அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்

மது முன்னோர்களின் கலாச்சார மற்றும் தொழில் நுட்ப திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது நமது கோயில்கள். அத்தகைய கோயில்களில் ஒன்று தான் சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டிணம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில். விபீஷணர் அயோத்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழியில் ராமபிரானை நோக்கி இந்த இடத்தில் தவம் இருந்தார். அப்பொழுது ஸ்ரீராமர் மீண்டும் அவருக்கு பட்டாபிஷேக கோலத்தில் காட்சி அளித்தார். தனக்கு கிடைத்த ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விபீஷணர் இந்த ஆலயத்தை அமைத்தார் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது. இந்த தலத்தில் ஸ்ரீராமர் அன்னை சீதா தேவியுடன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்.

இத்தகைய சரித்திர முக்கியதுவம் வாய்ந்த இந்த தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் சிறப்பான முறையில் மண்டபங்கள் பல கட்டப்பட்டன. இக்கோயில் மண்டபங்கள்ளும் அவற்றில் உள்ள தூண்களும் அழகிய சிற்பங்களால் நிறைந்துள்ளன. கோயிலின் மண்டப சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் இத்தனை வருடங்கள் பராமரிக்கப்படாத நிலையிலும் அழகாக காட்சி அளிக்கின்றன.

இந்த கோயிலின் மைய கருவறை 1000 வருடங்கள் பழமையானது. மேற்கத்திய தொழில் நுட்ப முறையில் பல கோடி செலவு செய்து கட்டப்படும் கட்டிடங்களே ஒரு 200 ஆண்டுகளில் உடைந்து விடுகின்ற நிலையில் இத்தனை ஆண்டுகளாக குறையாத வனப்புடன் இந்த கோயில் உள்ளது. எத்தனையோ மழை, புயல், சுட்டேரிக்கும் வெயில் என்ற இயற்கையின் விளையாட்டை தாண்டி நின்ற இந்த கோயில் சிற்பங்கள் அறநிலை துறையின் அதிகாரிகளினால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இந்த கோயிலின் முன்புறம் பழமையான கலை அம்சம் மிக்க மரத்தாலான ஒரு தேர் உள்ளது. விலை மதிப்பற்ற இந்த கலை பொக்கிஷம் இன்று ஒரு மிக பெரிய குப்பையாக மாறியுள்ளது. மேற்கூரை எதுவும் இன்றி மண் காற்றால் தூசு படிந்து முழுமையாக அழியும் நிலையில் உள்ளது, இந்த கலை பொக்கிஷத்தை ஒரு காருக்கு போடும் துணியோ அல்லது ஒரு தார்பாலினை உபயோகித்தோ பாதுகாத்து இருக்கலாம். இந்த சாதாரண விஷயத்தைக் கூட செய்யாமல் தேரை முற்றிலும் அழிய விட்டிருக்கிறார்கள். இந்த கோயிலுக்கு 100 ஏக்கர் அளவில் நில சொத்து உள்ளது. இருந்தும் எந்த பயனும் இல்லை. அனைத்து சொத்துகளும் திராவிட இயக்க அரசியல் கொள்ளையர்கள் கையில் உள்ளது.

இந்த கோயிலை கட்டிய சிற்பிகள் ராமாயண காவியத்தை பல இடங்களில் சிற்பங்களாக ஓவியங்களாக உருவாக்கியுள்ளனர். ஆனால் அந்த ஓவியங்களில் சூர்பனகை ஓவியம் மட்டும் இல்லை. அந்த குறையை தற்பொழுது அறநிலை துறை போக்கியுள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? ‘SAND BLASTING” என்ற சிற்பங்களின் மீது மணலை பீச்சி அடிக்கும் தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தை உபயோகித்து, எல்லா சிலைகளையும் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் மூக்கை மழுங்கடித்து சூர்பனகை போல மாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த முறையில் சுத்தம் செய்த ஒரு சில ஆண்டுகளில் சிலைகள் மற்றும் கட்டிடங்கள் வலிமை இழந்து உடைந்து அழிந்துவிடுகின்றன.

’SAND BLSATING’ தடை செய்யப்பட்டதற்கான ஆணை….

நாசம் செய்யப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் கோயில் சிலைகள்

கோயிலை பல ஆண்டு காலம் பராமரிக்காமல் நாசம் செய்து விட்டு பின்னர் திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் வண்ண பூச்சு செய்துள்ளனர். இதற்கு பல இலட்சம் செலவு செய்து உள்ளனர். உண்மையில் வருடத்திற்கு ஒரு சில ஆயிரங்கள் செலவு செய்து ப்ராமரித்திருந்தாலே போதும், இந்த மோசமான நிலைக்கு கோயில் கோபுரம் சென்று இருக்காது.

இது மட்டுமா? பல இலட்சம் செலவு செய்து தீட்டப்படும் நவீன பெயிண்டுகளே ஒரு சில வருடங்களில் மங்கி போய் விடுகின்ற நிலையில் பல நூறு வருடங்கள் ஆன பிறகும் அழியாமல் இருக்கும் பழங்கால ஓவியங்கள் தற்பொழுது அறநிலை துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் மழை நீர் வடிந்து அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அந்த அற்புதமான ஓவியங்கள் மீது மின்சார ஒயர்கள், பல்புகள் என்று போட்டும் சர்வ நாசம் செய்து உள்ளனர்.

அது மட்டும் இன்றி 600 வருட பழமையான மண்டபங்களுக்கு உள்ளே ஆகம விதிக்கு புறம்பாக பல சிமெண்ட் சிலைகளை வைத்து கல் மண்டபத்தின் அழகையும் பாரம்பரியத்தையும் கெடுத்து உள்ளனர். ‘DEAD LOAD’ என்று சொல்லப்படும் இந்த நிரந்தர அதிகப்படியான பளு நாளடைவில் தூண்களை வலுவிழக்க செய்து உடைத்து விடும் ஆபத்தும் உள்ளது. அது மட்டும் இன்றி சிமெண்டினால் உருவாக்கப்படும் பொம்மைகள் மீது அரச மரம் எளிதாக வளர்ந்து தூண்களில் விரிசல் ஏற்படுத்துகின்றன. இதை பற்றி எல்லாம் இந்த அறநிலை துறை அதிகாரிகளுக்கு எந்த கவலையும் இல்லை. இவர்களுக்கு காண்டிராக்ட் விட்டு வரும் வருமானம் மட்டும் தான் முக்கியம்

பல கற் சிலைகள் சிதலமடைந்து இருக்கின்றன். இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது எனக்கு தெரியாது என்று திமிர்த்தனமான பதில் வேறு வருகிறது. அது மட்டும் அல்ல. சில வருடங்களுக்கு முன்பு கோயில் மண்டப தரையின் மீது இந்திய அரசின் தொல் பொருள் சட்டத்திற்கு புறம்பாக மொசைக் தரை போட்டு கோயிலின் புனிதத்தை கெடுத்ததோடு மட்டும் அல்லாமல் பல அரிய கல்வெட்டுகளையும் அழித்துள்ளனர். இப்பொழுது மீண்டும் அந்த மொசைக் மீது மார்பில், டைல்ஸ் ஒட்டி விட்டனர். ஏற்கனவே அதிக அளவில் சேதப்படுத்திய நிலையில் இவர்கள் மேலும் மேலும் விலைமதிப்பற்ற கலை பொக்கிஷமாக திகமும் மண்டபங்களை சீரழித்து கொண்டு இருக்கின்றனர்.

எனது நண்பர் இந்த கோயில் இருந்த பொழுது ஒரு வயதான மூதாட்டி டைல்ஸ் போடாதீர்கள். என்னை போன்ற வயதானவர்கள் எளிதாக நடக்க முடியாது என்று வருத்ததுடன் சொன்ன பொழுது அந்த அதிகாரிகள் அது எல்லாம் முடியாது என்று அவரிடமும் திமிர்த் தனமாக பதில் அளித்து இருக்கிறார்கள். பாவம் அந்த மூதாட்டி வருத்ததுடன் சென்று விட்டார்.

தற்பொழுது பெரும்பாலான இடங்களில் டைல்ஸ் ஒட்டி விட்டுள்ளனர். இந்த அழிப்பு வேலைக்காக பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்வதற்கு பதிலாக சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே செலவு செய்து கோயில் சிற்பங்களையும் அழகிய ஓவியங்களையும் அருமையாகப் பாதுகாத்து இருக்கலாம். இந்த அடிப்படை பொது அறிவு கூட இல்லாதவர்கள் எப்படி கோயில் அதிகாரிகளாக செயல்படுகிறார்கள்?

இந்தக் கோயிலில் இத்தோடு மட்டும் நிறுத்தவில்லை. பல நூறு வருடம் பழமையான பழமையான பலிபீடத்தையும் சிதைத்து உடைத்து உள்ளனர். ஆகம விதிகளின் படியும், இந்திய அரசின் தொல் பொருள் சட்டப்படியும் மன்னிக்க முடியாத குற்றம் இது.

ஆகம விதிகளுக்கு புறம்பாக கருடாழ்வார் சன்னதியின் மேல் கோபுரத்தையும் கட்டி உள்ளனர்.கருடாழ்வார் சன்னதிக்கும் மண்டபத்திற்கு இடையே படிக்கட்டுகளையும் அமைத்துள்ளனர். இவை எல்லாவற்றையும் விட கொடுமையான ஒரு விசயம் ஹனுமன் சன்னதிக்கு நடந்து உள்ளது. இந்த கோயிலில் வெளி பிராகாரத்தில் இருந்து ஸ்ரீராமரை தரிசனம் செய்து கொண்டு இருக்கும் ஹனுமனுக்கும், கோயிலுக்கும் நடுவே தமிழக அரசு ஒரு சாலையை வேறு போட்டு உள்ளது. பழமையான சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒரு தலத்தில் இது போன்று சாலை அமைப்பது ஒரு மிகப்பெரிய தவறு என்பது பட்டம் பெற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமான விசயம். சரி அவர்களுக்கு தான் தெரியவில்லை. கோயில் சம்பளத்தில் வாழ்க்கையை நடத்தும் இந்த அறநிலை துறை அதிகாரிகளுக்காவது தெரிய வேண்டாமா?

இது தவிர இவர்கள் காண்ட்ரேக்ட் விட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கோயிலிக்கு தற்பொழுது புதிய தேர், புது பரிவார தெய்வ மண்டபங்கள், ஆகம விதிகளுக்கு புறம்பாக படிக்கட்டுகள் என்று பல்வேறு முறை கேடுகளிலும் ஈடுபட்டு உள்ளனர். இது போன்ற கோயில் திருப்பணிகளுக்கு எல்லாம் பணம் புகழ் பெற்ற கோயில்களில் ஜிசியா போன்று வசூல் செய்யப்படும் தரிசன டிக்கெட் மூலம் பெறப்பட்ட வரியில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் அந்தந்த கோயில்களுக்கு உரிய சொத்துகள் மூலம் வரும் வருமானத்தைப் பெற இந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏன் என்பதற்கு நான் விளக்கம் அளிக்க தேவையில்லை, அது எல்லாருக்குமே தெரியும் என்று நினைக்கிறேன்.

பல ஹிந்து சகோதரர்கள் இது போன்ற அறங்கெட்ட அதிகாரிகளை எதிர்த்து பல்வேறு நிலைகளில் போராடி கொண்டு இருக்கின்றனர். இதில் சிலர் வெற்றியையும் அடைந்து உள்ளனர். ஆனால் சில நேரங்களில் போலி திராவிட இனவாத வெறியர்களால் வாங்கப்படும் நீதியால் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அநீதிகளும் நடக்கின்றன.

முன்னோர்களின் கடின உழைப்பிலும் அவர்களது ஆன்ம சக்தியாலும் சான்றோர்களின் தவ வலிமையிலும் உருவாக்கப்பட்ட மதிப்பு மிக்க கோயில்களை அழிக்கும் அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டிப்பாக ‘சிவன் சொத்து குல நாசம்’ என்ற பொன்மொழிக்கேற்ப கட்டாயம் தண்டனை பெறுவார்கள்.

மேலும் தெய்வ சக்தி மனித யத்தனம் மூலமாகவே செயல்படும் என்பதையும் நாம் உணரவேண்டும். ஒரு இந்தியனாக, ஹிந்துவாக தமிழனாக நாம் செய்ய வேண்டிய கடமைகள் சில உள்ளன. இது போன்ற விசயத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லலாம், இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம். உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரலாம். இது குறித்த புகாரை கீழ் கண்ட அதிகாரிகளுக்கு பத்திரிக்கை துறையினருக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலை பேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

சில பத்திரிகை துறையினரின் மின்னஞ்சல் முகவரிகள்:

The Hindu: letters@thehindu.co.in
புதிய தலைமுறை: news@gennowmedia.com
New Indian Express: writetous@newindianexpress.com
Dinamalar: dmrcbe@dinamalar.in
Dina thanthi: managerms@dt.co.in

இந்து சமய அறநிலை துறை சம்பந்தப் பட்ட அனைத்து விசயங்களுக்கும் ஒட்டு மொத்த பொறுப்பில் இருப்பவர்கள், அதில் நடக்கும் தவறுகளுக்கு பொறுப்பு ஏற்று அதற்கு நடவடிக்கை எடுக்க கூடிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பற்றீய விவரங்கள்:

The Secretary, Tamil Development, Religious Endowments and Information Department,
Email: tamilreinfosec@tn.gov.in, Ph: +91-44-25672887, Fax: +91-44-25672021

The commissioner, Hindu religious and Endowment board
E mail ID: tn.endowments@gmail.com, Ph No: +91-44-28334817, Fax: +91-44-2833 4816

இந்தியாவின் கலாச்சார சின்னங்களை பாதுகாப்பதற்கான பொறுப்பில் இருக்கும் இந்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை அதிகாரியின் விவரங்கள்:

Janhwij Sharma, Director (Conservation), ASI (Delhi)
Email ID: dircon.asi@gmail.com Ph: +91-11-23013316,

Sh. S.V. Venkateshaiah, Regional Director South Zone (Bangalore)
Email ID: rdsouth.asi@gmail.com Ph : +91 9449571424,

The commissioner, Department of Archaeology,
Email ID: tnarch@tn.nic.in, Ph: 044-28190023, FAX: 28190023

இந்த அதிகாரிகளை நீங்கள் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம்.

13. Protection of place of worship from misuse, pollution or desecration & 18. Power to Central Government to control moving of sculptures, carvings or like objects படி சம்மந்தப் பட்ட இந்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கு வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த சட்டங்கள் குறித்த விவரங்கள் இங்கே.

இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யாததோடு மட்டும் இன்றி பாரம்பரிய கலாச்சார சின்னங்களை அழித்து மதத்தை அவமானப்படுத்த கூடிய செயல்களை செய்தது போன்ற பல்வேறு தவறுகளை செய்த அதிகாரிகளின் மீது கீழ் கண்ட சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டி உயர்திரு சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அனுப்பலாம்.

The Indian Penal Code:

Section 119. Public servant concealing design to commit offence which it is his duty to prevent
Section 120. Concealing design to commit offence punishable with imprisonment
Section 295. Injuring or defiling place of worship with intent to insult the religion of any class
Section 405. Criminal breach of trust
Section 406. Punishment for criminal breach of trust
Section 409. Criminal breach of trust by public servant, or by banker, merchant oragent
Section 424. Dishonest or fraudulent removal or concealment of property
Section 425. Mischief

The collector, Salem district,
E-Mail: collrslm@nic.in, Ph: +91-427-2330030 / +91-427-2452244, Fax: +91-427-2400700

13 Replies to “அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்”

 1. உங்க மதுரை ஆதீனத்துக் கண்ட்ரோல்ல திருப்புறம்பியம் வருகிறது. பராந்தகனின் கலைப் பொக்கிஷம். அந்தக் கோவிலின் சிறப்பே miniatures . அங்க சாமி sand blasting பண்ணப் போகிறார். போய்த் தடுத்து நிறுத்துங்கள். உங்களுக்கு கோடிப் புண்ணியம்.

 2. இவ்ளோ ரசனை கெட்ட கூமுட்டைகளாகவா இருப்பார்கள்? அவங்க படிப்பில் கோளாறு.

 3. குன்றக்குடி ஆதினக் கோயிலான குன்றக்குடியிலும் கும்பாபிஷேகத்தை ஒட்டி மராமத்துப் பணிகள் நடப்பதாக இருந்தேன். கடவுளே அந்தக் கோயிலுக்கு என்ன ஆகப் போகிறதோ, எதை எதை நாசம் செய்யப் போகிறார்களோ, கடவுளுக்கே வெளிச்சம்.

 4. இந்த கோயிலை பற்றிய தகவல் எனது முக நூல் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு கிடைத்தது. இது போன்ற கோயிலில் நடக்கும் அறநிலை துறை அநியாயங்களை பற்றிய தகவல்களை தமிழ் ஹிந்து தள மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவது மட்டும் இன்றி இதை படிக்கும் உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

 5. ரமேஷ் பொறுப்பற்ற தனமாக பேச வேண்டாம்! எல்லோரும் கூடி இழுத்தால் தான் தேர் நகரும்! ஒருவர் மட்டுமே இழுத்தால் என்ன ஏற்படும்! எல்லா இடங்களிலும் திரு. கோமதி செட்டி போன்றோர்கள் உருவாக வேண்டும்! நாமும் உருவாக்க வேண்டும்! சோற்றை பிடித்து நாம் எல்லாரும் வாயில் தானே போட்டு கொள்கிறோம்? மற்றைய அவயவங்களில் இல்லையே! அப்போது நமக்கு தான் சொரணை வேண்டும்! தூங்கி கிடந்தது போதும்! விழித்தெழு தமிழா உனக்கு பல வேலைகள் காத்திரிகின்றன! நாங்களும் எங்கள் ஊரில் கோவிலில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்டு கொண்டு தான் இருக்கிறோம்! பல நன்மைகள் அதனால் ஏற்படுகின்றன! ஆகவே நீங்களும் போராடுங்கள்! போராட்டம் ஒன்றே இத்தகைய ப்ரைச்சனைகளுக்கு தீர்வு! அரநிலயதுரையும் ஆமையும் ஒன்றே!

 6. For the Kind attention of Tamil Hindu Editorial :

  Monday, June 28, 2010
  The article published in Times of India entitled: ‘Being Muslim in India means Syeds spit on Julahas in an ‘egalitarian community’

  https://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Being-Muslim-in-India-means-Syeds-spit-on-Julahas-in-an-egalitarian-community/articleshow/5935797.cms
  The Times of India, (The Sunday Times) 16, May 2010. Mohammed Wajihuddin, TNN, May 16, 2010, 12.45am IST
  ‘Being Muslim in India means Syeds spit on Julahas in an ‘egalitarian community’
  There is no escape from caste in India. Even the Indian Muslim practises it. Mohammed Shabbir Ansari of Jalna, Maharashtra, should know. He founded the All-India Muslim OBC Front, which is leading the battle against Ashraaf or upper-caste discrimination against Ajlaaf or lower-caste Muslims. Ansari recalls how the “Jamaat-e-Islami and other Muslim bodies would attack me when I said casteism existed among Muslims a decade ago.” He says even highly-educated Muslims practise caste. “A syed family from Hyderabad called off my second daughter’s marriage proposal once the boy’s mother learnt that I belonged to the julaha (weaver’s community),” Ansari says. Ansari’s experience illustrates the basic truths in the seminal study “Hindustan Mein Zaat-Paat Aur Musalman” (Casteism in India and Muslims) written by the Lucknow-based scholar Masood Alam Falahi in 2008. Falahi traced the origin of caste practices among Muslims and named the noted ulema who winked at it. He said the caste system took root among Indian Muslims after Qutbuddin Aibak founded the Delhi Sultanate in the 13th century. Sultanate scholars divided Muslims into Ashraaf and Ajlaaf. The Ashraaf are Syed, Shaikh, Mughal and Pathan and the Ajlaaf are Qasai (butcher), Nai (barber), Julaha (weaver). The very lowest Ajlaafs were Arzaals (sweepers, shoe-makers, etc). Hundreds of years later, the Sultanate’s categorization would be given extra legitimacy by respected 20th century clerics such as Maulana Ashraf Ali Thanvi, who extolled the supremacy of Syeds. In fact, Muslims’ caste-consciousness runs so deep Allama Iqbal reprimanded them in a couplet: “Yun to Syed bhi ho, Mirza bhi ho Afghan bhi ho/Tum sabhi kuchch ho batao ke Musalman bhi ho (You are Syed, Mirza and Afghan/You are everything but Muslim)”. The paradox of Muslim casteism can give rise to extraordinary situations. Falahi recalls Muslim speakers asking dalit Hindus in Azamgarh to embrace Islam a few years ago because “everyone is treated equally here. But a man stood up and said ‘there might be no castes in Islam, there are castes among Indian Muslims’. The speakers had no answer to that.”

 7. கொள்ளையர்களிடம் இருந்து கோவில் நிலத்தை (மதுரை ஆதீனத்திருக்கு சொந்தமான ) மீட்பதற்கான முயற்சிகளை இளைய ஆதீனம் எடுத்துள்ளார். அதை தமிழ் ஹிந்து ஆதரிக்குமா… இல்லை வெறும் கட்டுரை எழுத மட்டுமா?
  .. நமசிவாய..

 8. மோகன்,

  இளைய ஆதினம் என்று தாங்கள் யாரை சொல்கிறீர்கள். நித்யானந்தாவையா? அவரிடம் இருப்பதற்கும் அறநிலை துறையிடம் இருப்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

  இளையா அதீனம் மட்டும் அல்ல அதீனம் என்று சொல்லி கொண்டு இருக்கும் மனிதரும் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

  திருக்கோயில் ஹிந்து உணர்வு உள்ளவர்களால் நிர்மானிக்கபட வேண்டும்.

 9. Mithran on May 17, 2012 at 1:17 pm

  அற்புதம் போங்கள். இவர்களுக்கு இன்னும் வாய் வேண்டுமா ? சமத்துவம், அமைதி ,என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத இஸ்லாமியர்கள், ஷியாக்களையும், அகமதியாக்களையும், சுபிக்களையும், போராக்களையும், தினசரி வேட்டையாடி கொன்றுவருவது உலகு அறிந்த ஒன்று.இந்த வன்முறைகளில் ஈடுபடுவோர் ஒரு பத்து சதவீதத்துக்கும் குறைவே. ஆனால், எஞ்சிய தொண்ணூறு சதவீத இஸ்லாமியர்கள் , இந்த வன்முறை கும்பலுக்கு அஞ்சி, வாய் மூடி , பேதைகளாய் வாழ்கிறார்கள். எனவே, வன்முறையாளர்களின் கை ஓங்கி, எல்லா இஸ்லாமியர்களுமே வன்முறையாளர்கள் என்று அனைவரும் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.

  பிற மதத்தினரை தங்கள் மதத்துக்கு எப்படியாவது மாற்றி, பிற மதங்களை அழித்துவிடவேண்டும் என்று முயலும், ஆபிரகாமிய மதங்கள் விரைவில் அழிந்து போகும். ஏனெனில் ஆபிரகாமிய மதங்கள் வன்முறையை தூண்டுவதே தொழிலாக உள்ளன.

 10. இந்தக் கொடுமையை நான் பல கோயில்களில் பார்த்துக் கண்ணீர் விட்டிருக்கிறேன். திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலிலும் ஒரு தேர் இப்படி அழிவதற்கு விடப்பட்டிருக்கிறதைப் பார்த்தேன். சிங்களவர்களும் மேல்நாட்டவர்களும் எவ்வாறு தம்முடைய நூறு வருடங்களிலும் குறைந்த கட்டிடங்களைக் கூடக் காப்பதை நாம் காணலாம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இவையெல்லாம் தமிழர்களின், தமிழ்நாட்டின் பாரம்பரிய சொத்துக்கள் என்பதை மறந்து கோயில்களையும் பிராமண வெறுப்பின் அடையாளமாகப் பார்ப்பதால் இக்கலைச் சொத்துக்கள் எல்லாம் அழிகின்றன, இந்த நிலை வேண்டுமானால், ஈழத்தில் போன்று சமயம் எல்லா மாணவர்களுக்கும் கட்டாயபாடமாக்கப் படவேண்டும். ஈழத்தில் சைவ தமிழ் மாணவர்கள் அனைவரும் இந்து மதம் கட்டாயபாடமாக மூன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை கற்க வேண்டும். அதனால் தமிழ்நாட்டு மாணவர்களை விட ஈழத்தமிழ் மாணவர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களையும், நாயன்மார்கள், ஆழ்வார்களையும் தேவார திருவாசகங்களையும் அறிந்தவர்கள். தமிழ்நாட்டுக் கோயில்களின் நிலையைப் பார்க்கும் போது எங்களின் மனம் மிகவும் புண்படுகிறது. ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதே கோயில்களைத் தரிசிக்கத் தான்

 11. அடப்பாவிகளா! வாசிக்கும்போதே வயிறு எரிகிறதே:(

  இதைப்போல ஒன்றை இப்போது செதுக்க முடியுமா?

  பழையகாலச் சிற்பங்களின் மதிப்பு தெரியாதவர்களை அதிகாரிகளாக நியமிக்கலாமோ?

 12. இந்து கோவில்கள் இந்துகளிடம் ஒப்படைத்தால்- மட்டுமே இது போன்ற கொடுமைகள் நிகழாது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *