அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்

மூலம்: திரு.தெய்வமுத்து (ஆசிரியர் – ஹிந்து வாய்ஸ்)
தமிழில்: வேதம் கோபால்

சாந்தியை தேடும் அரேபிய இஸ்லாமிய நாடுகளில் ஹிந்து மதம் தன் சிறகுகளை விரித்து பரவ ஆரம்பித்துள்ளது.

பொதுவாக பத்திரிகையாளர்களின் பார்வையில் ஒரு நாய் மனிதனை கடித்தால் அது செய்தியாகாது.  ஆனால் ஒரு மனிதன் ஒரு நாயைக் கடித்தால் அது பரபரப்பான செய்தியாக வெளிவரும். (இது ஐ.எஸ் செய்தி). ஹிந்துக்கள் ஒன்று கூடி ஒரு ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது செய்தியாகாது. ஆனால் முஸ்லீம்கள் ஒன்றுகூடி ஒரு ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது பரபரப்பு செய்தியாக வெளிவரும்.  அதுவும் முஸ்லீம்கள் அரபு தேசங்களான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அந்த செய்தி பரபரப்பாகி, தலை நகரங்களில் எல்லாம் பேசக்கூடிய செய்தியாகும் சாத்தியம் உள்ளது.  ஆனால் இந்த செக்யூலர் பாரதத்தில் அது ஒரு சாதாரண பத்திரிகை செய்தியாகக் கூட வெளிவரவில்லை.

இதற்கு காரணம் கூறுவது மிகவும் எளிது. முதலாவது, இது ஹிந்து மதத்தைப் போற்றிப் புகழும் செய்தியாக இருப்பது. இரண்டாவது, இது இங்குள்ள முஸ்லீம்கள் மத உணர்வுகளை புண்படுத்திவிடும் என்று ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே கற்பித்துக் கொண்ட போலியான பாவனைகள்.

ஆனால் இது பாரதியர்கள் பெருமைகொள்ள வேண்டிய விஷயம்.  அதுவும் வெகு தொலைவில் உள்ள எல்லா அரேபிய தேசங்களிலிருந்தும் ஒற்றுமையாக பலர் ஒன்றுகூடி ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலயத்தில் பஜனை செய்யவும், சேவை செய்யவும் வந்திருக்கிறார்கள் என்பது.  ஒரு நாட்டின் பெருமையை, அந்த நாட்டின் பெரும்பான்மை மதமான ஹிந்து மதத்தின் மதிப்பை உணர்ந்து பல நாட்டினர், பல மதத்தினர் ஒன்றுகூடியிருக்கிறார்கள். இது ஒளிவு மறைவின்றி நம் நாட்டிலும் வெளி தேசங்களிலும் சொல்ல வேண்டிய மத நல்லிணக்கண செய்தியாகும். மேலும், இந்து தர்மத்தின் கொள்கைகளும் உபாசனைகளும் மேற்கத்திய நாட்டின் கிருஸ்துவர்களிடமும், அரேபிய தேச முஸ்லீம்களிடமும் சென்று கொண்டிருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

சத்திய சாயி பாபா ஒன்றும் வெளி நாடுகளுக் கெல்லாம் சென்று சொற்பொழிவு நிகழ்தி இந்த அரேபிய முஸ்லீம்களை ஈர்க்கவில்லை.  சொல்லப் போனால் அவர் வெளிநாடே சென்றதில்லை எனலாம். அப்படி இருந்தும் அவர் ஆசியைப் பெற பல பக்தர்கள் வெளி நாடுகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர் பூத உடலோடு வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, முக்தி அடைந்த பின்பும் அவரது சமாதியை நாடி ஆசிபெற பக்தர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளார்கள். இது ஒரு காந்த சக்தி என்பதற்கு மேல் வேறில்லை.

பாபா ராமதேவ், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மாதா அமிர்தானந்தமயி போன்ற சாதுக்களும், சன்னியாசிகளும் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்து தர்மத்தை, மானுட நேயத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அதை சத்திய சாயி தன் ஆஸ்ரமத்தில்  அமர்ந்து கொண்டே சாதித்து காட்டியிருக்கிறார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் யுத்தம் முடிந்த களங்களான ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அமைதி வேண்டி முகாம்களில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இப்பொழுது அரேபிய முஸ்லீம்கள் பிரசாந்தி நிலயத்திற்கு அமைதி வேண்டி புனிதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.  இதை எல்லாம் பார்க்கையில் விழித்துக் கொண்ட இஸ்லாமியர்கள் எல்லாம் அமைதி நாடியும், சந்தோஷத்தை தேடியும், சமய சுதந்திரம் வேண்டியும் சனாதன தர்ம மார்க்கமான ஹிந்து மதத்தை நாடி பாரதத்திற்கு வருகிறார்கள்.

இருந்தாலும் ஒரு பெரிய கேள்விக் குறி தொக்கி நிற்கிறது.

இஸ்லாம் மிக தெளிவாகவே குரான் தான் அல்லாவின் கடைசி செய்தி, முகமதுதான் அல்லாவின் கடைசி தூதுவர் என்கிறது. எல்லா முஸ்லீமும் மத நம்பிக்கையுடன் தினமும் ”கல்மாவை” ஐந்துமுறை ஓதவேண்டும். அதாவது ”அல்லாதான் ஒரே கடவுள், அவரின் கடைசி தூதுவர் முகமது. எனவே அல்லாவிடமும், முகமதுவிடமும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.  வேறு நம்பிக்கைகளை நாடுவது மஹா தெய்வ குற்றம் ஆகும். அதற்கு சாவை தவிர வேறு தண்டனை இல்லை என்றும் குரான் கூறுவதாகச் சொல்லப் படுகிறது.

இன்று இங்கே வெகு தொலைவிலிருந்து அரேபிய தேசங்களிலிருந்து அமைதியை நாடி சத்திய சாயின் மேல் நம்பிக்கை கொண்டு பிரார்தனைக்காக பிரசாந்தி நிலயத்தில் கூடியுள்ளார்கள் அரேபியர்களும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களும். இது இஸ்லாத்தின் படி தெய்வகுற்றம் ஆகும் அல்லவா ? இவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பி சென்றால் அங்கே உள்ள தீவிர கொள்கையை கடைபிடிக்கும் முல்லாக்களும், முல்விகளும் என்ன செய்வார்கள்? இங்கே உள்ள தீவிர முஸ்லீம் மதவெறியர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? இஸ்லாம் அபாயத்தில் உள்ளது என்றா ?

அரேபிய இஸ்லாமியர்களே அமைதி நாடி பஜனை செய்வதற்கும், மூர்த்தி சேவை செய்வதற்கும் ஹிந்து ஆசிரமங்களை நாடுகிறார்கள். இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்கள் 7வது நூற்றாண்டில் கடைபிடித்த கொள்கைகள் அப்படியே 21வது நூற்றாண்டிலும் கடைபிடிப்பது நாகரீகம் இல்லை என்று தெளிவு பெற்று வருகிறார்கள். மாற்றங்களை வரவேற்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.  ஆனால் எப்படி இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது என்பதில் தயக்கமாக உள்ளனர். பிரசாந்தி நிலயத்திற்கு வந்த அரேபிய முஸ்லீம்கள் அப்படிப் பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

தீவிர இஸ்லாமியர்களின் கருத்துப் படி, பஜனை செய்வது, வாத்தியங்களை இசைப்பது, சமாதியை வணங்குவது என்பன இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகள் ஆகும்.  ஆனாலும் மன உறுதியுடன் இந்த அரேபிய இஸ்லாமியர்கள் தைரியத்துடன், அமைதி நாடி, வாத்தியங்கள் முழங்க பஜனை செய்து மூர்த்தி சேவையில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை. அது ஹிந்துக்கள் பாராட்டிப் போற்ற வேண்டிய ஒன்று. இந்த நிகழ்வு நமக்கு தெளிவாக ஒரு செய்தியை கூறுகிறது ! ஒரே புத்தகம் தான், ஒரே தூதுவர் தான் என்பது உண்மையாகாது. ஆன்மீக பாரதம் பற்பல மஹான்களையும், ரிஷிகளையும் இன்றுவரை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் அறிவுரைகள் இன்று பாரதத்தை மட்டுமல்லாமல், அமைதி வேண்டி ஆன்மிகம் நாடும் உலகின் அனைத்து நாடுகளையும் ஈர்க்கிறது.

இந்த அரேபிய இஸ்லாமியர்கள் 2012 ஜூலை மாதம் 10ஆம் தேதி ”சர்வ தர்ம ஸ்வரூப சாயி” என்ற தலைப்பில் அவரது உன்னத கோட்பாடுகளான சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்பதை உள் அடக்கி ஒரு பெரிய கீர்த்தனை கச்சேரியையே அரங்கேற்றினார்கள்.  ஆனால் விதி வசமாக இந்த கொள்கைகளுக்கு எதிர்ப் பதமான பல கொள்கைகளும் குர்ரானிலும், ஹதீஸ்களிலும் பரவிக்கிடக்கின்றன. அதனால் தான் உலகில் பலவிதமான கொடூரமான தீவிரவாத செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இந்தியாவில் வாழும் பாரத இஸ்லாமியர்கள், தெளிவு பெற்ற இந்த அரேபிய முஸ்லீம்களை வழிகாட்டியாக எண்ணி ஹிந்துக்கள் மீதான வெறுப்பு உணர்ச்சியைக் கைவிட வேண்டும். மேலும் அவர்கள் மதம் என்பதும், தர்மம், மனிதநேயம் என்பதும் வேறானவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும். எந்த முல்லாவோ, முல்வியோ முஸ்லீம்கள் இஸ்லாத்திற்காக உயிர்விட வேண்டும் என்று கூறினால், அவர்களிடம் இஸ்லாம் என்பது முஸ்லீம்கள் முன்னேற்றத்திற்காகவா அல்லது இஸ்லாம் பிழைத்திருப்பதற்காக முஸ்லீம்கள் பலிகடா ஆக வேண்டுமா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

அனைத்து உன்னதமான மனிதநேய கோட்பாடுகளும் ஹிந்து சனாதன தர்மத்தில் அடங்கியுள்ளது.  இவை எல்லாவற்றையும் இன்று நமது சாதுக்களும், சன்நியாசிகளும், தர்ம குருமார்களும் உலகெங்கும் பரப்பி கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை பரப்பி நிலைபெற செய்வது ஒன்றுதான் உலகை அமைதி பாதையில் வழிநடத்தும்.

பின் குறிப்பு: இந்த நிகழ்சியில் பல அரேபிய பாடல்களும் அதைத் தொடர்ந்து பஜனை நிகழ்சிகளும் இடம் பெற்றன.  பிரார்த்தனைக்கு வந்த அனைவருக்கும் திராட்சை, முந்திரி, பாதாம், கற்கண்டு, பிரசாந்தி நிலயத்தின் பிரார்த்தனை கூடமுகப்பின் புகைப்படம், இஸ்லாத்தில் இருக்கும் பல நல்ல உபதேசங்களை பற்றிய சத்திய சாயியின் சொற்பொழிவு அடங்கிய கையேடு ஆகியவை பரிசாகக் கொடுக்கப்பட்டன.

18 Replies to “அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்”

 1. சாய்பாபாவிற்கும், அராப் ஷியேக்கிற்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஒன்றின் மீதே படுத்து உறங்கினார்கள். அது பத்தும் செய்யும் விஷயம்.

  “காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும்”

  இந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது. அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.

  ஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.

 2. இறைவனை முழுமையாக புரிந்தவர்கள் அவன் இருக்கும் அந்த சிகரத்தை அடைந்து அவனோடு கலக்கவோ, அவனருகில் அமரவோ அல்லது அவன் பாதத்தில் உறையவோ தனது மதத்தை படிகளாகக் கொண்டு அதன் தத்துவங்களின் மீது பயணிக்கிறார்கள். பாதை வேறானாலும் பயணம் ஒன்றை நோக்கியே. இது தான் முழுமையான ஆன்மீகவாதிகளின் வாழ்வியலாக இருக்க முடியும்.

  பயணத்தை மறந்தும், அடைய வேண்டிய இலட்சியத்தையும், சிகரத்தையும் மறந்து… மதம் என்னும் படிக்கட்டுக்களை ஒப்பீடு செய்துக் கொண்டும், பயணிப்பவர்கள் மீது ஒருவரை மாத்தி ஒருவர் கல்வீசிக் கொண்டும் காலத்தைக் கடத்துவது கவலைக்குரியதே…

  பெரும்பாலானோர் இதைத் தான் செய்கிறார்கள்…. இவர்கள் நாத்திகர்களை விட கொடியவர்கள். இந்த அரை, கால், அரைக்கால் நாத்திககர்கள் தான் அன்பிற்கும், உலக அமைதிக்கும்; மானுடம், மனித நேயமும் மண்ணோடு மண்ணாகப் போக தங்களது உயிரையும் விட்டு அரும் பாடுபட்டு அந்த பாவப் பட்ட செயல்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்…

  மதம் என்பது இறை வழிபாட்டின் ஒரு சரியான வழிமுறை… அது காலம், மக்கள், இடம் இதைப் பொறுத்து வரையறை செய்யப்பட்டது. ஆக, அதை தெளிவாகப் புரிந்துக் கொண்டு காலம், இடம், மக்கள் மாறுவது போல் மதங்களில் உள்ள கருத்துக்களின் அவசியமும், நோக்கமும் புரிந்து தேவைக்கு, தங்களது ஆன்மீகப் பயணத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டால் தான் அம்மதம் வாழும், வாழவைக்கும் மதமாக இருக்கும்.

  அது இஸ்லாமிற்கு மாத்திரம் அல்ல… இந்து மதத்தோடு கூடிய அனைத்திற்கும் பொருந்தும். பகவான் சத்திய சாயின் ஆசிரமத்திற்கு வந்து சென்ற அந்த இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையான ஆன்மீக வாதிகள், மதம் கூறும் நற்கருத்துக்களை நம்பி அதை வாழ்வின் அங்கமாக தொடர்வதோடு மற்ற மதத்திலும் இருக்கும் நல்லக் கருத்துக்களை நாங்களும் போற்றுகிறோம் உங்களோடு இருந்து பரமானந்தம் அடைகிறோம் என்ற தெளிவு கொண்ட அந்த நல்ல மனிதர்கள் உண்மையில் கடவுளின் கருணையில் திளைத்தவர்களே. உண்மையான ஆன்மீக வாதிகள்.

  எல்லாம் இருக்கிறது இந்துமதத்திலே என்பது உண்மையானாலும் அதை எவ்வளவு தூரம் ஒவ்வொரு இந்துவும் புரிந்து வைத்து இருக்கிறான் என்பது தான் ஒருப் பெரிய கேள்வி. அது தான் இப்போதைய குறையும் கூட…. பக்தியை அதன் அலங்காரத்திலே, ஆடம்பர படோபரத்திலே அதை அழகு படுத்துவதிலே காலமெல்லாம் வீணடித்து விட்டு லட்சியத்தை மறந்தவர்களாகவே பெரும்பாலான இந்துக்கள் இருக்கிறோம். உலகத்தின் மீது அன்பு, தியானம், நிபந்தனையில்லா கடவுள் பற்று அதுவும் ஒரு சுவாசத்தை போன்று இருக்குமானால் அந்த சிகரத்தை அடைவது நிச்சயம் அது மாத்திரமே அனைத்து மதங்களும், மகான்களும் நமக்கு கூறியவை.

  தவறான இடைச் செருகல்களும், போதனைகளும், தானும் ஒருத் தலைமையாக இருக்க வேண்டும், தனக்கு ஒரு தனி அங்கீகாரம், அல்லது எனது நாட்டிற்கு, எனது இனத்திற்கு தனி அங்கீகாரம் இருக்க வேண்டும், நாங்கள் தான் உயர்ந்தவர்கள், எங்களால், எங்கள் மக்களால் மாத்திரமே இது சாத்தியம் என்ற அகங்காரம், சுயநலம் இவைகள் தாம் இவை அனைத்திற்கும் காரணமாக இருந்து இருக்க முடியும்.

  இது போன்ற அவலங்கள் எல்லா மதத்திலும் இருந்க்கிறது… இருந்தும் உலக மதங்களுக்கெல்லாம் மூலத் தத்துவமாக விளங்கும் நமது வேதங்கள் கூறும் தத்துவங்களை உயிராக கொண்ட இந்து மதம் தாயாக அனைவரையும் அரவணைப்பதும் மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது.

  மத வெறியர்கள் இவற்றை சரியாக புரிந்துக் கொண்டு ஒற்றுமையாக செயல் பட்டால். மண்ணிலே சொர்க்கத்தை காணலாம்.

  நல்லப் பதிவு அது எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் தான் இவை.

  பகிர்விற்கு நன்றிகள்!

 3. நல்ல பதிவு.

  இஸ்லாமியருக்கு என்று இல்லை. ஒவ்வொரு மதத்தினரும் அவர்களது மதத்தில் உள்ள நல்ல கருத்துகளையும், தத்துவங்களையும் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். தவறு என்று நமக்கு தோன்றினால் அதை ஒதுக்க தயங்க கூடாது. தம் மதத்தை தாமே மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இஸ்லாமும், கிறிஸ்தவமும் அதற்கு அனுமதிப்பது கூட இல்லை.

  இந்து மதத்தில் இருக்கும் மிக பெரிய விஷயம் எல்லாவற்றிக்குமான முழு சுதந்திரத்தை அளிப்பதுதான். அதுதான் அதன் விதை. இந்து மதமும் சரி, இந்து மதவாதிகளும் சரி, சட்டம் போட்டு யாரையும் தடுப்பதில்லை. மேன்மையை சொல்வதற்கு மட்டுமே அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

  மதம் தன் தத்துவத்தால் தானாய் வளரவேண்டும். மதத்தினை உள்வாங்கி திருப்தி இல்லாமல் அந்த மதத்தை விட்டு வெளியில் வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்து மதத்தில் அப்படி யாரும் இல்லை. அதுதான் அதன் மேன்மை.

  பல வருடங்களுக்கு முன்பிரிந்தே ஐரோப்பியர்களும், மற்ற வெளி நாட்டவர்களும் இந்தியாவை, உண்மையான ஆன்மீகத்தை தேடி இங்கு வந்து அடைகிறார்கள்.

 4. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மதம் இந்து மதம் என்பதை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்து சொல்லுவோம் …அஹிம்சையையும் ..அன்பையும் கொண்ட ஒரே மதம் ஹிந்து மதம்.

 5. When Sathyasai was alive in his phyisical frame, there were some forces tried to show him as a anti-muslim, especially in the muslim countries. May be with the intention of Jihad against him.

  https://media.radiosai.org/journals/Vol_06/01NOV08/muslim-2.htm
  https://media.radiosai.org/journals/Vol_06/01NOV08/muslim-3.htm

  //”The article by Haraldur Erlendsson in an on-line newspaper published from Bangladesh has essentially two components; the first is a repetition of standard allegations, repeated perhaps for the “benefit” of a new audience, this time in Bangladesh. The second component is the alleged anti-Muslim attitude of Swami. In this part, I shall offer comments on the “old stuff” by which I mean allegations, which, though duly demolished, are being repeated once more, perhaps to compel the attention of Bangladeshi readers. Some reference to those familiar allegations is necessary because this time, we take a few of them and answer them point by point. Through this exercise, I wish to bring to the notice of our readers what the anti-Swami lobby is generally trying do. Their plan is the following:

  1.Start with a sweeping allegation based on a sensitive point; most people would then be ready to accept the allegation without any deep examination of the evidence.
  2.Next, throw in other allegations, which the already-biased reader is ready to swallow, without any further scrutiny regarding the veracity of “facts” being presented.
  3.Wrap it all up with remarks that demonise the one being attacked.
  That, in a nutshell, is how demonisation is successfully practiced these days. First target the soft underbelly of the listener/reader, and then go for the total conversion. It helps if this is done repeatedly and by as many people as possible. A well-orchestrated chorus delivers the goods better! Please keep all this in view as I walk you through some of the allegations of Haraldur Erlendsson. “//

 6. நல்ல தெளிவான கருத்துக்களை அடக்கிய வ்யாசம்.

  நன்றி ஸ்ரீமான் வேதம்கோபால்.

  \\\முல்லாவோ, முல்வியோ \\\ — ஒரு பிழை.

  முல்லாவோ, மௌல்வியோ என்பது பிழை திருத்தம்

  கற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்களைக் குறிக்கும் சொல்.

 7. https://media.radiosai.org/journals/Vol_08/01APR10/06-healingtouch.htm

  A team of doctors of international repute flew down from various parts of USA (Utah, Oklahoma, Illinois and California) and in a span of 14 days starting from February 8, they treated over 80 cardiac patients, virtually gifting them new lives with the help of most expensive medical devices they had brought along with them. The monetary value of free service offered was at least Rs. 45 Million.

 8. Few Excerpts from the book SAI SATHYA SAKHA – Sai – My True Friend by ABDUL RAZAK BABURAO KORBU
  https://www.saibaba.ws/experiences1/saisathyasakha/sss.htm

  //To my wife, Baba said again “Meri bachhi” (My child). Using vocative case is very touching. I experienced this when Baba called my wife “Meri bachhi!” Naseem became slightly relaxed and for the first time raised her head to look at Baba. In a very casual manner, Baba asked her “Don’t you want your own son?” Now I became completely relaxed. With this question, Baba gazed into Naseem’s eyes without batting his eyelids. It is well known that while Baba is talking, his eyelids move faster that those of others. Naseem was transfixed with her eyes looking at Baba only. This divine communion went on for a short time. Then suddenly, as if pulled by some invisible force, she fell at Baba’s feet and plaintively mooed “Oh! Mere Baba.” (Oh! My Baba.) Her whole body was trembling. She was profusely weeping and washing Baba’s feet with her tears! I was about to go near her and help, but Baba signalled me to sit quiet. Baba picked up his handkerchief, wiped his face and lips and sat at ease. Except for the sound of Naseem’s sobbing, there was pin-drop silence.

  After a few minutes, Baba said “Utho men bachhi” (get up my child). Naseem managed to get up and sat there only. In her hand she held a corner of Baba’s robe which was hanging on the floor. Some devotees may not be aware of the fact that, in his present avatar, Baba never touched any of his female devotees.

  Baba looked at me, kept his hand on my left shoulder and told me to sit next to my wife, who was still sobbing. Continuing to look at me, the Avatar said “This lady is pregnant from this moment. She will deliver a very intelligent son on a nationally important day. She will deliver one more son on another important day.” Oh! My jaw dropped and I was amazed. Slowly speaking, I said “Baba, the doctors confirmed that……….” Cutting off my sentence, Baba said “What doctors? Doctors – I am the Doctor of doctors!” Naseem and I both understood, and both of us fell at his feet again.//

  //I had not seen any lady entering the Mandir just like in Muslims’ Masjid. Are ladies not allowed in the Mandir? If this is so, I should not be here even for a minute! On my asking, the devotee explained “On the contrary, there are more ladies than gentlemen inside the Mandir. Are you not hearing to ladies’ voices also singing bhajans? The singing is from inside. Ladies enter the Mandir through a separate door on the other side, which is not visible from here.” On hearing this, I was much relieved.

  I do not like some of the customs which are accepted and practised. Muslim ladies are not allowed in the Masjids and are also not allowed to do Namaz there. When Muslims criticise Hindus on untouchabllity, is not this treatment of ladies amongst Muslims a sort of untouchability also?//

  //I – “Can you tell me how I was selected for the appointment without being first interviewed?”

  Dr. V. K. Gokak – “How was it possible to interview thousands of applicants? We requested Swamy as to how to do this selection. Swamy said that one day he will come and do the needful. There is no need to open any envelope or call any applicant. One day, after morning darsan, Swamy came to this office and I followed him. Swamy instructed us to spread all the envelopes on the floor, which we did. Then Swamy picked up fourteen envelopes from them in fourteen seconds, told us “These persons are selected” and left. Afterwards we opened the fourteen envelopes. We found that there was one envelope for each faculty;

  there was no duplication or triplication. In that lot, your’s was for Mercantile law. Swamy’s miracles are a routine to us now. If you have any doubt yet, you may contact the Registrar. Except for these fourteen, all the other envelopes are still sealed.”//

 9. சுவனப்ரியன் இக்கட்டுரையை படித்துவிட்டு கமெண்ட்டு போடாமல் போனாரான்னு எடிட்டர்கள் தான் சொல்லணும்

 10. Dear all… With due respects to all, i would like to clarify an important matter here – as a person who has been in the middle east – as part of the Sathya Sai Samithi there. Just to clarify…

  The people doing Bhajans here are not entirely arabs as the title or essay suggests. They are Indians and our friends in the middle east may know and recognize many of them but for their attire. The attire is only to support the program and also to give an overall Arabic theme because they are all singing Bhajans in Arabic language. The group also has a few devotees from other parts of the world scattered among them. As a matter of fact, Arabs in this group may not be many, if not none.

  I requestyou all to read the original newsletter / publication of this event as published / issued by Prashanthi Nilayam (PN), wherein they make no assertions / claims that they are muslims or arabs. It will only say that they are devotees from the middle east region. It is the media and some over enthusiastic people who have misquoted this as arabs and muslims… Please understand that these people wore the Arabic traditional dress just for presenting the theme of this program – just like any other person would do when presenting a group program or skit or group singing.

  Just a request – We need to stop this misquoting in the media and emails for 2 main reasons – as follows:

  a) People would start unnecessarily blaming PN for sending wrong messages when people realize that this matter is not true. They would conveniently forget that PN did not say anything in their publication and all this was their own misunderstanding.

  b) These people are peacefully practicing Bhajans and carrying on service activities in the middle east. If the arabs come to know that we are mispropagating this matter, they would ban these people from practicing service and may even punish them.

  Finally…. It is wrong to say that Swami is propagating Hinduism. One of his main teachings is SARVADHARMA. Any devotee can vouch that Ramadhan and Christmas is equally celebrated in grandeur in PN and by His devotees as Deepavali or Guru Purnima. Similarly, I know personally that students in His institutions maintain fasting for Ramadhan even though they are religiously required just to give company to some of their friends who do fasting for religion.

  “In Swami’s fold, a Hindu is taught to be a good Hindu, A muslim, a good Muslim and so on for one’s respective religion. He has not come to create a religion… nor is propagating any religion. There are no conversions… except for teh conversion of a mind from bad and evil thoughts to a kind and compassionate mind with all human values.”

  So, let us please stop this mis propagation!!!

  Jai Sai Ram

 11. Kumaran said:

  1) சாய்பாபாவிற்கும், அராப் ஷியேக்கிற்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் ஒன்றின் மீதே படுத்து உறங்கினார்கள். அது பத்தும் செய்யும் விஷயம்.

  2) “காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும்”

  3) இந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது. அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.

  4) ஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.

  Rebuttal to kumaran:

  1) The one Crore population of chennai drink the water supplied by Sri Satya Sai’s water project, and not the water supplied by Arab Sheik’ s money. ASrab Sheiks were born rich, and inherited huge wealth earned through petro dollars. While Sai Baba had no such advantages. He was born in hut to very poor parents from the ‘Thiru Kulathars’. He never had oil wealth and petro dollars. Ill informed person like kumaran are highly sectarian. He should go through the special issue of India Today that published recently a special full magazine on Sai Baba!

  2) Any attempt at surgical treatment will result in huge tragedies and enormous human causlaites as happened with the recent film.

  3) Religious teachings are prone to interpretations and continuous reinvention. The writer is maintaining ambiguity ” 3) இந்திய மக்களிடையே இல்லாத மதத்தை உருவாக்கி அதற்கு மதசாயமும் கொடுத்து இந்திய மக்களின் பாரம்பரியங்களை காலத்திற்கு ஒவ்வாதவை என்று கூறி அவரவரது பாரம்பரியங்களை வேரறுக்க ஒரு கும்பல் சுற்றித்திரிகிறது.”

  Part a of the observation may be examined. Who are these people…these kumbal? who heads them? Are people like “kumaran” *puritans* of sanathana dharma?

  Part b of the அதே கும்பல் இப்போது அரேபியாவிலும் அவர்களை வேரறுக்க சுற்றுகிறது. உலக பொதுவான சகோதரம் என்று கூறி பிதற்றி திரிகிறது.

  If the author is explicit it will be good to the world as he is making very serious observations. He is making to conflicting observations at the same time. Part b clashed with a.

  Who really owns sanathan dharma is it the puritans?

  4) “ஆனால், ஹரிவர்ஷம், கிம்புருஷம், ரம்யகம் போன்றவற்றின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாரத வருஷத்தின் இயல்பினையும் மாற்ற முடியாது. பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.”

  I have traveled the length and breadth of Country. All the sacred spaces in 99.9 cases have been defiled spoiled and polluted.

  Where is hari varsham, kimpurusham and ramyakam?

  Can the author throw more light on “பாஷாண்டிகள் ஒழியட்டும். உண்மையான சனாதன தர்மம் மலரட்டும்.”

  We will wait for his pure discourse! who are pashandis?

 12. குரான் ஒரு பயனற்ற நூல். காலத்திற்கு பொருந்தாக வாழ்வும் உபதேசசமும் கொண்டவா் முகம்மது. அவர் அரேபிய கலாச்சாரம் தான் உலகை ஆள வேண்டும் என வல்லாதிக்க மனப்பான்மையோடு தனது உபதேசங்களை நயவஞ்சகமாக வைத்தாா். அரேபிய வல்லாதிக்க கருத்துக்களை இறைவின் தூதா் என்ற போா்வையில் மறை்து உலகை ஏமாற்றினாா். சிலை வணக்கம் தவறு என்று தடுத்த அல்லா 1.53 வயதில் 9 வயது ஆயிசா வை திருமணம் செய்தபோது ஏன் தடுக்கவில்லை 02. தனது மகன் தனது மனைவியை தலாக் செய்த மறு நிமிடம் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டாா் ? மருமகளை திருமணம் கூடுமா? கூடாது ஒழுக்கக் கேடு என்று ஊராா் தூற்றிய போது இறைவனின் வகி வந்தது. மருமகளை திருமணம் செய்வது தவறல்ல என்று ஏமாற்றியவா் .3 கொள்ளையடித்தவா் 4.8-10மனைவிகளுக்கு அப்பால் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பெண்களில் 5 சதம் தனது பங்காகப் பெற்று 30 போ்களுக்கு மேல் குமுஸ் வைப்பாட்டிகளை வைத்திருந்தாா். இப்படி பலபல சாதனை.இறையில்லா இஸ்லாம் என்ற வலைதளங்கைளை படியுங்கள்.இசுலாம் எவ்வளவு அசிங்கமானது என்பதை உணவ முடியும்.
  இந்துமதததிலும் காலத்தின் ஓட்டத்திற்கு தக்க பல பழுது பாா்க்கும் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதைச் செய்ய நாம் தவறினால் ” நமமில் இந்துத்துவா” இல்லாது போனால் என்ன லாபம் ? மிச்சுவது என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *