[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 30-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

அ.மார்க்ஸ் எழுதிய ‘அம்பேத்கர் வாழ்வில்’ என்ற புத்தகத்தில் ஒரு மெகாபுளுகை எழுதியிருக்கிறார். அவர் கூறுகிறார்: ‘‘அம்பேத்கர் முடிவை (மதமாற்ற முடிவை) இம்மூன்று மதங்களும் எவ்வாறு எதிர்கொண்டன என்பதும் முக்கியம். இஸ்லாம் ஒன்றே இரு கரங்களையும் நீட்டி அம்பேத்கரை வரவேற்றது. ஏற்கனவே சாதியத்திற்குப் பலியாகியிருந்த கிறிஸ்தவமும் சீக்கியமும் பெருந்திரளாக தலித்துகள் உள்ளே நுழைந்தால் அவை ஒரு தலித் மதமாக மாறிவிடுமோ என அஞ்சின’’

அ.மார்க்ஸ் கூறுவது எவ்வளவு புளுகுத்தன்மை வாய்ந்தது என்பதை இத்தொடரைப் படிக்கும் வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

1935 மதமாற்ற அறிவிப்புக்குப் பின், கிறிஸ்தவம், சீக்கியம், இஸ்லாம், பௌத்தம் கூட தங்கள் மதத்தில் சேர்ந்திடுமாறு கேட்டுக்கொண்டன. ஆனால் அ.மார்க்ஸோ இஸ்லாம் மட்டுமே தலித்துகளை வரவேற்றது என்ற பொய்யைக் கூறுகிறார். அ.மார்க்ஸ் இஸ்லாத்தை பரப்பும் மதபோதகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த காரணத்தால் அதை விட்டுவிட்டு மேலே செல்வோம்.

1935 மதமாற்ற அறிவிப்புக்குப் பின் பௌத்தர்களும் அவர்களுக்கே உரிய வழியில் அம்பேத்கரை அவர்கள்பால் இழுத்திட முயன்றனர். லோகநாத் பௌத்த மிஷன்-ஐ நிறுவிய இத்தாலிய பௌத்தத் துறவியான லோகநாதா (இயற்பெயர் ஸால்வடோர்) 1936 ஜூன் 10-ஆம் நாள் பம்பாய் தாதரில் இருந்த அம்பேத்கரின் இருப்பிடத்திற்கு வந்தார். பௌத்தத்தை ஏற்குமாறு அம்பேத்கரிடம் வேண்டினார். அம்பேத்கருடன் லோகநாதா பேசியபின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் பௌத்த நெறி அம்பேத்கரின் உள்ளத்தை ஈர்த்திருப்பதாகத் தெரிகிறது. பௌத்த மதத்தில் சேருவது பற்றிக் கவனமுடன் ஆராய்வதாக அவர் வாக்களித்தார். ஆயினும் உறுதியான பதில் எதையும் அவர் கூறவில்லை என்று சொன்னார்.

அம்பேத்கர், மதமாற்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மதமாக அன்று பௌத்தத்தை நினைக்கவில்லை.

1940-க்குப் பிறகு அவர் சிந்தனையில் பௌத்தம் துளிர்விட ஆரம்பித்தது. 7-5-1941 அன்று புத்தர் பிறந்தநாள் தொடர்பாக அம்பேத்கர் ஒரு தலையங்கம் எழுதினார். அதில் நால்வருணத்தை ஒழித்தேயாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

1943-இல் அம்பேத்கர் மகாஸ்தவீர் சந்தராமணியைக் குசிநராவில் சந்தித்தார். இப்பொழுது அம்பேத்கர் மனதில் பௌத்தம் மேலும் துளிர்விட்டு வளர்ந்துகொண்டிருந்தது.

1946-இல் தொடங்கிய கல்லூரிக்கு அம்பேத்கர் புத்தரின் பெயரை வைத்தார். ‘சித்தார்த்தா கல்லூரி’ பம்பாயில் செயல்படத் தொடங்கியது. பல ஆராய்ச்சிக்குப் பிறகு தீண்டப்படாதவர்கள் பௌத்தர்கள் என்ற கருத்து இப்பொழுது அவர் மனதில் ஆழமாக உருப்பெற்றது. மகாபோதி இதழில் ‘புத்தரும் பௌத்தத்தின் எதிர்காலமும்’,  ‘இந்துப் பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்பன போன்ற பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.

மகாபோதி கழகத்தின் வெளியீடான மகாபோதி இதழில் மே 1950-இல் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவருடைய சமயத்தின் எதிர்காலமும்’ என்ற கட்டுரை முக்கியமான கட்டுரை.

இந்தக் கட்டுரையில் புத்தர், இயேசு, முகம்மது நபி, கிருஷ்ணர் ஆகியோரின் ஆளுமைகளையும், தமது மதங்களைப் பிரசாரம் செய்வதில் அவர்கள் கடைபிடித்த நிலைகளையும் ஒப்பிட்டு விரிவாகவே அம்பேத்கர் அலசியுள்ளார்.

அந்தக் கட்டுரையில்,

“….. புத்தரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக்காட்டும் முதலாவது அம்சம், அவருடைய தன்னல மறுப்புக் கொள்கையாகும். பைபிள் முழுவதிலும் இயேசு, தான் கடவுளின் மைந்தன் என்றும், தன்னைக் கடவுளின் மைந்தன் என்று அங்கீகரிக்காவிட்டால், கடவுளின் சாம்ராஜ்யத்தினுள் பிரவேசிக்க விரும்புபவர்கள் தோல்வியடைவார்கள் என்றும் வலியுறுத்துகிறார். முகம்மது நபி மேலும் ஒருபடி மேலே சென்றுள்ளார். இயேசுவைப் போன்றே அவரும் தான், இந்த உலகில் கடவுளின் தூதர் என்று உரிமை கொண்டாடினார்.

ஆனால் அவர், மேலும் அப்பால் சென்று தான் கடவுளின் கடைசித் தூதர் என்று வலியுறுத்தினார். அந்த அடிப்படையில் முக்தி அடைய விரும்புபவர்கள், தன்னைக் கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமின்றி, தான் கடவுளின் கடைசித் தூதர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரகடனம் செய்தார். கிருஷ்ணர், இயேசுவுக்கும் முகம்மது நபிக்கும் மேலும் அப்பால் சென்றார். அவர் கடவுளின் மைந்தன் என்றோ, அல்லது கடவுளின் தூதர் என்றோ இருப்பதோடு திருப்தியடைய மறுத்தார். கடவுளின் கடைசித் தூதர் என்பதோடு கூட அவர் திருப்தியடையவில்லை. தன்னையே கடவுள் என்று கூறிக்கொள்வதோடு கூட அவர் திருப்தியடையவில்லை. தான் பரமேஸ்வரன் என்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் தேவாதி தேவர் என்று அழைப்பது போன்று, தாம் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றும் உரிமை கொண்டாடினார்.

ஆனால் புத்தர் ஒருபோதும் அத்தகைய அந்தஸ்து (தகுதி) எதையும் தனக்குத்தானே சுவீகரித்துக் கொள்ளவில்லை. அவர் மனிதனின் ஒரு மகனாகப் பிறந்தார். ஒரு சாதாரண மனிதனாக இருப்பதோடு திருப்தியடைந்தார். ஒரு சாதாரண மனிதனாகத் தன்னுடைய நன்னெறியைப் போதித்தார். இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்புடையவராகவோ அல்லது தெய்வீக சக்தி உடையவராகவோ அவர் உரிமை கொண்டாடவில்லை. அல்லது தனது தெய்வீக சக்தியை நிரூபிப்பதற்கு அற்புதங்கள் எதையும் அவர் செய்யவில்லை.

ஒரு மார்க்கதாதாவுக்கும் ஒரு மோட்ச தாதாவுக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாட்டை அவர் எடுத்துக்காட்டினார். இயேசுவும், முகம்மது நபியும் கிருஷ்ணரும் மோட்ச தாதாக்கள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடிக் கொண்டனர். ஆனால் புத்தர் மார்க்க தாதாவின் பாத்திரத்தை ஆற்றுவதோடு திருப்தியடைந்தார்.

இந்த நான்கு சமய போதனையாளர்களிடையில் மற்றொரு வேறுபாடும் உண்டு. இயேசுவும் முகம்மது நபியும் தாங்கள் போதிப்பது கடவுளின் சொல் என்றும், எனவே கடவுளின் சொல் என்ற வகையில் தாங்கள் போதிப்பது பிழையாத் தன்மை உடையதென்றும், கேள்விக்கு அப்பாற்பட்டதென்றும் உரிமை கொண்டாடினர்.

கிருஷ்ணர் தனது சொந்த அனுமானத்தின்படி கடவுள்களுக்கெல்லாம் கடவுள்; எனவே, அவர் போதிப்பது கடவுளின் சொல் என்றும் கடவுளால் அருளப்பட்டது என்ற வகையிலும் அவை மூலமானதும் இறுதியானதுமாகும். எனவே, பிழையாத் தன்மை என்ற பிரச்சினை எழக்கூட இல்லை.

ஆனால் புத்தர், தான் போதிப்பது பிழையாத் தன்மை கொண்டது என்ற எத்தகைய உரிமையும் கொண்டாடவில்லை. தனது மகா பரிநிர்வாண சத்தா என்ற போதனையில் அவர், ஆனந்தாவிடம், தனது சமயம் பகுத்தறிவையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டதென்றும், தன்னைப் பின்பற்றுபவர்கள் தனது போதனையை அவற்றைத் தான் கூறியதாலேயே பிழையற்றது என்றும் கட்டுப்படுத்துபவை என்றும் ஏற்றுக் கொள்ளக்கூடாதென்றும் கூறினார்.

பகுத்தறிவையும் அனுபவத்தையும் அவை அடிப்படையாகக் கொண்டதால் அவை திருத்தப்படுவதற்கு முழு இடமுண்டு. அல்லது தனது போதனைகள் ஏதாவது, ஒரு குறிப்பிட்ட காலத்திலும் குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அவை பொருந்தாதவை என்று கண்டறியப்பட்டால் கைவிடப்படுவதற்கும் உரிமையுண்டு.

தனது சமயம், கடந்த காலத்தின் காலாவதியாகிப் போனவற்றினால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று அவர் விழைந்தார். அது என்றும் பசுமையாயிருக்க வேண்டுமென்றும் எல்லாக் காலங்களிலும் பயன்படக் கூடியதாயிருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார்.

அதனால்தான், அவர் குறிப்பிட்ட நிலைமையின் தேவைகளுக்கு ஏற்பத் தனது சமயம் துண்டாக்கப்படுவதற்கும் வெட்டிக் குறைக்கப்படுவதற்கும் தன்னைப் பின்பற்றுவோருக்குச் சுதந்திரம் அளித்தார். வேறு எந்த சமய போதனையாளரும் இத்தகைய துணிவைக் காட்டியதில்லை. பழுதுபார்க்கப்படுவதை அனுமதிப்பதற்கு அவர்கள் பயப்பட்டனர்.

பழுது பார்ப்பதற்கு அளிக்கும் உரிமை, தாங்கள் பேணி வளர்த்த கட்டுமானத்தை அழிப்பதற்குப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் அஞ்சினர். புத்தருக்கு அத்தகைய அச்சம் ஏதும் இருக்கவில்லை. தனது அடித்தளம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருந்தது. மிகவும் உக்கிரமான உருவ வழிபாட்டாளராலும்கூட தனது சமயத்தின் அடித்தளத்தை ஒழித்துவிட இயலாது என்று அவர் அறிந்திருந்தார்.

இதுதான் புத்தரின் தன்னிகரற்ற நிலையாகும்.’’

இப்படி அலசுகிற அம்பேத்கர் அந்தக் கட்டுரையின் கடைசியாக இப்படி முடிக்கிறார்..

“….. பலர் விஞ்ஞான ரீதியான விசாரணையின் செல்வாக்கின் பயனாக, மதம் தவறானது என்றும், அது கைவிடப்பட வேண்டும் என்றும், முடிவுக்கு வந்துள்ளனர். வேறுபலர், மார்க்சிய போதனையின் பயனாக, மதம் என்பது அபினி என்றும், அது ஏழை மக்களை பணக்காரர்களின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்படும்படித் தூண்டுகிறது என்றும், எனவே அது கைவிடப்பட வேண்டுமென்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

காரணங்கள் எவையாக இருந்தபோதிலும், மதம் சம்பந்தமாக, விசாரணை செய்யும் மனதை மக்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மெய்யாகும். இந்த விஷயம் பற்றி சிந்திக்கும் துணிவு பெற்றுள்ளவர்களின் மனதில், மதம் அவசியம்தானா, அப்படியெனில் எந்த மதத்தைக் கடைபிடிப்பது நல்லது என்ற கேள்விகள் மேலோங்கியிருக்கின்றன, திடசித்தம் தேவைப்படும் காலம் வந்துவிட்டது.

புத்தசமயத்தைத் தழுவியுள்ள நாடுகள், புத்த சமயத்தைப் பரப்புவதற்கான மன உறுதியை வளர்த்துக் கொள்வார்களேயானால் புத்த சமயத்தைப் பரப்பும் பணி கடினமாக இருக்காது. ஒரு பௌத்தரின் கடமை ஒரு நல்ல பௌத்தராக இருப்பது மட்டுமின்றி பௌத்தத்தைப் பரப்புவதும் அவரது கடமையாகும். பௌத்தத்தைப் பரப்புவது மனித குலத்திற்கு சேவை செய்வதாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.’’

என்று எழுதினார்.

1950-இல் இலங்கையில் உள்ள கொழும்புவிற்குச் சென்றார். அங்குப் பௌத்த இளைஞர் சங்கத்தில் ‘இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் கருத்து செறிவுமிக்கதோர் உரையாற்றினார்.

1951 ஜூலை- அம்பேத்கர் பாரதியப் புத்த ஜன சங்கத்தை ஏற்படுத்தினார்.

1954 டிசம்பர் 4-ஆம்தேதி சர்வதேச பௌத்த மாநாடு ரங்கூனில் (பர்மா) நடைபெற்றது. அம்மாநாட்டில் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார். அவர் தமது சொற்பொழிவின் விரிவடைந்த பகுதியை இரண்டு பாகங்களில் நினைவுக்குறிப்பு வடிவத்தில் தயாரித்துக்கொண்டு வந்திருந்தார். நினைவுக்குறிப்பின் முதல் பாகத்தில் இந்தியாவில் பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்யும் வேலைத் திட்டம் அடங்கியிருந்தது. அதில் அம்பேத்கர் குறிப்பிடும் விஷயம் மிக முக்கியமானது.

….3) இந்து மதத்தைவிட்டு வெளியேறி பௌத்த மதத்தைத் தழுவ விரும்பும் பல பகுதியினர் இந்துக்களில் இருக்கின்றனர். தீண்டப்படாதவர்களையும் பின்தங்கிய வகுப்பினர்களையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். படிநிலை அடிப்படையில் அமைந்த ஏற்றத்தாழ்வு சித்தாந்தத்தை இந்துமதம் கடைபிடிப்பதால் இம்மதத்தை அவர்கள் எதிர்க்கின்றனர். அறிவுத்துறை பெரிதும் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கட்டத்தில் இந்த வகுப்பினர் இந்து மதத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். அவர்களது அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகும்.

கிறித்துவ மதத்தைவிட பௌத்தத்தை அவர்கள் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

1. பௌத்தம் இந்தியாவுக்கு அந்நியமான ஒரு மதமல்ல.

2. பௌத்த மதத்தின் மிக முக்கியமான சித்தாந்தம் சமூக சமத்துவமாகும். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

3. பௌத்தம் பகுத்தறிவு சார்ந்த மதம்.’’

அடுத்து அம்பேத்கர் புத்தமத வீழ்ச்சிக்கான காரணத்தை விளக்குகிறார்:

….. 10. புத்தமதத்தின் சித்தாந்தங்கள் தவறானவை என்று தெரியவந்ததால் அல்லது மெய்ப்பிக்கப்பட்டதால் அந்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்துவிடவில்லை. இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்கள் வேறுபட்டவை. முதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. அசோகச் சக்கரவர்த்தியின் வாரிசான கடைசி மௌரிய சக்கரவர்த்தியை, புஷ்யமித்ரா என்னும் பிராமண தளபதி படுகொலை செய்து, சிம்மாசனத்தைக் கைப்பற்றி, பிராமணியத்தை அரசாங்க மதமாகப் பிரசாரம் செய்தான், இந்தியாவில் புத்தமதம் ஒடுக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது. அது க்ஷீணிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. பிராமணியத்தின் எழுச்சி இந்தியாவில் புத்தமதம் நசுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றால், இந்திய நாட்டின்மீது முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்த பிட்சுகளைக் கொன்று குவித்தனர்.’’

என்றார்.

பல்வேறு ஆராய்ச்சிக்குப் பிறகு அம்பேத்கர் பௌத்தத்தை தேர்ந்தெடுத்தார். 24-5-1955-இல் தாம் பௌத்த மதத்தில் சேரப்போவதாக பம்பாயில் அறிவித்தார். டில்லியில் தெகு சாலையில் புத்தரின் சிலையை அம்பேத்கர் நிறுவினார்.

புதுடெல்லி மகாபோதி கழகத்தின் சார்பில் 1956 பிப்ரவரி 5-ஆம் தேதி புத்த விஹாரில் நடைபெற்ற கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் நிகழ்த்திய சொற்பொழிவில்,

“கம்யூனிசத்திற்குப் பதிலளிக்க முடியாத எந்த மதமும் நிலைத்திருக்க முடியாது. கம்யூனிசத்துக்கு மாற்றாக இருக்கும் தகுதிபடைத்த ஒரே மதம் புத்தமதம்தான். எல்லா மதங்களையும் நம்புவதும் ஒவ்வொன்றிலுமிருந்து சிலவற்றை எடுத்துக்கொள்வதுமான போக்கு எனக்கு உடன்பாடானதல்ல. இத்தகைய போக்கை இந்தியாவில் நாம் காண்கிறோம். எவரும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதனைப் பின்பற்ற வேண்டும்.

….மறுபிறப்பில் எனக்கு முழுநம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக்காட்ட முடியும். என்னுடைய கருத்தில் இயற்கை சக்திகள் மாறியிருக்கின்றனவே தவிர மனிதன் மாறவில்லை’’

என்று கூறினார்.

இலண்டன் பிரிட்டிஷ் வானொலி நிலையத்திலிருந்து 1956-ஆம் ஆண்டு மே மாதத்தில் அம்பேத்கரின் ஓர் உரை ஒலிபரப்பப்பட்டது. ‘பௌத்தத்தை நான் ஏன் விரும்புகின்றேன்? இன்றைய சூழ்நிலையில் அது உலகிற்கு எவ்வாறு பயனளிப்பதாய் விளங்குகிறது?’ என்ற தலைப்பில் அம்பேத்கர் பேச்சு அமைந்திருந்தது.

அம்பேத்கர் கூறுகிறார்:

‘‘…. வேறு எந்த மதமும் செய்யாத விதத்தில் புத்தமதம் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிந்திய வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன.

புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை (மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையை வைப்பதையும் எதிர்ப்பதை) போதிக்கிறது.

அது கருணையை போதிக்கிறது.

அது சமதாவை (சமத்துவத்தை) போதிக்கிறது’’

அம்பேத்கர் எதற்கு பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். வேறு எந்த மதமும் (இந்து, கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம்) இந்த மூன்று கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பது அம்பேத்கரின் முடிவு.

பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு மற்றுமொரு காரணம் அது பாரதப் பண்பாட்டில்- பாரத மண்ணில்- தோன்றிய மதம்.

அதை அம்பேத்கரே கூறுவதைக் கேட்போம். அம்பேத்கர் கூறுகிறார்:

“நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சிக்கிறோம். நான் ஒருமுறை காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தீண்டாமை ஒழிப்பு குறித்து உங்களுடைய கருத்துடன் நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பினும் தீண்டாமையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது இந்நாட்டிற்கு மிகக்குறைந்த அளவில் கேடு தரக்கூடிய வழியையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அத்தன்மையில் இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன் மூலம் இந்நாட்டிற்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன்.

ஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்.’’

ஆகவே அம்பேத்கர் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு பௌத்தம் பாரத மண்ணில் தோன்றிய – பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறு என்பதனால்தான்.

1955-1956 ஆண்டுகளில் அம்பேத்கர் பௌத்த மதத்தில் மாறுவது, பௌத்தம் பற்றி சொற்பொழிவாற்றுவது, பௌத்தத்தை பரப்புவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்திய புத்தமத சொசைட்டி அம்பேத்கரால் மே 4, 1955-இல் மும்பையில் கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. புத்தமதப் பிரசாரத்திற்காக இந்த சொசைட்டி அமைக்கப்பட்டதை பம்பாயில் நாரே பூங்காவில் மே 8, 1955-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முறைப்படி இதை அவர் அறிவித்தார்.

பிரபுத்தா பாரத் இதழில் 1956 ம 12-ஆம் தேதி ஒரு கடிதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2500-ஆவது புத்த ஜெயந்தியை இந்தியப் பௌத்தக் கழகத்தின் எல்லா கிளைகளும் கொண்டாட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் 1956 மே 24-ஆம் தேதி பம்பாய் நரே பூங்காவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுமார் 75000 பேர் கலந்துகொண்டனர். பம்பாய் மாகாணத்தின் முன்னாள் பிரதமர் திரு.பாலாசாகேப் கெர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, புத்தரின் வாழ்க்கையையும் அவரது தம்மத்தைப் பற்றியும் உரையாற்றினார்.

அவரது உரைக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கர் பேசும்போது, 1956 அக்டோபரில் பௌத்தத்தைத் தாம் தழுவப் போவதாக– அதாவது புத்தமதத்தில் சேரப் போவதாக அறிவித்தார்.

(தொடரும்…)

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

பாகம் 1 முதல் 6 வரை இந்துமதத்தைச் சீர்திருத்த முயன்ற அம்பேத்கர், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தலித் தலைவர்களின் நிராகரிப்பையும் மீறி மதமாற்றத்தையே தீர்வாக அறிவித்ததையும், அதன் ஆன்மிகப் பயன்களாக அவர் சொன்னவைகளையும் பார்த்தோம்.

பாகம் 7 முதல் 10 வரை, தீண்டத்தகாதவர்களுக்கான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அரசியல் காரணங்கள், அதை இந்துமதத்திற்குள்ளிருந்து தீர்க்கமுடியாததென அவர் நம்புவதற்கான அவரது வாதங்கள், தகுதிவாய்ந்த தலித் ஒருவருக்கு ஒருவருட சங்கராச்சாரிய பதவிக்கான வேண்டுகோள், மதமாற்றத்திற்கு இஸ்லாமைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அவருக்கு வந்த மறைமுக அழைப்பு, நேரடி அழுத்தம் ஆகியவற்றைப் பார்த்தோம்.

பாகம் 11 முதல் 13 வரை, இந்துமதத்தின் மாற்றாக சீக்கிய மதத்தை அவர் சிந்தித்தது, கிறித்துவ நிறுவன அமைப்பை ஒதுக்கியது, மதமாற்ற வாய்ப்பை ஆக்கிரமிக்க ஐரோப்பியர்கள் செய்த உத்தி ஆகியவற்றைப் பார்த்தோம்.

பகுதி 14 முதல் 18 வரை, இஸ்லாம்– அடிமைகளை உருவாக்குவது, பெண்களை கீழ்த்தர துயரநிலையில் வைப்பது, மனநோய் பரப்புவது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைபோடும் பிற்போக்கானது, பகுத்தறிவுக்கு எதிரான ஷரியா சட்டம் கொண்டது, தேச பக்தி, தேசியக் கண்ணோட்டத்திற்கு எதிரானது என்பதான அவரது வாதங்களைப் பார்த்தோம்.

பகுதி 19 முதல் பாகம் 24 வரை, நடைமுறைக்கு ஒவ்வாத இஸ்லாமியத் தலைவர்கள், இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்குக் கீழ்ப்படியாமை குணம், இந்தியப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள், இஸ்லாமிய மன்னர்களால் இந்தியாவில் ஏற்பட்ட சமய, கலாசாரச் சீரழிவு, வன்கொடுமைகள், கொலை, கொள்ளை ஆகியவற்றைப் பற்றிய அவரது தீவிரமான கருத்துகளைப் பார்த்தோம்.

பாகம் 25, 26-இல் இந்துவை வெறுக்க இஸ்லாமை தவறு என்று தன் வருத்தத்தையும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துவிட்டது எவ்வளவு அவசர அவசியம் என்று தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறார்.

பாகம் 27, 28, 29-இல் கம்யூனிஸத்திற்கான அவரது தீவிரமான  மாற்றுக்கருத்துகளைப் பார்த்தோம்…

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24 || பாகம் 25 || பாகம் 26 || பாகம் 27 || பாகம் 28 || பாகம் 29

29 Replies to “[பாகம் -30] பௌத்தம் பாரதப் பண்பாட்டில் தோன்றிய மதம் – அம்பேத்கர்”

 1. அம்பேத்கர், மற்ற மதங்களை கூறினார் சரி… எதற்காக கிருஷ்ணரை வம்புக்கு இழுக்கிறார். ஏன் ஹிந்து தர்மத்தில் கிருஷ்ணர் மட்டும் தான் கடவுளா? ஏன் கிராம தேவதைகள் எல்லாம் கடவுள் இல்லையா… ஹிந்து மதம் என்பதே ஒரு தொகை மதம் என்று ஆன பிறகு அதில் கிருஷ்ணர் சொன்னதை அறைகுறையாக படித்து விட்டு எழுதுவது முட்டாள் தனம்…

  யார் எந்த ரூபத்தில் வணங்கினாலும் அவன் என்னையே அடைகிறான் என்று அல்லவா எனது இறைவன் கூறினார். அவர் ஒன்றும் தன்னை வணங்குபவன் மட்டுமே முக்தி அடைய முடியும் என்று சொல்லவில்லையே…. பிற மதங்களை கிருஷ்ணரோடு ஒப்பிட்டுவது மலையை மடுவோடு ஒப்பிடுவதற்கு சமம். அது சரி மெக்காலே கல்வி படித்தவருக்கு பகவத் கீதையில் ஞானம் இருக்கும் என்று எதிர்பார்ப்பது…சோனியாவுக்கு இந்தியாவின் மீது பற்று இருக்கும் என்று எதிர்பார்ப்பது போன்றது…

  கட்டுரை ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள். இது கண்டிப்பாக ஒரு புதிய அத்தியாத்தை உருவாக்கும்.

 2. \\ இந்நாட்டிற்கு மிகக்குறைந்த அளவில் கேடு தரக்கூடிய வழியையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அத்தன்மையில் இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன் மூலம் இந்நாட்டிற்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன். \\

  இந்த ஒரு விசயத்திற்காகவே அம்பேதகர் காலில் ஒவ்வொரு இந்தியனும் வணங்க வேண்டும்… நான் ஒரு கம்யூனிஸ பத்திரிக்கையை படித்து கொண்டு இருந்தேன். அசைவம் சாப்பிட கூடாது என்று பௌதம் சொல்லவில்லை. இடையில் பிராமணர்கள் அதை செருகிவிட்டார்கள் என்று… சரியான லூசுகள்.. இதை விட முட்டாள் தனமாக யாரும் பேச முடியாது…..புத்த மதத்திற்கு தலித் தலைவர்கள் என்று சொல்லி கொள்ளும் எந்த லூசும் மாறாமாட்டார்கள். அப்படி மாறினால் எப்படி சர்சில் இருந்து கல்லா கட்டுவது….இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள……………

  https://2ndlook.wordpress.com/2010/11/22/people-for-profit-the-ngo-story/

 3. //
  அம்பேத்கர், மற்ற மதங்களை கூறினார் சரி… எதற்காக கிருஷ்ணரை வம்புக்கு இழுக்கிறார். ஏன் ஹிந்து தர்மத்தில் கிருஷ்ணர் மட்டும் தான் கடவுளா? ஏன் கிராம தேவதைகள் எல்லாம் கடவுள் இல்லையா… ஹிந்து மதம் என்பதே ஒரு தொகை மதம் என்று ஆன பிறகு அதில் கிருஷ்ணர் சொன்னதை அறைகுறையாக படித்து விட்டு எழுதுவது முட்டாள் தனம்…
  //

  மதம் மாறும் எவருக்குமே தான் என் அந்த மதத்தை தேர்ந்தெடுத்தோம் என்று தெளிவாக மற்றவர்களுக்கு சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். அம்பேத்கார் போன்ற பிரபலமானோர்களுக்கு அந்த பொறுப்பு அல்லது மன உந்துதல் ஜாஸ்தியாகவே இருந்திருக்க வேண்டும்

  புத்தர் கிருஷ்ணரோ ராமரோ சொல்லாதத புதுசா என்ன சொல்லிட்டார் புதுசா என்ன செஞ்சுட்டார் என்று யாராவது கேட்டுவிட்டால் என்ன செய்வது. அவர்கள் வாயை அடைக்க ஒரே வழி. கிருஷ்ணர் சாதாரண தேரோட்டியாக இருந்து கொண்டு அதை சொன்னார் என்று தெரியாமலா அம்பேத்கார் இருந்திருப்பார்.

  இயேசு சொன்னதுக்கும் நபிகள் தம்பட்டம் அடித்ததற்கும் வித்யாசத்தை கூடாவா பார்க்கதேரியாதவர் அம்பேத்கார்

  இதெல்லாம் புத்தரை புகழ்வதற்காக என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  இந்தியாவின் வீழ்ச்சிக்கு பெரும் வித்திட்டவர் புத்தர், அல்லது அவர் உருவாக்கிய மதம். சண்டை வேண்டாம் சமாதானப் புறா தான் சிறந்தது என்று உரு ஏற்றி ஏற்றி பாரத்தத்தின் வீர நெஞ்சங்களை நோஞ்சான்களாக மாற்றிய பெருமை இவர்களை சேரும். மாமா நேருவுக்கு புறா விட கற்றுக் கொடுத்ததே புத்த பரம்பரையினர் தான்.

  க்லைப்யம் மா சமகம: பார்த்த நைதத்த்வத் உபபத்யதே
  க்ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா உத்திஷ்ட பரந்தப

  பேடித்தன்மையை அடையாமல், இழிபட்டமனத்தளர்ச்சியை விட்டு எழுந்து நில் அர்ஜுனா என்று கிருஷ்ணர் சொன்னது விவேகானந்தர் போன்றோருக்கு மட்டுமே ஏன் புரிகிறது பிடிக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லை.

 4. மதிப்பார்ந்த சாரங்,

  //இந்தியாவின் வீழ்ச்சிக்கு பெரும் வித்திட்டவர் புத்தர், அல்லது அவர் உருவாக்கிய மதம். சண்டை வேண்டாம் சமாதானப் புறா தான் சிறந்தது என்று உரு ஏற்றி ஏற்றி பாரத்தத்தின் வீர நெஞ்சங்களை நோஞ்சான்களாக மாற்றிய பெருமை இவர்களை சேரும்.//

  இப்படி ஒரேயடியாகப் புத்தரைக் கேவலப்படுத்தி விட்டீர்களே.. இந்த இடத்தில் உங்கள் பேச்சு மிகவும் விசித்திரமாகவும், நகைச்சுவையாகவுமே எனக்கு இருக்கிறது.. அதற்கு மன்னிக்கவும்..

 5. சாரங்…

  நன்றாக சொன்னீர்கள்…

  கிருஷ்ணர் ஏன் அர்ஜினனை சண்டை போட சொன்னார்… மன்னன் கண்டிப்பாக சகல சம்பத்துகளுடன் இருக்க வேண்டும் என்று மொழிந்தார் என்று எனக்குள் நானே பல நாட்கள் கேட்டு கொண்டது உண்டு…

  ஆனால் ருவாண்டா தொடர்பான ஆய்வு கட்டுரைகளை நான் படிக்கும் பொழுது தான் எனக்கு புரிந்தது மன்னன் ஏன் சண்டையிட வேண்டும். ஏன் பொன் பொருள் சேர்க்க வேண்டும் என்று….

  நான் எழுதிய விசயத்தை மீண்டும் இங்கு ‘copy paste செய்கிறேன்…

  \\1920 ஆம் ஆண்டு பெல்ஜிய காலனிய உயர் அதிகாரி காங்கோ மற்றும் அதன் சுற்றியுள்ள தனது கட்டுபாட்டில் உள்ள நாடுகளின் கிறித்துவ மிஷனரிகளுக்கு ஒரு சுற்றிக்கையை அனுப்பினார். இந்த சுற்றறிக்கை:….

  நமது காட்டுமிராண்டிக் கருப்பர்களைச் செல்வங்களின் மீது பற்று இல்லாதவர்களாக மாற்ற வேண்டும். ஏழைகள் தான் கடவுளை அடைய முடியும் என்றும் செல்வம் சேர்ப்பது கடவுளுக்கு எதிரான விசயம் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.

  துறவிகளை உதாரணம் காட்டி, அவர்கள் எவ்வாறு தனக்குத் தீங்கு இழைத்தவர்களை மன்னித்தார்கள், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எவ்வாறு பொறுத்துக் கொண்டார்கள் போன்றவற்றை சொல்லி அவர்களைக் கோழைகளாக மாற்றுங்கள்\\

 6. இதில் கேவளப்படுத்த என்று என்ன இருக்கிறது

  புத்தர் வரலாற்றை நாம் பொதுவாக மேலொட்டமாக தான் படிக்கிறோம். அவர் அரச குலத்தில் பிறந்தும் ஏன் சாஸ்வத சமாதானத்தை நாடினார் என்பதற்கு அவரது வாழ்கை நிகழ்வுகளே காரணம். அவரது காலத்தில் அவசியமில்லாத போர்கள் நிகழ்ந்தன உடனே ஒட்டு மொத்த சமாதானம் தான் ஒரே வழி என்று நிறுவி விடுவதா. போரிடாமல் ஆப்கானிஸ்தானை, பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர முடியுமா

  அவருக்கு போதி மரத்தடியில் கிடைத்த க்யானமாவது இந்த சமாதானத்தை ப்ற்றினது அல்ல. அவருக்கு கிடைத்து க்யானமாவது கடவுள் இல்லை என்பதே. இது தெறியாமல் புத்தரையே கடவுளாக்கிவிட்டு அழகு பார்கிரோம் நாம்.

  அஹிம்சா கொள்கையை அளவுக்கு அதிகமாக பரப்பி மஹாவீரரும் புத்தரும் இந்தியர்களை கோழைகள்Ÿ ஆக்கிவிட்டனர்.

  இது அவர்கள் வேண்டுமென்றே செய்த தவறாக இல்லாமல் போனாலும் இது தவறு தான். புத்தரை விட பல மடங்கு க்யானம் உடைய பீஷ்மர் தவறு செய்தால் அதை நாம் தவறு என்று சுட்டிக்காட்டுகிறோம், புத்தரை சொல்லக் கூடாதா.

 7. // இந்தியாவின் வீழ்ச்சிக்கு பெரும் வித்திட்டவர் புத்தர், அல்லது அவர் உருவாக்கிய மதம். சண்டை வேண்டாம் சமாதானப் புறா தான் சிறந்தது என்று உரு ஏற்றி ஏற்றி பாரத்தத்தின் வீர நெஞ்சங்களை நோஞ்சான்களாக மாற்றிய பெருமை இவர்களை சேரும். மாமா நேருவுக்கு புறா விட கற்றுக் கொடுத்ததே புத்த பரம்பரையினர் தான். //

  சிங்கள புத்த பிட்சுக்கள் புறா மட்டும் விட்டுக் கொண்டிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  ஆதி சங்கரரைக் கேட்டால் சரியாகச் சொல்வார் புத்தர் இந்தியாவுக்கு அளித்த ஞானவழி என்னவென்று.

 8. சாரங் அவர்களே,

  நீங்கள் உங்கள் கற்பனையில் சொல்கிறீர்கள்.. ஆனால், நாமோ, 75 வீதத்திற்கும் அதிகமான மக்கள் பௌத்தத்தைப் பின்பற்றும் இலங்கையிலிருந்து சொல்கிறோம்.. புத்தர் காட்டிய (உங்கள் வார்த்தைகளில் கோழைகளாக்கிய) மார்க்கம் சிறப்பாக கடைப்பிடிக்காமல் விடப்பட்டு, புறா விடாமல், திமிர்க் குணத்தைக் காட்டியதால் நாம் இழந்தவை ஏராளம்.. ஆயிரம் ஆயிரம் உயிர்கள்.. தங்கள் கருத்தை இந்த இடத்தில் அணு அளவும் ஏற்க நாம் தயாரில்லை..

  எவராவது ஒரு பகுதியாரேனும் கொஞ்சமாவது சமாதானத்தை, விட்டுக் கொடுப்பை, சகிப்புத் தன்மையைப் பின்பற்றி இருந்தால் நிலமை இப்படி ஆகியிருக்காது.. வால்மீகி சொன்ன குபேரபூமி.. இங்கே பாருங்கள்.. திருமூலர் சொன்ன சிவபூமியைப் பாருங்கள்.. சவம் மலிந்த தேசமாகிக் கிடக்கிறது.. அஹிம்சை இல்லாமல் போனதால்..

  சொல்வது சுலபம்.. நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்..

  புத்தருக்குக் கிடைத்த ஞானம் ‘கடவுள் இல்லை’ என்பது என்று நீங்கள் எதை வைத்துச் சொல்ல முடியும்? பௌத்தர்களைப் பற்றிப் பேசுங்கள்.. புத்தரைப் பற்றி எப்படி இப்படியெல்லாம்.. என் பார்வையில் புத்தர் ஒரு நல்ல ஹிந்து..

  கிருஷ்ணன் காட்டிய தர்மமும் புத்தர் காட்டிய தர்மமும் ஒன்றே.. (அகப்பார்வையில்) அது அந்த அந்த இடங்களில் முக்கியமானவை..

 9. புத்தமதம் என்பது ஒரு தனிமதம் அல்ல. இந்து மதத்தில் உள்ள அறுவகை பிரிவுகளான சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சைவம், வைணவம் என்றவற்றுடன் சார்வாகமும், புத்தமும் மேலும் இரு சிறு பிரிவுகளே ஆகும்.

  புத்தர் சிறுவயதில் தன் இளவயது மனைவியையும், சிறு குழந்தையாய் இருந்த மகனையும் விட்டுவிட்டு , ஓடிப்போன ஒரு கோழையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறார். துறவு வாழ்க்கை அவமான சின்னமல்ல. ஆனால், திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தபின்னர், ஓடிப்போனது ஒரு பேடித்தனமான விஷயம் ஆகும். அவர் தன்னுடைய மனைவிக்கும், மகனுக்கும் இழைத்த துரோகம் மன்னிக்க இயலாதது. என்ன செய்வது, பெண்களுக்கு கொடுமை இழைப்பது , அந்த காலத்தில் ஆண்களுக்கு ஒரு வாடிக்கையாக இருந்ததோ ? எனவே, புத்தரின் இந்த செயல் அசிங்கமானதும் , கேவலமானதும் ஆகும்.

  அவருடைய போதனைகள் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், அவருடைய சிறுமையான செயல் காரணமாக, சாத்தான் வேதம் ஓதியது போல , மதிப்பு இழந்து போயின. நமது நாட்டில் எவ்வளவோ அவமான சின்னங்கள் உள்ளன. அதில் புத்தரும் ஒருவரே.

 10. திரு.மயூரகிரி சர்மா அவர்களே…..
  நான் திரு. சாரங் அவர்களின் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்…….புத்தரால் பாரதத்திற்கு விளைந்த அனர்த்தங்கள் கணக்கிட முடியாது…..நடைமுறைக்கு ஒவ்வாத மேற்படி தத்துவங்களால் பாரதம் ஆயிரம் ஆண்டுகள் அடிமைத்தனத்தில் உழன்றதுதான் மிச்சம்…..நம்மை ஆக்கிரமிக்க வந்தவர்கள் வாளேந்தி வந்த போது நாம் மேற்படி மதங்களின் தாக்கத்தால் ஜீவ காருண்யம் பேசிக்கொண்டிருந்ததால்தான் பாரதம் விலை மதிப்பற்ற பல கோடி செல்வங்களை பறிகொடுக்க நேர்ந்தது……

  சமணனாக இருந்த மகேந்திர வர்மா பல்லவன், தன்னுடைய ஆட்சிக்கு பவுத்த மதத்தை சார்ந்த புலிகேசியால் ஆபத்து வரும் என்ற நிலையில் தான் சைவனாக மாறினான் என்பது வரலாறு….அது மட்டுமல்ல ……சமண மதத்தின் தாக்கத்தால் கோழைகளாக மாறிவிட்ட தன் நாட்டு மக்களுக்கு வீரத்தின் அருமையை உணர வைக்க நாடெங்கும் மகாபாரதத்தை படிக்கும் பாரத மண்டபங்கள் கட்டினான்……

  இந்த உலகம் என்றுமே பலம் உள்ளவனுக்கு அடிமை……வறட்டு வேதாந்தங்கள் வாழ்க்கைக்கு உதவாது………

  (edited and published)

 11. மயூரிகி ஷர்மா அவர்களே

  நான் எதோ புத்தரை கேவலப்படுத்துவதாகவே நினைத்துக் கொண்டு பேசுவது போல் தெறிகிறது. எல்லாத்துக்கும் டிஸ்க்லைமர் போட்டு எழுதுவது கஷ்டம் என்று உங்களுக்கே தெறிந்திருக்கும். புத்தரின் புனிதத்தத்தை நான் குறை சொல்லவில்லையே. மேலொடு பார்த்தால் புத்தர் சொன்னது சரியாகத்தான் இருக்கும். புத்தர் சாக்ஷாத் ஒரு சாதுவின் மன்ப்பாங்கையே கொண்டிருந்தார். அரச வாழ்வில் அவருக்கு வெறுப்பு இருந்தது உண்மை தானே. இந்த வெறுப்பு அவருக்கு தந்த பாடம் எல்லாம் சூன்யம் ஏதும் இல்லை உன்மை, அமைதியெ எல்லொருக்கும் எல்லா சமயங்கலிலும் உய்ய வழி.

  அவரது போதனைகள் கட்டுத் தீ போல பரவ வில்லையா. அவரை மட்டம் தட்ட நான் நினைக்க வில்லை.அவர் தான் சொன்னார் என்றால் மன்னர்களுக்கு எங்கே போச்சு அறிவு.

  நீங்கள் இலங்கையில் இருக்கலாம் அதற்க்கும் புத்தர் செய்ததர்க்கும் என்ன சம்பந்தம்.

  // புத்தருக்குக் கிடைத்த ஞானம் ‘கடவுள் இல்லை’ என்பது என்று நீங்கள் எதை வைத்துச் சொல்ல முடியும்? பௌத்தர்களைப் பற்றிப் பேசுங்கள்.. புத்தரைப் பற்றி எப்படி இப்படியெல்லாம்.. என் பார்வையில் புத்தர் ஒரு நல்ல ஹிந்து
  //

  என்று நீங்கள் கேட்கிறீர்கள். இதனால் தான் முன்பே சொன்னேன் நாம் மஹான்கலின் வாழ்கையை புரானமாக படிக்க தான் ஆசை படுகிறோம். புத்தருக்கு கிடைத்த க்யான யாது என்பதை பற்றி எல்லாம் அவரது புத்தருடன் கூட இருந்த புத்த மதத்தவரே எழுதிய வாழ்கை சரிதங்கள் சொல்கின்றன

  அதை படித்தால் நமக்கு தெரிய வரும். புத்தருக்கு வந்த க்யானம் என்பது அனாத்மன் என்ற ஆத்மா (கடவுள்) மறுப்பு என்ற க்யானம் தான். இதை நான் சொல்லவில்லை புத்தரே தான் சொல்கிரார். இந்த க்யான வருவதர்க்கு முன்பு தான் உலகத் தொன்றல் பற்றி அரிவு அவருக்கு பிறக்கிரது – கூட்டெழுதல் கொ அரைசிங் என்பது தான் அது. எதற்க்கும் எதுவும் மூலாமில்லை இது இருக்க அது வேண்டும் அது இருக்க இது வேண்டும் …

  புத்தர் செய்தது தவராக இல்லாமலிருக்கலாம் அனால் அவரது கொள்கைகள் முழுமை பெற்றவை அல்ல. அது ஒரு

  க்ருஷ்ணர் சொன்னதும் புத்தர் சொன்னது ஒரு நாளும் ஒன்றாகாது

  உத்தரெதாத்மனாத் மானம் நாத்மானம் அவசாதயெத்
  ஆத்மா ஏவ ஆத்மனஹ பந்து ஆத்மைவ ரிபுராத்மனŸஹ

  ஆத்ம சக்தியை உயர்த்திகொள் ஆத்ம சக்தியை இழிவுருத்த வேண்டாம்.
  ஆத்மா தான் ஆத்மாவின் நன்பன் (டா) பகைவனும் கூட
  இது க்ருஷ்ணரின் பன்ச் டயலாக்

  ஆத்மா இல்லாமல் ஒன்றுமே இல்லை என்கிறார் க்ருஷ்ணர், கொஞ்கம் மாற்றி புத்தர் ஆத்மா என்று ஒன்றுமே இல்லை என்கிறார். புத்தர் நல்லவர் உண்மயிலேயே மிக நல்லவர் அனால் அவரது போதனைகள் முழுமை பெற்றவை அல்ல. இதை நீங்கள் இதை இப்படி அனுகினால் நான் சொல்ல வந்தது புறியும்.

 12. திரு . சேவற்கொடியோன் அவர்களே…….

  ” புத்தமதம் என்பது ஒரு தனிமதம் அல்ல. இந்து மதத்தில் உள்ள அறுவகை பிரிவுகளான சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சைவம், வைணவம் என்றவற்றுடன் சார்வாகமும், புத்தமும் மேலும் இரு சிறு பிரிவுகளே ஆகும்.”

  சீக்கிய மதத்தையாவது கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்…..ஆனால் பவுத்தமும் சமணமும் நம் நாட்டில் தோன்றியவை என்பதை தாண்டி ஹிந்து மதத்தோடு பல வகையில் முரண்படுபவை……நம்முடைய ஆதார நம்பிக்கைகளையே கேள்விக்கு உள்ளாக்கும் மேற்படி மதங்களை ,நம்முடைய மதத்தின் ஒரு பிரிவு என்று கூறிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்……….வெறும் எண்ணிக்கைக்காக மேற்படி மதங்களை சேர்த்துக்கொள்வது நியாயமாக எனக்கு தோன்றவில்லை……

 13. சேவற்கொடியோன்

  புத்தர் தனது குடும்பத்தை தவிக்க விட்டெல்லாம் போக வில்லை. அவரது மனைவிக்கு புத்தர் சென்றுவிடுவார் என்பது தெரிந்தே இருந்தது. அவரும் புத்தரை போலவே மிக பரந்த மனம் படைத்தவராக இருந்தார். மற்ற இலவரசிகளை போல அல்லாமல் க்ராமம் க்ராமமாக சென்று எல்லொறுக்கும் உதவி செய்துகொண்டு இருந்தார். புத்தர் அவரது மனைவியிடம் தனது மன நிலையை தெளிவாக விளக்கி கூரியுள்ளார்.

  புத்தரிந் மனைவி ஒன்றும் ஆண்டி அல்ல நடு ரோட்டில் அல்லல் படுவதற்கு அரச குமாரி. அவரை பார்த்துக்கொள்ள எக்கச்சக்க பேர் இருந்தார்கள்.புத்தரின் மகன்னும் புத்தருடன் இனைந்து சந்யாசம் வாங்கிக் கொண்டார். கிடத்தட்ட புத்தரின் மொத்த குடும்பாமுமே (அம்மா உட்பட) சன்ந்யாசம் வாங்கிக் கொண்டார்கள்.
  புத்தர் கோழை எல்லாம் இல்லை. ராஜாவாக இருந்தும் உண்மயை தேடி மக்களின் துயரம எப்படியாக போக வேண்டும் என்ற முடிவோடு துரவரம் நாடி அலைந்து திரிந்து அல்லல் பட்டு க்யானம் பெற்றார். அவர் பல நாட்கள் சாப்பிடாமல் கிட்டத்தட்ட இரந்தே விட்டார். ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அவரை காப்பாற்றினான் பின்னாலில் அவன் புத்த பிக்ஷுவாகி புத்த்தரின் வரலாற்றை எழுதினான்.

  அவர் ம்ற்றவருக்கு நான் வழிகாட்டியாக இருக்கு வேண்டுமென்றால் முதலில் எனக்கும் பயம் நீங்க வேண்டும் என்று நினைத்து நித்தம் இரவில் நடுக்க் காட்டிற்கு தனியெ சென்று சில மனி நேரங்கள் கழிப்பார். அவருக்கு நிறைய தைரியம் இருந்தது, மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற அன்னாலில் யாருக்கும் இல்லாத அலாதி கருணை இருந்தது.

 14. ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்கள் அஹிம்சை என்பது லவலேசமும் இல்லாமற் போனதால் லங்காபுரி இன்று எப்படி ஒரு ச்மசானம் போலாகிவிட்டது என்று க்லேசப்படுவது ஞாயமே.

  அதற்கு நேர் எதிராக இங்கே காஷ்மீரத்திலும் அதற்கு மேலே லே மற்றும் கர்கில் ப்ரதேசங்களிலும் திப்பத்திலும் சற்று மேற்கே ஆஃப்கனிஸ்தானத்திலும் தேவைக்கதிகமாக அஹிம்சை தலைமீது சுமத்தப்பட்டதால் வைதிகர்களும் பௌத்தர்களும் எப்படி நிலைகுலைந்து போயினர் என்பது சரித்ரம். இன்றும் காஷ்மீரப் ப்ரதேசத்தில் இவர்கள் எப்படி தொல்லைக்குள்ளாகி வருகிறார்கள் என்பதை நிதர்சனமாகக் கண்டு வருகிறேன்.

  அதே சமயம் வீரத்தை பூஷணமாகக் கொண்டுள்ள சீக்கியர்கள் இன்றும் ஆஃப்கனிஸ்தானிலும், சிந்த், பஞ்சாப், பலோசிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரத்தில் எப்படி சத்ருபயமில்லாது தீரத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் கூடவே பார்த்து வருகிறேன்.

  நிந்ததி யக்ஞ விதே: அஹஹ ச்ருதிஜாதம்
  சதய ஹ்ருதய தர்சித பசுகாதம்
  கேசவ த்ருத புத்தசரீர ஜய ஜகதீசஹரே

  யக்ஞங்களில் பசுஹிம்சையை நிந்திக்க பகவான் பௌத்தாவதாரம் எடுத்ததை ஜயதேவர் பாடுகிறார் தான்.

  வஸிஷ்டர் என்ற ப்ரம்மரிஷி கௌசிகன் என்ற ராஜனே தொல்லை கொடுத்தாலும் சஸ்த்ரமெடுக்காது அவனை தன் ப்ரம்மதேஜஸாலேயே எதிர் கொண்டார் என்பது புராணம். தபஸ்விகளுக்கு பொறுமை என்பது கூட எப்படி ஆயுதமாக இருக்கவியலும் என்பதன் உதாஹரணம் இது. பகவான் சங்கரன் ஆலகால விஷத்தை அருந்தியும் ஹானி ஏதும் இல்லை என்பதற்காக அதைப்பார்த்து ஒரு சாமான்யன் விஷமருந்த முனைந்தால் அது அவனுக்கே தீங்கு. சாமான்யர்களுக்கு பொறுமை, அஹிம்சை என்பது யதாசக்தி பின்பற்றப்பட வேண்டிய ஒரு ஆத்மகுணம் தான். ஆனால் அதையே ஆயுதமாகப் ப்ரயோகிக்க அதற்கேற்ற தவமிருந்தாலொழிய வ்யர்த்தமே என்பதற்கு ஹிந்துஸ்தானம் கணக்கற்ற மக்கள் ரத்தம் சிந்த விபாஜமானது கடந்த கால சரித்ரம்.

  ஒவ்வாத கருத்து என்றாலும் சொல்லப்படும் கருத்தில் மிகுந்த ஆழம் இருந்தது என்பதால் தான் பூர்வ மீமாம்சகர்களும் அத்வைதிகளும் பௌத்த வாதங்களுக்கு எதிர்வாதங்கள் முன்வைத்து வாதம் செய்து அவற்றை நிராகரித்தனர். வைதிகர்களுக்கு பௌத்தக் கருத்துக்கள் பூர்வ பக்ஷமே. அவரவரின் வைதிக வேதாந்தக் கருத்துக்களே சித்தாந்தம்.

  மத்யபானம் (மதுபானம்) மாம்சம் (புலால்) மத்ஸ்யம் (மீனுண்ணல்) முத்ரைகள் (கையசைவுகளால் செய்ய்ப்படும் வணக்கங்கள்) மைதுனம் ( காமம் வழிபடு முறைகளில் ஒரு அங்கமாவது) என பஞ்ச மகரயுக்த வாமாசாரமிகுந்த காபாலிகமும் அளவுக்கு மீறி அஹிம்சையை போதிக்கும் பௌத்தமும் நாட்டிற்கு கேடு விளைவிக்கத்தக்கவை என்பதை மக்களுக்கு அங்கதமாகத் தெரிவிக்கவே காஞ்சீபுரத்தை ஆண்ட மஹேந்த்ரவர்ம பல்லவன் மத்தவிலாஸப்ரஹஸன நாடகத்தை செய்தான்.

  ஸத்யசோமன் என்ற காபாலியும் அவன் பத்னியான தேவசோமையும் மதுவருந்த தங்கள் மது பாத்ரமான காபாலம் காணாது போகையில் கோபாவேசமடைகிறார்கள். ஆங்கு வந்த பௌத்த பிக்ஷுவைப்பார்த்து க்ஷுத்ரமாகி அந்த காபால பாத்ரத்தில் இருந்த மாமிசத்தைப் புஜிக்க வேண்டி பிக்ஷுவே காபாலத்தை திருடியிருக்க வேணும் அல்லது அதை ஏதேனும் நாய் கொண்டு சென்றிருக்க வேணும் என தகறாறு செய்ய அங்கு வந்த பாசுபதத்துறவி பௌத்தத்துறவியின் பிக்ஷாபாத்ரமான காபாலத்தை ஸத்யசோமனுக்குக் கொடுக்கப்பண்ணி மத்யஸ்தம் செய்வதாய் நாடகம்.

  பல சிவாலயங்களைக் குடைவரைக்கோவில்களாக நிர்மாணம் செய்த மஹேந்த்ர பல்லவன் இப்படி ஒரு நாடகம் செய்தது அக்காலத்தில் அவைதிக தர்சனங்கள் எப்படி தறிகெட்டிருந்தன என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறது என்றால் மிகையாகாது. அளவுக்கு மீறினால் அம்ருதமும் விஷமே.

  காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
  ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
  வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
  நாதன் நாமம் நமச்சி வாயவே.

  என்ற பதிகத்தில்,

  கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
  வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
  விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
  நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.

  என்றிருப்பதை நினைவு கொள்கிறேன்.

 15. // நம்மை ஆக்கிரமிக்க வந்தவர்கள் வாளேந்தி வந்த போது நாம் மேற்படி மதங்களின் தாக்கத்தால் ஜீவ காருண்யம் பேசிக்கொண்டிருந்ததால்தான் பாரதம் விலை மதிப்பற்ற பல கோடி செல்வங்களை பறிகொடுக்க நேர்ந்தது……//

  ஒற்றுமையில்லாதுதான் காரணம். வீரமும் போர்க்குணமும் நிறைந்த ராசபுத்திர மன்னர்களின் உள்பகைதான் காரணம் என்பது வரலாறு.

  // சமணனாக இருந்த மகேந்திர வர்மா பல்லவன், தன்னுடைய ஆட்சிக்கு பவுத்த மதத்தை சார்ந்த புலிகேசியால் ஆபத்து வரும் என்ற நிலையில் தான் சைவனாக மாறினான் என்பது வரலாறு….//

  அப்பர் பெருமான் மகேந்திரவர்மரை சைவத்திற்கு மாற்றி சில காலம் சென்ற பிறகே சாளுக்கியப் படையெடுப்பு நிகழ்ந்தது. பவுத்தனான புலிகேசியிடம் ஜீவகாருண்யம் இல்லையே?

  // அது மட்டுமல்ல ……சமண மதத்தின் தாக்கத்தால் கோழைகளாக மாறிவிட்ட தன் நாட்டு மக்களுக்கு வீரத்தின் அருமையை உணர வைக்க நாடெங்கும் மகாபாரதத்தை படிக்கும் பாரத மண்டபங்கள் //

  யுத்தவெறியில்லாவிட்டாலும் அதை எதிர் நோக்கி தயார் நிலையில் இருப்பது தவறல்ல. கலைகளிலும், இலக்கியத்திலும் முழுக் கவனத்தையும் செலுத்திதாலும் இருக்கலாம் அல்லவா?

 16. // நீங்கள் இலங்கையில் இருக்கலாம் அதற்க்கும் புத்தர் செய்ததர்க்கும் என்ன சம்பந்தம். //

  ஈழத்தில் வாழும் திரு. மயூரகிரி சர்மா அவர்களுக்கல்லவா நம்மைவிட நன்றாகத் தெரியும் புத்தரின் ஜீவகாருண்ய மார்க்கம் அவரைப் பின்பற்றுபவர்களிடமே ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது.!

 17. // ஆத்மா இல்லாமல் ஒன்றுமே இல்லை என்கிறார் க்ருஷ்ணர், கொஞ்கம் மாற்றி புத்தர் ஆத்மா என்று ஒன்றுமே இல்லை என்கிறார். //

  வேதங்கள் போற்றும் பரமாத்மாவும், புத்தர் அனுபவித்த சூன்யமும், நம் கற்பனைக்கும் எட்டாத பேராற்றலும் பேரரறிவும் உள்ள மஹாபிரக்ஞை. பிரபஞ்சமும் அதன் விதிகளும் அவன் (அதன்) திருவுளத்தால் இருந்து, இயங்கி மறைகின்றன.

 18. சாரங் அவர்களின் கருத்துக்கள் கச்சிதமாக இருக்கின்றன.. ஆனால், இந்த இடத்தில் என்னால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது.. அதற்கு என்ன செய்ய முடியும்.. ?

  என் பக்க நியாயங்களுக்கு என்னிடம் தரவுகள் இருக்கிறது. வாய்ப்புண்டானால் அது பற்றி ( அதாவது என் தரப்பு வாதங்களை முன் வைத்து) கட்டுரை ஒன்று எழுத முயல்வேன்..

 19. ஹிந்து மித்திரன் இதழிலிருந்து –ஸ்ரீ சுவாமி பிரம்மயோகானந்தா
  தனி மனிதன் கடைபிடிக்கவேண்டிய அஹிம்சையை தேசத்தை காக்க வேண்டியவர்கள் கடைபிடித்ததால் வலுவிழந்து நிற்கிறோம். புத்தர் ராஜ்ஜியத்தை துறந்து சாதுவானார். அது சரி ஆனால் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் ராஜா புத்தரின் தன்மையை கடைபிடிப்பது தவறு. வெள்ளைகாரன் என்ன அடிகோடுத்தாலும் வதைத்தாலும் மிதித்தாலும் எதித்து தாக்காதே. ரத்தம் சிந்தி சிந்தி வந்தேமாதரம் சொல் என்றார் காந்தி. இவ்வாறு அஹிம்சையை தவறாகப் பயன்படுத்தி வீணாய்ப் போனோம். இதை ”சத்குண விக்ருதி” என்கிறார் வீர சாவர்கர். நமது நல்ல குணமே நமக்கு ஆபத்தாகிவிட்டது.
  அஹிம்சையை முதல் முதலில் தவறாகப் புரிந்துகொண்டது அசோகர். அதிலிருந்து நமது ராஜ்யதர்மம் போய்விட்டது. அசோகர் முதல் காந்தி வரை ராஜ்யத்தில் தவறாகக் கடைபிடித்த அஹிம்சையின் விளைவாக நம் நாட்டில் கோழைதனம் தலைதூக்கியது. அரசியலில் உள்ளவர்கள் க்ஷத்திரியர்கள் சாதுக்கள் அல்ல. க்ஷத்திரிய தர்மம் யுத்தம் செய்வது. மன்னிப்போம் மறப்போம் என்பது தனிமனிதன் தன் சொந்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது. ஒரு தேசம் அப்படி செய்யமுடியாது. பாக்கிஸ்தான் செய்த அட்டூழியத்தையெல்லாம் மறக்க முடியுமா ? பம்பாயை தாக்கியதையும் நாடாளுமன்றத்தில் தாக்கியதையும் மறக்கக்கூடாது மன்னிக்கவும் கூடாது அப்பொழுதுதான் தேசத்தை பாதுகாக்க முடியும்.

 20. இதுவும் அம்பேத்கர் சொன்னதுதான்
  Dr B R Ambedkar addressed delegates of Young Men’s Buddhist Association in May 1950 at Colombo on ‘Rise & fall of Buddhism in India ’. He said:
  “Buddhism in its material force had disappeared. But as a spiritual force it still exists’. As regards Hinduism he said it went through three phases, Vedic religion, Brahmanism and Hinduism. It was during the Brahmanism period that Buddhism was born. It was not true that after the days of Shankaracharya Buddhism was dead in India . It was going on for years together. In fact Shankaracharya and his teacher were both Buddhists he added. While he was digging material on the subject for the decline/vanish of Buddhism from India the reasons were – adoption of some rituals & practices from Buddhism by the Vaishnava & Shaiva cults, which were vociferous in their propaganda against Buddhism. During the invasion by Allauddin Khilji thousands of priests in Bihar were massacred and consequently some of them fled for their lives to Tibet, China & Nepal. In the meanwhile, the majority of Buddhists went over to Hinduism. The third cause was that Buddhism was difficult to practice while Hinduism was not. Reason four was that the political atmosphere in India had been unfavorable to the advancement of Buddhism he concluded.”

 21. இதுவும் அம்பேத்கர் சொன்னதுதான்
  (source: B. R. Ambedkar, “The decline and fall of Buddhism,” Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches, Vol. III, Government of Maharashtra. 1987, p. 229-38). For more refer to chapter on Education in Ancient India.
  Was Buddhism driven out of India?
  No. It is a canard. A lie propagated by vested interests.
  What are the facts? Buddhism was a reaction to the growing permissiveness and distortions of Aryan society.
  It was, therefore, puritanical. But by banning drinking, dancing, singing and theatre, Buddhism sowed the seeds of opposition.
  Brahmanism never opposed Buddhism.
  The first disciples of the enlightened one were all Brahmins, like Maha Muggalanna, Sariputta, Maha Kashyapa, Asita, Kaundinya. In Fact, the kings gave equal protection to both Hinduism and Buddhism. For example, the Gupta Empire, although Hindu, gave full protection to Buddhism. So did Harsha’s empire. Lalitaditya, the greatest king of Kashmir, although not a Buddhist, built the largest Vihara for the Buddhists.

 22. என்னை பொருத்தவரையில் அம்பேத்கர் தான் கூட்டமாக மதம் மாறிவிடுவேன் என்று சொல்லிகொண்டே எல்லோரையும் பல காலம் பயம் காட்டி வந்தார். நான் ஹிந்துவாக பிறந்தாலும் ஹிந்துவாக சாகமாட்டேன் என்று வீண் பிடிவாதம் செய்தார். அதனாலேயே தான் சொன்ன சொல்லை மீறக்கூடாது என்ற எண்ணத்தினால் வலுக்கட்டாயமாக பலரை சேர்த்துக் கொண்டு புத்தமதத்திற்கு மாறினார். அவர்கள் நவபௌதர்கள் என்று சொல்லி இன்றும் அங்கே ஒதுக்கப்பட்டுள்ளார்கள். எப்படி ஹிந்து மதத்தில் இல்லாத ஜாதியும் தீண்டாமையும் ஒட்டிக்கொண்டதோ அதை போல் புத்த மதத்திலும் பல சமூக ஒழுக்ககேடுகள் வெகுவரைவிலேயே தொற்றிக்கொண்டு ஹிந்து மதத்தை விட மிக கிழான நிலையில் இருந்த பொழுதுதான் புத்த மதம் தோன்றியபொழுது இருந்த நிலைகளை சொல்லி மதம் மாறி தன்னை ஏமாற்றிகொண்டார் அம்பேத்கர் என்பதுதான் யதார்தம்.
  இதை பற்றி விவேகானந்தர் கூற்றை பார்போம்
  Swami Vivekananda said: “Thus, inspite of preaching mercy to animals, inspite of the sublime ethical religion, inspite of the discussions about the existence or non-existence of a permanent soul, the whole building of Buddhism tumbled down piece-meal and the ruin was simply hideous. The most hideous ceremonies, the most obscene books that human hands ever wrote or the human brain ever conceived, have all been the creation of the degraded Buddhism. The Tartars and the Baluchis and all the hideous races of mankind that came to India , became Buddhists and assimilated with us, brought their national customs and the whole of our national life became a huge page of the most horrible, bestial customs. Sankara came and showed that the real essence of Buddhism and that of Vedanta are not very different but that the disciples did not understand the master and have degraded themselves, denied the existence of soul and one God and have become atheists. That was what Sankara showed and all the Buddhists began to come back to their old religion

 23. // என்னை பொருத்தவரையில் அம்பேத்கர் தான் கூட்டமாக மதம் மாறிவிடுவேன் என்று சொல்லிகொண்டே எல்லோரையும் பல காலம் பயம் காட்டி வந்தார். நான் ஹிந்துவாக பிறந்தாலும் ஹிந்துவாக சாகமாட்டேன் என்று வீண் பிடிவாதம் செய்தார். அதனாலேயே தான் சொன்ன சொல்லை மீறக்கூடாது என்ற எண்ணத்தினால் வலுக்கட்டாயமாக பலரை சேர்த்துக் கொண்டு புத்தமதத்திற்கு மாறினார். //

  ஆப்ரகாமிய மதங்களைவிட அதிக சிந்தனைச் சுதந்திரம் உள்ளது பவுத்தம். ஹிந்து மதத்தில் வேரோடிய சாதிய ஏற்ற தாழ்வு பவுத்ததில் இல்லை. இன்னும் பல காரணங்களையும் ஆழ்ந்து சிந்தித்தே அம்பேத்கார் பவுத்தத்தை தேர்ந்தெடுத்திருப்பதை இத்தொடரில் படிப்படியாக விளக்குகிறார் திரு. ம்.வெங்கடேசன் அவர்கள்.

 24. புத்த ஜைன மதங்களின் அளவு கடந்த அன்பு மார்கத்தில் ஈர்க்கப்பட்டு இந்திய சமீப காலகட்டத்தில் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் ஒரு கட்டுரை
  https://www.firstpost.com/india/ban-the-gita-a-look-at-arjunas-doubts-vs-krishnas-wisdom-159500.html

 25. மக்கள் வேண்டியது அமைதிதான். 1962 ம் ஆண்டு நடந்த இந்தோ- சீனா போரில் வீரமிக்க இந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருந்தார்கள். ஏன் போரில் வெற்றி பெற முடியவில்லை. மாவீரர் சிவாஜியை தவிர வேறு எந்த இந்து மன்னர்களாலும் முஸ்லீம் மன்னர்களின் எதிர்த்து நின்று வெற்றி பெற வில்லை. இங்கேயே தெரிகிறது இந்து மதத்தின் வீரம்

 26. ஒரு வேலை உங்கள் முன்னோர்கள் அப்பொழுத உங்களிபோல பணியாற்றியவர்கள இருக்கலாம் போரில் !!!!!!!!!!!

 27. /////// 1962 ம் ஆண்டு நடந்த இந்தோ- சீனா போரில் வீரமிக்க இந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருந்தார்கள். ஏன் போரில் வெற்றி பெற முடியவில்லை.///

  இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்து என்ன பயன்? அப்போது இந்த நாட்டின் தலைவனாக இருந்தவன் (=நேரு) ஒரு இந்துமத விரோதியாச்சே! அது மட்டுமா?சீனாவிற்கு ஆதரவு தெரிவித்த ஈ.கே நாயனார் போன்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேச துரோகிகள் கூட இருந்தனரே! (அதற்காக இவனை சிறையில் அடைத்தார்கள் என்பது வேறு விஷயம்)

 28. இப்போதெல்லாம் பெயருக்கு முன்னோ அல்லது பின்னோ தமிழ் என்று வைத்துக் கொண்டு விடுகிறார்கள். அப்படி வைத்துக் கொண்டால் ஹிந்து மதத்தை கண்டிப்பாக சாடியே ஆகவேண்டும் என்று ஏதாவது சாஸ்திரம் புதிதாக வந்துள்ளதோ என்னவோ தெரியவில்லை. இந்த தமிழ் அமுதன் இந்து மதத்துக்கும் சீனா போருக்கும் மொட்டைக் கை முழங்கால் முடிச்சு போடுகிறார். கழுத்தை அறுத்து வீடியோ போடுகிறானே அதெல்லாம்தான் வீரம் என்று இவர் முடிவு செய்துவிட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமா ?

  ரொம்பவும் நாம் இவர்கள் போன்றவர்களை விமர்சிக்கவும் கூடாது. ஏனென்றால் நாம் எல்லோரும் ‘தமிழ்’ துரோகிகள் ஆகிவிடுவோம் ! பார்த்து நடந்துகொள்ளுங்கள் !!

 29. //இந்தியாவின் வீழ்ச்சிக்கு பெரும் வித்திட்டவர் புத்தர், அல்லது அவர் உருவாக்கிய மதம். சண்டை வேண்டாம் சமாதானப் புறா தான் சிறந்தது என்று உரு ஏற்றி ஏற்றி பாரத்தத்தின் வீர நெஞ்சங்களை நோஞ்சான்களாக மாற்றிய பெருமை இவர்களை சேரும். மாமா நேருவுக்கு புறா விட கற்றுக் கொடுத்ததே புத்த பரம்பரையினர் தான்.//

  சாரங் அவர்களின் இந்த கூற்று புத்தரை பற்றிய அறியாமை என்பதா அல்லது இந்து மதத்தின் மீது அவர் கொண்டுள்ள அதீத கண்மூடித்தனமான பற்று அவருக்கு புத்தரின் மீது ஏற்படுத்திய வெறுப்பு என்பதா?

  புத்தர் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்கே கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம். அவர் நமக்கு கிடைத்த போற்றுதலுக்குரிய ஆன்மீக ஆசான், வழிகாட்டி.அவர் தியானத்தில் அனுபவித்த சூன்யம் ஒன்றே உண்மையான யதார்த்தம். சூன்யமே உண்மையாக இருப்பது. இருப்பதாக தோன்றும் அனைத்துமே வெறும் மாயைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *