ஓர் ஓநாய் புள்ளி மானைத் துரத்துவதைப்போல்
அன்பே
உன்னை நான் துரத்துகிறேன்
நான் வேறு நீ வேறு என்ற பிரிவே இருக்கக்கூடாது
நீ என் ரத்தத்தில் இரண்டறக் கலந்துவிடவேண்டும்
அதற்காகவே
உன் சுயத்தின் குருதியை
ஒற்றைச் சொட்டுவிடாமல் பருகுகிறேன்.
ஒற்றைக் காமாந்தகக் கண்
உன்னைக் கற்பழித்தாலும் கன்றிப் போய்விடும் என் இதயம்
அதனால்தான் அன்பே
கறுப்பு ஆடை கொண்டு உன்னை கால்வரை போர்த்துகிறேன்
நீ முழுவதும் எனக்கு மட்டுமே
என் அன்பே…
உன் ஆன்மாவில் மிச்சமாக எதுவும் இருக்கக்கூடாது
அதனாலேயே கூர் நகங்கள் கொண்டு
சுதந்தரம் முழுவதுமாகக் கிழித்துப் போடுகிறேன்
உனக்கென்று உடல் எதற்கு
உனக்கென்று உயிர் எதற்கு?
நாம் ஓருயிர் ஓருடல் ஆகியாகவேண்டும்
அதற்காகவே கோரைப் பற்களால் குதறி
உன் இருப்பு முழுவதுமாக முழுங்கிவிடுகிறேன்
எல்லையற்று விரிந்து கிடக்கிறது என் வயிறு
அதில் முடிவற்று அலையடிக்கிறது
ஆணாதிக்கத்தின் அமிலக் கடல்
உன் பெண்மையின் தளிர் மேனியின்
ஒற்றைத் தசைகூடத் தப்பமுடியாது
மதமேறிய பெரும் பசியுடன்
உன்னை உண்டு கொண்டே இருக்கிறேன்
தீயாகக் கனலும் கண்கள் கொண்டு
யோனி வாசலைக் காவல் காக்கிறேன்
நீ ஓடும்போதெல்லாம் களைப்படையாமல் பின்தொடர்வேன்
நீ நடக்கும்போதெல்லாம் மென்னடை நடப்பேன்
நமக்கிடையிலான தூரம் அகலாது அணுகாது அடியெடுத்துவைப்பேன்
தடுக்கும் உன் மந்தையை முட்டித் தள்ளி
தன்னந்தனியாகப் பிரிந்துவரும் தருணத்தில்
கூர் நகங்கள் மறைந்துகிடக்கும் என் கைகளில்
உன்னை முழுவதுமாக ஏந்திக்கொள்வேன்
என் முழு நேசத்தையும்
உன் மீது குவிக்கமட்டுமே எனக்குத் தெரியும் அன்பே…
உன்னை நான் ஒருபோதும் வெறுப்பதுமில்லை.
உன்னை ஒருபோதும் விட்டு விலகுவதுமில்லை
உன்னை எனக்குள் முழுவதுமாக
உள்வாங்கிக் கொண்டபின்
உன் சகோதரியைப் பின்தொடர ஆரம்பிப்பேன்
ஆமாம் அன்பே
உன்னோடு முடிவதில்லை
என் எல்லையற்ற காதல்.
ஏனென்றால்
உனக்கு அது லவ்
எனக்கு அது ஜிஹாத்.
(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)