“நும்வாய்ப் பொய்யு முளவோ?”

அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியக் கவி மரபு. சங்ககாலத்திலேயே இது தமிழ்மரபுடன் கலந்து விட்டது… புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும். மகளிர் நகைக்க முல்லை மலரும். ஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. மகளிர் தழுவ மலர்வது குரவம். இவை ‘தோதகக் கிரியை’ எனப்படும். கவிராட்சச கச்சியப்ப முனிவர் காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டம் இயற்கை வருணனியயில் இவற்றை அழகுற அமைத்துப்பாடுகிறார்…

View More “நும்வாய்ப் பொய்யு முளவோ?”

இராமநுச கதி 

எம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது. இதன் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப்பெறும் சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்… பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின்வழி நின்றவர்கட்கே குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான், அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் , உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்… அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ, ‘நீலாசலம்’ எனப் பெயருடைய பூரி ஜகந்நாதேச்சுரத்தைத் தரிசித்து வழிபட அங்கு நண்ணினார்…

View More இராமநுச கதி 

இருளும் வெளியும் – 2

பூனையின் கண்போன்ற கண்கள் இருளையே அறியா. எப்பொழுதும் ஒளியையே அறிவன. திருவருளொளியுடன் கூடிய உயிர்கள் ‘பரமே பார்த்திருப்பன; பதார்த்தங்களைப் பாரா’. பூனையின் கண்கள் மலமகன்ற சுத்தநிலையில். உள்ள ஆன்மாக்களின் நிலைக்கு உவமையாகும். கண்ணிருள் நீங்கிக் கதிரோனோளியில் நேர்நிற்கில், அப்பேரிருள் அக்கதிரொளியில் அடங்கி அக்கதிரொளியாய் நிற்கும். அவ்வாறே ஆன்மாவும் ஆணவம்நீங்கிச் சிவனருளில் நேர்நிற்கில் ஆன்மா சிவமாம் தன்மை பெறும். அப்பொழுது அம்மலம் அச்சிவனருளில் அடங்கி அவ்வருளாய் நிற்கும்.

View More இருளும் வெளியும் – 2

இருளும் வெளியும் – 1

நாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம்.

View More இருளும் வெளியும் – 1

மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

பெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ? தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ? எனக் கேட்கின்றார்…

View More மார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே

சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்

வடமொழியொன்றை மட்டுமே அறிந்தவரைக் காட்டிலும், தமிழ், வடமொழி இருமொழியிலும் வல்லவரே போற்றற்குரியவர். தென்னாட்டுச் சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்குள் அடங்கிக் குறுகிவிடலாகாது. அது, பிற கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதாத்துவிதம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டுமாயின் சைவசித்தாந்திகள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைபெற்றே ஆகவேண்டும்.

View More சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்

சிவநெறி – சமய அவிரோதம்

அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை.
சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம். அதனால் வெற்றி தோல்வி அவனவன் கற்ற கல்விவலியினாலும் வாதத் திறமையினாலும், வாதிக்கேயன்றி மதத்துக்கில்லை.

View More சிவநெறி – சமய அவிரோதம்

சிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்       

சைவசித்தாந்தம் இந்த பேதாபேத வாதத்தில் ஈடுபடாமல் சிவத்துக்கும் ஆன்மாவுக்கும் இடையே அத்துவித சம்பந்தத்தைப் பேசுகின்றது. இந்த அத்துவித சம்பந்தத்தில் ஆன்மா எந்தநிலையிலும் சிவத்தை விட்டுப் பிரிந்துநிற்பதில்லை. இந்த அத்துவித சம்பந்தத்தை முதலில் எடுத்தோதியவர் நான்மறைவல்ல ஞானசம்பந்தர்… கலப்பினால் ஒன்றாதல் அபேத சம்பந்தம். அது பொன்னும் ஆபரணமும் போலன்று; உடலும் உயிரும்போல். வேறாதல் பேத சம்பந்தம். இருளும் ஒளியும் போலன்று; கண்ணொளியும் சூரியனொளியும் போல். கண்ணுக்கு ஒளியிருந்தாலும் பொருளை அறிவதற்குச் சூரியனொளி இன்றியமையாமல் வேண்டப்படும். காணும் ஒளியும் காட்டும் ஒளியும் என அவை வேறாம். உடனாதல் பேதாபேத சம்பந்தம். சொல்லும் பொருளும் போல அன்று. ஆன்மபோதமும் கண்ணொளியும் போல். கண் கண்டாலும் ஆன்மபோதமும் உடன் நின்று கண்ணுக்கு இன்னபொருள் என அறிவிக்கின்றது…

View More சிவசமய வடிவாய் வந்த அத்துவிதம்       

மறக்கொணா இருவர்

திருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை, “தில்லை மூதூர் ஆடிய திருவடி”, என்றும்,”தில்லையுட் கூத்தனே” என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம். அது, சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல். ‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள். எனவே, சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும். அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு; பிண்டமாகிய உடலிலும் உண்டு. அண்டத்திலுள்ளது, பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது , ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும்…

View More மறக்கொணா இருவர்

சங்க இலக்கியமும் சைவர்களும் – 2

சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு இடத்தில் மற்றொரு உயிருடன் ஏதோ ஒருவகையில் உறவு உடையதாகும்… புறநானூற்றில், புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலர், நக்கீரர், பரணர், நல்லுருத்திரனார், நல்லந்துவனார் போன்றோர்களின் பாடல்களோடு, சிற்றினம் என ஆன்றோரால் கடியப்பட்டார் சூழலில் அவரோடுகூடி மதுவும் புலாலும் வுண்டு மங்கையருடன் களித்திருக்கும் புரவலர்களைப் போற்றிப் புகழும் பாடல்களும் உள்ளன. ஊரெரியூட்டுதலையும் உயிர்க்கொலையையும், பெண்களின் கண்ணீர்க்கம்பலையையும் வீரம் எனும் பெயரால் நியாயப்படுத்தலை ஆன்மநேயத்தை மக்களிடையே பரப்ப விரும்பும் துறவிகள் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்? சைவப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் உகந்தனவற்றை ஏற்றுப் போற்றியே வந்துள்ளனர்…

View More சங்க இலக்கியமும் சைவர்களும் – 2