கோவையில் செயல்படும் சமுதாய நல்லிணக்கப் பேரவை ஓர் அற்புத முயற்சியை மேற்கொண்டு, சாதித்துக் காட்டி இருக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஹிந்து சமுதாயத்தின் அனைத்து ஜாதி/ சமூக அமைப்புகளையும் தொடர்புகொண்டு ஆதரவு திரட்டும் அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது. இதுவரை 37 சமூக அமைப்புகளின் ஆதரவுக் கடிதத்தைப் பெற்று மாநில முதல்வருக்கும், ஆலுநருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி உள்ளது இந்த அமைப்பு….
View More கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி!Category: பொது
Item that are yet to be categorised on a regular basis.
சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை
‘ஓதுகின்ற வேதம்எச்சில்’ என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை… வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை தானே கேள்வி கேட்கும் தைரியம் வேத ரிஷிகளுக்கு உண்டு… முருகனின் அன்னை சித்த சேனானியாகவும் வேதமாதாவாகவும் வேதத்தின் ஆத்மாகாவும் இருப்பாள் என்றால் முருகன் சித்த சேனனாகவும் சுப்ரமணியனாகவும் ஏன் இருக்க முடியாது?…
View More சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினைகுழவி மருங்கினும் கிழவதாகும் – 8
இதற்கேற்ப ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியில் அன்னையின் திருப்பாதங்களை வருணிக்கும் ஸ்லோகம் மிக இலக்கிய நயம் வாய்ந்தது. சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இதன் 87-வது பாடல் திருமண காலத்தில் ஐயன் அன்னையின் திருப்பதத்தை அம்மி மீது ஏற்றிவைத்த செயலைக் கூறுகிறது.
View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 8குழவி மருங்கினும் கிழவதாகும் – 6
‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’
View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 62019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?
மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும், எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸும், இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன… ஒருவேளை மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன? வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை உருவாக்கும். இந்தியா சகல துறைகளிலும் பல பத்தாண்டுகளுக்கு பின்னால் தள்ளப் படும். இந்தியா முழுக்க மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தாக்கப் படும். குண்டுகள் வெடிக்கும். அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாவார்கள்.. அபாயகரமான, மோசமான, பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம்? இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்?…
View More 2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்
சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்…..
View More சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !
ஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது… எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்….
View More பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி
பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்… தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே….
View More தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடிபாரதமாதாவைப் பாடிய தமிழறிஞர்கள்
பாரத அன்னையை ‘உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்’ என பாடியிருக்கிறார் மறைமலையடிகள். அவரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழன் என்று சொல்லிவிட்டது. பார்ப்பன பாசிசம் 🙂 … பாரத நாட்டைப் பாடுவமே – பரமா னந்தங் கூடுவமே –
முனிவர்கள் தேசம் பாரதமே – முழங்கும் வீரர் மாரதமே – பாரத தேசம் பேரின்பம் –
பார்க்கப் பார்க்கப் போந்துன்பம் – வந்தே மாதர மந்திரமே – வாழ்த்த வாழ்த்த சுதந்திரமே… வந்தே மாதரத்தையும் மதத்தையும் தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட ஆரிய அடிவருடி தெலுங்கர்தான் திருவிக….
தேவிக்குகந்த நவராத்திரி — 2
மீனாட்சி அம்மை திக்விஜயம் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். எல்லா மன்னர்களையும் வென்றவள் இப்போது இமயமலையை அடைந்து அங்கிருக்கும் சிவகணங்களின் தலைவனைப் போருக்கழைக்கிறாள். தனது மணாளாகப் போகிறவர் அவரே என்பதை அவள் அறிந்திலள். அவளைத் தடுத்து நிறுத்த இயலாத நந்தி தேவர் சென்று சிவபிரானிடம் முறையீடு செய்ய, அவர் பொருள் செறிந்த சிறுமுறுவல் கொண்டு தாமே எழுந்து மீனாட்சியை எதிர் கொள்ள வருகிறார்.
View More தேவிக்குகந்த நவராத்திரி — 2