திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

சுதந்திர இந்தியாவில் திராவிட பிழைப்பு வாதம் என்பது துவங்கி ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த 100 ஆண்டுகளில் தமிழ் இனவாதத்தை விறகாக்கி மக்களின் அறிவை பெட்ரோலாக்கி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் பிழைப்பு வாதிகள் எவ்வளவு தீமைகளை செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் அறுவெறுப்பும் அசூயையும் தான் மிஞ்சுகிறது. ஒரு பெரும் ஜனத்திரளையே சாராயத்திற்கும், மலினமான ஆபாச சிந்தனைக்கும், கலாச்சார சீர்கேடுகளுக்கும் ஆளாக்கி கலாச்சார அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட இயக்கங்கள். தின்னும் உணவுக்கு கூட இலவசமாக பிச்சை எடுப்பதை பெருமைக்குரிய அடையாளமாக்கி இருக்கிறது திராவிட இன அரசியல்.

மக்கள் திரளை மதி மயக்கி, அறிவுச்செயல்பாடுகளை முற்றிலும் இல்லாமலாக்கி அடி முட்டாள்களாக ஆக்கி இருக்கிறது திராவிட இயக்கங்கள். கழைக்கூத்தாடிகளை மட்டும் கொண்டாடிக்கொண்டு ஏனைய சுய சிந்தனைகளையும் அறிவுச்செயல் பாடுகள் அனைத்தையும் எள்ளி நகையாட செய்துள்ளது தான் கடந்த 100 ஆண்டுகளில் திராவிட இயக்கம் சாதித்தது. அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல். எளிய ,முட்டாள் தனமான அற்ப சிந்தனை ஒரு சமூகத்தையே இவ்வளவு தூரம் பின் தள்ளும் என்றோ, அடி மடையர்களாகவும் , அடிமைகளாகவும் இருப்பதை பெருமையாகவும் எடுத்துக்கொள்ளும் என்றோ மானுடவியலாளர்களோ, கலாச்சார ஆய்வாளர்களோ சொல்லியிருந்தால் கூட நாம் நம்பி இருக்க மாட்டோம்.

துவக்க புள்ளி

திராவிட இனவாத அரசியலின் ஆரம்பப்புள்ளி என்பது 18ம் நூற்றாண்டில் மக்களை பிரித்து ஆள வேண்டும் என்பதற்காகவும், பாலைவன மத விஷத்தை பரப்புவதற்காகவும்,ஐரோப்பிய கீழ்மைகளை மறைத்து கொள்வதற்காகவும் திட்டமிட்டு மாக்ஸ்முல்லர், பெஸ்கி பாதிரியார் மற்றும் ஜோஸப் கால்டுவெல் உள்ளிட்ட ஐரோப்பிய இனவெறியர்களும், மதவிபசாரம் (வியாபாரம் என்பது விபசாரம் என தப்பாக அச்சிடப்படவில்லை, சரியாக விபச்சாரம் தான் . மங்கல வழக்கில் வேண்டுமானால் ஆன்ம அறுவடை )செய்யவும், இந்த தேசத்தின் மக்களை ஆக்ரமித்து சுரண்டவும் செயல் படுத்திய அரசியல் ஆயுதம் தான் திராவிட ஆபாசத்தின் துவக்கம். 19ம் நூற்றாண்டில் அயோத்தி தாச பண்டிதர் இந்த நோயால் சில காலம் மனம் பிறழ்ந்து இந்த வீண் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார். உச்ச கட்டமாக 1916 ல் தேர்தல் என்பது திருடர் பாதை என்று சொல்லி வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் சுரண்டல் திராவிடர் கழக கும்பலின் மூலமான  நீதிக்கட்சியின் துவக்கத்திலிருந்து பார்க்கலாம்.

kumudam_cartoon_dmk1இப்போதுள்ள மக்களிடம் திராவிட இயக்கத்தின் கொடை  என்றால் என்ன? என்று கேட்டால் சாராயம் விற்று மக்களின் வாழ்க்கையில் மண்ண அள்ளி போட்டது. தினம் உண்ணும் உணவிற்கு கூட அரசின் இலவசத்தை எதிர்பார்த்து தட்டேந்தி நிற்க வைத்தது.750 ரூபாய் மதிப்புள்ள ஃபேனை கூட தன் உழைப்பில் சம்பாதித்து வாங்க வக்கில்லாமல் பிச்சையாக பெற வைத்தது. விவசாயத்தை துடைத்தெறிய பாடு படுவது, 47 ஆண்டுகளில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களோ, தொலை நோக்கு திட்டங்களோ இல்லாமலேயே மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது. புரட்சிகரமாக மக்களுக்கு புது புது வழிகளில் லஞ்சம் கொடுப்பது. தேர்தல்களில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதை ஒரு செவ்வியல் கலையாக வளர்த்தெடுத்து இருப்பது. மாற்று கருத்து சொல்பவர்களை கொன்றொழிப்பதை கம்யூனிஸ்ட்களிடமிருந்து பெற்று அதை மிகவும் நுட்பத்தோடும் ரசனையோடும் செதுக்கி எடுத்துள்ளது. தனிமனித ஒழுக்கம், பிறன் மனை விழையாமையில் துவங்கி கூட்டு கற்பழிப்பு வரை அனைத்தையும் நியாயம் என்பதாக மக்களை நம்ப வைத்தது.

தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது. சிந்திப்பது, வாசிப்பது எல்லாம் பாவச்செயல் என்று மக்களுக்கு போதித்தது. கட் அவுட் கலாச்சாரம். அறுவெறுப்பு வரும் வகையில் மற்றவர்களை புகழ்வது, சுய மரியாதை என்பதை தன் கட்சி தலைவனின் பேரன் முதற்கொண்டு அனைவரின் காலையும் அருகில் தரிசனம் செய்வது என்பது மாதிரியான அகராதிகளை ஏற்படுத்தியது. தமிழ் மொழியை பற்றி ஒன்றுமே தெரியாமலும் , அதன் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாமல் வாய் சவடாலில் அதை அழிப்பது….. இன்னும் ஒரு 1,76,000 கோடி சாதனைகள் இருப்பதால் நாகரீகம் கருதி இதோடு நிறுத்தி கொண்டு 1860-70 கால கட்டத்திற்கு செல்லலாம்.

1850 களுக்கு பிறகு பிரிட்டிஷ் இந்தியாவில் நாராயண குரு, சட்டம்பி சாமிகள் உள்ளிட்ட ஞான குருமார்கள், சாது திரு அருட்பிரகாச வள்ளலார், துவங்கி ஜோதிராவ் புலே, ராஜாராம் மோகன் ராய் , ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சுவாமி விவேகானந்தர் துவங்கி நெடிய அறிஞர் மரபு இந்து பண்பாட்டில் இடையில் புகுந்த வெற்று அரசியல் சடங்குகளையும், தேவையற்ற அடுக்கு முறைகளை களைந்து இந்து பண்பாடு அதன் பரிபூர்ண ஒளியில் ஒளிர தேவையான நடவடிக்கைகளை தங்கள் ஞானத்தால் செயல் படுத்தினார்கள்.

அறிவோ, ஞானமோ கைகூடாத எளிய மனிதர்கள் இவர்களின் மறு சீரமைப்பை வெறும் பிராமண எதிர்ப்பாக மட்டும் எளிமைப்படுத்தி கொண்டும் தங்களின் அதிகார சமன்பாடுகளில் வரும் பிழைகளுக்கு மேல் நிலை சாதி என நம்பப்படுபவர்களை குற்றம் சாட்டிக்கொண்டு மிஷனரிகளின் கவனமாக பின்னப்பட்ட சதி வலைகளின் முக்கிய கண்ணிகளாக மாறிப்போயினர். அப்படித்தான் பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் கேரளாவில் 1880 களில் துவங்குகிறது. நம்பூதிகளுக்கும் நாயர்களுக்கும் இருந்த அரசியல் சமன்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாடு நாயர்களை ஒரு அரசியல் இயக்கமாக அதை முன்னெடுக்க தூண்டியது. ஒடுக்கப்பட்ட புலையர்களுக்கும், ஈழவர்களுக்கும் நாராயண குரு சமூக அரசியல் மீட்சிக்கான நிஜமான காரியங்களை ஆத்மார்த்தமாக முன்னெடுத்ததால் அந்த சமூகங்கள் மீட்சியை நோக்கி சென்றன. சாதாரண அரசியல் சதிகளுக்கு மேல் செல்லத்தெரியாத எளிய மனிதர்களின் கையில் இனவாத அரசியல் வந்து சேர்ந்தது இப்படித்தான். அவர்களுக்கு நாராயண குரு சட்டம்பி சாமிகள் போல ஞானம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் அவர்கள் அரசியல் அதிகாரத்தை குறி வைத்து இந்த வலைக்குள் விழுகிறார்கள்.

இதன் பின் தொடர்ச்சியாக அன்றைய சென்னை ராஜதானியில் நடக்கும் பிரீமியர் தேர்தலில் டி.எம். நாயர், சர்.பி.டி. தியாக ராஜன், பொப்பிலி மகராஜா உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியை தழுவுகிறார்கள். இந்த மக்கள் ஆதரவில்லாத தோல்விக்கு பிராமணர்களே காரணம் என ஒரு கண்ணுக்கு தெரியாத காரணத்தை கற்பிக்கிறார்கள். அப்போது பிராமண சமூகமே அதிகம் கல்வி அறிவு பெற்ற சமுகமாக இருந்தது. வேலை வாய்ப்பிலும் அவர்களே முண்ணனியில் இருந்தனர். இது அப்போது பெரும் நிலச்சுவாந்தார்களாகவும், ஜமீந்தார்களாகவும் இருந்த பிற ஜாதியவர்களுக்கு கவலைக்குரியதாக இருந்தது. அப்போது உலகம் முழுக்க ஒரு ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஃப்ரென்ச் மறுமலர்ச்சி தோற்றுவித்திருந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் உலகை பிச்சைக்காரர்களாக தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் சர்வாதிகார கம்யூனிஸ சிந்தனை உலகம் முழுக்க தப்பும் தவறுமாக புரிந்து கொள்ளப்பட்டு வந்த காலம். கல்வி அறிவு பெற்றவர்கள் சுதந்திர சிந்தனைக்கும், ஜன நாயகத்திற்கும் ஆட்பட்டு தங்களுடைய நில உடைமைக்கு எதிராக ஜனத்திரளை திருப்பி விட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. பாமர மக்களுக்கு நடுவில் படித்தவர்கள் ஊடுருவி அவர்களை சுரண்டுவதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி விட்டால் தங்களின் நில உடைமைக்கும் வரி வசூலிப்பிற்கும், ஆடம்பர வாழ்விற்கும் ஊறு விளைந்து விடுமோ என்று பதட்டப்பட்டனர். இந்த சிந்தனை சாக்கடை சென்னை ராஜதானியில் மட்டுமின்றி, திருவனந்தபுரம் வரை ஓடியது. ஒருங்கிணைந்த ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் இருந்த நிலக்கிழார்கள் இதை தடுக்க பிராமண சமூகத்திற்கும் ஏனைய பிற சமூகத்திற்கும் இடையே ஒரு நச்சு ஏரியை வெட்டினர்.

அதை முழுக்க தங்களின் வெறுப்பு பிரச்சாரத்தால்  நிரப்பினர். சில எளிய பிராமண துறவிகளின் சடங்காச்சார பற்றையும், தீண்டாமையையும் கொண்டு பிராமண எதிர்ப்பு கரையை பலப்படுத்தினார்கள். பிளவு படுத்தப்பட்ட மக்களை வெறியேற்ற இத்தாலிய மிஷனரியான ராபர்ட் டி நொபிலி கண்டு பிடித்து கொடுத்துள்ள இனவாதத்தையும், மாக்ஸ்முல்லரின் மொழிசார் அடையாளத்தையும், தூய இன சிந்தனைகளையும் தங்களின் சாதனங்களாக ஏற்றுக்கொள்கின்றனர். இந்த களவாணித்தனத்தை ஒருங்கிணைக்க ஒரு நாளிதழ் துவங்குகின்றனர். அதன் பெயர் ஜஸ்டிஸ் . நீதி என்று பெயர் வைத்து கொண்டு அநீதி இழைத்த கும்பல் அன்பின் மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு அதிக கொலைகள் செய்யும் மார்க்கத்தின் வழியை அப்படியே பின்பற்றியது. ஏமாந்த தென் இந்திய ஆட்டுக்கூட்டம் திராவிட இனவாத ஓநாய்களின் பின்னே அப்படியே மே…, மே  என்று ஓடியது…ஓடிக்கொண்டிருக்கிறது.

justice-katchiபின்னர் அது அரசியல் இயக்க அவதாரம் எடுத்தது. ஜஸ்டிஸ்பார்ட்டி ஆனது. கறையான் புற்றுக்குள் பாம்பு குடியேறுவது போல நாய்க்கர் அதை கைப்பற்றினார். தமிழ் பெயரால் திராவிடத்தின் பெயரால் தங்களின் ஜமீந்தாரிமுறையை அங்கீகரிக்க மறுத்த அல்லது தங்களின் நில உடைமையை கேள்வி கேட்ட பிராமண சமூகத்தையும், பிராமணர்கள் சொல்கேட்டு செய்யும் வேலைக்கு கூலி கேட்டும், உழைப்பிற்கு தகுந்த ஊதியம் வேண்டும் என்றும் கேட்ட சூத்திரர்களை பழி தீர்ப்பதோடு காலம் காலமாக இவர்களின் வளர்ச்சியை அழிக்க சூளுரைத்த இயக்கமாக திராவிட இயக்கம் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

பொப்பிலி மகராஜா, சர்.பிடி தியாகராஜர், டி எம் நாயரில் துவங்கி அனைத்து நீதிக்கட்சி தலைவர்களும் எப்படி பெரும் நில உடைமையாளர்களாக இருந்தார்கள் என்பதையும் அவர்கள் அனைவருக்கும் எதிராக தொழிலாளர் போராட்டங்கள் ஏன் நடந்தது என்பது பற்றியும் தெரிய வரும் ஒருவருக்கு அவர்கள் ஏன் அரசியல் இயக்கம் துவங்கி மக்களை மண்ணாந்தைகளாக ஆக்க பாடு பட்டார்கள் என்பது புரிய வரும். மக்கள் மீது தீராத குரோதம் உள்ளவர்கள் மட்டுமே செய்யகூடிய தீமைகளை திராவிட இயக்கம் 100 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது செய்துள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் தாய் மொழிப்பற்று மிக்க திராவிட இயக்க முன்னோடிகள் ஏன் மொழி சார் வெறியை வளர்த்தெடுக்கிறார்கள் என்பதை யோசிக்கும் யாருக்கும் அதன் உள்ளரசியல் புரியும்.

ஆனால் இந்த இனவாத, மொழிவாத பிரிவினை பொருள் ஆந்திராவிலோ, கர்னாடகவிலோ, கேரளாவிலோ பெருமளவில் விற்பனையில் சூடு பிடிக்க வில்லை. இயல்பிலேயே கொஞ்சம் மந்தமான மன நிலையும், சோம்பேறித்தனமும் உள்ள தமிழ் ஆடுகள் இதற்கு அதிகமாக பலியாகின. சாதாரண அறிவு இருக்க கூடிய சிந்திக்க வாய்ப்பிருக்கும் யாரும் திராவிட இயக்க வரலாறை படித்தாலே அதன் முரண் பாட்டை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அனைத்து நில உடைமையாளர்களும் சேர்ந்து எளிய மக்களின் நில உரிமைக்காக போராடுகிறார்களாமே? தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் தமிழ் மோழியை தூய்மைப்படுத்தவும் அதன் மேன்மைக்காக வாழ்வை ஒப்புக்கொடுக்கவும் இருக்கிறார்களாமே? இது போன்ற கேள்வித்தொடர்களை வரிசைப்படுத்தினாலே அதில் உள்ள முரண் மெய் நம்மை அச்சப்படுத்தும். ஆனால் எந்த கேள்வியும் கேட்காமல் வாயையும் அறிவையும் மூடி வைத்து வாய்பிளந்து வேடிக்கை பார்த்து இன்னும் திராவிட இயக்கங்களுக்கு நிதி கொடுத்தும் அந்த இயக்கத்தில் உறுப்பினராகவும் தொடரும் சோகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு மட்டிகளாக இந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதை. இதை சொல்ல வரும் யாரையும் விஞ்ஞானிகளை திருச்சபை கொலைசெய்வது போல தமிழர்கள் தண்டனை தந்து விடுகிறார்கள். தெரியாமல் கூட இவர்கள் விழிப்புணர்வு அடைந்து விடக்கூடாது எனும் சதியின் கண்ணிகளை இன்னும் மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஒழுக்க கேடு எனும் தூண்டில்

திராவிட சதித்திட்டம் தேர்ச்சியாக தீட்டப்பட்டு ஒரு மாயாஜாலக்காரன்,குறளிவித்தைக்காரனின் நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.தமிழ் மக்கள் மீதான தீச்சொல்லாக அப்படியே அது நிற்கிறது. குறளி வித்தை காட்டுபவர்களுக்கும் சர்க்கஸ் சாகஸகாரர்களுக்கும் அதன் முழு பரிமாணமும் தெரிந்திருக்க வேண்டியதில்லை அல்லவா? அது போல திராவிட சதியை நடித்து நிறைவேற்றும் சிலருக்கு அதை பற்றி முழு விழிப்புணர்வு இல்லாமல் கூட இருக்கும். திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு கதை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமலே கூட நன்றாக நடித்து கொடுத்து விட்டு செல்வது போலத்தான். பல பாத்திரங்கள் தேர்ந்து அதை முழுமையாக்குவது போல. திரைப்படத்தை முழுமையாக பார்க்கும் போது தான் தெரியும் சிறு பாத்திரம் ஏந்தி இருக்கும் அந்த நடிகனின் பாத்திரம் எப்படி துல்லியமாக கதைக்குள் பொருந்தி வருகிறது என்று. இதெல்லாம் நம் வீட்டில் இருக்கும் திராவிட இயக்க உறுப்பினர்களுக்கு தெரியாமலே கூட அவர்கள் இந்த சதியின் பாகமாக இருக்கலாம். “ நள தமயந்தி திரைப்படத்தில் பெண் கதாபாத்திரம் ஆண் பாத்திரத்திடம் ஒரு விரல் செய்கையை குடியேற்ற துறை அதிகாரிகளிடம் காட்ட சொல்வார். என்ன என்று கமல்கேட்பதற்கு உனக்கு தெரியவேண்டாம் அவருக்கு புரியும் என்பார்.

திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம். அம்மா, அக்கா, தங்கை, அடுத்தவன் மனைவி,மகள் என்பதெல்லாம் சமூகம் நம் மேல் இட்ட குறியீடு தான் பாலியல் சிந்தனைகளுக்கும் செய்கைகளுக்கும் அது தடையாக இருக்க கூடாது. என்பதாக துவங்கி சாராயம் குடிப்பது எப்போதும் நல்லது. குடித்து விட்டு வந்து பெண்டாட்டி பிள்ளைகளை உதைப்பது நாகரீகம். முட்டாள்கள் தான் படிக்க வேண்டும். யாரையும் மதிக்க வேண்டியதில்லை. அனைவரையும் உன்னை விட கீழானவர்களாகே நினைத்து பழகு. அடிமையைபோல நடத்து. அறிவுச்செயல்பாடுகளை முற்றிலும் தடை செய். ஜனநாயகம் மட்டமானது, மன்னராட்சி முறையே சிறந்தது . தினம் குளிப்பது பாவம், பல் துலக்குவது பெருங்குற்றம். அடி முட்டாளாக இருப்பது உன் அடிப்படை உரிமை . ஆபாச வசை சொல் தான் இயல்பானது, நாகரீக மொழியில் மரியாதையாக பேசுவது பெரும் பாவம். குடும்பம் குழந்தை குட்டிகள் என சமூகத்தோடு இணைந்து வாழ்வது தண்டனைக்குரிய செயலாக முன்வைத்தது. இந்த எதிர் கலாச்சாரமே பாமரர்களையும் சில அறிவுள்ளவர்களையும் ஈர்த்து அவர்களின் வாழ்க்கையை அழித்து சமூகத்திலும் பேரழிவை ஏற்படுத்தியது. திராவிட சிந்தனையை தற்கொலை குண்டுகளோடு ஒப்பிட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள் அதன் நிஜப்பொருள் தானும் அழிந்து சமூகத்திலும் பேரழிவை நிகழ்த்தும் போராளியாக திராவிட இயக்கம் இருக்கிரது. என்பதை புரிந்து கொண்டு அந்த மன நலம் பாதிக்கப்பட்ட மக்களை நல்வழிப்படுத்த வேண்டியது நம் கடமையாகும்.

எதிர்கலாசார உத்தியாக அதன் தலைவர்கள்குறைந்த பட்சம் 3 அதிகாரபூர்வ திருமணம் செய்வது, வேசைகளுடன் கூத்தடிப்பது, பாலியல் வக்கிர சேஷ்ட்டைகளை பெருமையாக மற்றவர்களுக்கு சொல்வது. பொது இடங்களில் ஆபாச இரட்டை அர்த்தமுள்ள வக்கிரங்களை சொல்லி மற்றவர்களை நெளியச்செய்வது. போலீஸ் கார தகப்பன் தன் பெற்ற மகளோடு பாலியல் வல்லுறவு கொள்வது இலக்கியம் என்று பிதற்றுவது. ஜனநாயக நெறிமுறைகளை கடை பிடிக்காமல் தன் சந்ததிகளை மட்டும் பதவியில் அமர்த்துவது. அனைவரையும் காலில் விழச்செய்வது. படித்து கொண்டிருக்கும் தன் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வது இதில் நான் அன்பழகனையும், கருணாவை மட்டும் சொல்ல வில்லை. அனைத்து திராவிட இயக்க தலைவர்களுக்கும் இந்த குணங்கள் பொருந்தி வருவதை ஒப்பிட்டு பார்த்தாலே தெரிய வரும். எந்த குடும்பப்பெண்ணையும் தன்னுடன் படுக்கையறையை பகிர்ந்து கொள்ள வெக்கமில்லாமல் அழைப்பது, குடும்ப பெண்களை “ அவள் பத்தினியில்லை, நான் உத்தமனில்லை” என்று அடுக்கு மொழியில் தன் அழுகிப்போன மன நிலையை வெளியில் ஜோடித்து சொல்வது , சிறுமிகளை திருமணம் செய்வது, என்று எழுதகூசுமளவுக்கு கலாச்சார சீர்கேட்டின் வடிகாலாக இந்த நிறுவனம் இருக்கிறது.இது போன்ற எதிர்கலாச்சார நிகழ்வுகளுக்கு முன்மாதிரியாக இருப்பதை உலகிற்கு உணர்த்தவே ஈவேரா துவங்கி கருணா வரை நிர்வாண கிளப்களில் பங்கேற்பது, 3 திருமணம் துவங்கி குஷ்பூ, நமீதாவை அருகில் இருந்து காட்சி இன்பம் பெரும் வரைக்கும், மேலும் நார்சிஸ உச்சமாக செயல்படும் ஜெயலலிதா வரை இதை நீங்கள் பொருத்தி பார்க்கலாம்.

தமிழ் பொழி வியாபாரம்: இவர்களின் இன்னொரு வியாபார சாதனம் தமிழ் மொழி மேம்பாடு. எனும் பொய். இதை பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(தொடரும்)

கட்டுரை ஆசிரியர் வீர.ராஜமாணிக்கம்   ஒரு கட்டுமானப் பொறியாளர்.   தமிழ்நாடு  மாநில பா.ஜ.க  இளைஞர் அணி  செயற்குழு உறுப்பினர்; பொறியாளர் அணி செயலாளர்.  நல்ல இலக்கிய வாசகரும் சமூகத் தொண்டரும்  ஆவார்.

18 Replies to “திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?”

 1. நல்ல கட்டுரை. திராவிட இயக்கங்களில் மதி மயங்குபவர்களுக்கு மயக்கத் திரையைக் கிழித்துக் காட்டியிருக்கிறீர்கள். நல்ல ஆதாரங்களுடன் கட்டுரையைத் தொடர்ந்து எழுதுங்கள்.

 2. சகோதரரே !

  தங்களின் இந்த சிறப்பம்சங்கள் வாய்ந்த கட்டுரை – இன்றைய இளம்பெண்கள் / ஆண்கள் மற்றும் நாடெங்கிலும் உள்ள மக்கள், குறிப்பாக இந்துக்கள் படித்து பயன் அடைவார்கள் என்று நம்புகின்றேன். திராவிடம் என்பதே இல்லாத ஒன்று. தங்களின் வயிற்று பிழைப்புக்காக தமிழகத்தில் கழகங்கள் இந்த திராவிடம் என்னும் ஒற்றை சொல்லில், மலினமான, வேசித்தனமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். தங்கள் கட்டுரை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. இருப்பினும், தாங்கள் கையில் எடுத்துக்கொண்டுள்ள இந்த தலைப்பானது மிகவும் பாராட்டுக்குரியது.

  தங்கள் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

 3. மனிதம் ,மனித நேயத்தை அழித்த திராவிடம் நமது சமூகத்தில் கலந்து விட்ட மல கழிவு . விளக்க வேண்டிய விவாதம் அல்ல விலக்க வேண்டிய விஷம்

 4. ராஜமாணிக்கம் அவர்களே,
  பாராட்டுக்கள்! மிகவும் நன்றாக எழுதப் பட்ட கட்டுரை.
  ஆனால் இதை எளிய மக்கள், “மூளை-சலவை” செய்யப் பட்டவர்கள், எவ்வளவு தூரம் சரியாகப் புரிந்துகொள்வார்கள் என்பது ஒரு கேள்விக்குறியே! முதலில் அவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கவேண்டுமே! அதன் பின் அதை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டுமே! 100 ஆண்டுகளாக “மூளை-சலவை” க்கு உள்படுத்தப் பட்டவர்கள் இதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை காலம் மட்டுமே வெளிப் படுத்தும்!
  எப்படியிருந்தாலும், உங்கள் முயற்சி தொடரவேண்டும். இதே போல் பல கட்டுரைகளை மக்கள்முன் வைக்க தமிழ் ஹிந்து செயல்படுவது மிகவும் அவசியம்.

 5. Shri ராஜமாணிக்கம்
  Kudos, great incisive article.The parochialism and almost obnoxious obsession for Tamil language by the Tamils and colorful cinematic dialogues Annadurai and co and sarcastic wit of MK at the expense of Brahmins, have kept this Dravidian mob going for yonks in TN. Keralites, Kannadigas and Andhra people did not fall for this rubbish Dravidian ideology. Tamils are so gullible.
  In short, the cancerous Dravidian ideology and politics and personal hero worship of politicians and actors by the Tamils have stunted the growth of TN.

 6. திராவிட கட்சிகள் அழிக்க படவேண்டும் . ஈவேரா விதைத்த விஷ விதை – தற்போது மக்களிடம் எடுபடவில்லை . ஆபாச வசனம் பேச்சு – கோடி கொடியாக கொள்ளை -வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத சாராயம் கடைகள் – இலவசம் கொடுத்து மக்களை முட்டாள் ஆக்கிய கொடுமை – இதற்கு மக்கள் முடிவு கட்டவேண்டும் !

 7. anaivarum padikkumpadi ulladu.diravida adimai kolkaikal manathai vathaikkurathu.keduketta ivviyankalai makkal padithu sinthikka vendum.nanrikat pala.

 8. திராவிட இயக்கங்களை ஒழிப்பதற்கு முதல்படி திராவிட இயக்கங்கள் ஆதரித்த எல்லா விஷயங்களையும் எதிர்ப்பது. அதைச் செய்யாதவரை திராவிட இயக்க எதிர்ப்பு இப்படி எழுத்தில் மட்டுமே இருக்கும்.

 9. அருமையான கட்டுரை . அறிவாலயத்திற்கு ஒரு பிரதி அவசியம் அனுப்ப வேண்டும். அன்பழகனுக்கு மறக்காமல் ஒரு காப்பி அனுப்பவேண்டும்

 10. சாட்டை அடி அல்ல, காரம் பூசிய ஊசி முனை கொண்டு வெந்த புண்ணில் ஏற்றியது போன்ற வார்த்தைகளும் கருத்தும். ஆனால் திரு Dr R S Iyer குறிப்பிட்டதுபோல் வலிக்கவேண்டியவர்களுக்கு வலிக்கவேண்டுமே. தொடருங்கள் திரு ராஜமாணிக்கம் அவர்களே. மற்றைய தளங்களிலும் இதனை மறு பதிவிடுக.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

 11. கட்டுரை மிக்க நல்லது முக்கியமானதும் கூட. முதல் முயற்சிக்கு பாராட்டுகள். அனால் ஒரு வேண்டுகோள் , கூர்மையும் , உணர்வுபூர்வமாகவும் இருந்தால் மேலும் உள்ளுணர்வை தூண்டும் ஆயதமாக இருக்கும் என எண்ணுகிறேன்

 12. How much depth? How beautiful narration all from the heart and truth? No one has englighted about these people to us? We would have been better off ruled by muslims — Though they would have taken the culture they would never made to much relying upon Alcohol. They would have made us all slaves and would have raped our women, but would never made us slaves into Alcohol. How much values we loose because of this? Kids loose education, so many robbery because of the reliance on Alcohol. We lost our language and culture altogether because of this. WE ALL THINK WE ARE EUROPEAN INSIDE, WITHOUT LOOKING OUR HISTORY AND OUR IMAGE IN THE MIRROR

 13. This article has 50% truth and 50% false, can you explain who had abolished devadasi system, entering the temple premises by backward class, even now we can’t enter the sanctum santorium (srikovil or karuvarai), why this partiality in 21st century and who had given the rites for one group who can enter, they are also human being like us, they are not having any special quality. Have read “Manu smruthi”. you will be ashamed of such a barbaric system which was followed in our country.

 14. This is one sided and lacks any sense of balance. Tamilhindu should not belong to a handful of people, like the author of this article. Twisting social, religious and historical events to one’s advantage will not serve any meaningful purpose.

 15. Srinivasan should read malarmannan article about devadasi and aslo the book – dmk uruvanadhu en. Again & again copy/paste the content here is wasting time

 16. Very good article. But what to do minds are conditioned so foolishly those who loot them are referred as ” they have earned” as though it is their right. There are so many brain washed people who never ever want to know the truth and redicule those who tell the right thing.

 17. யாரய்யா நீர்.. மிகவும் ஆழமாக சிந்தித்து, உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளீர். தலை வணங்குகிறேன்..

 18. அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.- ராஜமாணிக்கம் சார் விரைவில் அடுத்த பகுதி வெளிவரட்டும். மலர்மன்னன் ஏற்கனவே பலவிஷயங்களை தோலுரித்து காட்டியுள்ளார். உங்கள் கட்டுரைகள் மேலும் தெளிவான விளக்கங்களுடன் அற்புதமாக அமைந்துள்ளன. இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாம் ஆண்டு நடக்கிறது. தொடருங்கள் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *