தி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்

தி ஹிண்டு பத்திரிகை ஜனவரி-3 அன்று வெளியிட்ட ஒரு பத்திக் கட்டுரையில் இந்திய தேசிய எழுச்சியின் நாயகர் சுவாமி விவேகானந்தரைக் குறித்த மோசமான, அவமதிப்பான சித்தரிப்பு இருந்தது. இதனைக் கண்டித்து ஜனவரி-6, ஞாயிறு காலை 9.30 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு “தி ஹிண்டு” அலுவலகம் முன்பாக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. சுவாமிஜி மீது அன்பு கொண்டோர் அனைவரும் திரளாக வந்து இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம்..

இது குறித்த மேலதிக விவரங்கள் இங்கே.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தி ஹிண்டு பத்திரிகைக்கு அனுப்பியுள்ள கண்டனக் கடிதம் –

rk_math_letter_to_the_Hindu

66 Replies to “தி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்”

 1. இது மிகவும் கண்டிக்க தக்கது. எனவே நம்முடைய பலத்த எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். இந்து மதத்தின் அற்புதம் அவர்களுக்கு எங்கே தெரியும்?

 2. சுவாமிஜி இந்தியா திரும்பியவுடன், சகோதரி நிவேதிதையைக் கொண்டு பெண்களுக்கான ஒரு பள்ளியைத் துவங்கச் செய்தார்.அந்த வகையில் இந்தியாவில் பெண் கல்விக்கான முன்னோடிகளில் ஒருவராக சுவாமிஜி விளங்கினார்.

  அவர் உருவப் படத்தினை தவறான இடத்தில் தவறான கட்டுரையில் வெளியிட்டு கேவலப்படுத்தியுள்ள ‘ஹிந்து’நாளிதழ் கண்டனத்திற்கு உரியது.

  ‘ஹிந்து’ என்ற பெயரை வைத்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்து மக்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் ஓர் ஆசிரியர் குழு ஹிந்துவை ஆக்கிரமித்து நீண்ட வருடங்கள் ஆயிற்று. வருத்தப்படுகிறேன்.

 3. தி ஹிண்டு பத்திரிகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: 200 பேர் கைது.

  தி ஹிண்டு பத்திரிகை அலுலகம் முன்பு ஏற்கனவே திட்டமிட்டபடி காலை 9.30 மணியளவில் விவேகானந்த அன்பர்கள் குழுமினர். பிறகு, சுவாமி விவேகானந்தர் குறித்த ‘தி ஹிண்டு’ பத்திரிகையின் அவதூறு கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் திரு. ராம.நம்பி நாராயணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சென்னை- சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவர் என்று தெரிகிறது.

  முன்னதாக, தி ஹிண்டு அலுவலகம் வந்த மனிதவளத் துறை துணைத் தலைவர் திரு. ஸ்ரீதரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். சுவாமி விவேகானந்தரை அவதூறு செய்யும் விதமாக வெளியிட்ட கட்டுரைக்கு பத்திரிகையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நிர்வாகத்திடம் சொல்வதாக அவர் கூறினார்.

  ஹிந்து இயக்க உறுப்பினர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

  -குழலேந்தி

 4. நாத்திகவாதியான கருணாநிதியின் அடிவருடியான ராம் இருக்கும்வரை இப்படிதான் நடக்கும்.

 5. ‘தி ஹிந்து’ உண்மையில் ஒரு கேவலமான பத்திரிக்கை. இந்து-விரோதம், இந்து மதத்தைச் சிறுமை படுத்துதல் என்ற எல்லா விஷமங்களையும் மற்ற பக்கங்களில் செய்துவிட்டு, ஒன்பதாவது பக்கத்தில் பக்தப் பிரகலாதனைப் பற்றியோ இராமனைப் பற்றியோ இரண்டு வரிகள் ‘தத்துவம்’ என்ற பெயரில் எழுதிவிடவேண்டியது. மிகவும் நல்ல ஆங்கிலத்தில், உப்பிட்ட மண்ணிற்கே துரோகம் செய்யும் நாளிதழ்களில் இதுவும் ஒன்று. அப்பத்திரிக்கையின் உண்மை கொள்கையை வெளிக்கொண்டுவராமல், ஆணவத்துடன் அவதூறு பரப்பும் அதன் எழுத்தாளர்களை மக்கள் கூடியிருக்கும் நவீன அரங்கங்களில், அனல் பறக்கும் விவாதங்களில் வாயடைக்க வைக்காமல் ‘தி ஹிந்து’ வின் கொட்டத்தை அடக்கமுடியாது!

  இதெல்லாம் நடக்குமா என்றால், நிச்சயமாக இந்துக்களால் முடியும். பன்மடங்கு முன்னேறியிருந்த ஆங்கிலேயர்களையே தோல்வி அடையச் செய்தவர்கள் அவர்களின் கைக்கூலிகளை வெற்றிகொள்வதா கடினம்??

  பலவீனமான இளைஞர்களை இரும்புபோல் உறுதி அடையச்செய்த வீரத்துறவியின் ஆசீர்வாதங்கள் நம்முடன் துணை நிற்க!!

 6. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது

 7. இந்தக் கடிதத்தை முழுவதுமாகக் கூட இவர்கள் பதிப்பிக்கவில்லை! – https://www.thehindu.com/opinion/letters/misleading/article4280424.ece

  இதிலும், ஹிந்து பத்திரிக்கை ஆசிரியர்கள் மன்னிப்புக் கேட்குமாறு கடிதத்தில் உள்ளதை விட்டுவிட்டனர்.

  இது தான் நம்ம ஊடகங்களின் நேர்மை போலும்!

  கந்தர்வன்

 8. இந்த ஹிந்து பத்திரிகையின் ராமுக்கு, எங்கேயோ பிறந்து நமது நாட்டைப் பற்றிக் கிலோ என்ன என்று கூடத் தெரியாத, அல்லது நமது நாட்டைப் பற்றிக் கேவலமாக நினைத்த ,எழுதிய, காரல் மார்க்சையும் , எங்கெல்சையும் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட வேண்டுமாம்.

  ‘அதிகாரம் துப்பாக்கி முனையில் பிறக்கிறது’ என்று சொல்லி மிக ‘ சாத்வீகமாக ‘ ஒரு மில்லியன் மக்களைக் கொன்று குவித்த , ‘ஹிந்தி சீனி பாய் பாய்’ என்று ஒரு பக்கம் நம்மோடு குலவி , அதிரடியாக நம் நாட்டின் மீது படையெடுத்து நம் தாய் மண்ணின் முப்பத்து எட்டாயிரம் சதுர மைல்களை ஆக்கிரமித்த அக்கிரமக்காரன் (இன்று வரை அது சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது) மாவோ ஜெடாங்குக்கு கோயில் கட்டிக் கும்பிட வேண்டுமாம்.

  ஆனால் பேச்சுக்குப் பேச்சு, மூச்சுக்கு மூச்சு பாரதம் , பாரதம் என்று உருகிய ,நமக்காகக் கனவிலும் கண்ணீர் உகுத்த உத்தமத் துறவி சுவாமி விவேகனந்தரை மதிக்கக் கூடாதாம்!

  எவ்வளவு அக்கிரமம்? இந்த மண் போடும் சோற்றை உண்டு இந்த மண்ணுக்கே துரோகம் செய்யும் ராம் போன்றவர்கள் நமது நாட்டின் அவமானச் சின்னங்கள்.

  இரா.ஸ்ரீதரன்

 9. ‘சீ ,சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு ‘ என்று பாரதியார் பாடினாரே அந்த வாசகம் ‘ஹிந்து’ ராமுக்கும், அதன் ஆசிரியருக்கும் பொருந்தும்!

 10. //இது தான் நம்ம ஊடகங்களின் நேர்மை போலும்!//

  Generally, newspapers of stature like The Hindu don’t publish letters in full for reasons of space in letters to editor column, esp. if they r long, w/o editing.

  Editing leaves only relevant, that s to say, what appears to b relevant to the paper, for readers. Seeking an apology from a paper is a threat. Apologize or else? s a threat, isn’t? So, they don’t allow that.

  Also note the fact that the essay was published in open ed, which allows free expressions to individuals unconnected with the paper, in which the paper has no role to play.It is well known to readers that the opinions expressed in such essays r not the paper’s; but the authors’.

  If the essay has already contained a photo of a person with a comment by the author himself, the paper has nothing to do with it.

  This s because in a liberal country, all people don’t have a single opinion; and a liberal paper appreciates that; so, it allows. Thus, the photo with that comment s in very very bad taste, for u; and, at the same time, for others, it may be different.

  If u protest, and if the paper accepts ur protest and obliges u, tomorrow another protest for another photo and so on, it is bound to oblige – where will it all end for the paper?

  The best option for u would have been to have written a rejoinder, or a equally forceful essay highlighting the fact that Indian nationalism has no masculine element in it and everything was peace, peace and peace all the way – in other words, feminine element.

  Why haven’t u done that? The duty of the Ramakrishan mutt is to object to the photo and they have done that with alacrity. Bravo. Isn’t ur duty to have written an article to say that ?

  The article stands; the comments of the readers referring to the photo stand. The photo referred to by them s easily available online in other places. Readers can go forth and back while reading the article with the photo removed. Will always stand. At best, u can hack it.

  Whether the photo is what the author alleges is left to the readers finally.

 11. பாரத சுதந்திரப் போரில் தீவிர பங்காற்றிய ‘தி இந்து’,ஜி.சுப்பிரமணிய ஐயரால் எந்த நோக்கத்துடன் துவக்கப்பட்டதோ, அதற்கு நேர் மாறாக, ஓர் அவதார புருஷனாகிய சுவாமி விவேகானந்தரின் ஆண்மைத் தோற்றமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஊற்றுக்கண் என்பது போல கட்டுரை எழுதிய பெரிய மனிதருக்கும், அதனை வெளியிட்ட ‘தி இந்து’ பத்திரிகைக்கும், தேசபக்தியோ, தெய்வ பக்தியோ சிறிதும் இல்லை என்பது தெரிகிறது. இந்து தெய்வங்களை, அவதார புருஷர்களை அவமதிக்கும் இதுபோன்ற செயலை நாம் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த ‘ஆண்மையாளர்கள்’ வேறு எந்த மதத் தலைவரைப் பற்றியும் இப்படி எழுதும் ஆண்மை உடையவர்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து இந்து உணர்வு உடைய எவரும் இந்தப் பத்திரிகையை வாங்கக்கூடாது.

 12. ஹிந்து ராம் இலங்கையில் இந்துக்களை கொன்ற ராஜ பக்சவினால் பட்டமளித்து கௌரவிக்கப் பட்டவர். அவரிடமிருந்து இலங்கை -இந்திய இந்துக்கள் எதனையுமே எதிர்பார்ப்பது மடமைத்தனம்.

  ரிஷி

 13. ” sidharan on January 8, 2013 at 9:33 pm

  ‘அதிகாரம் துப்பாக்கி முனையில் பிறக்கிறது’ என்று சொல்லி மிக ‘ சாத்வீகமாக ‘ ஒரு மில்லியன் மக்களைக் கொன்று குவித்த , ” –

  மா சே துங் அவர்கள் 1976-லேயே காலமாகிவிட்டார். உயிருடன் இருந்திருந்தால் நண்பர் திரு சீதரன் அவர்கள் எழுதியிருப்பதை படித்து தற்கொலை செய்துகொண்டிருப்பார். பல கோடி மக்களை கொன்று குவித்த தன்னை, மில்லியன் என்று குறைவாகக் கூறி , அவர் சாதனையை குறைத்து மதிப்பிட்டால் பாவம் அவர் என்னதான் செய்வார். 1949- புரட்சி மற்றும் 1969 -களில் நடந்த கலாசாரப்புரட்சி ஆகியவற்றில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பலகோடி. ஒரு வேலை, திரு சீதரன் அவர்கள் மாவோ வின் அபிமானியோ ?

 14. After reading the article projecting Swami Vivekananda for a wrong reason I unsubscribed THE HINDU newspaper.

 15. // Also note the fact that the essay was published in open ed, which allows free expressions to individuals unconnected with the paper, in which the paper has no role to play.It is well known to readers that the opinions expressed in such essays r not the paper’s; but the authors’. //

  தீவிரவாதிக்கு வீடு, பொருளுதவி எல்லாம் கொடுப்பார் ஒருவர் ஆனால் அந்தத் தீவிரவாதி செய்வதற்குத் அவர் பொறுப்பல்ல என்பது போன்ற வாதம் இது. நேர்மையற்ற விமர்சனங்களை களைந்து எடிட் செய்து பிரசுரிப்பதே ஒரு நேர்மையுள்ள பத்திரிகையின் கடமை.

 16. Let those who buy ‘The Hindu’ stop buying it.

  Let us carry on a campaign to this effect
  The money of the Hindus should not go to the Hindu baiters and maoist traitors

 17. தி ஹிந்து 10 ஜனவரி 2013 இதழில் வருத்தம் தெரிவித்துள்ளது என்று நண்பர் திரு சுப்பு தொலை பேசியில் அழைத்துக் கூறினார். நான் ஹிந்துவைப் படிப்பதை நிறுத்தி 5 வருடங்கள் ஆகிறது

 18. ”நாத்திகவாதியான கருணாநிதியின் அடிவருடியான ராம் ”
  திரு. இராம் அவர்களின் விளக்கத்தை கேட்டுப் பெறுவீர்களா?

 19. Ram is “சம்பந்தி” for Karunnidhi — Karunidhi and DMK Tv only for non-Hinuds. They know they can easily buy hindus using alcohol, money. They do not care about Hindus and they can be easily split based on castes. When there is special programs for New year or Christmas, these channles say special programs for Christmas and New year. But when there are special programs for Vinayagar Chadhurthi or Saraswathi Pooja (any way drinking serials and movies, and dance with half dressed women) they these special programs due to holiday.

  I am suspecting that Karunanidhi and co is seriously working against Hindus and have this as its agenda

 20. Yesterday, the Hindu newspaper published an article by Dr Prema Nandakumar, d/o late Shri Krishanaswamy Iyenagar, Prof of English, Andhra University, Waltair. She is also a retired Prof of English from an University in AP.

  Her article is an elaborate rejoinder to Prof Sanjay Srivastava. Near her article the paper released its regret if the photo of Swami Vivekananda with the adverse comment regarding masculinity had hurt the feelings of certain section of its readers.

  But surprisingly the reply to Dr Prema Nandakumar from Dr Sanjay Srivasata appears in the paper today wherein he says the focus of his essay is not the photo of Swami Vivekananda but the argument that it is Indian culture and its values that are partly responsible for the rape and murder of the woman at New Delhi. Such crimes have the roots in the cultural values which treat woman as Divine in theory but contemptuous creatures in the practice of men. He refuses to take back his argument which links the Hindu festivals like Karva Chauth to the cause of degradation of women in Indian society.

  Yesterday, in her article Dr Prema Nandakumar, after her lengthy defense of Swami Vivekananda, defended the said festival saying it shows Indian woman selflessness which makes her pray for the welfare of their husbands. Dr Srivasatava has questioned: why only women need to be selfless and pray for men? Why not men? Why not men consider the welfare of their women and pray ?

  Instead of being content with their protest against the insinuation in the article of Srivastava with the picture of Swami, the protesters should also have protested against the whole argument of the article itself, which holds Indian Hindu cultural values partly responsible as having the roots of the bus tragedy. Dr Prema Nandakumar did not have a convincing argument to that.

  The ball is in your court now.

  Why not a Tamilhindu reader or contributor, say for e.g. the intelligent Sarang, write a strong article against the argument of Dr Srivasata? Hopefully, the paper will publish it.

 21. “But surprisingly the reply to Dr Prema Nandakumar from Dr Sanjay Srivasata appears in the paper today wherein he says the focus of his essay is not the photo of Swami Vivekananda.”

  This is a wrong argument. சுவாமி விவேகானந்தரின் படத்தைப் போட்டு உடல் வலிமையினால் ஆணாதிக்கத்தை நிறுவினார். அதைத் தொடர்ந்தே டெல்லி ரேப் சம்பவம் வரை வந்துள்ளது என்று விஷமத்தனமாக எழுதியது தவறு தான் என்று கட்டுரையாளர் மன்னிப்பு கேட்டாரா? இல்லையே!! தான் செய்தது தவறு தான் என்று உணரும் மன நிலையில் கூட இல்லாத ஒரு மெல்லிய பிடிவாத மனம் தான் அவர் பதிலில் இன்று வெளிப்பட்டுள்ளது!

  “the argument that it is Indian culture and its values that are partly responsible for the rape and murder of the woman at New Delhi”
  உலகினில் எந்த ஒரு கலாசாரத்திலும் ஆண் என்பவன் வலிமையானவனே! பெண் என்பவள் உடல் வலிமை குறைந்தும் மென்மை சற்று கூடியும் இருப்பவளே! இதில் இந்தியா மட்டுமின்றி உலகினில் அனைத்து நாடுகளிலும் தவறுகள் நிகழத் தான் செய்து வருகின்றன. கற்பழிப்பு என்பது இந்தியாவினில் மட்டுமல்ல, உலகெங்கும் பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. கற்பழித்தவன் ஒரு சைக்கோவாக இருந்தால் அதற்கு இந்தியக் கலாசாரம் என்ன சுவாமி செய்யும்? அப்படி என்றால் நியுயார்க்கில் ஒரு கற்பழிப்பு நடந்தால் அதற்கு இதே கட்டுரையாளர் அங்கு எந்த கலாசாரத்தை சாடுவார்? கற்பழிப்பு என்பது ஒரு மனித மிருகத்தின் உச்ச பட்ச அட்டகாசம். மனதை அடக்கி நேர்வழிப் படுத்துதலைப் பற்றி எங்கள் முன்னோர்கள் பல அறநெறி நூல்களை எழுதி வைத்துள்ளார்கள். அதில்லேலாம் தெரியாத எங்கள் இந்தியக் கலாசாரம், எவனோ ஒரு சைக்கோ செய்த அயோக்கியத்தனத்தில் வெளிப்படுகிறதா? நீங்கள் சொந்த மண்ணையும் சொந்த மக்களையும் உங்கள் இஷ்டத்திற்கு வளைக்க என்னவெல்லாம் எழுத முடியுமோ அதையெல்லாம் எழுதுவீர்கள். நாங்கள் கேட்க கூடாதா? மக்களை இப்படி தவறாக வழி நடத்தி என்ன அய்யா சாதிக்கப் போகிறீர்கள்? உங்கள் அறிவும் ஒரு நாள் தடுமாறும். தெளிவில்லாமல் தள்ளாடும் போது நீங்கள் விவேகானந்தரின் உரையைப் படித்தால் அவர் கூற்றின் உண்மை தானாக உங்களுக்குப் புரியும்.

  “Dr Srivasatava has questioned: why only women need to be selfless and pray for men? Why not men? Why not men consider the welfare of their women and pray?”
  குடும்பத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கக் கேட்கப் படும் விதண்டா வாதக் கேள்வி இது. குடும்பங்களின் வரலாற்றில் ஆண் வலிமை மிகுந்திருந்ததால் வேட்டைக்குச் சென்றான். பெண் மூலிகைகள் பறித்தல், கால்நடைகளைப் பராமரித்தல், குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல் என்று வீடு வேலைகளை செவ்வனே செய்து வந்தாள். அப்படி ஆயிரக்கணக்கான வருடங்களை ஜன சமூகம் கழித்த பிறகு கால மாற்றத்தினால் இன்று பெண்களும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை வந்துள்ளது. இன்றைய பெண்ணுக்கு அலுவலகம் வீடு குழந்தைகள் இவையெல்லாமே பிரதானமாக விளங்குகின்றன. ஆனால் ஆதி முதல் இத்தனை வருடங்களும் பெண்கள் இவ்வளவு பரபரப்புடன் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அக்காலப் பெண்களுக்கு என்று எடுத்துக் கொண்டால் குழந்தை வளர்ப்பு, வீடு, கணவனை கவனித்துக் கொள்ளுதல் போன்ற வேலைகள் மட்டுமே தானே ஒழிய அலுவலகம், அதில் உள்ள பிரச்சனைகள், உள்ளடி அலுவலக அரசியல் போன்ற பிரச்சனைகளெல்லாம் இருந்திராது. அவர்கள் உலகம் மிகச் சிறியதாகவே இருந்திருக்கும். அவர்களுகெல்லாம் சாவித்திரி கதை தான் மிகவும் பிடித்தமானது.

  சமீபத்தில் ஒரு ஐ.டி நிரவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காரணம் மேற்கத்திய பாணியில் திருமணத்திற்குப் பின் வேறு ஆடவனுடன் வெளிநாட்டில் தொடர்பு கொண்டார் என்று தெரிய வந்தது. அந்த காலத்தில் சாவித்திரி கதையை சொல்லி வளர்த்தது ஒன்றும் ஆணாதிக்கம் இல்லையே! ஒழுக்கமாக ஒரு சமுதாயம் நடக்க என்ன உண்டோ அதை வைத்திருந்தனர். அத்தகைய role model கள் அன்றை விட இன்றைக்கு தான் அதிகம் தேவைப் படுகிறார்கள். “Why only women need to be selfless and pray for men?, because women are the very nucleus of a happy family. If she chooses to be selfish, the entire family is lost. But Men on the other hand too had greater responsibilities those days. If a man is not properly taking care of his family, he was always pushed by the elders for his active contribution. But nowadays we have been living as nuclear families, hence there are no elders at all to have an eye on us.

  கடைசியாக- எங்கள் பேச்சு எங்கு மதிக்கப் படுமோ அங்கு தான் நாங்கள் பேச முடியும். தி ஹிந்துவில் கண்டிப்பாக இந்தக் கட்டுரை நிராகரிக்கப்படும். ஆனால் தமிழ் ஹிந்து எங்கள் வீடு. இங்கே எதிர்ப்பு தெரிவித்தாலும் அது யாரைச் சென்று சேர வேண்டுமோ அங்கே சென்று சேரும்.

  நம் நாட்டை மதிப்போம். நம் மக்களை மதிப்போம். நம் வேர்களை பலப் படுத்துவோம். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வோம். நம் தளத்தில் நாம் ஊன்றி நிற்போம். மற்றவர்கள் தானாக நம்மைப் புரிந்து கொள்வார்கள். Including Sanjay Srivastava!!!

 22. ராம் போன்றவர்கள் நம் நாட்டில் உருவாகக் காரணம் வெளிநாட்டு சக்திகளே.
  இந்த சக்திகள் இவர்களுக்கு ஏராளமான பணத்தை அள்ளித் தருகின்றன.
  இந்தியாவின் தனித்துவமே அதன் மிகச் உயர்ந்த , தன்னிகரில்லாத சநாதன தர்மமும், அதைச் சார்ந்த கலாச்சாரமுமே .
  அவை பாரத மக்களை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தி.
  அப்படி நடந்து விட்டால் பாரதம் பெரு வலிமையும் ,பெருமையும் பெற்ற நாடாக உருமாறி விடும்.
  அது நடக்கக் கூடாது என்று இந்த சக்திகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

  அதனாலேயே நாம் நமது சரித்திரம், கலாச்சாரம் இவற்றை இழிவாகவும் , நமது முன்னோர்கள், சான்றோர்கள் இவர்களைக் கேவலமானவர்களாகவும் நினைக்கும்படிச் செய்கின்றனர்.
  அதற்கு நம் நாட்டில் உள்ள சிலரை பணம் மற்றும் வேறு ‘பல ‘ விஷயங்களால் விலைக்கு வாங்கித் தங்களது வேலையைச் செய்கின்றனர்.
  இவர்களும் அதற்காகத் தமது அன்னையைக் கூட விற்கத் துணிந்து விடுகின்றனர்.

  வெள்ளைக் காரனின் ஆங்கிலக் கல்வியினால் நமது சரித்திரம் பற்றியும் கலாசாரம் பற்றியும் தவறான எண்ணமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்டு தாங்கள் என்ன செய்கிறோம் என்றே புரியாமல் அவர்களிடம் சான்றிதழ் வாங்கிவிட ஏங்கும் ‘ கோட்டு சூட்டு பூட்டு ‘கும்பலில் ஒருவரே ராம்.
  ஒரு பக்கம் அளவுக்கு அதிகமான செல்வத்தில் புரண்டு கொண்டு ஆனால் போலியாக கம்யூனிசம் பேசிக்கொண்டு திரியும் கூட்டத்தில் ஒருவர்தான் ராம்.

  வெள்ளைக்காரனையும் , முஸ்லீம்களையும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  அதே நேரம் அவர்கள் நாடுகளில் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது . என்ன செய்வது?
  இங்குதான் சர்வ சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும்.
  நம்முடனேயே வாழ்ந்து கொண்டு , நம் மண் போடும் சோற்றைத் திற்று கொண்டு , நம்மைப் பார்த்தே’ அட மடையர்களா, அட முட்டாள்களா, அடக் கேவலமானவகளே , கேடு கெட்டவர்களே ,உங்கள் முன்னோர்கள் மட்டமானவர்கள், உங்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி சரித்திரமும் கிடையாது என்று சொல்லிக் கொண்டே இருக்காலாம்.
  சொரணை கெட்டு நாமும் கேட்டுக் கொண்டே இருப்போம் .
  இவர்களுக்கும் பொட்டி பொட்டி யாக வந்து கொண்டிருக்கும். பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
  ராம் போன்றவர்களுக்கு இதை விட ஒரு சொர்க்க பூமி ஒன்று உண்டா ?

  தாங்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் முஸ்லீம்களின் பாகிஸ்தானிலோ ,சவுதியிலோ தாங்கள் நினைத்தபடி கிறுக்க முடியாது .
  மீறினால் தலை கழுத்தின் மீது இருக்காது.

  அங்கெல்லாம் போனால் இங்கு போல் ஏமாந்த பெண்களும், தயிர் சாதமும் , சங்கீதக் கச்சேரியும் கிடைக்காது.
  ஒரு பக்கம் பெண்ணுரிமை , பெண்களுக்கு மதிப்பு என்றெல்லாம் அளந்து கொண்டு மறு பக்கம் பெண்கள் குடிப்பதை,’pub ‘ க்கு போவதை யாரவது குறை சொன்னால் உடனே அவர்கள் மீது பாய்வது , பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் சினிமா வியாபாரத்தை ஆதரிப்பது ,அந்த வியாபாரிகளுடன் கை கோர்த்தும் அவர்களை எதோ பெரிய மகாத்மாக்கள் போலும் தன் பத்திரிகையில் சித்தரிப்பது.
  ஏனென்றால் அப்போதுதானே பணம் கிடைக்கும், தாங்களும் ‘ஜாலியாக ‘ இருக்கலாம் !

  அதனால் இவர்கள் நம் நாட்டை , மக்களை நன்றாக ஏமாற்றிக் கொண்டு சொர்க்க போகத்தில் வாழும் ஏமாற்று பேர்வழிகளே.

  இரா. ஸ்ரீதரன்

 23. Prema Nandakumar இன் கட்டுரை பற்றி இன்றும் ஒரு கடிதத்தை தி ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்றால் ஆண் பெண் இருவருமே இருக்க வேண்டுமாம். பெண்களுக்கு மட்டுமான எந்த ஒரு சடங்கும் சம்ப்ரதாயமும் ஆணாதிக்கம் தானாம்.

  அட பதர்களே! வாழ்க்கைச் சூழல் இந்த 30, 40 வருடங்களாக தான் அதிக அளவில் மாறி வருகின்றது. இரு பாலரும் வேலைக்குச் செல்வது இந்த அல்லது கடந்த நூற்றாண்டில் தான் அதிகரித்துள்ளது. அதற்கு முன்பெல்லாம் இருவரும் வேலைக்குச் செல்வது என்ற அவசியமே இல்லை. கூட்டுக் குடும்பமாக வசித்தார்கள். பெண்கள் எல்லோரும் விவசாயத்தில் தான் அதிகம் பங்கு கொண்டனர். அப்படியான பெண்களும் கட்டாயம் உண்ணா நோன்பு இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இருக்க வில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குடும்ப நலனை முன்னிட்டு விரதம், பூஜைகள் செய்யும் பழக்கங்கள் இருந்தன. அப்படிப் பட்ட விஷயங்களையே தான் இன்று கட்டுரையாளர் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார். அந்த கால கட்டங்களில் பெண்களுக்கு என்று பெரிய அளவில் செய்வதற்கு விஷயங்கள் இல்லாத போது இது போன்ற விரதங்களை செய்வது வழக்கமாகி பின்னர் அதுவே பழக்கமாகக் கடைப் பிடிக்கப்பட்டுள்ளது. இது ஆணாதிக்கம் இல்லையப்பா. இது ஒரு பழக்கம். இன்றும் கூட என் அம்மா வீட்டில் இருந்தால் அன்று விடுமுறை தினமாக இருந்தால் சில பூஜைகள் செய்வது வழக்கம். என் தந்தையாரோ இல்லை மற்ற உறவினர்களோ கட்டாயம் பூஜைகள் செய்தே ஆக வேண்டும் என்று விதிக்கவில்லை. மாறாக ஹிந்துக் குடும்பங்களில் பெண்கள் இவ்வாறு வீட்டிலேயே தினப்படி பூஜைகள் செய்வது ஒரு வகையான fashion ஆகிவிட்டது. செய்வதால் தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறதென்று என் தாயாருக்கு ஒரு நம்பிக்கை. செய்து விட்டுப் போகிறார்கள் என்று என் தந்தையாரும் அதில் எல்லாம் மறுப்பு சொல்வது இல்லை. ஆனால் கண்டிப்பாக என் தந்தையார் இதையெல்லாம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் படுத்தவில்லை. இதில் கண்டிப்பாக ஆணாதிக்கம் எல்லாம் இல்லவே இல்லை. தாங்கள் ஏற்ற பொறுப்புக்கு ஏற்ப அவர்களே கடமைகளை அக்காலத்தில் வகுத்துக் கொண்டார்கள்.

  இந்த கலாசாரத்தை இந்தக் கால கண்ணாடி அணிந்து பார்த்தல் எல்லாம் கோணலாக தான் தெரியும். இப்போதெல்லாம் காலம் மாறி விட்டது தான். நானே பூஜையெல்லாம் வேண்டாம் என்று தான் சொல்கிறேன். ஆனால் என் மனைவிக்கு அதிலெல்லாம் விட்டுக் கொடுக்காமல் செய்ய வேண்டும் என்ற ஆசை. என்னையும் பூஜை செய்ய சொல்லி படுத்துகிறாள். நம்ம ஆணாதிக்கம் இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. இதையெல்லாம் கடந்து போகும் இந்து மதம். இன்னும் 1000 வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் இந்து மத சம்ப்ரதாயங்கள் என்று யாராவது எங்கேயாவது ஒரு பூஜை செய்து கொண்டு தான் இருப்பார்கள். அப்போதும் இந்துக் கலாசாரத்தைக் குறை சொல்ல ஒரு வெட்டி ஆபீசர்கள் கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். எங்க கலாசாரம் எங்களோட இருக்கட்டும். நீங்க போங்கப்பா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பா!

 24. But today, Gopalkrishana Gandhi, the ex Governor of West Bengal, wrote a long essay on Swami Vivekananda in The Hindu. On the next page, the paper has released material on Swami from their archives: an interview with him on board the train from CGL to MAS and two articles, one by a follower of Annie Besant criticizing him for his views on her, and another, a rejoinder from a follower of the Swami for that.

  Releasing such debate happened during Swami’s visit to TN, the paper reminds its readers (sarcastically those who say that the paper has turned anti-Swami only now) that it was its policy to allow debate even in the 1880s. (when Swami was alive).

 25. Read the whole interview that Swami Vivekananda gave to the reporter of The Hindu on Feb 6, 1897 during a train journey from CGL to MAS published today in the paper.

  Among many things he spoke on, caste system was one. On which he says:

  “Castes should not go…It is sheer nonsense to desire the abolition of castes.”

  I have never expected this. Because from what I have read or heard about, I always thought that the Swami opposed caste system and earned the wrath of the orthodox Hindus. So, I am surprised. Ok that is my problem.

  Going to others,I think the above pro caste stand of Swami will be gladen the hearts of many commenters in this forum because a majority of them desire castes to say in Hindu life. Even in the recent essay on dharmapuri, there are views posted which may show the posters holding the belief that certain section should remain that; so, beware of them. They may not say it openly but the impression a objective reader is slapped with is that. So, I don’t want them to respond.

  Rather, I would like Tamil.hindu.com say whether they are in agreement with the Swami. I ask because I have seen this forum advocating No Castes. They have even released a book on this, haven’t they?

  May I know their mind?

 26. The Hindu editor Mr.Siddharth varadharajan is enjoying US citizenship and his passport speaks the truth ,he has mentioned his indian (delhi) address as his foreign address.We don’t worry about it nor we have personal vengence against him.The question is how come a foreigner is editing a newspaper in India which is against indian press act ?What we can expect from his paper ,his brainchild-THE HINDU.
  Its simple boycott THE HINDU.

 27. one question to the editor hindu — he says he is not endorsing Sanjay sreevatsa’s view tha’s nice .Will he ever publish karan-thapar,lincoln,marx,sharukh khan photos and print the same article with a similar posture .

 28. The only plausible explanation to Swami’s pro-caste statement could be as what Gandharvan wrote to Chilsam in another place which I read 2 days before.

  “We are Hindus. We allow divergent views to co exist in peace within our religion. An outsider like you shouldn’t interfere’

  This may help shut up the mouth of the critics who are really not unbiased critics but Hindu haters. But what about your own side i.e. among you ? Can you shut up the mouths of those Hindus and Gurus who said NO CASTES.

  Divergent views are acceptable, I feel, only in places where co – existence, w/o harming one another, either directly or indirectly, is possible. In places where it harms or it possesses the potential to harm ? Can we allow divergent views there? Can we say that we should isolate certain people and won’t allow them to mix with us as bros and sisters?

  Brotherhood and sisterhood within a religion or among its followers is NON – NEGOTIABLE. Not for me. But may be for certain people w/in the religion. I am pro – castes.

 29. //The Hindu editor Mr.Siddharth varadharajan is enjoying US …//

  Dr Vishwanathan!

  The Hindu reaches millions of English reading public. They don’t like to examine the bio of the editor. They just read what the paper offers daily, especially its ed page and other controversial issues.

  Your call is good to the extent it is addressed to persons like you. Will your call reach the millions? My point is that you have done nothing to neutralise the negative effect the essay of Srivasatava wd have done; and today materials appearing in the papar that damages the reputation of the Swami.

  The only consolation cd be that the readers r not fools to be noseled by an argument simply coz it comes from a Prof

 30. முதலில் தெரிய வேண்டியது இப்பண்டிகைபற்றிப் பேசும்போது ஆணாதிக்கம் என்ற சொல்லுக்கு இடமில்லை. எந்த ஆணும் கட்வா சவுத் அனுசரித்தாக வேண்டுமெனத் தன்மனைவியைச் சொல்வதில்லை. சரிதான். எனவே ஆணாதிக்கமில்லை. அதை ஆணாதிக்கமென்று சிரிவாஸ்தவாவும் சொல்லவில்லை. அனுசரிக்கப்படுதல் என்பது பெண்ணாலே என்றாலும் அது ஏன் அவர்கள் மட்டுமே செய்கிறார்கள்? ஆணகளாகவே முன்வந்து அவர்களும் செய்துவிட்டால், பரம்பரை பரம்பரையாக ஆண்பிள்ளைகளும் தங்கள் பெண்டிரை மதித்துவளர்வார்களே என்பதுதான் வாதம். இதை பெண்ணின் ஆசை; சும்மா விட்டுத்தள்ளுங்கப்பா என்றும் எங்கள் பெண்டிர்களை நாங்கள் என்னவேண்டுமானும் செய்வோமென்றும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் என்றும் சொன்னால் இசுலாமியருக்கும் இந்துக்களுக்கும் வேறுபாடு இருக்குமா?

  சமூகத்தில் ஒரு வழக்கம் வானத்திலிருந்து குதித்ததன்று’ ஒரு தனிநபராலும் செய்யப்படவில்லை. வழக்கம், ஆசை என்பனவெல்லாம் மக்களின் கலாச்சா ரவாழ்க்கையில் மெல் மெல்ல புகுந்தவையே. எப்படியோ புகுந்தன எனவைத்துக்கொண்டாலும் பெண்களுக்கு மட்டும் என்று ஏன் புகுந்தன ? அதைவிட முக்கியமான வாதம் பெண்களைத் தாங்கள் ஆண்களுக்குச் சமமல்ல என்று உணர்வை உட்கிரகித்து வாழவைக்க்கின்றன இப்படிப்பட்ட பண்டிகைகள். இதுகூட பரவாயில்லை; ஆண்கள் தாங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற நினைப்பை உருவாக்கி, இளம்தலைமுறை ஆணையும் அப்படிச்சிந்திக்கவைத்து, இப்படிப்பட்ட பெண் ஒருத்தி எப்படி என்னை எதிர்க்கலாம்; பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரா என்ற கோபத்தை உருவாக்கி, இறுதியில் பாலியல் கொடுமையில் கொண்டுபோய் விடுகிறது. இதுதான் வாதம். இதை எதிர்நோக்குங்கள்.

  ஆக, பண்டிகையில் ஆணாதிக்கம் இல்லை. ஆனால் இறுதியில் ஆணாதிக்கத்துக்கு பெண்களே வழிகாட்டுவதைப்போல வந்துவிடுகிறது.

  1000 ஆண்டுகளுக்குப்பின்னர் அப்போது இருப்பவர்கள் கவனித்துக்கொள்வார்கள். நம்காலத்தை நாம் பார்ப்போம். தென்னாட்டில் இப்பண்டிகைக் கொண்டாடப்படுவதில்லை. வடநாட்டில்தான். தில்லியில் நடந்த சம்பவத்தைப்பற்றித்தானே பேசுகிறோம். இல்லையா?

  இந்துமதம் நன்கு செழிக்கவேண்டுமானால் வாதங்களைக்கண்டு ஓடாமல், அலசிப்பார்த்து நன்றா என்றால் ஏற்கவேண்டும். அப்படித்தானே இந்துமதம் வளர்ந்தது என்கிறார்கள்?

  இந்து நிருபருக்கு கொடுத்த் பேட்டியிலும் சுவாமி விவேகானந்தா அதைத்தானே சொல்கிறார்? மதப்பழக்கங்கள்; பூசை புனஸ்காரங்கள். சுமிருதிகள் நிரந்தமல்ல; அவை காலத்தின் ஒப்புக்குத்தக்க மாறும். மாறத்தான் வேண்டுமென்கிறார். பிரசன்ன சுந்தர் சுவாமியின் கருத்துக்கு எதிராக பேசுகிறார்.

 31. அப்போது நாங்கள் ஒப்புக் கொள்வோம் நீங்கள் உண்மையிலேயே பெண்களைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள் என்று.
  இல்லை என்றால் அவர்களிடம் எப்படி இரண்டு கால்களுக்கு நடுவில் வாலைச் சுருட்டிக் கொ ண்டு போகிறீர்களோ அப்படியே ஹிந்துக்களிடமும் இருங்கள் .

  மற்றவர்களை ஏதாவது சொல்லிவிட்டால் கவுண்டமணி சொல்வது போல் ‘எங்க கொஞ்சம் அப்டி திரும்பு ‘ என்று சொல்லி செமத்தியாகக் கொடுப்பார்கள்.

  ஹிந்துக்களும் அப்படிக் கொடுத்தால்தான் இவர்களெல்லாம் திருந்துவார்கள்.
  இந்த குப்பை பேப்பர்களை இன்னும் ஹிந்துக்கள் மானம் கெட்டு காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?

  ஒவ்வொரு ஹிந்துவிடமும் சொல்லுங்கள் ‘தி ஹிந்து’ வாங்காதீர்கள் என்று
  இதுதான் முதலில் செய்ய வேண்டியது.

 32. ஹிந்து உணர்வு உள்ளவர்களும் தேச பக்தர்களும் hindu பத்திரிக்கையை வாங்காமல் விட்டாலே போதும் அவர்களின் கோட்டம் ஒடுங்கி விடும். நம்மவர்கள் நம்மைக் கேவலப் படுத்தும் பத்திரிக்கைகளை , நமது கடவுள் , கலாச்சாரம் ஆகியவற்றை நையாண்டி செய்யும் திரைப் படத்தை,இந்து விரோதக் கருத்துக்களை பேசுபவர்களை எல்லாம் படிக்காமல்,பார்க்காமல்,கேட்காமல் இருந்தாலே இவர்களின் கோட்டம் அடங்கி விடும் .
  ஈஸ்வரன்,பழனி.

 33. திரு பிரசன்னா சுந்தர்
  தாங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன்.
  போலி பெண்ணுரிமை பேசி ,பெண்களைகுழப்பி, குடும்பத்தை அழிக்கும் கோஷ்டியினர் இதே போல், ஏன் இதை விட கொடுமைகளுக்கு கூட்டமாக சில மாநிலங்களில் பெண்கள் ஆளாகும்போது எங்கே இருந்தனர்?
  தமிழ் செய்திதாளில் ஒரு நாளை போல கள்ள காதல் விவகாரங்கள் வெளியாகின்றன. கணவனை, பெற்ற குழந்தையை காமத்துக்காக அழிக்கும் பெண்களை பற்றி செய்திகள் வெளியாகும்போது எங்கே போயிற்று சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா போன்ற இந்த அறிவு ஜீவிகளின் தார்மீக கோபம்?
  ஆமாம், டெல்லியை கலக்கிய கூட்டம், இரண்டு இந்திய இளைஞர்கள் , நாட்டை காக்க போனவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட பொது எங்கே போயிற்று மெழுகவர்திக்கூட்டம் ?
  இந்த ஆங்கில பத்திரிக்கையை வாங்குவதை நிறுத்த முடியாமல் இன்னும் சிலர் தவிக்கிறார்கள் . என் பெரியப்பா ஒருவர் ந்யூஸ் டுடே பத்திக்கை வாங்க ஆரம்பித்து பின் பழைபடி ஹிண்டுவிற்கே மாறிவிட்டார். . எடைக்குப்போட்டால் நல்ல துட்டு தேறுவதாக ஒரு காரணம் வேறு.
  பொதுவில் இந்திய ஆண்களை ஒரு வித குற்ற உணர்வுக்கு அடிமையாக்கப் பார்க்கும் அறிவு ரீதியான விளையாட்டு சஞ்சய் போன்றோர் செய்வது. உண்மையில் ஒவ்வொரு மாநிலத்திலும் போலீஸ் மந்திரியாக உள்ள பெருந்தகைகள் குற்றத்தை தண்டிக்க கடுமையைக்கையாண்டல் ரவுடித்தனம் செய்வோரை அடக்கலாம். நீதிமன்றங்கள் நிஜமாகவே தங்கள் கடமையை செய்தால் குற்றங்கள் பெருமளவு குறையும். இந்த உண்மையை மக்கள் புரிந்து கொண்டு விடக்கூடாது என்று நல்லாத்தான் ரியாக்ஸ்சன் கொடுக்கிறாங்கப்பா.

  குடியரசு தினம் கொண்டாடக்கூடாது என்று சொல்லும் இவர்கள் வகை அறிவு ஜீவிகளின் உண்மை நோக்கம் இன்னும் யாருக்கேனும் புரியா விட்டால் , கடவுள் நம்மைக்காப்பாற்றுக !
  சாய்

 34. The mistake is with us(hidus),how can we expect a christian funded newspaper to write good things
  about swami.
  Mr.Editor will you figurise karunanidhi’s photo to explain about male chauvinism

 35. பாரத நாட்டில் இரு பெரும் பாவங்கள் உள்ளன.பெண்களை மிதித்து நசுக்குதல்.ஜாதி ஜாதி என்று ஏழைகளைக் கசக்கிப் பிழிதல்.
  நாம் பெண்களை இழிந்தவர்கள்,தாழ்ந்தவர்கள், வெறுக்கத்தக்கவர்கள், தூய்மையற்றவர்கள் என்றெல்லாம் வசை பாடுகிறோம்.விளைவு ? நாம் மிருகங்களாக, அடிமைகளாக, முயற்சியற்றவர்களாக , ஏழைகளாக இருக்கிறோம்.
  சக்தி இல்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது.
  நமது நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியாக இருப்பது ஏன் ?
  நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவதுதான் காரணம்.

  Two cardinal sins are committed in our country.
  One, crushing the women and two squeezing the poor in the name of ‘Jati’
  We pour scorn on women calling them as degraded ,inferior, impure and objects of scorn.
  The result?
  We exist like animals and slaves and are poor and lack initiative.
  There can be no progress in the world without ‘Shakti’.
  Why is that our country is at the bottom of the nations of the world?
  Because ‘shakti is shown disrespect here.

  Swami Vivekananda

  __._,_.___

 36. இங்கு ஹிந்து கலாச்சாரத்தைப் பற்றி ஒப்பாரி வைப்பவர்கள், குறை கூறுபவர்கள், அறிவுரை கூறுபவர்கள், இவர்களை எல்லாம் சவுதி அரேபியாவிற்கு அனுப்பி அவர்கள் கனாக் காணும் அந்த சொர்க்க புரியில் அவர்களை வாழச் சொல்லலாம்.
  கிழவர்கள் சிறு பெண்களை மணப்பது, பெண்களை கல்லால் அடித்துக் கொல்வது , பொது இடங்களில் பெண்கள் ( நம்ம ஹிந்து ராம்,சஞ்சய் ஸ்ரீவத்சவா , மற்றபடி இங்கு எழுதும் அன்பர்கள் வீட்டுப் பெண்கள் கூட) கால் வரை போர்த்திக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பது, இந்த மாதிரி ‘பெண்ணுரிமைகளை’ அவர்களுக்குக் கொடுத்து , பார்த்து,ரசித்து மகிழலாம்.

  பெண்கள் மட்டும் ஏன் விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று கேட்கும் ‘நல்ல உள்ளங்கள்’ வருடத்துக்கு முப்பது நாட்கள் விரதம் இருக்கலாம். அப்புறம் கஞ்சி குடிக்கலாம்.
  இவர்கள் அங்குப் பொது இடத்தில் ‘அந்த ஒரு மாதத்தில்’ ஒரு கப் டீயோ, தண்ணீரோ அருந்தினால் கூட ஜெயிலுக்குப் போனாலும் கசைஅடி வாங்கினாலும் மிக மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நாமும் மகிழலாமே .
  ரா.ஸ்ரீதரன்

 37. There are some letters here written by Tamil, Ram will be thankful to him for advocating hindu paper vigorously.

  Hindu is the paper gives preference to the letter starts with “I fully agree with your editorial”. I wrote several letters some years ago but none of them was published. For a change, I sent a letter supporting their editorialit was promptly published!

  There were several articles against Sri Veer savarkar in the past, one of the article said Savarkar was coward and could bear the torture hence he asked pardon and wrote letters to british. The same Ram escaped chennai and was hiding fearing the arrest, he knows well how Jaya’s police will treat him, finally he prayed fundamentalist Advani to give a protection and the gentleman Advani sent CISF to his press!

  I dont know how many marriages needed to understand the woman, let Ram say before writing about woman rights and freedom…

  everyone knows, it was the paper by – for – of comrades, most of the artilce written by ex communist office bearers.

  it is better to avoid reading this paper even if you get a free copy, i make it a point even if i stay in hotel, i insist the reception not to serve hindu. sure it is useful, if u dont get water in the toilet…

 38. outlook dated 21 jan jyothirmaya sharma article on swami vivekanandha is starting new debates. my humble point is to expose siddharth varadharajan and one reader has enlightened me by saying who cares about the bio of the editor. the double standards of the editor is known by not publishing the article by arvindan neelakandan and waiting for a soft reply like premaji. people may not be interested in the bio but the law is always against such people. these unlawful nuts will always find their amusement in hurting other people sentiments. i request all readers to go through outlook also. very soon new book will be published against this venom.

 39. இன்று நான் விவேகானந்தரை பற்றிய ஒரு செய்தியை படித்தேன். இதை முன்பே படித்திருந்தாலும் மறந்துவிட்டது. அந்த செய்தி விவேகானந்தரின் அறிவாற்றலை கண்டு மயங்கிய ஒரு மிகவும் அழகிய 20 வயது ஆன மாது அவரை சந்தித்து பேசவேண்டும் என்ற ஆசையில் பின் தொடர்ந்து பல நாடுகளுக்கு சென்றார். பின் கடின முயற்சியால் அவரை சந்தித்து நீங்களோ மிகவும் அறிவாளியாக உள்ளீர்கள் நானோ இன்று பலரை கவரும் அழகியாக வலம் வருகிறேன் 30 வயதே ஆகும் நீங்கள் என்னை மணந்துகொண்டால் நாம் மிகுந்த அழகும் அறிவும் உடைய ஒரு பிள்ளைளை பெற்றெடுக்கலாம் என்றாள். அதற்கு விவேகானந்தர் நீங்கள் என்னை மணப்பதற்கு பதில் என்னையே உங்கள் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அப்படிப்பட்ட பிரிம்ம சொரூபமான வரை வைத்து சில அற்பர்கள் பேசுவதை நாம் புறம் தள்ளவேண்டும்.

 40. \\\\\\\\these unlawful nuts will always find their amusement in hurting other people sentiments.\\\\\\

  A correction. Its not hurting other people sentiments. These nuts have the guts to hurt only Hindu sentiments, the lot who are clueless as to who shall be opposed and what issues are to be opposed. You would have any number of conflicting opinions.

 41. //அப்போது நாங்கள் ஒப்புக் கொள்வோம் நீங்கள் உண்மையிலேயே பெண்களைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள் என்று.
  இல்லை என்றால் அவர்களிடம் எப்படி இரண்டு கால்களுக்கு நடுவில் வாலைச் சுருட்டிக் கொ ண்டு போகிறீர்களோ அப்படியே ஹிந்துக்களிடமும் இருங்கள் .//

  நான் சில இசுலாமியரின் பதிவுகளிலும் காரசாரமாக அவர்களின் கொள்கைகளைக் கண்டித்து தற்போது பின்னூட்டங்கள் இட்டுவருகிறேன். அவர்களில் சிலர்; மேலே காணும் சொற்களையே பயனபடுத்தி என்னைப்பேசாதீர் என்று பதிலிடுவார்கள்.

  வாதம் செய்வோரைப் பதர்கள் எனவழைப்பதும் இந்துமதத்தின் துரோகிகள் எனவழைபப்தும் இசுலாமியர் முறையாகும்.

  பெண்களைப்பற்றி எவரும் கவலைப்படலாம். அதில் இந்துப்பெண்கள், இசுலாமியப்பெண்கள், கிருத்துவப்பெண்கள் என்ற வேறுபாடேயில்லை. ரிஹானா கொல்லப்பட்டதை எதிர்த்து இசுலாமியரிடம் இந்துக்கள்தான் வாதம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் எனப்தை அறிவீர்களாக.

  இந்துமதத்தில் இருந்துகொண்டு இஃது’எங்கள் மதம்’ எவரும் தலையிடக்கூடாது’என்று சொல்லமுடியாது. சொன்னால் அவர் இந்துவன்று.

  இவர் இந்து; இவர் இசுலாமியர் என்று இணையத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாதவரை எவரையும் எதிரி என நினைத்தலாகாது. நேரடியாககக்ண்டாலும், இந்துமதம் வாதங்களை ஏற்றுத் தன்னை திருத்திக்கொள்ள முயல்கிறது. மனு சுமிருத்தி இன்றைக்குப் பொருந்தாதென்றும் அல்லது சில குறும்பர்களின் இடைசெருகல்கள் என்றும் (எழுதியவர் ஜடாயு) தமிழ்.ஹிந்து காமிலேயே மீண்டும்மீண்டும் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறதே. அவரகளிடம் போய் இது எங்கள் மதம். நீங்கள் யார் தலையிட என இரா. ஸ்ரீதரன் கேட்பாரா?

  இந்துமதத்தில் வாதத்திற்கு எப்போதுமே இடமுண்டு என்பதே இம்மதத்தின் சிறப்பாகும். இச்சிறப்பை தயவு செய்து அழித்து இந்துமதத்தையும் இசுலாமையையும் ஒன்றாக்க முயலவேண்டாம்.

 42. Instead of summarily rejecting the argument against festivals like Karva Chauth, let the Hindus introspect whether such festivals are needed today; or whether such festivals, if not summarily to reject, can be customised to suit the needs of modern life?

  I go along with the argument that Karva Chauth indoctrinates boys to believe that they are to be worshipful to the females; the girls to believe that they are subordinate to the males, when they get married. In the Northern parts of India where this festival is celebrated, this mind set is deeply rooted; and that is why, when a woman protests a man in his act, whatever that may be, he takes it an offence to his manhood !

  In their long history, Hindus have proven to the world that they are always willing to re-evaluate their social philosophy. Therefore, the plea to re-evaluate the festivals is not an anti-Hindu act.

  Swami Vivekananda was a practical thinker. He would have thought along the above lines.

 43. //இங்கு ஹிந்து கலாச்சாரத்தைப் பற்றி ஒப்பாரி வைப்பவர்கள், குறை கூறுபவர்கள், அறிவுரை கூறுபவர்கள், இவர்களை எல்லாம் சவுதி அரேபியாவிற்கு அனுப்பி அவர்கள் கனாக் காணும் அந்த சொர்க்க புரியில் அவர்களை வாழச் சொல்லலாம்.//

  I have written in the blog of some Tamil muslim bloggers regarding Rihana case. Sridharan may read my comments there.

 44. இப்போது நாம் அலசுவது ஹிந்து ராம், சஞ்சய் ஸ்ரீவத்சவா மற்றும் பல அறிவு ஜீவிகள் என்று (தவறாக) நம்பப்படுபவர்களைப் பற்றித்தானே தவிர மற்றவர்களைப் பற்றி அல்ல.
  ஏனெனில் இவர்களிடம்தான் பண பலமும், அரசியல் செலவாகும் உள்ளது.
  நம்மிடம் இல்லை
  தங்களது எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களால் சமுதாயத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் ஊடகம் போன்றவைகள் அவர்களிடம் உள்ளது

  ஆகவே அவர்கள் தங்களின் ஒருதலைப் பட்சமான, திரிபுள்ள கருத்துக்களை மக்கள் மனத்தில் விதைக்க முற்படும்போது அதற்கு மறு மொழி கொடுப்பது அவசியமாகிறது.

  இவர்கள் ஹிந்து கலாச்சாரத்தைப் பற்றி மட்டும் இழிவாக எழுதிக் கொண்டும் ,பேசிக்கொண்டும் , மற்றவர்களைப் பற்றி வாய் திறவாமலும் அல்லது உயர்வாகப் பேசிக்கொண்டும் இருப்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
  இதனால் ஹிந்துக்களின் மனத்தில் பல ஆண்டுகளாக ஆங்கிலக் கல்வி, அரசியல் வாதிகள், ஊடகங்கள் , சினிமா இவர்களின் அல்லது இவைகளின் மூலமாக வளர்க்கப்பட்ட , தங்கள் தர்மம் அல்லது கலாசாரத்தைப் பற்றிய தாழ்வு மனப் பான்மை மேலும் அதிகமாகி அவர்கள் மதம் மாறும் அல்லது சமுதாயத்தின் மீது வெறுப்புக் கொண்டு வன்முறைப் பாதையை நாடும் அபாயம் உள்ளது.

  ஹிந்து கலாசாரத்தில் என்றுமே எதிர் வாதத்துக்கு இடம் உண்டு, சீர்திருத்தத்திற்கு இடம் உண்டு என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும்.

  ராமானுஜரை விடவும், ராஜா ராம் மோகன் ராயை விடவும், மகாத்மா புலே யை விடவும், நாராயண குருவை விடவும், மகாத்மா காந்தியை விடவுமா ராமும், சஞ்சய ஸ்ரிவத்சவாவும் பெரிய சீர்திருத்த வாதிகள்?

  மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் ‘ என்று முழங்கிய மகாகவி பாரதியை விடவும், கோயில் ஒன்று கட்டி அதில் ஒரு சமுதாயத்தில் மிகக் கீழான நிலையில் இருந்த ஒருவரை பூசாரியாக நியமித்த வீர சாவர்க்கரை விடவா இவர்கள் பெரிய சீர்திருத்தவாதிகள் ?

  மேலும் இவர்கள் ஹிந்துக்கள் மேலும் உயர்வடைய வேண்டும் என்றோ , ஹந்து கலாச்சாரம் மேலும் சிறப்படைய வேண்டும் என்றோ இதையெல்லாம் செய்தால் ஹிந்துக்கள் அவர்களை வணங்கி அவர்பின் செல்வர். ஆனால் அப்படி இல்லையே

  இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததால்தான் நாம் எதிர்க்க வேண்டியுள்ளது .

 45. https://bharatkalyan97.blogspot.in/2013/01/sanjay-srivastava-siddharth-varadarajan.html

  Published: January 10, 2013 01:49 IST | Updated: January 10, 2013 02:14 ISTÂ
  A note to readers

  Over the past few days, we have received emails, representations and letters objecting to the reference to Swami Vivekananda and the use of his photograph in the article ‘Taking the aggression out of masculinity’ (January 3, 2013). We have published several of these. We wish to reiterate that the views in the article are those of the author and not of The Hindu. The photograph was used only to illustrate a specific reference made in the article. Any offence caused to readers was inadvertent and is regretted.

  Siddharth Varadarajan

  Editor, The Hindu

  https://www.thehindu.com/opinion/op-ed/a-note-to-readers/article4291269.ece?homepage=true&css=print

  Aricle that appeared in
  https://bharatkalyan97.blogspot.in/2013/01/sanjay-srivastava-siddharth-varadarajan.html
  Sanjay Srivastava & Siddharth Varadarajan, commie ‘sickulars’ and their ‘masculinity’ — Ravinar

  THURSDAY, JANUARY 10, 2013

  …I wonder how long it will be before someone comes up with the “Idea of India” where Ajmal Kasab too is was a closet Hindu. Remember Anna Hazare’s Lokpal fasts in August 2011? One of the first things they tore down to appease “seculars” was a poster of Bharat Mata. Kiran Bedi & team were at the feet of that Syed Bukhari begging him for support. An Ex-Police Officer I respect, Kiran Bedi seems to have forgotten Bukhari had an arrest warrant pending on him since 2001. It seems Delhi police didn’t have the courage to arrest him. Kiran Bedi is never short on words for enforcement of law. They showed much respect for “Bharat Ma”, didn’t they?

  The same hypocrisy exists in the commie outfit called “The Hindu” whose editor, S. Varadarajan, is an American and hasn’t exactly shown his paper’s name means anything remotely connected with Hindus. So Varadabhai, as I fondly call him, hires a journalistic-psychopath called Sanjay Srivastava to heap more trash on Hindu practices. If it were mere criticism, that could pass. But this psychopath writes in connection with the Delhi Gangrape: “Taking the aggression out of masculinity” which starts with the sub-line: “The Indian family has been a long-standing site for reinforcing and perpetuating male privilege and entitlement”. Indian family? Okay! But that ends there and suddenly turns to Hindus alone and, like many fools before, he trashes Hindu practices. So let’s accept that by the logic of ‘The Hindu’ that Indian simply and definitely means “Hindus”. Who’s gonna complain about that? The rest of it is nothing but another foolish rant but surprisingly brings up Swami Vivekananda’s “pose” as the symbol of this “masculinity”. He says: “Swami Vivekananda’s masculine photographic-pose was only one aspect of the cult of masculinity encouraged and tolerated by nationalism”. Huh? On their website this pic of Swami Vivekananda keeps flashing on and off.
  So Indian family –>Hindus –>Swami Vivekananda’s pose–> Masculinity–>Therefore rapes. QED! Damn! This was so simple and we didn’t get it all these centuries. But hang on! This Srivastava has got a serious point. I’m not kidding. In a previous post I mentioned that in 2010 rapes in the USA were highest at 84767 so I decided to check out Srivastava’s theory.

  I am truly stunned. You can see Abraham Lincoln striking the same pose as the Swami. So it’s fair to imply Lincoln’s masculinity inspires rapes in the US. I was wrong though, as someone pointed out that on the same page I have linked, South Africa has the highest rapes at 277,012. Oh hell! I had to check all over again. But there you are! Nelson Mandela has the same pose as the Swami. But hold your breath! While searching for these I also found Karan Thapar in the same pose for his programme on CNN-IBN. So by Srivastava’s logic Karan Thapar’s “masculinity” is a serious threat at CNN-IBN or where ever he works.

  Out of sheer curiosity I also checked out the pics of Varadabhai and Srivastava. The similarity is striking, eh? So, next time you cross your arms across your chest be careful. You could be termed “masculine” and a “motive” or “inspiration” for rapists. Now, some have tried to demolish the foolishness of Sanjay Srivastava and ‘The Hindu’ with truth and logic. But hey, if logic and truth mattered at all would these people write such foolish articles in the first place? If logic and truth mattered would Rajdeep have defended Dawood as a “patriot”? Truth, facts and logic don’t inspire them. What unites these commie “sickulars” is their uniform and consistent hatred of Hindu culture and practices. Nothing complicated. Rajdeep’s deputy even hates seeing Saffron in our National Flag; she calls it “Orange”. You know, I’m starting to believe that survey that suggests journalism does attract psychopaths; with their hatred and twisted sense of patriotism.
  https://www.mediacrooks.com/2013/01/no-friendship-with-barbarians.html


  S. Kalyanaraman

 46. திரு. ஸ்ரீதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். விவாதத்தை திசை திருப்ப செய்த முயற்சியை சரியாக விடையளித்து நேர்வழிப் படுத்தியுள்ளார். வரப்போகும் காலங்களை நினைத்தால் கொஞ்சம் மெர்சலாக தான் உள்ளது. ஆனால் மிகப் பெரிய ஆன்மிகச் சிறப்பை உடைய ஹிந்து மதம் தான் எல்லாவற்றையும் எதிர் கொண்டு நிமிர்ந்து நிற்கும்.

 47. சஞ்சய் ஸ்ரீவஸ்தவா என்ற பெயரில் ஒருவர் எழுதிய அபத்தமான ஒரு கட்டுரையை பிரசுரித்துவிட்டு , கட்டுரையில் வெளியாகியுள்ள கருத்துக்கள் பத்திரிகை ஆசிரியருக்கு சொந்தமானவை அல்ல. அவை எழுதியவரின் கருத்துக்களே என்று கூறி தி ஹிந்து பத்திரிகை தப்பிக்க முயல்கிறது. பெண்கள் மீதான அடக்குமுறை ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு சமுதாயத்திலும் தலை தூக்குகிறது. அதை எதிர்த்து பெண்கள் உட்பட ஆண்களும் சேர்ந்தே போராடி , ஆணாதிக்க வெறியர்களுக்கு நல்ல சாட்டை அடி கொடுத்துள்ளனர். நமக்கு தெரிந்து கடந்த காலத்தில் ராஜாராம் மோகன் ராய், மகாத்மா காந்தி , சுப்பிரமணிய பாரதியார், என்று பலரும் போராடி உள்ளனர். சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்களை முற்றிலும் படித்ததால் எனக்கு அவற்றின் உயர்வு நன்கு தெரியும். பெண்களின் கவுரவம் மற்றும் உயர்வுக்கு அச்சாரமாக அவருடைய கருத்துக்களும், எழுத்துக்களும் அமைந்துள்ளன. பெண்களின் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு இந்து மதம் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல.

  சில திருடர்கள் இந்துவாக பிறந்தவர்கள் என்பதற்காக இந்துமதம் திருட்டை ஆதரிக்கிறது என்று சொல்வதைப்போல இருக்கிறது சஞ்சய் ஸ்ரீவஸ்தவாவின் கட்டுரை. திருட்டு கொலை கொள்ளை பெண்ணடிமை என்ற தவறுகளை எல்லா மதங்களை சேர்ந்தவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த தவறுகளுக்கு RELIGIOUS SANCTION இந்து மதத்தில் கிடையாது. சுவாமி விவேகானந்தரின் படத்தினை எவ்வித தொடர்பும் இல்லாமல் வெளியிட்ட தி ஹிந்து மற்றும் ஸ்ரீ சஞ்சய் ஸ்ரீவச்தவாவின் வக்கிர புத்தியை கடவுளுக்கே சமர்ப்பிப்போம்.

  இந்து திருக்கோயில்களில் பெரியகோயில் , சிறிய கோயில் , மரத்தடி கோயில் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்து , அவற்றில் பெண்களுக்கு ஐம்பது சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக , பெரிய கோயில்களில் இந்தியா முழுவதும் அடுத்த பத்தாண்டுகள் பெண்கள் மட்டுமே பூஜை செய்ய உரிமை கொடுக்கப்பட்டு, ஆண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்களை செய்யவில்லை என்றால், சஞ்சய் ஸ்ரீவஸ்தவா போல உளறுகிற பேர்வழிகளுக்கெல்லாம் நாம் கண்டனம் எழுதிக்கொண்டு நம் வாழ்நாளை கழிக்க வேண்டியதுதான்.

  தி ஹிந்து பத்திரிகை அவசரநிலை காலத்தில் இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை ஆதரித்து வால் பிடித்த கொடுங்கோல் பத்திரிகை. அந்த தீய பத்திரிக்கையை வாங்கி கொளுத்துவது கூட பாவம். அதை வாங்காமல் முற்றிலும் புறக்கணிப்போம். தி ஹிண்டுவைப்போன்ற தீய சக்திகளை எல்லாம் தாண்டி தான் , இந்திய ஜனநாயகம் வெற்றிநடை போடுகிறது.

 48. திரு. தமிழ் அவர்களே!

  “மதப்பழக்கங்கள்; பூசை புனஸ்காரங்கள். சுமிருதிகள் நிரந்தமல்ல; அவை காலத்தின் ஒப்புக்குத்தக்க மாறும். மாறத்தான் வேண்டுமென்கிறார். பிரசன்ன சுந்தர் சுவாமியின் கருத்துக்கு எதிராக பேசுகிறார்.”

  ஹா ஹா ஹா ஹா… சுவாமி மதப் பழக்கங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்று சொன்னதில் நான் எந்த எதிர் கருத்தும் கொள்ளவில்லை. போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பா என்றது உங்களை சிறிது சீண்டிப் பார்த்திருக்க வேண்டும். மன்னிக்கவும். நான் கூறியது சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா போன்ற தீய உள்நோக்குடைய கட்டுரையாளர்களை மட்டுமே. தங்களை சீண்டுவது என் வேலையில்லை. தனி நபர் தாக்குதலை நான் எப்போதும் கைக்கொள்வது இல்லை. ஆனால் வாதம் செய்வதைப் பற்றியும், பூஜை புனஸ்காரங்கள் பற்றியும் சுவாமி விவேகானந்தர் கூறியதை நீங்கள் குழப்பிக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  ஆரோக்கியமான விவாதங்களையும், கோட்பாடுகளையும் யாராயினும் முன் வைத்தால் அதை வரவேற்க வேண்டும் என்ற அர்த்தத்தில், ஆரோக்கியமான மாற்றங்கள் நம் மதத்தை இன்னும் பலப்படுத்தும் என்ற நோக்கிலுமே அவர் எதிர் கருத்துக்களை வரவேற்று இருந்திருக்கிறார்.

  ஆனால் இன்றிய தேதியில் நிகழக்கூடிய ஒரு கற்பழிப்புக்கு விவேகானந்தரின் உருவத்தைப் போட்டு அவரின் கோட்பாடுகளால் தான் இன்றைக்கு கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பன போன்ற தவறான அர்த்தம் கற்பிக்கும் விஷமத்தனமான தீய உள்நோக்கமுடைய கட்டுரைகளுக்கு நாம் நம் எதிர்ப்பைக் காண்பித்தே ஆக வேண்டிய அவசியம் இன்றைக்கு எழுந்துள்ளது. இதற்கு நான் மட்டுமல்ல. பல நூறு பேர் எதிர்ப்பைக் காண்பித்து கடிதங்கள் எழுதியும் ஹிந்து பத்திரிகை மீண்டும் மறுநாள் பிரேமா நந்தகுமாரின் கட்டுரைக்கு தவறான புரிதலுள்ள கடிதத்தையே வெளியிட்டது.

  இதற்கு தான் நான் மறுப்பை தெரிவித்து இருந்தேன். அதை நீங்கள் இன்னும் கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது திண்ணம். நீங்கள் கேட்டது “சமூகத்தில் ஒரு வழக்கம் வானத்திலிருந்து குதித்ததன்று’ ஒரு தனிநபராலும் செய்யப்படவில்லை. வழக்கம், ஆசை என்பனவெல்லாம் மக்களின் கலாச்சா ரவாழ்க்கையில் மெல் மெல்ல புகுந்தவையே. எப்படியோ புகுந்தன எனவைத்துக்கொண்டாலும் பெண்களுக்கு மட்டும் என்று ஏன் புகுந்தன ? அதைவிட முக்கியமான வாதம் பெண்களைத் தாங்கள் ஆண்களுக்குச் சமமல்ல என்று உணர்வை உட்கிரகித்து வாழவைக்க்கின்றன இப்படிப்பட்ட பண்டிகைகள். ஆண்கள் தாங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற நினைப்பை உருவாக்கி, இளம்தலைமுறை ஆணையும் அப்படிச்சிந்திக்கவைத்து, இப்படிப்பட்ட பெண் ஒருத்தி எப்படி என்னை எதிர்க்கலாம்; பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரா என்ற கோபத்தை உருவாக்கி, இறுதியில் பாலியல் கொடுமையில் கொண்டுபோய் விடுகிறது. இதுதான் வாதம். இதை எதிர்நோக்குங்கள்.”.

  நான் தெளிவாக முன்பே கூறி விட்டேன். தங்களுக்காக ஒரு முறை மீண்டும் காப்பி பேஸ்ட் செய்கிறேன். மீண்டும் இதையே கேட்டு விட்டு வாதம் செய்வதை நான் நிறுத்த சொன்னதாகவும் சுவாமி விவேகானந்தருக்கு எதிராக நான் பேசுவதாக தயவு செய்து கற்பித்துக் கொள்ளாதீர்கள். “வாழ்க்கைச் சூழல் இந்த 30, 40 வருடங்களாக தான் அதிக அளவில் மாறி வருகின்றது. இரு பாலரும் வேலைக்குச் செல்வது இந்த அல்லது கடந்த நூற்றாண்டில் தான் அதிகரித்துள்ளது. அதற்கு முன்பெல்லாம் இருவரும் வேலைக்குச் செல்வது என்ற அவசியமே இல்லை. கூட்டுக் குடும்பமாக வசித்தார்கள். பெண்கள் எல்லோரும் விவசாயத்தில் தான் அதிகம் பங்கு கொண்டனர். அப்படியான பெண்களும் கட்டாயம் உண்ணா நோன்பு இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இருக்க வில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குடும்ப நலனை முன்னிட்டு விரதம், பூஜைகள் செய்யும் பழக்கங்கள் இருந்தன. அந்த கால கட்டங்களில் பெண்களுக்கு என்று பெரிய அளவில் செய்வதற்கு விஷயங்கள் இல்லாத போது இது போன்ற விரதங்களை செய்வது வழக்கமாகி பின்னர் அதுவே பழக்கமாகக் கடைப் பிடிக்கப்பட்டுள்ளது. இது ஆணாதிக்கம் இல்லையப்பா. இது ஒரு பழக்கம். தாங்கள் ஏற்ற பொறுப்புக்கு ஏற்ப அவர்களே கடமைகளை அக்காலத்தில் வகுத்துக் கொண்டார்கள்.இந்த கலாசாரத்தை இந்தக் கால கண்ணாடி அணிந்து பார்த்தால் எல்லாம் கோணலாக தான் தெரியும்.”

  இந்த காலத்தில் குக்கரில் பொங்கல் வைக்கிறார்கள். வயதான தாய் தந்தையரை Old age Home இல் விட்டு விட்டு “Happy Diwali pa” என்று போனில் பேசுகிறார்கள். எனக்குத் தெரிந்து இப்படிப் பட்டவர்களே நமது ஹிந்துப் பாரம்பரியத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு சேற்றை வாரி இறைக்கிறார்கள். நமது மதத்தில் திருத்த வேண்டிய பல விஷயங்கள் இருந்தன. அவற்றை சீர்திருத்த வரலாற்றில் அவ்வப்போது ஒவ்வொரு மகா புருஷரும் வந்து கொண்டு தான் இருந்திருக்கிறார்கள். ஏன் ஹிந்து மதத்தைத் தலையில் நாம் தூக்கி வைத்துக் கொண்டு ஆட வேண்டும் என்றால் இந்த மதத்தில் காணப் படும் ஆன்மீகச் சிறப்பானது அறிவியலுடன் இயைந்து காணப் படுவது. அதைப் பற்றி பேச புகுந்தால் பக்கங்கள் போதாது. கலி காலத்தில் நன்மைக்கு பங்கமே விளையும் என்று முன்னோரால் சொல்லப் பட்டிருக்கிறது. அதைக் கொண்டு பார்த்தால் சமூக சீர்கேடுகள், அந்நிய மதங்களின் ஆதிக்கங்கள், அம்மதங்களில் கிடைக்காத ஆன்மீக தேடல்களுக்கான சரியான விளக்கங்களை ஹிந்து மதம் கொடுப்பதை யாரும் உற்று நோக்காமல் புறம் தள்ளி தவறான கருத்துக்களைப் பரப்புவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

  அம்மா என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை நம் ஹிந்து மதம் கொண்டாடுவதைப் போல், இந்தியாவில் தாய்மைக்கு அளிக்கப்பட்ட, அளிக்கப்படும் மரியாதையைப் போல் எங்குமே நாம் காண முடியாது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் வாழ்வது சகஜம். “மகனே! இவர் தான் இனிமேல் என் கணவர். உன் அப்பாவிடம் சொல்லி விடு” என்று மிக சாதாரணமாக சொல்லி விட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். ஆனால் இங்கு அப்படியா? குடும்பம் என்பது ஒரு தவம். அதைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்க ஒரு ஹிந்துப் பெண், இந்தியப் பெண் தன் முழு மனதையும் எண்ணத்தையும் செயலையும் செலவிடுகிறாள். அர்பணிப்பு உணர்வு என்பது அவளின் அடிமைத் தனம் என்று தவறாக பிரசாரம் செய்யப்படுவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். இன்னொரு முக்கியமான விஷயம், குடும்பங்கள் குலைந்தால் நற்பண்புகளும், சுயநலமற்ற மனப்பான்மையும் குறையும் என்பதற்கு இப்போதைய மேற்கத்திய கலாசாரம் ஒரு உதாரணம். இதைப் பற்றி விரிவாக துக்ளக் இதழில் திரு. குருமூர்த்தி அவர்கள் எழுதிய கட்டுரையைப் (பாஹூகாவின் துர்போதனைகளும், மேற்கத்திய கலாச்சாரமும் என்பது பற்றிய கட்டுரை) படித்தால் தங்களுக்கு தெளிவாக ஹிந்துக் கலாசாரத்தின் சாரம் அதன் சிறப்பு அனைத்தும் விளங்கும். “பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரா என்ற கோபத்தை உருவாக்குவது எங்கள் பண்பல்ல. தாய் ஒரு சொல் சொன்னாலும் அதை மதித்து நடக்க வலியுறுத்துவதே எங்கள் மதம். இது மனைவிக்கும் பொருந்தும்.

  இறுதியாக, இந்த மதத்தில் தவறுகளே இல்லை என்று நாங்கள் வாதிடவில்லை. இந்த மதத்தில் தான் தவறுகளை சரி செய்து கொள்ளும் வசதி இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறோம். “1000 ஆண்டுகளுக்குப்பின்னர் அப்போது இருப்பவர்கள் கவனித்துக்கொள்வார்கள். நம்காலத்தை நாம் பார்ப்போம்.”

  துஷ்ப்ரசாரம் செய்பவர்கள் பற்றிய கவலை சிறிது இருந்தாலும், இவையெல்லாவற்றையும் மீறி 1000 வருடங்கள் கழிந்தும் நம் மதம் நிலைக்கும் என்பது என் நம்பிக்கை. இப்போதைய கதையை நாம் பார்க்காமல் 1000 ஆண்டுகள் கழித்துப் பேசிக் கொள்ளலாம் என்பது என் நிலைப்பாடு அல்ல. தங்கள் புரிதலுக்கு நன்றி.

 49. தி ஹிந்து பத்திரிகை சீன கம்யூனிஸ்டு கட்சியின் வால் பிடிக்கும் பத்திரிகை. சீன அரசு செய்யும் அக்கிரமங்களை மூடி மறைத்து , மிக வேகமாக நாசகார கருத்துக்களை மக்கள் மனத்தில் விதைக்கும் நச்சுப்பாம்பு. நமது எல்லைப்புறத்தில் சீன அரசின் வாலாட்டங்களை பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பிற பத்திரிகைகளில் வந்த செய்திகளை தங்கள் பத்திரிகையில் வெளியிடாமல் மௌனம் காத்து , தங்கள் விசுவாசத்தை சீன எஜமானர்களுக்கு காட்டிய துரோகிப்பத்திரிக்கை. துரோகிகளை என்ன செய்ய வேண்டுமோ அதனை மக்கள் செய்வர்.

 50. இந்து மதத்தின் மேல் விமர்சனம் வைப்பவர்களெல்லாரும் பிறரின் தூண்டுதல்களினால்தான் செய்கிறார்கள் என்றால் எவருமே விமர்சனம் வைக்கமுடியாதே?

  இசுலாமியர் தங்கள் மதத்தை விமர்சனம் செய்தால் கை காலை வெட்டுகிறார்கள். கோட்டயம் பொரபசர் கையை வெட்டினார்கள் கேரள முசுலீம்கள், தமிழ்ஹிந்து. காம் அடிக்கடி அந்நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதியிருக்கிறது.

  ஆனால் நீங்களோ விமரசனம் செய்வோர் அனைவரும் இந்து மத எதிரிகள் என்றால் கேரள பி டி எஃப் காரர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?

  கிருஸ்ணகுமார் எழுதுகிறார் //These nuts have the guts to hurt only Hindu sentiments, the lot who are clueless as to who shall be opposed and what issues are to be opposed. You would have any number of conflicting opinions.//

  இந்து மத வரலாற்றில் சீர்திருத்தக்காரர்கள் வந்தார்கள். இராமானுஜர், இராஜராம் மோஹன்ராய் போன்றோர் எனவறியலாம். அவர்களையும் என்ன சொன்னார்கள் தெரியுமா? இப்படித்தான் சொன்னாரகள். அதாவது:

  These nuts have the guts to hurt only Hindu sentiments, the lot who are clueless as to who shall be opposed and what issues are to be opposed. You would have any number of conflicting opinions.//

  இராமானுஜர் எத்தகைய எதிர்ப்புக்களையும் தன் உயிருக்குப் பங்கத்தையுமே எதிர்கொண்டார். பிறரிடமிருந்தல்ல. தன் மதத்துக்காரர்களிடமிருந்தே என்பதுதானே அவர் வரலாறு?

  ஆனால் அவர்கள் தொடர்ந்து சென்று தாங்கள் நினைத்ததைச் செய்ததனால்தான் இன்று இம்மதம் பிறமதங்களிடமிருந்து வேறாக இருக்கிறது. சிறக்கிறது. அவர்கள் தோல்வியுற்றிருந்தால் தலித்துக்கள் அன்றே வேறுமதங்களுக்குப் போயிருப்பர்; இன்றும் பெண்கள் தங்கள் கணவர்மார் இறந்தவுடன் உடன்கட்டையேறிக் கொண்டுதானிருப்பர்.

  No guts are required to pinpoint in Hindu religious practices and social philosophy of life what is out of joints with our times. It is real service to the religion. Hindu religion is a flowing river. It does not stagnate to become toxic breeding reptiles. Don’t try to destroy its unique greatness of adaptability by calling it rigid and inflexible beyond any criticism and threatening critics to shut up.

  Please remember even Vedas are rejected by some; spiritual leaders differed in the interpretations of Vedas. Dayananda Saraswati rejected idol worship.

  Swami Vivekananda called all to reject Smritis if they are hurting today. He wrote: Lets rewrite them. He prides himself of the fact of his religion’s adaptability and ability to serve society in all its varied forms.

  இந்துமதம் ஒரு பெருங்கடல். அஃது உங்களையும் விமர்சர்களையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்தது. அதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

 51. //மேலும் இவர்கள் ஹிந்துக்கள் மேலும் உயர்வடைய வேண்டும் என்றோ , ஹந்து கலாச்சாரம் மேலும் சிறப்படைய வேண்டும் என்றோ இதையெல்லாம் செய்தால் ஹிந்துக்கள் அவர்களை வணங்கி அவர்பின் செல்வர். ஆனால் அப்படி இல்லையே//

  அப்படியில்லையே என்று எப்படி இப்போதே முடிவு செய்து விட்டீர்கள்? கட்வா சவுத் என்ற பண்டிகையைப் பற்றிய விமர்சனம் இப்போதுதான் வெளி ச்சொல்லப்பட்டிருக்கிறது. முன்பு எவரும் வெளி ச்சொல்வதில்லை. இனிமேல்தானே பார்க்கவேண்டும்?

  மேலும், இப்போதுதான் பெண்கள் வளர்ச்சி. அன்று இல்லை. இனிமேதானே பார்க்கவேண்டும்.
  அப்பண்டிகைக்கு நீங்கள் சப்போர்ட் அல்லவா பண்ணுகிறீர்கள்? உங்கள் வீட்டில் நடக்கிறதென்றால், எல்லாவீட்டிலும் நடக்கவேண்டுமன்றல்வா சொல்கிறீர்கள்?

  தன் கணவனின் நன்மைக்குப்பிரார்த்தனை பண்ணாத பெண் இல்லை. ஏனெனில் கணவனில்லாமல் குழந்தைகளுக்குத்தந்தை இல்லை. வீடுமில்லை. அதை எந்நாளும் பூஜையிலும் கோயிலிலும் பிரார்த்தனை செய்வார்கள். அப்படிச்செய்ய அவர்களுக்கு ஒரு தனிப்பண்டிகைத் தேவையில்லை. அப்படியே இருந்தாலும், அதன் வடிவம் சரியில்லை. ஏன் அப்பண்டிகை ஆணுக்கு இல்லை என்ற சிரிவாஸ்தவா கேள்வியை எதிர்நோக்க தைரியமில்லை உங்களுக்கு. மனைவியில்லாமல் குழ்ந்தைகளுக்குத் தாய் எங்கேயிருந்து வருவாள்? மனைவி என்றால் மனையை உருவாக்குபவள். அவளில்லாவிட்டால் மனையேங்கே? எனவே கணவனும் பிரார்த்தனை பண்ணத்தான் செய்வான். ஆனால் அவனுக்கு ஒரு பண்டிகையில்லாமல் அவளுக்கு மட்டுமேன்? இதன் என்ன விளவை ஒரு ஆணின் இளம்பிராயத்தில் ஏற்படுத்துகிறது? ஆணுக்குப்பெண் சமமில்லை. ஆணுக்காகவே பெண்!! அப்படித்தானே?

  இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் கேட்டதுண்டா? கேட்டால் கோபப்படுகிறீர்களே? அன்று பெண்கள் வீட்டிற்குள் வைக்கப்பட்டார்கள். ஆணின் உழைப்பில் அவர்கள் வாழவேண்டும். இன்று பெண்கள் உழைக்கிறார்கள். பலகுடும்பங்கள் பெண்ணின் உழைப்பில் வாழ்கின்றன. பல பெண்கள் ஆணைவிட சிறப்பாகப் பணி அனைத்துத்துறைகளிலும் செய்கிறார்கள். மேலும் மேலும் செய்வார்கள். ஆக, அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை எதிர் நோக்கவேண்டுமில்லையா ஒரு மதம்? முன்பு இருந்த தன் கொள்கைகளை ஆராய்ந்து அதை பெண்ணுக்கும் சாதகமாக மாற்ற வேண்டுமா இல்லையா?

  மாற்றுக என்றால் இந்துமதத்துரோஹிகள் என்கிறீர்கள். பிறமதத்தவரிடம் கேடக இவருக்கு கட்ஸ் இல்லையென்று எழுதுகிறீர்கள். பிறமதமும் இந்துமதமும் ஒன்றா?

 52. அப்படி இல்லையே’ என்றது தெரிந்தே நேரடியாக இந்து கலாச்சாரத்தை இழிவு படுத்துபடுத்தும் ராம், வரதராஜன், ஸ்ரீவத்சவா போன்றவர்களைப் பற்றி மட்டுமே.

  மற்றவர்களைப் பொருத்தவரை உண்மையாக ஒருவருக்கு என் குடும்பத்தின் மீது அக்கறை இருக்குமானால் என் வீட்டுக்குள் வந்து அறிவுரை சொல்ல வேண்டும்.

  எதிர் வீட்டுக்காரன் மாடியில் நின்று கொண்டு ‘நான் உனக்கு நல்லது சொல்கிறேன்’ என்று கூறினாலும் அவன் நம்மை இழிவு செய்யும் எண்ணம் உள்ளவன் என்றுதான் பொருள்.

 53. ” …இது ஒரு பண்டை கால இந்திய வழக்கம். கணவனுக்காக மனைவி நோன்பு நோற்பதும் நோன்பின் முடிவில் கணவனை வணங்குவதும் அப்போது கணவன் “தீர்க்க சுமங்கலியாக இரு ” என்றோ ” நல்லா இரும்மா ” என்றோ வாழ்த்தும்போது அவர்களை சுற்றி உள்ள எதிர்மறை எண்ண அலைகள் தீர்ந்து அழிந்து நன்மை செய்யும் எண்ண அலைகளே மேலோங்குகின்றன. இது ஹார்வர்டு பல்கலைகழக ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது என்று பேராசிரியர் ……….தெரிவித்தார்.
  கணவனது வாழ்த்து தனக்கு மட்டுமானது அல்ல , அது மனைவியின் நீண்ட ஆயுளுக்குமானது ” என்று குறிப்பிட்டார். நல்ல வார்த்தைகள் , எண்ணங்களை தம்பதிகள் பரிமாறிகொள்ளும் பொது அந்த எண்ண அலைகள் அவர்கள் குடும்பத்துக்கே பெரும் நன்மை செய்யும் என்பது ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்தது என்றார்.

  ஏன் இந்த விரதத்தை கணவர்கள் செய்யக் கூடாது என்ற கேள்விக்கு ” என் மனைவி தென் இந்தியாவில் வழக்கத்தில் இருந்த ஒரு வகை விரதத்தை தற்போது அனுசரிப்பதாகவும் அன்று தானும் அதி காலையில் எழுந்து அவருக்கு கூடமாட உதவி செய்வதாகவும் கூறினார். மேலும் அந்த வழக்கப்படி விரதம் முடிந்த உடன் படைக்கப்பட்ட உணவை தன மனைவி முதலில் உண்பதாகவும் பிறகு தான் தானே உண்ண முடியும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

  மேலும் தான் குடும்ப நன்மைக்கென வாரம் ஒருமுறை முருகனுக்கு விரதம் இருப்பதையும் குறிப்பிட்டார்.
  தனக்கு தெரிந்த பல கணவர்கள் சபரிமலை விரதம் வருடம் 41 நாட்கள் இருப்பதையும் குறிப்பிட்டார். ” யார் எவ்வளவு விரதம் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.இது கணவன் மனைவி சம்பந்தப்பட்டது. செய்வதும் செய்யாததும் அவர்கள் விருப்பம். இது மறைந்து விட்ட,, மறைக்கப்பட்டு விட்ட ஒரு அழகிய வழக்கம்.
  இதை இருபத்தோராம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெரிது படுத்திய குழுவினர் ,வாலன்ட்டினே நாள் முதலிய புதிய “விரத” கொண்டாட்டங்களை எதிர்பதில்லை. அது போன்ற தினங்களில் ஆண் பெண்ணுக்கு விலை உயர்ந்த பரிசு தர வேண்டும் என்று மறைமுக பிரச்சாரம் ஊடகங்களில் செய்யப்பட்டது பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம்.

  இன்றோ அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் 40 சதம் குழந்தைகள் தாயுடன் மட்டும் வளர்கிறார்கள். திட்டமிட்ட பிரசாரமே இதற்கு காரணம். போனது போகட்டும், “தம்பதி யோகா” என்ற இந்த முறையை கற்றுக்கொண்டு பயன் பெறுங்கள். செய்வது ,செய்வது மிக சுலபம். ஒவ்வொரு வருடமும் …”

  – நாம் இதே ரூட்டில் போனால் 20 வருடங்கள் கழித்து இப்படி ஒரு ஆராய்ச்சி பற்றி எங்கேனும் படித்தால் வியக்க வேண்டியதில்லை.

  தோப்புகரணம் போடச் சொன்ன பாட்டி பிற்போக்குவாதி.
  ஆனால் சூப்பர் பிரைன் யோகாவோ நியூ ஏஜ் சங்கதி.

  -சாய்

 54. உங்கள் குடும்பத்தின்மீது அக்கறையுள்ளவர் கூட நீங்கள் விரும்பாமல் உள்ளே வந்து அறிவுரை கூற முடியாது. இதை உங்கள் குடும்பத்தோடு விட்டுவிடுங்கள். ஏன் மதத்தை உங்கள் குடும்பம் என்கிறீர்கள்?

  மதம் உங்கள் குடும்பம என தனிக்கூடாரம் போட்டால் நீங்களும் இசுலாமியரும் ஒன்றே என்பதும், அப்படிப்பட்ட சிந்தனையே இந்துமதத்துக்கு கிடையாது என்பதும் தான் என் வாதங்கள். இதைப் பற்றி ஒன்றையுமே நீங்கள் சொல்லவில்லை.

  போகட்டும். இந்துமதம் கோடானுகோடி மக்களால் அன்றிலிருந்து இன்றுவரை அவரவர் வழியில் அனுசரிக்கப்படுகிறது என்ற உண்மையை அறியார் உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட எண்ணற்ற மக்களில் நீங்கள் ஒருவர் மட்டுமே. எனவே எங்கள் மதம், எங்கள் குடும்பம் என்றெல்லாம் சொல்ல எவராலும் முடியாது.

  எவராக இருந்தாலும், இந்துமதத்தை விமர்சனம் பண்ணலாம். நீங்கள் சொல்வதன்படி அவர் இந்துவாகத் தான் இருக்க வேண்டுமென்பது கிடையாது. மறுத்தால், மீண்டும் ‘இந்துமதம் இசுலாமன்று’ என்பதையே திருப்பிச் சொல்ல வேண்டியது வரும்.

  விமர்சங்னங்க‌ள் வரவேற்கப்படுகின்றன. எங்கியிருந்தாலும். அவை நன்மை பயக்குமெனில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதே ரிக்வேதம். Let noble thoughts come to us from every side என்று ரிக்வேதம் சொன்னபோது, இவரிடம்தான் வர வேண்டும். அவர் எங்கள் வீட்டுக்காரராகத் தான் இருக்க வேண்டுமென்றா பொருள்?

  விமர்சகன் உள்ளோக்கத்துடன் சொல்கிறானா என்ற கேள்வி பின்னர்தான் எழும். உள்ளோக்கத்துடனென்றால் உதாசீனப்படித்திவிடலாம் இலகுவாக.

  ஆனால் நீங்கள் போடுவது ஃபட்வா. இம்மதம் என்மதம் என் வீடு. உள்ளே நுழையாதீர் என்பது பட்வா.

  ராமோ, ஸ்ரீவஸ்தவாவோ, சித்தார்த் வரதராஜனோ சொல்லலாம். உள்ளோக்கத்துடன் சொன்னாரா இல்லையா என்பதை முதலில் அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டுப் பதிலைத் தேடுங்கள் என்பதே என் வாதம்.

  ஸ்ரீவஸ்தவாவின் கட்டுரையில் போடப்பட்ட போட்டோ வேறு விடயம். கர்வா சவுத்தைப்பற்றி எழுதியது வேறு விடயம். அவரே கூட அப் போட்டோ அன்று என்கட்டுரையின் நோக்கமேயில்லை. வேறுபல விடயங்கள் பேசப்பட்டன, அவை தான் நோக்கம் என்கிறார். போட்டோ பலரது மனங்களை புண்படுத்தியதில் அவர் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கலாம். இருந்தாலும் அவரெழுதிய பல விடயங்களை ஒரு விடயத்தால் மறைத்துவிட்டால் அவை போய்விடா.

  இன்னொரு நாள் இன்னொரு நபர் – அவர் இந்துக்களால் போற்றப்படும் ஆன்மிகவாதியாகக் கூட இருக்கலாம்- எழுப்புவார். அப்போது எதிர்கொண்டு தான் தீர வேண்டும். அப்போது பண்ணிக்கொள்வோம் என்பது குழந்தைப் பிடிவாதம்.

 55. திரு. தமிழ் அவர்கள் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்! நாம் சொல்ல வருவது என்ன என்று புரிந்த பின்னும் புரியாதது போலவே பேசுகிறாரோ என்று நமக்கு மிகுந்த சந்தேகம். முதலில் நம் மதத்தில் மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் இருகின்றது என்று கொள்வோம். அதை வலியுறுத்த வேண்டும் என்றால் தனியே தமிழ் ஹிந்துவுக்கு ஒரு கட்டுரை அனுப்பலாம். சீர்திருத்தக் கட்டுரைகள் மிகுந்த வரவேற்புடன் அணுகப்படுவது தமிழ் ஹிந்துவில் மிக அதிகம். திரு. சேக்கிழான் அவர்கள் எழுதும் ஜாதி அரசியலுக்குத் தீர்வு என்ன? என்பது போன்றவை, திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் எழுதும் முக்கால்வாசி கட்டுரைகள் இவ்வாறான வகையை சேர்ந்தவையே! எனவே நாம் ஹிந்து மதத்தில் காணப்படும் ஜாதிகள் ரீதியான பிளவையோ, பெண் அடிமை கலாச்சாரத்தையோ ஆதரிப்பவர்கள் இல்லை என்பது தெள்ளத் தெளிவு.

  ஹிந்து மதப் பழக்கங்களில் மாற்றங்கள் தேவை எனில் அவை பற்றி தனியே திரு. தமிழ் அவர்கள் ஒரு கட்டுரை எழுதி தமிழ் ஹிந்துவிலேயே வெளியிடலாம். ஆனால் இவர் என்ன செய்கிறார்? சீனக் கைகூலிகள் நம்மை சும்மாவாவது சீண்டிப் பார்க்கும் விதத்தில் சுவாமி விவேகானந்தரை அசிங்கப் படுத்துவது, அவரது பாதை தவறென்று எண்ணப்படும் விதத்தில் வரையப்பட்ட ஒரு விஷமத்தனமான கட்டுரைக்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனக் கட்டுரைக்கு பதிலிடுவது போல் ‘சைடு கேப்’-இல் அவர்களை ஆதரிக்கிறார். ஏன் சார், உங்களிடமிருந்து ஸ்ரீவஸ்தவா பற்றி ஒரு கண்டனமும் வரவில்லை?

  கர்வா சௌத் என்ற நோன்பு இக்காலத்திற்கு பொருந்தாதது என்றே கொண்டாலும், ஆண்கள் பண்டிகைகள் எதுவுமே இருந்தது இல்லை என்றே கொண்டாலும், அதற்கு சுவாமி விவேகானந்தரின் படத்தைப் போட்டு “Taking the aggression out of Masculinity” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடுவது சரியா? நிச்சயம் தவறு. கண்டிக்கப்பட வேண்டிய செயல். ஏன் எனில் இளைய தலைமுறையினர் விவேகானந்தரைப் பற்றிய தவறான புரிதலுக்குள்ளாகும் அபாயம் அதில் மிக உண்டு. அதைத் தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

  இதில் குறுக்கே நுழைந்து கண்டனம் தவறு என்று சொல்வது, இவர் சொல்வது போல் ஸ்ரீ ராமானுஜர், விவேகானந்தர் போன்றோர் செய்த தொண்டுகளுக்கு ஒப்பாகுமா? இல்லை. மாறாக இந்த கண்டனக் குரல்களையே அசட்டை செய்து முற்றிலும் நிறுத்தி விட முனையும் ஒரு செயலாகும்.

  ஒரு கூட்டத்தில் 10 பேர் ஒரு விஷயத்தை ஆதரித்தால் அது சரியென்றே தெரிந்தாலும் தவறென்று வாதிட்டு பெருமை தேடிக் கொள்ள விதண்டா வாதம் செய்வது சரியல்ல. இப்போது நமக்குத் தேவை மாற்றங்களும், சீர்திருத்தங்களும் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதைச் சொல்ல, இடம், பொருள், ஏவல் எல்லாம் உண்டு. ஆனால் இந்த இடத்தில் அதைக் கூற முற்படுவது ஸ்ரீவஸ்தவா போன்ற தீயசிந்தை உடையோரை மென்மேலும் ஊக்கப்படுத்துவது போலாகும்.

  பிரச்னை இங்கே கர்வா சௌத் பற்றி அல்ல; விவேகானந்தரின் படத்தைப் பற்றியது. இதைப் பற்றி நாங்கள் யாரும் வாய் திறக்கக் கூடாது என்று சொல்வது சீனக் கைக்கூலிகளின் செயலுக்கொப்பானது. நாங்கள் எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதில் இந்த இடத்தில் குறுக்கிடல் தங்களின் நியாயமான கருத்தை வலியுறுத்துவது போல் இல்லை. மொத்த கண்டனக் குரல்களையும் நிறுத்தி “சர்தான் நிறுத்துப்பா! நீங்களெல்லாம் பேச வந்துடீங்க!” என்பது போன்ற அதிகப்பிரசங்கித்தனமாகவே தெரிகிறது.

  எதிர்ப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்! சரியான புரிதலுக்கு நன்றிகள்!

 56. ஓநாய்க் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு ஒரு மான் உயிருக்குப் போராடிக் போராடிக் கொண்டிருக்கும் போது பின்னால் ஒரு சிறு நரி வந்து கடிப்பது போல் உள்ளது சிலர் செய்வது .

 57. பாதிரி: என்னப்பா ஆங்கிலம் , பாத்து ரொம்ப நாள் ஆச்சு, தோத்திரம்
  ஆங்கிலம்: தோத்ரம் , தோத்ரம் .

  பாதிரி: என்ன , நான் சொன்னா மாறி தமிழ் ஹிந்துல நல்லா கலக்கரியா, சாரி கொழப்பரியா?
  ஆங்கிலம்: ஆமாங்க சாமி

  பாதிரி : ஹிந்துக்கள நல்லா ஈசியா கொழப்பலாம். ஏதாவது கேள்வி கேட்டுட்டா போதும் . எப்டியாவது நம்மள திருதிப்படுத்த லாஜிகலா பதில் சொல்ல மண்டைய கசக்குவானுங்க.
  நாம கண்டுக்காம அவனுங்க என்ன சொன்னாலும் மேல மேல கொழப்பணும். சம்மந்தமில்லாம மொட்டத்தலக் கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடணும். அவனுங்களுக்கு ஒண்ணும் புரியாது. எப்டியாவது நம்ம கிட்ட நல்ல பேர் வாங்கிடம்னு அலைவானுங்க. நம்ம பின்னாலயே சுத்துவானுங்க. இதான்யா நம்ம துருப்பு சீட்டு.

  அவனுங்க ஒண்ணு சொல்ல நாம ஒண்ணு கேக்கணும் . கடசில அவனுங்களுக்கு என்ன செய்ரதுன்னு புரியாது. அப்டியே நின்னுடுவானுங்க.
  நாம கெலிச்சுட்டோம்னு பாக்ரவனுங்க நெனபானுங்க. இன்னும் நாலு ஹிந்துங்க நம்ம மதத்துக்கு வர்வானுங்க.

  நாம அந்த காலத்துலேந்து இப்டிதான்யா பொழப்பு நடத்தறோம் . அது இன்னும் நல்லா வளரணும்.

  ஆங்கிலம்: கவல படாதிங்க சாமி , நான் பாத்துக்கேறேன்

  பாதிரி: தோத்ரம், தோத்ரம்

  ஆங்கிலம்: தோத்ரம் சாமி

 58. குற்றம் செய்தவர்கள் மென்மேலும் தங்களை நீதி எதுவும் செய்யாது என்ற துணிவில் மட்டுமே செய்கிறார்கள்.

  செயல் படாத போலீஸ் , ஒரு ஜன்மத்துக்குள் [!] நீதி வழங்காத நீதித்துறை- இப்படி கேவலப்பட்டு கிடப்பதன் மூன்று காரணம்

  1.காங்கிரஸ்
  2.காங்கிரஸ்
  3.காங்கிரஸ்

  உண்மையில் மக்கள் கோபம் அன்னா ஹஜாரே திசை திருப்பலுக்கு பின் இப்போது காங்கிரஸ் பக்கம் முழுக்க திரும்பியுள்ளது.அவர்கள் மக்கள் கோபத்தை மீண்டும் திசை திருப்பி ஆக வேண்டும் . தேர்தல் மிக அருகில் உள்ளது. பாவம் அவர்கள்.

  திசை திருப்பல் செய்வதில் வல்லவர்களான , கொலை. கற்பழிப்பு குற்றம் புரிந்தோரை தங்கள் கட்சியில் இருந்து விலக்கவும் மனமில்லாத [ இதை ஏன் கேட்பதில்லை சிரிக்காத வாச்தவாகள் மற்றும் அவர்களது நண்பர்கள்? கேட்க மாட்டார்கள் அய்யா ] காங்கரஸ் மற்றும் அவர்களது உதவாக்கரை ஊழல் கூட்டணி கட்சிகள் , அவர்களது மௌத் பீசான மீடியா இவர்கள் சதியை புரிந்து கொள்வோம்.

  திருடன் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு ” திருடனை பிடிங்க” என்று கத்திக்கொண்டே ஓடுவது ஒரு நல்ல உத்தி.மறுபடி மறுபடி ஏமாறுவது நமக்கு அழகல்ல .

  அபிஷேக் மனு சிங்வி என்ற காங்கிரஸ் பெருந்தகை கவர்மெண்டு கட்டிட வளாகத்துள் செய்த லீலைகள் பற்றி மீடியாக்கள் பேச விரும்பவில்லை. ட்விட்டர் முதலிய மக்கள் மீடியாக்கள் அதை சாதித்தன.

  விரதங்களை பற்றியோ, இதிகாசங்களை பற்றியோ பொய்களை திரித்து பேசி நம்மை திசை திருப்பும் முயற்சி இது. புரிந்து கொள்வோம். நம் விரதங்களுக்கு நாம் யாருக்கும் சமாதானங்கள் சொல்ல தேவையில்லை. ஏனென்றால் ,

  அவர்கள் ஆட நினைப்பது கிரிகெட்டே அல்ல. ஸ்டம்ப்பை உடைப்பது அவர்கள் நோக்கம்மல்ல. மட்டையாளர் முக எலும்பை உடைப்பதே நோக்கம்.

  புரியாதொர்க்கு மீண்டும் சொல்கிறேன். நடப்பது திசை திருப்பல் நாடகம் .

  எது காலத்திற்கு ஏற்ற விரதம் , எது [ காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போன்று போன்று ] தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

  சாய்

 59. திசை திருப்பல் மன்னர்கள் ரொம்பவே பயந்து போயிருக்கிறார்கள்.

  மீண்டும் சுவாமி விவேகானந்தரை பற்றி அவுட்லுக் பத்திரிகை இங்கே ஜுரத்தில் பினாத்துகிறது . .
  https://www.outlookindia.com/article.aspx?283497

  இதற்கு திரு அரவிந்தனின் பதிலடி இங்கே.
  https://centreright.in/2013/01/swami-vivekananda-a-hindu-supremacist/#.ஊP4வ்ஂ2cவ்CK5

  முடிந்தவர்கள் இவ்வருடம் சுவாமிஜியின் படம் போட்ட நாட்காட்டி ஒன்றை வாங்கி கண்ணில் படும் சுவற்றில் மாட்டி வைப்போம்.

  இந்நாட்டின் மக்கள், பொய் புரட்டுகளை வெற்றி கண்டு , வாழ்வில் வெற்றி பெற இது ஒரு ஊக்க சக்தியாக இருக்கும்.

  சாய்

 60. விவேகானந்தரை முன்நிறுத்தி மோதி அவர்கள் மேற்கொண்ட அரசியல் பிரசாரம் உண்மையிலேயே ஹிந்துகளிடமும் குறிப்பாக ஹிந்து இளைஞர்களிடமும் ஒரு புதுவித வேகத்தையும் எழுச்சியையும் தூண்டிக் கொண்டிருக்கிறது என்பது யதார்தம். இதைகண்டு இந்த காங்கிரஸ் கம்யூனிஸ்ட் (இன்று கம்யூனிஸ்ட் கிருஸ்துவம் இரண்டும் இந்தியாவில் ஒன்றா கலந்துவிட்ட ஒரு குழப்ப தேசவிரோத கும்பல்) பயம்கொண்டிருக்கிறது. அதனால்தான் இப்படிப் பட்ட எதிர் மறையான சில அவதூறு பொய் பிரசாரங்களை பரப்ப முனைந்திருக்கிறது. இதை கண்டெல்லாம் அஞ்சாமல் ப.ஜ.கா மற்றும் எல்லா ஹிந்து இயக்கங்களும் விவேகானந்தரின் ஹிந்துத்துவ கொள்கைகளை தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும்.

 61. முதலில் அன்பர் தமிழ் / Tamil அவர்களின் குதர்க்கங்களை புறந்தள்ளலாம் என நினைத்தேன். தவறான நிலைப்பாடுகளைத் களைதல் நல்லதே என்பதால் மறுப்புகள்.

  \\\these nuts\\\\\

  Sri.Kalyanaraman on 19th Jan had perfectly articulated the facts. It was made clear that these were not just nuts but juts devoid of threads.

  \\\\\These nuts have the guts to hurt only Hindu sentiments,\\\\\

  \\\\\\No guts are required to pinpoint in Hindu religious practices and social philosophy of life what is out of joints with our times. It is real service to the religion. \\\\\

  Dear Tamil, whereas there is not much of difference betwen my sentence and your first sentence, I could not but laugh after reading your second sentence. The readers of this forum can very much differentiate between chalk and cheese.

  But again, you have really missed the point. What I conveyed in my reply was this. Hindus and Hinduism being soft targets, no guts are required by leftist intellectuals to indluge in hit and run pssing comments on same.

  The nut who tried to extrapolate the posture of Swami Vivekananda to that of male chauvinism and eventually link that to crimes like rape —– had he ever questioned or had the guts to write about maoist terror tactic of raping the women recruits? the readers may read the following url. If anyone had come across any article in “The Hindu” or any article written by so called left intellectuals condemning Mao terror on women folks of this country, the same may be shared.

  https://www.indiablooms.com/MedleyDetailsPage/medleyDetails251010a.php

  I hope you are the same as that of Joe Amalan Rayen Fernando @ Joe Amalan @ Joe @ Jo @ Thiruvazhmarban @ Kavya. Hope, “Tamil” is the latest avatar. If I am wrong, I stand corrected.

  A sample of Joe’s service to Hindu religion compiled by Shri.Gandarvan in one of Sh.Malarmannan’s article, “புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை” is reproduced below :-

  I am not casting any aspersions or insinuations and just putting forth bare facts. Its for the readers to take a call. And yes, dear tamil, if I am factually wrong, you are most welcome to correct them.

  \\\\\\\\\\\\\\\\\ கந்தர்வன் on July 31, 2011 at 6:58 pm

  ஜோ அமலன்,

  வெகு நாட்களாக நீங்கள் எப்படிப்பட்டவர் என்ன கூற வருகிறீர்கள் என்று நான் இணைய தளத்தில் பார்த்து வருகிறேன்.

  “வேதங்களில் இடைச்செருகல் – ஆங்காங்கே அவரவர் வசதிக்கேற்ப சேர்த்துக்கொண்டு விட்டனர்”, “மணிப்ரவாளத்தை மக்களை மயக்குவதற்காக வைணவ ஆச்சாரியார்கள் உபயோகித்தார்கள்”, “தொண்டரடிப்பொடி ஆழ்வார் இஸ்லாமிய ஜிகாதிகளைப் போல”, “வைனவர்களைப் பொறுத்தவரை சிவபெருமான் ஒரு false God” என்றெல்லாம் எழுதிவிட்டு, வைணவத்திற்கு நீங்கள் தொண்டு செய்வது போன்ற ஒரு மயக்கத்தை இங்கு ஏற்படுத்த வேண்டாம். வேதத்திலேயே இடைச்செருகல் உள்ளது என்று கூறும் எவனுக்கும் மற்றவர்கள் வைணவத்தைப் பற்றி எழுதுவதில் குறை சொல்ல அருகதை இல்லை.

  நான்கு வேதங்கள் தான் வைணவத்திற்கு அடிப்படை – ஸ்ரீவைஷ்ணவத்தை வேதத்திலிருந்தும் வடமொழியிலிருந்தும் நீங்கள் வேருடன் பிடுங்கி எடுத்துக் காட்ட முயற்சி செய்வது வீண்.

  சரணாகதி என்றால் என்ன, அதன் ஆறு அங்கங்கள் என்ன இதெல்லாம் தெரியாமல் வைணவத்தை இஸ்லாத்துடன் சம்பந்தப்படுத்துவது வேறு!

  ஜோ அமலன் இணையத்தில் கூறியுள்ள பொன்மொழிகள் இங்கே:

  ——————————–

  “திருமாலே ஒரே பரம்பொருள் என்றால், மற்ற தெய்வங்கள் பொய் என்றுதான் பொருள். அத்தெய்வங்களைச்சாத்தான்கள் என்று ஓப்பனாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”

  ——————————–

  “கிடைக்கட்டும். நாம் அதைப்பற்றியா பேசுகிறோம். நீங்கள் எவ்வளவுதான் நல்லவராயிருப்பினும், திருமாலைத் தொழாமல் பர தெய்வங்களை (சிவனும் அடக்கம்) தொழுதால், you are out, according to Azvaars and also, today Srivaishnavas.”

  ——————————–

  “What is your answer to my point that Thondarippodiyaazvaar wanted to cut off the heads of Buddhists, Jains, and Atheists?

  Ditto with Muslims who want to behead kafirs.

  You want the paasuram from Thirumaalai.”

  ——————————–

  “Similarly, if azvaars declare that only Thiurmal is the God, it means all other Gods and goddesses are false.

  Exactly like fanatical muslims and chritian evangelists declare.”

  ——————————–

  “In other words, monotheism, with slight difference. The Thirumall is to be worshippied along with his Consort Sri as she will help you take your representations to Him.

  Otherwise, this monotheism is akin to Islam.”

  ———————————

  “வேள்விக்குடி, முக்கூர் நரசிம்மாச்சாரியார் – இவர்கள் சிரி வைணவர்களே. ஆயினும், ஆச்சாரியர்கள் இல்லை.

  ஜீயர்களே ஆச்சாரியர்கள்.”

  ———————————

  chillsam சொல்கிறார்:

  செப்டம்பர் 6, 2010 at 10:07 மு.பகல்

  Jo Amalan Rayen Fernando
  அவர்கள் மிக நேர்த்தியாக எழுதி வருகிறார்கள்; உங்கள் வைணவ ஞானத்தினை சாதாரண பின்னூட்டத்தில் நிறுவிட இயலாது;

  தாங்கள் விரும்பினால் எமது தளத்தில் இந்த காரியங்களைத் தொடராக எழுத அன்புடன் அழைக்கிறேன்;
  https://chillsam.activeboard.com/

  மேலும் தங்களது தொடர்பு மின்னஞ்சல் முகவரியையும் அளிக்க வேண்டுகிறேன்;
  https://www.chillsam@yahoo.co.in
  https://chillsam.wordpress.com/

  சர்வவல்ல ஏகக்கடவுளான சிருஷ்டி கர்த்தாவும் பரம்பொருளும் ப்ரஜாபதியுமான சர்வேஸ்வரன் தாமே உமக்கு நீடித்த ஆயுளையும் நிறைந்த ஞானத்தையும் தந்தருள்வாராக‌.\\\\\\\\\\\\

  ததாஸ்து.

 62. Hindu news paper is proxy run by ran by appointing non family members as editors,sub editors. there was a big tussle between Ram and his brother murali . Each line up their family members and finally it was decided to leave the news paper to be run by officials appointed by the board of directors. who are they ? Siddharth varadarajan came from new delhi.you can see most of the remote control operators in this news paper particularly mr.Ram married to a christian malayalee who ensured all sub editors and reporters are of their religion from kerala. In fact Ram participated in a meeting with archbishop and other priests when Jayalalitha in her previous government banned conversion of religions faith which badly affected the agenda of missionaries. Ram connection with christians missionaries is well known. He was remotely in control of music academy till recently when his brother mr.murali was the president when all muslims and christans chorles were part of their cultural programme. Ram is the agent of some evengalists in america through his wife like sonia came under the disguise of wife of rajiv gandhi.

  All readers who abuse hindu continue to read this anti hindu news paper simply because this has been practiced by them and change of style of english langauge is not liked by them. hindu publish special edition on christmas and give importance to their church in sunday special editions. To train young news reporters,sub editors and media communication , Ram run along with his old communist friend sasikumar ( cochin newsreader and editor of asianet in kerala ) a big college for mass communications under the name of ” Asian institute of communication” near chennai. so naturally all those passed out of this college gets placement in this anti hindu news paper.

  what can you expect from them brainwashed young students who will write anything to tarnish hindu cultural to get pat from their masters in this news paper.

 63. ஹிந்து பத்திரிகைக்கு கண்டனங்கள் . புதிய வாசகராக என்னை இணைத்து கொள்வதில் மகிழ்ச்சி .
  வெ.சு . கணேசன் . திருவாரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *