இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

வருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) இந்த வருடமும் ஜனவரி கடைசி வாரத்தில் (ஜனவரி 25-29) டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னையில் நடைபெறுகிறது. சுமார் 160 ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. இது தனியார் முயற்சியில் நடைபெற்றாலும் இதில் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை பங்கு கொள்ளுமா என்று சந்தேகங்கள் இருந்து வந்தது. இறுதியில் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் நேரடியாக தலையிட்டு அனுமதி அளித்ததன் பேரில் இந்து சமய அறநிலையத் துறையும் பங்கு கொள்வதாக, துவக்கவிழாவின் போது பேசிய அறநிலையத் துறை செயலர் திரு.ராஜாராம் அவர்கள் தெரிவித்தார். அழைப்பிதழ் இங்கே.

இக்கண்காட்சியை டி.என்.பி.எஸ்.சி தலைவர் ஆர்.நட்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை செயலர் ராஜாராம், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர் (படம்: நன்றி தினமலர்).

***

தமிழக விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி, ஜி.ஆளவந்தார் தமிழக விஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவராகவும், ஆர்.ஆர்.கோபால்ஜி பொதுச்செயலாளராகவும், ஜவஹர்லால் ஜாங்கிட் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயல் தலைவர்களாக ஆர்.எஸ்.நாராயணசாமி, டாக்டர் கிரிஜா சேஷாத்திரி ஆகியோரும், துணைத்தலைவர்களாக ஜெகநாதன் செட்டியார், பேராசிரியர் சங்கரபாண்டியன், வழக்கறிஞர்கள் ரத்தினசாமி, கே.சந்திரசேகரன் ஆகியோரும் இணைப்பொது செயலாளராக சுவாமி ஆத்மானந்தா, அமைப்புச்செயலாளராக பி.எம்.நாகராஜன், இணை அமைப்புச் செயலாளராக எஸ்.ராஜா ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

***
ஜன.25, 2012 – வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் வேலூரில் நடந்தது. மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களில் தரிசிக்க வரும் பக்தர்களிடம் கடவுளை காட்சி பொருளாக்கி தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கோவில்களில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும், இந்துக்களுக்கு கைலாஷ், அமர்நாத் போன்ற இடங்களுக்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் – ஆகியவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

***
அண்மையில் நடந்த இரு சம்பவங்கள், இந்து மதத்துக்கு நேரடித் தொடர்பில்லை என்றாலும், இது போன்ற சம்பவங்கள் சமூகநீதிக்கு ஊறு விளைவிப்பதாகவும், இந்து மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருப்பதால் இங்கு குறிப்பிட நேருகிறது. முதல் செய்தி அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சியில் சீக்கியர்களையும், சீக்கியர்களின் புனித பொற்கோவிலையும் நக்கலடித்து ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடப் பட்டது குறித்து சீக்கியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய அரசின் சார்பில் அமைச்சர் வயலார் ரவியும் எதிர்ப்பை பதிவு செய்தார். ஆனால் அமெரிக்க தரப்பில், இதெல்லாம் எங்கள் பேச்சுரிமை – இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்பது, வருத்தம் தெரிவிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்து விட்டார்கள்.


(கார்ட்டூன்: நன்றி cartoonistsatish)

இரண்டாவது செய்தி, ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, அவர் கொலை செய்யப் படலாம் என்று பயமுறுத்தி ராஜஸ்தான் காவல்துறை வரவிடாமல் செய்து விட்டார்கள். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசு இயந்திரமே கை விரித்து விட்டது. சல்மான் ருஷ்டி எழுதிய Satanic Verses புத்தகம் தடை செய்யப்பட்டது நாம் அறிந்ததே. இந்தியாவில் பேச்சுரிமை இந்த நிலையில் இருக்கிறது. (பார்க்க: சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்) மத அடிப்படை வாதிகளின் மிரட்டலுக்கு அரசே பணிந்து எழுத்தாளர் தஸ்லிமாவை வெளியேற்றியதையும் தான் பார்த்தோமே! இதைச் சொன்னால், எம்.எப். ஹுசைன் வெளியேறவில்லையா என்று ஜல்லி அடிக்கப் படும் – ருஷ்டிக்கும் எம்.எப்.ஹுசைனுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் – எம்.எப்.ஹுசைன் உயிருக்கு பயந்து ஓடவில்லை – சட்டப்படி வழக்குகளை சந்திக்க பயந்து ஓடினார் என்பது தான் அது.

***

ராஜஸ்தானில் ருஷ்டிக்கு மிரட்டல் என்றால் தமிழ்நாட்டில் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் ஒலித்தகடு வடிவில் வந்துள்ளது. இது குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்ததன் பயனாக ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். விவரங்கள் இங்கே.

***
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ், கத்தோலிக்க பாதிரியார்கள் கூட்டம் ஒன்றில் பேசும்போது, நக்சல்களின் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சேவை செய்யுங்கள் ஆனால் சேவைக்கும் மதமாற்றத்திற்கும் இடையே உள்ள லக்ஷ்மண ரேகையை மதித்து நடங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆளும் மத்திய அரசில் இப்படி ஒரு அமைச்சர் வெளிப்படையாக பேசியது பாராட்டுக்குரியது. ஆனால் அவர் சொன்னது சரியாகக் கடைபிடிக்கப் படுமா? இதே கருத்தில் அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் வெளிவந்த கடிதத்தின் வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன:

  மகாத்மா காந்தி ஆஸ்பிடல் அருகே 30 அடிக்குள் மிகமிகப்புதிதாக முளைத்திருந்தது ஒரு சர்ச். சென்றவாரம் கெடிலம் நதி ஓரக் குடிசைவாசிகளுக்கு பிரட்பாக்கெட் விநியோகித்துக் கொண்டிருந்த வேன் சர்ச் முன்னால் நின்றிருந்தது. புறக்கணிப்பு, வறுமை, நோய் இந்த மூலத்தைத்தான் மிஷனரிகள் குறிவைக்கின்றன. சிலர் தங்கள் ஆயுளை இந்த மூலத்தை நீக்குவதில் செலவு செய்கிறார்கள். துரதிருஷ்டவசமாகப் பலர் இந்த மூலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

***

பொதுவாக கிறிஸ்தவம் பண்பட்ட, முற்போக்கு மதம் என்றும், கிழக்கத்திய மதங்கள் – முக்கியமாக இந்து மதம் காட்டுமிராண்டிகள் மதம் என்றும் ஒரு பிம்பத்தை பரப்பி வருகிறார்கள். அபூர்வமாக இந்த மனநிலையைத் தாண்டி சிந்திக்கக் கூடிய மேற்கத்தியர் யாராவது ஒருவர், இந்துமதத்தின் சிறப்பை புரிந்து கொள்கிறார். அப்படி ஒருவர் தான் Michael Sudduth. அண்மையில் இவர் கிறிஸ்தவத்தில் இருந்து இந்து மதத்துக்கு – குறிப்பாக வைணவத்துக்கு மாறியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள நீண்ட கடிதம் இங்கே.

***

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது. இதை அவர்கள் கோவில் திடலில் நடத்தப் போவதாக விளம்பரம் ஏதும் செய்யாமல் ரகசியமாக தமக்குள் வைத்திருந்து செயல்படுத்திய விதம் இது வேண்டுமென்றே செய்தது என்பதை தெளிவாக்குகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து கோவில் நிர்வாகம் தங்களுக்கு முன்பே தெரியாது என்று மழுப்பி இருக்கிறது.

ஏற்கனவே கேரளாவில் உள்ள பதினான்கு மாவட்டங்களில், ஐந்தில் இந்துக்களை விட எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் வசித்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களிலும் பல இடங்களில் இந்நிலை இருக்கும் போது வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சி அரசுகள், தீவிரவாத அமைப்புகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும்?

இதே போல தமிழகத்திலும் பல கோவில் நிலங்கள் நிரந்தரமாகவே மாற்று மதத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு வருகின்றன. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரங்களை சுற்றி காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தான் கடைவிரித்திருக்கிரார்கள். பல இடங்களில் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் இது போல கடை விரித்து ஆயிரக்கணக்கில் லாபம் பார்க்கும் கடைக்கு பத்து ரூபாய் இருபது ரூபாய் வாடகை செலுத்துவோரும் இருக்கிறார்கள். இதையெல்லாம் அரசாங்கம் முறைப் படுத்த வேண்டும்.

(மீண்டும் சந்திப்போம்)

4 Replies to “இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)”

  1. அரசாங்கம் சரியாக கண்காணித்து ஹிந்துக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தப் பட வேண்டும்.
    வாழ்க பாரதம்.

  2. நேற்று, தினமலர் நாளிதழை வாசிக்க வாய்ப்பு கிட்டியது. அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அதனுடைய அதிகாரபூர்வமான இதழாக வருவதனால், இப்போது அதை நான் வாசிக்க விரும்புவது இல்லை. எதிர்பாராத விதமாக 26/1/2012 தேதி சென்னைப் பதிப்பில், பக்கம் 12ல் அரசியல் களம் பிரிவில் மூன்று புகைப்ப்டங்களுடன், திருச்சி மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் திரு பரஞ்சோதி (இவர் மீது, பெண் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில், நீதிமன்ற உத்திரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 45 நாட்களுக்கு மேலாகியும்,விசாரண என்ற போர்வையில் அடுத்தக்க் கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது, அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது) பற்றிய செய்தியும் கண்ணீல் பட்டது. ஒரு போலீஸ் உதவி கமிஷனர் (பெயர்:திரு வீராச்சாமி) அவர்மீது வழக்கை விசாரிக்கிறாராம். என்ன வீரம்? எப்படி நீதி கிடைக்கும் என்று? யோசித்துப்பாருங்கள். இதுபோன்ற ஜால்ரா காவல் துறை அதிகாரிகளால்தான், அரசு கெட்ட பெயர் எடுக்கிறது! இதை எல்லாம் முதலமைச்சர் கண்ணில் காட்ட மாட்டர்களா? எப்போது நம் நாடு திருந்துமோ?
    வேதனையான கலாசாரம்! விடிவு காண இயலா வழக்குகள்!! வாழ்க தமிழ்நாடு!!

  3. இன்னும் நம் தர்மத்திற்கு மாறியவர்கள் பற்றியக் குறிப்புகளை எதிர்பார்கிறேன் .நன்றி! “ஜெய் காளி”

  4. A better solution to end this type of occupying HINDU Temple Land/ building is, publicly displaying property reference, occupying person name & address and how much receivable from particular person. this is recently done in one temple, i remember it is Chidambaram temple, if so, people can ignore such traders and social boycott also possible to make them to remove from such places.

    Murugan
    Madurai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *