ஏழுஸ்வரங்களால் ஆன சஞ்சீவி மலை, ஐந்திணைகளுக்கும் பாடல் கொடுக்கும் அற்புதம் இளையராஜா. இந்த வழி நெடுக காட்டுமல்லி பாடல், ராஜாங்கத்தில், இன்னொரு முல்லை நிலப்பாடல்.. எண்பது வயதான இளையராஜா இப்படி எழுதி, இசையமைத்து பாடுகிறார். காட்டு மல்லி வாசம் போல இந்த நாட்டை இந்தப் பாடலால் மணக்கச் செய்திருக்கிறார் ராஜா…
View More வழிநெடுக காட்டுமல்லி: இசைஞானியின் மாயம்Category: இசை
மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்
இசையால் தோய்த்து எடுத்திருக்கிறார் இந்தப் புதினத்தை. தி.ஜா.வின் எழுத்துக்களை, கற்பனையை ஸ்வரமாக்கி வரமாக்கி வைத்திருக்கிறார்.. பாபுவை கண்டுபிடித்த யமுனா அவனுடன் இணையும் பொழுது வரும் வயலின் கூட்டம், மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை கமகத்துடன் கமகமவென்று இசை வாசனை வீசைசெய்வது தெய்வீகம்… இளையராஜாவின் இசை – தி.ஜானகிராமனின் மோகமுள்ளுக்கு கிடைத்த பாக்கியம், “பொன்னியின் செல்வன்” தவறவிட்ட மகுடம்…
View More மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்இசைஞானியை வசைபாடும் திமுகவினர்: பதிலடி
இங்க நீங்க வச்சது தான் சட்டம். நீங்க சொல்ற ஆளைத்தான் புகழனும். அப்படி இல்லாம உங்களுக்கு பிடிக்காதவங்க யாரையாவது புகழ்ந்து பேசினா அவரைப்பத்தி தப்பா பேசுவீங்க.. இன்றைய கோழைவுட் போல சுயலாபத்துக்காக அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு காரியம் சாதிப்பவர் அல்ல. சரியான ஆண்மகன் எங்கள் ராஜா. இது பெரியார் மண் என்று கொக்கரித்துக்கொண்டிருந்த பொழுது, ஒவ்வொரு முறையும் “குருர் பிரம்மா குருர் விஷ்ணு” ஸ்லோகம் ஒலிக்க விட்டே மேடையேறிய புனிதன் எங்கள் ராஜா….
View More இசைஞானியை வசைபாடும் திமுகவினர்: பதிலடிசர்வம் தாளமயம் – திரைப்பார்வை
மிருதங்கம் என்ற தோற்கருவியை செய்து கர்நாடக சங்கீதக் கச்சேரிகளின் மிருதங்க வித்வான்களுக்கு அளித்து வரும் ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பீட்டர் ஜான்சன். ஒரு தருணத்தில் மூத்த வித்வான் பாலக்காடு வேம்பு ஐயரின் வாசிப்பால் கவரப்பட்டு அவரது சீடராகி விடவேண்டும் என்று துடிக்கிறார். பல்வேறு சாத்தியங்கள் வழியாக அவரைப் போன்றவர்கள் நுழைவதற்கே கடினமான கர்நாடக இசை உலகம் என்ற இரும்புக் கோட்டைக்குள் அவர் புகுந்து விடும் சித்திரம் இந்தப் படத்தில் அற்புதமாக எழுந்து வருகிறது…
View More சர்வம் தாளமயம் – திரைப்பார்வைகிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்
நம் நாட்டில் சாராயம் பற்றி விளம்பரம் செய்ய தடை உண்டு, ஏனென்றால் அது போதையை உண்டுபண்ணி உடல்நலத்தைக் கெடுக்கும். இந்தத் தடையில் இருந்து தப்பிக்க சாராயம் காய்ச்சும் கம்பெனிகள் செய்யும் தந்திரம் அதே பெயரில் சோடா விளம்பரம் செய்வது தான். பிற தெய்வங்களை மறுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட மதங்களான கிறித்துவமும் இஸ்லாமும் செய்யும் நரித்தனமும் அதுபோல் தான். அவர்கள் விற்கும் சோடா – மத நல்லிணக்கம். அவர்கள் நம் பண்பாட்டின் சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் கலைஞர்களும் பூசாரிகளும் அதற்கு துணை போவது கொடுமை. அதைத் தட்டிக் கேட்டால், சோடா விற்கத்தான் பாடினேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. சோடா விற்கலாம் தான். ஆனால் சாராய குழுமத்திற்காக செய்தால், சாராய விற்பனை என்றே கொள்ளப்படும்…
View More கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்இளையராஜா @ கூகிள்
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார் என்றார். அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார்….
View More இளையராஜா @ கூகிள்தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்
தியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது… “வெறும் உடல்பலத்தால் என்னபயன்? உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்? சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் – காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா? கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா? ஆடு புல்தின்றால் அது உபவாசமா? வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?…”
View More தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்
கல்வியிற் சிறந்த பெரியோர்கள் கற்க வேண்டியதைக் கற்று, அறிய வேண்டியதை அறிந்தவர்கள். தாம் பெற்ற அறிவின்பங்களை உலகிலுள்ள எல்லோரும் அடையும்படி பிறருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அதன்படியே திரு.சுந்தர் அவர்களும் கர்நாடக சங்கீதத்தின் இசை நுணுக்கங்களைப் பாமரனும் புரிந்து இன்புறும் வண்ணம் நமக்குத் தந்திருக்கிறார். திரு.ரமணன் அவர்கள் தந்துள்ள வாழ்த்துரையின்படி, இந்நூல் ஒரு பயிலரங்கு என்பதை இதனைப் படிப்பவர் யாவரும் உய்த்துணர்வர். யானும் இந்நூலைக் கற்றேன். கடுகளவு இசைஞானம் கொண்டிருந்த நான் நிறையத் தெரிந்துகொண்டபின் உள்ளம் பூரித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இறையடி பணிந்தேன்….
View More இசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா
வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”
View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையாஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை
தமிழ் இசை மூவரில் ஒருவர் மாரிமுத்தா பிள்ளை. தில்லை ஈசனிடமே பேரன்பு பூண்ட அடியார். அவனைத் தன் ஆண்டானாகவே கொண்டவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தான் அடியானாகிப் பாடுகிறார். ஆயினும், தமது அன்பின் உரிமையினால் தில்லை ஈசனை இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல்களே அனேகம் ஆகும்… “சாதியும் தாயும் தந்தையும் இல்லார் தனியர் என்றேனோ, பெண்ணால் – பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட புலையர் என்றேனோ, சாதி – பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில் பெண்கொண்டீர் என்றேனோ”… இவரது பாடல்களில், ‘காலைத் தூக்கி’, ‘ஏதுக்கித்தனை மோடி,’ எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன…
View More எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை