விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த நூல் தமிழருக்கு அறிவிக்கும் அரிய செய்திகளை இக்கட்டுரை திரட்டித் தருகின்றது. இக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப் பட்டது.
‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.
இந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.
அவர் தன் நிலையில்,
• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.
• துரியநிலையில் இருப்பவர்.
• ஞானமே சொரூபமாக இருப்பவர்.
இது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.
ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)
அவ்வற்புத வடிவமானது:
• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.
• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.
• பொன்னரைஞாண்.
• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு
• பேழை (பெட்டி) போன்ற வயிறு.
• பெரிய வலிமை மிக்க தந்தம்.
• யானைமுகம்.
• முகத்தில் அணிந்த சிந்தூரம்.
• ஐந்துகைகள்.
• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.
• நீலமேனி (நீலம் – கருமை)
• தொங்குகின்ற வாய்.
• நான்கு தோள்.
• மூன்று கண்.
• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.
• இருபெரிய செவிகள்.
• பொற்கிரீடம்
• பூணூல் புரள்கின்ற மார்பு.
இது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள். திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.
• அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.
• ஊர்தி மூஷிகம்
• அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.
• எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.
• அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.
• அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.
• ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்
• நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.
• அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.
• இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.
விநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி
• குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்
• இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.
• திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.
• உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.
• பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.
• உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம், திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.
• ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.
• உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.
• பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்றுகின்றார்.
• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.
• ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.
குருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.
• ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.
• இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.
• மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.
• இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.
• சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.
• அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.
• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.
• இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.
• இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.
• இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.
• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.
• இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு, உடம்பின் இயல்பு, மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அறிய வைக்கின்றார்.
• சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.
• இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.
• இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.
• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.
• அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.
• எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.
• திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.
இவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.
ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்): அட்டாங்கயோகம், பிராசாத யோகம் சிறப்புக் கட்டுரைகளுடன்
உரை: முனிவர் ர. வையாபுரியார்.
சைவசித்தாந்த சபை, 9 – பி, முத்துசாமி சந்து, இரண்டாவது தளம், கைக்கோளன் தோட்டம், ஈரோடு 638 001
ஔவையார் அருளிய விநாயகர் அகவல், குகஸ்ரீ. பு.பா. ரசபதி அவர்களின் விரிவுரை & பி.என்.குமார் அவர்களின் உரைக் குறிப்புகளுடன் – இங்கு படிக்கலாம்.
விநாயக சதுர்த்தி நன்னாளில் விநாயகர் அகவல் வ்யாக்யானம் தெரிவித்த ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி மஹாசயருக்கு மிக்க நன்றி.
விநாயகர் அகவலை சொல்லிக்கொண்டு வியாக்யானத்தைப்ப்டிக்கையில் வரிக்கு வரி அழகாக வ்யாக்யானம் செல்கிறது.
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டா ஞானத்தெளிவையுங்காட்டி…………..
ஒரு மந்திரத்தால் ஐம்புலக்கதவை அடைப்பதுங்காட்டி………….
என்பதற்கு அடைக்குறியில் ப்ரத்யேகமாக பஞ்சாக்ஷரத்தை சொல்லியுள்ளீர்களே என்று நினைத்தேன்
பின்னர்
சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
என்பதிலிருந்து உபதேச மந்த்ரம் பஞ்சாக்ஷரமே என்று துலங்குவது போலிருந்தது.மேலும்
• எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.
• திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.
கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக்கருத்தின் நினைவிலிருத்தி
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயாக விரைகழல் சரணே
அஞ்சக் கருத்தின் அரும்பொருள் தன்னை என்பதிலும் பஞ்சாக்ஷரமே நேரடியாக சொல்லப்படுகிறதா
வித்தக விநாயாக விரைகழல் சரணே. விநாயகப்பெருமான் அருள் கூடி விநாயகர் அகவல் நிதமோதி சிவஞானம் பெருவோமாக.
பிள்ளையார் இல்லாத ஊர்களே இல்லை. பிள்ளையார் நமது அன்றாட வாழ்வில் மிகவும் நெருங்கிய தெய்வம். விக்னத்தை கொடுப்பதும் அவர்தான், விக்னத்தை நீக்குபவரும் அவரே.
அருமையான கட்டுரை. பல தளங்களில் சிந்தனையை தூண்டுகிறது. ஆசிரியருக்கு வந்தனம்.
இந்துக்களுக்கு பிள்ளையார் எவ்வளவு முக்கியமோ அதே அளவு கிறிஸ்தவர் அவரை வெறுப்பர். வெளி தேசத்தில் இருந்து வந்த பாதிரிகள் நமது தெய்வங்களை குறிப்பாக மனிதனும் மிருகமும் இணைந்த தோற்றங்களை புரிந்து கொள்ளாமல் வெறுத்தனர் – ஏசினர். அவர்கள் சொல்லிக் கொடுத்த சொல்லை, பல நூறு வருடங்களாக தமிழ் நாட்டில் எதோ ஒரு மூலையில் வாழ்ந்து வரும் சூசையும், ஆரோக்கியமும் கூட பிடித்துக் கொண்டு பிள்ளையார் போன்ற தெய்வங்களை ஏசுகிறார். அறிவிலிகள். இதே கூத்தை கழகத்தினரும் தொடர்கின்றனர்.
இன்றைய நன்னாளில் விக்னஹரனாக பிள்ளையார் பாரதத்தை பிடித்த இந்த இழிவுகளை நீக்கி, விதேச மதங்களை விரட்டி, நமது தர்மத்தை காக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
அருமையான கட்டுரை முனைவர் ஐயா.
நேரம் கிட்டியோர் இதையும் படிக்கலாம்:
https://pm.tamil.net/pub/pm0231/mp231.html
விநாயகர் அகவல் – விரிவான உரை
‘ராத்திரி நேரத்துப் பூஜையில்… ரகசிய தரிசன ஆசையில்…’
‘நிலாக்காயுது… நேரம் நல்ல நேரம்… ‘
‘நேத்து ராத்திரி யம்மா…’
‘ஆடி மாசக் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க…’
இவையெல்லாம் யாவை என்று நினைக்கிறீர்கள் ?
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இறைவனின் திருக்கோயிலுக்கும் திருவுருவுக்கும் முன்பாகக் ‘கலைஞர்’கள் நிகழ்த்துகிற இசை மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் !
இவற்றை எல்லாம் பார்க்கும் இந்தியப் பிள்ளைகள்/பெண்கள் வினாயகரைப் பற்றி (கடவுளைப் பற்றி) என்ன கற்றுக்கொள்வார்கள் என்கிற கவலை நம் யாருக்காவது இருக்கிறதா ?
பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் விவாதிக்கிற நமக்கு (ஹிந்துக்களுக்கு) இவற்றை எப்படிச் சமாளிப்பது என்கிற அறிவை இறைவன் தருவாரா ?
போலிப் பகுத்தறிவுவாதிகளும் கணபதியின் ‘சித்தி, புத்தி’ களைப் பற்றிக்
கிண்டலடிக்கிறார்களேயல்லாமல், “கடவுள் என்கிற பெயரில் ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள் ?” என்று கேட்பதில்லை.
ஒரு வேளை அவர்கள் இவற்றின் பின்புலமாகக் கூட இருக்கலாம். ஆனால் What about Religious/Spiritual Hindus?
ஸ்ரீ பி.என். குமார் அவர்களுக்கு தாங்கள் கொடுத்த சுட்டி மிக பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
நான் எழுதியதில் நெஞ்சக்கருத்தின் நிலையறிவித்து என்றிருக்க வேண்டும் அவசரத்தில் எழுதுவதில் பிழை. அதற்கு என் க்ஷமாயாசனம். ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் அஞ்சக்கருத்தின் என தவறாகவே ஓதி வந்த எனக்கு தாங்கள் கொடுத்திருந்த விரிவான வ்யாக்யானம் மூலம் தவறான ஓதல் திருத்தப்பட்டு அஞ்சக்கரத்தின் (என் மற்றொரு வினாவிற்கும் விடை) என சரியாக ஓதுகிறேன். மிக்க நன்றி. வித்தக விநாயக விரைகழல் சரணே.
\\\விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இறைவனின் திருக்கோயிலுக்கும் திருவுருவுக்கும் முன்பாகக் ‘கலைஞர்’கள் நிகழ்த்துகிற இசை மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் !\\\\
ஸ்ரீ மகரத்தான். நான் தமிழகத்தில் இல்லை. ஆனால் தொலைக்காட்சிகளில் சில சமயம் பட்டி மன்றம் என்ற வெட்டி மன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து இருக்கிறேன். நகைச்சுவையை மட்டும் ப்ரதானமாக ஆக்கி அறிவு பூர்வமான விஷயங்களை அறவே ஒதுக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்.
நீங்கள் சொல்லும் ஆபாச பாட்டுகளை இறை விழாக்களில் இசைப்பது அதை கலை நிகழ்ச்சி என்று வேறு சொல்லிக்கொள்வது தமிழகம் மட்டுமன்று அகில பாரதம் சார்ந்த அவலநிலை. உத்தர பாரதத்தில் ஒரு சிறு வித்யாசம். ஆபாச பாட்டுகளை அப்படியே பாட மாட்டார்கள் அந்த மெட்டில் கடவுளர் பேரில் பாட்டுகளமைத்து பாடுவார்கள்.
குருத்வாராக்களில் (சீக்கியர் கோவில்) மெல்லிசையில் குர்பாணி (குருவாணி) இசைப்பதை சிரோமணி குருத்வாரா ப்ரபந்தக் கமிட்டி என்ற சீக்கியஸ்தாபனம் கண்டித்துள்ளது. அந்த பழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மற்றைய ஹிந்துக்களும் சீக்கியரின் இந்த வழியை தங்களுக்கேற்ப பின் பற்றல் நன்று.
விநாயகர் அகவல் ஒரு தத்துவ விளக்கம் என்ற முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்களின் கட்டுரை தெள்ளத்தெளிவாக சைவ சித்தாந்தக் கருத்துக்களை எடுத்துவைக்கிறது. அருமையானக் கட்டுரை. ஐயா விநாயகர் அகவல் காட்டும் கடவுள் கோட்பாடு(தடத்த நிலை மற்றும் சொருப நிலை), ஸ்ரீ விநாயகப் பெருமான் குருவாக வந்து யோகத்திற்கும் ந்ஜானத்திற்கும் வழிகாட்டுவார் என்ற அகவலின் திரண்டக் கருத்தினை மொழிந்துள்ளார்.
விநாயக அகவல் பாராயணம் செய்வோர் ஆன்மீக வாழ்வில் படிப்படியாக தொடர்ந்து மேன்மை எய்துவர் என்பது அனுபவம் வாயிலாக உணரமுடியும். நம் குழந்தைகளுக்கு விநாயகர் அகவல் சொல்லிக்கொடுக்க வேண்டும். எந்த நற்காரியம் துவங்கும் முன்பும் அகவல் பாராயணம் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். விநாயகர் அகவலை பிரபலப் படுத்தும் ஹிந்து இயக்கங்களின் பணி பாராட்டவும் போற்றவும் தக்கது.
சிவஸ்ரீ.விபூதிபூஷன்
எனது தினப் பாராயணத்தில் விநாயகர் அகவலும் ஒன்று. முன்பு ஒருமுறை ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் “விநாயகர் அகவலில் முழுக்க முழுக்க இருப்பது நம் யோக முறைகள் பற்றித்தான்” என்று எழுதியிருந்ததைப் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. அதை விவரமாக எழுதியுள்ள முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி.
இதேபோல்தான் அந்தணர்கள் தினப்படி சந்தியா வந்தனம் செய்வதிலும் சில யோக முறைகளும், அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதைக் காட்டுவதாகவும் அமைந்து, இறுதியில் அவை அனைத்துமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகவும் உள்ளது என்பதை ஆன்றோர் அறிவர். அதாவது அந்தணர்கள் உலகத்தார் அனைவர் பொருட்டும் செய்யும் நித்திய வழிபாடு அது. அது மட்டும் அல்லாது ஆகம வழிப்படி இறைவனை நினைந்து செய்யப்படும் அனைத்து வழிபாடுகளுமே பரமேஸ்வரனை நினைந்து செய்வதாகவும், இறுதியில் பலன்கள் அனைத்தையும் நாராயணனுக்கே அர்ப்பணிப்பதாகவும் ஆன்றோர்கள் அமைத்துள்ளனர். இதுதான் நம் இந்து மரபுப்படி வாழும் முறை.
This Vinayagar belongs to our place “Thirukovilur” which is in between Villupuram and Thiruvannamali. Around 30-35 kms from Villupur and Thiruvannamali. Please visit this sacraed place — Even Ramanar stayed in Tirukoilur around 3 years before going to Thiruvannamalai.
ஔவையார் அருளிய விநாயகர் அகவல், குகஸ்ரீ. பு.பா. ரசபதி அவர்களின் விரிவுரை & பி.என்.குமார் அவர்களின் உரைக் குறிப்புகளுடன் – இங்கு படிக்கலாம்.
இந்த சுட்டி தமில்.நெட் செல்கிறது. ஆனால் சுட்டி திறக்கவில்லை. இந்த நூலைப் படிக்க ஆவலாய் உள்ளேன். என் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமா? நன்றி!
ஐயா அவர்களுக்கு இன்னொரு வி நாயகர் அகவலும் உள்ளதே அதையும் இதே போல் உள்ளங்கை நெல்லிக்கனி என விளக்கிக்கட்டுரை எழுதுங்களேன். அன்புடன்
சிவஸ்ரீ.
Sir, Good article. I would like to read the full commentary on Vinayagar agaval as mentioned by you. The site does not open. Can you help me sir? Thanks and regards, N.R.Ranganathan
Thanks for giving the gist of vinayagar agaval. I hope this article will kindle the interest to explore vinayakar agaval.
ஔவையார் அருளிய விநாயகர் அகவலுக்கு குகஸ்ரீ ரசபதி அவர்களின் உரை:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0231.html
Kundali Yoga or Raja Yoga or Kriya Yoga or Rhythm Yoga. (குண்டலியோகம் அல்லது ராஜ யோகம் அல்லது கிரியா யோகம் அல்லது லய யோகம் ) ஒரு தத்துவ அறிமுகம் -Avvaiyar The Fearless Wanderer- Seeing through another’s eyes with Jagadguru Shri Chandrasekharendra Saraswati Swamigal explanation
New research provides direct evidence that we can take others’ perspectives because we spontaneously form mental images of how the world looks to the other person, so that we can virtually see through their eyes and make judgments as if it was what we were seeing.. There’s an old saying that states you should never criticize anyone until you’ve walked a mile in their shoes. Well, strangely enough, a new study conducted has found pretty much the exact opposite of that old adage. Researchers say that trying to see someone else’s perspective may actually make you less inclined to agree or understand their differing views.
Our-
Inspiration of – fire of breathing from Shri Ramalinga Adikalar.
Inspiration of – the unit of starting point of voice from abdomen / naval point by Tholkkapium
Inspiration of – uvula which create power to speech expiratory air flow by Avvaiyar, which is well documented and explained by Jagadguru Shri Chandrasekharendra Saraswati Swamigal in his “Deivathin Kural Vol 1 to 7l” article.
விநாயகாபோற்றி-(ஔவை) It is considered to be Avvaiyar greatest poem. Avvaiyar is loved and respected in Tamil Nadu as an incarnation of the Goddess of learning, Saraswati. There are even shrines dedicated to her.
Vinayaga Potri (Praise lord Vinayaga) தாய்மை தோன்ற வியாபகக் கணபதியின் திருவருள் வெளிப்பட்டு, அழியாமல் வளர்ந்து பெருகும் பிறவியிலிருந்த மயக்கத்தை ஒழித்த அருமையை, பெருமிதச் சுருக்கமாக அறிவிக்கும் ஔவையின் பெருமையே பெருமை. (It is the pride of Avvaiyar that proudly proclaims the beauty of the birth of the mother of Vyapaka Ganapati and the beauty of overcoming the unconsciousness of the immortal birth.)
“விநாயகர் அகவலில் முழுக்க முழுக்க இருப்பது நம் குரல் வழ யோக முறைகள் பற்றித்தான்”
Ganesha songs by Awaiyar is all about our yoga practices for voice care. This Tamil language article is by Avvaiyar. This immoral song is translated by many authors. All will give more importance to prayer of Lord Vinayaga. Almost every day we used to read some of these golden wards as a prayer song. We are the strong followers of this God. While reading even without understanding the real meaning we will get satisfaction and blessing because it is a Gods message. One day while reading I recognized this poem had some more important message to me on loss of voice and its cure. Then I started reading the different explanation given by various authors. Among that the explanation given by Jagadguru Shri Chandrasekharendra Saraswati Swamigal attracted me. In a nutshell this poem describes loss of speech and gaining speech by revolving Sakkara in the throat.
Inspiration/famous-quotes-avvaiyar-be-followed-our-life
“ பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே ( A matter of speech pathology-loss of speech ) என்னை மௌனியாக்கி
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து – ஸ்ரீ மகா பெரியவர் சொன்னது; (மூன்று மண்டலத்தின் -சூர்ய ,சந்திர ,அக்னீ ஊடுருவி சென்று ,நேர் செங்குத்தாக வீணா தண்டம் போல் சுருட்டி கொண்டு தொங்கும் பாம்பு போல் .சக்தியை நாவில் உணர்த்தி – The sun, the moon, and the fire of the three realms penetrate and converge on the tongue like a serpent hanging curled up vertically like a harp.
Vinayagar Agaval explained by Maha Periyavr Swamiji. It clearly explains that uvula movements stimulate and give energy to the movement of the tongue. This is what we are doing in Uvula manipulation.
Yoga Danda,The Meditation Stick is a very ancient and traditional yoga tool to assist in one’s spiritual practice.
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே -காலால்(காற்றால்)-( air forceful ejection/ circulation from abdomen to mouth only cure(puberphonia) it) Vibration result in creation.
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி ( Uvula moves in all direction )
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் (I know the devastation problem of puberphonia)
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் (Uvula is almost a screen, if one open the mouth he can appreciate)
கருத்தினில் கபால வாயில் காட்டி (Treatment of puberphonia voice, make air charge at the back of mouth)_
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (you taught me)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் (Movement of uvula represents life in words (speech))
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி (Inside the mouth one can see SIVA LINGAM)
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை That 5th hand (that revolving structure is uvula) %th hand of elephant is its own trunk
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!”
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே,- காற்றால் எழும் அலைகள்போல் (Like the waves of the wind )
குண்டலி யதனிற் கூடிய அசபை, விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து ( Kundali reciting the Mantra )
Kundalini yoga and breath of fire
The breath of fire is one of the fundamental breathing techniques used in the practice of Kundalini Yoga as well as in several other styles of Yoga. It is done by pumping from the centre of the navel while breathing rapidly through your nose. It is always practiced by the nostrils with the mouth closed.As a result, women find men with lower-pitched voices more attractive. It’s the opposite for men, who are more attracted to women with higher-pitched voices, which is perceived as a marker for femininity. Attractiveness in the voice is important for the impressions we give our potential partners.Get ready to free your vocal cords of strain, increase your breath capacity, and get the strength you need for powerful belts and the control for soft tones. Going beyond simple breathing exercises for speeking, the following yoga poses free your neck, shoulders, and spinal muscles of tension. Your breath and sound will move freely, and your core muscles will grow stronger so you can manipulate your voice.
Curious how lessons work?
1. Three Part Breath
Benefit: Strengthens your breath support for belting and long notes.
2. Seated Breath
Benefit: Guides you to use your full breath capacity.
3. Eagle Arms
Benefit: Another breathing exercise for singing, this enhances your ability to hold belts.
4. Kapalabhati Breath
Benefit: Activates your core and clears your sinuses.
5. Ujjayi Breath
Benefit: Supports evenness of breath.
Resonance in a human’s voice due to increased airflow through the nose during speech.
The superior part of the nose is supported by the nasal, frontal, and maxillary bones; the … Their function is obscure but they provide resonance to the voice, shape to the face … The two ethmoidal labyrinths are united by the cribriform plate.
Huge elphent can be controlled by a small thread We can pull the uvula
We manipulate the uvula and teat puberphonia
The voice created by this maneuver create low pitch, which is required for puberphonia
நான்ற வாயும் – தொங்கும் திருவாயும், By look uvula almost look like elephant trunk
கற்பகக் களிறே – கற்பகம் போல் அருள் பாலிக்கும் ஆனந்த ஆண்மையுள யானைமுகப் பெருமானே (நான்ற வாயும் – தொங்கும் திருவாயும்,
( The blissful masculine elephant face that is as graceful as Karpagam )
நான்ற வாயும் – தொங்கும் திருவாயும், By look uvula almost look like elephant trunk
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை Elephent trunk is called 5th hand-GOD Vinayaga is having 5 hands,
(ஐந்து கைகள்). Uvula look like elephant trunk. The 5th hand is the trunk. விநாயகா Elephant trunks incredibly flexible so they can move in all direction.
If you were to dissect an elephant trunk, it would actually look more like the inside of your tongue than your nose, that means they’re made almost entirely of muscle, normally, muscles depend on bones and joints to move. But in an elephant trunk, there are no bones to pull and no joints to hinge on. The muscles take on that role instead. This makes trunks incredibly flexible so they can move in all directions
Open oral cavity of human-and-snake, uvula hanging like a curtain
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின், நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
(The artisanal art of the interjection art shows the spinal cord and the skull, and the tongue of the four-headed serpent, the blunt pillar of the trinity ). Snakes appear throughout recorded history as a symbol of healing.
Kundalini Yoga FOR PUBERPHONIA follows up habituation treatment.
In Kundalini Yoga, the first two words you learn to vibrate with are “Sat,” which means “Truth,” and “Nam,” which means “Identity.” These two words will eventually resonate within each breath you take during class. Yoga is not one exercise. It is a collection of different static and dynamic postures (or asanas) that focus on every organ and muscle group of the body. It can vary in intensity and difficulty between the beginner, intermediate and advanced levels. It is an ancient form of workout that benefits every organ system and the nervous system of an individual.
Simhasana, stimulate the throat chakra. The Detoxifying Panting, Dog Breath of Fire – Kundalini Yoga
, இறுதியில் பலன்கள் அனைத்தையும் நாராயணனுக்கே அர்ப்பணிப்பதாகவும் ஆன்றோர்கள் அறிவர். தத்துவ நிலையை எனக்குத் தந்து என்னை வித்தகன் ஆக்கிய வித்தகன் விநாயகப் பெருமான்.
ALL know that in the end all the benefits are dedicated to our God Narayanan. It was Lord Ganesha who gave me the philosophical position and made me a sage.
.