மோதியின் வரலாற்றுத் தவறுகள்

morning_hindutvaரேந்திர மோதி  ஜம்மு பொதுக்கூட்டத்தில் முக்கியமான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

ஜம்முவின் பொதுமக்களுடன் கணிசமான அளவு  காஷ்மீரி முஸ்லிம்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் “காஷ்மீருக்கு தனி அந்தஸ்து  தரும் 370வது சட்டப் பிரிவு உண்மையில் அங்குள்ள மக்களுக்கு என்ன நன்மை செய்திருக்கிறது என்பதை விவாதிக்க வேண்டும்” என்று கோரியிருக்கிறார்.  “காந்தி சொல்படி கட்சியைத் தான் கலைக்கவில்லை. சில வருடங்களுக்குப் பிரிவு இந்த 370வது சட்டப் பிரிவு காலாவதியாக வேண்டும் என்றார் நேரு. அவர் சொன்னதையும் செயல் படுத்தவில்லை” என்று காங்கிரஸ் காரர்களுக்கே மறந்து போய்விட்ட வரலாற்றை நினைவூட்டியிருக்கிறார் மோதி.

ஆனால் மோதியின்  உரைகளில் வரும் சில சில்லறை வரலாற்றுத் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் தான் காங்கிரஸும் ஊடகங்களும் முனைப்பு காட்டுகிறார்கள். ராகுல் காந்தியின் சலிப்பூட்டும் உரைகளில் வரலாறும் கிடையாது; புவியியலும் கிடையாது; அவ்வப்போது அவர் எடுத்து விடும் மொக்கைத் தகவல்களில் கூட தவறுகள் இருக்கின்றன. அதை ரொம்பவே சிரமப் பட்டு பூசி மெழுகுகிறார்கள். ஆனாலும் சந்தி சிரிக்கிறது.

தனது பொதுக் கூட்டங்களுக்கு வரும் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு நடுவில் மோதி வரலாற்றைப் பேசுகிறார்; அதுவும் ஏதோ கதை சொல்வது போல அல்லாமல் சமகால பிரக்ஞையுடன் அதை முன்வைக்கிறார். இது தான் இங்கு முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது.

modi_jammu_rallyமுதலாவது, ஒவ்வொரு மாநிலத்தின் பிரதேச பண்பாட்டின் பெருமிதங்களை மரியாதையுடன் குறிப்பிடுகிறார் மோதி. அவற்றை இந்திய தேசியத்துடன் இணைத்து, அதனுடன் தன்னை உணர்வு பூர்வமாக அடையாளப் படுத்திக் கொள்கிறார்.  திருச்சி கூட்டத்தில்,  வ.உ.சி உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார் என்று உள்ளூர் பாஜக காரர்கள் தந்த பிழையான தகவலைப் பேசி சொதப்பினாலும் கூட,  தமிழகத்திற்கும் குஜராத்திற்கும் தனக்கும் உள்ள பிணைப்பைப் பற்றி மிக அழகாகவே பேசினார். பெங்களூரில் மகாத்மா பசவேஸ்வரர்,  கனகதாசர், கித்தூர் ராணி சன்னம்மா ஆகியோரைப் பற்றிக் குறிப்பிட்டார்.  லாலு பிரசாத் யாதவ் விபத்துக்கு உட்பட்ட போது, மோதி அவரிடம் நேரடியாகப் பேசி நலம் விசாரித்ததை லாலு ஊடகங்களிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாராம்.. பாட்னா பொதுக் கூட்டத்தில் மோதி பேசும்போது, “யது வம்ச திலகன் ஸ்ரீகிருஷ்ணன் அல்லவா துவாரகையில் வந்து ஆட்சி செய்து எங்கள் பூமியையே உய்வித்தான்? எனவே என்னதான் எதிரணியில் இருந்தாலும் அவரிடம் இயல்பான சினேகமும், யது வம்சத்தவரிடம் என்றென்றைக்குமான நன்றியுணர்வும் குஜராத்தியான எனக்கு இருக்காதா என்ன?” என்று சகஜமாகக்  கூறினார்.

இந்தியா என்பது தில்லியில் உட்கார்ந்து கொண்டு ஒரு  ராஜ குடும்பத்தால் அதிகாரத்துடன்  “ஆளப் படும்” நிலம்; மாநில அரசுகளும் தலைவர்களும் அந்தக் குடும்பத்தின் ஏவலாளிகள் என்பது தான் காங்கிரஸ் அரசியல் கொள்கை. அதற்கு நேர் எதிராக,  குஜராத் என்ற ஒரு மாநிலத்தின் தலைவராக படிப்படியாக உயர்ந்து,  பிறகு தேசிய அரசியலில் தன்னை  நேர்மையாக, முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு தலைவனின் மொழியை மோதி பேசுகிறார்.

இரண்டாவது, மறக்கடிக்கப் பட்ட வரலாறுகளை மோதி நமக்கு நினைவூட்டுகிறார்.

ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, “மான்கரில் (Mangarh)  நமக்காகத் தியாகம் செய்த பலிதானிகளையும், அவர்களின் தலைரான குரு கோவிந்த் என்ற மகா புருஷனையும் நினைவு கூர்வோம்” என்று  மோதி பேசியது எல்லா பத்திரிகைகளிலும் முக்கிய செய்தியாக வந்தது.  மான்கர் மலைப் பகுதியின் மகத்தான சுதந்திர எழுச்சி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? செய்தியைப் பார்த்த ஒரு சிலராவது மான்கரின் வரலாற்றை தெரிந்து கொள்ள முயற்சி செய்திருப்பார்கள். ராஜஸ்தானின் பனஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கர் என்ற மலைக்கிராமத்தில் 1913ம் ஆண்டு நவம்பர் மாதம், பீல் (Bheel)  எனப்படும் வேட்டுவர் சமுதாயத்தைச் சேர்ந்த 1500 வனவாசிகள் பிரிட்டிஷாரால் ஈவிரக்கமின்றி சுடப் பட்டு உயிரிழந்தார்கள். காலனிய அரசுக்கு எதிராக குரு கோவிந்த் வழிநடத்திய அவர்களது கிளர்ச்சி முழுமையாக ஒடுக்கப் பட்டது. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு ஈடான இந்த தியாக நிகழ்வின் நூற்றாண்டுத் தருணம் இது. அதைத் தான் மோதி நினைவு கூர்ந்தார்.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா
ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா

“குஜராத்தில் பிறந்த தேசபக்த வீரர். இங்கிலாந்தில் கல்வி கற்கச் சென்ற ஏழை இந்திய மாணவர்களுக்காக இந்தியா ஹவுஸ் என்ற விடுதியை உருவாக்கியவர். அங்கிருந்து கொண்டு தான் வீர சாவர்க்கர் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்” என்று பேசிக் கொண்டே வந்த மோதி, அவர் பெயரை “ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா” என்பதற்குப் பதிலாக, தவறுதலாக “ஷியாமா பிரசாத் முகர்ஜி” என்று குறிப்பிட்டு விடுகிறார் (ஷியாமா பிரசாத் முகர்ஜி பா.ஜ.கவின் முன்னோடியான ஜனசங்கத்தின் நிறுவனர்). மேடையில் இருக்கும் மற்ற தலைவர்கள் சுட்டிக் காட்டியதும், அந்தப் பேச்சின் இறுதியிலேயே அதற்கு மன்னிப்பும் கேட்டு விடுகிறார். அடுத்த நாள் தி இந்து உட்பட எல்லா நாளிதழ்களிலும், முதல் பக்கத்தில் மோடி மேடையில் செய்த “தப்பு” செய்தியாக வருகிறது.  அந்த தப்பு படிப்பவர்களுக்கு முழுதாகப் புரிய வேண்டும் என்பதற்காக அந்த இரு தலைவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பும் வருகிறது. தேசத்தலைவர்கள் என்றால் அது நேரு காந்தி மட்டும் தான் என்ற காங்கிரஸ் பரப்புரைகளில் ஊறிப் போய் விட்ட பொதுஜனம், அதே பிரசார ஊடகம் மூலமாக, பலரும் மறந்து போய் விட்ட உன்னத தேசபக்தர்களைப் பற்றி தெரிந்து கொள்கிறது. மோதியின் சிறு பிழையால் விளைந்த ஒரு நற்பயன்.

மூன்றாவது, சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலகட்டங்களில், அரசியல் அணுகுமுறையில்  நேருவுக்கும் படேலுக்கும்  இருந்த  அடிப்படையான வேறுபாடுகளை, முரண்களை நாம் விவாதிப்பதற்கும், புரிந்து கொள்வதற்குமான ஒரு சூழலை மோதி உருவாக்கியிருக்கிறார். ஒரு வகையில், நேருவியர்களின் போலி மதச்சார்பின்மைக்கும்,  இந்துத்துவர்களின் ஒருங்கிணைந்த தேசியவாதத்திற்கும் இடையேயான மோதல் தான் இது. இன்றைய தேசிய அரசியல் களத்தில், 2014 தேர்தலிலும் கூட முக்கிய பிரசினையாக இருக்கப் போகும் விஷயம் இது.  இதில், தங்கள் கட்சியின் முது பெரும் தலைவரான படேல், தங்களுக்கு எதிர்த் தரப்பில் போய் நின்று கொண்டிருப்பதை அசௌகரியத்துடனும், திகிலுடனும் காங்கிரஸ் உணர ஆரம்பித்திருக்கிறது.

“படேலும் செக்யுலர்வாதி தான். அவருக்கும் நேருவுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும், அரசு அதிகார அடுக்குகளில் வழக்கமாக எழும் சிறு சச்சரவுகள், பிணக்குகள் வகையைச் சேர்ந்தவை” – ஒரு பக்கம் இத்தகைய மழுப்பலான வாதங்கள் சில நேருவியர்களால் வைக்கப் படுகின்றன. குஜராத்தில் படேலின் பிரம்மாண்ட சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது, தனது பூனைக் குரலில் மன்மோகன் சிங் இதே கருத்தைத் தெரிவித்தார். ராமச்சந்திர குஹா விஸ்தாரமாகத் தனது புத்தகங்களில் பட்டும் படாமலும் இதை எழுதிச் சென்றிருக்கிறார். இந்தியா என்னும் ஒன்றிணைந்த நவீன தேசத்தை உருவாக்கிய சிற்பியான படேல் மீது குறைந்த பட்ச நன்றியுணர்வாவது கொண்ட நேருவியர்களின் தரப்பு இது.

patel_frontlineஇன்னொரு பக்கம், “படேல் ஒரு அப்பட்டமான மதவாதி; வகுப்பு வாதி; தீவிரப் போக்கு கொண்டவர். மாகாணங்களை ஒன்றிணைத்த அவரது செயல்பாடுகள் எல்லாமே கடும்போக்கு கொண்டவை. அதனால் தான்  மோதி அவரைத் தனது ஆதர்சமாக முன்வைக்கிறார். நாம் படேலின் அரசியல் சித்தாந்தங்களை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்”  என்ற வாதங்களும் சில நேருவியர்களால், குறிப்பாக இடது சாய்வு கொண்டவர்களால் வைக்கப்  படுகின்றன. இந்த வாரம்,  “படேல் நேரு & மோடி”  என்ற கவர் ஸ்டோரியுடன்  ஃப்ரண்ட்லைன் இதழ் வெளிவந்துள்ளது. உள்ளே முழுக்க முழுக்க படேலை மதவெறியர், வகுப்பு வாதி, அடிப்படைவாதி என்றெல்லாம் சித்தரிக்கும் “ஆதார பூர்வமான” கட்டுரைகள் செக்யுலர் மேதாவிகளால் எழுதப் பட்டுள்ளன.   படேல்  மாகாணங்களையும் சமஸ்தானங்களையும் ஒன்றிணைக்கவில்லை, மவுன்ட்பேட்டன் தான் அதை செய்தார்,  படேல் இரும்பு மனிதர் என்று அழைப்பதற்குத் தகுதியானவர் அல்ல என்று  படேல் மீது திட்டமிட்டு சேறு பூசியிருக்கிறது இந்தப் பத்திரிகை.

*********

இது எல்லாவற்றையும் விட பெரிய வரலாற்றுத் தவறுகளை மோதி செய்கிறாரே.. தன்னை ஒரு ஹிந்து தேசியவாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்.  வேஷத்திற்காகவும், வாக்கு வங்கியைக் குறிவைத்தும் இஸ்லாமியக் குல்லாய் போடும் போலித்தனத்தை கை விடுகிறார். குஜராத் கலவரம் தொடர்பாக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டால், எனக்குத் தண்டனை கொடுங்கள்; மோதியை தூக்கில் போடுங்கள். சும்மா மன்னிப்பு கேட்க சொல்லி விட்டு விடாதீர்கள் என்று தைரியமாக காமிராவுக்கு முன் எகிறுகிறார்… இதையெல்லாம் அவர் நிறுத்திக் கொண்டு மற்ற அரசியல் வாதிகள் போலவே சகஜமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவரது தேர்தல் வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாகும் என்று புத்திமதி கூறுகிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். ஆனால், இந்திய இளைஞர்கள் இன்று எதிர்பார்ப்பது பழைய பெருச்சாளிகளை அல்ல;  புதிய வரலாற்றை எழுதும் சக்தி படைத்த புதிய தலைவரை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

மோதியின் பேச்சுகளில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாற்றிலும் “தவறு”களைத் தோண்டி எடுப்பதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.  எல்லா மத்திய மாநில அரசு தலைமைகளும், எழுதப் படாத விதிகளின் படி, அவ்வப்போது தங்கள் அரசியல் எதிரிகளை, தங்களை கவிழ்க்க சதி செய்யலாம் என்ற சந்தேகத்திற்கு உரியவர்களைக்  கண்காணிப்பதும் உளவறிவதும் உண்டு.  வழக்கமாக நடப்பது தான். மாநில காவல் துறை, உளவுத் துறையினரும் இதில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்பதும் எல்லாருக்கும் தெரிந்த ரகசியம். ஆனால் குஜராத் ஐ பி எஸ் அதிகாரி ஒருவர் இப்படி செய்தது தொடர்பான விவகாரத்தை பூதாகரமாக்க முயன்று அது மண்ணைக் கவ்வி விட்டது.  இப்போது வேறு என்ன குயுக்திகள் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு நடுவில், ஏதோ பயங்கரமான பரபரப்பு செய்தி தருவதாக எண்ணிக் கொண்டு “மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி” என்று பேஸ்புக்கில் பழைய குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள் அ.மார்க்ஸ் போன்ற ஆசாமிகள். 2009ல் ஒரு பத்திரிகை இதைக் கிளறியது. 2012 குஜராத் தேர்தலிலேயே காங்கிரஸ் காரர்களும் ஊடகங்களும் கூச்சல் போட்டு, அதனால் எந்த எதிர்விளைவும் ஏற்படாமல் பிசுபிசுத்து ஓய்ந்து போன விஷயம் இது.  சலிக்காமல் அதை எடுத்து தமிழில் மீண்டும் எழுதுகிறார்கள். Estranged Wife என்பதை “தள்ளிவைக்கப் பட்ட மனைவி” என்று எழுதுவது மொழிப்புலமைக் குறைவு மட்டும் அல்ல. கேவலமான மோசடி, அப்பட்டமான திரிபு.  உண்மை என்ன?

modi006குஜராத்திலும், ராஜஸ்தானிலும் உள்ள பல சமூகங்களின் வழக்கப்படி  சிறு வயதிலேயே  ஜசோதாபென் என்ற சிறுமியை, பாலகன் நரேந்திர மோதிக்கு நிச்சயித்து ஒரு “பால கல்யாண” சடங்கை குடும்பத்தினர் 1968ல் நடத்தியிருக்கிறார்கள்.  பொதுவாக, இது போன்ற முறையில், இருவரும் பெரியவர்களானதும் வேறு எந்த பிரசினையும் ஆட்சேபங்களும் இல்லை என்றால்,  கவுனா (Gauna) என்ற முறையான திருமணச் சடங்கு நடத்தப் பட்டு அவர்கள் கணவன் மனைவி ஆவார்கள்.  பிரசினைகளோ ஆட்சேபங்களோ இருந்தால், பழைய ஒப்பந்தம் தானாக ரத்தாகி விடும். வேறு இடங்களில் வரன் பார்த்து கல்யாணம் முடிப்பார்கள்.  நரேந்திர மோதி விஷயத்தில் 18 வயது ஆனவுடன்,  அவர் திருமண வாழ்வில் ஈடுபட தனக்கு விருப்பம் இல்லை, சமூக சேவையும் தேச சேவையுமே முக்கியம் என்று கூறி விடுகிறார். இமயமலையிலும் வட இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் துறவி போல அலைந்து திரிகிறார். பின் திரும்பி வந்து  ஆர் எஸ் எஸ் பிரசாரகராக, முழு நேர ஊழியராக ஆகி விடுகிறார்.   கவுனா திருமண சடங்கும் நடைபெறவில்லை.

அந்த சமூக நடைமுறைகளின் படியே கூட, ஜசோதாபென் வேறு ஒருவரை மணம் புரிந்திருக்கலாம். ஆனால் மோதி இப்படி சொல்லி விட்டதால், தானும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஜசோதாபென் தனது சுய விருப்பத்தின் பேரிலேயே முடிவெடுத்து விடுகிறார்.  இந்தியாவில், குறிப்பாக கிராமப் புறங்களில் பெண்கள் இது போன்ற  ஒரு வைராக்கியத்துடன் இருப்பது ஆச்சரியம் அல்ல.  அதன் பிறகு, ஒரு சிறிய கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக அவர் பணீயாற்றி வருகிறார்.  மோதியின் வளர்ச்சியிலும் பெருமையிலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறார். அனாவசியமாக ஊடகங்கள் அவரைத் தொந்தரவு செய்வதை, சீண்டுவதை அவர் வெறுக்கிறார். கிராமத்துப் பெண்களுக்கே உரிய வெள்ளந்தித் தனத்துடன் “அவர் ஒரு நாள் மீண்டும் என்னிடம் வரலாம்” என்று கேட்பவர்கள் சிலரிடம் சொல்கிறார். தான் முதல்வரான பிறகு சில முறை மோதி குஜராத் தலைநகர் காந்தி நகரில் வசிப்பதற்கு அழைத்தும் அவர் செல்லவில்லை.

இது தான் விஷயம். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்ததாக இருந்தாலும் கூட, பொதுவாழ்வில் தலைவர் என்று வந்து விட்ட காரணத்தால், வெளிப்படையாக மோதியே நேர்காணல்களில் இந்த விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப் பட்ட புத்தகங்களிலும் இந்த விவரணம் தெளிவாகவே உள்ளது. இதில் பூடகமாகவோ, சட்ட விரோதமாகவோ, அற மீறலாகவோ ஒன்றுமே இல்லை. ஆயினும் அ.மார்க்ஸ் போன்ற அற்பர்கள் மோதிக்கு எதிராக இத்தகைய மலினமான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

நரேந்திர மோதி என்ற மனிதர் மீது, அவரது தகுதிகள், திறமைகள், சாதனைகள், கனவுகள் மீது  மாபெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் கோடிக் கணக்கான இளைஞர்களை இந்த சில்லுண்டித் தனமான பிரசாரங்கள் எதுவும் திசை மாற்றி விடாது. ஊழலின் மொத்த உருவமான காங்கிரசையோ அல்லது மற்ற சுயநல அரசியல் கயவர்களையோ மீண்டும்  தேர்ந்தெடுக்க அவர்கள் துணிய மாட்டார்கள். 2014 தேர்தல்  இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய வரலாற்றுத் தருணம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். “வரலாற்றின் தவறுகளில் இருந்து பாடம் எதுவும் கற்றுக் கொள்ளாதவர்கள்,  மீண்டும் அதே தவறுகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப் படுவார்கள்” என்ற பொன்மொழியையும்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

13 Replies to “மோதியின் வரலாற்றுத் தவறுகள்”

  1. Antonia Mino வின் காதல் மணாளனும் முன்னாள் PM ம் ஆன ராஜிவ காந்தி சென்னையில் காங்கிரஸ் தலைவர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் சம்பந்தமான ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது சத்தியமூர்த்தி என்று சொல்லுவதற்கு பதிலாக “குருமூர்த்தி, குருமூர்த்தி” என்று ஒரு முறை அல்ல பலமுறை குறிப்பிட்டாராம். இதைப் பற்றியெல்லாம் ஒரு விவாதமும் அப்போது செய்யவில்லை. ஆனால் ஒரு பிரசார கூட்டத்தில் பேசும் போது “சியாம்ஜி கிருஷ்ணா வர்மா” என்று சொல்வதற்கு பதிலாக “ஷ்யாம் பிரசாத் முகர்ஜி” என்று கூறிவிட்டாராம்! “Good homer sometimes nods ” என்றாலும் “”தவறுதலாக மாற்றி சொல்லிவிட்டேன்”” என்று மோடி அதே கூட்டத்தில் வருத்தம் தெரிவித்தும் அதை பெரிய பிரச்சனையாககி இந்து பத்திரிக்கை கட்டுரை எழுதுகிறது. அதாவது மோடி பொய்யான தகவல்களை தருகிறார் என்று இந்து போன்ற பத்திரிக்கைகளும் போலி மதசார்பின்மைவாதிகளும் வாதிடுகிறார்கள்.

    1)கருணாநிதி இலங்கை மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கையில் “போர் நிறுத்தப்பட்டுவிட்டது” என்ற சிதம்பரத்தின் பொய்யான தகவலின் பேரில் கருணா தான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இரண்டே மணி நேரத்தில் முடித்து கொண்டார். ஆனால் அதற்கு பிறகுதான் 65000 இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்படி பொய் சொன்னதர்கான சிதம்பர ரகசியம்தான் என்ன?
    2)சத்திஷ்கர் மாநிலத்தில் 11-11-2013 அன்று ஜஷ்பூர் மாவட்டத்தில் Kunkuri தொகுதியில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் Jogi பேசும்போது போட்டியிடும் வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளரைத் தவிர வேறு நபர்களுக்கான EVM ல் உள்ள button ஐ மக்கள் அழுத்தினால் Shock அடிக்கும் என்று “”பச்சை பொய்” சொன்னார்.
    3)ராஜிய சபா காங்கிரஸ் உறுப்பினர் ரஷீத் மசூத் “”டெல்லி சும்மா மசூதி அருகே 5 ரூபாவுக்கு வயிறு முட்ட மதிய உணவு கிடைக்கிறது” என்று பொய் சொன்னார். இன்று அவர் சிறையில் களி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.
    4)”என்றென்றும் புன்னகை” என்ற படத்தில் பெண்களை இழிவு படுத்தி பேசியதாக வீரமணியின் விடுதலை நாளிதழில் “”பார்ப்பன நடிகன் சந்தானம்” என்று செய்தி வெளியிட்டது. உண்மையில் சந்தானம் ஒரு கவுண்டர்.ஆகவே இப்படி ஒரு பொய் செய்தி வெளியிட்ட வீரமணியை என்ன செய்தீர்கள்?
    5″ஏழை பங்காளன் வாழும் மாடி வீட்டை பாருங்கள்” என்று காமராஜர் வாழ்ந்த வாடகை வீட்டை படம் எடுத்து போஸ்டர் ஒட்டிய கருணாநிதியை என்ன செய்தீர்கள்?
    6. காஷ்மீரில் 370 வது பிரிவு 10 ஆண்டுகாலமே அமுலில் இருக்கும் என்று கூறி நேரு 17 ஆண்டு காலம் PM ஆக இருந்தார். ஆனால் அதை இன்று வரை ரத்து செய்யவில்லை. இது பொய்யான வாக்குறிதி இல்லையா?

    மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடமா?

  2. //தவறுதலாக “ஷியாமா பிரசாத் முகர்ஜி” என்று குறிப்பிட்டு விடுகிறார் //

    மறைந்த வாஜ்பாயி என்று பொது கூட்டத்தில் உளறிய சிவகங்கை சிறுவர் கூட , மோதி வரலாறு படிக்க வேண்டும் என்று பேசமுடிகின்றது என்றால் — பத்திரிக்கைக்காரன் திருப்பி வரலாறு கேள்வி நம்மிடம் கேக்கமட்டான் என்று ஒரு நம்பிக்கை.

  3. இந்திய இளைஞர்கள் இன்று எதிர்பார்ப்பது பழைய பெருச்சாளிகளை அல்ல; புதிய வரலாற்றை எழுதும் சக்தி படைத்த புதிய தலைவரை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். // மிகச் சரியான புரிதல் திரு. ஜடாயு. உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் ஆதங்கம். சரிந்து கொண்டிருக்கும் கலாச்சார கட்டமைப்பைச் சரி செய்ய எங்கேனுமிருந்து ஒரு புழுவோ பூச்சியோ வந்து விடாதா இந்த நாட்டை மீண்டும் தன் இயல்பான நிலைக்குக் கொண்டு செல்லாதா என்று ஏங்கிக் கிடக்கும் இளைஞர்களிடையே இப்படியொரு புருஷோத்தமனே வந்து சிக்கினால் விட்டு விடுவார்களா…?

    எல்லோரும் சொல்வது போல் இது மோடி மேனியா கிடையாது. தேசத்தின் மீதிருக்கும் அக்கறையால் பாதுகாவலனைத் தேடும் மேனியா. நீங்க கிளம்புங்க சோனியா.

  4. மிக அருமையான பகிர்வு. என்னதான் மோதியின் மேல் சேற்றை வாரி வீசினாலும், பெய்யும் மழையானது சுத்தமாய்க் கழுவி விட்டு விடுகிறது என்பதே உண்மை. பகிர்வுக்கு நன்றி.

  5. நரேந்திர மோதி இந்திய அரசியலில் ஒரு வேகத்தையும் விறுவிறுப்பையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரை எது நடந்தால் என்ன, எது போனால் என்ன தேசிய கொடியை ஒத்திருக்கிற தமது காங்கிரஸ் கொடியையும், நேரு வம்சத்தையும் காட்டி வெற்றி பெற்றுவிடலாம் என்று கணவு கண்டுவந்த காங்கிரஸ் காரர்களுக்கு அடிவயிற்றைக் கலக்குகிறார் மோடி. உலகமே உற்று நோக்குகிற இடத்தில் இருந்து கொண்டிருக்கும் மோடி தன்னுடைய பேச்சை ஒருமுறைக்கு பல முறை மனத்தில் நிறுத்தி, தான் சொல்வது சரியா தப்பா என்று கேட்டுத் தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. நீங்கள் குறிப்பிட்டபடி திருச்சி கூட்டத்தில் வ.உ.சி.யையும் உப்பு சத்தியாக்கிரகத்தையும் தவறாகக் குறிப்பிட்டபோது தமிழ் நாட்டு ஹெச்.ராஜா மொழி பெயர்ப்பின்போதாவது திருத்தியிருக்க வேண்டும். இவர்கள் இன்னமும் சற்று கவனமாகச் செயல்படுவது எதிர்காலத்துக்கு நல்லது. நாளைய பிரதமர் என்கிற முறையில் மோடி தன பேச்சை இன்னமும் கவனத்துடன் தயார் செய்ய வேண்டுமென்பதில் தவறு இல்லை.

  6. அன்பின் ஸ்ரீ ஜடாயு, வ்யாசத்தின் தலைப்பை கொஞ்சம் நயமாகப் போட்டிருக்கலாமே. காலைக் காஃபி (தேநீர்) உடன் இந்த மாதிரி ஒரு தலைப்பைப் பார்த்ததும் சொறேல் என்று இருந்தது. தேசவிரோத மதசார்பின்மை சக்திகளை நன்றாக விளாசித் தள்ளியுள்ளீர்கள். மோதியின் விவாஹத்தைப் பற்றிக் கேவலமான முறையில் இணையத்தில் கருத்துப் பகிரும் ஜந்துகளின் முகத்திறையை கிழித்தது மட்டுமின்றி உண்மை எது என்ற விஷயத்தையும் அறிய முடிந்ததற்கு நன்றி.

    காந்தியடிகள் மற்றும் நேரு இவர்களுக்கு வெளியேயும் ஹிந்துஸ்தானத்தில் சுதந்திரத்திற்காகவும் தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் பல பெரியோர்கள் பாடுபட்டுள்ளனர் என்ற விஷயத்தை பொதுதளத்தில் நரேந்த்ரபாய் விவாதத்திற்கு கொணர்ந்தமை அருமை.

    இத்தாலி ராஜமாதாவின் வீட்டுப் பூனையான மனமோஹன சிங்கனார் அவர்கள் படேல் எங்க கட்சி அவர் மதசார்பற்றவர் என்று மியாவ் மியாவ் என சத்தம் போட்டாலும்….. காங்க்ரஸ் என்ற தேச விரோத இயக்கத்தின் தேச விரோத முகங்களான பத்திரிக்கைகள்……படேல் என்ற தேச பக்தரை — காங்க்ரஸ் மற்றும் பரங்கிய சர்ச்சின் பணத்தை வாங்கிக் கொண்டு — மதவெறியர் வகுப்புவாதி என விமர்சிப்பது — காங்க்ரஸ் என்ற தேச விரோத இயக்கத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதையே தெரிவிக்கிறது.

  7. அ .மார்க்ஸ் எனும் ஒரு அடிமடையன் 2009 ல் கக்கிய ஒரு விஷ(ய)த்தை மீண்டும் சில விஷமிகள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர் மோடியின் face ஐ deface செய்திட வேண்டும் ஒரே குறிக்கோளோடு இந்த கேடி,பேடிகள் facebook யை நாடி ஓடுகிறார்கள். மோடியை அசிங்கபடுத்த எது கிடைக்குமோ என்று தேடி தேடி பார்ததுகொண்டிருக்கினர். ஒருநாள் அசிங்கப்படுத்த முடியா விட்டால் அன்று இரவு தூங்கமாட்டார்கள் போலிருக்கிறது!

    திரு ஜடாயு தனது கட்டுரையில் நல்ல விளக்கம் கொடுத்துள்ளார் . இதற்கு பின்னரும் இதை பற்றி மீண்டும் மீண்டும் குப்பை கிளறினால் இந்த கயவர்கள் குப்பைக்குத்தான் சமம். Good bye !.

    (Edited and published)

  8. உள்ளத்தில் விஷமும் பேச்சில் அமிர்தம் கொண்ட அரசியல்வாதிகள் இடையே மோடி பேச்சில் காணும் கவன சிதைவு மக்களை பாதிக்காது.

  9. நரேந்த்ரபாய் அவர்களின் வரலாற்றுத் தவறு.ஜம்முவில் அவரது பேச்சு.

    ஷரத்து 370 ஐ நீக்குவது சம்பந்தமான ஒரு விவாதத்தைத் துவக்குவதற்குப் பதில் ஷரத்து 370ஐ ப் பற்றிய விவாதத்தை துவக்கியுள்ளார். அறுபது வருஷங்களாக ஊசிப்போன விவாதம் ஷரத்து 370ஐ ப் பற்றிய விவாதம்.

    பேந்தர்ஸ் கட்சியின் அத்யக்ஷகர் ப்ரொஃபஸர் பீம் சிங்க் அவர்களது வ்யாசம் ஷரத்து 370 சம்பந்தமாக – நம் தளத்து வாசகர்களின் பார்வைக்கு

    https://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=3032

  10. மோதியின் வரலாற்று தவறுகள் என்ற பதிப்பை வருட தாமதமாக படிக்கும் வாய்ப்பு
    கிடைத்து படித்தேன் மிகவும் அருமையாக திரு ஜடாயு அவர்கள் எழுதியுள்ளார்கள் நன்றி. தலைப்பு கொஞ்சம் நயமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *