வந்தே மாதரம் பாடலைப் போன்றே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் அடிப்படையில் வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது.
முன்னதை எதிர்க்கும் சிலர் அதைவிடவும் வெளிப்படையாக இந்துமதக் கூறுகளை உள்ளடக்கிய பின்னதை மட்டும் ஏற்பார்களாம். பண்பாட்டு அறிவீனத்தில் விளைந்த குழப்பவாதம், இரட்டைவேடம், போலித்தனம்… சுந்தரம்பிள்ளை அந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் சம்ஸ்கிருதம் ஐரோப்பாவிலும் அதைத் தொடர்ந்து உலகெங்கும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. இந்திய தேசிய மறுமலர்ச்சியையும், இந்திய சுதந்திரத்தையும் தொடர்ந்து சம்ஸ்கிருதத்திற்கு ஏறுமுகம் தானே தவிர அது ‘அழிந்து ஒழிந்து சிதைய’ எல்லாம் இல்லை…
Author: ஜடாயு
அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்
உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை… அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது இருக்கலாம்…
View More அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து
சில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா? தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை?…. 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள்….
View More தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்துகொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்
கொடுப்பதை, சிரத்தையுடன் கொடுத்திடுக. அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது. செல்வத்திற்கேற்பக் கொடுத்திடுக. நாணத்துடன் கொடுத்திடுக. அச்சத்துடன் கொடுத்திடுக. சம்மதத்துடன் கொடுத்திடுக என்கிறது தைத்திரிய உபநிஷதம்… அச்சம் ஏன்? கொடுப்பதால் நமக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடக் கூடாதே, நல்ல உள்ளத்துடன் நாம் கொடுத்தாலும் பெறுபவன் மனம் புண்பட்டு சிறுமையடைந்துவிடக் கூடாதே என்பதான அச்சம். ‘ஸம்வித்’ என்பதற்கு ‘நட்புணர்வுடன்’ என்று சங்கர பாஷ்யம் தரும் பொருள் சிறப்பானது. கொடையைப் பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த ஆறு உபநிஷத வாக்கியங்கள் அளித்து விடுகின்றன…
View More கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்
கடந்த மார்ச்-23, 2017 அன்று மாபெரும் நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான அசோகமித்திரன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூர் வாசக வட்டம் சார்பாக, ஏப்ரல் 2, ஞாயிறு ஒரு நினைவுக் கூட்டம் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளும், கலந்துரையாடலும் இலக்கியத் தரத்துடன் சிறப்பாக அமைந்தன. அவற்றின் வீடியோ பதிவுகள் கீழே… டாக்டர் ப.கிருஷ்ணசாமி அசோகமித்திரனுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சிறந்த இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். அசோகமித்திரனின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமை குறித்து சிறப்பாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் தனது உரையில் எடுத்துரைத்தார்….
View More பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்
தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்… 1969 மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும் பலதரப்பட்ட மக்களிடமும் மிக சகஜமாகப் பழகி வந்தார்….
View More சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்
தொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது… பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல் எவ்வாறு வழக்கொழிந்தது? …….
View More அறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்
இந்தியாவில் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளின் சபைகளிலும் கூட கிறிஸ்தவத்தின் கொள்கைகளையும், மதமாற்ற பிரசாரங்களையும் தீவிரமாகவும் வன்மையாகவும் சுவாமிஜி கண்டித்தார். அமெரிக்காவில் அவரது புகழைக் குலைக்கும் நோக்கத்துடன் அங்கிருந்த பல கிறிஸ்தவ மிஷன்களும் அமைப்புகளும் எப்படியெல்லாம் அவருக்கு எதிராக மோசமான அவதூறுகளையும் பொய்களையும் பரப்பின என்பதும் அவரது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இப்போது யோக்கியன்கள் போல அவரது படத்தையே போட்டு கிறிஸ்தவ மதப்பிரசாரம்..சுவாமிஜியின் வாய்மொழிகள் அனைத்தும் 8 தொகுதிகளில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளன. இதில் ஒரு சில இடங்களில் இயேசு கிறிஸ்துவையும் உயர்வாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால்…
View More விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்
ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது…. மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது… அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன. கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம். எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்…
View More அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்
பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..”புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது… சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்…
View More சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்