பாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா?

சிறப்பான அம்சம் என்ன என்றால், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கு இந்தியப்பிரதமர் சென்றுள்ளமையே ஆகும். பாரதத்தின் பெருந்தலைவர் தமிழர் நலனில் அக்கறையோடு உரையாற்றியதுடன், தமிழர் பிரதிநிதிகளான தமிழ்க்கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசினார். தமிழர்களுக்கு உரிமையும் வளமும், நலமும் வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் குறிப்பிட்டார்… மோடி அவர்கள் பிக்குமார்களுக்கு அளவுக்கு அதிகமான முதன்மையை தந்து வணங்கியதும், அநுராதபுரத்தில் பன்முறை மஹாபோதியை போற்றித் துதித்ததும், நகுலேஸ்வர வழிபாட்டை விட, அதிக முதன்மையான நிகழ்வுகள் என்பது இந்துக்களுக்கு ஒரு இந்து சமயியான உலகத்தலைவரின் வருகை என்ற எதிர்பார்ப்பை உடைத்து விட்டது. இவ்வாறு இந்துக்கள் அஞ்சுவதற்கு அடிப்படை என்ன என்றால் கடந்த காலங்களில் பிக்குமார்கள் தமிழின எதிர்ப்பை கக்கி வந்தமையே ஆகும்….

View More பாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா?

இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

1994ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் பெரும்பகுதி யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வையும் பெரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறான ஒரு சூழலில் மஹாதேவக்குருக்கள் குடும்பமும் அவரது பாடசாலைச்சமூகமும் கூட, இதே துயரத்தை ஏற்று தென்மராட்சியின் உசன் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கும் கூட, குண்டு மழைக்குள்ளும் இலவச வேத, ஆகம வகுப்புகளும், பகவத்கீதா வகுப்புகளும் நடந்தமை வியப்பானது…”பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் நிரம்ப இருந்தது. ஆனால், எனது குடும்பச்சூழல் அவற்றுக்கெல்லாம் இடம்கொடுக்கவில்லை. எம்முடைய தந்தையார் சைக்கிளில் கோவில் கோவிலாகச் சென்று உழைத்த பணத்தை வைத்தே எமது குடும்பம் வாழ்ந்தமையால் வறுமை கல்வியைத் தொடர இடம் தரவில்லை… “

View More இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

தவ முனிவனின் தமிழாகமம்

திருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்… ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா.? இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்… சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே அறியலாம். ஒரு சில ஆகமங்கள் தவிர இன்னும் பல அச்சேறவில்லை. அச்சேறிய ஆகம நூல்களிலும் இருக்கிற பாடபேதம், பிற்சேர்க்கை, விளக்க குறைவு, பொருந்தாத சொற்கள் என்று நீண்ட ஆய்வுகள் நடந்ததாக அறிய முடியவில்லை…

View More தவ முனிவனின் தமிழாகமம்

ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்

நந்திதேவருக்கும், ப்ருங்கி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் கொம்புகளும் கால்களும் உண்டு… ஆனால், ஆதிசேடனின் அம்சமான பதஞ்சலிக்கு கால்கள் எங்கே…? கொம்புகள் எங்கே..? ஆக, மூவரும் பதஞ்சலியை கொஞ்சம் கேலி செய்தார்களாம். பதஞ்சலி முனிவரோ.. “எனக்கு காதும் கண்ணும் ஒன்றே எனவே. இறைவன் ஆடுவதை பார்க்கிற போதே, அவனது திருவடிகளின் தாளலயத்தையும் உணர்கிறேன். அதற்கு ஏற்றாற் போல, கொம்பும் காலும் இல்லாத ஸ்தோத்திரம் ஒன்று செய்கிறேன்.” என்று அழகான ஒரு ஸ்தோத்திரம் பாடினாராம்.. அதன் படியே, கால் போடும் தீர்க்கமான எழுத்துக்களும், கொம்பு போடுகிற ஏ,ஓ போன்ற உயிர் சார் எழுத்துக்களும் இல்லாமல் பதஞ்சலி முனிவர் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார்…

View More ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்

திருஞானசம்பந்தர் உண்ட ஞானப்பால்

“பர்வதராஜ குமாரியே, உனது திருமுலைப்பாலானது வித்தியாமய பாற்கடலாய் பெருகுகிறது என்று நினைக்கின்றேன். ஏதனாலெனில், கிருபை மிக்கவளான உன்னால் கொடுக்கப் பெற்ற திருமுலைப் பாலைப் பருகி தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தப் பிள்ளை புலமை மிகுந்த இசைத்தமிழ்ப் புலவர்களில் தலைமகனாக ஆகி விட்டார்” என்கிறார் சங்கரர்… அம்மையும் அப்பரும் எதிரில் வந்த மாத்திரத்தில் ஜீவான்மாவை மறைத்திருந்த திரோதானசக்தியான மாயை நீங்கி விட சர்வக்ஞானமும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்குமாம். இங்கு ஞானசம்பந்தருக்குப் பாலூட்டல் என்பது குரு மந்திரோபதேசம் செய்வது போன்ற வெளித்தோற்றமான ஆத்மசுத்தி கிரியை என்பர்….

View More திருஞானசம்பந்தர் உண்ட ஞானப்பால்

ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்

இலங்கையின் வன்னி பகுதி மேற்கே மன்னாரையும் கிழக்கே திருகோணமலையையும் எல்லையாகக் கொண்டது. இவ்விரு எல்லைகளிலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவை உள்ளன… இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்… கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார். இன்றும் இக்கிராமத்தில் இக்கோவில் சிறப்புடன் விளங்குகின்றது….

View More ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்

போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை

இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை.

View More போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை

கம்பனும் இலங்கையும்

கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன… அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்… “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்…

View More கம்பனும் இலங்கையும்

சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை

சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது…. தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் என்ற குறளில், பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால் என்ன? இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்….கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள் வழிபாடு செய்பவளாவாள். அவள் எல்லோரும் விரும்புகின்ற போது, பெய்த மழைக்கு ஒப்பாவாள்….

View More சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்

வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர். உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர்.

இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது.
முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில் வாழ்ந்த பலருக்கும் நெற்றிக்கண் இருந்தது என்றும் அவர்களே ‘உருத்திரர்’ எனப்பட்டனர் என்றும் கூட, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடமொழியில் ருத்ரன் என்றால், ‘அழச்செய்பவன்’ என்பது பொருளாகும். யாரை..? என்ற வினா எழும்புகிற போது, தீயவர்களை என்று குறிப்பிடுவர். இதைவிட, ருத்ரன் என்பவன் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் குறிப்பிடுவர்.

சிவனால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டது பாசுபதாஸ்திரம், ஆனால், சிவனால் முருகனுக்கு வழங்கப்பெற்றது “ருத்ரபாசுபதாஸ்திரம்” என்ற மஹாஸ்திரம் என்று கந்தபுராணம் சொல்வதும் இங்கு சிந்திக்கத்தக்கது.

View More ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்