உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணி தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் & ராஜீவ் மல்ஹோத்ரா எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா தமிழ்ஹிந்துவின் சார்பில் பல வகையிலும் சிறப்பாக நடந்தேறியது.

நிகழ்ச்சிகளை திரு.B.R. ஹரன் தன் கம்பீரமான குரலில் தொகுத்துக்கொடுக்க, வந்தே மாதரம் பாடலைத் தொடர்ந்து, திரு.ஜடாயுவின் கச்சிதமான வரவேற்போடு விழா களைகட்டியது. ஜடாயு, தமிழ்ஹிந்து குறித்த அறிமுகத்தோடு அதன் ஆசிரியர் குழுவிலிருக்கும் அரவிந்தன் நீலகண்டனை “எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று  கைத்தட்டல்களுக்கிடையே  குறிப்பிட்டு  மகிழ்ந்தார்.

புத்தகத்தைப் பதிப்பித்த கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். ஆங்கிலப் புத்தகத்தைப் படித்து, தமிழாக்கத்தையும் செம்மைப் படுத்தியவரான அவர் புத்தக விமர்சனத்தையும் தன்னிலை விளக்கத்தையும் சேர்த்தே செய்தார்.

சிறப்பு விருந்தினர் அனைவரும் சேர்ந்து புத்தகத்தை வெளியிட்டனர்.

திராவிடச் சான்றோர் பேரவையின் தலைவராக தமிழ்ச்சேவை புரியும் பேராசிரியர் சாமி தியாகராஜன் தெய்வநாயகத்தையும் பெரியாரையும் நகைச்சுவையுடன் தாக்கிப்பேசினார். திரு.கருணாநிதியும் அவர் பேச்சில் தப்பவில்லை. தவற விடக்கூடாத பேச்சு அவருடையது. இன்னும்கூட அதிக நேரம் சுவாரஸ்யமாகப் பேசியிருப்பார் என்று தோன்றியது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய மீனவப்பெருமக்களின் மேம்பாட்டுக்காக அனுதினமும் உழைத்து வரும் திரு.ஜோ டி க்ரூஸ்ஆழி சூழ் உலகு மூலம் எழுத்தாளராக  பெரும்  வரவேற்பு பெற்றவர்.  அன்று கச்சிதமாகப் பேசி அனைவரையும் நெகிழவைத்தார். தான் சார்ந்த பரதவர் குலம் எவ்வாறு, ஏன் போர்ச்சுகீசியரால் மதம் மாற்றப்பட்டது என்றெல்லாம் சொல்லி ஹிந்துக்களிடம் உள்ள நல்லிணக்க குணம் மற்ற கடவுளரை மதிக்கும் குணம் கிறுத்துவர்களிடம் கிடையாது என்று கூறி சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் தான் பயணிப்பதாகச் சொன்னார். நிதானமான பேச்சு.

கிருஷ்ண பறையனார் பேச்சை எழுத்து வடிவில் தயார்செய்து கொண்டுவந்து விட்டார். அந்த உரையைப் படித்ததோடு நடுநடுவில் மடைதிறந்து பேசவும் செய்தார்.. தலித்களுக்கு பல சமயங்களில் பார்ப்பனர்கள் உதவியுள்ளார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி, திராவிட இயக்கத்தவர்களைத் தாக்கினார். எல்லாரும் தெலுங்குப் பயலுக; ஒருத்தனும் தமிழ் கிடையாது என்றார். கிறுத்துவ நிறுவனங்களையும் விமர்சித்தார்.

கல்வெட்டியலாளர் எஸ்.ராமச்சந்திரன் நறுக்குத் தெறித்தார்போல் பேசினார். கம்பர் சேக்கிழாருக்கு அடுத்தபடியாக அரவிந்தன் நீலகண்டனைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தவர், இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து சீரிய கருத்துக்களை எடுத்துரைத்தார்.

தொல்லியலாளர் மற்றும் ரீச் ஃபவுண்டேஷன் நிறுவர்னர் டாக்டர் சத்தியமூர்த்தி தொல்லியல் துறை சம்பந்தமான விஷயங்களைப் பேசினார். அதில் ஆரியர்-திராவிட இனக்கோட்பாடுகளுக்கு ஆதாரமில்லாததை நேர்த்தியாக எடுத்துச் சொன்னார்.

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர் தமிழிசை சௌந்தரராஜன் உணர்ச்சிமயமாக உரையாற்றினார். அவர் பேசியபோது அரங்கமே குலுங்கியது. அதிரடிக்குரலும் ஆர்ப்பரிக்கும் அலைபோன்ற தொடர் பேச்சும் வாள் வீச்சாக இருந்தது. அவர் அடிக்கடி சொல்லும் குட்டிக் கதைகளைச் சொன்னார். அவர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிய ஒரு முக்கியமான, பலர் அறிந்திராத ஒரு விஷயத்தை வெளிப்படையாகப் பேசியது அனைவரின் வரவேற்பைப் பெற்றது.

இறுதியில் அரவிந்தன் நீலகண்டனுக்கு ஏற்புரையாற்ற மிகக் குறைவான நேரமே இருந்தது. இந்தப் புத்தகம் தேச ஒற்றுமையில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லாத அண்ணல் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு நன்றிக்கடனாக, தன்னுடைய சிறு முயற்சி என்றும் இந்தப் புத்தகத்தின் தேவை தீரும் நாளையே தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டுப் பண்ணோடு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

அழைத்திருந்த பிரபலங்களில், இந்து முன்னணித் தலைவர் பெரியவர் ராமகோபாலன்ஜி வந்திருந்தார். நிகழ்ச்சி முடியும் முன்பே சென்றுவிட்டாலும் 10 மணிக்கு போன் செய்து வாழ்த்துச் சொன்னார். நிகழ்ச்சி நன்றாக நடத்தப்பட்டதாகப் பாராட்டினார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களும் வந்திருந்தார்.

வி.ஹி.ப. சார்பில் வேதாந்தம் ஜி வர இயலாததால் ஆர்.எஸ்.நாரயணஸ்வாமி வந்தார்.

ஆர்.எஸ்.எஸ். சார்பில் நா. சடகோபன் வந்திருந்தார். சுதேசி ஜாக்ரன் மஞ்ச் சார்பில் சுதேசி செய்தி பத்திரிகை ஆசிரியர் நம்பி நாராயணன், ரீச் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மரபூர் ஜெய சந்திரசேகரன் ஆகியோரும் வந்திருந்தனர்.

தமிழ்ஹிந்து வாசகர்கள் நன்கறிந்த அம்பேத்கர் தொடர் புகழ் இளம்புயல் ம.வெங்கடேசன், ”திராவிட மாயை” சுப்பு, ஜாவா குமார், புதுவை சரவணன், வேதம் கோபால் ஆகியோர் வந்திருந்தனர்.

கோமதி செட்டி, சென்னை விவேகானந்த கேந்திராவின் பாலா, ஷிவ்ஷங்கர் மற்றும் நண்பர்கள் ஆரம்பத்திலேயே வந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உதவினர். தர்ம ரக்ஷண சமிதி செயல்வீரர்களும் வந்திருந்தார்கள்.

தினமணி, தினமலர் மற்றும் மாலைச்சுடர் பத்திரிக்கைகளிடமிருந்து புகைப்பட நிருபர்கள் வந்திருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியைத் திட்டமிட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்து நடத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள் தமிழ்ஹிந்துவின் நீண்டநாள் நண்பர்களும் அபிமானிகளுமான பி.ஆர். ஹரன் மற்றும் ஓகை நடராஜன். விழாவின் வெற்றிக்கு கிழக்கு பதிப்பகத்தின் முழு ஒத்துழைப்பும், குறிப்பாக ஹரன்பிரசன்னாவின் பல உதவிகளும் முக்கிய காரணம்.

இவ்விழா ஓர் அரசு சார்ந்த அரங்கத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் நாம் அறியாத சில காரணங்களாலும் காவல் துறை மற்றும் க்யூ பிராஞ்சின் கவனத்தைப் பெற்றிருந்தது நமக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது. விழா தொடங்குமுன்னரே அரங்க வளாகத்துக்கு வந்து விட்டது காவல்துறை வண்டி. இறுதி வரை இருந்து நிகழ்ச்சி முடிந்த பின் தான் காவல் துறையினர் கிளம்பிச் சென்றார்கள்.

மொத்தத்தில் விழா பெரிய குறையொன்றுமில்லாமல் இனிதே நடந்து முடிந்தது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த, வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் தமிழ்ஹிந்து தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

புகைப்படங்களுக்கான சுட்டி

வீடியோ உதவி: நன்றி, கிழக்கு பதிப்பகம் பத்ரி.

8 Replies to “உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்”

  1. இந்த புத்தகத்தை படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் . இந்தியாவில் உள்ள அனைத்து
    மக்களும் இதனை படித்து புரிந்து கொண்டால் .வருங்கால பாரதம் வளமான வலிமையான பாரதமாக மாறும் என்று என் உள்மனம் சொல்கிறது . தமிழ் ஹிந்துவிற்கு நன்றி …..

  2. The speech by J.D. Cruz is inspiring and affective. He spoke from heart without any stage mannerism, and I felt that he meant every word he spoke.

    My humble pranams to this great man.

    .

  3. தியாகராஜன், கிருஷ்ணப்பரையனார் அவர்களின் பேச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. குருஷ் அவர்களின் பேச்சும் மிகவும் அறுமையாக இருந்தது. மிக குறைந்த நேரத்தில் அதிக தகவல்களை மிக அழகாக சொல்லியுள்ளார்…. நிகழ்ச்சி காத்து கருப்பு அண்டாமல் நல்ல முறையில் நடந்தது மிக்க மகிழ்ச்சி. 🙂

  4. திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு முதலில் எனது சிரம்தாழ்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தகம் வெளிவருவதற்கான தங்களுடைய அயராத உழைப்பிற்கு தமிழர்கள் என்றும் நன்றிகடன் பட்டுள்ளார்கள். 300 ஆண்டுகளாக எவ்வாறெல்லாம் கிருஸ்துவம் தாங்கள்தான் உலகத்தை ஆளபிறந்தவர்கள், பண்பாட்டின் முன்னோடிகள் தங்கள் அதிகாரத்தை (காலணி ஆதிக்கத்தை) ஏற்காதவர்கள் அடியோடு இழித்து, பழித்து, அழித்து ஒழிக்கப் படவேண்டியவர்கள் என்ற உருதியான நிலைப்பாட்டுடன் போலி மணிதநேயம் என்ற கேடயத்தை மிருகவெறியுடன் கையில் எடுத்து எவ்வாறெல்லாம் உலகெங்கும் கணக்கிலடங்கா இனபடுகொலைகளை செய்தது என்பதை பற்றியும் செய்துகொண்டிருப்பது என்ன என்பதை பற்றியும் செய்யப் போவதுஎன்ன என்பதை பற்றியும் தெள்ளதெளிவான ஆதார ஆவணங்களை பட்டியல் செய்பட்டிருப்பதை ahuhYkயாராலும் மறுக்கமுடியாது.
    ஓரு புள்ளி விவரம் இவ்வாறு கூறுகிறது
    1. .+ 145 billion to operate global Christianity
    2. + 4 million full time Christian workers
    3. 13,000 Major Libraries
    4. 22,000 periodicals
    5. 4 billion tracts published every year
    6. +1800 Christian radio and television channels
    7. +1500 Universities
    8. 930 Research centers
    9. +1/4 million foreign missionaries
    10. 400 institution to train the above
    முதலில் இந்த புள்ளி விவரங்கள் மிகைபடுத்திய செய்தி என்று எண்ணினேன் ஆனால் தங்களது புத்தகத்தை படித்தபின் இந்த சிலந்தி வலை பின்னல் இன்னும் பன்மடங்கு பெரியது என்றும் புற்றீசல் போல் உலகின் சந்து பொந்துகளிலெல்லாம் ஆட்டம் ஆடிவருவதை உணர்ந்தேன்.
    இன்று தான் ”உடையும் இந்தியா” புத்தகத்தை படித்து முடித்தேன். ஹிந்துமதத்தை அழித்து இந்தியா உடையுமானால் உலகமும் உடைந்து பல அழிவு சீற்றங்களை எதிர்கொள்ளபோவது திண்ணம். மோடிவ் ஹண்டிங் ஆப் மோடிவ்லஸ் மாலீகன்” என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இதைதான் உடம்புடன் ஒட்டி பிறந்த மனவியாதியின் காரணமாக தொடர்ந்து கிருஸ்துவர்கள் உலகில் அத்து மீறல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பிற மதத்தை கலாசாரத்தை பண்பாட்டை மொழியை சரித்திர வரலாறுகளை பூண்டோடு ஒழித்துவிடவேண்டும் என்ற கொலை வெறியுடன் ஏன் தான் செயல்படுகிறார்களோ ? உண்மையிலேயே ஜிசஸ் என்ற கடவுள் இருப்பாரேயானால் அவர்தான் நம்மை காப்பாற்றவேண்டும் ?!!!!!!!

  5. தமிழ் புத்தக வெளியீட்டுவிழாவில் தங்களது ”நம்பக் கூடாது கடவுள்” புத்தகத்தையும் வாங்கினேன். முதலில் இது கடவுள் கொள்கைகள் பற்றியும் அதை பின்பற்றுபவர்கள் பற்றியும் ஒரு மாற்று கருத்துகள் கொண்ட ஒரு தொடர் கட்டுரை என்று எண்ணினேன். ஆனால் இது எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய சிறு சிறு கிருஸதுவும் மற்ற மோசடி குப்பல்களை பற்றிய பல கட்டுரைகளின் தொகுப்பு. கடடாயம் இதை அனைவரும் படிக்க வேண்டும். ஏன் இந்த புத்தக தலைப்பு என்ற விவரம் கூறவும். ஒரு வேளை நம்பகூடாத கடவுள்ளை நம்பினால் நாடு உடையும் என்பதை உணர்த்தவா ? நான் புரிந்து கொள்வோம் போப் யார் என்பதை ? என்ற திரு ஆர்.பி.விஎஸ்.மணியன் அவர்களின் மலிவு விலை புத்தகத்தை படித்துள்ளேன். இது விசுவ ஹிந்து பரிஷத் வெளியீடு. இதில் ஆரமப கால போப்பிலிருந்து இன்றுள்ள போப்வரை செய்த அட்டூழியங்களை சுருக்கமாக சொல்லியுள்ளார். திரு.அரவிந்தன் இவர்களை பற்றி ஒரு முழுநூல் வெளியிடவேண்டும்.

  6. இது ஒவ்வொரு ஹிந்து இல்லத்திலும் இருக்க வேண்டிய புத்தகம்.
    பல புரியாத விஷயங்கள் புரியும் .

    இதை மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும்.

    இன்று தான் திரு பனித்துளி இங்கே ஒரு கட்டுரையில் எழுதியதைப்படித்தேன்

    “ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல், வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்ட பெண் பற்றிய செய்திக்குப் பக்கத்தில் தேடினால் கிடைக்கலாம்.”

    . இப்போது இந்தபழியையும் நம்மீதே போடுகிறார்கள்.
    கூகுள் இட்டுபார்த்தல் பகீர் என்கிறது.
    ஏகப்பட்ட இணைப்புகள். புதிய திரைகதை வசனம் -நம்ப நிறைய மக்கள். ” அநியாயம் நம்ப ஆட்களே இப்படி” என்று.
    நண்பர்கள் யாராவது இப்பொய்யை உடைக்க ஆங்கிலத்தில் உள்ள இணைப்புகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    ஒரு பாவமும் அறியாத ஹிந்து பழங்குடிகளை கொன்று அந்த பழியையும் அவர்கள் மீதே போடுகிறார்கள். [ ஹிந்து மூட நம்பிக்கையாம். . இந்த கண்றாவி பழக்கம் அவர்கள் கண்டுபிடிபல்லவா? இதில் பல நூற்றாண்டு அனுபவம் வேறே]
    திரு அரவிந்தன் இது பற்றி ஏதேனும் உடையும் இந்தியாவில் எழுதியுள்ளாரா?

    வேல்முருகன்

  7. திரு.அரவிந்தனின் இந்த புத்தகத்தை படிக்க சுமார் 15 தினங்கள் விட்டு விட்டு படித்தேன். இதன் விளைவாக என்னையே அறியாமல் திரும்ப திரும்ப ஏசு கிருஸ்து என்ற நினைப்புகள்தான் வருகிறது. இதற்கே இந்த அளவு தாக்கம் இருக்குமானால் கிருஸ்துவத்திற்கு மாறியதும் அரை பைத்தியமாக மாறுவார்கள் என்பது உண்மையே. அந்த அளவு புலம்பலும் கூச்சலும் ஏதோ வீடடினை தான் நினைவூட்டகிறது. இது இப்படித்தான் என்பதை அவர்களது தொலைகாட்சி பிரசங்கங்களை சிறிது நேரம் கேட்டாலே புரிந்துவிடும். இங்கே திரு.வேலமுருகன் சொன்னது போல் இபபடிதான் வயதான இயற்கையை நேசிக்கும் ஆதிவாசிகளை சூன்னியகாரிகள் என்றுகூறி பாதரிகளால் தண்டிக்கபடுகிறார்கள். உண்மையிலேயே இந்த மதபிரசார பாதரிகள்தான் சூன்யம் செய்து தன்னையும் வெறுத்து மற்றவரைவறையும் வெறுக்கும் அரை பைத்தியங்களை உருவாக்குகிறார்கள்.
    சற்று டைவர்ட் ஆவோம் என்று எனது பையன்களின் வற்புறுத்தலால் நன்பன் என்ற திரைபடத்திற்கு சென்றேன். இது ஒரு திறந்தவெளி அரங்கம் கடல் அருகாமையில் உள்ளது. இந்த படித்தின பின்ணணி இசை செய்தவர் ஜெயராஜ் என்ற கிருஸ்துவர். இவர் பல காட்சிகளில் இந்த கிருஸ்துவ ஓல கூச்சல் இசையை ஏதோ பிரளயம் ஏற்ப்பட்டு ஜனங்கள் திக்குதெரிக்க புலமபிகொண்டு ஒடுவதைபோல் ஒரு பயத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்.. அதுவும் கடல் அருகில் உள்ள திரையரங்கம் என்பதால் நானே ஏதோ சுனாமி வருவது போல் ஒரு சில நிமிடங்கள் பயந்துவிட்டேன். இதன் விளைவாக இந்த காப்பியடித்த புது கவிதை. இதை இன்னும் மெருகேற்றி வாசகர்கள் வெளியிடலாம.
    ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி டீ
    மொத்த சாமி மூணு மூணு
    புனித ஆவி அப்பன் பிள்ள
    மூணும் சேர்ந்து ஒண்ணு ஒண்ணு
    அந்த ஒண்ணே ஏசு சாமி
    சாமி ஆடி சிலுவை சாய்ந்தார்
    மீண்டு வந்து சலவை செய்தார்
    ஏசு சொன்னது அன்பு அன்பு
    பாலு சொன்னது வம்பு வம்பு
    பாவியானர் பாமர ஆளு
    ரத்த சுத்தி ரத்த சுத்தி
    ஏன் இந்த கொலவெறி கொலவெறி டீ

  8. மிகப்பெரிய முயற்சிகளுக்கு பிறகு நேற்று இரவுதான் இந்த புத்தகம் என் கைக்கு வந்தது, தென்தமிழ்நாட்டில் ஒரு சிறிய ஊரை சேர்ந்தவன் நான்,அங்கே எளிதில் இந்தமாதிரி புத்தகங்கள் கிடைக்காது நெல்லையில் உள்ள ஒரு நண்பர் முலமாக பெற்றேன்,ஏற்கனவே அரவிந்தன் சார் எழுதிய “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யுனிசம்” புத்தகத்தை படித்து பாதுகாத்து வைத்திருக்கிறேன் ,அதே பிம்பத்தோடு இதை படிக்க ஆரம்பித்திருக்கிறேன் அரவிந்தன் சாருக்கு என் வாழ்த்துக்கள், இவரது அடுத்த புத்தகம் நாட்டை அதிரவைக்கும் என்று திரு.B.R. ஹரன் அவர்கள் கூறியருக்கிறார் அதனையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    நமஸ்காரம்
    Anantha saithanyan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *