதுபடி தான் மேம்படுத்த வேண்டும்” என்று அவர் சொல்லவில்லை.

  நீங்களே சொல்லுங்கள்

  இன்றைக்குப் புதுக்கவிதை செய்யும் எந்த தமிழ்ப் புலவனும் தமிழிலக்கிய வளர்ச்சிக்குத் தொல்காப்பியர் – வள்ளுவர் – கம்பர் – புகழேந்தி போன்றவர்களின் பங்கை மேடைகளில் வாயாற வாழ்த்துகின்றனர்.

  கம்பர் கூட இராமாயணத்தில் பல புதுமைகளைச் செய்துள்ளார். ஆனால் அவர் தொடக்கத்தில் வால்மீகியை மரியாதையோடு வணங்குகிறார். இதைப் போல,

  பாரதத்தில் தோன்றிய கலைகளைப் பிரச்சாரக் கருவியாக உபயோகிக்கும் எந்தக் கிறித்தவராவது, அக்கலைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பாரத வரலாற்றில் தலைசிறந்த மகான்களையோ, அக்கலைகளை வளர்த்த பாரதப் பண்பாட்டின் மேன்மையையோ, பாரத சமூகத்தையோ, அல்லது பக்தி இயக்கங்களையோ புகழ்ந்திருக்கிரார்களா? மாறாக, அக்கலைகளைக் கொண்டு ஆதிக்க பீடாதிபதியாகிய போப் போன்றவர்களைப் புகழ்வதற்காக உபயோகிக்கிறார்கள்.

  உங்களுக்கே தெரியும். கிறித்தவம் கலையுலகில் நுழைந்துவிட்டால் என்னாகுமென்று. “உண்மையில் தேவகுமாரின் புகழ் பாடுவதற்கே தேவதூதனால் பரத முனி தூண்டப்பட்டார். அந்த தேவ கட்டளை இப்போது நம்மால் பூர்த்தியாகிறது” போன்ற வாதங்கள் தான் வளரும்.

  இதைத் தான் தாமஸ் புரட்டர்கள் திருக்குறளுக்குச் செய்து வருகின்றனர். இப்படியே பகவத் கீதை விஷயத்திலும், சைவத்தில் மாணிக்கவாசகர் விஷயத்திலும் இவர்கள் தங்களுடைய அழுக்குக் கைகளை வைக்க ஆரம்பித்தனர்.

  கலை, கவிதை – இவற்றை பிரச்சாரக் கருவிகளாக உபயோகிப்பதைத் தான் இங்கு எதிர்க்கப்படுகிறது.

  இதையெல்லாம் நீங்கள் கேட்டு ஒப்புக்கொள்வீர்கள் என்ற நப்பாசையில் எழுதவில்லை. உங்கள் அபவாதத்தைக் கண்டு மற்றவர்கள் மயங்க வேண்டாம் என்பதற்காகத் தான்.

  ஆர்வத்தினால் கேட்கிறேன் – எந்த விஷயத்திலாவது நீங்கள் தவறு என்று ஒப்புக்கொண்டு வாபஸ் வாங்கியதுண்டா?

 72. கந்தர்வன் அவர்களே

  நானே பதில் தருகிறேன் 🙂

  //
  பாரதத்தில் தோன்றிய கலைகளைப் பிரச்சாரக் கருவியாக உபயோகிக்கும் எந்தக் கிறித்தவராவது, அக்கலைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பாரத வரலாற்றில் தலைசிறந்த மகான்களையோ, அக்கலைகளை வளர்த்த பாரதப் பண்பாட்டின் மேன்மையையோ, பாரத சமூகத்தையோ, அல்லது பக்தி இயக்கங்களையோ புகழ்ந்திருக்கிரார்களா// என்ன சொல்ல வருகிறீர்கள் முன்னோரை புகழ்ந்தால் தான் கலையை வளர்பதென்று ஆகுமா. புகழ வேண்டும் என்று ஏன் தீர்ப்பு கூறுகிறீர்கள்

  //
  கலை, கவிதை – இவற்றை பிரச்சாரக் கருவிகளாக உபயோகிப்பதைத் தான் இங்கு எதிர்க்கப்படுகிறது.// இப்படி நீங்களே ஏன் தீர்ப்பு எழுதுகிறீர்கள் என்று தான் கேட்கிறேன்

  எங்களுக்கு கேள்வி கேட்டு கேட்டு ரொம்ப நாள் பழக்கம் இருக்கு
  🙂

 73. //கி.வா.ஜ. போன்ற அப்பழுக்கற்ற தமிழறிஞர்கள் அந்த எண்ணத்தை வெளிப்படுத்தவில்லையா? -ஸ்ரீ ஆர்.வி.//

  கி.வ. ஜ. ஒரு தமிழ்ப் பண்டிதர். அவர்களுக்கு செய்யுள்தான் தெரியும். அதாவ்து செய்யப்படுவது. கவிதைகளை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலாது. கவிதை என்கிற விஷயமே ஒரு சுதந்திரமான எழுச்சி. அப்பழுக்கற்ற தமிழறிஞர்கள் என்றால் என்ன அர்த்தம்? ஒரு கால கட்டத்தோடு படைப்பபிலக்கியத்தைத் தாண்டாத போக்கா? ஆனால் கி.வா.ஜ. கலைமகளில் கு ப. ரா, புதுமைப் பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா. எனப் பலருக்கு இடமளித்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அது ஒரு அதிசயம். ஆனால் அதன் பிறகு உருவான படைப்பிலக்கியங்களை அவர் பொருட்படுத்தவில்லை. கருணாநிதியின் எழுத்தை மட்டும் சிலாகித்தார்!
  -மலர்மன்னன்

 74. இதை படித்து அதிர்ச்சியும், துக்கமும் அடைகிறன் ,ஆடல் கலைக்கு அரசன் நடராஜன் அன்றோ , மதத்தில் இருந்து விடுவிக்க இது சிறைப்பட்டு இல்லை இறையோடு நிறைபட்டு இருக்கிறது. உங்கள் மேடம் நீல ஜான்சன் போன்ற பச்சை துரோகிகள், உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்களுக்கு, உண்ணும் உனவிற்கும் மற்றதற்கும் பேதம் தெரியாது. அவளின் குறிக்கோள் பரதத்தை கிறித்துவ மயமாக்குவதே .இவர்களை போன்ற அந்நிய அடிமைகளை பதவில் இருந்து விலக்கி, நம் பாரம்பரிய நடனத்தை காக்க வேண்டும். நடராஜன் அருளட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *