நான் முதன் முதலாக கேட்ட, படித்த தெய்வ பக்தி பாடல்களில் மிகவும் இனிமையாக எளிதாக மனதை கவர்ந்த பாடல்கள் இரண்டு:
ஒன்று ’கண்ணன் எங்கள் கண்ணனாம்’. மற்றொன்று ‘ராமன் பிறந்தது நவமியிலே’.
கண்ணன் எங்கள் கண்ணனாம் பாடல் அம்மா சொல்லி கொடுத்தது. மலரும் உள்ளம் முதல் தொகுப்பிலிருந்து. வீட்டில் அந்த புத்தகம் இருந்தது. பிறகு வளர வளர இரண்டாம் தொகுதியையும் பாட்டிலே காந்தி கதையையும் நானே படித்துவிட்டேன். ஆசிரியர் அழ. வள்ளியப்பா.
எனக்கு மிகவும் பிடித்த முதல் கவிஞர் அழ.வள்ளியப்பாதான்.
‘ராமன் பிறந்தது நவமியிலே’ என்கிற பாட்டை வடீஸ்வரத்தில் கேட்டேன். பெரியம்மா ஒருவர் வடீஸ்வரத்தில் பாலமுருகன் பக்தர் சங்கம் என்று ஒன்றை நடத்தினார். அங்கே வருகிற குழந்தைகள் கோலாட்டத்திற்கு இந்த பாடலை பாடினார்கள். பாடல் மிகவும் பிடித்து போய்விட்டது. பிறகு அடிக்கடி சமய வகுப்புகளில் வீட்டில் கேட்டிருக்கிறேன். அண்மையில் யூட்யூபிலும் கேட்டேன். ஆசிரியர் யார் என்பது தெரியாதிருந்தது. பிறகுதான் தெரிந்தது அதன் ஆசிரியரும் அழ.வள்ளியப்பாவேதான்.
இனிமையாக எளிமையாக அழகாக அன்போடு ஒலிக்கும் வரிகளால் குழந்தைகள் மனதில் தேசபக்தியையும் தெய்வபக்தியையும் அனைத்து உயிர்களிடமும் அன்பையும் ஏற்படுத்தியவர் அழ. வள்ளியப்பா.
அவர் பிறந்த நூற்றாண்டு இது. அவர் பாடல்கள் தொகுப்புகளை படித்தால் ஒன்று தெரியும். அவருக்கு கண்ணனிடம் அலாதி அன்பு. கண்ணனை பரம்பொருளாக, தோழனாக, கீதை அளித்த நல்லாசிரியனாக குழந்தை பருவத்தில் நமக்குள் கோவில் கொள்ள செய்தவர்களில் அழ.வள்ளியப்பா முக்கியமானவர். முதன்மையானவர்.
அவரது சில அற்புதமான கண்ணன் பாட்டுக்கள் அவை புத்தகத்தில் வெளிவந்த அதே வடிவில் கீழே.
ராமன் பிறந்தது நவமியிலே:
கண்ணன் எங்கள் கண்ணனாம்:
கண்ணன் வெண்ணெய் திருடித்தின்ன:
கோகுலத்துக் கண்ணன் அதோ:
வண்ணவண்ணப் பூக்கள்:
“குழந்தை கவிஞரின் பிறப்பு நூற்றாண்டில் பாரதத்தின் உண்மையான தேசிய குழந்தைகள் தினமான ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமியில் அவரைக் குறித்த இக்கட்டுரையை அவர் நினைவுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்ற குறிப்புடன் ஸ்வராஜ்யா இதழில் அ.நீ எழுதிய அழ. வள்ளியப்பா குறித்த இந்த ஆங்கிலக் கட்டுரை 2022 ஆகஸ்டு 19 அன்று வெளிவந்தது.