ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது.இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது… இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள்….

View More ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

தாய்மதம் திரும்புதலும் சாதியும்

இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது…

View More தாய்மதம் திரும்புதலும் சாதியும்

காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்… தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ சதி இத்யாதி) என்று சதிவலை தியரிகளை எடுத்துவிடுவது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கிராம தேவதையான காஞ்சி காமாட்சியை பிராமணர்கள் அபகரித்து விட்டார்கள் என்பதும் இதேபோன்ற ஒரு அவதூற்றுக் கதையே அன்றி வேறில்லை…

View More காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

இளையராஜா @ கூகிள்

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார் என்றார். அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார்….

View More இளையராஜா @ கூகிள்

சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?

இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல..

View More சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?

கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

மன்யுவே எங்களிடம் வருக – வலியர்களிலும் வலியன் நீ – உனது நட்பான தவத்துடன் இணைந்து – எமது பகையை வென்றிடுக – நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ – விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ – செல்வங்களை எமக்கு நல்கிடுக… கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. ‘ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்’ (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி க்வேதம் பத்தாம் மண்டலம் 83வது சூக்தம், ரிஷி தாபஸ மன்யு. மொழியாக்கம் எனது…

View More கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்… காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான். மேலே உள்ள வீடியோ பதிவுகளின் க்ளிப்பிங்குகளுடன் இந்த விளக்கத்தை தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரச்செய்ய வேண்டும்.

View More தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்… ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?… உண்மையில் வைரமுத்துவின் இத்தகைய திரிபுவாதங்கள் தனிப்பட்ட ஒரு விஷயம் அல்ல. தமிழ் இலக்கியங்களின் மீதும் தமிழ்நாட்டின் இந்து சமய மரபுகளின் மீதும் திராவிட, இடதுசாரி இயக்கங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இவற்றைக் காண முடியும்….

View More ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்…..

View More சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

பி.ஆர்.ராஜமய்யர் வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை… அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும் மூச்சடைக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்ட ஒரு தமிழ் மனம்…

View More பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்