கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்

கிறிஸ்துவப் படையெடுப்புகளும் மதமாற்றமும்

மதமாற்றம் உலகளாவிய பல நூற்றாண்டு காலப் பிரச்சனை. கிறிஸ்துவ மதத்தை என்ன செய்தாவது உலகெங்கிலும் பரப்புவதில் சர்ச்சுகள் தீவிரமாக இருந்து வருகின்றன. உலகின் பிற பகுதிகளில் அவற்றின் தந்திரம் பலித்து, முழு நாடுகளையே மதம் மாற்றி, அங்கிருந்த ஆதி கலை கலாசாரங்களை அழித்துவிட்ட நிலையில், இந்து மற்றும் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் தீவிர மதமாற்ற முயற்சிகளை நிகழ்த்தி வருகின்றன. பாரத தேசத்தைப் பொறுத்தவரை போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, ஆங்கிலேயப் படையெடுப்புகளின் மூலம் கிறிஸ்துவம் உள்ளே நுழைந்தது. ஆகவே வந்தேறி மதம் என்று அழைக்கப்பட முழுத்தகுதி கொண்டது கிறிஸ்தவம். இஸ்லாமும் இதற்குச் சற்றும் சளைத்ததல்ல என்றாலும் இப்போது நம் கிறிஸ்தவத்தின் வேடங்களை மட்டுமே களையப் போகிறோம்.

போர்ச்சுகீசியப் படையெடுப்பின் போதுதான் கோவாவில் நூற்றுக் கணக்கான கோவில்கள் தரைமட்டமாக்கப் பட்டன; பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். மதம் மாற மறுத்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டு, குழந்தைகளும் கொல்லப்பட்டனர். போர்ச்சுகீசியர் கோவாவில் மட்டுமல்லாமல், கேரளம் மற்றும் தமிழகத்திலும் நுழைந்து தங்கள் கிறிஸ்துவ மதத்தை ஓரளவு ஸ்தாபித்தனர். இதை நாம் சொல்லவில்லை. வரலாறு பேசுகிறது. அவர்கள் அவிழ்த்து விட்டதுதான் ‘புனித தாமஸ்’ என்கிற கற்பனைக் கதா பாத்திரமும் அவரைப் பற்றிய கட்டுக்கதைகளும்.

தாமஸ் கட்டுக்கதை

கோவாவில் செய்தது போலவே, வட தமிழகத்தின் (சென்னை) கடலோரத்தில் அற்புதமாக அமைந்திருந்த ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலையும் அழித்து அந்த இடத்தில் புனித தாமஸ் (Santhome Church) தேவாலயத்தை அமைத்தனர். மேலும் தற்போது ‘புனித தோமையர் மலை’ (St. Thomas Mount) என்று அழைக்கப்படும் பிருங்கி மலையில் (பிருங்கி முனிவர் தவம் செய்த மலை பிருங்கி மலை – இதுவே பின்னர் பறங்கி மலையாக மருவியது) உள்ள கோவில்களையும் அழித்து, அங்கும் ஒரு தேவாலயத்தை அமைத்தனர். புனித தாமசை ஒரு மயிலை பிராம்மணர் ஈட்டியால் குத்திக் கொன்றதாகவும் அவரது உடல் அங்கே புதைக்கப் பட்டிருப்பதாகவும் கதை கட்டிவிட்டனர்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால் தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, இந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான்.

தாமஸ் இங்கு வந்து திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும் திருவள்ளுவர் தாமஸிடம் பைபிள் கற்று, பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டது தான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின் பங்களிப்பு. பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள். நம்மிடமுள்ள வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று தெரிய வருகிறது. மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும், கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின் தாமஸ் கதை சரியான ஏமாற்று வேலை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் அழிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தை “புனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்” என்ற புத்தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார். வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆசிரியரும், தன்னுடைய “புனித தாமஸ் கட்டுக்கதை” என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார். ஈஸ்வர் சரண் தாஸ் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற கட்டுரையை அவசியம் படியுங்கள். அதற்குக் கோன்ராட் யெல்ட்ஸ் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று.

தெய்வநாயகத்தின் விஷவித்து

தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம் ‘விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் – ஒப்பு ஆய்வு’ என்கிற ஒரு நூலை 1985-86 ல் எழுதி வெளியிட்டு இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென ஸ்தாபிக்க முயற்சி செய்தார். ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர். அந்த நூல்: “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்” – அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம் – 1991].

சரி, இந்த தெய்வநாயகத்தின் குறிக்கோள் தான் என்ன?

தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பது; தமிழ் சமயம் வேறு இந்து மதம் வேறு என்று நிறுவுவது; ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் சமயம் என்றும் அதிலிருந்து வெளியானவே சைவமும் வைணவமும் என்றும் ஸ்தாபிப்பது; ஆதாமுக்கு கடவுள் கற்றுக் கொடுத்த முதல் மொழியே தமிழ் என்றும், ஆதாம் முதல் மெய்க்கண்டார் வரை வந்துள்ள ஆன்மீகச் சிந்தனையாளர்களின் கருத்துக்களின் தொகுப்பே ‘தமிழர் சமயம்’ என்று நிறுவுவது; என்பன போன்ற துளியும் ஆதாரமற்ற, தமிழருக்கு, தமிழ் நிலத்துக்கு எதிரான கோட்பாடுகளை உண்மையெனச் சாதிப்பதே அவரது குறிக்கோள்.

பித்தலாட்டத்தின் முன்னோடிகள்

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் திடீரென்று கிளம்பவில்லை. இவருக்கு முன்னோடியாக நம் தமிழகத்தில் சில வந்தேறிகள் முயற்சி செய்துள்ளனர். அதில் முதலாமவர் 17-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டிலிருந்து வந்த ராபர்ட் தே நொபிலி (1577-1656) என்கிற கிறிஸ்துவப் பாதிரியார். இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டு தன்னை “ரோமாபுரி பிராம்மணர்” என்றும் சொல்லிக்கொண்டார். காவி உடை அணிந்து உடம்பில் ஒரு பூணூலையும் அணிந்து கொண்டு, ஒரு ஆச்ரமத்தையும் அமைத்துக் கொண்டார். பைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன வேதங்களில் ஒன்று என்று சாதித்தார். காவி, பூணூல் அணிந்து குடில் ஒன்றில் ஆச்ரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார். ஆனால் இவருடைய “கலாசாரக் களவுக்கலவை” (inculturation) முறை ஐரோப்பிய ஆசான்களுக்கு சற்றும் ஒப்புடைமை இல்லையாதலால் இவருடைய முயற்சிகள் பாதியில் நின்று போயின. [Refer: The Portuguese in India, Orient Longman, Hyderabad, 1990)]

ஜி யு போப் என்கிற போப்பையர் (1820-1907), கன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் (1680-1746) போன்றவர்களும் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் நூல்களை மொழி பெயர்த்ததும், வேறு சில தமிழ் நூல்களை எழுதியதும் தமிழ் மொழி மேல் இருந்த பற்றினால் அல்ல. சீகன் பால்கு ஐயர் (ஜெர்மானியர்), இரேனியஸ் (ஜெர்மானியர்) மற்றும் எல்லிஸ் துரை (Francis Whyte Ellis) ஆகியோரும் தமிழ்த் தொண்டு புரியும் நோக்கில் மொழித் தொண்டிர்ன் போர்வையில் சமயப் பணி ஆற்றியவர்களே. இவர்களைப் போலவே கால்டுவெல் என்கிற பாதிரியாரும் முழுப் பொய்யும், புளுகும், புனைசுருட்டுமான ‘ஆரிய-திராவிட’ இனக் கோட்பாடுகளை உண்மையான சரித்திரம் எனப் புகுத்தி தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி மதமாற்றம் செய்ய அதிக நாட்டம் காட்டினார்.

இன்றைய திராவிட இனவெறியாளர்கள் இந்தப் புளுகுகளை விவிலியமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் “திராவிட இனவெறி” என்கிற நச்சு மரத்துக்கு வித்திட்டவர் இந்த பிஷப் கால்டுவெல்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

கலாசாரக் களவு (Inculturation)

மேற்கண்ட மாதிரி அடிப்படை நாணயமற்ற நபர்களைக் கொண்ட சர்ச்சுகளும் மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இவற்றில், இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) முன்னரே உண்டு என்ற போதும் தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்; தாமரை மலரின் மேல் இயேசு ஒரு கால் மடக்கி, ஒரு கால் கீழே தொங்க விட்டு வீற்றிருப்பது போல் சிலையமைத்தல்; ஆஸ்ரமத்தில் உள்ள பாதிரியார்கள், கன்யாஸ்திரீகள் காவியுடை அணிதல்; போன்ற இந்துமதப் புனித வழிகளைப் போலியாக பாவனையில் ஏற்று, மக்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

மேலும், யேசுவுக்கு ‘அஷ்டோத்திர நாமாவளி’, ‘ஸஹஸ்ர நாமாவளி’ அர்ச்சனைகள் செய்தல்; வேளாங்கண்ணி போன்ற சில கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ள ஊர்களுக்குப் “பாத யாத்திரை” போதல்; “இருமுடி” தூக்குதல்; மேரி மாதாவை “மாரியம்மன்” என்று சொல்லுதல்; சில மலைகள் மேல் அரசாங்கத்தின் அனுமதி இன்றிச் சர்ச்சுகள் கட்டி அந்த மலைகளைச் சுற்றி பௌர்ணமி “கிரிவலம்” ஏற்பாடு செய்தல்; என இந்து மத ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் கலாசாரக் களவாடுதலிலும் சர்ச்சுகளும் மிஷனரிகளும் இறங்கியுள்ளன.

இந்துக்களைச் சீண்டுதல்

முச்சந்திகளில் நாம் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுதல் போல, மேரி சிலைகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். எல்லா நகரங்கள் மற்றும் ஊர்களின் எல்லைகளில் வரிசையாக சர்ச்சுகளும் பிரார்த்தனைக் குடில்களும் அமைக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் ஜனத்தொகைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல், அளவுக்கதிகமான சர்ச்சுகள், மற்றும் பிரார்த்தனைக் குடில்கள் அமைக்கின்றனர். (இப்படிச் செய்வது மிக லாபகரமான, வெளிநாட்டு வருவாய் ஈட்டும் தொழில் என்பதும் மக்கள் அறிந்ததே). மலைகள், குன்றுகளின் மீது வெள்ளை வர்ணத்தில் சிலுவை வரைதல், ‘மரியே வாழ்க’ என்று எழுதுதல் கணக்கின்றி அதிகரித்து வருகிறது.

வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் போன்ற மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் வாசலில் கூட இந்த மாதிரிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (ஆதாரம்: குமுதம் ஜோதிடம் – 14 நவம்பர் 2008 தேதியிட்ட இதழ்)

இந்துக்களைக் குழப்பும் சதி வேலை

தெய்வநாயகம் போன்ற போலி ஆராய்ச்சியாளர்கள் நம் மக்களின் மனதைக் குழப்புகின்ற நோக்கில், பல புத்தகங்களை அச்சடித்து வெளியிடுகின்றனர். அவர் சமீபத்தில் ‘திருநீறா சிலுவையா’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில், “திருநீறு என்பது சாம்பல் புதன்கிழமை என்கிற ஆதி கிறிஸ்துவ விரதத்திலிருந்து வந்தது. இடம்-வலமாக நெற்றியில் இட்டுக்கொள்ளும் பழக்கம், ஆதி கிறிஸ்துவ சைவத்திலிருந்து, வைணவம் பிரிந்தபோது, மேல்-கீழாகத் திருமண் இட்டுக் கொள்ளும் பழக்கமாக மாறியது. சிவன் தன் இடது பாகத்தை சக்தியிடம் கொடுத்த பிறகு, அந்த சக்தியைப் “பெண்ணாக” வழிபட்டால் அவள் “பார்வதி” என்றும், “ஆணாக” வழிபட்டால் அவர் “விஷ்ணு” என்றும் போற்றப் படுகிறார்கள். திருஞான சம்பந்தரின் “திருநீற்றுப் பதிகம்” கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளையே இயம்புகிறது. தேவாரம், திருவாசகம், திருப்பதிகம் என அனைத்து சைவ இலக்கியங்களும் ரிக்கு, யஜூர், சாமம் என்ற வேதங்களைப் பற்றிச் சொல்லாமல் கிறிஸ்துவ வேதமாகிய பைபிளின் தத்துவங்களையே சொல்கின்றன” என்றெல்லாம் அபத்தக் களஞ்சியங்களை அள்ளி வீசியிருக்கிறார். மிகவும் நல்லது ஐயா! அப்படியென்றால் பேசாமல் நீங்கள் எல்லோரும் திருநீறோ, திருமண்ணோ இட்டுக் கொண்டு எமது கோவில்களில் வந்து வழிபட வேண்டியதுதானே! எங்களுக்குப் புரியாதா உங்கள் திருகுதாளங்கள். பொய் சொல்வது தவறு என்று விவிலியத்தில் சொல்லப்படவே இல்லையா அன்பரே? இல்லை உங்களுக்குத்தான் நாவு கூசவில்லையா?

மேலும், “புனித தோமையர்” (St.Thomas) தமிழகத்தில் நிறுவிய ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் மதமாம். ‘இந்தியாவின் மீது படையெடுத்து வந்த ஆரியர்களே ஆதி கிறிஸ்துவத்தைத் திரித்து சைவம், வைணவம் என்கிற கோட்பாடுகளை உண்டாக்கினராம். எனவே சைவம் வைணவம் ஆகியவை ஆதி கிறிஸ்துவத்தின் உப பிரிவுகளாகவே கொள்ளப்படவேண்டும். “பிதா-மகன்-பரிசுத்த ஆவி” என்கிற புனித மூவர் “சிவன்-முருகன்-சக்தி” என்றும் “பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்” என்றும் அழைக்கப் படுகின்றனர்” என்றெல்லாம் இந்துக்களின் மனமும் உணர்வும் புண்படும்படியாக பல அருவருக்கத்தக்க பிதற்றல்கள் ஏராளமாக எழுதப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒரு முட்டாளின், மன நோயாளியின் பிதற்றல்கள் என்று அசட்டை செய்துவிடக் கூடாது. விஷமே உருவான ஒரு மனிதனின் நச்சுக் கருத்துகள் என்பதை உணர்ந்து அவற்றைப் பரவவிடாமல் அழிக்கவேண்டும்.

மதம் மாற்றுவதை நாம் தவறென்று சொல்லவில்லை. அது புரிதலின், அங்கீகரித்தலின் அடிப்படையில் ஏற்பட வேண்டும். அப்படியல்லாமல் பணம், தாய்மதத்தைப் பற்றித் திரித்துக் கூறுதல், அரசியல் அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்ளுதல், இல்லாத நேயத்தை இருப்பதாகக் காட்டிக் கொள்ளுதல் என்று இவ்வாறு பலவகை புனைவுகளாலும் வேடங்களாலும் சற்றும் மனசாட்சியின்றிச் செய்யப்படுவதைத்தான் இங்கே விவரிக்கிறோம், கண்டிக்கிறோம். இதனை மதம் மாறிவிட்டவர்களும், மாறத் தயாராகிவிட்டவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் இதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு இந்துவுக்கும் தேவை.

இதன் அரசியல் பரிமாணங்களை, சூதுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

இன்னும் வரும்…

40 Replies to “கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்”

  1. நல்ல முயற்சி. கிறித்தவம் இந்துக்கலவையாக்கப்பட்டு கிறித்தும் முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவராக்கப்பட்டு விடவேண்டும். அதன் பின்னர் கிறித்தவம் என்ற சமயமே இருக்காது. ஏனெனில் தெய்வநாயும் இந்துவாகிவிடுவார்.

    இந்துமதத்தை தெய்வநாயகம் போன்ற் அற்பர்களும், போப்பின் அடிப்பொடிகளுமா சிதைத்துவிட முடியும்.??? இந்துக்கள் திரண்டெழுந்து பதிலடி கொடுக்காதவரை இதுபோன்ற தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். திரண்டெழும் நாள் அவர்கள் சொல்வதுபோல இறுதித்தீர்ப்பு நாளாக கிறித்துவத்துக்கு அமையும். அதுவே கடைசியும் முதலுமாக இந்தியாவில் கிறித்தவம் இருந்ததாக அமையும். அதன் பின்னர் கிறித்தவத்தை பொருட்காட்சிகளில் கானலாம்.

  2. As usual, a very informative article from Thamizhselvan !
    Eagerly awaiting further parts.

  3. இயேசு யென்று ஒருவர் இருந்தாரா என்பதுவே கேள்விக்குறியாய் இருக்கும்போதே இத்தனை ! சைவ சித்தாந்தமும், வைணவும் கிறிஸ்த்வத்தில இருந்தா தோன்றின? கேழ்வரகில் நெய் ஒழுகிறது என்றால் கேட்பவருக்கு மதி எங்கே போயிற்று?

    தொடரட்டும் உங்கள் பணி.

  4. சரித்திரப் புரட்டுகளுக்கு ஆப்பு வைக்கும் அருமையான கட்டுரைத் தொடக்கம்.
    சென்ற வாரம் தி ஹிந்து ஞாயிறு இணைப்பில் வெளியான முரளி மனோஹர் ஜோஷிக்கு சரித்திர வல்லுநர்களின் பதில் என்ற தலைப்பில் வெளியான அருவருப்பான சரித்திரப் புரட்டுக்கு தாங்கள்தான் பதில் அளிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். ஒரு காலத்தில் The Hindu was shining with fame. Today, it is shining with shame என்று சொல்லவேண்டும்போல் இருக்கிறது.

  5. இந்துமதத்தை பற்றி மக்களுக்கு புரிய வைக்கத் தகுந்த பிரசாரகர்களை பயிற்றுவித்து
    கோயில் திருவிழாக்களில், தினமும் பூஜை நடைபெறுவதற்கு முன் அங்கு வந்துள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தபடவேண்டும்.
    இந்துமதத்தில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்களை ஒழிக்கவேண்டும்.
    கோயில் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மக்களிடையே
    விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒலி, ஒளி காட்சிகள், துண்டுப் பிரசுரங்கள். வழிபாட்டு நூல்களை இளம் வயதினருக்குக் கற்று கொடுத்தல் போன்ற பயிற்சிகளை உடன் தொடங்க வேண்டும்.
    கடலில் அலைகள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். தன மதத்தை பற்றி தெளிவான அறிவு இல்லாமையால்தான் மக்கள் பிற மதத்திற்குச் செல்லுகிறார்கள்.
    அந்த அறிவை ஏற்படுத்தி தந்து, உண்மையான ஞானம் அடைந்தவர்களை கொண்டு ஐயங்களை தீர்க்க வாய்ப்புகளை உண்டாக்கவேண்டும்.

  6. மிக நல்ல முயற்சி. நம் மதம் பற்றி நாமே பெருமைப்படாமல் இருந்த போது தான் சுவாமி விவேகானந்தர் தோன்றினார். அவர் வழியில் சென்று நம் பாரதத்தின் மற்றும் உலகின் தாய் மதமாம் சனாதன தர்மத்தின் பெருமைகளை நம் பாரதப் பிஞ்சுகள் உணரும் வண்ணம் எங்கெங்கெல்லாம் கோவில்கள் உண்டோ அங்கெல்லாம் நம்மைப் போன்ற தனியாள் மற்றும் சிறு, பெரிய குழுக்கள் அமைத்து, நம் மதத்தின் பெருமை மட்டுமின்றி இத்தகைய ஆதாரங்களையும் சிறிய, பெரிய போஸ்டர்களாக அடித்து கோயில் எங்கும் ஒட்ட வேண்டும். இங்கு கமெண்ட் போடுவதோடு நிறுத்திக்கொண்டு யாரோ வந்து ஆகாசத்திலிருந்து குதித்து சனாதன தர்மத்தைப் பேணுவார் என்றெண்ணிக்கொண்டிராமல் முனைப்போடு ஈடுபட வேண்டும். செய்வோமா?

  7. If there is at least 0.0001% of possibility exists for deiyvanayagam’s sayings then it may be based on the grounds that only jesus Christ (Not Thomas) came to India before his enlightment and learned spritual things from the Himalayan sage who is still alive.
    In that case the aadhi cristhavam cocept of deiyvanayagam is based upon Hindu culture.

    My openion is just don’t care or ignore these kind of senceless gooses

    Write atleast one sloka with its truthful meaning from The Bagavath geetha (which is atleast 3000 years older than jesus christ) and display it in the public place.

    It is better to light a candle than to curse the dark.

  8. நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நீதியற்ற கிறித்தவர்களை நினைக்கையிலே. அன்று யூதர்கள் செய்தது சிறிதும் தவறு இல்லை என்கிறவகையில் இவர்கள் நடந்துகொள்கிறார்கள். Hindu religion is the basic thougt of God and Good Karma and all the LIVES (not only humans) basically understand. All people in the world should be made to realize that the HINDUISM is the basis for all.

  9. பொதிகை அரசுத் தொலைக்காட்சி மூலம் நடக்கும் அப்போஸ்தல கிறிஸ்துவ சபை பிரசாரங்களை விட்டு விட்டீர்களே? இந்தப் பிரசாரங்கள் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாய் மும்முரமாய் நடக்கின்றதே? :(((((((( அதற்கு யாராலும் எதுவும் செய்ய முடியலையே? தினப் பத்திரிகைகளில் கூட இது பற்றி வந்தது.

  10. அன்பரே!
    அருமையான கட்டுரை. பொய், பரவும், மெய் பணியும் என்றாகிவிட்டது சனாதன தர்மத்தின் கதை. பொறுமை தவறாத, அறிவார்ந்த, உணர்ச்சிவசப்படாத பெரிய வேலை காத்திருக்கிறது. அதன் இனிய துவக்கமாக அமைந்திருக்கிறது உங்கள் கட்டுரை.
    உண்மை வென்றே தீரும்.

    இனிய வாழ்த்துக்களுடன்,

    ரமணன்

  11. தினமும் கோயில்களில் காலையிலும் மாலையிலும் பூஜைகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் அங்கு தினமும் பிரசாதம் வழங்கப்படவேண்டும். அங்கு வரும் சிறுவர் சிறுமியர்க்கு இந்து மதம் குறித்த புராணங்கள்,தத்துவங்கள்,பக்தி பாடல்கள் ,உபன்யாசங்கள் நடத்தப்படவேண்டும். விழாக்களை தகுந்தவர்களை கொண்டு மக்கள் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டும். நரிகளின் ஊளை ஒன்றும் செய்யாது.அதை செய்யாமல் மாற்று மதத்தினரின் சதி வேலைகளை பற்றியே பிதற்றிகொண்டிருந்தால் எந்த பலனும் ஏற்றப்படாது.

  12. வணக்கம்,

    அருமையான கட்டுரை! என்னை போன்ற மாணவர்களுக்கு உண்மையை எடுத்து காட்டியமைக்கு நன்றி.

    வொர்ட்ப்ரெஸ்-இல் எப்படி தமிழில் பதிவு செய்வது?

    மற்றும், கருத்து கூறும் இடத்தில் எப்படி தமிழை உபயோகிக்கமுடிகிறது?

  13. சில ஆண்டுகளுக்கு முன்னால் ராமகிருஷ்ண மடம் நடத்திய அந்தர்யோகம் நிகழ்சிசியில் பங்கு பெற்றேன். அப்போது மதமாற்றம் பற்றி ஒரு கேள்வி கேட்கப் பட்டது. “மதமாற்றம் சரியா தவறா? எவ்வாறு அவற்றை எதிர் கொள்வது” என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு அங்கிருந்த நிகழ்ச்சி நடத்தும் துறவி “இந்து மதம் சமுத்திரம் போன்றது. அதை யாராலும் அழிக்க முடியாது. எப்படி சமணம் மற்றும் பௌத்தத்தை தன்னுள் இணைத்துக் கொண்டதோ அவ்வாறே இப்போதுள்ள நிலையும் மாறும்” என்றார். ஆனால் என்னுடைய எண்ணம் வேறாக இருந்தது. பரந்து விரிந்த இந்து சாம்ராஜ்யம் பௌத்தத்திற்காகவும் இஸ்லாமிற்காகவும் தன் பல பகுதிகளை விட்டுக் கொடுத்து இப்போது வடக்கு பகுதியிலும் வடகிழக்கு பகுதியிலும் பிரச்னையில் தவித்துக் கொண்டு கொண்டிருக்கிறோம். மீண்டும் பிரிவினை ஏற்படக் கூடாது என கடவுளை வேண்டுகிறேன்.

  14. திரு சிவகுமார்
    துறவி கூறியது சரியே
    கடவுளை கண்டித்த புத்தனையே புத்தன் மரித்த பிறகு அவனை விஷ்ணுவின் ஒரு அவதாரமாக ஆக்கி சிலை வைத்து வழிபடும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டனர். அவனுக்கென்று மந்திர தந்திரங்களை உருவாக்கி கொண்டனர். புத்தனின் அஹிம்சை கொள்கை காற்றில் போய்விட்டது. புத்தனின் சிலையை வைத்து இந்து மத வழிபாடுகலைதான் எல்லா நாடுகளிலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
    புத்தம் ஒரு மதம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நிற்கிறது.
    அதைபோல்தான் கிறித்துவமும்.
    அதில் சிலை வழிபாடுகள், உற்சவங்கள் ,இந்து மதத்தில் உள்ளதுபோல் பால கிருஷ்ணன் என்பதுபோல் குழந்தை ஏசு, என்று ஒன்றொன்றாக இந்து மதத்தை காப்பியடித்து கொண்டிருக்கின்றனர். காலபோக்கில் அதுவும் புத்த மதம் போல் காணாமல் போகும் அதில் அய்யமில்லை
    பொய்யும் புளுகும் நீண்ட வருடங்களுக்கு நிலைக்காது.
    இந்து மதம் என்னும் ஆலமரத்தில் முளைத்திருக்கும் கிருத்துவம் காலபோக்கில் தன தனித்தன்மையை இழந்துவிடும் என்பதில் ஒரு இம்மியும் சந்தேகம் வேண்டாம். எனவே கவலைப்படாமல் உங்கள் தர்மத்தை நம்பிக்கையுடன் ,மற்றும் தூய்மையான பக்தியுடன், கடைபிடிப்பதுடன் உங்களை சார்ந்தவர்களையும் கடைபிடிக்க செய்யுங்கள் அது போதும்.

  15. ரத்தினராஜ்,

    வோர்ட்பிரஸ் பணிச்சூழலில் தமிழ் யூனிகோடு கொண்டு பதிவுகளை எழுதலாம். அதற்கான தட்டச்சு மென்பொருளை இந்தத் தளத்திலிருந்து இறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

    மேலதிக உதவி தேவையெனில் editor [at] tamilhindu [dot] com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

    இந்த மறுமொழிப்பெட்டியில் நேரடி எழுத்துரு மாற்றி மூலம் தமிழில் எழுத முடிகிறது. அதற்கான ஜாவாஸ்க்ரிப்ட் நிரலியை தந்துதவியிருப்பவர் “ஹைகோபி” அவர்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

  16. இயேசு கிறிஸ்து யார்?
    இயேசு கிறிஸ்து யார்?

    இயேசு கிறிஸ்து என்னும் நபர் பற்றி வரலாற்று ரீதியில் எவ்வித சான்றும் கிடையாது. பெயரில் இரண்டு பெயர்கள் உள்ளதில், இயேசு என்பது வ.கா. முதல் நூற்றாண்டில் ரோமன் ஏகாதிபத்திய கொடுங்கோல் அரசினால் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான ஆயுதப் போராட்டக் கலகக்காரர்கட்கான மரணதண்டனையான துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரணமடைந்தார் என மடம் பரப்பும் புராணக்கதை புத்தகமான புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் புனைகின்றன.

    கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

    கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

    தங்கள் பிரித்தாளும் சூட்சிகளால் ஐரோப்பாவின் நாடுகள் உலகை அடிமைப் படுத்தியிருந்ததால், கி.பி., கி.மீ. என்று குறீயேடு பரவியது. ஆனால் இயேசு வாழ்விற்கு ஆதாரம் ஏதும் இல்லாததாலும், அப்படியே புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதைகள் அடிப்படையில் மத்தேயு சுவிப்படி பெரியஏரோது இரண்டு வயது குழந்தைகளைக் கொலை என்னும் பொ.கா.மு.4கிற்கு முன் அதாவது பொ.கா.மு6ல் பிறந்திருக்க வேண்டும். லூக்கா சுவிக் கதையில் சிரியா கவர்னர் கிரேனியு யூதேயாவை ஆட்சி செய்தபோது மக்கட் தொகை கணக்கீடு போது இயேசு பிறப்பு எனில், ஏரோது ஆர்சிலேயுவை நீக்கி பொ.கா.6ல் கிரேனியு யூதேயாவை ஆட்சி பெற்றபின் பொ.கா.8 வாக்கில் மக்கட் தொகை கணக்கீடு நடந்தது.

    (பொ.கா.- பொது க் காலம்-பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிபிஆங்கிலத்தில் Common Era-CE பொ.கா.மு -பொதுக் காலத்திற்கு முந்தையது- பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிமு ஆங்கிலத்தில் BeforeCommon Era-CE)

    இயேசு கதைகளை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள் எழுதியுள்ள சுவிசேஷங்கள் புனைகின்றன, இவை அடங்கிய புதிய ஏற்பாடு என்ற புராணக்கதை புத்தககமாகவும், இத்தோடு உள்ளடக்கிய பைபிள்) என்ற பெரிய புராணக்கதை புத்தககமாகவும் கிடைக்கின்றது.

    பைபிளியல் அறிஞர்கள் ஆய்வு உண்மைகள்

    I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar
    Professor John Hick, sums up the current position of Theological research as follows:
    Quote:
    “The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.
    1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]
    2. God Created the physical Universe out of nothing “n’ years ago.
    3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.
    4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.
    5. Jesus was born of a Virgin mother, without human Patenity.
    6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.
    7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.
    8. All men must respond to God through Jesus Christ in order to be saved.
    9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.
    10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. ”
    “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

    கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.
    1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.
    2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.
    3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.
    4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.
    5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.
    6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.
    7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.
    8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.
    9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.
    10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

    பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
    நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

    The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

  17. hello mr rama

    very good answer about hinduism absorbing other cults(!) it is a bit stressful to read about what the christians and moslems too are doing, in india which is essentially a hindu country. i would like to add that, hinduism is also well known in the west with plenty of anglo saxons participating in the poojas, and temple worship. in the small city that i live, there are would you believe it, 3 hindu temples which are fully supported by the young people all the traditonal poojas and ceremonies are celebrated without fail.

    your answer that we should do our duties with a good heart and teach our children the hindu dharma makes me feel relief.

    gayathri

  18. hello mr.antony nee manidhanthana don’t misstake me because ivvalavu aadharam irundhun yesuthan god engiraye. HINDUISUM only religion in the world.

  19. //Jesus is only one God in the hole world…//

    ——————————-

    Yes, correct. Jesus is the only God in the hole, hollow world.

    But Krishna is the master of the whole world.

    Is the distinction right Rev.Antony??

  20. ஹிந்து மதத்தில் கடவுள்கள் கோடிகணக்கில் உண்டு. ஆனால் ஒரே பரம்பொருள்தான் பல வடிவங்களாக தோன்றுகிறது தங்க ஆபரணங்கள் பலவாக இருந்தாலும் அதன் மூலப்பொருள் தங்கம் என்பதுபோல் உண்மையை உணர்ந்தவன் கீதையில் பகவான் தெளிவுபடுத்தியவாறு அனைத்தையும் ஆன்மாவாக காண்பான் ஆன்மாவில் அனைத்தையும் காண்பான். அந்த நிலையை ஒருவன் அடையும்வரை பேதங்கள் மறையாது

  21. Mr.Kannan,
    Truth and false are like the clouds and the sun.
    Like the sun ,the truth cannnot be destroyed
    The clouds cannot remain in the same place or
    it can stay permanantly.
    Hence dont get irritated by the actions of the
    people who are doing malicious propaganda
    Lord Siva or Narayana is GOD for all
    All the hindus know this basic truth.
    People who are practising other religions have
    no broad outlook to accept the truth.
    you try to follow your religion with unshakeble faith
    and devotion.hich will give you the inner peace
    and harmony.

  22. வணக்கம்,

    சனாதன தர்மமாம் இந்து தர்மத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதும், இறை (ஜோதி) சொரூபமாக மதிக்கப் படுவதும், மிக முக்கியமான ஒன்றுமானதும் அக்னியாகும், அதாவது பஞ்ச பூதத்தில் தன்னிகரற்ற ஒன்று,

    வாயு, நீர், இவை இரண்டும் தான் புகுந்த பாத்திரத்தின் வடிவம் பெரும்,
    ஆகாயம் எதற்குள்ளும் அடையாத பிரம்மாண்டம், ப்ருத்த்வி யான பூமியோ தனக்கென ஒரு உருவம் கொண்டு திட நிலை கொண்டது,

    ஆனால் அக்னி அவ்வாறு அல்ல தன்னை நெருங்கிய அனைத்தையும் தன்னைப் போன்றே மாற்றி விடும், அதாவது அவைகளையும் அக்னியாக்கி அரவணைத்துக் கொள்கிறது, இறைவன் ஈசனும் அவ்வாறே தமது பக்தர்களை ஆட்கொண்டது வரலாறு. அவ்வாறே இந்து தர்மமும். இறைவன் மாத்திரம் அல்ல இந்து தர்மமும் ஜோதி (அக்னி) சொரூபமே.

    பௌத்தம், சமணத்தின் இன்றைய நிலை இதற்க்கு உதாரணம்.

  23. அன்பே சிவம் , அன்பே இயேசு, அன்பே அல்லா.
    எல்லா மதமும் அன்பையும், சகிப்பு தன்மையையும், மன்னிக்கும் மாண்பையையுமே போதிக்கிறது. இதை எல்லாம் கடைபிடித்தால், நீயும் கடவுள், நானும் கடவுள். அற்ப மனிதர்கள் நாம் அதனை அறியாமல் சுயநலத்திற்க்காக நமக்குள் சண்டை போட்டு அமைதி இல்லாமல் அலைகிறோம்.

  24. நீயும் நானும் கடவுள் ஆக முடியாது
    எப்படி கடல் நீரின் ஒரு துளி கடலாக முடியாதோ அதை போல.
    ஆனால் குறைந்த பட்சம் மனிதனாகவாவது நடந்து கொள்ளலாம். அது போதும் உலகம் நன்றாக இருக்க

  25. //நீயும் கடவுள் நானும் கடவுள்
    8 November 2009 at 3:59 pm
    அன்பே சிவம் , அன்பே இயேசு, அன்பே அல்லா.
    எல்லா மதமும் அன்பையும், சகிப்பு தன்மையையும், மன்னிக்கும் மாண்பையையுமே போதிக்கிறது. இதை எல்லாம் கடைபிடித்தால், நீயும் கடவுள், நானும் கடவுள். அற்ப மனிதர்கள் நாம் அதனை அறியாமல் சுயநலத்திற்க்காக நமக்குள் சண்டை போட்டு அமைதி இல்லாமல் அலைகிறோம்.//

    ஐயா //நீயும் கடவுள் நானும் கடவுள்// அவர்களே,

    //எல்லா மதமும் அன்பையும், சகிப்பு தன்மையையும், மன்னிக்கும் மாண்பையையுமே போதிக்கிறது.//

    இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

    அபிரகாமிய மதங்களான யூத மதமும், கிறிஸ்துவ மதமும், இசுலாமிய மதமும் சகிப்புத் தன்மையை போதிக்கிறதா?

    நான் மத நல்லிணக்கத்தை உருவாக்க என் வீட்டிலே இயேசு கிறிஸ்து படத்தை வைத்து வழி பாடு செய்யத் தயார்.

    மேரி மாதா படத்தையும் வைத்து வழிபாடு செய்யத் தயார்.

    ஐந்து வேலையும் தொழுகத் தயார். ரமலானின் நோன்பு இருக்க தயார்.

    அப்படி செய்ய இந்து மதம் அனுமதிக்கிறது.

    அதை போல எந்த கிறிஸ்துவராவது முருகனின் படத்தை அவர் வீட்டில் வைத்து பூசனை செய்ய பைபிளோ, குரானோ அனுமதிக்கிறதா?

    அப்படி முருகனின் படத்தை அவர் வீட்டில் வைத்து பூசனை செய்ய செய்ய கூடிய மனநிலையில் கிருச்துவர்களோ, இசுலாமியரோ உள்ளனரா?

    சகிப்புத் தன்மை இல்லாமல் வெறுப்புத் தன்மை இருக்கும் போது , அன்பு எப்படி உள்ளத்திலே வரும்?

    பிறகு இப்படி //எல்லா மதமும் அன்பையும், சகிப்பு தன்மையையும், மன்னிக்கும் மாண்பையையுமே போதிக்கிறது// என்று எழுதி புண்ணுக்கு புனுகு பூசுவது ஏன்?

  26. //நீயும் கடவுள் நானும் கடவுள்
    8 November 2009 at 3:59 pm
    அன்பே சிவம் , அன்பே இயேசு, அன்பே அல்லா.
    எல்லா மதமும் அன்பையும், சகிப்பு தன்மையையும், மன்னிக்கும் மாண்பையையுமே போதிக்கிறது. இதை எல்லாம் கடைபிடித்தால், நீயும் கடவுள், நானும் கடவுள். அற்ப மனிதர்கள் நாம் அதனை அறியாமல் சுயநலத்திற்க்காக நமக்குள் சண்டை போட்டு அமைதி இல்லாமல் அலைகிறோம்.//

    ஐயா //நீயும் கடவுள் நானும் கடவுள்// அவர்களே,

    //எல்லா மதமும் அன்பையும், சகிப்பு தன்மையையும், மன்னிக்கும் மாண்பையையுமே போதிக்கிறது.//

    சரியான விரிவான விளக்கத்தை ஜனாப் ரஹ்மத்துல்லா அவர்கள் நமக்கு இதே தமிழ் இந்து தளத்திலே அளித்து இருக்கிறார்.

    https://tamilhindu.com/2009/09/unnai_pol_oruvan_review/

    பார்வை: உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

    //ரஹ்மத்துல்லா
    4 October 2009 at 7:35 pm

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

    கமலஹாசன் ஒரு காபிர். அவரது கரிசனத்தையோ அல்லது உங்களது கரிசனத்தையோ முஸ்லீம்களான நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.

    (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.

    நீங்களெல்லாம் இப்படித்தான் அல்லாஹ்வின் கொள்கைகளை கேலி செய்வீர்கள் என்பதை அல்குரானிலேயே அறிவித்துள்ளான்.

    குண்டு வைப்பது குண்டு வைப்பது என்று இங்கே பலர் பேசி வருகிறார்கள். என்னவோ அது பெரிய தப்பு என்பது மாதிரி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு சண்டை வந்தால் இந்தியா குண்டுதான் வைக்கும். அது தப்பா?

    இஸ்லாமியர்கள் ஒரு தேசம். அவர்கள் எந்த தேசத்தின் உள்ளேயும் வரமாட்டார்கள். இறுதித்தீர்ப்புநாள் வரைக்கும் முஸ்லீம்களின் கடமை, அல்லாஹ்வின் கட்டளைகளை காபிர்கள் ஒத்துக்கொள்ளும்வரை ஜிஹாத் புரிவதே.

    ஜிஹாத் என்பது எதிர்வினை அல்ல. ஜிஹாத் என்பது முஸ்லீம்களை யாரோ அடிப்பதால் திருப்பி அடிப்பதல்ல. ஜிஹாத் என்பது ஏக இறைவனின் கட்டளை.

    ”எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக

    —————-

    புண்ணுக்கு புனுகு பூசுவது ஏன்?

    அன்பு, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மாண்பு இதுவா?

  27. மதமாற்றம்மூலம்பெருவாரியானமக்களைமதம்மாற்றி அவர்களின்மூலம்ஆட்சியைபிடித்துஹிந்து நாட்டிநை கிருத்துவநாடாகமாற்றுவதே நோக்கம்.
    கண்மூடிகடவுளை
    வணங்குஎன்றான்.வணங்கினேன்
    கண்விழித்து
    பார்த்தபோது
    என்கையில்
    பைபிளும்,அவன்கையில்நாடும்
    இருந்தது.”

  28. சூப்பர் arasaivadivel .

    ///கண்விழித்து
    பார்த்தபோது
    என்கையில்
    பைபிளும்,அவன்கையில்நாடும்
    இருந்தது///

    நறுக்கென்று உரைக்கும் வார்த்தைகள். அற்புதாமாக் கையாண்டிருக்கிறீர்கள்.
    ஆனால் நிம்மதி கிடைக்கிறது என்றும் பணம் கிடைப்பதாலும் ஏசுவே ஜெயம் என்று சொல்லிக்கொண்டு நாரிப்போவதை நலம் என்று நினைக்கும் நம் மனிதர்களுக்கு இது எங்கே புரிகிறது.

  29. // தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது.// என்று தோமாவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால் தோமாவின் கல்லறையைப் பற்றி மார்க்கோபோலோ(1293) “கிறித்தவர்களும் சரசினியரும் திருயாத்திரையாக வந்து, இவ்விடத்தை அடிக்கடி தரிசிக்கின்றனர். சரசினியர் இப்புனிதரை மிக வணக்கத்துடன் போற்றி, இவர் ஒரு சரசினியர் ஆகவும் பெரும் இறைவாக்கினராகவும் இருந்தார் எனக் கூறுகின்றனர். ‘புனித மன்னன்’ எனப் பொருள்படும் ‘அவரியான்’ என்ற பட்டத்தையும் அவருக்கு அளித்துள்ளனர். இப்புனித இடத்திற்கு திருயாத்திரையாக வரும் கிறித்தவர்கள், புனிதர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து மண் எடுத்துச் சென்று, நோயாளிகளுக்கு அளிக்கின்றனர்; இறைவனின் வல்லமையாலும் புனித தோமையாரின் சக்தியாலும் நோயுற்றவன் உடனே குணமடைகிறான். இம்மண் சிவப்பு நிறமுடையது…” என்றும் (காண்க: P.J.Podipara, The Thomas Christians, St.Pauls Publications, Bombay, 1970, p.23), கே.ஏ. நீலகண்ட சாத்திரி தம்முடைய ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூலில் (வெளியீடு: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,1973) “பிரான்சைச் சார்ந்த மரிக்னொல்லி ஜான் என்னும் துறவி, செயிண்ட் தாமஸ் மாதா கோவிலைத் தரிசிப்பதற்காகச் சோழ மண்டலக் கடற்கரைக்கு வந்தார்” எனவும் (பக்கம் 50) எழுதியிருக்கிறார். இவை தகுந்த சான்றுகளாகத் தாமே இருக்கின்றன. பிறகு ஏன் சான்றுகள் இல்லை என்றும் தோமா ஒரு கட்டுக்கதை என்றும் எழுதியிருக்கிறீர்கள்?

  30. //இவை தகுந்த சான்றுகளாகத் தாமே இருக்கின்றன. பிறகு ஏன் சான்றுகள் இல்லை என்றும் தோமா ஒரு கட்டுக்கதை என்றும் எழுதியிருக்கிறீர்கள்?//
    அவை கோவில் இருந்ததற்குதானே சான்று கூறுகின்றன. தாமஸ் வந்ததற்கு இல்லையே!

  31. @முத்துக்குட்டி
    முத்துக்குட்டி நீதான் மதம் மாறிட்டியே அப்புறம் எதுக்கு இந்து பேர்ல எழுதுற பேரையும் கிறிஸ்துவ பேர வச்சிக்க வேண்டியதுதானே

  32. தோமாவின் கல்லறையைப் பற்றி மார்க்கோபோலோ(1293) என்ன கூறியிருக்கிறார் என்பதை முந்தைய பின்னூட்டத்தில் கூறியிருக்கிறேன். தோமா வரவில்லை என்றால் அவருடைய கல்லறை மட்டும் எப்படி வந்தது?

  33. //மார்க்கோபோலோ(1293) என்ன கூறியிருக்கிறார் என்பதை முந்தைய பின்னூட்டத்தில் கூறியிருக்கிறேன். தோமா வரவில்லை என்றால் அவருடைய கல்லறை மட்டும் எப்படி வந்தது?//
    தென் இந்தியா வந்தாரா என்பது முழுவதும் சந்தேகத்திற்கு உரியது. அவர் பயண அனுபவத்தை அவர் எழுத்வில்லை, மூல படிகள் ஏதும்கிடையாது.
    மார்க்கபோலொ கூறும் கோவில் கல்லறையின் தலைவர் வேடன் மான் என நினைத்து தவறாய் விட்ட அம்பில் இறந்தவர்.
    அவர் பெயரிலான பயணக் கதையில் கேள்விப்பட்ட ஹிந்து புனிதரைத் தவறாகத் திரித்து புனைந்துள்ளார்.

    https://www.silk-road.com/artl/marcopolo.shtml

  34. இயேசுவே பொய். இயேசு பிறந்ததாக, வாழ்ந்ததாக கூறப்படும் காலத்தில் வாழ்ந்த எந்த யுத அறிஞரோ அல்லது பிற அறிஞர்களோ தங்களுடைய புத்தகங்களில் ஏசு என்று ஒருவர் இருந்தார் என்று குறிப்பிடவேயில்லை. ஆதாம், ஏவாள் கட்டுக்கதை போன்றே இயேசுவும் ஒரு கட்டுக்கதை. அவருடைய பதிமூன்று சீடர்களில் மாற்கு, யோவான், மத்தேயு, போன்ற சிலரின் கப்சாக்களே கிடைத்துள்ளன. அதுவும் அவர்கள் எழுதியது இல்லை. பிற்காலத்தில் பலர் தொகுத்ததாக இருக்கிறது. முழுக்க முழுக்க அபத்தக்களஞ்சியம். கிறிஸ்தவர்களுக்கு பொய், புரட்டு பித்தலாட்டங்கள் செய்வதற்கு சொல்லியா தரவேண்டும்.

    கிருஷ்ணர் , ராமர், முருகன், பிள்ளையார் போன்றோருக்கு பிறந்தது முதல் அவருடைய குழந்தைப் பருவ லீலைகள் சொல்லப்பட்டு்ள்ளன. ஆதாம், ஏவாள் பேசியதை ஒட்டுக் கேட்டு எழுதிய கிறிஸ்தவ மகான்கள் இயேசு பிறந்ததை ப்க்கத்திலிருந்து பார்த்த மத்தேயு போன்றோர் அவருடைய குழந்தைப் பருவ லீலைகள் என்று எதையும் பைபிளில் குறிப்பிடவில்லை. நேரடியாக இயேசு அற்புதங்கள் செய்த கதைகள் கூறப்பட்டு்ள்ளன. இயேசு இறந்தபின் தேவனின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்று ஒரு சீடர் பார்த்ததுபோல் கூறுகிறார். அதை எல்லா கிறிஸ்தவர்களும் நமபுகிறார்கள். ஆனால் பிற சீடர்கள் அவ்வாறு கூறவில்லை. மக்களை முட்டாள்களாக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று காதில் பு சுற்றுகிறார்கள்.

    தோமா கதையும், அவருடைய கல்லறை கதையும் எல்லாம் கப்சா தவிர ஒன்றுமில்லை.

  35. நண்பர் முத்துக்குட்டி அவர்களெ நீங்கள் ஒரு மிகப் பழமையான விஷயத்தை ஆராயும்போது முதல் நிலை தரமான தரவுகளைத் தேட வேண்டும்.

    புதிய ஏற்பாடு புனையல்களிலேயே உள்ள அப்போஸ்தலர் நடபடிகள் என்ற பெயரில் வரயைப்பட்டுள்ளதில் அப் 8:1,2 அப்போஸ்தலர் அனைவரும் ஜெருசலேமில் தான் தங்கினர் எனத் தெளிவாக உள்ளது, மேலும் இயேசுவின் மரணத்திற்கு 17-18 ஆண்டுகள் பின்னர் பவுல் ஜெருசலேம் வந்த்போதும் அவர்கள் அன்கேயே இருந்துள்ளனர் என்றே கதைக்கின்றது. கத்தோலிக்கர் இயேசு மற்றும் 3 சகோதர்கள், சில சகோதரிகள் அம்மா மேரி மரணத்தின் போது தோமோ அங்கே இருந்தார் எனவும் உள்ளது.

    மேலும் பல சாதாரண முறையில் யூதாயாவில் மரணம் என்னும் மிகப் பழம் நம்பிக்கைகுரிய சர்ச் ஏடுகள் கூறுகின்றன.
    I quote from Rev.George Menachery Edited St. Thomas Christians Encyclopedia,Vol-2, Article DID St.Thomas Really Come to INDIA- From a Doubters point of View by
    Rev H.COMES. It explains-

    Heracleon- (II Century) is the earliest author to throw a light on St.Thomas carrier; his grandparents might have known the Apostle. Now, discussing the problem of witness and blood martyrdom, he states in a casual way, as something well known, that Matthew, Philip, Thomas, and Levi(Thaddaues) had not met violent deaths. And Clement of Alexandria (150-211/16 A.D.) who quotes this Passage of Heracleon and corrects some of his ideas, does not challenge this facts.
    Church History of Travancore by C.M.Agur, (released by the Church in commemoration of Centenary Celebrations of the Church in 1903) reprint 1990, refers to the Merchant Thomas of Cana who came in 745 AD and clearly affirms-

    Long after his Death the people Canonised him and the Subsequent Generation confused St.Thomas the Armenian Merchant with St.Thomas the Apostle, who never came to Malabar. This Confusion becomes more potent when we look in to the names of the Churches said to have been founded by the Merchant Thomas are Identical with the names of the Churches attributed to St.Thomas. Page-12

    இயேசுவைப் பற்றியோ எந்த ஒரு சீடர் பற்றியோ வரளாற்றாசிரியர் ஏற்கும் நடுநிலை ஆதாரம் ஒன்று கூடக் கிடையாது.

    சுவிசேஷப் புனையல்கள்படியே- இயெச்சு இனவேறி கொண்டு- யூதர்களில் ஒரு பிரிவினர் ஆன சமாரியர் பட்டணம் செல்லவேண்டாம், யூதரல்லாதோர் ஊர்கள் செல்ல வேண்டாம் என்றார். இனவேரீ முற்றி இயேசு யூதரல்லாதோரை நாய் -பன்றி என்றார், சமாரியரை இஸ்ரேலிய யூதர்கள் வணங்கும் அதே சிறு தெய்வமான யவ கர்த்தர் வழிபாட்டை- அறியாததை வணங்குகின்றிர் என்றார். இப்படி எனவேறி கொண்ட இயேசுவின் சீடர்கள் இந்தியா வந்திருந்தால் தமிழில் ஏன் ஒரு எபிரேய அரமிய மொழி சொல்லும் நுழையவில்லை.

  36. தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை. அவர் வந்ததாக சொல்லப்படுவது வெறும் கேட்டு கதை என்று இபோதைய போப்பாண்டவர் சொல்லிருக்கிறார். அதனால் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் இந்த தொமச்சை பற்றி சொல்லப்படும் கதைகளெல்லாம் வெறும் கேட்டு கதை என்று வத்திக்கானில் சொல்லிவிட்டார்கள். கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தராதது போல இங்குள்ள கிறிஸ்தவர்கள் அதை நம்ப தயாரில்லை. என்ன செய்வது?

  37. @ ramachandra menon

    இந்தியா அன்றும்,இன்றும் எந்த ஒரு பொருளையும் விற்க சிறந்த ஒரு சந்தை.புதிதாக வரும் பொருளுக்கு எப்பொழுதும் சிறந்த ஒரு அறிமுகம் தேவை என்பது சந்தை படுத்தல் துறையில் வேலை பார்க்கும் என்னை போன்றோரின் கருத்து.அதாவது கணக்கிட முடியாத ஆண்டுகளாய் பின்பற்றி வந்த இந்து சமயத்தில் இருந்து மக்களை அனுதாப வலையில் விழ வைத்து அவர்களை அவர்கள் பக்கம் திரும்ப வைத்தாலே இந்த சந்தை படுத்தல் தந்திரோபாயம் .

    கிறிஸ்தவத்தை போதிக்க வந்த ஒரு சீடனை ஒரு பிராமணன் கொன்று விட்டான் என கதை கிளப்பி விடும் பொது இயல்பாகவே சுய சிந்தனையுடன்.மனதில் இருந்து முடிவு எடுக்கும் மனிதன் அப்பிராமணன் மீது கோபம் கொள்கிறான்…அது தானே மிஷனரிகளின் தேவை!!!!!அடுத்து தோமாவின் தியாகத்தை முன்னிறுத்துவது..அன்று கூட angel டிவி இல் தோமா தன் உயிரை இந்தியாவுக்காக தியாகம் செய்துள்ளார் ,அதற்காக இஸ்ரவேல் தேசத்துக்கு இந்தியா கடமை பட்டுள்ளது,இஸ்ரவேல் தேசத்தை இரண்டாம் வருகைக்காக ஆயத்தம் பண்ண நாம் அனைவரும் பிரார்த்தனை பண்ண சொல்லறார் ..அது வேற..ஏற்கனவே அமெரிக்க கிழக்குலக நாடுகளை கண் வச்சு கிட்டு இருக்கு.அதன் கூட்டாளியான இஸ்ரவேல் தேசமும் இந்தியால வந்து சொந்தம் கொண்டாடனுமா ???? இந்தியா மக்களை தம் பக்கம்திருப்ப தோமாவை ஆயுதமாக பயன்படுத்தும் இவர்களில்,ஒரு சாரார் ஆனா non -rc எனப்படும் உருவ வழிபாட்டை எதிர்க்கும் கோஷ்டியினர்,தோமாவை கூடங்களில் நினிவு கூறுவதோ இல்லை,அவரின் தியாகத்தை(!!!!!!????) நினைவு படுத்தி பாடல்கள் பாடுவதோ இல்லை.அவரையும் சாத்தன் நு அப்பப்போ சொல்லுவாங்க.அனால் மாற்று மத மக்களிடம் மட்டும் தோமாவை காந்தி அடிகள் range க்கு பீலா விடுவாங்க ..
    Hindu people please beware against the threats that you are going to face in upcoming days..
    Praise the lord siva ..he will save you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *