இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12

முந்தைய பகுதிகள் :

சென்ற கட்டுரையில் டேவில் கோல்மன் ஹெட்லி சம்பந்தமாக அமெரிக்காவின் உளவு நிறுவனமான FBI யின் அறிக்கையில் உள்ள சில தகவல்களை பார்த்தோம்.  மேலும் இந்தியாவில் இஸ்லாமிய பங்கரவாத செயல்களை தொடர்ந்து செய்வதற்காகவே பாகிஸ்தான் கராச்சி புராஜெக்ட் எனும் ஒரு புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது.

கராச்சி புராஜெக்ட்

இந்தியாவின் ராணுவ மற்றும் பொருளாதார சாதகங்களை குலைக்கும் வியூகத்தின் அங்கமாகவே செயல்படுத்த ஐ.எஸ்.ஐ., மற்றும் பாகிஸ்தான் ராணுவம், லஷ்கர்-ஈ-தொய்பா, ஹூஜி ஆகிய இயக்கங்கள் 2003ல் தீட்டப்பட்ட திட்டத்திற்கு கராச்சி புராஜெக்ட் என பெயர் வைத்தார்கள்.  இந்த சதி திட்டத்தின் படி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இந்தியர்கள் இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தப் பயன் படுத்தப்படுத்தப்படுவார்கள்.  மகாராஷ்ட்ர மாநிலத்தில் பூனேயில்  ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பு இந்த சதி திட்டத்தின் ஒரு அங்கமாகும் என உள்துறைச் செயலாளர் திரு.ஜி.கே.பிள்ளை தெரிவித்தார்.  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-ஈ-தொய்பாவின் தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலுக்குரிய இடங்களை படமெடுக்க எல்.இ.டி அனுப்பிய நபர் தான் டேவிட் ஹெட்லி என்பதும் புலனாகியது.

பாகிஸ்தானின் துறைமுக நகரமும் குற்றங்கள் மலிந்த இடமுமான கராச்சியில்தான் 1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும், இந்தியாவின் நிழலுலக தாதாக்களான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் போன்றவர்கள் தஞ்சம் புகுந்துள்ள இடமாகும். ஆகவே கிரிமினல் குற்றவாளிகள் நிறைந்த இடமான கராச்சியை இந்த திட்டத்திற்கு கராச்சி புராஜெக்ட் என பெயர் வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இந்தியாவிலிருந்து ஆட்களை அனுப்பி வைக்க நிழலுலகினரும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளான ரியாஸ், இக்பால் பட்கல் போன்ற நபர்களும் இந்த திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.  இந்தியாவிலிருந்து வந்த பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி, முக்கியமாக பொது இடங்களில் வெடிகுண்டுப் பைகளை வைப்பதே கராச்சி புராஜெக்ட்டின் அசல் நோக்கமாகும்.  இந்திய உளவாளிகள்  2009ம் வருடத்தின்  இறுதியில் பங்களாதேஷில் கைது செய்யப்பட்ட அப்துல் க்வாஜாவிடம் (பிலாலின் நெ.2 கையாள்) விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கராச்சி புராஜெக்ட் பற்றிய முழு விவரம்  தெரிய வந்தது.  அமெரிக்க எஃப்.பி.ஐ விசாரித்து வரும் டேவிட் ஹெட்லியிடமும் சதி பற்றியும் அதில் அவனது பங்கு பற்றியும் தகவல் கிடைத்துள்ளன.  இந்த தகவலின் அடிப்படையிலும் கராச்சி புராஜெக்ட் பற்றிய விவரமும்  தெரியவந்தது.

பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சிகளை முடித்தவர்கள் பல்வேறு சட்டவிரோதமான வழிகளில் இந்தியாவிற்குள் ஊடுருவி காத்திருப்பார்கள்.  பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அல்லது லஷ்கர்-ஈ-தொய்பாவிடமிருந்து உத்திரவு வந்ததும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவார்கள்.  இவ்வாறு காத்திருப்பவர்களை ஸ்லீப்பர் செல் என்கிறார்கள்.   இந்த ஸ்லீப்பர் செல்லுக்கு ஆட்களை தேர்வு செய்வதும் ஒரு விசித்திரமான வழியாகும்.  திசைமாறிய இந்திய இஸ்லாமிய இளைஞர்களையும், உள்ளுரிலேயே கிடைக்கும் வெடி மருந்துகளை கொண்டு தயாரித்த குண்டகளை  பயன்படுத்துவது, இந்தியாவின் இதயப் பகுதிகளைத் தாக்குவது, பாகிஸ்தானின் தொடர்பு குறித்து எவ்விதமான சந்தேகங்களும் வராமல் பார்த்துக் கொள்வது என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.  இத் திட்டத்தின் படி இந்த சிலீப்பர் செல்லுக்கு தேர்வு செய்யும் இஸ்லாமிய இளைஞர்களை பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷில் உள்ள லஷ்கரின் ஆட்களிடம் அனுப்பி வைப்பார்கள்.  இந்த இளைஞர்களை பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவர வீடியோக்களை காட்டி இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்த முளைச் சலவை செய்யப்படுவார்கள்.  2003ல் ஆரம்பித்த இந்தப் பயிற்சி முகாமிலிருந்து இரண்டு வருடங்களில் 40 அல்லது 50 ஜிகாதிகள் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என உளவுத் துறையினர் தெரிவித்தனர்.

2005ம் ஆண்டு முதல் நடந்த 10 பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்களில் 500க்கு மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டதில் கராச்சி புராஜக்டிற்கு நேரடிப் பொறுப்பு உண்டு.  இந்த சதி திட்டத்தின் படி பல்வேறு சம்பவங்கள் நடந்தததை அமெரிக்காவில் பிடிப்பட்டு முழுவிசாரனையில் உள்ள டேவில் ஹெட்லியின் மூலம் தெரியவந்தது.  இவனது வாக்குமூலத்தின் படி லஷ்கர்-ஈ-தொய்பாவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளான இந்தியன் முஜாஹிதீன் எனும் பயங்கரவாத அமைப்பை நிறுவிய ரியாஸ், இக்பால்பட்கல் சகோதரர்கள், முஃப்தி சுஃப்பியான் மற்றும் நிழலுலக தாதாவான யாகூப் கான் ஆகியோருக்கு பாதுகாப்பு அளித்திருப்பது தெரியவந்தது.  இந்த சதித் திட்டத்தை தீட்டியது கராச்சியில் உள்ள இந்திய ஜிகாதிகள் என்றும், இந்திய ஜிகாதிகளை ஒன்று திரட்டியது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ என்பதையும் ஹெட்லி தெரிவித்தான்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் 1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமாகும்.  1970 முதல் 1980 வரை இப்ராஹீமின் கும்பல் கடத்தல் தொழில் நடத்தியதை முழுவதும் கண்காணித்து தங்களில் பயங்கரவாத தாக்குதலுக்கு இப்ரஹிம் சரியான நபர் என்ற முடிவுக்கு வந்தார்கள்.  இவன் நடத்திய கடத்தல் மூலமாக ஐ.எஸ்.ஐ ஆர்.டி.எக்ஸ் மருந்துகளை அனுப்பி வைத்தது.  அனுப்பிய பின் இப்ரஹீம் ஆட்களுக்கு அதை கையாளவும், சேகரித்து வைக்கவும் பயிற்சி கொடுத்தார்கள்.  2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை அறிக்கை கூறுவது “ ஒரு லாப நோக்குள்ள கிரிமினல் கும்பல் எப்படி கிரிமினல்- பயங்கரவாதம் கலந்த கலவையாக மாறியது என்பதற்கு இப்ரஹீமின் கும்பல் ஒரு உதராணம்.  ஆகவே பாகிஸ்தானின் திட்டத்தின்படி கராச்சி புராஜெகட் என்பது இந்தியாவின் இறையான்மைக்கு வைத்த வெடிகுண்டு என்பது உலகறிந்த உண்மையாகும்.

2008ம் ஆண்டு நடந்த தாக்குதல்களில் லஷ்கர்-இ-தொய்பாவின் திட்டத்தின் படி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் சிமி இயக்கத்தின் உதவியுடன் தாக்குதல்களை நடத்தினார்கள்.  தூக்குதல்கள் நடக்க போகிறது என்பது நன்கு தெரிந்தும் உளவுத் துறையினரின் பொறுப்பின்மையின் காரணமாக தாக்குதல் நடந்தது.  18.9.2008ந் தேதி Research and Analysis Wing (RAW) ஒரு சேடிலைட் தொலை பேசி உரையாடலை வழிமறித்து கேட்ட போது  கேட்வே ஆப் இந்தியா க்கு அருகில் உள்ள ஒரு விடுதியை தாக்கப்போவதாக தகவல்கள் பரிமாறிக் கொண்டார்கள்.  இதை போலவே 24.9.2008ந் தேதியும் RAW இது போன்ற உரையாடலை கேட்டுள்ளார்கள், அதாவது தாஜ் ஹோட்டல்,(Taj Hotel) சீ ராக் ஹோட்டல்,(Sea Rock Hotel), Marriott Hotel  போன்ற ஹோட்டல்கள் தாக்கப்படும் என்ற தகவல்களை கேட்டார்கள்.  ஆனால் மும்பையில் உள்ள ஹோட்டல்கள் தாக்கப்படலாம் என்பது தெளிவாக தெரிந்தும் உளவுத் துறையோ அல்லது அரசோ எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.  இந்த உரையாடலில் கடல் வழியாக ஆயுதங்கள் மற்றும் தாக்குதல் நடத்துபவர்கள் வருவார்கள் என்பதையும் தகவல்கள் பரிமாறியுள்ளது.  இந்த தகவல்களின் அடிப்படையில் இந்திய உளவு துறை தடுப்பதற்கு முன்பே பயங்கரவாதிகள் MV Kuber என்ற படகை கடத்தி தங்களது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி முடித்துவிட்டார்கள்.

இந்த சம்பவங்களை போலவே தகவல்கள் பரிமாறிக் கொள்ள பயங்கரவாதிகள் அதிக அளவில் பயன்படுத்தும் சாதனம் செல் போன் மட்டுமே.  பாகிஸ்தான் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவினருடன் தகவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ள இந்தியாவிலிருந்து 35 சிம் கார்டுகள் கள்ளத் தனமாக அனுப்பபட்டுள்ளன.  இந்தியாவில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் மறைந்து பணி செய்கின்ற தொழிலாளர்கள் மூலமாக இந்த காரியங்கள் நடந்துள்ளன.  அனுப்ப பட்ட 35 சிம் கார்டுகளில் 32 சிம் கார்டுகள் கொல்கத்தாவில் வாங்கப்பட்டுள்ளது, டெல்லியில் மூன்று சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன.  இந்த சிம் கார்டுகளில் மூன்று சிம் கார்டுகளிலிருந்து மும்பைக்கு தொடர்ச்சியாக தொடர்ப்பு நடந்துள்ளது என்பது தெரியவருகிறது.

2011ல் நடந்த வெடி குண்டு தாக்குதல்

2011ம் வருடம் ஜூலை மாதம் 13ந் தேதி மாலை 6.54க்கு நடந்த குண்டு வெடிப்பு 150 வருட பழமை மிகுந்த ஜாவேரி பஜாரையும் விட்டு வைக்கவில்லை.  மோட்டார் சைக்கிளிலிருந்து வெடித்துச் சிதறிய ஒரு குண்டு தாக்கியதில் ஐந்து பேர் உடனடியாக கொல்லப்பட்டார்கள், ஒரு நிமிட இடைவெளியில் மாலை வேலையில் வைர வியாபாரிகள் அதிக அளவில் கூடும் இடமான ஒபரா ஹவுஸிலுள்ள் பிரசாத் சேம்பர்ஸ் பகுதியில்  அந்த பகுதியே அதிரும்படியாக டிபன் பாக்ஸ் குண்டு வெடித்து ஒன்பது மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.  7.05க்கு மக்கள் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குமிடமான தாதரின் கபுதர்கானாவிலுள்ள ஹனுமான் மந்திரிலும் ஒரு குண்டு வெடித்தது.  இந்த சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாத அமைப்பை கண்டு பிடிப்பதற்கு பதிலாக உள்துறை அமைச்சர் உதிர்த்த முத்துக்கள் வேடிக்கையானது.  பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு இலக்காகும் பலவீனமான நிலையில்தான் இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் இருக்கின்றன என திருவாய் மலர்ந்தார்.

ஜாவேரி பஜாரில் மூன்று காவல் தடுப்பு நிலையங்கள் இருந்தும் காவலுக்கு வர போலீசுக்கு ஏன் அரை மணி நேரத்திற்கு மேல் பிடித்தது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.  மேலும் ஜாவேரி பஜாரில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடக்கின்றன.  1993 மார்ச்சு மாதம் நடந்த தாக்குதலும், 2003 ஆகஸ்ட் மாதம் நடந்த தொடர் தாக்குதலிலும் இந்த பகுதி தப்பவில்லை.

மத்திய அரசின் உளவு பிரிவினர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை, இப்படி ஒரு தாக்குதல் வரும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, என உளவு பிரிவு கூறுவது இந்தியாவில் உள்ள உளவு அமைப்புகள் தூங்கி வழிகிறது என்பதற்கு நல்ல உதாரணமாகும்.  இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமான நடந்த முழு விசாரணையில் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த Bakas, Taurez என்கின்ற இருவரும் வெடி குண்டுகளை கையாளுவதில் வல்லவர்கள்.  இவர்கள் 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மும்பையில் தங்க நேரிட்டது.  இவர்களுக்கு முழு உதவி செய்தது இந்தியன் முஜாஹிதீனின் யாசின் பட்கல்(Yasin Bhatkal)   யாசின் பட்கல் ஜூலை மாதம் 13ந் தேதியின் பயங்கரவாத செயலின் முக்கிய தளபதியாகும்.

Bakas, Taurez இருவரும் தங்குவதற்கு பைகுல்லா(Byculla) எனுமிடத்தில் ரூபினா(Rubina) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரூ60,000 முன்பணமாக கொடுத்து தங்க வைக்கப்பட்டது. இதற்காக உதவி செய்தவன் மீர்ஸா எனும் உள்ளுர் இஸ்லாமியன்.  குண்டு வெடிப்பு நடந்த பின்னும் அதாவது 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இருவரும் மும்பையிலேயே தங்கியிருந்தார்கள். டீசம்பர் மாதம் முதல்வாரத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என இந்தியன் முஜாஹிதீனின் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த ஒன்பது நபர்களை காவல் துறையினர் கைது செய்த பின் இவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றார்கள்.

பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தவுடன் மத்திய அரசும் மாநில அரசும் கூட்டாக விசாரணையை துவக்க முடிவு செய்தார்கள்.  இந்த முடிவு படி மத்திய அரசின் தேசிய புலானய்வு பிரிவினர் டெல்லியிலிருந்து பூனாவிற்கு உடனடியாக அனுப்பப் பட்டார்கள்.  மத்திய அரசும் மாநில அரசும் கூட்டாக நடத்திய விசாரணையில், பூனாவில் உள்ள ஜிகாதிகள் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், திட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தியன் முஜாஹிதின் அமைப்பைச் சார்நத முகமது பீர்பாய் என்பவன் என்பதையும் தங்களது விசாரணையின் மூலம் கண்டு பிடித்தார்கள்.

வெறும் ரூ200க்கு அடிபனிந்து ஜெர்மன் பேக்கரியில் வைட்டராக பணிபுரிந்த Paras Rimal என்பவன் ஜிகாதிகள் குண்டு நிரம்பிய பையை வைக்க அனுமதித்தான் என்கின்ற உண்மையையும் கண்டு பிடித்தார்கள். விசாரனையின் அடிப்படையில்  புலனாய்வு பிரிவினர் இந்த வழக்கு சம்பந்தமாக பெங்களுரூ மற்றும் மும்பையில் பலரை விசாரித்தார்கள்.  இதன் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் 40 நபர்களை கைது செய்தார்கள்.  கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த நான்கு பேரூம்,   16.2.2010ந் தேதி பூனாவில் புறநகர் பகுதியில் இரண்டு பேரும், அவுரங்காபாத்தில் இருவரும் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்கள்.

இந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானால் ஏற்படுத்தப்பட்ட ஜிகாதிகள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.  பொறுப்பு ஏற்றுக் கொண்டு அமைப்பு லஷ்கர் ஈ தொய்பா அல் அல்மி என்பதாகும்.  இந்த அமைப்பில் உள்ளவர்கள் பயன்படுத்தும் ரகசிய பெயர் அபு ஜின்டால். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க பாகிஸ்தானுடன் இந்தியா பேச முன்வரவில்லை என்ற காரணத்திற்காக பூனாவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்தாக இந்த அமைப்பினர் தெரிவித்தார்கள்.

பூனா நகரத்தை குறி வைக்க வேண்டிய அவசியம் என்ன?

(தொடரும்)

5 Replies to “இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12”

 1. வாராவாரம் சனிக்கிழமை செய்தித்தாள்களை திறந்தால், படிக்க வெறுப்பாக உள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வரும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை , சன்னி பிரிவு முஸ்லீம்களை சேர்ந்த தீவிரவாத தற்கொலைப்படை படுகொலை செய்து தாங்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற ஒரு தீவிரவாத செயல்களை கண்டிக்காமல், சன்னி முஸ்லீம்கள் வாய் மூடி வேடிக்கை பார்க்கின்றனர்.

  கடவுள் நம்பிக்கை இருப்பதாக பொய் சொல்லிக்கொண்டு, உண்மையிலேயே நாத்திகர்களாக இவர்கள் இருப்பதால் தான் , கடவுளை நம்பாமல் வெடிகுண்டுகளையும், பிற நாசகார ஆயுதங்களையும் தூக்கி கொண்டு அலைகின்றனர். இப்படி ஒரு வன்முறையை போதிக்கும் மதம் தேவையா என்று எல்லோரும் சிந்திக்க துவங்கிவிட்டார்கள்.

  இதற்கு அடிப்படைக்காரணம் பிற நம்பிக்கை உடையோரையும், நாத்திகர்களையும் கொன்றுவிடும்படி ஆபிரகாமிய மதங்கள் ஊக்குவிக்கின்றன. கடவுள் அருளால் விரைவில் இவை ஒழிந்துபோகும்.

 2. கோவை வெடிகுண்டு வழக்கில் அப்துல் மதானிக்கு எதிரான ஆவணங்களை கீழ்க்கோர்ட்டில் கொடுத்த தமிழக அரசின் காவல்துறை, மேல்முறையீடு விசாரணையின் போது, அதே ஆவணங்களை மேல் கோர்ட்டில் சமர்ப்பிக்க தவறியது. இது ஏன் ? இதில் முன்னாள் ஆளுங்குடும்பத்தின் அரசியல் தலையீடு எதுவும் இருந்ததா என்று தமிழக அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும்.

  கதிரவன்

 3. மகரிஷி தயானந்தரின் சத்தியார்த்த பிரகாசம் என்ற நூல் வடஇந்திய மொழிகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றிலும் ஆரிய சமாஜத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் ஒரு ஒப்பற்ற அற்புதம் ஆகும்.ஒவ்வொரு மனிதனும் படிக்கவேண்டிய பொக்கிஷம்.

  ஆபிரகாமிய மதங்களை நன்கு தோலுரித்து காட்டியிருக்கிறார் சுவாமி தயானந்தர். நமது இந்து மதத்திலும் , பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சில மூடர்களின் போக்குகளையும் சுவாமி தயானந்தர். நகைச்சுவையுடன் விமரிசித்துள்ளார். அவரை போன்ற இன்னும் பல மகான்களை இறைவன் இந்தியாவில் மீண்டும் பிறந்து சீர்திருத்தங்களை செய்ய உத்திரவிடுவான். இது சத்தியம்.

 4. என் அருமை இந்து மற்றும் இதர கொழ்கையுடைய சகோதரர்களே குறிப்பிட்ட எந்த ஒரு செய்தியையும் வெளியிட வேண்டுமென்றால் அதனை வெளியிடுபவருக்கு அதனைப்பற்றிய முழுமையான அறிவும் தெளிவும் இருப்பது அவசியம்.இன்றைக்கு தினந்தோறும் செய்தித்தாழ்கலில் இஸ்லாமியர்களின் பெயரை பயண்படுத்தி வரும் அத்தனை செய்தீகளும் உன்மை தானா என்றால் கண்டிப்பாக கிடையாது உலக அளவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதளைப் பற்றிய செய்தீயாக இருந்தாலும் சரி இந்தியாவில் நடக்கும் தாக்குதல்கலைப் பற்றிய செய்தீயாயினும் சரி இவைகள் அனைத்து இஸ்லாத்தீனுடைய தூய்மையின் மீது பங்கம் ஏர்ப்படுத்தி இதோ உங்களைப் போல இஸ்லாத்தைப் பற்றிய தவரன கருத்தை விதைப்பதற்க்காக உழக அழவில் நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சதிதான் இது சகோதரர்களெ நான் ஒரு முஸ்லீம் என்ற காரணத்திற்க்காக சப்பைகட்டு கட்டவில்லை உலக அலவில் நீங்கள் கேள்விப்படும் அத்தனை இஸ்லாத்திர்க்கு எதிரான கருத்துக்கலும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுல்லது ஆனால் அதுவெல்லாம் உங்களைப் போன்ற என் போன்ற பொதுமக்கலுடைய காதுகளுக்கு வருவதில்லை காரணம் மீடியாக்களெல்லாம் இன்று இஸ்லாத்திர்க்கு எதிராக உல்லவர்கலுடைய கைகளிலேயே உள்ளது இது போன்ற உண்மைகலையெல்லாம் நாங்கள் தான் நீரூபித்தாக வேண்டும் என் அன்பிற்க்கினிய சொந்தங்கலே தயவு செய்து இதுபோன்ற விஷயங்கலை வெருமனெ படித்து விட்டு மட்டும் விமர்சிக்காமல் அராய்ந்து அதனுடைய உண்மை நிகள்வுகலை அறிந்த பிரகே அதைப் பற்றி விமர்சிக்கவும் கொஞம் இப்படி நினைத்துப் பறுங்கள் உங்கள் தாயைப் பற்றி ஊரெள்ளாம் விபச்சாரி என்று பேசுகிரார்கள் அதனால் அதை ஆம் ஊரே சொள்கிரது கண்டிப்பாக என் தாய் தவரு செய்திருப்பார் என்று நினைப்பீர்கல கண்டிப்பாக மாட்டீர்கல் அல்லவா அது போல்தான் இதுவும். இந்த திவிரவாத செய்தீகலைப் பற்றிய அத்துனை உண்மைகளையும் ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள விரும்புபவர்கல் குண்டு வைத்தது யார் என்ற சகொ பி.ஜெய்னுல் ஆபிதீன் எழுதிய புத்தகத்தை வாங்கி படிக்குமாரு உங்கள் சகோதரனாக கேட்டுக்கொழ்கிரேன் அதோடு இஸ்லாம் என்றால் என்னவென்றும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கல் சகோதரர்கலே.இப்படிக்கு இஸ்லாத்தை சுவாசிப்பவனும் இந்தியாவை நேசிப்பவனுமான அல்லாஹ் எனும் ஏஹ இரைவனின் அடிமையுமான நஸீர் ஹுசைன்

 5. Mr, nazeer is telling whole world is wrong and only what p j is knowing everything.
  what a sahameful statement.
  i dont think any sensible person who respects his motherland will write like this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *