ஒபாமா வந்தார். இந்தியாவை புகழ்ந்தார். காந்தியை புகழ்ந்தார். இந்திய ஜனநாயகத்தை பாராட்டினார். அமெரிக்காவுக்கு வணிக வாய்ப்புகள் பல ஒப்பந்தங்களாக கையெழுத்தாகின. இந்தியாவுக்கு சில உறுதி மொழிகள் தரப்பட்டது. நடைமுறையில் இந்த பயணத்தினால் நமக்கு ஏற்பட்ட நன்மை என்ன? ஒபாமாவின் உறுதிமொழிகள் செயலாக்கம் பெறுவது சாத்தியமா?
View More ஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வைAuthor: மது
கள்ளக் காதல்
ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.
View More கள்ளக் காதல்காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை
தீபிகா படுகோன் இவரைத்தான் இளைஞர்களுக்கான மிகச்சிறந்த முன் உதாரணம் என்றார். அழகிய சிவந்த தோற்றம். வழு வழுப்பான கன்னங்கள். அறிவாளி என்று பறை சாற்றும் கண்ணாடி அணிந்த பார்வை. நேரு – இந்திரா – ராஜீவ் என்ற அரச பாரம்பரியம். நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதற்கொண்டு எல்லோருடைய பாராட்டும் புகழ்ச்சியும் சொரியப் படும் ஆளுமை. ராகுல் காந்தியை ஏறக்குறைய எல்லோருமே பிரதமர் ஆவார் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர் யார்?
View More காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடைஅயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?
முதலில் போலீஸ் விசாரணை, விசாரணைக்குத் தடை, விசாரித்த பின் மறு விசாரணைக்கு மனு, ஸீ பி. ஐ விசாரனைக்கு கோரிக்கை, அதெல்லாம் முடிந்த பின், வாய்தா மேல் வாய்தா, அதைத் தாண்டினால் தீர்ப்பு ஒத்தி வைப்பு, தீர்ப்பு சொல்லப் போனால், அதற்கு தடை உத்தரவு என்று பல தலைமுறைகளுக்கு சாதாரண வழக்குகளே இழுத்தடிக்கின்றன. அயோத்தி பல நூறு வருடங்களாக இருந்து வரும் பிரச்னை. இதில் தாமதம் ஆவது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும், முடிவான தீர்ப்பு என்றே ஒன்று வெளியிடப் படுமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
View More அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்
நமது மக்களுக்கு ஒரு குணம் – ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்னிடம் தொலைக் காட்சி ஏற்கனவே உள்ளது – எனக்கு இலவச தொலைக் காட்சி வேண்டாம் என்று எவர் கூறுகிறார்? பல தலைமுறைகளாக சேரிகளில் மக்கள் வசித்துக் கொண்டு, தொலைக் காட்சியில் கண்ணையும் மனதையும் நிலை குத்தவிட்டு, ஏன் இப்படி குடிசையிலேயே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கிறார்கள். மக்களிடம் இலவசப் பொருள்கள் தான் மிகுந்திருக்கிறதே தவிர வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை.
View More இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை
தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?
இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.” என்று நிறுத்தியது வேதாளம்.
View More வேதாளம் சொன்ன பேரறிஞர் கதைரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்
கருணாநிதி கையால் தாலி எடுத்துக் கொடுப்பது, எதிர்கட்சியின் மீது பெய்யப் படும் வசைகளே மந்திரங்களாக வைத்து பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டப் படுவது போன்ற அவலம் எதுவும் நடக்காமல், தன் மனதுக்கு பிடித்தபடி, தன் குடும்பத்தினர் விரும்புகிற படி இந்த திருமணத்தை நடத்தியிருக்கிற ரஜினியின் நேர்மை மெச்சத் தகுந்தது…. விடுதலை பத்திரிகை பகுமானமாக வீரமணி ரஜினி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ மட்டும் இன்று வெளியிட்டிருக்கிறது…
View More ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்
பல நல்ல ஆசிரியர்கள் வெறுத்துப் போய் இந்த தொழிலை விட்டு வேறு நல்ல வேலைக்கு செல்ல விரும்புவதாகவே ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது… பல்கலைக் கழகங்களில் நியமனம் பெறுகிற பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் சாதி பார்த்தே நியமிக்கப் படுகிறார்கள்…. இன்னமும் பல இடங்களில் பெயர், முகம் வெளிப்படாமல், இன்றைய நிலையை நினைத்து மனதுக்குள் வெறுத்துப் போனாலும், விடாமல் தனது பணியை முடிந்தவரை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்…
View More ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்
பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் – இவ்வளவு ஏன்? – அவரவர் வீட்டுக்குள்ளேயாவது தீவிரவாதம் குறித்து அலசி இருப்போமா என்பது சந்தேகம்.
View More உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்பவானி காதலிக்கிறாள்
[மூர் நாம் அவர்களின் ‘The Principle Of Adaptation’ என்கிற புனைவைத் தழுவியது]…
View More பவானி காதலிக்கிறாள்