பல ஊர்களில் பக்தர்கள் வரவும் பொங்கல் வைத்து வழிபடவும் உருவாக்கப்பட்ட, ஹிந்து சமுதாயத்திற்கு சொந்தமான, குறிப்பாக தலித் சமூகத்திற்கு சொந்தமான பரந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பஸ் நிலையங்களாக மாற்றப்பட்டன… வடபழனி கங்கை அம்மன் கோயில் ஒரு காலத்தில் கிராம கோயிலாக இருந்து, ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டு ”தெருக்கோயிலாக” ஆக்கப் பட்டு விட்டது.. கோயில் துவஜ ஸ்தம்பத்திற்கும் கோயிலுக்கும் நடுவே சாலை போடுகின்றனர் பொதுத் துறையினர், பிறகு அந்த துவஜ ஸ்தம்பத்தை ஆக்கிரமிப்பு என்று அழிக்கின்றனர்… இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அஷ்டலக்ஷ்மி கோயில் தல மரம் வெட்டப்பட்டு அந்த கோயிலிலேயே எரிக்கப்பட்டது..
View More கோயில்கள் புற்றீசல்களா? – தி.க அவதூறுக்கு பதிலடிAuthor: கோமதி செட்டி
ஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத்துறை & திருப்பணி கொடுமைகள்
1994 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் ஞாபகமாக இவர்கள் வைத்த ஒரு கல்வெட்டை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆயிரம் வருடம் பழமையான கல்வெட்டுகளின் மீது கொஞ்சம் கூட வரலாற்று அறிவே இல்லாத அரசு அதிகாரிகள் எதோ பெரிய சமயப் பணி செய்தது போல காட்டி கொள்ள தங்கள் பெயர்களை எழுதி ஒரு கல்வெட்டைப் பதித்து உள்ளனர். இது மட்டும் இன்றிப் பல இடங்களில் டைல்ஸ்(Tiles) ஒட்டிக் கோயிலின் பாரம்பரியத்தை அழித்து உள்ளனர். அது மட்டுமா? பல சிற்பங்கள் குப்பைகளாக கோயில் மதில் சுவர் ஓரங்களில் போடப்பட்டு உள்ளன…
View More ஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத்துறை & திருப்பணி கொடுமைகள்அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்
கோயிலை பல ஆண்டு காலம் பராமரிக்காமல் நாசம் செய்து விட்டு பின்னர் திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் பல இலட்சம் செலவு செய்து வண்ண பூச்சு செய்துள்ளனர். வருடத்திற்கு ஒரு சில ஆயிரங்கள் செலவு செய்து ப்ராமரித்திருந்தாலே போதும், இந்த மோசமான நிலைக்கு கோபுரம் சென்று இருக்காது… ஒரு காருக்கு போடும் துணியோ அல்லது ஒரு தார்பாலினை உபயோகித்தோ மூடிவைத்து பல நூறு வருடங்கள் பழைய கலைப் பொக்கிஷமான மரத் தேரைப் பாதுகாத்திருக்கலாம். இதைக் கூட செய்யாமல் தேரை முற்றிலும் அழிய விட்டிருக்கிறார்கள்… கோயிலுக்கு 100 ஏக்கர் அளவில் நில சொத்து உள்ளது. இருந்தும் எந்த பயனும் இல்லை. அனைத்து சொத்துகளும் திராவிட இயக்க அரசியல் கொள்ளையர்கள் கையில்…
View More அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்
மண்டபங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட லாரிகளில் அழகாக வெட்டி எடுக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள். வடிவேல் ஒரு படத்தில் “ என்னோட கிணற காணோங்க” என்று சொல்வாரே, அது போல,.. கோயிலின் ஆகம தர்மம் மற்றும் அதன் புணிதம் கெடுக்கும் வகையில் கோயில் கருவறைக்குள் தர்மத்தை மீறி இவர்கள் கல்லா கட்டுவதற்காக டைல்ஸ் ஒட்ட போகிறார்கள்… பெரிய கோயில்களில் வரும் பல கோடி வருமானத்தை ஏழை ஹிந்துகளுக்கும் அழியும் நிலையில் இருக்கும் நமது பாரம்பரிய விவசாயம், கலைகள், தொழில் நுட்பங்கள், வனவாசிகள் போன்ற மக்களுக்கு கொடுக்காமல்…
View More நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்
சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம். கம்யூனிஸ்ட்டுகளின் விதேசி எதிர்ப்புக்கும் சுதேசிகளின் எதிர்ப்புக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் உண்டு.. முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாலும் சரி கம்யூனிஸ பொருளாதார கட்டமைப்பாலும் சரி இங்கே இருக்க கூடிய பாரம்பரிய இயற்கையை ஒட்டிய தொழில் நுட்பத்தை ஞானத்தை அழித்து விட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்க இயலாது
View More சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை
பகுத்தறிவைக் குத்தகைக்கு வாங்கிய திராவிட தலைவர்கள் உடையும் இந்தியா? என்ற நூலை பற்றி விமர்சனம் செய்கிறேன் என்ற பேரில் திராவிட தலைவர்கள் செய்த ‘வடிவேலு காமெடி’யை பற்றி என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஒரு நிலப்பகுதியை இனமாக மாற்றிய இவர்களுக்கு ஒரு வார்த்தை கண்டமாக மாற்றுவதா கஷ்டம்? குமரி கண்டம் என்பது வரலாற்று திரிப்பு என்று சொன்னவுடன் காலில் வெந்நீர் கொட்டியது போல் அலறுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. தமிழ் மொழியின் எந்த இடத்திலும் குமரி கண்டம் என்ற வார்த்தை இருந்ததாக தெரியவில்லை…
View More பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடைஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2
வளரும் நாடுகளின் அணுசக்தியை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு முடமாக்க முயல்கின்றன் என்பதையும் அதற்காக அவர்கள் ஏற்படுத்தும் மரணங்களை பற்றியும் கண்டோம்.. ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது… நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி அளவும் குறைந்து கொண்டு இருக்கிறது.. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை அணுச்சக்தியால் மட்டுமே தீர்க்க முடியும்…
View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1
வரலாற்று சம்பவங்கள் என்பவை என்றுமே முடிந்து போன ஒன்று கிடையாது, அது மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் அவர்கள் நோக்கம் என்ன என்பது ஒரு அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட யூகிக்கமுடியும். இதே பிரச்சனைகள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டது. அணுசக்தியில் ஈரான் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் இருந்தது. இது போன்ற மரணங்கள் / படுகொலைகள் அப்பொழுது இந்தியாவிலும் நடை பெற்றன
View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1கிகாலி முதல் பரமக்குடி வரை – 2
ருவாண்டாவை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துவுடன் பெல்ஜியம் செய்த முதல் வேலை,தனது நாட்டு பாதிரியார்களை அங்கு இறக்குமதி செய்தது தான்… கடவுளிடம் எவ்வாறு பிராத்திப்பது என்பது கருப்பர்களுக்கும் தெரியும். கொலை செய்வதும், திருடுவதும் தவறு என்பதும் அவ்ர்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் மதமாற்றம் செய்ய வந்து இருப்பது அவர்களுக்கு இறைவனை பற்றி சொல்வதற்கு அல்ல, நமது தேவைகளை பூர்த்தி செய்ய….குழந்தைகள் சர்வ சாதாரணமாகக் கடத்தப்பட்டு அனாதைகளாக மிஷனரிகளில் விற்கப்பட்டனர். இவ்வாறு விற்கப்பட்ட குழந்தைகளே பிற்காலத்தில் கத்தோலிக்கத்தின் ஆயுதங்களாக மாற்றப்பட்டனர்….
View More கிகாலி முதல் பரமக்குடி வரை – 2கிகாலி முதல் பரமக்குடி வரை – 1
ஜாதியை ஆதரிப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். ஜாதியை எதிர்ப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். அந்த அளவுக்கு ஜாதி ஒரு சக்தி மிக்க வார்த்தை…ஹுடு சாதியினர், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட டுட்சி ஜாதியினரை மூன்றே மாதத்தில் படுகொலை செய்தனர். அதாவது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் மூன்று மாதங்களில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டனர்…
View More கிகாலி முதல் பரமக்குடி வரை – 1