நம்பிக்கையும் ஆழ்ந்த வேட்கையும் கொண்ட மனிதனாக வண்ணிஹாமி, பிரசன்ன விதனாகே இயக்கிய “Death on a full moon day” திரைப்படத்தில் நம் கண்முன் தோன்றுகிறார். ஒரு மணி நேரத்திற்கும் சற்றே அதிகமாக ஓடும் படம். ஆனால் அதன் தாக்கம் அந்த ஒரு மணி நேரத்தையும் தாண்டியதாக இருக்கிறது – எந்த ஒரு சிறந்த திரைப்படத்தைப் போல.
View More உலகத் திரை: Death On a Full Moon Day – சிங்களத் திரைப்படம்Category: சினிமா
அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)
… இந்தப் படம் மெனக்கெட்டு குறிப்பிடும் அளவுக்கு எந்த விதத்திலும் ஒரு சிறப்பான படமோ அல்ல, குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவோ அல்ல. இவ்வளவு குறைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் தன் கதையினாலும், ஒரு சில வசனங்களினாலும், ஜிஹாதி பயங்கரவாதத்தினால் சூழப்பட்ட இன்றைய இந்திய சூழ்நிலையில் குறிப்பிடத் தக்க ஒரு படமாக மாறிப் போகிறது. இப்படி ஒரு சினிமா தமிழ் சூழலில் எடுக்கப் படுவது சாத்தியமில்லை என்பதினாலும் இதில் துணிவாக எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சிகளினாலும் இந்தப் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
View More அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்
இந்திப் படவுலகில் கான்களும் அவர்களுக்குப் பின்புலமாக இருக்கும் இஸ்லாமிய மாஃபியாக்களும்தான் பெரும்பான்மையினர் என்றும், தானும், அமிதாப் போன்ற வெகு சிலரும் மட்டுமே இந்து நடிகர்கள் என்றும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் மிக துணிவாக வெளிப்படையாக அந்த நடிகர் சொல்வது இந்திய சினிமாக்களில் நாம் எதிர்பார்க்க முடியாத ஒரு ஆச்சரியம்…
View More ‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்நான் கடவுள்: பட விமர்சனம்
இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தமிழ்ப் படம்…
தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காக தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை…
View More நான் கடவுள்: பட விமர்சனம்கருப்பு வெள்ளி
ப்ளாக் ஃப்ரைடே. மார்ச் 12, 1993 இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்ந்த ஒரு கருப்பு தினம்…குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து துணைக் கமிஷனர் ராகேஷ் மோரியாவின் குழு தடயங்களைச் சேகரிப்பதில் தொடர்கிறது… ஒவ்வொரு குண்டு வெடிப்பும் மீண்டும் அந்தந்தக் குழுக்களால் எப்படி நிகழ்த்தப் பட்டிருக்கும் என்பதை, தத்ரூபமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்…
View More கருப்பு வெள்ளிசெய்திகள் மட்டுமே சித்திரமானால்…
மூலம்: ஜெயமோகன், ஆங்கிலக் கட்டுரை – மொழியாக்கம்: ஜடாயு
ஒரு பிரிட்டிஷ்-இந்தியத் திரைப்படம் (Slumdog Milliionaire) ஏன் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து மும்பையின் சேரி வாழ்க்கையைச் சித்தரிக்க வேண்டும்?… இந்தப் படைப்பாளிகளின் அடிப்படை தாகம் ஒன்று தான்: இந்தியாவைக் குத்திக் கேலி செய்தல்…
போகப் போகத் தெரியும் – 8
அடாவடிகளை அறிக்கைகளாகவும், தவறான தகவல்களைத் தத்துவங்களாகவும் அரைகுறைப் படிப்பை அநுபூதியாகவும் கொண்டு வளர்ந்ததே ஈ.வே.ரா.வால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம்.
View More போகப் போகத் தெரியும் – 8ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்
படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை…
View More ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1
இந்தியா துணிவுடன் நடந்திராத தருணங்களின் பொழுது ‘இஸ்ரேலைப் பார் எப்படி துணிவுடன் எதிரிகளைத் தண்டிக்கிறது!’ என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர்? என்ன செய்தார்கள்? பார்க்கலாமா?
View More ‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி
வில்லனாகவே நடித்த நல்லவர் எம்.என். நம்பியார் காலமாகிவிட்டார். சுமார் 66 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்ற நம்பியார் ஒரு பேட்டியில் கூறினார், “விரதம் இருக்கிறது சாமிக்காக கிடையாதுங்க. நம்ப மனத்தூய்மைக்காகத்தான். கடவுள் மீது பழியை போட்டுவிட்டு நாம் விரதம் இருக்கிறோம். நம்ம தவறை திருத்திக் கொண்டு வாழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.” இந்த அரிய பேட்டியைப் படியுங்கள்…
View More வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி