ஆடுகின்ற கடலில் -நம்மை
ஆட்டு கின்ற மனதில் -இருளைச்
சாடுகின்ற கதிரில் -அறவோர்
சாந்த மான நகையில் -ஆங்கோர்
வேடு வச்சி நடையில் -நெஞ்சம்
விம்மு கின்ற கலையில் -தோன்றிப்
பாடும் அன்னை சக்தி! பார் பார்!
பரவுதங்கு செந்தீ!
கோவி லுக்கு வெளியே -தெய்வம்
கொள்ளை கொள்ளை யாக! தென்றல்
பாவி யாடும் வெளியில் -தங்கள்
பசிய டங்கும் குடிலில் -பெண்கள்
மாவி டிக்கு மழகில் -நெடிய
மரம சைக்கும் கிளையில் -சின்னப்
பூவிளிம்பி லெல்லாம் -நின்று
புன்ன கைக்கு தம்மோய்!
சோத ரர்கள் மாந்தர் -நம்மைச்
சுமப்ப வர்கள் வேந்தர்! கற்பு
மாத ரார்கள் தெய்வம்! இன்ப
மழலை யாவும் செல்வம்! உலக
வேத னைகள் தீர்க்கச் செய்யும்
வேள்வி மனித நேயம்! என்று
பாத ரங்கில் வீழ்வோம் அதுவே
பக்தி யென்று கண்டோம்!
பூச னைக ளெல்லாம் -தோள்கள்
புடைத்தெ ழுந்த ஆக்கம்! கோலம்
வாச லெங்கு மதுவே-வறியோர்
வாழ்வில் வசந்த ராகம்! அமரும்
ஆசனங்கள் நெஞ்சம்! அவளுக்
கால யங்கள் கொள்கை! இந்தத்
தேச மினிய தெய்வம்! உண்மைத்
தெரிசனங்கள் காண்போம்!
ஆள வேண்டும் செல்வம் -நம்மை
ஆளு கின்ற தந்தோ! உண்மை
வாளெ டுத்து வீசு! அவளை
வணங்கு! வீரம் பேசும்! ரெண்டு
தோளி ருப்ப தெல்லாம் -மற்றோர்
துயர்து டைக்கவென்றே! தம்பி
காளி அடங்கமாட்டாள்! செல்வக்
கட்டி லென்று கண்டோம்!
ஆடு! ஆடு! ஆடு!-உண்மை
அன்பு வாழ்க்கை பேணு! இருளைச்
சாடு! செய்கை யோச்சு! மனிதர்
சங்க டங்கள் போக்கு! அந்தக்
காடும் சடையும் வேண்டாம்! இங்கே
கலி பிளக்க வந்தோம்! அவளைப்
பாடு தம்பி பாடு! இந்தப்
பாருன் கையி லாடும்!
தத்து வங்க ளெல்லாம் -பகலில்
தடமி லாத வர்க்கு! அந்தப்
புத்த கங்க ளெல்லாம் -ஏய்க்கும்
பூச்சி புழுக்களுக்கு! நமக்குச்
சத்தி யங்கள் வேண்டும்! தம்பீ
சாத னைகள் வேண்டும்! பார் பார்!
சக்தி யோடி வந்தாள்! உண்மைச்
சந்நி திக்குள் நின்றாள்!
வாழ்வு ரொம்ப லேசு! இந்த
வான மொற்றைத் தூசு! நம்மைச்
சூழ்ந்தி ருக்கும் மனிதர் -அவர்
சுதந்தி ரங்கள் மேன்மை- பொய்யி;
ஆழ்ந்தி ருக்கும் வீணர் -வாளுக்
கவர்த லைக ளென்றே-அந்தப்
பாழ்தி ருப்பு புனலை! யாவும்
பரா சக்தி லீலை!
ஒன்று கூடி நிற்போம் -நித்தம்
உடல்வ ருத்தி யுண்போம் -யார்க்கும்
நன்று நாடி நிற்போம்! கலைகள்
நவந வங்கள் பயில்வோம்! வாழ்வில்
அன்று மின்று மென்றும் -இங்கே
அன்பு மட்டும் உண்மை! தம்பீ!
வென்று நிற்க வந்தோம்! சக்திக்
கென்று நம்மைத் தந்தோம்!
அருமையான கவிதை. நவராத்திரியின் சக்தியைத் துதிக்க அருமையான எளிமையான பாடல்.
Very good saying. Thanks.
வணக்கம்
காலத்திற்கேற்ற கவிதை. வடித்தவருக்கும் பதிப்பித்தாருக்கும் உளம் கனிந்த நன்றி
அன்புடன்
நந்திதா
வெரி குட். Manadhi thulaitha kavithai.
simply super
அருமையான எளிமையான பாடல்.
அன்னையை மனதார நினைத்து ஓம் என்று கூறுங்கள் வெறுமை உங்களை விட்டு ஓடிவிடும் இது எனது அனுபவம்
உக்கிரதாரா காலி அம்சம் உக்கிரதாரா என்றல் சரஸ்வதி உக்கிரமணல் அவள் தன காலி மகாகவி காளிதாஸ் வானங்கியகாளி அன்னையை அனுதினமும் யும் ஓம் ஹ்ரீம் கிரீம் பட் இவரு உச்சரிக்கவேண்டும் நம்மை அறியாமலே பல நல்லவிஹயங்களை நக்கு அருள்வாள் -ஓம்
இனிமை ஆனந்தம் அற்புதம் ! கவிதையை யாத்தவருக்கு நன்றிகள் பல. வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கும் நன்றிகள். வையகம் உய்ய அன்னை பராசக்தியை வணங்கி, அவள் வாழ்த்தினைப் பெறுவோம். அவளே எல்லாமாய் இருக்கிறாள் என்பதை ஒவ்வொரு நொடியும் நமது மனத்தில் நிலை நிறுத்துவோம். வையகம் வளமுடன் வாழ்க.
me lord Shiva Vishnu namasivaya ohmnamasivya permanaya namahka ohm Vishnu namasivaya ohmnamasivya permanaya namahka ohm Vishnu namasivaya ohmnamasivya