கணபதி பப்பா மோரியா ! அடுத்த வருசமும் வாரீயா ?

கொண்டாடத்தான் வாழ்க்கை ! கொண்டாடச் சொல்லுகிறான் தும்பிக்கை..

14 Replies to “கணபதி பப்பா மோரியா ! அடுத்த வருசமும் வாரீயா ?”

 1. எனக்கு வீடியோப் பிள்ளையார் தெரிகிறாரே !

  ஒரு வேளை உங்கள் பெயரைப் பார்த்து பயந்து மறைந்து கொள்கிறாரா ?

  .

 2. இது என்ன இவரும் பொறாமை உள்ள கடவுளாகி பெயரை கண்டதும் காட்சி தர மறுக்கிறாரா?
  விநாயகா உன் சோதனைக்கு அளவே இல்லையா?

 3. எனக்கு அந்த வீடியோ தெரியவில்லை.

  ‘’This video contains content from Eros Entertainment and Tseries Music, one or more of whom have blocked it on copyright grounds “

  youtube ல் பார்க்க முயற்சி செய்த பொழுது இந்த message தான் வந்தது.

 4. எனக்கும் கடாக்ஷிக்கவில்லை; காப்பிரைட் உரிமையின் அடிப்படையில் தடுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு மட்டும்தான் வருகிறது.

 5. நான் தம்பி தானே? எனக்கும் தெரியவில்லையே ?
  ஏதோ காப்பிரைட் விக்னம் போலும். அவராகப்பார்த்து விலக்கினால் தான் உண்டு.

  சரவணன்

 6. இங்கே ஒருவருக்கும்… எனக்கும் காட்சி தர மறுக்கும் இக் காணொளிப் பிள்ளை களிமிகு கணபதி அவர்களுக்கு மட்டும் காட்சி கொடுத்த மர்மம் என்ன..?

 7. இப்போது வீடியோவின் இணைப்பு சரி செய்யப் பட்டு விட்டது. வாசகர்கள் விநாயக சதுர்த்தி விசர்ஜனம் பற்றிய இந்த இனிய அனிமேஷன் குறும்படத்தைக் கண்டு களிக்கலாம். வீடியோவை அனுப்பி வைத்த களிமிகு கணபதி அவர்களுக்கு நன்றி.

 8. பார்க்கும் பொழுதே எனக்கு வயிறு எரிகிறது. வணக்கத்திற்குரிய ஓம்கார க்டவுளை ஒரு cartoon கதாப்பாத்திரம் போல மாற்றி விநாயகப் பெருமானை அசிங்கப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், நாமே நமது இறைவனை இவ்வாறு அவமானப்படுத்தினால் மற்றவர்கள்? ஒரு கோயிலில் என் காதால கேட்ட ஒரு விசயம்… வந்தவாசி அறுகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலுக்கு சென்று இருந்தேன். ஒரு தந்தை தனது மகனுடன் வந்து இருந்தார். மகன் சொன்னன்… அப்பா, இது கிருஷ்ணர் தானே… இவர் cartoonil வந்து இருக்கிறார். இவர் cartoon தானே என்று. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கூட ஆத்திரம் அடைந்தேன். அவர் தந்தை அவனுக்கு அவர் cartoom அல்ல கடவுள் என்று புரியவைத்தார். தேவையா இது எல்லாம்…

  எங்கள் ஊரில் முதலில் இருப்பதை இப்பொழுது ஆன்மிக ஆர்வம் மக்களிடம் அதிகரித்து உள்ளது என்பதை நான் பல கோயில் செல்லும் பொழுது பார்த்த பொழுது மகிழ்ச்சயாக இருந்தது. ஆனால் கிறித்துவர்கள் ஹிந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொளவது அதிக அளவில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதற்கு மிஷினரிகள் ஆதராவாக செயல் படுகிறார்கள். இது போதாது என்று கம்யூனிஸ்டுகள் காதல் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நோட்டிஸ் வேறு…..

 9. //…பார்க்கும் பொழுதே எனக்கு வயிறு எரிகிறது. வணக்கத்திற்குரிய ஓம்கார க்டவுளை ஒரு cartoon கதாப்பாத்திரம் போல மாற்றி விநாயகப் பெருமானை அசிங்கப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், நாமே நமது இறைவனை இவ்வாறு அவமானப்படுத்தினால் மற்றவர்கள்? ..//

  கோமதி செட்டி,

  நானும் உங்களோடு சேர்ந்து இந்த வீடியோவைக் கண்டிக்கிறேன். உங்களைவிட 10% அதிகம் கண்டிக்கிறேன்.

  பிள்ளையார் பல வடிவங்களில் இருப்பார், இறுதி உண்மையாகவும் இருப்பார் என்று சொல்லும் இந்தக் கார்ட்டூன் பிள்ளையாரைக் கார்ட்டூனாகவும் மாற்றி இருக்கிறது. ஓம்காரக் கடவுள் எப்படி கார்ட்டூன் வடிவத்தில் இருக்க முடியும் ?

  அவர் வானுலகில், மேகங்களின் மேலே மனிதர்களை நரகத்திற்கும், சொர்க்கத்திற்கும் அனுப்பும் ஆண்டவன் அல்லவா ? குண்டு வைத்துக் கொலைகள் செய்பவர்களுக்கு 7 கன்னிப் பெண்களை ஏற்பாடு செய்து தருவதுதானே அவரது வேலை ?

  ஓம்கார ஸ்வரூபியான பிள்ளையாரை சிலுவையில் தொங்கும் பிணம் போல ஆக்கிவிட்டு மறுவேலை பார்ப்பதுதான் மெக்காலே பிள்ளைகளான நம் கடமை?

 10. இலங்கையில் விநாயகசதுர்த்திக்கு இப்படி பிள்ளையார் உருவங்கள் பெரிது பெரிதாகச் செய்து பிறகு கடலில் கரைக்கிற வழக்கம் அறவே இல்லை.. இந்தப் பழக்கம் எப்போது தோன்றியது..? விரும்பினால் கோயிலிலோ, வீட்டிலோ தினமும் வழிபடும் திருவுரவும், படங்களில் உள்ள பிள்ளையாரை விநாயக சதுர்த்தியன்று சிறப்பாக வழிபட்டால் போதாதா..?

  இப்படி பெரிதாகப் பிள்ளையாரைச் செய்து வைத்து பின் வழிபட்ட பெருமான் உருவத்தைக் கடலில் கரைக்க எப்படி மனம் வரும்…? நான் நினைகக்pறேன்.. இந்தப் பழக்கத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினால் என்ன..?

  இலங்கையில் நிறைய விநாயகர் அடியவர்கள் இருந்தும் இப்படி ஒரு வழக்கம் இருப்பது இவர்களுக்குத் தெரியாது.. ஆகவே, இது அண்மைக்காலத்தில் உருவான வழக்கம் தானா..?

 11. கோமதி செட்டி அவர்களே,

  சிற்பம், சித்திரம் போலவே கார்ட்டூன் / அனிமேஷன் என்பது ஒரு நவீன கலை வடிவம்.. படைப்பூக்கமும், ரசனை உணர்வும் கொண்ட எல்லா நவீன மனித மனங்களையும் வசீகரிக்கும் ஒரு கலை வடிவம் அது. வாழ்வின் எல்லாக் கூறுகளும் அத்தகைய ஒரு கலை வடிவத்தில் வெளிப்படும் போது இந்து சமயம், தத்துவம், தெய்வ வடிவங்களை மட்டும் அதில் சித்தரிக்கக் கூடாது என்று சொல்வது இஸ்லாமிய தாலிபானியத்திற்கு நிகரானது.

  எனவே கார்ட்டூன்/அனிமேஷனை பொதுப்படையாக நிராகரிக்காமல், ஒவ்வொரு சித்தரிப்பையும் ஆராய்ந்து பார்த்து, அது உண்மையிலேயே இந்து மத அம்சங்களை மோசமாக, எதிர்மறையாக சித்தரிக்கிறதா அல்லது வரம்பிற்குட்பட்ட கலை சுதந்திரத்துடன் இந்து தர்ம கருத்து ஒன்றை அழகாக சொல்ல முயல்கிறதா என்று பார்க்க வேண்டும்…

  இந்த குறும்படம் இரண்டாம் வகை என்பது என் கருத்து.. நான் மிகவும் ரசித்தேன், என் குழந்தைகளும் ரசித்தார்கள். வருடா வருடம் கணப்தி உருவங்களை நாம் பூஜை செய்து விசர்ஜனம் செய்வதை பிரபஞ்ச சுழற்சியுடன் தொடர்பு படுத்தி வக்ரதுண்ட மகாகாய சுலோகத்துடன் மிக அழகாக முடித்துள்ளார்கள்…. பிள்ளையாரின் முகபாவங்களும், ஹிந்தி படப் பாடலும் கலாபூர்வமாகவே உள்ளன, அவமதிப்பதாக இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் இந்தியாவின் பெருமித மிக்க கல்வி நிலையங்களில் ஒன்று. அதன் மாணவர்கள் இணைந்து இப்படி ஒரு குறும்படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டுக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய விஷயம்!

  ஆனால் சில கார்ட்டூன்கள் இந்து தெய்வங்களை அரைகுறையாகவும், புராணங்களில் இல்லாத சம்பந்தமே இல்லாத கதைகளையும் கலந்து கட்டி சித்தரிக்க்கின்றன. அவற்றை நாம் விமர்சிக்க வேண்டும், கண்டிக்கவும் வேண்டும். ஒப்புக் கொள்கிறேன்.

 12. @Sri T.Mayoorakiri sharma ,
  விநாயகர் சதுர்த்தியின் இந்த பழக்கம் வந்தது ,பாலைவன வரண்ட தத்துவங்களை பின்பற்று பவர்களுக்கு நாம் சிலையை வணங்கவில்லை என்று காட்டவே என்று நினைக்கிறேன்.
  களிமண்ணை எடுத்து விநாயகர் செய்து அந்த எல்லாம் வல்ல இறைவனை அதன் மூலம் வணங்கிவிட்டு பின்பு அந்த சிலையை தண்ணீரில் கரைத்து விடுகிறோம். நாம் அந்த சிலையை கடவுளாக நினைத்திருந்தால் அதை நீரில் கரைப்போமா? என்று எடுத்துக்கூறவே.

 13. \\\\\\\\\இலங்கையில் விநாயகசதுர்த்திக்கு இப்படி பிள்ளையார் உருவங்கள் பெரிது பெரிதாகச் செய்து பிறகு கடலில் கரைக்கிற வழக்கம் அறவே இல்லை..\\\\\\

  ஸ்ரீ மயூரகிரிஷர்மா மஹாசய, ப்ரதிமையை பெரிதாக செய்யும் வழக்கம் தமிழகத்தில் கூட முன்னம் இல்லை. ஸ்ரீ பாலகங்காதர திலகர் மஹாராஷ்ட்ரத்தில் சமூஹ ஒற்றுமையை மையக்கருத்தாக வைத்து சமூஹத்தின் அனைத்து பிரிவினரும் இணைந்து கொண்டாடும் ஒரு விழாவாக இதை அமைத்தார். வேழமுகத்தான் க்ருபையால் ஹிந்துஸ்தானமெங்கும் இவ்விழா இவ்வாறே கொண்டாடப்படுகிறது.

  சில தசாப்தங்கள் முன் உருவங்கள் வேண்டுமானால் பெரிதாகச் செய்யப்படாமலிருக்கலாம். ஆனால் பூஜை செய்தபின் விஸர்ஜனம் செய்யும் வழக்கம் தமிழகத்தில் கூட மிகவும் பழைய வழக்கமாயிற்றே..

  ரசாயனங்களால் ஆன சாயம் பூசும் ப்ரதிமைகளை விஸர்ஜனம் செய்யுங்கால் நீர் மாசு படுத்தப்படுகிறது என்பது உண்மையே. இதற்காக இயற்கை சாயம் பூசும் போக்கும் இப்போது பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  பூஜா கல்பத்தில் ஆவாஹனத்திற்கு உள்ள விதிமுறைகள் போல விஸர்ஜனத்திற்கு விதி முறைகளைக் கண்டதில்லை. விஸர்ஜனம் செய்யலாகாது என நிஷேதம் ஏதும் ப்ரத்யேகமாக உள்ளதா. வங்காளம் மற்றும் பூர்வி உத்தரப்ரதேசம் மற்றும் பீஹார் ராஜ்யங்களில் துர்கா பூஜையிலும் ஆவாஹனம் மற்றும் விஸர்ஜனம் இவ்வாறே உள்ளதே.

  \\\\\பார்க்கும் பொழுதே எனக்கு வயிறு எரிகிறது. வணக்கத்திற்குரிய ஓம்கார க்டவுளை ஒரு cartoon கதாப்பாத்திரம் போல மாற்றி விநாயகப் பெருமானை அசிங்கப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்\\\\

  கோமதி அவர்களே, மேற்படி படத்தை நானும் கண்ணுற்றேன். கோடுகளால் ஆன சித்திரம் என்ற படி கணபதியை எழுதுவதில் எனக்கு தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

  ப்ரதிமை செய்யும் விதங்கள் பற்றி ஆகமாதிகளில் மற்றும் பூஜா கல்பங்களில் எப்படி சொல்லப்பட்டிருக்கின்றன எனபது பற்றி ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் போன்றோர் சொல்லல் தகும்.

  நான் வாசித்த படி ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்தில் (11-27-12)

  சைலி தாருமயீ லௌஹீ லேப்யா லேக்யாச ஸைகதீ
  மனோமயீ மணிமயீ ப்ரதிமாஷ்டவிதா ஸ்ம்ருதா

  என அஷ்டவிதமான பூஜார்ஹமான ப்ரதிமைகளை சாக்ஷாத் பகவான் சொல்கிறார். கல்லால், மரக்கட்டைகளால், உலோகங்களால், களிமண் சந்தனம் போன்ற குழம்புக்கலவைகளால், மண்ணால்,எழுதப்படும் சித்திரங்களால், த்யானத்தின் மூலம் மனதால் உருவகப்படுத்தும் உருவங்களால் மற்றும் மணிகளால் ( ரத்னம் மற்ற மணிகளால்) ஆக எட்டு விதங்களில் ஆன ப்ரதிமைகளை பகவான் சொல்கிறார்.

  கார்ட்டூன் என்பது தமிழில் கேலி சித்திரம் என சொல்லப்படுகிறது. கேலியாக இல்லாது இரு மூன்று கோடுகளில் காந்தியின் உருவம் கூட இதுபோன்ற சித்திரங்களில் அழகாக வரையப்படுகிறது. கேலியாக இல்லாது கோடுகளால் பக்தியுடன் வரையப்படும் விக்னஹரனின் சித்திரம் வணக்கத்திற்குறியதே. மேலும் குழந்தைகள் எளிதில் இது போன்ற உருவங்களால் கவரப்படுகிறார்களே.

  ஆனால் மேற்கண்ட கணினிப்படத்தில் (கேலிப்படத்தில்) கணேசரை மீன்கள் சூழ்வது போலும் மூஷிகத்தை கீழே விழாமலிருக்க கணேசர் பிடித்த பின்னும் கீழே விழுவது போலும் பல கணேசர்கள் நடுவே முண்டியடித்துக்கொண்டு ஒரு கணேசர் முந்துவது போலும் ………. ஞானபண்டிதா! இதன் மூலம் குழந்தைகளுக்கு அல்லது பார்க்கும் பெரியவர்கட்கு தெரிவிக்கும் விஷயங்கள் என்ன. இவை எந்த ஆதாரத்தில் படம் செய்யப்பட்டிருக்கின்றன. கண்டிக்கத்தகுந்ததே!

  \\\\\\நானும் உங்களோடு சேர்ந்து இந்த வீடியோவைக் கண்டிக்கிறேன். உங்களைவிட 10% அதிகம் கண்டிக்கிறேன்.\\\

  படம் அனுப்பி வைத்த ஸ்ரீ களிமிகுகணபதி கண்டிப்பது (10% அதிகமாக) ஏனோ? கணபதிக்கே வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *