ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்

ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் என்ற இந்தத் துதிப்பாடல் ஆதிசங்கரர் அருளியது என்று சம்பிரதாயமாக கருதப்படுகிறது. ஆர்யா என்ற சந்தத்தில் அமைந்த அழகும் இனிமையும் ததும்பும் இந்த சிறிய ஸ்தோத்திரத்தை நேரடியாக தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

வீதாகி²ல-விஷயேச்ச²ம்
ஜாதானந்தா³ஶ்ரு-புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம்
வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

வென்றான் புலனிச்சை அனைத்தும்
ஆனந்தக் கண்ணீர் பெருகப் புளகித்து நின்றான்
அதிநிர்மலன்
சீதாநாயகனின் தூதாய்ச்சென்றான்
வாயுவின் திருப்புதல்வனை
இக்கணம் இதயத்தில் தியானிக்கின்றேன்.

[ராமநாம கானத்தால் பெருகும் ஆனந்தக் கண்ணீர்]

தருணாருண முக²-கமலம்
கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவனமாஶாஸே
மஞ்ஜுள-மஹிமானமஞ்ஜனா-பா⁴க்³யம் ॥ 2॥

இளஞ்சூரியனென முகமலர்
கருணை ரசம் நிறைந்து ததும்பும் கண்கள்
உயிர்தருவோனைப் போற்றுவேன்.
அழகிய மகிமையுடையோன்
அஞ்சனையின் பேறானோன்.

ஶம்ப³ரவைரி-ஶராதிக³ம்’
அம்பு³ஜத³ல-விபுல-லோசனோதா³ரம் ।
கம்பு³க³லமனிலதி³ஷ்டம்
பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

காமன் கணைகளை மீறிக்கடந்தோன்
கமல மலரிதழென விரிந்த அருள்விழியோன்
சங்குக் கழுத்தோன்
அனிலனின் அன்புமகன்
கோவைக்கனிபோல் ஒளிரும் இதழோன்
அவனொருவனையே சார்கின்றேன்.

[அனிலன் – காற்று, வாயுதேவன்]

தூ³ரீக்ருʼத-ஸீதார்த்தி:
ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்த்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்த்தி:
புரதோ மம பா⁴து ஹனுமதோ மூர்த்தி: ॥ 4॥

சீதை துயரம் துடைத்தனன்
இராமன் பெருமை உலகிற்குரைத்தனன்
தசமுகன் புகழைக் கிழித்தெறிந்தனன்
அத்திருமூர்த்தி அனுமன்
என்முன் காட்சி தருக.

வானர-நிகராத்⁴யக்ஷம்
தா³னவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ன-ஜனாவன-தீ³க்ஷம்
பவன தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

வானரப்படைப் பெருந்தலைவன்
அரக்கர் குலமாம் அல்லிக் கூட்டத்தை வாட்டும்
சூரிய கிரணம்
எளியோரைக் காக்கவென்றே
என்றும் உறுதி பூண்டோன்
காற்றுத்தேவனின் தவமெலாம் திரண்டு சமைந்த பேரொளி
அவனைக் கண்டேன்.

முன் சுலோகத்தில் காட்சி தருக என்றும் இதில் கண்டேன் என்றும் வருவது சிறப்பு.

ஏதத்-பவன-ஸுதஸ்ய
ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லான் போ⁴கா³ன்
பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

பவனசுதன் மீது
பஞ்சரத்தினமாம் இத்துதியைப்
படிப்போன்
பலகாலம் இங்கு போகமனைத்தும் துய்த்து
பங்கமிலா ஸ்ரீராம-
பக்தியைப் பெறுவான்.

[பவனசுதன் – வாயுகுமாரன்]

இந்த ஸ்தோத்திரத்திற்கான ரசமான விரிவுரையை விளக்கங்களுடன் ஸ்ரீ கணபதி சுப்ரமணியம் சுந்தரம் அவர்கள் இங்கே எழுதியிருக்கிறார்.

அனுமன் திருவடிகளே சரணம்.

ஸ்ரீராமஜெயம்.

இன்று ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி.

தேவநாகரி லிபியில்:

वीताखिल-विषयेच्छं जातानन्दाश्रु-पुलकमत्यच्छम् ।
सीतापति-दूताद्यं वातात्मजमद्य भावये हृद्यम् ॥ १॥
तरुणारुण-मुख-कमलं करुणा-रसपूर-पूरितापाङ्गम् ।
सञ्जीवनमाशासे मञ्जुल-महिमानमञ्जना-भाग्यम् ॥ २॥
शम्बरवैरि-शरातिगमम्बुजदल-विपुल-लोचनोदारम् ।
कम्बुगलमनिलदिष्टम् बिम्ब-ज्वलितोष्ठमेकमवलम्बे ॥ ३॥
दूरीकृत-सीतार्तिः प्रकटीकृत-रामवैभव-स्फूर्तिः ।
दारित-दशमुख-कीर्तिः पुरतो मम भातु हनुमतो मूर्तिः ॥ ४॥
वानर-निकराध्यक्षं दानवकुल-कुमुद-रविकर-सदृक्षम् ।
दीन-जनावन-दीक्षं पवन तपः पाकपुञ्जमद्राक्षम् ॥ ५॥
एतत्-पवन-सुतस्य स्तोत्रं यः पठति पञ्चरत्नाख्यम् ।
चिरमिह-निखिलान् भोगान् भुङ्क्त्वा श्रीराम-भक्ति-भाग्-भवति ॥ ६॥

One Reply to “ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *