சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்

சைவ சமயம் என்பது சிவனை முழுமுதற் தெய்வமாக போற்றுவது. ஆனால் நாம் பல்வேறு தெய்வ மூர்த்தங்களையும் வழிபடும் பண்பு உடையவர்கள். கணபதி முருகன் சக்தி விஷ்ணு நவக்கிரகம் என்று விரிவடைந்து செல்கிறது. தவறில்லை. நாயன்மார்களும் சித்தாந்திகளும் பல் தெய்வ வழிபாடு பற்றிப் பாடியுள்ளனர். காரணம் எமது வழிபாட்டு நேரம் அதிகரிக்கிறது. ஆத்ம சக்தி அதிகரிக்கிறது. இவ்வாறு எல்லாத் தெய்வங்களையும் போற்றுபவர்கள் இந்துக்கள் ஆனார்கள்.

பின்பு பொதுவாக இந்து சமயம் எனப் போற்றுகிறார்கள். இந்துப்பண்பாடு இந்து நாகரிகம் இந்து கலாச்சாரம் என்றும் இந்து அறநிலையத்துறை, இந்து கலாச்சார அமைச்சு, இந்து இளைஞர் சங்கம் என அமைப்புக்களும் தோன்றின.

ஒரு சிலர் இந்து என்ற வார்த்தைக்கு குறை கூறினாலும் பொதுவாக தனிச் சைவம் என்பது குறைவுதான். தனிச்சிவன் மட்டும் உள்ள ஆலயங்கள் இல்லை. மேலும் அபிராமி ஆதிபராசக்தி ஆஞ்சநேயர் ஐயப்பன் என்று பல வழிபாடுகளும் பரந்து வரும் வேளையில் நாம் இந்து என்று பொதுவாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

சைவரும் ஹிந்து என்கிறார்கள் வைஷ்ணவரும் ஹிந்து என்கிறார் .சைவமா? இந்துவா? வடமொழியா? தென்மொழியா? ஆரியமா? திராவிடமா?என்ற கருத்து மாறுபாடு வேறுபாடு உடன்பாடு முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கிடைத்த ஞானநூல்கள் வாயிலாகவும் ஞானிகள் ஆன்றோர்கள் வாயிலாகவும் சில உண்மைகளைக் காண்பதே நமது நிலைப்பாடு. எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம். பிரிவுபடுவதை விடுவோம். அளவில்லாமல் எல்லா இடமும் பெருகட்டும். பிளவில்லாமல் ஒற்றுமையாக இருக்கட்டும்.

சைவசமயம் போற்றும் சிவன் பல்வேறு மொழி பேசும் மக்களால் வழிபடப்படுகிறார் என்பதும் நாம் காண்கிறோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மொரீசியஸ், கன்னடம் இவ்வாறு பல உண்டு. எல்லாரும் நமசிவாய என்கிறார்கள். இது தமிழ் என்கிறார்கள் ஒருசிலர். ஆனால் போற்றி ஓம் நமச்சிவாய என்கிறார்கள். இங்கு ச் என்ற எழுத்து கூட சேர்க்கப்பட்டு ஐந்தெழுத்து அதாவது பஞ்சாச்சரம் ஆறெழுத்தாகி விடுகிறது.

பொதுவாக தமிழ் உச்சரிப்பில் நமசிவாய நமச்சிவாய என வந்துவிட்டது. உதாரணமாக நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இங்கு வடமொழி தென்மொழி இணைப்பை மணிவாசகரே ஆரம்பிக்கிறார். சைவ சமயத்தில் ஆரிய வேறுபாடே கிடையாது என்பதை விளக்கும் வகையில் “பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” என்று சிவனைக் கூறுகிறார்.

இங்கு ஆரிய என்பது உயர்ந்த போற்றுதலுக்குரிய என்னும்பொருளில் வரும். ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்பது அப்பர் வாக்கு.நாயன்மார்களுக்கு இல்லாத வெறுப்பு நமக்கு ஏன் ஆரிய வெறுப்பு வருகிறது. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி இங்கு ஆதி அந்தம் வடமொழியில் தானே விழித்தார். இறைமொழியை நாம் அழிக்கலாமா? கழிக்கலாமா? பழிக்கலாமா?

சிவபுராணத்தில் வரும் நாதன் என்றால் தலைவன் என்று பொருள்..நமஹ என்பது வடமொழி அதன் பொருள் போற்றுகிறோம் வணங்குகிறோம் சிவாய என்றால் சிவனுக்கு என்ற கருத்தாகும் நமசிவாய என்றால் அது வடமொழி. சிவனுக்கு வணக்கம் என்பதே இதன் பொருள். வடமொழி இலக்கணத்தின் படி சிவாய என்பது நான்காம் வேற்றுமை ஒருமை., சிவாயநம என்றும் பஞ்சாட்சரத்தை சொல்லலாம் என திருவருட்பயன் சொல்லுகிறது.

ஸ்தூல பஞ்சாட்சரம் சூக்கும பஞ்சாட்சரம் என்றவகை வடமொழி நூல்களில் உண்டு இதன் அடிப்படையில் சித்தாந்த சாஸ்திரங்களும் எடுத்தியம்புகின்றன. எனவே நமசிவாய வடமொழி என்பது நிரூபணமாகிறது. நமசிவாய ஒன்றை வைத்தே எமக்கேன் வேற்றுமை.

போற்றி ஓம் நமசிவாய என்றால் பஞ்சாட்சார மந்திரத்தைப் போற்றுவோம் என்று கூறுகிறார்கள் என மகிழலாம். நமசிவாய மட்டுமன்றி சரவணபவ என்பவர்களும் ஓம் சக்தி என்பவர்களும் உள்ளனர் மற்றும் வைஷ்ணவர்கள் ஓம் நமோ நாராயணாய என்பதும் நாம் அறிந்த வடமொழிச் சொற்களே ஆகும். திரியம்பகமந்திரம் காயத்ரி மந்திரம் தமிழர் அல்லாத பல சைவ அல்லது இந்து மக்கள் சொல்வதிலிருந்து சமஸ்கிருதத்தின் பரப்பு சைவத்தில் அதிகம் இருப்பதைக் காணலாம். எனவே வடமொழியை நாம் மதிக்க வேண்டும் மிதிக்கக் கூடாது.துதிக்க வேண்டும் அழிப்பதற்கு குதிக்கக் கூடாது.

சமஸ்கிருதம், வடமொழி, ஆரியம், சங்கதம் என்றெல்லாம் போற்றப்படும் மொழி சைவ சமயத்தில் மிக முக்கியமானது என்பதை நாம் ஆதார பூர்வமாகக் காணலாம் இன்று பல சமஸ்கிருத நூல்கள் மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. இணையத்தளங்களிலும் நிறைய உண்டு.. இருப்பினும் நம்மில் சில தமிழர் இது புரியாத மொழி என்று கூறுவதுதான் புரியவில்லை.

தமிழ் நூல்களிலும் சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. திருமுறைகளையும் சைவ சித்தாந்தத்தையும் மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளை போன்றது. சிறு பிள்ளைகளுடன் நாம் கோவிப்பதில்லை அப்பிள்ளை அறிவு வர அரிசியில் இருந்து தான் சாதம் வரும் என்று உணரும். அதே போன்றுதான் வடமொழியை வெறுப்பவர்களுடன் நாமும் சினம் கொள்ளக் கூடாது. அவர்கள் திருமுறை படிக்கும் போது இறை அருளால் வடமொழியும் வரும்.

வேத உபநிடத புராண இதிகாச கருத்துக்கள் கதைகள் என்பன தமிழ் இலக்கிய நூல்களிலும் சைவத் திருமுறைகளிலும் சைவசித்தாந்த சாஸ்திரங்களிலும் இறைவன் அருளால்ஆன்றோர்களும் நாயன்மார்களும். சந்தானாசாரியர்களாலும் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக நாம் அன்றாட வாழ்க்கையில் பழக்கப்படுத்தி வழங்கும் சொற்கள் வடமொழியாகவே உள்ளது. ஒருசிலவற்றை நாம் பார்தோமென்றால் விளங்கும். நீதி-அநீதி, நியாயம்-அநியாயம் ,கிரமம்-அக்கிரமம் சைவம் -அசைவம் இவ்வாறான எதிர்மறைச் சொற்களுக்கு வடமொழி இலக்கணம் உண்டு.

ஆன்றோர்கள் நாயன்மார்கள் வடமொழியை ஏற்று வடமொழிச் சொற்களும் கலந்து தமது ஞான நூல்களில் தந்துள்ளனர். சைவ சமய அல்லது இந்து சமய விடயம் பற்றிக் கூற வேண்டுமாயின் வடமொழி நூல் தொடர்பு கட்டாயம் இருக்கும் என்பதை அவர்கள் காட்டியுள்ளனர்.

சைவத் திருமுறைகள் அருட் பாடல்கள் சித்தாந்தசாஸ்திரங்கள் வைணவ பிரபந்தங்கள் என்பவற்றின் தொகை ஏறத்தாழ ஐம்பதினாயிரம் பாடல்கள் என்று வைப்போம் ஆனால் வடமொழி நூல்களாகிய வேதங்கள் பிராமணங்கள் ஆரண்யம் உபநிடதங்கள் புராணங்கள் உப புராணங்கள் இதிகாசங்கள்(மகாபாரதம் ,ராமாயணம்) என்பவற்றின் தொகை சுமார் ஐந்து லட்சம் .இவையும் இறைவன் அருளால் ரிஷிகள் ஞானிகளுக்கு கிடைத்தனஎன்று ஏன் நாம் நம்புவதில்லை. இந்நூல்கள் இன்றும் நூலகங்களில் இணையத்தளங்களில் உள்ளன.பன்னிரு திருமுறைகள் மின்னம்பலத்தில் உள்ளது போல் சமஸ்கிருத நூல்களும் மின்னம்பலத்தில் உள்ளன. சமய ஆன்மீக நூல்களில் தொகையளவில் சமஸ்கிருத நூல்கள் அதிகம் என்பதை நாம் மறைக்க முடியாது. குறைக்க முடியாது.

தமிழுக்கு எப்படி தொல்காப்பியமோ அதேபோல் வடமொழிக்கு பாணினி என்பதை பரஞ்சோதி முனிவரின் பாட்டு ஒன்று தருவதைக் கவனிக்கலாம்..

வடமொழியை பாணினிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெல்லாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார்

என்கிறார்.

அடுத்து கண்ணுதற் கடவுளும் கழகமொடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் என்ற பாடல் வரியும் உண்டு. எனவே தமிழ் பிரியர்கள் இவ் வரியை மாத்திரம் சொல்கிறார்கள், அதில் குறிப்பிடுவதுபோல் சில இலக்கண வரம்பிலாத மொழிகள் அழிந்துவிட்டன உண்மைதான் ஆனால் சமஸ்கிருதம் இறைவன் மொழி என்பதால் இன்றும் இலக்கண வளம்பெற்று பல பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உயிர் பெற்றுள்ளது அறிவோம்..உண்மைச் சைவர்களுக்கு வடமொழி தமிழ் மொழி இரண்டையும் மதிப்பவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

இரண்டும் சிவமொழியே ஆகும். எனவே வடமொழியை வெறுக்கக் கூடாது. வழிபாட்டில் இருந்து நறுக்க முடியாது.சைவத்திற்கும் சம்ஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்று மறுக்கக்கூடாது.

ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார்.

தமிழ்ச் சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே என்பது திருமந்திரம். இவ்வாறு பல வடமொழி மேன்மை திருமுறைகளில் ஏராளம் வந்துள்ளன. அத்துடன் வடமொழிச் சொற்கள் மிக அதிகம்.உள்ளன.

தொல்காப்பியத்தில் தற்சமம் தற்பவம் என்ற சிறப்பு வடமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.வடமொழிச் சொற்கள் தமிழ் சொற்கள் போன்று மாற்றமின்றி வருவது தற்சமம் எனப்படும்.உதாரணம் கமலம் பாதம் அரவிந்தம் காரணம் இப்படிப்பலஉண்டு. அடுத்து .வடமொழிச் சொற்களுக்கு ஏற்ப தமிழில் மாறி வருவது தற்பவம்.

உதாரணம் பங்கஜம் –பங்கயம் ஈஸ்வரன் –ஈச்சுரன் சரஸ்வதி –சரசுவதி எனவே தமிழ் பலம் நூலிலும் வடமொழிக்கு இடம் இருப்பதால்சைவத் தமிழர் அனைவரும் வடமொழியை அனுசரிக்க வேண்டும். எனவே வடமொழியை பதுக்க முடியாது, ஒதுக்க முடியாது என்பதை உணர்வோம்.

சங்க நூல்களில் மந்திரம் அந்தணர் வேதம் வேள்வி பார்ப்பனர் பற்றிய செய்திகள் நிறைய உண்டு. அக்கால சமூகத்திலும் அவர்களது தொடர்பு தேவை உள்ளது என்பதை இதுகாட்டுகிறது. அதிலும் சமய சம்பந்தமாக வரும்போது வடமொழி அவசியம் இருக்கும்.எடுத்துக்காட்டாக திருமுருகாற்றுப்படை மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே என்றும் மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் எனவும் பதிற்றுப்பத்தில் ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர் எனவும் கூறப்பட்டுள்ளதுஇறைவனை ஆதி அந்தணன் என பரிபாடல் குறிப்பிடுகிறது.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ என்றும் அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான் என்றும் கூறப்படுகிறது.வள்ளுவரும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்றும் அறுதொழிலோர் என்றும் அந்தணர் தொடர்பான செய்திகளை கூறுகிறார். எனவே சைவ சமயம் வடமொழி அந்தணர்பல இடங்களில் பிரிக்க முடியாத முக்கூட்டுக் கலவையாக அமைவதை காணலாம். அத்துடன் புராணச் செய்திகள் இலக்கியங்களிலும் சமய நூல்களிலும் உண்டு. உதாரணமாக சிலப்பதிகாரத்தில் திருமால் மூவுலகையும் ஈரடியால் அளந்த செய்தி உண்டு.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி என்று வருவதைக் காணலாம். எனவே கடவுள் நம்பிக்கை உள்ள சைவ அல்லது இந்து பண்பாட்டில் உள்ள இலக்கியங்கள் எல்லாம் வடமொழி சார்ந்த நூல்களை எடுத்து இயம்புகின்றன. இவற்றை விட தமிழில் பூசை என்னும் போது திருமுறைகளில் வரும் வடமொழியையும் வடமொழி சார்ந்த நூல் கதைகளையும் விட்டால் தான்தமிழ் பூசையாகும். அவ்வாறு விட முடியாது. ஏனெனில் சமய நூல்களை நாம் மாற்ற முடியாது.

தமிழில் பூசை வேணும் என்றாலும் வடமொழியையும் ஏற்றுத்தான் கொள்ள வேண்டும். உதாரணமாக மகாபாரதக் கதையாகிய அருச்சுனனுக்கு பாசுபதம் கொடுத்த விடயம் பற்றி அப்பர் சுவாமிகள் வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான் என்றும்,அருச்சுனனுக்கு பாசுபதம் கொடுத்தானை.அதேபோல் பார்க்கவ புராணம் கூறும் கஜமுக சம்காரம் அதாவது விநாயகர் கஜமுக அசுரனை சம்காரம் செய்த நிகழ்வை கைவேழ முகத்தானை படைத்தார் போலும் கயாசுரனை அவரால் கொல்வித்தார்போலும் எனப் பாடுகிறார் அவர் வடமொழிக் கதையை வெறுத்தாரா?மார்க்கண்டேயருக்காக எமனைக் காலால் உதைத்தது பற்றியும் அப்பர் பாடுகிறார் பாலனையோடவோடப் பயமெய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடுமக் காலனை வீடு செய்த கழல் போலும்.இச் சம்பவம் வடமொழி நூல்களில் உண்டு. மற்றது நஞ்சுண்ட வரலாறு ,அடிமுடி தேடிய வரலாறு என்பவை வடமொழிப் புராணங்கள் பலவற்றில்

உண்டு. இவை பற்றி கூறாத நாயன்மார்களே இல்லை ஏனெனில் இறை அருளால் வடமொழி மேன்மை திருமுறைகளில் பதியப்பட்டுள்ளது.

ஆலந்தானுகந்து அமுது செய்தானை ,என சுந்தரரும் வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டு என்று தொடக்கி துடங் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காட்டு மேவினாரே என்கிறார்அப்பர் சுவாமிகள். மாலறியா நான்முகனும் காணா மலையினை என்றார் மணிவாசகர். சிவபிரான் கங்கையை சடையில் வைத்தது தக்கன் யாகத்தை அழித்தது – இவ்வாறு ராமாயண பாத்திரத்தில் உள்ள ராவணன் பற்றி பல இடங்களில் சம்பந்தசுவாமிகள் கூறுகிறார். வடமொழிப் புராணம் திருமுறைகளில் நிறைய உண்டு. ஏறத்தாழ ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட இடங்களில் வடமொழி வரலாறு உண்டு. நாயன்மார்களே ஏற்கும் போது நாம் வெறுக்கலாமா? சில தமிழ்ப் பிரியர்கள் அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு என்று சுந்தரமூர்த்தி சுவாமிக்கு இறைவன் சொன்ன வார்த்தையை பாவிக்கிறார்கள் அது சுந்தர மூர்த்தி நாயனாருக்கு மட்டும் பொருந்தும், எம்போல் சாதாரணமானவர்கள் ஆகமங்களில் கூறப்பட்ட சரியை கிரியை மார்க்கத்தில் மட்டும் வழிபட வேண்டும்,

நாயன்மார்கள் இன்தமிழ் பாடி இறந்தவர்களை எழுப்பினார்கள் உண்மை. அப்படியாயின் வடமொழி நூல்களில் கூட்டம் கூட்டமாக பலரை எழுப்பிய வரலாறுகளை ஏன் நம்ப மறுக்கிறோம்? இதிலிருந்து அற்புதம் செய்த சான்றோர்களை நாம் போற்றுவோம். நாங்கள் அற்புதம் செய்யும் ஆற்றல் இல்லாதவர்கள் என்பதை உணர்வோம்.

தமிழ்க்கடவுள் என்று நாம் போற்றும் முருகனுடைய கந்தசஷ்டி சூரன் போர் என்பன வடமொழி ஸ்கந்த புராணம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். முருகன் அருள் பெற்ற குமர குருபரர் அருணகிரிநாதர் என்பவர்கள் பாடலில் வடமொழியும் புராண இதிகாசங்களும் எவ்வளவு உண்டு..முருகன் தமிழ்க்கடவுள் என்று நமது எண்ணப்படி வைத்தாலும்வடமொழியைப் ஏன்பாட வைத்தார் என்றால் சைவ சமயத்திற்கு வடமொழி அவசியம் வேண்டும் என்பதால் ஆகும்.

உதாரணம் முதல் பாடலாகிய முத்தைத்திரு பத்தி திருநகை என்ற திருப்புகழில் வடமொழிச் சொற்கள் வீறு கொண்டுள்ளன*..பத்து தலை தத்த கணைதொடு என்ற ராமாயணமும் பத்தர்க்கிரதத்தை கடவிய என்ற பாரதமும் (வடமொழி வரலாறு) வந்துள்ளன. இதை விட கந்தர் அநுபூதி கந்தர் அலங்காரம் அடுத்து தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஸ்டி கவசம்குமர குருபரர் அருளிய கந்தர் கலி வெண்பா..இவை எல்லாம் வடமொழியைப் போற்றும் நூல்கள்மட்டுமன்றி வடமொழிச் சொற்களை தாங்கி வரும் அருட் பாடல்களுமாகும் என்று பல தமிழ் அறிஞர்கள் அறிவார்கள்.

எனவே சமஸ்கிருதம் சைவசமயத்திற்கு அல்லது இந்து சமயத்திற்கு அவசியம் உயிர் நாடி போன்றது. எனவே திருமுறையைப் போற்றுபவர்கள் வேதங்கள்உபநிடதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களையும் போற்ற வேண்டும் என்பதால் எல்லா சைவத் தமிழ் நூலக்ளிலும் சமஸ்கிருதம் கலந்து வந்துள்ளன.எனவே இவை எமது சைவத்திற்கு இரட்டைப் பிறவிகள் என்று நாம் என்னலாமே. இவை இறை வாக்கு. சமஸ்கிருதம் புரியாத மொழியில்லை என்பதைப் புரிவோம்.

எல்லோரும் போற்றும் பெரியபுராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகள் முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணத்தில் எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து என்னும் பாடலில் முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராமுனிவர் என ஆதிசைவர் பற்றியும் தெரிந்துணரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம் வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பி அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப் பெருந்தகையார் குலப் பெருமை யாம் புகழும் பெற்றியதோ என வழி வழி வரும் குலம் பற்றியும் சிவ வேதியர்க்கும் உண்டான தொடர்பையும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த பாடலில் அண்ணலை எண்ணியகாலம் மூன்றும் அர்ச்சிக்கும் மறையோர் எனவும் போற்றுவதைப் போற்றுவோம் ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கும் கருணை செய்தானே. சமஸ்கிருதம் இறந்த மொழியில்லை, ஆன்மீக வாழ்விற்கு சிறந்த மொழி.

இறை வாயில் பிறந்த மொழி. பல ஞானிகளால் ஆன்மீக வாழ்வில் புகுந்த மொழி. அருளாளர்களால் தமிழிலும் கலந்த மொழி. இன்றும் திருமுறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறதல்லவா? இன்னும் சொல்லப் போனால் சைவ சமயத்தைப் பொறுத்த வரையில் தமிழால் சமஸ்கிருதமும் சமஸ்கிருதத்தால் தமிழும் இணைந்து வளம்படுத்துகின்றன.

எனவே வடமொழியை ஆலயங்களில் இருந்து கலைக்க வேண்டாம் மரபுகளை குலைக்க வேண்டாம் நிலைக்க பாடுபடுவோம் தழைக்க ஈடுபடுவோம். ஒழிக்க முயற்சியாதீர்கள் பழிக்க விடாதீர்கள் செழிக்க விடுங்கள்.

வடமொழியும் தென்மொழியும் இறைமொழியே எனத்திடமாக போற்றுவது எம் வழியே. சைவர்கள் எல்லாம் தமிழரும் இல்லை தமிழர் எல்லாம் சைவரும் இல்லை என்பதை உணர்வோம். ஆகவே சைவத் தமிழருக்கு வடமொழி தென்மொழி இரண்டும் அவசியம். இருமொழி சார்ந்த நூல்களையும் போற்றுவோம்.

தமிழ் சார்ந்த நூல்களில் சைவ அல்லது தெய்வம் சாராத நூல்களும் உண்டு ஆனால் வடமொழி நூல்கள் எல்லாம் தெய்வம் சார்ந்த நூல்கள் என்ற சிறப்பும் உண்டு. வடமொழி தென்மொழி இரண்டாலும் இரண்டுபடாமல் ஒன்றுபடுவோம்.

3 Replies to “சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்”

  1. மிக சிறந்த பதிவுக்கு நன்றி .
    வடமொழி என்றால் சாதாரண வழக்கில் , வடக்கு திசையில் உள்ள நாடுகளில் உள்ள மொழி என்று தவறாக பொருள் கொள்ளும் வாய்ப்பு உண்டு . வட என்பது ஆலமரத்தினை குறிக்கும். ஆதிகாலத்தில் இறைத்திருமேனியரும், முனிவர்களும் மிகச்சிறந்த ஆன்மீக ஞானத்தை தங்கள் சீடர்களுக்கு ஆலமரத்தின் கீழமர்ந்து வழங்கினார்கள். தென்திசைநோக்கும் இறைவராகிய ஆதி குருநாதர் தட்சிணாமூர்த்தி , சனகாதி முனிவர்களுக்கு மவுனமாகவே ஞானம் வழங்கியதை குறிக்கும் பழைய தமிழ்ப்பாடல் ,

    கல்லாலின் புடை அமர்ந்து , நான்மறை , ஆறு அங்கம் , முதல் கற்றகேள்வி
    வல்லார்கள் நால்வருக்கும் , வாக்கு இறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
    எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டி
    சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத்தொடக்கை வெல்வாம் .

    இப்பாடலில் வரும் கல் ஆலின் புடை அமர்ந்து என்ற சொற்கள் , ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சிவபெருமான் சனகாதியர்க்கு அருள்வழங்கி , அவர்களின் ஐயங்களை போக்கினான் என்பது அறிவோம் .

    எனவே வட மொழி என்பது ( vata ) ஆலமரத்தின் கீழமர்ந்து வழங்கப்பட்ட ஞானச்சுரங்கமாக உள்ள இறைக்கருத்துக்களை ஏராளம் கொண்டுள்ள மொழி என்பதே பொருள் ஆகும்.

    சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான ஆதாரங்களுடன் விளக்கியுள்ள சங்கர நயினார் கோவில் சைவ சித்திதாந்த சபைத்தலைவர் சித்தாந்த பண்டித பூஷணம் சிவஸ்ரீ ஆ .ஈசுரமூர்த்திப்பிள்ளை அவர்கள் 1954-இல் இயற்றிய நூலின் பிற்காலத்திய பதிப்புக்கள் பிருந்தாவனம் 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை -40 தொலைபேசி 044-26163596/ கைப்பேசி 9840358301 email mullaipathipagam .yahoo.co.in என்ற முகவரியில் கிடைக்கும் .( விலை ரூபாய் 30/- தபால் செலவு தனி )

  2. சைவ சமயத்தில் சூத்திரர் நிலை என்ன ?? சைவ விரோதிகள்,சைவ சமயத்தில் சூத்திரர் பழிக்கப்பட்டு தாழ்வான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்த நயவஞ்சகா அல்ப மூடர்கள் குற்றம் சாடுகின்றனர்…முஸ்லிம்கள்,சைவத்தில் ஏற்றத் தாழ்வு உண்டு என்கிறார்கள்..இஸ்லாத்தில் இல்லையாம்…இது ஒரு சுத்த இஸ்லாமிய புரட்டு என்று அறிவு உள்ள எல்லோருக்கும் தெரியும்,ஆனால் முஸ்லிம்களுக்கு தெரியாது,ஏனெனில் அவர்கள் தங்கள் அறிவை அடகு வைத்துவிட்டார்கள்…பொய் தெய்வமான அல்லாவை வணங்கும் அவர்கள்,எப்படி சிந்திக்க முடியும் ??ஷியா-சுன்னி போர் 1320 வருஷங்களாக நடந்து வருகிறது…இஸ்லாம் தோன்றி 1400 வருஷங்கள் என்றால்,வெறும் 80 வருஷங்கள் தான் பிரிவு இல்லாமல் இருந்திருக்கிறது..அதுவும் ஏனென்றால் இஸ்லாம் அப்பொழுது ஒரு புதிய சமயம்,ஆதலால்,பல கூட்டங்களை இணைப்பதற்கான முயற்சி நடந்தது..வெறும் 80 வருஷம் பிரிவில்லாமல் இருந்த இஸ்லாமா சகோதரத்துவத்தை ஆதரிக்கிறது ?? ஹஹஹ,வேடிக்கையிலும் வேடிக்கை…இது ஷியா மசூதி,இது சுன்னி மசூதி என்று மசூதியை கூட பிரித்து வைக்கும் இவர்கள் தான் சகோதரத்துவத்தை பின்பற்றுகிறார்கள் ??ஒரு ஷியா முஸ்லிம், சுன்னி சமூகத்தில் வந்து ,தான் ஒரு ஷியா முஸ்லிம் என்று தைர்யமாக சொல்ல முடியுமா ?? அல்லது சுன்னி மசூதியில் தொழத் தான் முடியுமா ??சுன்னி-ஷியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இவர்களிடம் ஒரு ஆதாரப்பூர்வமான நூலாவது(கிதாப்) உண்டா ?? ஹதீஸிலோ குரானிலோ அல்லது எந்த ஈமாமும் இஸ்லாமிய பிரிவுகளுக்கிடையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை..இது தான் ஒற்றுமையை போற்றும் சமயமா ??ஆனால்,எந்த சமயத்தில் சூத்திரர்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்கள்என்று இந்த அல்ப பதர்கள் கூறியதோ,அந்த சமயத்தில் தான் சூத்திரர்களுக்கு ஒரு மேலான நிலையுண்டு.. சைவ நூற்களிலிருந்து சில ஆதாரங்கள் :
    1. “ப்ராம்மணா ;க்ஷத்ரியா : வைஷ்யா :சூத்ரா :ஸ்ரீந்த குலோத்பவா : |
    ஆச்சார்யாஸ்தேது விக்ஞேயா நாந்யேஷாம் து கதா சந : || ” -சுப்ர பேதாகமம்

    (நல்ல குல ஒழுக்கமுள்ள பிராமணரும் க்ஷத்திரியரும் வைசியரும் சூத்திரரும் ஆகிய நால்வருமே ஆச்சாரியராகும் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள் )

    2. ” வாஷாண ;ஸ்ரீவஸம்காராத் புக்தி முக்தி ப்ரேதா பவேது : |
    பாஷாண ; ஸ்ரீவதாம் யாதி சூத்ரஸ் துநகதம் பவேது || ” – ஸ்கந்த காலோத்ர ஆகமம்

    (கல்லானது சிவ ஸம்ஸ்காரத்தினாலன்றோ போக மோக்ஷங்களை தருவதாகின்றது..இப்படி கல்லே சிவத்தன்மை அடையுமாகின் ,சூத்திரன் அங்ஙனம் ஆகான் என்பது எப்படி ? )

    3. ” சூத்திரனும் தேசிகனா வான்மாணாந் தந்துறவி
    சாத்திரத்தின் மூன்றுமுணர்ந் தால் ” – (மறைஞான சம்பந்த தேசிகரின் சைவ சமய நெறி,37ஆவது குறள் )

    (பசு,பதி,பாசம் எனும் திரிபதார்த்தங்களை அறிவானாகின்,சூத்திரனும் ஆச்சாரியராகலாம் )

    4.” பசு நூல்களை பற்றாது பதி நூல்களாகிய சிவ நூல்களைப் பற்றி பயிலும் பிராமணர் முதலான நான்கு வருணத்தவருமே ஆச்சாரியர் ஆவதற்கு தகுதி உடையவர்கள் “- சிவ புராணம்

    மேலும்,பெரிய புராணத்தில்,அந்தணரான திருஞானசம்பந்தர் தான்,வேளாளரான(சூத்திரர்) திருநாவுக்கரசரை, “அப்பர்” என்று மரியாதையுடன் அழைத்தார்…சைவ அந்தணரான ஸ்ரீ சுந்தரப்பெருமான் தமது திருத்தொண்டத் தொகையில்,63 நாயன்மார்களின் பெயரை குறிப்பிட்டு,அவருக்க்உ தான் அடியவர் என்று கூறியிருப்பார்..அந்த 63 நாயன்மார் பட்டியலில்,பெரும்பான்மையினோர் வேளாளர்களே…பிற வருணத்தவரும் உண்டு…அப்பரை தமது குல தெய்வமாக (ஆச்சாரியராக) ஏற்ற அப்பூதியடிகள் ஒரு அந்தணரே..ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் எனும்,திருக்கயிலாய பரம்பரையை இவ்வுலகில் தொடரும் பசி செய்த,இப்பெரும் சைவ சித்தாந்த ஆச்சாரியரை குருவாக கொண்டவர் ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் எனும் ஒரு அந்தணர்…இந்த திருக்கயிலாய பரம்பரை மற்றும் சைவ சித்தாந்தத்தில் இருக்கும் வேறு குரு பரம்பரையை சார்ந்த பல சைவ மடங்களின் அதிபதிகள்,வேளாளர்களே(சூத்திரர்கள்)…சைவத்தில்,சூத்திரர்கள்,ஒரு மேலான நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்…பல சைவ ராஜ்ஜியங்களில்(சோழ பேரரசு போன்றவை) அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள்…உதாரணத்துக்கு,சேக்கிழார் எனும் வேளாளர்,இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர்..சைவ சமூகத்தில்,ஆச்சாரிய பதவியே மேலானது…அரசன் கூட இரண்டாம் பட்சம் தான்…அபேர்பட்ட ஆச்சாரிய பதவிக்கு ஒரு சூத்திரர் வரலாம் என்றால்,சாதி என்பது மேல் நிலைக்கு வர தடையல்ல என்றும் சூத்திரர்களுக்கு சைவத்தில் ஒரு உன்னத நிலை கொடுக்கப்பட்டிருப்பதும்,அறிவுள்ளவருக்கு புரியும்….சைவத்தில்,சூத்திரர் நிலை இப்படி இருக்க,இஸ்லாத்தில்,சூத்திரருக்கு,”சூத்ட்ஹிரர்” எனும் பட்டம் இருக்காது,ஆனால் ஷியா,சுன்னி என்றும் அதிலும் சுன்னி பிரிவில் எது அல்லது ஷியா பிரிவில் எது என்றும்,அதிலும் எந்த ஜமாத்தினர் போன்ற முத்திரைகள் குத்தப்படும்…இவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்தால்,எந்த நேரத்தில் உயிர் போகும் என்ற பயமும் இருக்க வேண்டும்.சர்வ சாதாரணமாக அவரை(ஒரு ஷியாவாக இருக்கும் பட்சத்தில்) ஒரு சுன்னி,தெருவுக்கு இழுத்து வந்து சுட்டுக் கொள்வான் …ஆகையால்,இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது கிடையாது..இவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால்,ஒரு சின்ன இஸ்ராயிலை சூழ்ந்திருக்கும் 50+ இஸ்லாமிய நாடுகள் ஒரே நாளில்,இஸ்ராயிலை பொடி பொடியாக்கி இருக்கலாம்..ஆனால்,இவர்கள் அடிவாங்கியது தான் மிச்சம்..ஆகையினால், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது சைவம்…ஒற்றுமையில் வேற்றுமை கான்பது இஸ்லாம் போன்றவை..உண்மையான ஒற்றுமை,சைவ சமயம் ஒன்றில் மட்டுமே உண்டு…

  3. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை. ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து… அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான். ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே. அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.

    இப்போது தங்களை தாங்களே தமிழறிஞர்கள் என்று அழைத்துக்கொள்ளும் ஒரு துதிபாடிகளின் கூட்டம் தமிழகத்தை ஆளுகின்ற திராவிட பரிவாரங்களின் ஆசிர்வாதம் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக பழம் தமிழர்கள் சமய வாழ்வே வாழவில்லை கடவுளின் மீதே நம்பிக்கை வைக்கவில்லை சனாதன வைதீக தர்மமான இந்து மதக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பேசிவருகிறார்கள் இவர்களை பார்க்கும் போது ஒருவகையில் பரிதாபமாக இருக்கிறது உடம்பில் தெம்பு இருக்கிறவரை உண்மைக்கு மாறாக பேசிவிட்டு தெம்பு தீர்ந்தவுடன் தனிமையில் உட்கார்ந்து தன்னால் நிகழ்ந்த தவறுகளை எண்ணி எண்ணி புலம்பியவண்ணம் பலர் இருப்பதை நாமறிவோம்.
    எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று பிரிக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் பலவற்றில் தமிழர்களின் ஆன்மீகத்தன்மை மட்டுமல்ல வேத நெறியோடு அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டையும் மதிப்பையும் பக்தியையும் நம்மால் மிக தெளிவாக உணர முடிகிறது அவற்றை படிக்கும் போது ஆதி தமிழர்கள் எப்போதுமே வேதங்களை அந்நியமானது என்று கருதவில்லை என்பதை மிக சுலபமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏனோ இந்த உண்மையை சிலர் ஏற்றுகொள்ளவே மாட்டேனென்று பிடிவாதம் செய்கிறார்கள் உதாரணமாகநன்று ஆய்ந்த நீள் நிமிரிசடை
    முதுமுதல்வன் வாய் போகாது
    ஒன்றுபுரிந்த ஈர் இரண்டின்
    ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
    என்ற புறநானூறு வரிகளை எடுத்துகொள்வோம் இது வேதங்கள் நான்கெனவும் அவை ஆறு அங்கங்கள் இதில் வருகிற தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை என்ற வரிகள் தமிழகத்தையும் இந்தியாவோடு இணைந்த ஒரு நிலப்பகுதியாக காட்டுகிறதே தவிர தமிழகத்தை மட்டும் தனிநாடாக காட்டவில்லை என்பதையும் நம்மால் அறியமுடிகிறது.
    எனவே தமிழகம் என்பது தனிநாடு அல்ல தமிழன் என்பவனும் தனியான இனமல்ல ஒன்றான ஒரே பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியே என்பதை உணரவேண்டும் அதை போலவே சைவம் மட்டுமே தமிழனின் மதம் மற்றவைகள் எதுவும் தமிழனுக்கு சம்மந்தம் இல்லை என்று வாதிடுவது கண்களை திறந்து கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமமானது ஆகும். ஆதி தமிழகத்தில் சிவபெருமானுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவுக்கு திருமாலுக்கும் முக்கியத்துவம் இருந்தது எனவே வைஷ்ணவ நெறியும் மாறான நெறி என்று யாரும் கூறஇயலாது அதே போலவே வேத கடவுளான இந்திரன், வருணன், அக்னி, வாயு போன்ற தெய்வங்களும் தமிழகத்தில் வழிபடும் தெய்வமாகவே இருந்திருக்கிறார்கள் முருகனுக்கும் கொற்றவை என்ற காளிதேவிக்கும் உள்ள மரியாதையை நாம் அறியாதது அல்லநமக்குள்ள வரலாற்று அஞ்ஞானத்தை பயன்படுத்தி சிலர் நச்சுவிதைகளை நமக்குள் தூவி விட்டிருக்கிறார்கள் நாமும் சாரத்தை விட்டு சக்கையை பிடிப்பது போல உண்மையை விட்டு விட்டு போலியை பிடித்துக்கொண்டு இது தான் நிஜம் என்று வாதாடி கொண்டிருக்கிறோம் நம்மை கொல்ல வருகிற கொடும் புலிக்கு பட்டுக்கம்பளத்தை விரித்து வரவேற்கிறோம் எனவே முதலில் நமக்குள் இருக்கும் துவேசத்தை விட்டுவிட்டு நிஜமான உண்மை எது என்பதை ஆராய முற்பட்டோம் என்றால் இந்து மதம் என்பது தமிழர்களின் சொந்தமதம் மற்ற எந்த இனத்திற்கும் இல்லாத உரிமையும் சொந்தமும் தமிழனுக்கே இந்து மதத்தின் மீது உண்டு என்பது தெளிவாக தெரிந்துவிடும்.விடைக்கொடி என்பது சைவ சமயக் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் கொடியாகும். இக்கொடியானது இடபக் (ரிசபக்) கொடியென்றும் அறியப்படுகிறது. சிவபெருமானது வாகனமும், காவலனுமான நந்தியினைப் போற்றும் விதமாக இக்கொடி அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் கொடி என்பதால் சைவச்சின்னமாகவும் இக்கொடி போற்றப்படுகிறது.
    வீரசைவ அரசர்கள் பலரும் இக்கொடியை தங்களின் நாட்டுக் கொடியாக உபயோகம் செய்துள்ளார்கள். பாரதத்தின் கலிங்கத்தினை சேர்ந்த மாகன் என்ற வீரசைவ மன்னன் ஐனநாத மங்கலம், மண்முனை (மட்டக்களப்பு) கோகர்ணம் (திருக்கோணமலை, சிங்கை நகர் (வன்னி), நல்லூர் (யாழ்ப்பாணம்) ஆகிய பிரதேசங்களை இக்கொடியின் கீழ் ஆண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *