எழுமின் விழிமின் – 33

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை…. பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணிவகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்…..

View More எழுமின் விழிமின் – 33

எழுமின் விழிமின் – 32

நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டு, பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக் கூடிய போக்கு சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்தைய, சிதைந்து குலைந்து போன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழி/துறை இல்லாமல் போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள். “என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன். முதலையின் வாயிலிருந்து, அது என்னைக் கடிக்காத முறையில், பல்லைப் பிடுங்கி விடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன், ஆனால் குருட்டுத்தனமான வெறி பிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்ப முடியாது”….

View More எழுமின் விழிமின் – 32

எழுமின் விழிமின் – 31

சுதந்திரமாகவும், அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது. வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை. அதுபோலத் தான் வாழ்க்கையெல்லாம்….. “நல்லது செய்; நல்லவனாக இரு. இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்” என்று கூறிய தேவபுருஷர் புத்தர் ஒருவர் தான்…. மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது. அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்திப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள்….

View More எழுமின் விழிமின் – 31

விவேகானந்தரின் வீர மொழிகள்

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தாள் என்கிற இந்த மகத்தான தருணத்தில் சுவாமிஜியின் வீரமொழிகளுடன் இணைந்த சில படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்… “வேலையில் ஈடுபடுங்கள், அப்போது உங்களால் தாங்க முடியாத மகத்தான சக்தி உங்களுக்குள் வருவதைக் காண்பீர்கள். பிறருக்காகச் செய்யப் படுகிற சிறுவேலை கூட நமக்குள் இருக்கும் சக்தியை எழுப்ப வல்லது. பிறர் நலத்தைப் பற்றி சிறிதளவேனும் சிந்திப்பதனால் படிப்படியாக நமது உள்ளத்தில் சிங்கத்தைப் போன்ற பலம் உண்டாகிறது… எந்த நாடு பெண்களை மேன்மைப் படுத்தவில்லையோ அந்த நாடும் சமுதாயமும் எப்போதும் உயர்வடைந்ததில்லை…

View More விவேகானந்தரின் வீர மொழிகள்

எழுமின் விழிமின் – 30

ஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன. நாமும் அதுபோலவே இருக்க வேண்டும்…. நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா? அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவை தான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், ‘கண்கள்’ என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது….. இதய பூர்வமான உணச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத் திறமையைக் கொண்டு எவ்வளவுதான் பாடுபட்டாலும் கடவுளை எய்த முடியாது….

View More எழுமின் விழிமின் – 30

எழுமின் விழிமின் – 29

சில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்டிருக்கிறோம்.  மிக அற்புதமான தர்க்க  வாதங்களுடன் உபந்யாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம்.  எல்லாம் மறந்து போகிறது.  வேறு  சில சமயங்களில்  நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம்.  அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன.  நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிவிடுகின்றன.  நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன. தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது.  ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லா போதனைகளிலும் கொடுக்கல்,  வாங்கல் பொதிந்துள்ளது.  ஆசிரியர் கொடுக்கிறார்; மாணவன் வாங்குகிறான்.  ஆனால் ஒருவரிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும்; வாங்கிக் கொள்கிறவனும் பெறுவதற்கு ஆயத்தமாகத் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும்.

View More எழுமின் விழிமின் – 29

எழுமின் விழிமின் – 28

‘மகத்தான பணி ஒன்றைச் செய்யவும் வேண்டும்; சமுதாயத்தின் மனம் கோணவும் கூடாது’ என்பது நடவாது. அவ்வாறு முயன்றதில் எவரும் எக்காலத்தும் வெற்றி காணவில்லை. மனச்சாட்சியின் உத்தரவுப்படி ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வேலை சரியானதாகவும் நல்லதாகவும் இருக்குமாயின் சமூகமானது அவனது சொல்லைக் கேட்டு அவனது பாதைக்குத் திரும்பிவிடும்… பாரதத்தில் மூன்று பேர்கள் ஒற்றுமையாக, ஒரு மனதுடன் ஐந்து நிமிடம் வேலை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் அதிகாரப் பதவிக்காகப் போராடுகிறார்கள்; நாளடைவில் இயக்கம் முழுவதுமே இழிநிலைக்குத் தாழ்கிறது. கடவுளே! கடவுளே! பொறாமைப்படாமல் இருக்க நாம் எப்போது தான் கற்றுக் கொள்வோமோ?….

View More எழுமின் விழிமின் – 28

எழுமின் விழிமின் – 27

ஏதோ சில மதங்களுக்கு நான் விரோதி என்பது உண்மையல்ல. பாரதத்திலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு நான் எதிரி என்பதும் பொய் தான். ஆனால், அமெரிக்காவில் அவர்கள் பணம் திரட்டுவதற்காகக் கையாளும் முறைகளை நான் எதிர்த்து ஆட்சேபிக்கிறேன். ஹிந்துத் தாயானவள் தனது குழந்தைகளை கங்கையில் எறிவதாக ஒரு படம் சித்தரிக்கப்பட்டு, குழந்தைகளின் பள்ளிப் பாடப் புத்தகத்திலே வெளியாகி உள்ளது. இதன் அர்த்தம் என்ன?…. அரேபிய நாட்டு தேவதூதர் நிறுவிய மதத்தைப் போல, இந்தக் கொள்கைகளை தீவிரமாக இறுகக் கடைப்பிடித்து வருகிற மதம் உலகில் வேறெதுவும் இல்லை. இவ்வளவு ஏராளமாக ரத்தத்தைச் சிந்தி பிறரைக் கொடூரமாக நடத்திய மதம் வேறெதுவும் இல்லை….

View More எழுமின் விழிமின் – 27

எழுமின் விழிமின் – 26

இந்த பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக்கொண்டே இருப்பார். அன்னை காளி மிருக பலியுடன் வழி படப்படுவாள். அன்பிக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான். கிறிஸ்தவ பாதிரியோ, வேறு பாதிரியோ என்னதான் முயன்றாலும் அவர்களை அகற்ற முடியாது. அவர்களை உங்களால் சகிக்க முடிய வில்லை என்றால் தொலைந்து போங்கள்… பாரதத்தின் மேல் வகுப்பு மக்களே! உங்களுக்கு உயிர் இருக்கிறதா? நீங்கள் சிந்திக்கிறீர்களா? பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம் போல் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர்கள் வெறுத்து ஒதுக்கினார்களே, அப்படிப்பட்ட மக்களிடையேதான்…

View More எழுமின் விழிமின் – 26

வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்

அமெரிக்காவின் சிக்காகோ நகரிலுள்ள சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 1893ல் சுவாமி விவேகானந்தர் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்தியது இந்த இடத்தில் தான்… முதல் படியில் துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம்… “அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்…”

View More வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்