குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் தே.ஜ.கூட்டணியில் குழப்பம், தாமதம்,மூன்றாவது அணியிலும் ஒத்த கருத்து ஏற்படவில்லை.ஆனால் காங்கிரஸில் இவ்வளவு குழப்பங்கள் இல்லை.சோனியா காங்கிரஸை பொறுத்த வரை அது சில தர அளவுகோள்களை மதிப்பிடும் அலகாக வைத்து குடியரசுத்தலைவர் தேர்வில் தன் தேர்வை திட்ட வட்டமாக முடிவெடுத்து இருந்தது.
அதில் தலையாயது தேர்வு செய்யப்படும் குடியரசுத்தலைவர் நிச்சயம் பிரதீபாபாட்டீலை விட ஊதாரித்தனமாகவும், செயல்படாமலும் இருக்க வேண்டும்.தேசபக்தி என்பது துப்பரவாக இருக்ககூடாது.ஊழலில் ஊறித்திளைத்திருக்க வேண்டும்.லஞ்சம்,ஊழலுக்காக தேசத்தை அடமானம் வைக்க தயாராக இருக்க வேண்டும். சுட்டுபோட்டாலும் சுய அறிவு என்பதே இருக்க கூடாது.பதவி,பணம்,குறுகிய கால ஆதாயத்திற்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளையும் செய்ய தகுந்தவராக இருக்க வேண்டும்.சுய மரியாதையோ, தெளிந்த சிந்தனையோ நிச்சயம் இருக்க கூடாது.செய்த திருட்டுத்தனங்களைசாதுரியமாக மறைக்க தெரிய வேண்டும்.சக ஊழல் அமைச்சர்களை,கட்சி தோழர்களை பாதுகாக்க தெரிய வேண்டும்.தேசத்தையோ,அதன் நலனையோ சிறிதும் யோசிக்காமல் கட்சியின் தலைமைக்காக நாட்டையே காவு கொடுக்க தயாராகவும்,அதற்காக பல அரசியல் கொலைகளை பண்ணும் சாமர்த்தியமும்,பின்பு வழக்கில் இருந்து தப்பிக்கும் மனசாட்சியற்ற தன்மையும் மிக மிக முக்கியம்.தொழில் முறையில் ஏமாற்றுக்காராக இருக்க வேண்டும். நீதிமன்றத்தாலும், நீதி அமைப்பு களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.இந்த அளவு கோள்களை பார்த்தால் காங்கிரஸ் கட்சியின் 206 உறுப்பினர்களுக்குமே குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தகுதி ஏற்பட்டு விடுமே என்ற சாமானிய மக்களின் கவலை புரிந்து தான் நம் தியாக திருவிளக்கு சோனியா அம்மையார் இன்னுமொரு மகத்தான வடிகட்டியை பிரயோகித்தார்.
அது 25000 கோடிக்கு மேல் ஊழல் பண்ணியிருக்க வேண்டும்.குறைந்தது 500பேரின் மரணத்துக்காவது நேரடியாக தொடர்பு இருக்க வேண்டும். நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்புகளால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு சாட்சிகளை சாமனியமாக கலைத்து தப்பித்து இருக்க வேண்டும்.இந்திய மக்களின் வாழ்வை பெருமளவு நாசமாக்குவதில் பெரும்பங்காற்றி இருக்க வேண்டும்.மக்களிடம் நல்ல இமேஜை மீடியாக்களின் மூலம் விலைக்கு வாங்க துப்பு இருக்க வேண்டும்.இந்த அளவுகோள்களின் படி பெரிய குழப்பங்கள் இல்லாமல் பிரணாப் முகர்ஜி 10ல் ஒருவராக தேறி விடுகிறார்.இதே அளவு தகுதியுள்ள,ப.சிதம்பரம்,திக்விஜய்சிங்,கபில் சிபல்,மணிஷ் திவாரி,அபிஷேக் மனு சிங்வி,என்.டி.திவாரி,மன்மோகன் சிங் போன்றவர்கள் வேறு,வேறு வேலைகளில் இருப்பதால் பிரணாப்பையே அம்மையார் தேர்வு செய்திருக்கிறார்.மேற்குறிப்பிட்ட எந்த ஒரு தகுதியுமே இல்லாத விஞ்ஞானியும்,தேசபக்தருமான அப்துல் கலாமை சோனியா எப்படி ஏற்றுக்கொள்வார்? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?ஒரு கொலை கூட பண்ணுணதில்லை,கொள்ளை அடிக்க தெரியாது.எந்த ஊழல் புகாரிலும் சிக்க வில்லை,பிரதீபா பாட்டீல் போல ஊர் சுற்றாமல் உள் நாட்டிலேயே மாணவர்களை சந்திக்கிறேன்,இளைஞர்களை ஊக்குவிக்கிறேன் என்று காலத்தை வீணாக்கியவர் தான் சோனியாவின் பார்வையில். இதெல்லாத்தையும் விட மனுசனுக்கு சுயமரியாதையும், அறிவும், மனசாட்சியும், நாட்டுப்பற்றும் இருக்கிறது. அவரை குடியரசுத்தலைவராக்க சோனியாவிற்கும்,காங்கிரஸ்கட்சிக்கும் பைத்தியமா பிடித்திருக்கிறது.
உள்ளூர் உத்தமர் கருணாநிதி தான் அதற்கு ஒப்புக்கொள்வாரா? கலாமை ஒரு முறை குடியரசுத்தலைவர் ஆக்கியதற்கே அந்த பதவிக்கு மாண்பையும் ,மதிப்பையும் ஏற்படுத்தி விட்டார்.மானம் ,மரியாதை,மனசாட்சிப்படி நடப்பவர்கள் தான் அந்த பதவியில் இருக்க முடியும் என்ற நிலை வந்தால் காங்கிரஸ் கட்சி எப்படி குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியும்.அப்படி இருக்கும் நபர்களை தேடி சோனியா தான் எங்கே போவார் பாவம் அவர்.
இன்னும் சில நாட்களுக்கு பிறகு அதிர்ஷ்டவசமாக இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவராக பதவியேற்கப்போகும் மேற்குவங்கத்தை சேர்ந்த முன்னாள் நிதி,மற்றும்பாதுகாப்பு,வெளியுறவு துறைகளில் அமைச்சர் பொறுப்பேற்று நாட்டை சீரழித்து விட்டு ஜனாதிபதியாகி அந்த பதவியின் மாண்பை கெடுத்து குட்டி சுவராக்கும் வேலையை பிரதீபா பாட்டில் விட்ட இடத்திலிருந்து தொடரப்போகும் உலக யோக்கியர் பிரணாத்தா அவர்களின் திரு விளையாடல்களை பார்த்து எவ்வளவு நல்ல ஜனாதிபதியை தேர்வு செய்திருக்கிறோம் என புளகாங்கிதப்பட்டுக்கொள்ளலாம்.
பிரணாப்பின் அரசியல் பயணம் என்பது அவர் பிறந்த 1935 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி விடுகிறது.அவரின் தந்தை கமாதா குமார் முகர்ஜியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.மேற்கு வங்க சட்ட சபையில் இடம் பெற்றவர்.எனவே கஷ்டப்படாமல் கட்சியின் மேல் மட்ட பதவிகளுக்கு எளிதாக வந்து விடுகிறார்.1969ல் ராஜ்ய சபா நியமன எம்.பியாக சபைக்குள் காலடியெடுத்து வைத்து 1973ல் தொழில் துறை இணை அமைச்சராக பதவியேற்கிறார்.சஞ்சய் காந்தியுடன் இணைந்து பல பவர்புரோக்கர் வேலைகளை பார்க்கிறார்.1977ன் போது தான் தன் சுய ரூபத்தை,பதவிக்காக,பணத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளிலும் தான் ஈடுபடுவேன் என்பதை பாரத மக்களுக்கு காண்பிக்கிறார்.இந்திராவின் அமைச்சரவையில் இருக்கும் பிரணாப்,சஞ்சய்காந்தியுடன் சேர்ந்து இந்திராவை அரசியல் சாசனத்தின் 352 ஆவது பிரிவை பயன்படுத்தி நாட்டு மக்கள் மீதும்,பத்திரிக்கைகள்,ஊடகங்கள்,அரசியல்செயல்பாட்டாளர்கள் மீது கறுப்பு சட்டத்தை எமர்ஜென்சியாக அமல்படுத்த தூண்டுகிறார்.அப்போது அவரின் வன்முறை வெறியாட்டத்தை பற்றி 10,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பின்னால்அமைக்கப்பட்ட ஷா கமிஷன் முன் வைக்கப்பட்டது.
httpsv://www.youtube.com/watch?v=l_1wk-wYQZ4
அது சம்பந்தமான அனைத்து அறிக்கைகளும்,திரும்ப பெறப்பட்டு எரியூட்டப்பட்டு விட்டது.2 காப்பி மட்டுமே ஆஸ்திரேலியாவின் தேசிய நூலக பிரிவில் இருந்ததையும் ராஜிவ் அரசாங்கம் வாங்கி தீ வைத்து எரித்து விட்டது.26,000பேருக்கு மேல் பிரணாப்,சஞ்சய் காந்தி,பன்சிலால்,மற்றும் கமல் நாத் மற்றும் முண்ணனி காங்கிரஸ் ரெளடிகளை பற்றி சாட்சியம் அளித்தனர்.உலகையே உறைய வைத்த இந்திய ஜன நாயகத்தின் கறுப்பு பக்கமாக வர்ணிக்க படும் எமர்ஜென்சியின் முக்கிய சதிகாரர் தான் நம் குடியரசுத்தலைவர், எவ்வளவு பெருமைப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.ஜன நாயகத்தின் உச்சமான நாடு என மதிக்கப்படும் ஒரு நாட்டின் முதல் குடிமகன் ஒரு கேவலமான குற்றவாளி மற்றும் சதிகாரர்.ஆஹா என்ன பொருத்தம்.ஜன நாயகத்தின் அவலச்சுவை.
(ஷா கமிஷன் ரிப்போர்ட் – முழு ஆவணம்
மிசா சட்டம் இயற்றப்பட்டு சிறையிலேயே காங்கிரஸ் அரசின் அடி, உதை தாங்காமல் போராடி உயிர் விட்ட திராவிட உயிர்களுக்கு கருணா நிதி செலுத்திய நன்றிக்கடனை பார்ப்பவர்கள் எல்லாம் புல்லரித்து, புளகாங்கிதப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
Documentation of emergency period in India – Center for Research Libraries Reference Folder
லச்சக்கணக்கான பொது மக்களையும்,ஊடகவியளாலர்களையும்,அரசியல் வாதிகளையும் எந்த விசாரணையுமின்றி கைது செய்து,சிறையில் அடைத்து சித்தரவதை செய்து பல பேரை முடமாக்கியும் கொன்றும் முடித்த மாபெரும் துயரத்தின் மூல சூத்ரதாரியும், ஏழைகளின் குடிசைகளை அப்புறப்படுத்தியும்,கட்டாய கருக்கலைப்பு,கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தும், பலாயிரம் சீக்கிய மக்களை கொன்று குவித்து பலன் அடைந்தவர்களில் ஒருவரும் என குற்றம் சாட்டப்பட்டு நிருபிக்கப்பட்ட குற்றவாளி தான் நம் குடியரசுத் தலைவர்.
1974,75ல் சாலை,மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளிலும்,நிதிஅமைச்சகத்திலும் பெருமளவு முறை கேடுகளில் சஞ்சய் காந்தியின் தூண்டுதலோடு ஈடுபட்டு பெரும் லாபம் அடையும் பிரணாப்,அந்தக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க எமர்ஜென்சி சதியில் ஈடுபடுகிறார்.78-80 காலங்களில் ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகும் பிரணாப், பின்னர் 80,82 வாக்கில் வர்த்தக துறையிலும்,உருக்கு,மற்றும்சுரங்க அமைச்சராகி இந்திய கனிம வளங்களை சூறையாட அனுமதிக்கிறார்.அப்போது உலக வங்கியில் வேலை பார்த்து விட்டு பொருளாதார அடியாளாக இந்தியாவை சீர்குலைப்பதற்காக அனுப்பப்பட்ட மன்மோகன் ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பேற்கிறார். நிதித்துறையை கையாண்டது பிரணாப் முகர்ஜி தான்.இவர் காலத்தில் இருந்தே இந்தியா தாராள மயமாக்கலுக்கு செல்வதற்கான பாதைகளில் இருந்த தடைகளை கவனமாக அகற்றி விட்டு தங்கு தடையற்ற வணிகத்துக்கு உரிய அடிப்படைகளை செய்து வைத்தார்,இந்த நேரத்தில் தான் காங்கிரஸ் எம்.பியான சத்பால் மிட்டலுக்கு சுசூகி நிறுவன ஜெனரேட்டர் லைசன்ஸை பெற்றுக்கொடுத்து பெரும் லாபம் ஈட்டினார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு.பீ-டெல் நிறுவனத்திற்காக இந்திய இறக்குமதி லைசன்ஸ்களில் நிதித்துறையை மோசமாக வழி நடத்தினார்.சத்பால் மிட்டல் நிறுவனத்தின் நலனுக்காக இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சியையே முடக்கி வைத்தார்.தொலைபேசிதுறையில் தேவையில்லாத சிவப்பு நாடா முறையை புகுத்தி தகவல் தொழில் நுட்பத்துறையில் நம்மை மிகவும் பின் தங்கச்செய்த பெருமை நம் 14 ஆம் குடியர்சுத்தலைவரையே சாரும்.
1998 ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகே தொலை தொடர்புத்துறையானது நாலுகால் பாய்ச்சலுடன் முன்னோக்கி சென்று இன்றுள்ள வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது.2006 வாக்கில் ஏர்டெல் நிறுவனம் வால்மார்ட் நிறுவனத்தின் கூட்டாளி ஆனதிலும் இவரின் பங்களிப்பு மகத்தானது.வெளியுறவுத்துறை அமைச்சரின் சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி தான் ஏர்டெல்க்கு அந்த பார்ட்னர்ஷிப்பை வாங்கினார்.சும்மா அல்ல லஞ்ச பணத்திற்காகத்தான்.இந்திராவிற்
இயலாமையையும்,ஆற்றாமையையும் முதல் முதலாக வெளிப்படையாக காண்பித்து விட்டு ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸை துவங்குகிறார்.ராஜிவ் இருந்த வரை எந்த முக்கியமான பொறுப்புக்கும் வரமுடியாமலே இருந்த பிரணாப்,1991ல் முறையாக ராஜிவ் அப்புறப்படுத்தப்பட்ட பிறகாவது தனக்கு உரிய முக்கிய பதவி கிடைக்கும் என நினைத்துக்கொண்டிருக்கும் போது அடர் கறுப்பு குதிரையாக(dark horse)அரசியலில் இருந்து விலகி தேர்தலில் கூட போட்டியிடாத நரசிம்மராவ் பிரதமராக ஆக்கப்படுகிறார்.பிரணப் திட்டக்குழுவின் துணைத்தலைவராக ஆக்கப்படுகிறார்.உலக வங்கிக்கு பெரும் ஆதரவு தரும் economic hitmanகள் மட்டுமே திட்டக்குழு துணைத்தலைவர் ஆகும் மர்மம் இன்னும் அவிழ்க்கப்படாமல் தொடர்ந்தாலும்,ஊகிக்க கூடிய வகையிலேயே இந்த லாபி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. தேவகவுடா,குஜ்ரால் தலைமையிலான பொம்மை அரசாங்கங்களை கவிழ்த்து விட்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைத்து பிரதமராக வேண்டும் என்ற இவரின் குறிக்கோள் நடைபெறவே இல்லை.பின்னர் சோனியா நாடகத்தில் நுழைந்த பிறகு இவரின் உச்சஅரசியல் அபிலாஷைகளும், முயற்சியும் பயனற்றதாகவே இருந்தது.2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகு பாதுகாப்புதுறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு 19000 கோடி ஸ்கார்பென் நீர்மூழ்கி பேரத்தில் ஈடுபட்டு பெரும் தொகையை கமிஷனாக பெறுகிறார்.பெரிய அளவிலான ஆயுத பேரங்களில் இருந்து மிக அதிக கமிஷன்களை பெற்ற பாதுகாப்பு அமைச்சர் என்ற புகழோடு விளங்குகிறார்.2006ல் வெளியுறவுத்துறைக்கு வந்த பின்பு ஆப்பிரிக்காவின் “காணா” நாட்டிற்கு உதவி செய்வதற்காக “ஹராரே” திட்டத்தின் கீழ் அரிசி அனுப்ப வேண்டிய விவகாரத்தில், இந்திய அரசு உணவுப் பொருள் கார்பொரேஷன் மூலமாக அரிசி அனுப்புவதற்கு பதிலாக, தனியார் முதலாளிகளுக்கு அனுமதி கொடுத்த வகையில் சுமார் 2,500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் இந்திய வெளியுறவுத் துறைக்கு (இவர் தான் அப்போது அமைச்சர் ) பெரிய அளவில் தொடர்பு இருப்பதாகவும்“கானா” அரசு புகார் கூறி இருந்தது. இது பற்றி விசாரணை நடத்தக் கோரி கானா அரசு விடுத்த கோரிக்கை -இதுவரை கண்டு கொள்ளப்படவே இல்லை.வெளியுறவு அமைச்சராக பிரணப் பதவி வகித்தபோது தன் ஆபத்தான 123 ஷரத்தில் இந்தியாவின் நலனுக்கெதிராக ,இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் முற்றிலும் அமெரிக்க சார்பாக நடந்ததை கண்டலீசா ரைஸே ஆச்சரியப்படும் அளவுக்கு நடந்திருக்கிறார் (காண்க:விக்கிலீகஸ் ஆதாரங்கள்)
ஹட்ச் – வோடபோன் விவகாரம்
வரியில்லா சொர்க்கங்களில் ஒன்றான கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட
ஹட்ச் டெலிகாம் நிறுவனத்தை வோடாபோன் நிறுவனம் வாங்கியது தொடர்பான
வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, எது கறுப்பு எது
வெள்ளை, எது வரி தவிர்ப்பு எது வரி ஏய்ப்பு, எது இந்தியா எது வெளிநாடு
என்பன போன்ற பல ‘தத்துவஞான‘ கேள்விகளுக்கான விடையைப் புரிந்து கொள்ளும்
வாய்ப்பை வழங்கியிருக்கிறது.“ஹட்ச்-எஸ்ஸார் லிமிடெட்” என்ற இந்திய டெலிகாம் நிறுவனத்தின் 67%
பங்குகளை சொந்தமாகக் கொண்டிருந்த “ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேசனல்”
என்ற பன்னாட்டு நிறுவனம், அவை அனைத்தையும் ரூ.52,300 கோடி ரூபாய்க்கு
வோடாபோன் என்ற இன்னொரு பன்னாட்டு நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டில்
விற்றது. இந்த விற்பனையின் தொடர்ச்சியாக இந்தியாவில் இயங்கிவந்த ‘ஹட்ச்
தொலைபேசி’, வோடாபோன் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஹட்ச் நிறுவனத்தின்
எல்லா இந்திய சொத்துகள் மீதான கட்டுப்பாடும் வோடாபோன் நிறுவனத்தின்
கைக்கு மாறியது.ஹட்ச் நிறுவனம் இந்தியாவில் இருக்கின்ற தனது சொத்துகளை வோடாபோன்
நிறுவனத்திற்கு விற்று இலாபம் பார்த்திருப்பதால், அந்த விற்பனையின் மீது
11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியை (capital gains tax) விதித்தது
வருவாய்த்துறை. மேற்கூறிய தொகையைப் பிடித்தம் செய்து தன்னிடம்
ஒப்படைக்குமாறு வோடாபோன் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது. வரியைக் கட்ட
மறுத்த வோடபோன் நிறுவனம், இந்த சொத்து விற்பனை இந்தியாவுக்கு வெளியில்
நடந்தது என்பதால், இதன் மீது வரி விதிக்க இந்திய வருவாய்த்துறைக்கு
அதிகாரம் இல்லையென்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.‘ஹட்சின்சன்எஸ்ஸார் என்ற இந்திய நிறுவனத்தின் 67% பங்குகளுக்கு
உரிமையாளர், கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி.
இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம். அந்த சி.ஜி.பி நிறுவனம்,
ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேஷனல் (கேமேன்) ஹோல்டிங்ஸ் என்ற
நிறுவனத்துக்குச் சொந்தமானது. அதுவும் கேமேன் தீவுகள் நாட்டைச்
சேர்ந்தது. தற்போதைய விற்பனையில் கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த
சி.ஜி.பி. நிறுவனத்தின் சொத்துகளான பங்குகள், வோடாபோனுக்கு
விற்கப்பட்டிருக்கின்றன. இந்த பங்கு விற்பனைக்கும் இந்தியாவுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. இதன் மீது வரி விதிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு
கிடையாது’ என்று வாதிட்டது வோடபோன் நிறுவனம்.“பங்குகள் எந்த நாட்டின் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தாலும், இந்தப்
பங்கு விற்பனையின் நோக்கம், மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான
சொத்துக்களைக் கட்டுப்படுத்துவதுதான். இந்த விற்பனை மூலம்
கட்டுப்படுத்தப்படும் சொத்துகளும், தொழிலும் இந்தியாவில்தான் இருக்கின்றன
என்பதால், இங்கே வரியைக் கட்டத்தான் வேண்டும்” என்று செப். 2010இல்
தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம்.இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது வோடபோன்
நிறுவனம். காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த அபிஷேக் மனு சிங்வி,
ஹரிஷ் சால்வே போன்ற மன சாட்சியின் விலையை நிர்ணயித்து வாதடி வரும்
வழக்குரைஞர்கள், இலண்டனிலிருந்து வந்து இறங்கியிருந்த சர்வதேச சட்ட
வல்லுநர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே வோடபோன் நிறுவனத்துக்காக வேலை
செய்தனர்.ஜனவரி 20, 2012 அன்று தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று
நீதிபதிகள் கொண்ட பெஞ்சு, மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து
வோடபோனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஹட்ச் நிறுவனத்துக்கும்
வோடாபோனுக்கும் இடையிலான இந்தப் பரிவர்த்தனையின் நோக்கமே, இந்தியாவில்
இருக்கும் ஹட்ச் டெலிகாமின் சொத்துகளையும் பங்குகளையும் அந்நிறுவனத்தின்
மீதான கட்டுப்பாடு முழுவதையும் வோடாபோன் நிறுவனத்துக்கு மாற்றிக்
கொடுப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும், இந்தியாவில் உள்ள
சொத்துகள் கைமாறுவதற்கும் கேமேன் தீவுகளில் பங்குகள் கைமாறியதற்கும்
எவ்வித தொடர்பும் இல்லை என்றது உச்ச நீதிமன்றம்.அது மட்டுமல்ல; கேமேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பன்னாட்டு
நிறுவனங்கள் தமது ஹோல்டிங் நிறுவனங்களையும், லெட்டர் பேடு
நிறுவனங்களையும் டஜன் கணக்கில் உருவாக்குவதன் நோக்கமே வரி ஏய்ப்புதான்
என்ற போதிலும், அவ்வாறு லெட்டர் பேடு நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு
செய்வதை, வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வ நடவடிக்கைதான் என்றும் கூறியது
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.“இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு அந்நிய நேரடி மூலதனம்
தவிர்க்கவியலாமல் தேவைப்படுகிறது. இந்தியாவுக்குள் வருகின்ற அந்நிய
மூலதனம் என்பது அநேகமாக வரியில்லா சொர்க்கங்களான தீவுகள் வழியாகவும்,
இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double taxation
avoidance treaty) போட்டுக் கொண்டிருக்கின்ற நாடுகள் வழியாகவும்தான்
வருகிறது. இவை இந்தியாவுக்குள் நுழையும் உலக வர்த்தகத்தின் முக்கியமான
வழித்தடங்களாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கின்றன” என்று கூறியிருப்பதுடன்,
வோடாபோன் மீதான வரி விதிப்பை, ‘மூலதனத்தின் மீதான மரணதண்டனை’ என்றும்
கண்டித்திருக்கிறார், மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி
ராதாகிருஷ்ணன்.ரூ.11,200 கோடி வரிப்பணத்தை அரசிடமிருந்து பறித்து வோடபோன் நிறுவனத்தின்
கையில் ஒப்படைத்து விட்டது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இத்தீர்ப்பினை
மேற்கோள் காட்டி, தாங்கள் ஏற்கெனவே வருமானவரித்துறைக்குக்
கட்டியிருக்கும் சுமார் ரூ.40,000 கோடி வரிப்பணத்தை திருப்பித் தருமாறு
கேட்டிருக்கின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள். இந்த தீர்ப்பு
தோற்றுவித்திருக்கும் உடனடி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, மீளாய்வு
மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. அந்த
மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.ஆனால் அதற்கு முன்பு
பிரணாப் முகர்ஜியும்,ப.சிதம்பரமும் வோடபோனுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே
செயல்பட்டார்கள்.
2009ல் நிதியமைச்சராக ஆன பிறகு தான் நாட்டின் நிதி நிலைமை அதல பாதாளத்துக்கு வீழந்த்து.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு பெரு வீழ்ச்சி அடைந்து புதிய கீழ்மையை அடைந்தது.ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சரச்சைக்குரிய முறையில் 1,05,000 கோடி வரி விலக்கு கொடுத்ததும்,முன்னதாக ரிலையன்ஸிடன் சேர்ந்து பாம்பே டையிங் நிறுவனத்தை அழித்ததில் இவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் இது சம்பந்தமாக அருண்செளரியும்,குருமூர்த்தியும்
இவரை நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது தஸ்லீமா நஸ்ரின் அடைக்கலம் கேட்ட போது இந்திய பண்பாட்டு நடைமுறைகளுக்கு முரணாக நடந்து கொள்கிறார்.கறுப்பு பண விவகாரத்தில் இவர் அடித்த பல்டிகள்.
கறுப்பு பணம் இந்தியாவிற்கு வந்து விடவே கூடாது என்பதற்காக மிக அதிகமாக பாடுபட்டது இவர் தான்.ஹட்சின்ஸன் எஸ்ஸார்-வோடபோன் விவகாரத்தில் இந்திய அரசுக்கு வரி வருவாயாக கிடைக்க வேண்டிய 11000 கோடி ரூபாயை வேண்டுமென்றே அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து தேசத்துக்கு இழப்பை உண்டாககினார்.இலங்கையிலே இறுதி யுத்தம் முடிந்து 1 லட்சம் மக்களை காங்கிரஸ் கட்சி கொன்று அழித்த பிறகு முள்வேலி முகாமில் இருக்கும் மக்களுக்காக உலக மக்கள் அளித்த மருந்து மற்றும் நிவாரணப்பொருள்க்ளையும்,உணவுப்பொருள்களையும் நிச்சயம் அனுமதிக்ககூடாது என்பதற்காக நேரடியாக சதிச்செயல்களில் ஈடுபட்ட காங்கிரஸிற்கே உரிய கயமையுடன் நடந்த உத்தம் புத்திரன் தான் இந்த நாட்டின் முதல் குடிமகன்.நல்ல தலைவர்களையும், நியாமான அறிஞர்களையும் கண்ட குடியரசுத்தலைவர் மாளிகை கயவர்களின்,கடைந்தெடுத்த சந்தர்ப்ப அரசியலின் வாரிசுகளை, கையெழுத்தை மாற்றி ஏமாற்றும் கனவான்களை கொண்டு தன்னை களங்கப்படுத்திக்கொள்ள கண்ணிருடன் தயாராகிவிட்டது.
மேலதிக ஆதாரம்,மற்றும் தகவல்களுக்கு :
https://www.expressindia.com/
https://www.wikileaks.ch/cable/2005/06/05NEWDELHI4721.html#
https://en.wikipedia.org/wiki/Scorpene_Deal_scam
https://www.box.com/s/440aac8d558ebc306278
கறுப்பு பணம்:
”இந்த தேசம் சூறையாடப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இதை
நாங்களே விசாரிக்கப்போகிறோம்’ என்று கறுப்புப் பணம் தொடர்பான வழக்கில்
குமுறி வெடித்தது உச்ச நீதிமன்றம்.“கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம்
தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், அந்தப் பட்டியலை வெளியிட மாட்டோம் என்று
சொல்லித்தான் அந்தத் தகவல்களைப் பெற்றுள்ளோம். அந்தத் தகவல்களை இப்போது
வெளியிட்டால், இதற்குப் பின் எந்தத் தகவலையும் அந்த நாடுகள் அளிக்காது”
என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. சுவிட்சர்லாந்து
நாட்டின் வங்கிகளோ, அல்லது கறுப்புப் பண சொர்க்கங்களான சின்னஞ்சிறிய
நாடுகளின் அரசுகளோ ‘கறுப்பு இந்தியர்களின்’ பட்டியலை இந்திய அரசுக்குத்
தரவில்லை. ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகள்
இலஞ்சம் கொடுத்து இவ்வங்கிகளின் ஊழியர்கள் மூலம் திரட்டிய விவரங்களில்
ஒரு பகுதிதான் இப்போது பிரணாப் முகர்ஜியின்கையில் இருக்கும்
பட்டியலாகும்.“இந்தப் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளால் அதிகாரபூர்வமாக
அளிக்கப்பட்டவை அல்ல என்பதால், இதை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்று முதலில் கூறியது மத்திய அரசு.
“அப்படியானால் பட்டியலையாவது வெளியிடு” என்று கேட்டால்,
“வெளியிடமாட்டோம். ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் கொடுத்த சத்தியத்தை மீற
முடியாது” என்கிறார் பிரணாப். அப்படியானால் இந்தப் பட்டியலை வைத்துக்
கொண்டு என்ன செய்வது?கையில் இருக்கும் பட்டியலை வைத்துக் கொண்டு கடந்த 2010-11 ஆம்
நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 2,190 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன
என்றும், 3,887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
என்றும் அரசு கூறுகிறது. 3887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க
ஒரு வருடம் ஆகியிருக்கிறது என்றால், 70 இலட்சம் கோடிக்கு எத்தனை வருடம்
ஆகும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கவும்.பிரணாப் முகர்ஜியின் கையில் வைத்திருக்கும் 36,000 பேர் பட்டியலில்
மற்றவர்கள் எல்லாம், அக்கவுண்ட் நம்பரைச் சொன்ன பிறகும் கூட, அது எங்கள்
அக்கவுண்ட் இல்லை என்று மறுக்கிறார்கள். வங்கிகளோ வாடிக்கையாளர் தொடர்பான
இரகசியத்தை வெளியிட முடியாது என்று ஏற்கெனவே மறுத்துவிட்டன.இந்திய அரசும்
அதென்ன பிச்சை காசு வெறும் 70 லச்சம் கோடி தானே என்று விட்டு விட்டது.
நாட்டில் வறுமைக்கோட்டை 26.50லிருந்து 28ரூபாயாக உயர்த்தப்பட்டால் மேலும்
5 கோடி புதிய இந்தியர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வருவார்கள்.என்கிறது
திட்டக்கமிஷனின் அறிக்கை.இந்த நிலையில் தான் நாட்டையும் ,
நாட்டுமக்களையும் சோனியாவிற்காகவும்,தன் அமைச்சரவை சகாக்களுக்காகவும்
பலிகடா வாக்கி ஆதாயம் பெற்றவர் தான் அண்ணன் பிரணாப் முகர்ஜி.இவரை தவிர
வேறு யார் இந்த தேசத்தை வழி நடத்த முடியும்?வாழ்க தேசபக்தி. வளர்க காங்கிரஸ் சேவை.
இன்னும் சில சான்றுகள்:
https://www.expressindia.com/
ie/daily/20000704/ina04002.html
https://www.wikileaks.ch/cable/2005/06/05NEWDELHI4721.html#
https://en.wikipedia.org/wiki/Scorpene_Deal_scam
https://www.box.com/s/440aac8d558ebc306278
எமெர்ஜென்சி காலத்தில் இவ்வளவு கேவலமாக செயல்பட்ட ஒரு நண்பர் , இந்திராவின் சர்வாதிகாரத்துக்கு துணைபோன இழிபிறவி , நம் நாட்டின் ஜனாதிபதி ஆவது நாட்டுக்கே அவமானம். இவரை தோற்கடித்தால் , நம் ஜனநாயகத்துக்கு பெருமை. பிரணாபை போன்ற தீய சக்திக்கு துணைபோகும் , தமிழக வந்தேறி தீயசக்தி கருணா மற்றும் சொரணை இல்லாத ஜால்ராக்கள் இனியாவது திருந்துவார்களா? ” சாத்தூர் பாலகிருஷ்ணனையும், சிட்டிபாபுவையும் கொன்று ரத்தம் குடித்த இந்திராகாந்தியை வன்மையாக கண்டனம் செய்த கலைஞர் , இப்போது காங்கிரஸ் காலை கழுவி வாழ்கிறார். உண்மையான திமுகவினர் சிந்திப்பார்களா?
சரி கருணாநிதிதான் கலாமை முன் மொழியவில்லை.. ஏன் JJ கூட தான் சங்கமாவை முன் மொழிந்தார். அதை பற்றி தங்களின் திரு வாய் திறக்க வில்லை?
Sarav,
JJ is anti congress (at the moment) & hence she did not support pranab.
As for sangma, could be that kalam has already been president once.
ஜெயலலிதா Anti-Congress-ஆ இருந்தாலும், அவர் வாஜ்பாய் அரசை கவிழ்த்ததை மறந்துவிடக்கூடாது சஞ்செய். அன்று அவர் நினைத்திருந்தால், இன்று பிஜேபி இன்னும் பலமாக இருந்திருக்கும். அத்வானி அவர்கள் தன் வீட்டு வாசலிலேயே காவல் காக்க வேண்டும் என்று நினைத்தவர்தானே இந்த அம்மையார்.
பா.ஜ.க. என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்த ஆள் அமைச்சராக வந்த போதே இந்த எமர்ஜென்சி தகவலை போட்டு உடைத்து வீதி வீதியாக போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டாமா? துண்டு பிரசுரங்கள் மூலம் அனைத்து மக்களிடமும் இந்த விசயங்களை கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டாமா? ஆண்டினோ மொய்னோ (சோனியா) பற்றியே இந்த நாட்டு மக்களளுக்கு எதுவும் தெரியாது, சுகன்யா தேவி என்று கூகிளில் டைப் செய்தால் ராகுல் காந்தியை பற்றி என்ன என்னவோ வருகிறது? இதை எத்தனை சாதாரண குடிமகன் அறிவான்? ஏழை குடிசையில் கஞ்சி குடித்ததாகத்தான் ராகுலை பற்றி தெரியும், ஆனால் அவன் போன வீட்டில் சிக்கன், மினரல் வாட்டர், மினி காஸ் சிலிண்டர் இருந்ததை எல்லாம் பாமர இந்தியனுக்கு சொல்லி அவனை விழிப்படைய செய்வது யார்? செய்ய வேண்டிய பா.ஜ.க. பதவி தானே வரும் என்று சொல்லி அதை நோக்கி குடுமி பிடி சண்டை போடுகிறது. தமிழகத்தில்தான் விஜயகாந்த் கட்சியின் செயல்பாட்டுக்கு கூட ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது என்றால் இன்று அகில இந்திய அளவிலும் ஜனாதிபதி தேர்தலிலும் விஜயகாந்த் கட்சி வேட்பாளரை நிறுத்தும் எண்ணம் கொண்டிருந்தால் அந்த கட்சி பா.ஜ. வுக்கு முன்னமேயே தன் வேட்பாளரை நிறுத்தியிருக்கும். அந்த அளவுக்கு கேவலமான நிலையில் (தலைமைக்கு கட்டுப்படும் விசயத்தில்) பா.ஜ.க. உள்ளது. தேசத்தை பற்றி எண்ணாத தலை முண்டங்கள் பா.ஜ.க.விலும் பெருகி வருவதே இந்த தேசத்துக்கு கவலை தரும் விசயமே தவிர, மரண நிலையில் இழுத்து கொண்டிருக்கும் காங்கிரஸ் அல்ல, நோஞ்சான் ஒரு உதை விட்டாலே சாகும் நிலையில்தான் காங்கிரஸ் இன்று உள்ளது, பா.ஜ.க. கவனிக்குமா? இல்லை பிடில் வாசித்து கொண்டிருக்க போகிறதா?
நான் சில நேரங்களில் நினைப்பதுண்டு நமது தேசத்திற்கு ஜனாதிபதிப்பதவி அவசியம்தானா என்று, 500 ஏக்கர் பரப்பளவில்,540 முதல் வகுப்பு வசதிகளுடன் கூடிய அறைகளை கொண்ட பிரமாண்டமான மாளிகை,400 ஏக்கரில் முகலாய மன்னனின் பெயர் கொண்ட மலர் தோட்டம்,ஆயிரக்கணக்கான வேலையாட்கள்,பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள்,வாழ்நாள் முழுவதும் இலவச விமானபயணம்,பதவியல் இருக்கும் போது எந்த நாட்டுக்கும் தனது சொந்த பந்தங்களோடும் படை பரிவாரங்களோடும் சென்று வர வசதி, இவையெல்லாம் சிறிதும் பிரயோஜனம் அற்ற ஒரு பதவிக்கி நாம் தர வேண்டுமா என்று நினைத்திருக்கிறேன்,
ஒருவேளை நிலையற்ற அரசாங்கம் அமையும் பொழுதோ அல்லது நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோதும்
ஜனாதிபதியின் நடவடிக்கை தேவைப்படும் என்று சிலர் சொல்கிறார்கள்
ஒரு தேநீர் அருந்துவதற்கு ஒரு தேயிலை தோட்டதையா வாங்குவது, அந்த மாதிரி சமயத்தில் வேறு ஒரு ஏற்பாடு செய்ய முடியாதா,ஒரு உச்ச நீதிமன்ற
நீதிபதியோ அல்லது ராஜ்ஜிய சபை சபாநாயகரோ இதே வேலையை செய்து விடலாமே இந்த கணினி யுகத்தில் பல துறைகளிலும் பல மாறுதல்கள் தோன்றி செம்மையான நிலை நோக்கி சென்று கொண்டுரிக்கின்றன ஆனால் இந்த பழைப்போன இந்திய அரசியல் மரபுகள் மட்டும் மாறமருக்கின்றன,எங்க சொல்ல இந்த கொடுமைய ……
நமஸ்காரம்
Anantha saithanyan.
சதாசிவம் அவர்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு….
இன்று பா.ஜ.க வின் முன்னணி தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் காங்கிரசின் மறைமுக ஆதரவாளர்களோ என்று கூட தோன்றுகிறது……பல நல்ல சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டு இவர்களுக்குள் அடித்துக்கொள்வதை பார்த்தால் என் சந்தேகம் மேலும் வலுப்படுகிறது……
@ சான்றோன்,
எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உள்ளது. பாஜாகவில் தற்பொழுது முன் அணியில் இருக்கும் தலைவர்கள் யாரும் மக்கள் தலைவர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் appointed leaders. இவர்கள் யாருக்கும் ஹிந்து உணர்வோ அல்லது அதை கடைபிடிக்கும் என்னமோ இருப்பதாக தெரியவில்லை.
அதே போல் மக்கள் தலைவர்கல் யாராவது வளர்ந்தால் உடனடியாக அவர்கள் மீது ஏதேனும் ஒரு ஊழல் குற்றசாட்டையோ அல்லது பொய் வதந்தியையோ பரப்பி அவருடைய வளர்ச்சியை தடுப்பார்கள்.
மோதியின் வருகை இதற்கு எல்லாம் ஒரு தீர்வாக அமையும் என்று நம்புகிறேன்.
2009 ஜனவரி மாதம் – பிரதமர் மன் மோகன் சிங் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொழுது – அரசாங்கத்தை நடத்தியவர் பிரணாப் முகர்ஜி. இவரைப் பாராட்டி வானளவு பாராட்டிப் பேசியவர் வேறு யாருமல்ல – அத்வானி அவர்களேதான். பேசிய இடம் – லோக் சபை. அதுவும் சாதாரணமாக புகழவில்லை – அரசாங்கச் சிக்கலைத் தீர்ப்பதில் வல்லவர், அனைவரின் நன் மதிப்பைப் பெற்றவர் என்றெல்லாம் புகழ்ந்தார் .
நெருக்கடி நிலையில், ஷா கமிஷன் கூறிய குற்றவாளிகளில் ஒருவரான ஜக்மோகன் , வாஜ்பாய் அரசில் மந்திரியாகவே இருந்தார். (இந்த ஜக்மோகன் தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த பொது எழுந்த புகாரின் காரணமாக நீக்கப்பட்டார். மீண்டும் வேறொரு துறைக்கு மந்திரியாக சேர்த்துக்கொள்ளப்பட்டார் ). மேலும், சஞ்சய் காந்தியுடன் சேர்ந்து நெருக்கடி நிலை துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மேனகா காந்தி இன்று பிஜேபி MP . (வாஜ்பாய் அரசில் மந்திரியாகவும் இருந்தார்).
எனவே, நெருக்கடி நிலையில், பிரணாப் முகர்ஜி நடந்து கொண்டதைப் பேச பிஜேபி க்கு அருகதை இல்லை.
2007 குடியரசு தேர்தலில் இதே பிஜேபி பிரதிபா பாட்டீலை எதிர்த்தது. காரணம் – அவர் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். ஆனால், அதற்கு முன்பு, இதே பிரதீபா பாட்டில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆளுநராக இருந்தார். அப்போது ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த பிஜேபி, தடை ஏதும் கூறவில்லை.
இன்றைய மத்திய ஆட்சி போக வேண்டிய ஆட்சிதான். ஆனால், அதனை எதிர்க்கும் தார்மீக உரிமையை பிஜேபி இழந்து விட்டது.
முலாம் சிங்கு ஜனாதிபதி தேர்தலில் செல்லாத வாக்கு போட்டுள்ளார். இதனை தேர்தல் ஆணையமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இதே போல பலர் , கொரடா இல்லாததால் அணிமாறி வாக்களித்துள்ளனர். மேலும் பாஜக அணியிலும் முன்னரே , நிதிஷ் குமார் , சிவசேனா என்று பலரும் அணிமாறி உள்ளனர். யார் வென்றாலும் நல்லதற்கே என்று கொள்வோம். இந்தநாடு எதிர்காலத்திலும் இருக்கும். சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆறு மாதத்திற்குள் இந்தியா உடைந்துவிடும் என்று ஆரூடம் சொன்ன வின்ஸ்டன் சர்ச்சில் ஏமாந்து போனார். அறுபத்தைந்து வருடம் ஆகிவிட்டது. இந்தியா இன்னமும் இருக்கிறது. எதிர்காலத்தில் சிறந்த தலைமை இந்தியாவுக்கு கிடைக்கும். தீய சக்தியான காங்கிரசால் நம் நாட்டை முற்றிலும் அழிக்க முடியாது. விரைவில் காங்கிரசு உருமாறும்.
” பிரணவ குமார் முகர்ஜி சொன்னதை நம்பி மோசம்போய் , உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்”- என்று பெரியவர் கருணா அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்து திரு பிரணவ குமார் முகர்ஜி அவர்கள் ஒரு பொய்யர் என்பது தெளிவாகிறது. இந்த பொய்யரை நம் நாட்டின் முதல் குடிமகனாக்க அயராது பாடுபட்ட மஞ்சளார் நாட்டு மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும். செய்வாரா ?
கிரானைட் பி ஆர் பி அவர்கள் தனது வாக்குமூலத்தில் திமுக பிரமுகர் ஒருவர்தான் தன்னை தவறாக வழிநடத்தியதாகவும், அதனால் தான் , தான் மிக துணிச்சலாக பல செயல்களை செய்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கிரானைட் விவகாரத்தில் உண்மைகளை பகிரங்கமாக எழுதிய “தினபூமி “- என்ற நாளிதழின் அதிபர் மணிமாறன் மற்றும் அவரது மகன் மீது கைது என்ற ஆயுதத்தை ஏவிய காவல்துறை மற்றும் திமுக பிரமுகர்களை , உடனடியாக கைது செய்து , தக்க தண்டனையை நீதிமன்றத்தின் மூலமாக வழங்கவேண்டும். அந்த சமயத்தில், உள்துறையை கையில் வைத்திருந்த பெரியவர் மஞ்சளாருக்கு , இதில் எந்த அளவுக்கு நேரடி/மறைமுக தொடர்பு என்பதையும் விசாரித்து , பெரியண்ணனுக்கு ஏதாவது பெரும் பங்கு இருந்தால் , தாமதமின்றி விசாரித்து நடவடிக்கை எடுத்து , தவறு செய்தோர் யாராயினும் நீதிமன்றத்தின் மூலமாக தக்க தண்டனை வழங்கவேண்டும்.
செபி போன்ற ஒரு முக்கிய அமைப்பின் உறுப்பினராக இருந்த திரு ஆபிரகாம் எழுதிய கடிதம் மேற்கண்ட இணைப்பில் கொடுத்துள்ளதை படித்தால், பிரணாபை ஜனாதிபதி ஆக்கிய மஞ்சளார் போன்றவர்கள் வேறு ஏதாவது தான் செய்துகொள்ள வேண்டும். தானும் தீய சக்தியாகி, தீய சக்திகள் பெரிய பதவிகளை அடைய உதவிய , தமிழக திருக்குவளை தீயசக்தி இனியாவது திருந்துமா ? கடைசிக்காலத்திலாவது சிறிது நல்ல செயல்கள் செய்வாரா?