இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை

இந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? – இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை (55 நிமிடங்கள்) அங்கு வந்திருந்தவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதிலுள்ள சில கருத்துக்கள், அரவிந்தன் நீலகண்டன், பனித்துளி மற்றும் நான் இணைந்து எழுதிய “சாதிகள் – ஒரு புதிய கண்ணோட்டம்” நூலிலும், இன்னும் சில கட்டுரைகளிலும் தொடர்ந்து சொல்லப் பட்டு வருபவை தான். ஆனாலும், வாய்மொழியாக அவற்றை மேடையில் பேசும்போது இன்னும் மிக அதிகமான பேர்களைச் சென்றடைகிறது.

இந்த உரையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

2 Replies to “இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை”

  1. இந்த உரையை இன்னும் நான் கேட்கவில்லை. ஆனாலும் தற்காலத்திற்கு ஏற்ற முயற்சி. இதுபோன்று உரைகள், உரையாடல்கள், சர்ச்சைகள், விவாதங்கள் இவற்றை ஒலிக்காட்சிகளாக ஆக்கி இணையத்தில் ஏற்றுவது. மிக நல்லது. இந்த சிறந்த முயற்சி தொடரவேண்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

  2. வீடியோ குரல் தெளிவாக இல்லை. இது போன்ற முக்கியமான சொற்பொழிவுகளை தெளிவாக நவீன பதிவு செய்யும் கருவிகள் கொண்டு மீண்டும் பதிவு செய்து சீடி யாக வெளியிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *